புன்னகை 27
ஷாலினியின் அறை கதவினை தட்டிவிட்டு அவளின் பொலிவு இழந்து இருக்கும் முகத்தினை கண்டு கோபத்துடன் உள்ளே நுழைந்தான் தர்ஷன். தர்ஷனை சுத்தமாக எதிர்பாராது அதிர்ந்து நின்றவளை நெருங்கிய தர்ஷன் எதுவும் பேசவில்லை. இரண்டு மாதங்கள் கண்டு தன்னவனை தன் அறையில் கண்டவள் உணர்ச்சிகள் மேலோங்க அவளின் கட்டுப்பாடுகளை மீறி “ஆது அத்தான்” என்று இறுக கட்டிக்கொண்டாள்.
ஷாலினியை திட்டலாம் என்று நெருங்கியவன் இந்த எதிர்பாராத அணைப்பில் எழுந்த இனிய அதிர்வில் முதலில் செய்வது அறியாது நின்றவனின் கரம் பின் ஆதூரமாய் அணைத்து கொண்டது. நீண்ட நெடிய நிமிடங்கள் நீடித்த அணைப்பு ஷாலினியின் தன்னுணர்வு பெற்ற பின்பே முடிவிற்கு வந்தது. முதலில் அணைப்பில் கட்டுண்டு இருந்தவள் தர்ஷனின் கரம் அவளின் முதுகினை ஆதரவாக தடவி ஆறுதல் செய்ததில் தர்ஷனை விட்டு விலகி நின்றாள்.
விலகி நின்றாள் என்றாள் ஷாலினியின் கரம் தர்ஷனின் முதுகில் இல்லை…அவ்வளவே…பின்னே இரண்டு மாதங்கள் கழித்து தன்னவளின் அருகாமையை அவ்வளவு சீக்கிரம் இழந்து விடுவானா…????
ஷாலினியின் உயரத்திற்கு சற்று குனிந்து நின்று பார்த்த தர்ஷனின் முகமும் ஷாலினியின் முகமும் மூச்சு காற்று படும் அளவு நெருங்கி இருந்தது… தன்னவளின் அழகிய முகத்தினை பார்வையால் தன் இதயத்தினுள் சேமித்து கொண்டிருந்தான். அந்த பொழிவு மங்கிய முகத்தில் தர்ஷனை கண்ட பின் சிறிதே பொழிவு வந்ததோ…ஒளி இழந்த கண்களில் ஒளி கூடியதோ……என்பது போன்ற ஆராய்ச்சி பார்வை பார்த்தான்…..அவளின் முகத்தினை பார்த்தவன் கலைந்து கிடந்த முடிக்கற்றைகளை அவளின் காதினோரம் ஒதுக்கினான்…பின் நெற்றியில் நேர்த்தியாக இல்லாது இடம் பெயர்ந்து இருந்த பொட்டினை சரியாக வைத்து விட்டான்……பின் அவளின் இதழினை வருடியவனின் எண்ணம் இதற்கு முன் நடந்த இதழ் தீண்டல்கள் கண் முன் விரிந்தது….
தர்ஷனின் விரல்களின் ஸ்பரிசம் ஷாலினியின் மேனியில் படும் ஒவ்வொரு தீண்டளிற்கும் சிலிர்த்து நின்றாள்….அவளின் உடல் மொழியின் சிலிர்ப்பில் தனக்குள் சிரித்து கொண்டான்…..நடந்ததை மறக்க முடியாது தவிக்கிறாள் என்று புரிந்து கொண்டவன் பின் நெடு நேரமாக நின்றிருந்ததால் அருகில் கிடந்த சோபாவில் அமர்ந்தான். அருகில் ஷாலினியையும் அமர்த்தி கொண்டான்…பின் அவளின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டவன் பேச துவங்கினான்….
“அம்மு, என்மேல கோபமா இருக்கியாடா…….ரெண்டு மாசமும் உன்ன பார்க்காம…..உன்கிட்ட பேசாம எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா, உனக்கும் அதே கஷ்டம் தான் இருக்கும், நீயும் அப்படி தான் கஷ்டப்படுவனு தெரியும், எதுக்குடா அப்படி உன்னையும் கஷ்டபடுத்தி, என்னையும் கஷ்டப்படுத்தி…முடியலைடா அம்மு, இவ்வளவு நாளும் நீயா என்ன கூப்பிடுவனு வெயிட் பண்ணி பார்த்தேன், இதுக்கு மேலயும் விட்டா எனக்கு கிறுக்கே பிடிச்சுரும் போல அம்மு, இனியும் சும்மா இருக்க முடியாது அம்மு….அடுத்த மாசமே கல்யாணம் பண்ண மாமாகிட்ட சொல்லி ரெடி பண்ண சொல்ல போறேன்” என்றான் தர்ஷன்…
இவ்வளவு நேரமும் தர்ஷனின் பேச்சினை கேட்டு கொண்டு இருந்தவள், கல்யாணம் என்றவுடன் அதிர்ந்து “அத்தான், ……எனக்கு……கல்யாணம்……வேணாம்……….” என்று திக்கி திக்கி கூறினாள் ஷாலினி. அவளின் திணறலான பேச்சினை கண்டு கோபம் பொங்க, பார்வையிலும், வார்த்தைகளிலும் அழுத்தத்தினை கூறியவன் “உன்கிட்ட கல்யாணம் வேணுமா வேணாமானு கேட்டதாக நியாபகம் இல்லையேடி……சரி….எதுக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்ற, உன்ன கல்யாணம் பண்ண எனக்கு தகுதி இல்லையா, உனக்கு நான் ஏத்தவன் இல்லையா அம்மு” என்று கேட்டதில் பதறி தான் போனாள்….
பின்னே தர்ஷனிற்கு தகுதி இல்லையா தன்னை கல்யாணம் பண்ண……….தனக்கு தான் இல்லை என்று அவனிடமும் சொன்னாள்…அடுத்து கேட்ட தர்ஷனின் கேள்வியில் என்ன பதில் சொல்வது என்று தெரியாது முழித்தாள்….”ஏன் அம்மு, ஒரு வேலை, இதே மாதிரி அசம்பாவிதம் நடந்திருந்தா…??? நடக்க விட்டிருக்க மாட்டேன். இருந்தாலும் நடந்திருந்தா….அப்போ என்ன செய்திருப்ப அம்மு…..??” என்று கேட்டதில் முழித்தாள்…..பின் மெதுவான குரலில் “கல்யாணம் ஆகி இருந்தால் என் பக்கத்துல தான் இருந்துருப்பீங்க, இப்படிலாம் நடக்க விட்டிருக்க மாட்டீங்க…..நான் உங்க பொண்டாட்டிய இருந்திருப்பேன்…….அப்போ இப்படி நடந்திருந்தாலும் உங்க பொண்டாட்டி அப்படின்ற எண்ணம் தான் இருக்கும், ஆனா இப்போ நான் உங்க மனைவி இல்லையே….காதலி….மாமன் மகள்…அவ்வளவே” என்று புத்திசாலி தனமாக பேசியவளை கண்டவனின் முகம் சற்று முன் தோன்றிய கோபத்தினை துணி கொண்டு துடைத்தார்போன்று புன்னகையினை பூசி கொண்டது….
தர்ஷன் தன்னுடைய இந்த பேச்சிற்கு கோபம் கொள்வான் என்று எதிர் பார்த்தவள்….அவனின் முன்னகை முகத்தினை கண்டு குழப்பம் கொண்டாள்…..அதே குழப்ப முகத்துடன் ஏறிட்டு பார்த்தவளை கண்டு கண்சிமிட்டி சிரித்தவன்.. அடுத்த சொன்ன வார்த்தைகளில் அதிர்ந்து ஸ்தம்பித்து நின்று விட்டாள்….