All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறுநாள் காலையில் இருந்து சாயங்காலம் ஆதியை சந்திக்க செல்வது பற்றி யோசித்து கொண்டே இருந்தாள் ஆதியை சந்திக்க செல்வது அவளிற்கு பயம் எல்லாம் இல்லை.
எப்படி யாழினியை தனித்து விட்டு செல்வது என்பது தான். யாழினியும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். நேரம் மதியம் மூன்றை தாண்டிய நிலையில் யாழினி தீக்ஷாவின் அருகில் வந்து நின்றவள்,"இன்னைக்கு எங்க டீம்ல இருக்க ஒரு பொண்ணோட வெளியில போறேன்டி, அவுங்க அப்பா அம்மா வெட்டிங் இந்த வீக் வருதாம், ஆபீஸ் போனப்பறம் வாங்க போக முடியாதுனும்,அவகிட்ட வண்டியும் இல்லையாம்டி அதுனால வந்துறேன்,சிக்ஸ் போல தான் போக போறேன், எப்படியும் ஒன்பது மணிக்குள்ள வந்துடுவேன்டி, நீ அது வர தனியா இருந்துருவ தான ? " என்று கோர்வையாக பேசியவள் கேள்வியும் கேட்டு வைத்தாள்.

வெளியில் செல்வதற்கு காரணம் தேடியவள் யாழினியே சொன்னவுடன் இருத்துருவேன் என்பது போல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். அதுக்கு மேலும் அங்கு நின்றால் கேள்விகளால் தன்னை துளைத்து எடுத்து விடுவாள் தன்னுடைய தோழி என்று நினைத்த யாழினி ஆதி தன்னிடம் கூறியவற்றை கோர்வையாக முடித்தவள் பெரு மூச்சுடன் "அப்பாடா தப்பிச்சோம்,இந்த ஆதி சார் நல்லா தான் இவளை பத்தி புரிஞ்சு வச்சிருக்காங்க, இவை என்னடான்னா நம்மள கழட்டி விட்டுட்டு வெளில போக பிளான் பன்னிட்டு உட்கார்ந்துட்டு இறுக்குறா" என்று தனக்குள் புலம்பியபடி உள் அறைக்குள் சென்று விட்டாள்.

சிறுது நேரத்திற்கு முன்பு பெயர் அல்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யோசனையூடே எடுத்து காதிற்கு வைத்தவளின் காதில் விழுந்த வார்த்தைகளில் மயக்கம் வராத குறை தான். பின்னே போன் செய்தது ஆதி அல்லவா. தான் சரியாக தான் கேட்டோமா என்ற அவளின் சந்தேகத்தை ஆதி தீர்த்துவைத்தான். "ஹலோ மிஸ் யாழினி,கேக்குதா,நான் ஆதி பேசுறேன் ADS Group of companies எம்.டி பேசுறேன்" என்றானே பார்க்கலாம், அவன் அனைவரையும் கண்டு சிடு சிடுவென்று விழுபவன் ஆச்சே. இன்று தனக்கு கால் செய்ய அவசியம் என்ன என்று தெரியாது "சொ.....சொ...சொல்லுங்க சார்" என்று திக்கி திக்கி கேட்டாள். அதை எதையும் கண்டு கொள்ளாது "இங்க பாருங்க யாழினி,உங்க பிரண்ட் அதான் தீக்ஷா அவளை இன்னைக்கு நான் தனியா மீட் பண்ணனும்னு கூப்பிட்ருக்கேன், ஆனால் மேடம் எப்படி அவுங்க உயிர் தோழி உங்கள விட்டுட்டு வரமுடியும்னு யோசிச்சுட்டு குழம்பி போயிருப்பாங்க, அதுனால நான் சொல்றதை மட்டும் அவ யோசிச்சுட்டு இருக்கப்போ சொன்னா போதும், உங்க டீம் மாதே பிரண்ட்கூட வெளில போனும்,அவுங்க டாட் மாம் வெட்டிங் டேக்காக கிப்ட் வாங்க போனும்னு சொல்லி வண்டில போனும்னும் சொல்லுங்க,அப்போ தான் எதுவும் கேக்காம சரினு சொல்லுவா, நான் சிக்ஸ்க்கு தான் வர சொல்லிருக்கேன்,உங்க ஸ்ட்ரீட் கிட்ட இருக்க ஸ்டாப்பிங்க்ல அவளை பிக்கப் செஞ்சுடுவேன் சோ நீங்க அந்த டைம்க்கு கொஞ்சம் முன்ன ஜஸ்ட் வெளில போய்ட்டு வர மாதிரி போய்ட்டு வாங்க,அவளை பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வந்து நானே ட்ராப் செஞ்சுடுவேன்" என்று முடித்தவன் போனையும் ஆஃப் செய்தான். ஆதி சொன்னதை தான் யாழினியும் மொழிந்தாள்.

ஆனால் இருந்த யோசனையில் தன் தோழிக்கு மெயின் ரோட்டில் வண்டி ஓட்ட இன்னும் சரியாக வராது, பொய் கூறுகிறாள் என்பதையும் அறியாது சரி என்று தலை ஆட்டி வைத்தவள் கிளம்பியும் போனாள். ஆதி சொன்னது போல் சரியாக ஆறு மணியளவில் பஸ் ஸ்டாப்பிங் வந்து தீக்ஷாவிற்கு காத்திருந்தான். அடுத்த சில வினாடிகளில் வந்தவளை கண்டவன் மெய் மறந்து நின்றான் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இவ்வளவு நாட்களும் குர்தி ஜீன்,சுடியிலும் பார்த்திருந்தவன் இன்று தான் அவளை லாங் ஸ்கிர்ட் ட்ஷர்ட்டில் பார்க்கிறான். அவளின் பளிங்கு போன வெண்மையான சர்மத்துடன் போட்டுயிடும் பால் வண்ண ட்ஷர்ட்டில் பேபி பிங்க் வண்ணத்தில் கிட்டி டிசைனும்,அதே பிங்க் நிற லாங் ஸ்கிர்ட்டும்,ஸ்கார்ப்பும் அணிந்து தலையை இருபுறமும் சில முடிகளை எடுத்து ஒரு சிறிய கிளிப்பில் அடக்கியவள் அதை முன்புற இடது தோலில் வழியவிட்டவாறு ரோட் க்ராஸ் செய்வதற்காக நின்றவளை பார்க்க இப்பொழுது தான் ஸ்கூல் படிக்கும் சிறு பெண்ணாக தெரிந்தாள். அதுவும் ரோட் க்ராஸ் செய்வதற்கு படாதபாடு பட்டவளை கண்டவன் காரில் இருந்து இறங்கினான். அவள் அதற்குள் சாலையை பாதி கடந்ததை அறிந்தவன் காரின் கதவை திறந்ததிலே சாய்ந்து நின்றான்.
காரின் அருகில் வந்தவள் ஆதி தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் எதுவும் பேசாது "ஹக்கும்...." என்று மட்டும் தன் வருகையை உணர்த்தியவள் முயன்று ஆதியின் கண்களை சந்திப்பதை தவிர்த்தாள். "இங்க தான் இருக்கேன்,மேடம் வந்துடீங்கனும் தெரியுது,ஏன் வாயை திறந்து கூப்பிட்டா தான் என்னவாம்" என்றவன் "சரிங்க மேடம்,கார்ல ஏறுங்க மேடம், இல்லைன்னா போற வரவங்க சைட் சைட் அடிக்க நீயும் நானும் காட்சி பொருளா தான் நிக்கனும்" என்று அவள் ஏறுவதற்காக தன்னுடைய ஜாகுவார் காரின் கதவை திறந்து விட்டான்.அதில் அவனின் சிறு செயலில் சிலிர்த்தவளாக அமைதியாக காரில் ஏறியதும்,கார் திருவான்மியூர் பீச் நோக்கி சீறி பாய்ந்தது. திருவான்மியூர் தான் எந்த வித சலசலப்பும் இல்லாது அமைதியாக பொழுதினை கடக்க முடியும் என்று காரை திருவான்மியூர் நோக்கி செலுத்தினான்.

எந்த வித பேச்சுகளும் இல்லாது அமைதியாக கடந்த பயணம் அடுத்த பதினைந்து நிமிடங்களில் பீச்சில் கார் நின்றது. ஆதி நினைத்தது போலவே மற்ற பீச்களில் இன்று ஞாயிறு அன்று இருக்கும் கூட்டத்தை விட இங்கு குறைவாகவே இருந்தது. கடல் மண்ணின் வாசமும்,அங்கு ஓயாது அடிக்கும் அலைகளின் இசையிலும், அருகில் தன்னுடைய மனம் கவர்ந்தவளும் என்று இருந்த அந்த மாலை பொழுது மிக ரம்மியமாகவே தோன்றியது ஆதி தீக்ஷாவிற்கு. காரில் இருந்து முதலில் இருந்து இறங்கியவன் ஆதி தான்.இறங்கி மறுபுறம் வந்தவன் காரின் கதவை அவள் இறங்க திறந்து விட்டவன் அவள் இறங்கும் வரை நின்றவன் பின் லாக் செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தனர்.

காரில் இருந்து இறங்கியதில் இருந்து தூரத்தில் இருந்து ஒரு வாலிப வயது பையன் தங்களை தொடர்வது போல் உணர்ந்த ஆதி திரும்பி திரும்பி பார்த்தபடி நடக்க, அதில் கடுப்பான தீக்ஷா "அங்கேயே பார்த்துட்டு வரதுக்கும், கால் வலிக்க நடக்க வைக்கிறதுக்கும் தான் தனியா பேசனும் அப்படி இப்படினு பில்ட்டப் குடுத்தீங்களா சார் " அன்று வேக எட்டுக்கள் வைக்க முயன்றாள். முடிந்தால் தானே அவனின் மூன்று வேக எட்டுகளை தன்னுடைய ஒரே எட்டில் வைத்து அவளை நெருங்கியவன் "எதுக்கு பேபி இப்படி டென்ஷன் ஆகுற, உன்னோட பேஸ்க்கு செட் அக்கலைனு எவ்வளவு தடவை சொல்லிருக்கேன், இப்ப என்ன உன்கூட மட்டும் தான் பேசனும், யாரையும் திரும்பி பார்க்க கூட கூடாதுனு சொல்றியா, ஐ வில் பேபி" என்று அவளின் கரத்தினை பற்றினான்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ப்ச்ச், எப்ப பாரு சும்மா கையை பிடிக்கிற வேலையை வச்சுக்காதீங்க சார், பார்க்கிறவங்க தப்பா நினைச்சுக்க போறாங்க" என்றாள் சலிப்புடன். "அய்யய்யய்ய சும்மா எப்ப பாரு அவங்க தப்பா நினைச்சுக்க போறாங்க,இவங்க தப்பா நினைச்சுக்க போறாங்கனு சொல்ற டயலாக முதல்ல விடுடி, எப்ப பாரு ஒரே பல்லவியை பாடிக்கிட்டு" என்று ஆதியும் குரலில் கடுப்பை படரவிட்டான். அதில் முகம் சுருங்கி போனவள் கண்கள் சிறிதாக கலங்க ஆரம்பிக்க மூஞ்சியை திரும்பியபடி நடந்தாள் தீக்ஷா. அதில் தன்னை நொந்து கொண்டவன் "கடவுளே எல்லாரும் என்கிட்ட இருந்து பத்து வார்த்தை சேர்ந்து வாங்க தலையால தண்ணி குடிப்பானுங்க, இவள் என்னன்னா நம்மள மட்டும்பேச விட்டுட்டு நம்மளோட டோட்டல் எனர்ஜியும் வாங்கிடுறா, ஆதி ஆரம்பமே இப்படியாடா உனக்கு இருக்கனும்,நீ ரொம்ப பாவம்டா" என்று மனதில் நினைத்து கொண்டான்.வெளியில் புலம்பினாள் அடுத்து தலைகீழ் நின்றாலும் வெளியில் வரமாட்டாளே இவள் என்கின்ற பயம் ஆதியை வாய் மூட செய்தது.

"சும்மா எதாவது சொன்னா ஏன் பேபி இப்படி அழுதுட்டு இருக்குற, அப்பறம் நான் தான் உன்ன எதோ பண்ணிட்டதா நினைக்க போறாங்க" என்றவன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து அவளின் முன் நீட்டினான், அதில் முகத்தை வெடுக்கென்று திரும்பியவள் தன்னுடைய கைக்குட்டையில் கருமசிரத்தையாக தான் போட்டிருந்த காஜல் ஐ-லைனர் அழியாதவாறு கண்ணை துடைத்தவளை கண்டு வாய்விட்டு சிரித்தான் ஆதி. "ஹா ஹா, இந்த ரணகளத்துலயும் உன்னோட மேக்கப் கழஞ்சு போகாம பண்ற பார்த்தியா, இன்னும் பேபி தான் பேபி நீனு" என்றவன் அவளின் கரத்தினை பற்றியபடி நடக்க துடங்கினான்.

அவனின் கையை தட்டி விட்டவள், தன்னுடைய காலணியை கழட்டியவள் கடல் அலைகளில் சென்று நின்று கொண்டாள். அவளின் சிறுபிள்ளை தனத்தை ரசித்தவனாக அவளின் கண் பார்வையில் மணலில் வந்து அமர்ந்தவன் மனதில் உறுதி எடுத்து கொண்டான். "எவ்வளவு சீக்கிரம் தன்னுடைய மனதில் உள்ளதை தீக்ஷாவிடம் சொல்லிக்கொண்டு வீட்டிலும் பேசி தங்களின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தான். அவளின் அருகில் தன்னுடைய இயல்பு மாறுவதும், அவளின் அருகாமை தனக்கு பெரும் ஆறுதல் அளிப்பதாகவும்,அதே சமயம் தன் மனதில் உள்ளதை இவளிடம் முழுவதுமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நினைத்த படி,அந்த மணலில் உட்கார்ந்திருந்தவன் தண்ணியில் சிறுபிள்ளை போல் தன்னுடைய லாங் ஸ்கிர்ட்டை தண்ணியில் நனையாதபடி தூக்கி பிடித்து கொண்டு நின்றவளை கண்டவன் அணு அணுவாக ஆதி காதலால் ரசித்து கொண்டிருந்தான் என்றால் சற்று தொலைவில் ரோஹித் குரூரமாக வேறு பார்வையில் ரசித்து கொண்டிருந்தான்.

ஆதியின் பார்வைக்கும் ரோஹித்தின் பார்வைக்கும் முற்றிலும் வேறு வேறு அர்த்தங்கள். ரோஹித் தீக்ஷாவை மட்டுமே பார்த்தான், ஏனெனில் அப்பொழுது தான் தன்னுடைய நண்பர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான்,அதே சமயம் தான் ஆதியிடம் இருந்து விலகி தண்ணீரில் நின்றாள். முதலில் தூரத்தில் இருந்து பார்த்த ரோஹித் சற்று நேரத்தில் இவள் இருந்த இடத்திற்கு ஆதியின் கண் பார்வை வட்டத்தில் நின்று பார்த்தான் எவ்வாறு அவளை நெருங்குவது என்று சிந்தித்தபடி. எப்படியும் பொண்ணுங்கள் மட்டும் தான் வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் நின்றான்.ஆனால் ஆதியோ ரோஹித்தை பார்த்தவுடன் முதலில் எந்த வித சந்தேகமும் தோன்றவில்லை.காரணம் ஆதியும் ரோஹித்தும் ஒரே கல்லூரி மற்றும் இப்பொழுதும் ஒரே அலுவலகம் ஒரு வேளை தீக்ஷா பார்க்கவில்லை என்பதால் தான் அவள் வரும் வரை இங்கு நிக்கிறானோ என்று நல்ல விதமாகவே சிந்தித்த ஆதி அவனின் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தை கண்டவன் எப்படியும் தன்னிடம் தானே வேலை செய்கிறான் எதாவது வேறு பிரச்சனைகள் செய்தால் பார்த்து கொள்ளலாம் என்று தீக்ஷாவை நோக்கி சென்ற ஆதி அவளை அழைத்து கொண்டு காரிற்கு சென்றான்.ஆதியும் ரோஹித்தை பார்த்ததாக கட்டி கொள்ளவில்லை.

ஆதியை அங்கு எதிர்பாராது நின்ற ரோஹித் மனதில் இன்னும் காழ்ப்புணர்ச்சி சற்று கூடி தான் போனது,தன்னை வேண்டாம் என்று நிராகரித்தவள் இன்று வசதியான ஒரு பையன்,அதுவும் தாங்கள் வேலை பார்க்கும் அலுவகத்தில் எம்டி யுடன் பார்த்தவுடன் அவனின் சிறுபுத்தியும் சிறுமையாகவே சிந்தித்தது. இந்த மனநிலையில் ஆதியின் மனம் கோபமா இருந்ததினால் எதுவும் பேசாது அவளை அழைத்து சென்று வெளியில் இரவு உணவை முடித்து விட்டே தீக்ஷாவின் வீட்டில் விட்டான். அன்றைய நிகழ்வை இருவரும் சிந்தித்து பார்த்ததில் ரோஹித்தை மறுபடியும் இவளின் விஷதயத்தில் தலையிட்ட கோபத்தில் ஆதி இருந்தான் என்றால் தீக்ஷாவோ ஆதியுடன் பைக்கில் செல்லும் முதல் பயணத்தை பயம் நீங்கி ரசித்து கொண்டு வந்தாள்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திருவிழாவிற்காக வந்த அனைவரும் தர்ஷன் ஷாலினியின் நிச்சிய விழாவினையும் முடித்து விட்டு அடுத்த இரண்டு நாட்கள் மேலும் தங்கிவிட்டே அவர் அவர்களின் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருக்கின்றனர். தர்ஷனின் தந்தை அனைவரிடமும் “தர்ஷனுக்கு தான் நம்ம அம்மாவை பேசி முடிக்கனும்னு நினைச்சிட்டு இருந்தோம் சின்ன வயசுல இருந்து, ஆனால் நாள் ஆக ஆக இவுங்க இரண்டு பேருக்கும் அந்த எண்ணம் இல்லையோ இல்லைனா வற்புறுத்த கூடாதுனு நினைச்சேன். இந்த வருஷ திருவிழாவில எல்லாம் நல்ல படியா முடிஞ்சது ரொம்ப சந்தோஷம் அப்பறம் நாங்க கிளம்பட்டுமா என்று அனைவரிடமும் சொன்னவர், ஷாலினியின் அருகில் வந்து அவளின் கைகளை பிடித்து கொண்டவர் “அம்மு சீக்கிரம் அங்க நம்ம வீட்டுக்கு வந்துருடா நான் உன்னோட படிப்பு முடிஞ்சோனே கல்யாணத்தை வைக்கனும்னு சொன்னேன் இந்த பையன் அதெல்லாம் காதுல வாங்குனா தான நீ அங்க வந்ததுக்கு அப்பறம் இவனை ஒரு வழி பண்ணிடலாம் என்னடா சரி நாங்க கிளம்புறோம்” என்று அனைவரிடமும் பொதுவாக தலையசைத்தபடி காரை நோக்கி சென்றார்.
தர்ஷம் அனைவரிடம் சொல்லிவிட்டு இறுதியாக ஷாலுவின் அருகில் வந்தான். அது வரை கண்களில் இந்த தற்காலிக பிரிவை எண்ணி வருந்தியதில் கண்ணீர் விழுவதா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருந்தது. தர்ஷன் அருகில் வரவும் கன்னங்களில் இறங்கியது.

ஷாலினியின் கன்னத்தை இரு கரங்களால் தாங்கியவன் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு “எதுக்குடி இப்போ இப்படி அழுதுட்டு இருக்க, சீக்கிரம் என்கூடவே வந்துருன்னு சொன்னாலும் கேட்க மாட்டேன்ற, சரி ஆறு மாசம் தானனு மனச தேத்திகிட்டு விட்டாலும் அழகுற, என்னடி பண்ணனும்னு சொல்ற” என்றான்.

அதில் கண்ணீரை அடுத்து கன்னங்களில் விழாதவாறு உள்ளடக்கி கொண்டவள் மௌனமாக தர்ஷனை பார்த்தாள். அவள் பேச போவது இல்லை என்பதை உணர்ந்தவன் “இந்த ஆறு மாசமும் உன்ன சும்மா விட்டா சரியா வராது அதுக்கு கூடிய சீக்கிரம் முடிவு பண்றேன் இப்போ அழாதடா அப்பறம் எனக்கு வேலையே ஓடாது அடுத்து உன்ன நேரில பார்க்குற வரை” என்று சமாதான படுத்தினான். ஷாலுவும் தலையை மட்டும் போனால் போகிறது என்கிற விதம் ஆட்டி வைத்தாள்.

இங்கு இருந்த இந்த இரண்டு வாரங்களும் தர்ஷன் ஷாலினியின் மிக முக்கியமான மறக்க இயலாத நாட்கள் என்றால் அது மறுக்க தக்கது அல்ல. ஒவ்வொரு நாட்களும் மிக அழகாக கடந்தது. இரவில் ஒரு நாள் மொட்டை மாடியில் தர்ஷனின் அணைப்பில் சுகமாய் இருந்தாள் என்றால், மறுநாள் இருவரும் கைகளை கோர்த்து கொண்டு இரவின் தனிமையில் நடந்து வருவர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் மற்றொருவரின் அருகாமையை விரும்பி அதை கலைக்காதும் அமைதியாக அதே சமயம் சீண்டி கொண்டும் முத்தங்களை பரிமாற்றிக்கொண்டும் இருந்தனர்.
இதோ மதுரையில் இருந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முடிந்திருந்தது. தர்ஷன் சொன்னது போல் ஷாலினியை பிரிவினை பற்றி யோசிக்க விடாது செய்தும் விட்டான். அவளின் ஒரு துளி கண்ணீரை கண்டவன் அவளுக்கென்றே பல வேலைகள் சிரமம் பாராது முடித்தவன், முடிந்த வரை ஷாலினியை இயல்பாக வைத்திருந்தான்.

தங்களின் திருமணத்திற்கு குறைந்தது ஆறு மாத காலமேனும் பேச்சினை எடுக்காது அனைவரையும் சமாதானம் செய்தவன் ஷாலினியின் விருப்பப்படி மேலும் மூன்று மாதங்கள் திருமணத்தினை தள்ளி வைக்க முடிவு செய்தான். பெரியவர்களும் இரண்டு மூன்று முறை நிச்சியம் செய்துவிட்டு இவ்வளவு நாட்கள் திருமணத்தை தள்ளி போடுவது சரி வராது என்றாலும் தர்ஷனின் பிடிவாதத்தினால் வேறு எதுவும் செய்ய இயலாது இது திருந்தாது என்று விட்டுவிட்டனர்.

ஆனால் தான் உயிருக்குயிராய் காதலிக்கும் தன்னுடைய காதலி, சரிபாதி அவளின் வாயால் திருமணமே வேண்டாம் என்று அவளின் வாய்மொழியாக கூறுவதை, கேட்க போறவன் மட்டும் அல்லாது சொல்பவளும் உயிருடன் மறித்து போகும் நாளும் அவர்களை நெருங்கி கொண்டு இருக்கின்றன என்பதை அறியாது இருவரும் தங்களின் காதலினை வளர்த்து கொண்டு இருந்தனர்.

வாழ்வில் அதிக கஷ்டங்களை சந்திப்பதற்கு தான் மிகுந்த சந்தோஷத்தினை மொத்தமாக அனுபவிக்க விதி முடிவு செய்ததோ??

“நாளை விடிந்தால் நடக்கும் கதை யார் அறிவர், அறிந்தால் அதில் சுவாரஸ்யம் ஏது”

பூக்கும்
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மை லவ்லி சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரண்ட்ஸ் ,

இதோ ஒரு புன்னகை பூவே-வின் 17வது அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். உங்களின் ஆதரவையும்,ஊக்கத்தினையும் அளியுங்கள்,எதாவது தவறு இருந்தால் அதை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக அதை திருத்திக்கொள்ள முயற்சி செய்வேன். கீழே உள்ள கருத்து திரியில் உங்களின் கருத்துக்களை ஒன்றிரண்டு வார்த்தைகளில் பகிர்ந்து கொண்டாள் மீ வெரி ஹாப்பி.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கருத்துத் திரி

இப்படிக்கு

உங்கள் அன்பு தங்கை ரேவதி :love::love:
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 17:

ரோஹித்தின் செயலில் ஆதி தீக்ஷாவை அவளின் வீட்டில் இறக்கி விட்டு சென்றவனின் மனம் முழுவதும் கோபத்தில் இருந்தது. ஏற்கனவே தீக்ஷாவின் அருகாமை தன்னை பாடாய்படுத்தி எடுத்ததில் தன்னுடைய மனதினை கட்டுப்படுத்த மிகவும் பிரயாதனப்பட்டவன் தன் மனதினை சமன் செய்யும் பொருட்டு யாரும் இல்லாத சாலையில் தன்னுடைய புல்லட்டினை ஜெட் வேகத்தில் செலுத்தி கொண்டு இருந்தான். இருந்தும் ஏன் திடீரென்று இவளினை தொடரவேண்டும் பழி வாங்க இருப்பது இருந்த ரோஹித்தின் செயலையே சிந்தித்தவன் வெகு நேரம் கடந்தே தன்னுடைய வீட்டினை அடைந்தான்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் தங்களின் தோட்டத்தில் ஜாக்கிங் முடித்தவன் சீக்கிரம் அலுவலகத்திற்கும் சென்றான். அங்கு ரோஹித்தோ தன்னை ஆதி மிரட்டியதோடு விட்டதால் எதுவும் என்னாது அலுவலகத்திற்கு வந்தவன் தங்களின் வேலை பார்க்கும் அறை முன் உள்ள அட்டெண்டன்ஸ் மெஷினில் தன் ஐடி கார்டினை ஸ்வைப் செய்யும் பொழுது அது தவறான ஐடி என்று மீண்டும் மீண்டும் வர, அங்குள்ள ரெசப்ஷனில் வேலை பார்க்கும் பெண்ணிடம் கேட்க,அந்த பெண்ணோ "கேன் யூ ப்ளீஸ் ஆஸ்க் டு அட்மின் போர் திஸ்?" என்று தன்னுடைய வேலையில் திரும்பி விட்டாள். முதலில் ரோஹித் மெஷின் பிரச்சனையாக இருக்கும் என்று எண்ணியவன், அடுத்து வந்த அனைவரும் தங்களின் பதிவினை ஏற்றி விட்டு உள்ளே செல்ல அட்மின் டிபார்ட்மெண்டை பார்க்க சென்றான். அங்கு சென்று தன்னுடைய ஐடி வேலை செய்யவில்லை என்று கூறவும் அவர்கள் பிரபாகரை சந்திக்குமாறு கூறிவிட்டனர்.

பிரபாவின் அறையில் அணுமதி பெற்றுவிட்டு உள்ளே நுழைந்தவனை கண்ட பிரபா அவனை அமரவும் சொல்லாது தன் கையில் உள்ள கோப்பினை டேபிள் மேல் தூக்கி போட்டான், அதில் என்னவென்று அதை பிரித்து பார்த்தவன் மிரட்சியுடன் பிரபாவை நோக்கி "சார் நான் எப்போ என்னோட வேலையை ரிசெய்ன் பண்ணேன்,என்னோட பைல்ஸ க்ளோஸ் செய்திருக்கீங்க" என்றான் ரோஹித். கடுங்கோபத்தில் இருந்தவன் "ஆமா நீ செஞ்சு வச்சுருக்க வேலைக்கு இவரு எப்ப வந்து அவரா தன்னோட வேலையை ராஜினாமா பண்ணுவாருனு நாங்க காத்துட்டு இருக்கனுமா, எவ்வளவு தைரியம் இருந்தா இங்க வேலை பார்க்குற பொண்ணுகிட்ட உன்னோட வேலையை கா டிருப்பா, உன்ன நாங்க வேற மாதிரி டீல் பண்ணலாம்னு சொன்னாலும் இந்த ஆதி சார் கேட்காம ஜஸ்ட் உன்னோட ஐடி கார்ட் மட்டும் க்ளோஸ் செய்ய சொன்னாரு,உனக்கு ப்ளாக்மார்க் கூட வைக்காம உன்னோட செர்டிபிகேட்ஸ் ரிட்டர்ன் பண்ண சொன்னாரு, ஒழுங்கா எடுத்துட்டு ஓடிரு" என்றான் பிரபா. பிரபாவின் பேச்சில் இதற்கு ஆதியே தேவலை என்று தான் நினைத்தான் ரோஹித்.

பிரபாவின் கூற்றில் ஏகத்துக்கும் அதிர்ந்தான் ரோஹித். ஏனெனில் வேலையில் சேர்ந்து டிரைனிங் பீரியட் காலங்களில் ADS கம்பெனிஸ் அளிக்கும் சம்பளம் வெளியில் வாங்க வேண்டும் என்றாள் குறைந்தது ஒரு வருட அனுபவம் இருந்தால் மட்டுமே சாத்தியம், இதை வைத்து தானே இவனும் சென்னை வாசி போல் செருக்காக வலம் வருகின்றான். இந்த வேலை போனால் வீட்டிலும் மதிப்பு கிடைக்காதே. இருந்தும் அவனின் மனதில் அடுத்து எவ்வாறு தீக்ஷாவை பழி தீர்ப்பது என்று தன ஓடி கொண்டு இருந்தது.

தன்னுடைய செர்டிபிகேட்ஸ் அனைத்தையும் எடுத்து கொண்டு வெளியில் ரோஹித் சென்ற மறுநிமிடம் யாழினியின் கேபின் லேன் நம்பரை அழுத்தினான். அந்த பக்கம் ரிங் போய்க்கொண்டே இருந்ததை தவிர அதை எடுப்பதற்கான சுவடு தெரியவில்லை என்றவுடன் அடுத்து யாழினியின் கைபேசி எண்ணிற்கு அழைத்தான். அழைத்த மறு ரிங்கில் எடுத்து காதில் வைத்தாள் யாழினி. "அடிப்பாவி ஆஃபீஸ் டைம்ல கேபின்ல இருக்காளானு பாரு, மொபைல கூப்பிட்டோனே எடுக்குறா பாரு" என்று மனதிற்குள் சொன்னவன் தன் கேபின் வருமாறு அழைத்தான்.

அதில் கேன்டீனில் அமர்ந்து தன் நண்பர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டவள் சிரிப்புடன் பிரபாவை காண சென்றாள். வேலையில் சேர்ந்த இந்த மூன்று மாத இடைவெளியில் யாழினியும் பிரபாவும் தங்களில் மொபைலில் மெசேஜ் பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு சென்றிருந்தனர். யாழினியை அவள் அறியாது பிரபா சைட் அடித்தாலும்,பிரபாவை அவன் அறிந்தே வெளிப்படையாக சைட் அடித்தாள் யாழினி. வீட்டிலும் இவளின் புலம்பல் தாங்காது நொந்துபோனாள் தீக்ஷாவும்.

பிரபாவின் அறையை அடைந்தவள் உள்ளே சென்றதும் குறும்பு புன்னகையுடன் அவன் தன்னை அமர சொல்வது முன்பே இருக்கையில் அவன் எதிரில் அமர்ந்தாள். அதில் கடுப்பானவன் "மிஸ் யாழினி என்ன பிஹேவியர் இது? உள்ள பெர்மிசனும் கேக்காம உள்ள வந்தீங்க, நான் உட்கார சொல்லாம உட்கார்ந்துட்டிங்க, ஒரு HRனு கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் இல்லை" என்று எரிந்து விழுந்தான்.அதெற்கெல்லாம் அசந்தால் அவள் யாழினி அல்லவே. "அப்பப்ப கொஞ்சம் சொல்லுங்க சார்,நீங்க தான் இங்க HR மேனேஜர்னு எனக்கு என்னமோ உங்கள ஆதி சார்க்கு அசிஸ்டன்ட்டா போட்டுட்டாங்களோனு நினைச்சிட்டேன், எப்ப பாரு அங்க தான் இருக்கீங்க,நானே மூணு தடவை பார்க்கிறேன் ஒரு நாளுக்குள்ள" என்றாள்.

"அப்ப நீங்க வேலை பார்க்கிறது இல்லை, நாங்க என்ன பண்றோம் எங்க இருக்கோம்னு பார்க்க தான் இங்க சம்பளம் குடுத்து உங்களை வச்சிருக்கோமோ" என்றான். அதுக்கும் சிறிதும் அசராது "கொஞ்சம் எதுக்கு இப்போ கால் செஞ்சு வர சொன்னிங்கனு சொன்ன கொஞ்சம் தேவலை, ஏன் அங்க ரொம்ப ஹாட் டாபிக் போய்கிட்டு இருந்துச்சு" என்றாலே பார்க்கலாம் அதில் "இப்படி நீங்களும் வேலை பண்ணாம மற்றவர்களையும் வேலையை விட்டு தூக்கினா என்ன செய்விங்க மிஸ் யாழினி" என்றான்.

"சார், தயவு செஞ்சு மிஸ் யாழினி அப்படினு மூச்சுக்கு முந்நூறு தடவை நீட்டி முழங்காதீங்க, யாழி, யாழினி,இல்லை வேற எப்படி ஷார்ட்டா கூப்பிட முடியுமோ அப்படி கூப்பிடுங்க,அதை விட்டுட்டு நீட்டி முழங்கிட்டு, நீங்க எதுக்கு கூப்பிட்டீங்கனு சொன்னிங்கனு சொல்ல மாட்டீங்க போல,நான் வரேன்" என்று எழுந்து வெளியில் செல்ல எத்தனித்தாள்.

"அடியே கொஞ்சம் நில்லேன்டி, ரொம்ப பேசுற வர வர, வாய் கூடிருச்சு போல,உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்னு தான் வர சொன்னேன், நீ பேசாம வந்த, என்னமோ பேசுன இப்போ போற " என்றவன் தன் முன் இருந்த டேபிள் மேல் வலது கையினை ஊன்றி அதில் தலையை பதித்தவன் தன் கண்முன் நின்றவளை ஏற இறங்க பார்த்து வைத்தான். சாதாரண காட்டன் சுரிதாரில் ஒப்பனை அற்ற முகமும், மாநிறத்திற்கு சற்றே கூடிய நிறமும்,கண்களில் குறும்பும்,ஓயாது பேச படபடக்கும் வாயும், ஒல்லியான தேகமும் அல்லாது சற்றே சதை பற்றுள்ள அவளின் உடல்வாகும், இவை அனைத்திற்கும் மேல் அவள் உதட்டில் இருக்கும் நிரந்தர குறும்பு புன்னகையும் என நின்றிருந்தவளை பார்க்க பிரபாவிற்கு தேவதையெனவே தோன்றியது.




அவனின் பார்வையில் முகத்தில் கடுப்படிக்க "ஹலோ பாஸ், வர சொல்லிட்டு பெரிய காதல் மன்னன் மாதிரி லுக் விட்டுட்டு இருக்கீங்க, எனக்கு ரொம்ப நேரம் நிக்க முடியாது, கொஞ்சம் சொல்ல போறீங்களா இல்லையா" என்றாள். அவளின் கோபத்தினை கண்டு ரசித்தவன் "நேற்று உங்க பிரண்ட் ஏதும் சொன்னாங்களா, நீங்க உங்க நேட்டிவ் போட்டு இன்னைக்கு காலைல தான வந்தீங்க, அந்த ரோஹித் தீக்ஷாகிட்ட எதுக்கு வம்பு பண்ணனும், நீங்க எல்லாரும் சேம் காலேஜ் தான , இப்போ தான் அந்த ரோஹித்த அவனோட செர்டிபிகேட்ஸ் எல்லாம் குடுத்து அனுப்பினோம்,மே பி உங்க கிட்ட வேற எதுவும் டிஸ்டர்ப் பண்ணுனா சொல்லுங்க,அதுக்கு தான் இப்போ கூப்பிட்டேன்" என்றான்.

இதை பற்றி எதுவுமே இவள் தன்னிடம் ஏதும் சொல்லவே இல்லையே என்று எண்ணியவள் அதை பிரபாவிடமும் சொன்னாள். எனவே காலையில் தான் அலுவலகம் வந்தவுடன் நேற்று ஹோட்டலில் டின்னர் முடித்துவிட்டு கிளம்பும் போது வழியில் தீக்ஷாவை பாலோவ் செய்ததையும், அதன் பின் ஆதி சென்று அவனை அடித்ததும், ரோஹித்தை வேலை விட்டு நீக்க சொன்னதையும் பிரபா சொல்லி முடித்தான். இதை பற்றி தன் தோழி சொல்லவில்லை என்பதும், வர வர தன்னிடம் இருந்து பாதி விஷயங்களை மறைப்பதுமாக தெரிய அவளின் மேல் தன கோபம் எழுந்தது.

பிரபாவிடம் "அதை பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலை சார் அவ,அந்த ரோஹித் செகண்ட் இயர்ல இருந்து தீக்ஷாவை லவ் பன்றான், அதை இவகிட்டயும் பல தடவை சொல்லிருக்கான்,ஆனால் இவளுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னும் சொல்லிட்டா, எங்க காலேஜ் பைனல் இயர் அப்போ நடந்த பார்வெல் பார்ட்டி நடந்தப்போ இவன் ஹார்ஷா பேசுனோனே இவ அடிச்சுட்டா, அதுக்கு அப்பறம் எந்த வம்பும் பண்ணலை, இப்போ தான் மறுபடியும் ஆரம்பிச்சருக்கான்" என்றாள்.

அதை கேட்டவன் "சரி யாழினி, வேற எதுவும் பிரச்சனை வந்தால் அதுக்கு அப்பறம் யோசிப்போம், இதை கண்டிப்பா ஆதி சார்கிட்ட சொல்லிறேன், ஆதி சார் தான் காலையில இதை பத்தி உங்க கிட்ட கேக்க சொன்னாரு" என்றவன் "நீங்க போய் கொஞ்சம் அப்பா அப்ப வாங்குற சம்பளத்துக்கு வேலையும் பாருங்க மேடம்" என்றான் நக்கலுடன். அதில் முறைத்தவள் வாயை சுளித்து கொண்டு வெளியில் சென்றாள்.

"இவளோட சரியான இம்சை,எப்படி தான் சமாளிக்கிறதோ" என்று வாய்விட்டே சலித்தான். "அடேய் ராசா மொதல்ல அந்த வாயாடிகிட்ட தைரியமா சொல்லுடா உன்னோட காதலை, அவளுக்கு பயந்துட்டு அடிக்கடி கோபமா பேசுற மாதிரியே ஒரு பில்ட்டப் வேற" என்று அவனின் மனசாட்சி கேள்வி கேட்டு வைத்தது. "நீ ஏன் பேச மாட்ட, நான் ஒரு வார்த்தை பேசுனா இந்த வாயாடி என்ன பேசவிடாம அவபாட்டுக்க பேசிட்டே இருப்பா, கொஞ்ச நாள் சுதந்திரமா இருந்துட்டு அப்பறம் அவகிட்ட சொல்லுவோம்" என்று பதில் அளித்தவன் ஆதியின் அறைக்கு செல்ல கிளப்பினான். அட்மின் டிபார்ட்மென்ட் இருக்கும் பக்கத்தில் இருந்து ஆதியின் அறைக்கு செல்ல யாழினி இருந்த கேபினை தாண்டி தான் செல்ல வேண்டும்.பிரபா மீண்டும் ஆதியின் அறையை நோக்கி செல்லும் போது தன்னை கடந்து செல்கையில் சத்தமாக சிரித்துவிட்டாள்.

பிரபா அவளை முடிந்த மட்டும் முறைத்து விட்டு சென்றான்."கொஞ்சமாதும் பயம் இருக்கா இவளுக்கு, HR கிட்ட வம்பு பண்ணினா வேலையை விட்டே தூக்கிடுவானுங்கனு தெரியும்,இந்த ஆஃபீஸ்ல எந்த பொண்ணுங்கனாலும் இப்படி இருக்காங்களா,வந்து வாய்கிறா பாரு எனக்குனு" என்று தனக்குள் புலம்பியவன் எதிரில் வந்த ஷர்மிளாவை கவனியாது மோதுவது போல் சென்றவன் சடுதியில் தன்னை நிலைப்படுத்தி ஆதியின் அறைக்குள் நுழைந்தான்.
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மருத்துவ கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களின் இறுதி ஆண்டின் முதல் செமெஸ்டரில் இருந்தனர், இந்த ஆறு மாதங்கள் கடந்தால் பின் அனைவரும் தங்களின் இன்டெர்ன்ஷிப்,வேலை என நேரம் வேறு எதற்கும் கிடைக்காது என்ற நிலையில் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஒரு சிறு பார்ட்டி போல் தங்களின் சீனியர் மாணவர்களுக்கு வைக்க விரும்பி மேனேஜ்மென்டில் கேட்டிருந்ததால் சரி என்று அணுமதி வழங்கவும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அணைத்து மாணவர்களும் வேஷ்டி,சட்டை என்றும்,பெண்கள் புடவையிலும் வந்திருந்தனர்.

தன்னுடைய கட்டுகோப்பான உடலிலும்,சிவந்த மேனியும்,ஆறடி அங்குலமும், சிவந்திருந்த முகத்தில் வைத்திருந்த பிரெஞ்ச் பியர்ட், தான் அணிந்திருந்த பர்ப்பிள் நிற முழுக்கை சட்டையினை முழங்கை வரை வரை மடித்து விடப்பட்ட ஸ்டைலில் ஆணழகாக கல்லூரி வளாகத்தில் தன்னுடைய பைக்கில் சாய்ந்து நின்றிருந்த விதம் பெண்களை மீண்டும் பார்க்க தூண்டும் விதமாக இருந்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக ஒரே இடத்தில் நிற்கின்றான். ஆனால் அவன் எதிர்பார்க்கும் அவனின் ஆளை தான் காணோம். "அய்யய்ய, இந்த பொண்ணுங்க சும்மாவே மேக்கப்ன்ற பேர்ல மூஞ்சில ரெண்டு இன்ச் பெயிண்ட் அடிச்சுட்டு வருவாளுங்க,ஒரு வரம் ஆனாலும் அழியாத மாதிரி,இதுல இன்னைக்கு புடவை வேற,நேத்துல இருந்தே கிளம்ப ஆரம்பிச்சிருப்பாங்க போல, அதுவும் ஊரே கிளம்பி வந்தாலும் எனக்குன்னு நான் தேடிகிட்டாவ வரமாட்டா போல" என்று புலம்பியவாறு நின்றிருந்தான்.

அவனின் பொறுமையை ரொம்ப நேரமாகவே சோதித்து விட்டே தன்னுடைய வண்டியை வளாகத்தில் தருண் நின்றிருந்த இடத்தில் தருணை ஏத்துவது போல் வண்டியை நிறுத்தினாள். வண்டி நின்றதும் தான் தாமதம், எதிரில் இருந்தவளை திட்ட தொடங்கினான். "ஏண்டி ஒரு மனுஷன் நமக்காக காத்துட்டு இருப்பானே சீக்கிரம் கிளம்புவோம்னு தோணுதா,அது எப்படிடி எல்லா பொண்ணுங்களும் லவ் பண்ற பையனை வெயிட் பண்ண வைக்கணும்னே ஒரு முடிவுல இருப்பீங்களோ?" என்றான்.

"என்ன சார்,பொண்ணுங்க கூட பழகியதுல ரொம்பவே அனுபவமோ" என்று சாவகாசமாக வண்டியில் இருந்து இறங்கியவள் அதன் மேல் சாய்ந்து நின்று கைகளை கட்டி கொண்டு புருவத்தை ஏற இறங்க ஏற்றியவளின் செய்கையில் தன்னுடைய கோபத்தினை முற்றிலுமாக விட்டவன் "என்ன டார்லி,உனக்காக தான இவ்வளவு நேரம் நின்னுட்டு இருக்கேன்,லேட்டா வந்தா நான் பாவம் தான" என்றான் தருண். "ஹலோ இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லையாடா,இப்போ தான் டைம் நைன் ஆகுது,நீ எட்டு மணிக்கே வந்துட்டா நான் என்ன பண்றது, இந்த புடவையை கட்டிட்டு நாங்க வர வேண்டாமா" என்றாள். அதில் அசடு வழிய சிரித்தவன் இரண்டு வண்டியில் சாய்ந்திருந்தவன் இரண்டு அடிகள் தள்ளி நின்று சத்தமாக விசில் அடித்தான். அதில் பதறியவள் "அடேய் கொஞ்சம் சும்மா இருடா,எதுக்கு இப்போ இப்படி பண்ணிட்டு இருக்குற" என்றாள்.

இன்று பார்ட்டி என்பதால் கூடுதல் சிரத்தையுடன் தன்னுடைய சிவந்த நிறத்திற்கு எடுப்பாக, மஜெந்தா கலர் சாப்ட் சில்க் அதிக பார்டர் இல்லாத இருந்த புடவையும், எப்பொழுதும் போனிடெய்ல் செய்து அடக்கிருக்கும் முடியினை இன்று விரித்து விடப்பட்டு, முகத்தினில் செய்த சிறு ஒப்பனையும், நெற்றியில் ஒற்றை கல் போட்டும் அதன் மேல் ஒரு சிறு கீற்று குங்குமமும், என தேவதையாக நின்றிருந்தாள் வைஷ்ணவி.

தருணும் வைஷ்ணவியும் கல்லூரி வளாகத்தில் பேசிவிட்டு பார்ட்டி நடக்கும் ஹாலை நோக்கி நடந்தனர். நான்காம் ஆண்டு மாணவர்கள் நடத்திய பார்ட்டியில் ஆரவாரத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அளவு இல்லாது சென்றுகொண்டிருக்க சிறிது நேரத்தில் விழாவின் நாயகர்களாகிய இறுதி ஆண்டு மாணவர்களுக்கான விளையாட்டு துவங்கியது. ஒரு சிறு பௌலில் அனைத்து இறுதி ஆண்டு மாணவர்களின் பெயர்களும் எழுதி போடப்பட்டு இருக்க அதில் இருந்து ஒவ்வொரு முறையும் இரண்டு சீட்கள் என்று எடுக்கப்பட்டு மற்றொரு பௌலினில் அவர்கள் செய்ய வேண்டியவைகளும் எழுதி போடப்பட்டு இருந்தது.

விளையாட்டு ஆரம்பம் ஆகிய நொடிகளில் இருந்து மாணவர்களிடையே தோன்றிய எதிருப்பார்ப்புகள் கூடியது.ஏனெனில் ஒவ்வொரு மாணவர்களும் அத்தனை கம்பீரமாக,அழகாக வேஷ்டி சட்டையிலும்,மாணவிகள் புடவைகளில் தேவதையாகவும் நடனம் ஆடிக்கொண்டும்,பாடல் பாடிக்கொண்டும் இருந்தனர். அதில் வைஷ்ணவியின் முறையும் வந்தது.வைஷ்னவி மேடை ஏறியதும், மேடையில் இருந்த நான்காம் ஆண்டு மாணவன் தருணை நோக்கி தன் பார்வையை திருப்ப அவனும் சரி என்பது போல் தலையசைக்கவும் மேடையில் நின்றிருந்தவனும் மற்றொரு சீட்டை எடுக்க தருண் பெயர் வந்தது.

அதில் தருணை நோக்கி சடாரென திரும்பிய வைஷணவியை கண்டு தருண் கண்சிமிட்டியபடி மேடை ஏற,இன்னும் வைஷ்ணவியின் பார்வை மேடையில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு மற்றொரு பௌலில் இருந்து அவர்கள் இருவர் செய்வதற்கான சீட் எடுக்கப்பட்டது. அதில் டான்ஸ் என்று இருக்க அதிர்ந்து திரும்பினாள். ஏனெனில் வைஷ்ணவி நன்கு நடனம் ஆடுவாள் என்று அவர்கள் நெருங்கிய நண்பர்கள்,குடும்பத்தில் உள்ளவர்கள்,தருண் மட்டுமே அறிந்தது.சிறு வயதில் மேடையில் ஆடியதோடு சரி,அதன் பின் ஆடியது இல்லை. இப்பொழுது திடிரென ஆடச்சொல்லவும் தூக்கிவாரி போட்டது.

அதில் தருணை திரும்பி வேண்டாம் என்பது போல் தலை அசைத்தவளை கண்டு எதுவும் செய்ய இயலாது என்பது போல் தன் உதட்டினை பிதுக்கி தலையை அசைத்தவன் அவளின் அருகில் நின்றான். அடுத்து ஸ்பீக்கரில் ஒலிக்க விட்ட பாடலில் வெளிப்படையாகவே அதிர்ந்தாள் வைஷ்ணவி.

"உயிரே நீ எனக்கு உறவாக கிடைத்த உறவு அல்ல, வரமாய் கிடைத்த என் உயிர்"

பூக்கும்
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர் ப்ரண்ட்ஸ் அண்ட் லவ்லி சிஸ்டர்ஸ்,

ஒரு புன்னகை பூவே அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன் இந்த எபி முழுவதும் வைஷ்ணவி தருண் மட்டும் தான். கொஞ்சம் நானும் லவ் சீன் ட்ரை பண்ணிருக்கேன். தேறுவேனா மாட்டேனான்னு படிச்சிட்டு சொல்லுங்கோ. ஒரு வார்த்தை கமெண்ட் வந்தாலும் நான் ரொம்ப ஹாப்பி. இது வரை லைக்ஸ் கமெண்ட்ஸ் குடுத்த ஆல் டியர்ஸ் தாங்க் யூ சோ மச்.ரொம்ப லேட் போஸ்ட்க்கு மன்னிச்சு..


http://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/

இப்படிக்கு

உங்கள் அன்பு தங்கை ரேவதி 😍😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 18


மேடையில் வைஷ்ணவி ஏறிய அடுத்த சில நிமிடங்களில் ஏற்றப்பட்ட தருணை கண்டு டான்ஸ் செய்ய மறுத்தபடி வேண்டாம் என்னது போல் தலை அசைத்தவளை கண்டவன் ஒன்றும் செய்ய இயலாது என்ற விதம் தருணம் தலை அசைத்து உதட்டை பிதுக்கியபடி வைஷ்ணவியை நெருங்கி நின்ற மறு நிமிடம் வைஷ்ணவி அதிர்ந்து நின்ற நொடி கீழே அமர்ந்திருக்கும் கரகோஷம் அனைவரையும் அதிர வைத்தது. ஏனெனில் ஒலிபரப்பபட்ட பாடல் அவ்வாறு.


“பெண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ”



தற்பொழுது ட்ரெண்டிங் சாங் மாரி ௨ வில் இருந்து ஒலிக்க ஆரம்பித்தவுடன் தருண் தான் கட்டி இருந்த வேஷ்டியினை மடித்து கட்டி இடது கையில் அணிந்திருந்த காப்பினை மேலே ஏற்றியவன் வைஷ்ணவியை நெருங்கி நின்று ஆட ஆரம்பித்தான் அடுத்த வரிகளுக்கு


“ஆண் : ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ”


அடுத்து வேற வழி இல்லாது வைஷ்ணவியும் ஆடுவதற்கு ஏற்ப புடவை முந்தியை சொருகி கொண்டு ஆடியதில் தருண் மயங்கி விழாத குறை தான்.


“பெண் : ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி
ஆண் : கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி

பெண் : ரவுடி பேபி ரா ரா ரவுடி பேபி

பெண் : உன்னாலே ஏய் மூடாச்சு மை ஹார்மோனு
பேலன்ஸு டேமேஜ்
ஆண் : ஏய் காமாட்சி என் மீனாட்சி இந்த
மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு

---------------------

---------------------



பெண் : ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி……

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

பெண் : ரவுடி பேபி”


என்று பாடலிற்கு ஏற்றவாறு சாய்பல்லவியை மிஞ்சும் அளவு இல்லை என்றாலும் அழகாகவே ஆடியவள் பாடல் முடியும் ரவுடி பேபி என்றதில் தருணை நோக்கி கண் சிமிட்டியவள் சொருகி இருந்த தன்னுடைய புடவை முந்தானையை கீழே இறக்கி விட்டாள்.


இவர்கள் ஆடி முடித்ததும் எழுந்த கைதட்டுகள் முடியவே சில நிமிடங்கள் ஆனது மேடையை விட்டு இறங்கி செல்லும் போது தருண் அவளை கண்டு கண்சிமிட்டி விட்டு சென்று தன்னுடைய இருக்கையில் அடைந்தான். அதன் பின் பல விளையாட்டங்களுடனும், மாணவர்களின் அட்டூழியங்களிலும் நேரம் சென்று நீண்டது.மதிய லன்ச் முடிந்தும் தொடங்கிய பார்ட்டி முடிய இரவு ஏழு ஆனது. எல்லோரும் கிளம்பும் பொழுது தருணும் ரேஷ்மாவும் வைஷ்ணவியும் சேர்ந்தே தங்களின் பைக் பார்க் செய்திருக்கும் இடத்தினை அடைந்தனர்.


முதலில் வண்டியில் அமர்ந்து கீயினை போட்ட வைஷ்ணவி தருணை கண்டு கிளம்புவதாக தலை அசைக்கவும் அவளின் அருகில் வந்தவன் கீயினை தன்னுடைய கையில் எடுத்து அதனை ரேஷ்மாவிடம் குடுத்தான். வைஷ்ணவி கேள்வியாக பார்க்க “வா உன்ன ட்ராப் பண்றேன், இப்போ தான சவன் ஆகுது வெளியே போயிட்டு போகலாம் பக்கத்துல. அப்பறம் ரேஷ்மா உன்னோட பைக் எடுத்துட்டு வந்துருவா” என்று தன்னுடைய பைக்கில் அமர வைத்தவன் ரேஷ்மாவிடம் கிளம்புவதாக கூறியவன் வண்டியை ஆன் செய்தவன் கைகளில் பைக் வேகமெடுத்து பறந்தது.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தருணுடன் பல முறைகள் பைக்கில் சென்றாலும் முதல் முறை செல்வது போலவே தயக்கத்துடன் அமர்ந்தாள். இன்னும் அவளின் தயக்கத்தினை கண்டவன் வேண்டும் என்றே இன்னும் வேகத்தினை கூட்டியதினால் பயத்தினால் அவனின் முதுகினை ஒட்டி அமர்ந்து வலது கையினை எடுத்து அவனின் இடையினை கட்டி கொண்டாள். அதில் குறும்புடன் “இப்படி உட்கார்ந்து வரது எவ்வளவு சூப்பரா இருக்கு அதை விட்டுட்டு ஏன் டார்லி தள்ளி உட்கார்ந்து வர” என்று பிரேக்கில் பிடித்திருந்த இடது கையினை எடுத்து அவளை முன்னால் இருந்தே கொஞ்சியவன் ஒரு ஹோட்டலில் சென்று வண்டியை நிறுத்தினான்.


அது குடும்பமாகவும், ஜோடிகளாகவும் அமரும் படு இரு இருக்கைகளாகவும் இருந்த ஓரளவு பெரிய ஹோட்டல் தான். அதில் இருவர் அமரும் டேபிளில் சென்று வைஷ்ணவி அமர்ந்ததும் அவளின் எதிரில் அமர்ந்தவன் இருவருக்குமான சாப்பிட ஆர்டர் செய்தான். அதில் “ தரு அதான் காலேஜ்லயே சாப்பிட்டோம் தான அப்பறம் எதுக்கு இப்பவும்” என்று சிணுங்கினாள். அதில் நன்றாக முறைத்தவன் “நீ சாப்பிட்ட லட்சணத்தை தான் பார்த்தேனே, நீ எல்லாம் ஒரு மெடிக்கல் ஸ்டூடெண்ட் உன்னோட ஹெல்த் கூட ஒழுங்கா பார்த்துக்க மாட்ட போல” என்று கல்லூரியில் அவள் கொறித்த உணவை தான் சுட்டி கட்டினான். அதில் பதில் பேசாது அமைதியானாள்.


இன்று காலையில் இருந்து தருணை அதிகமா அவளின் மனம் நாடியது. இன்னும் குறைந்தது ஆறு மாதங்கள் மட்டுமே படிப்பு முடிய உள்ளது. அது மட்டும் இல்லாது ஆறு மாதங்களும் தொடர்ந்தும் காண இயலாது இன்டர்ன்ஷிப் என்று சென்று விடும். அதன் பின் பார்ப்பது அறிதே என்று சோர்ந்து போனாள்.


இந்த காதல் கொண்ட மனம் ஒவ்வொரு நிமிடமும் தன்னுடைய இணையை தங்கள் அருகில் எந்த நேரமும் இருத்தி கொள்ள துடிக்கும். அது தான் விரும்பும் நபர் மீது உள்ள நம்பிக்கையின்மை கிடையாது. அவர்கள் மீது உள்ள அளவு கிடந்த காதலினால் அவர்களை பிரிந்து இருக்க இயலாது தவிக்கும் தவிப்பே. அந்த உணர்வில் தான் வைஷ்ணவியும் இருந்தாள்.


அவளின் அமைதியை கண்டவன் டேபிள் மேல் வைத்திருந்த அவளின் கைகளை பிடித்துக் கொண்டு என்னவென்று கேட்க தான் நினைத்ததையும் சொன்னவளை கண்டவன் “இதுக்கு தான் மேடம் இன்னைக்கு நான் கூப்பிட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம, பைக்ல க்ளோஸாகவும் உட்கார்ந்து வந்தீங்களோ” என்று சீண்டினான். அதில் அவனின் கரங்களில் இருந்து தன்னுடைய கரத்தினை விடுவித்து கொள்ள முயன்றதில் அவளின் கோபம் புரிய “இதுக்கு எதுக்கு டார்லி இவ்வளவு அமைதியா இருக்க, நீயும் நானும் ஒரே பாட்ச் தான எங்க எனக்கு ஜாப் கிடைக்கிதோ அங்கேயே உன்னயும் கூட்டிட்டு போயிடுறேன்” என்று ஆறுதலாக கூறியவன், அடுத்து கேட்ட கேள்வியில் வைஷ்னவி பொது இடம் என்றும் பாராது அழுது தீர்த்தாள்.


“என்ன விட்டு கல்யாணம் வரைக்கும் தள்ளி இருக்கனும்னு,ரொம்ப ரேரா தான் பார்க்க முடியும்னு நினைச்சிட்டு வந்த அழுகையா இல்லை,இப்போ உன்ன ஜஸ்ட் காலேஜ் டேஸ்ல வந்த டைம் பாஸ் லவ் தான், நான் வேலைக்கு போனதும் உன்ன விட்டுவிட்டு வேற யாரையும் லவ் பண்ணி உன்ன கழட்டி விட்டு போய்டுவேனு என்மேல நல்ல அபிப்ராயம் எதும் இருக்கா” என்று கேட்டான்.


தான் கேட்கும் கேள்வி தனக்கே அபத்தமானது என்று தெரிந்திருந்தும், இந்த காதலினை அவள் ஏற்றுக் கொள்ள

மாதங்கள் ஆனதும் என தெரிந்தும் கேட்டான். தன்னவள் வாயில் இருந்து தன் மேல் நம்பிக்கை இருப்பதை அறிந்து கொள்ள கேட்டான். அதில் வைஷ்ணவி உடல் மெல்லியதாக குலுங்களுடன் அழுதவள் முகம் அந்த நேரத்திலும் தருணை ஈர்க்க தான் செய்தது. அவளின் சிவந்த நிறத்தின் காரணமாக அழுததினால் மேலும் சிவந்து, இதழினை கடித்து அழுகையினை கட்டுப்படுத்த முயன்று அதில் தோல்வியை தழுவி உடல் குழுங்க அமர்ந்திருந்தாள்.



தருண் இன்னும் அவளின் கரங்களை விடுவிக்காததை கண்டவள் அவனின் கரத்தினை உதரியவள் தன் கைப்பையினை எடுத்து கொண்டு வேகமாக நகர்ந்தவள் வாசல் சென்று இன்னும் தன் வண்டியினை ரேஷ்மா எடுத்து வராததினால் ஆட்டோ வருவதற்காக காத்திருந்தாள். அதற்குள் தருணும் ஹோட்டல் பில்லினை செலுத்து விட்டு தன் பைக்கை வைஷ்ணவியின் அருகில் நிறுத்தினான்.


அவள் அதை கண்டும் காணாது ஆட்டோ வருவதற்காக காத்திருந்தாள். அதில் கடுப்பானவன் “வைஷ்ணவி உன்னோட சண்டையை கொஞ்சம் வீட்டுக்கு போனது அப்பறம் போன்லையோ இல்லை யாரும் இல்லாத இடமா பார்த்து வண்டியை நிறுத்துறேன், அப்போ வச்சுக்கோ, இப்படி உன் பக்கத்துல நான் நின்னும் நீ கண்டுக்காம நின்னா பார்க்கிறவங்க என்ன தான் ஈவ் டீசிங்னு போலீஸ்ல போட்டு குடுத்தாலும் குடுத்திடுவாங்க” என்று கோபமும் நக்கலும் கலந்து காட்டமான குரலில் கூறினான்.


“அதான் நான் உன்ன ரொம்ப நல்ல மாதிரி நினைக்கிறேனு கேட்டிங்கள இப்போ மட்டும் எதுக்கு வந்து நிக்கனும், எனக்கு வீட்டுக்கு போக தெரியும் உங்க வேலையை பார்த்துட்டு போறீங்களா” என்றாள் அழுகையும் தருணின் காட்டத்திற்கு சிறிதும் குறையாத காட்டத்துடன்.


“ஹேய் சும்மா ஏன்டி படுத்துற, உன்ன மாதிரி தான நானும் உன்ன பிரிஞ்சு இருக்கனும்னு இருக்கேன், இத்தனைக்கும் இன்னும் ஒரு முழு செமஸ்டர் சாலிடா இருக்கு, அதுக்குள்ள இப்படி பேசுனா கடுப்பாகாதா மனுஷனுக்கு” என்றவன் அவளின் கலங்கிய முகத்தினை கண்டு “இப்போ என்கூட வரலைனா அப்படியே போய்டுவேன்” என்று சொன்னதும் வைஷ்ணவியும் வேறு பேசாது வண்டியில் அமர்ந்தாள். அவள் ஏறி அமர்ந்ததும் ரேஷ்மாவிற்கு அழைத்து வைஷ்ணவியின் வீட்டிற்கு இரண்டு தெருக்கள் தள்ளி தங்களுக்காக காத்திருக்கும்படி சொன்னவன் வண்டியை நான்கு வழி பாதை செல்லும் வழியில் வண்டியை அதன் திசையில் திருப்பினான்.
 
Status
Not open for further replies.
Top