தர்ஷனின் கிண்டல் வழியும் தொனியை தற்பொழுதே கண்டுகொண்டவள், தர்ஷனையும் அவனின் மொபைலினையும் மாறி மாறி பார்த்தவள் கோபத்துடன் அதனை தூக்கி ஏறிய முயன்றாள். அவளின் எண்ண ஓட்டத்தை ஊகித்தவன் போல் "அடியேய், என்னடி பண்ண போற, நியூ மொபைல்டி வாங்கி மூணு மாசம் தான் ஆகுது" என அலறியபடி மொபைலை வாங்க முயன்றான்.
மொபைலை வாங்க முயன்றவனின் கையினை பிடித்து தடுத்தவாறு தரமாட்டேன் என்பது போல் தலையத்தவள் "இந்த போட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது, அணைக்கு நீங்களும் அங்க தான் இருந்தீங்களா, இல்லை வைஷு அல்லது வேற யாரும் குடுத்தாங்களா, ஆனா இந்த மாதிரி வேற யார்கிட்டயும் இல்லையே, வைஷுக்கு கூட இந்த போட்டோ நா அனுப்ப சான்சசும் இல்லையே, இதே மாதிரி போஸ்ல எடுக்கணும்னு ட்ரை போனப்போ என் ப்ரண்ட் கவி சொதப்பிட்டா, அப்ப நீங்களும் வந்திருந்தீங்களா??" என தன் பார்வையை இன்னும் போட்டோவில் இருந்து விலக்காது படபடவென விடாது பேசியவளை பார்த்தான்.
தன் கேள்விக்கு பதில் அளிக்காது தன் கையினை பிடித்தபடி நின்ற தர்ஷனை கண்டவள், “அத்தான் நான் கேட்டதுக்கு
பதில் சொல்லாம கையை பிடுச்சுட்டே நின்னா என்ன அர்த்தம்??” என விடாது பேசியவளை பார்த்தும் ஒன்றும் சொல்லாது அவளின் வலது கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றினான.
“ஐயோ என்ன அத்தான் இது, டாட் ப்ரெசென்ட பண்ணுன ரிங் அது, உங்களுக்கு எதுக்கு இது” என்று பதறினாள்.
"அடியேய் காலையில வந்ததுல இருந்து நா கேக்குறதுக்கு மட்டும் பதில் பேசிட்டு இருந்தவ , இப்ப மட்டும் ஏன்டி தொன தொனன்னு கேள்வி கேட்டுகிட்டு இருக்க கொஞ்ச நேரம் இருடி " என்று மீண்டும் தன் பேண்ட் பாக்கெட்டினுள் கை விட்டு எதையோ தேடினான் . தேடியது கையில் அகப்பட்டவுடன் வெளியில் எடுத்து அதை ஷாலுவின் விரலில் அணிவித்தான். இதனை எதிர்பாராதவள் தர்ஷன் தன் கையில் அணிவித்த மோதிரத்தை உற்று கவனித்து பார்த்தாள். அதில் 'S' வடிவ எழுத்து புதுவித டிசைனில் பொறிக்கப்பட்டிருந்தது.
ஷாலினி மோதிரத்தை பார்த்தும் எந்த பதிலும் சொல்லாததினால் "என்ன மேடம் எப்ப பாரு இப்படியே ஷாக் அடிச்ச மாதிரி நின்னுட்டா நான் என்னனு நினைக்கிறது,ஏத்து வேற ரியாக்ஷனும் கொஞ்சம் குடுமா" என்று அவளை சீண்டியவன் "என்ன அம்மு ரிங் பிடிச்சிருக்கா, இந்த ரிங்ல ஒரு ஸ்பெஷல் இருக்கு, அது என்னனு கண்டுபிடிக்க முடியுதான்னு பாரு" என்றான்.
தர்ஷனின் கையில் இருந்த தன் கையை விடுவித்துக்கொள்ள முயன்றவளை "இப்டியே இருந்தே பாரு அம்மு" என்று அவளின் கையை விடும் நோக்கம் இல்லாது சொன்னான். "இவரு இப்படியும் பிடிச்சுட்டு பாருன்னு சொன்னா என பண்றது??" என்று முணுமுணுத்தாலும் தன் கையில் சற்று நேரம் முன் அணிவிக்கப்பட்ட மோதிரத்தை பார்த்தவளிற்கு 'S' எழுத்தை தவிர வேற எதுவும் வித்தியாசமா தெரியத்தினால் "ஒன்னுமே டிஃபரெண்டா எனக்கு தெரியலையே அத்தான்" என்று உதட்டை பிதுக்கினாள்.
அவளின் அந்த சிறு siruseiyaஅவளின் சிறு செயலில் மயங்கியவன் அவளின் கரத்தினை பிடித்து சட்டென்று தன் அருகில் இழுத்தவன் அவளை இழுத்த வேகத்திலே திரும்பியவன் அவளின் முதுகுப்புறம் நின்றான். திகைப்புடன் விலக முயன்றவளை விலக விடாது செய்தவன் பின்னில் இருந்தே அவளின் மோதிரம் அணிந்த விரலினை பிடித்தான்.
"இதுல உனக்கு எதுவுமே வித்யாசமா தெரியல அம்மு, இந்த S லெட்டரை நல்ல பாரு, இந்த லெட்டர்ல கீழ இருக்க இந்த ஷார்ப் கட்ல 'D' லெட்டர் வர மாதிரி நானே டிசைன் செஞ்சு ஆர்டர் குடுத்து வாங்குனேன். இந்த டிசைனோட மீனிங் என்னனா S லெட்டெர்க்கு உள்ள இருக்க D மாதிரி எப்பயும் நா உனக்குள்ள இருக்கனும்னு ஒரு நினைப்பு வரும், அதுனால இட்ஸ் வெரி ஸ்பெஷல் அண்ட் வெரி செண்டிமெண்ட் ஆல்சோ டு மீ" என்று தர்ஷனின் வார்த்தைகளை கேட்டவள் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தாள் என்றாள் மிகை அல்ல.
நீண்ட பேச்சினை முடித்தவன் இன்னும் யாரும் தங்களை கவனிக்க அருகில் இல்லை என்பதை உணர்ந்தும், தனிமை குடுத்த தைரியமும் சேர்ந்து தன்னவளின் மோதிரம் அணிந்த விரலில் முதல் முறை தன்னுடைய இதழினை பதித்து விட்டு, அவளின் பட்டு கன்னங்களிலும் அவசரமாகவும், அதே சமயம் மென்மையாகவும் இதழினை பதித்தவன் அவளை தன் இடதுபுறம் நிறுத்தினான்.
தன்னவள் தான் என்றாலும் தாங்களே இப்பொழுது தான் காதலை பகிர்ந்துள்ளோம் அதும் இன்னும் அவள் வாய் மொழியில் தான் அறியவில்லை என்பதும், தங்களை இந்த நெருக்கமான நிலையில் வீட்டினர் பார்த்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் தான், இருந்தாலும் தன்னவள் தன் வீட்டினர் முன் சங்கடப்படும்படியான சூழ்நிலையை உருவாக்க மனது இல்லை.
தன் இடது தோளின் புறம் நின்றவள் மெல்ல அவனின் செய்கையை கிரகிக்கச் செய்து வெட்கமும், மகிழ்ச்சியும் மிளிர தன் முகம் பார்க்க அண்ணார்ந்து “அந்த போட்டோ எப்ப எடுத்ததுனு சொல்லுங்க, நீங்களும் அன்னைக்கு அங்க தான் இருந்தீங்களா?? ” என சிணுங்கியபடி கேட்ட நின்ற விதம் சிரிப்பை உண்டு பண்ண சத்தமாக வாய் விட்டு சிரித்தவன், "என் பக்கத்துல இவ்வளவு குட்டியா இருக்க, சத்தம் மட்டும் ஆளுக்கும் உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாம அவ்ளோ சௌண்ட்லியா இருக்கு, போட்டோ பத்தி இப்ப தெரிஞ்சிட்டு என்ன பண்ண போற?? “ என்றான்.
தன்னை அவன் கிண்டல் செய்வதை உணர்ந்தவள் அவனின் மார்பில் குத்தினாள். "சரிடி இப்படியேவா நிக்க போற,அங்க பாரு வைஷு,விஷ்ணு வராங்க தள்ளி நில்லு.அப்பறம் உன்ன தான் அதுங்க வச்சு செய்யுங்க" என்றவனின் பார்வை தங்களை நோக்கி வந்து கொண்டிருந்தவர்களின் புறம் சுட்டி கட்டி மீண்டும் ஷாலினியின் புறம் திரும்பியது.
அப்பொழுது தான் தான் நிற்கும் நிலை உணர்ந்து "ஐயையோ, இதுங்க முன்ன இப்டி நின்னா அவ்ளோ தான், அதிலும் அந்த விஷ்ணு ஏற்கனவே என்னய்ய ஒரு மார்க்கமா பார்த்துட்டு இருந்தான்." என்று பதறி விலகினாள். தர்ஷனும் சிறு சிரிப்புடன் தள்ளி நின்றான்.
பின்பு தர்ஷன், ஷாலினி நின்ற இடத்திற்கு அவர்கள் இருவரும் வரவும் தங்களின் அடுத்த அரட்டையை துவங்கியவாறே அனைவரும் இருந்த இடத்தை நோக்கி சென்றனர்.
ஷாலினி அமர்ந்தவுடன் தர்ஷனும் தங்களுடன் வராததும், இவர்களின் இன்றைய புது நெருக்கமும் விஷ்ணுவை யோசிக்க செய்தது. இவர்களின் புறம் இருந்து நகர்ந்த உடன் தன் சகோதரியிடம் முதல் கேள்வியாக "ஏன் வைஷு நம்ம ஷாலுவும் அண்ணாவும் லவ் பண்றங்களா,நா கார்ல இருந்து வரப்ப இருந்து நோட் பன்னினேன். அண்ணாவோட பார்வையும், நம்ம அம்முவோட முழியும் சரி இல்லை" என்றான்.
இன்னும் அவுங்களே மற்றொருவரிடம் பகிர்ந்து கொள்ளாத நிலையில் தன்னுடைய தம்பியே அனாலும் அது அவர்களின் வாய்மொழியாக சொல்லவில்லை என்பதால் இது அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம் தான் சொல்வது சரி இல்லை என்று நினைத்தவள் தன் தம்பியிடம் கூறாது வேறு பேசி மழுப்ப பார்த்தாள்.
"நீ சொல்ல மாட்டேன்னு தெரிஞ்சும் உன்கிட்ட கேக்கறேன் பாரு, உன்னோடது பத்தி கூட அவ்ளோ க்ளோசா இருக்க என்ன நம்பாம சொல்லாதவ, அடுத்தவுங்களோடதா என்னய்யா நம்பி சொல்ல போற" என்று வைஷுவை அதிர வைத்தான் .
“நம்பிக்கை என்ற சிறு நூலிலையில் தான் அனைவரின் அன்பும் இயங்கி வருகிறது”
பூக்கும்.
--------------------------------------------------------