revathyrey04
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யுனோவா காரின் பின்புறம் வைஷூ மற்றும் ஷாலுவும், அதன் பின்புறம் கலையரசி மற்றும் அவரின் கணவரும், முன் சீட்டில் விஷ்ணு என அமர்ந்திருந்தனர். ஓட்டுனர் சீட் மட்டும் காலியாக இருந்தது.
அனைவரும் காரில் ஏறியும் இன்னும் தன் மூத்த மகனை காணாது “விஷ்ணு அண்ணன எங்க, ஏற்கனவே நேரம் ஆச்சு, இவன் வேற எப்ப பாரு அந்த போனவே காதுல வச்சிக்கிட்டு” என்று மகனை நினைத்து சலித்துக் கொண்டே விஷ்ணுவிடம் கேட்டார்.
“தெரியலம்மா, நா காருல ஏறும் போது போன் கால் வந்துச்சு, பேசிட்டே நடந்து போனாறு” என்று சொல்லும் போதே காரில் ஏறி இருந்தான். கலையரசி விஷ்ணுவிடம் மூத்த மகனை பற்றி கேட்கும் போதே இன்ப அதிர்ச்சியில், இனம் புறியாத படபடப்புடன் அத்தை மற்றும் மாமா முன் எந்த விதமான முக மாறுதலையும் காட்ட இயலாது அமர்ந்திருந்தாள்.
“அத்தான் வந்துருக்காங்கனு இந்த வைஷூ கூட சொல்லவே இல்ல, இருக்கு அவளுக்கு” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.
“ஆமா அவ கிட்ட நீ போய் சொன்னியா இதுக்கு முன்னாடி, நா உன் அண்ணன லவ் பண்றேனு, சொல்லிருந்தேனா அவ உன்கிட்ட சொல்லிருப்பா” என்றது அவளின் மனசாட்சி.
“இன்னைக்கு கண்டிப்பா வைஷூ கிட்ட நா லவ் பண்றத சொல்லனும் “ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அதை கண்டு மனசாட்சி தலையில் அடித்துக் கொண்டது “கர்மம் கர்மம், லவ் பண்றத மொத உன் அத்தான் கிட்ட சொல்லு, அத விட்டுட்டு அத்த மக கிட்ட சொல்லுதான்” என்று.
அதற்குள் காரில் ஏறிய கலையரசி “எங்கடா போன, எப்ப பாத்தாலும் போன் தானா, சீக்கிரம் கிளம்பு டா, அப்ப தான் ஒன்பது மணிக்குள்ள அங்க போய் சேர முடியும்” என்றார்.
தூரத்தில் இருந்தே ஷாலுவை பார்த்து விட்டு அவளின் முன் தான் இருக்கும் போது முக மாறுதலையும் காண வேண்டும், தன்னை அடையாளம் கண்டு கொள்வாளா, தன்னை அவளிற்கும் விருப்பம் உள்ளதா என்று பல விதமாக யோசித்து தள்ளி நின்று கொண்டிருந்தான். அனைவரும் காரில் ஏறியும் சிறிது தாமதமாகவே வந்தான்.
அவனின் எண்ணங்களை பொய்யாக்காமல் சிறு எதிர் பார்ப்பும், சிறு அதிர்வு சுமந்த முகமும், கண்ணில் ஒருவித நிம்மதியுடனும் தன்னை பார்த்த அந்த ஓரிரு நிமிடங்களில் அவளின் முக மாறுதலை கண்டான்.
கலையரசி பேசுவதை எல்லாம் காதில் வாங்காது ரிவர்வியூ கண்ணாடியை சரி செய்யும் சாக்கில் அதில் ஷாலுவின் முகம் விழ வைத்து, அவளை பார்த்து வசிகர புன்னகையுடன் கண்சிமிட்டி காரை கிளப்பி திருமங்கலத்தில் இருந்து சுமார் இரண்டு மணி நேர தூரத்தில் மேலூரை தாண்டி உள்ள ப்ரான் மலையை நோக்கி காரை லாவகமாக செலுத்திக் கொண்டிருந்தான் தர்ஷன்.
“மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு”
பூக்கும்.