“அத்தான், உங்கள பெரிய பிஸ்னஸ் மேக்னட், பார்த்தாலே எல்லாரும் நடுங்குவாங்க, இப்படி இன்னும் எக்ஸ்ட்ரா பிட் வேணா விட்டுக்கோங்க, நானும் சேர்ந்து வேணும்னா கரகோஷம் எழுப்புறேன், அதுக்கு ஐயாவோட இமேஜ பொடிசுனு சொல்லி டேமேஜ் பண்ணாதீங்க” என ஹீரோ ரேன்ஜிற்கு மொழிந்து நடக்க துவங்கினான் விஷ்ணு.
“அடேய் காலேஜ் போய்டு ஒரு வருஷம் முழுதா இன்னும் முடிக்கல, அதுக்குள்ள நீ என்னவோ ஹீரோ மாதிரி பேசுற, போடா அரட்டை, என்ன மாதிரி முடியுமா என்ன, நான் எல்லாம் காலேஜ் சேர்ந்த ஒன் மன்த்ல அவ்வளவு ப்ரபோசல்,என்கிட்டயேவா ?” என தர்ஷனும், விஷ்ணுவும் பெரிய பெரிய பில்டப் எல்லாம் செய்தும், ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டும் நடந்தனர். தர்ஷன், வைஷூ சேர்ந்து விஷ்ணு, ஷாலினியை தாக்கியும், இவர்கள் இருவரும் இணைந்து தர்ஷன், வைஷூவை தாக்கியபடியும் சென்றனர்.
இயல்பிலே நான்கு பேரும் கலகலப்பானவர்கள் என்பதாலும் நேரம் சென்றதே தெரியாதவாறு வித வித போஸ்களில் செல்பி எடுப்பதும் என இருந்தது.
சிறிது நேரத்தில் “அப்பாடி என்னால இதுக்கு மேல நடக்க முடியல, நீங்க வேணா போய்ட்டு வாங்க, நான் கொஞ்ச நேரத்தில வந்து ஜாய்ன் பண்றேன்” என ஷாலினி ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து விட்டாள்.
“ம்க்கும், என்னடா இந்த நோஞ்சான் இவ்வளவு தூரம் ஒழுங்கா நடந்து வருதேனு நினைச்சேன், அதுக்குள்ள உட்கார்ந்திடுச்சு” என்றான் விஷ்ணு.
“அட போடா உன்கிட்ட பேச எனக்கு இப்ப எனர்ஜி இல்லை என்றாள் ஷாலினி.”சரி போ, நான் முன்னால நடக்குறேன், வைஷூ நீ வர்றியா இல்ல எப்படி” என்றவுடன் தன் அண்ணன் தர்ஷனை பார்த்தாள் வைஷ்ணவி.
தங்கையின் பார்வையை உணர்ந்தவன் போ என்பது போல் தலையை சிறுதே அசைத்தான். வைஷ்ணவியும் தன் தம்பி விஷ்ணுவுடன் இணைந்து நடக்க துவக்கினாள்.
ஷாலினி அமர்ந்திருந்த மரத்தின் மேல் வலது காலினை தலையில் அழுந்த பதித்து, இடது காலினை மரத்தில் பதித்து, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு ஷாலினியை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவன், தங்களை சுற்றிலும் பார்வையிட்டு தன் முதல் கேள்வியில் ஷாலினியின் மனதினை அறிய முற்பட்டான். தர்ஷனின் இந்த நேரடி கேள்வியில் சடாரென கண்களில் நீர் கோர்க்க நிமிர்ந்து கலக்கத்துடன் தர்ஷனை பார்த்தாள் ஷாலினி.
“புரிந்து கொள்ளப்படாததை விட வேதனையானது, தவறாக புரிந்து கொள்வது”
பூக்கும்.