All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 21

மாலின் பைக் பார்க்கில் வண்டியை நிறுத்தி அவளை அழைத்து மாலின் உள்ளே உள்ள கிப்ட் ஷாப்பிற்குள் நுழைந்தான் பிரபாகர். அந்த கடையின் உள் நுழைந்ததும் அங்கு இருந்த வித விதமான கண்ணை கவரும் விதமாக இருந்த அனைத்து டெடி பொம்மைகளையும் விழிவிரித்து ஏக்கம் சுமந்த பார்வையோடும் பார்த்துக்கொண்டு இருந்தாள் யாழினி. பிரபாகர் யாழினியின் வருடும் பார்வையும், வருடும் அவளின் பிஞ்சு விரல்களும் அங்கு இருந்த ஒரு பிங்க் நிற டெடியின் மேல் இருப்பதை உணர்ந்தாலும் எதுவும் கேட்காது கடையினை சுற்றி பார்வையை பதித்தவாறு இருந்தான். யாழினியும் அந்த பிங்க் நிற டெடியை ஆசை தீர பார்த்தவள் ஒவ்வொரு பொம்மையாக பார்த்து கொண்டே அடுத்த பகுதிக்கு நகர்ந்தாள் .

யாழினியை பொறுத்த வரை விலை உயர்ந்த ஆபரணங்கள்,ஆடைகளை விட தன்னவன் முதன் முதலில் வாங்கி தரும் டெடி தான் விலை மதிப்பில்லாதது. அவள் சென்றதும் அவளிற்கு தெரியாது அவள் பார்த்த பிங்க் டெடியை பேக்கிங் செய்ய சொல்லிவிட்டு யாழினியின் புறம் வந்து "கிளம்பலாமா யாழி??" என்றான். சரி என்றவள் அவனுடன் இணைந்து நடக்கும் பொழுது மீண்டும் பிங்க் டெடியை தேட அங்கு இல்லாது போக முகம் சுருங்கியது. அதற்குள் அங்கு இருந்த கடை ஊழியர் "சார், நீங்க கேட்ட டெடி பேக் பண்ணியாச்சு" என்றதும் அதனை பெற்றுக்கொண்டு வெளியேறினான்.

வாங்கி தரேனு சொன்னாலும் வேண்டாம்னு சொல்ற ஆனால் ஒவ்வொரு தடவையும் வெளியில வரப்போ அதை ஆசையா ஏக்கத்தோட பார்க்குற “ என்று சலித்துக்கொள்வாள்.அதற்கு யாழினியின் பதிலோ “என்கிட்ட டெடி வாங்க பணமாடி இல்ல, அதே மாதிரி எனக்கு டெடி கிபிட் பண்ணுறது என் கணவரவோ இல்ல மனம்கவர்ந்தவராவோ தான் இருக்கனும். அது ஒரு செண்டிமெண்ட் பீல் தான் உயிருக்கு உயிரா காதலிக்குறவர் எனக்கு விலையுயர்ந்த ட்ரெஸய்யோ,ஜெவெல்ஸை தரணும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன்டி, எனக்கு பிடிச்ச இந்த டெடியை கிப்ட் பண்ண அங்கையே நான் ப்ளாட் ஆகிருவேன்” என்று கூறுவாள். தீக்ஷாவும் இதை பல முறை கேட்டு சலித்து போவாள். பிரபா தீக்ஷாவிடம், நான் யாழினியை காதலிப்பதாகவும், அவளிற்கு பிடித்தவற்றை பற்றி தெரிந்து கொள்ள தீக்ஷாவிடம், கேட்ட பொழுது அவள் குடுத்த இந்த ஐடியா தான் இந்த டெடியுடன் காதல்.

தீக்ஷா சொன்னது போல் ஒவ்வொரு டெடியையும் அவள் ஏக்கத்துடன் வருடியதும், பிரபா தனக்காகத்தான் வாங்குகிறார் என்று தெரிந்தும் அதை மறுக்காது இருந்ததில் அவளின் மனம் அறிந்தவனின் மனமோ குத்தாட்டம் போட்டது இருந்தும் தான் நிற்கும் இடத்தினை கருத்தில் கொண்டு அவள் வெகு நேரம் ஆசையுடன் பார்த்த பிங்க் நிற நான்கு அடிக்கு மேல் உள்ள டெடியை எடுத்து பில் போட்டு விட்டு திரும்பி செல்லும் பொது பெற்று கொள்கிறேன் என்று அவளையும் அழைத்துக்கொண்டு மேல் தளத்தில் அமைந்துள்ள ஃபுட் கோர்ட்டிற்கு சென்றான்.

ஓயாது வளவளத்துக்கு கொண்டு வருபவள் இப்போது அமைதியாக வந்தாள் பிரபாவினை விட்டு சிறு இடைவெளியோடு.அவனின் சிவந்த நிற மேனிற்கு எடுப்பாக கருப்பு நிற ஷிர்ட்டும், வெளிர் நீல நிற ஜீன்ஸ் ,கண்களில் குலர்ஸும் நடந்து சென்றவனை அங்குள்ள பெண்கள் சைட் அடிப்பதை கண்டும் காணாதும் முதலில் இருந்தவன் யாழினியை சீண்டும் எண்ணத்தில் இவனும் வசீகரப் புன்னகையை பாரபட்சம் இன்றி பதில் அளித்தபடி தங்களுக்கு கூல் ட்ரிங்க்ஸ்
ஆர்டர் செய்தவன், டேபிளில் யாழினியின் அருகில் இடைவெளி விட்டே அமர்ந்தான்,புன்னகை முகத்தினை வேறு பெண்களுக்கு வழங்கி கொண்டு இருந்தவனை கண்டு கோபம் போங்க அந்த பெண்களை பார்த்த யாழினி அவனின் அருகில் தன்னுடைய நாற்காலியை நெருங்கி போட்டவள் பிரபாகரின் வலது கை விரல்களுக்குள் தன் இடது கர விரல்களை கோர்த்து கொண்டு நெருங்கி அமர்ந்தாள்.

அதில் தன் வசீகரம் குறையாது சத்தமாக சிரித்தவன் "இன்றோடு சைட் அடிக்கும் சுதந்திரம் பறி போய் விட்டது" என்றதில் கொதித்து விட்டாள். "ஏன்டா சும்மா இருந்த பிள்ளையை கூட்டிட்டு வந்துட்டு, எனக்கு டெடி பிடிக்கும்னு வாங்கிட்டு,என் பக்கத்துல உட்கார்ந்து அடுத்த பொண்ணுங்களை சைட் அடிப்ப, அவளுங்களும் உன்ன பார்த்து ஜொள்ளுதுங்க, நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா, நானும் எப்போடா என்கிட்ட நீ ப்ரோபஸ் பண்ணிட்டு டெடியை குடுப்பனு பார்த்துட்டு இருக்கேன், நீ என்னனா ஜொள்ளு விட்டுட்டு இருக்க" என்று மிகவும் மரியாதையாக ஒருமைக்கு தாவினாள்.

அதில் மேலும் வம்பிழுக்கும் பொருட்டு "என்னது உனக்காகவா கிப்ட் வாங்கினேன்" என்று போலி அதிர்ச்சியை காட்டியவன் "நீ தான் நம்ம ஆஃபீஸ்ல வச்சு நான் லவ் பண்றத சொன்னப்பவே ரிஜெக்ட் பண்ணிட்டியேம்மா" என்றவன், தொடர்ந்து "இன்னைக்கு ஒரு பொண்ணோட லவ் ப்ரோபோசலை அக்ஸப்ட் பண்ண வந்திருக்கோம்,ரொம்ப நாளா என்னோட பதிலுக்காக வெய்ட் பண்றா,அவங்க வீட்ல ஒரு பையனும் பொண்ணும் தனியா உட்கார்ந்து பேசிட்டு இருந்தா அவளை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்களாம், அதுனால தான் உன்ன கூட்டிட்டு வந்தேன், யாராதும் பார்த்தா அவளோட ப்ரண்ட்னு சொல்லிக்கலாம்ல" என்று பிரபா குடுத்த விளக்கத்தில் வெட்டவா குத்தவா என்பது போல் முறைத்து பார்த்தாள்.

பிடித்திருந்த பிரபாவின் கையினை மேலும் இறுக பற்றி "அப்படி ஒரு நினைப்பு இருந்தா இப்பவே விட்டுடுங்க, இந்த ஜென்மத்துல உங்க தலையெழுத்து நான் தான் உங்க மனைவி, முடிஞ்சா பெட்டர் லக் அட் நெக்ஸ்ட் டைம்" என்றவள் பொது இடம் என்றும் பாராது பிடித்திருந்த பிரபாவின் வலது கரத்தில் தன்னுடைய இதழ்களை ஒற்றினாள்.

அதில் போலியாக பதறியவன் நிதானமாக "சரி கிளம்புவோமா வந்த வேலை முடிஞ்சது" என்றான் சிரிப்புடன். அதில் யாழினி முழிக்கவும் "பர்ஸ்ட் கொஞ்சம் தள்ளி உட்காருடி பப்ளிக்ல வச்சு கிஸ் பண்ணிட்டு இருக்க அந்த பொண்ணுங்க மூஞ்சி சுருங்கி போய்டுச்சு பாரு" என்றான்.

அதில் முறைத்து பார்த்தவள் "சரி எதுக்கு உடனே கிளம்ப சொல்றீங்க அதான் யாரையோ பார்க்கணும்னு சொன்னிங்களே வரட்டும் பார்த்துட்டே போவோம்" என்றாள் யாழினி. யாழினியின் பார்வையில் "ஆத்தா திரும்ப மலையேறி என்ன ஏதும் செஞ்சுடாத,அந்த டெடி உனக்கு தான், நீ லவ் ரிஜெக்ட் பண்ண அப்போவே என் மீதான காதல் உன்னோட கண்ணுல தெரிஞ்சுடுச்சு, இன்னைக்கும் உன்ன கூட்டிட்டு வந்து நானா ப்ரொபோஸ் செஞ்சிருந்தா, நீ எதாவது பேசுவ அதை நான் கேட்டு அந்த கொடுமையை அனுபவிக்கணுமே, அதுக்கு தான் நீயா சொல்லணும்னு வெய்ட் பண்ணேன்" என்று சொன்னவன், பின் சீரியசான குரலில் விளையாட்டை கைவிட்டவன் யாழினியின் கண்களை நேராக பார்த்து "இந்த ஜென்மம் மட்டும் இல்லை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என்னோட மனைவி" என்றவன் தன்னுடைய ஒட்டு மொத்த காதலையும் காட்டும் வண்ணம் "ஐ லவ் யு டி மை பொண்டாட்டி" என்று கூறி் பொது இடத்தில் அமர்ந்துள்ளோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் யாழினியின் நெற்றியில் தன் முதல் முத்திரையை பதித்தான்.அதில் யாழினி அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லாமல் போனது.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதன்பின் இருவரும் அலுவலகங்களிலும், வெளியில் சென்றும், அலைபேசியிலும் தங்களின் காதலை வளர்த்து கொண்டு இருந்தனர்.
இதில் ஷர்மிளாவின் பின்னால் சுற்றிய ஆதியின் நண்பன் தான் பாவப்பட்டவன். தன்னை ஆதியோ பிரபாவோ பார்க்க மாட்டார்களா என்று தவித்த ஷர்மிளாவின் பின் ஷர்மி,ஷர்மிளா, ஷர்மி குட்டி, ஸ்வீட் ஹார்ட் என்று கொஞ்சி கொஞ்சி சுற்றி வந்தான். அவள் அசைந்து கொடுக்கவும் இல்லை, காதலை ஏற்கவும்,மறுக்கவும் இல்லை.

அவனின் காதலை ஏற்க ஷர்மிளாவிற்கு ஒன்று மட்டும் தான் தடுத்தது. நேரே தன் நண்பன் காதல் மன்னன் ஆதியின் முன்னால் நின்றான். தன் நண்பனை பார்த்த ஆதிக்கு அடக்க மாட்டாது சிரிப்பு எழுந்தது. முயன்று கட்டுபடுத்தி கொண்டான் தன் உயிர் தோழனுக்காக.

இருந்தும் வேலையில் கவனம் இருப்பது போல் காட்டிக்கொண்டான் ஆதி. மெதுவே ஆதியை பார்த்து "மச்சான்" என்றான் பவ்யமாக. அதில் சிறிது உஷாராகிய ஆதி "ம்ம்" என்றானே தவிர வேறு ஏதும் சொல்லவில்லை. மீண்டும் "மச்சி" என்க அதற்கும் "ம்ம்" என்ற பதிலே ஆதியிடம் இருந்து வந்தது. "என்ன மச்சி வேலையா இருக்கியா" என்ற தன் நண்பனை "அதான் தெரியத்துல நான் வேலையா இருக்கேன்னு, வேலை நேரத்துல வந்துட்டு வேலையா இருக்கியான்னு கேள்வி வேற, சும்மா நயநயனாம கிளம்புடா" என்ற வரவழைத்த கடின குரலில் கூறிய ஆதி மீண்டும் வேலையை தொடர்ந்தான்.

அதற்கும் அசராது "சரி மச்சி நீ வேலையை பாரு நான் இப்படி ஒரு ஓரமா இருக்கேன்" என்றான் ஆதியின் நண்பன். ஆதியின் அறைக்கு அவனின் பி.எ ஷர்மிளா என்பதால் அடிக்கடி வருவாள் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினான். அவனை பற்றி தெரிந்த ஆதி அறைக்குள் வர அவசியம் இல்லாது வெளி வேலையாகவே குடுத்தான் ஷர்மிளாவிற்கு.

மூன்று மணி நேரம் நண்பனை வெறுப்பேற்றும் பணியை செவ்வனே செய்தான் ஆதி. ஷர்மிளாவை இன்னும் காணவில்லை என்றதும் இது தன் நண்பனின் வேலை தான் என்று அறிந்தவன் சடாரென எழுந்து "ஏன்டா இப்படி இருக்கீங்க, நீ மட்டும் சிஸ்டர் கூட ஜாலியா இருப்பியாம், உன்கூடவே போட்டி போட்டுக்கிட்டு நானும் காதல் மன்னன் தானும், ஆஃபீஸ்லயும் உன்கூட ஜோடி போட்டுட்டு சுத்துவானே அந்த தடியன் பிரபா, அவனும் இங்கேயே ஒர்க் பண்ற பொண்ணவே லவ் பண்ணிட்டு சுத்துவானாம், எனக்கு மட்டும் ஹெல்ப் செய்ய மாட்டீங்களாம்" என்று சண்டை போடுவது போல் தொடங்கியவன் அழும் பாவனையில் முடித்தான்.

நண்பன் பேச ஆரம்பிக்கும் பொழுதே பிரபாவை வர சொல்லியிருந்தான் ஆதி. பிரபாவும் சத்தம் போடாது கதவை திறந்து அதில் சாய்ந்து சிரிப்புடன் நின்றிருந்தான். ஆதியும் பிரபா வந்ததை காட்டி கொள்ளாது "நீ எப்போடா மச்சி பிரபாவை பொண்ணு கூட பார்த்த" என்றான். ஆதியின் கேள்வியில் கடுப்பானவன் "ரொம்ப முக்கியம்டா, இந்த ஷர்மிளாவை லவ்வ ஒத்துக்க வைக்க ஐடியா குடுடா" என்றான் ஆதியின் நண்பன். ஆதியோ "மச்சி நீ பார்க்குற வேலைக்கு நீ கெத்தா இருக்கனும்டா,இப்படி கெஞ்சிட்டு இருக்க" என்றான்.

அடுத்து அவனின் நண்பன் பதில் அளிக்கும் முன் "கோயிலுக்குள்ள காதல சொல்லு செருப்பிருக்காது தெரிஞ்சுக்கோ......"என்று கேலி சிரிப்புடன் பிரபா பாடினான். அதில் திரும்பி நண்பனை பார்த்தவன் "அப்போ அந்த ஷர்மிளா பொண்ணு லவ்வ சோனா செருப்பால அடிப்பானு சொல்றியா மச்சி" என்றான் பயத்துடன்.

அதில் ஆதியோ "ஒய் நாட், அந்த பொண்ணு பார்க்க தான் மச்சி அழகா இருக்கு, எதாவது ஏடா கூடமா பண்ணின உன்ன உண்டு இல்லைன்னு பண்ணிடுவா பார்த்துக்கோ மச்சான்" என்றான்.

அவனின் நண்பனோ "ஏன்டா நான் லவ் பண்ண கூடாதுனு தான இப்படி எல்லாம் பேசுறீங்க என்றான் அழுகுரலில். அதில் மற்ற இரு நண்பர்களுக்கும் சிரிப்பு வர "ட்ரை யுவர் பெஸ்ட் மச்சி, உன்ன சுத்த விடவும் ஒரு பொண்ணு வந்திருச்சுனு சந்தோஷமா இருக்காடா,எவ்வளவு பேரை நீ சுத்தல்ல விட்டுருப்ப" என்றதும், அவனும் நண்பர்களின் சபதம் போட்டு தினமும் காலையில் குட் மோர்னிங்கில் தொடங்கி, கவிதை, வீடியோ பாடல்கள், மற்றும் ஏகப்பட்ட டெக்னிக் பயன்படுத்தி ஷர்மிளாவை காதலை ஏற்று கொள்ள வைத்தான்.



பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர் ப்ரண்ட்ஸ் அண்ட் லவ்லி சிஸ்டர்ஸ்,

ஒரு புன்னகை பூவே அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன் படிச்சிட்டு சொல்லுங்கோ. ஒரு வார்த்தை கமெண்ட் வந்தாலும் நான் ரொம்ப ஹாப்பி. இது வரை லைக்ஸ் கமெண்ட்ஸ் குடுத்த ஆல் டியர்ஸ் தாங்க் யூ சோ மச்

http://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/

இப்படிக்கு உங்கள் அன்பு தங்கை ரேவதி 😍😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 22 :


வேலையில் சேர்ந்த பத்து மாத கால இடைவெளியில் தர்ஷன் தான் மிகவும் தவித்து போனான். திருமணம் பற்றிய பேச்சினை எப்போது எடுத்தாலும் பிடி கொடுக்காது ஷாலினி தெரிந்தும் தெரியாதும் தர்ஷனின் பொறுமையை சோதித்தாள். அப்படி இருந்தும் ஒரு நாள் இரவு பொறுமையும் பறந்தது.

எப்பொழுதும் போல் வேலை முடிந்து ஷாலினிற்கு இரவில் அழைத்தான் தர்ஷன். ஷாலினியும் கை நிறைய சம்பளத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாள். தர்ஷனின் போன் என்றவுடன் ஆசையாக காதில் வைத்து "அத்தான் இப்போ தான் ஒர்க் முடிஞ்சதா" என்று அக்கறையுடன் கேட்டாள். அவளின் அக்கறையில் கரைந்த தர்ஷன் "ஆமாடா அம்மு இப்போ தான் சாப்பிட்டுட்டு ப்ரீ ஆனேன், அதான் உடனே கூப்பிட்டேன்" என்றான்.

மேலும் சிறிது நேரம் அவர்களின் உரையாடல் தொடர தர்ஷன் ஆரம்பித்தான் "வீட்ல கல்யாணத்தை பத்தி பேசவாடி அம்மு நீ கேட்ட முதல் ஆறு மாசமும் முடிஞ்சு இப்போ அடுத்த ஆறு மாசமும் முடியும் போல, அம்மு எனக்கு உன்ன விட்டுட்டு யாரோ போல தள்ளி இருக்க முடியலைடி, ஏதோ கொஞ்சம் நாளா தப்பா எதுவும் நடந்துருமோ நீ என்ன விட்டு தள்ளி போய்டுவனு பயமா இருக்குடி"என்றான்.

ஆனாலும் ஷாலினியோ "இவ்வளவு நாள் வெய்ட் பண்ணீங்கள அத்தான் இன்னும் கொஞ்சம் நாள் மட்டும் ப்ளீஸ் என்னோட செல்ல அத்தான்ல, உங்களை விட்டுட்டு தனியா இருக்க எனக்கு மட்டும் ஆசையா அத்தான், என்னோட பிஜி முடியனும்ல அத்தான் அட்லீஸ்ட் இந்த பர்ஸ்ட் ஒன் இயர் மட்டும் முடியட்டுமே அத்தான்" என்றாள்.

ஷாலினி தற்பொழுது எம்.பி.எ கரஸில் படித்து கொண்டு இருக்கிறாள். அவளின் படிப்பினை காரணம் காட்டினால் தர்ஷன் ஒத்து கொள்வான் என்றிருக்க அதற்கு நேர்மாறாக தர்ஷன் கோபத்தினை தூண்ட இதுவே காரணமாக மாறியது.

" ஏன்டி என்னோட மனசு உன்ன தான் தேடுதுனு உனக்கு தெரியலையா, நான் என்ன மத்த ஆண்கள் மாதிரி கல்யாணம் முடிஞ்சு படிக்க உன்ன அனுமதிக்க மாட்டேன்னு நினைக்கிறியா, இல்ல நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் கல்யாணம் முடிஞ்சா உன்னோட படிப்பில் இருக்குற கவனத்தை மாத்திடுவேன்னு என் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கியா, ஏன்டி இந்த பாடு படுத்துற ஒரு வேலை உன்னை நானா தேடி தேடி வரதுக்காக தான் கல்யாணத்தை தள்ளி போட்டுட்டே இருக்கியா" என்று கோபத்தில் வார்த்தைகளை யோசிக்காது விட்டான்.

தர்ஷனின் வார்த்தைகளில் ஷாலினியின் மனம் சுக்கு நூறாக உடைந்து சிதறியது, தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று. ஒரு முறை தர்ஷனின் கூற்றை ஏற்றுக்கொண்டு இருந்தாள் பின்னாளில் நடக்க இருக்கும் ஆபத்தினில் மாட்டிக்காது தன்னவனுடன் மகிழ்வாக இருந்திருப்பாளோ ??

தர்ஷனை சந்தித்து வரும் வார இறுதியில் முடிவினை நேரில் சொல்லலாம் என்று ஷாலினி நினைத்திருக்க, தர்ஷனோ ஒரு வார பயணமாக வெளிநாட்டிற்கு சென்று விட்டான்.

தர்ஷன் ஷாலினியை தொடர்பு செய்ய முயன்று ஷாலினி அழைப்பை எடுக்காததினால் மெசேஜ் செய்து விட்டு கிளம்பினான். ஷாலினி தான் ஒரு வாரமாக தன்னிலையில் யோசித்தாளே, அதன் பலன் மெசேஜை கவனிக்க தவறினாள். தர்ஷனும் அவள் யோசித்து முடிவு செய்வாள் என்பதால் விட்டு விட்டான். தர்ஷனின் எண்ணத்தினை பொய்யாக்காது ஷாலினியும் கல்யாணத்திற்கு தயாரானாள் சந்தோஷத்துடன்.

அவளிற்கும் தர்ஷனை பிரிந்து இருக்க முடியவில்லை. தன்னுடைய படிப்பு முடியாது முழு கவனமும் தர்ஷன் மேல் செலுத்த இயலாது. அதனால் தான் திருமணத்தை தள்ளி போட்டது. அன்னையாக மாறி மடி தாங்கவும், அவனிடம் தான் குழந்தையாக மாறி அவனின் மடி சாயவும், தோழியாய் அவனின் தோள் சாயவும், காலையில் கண் விழிக்கும் நொடி முதல் இரவு துயில் கொள்ளும் நொடி வரை தன்னவனின் அருகில் இருக்க வேண்டும், இரவு முழுவதும் தன்னவன் கையணைப்பில் உறங்க வேண்டும்.

இவ்வாறு ஆயிரம் கனவுகள் கொண்டு வலம் வருகிறாள். படிப்பு ஒன்று தான் யோசிக்க வைக்கிறது ஆம் தற்பொழுது ஷாலினி எம்.பி.எ படித்து கொண்டிருக்கிறாள் தொலை தூர கல்வியில். படிப்பு முடியும் வரை தர்ஷனை சமாதானம் செய்து கொள்ளலாம் என்றிருக்க, தர்ஷனோ ஒவ்வொரு நிமிடமும் தன்னவளின் அருகாமைக்காக ஏங்கி தவிக்கிறான். சில சமயம் கோபமாகவும் மனதினை வெளிப்படுத்துகிறான்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வழக்கம் போல் அலுவலகத்தில் தீக்ஷாவும் யாழினியும் மதிய நேர இடைவெளியில் கேன்டீனில் வளவளத்து கொண்டிருந்தனர். பிரபாவும் யாழினியும் காதலை சொல்லி கொண்டதால் அலுவலகம் என்றும் பாராமல் யாழினி பிரபாவை லுக் விட்டு கொண்டும், தன் நண்பனின் பார்வைக்கு போக்கு காட்டி கொண்டு பிரபா யாழினியை லுக் விட்டு கொண்டும் நாட்களை கடத்தினர்.

தீக்ஷாவின் கண்களில் ஆதியை காணவில்லை. ஒவ்வொரு தடவையும் எதாவது சப்பை காரணத்தை உருவாக்கி தீக்ஷாவை பார்ப்பவன் சில நாட்கள் காணவில்லை என்று தேடி சோர்ந்து போனாள். சிறிது நேரத்தில் தங்களின் வேலையை கவனிக்க சென்று விட்டார்கள்.

இரு தோழிகளும் வேறு டீம் என்பதால் வெவ்வேறு கேபினில் இருந்தனர். யாழினி தன் டீம் லீடரை சந்திக்க சென்று விட்டாள். தீக்ஷாவின் எண்ணிற்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரவும் யோசனையுடன் காதில் வைத்தவளின் காதில் இடியை இறக்கியது போல் வந்து சேர்ந்தது மறு பக்கம் கூறிய தகவல். சிறிது நேரம் மூளை வேலை நிறுத்தி வைக்க பட்டது போல் இருந்தது.


அதே நேரம் ஆதியோ சில நாட்களாக வெளி வேலையில் அழைந்து திரிந்தவன் மதியம் தான் வீட்டினை அடைந்தான். அவனின் எண்ணம் முழுவதும் தீக்ஷாவே ஆக்கிரமித்திருந்தாள். ஏதோ ஒன்று அவனின் மனதை ஆட்டிப்படைத்ததின் விளைவில் தீக்ஷாவின் எண்ணிற்கு அழைக்க தானாக கைகள் தன்னவளை அழைத்தது. இவன் அழைக்கும் நேரம் அவள் யாழினியுடன் மதிய உணவு இடைவேளை என்பதால் பேசிக் கொண்டிருந்தாள். ஆதியின் அழைப்பை பார்த்தவள் சிறிது நேரம் கழித்து பேசிக் கொள்ளலாம் என போனை எடுக்கவில்லை.

தீக்ஷா போனை எடுக்காததினால் நொந்தவன் மீண்டும் பத்து நிமிடம் கடந்து அழைத்தான். இந்த முறை ரெகார்ட் செய்யப்பட்ட வாய்ஸில் "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் வேறொருவருடன் பேசி கொண்டு இருக்கிறார்" என வரவும், விடாது அழைத்து கொண்டு இருந்தான்.

மூன்று முறை விடாது அழைக்க, இந்த முறை ரிங் போனது. ஆனாலும் அந்த பக்கம் எடுக்கும் சுவடே இல்லாது போக பயம்,பதற்றம்,கலக்கம் என அனைத்தும் சூழ்ந்து தத்தளிக்க செய்தது ஆதியை.

எவ்வளவு வேலை இருந்தாலும் தீக்ஷா இவ்வாறு நடந்து கொள்ள மாட்டாள் என்றதும் அவனின் ஆழ் மனது தப்பாக நடக்க போகிறது என அடித்து சொல்லியது. யோசித்தவன் அடுத்த நிமிடம் யாழினியை அழைத்தான். அவள் அவளின் டீம் லீடரை காண சென்றவள் இன்னும் திரும்பிய பாடு இல்லை என்பதால்,யாரின் கெட்ட நேரமோ யாழினியும் எடுக்கவில்லை.

தான் கிளம்பி அலுவலகம் சென்று அவளை காணலாம் என்ற எண்ணம் கூட எழவில்லை. அடுத்து பிரபாவை அழைத்து தான் தீக்ஷாவிடம் பேச வேண்டும், என்றும் அவளின் போன் போயும் எடுக்கவில்லை என்றும் கூறியவனின் கூற்றில் வழக்கம் போல் கலாய்க்க ஆரம்பித்தான். ஏனெனில் ஆதி தன் பதட்டத்தை தன் நண்பனிடம் கூட காட்டவில்லை. பிரபா அவனின் நிலையை உணராது "ஏன்டா இன்னைக்கு தான் வந்திருக்க வேலை எல்லாம் முடிஞ்சு, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்காம உடனே உன் ஆள்கிட்ட பேசனும்னு துடிக்கிற, அங்க சிஸ்டர் எதும் ஒர்க்ல இருப்பாங்கடா, இந்த காதல் படுத்துற பாடு இருக்கே மச்சி, உன்னையும் மாத்திருச்சு" என்றான் பிரபா சிரிப்புடன்.

பிரபாவின் பேச்சில் கடுப்பான ஆதி "அடேய் நேரங்காலம் தெரியாம பேசாதடா எனக்கு ஏதோ படபடப்பா இருக்கு முதல்ல இன்னைக்கு அவள் வேலைக்கு வந்து இருக்காளானு பாருடா" என்றான். பிரபாவும் "மச்சி நான் மார்னிங் சிஸ்டரை கேன்டீன்ல பார்த்தேன்டா இப்போ அவங்க கேபின்ல இல்லைடா" என்று தீக்ஷாவின் இடத்தினை பார்த்து விட்டு சொன்னவன் "மச்சி சிஸ்டர் கேபின்ல இல்லைடா, ஆனால் அவங்க ஹாண்ட்பாக் மொபைல் இருக்குடா" என்றான்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி "சரிடா அவளோட ஸ்கூட்டி சாவி இருக்கா பாருடா" என்றவுடன் பிரபா "இல்லை" என்று கூறினான். ஆதி "டேய் பிரபா இப்போ தீக்ஷா வெளியே போக வேலை இல்லையேடா, சரி கேன்டீன், வாஷ் ரூம், இல்ல நம்ம கேம்பஸ் எங்கயாதும் இருக்காளானு பார்த்துட்டு சொல்லு, நான் திரும்ப கூப்பிடுறேன் "என்று கூறி முடிக்கும் முன்பே கையில் தீக்ஷாவின் மொபைலை எடுத்து கொண்டு செக்யூரிட்டியிடம் சென்றான். போகும் வழியில் அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் வாஷ் ரூமில் தீக்ஷா இருக்கிறாளா என்று பார்த்து விட்டு சொல்ல சொன்னவன் அங்கு இல்லை என்றவுடன் செக்யூரிட்டியிடம் கேட்க விரைந்தான்.


தீக்ஷாவின் தகவல் பற்றி கேட்க செக்யூரிட்டியோ "இந்த பக்கம் தான் சார் போனாங்க, ரொம்ப அழுத மாதிரி இருந்துச்சு, நான் கூட கேட்டேன் இந்த வெயில்ல எங்கம்மா போறீங்க, எதுவும் வாங்கனும்னா நான் வாங்கிட்டு வாரேன்னு சொன்னேன் சார், அந்த மேடம் நானே போயிட்டு வந்துடுறேனு சொல்லிட்டு போய்ட்டாங்க, நானும் பக்கத்துல தான் போறாங்கன்னு நினைச்சு கொஞ்ச நேரம் பாத்தேன், இன்னும் வரலயேன்னு தகவல் சொல்லலாம்னு நெனச்சப்போ வந்துடீங்க" என்றார்.



செக்யூரிட்டியின் பதிலில் பிரபாவிற்கும் பதற்றம் தொற்றி கொண்டது. என்ன தான் தன் ரத்தம் சொந்தம் இல்லாத உறவாக இருந்தாலும், தன் உயிர் நண்பனின் உயிரானவள், தன்னை சகோதரனாய் நினைத்து மதிப்பும் பாசமும் கலந்து "அண்ணா.... அண்ணா" என்று உள்ளார்ந்த அன்புடன் அழைப்பவள் அல்லவா...? லைனில் இருக்கும் தன் நண்பனிடம் எவ்வாறு தீக்ஷாவை தொடர்பு கொள்ள முடியும் என யோசித்தபடி பேசிய பிரபாவின் மூளைக்கு அப்போது தான் உறைத்தது தன் கையில் தீக்ஷாவின் மொபைல் இருப்பது.

ஆதியும் யோசிக்கும் திறனை இழந்தவன் போல் இருக்க, ஆதியிடம் தீக்ஷாவின் மொபைல் லாக் கேட்டு அதனை ஓபன் செய்து பார்த்தான். கடைசியில் வந்த அழைப்பிற்கான பதிவினை பார்த்தவன் ஆதியிடம் நம்பரை பற்றி கூறிவிட்டு மொபைலை அணைத்தான். அடுத்த நிமிடம் தங்களின் நண்பனிற்கு அழைத்து விவரங்கள் சொன்னான் பிரபா.

சில நிமிடங்களில் தீக்ஷாவிற்கு வந்த அழைப்பின் எண்ணின் உபயோகிக்கும் நபரின் பெயரும்,தற்பொழுது இருக்கும் இருப்பிடமும் கூறினான் மறு பக்கம் இருந்த பிரபா மற்றும் ஆதியின் நண்பன். பிரபாவின் புருவ பத்தியில் முடிச்சு விழுந்தது. ஆதியிடமும் விபரங்களை பகிர்ந்தவன் தன் இரு சக்கர வாகனத்தினை செலுத்த துவங்கினான்.

ஆதியோ ஏன் அந்த பகுதியில் இருந்து தீக்ஷாவை அழைக்க வேண்டும் என்ற யோசனையினூடே கைகளில் சிக்கிய உடையினை மாற்றி கொண்டு தன் காரினை நோக்கி விரைந்தவன், ஹாலில் அமர்ந்திருக்கும் தந்தையை சிறிதும் கண்டு கொள்ளாது ஓடிய மகனை யோசனையாக பார்த்தவர் பின் தோள்களை குலுக்கி கொண்டு தன் வேலையே தொடர்ந்தார்.

அலுவலக நேரங்களில் ஆதி வீட்டில் இருப்பதே அதிசயம். அவ்வாறு இருக்க நேர்ந்தாலும் அவசர வேலை என்று வரும் பொழுது இவ்வாறு காலில் சக்கரத்தை கட்டி கொண்டு ஓடுவது பழக்கப்பட்டது, என்பதால் விட்டு விட்டார். வண்டியினை செலுத்தி கொண்டு இருந்த தீக்ஷாவின் கண்களில் கண்ணீர் வழிவதை துடைக்கும் எண்ணம் இல்லாது வண்டியை செலுத்தினாள். அவளின் காதுகளில் சிறிது நேரம் முன்பு வந்த செய்தியே இன்னும் காதுகளை ரீங்காரமாய் வட்டமடித்து கொண்டு இருந்தது.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சற்று நேரம் முன்பு தீக்ஷாவின் அலைபேசிக்கு புது எண்ணிலிருந்து வந்த அழைப்பை யோசனை சுமந்த முகமாக காதில் வைத்து "ஹலோ" என்றாள். மறுபுறம் "ஹலோ நான் xxxx இண்டஸ்ட்ரிஸில் வேலை பார்க்கிறேன்ம்மா, இந்த பக்கம் சார் வந்துட்டு இருக்கும் பொழுது எதிரில் வந்த லாரி மோதி ஆக்சிடென்ட் ஆகிடுச்சு, அவரோட போனை பார்க்கும் பொழுது உங்க நம்பர் தான் லாஸ்ட் கால்ல பதிவாகிருந்துச்சு, நாங்க இப்போ தான் அம்புலன்ஸ்ல ஏத்திட்டு இருக்கோம், பக்கத்துல xxxx ஹாஸ்பிடல் இருக்கு அங்க வந்துருங்க" என்று ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான செய்தியதை கூறிய நபர், எதிரில் நின்றிருந்தவர்களிடம் பணத்தை பெற்று கொண்டு கிளம்பிவிட்டான்.

தீக்ஷா தன் தோழியிடம் கூட சொல்லாது மொபைலையும் அலுவலகத்தினில் வைத்து விட்டு வண்டி சாவியை மட்டும் எடுத்து கொண்டு இதோ வண்டியை செலுத்தி கொண்டிருக்கிறாள். அவளின் கெட்ட நேரமோ, எதிரில் பேசியவரின் நல்ல நேரமோ அந்த நபர் சொன்னது போல் ஆதி அழைத்திருந்தான், பிறகு பேசி கொள்ளலாம் என்று வேலையை பார்க்க அப்பொழுது தான் கேன்டீனில் இருந்து திரும்பினாள்.

ஏனெனில் யாழினியும் பக்கத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தாள். ஒரு வேலை தன்னிடம் பேச முயற்சி செய்தபடியே காரினை ஓட்டி சென்றதால் தான் இந்த விபத்து நேர்ந்ததோ எனும் விதமாய் அவளின் மூளையே அவளிற்கு எதிராய் வேலை செய்து தீக்ஷாவிற்கு குற்ற உணர்ச்சியை தூண்டியது.



அதன் பின் அழுகையுடனே கிளம்பி வண்டியை தன்னுடைய முழு திறனையும் திரட்டி அதிவேகத்தில் செலுத்தியவள், இதோ அவர்கள் சொன்ன இடத்தினை அடைந்து விட்டாள்.

ஆதி பிரபா சொன்ன இடத்தினை பற்றி யோசித்தபடி புயல் வேகத்தில் தன்னுடைய ஜாகுவாரை செலுத்தி கொண்டிருந்தான். அவனின் மனமோ பலவாறு சிந்தித்தது. ஆதியின் வீட்டினில் இருந்து தற்பொழுது தீக்ஷாவினை தொடர்பு கொண்டவர்கள் இருக்கும் இடத்தினை அடைய குறைந்து ஒன்றரை நேரமேதும் எடுத்து கொள்ளும். பிரபா அரை மணி நேரத்தினில் அடைந்து விடலாம். ஆனால் ஆதியும் பிரபாவும் எப்பொழுதும் அதி விரைவில் தங்களின் வாகனத்தை செலுத்தியே பழக்க பட்டவர்கள் என்பதினால்,விரைவில் அடைந்து விடுவர்.

தீக்ஷா அந்த இடத்தினை அடைந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கு விபத்து நடந்ததிற்கான எந்த அறிகுறியோ இல்லாது இருக்க, சரி ஒரு வேலை மருத்துவமனை சென்றிருப்பார்கள் என நினைத்து வண்டியை கிளப்ப முற்படும் பொழுது அவளின் சாவியினை ஒரு நபர் கை பற்றி இருந்தான்.


திடீரென சாவியினை கைப்பற்றவும் திடுக்கிட்டவள் எதிரில் நின்றிருந்த இரு நபர்களையும் பார்த்தவள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்து போனாள்.

பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர் ப்ரண்ட்ஸ் அண்ட் லவ்லி சிஸ்டர்ஸ்,

ஒரு புன்னகை பூவே அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன் படிச்சிட்டு சொல்லுங்கோ. ஒரு வார்த்தை கமெண்ட் வந்தாலும் நான் ரொம்ப ஹாப்பி. இது வரை லைக்ஸ் கமெண்ட்ஸ் குடுத்த ஆல் டியர்ஸ் தாங்க் யூ சோ மச்

http://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/


இப்படிக்கு உங்கள் அன்பு தங்கை ரேவதி 😍😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 23:


தன் எதிரில் நின்றிருந்த இருவரை கண்டு அதிர்ந்த தீக்ஷாவின் பக்கத்தில் வந்த இருவரில் ஒருவன், அவளின் வண்டி சாவியினை கைப்பற்ற, மற்றொருவனோ அவளின் வாயினில் பிளாஸ்திரியை ஓட்டினான். அதில் இன்னும் அதிர்ந்து நோக்க அவளால் பயத்தில் கத்த கூட இயலாது, வாயினில் பிளாஸ்திரி வீற்றிருக்க பயத்தினை கண்களில் பிரதிபலித்தாள்.

அதில் எதிரில் நின்றிருந்த ஒருவன் நக்கல் சிரிப்பினை உதிர்த்தபடி "என்னடி எப்பவும் உன்ன வால் பிடிச்சுக்கிட்டு ஹீரோயிசம் காட்டிட்டு, மன்மதன் லுக்கு விட்டுட்டு இருப்பானே காணோம் அவனை" என்றான்.அதில் மற்றொருவனோ "அது ஒன்னும் இல்ல ப்ரதர் எவ்வளவு நாள் தான் இந்த வில்லேஜ் பொண்ணு கூட சுத்திட்டு கல்யாணமும் பண்ணிக்காம சந்நியாசியா இருப்பான், அதிலும் அவன் வெளிநாட்டுல வேற படிச்சுட்டு வந்தவன் வேற பொண்ண பார்க்க போயிருப்பானா இருக்கும்” என்றான்.



முதல் நபரோ “ஆனாலும் அவனுக்கும் சரி, இவளுக்கும் சரி, தான் அழகுன்னும், யாரும் ஒன்னும் பண்ண முடியாதுன்னும் திமிரா நடக்கிறதுல, காதல் பண்றதுல, இவங்களுக்கு யாரும் சளைச்சவங்க இல்லை” என்றான். மற்றொருவனோ “ப்ரோ இவள்னு சொல்றீங்க உங்க அண்ணியை….?” என்றதில் தீக்ஷா விழிவிரித்து அச்சத்தில் அவர்களை நோக்க “நீ எனக்குன்னு இப்போ சொந்தமாக போறத தான் சொன்னேன் அம்முலு, அப்போ இவனுக்கு நீ அண்ணி தானே…?” என்றதில் ஆயிரம் தேனீக்கள் ஒன்றாக மேலில் கொட்டியது போல் துடித்தாள்.


ஆனாலும் அவளால் கத்த இயலவில்லை இன்னும் அவளின் வாயில் இருந்து பிளாஸ்திரி அகற்றவில்லை மேலும் தொடர்ந்தான் “ எப்படி உன்ன நாங்க ஒரு பார்வை பார்த்தாலே அந்த ஹீரோவுக்கு பொறுக்க முடியாதாக்கும், இன்னைக்கு அவன் எப்படி அவ்வளவு ஹீரோ மாதிரி வந்து உன்ன காப்பாத்த போறான்னு பாப்போம்” என்றவன் தீக்ஷா யோசிக்கும் முன் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து சற்று ரோட்டினை தாண்டி யாரும் அற்ற சிறிய ரோட்டில் தாங்கள் நிறுத்தி வைத்திருந்த காரினை நோக்கி இழுத்து சென்றான்.



தீக்ஷாவின் வண்டியினை மற்றொருவன் ஓட்டியபடி வந்தான். மெயின் ரோட்டில் வண்டி நின்றால் யாரும் பார்த்து சந்தேகிக்க தோன்றும் என்று நினைத்த அந்த அதி புத்திசாலி அந்த சிறிய ரோட்டிற்கு கொண்டு சென்றான். ஆனால் இவர்கள் இருவரும் அறியவில்லை தாங்கள் கடத்தி கொண்டு செல்லும் இடமே ஆதியின் இடம் என்று.



பயத்தில் எதுவும் சிந்திக்க இயலாது இருந்தாலும் தீக்ஷாவின் எண்ணம் முழுவதும், ஆதி தன்னை அழைத்து செல்ல வருவான்……. என்றே ஓடியது. அதற்குள் தீக்ஷாவினை காருக்குள் ஏற்றி ஆள் அரவமற்ற ரோட்டில் செலுத்தியவர்கள் அடுத்த சில நிமிடங்களில் கார் ஒரு குலுங்களுடன் ஒரு கட்டிடத்தின் முன் நின்றது. தீக்ஷா தன் ஒட்டுமொத்த பயத்தினையும் கண்களில் பிரதிபலித்தாள்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே சமயம் பிரபா இவர்கள் இருக்கும் பகுதியின் நான்கு வழி சாலையின் தொடக்கத்தில் நின்று அதன் பின் யோசித்து வாகனத்தினை விரட்டியவன் சரியாக தீக்ஷா சென்ற வழியில் சென்றான். பிரபாவின் ஒட்டு மொத்த தவிப்பும் தன் உடன்பிறவா சகோதரியின் மீதே. சகோதரத்துவ உணர்வு மாசற்ற உன்னதமான, புனிதமான உணர்வு, உறவல்லவா, தாயின் அன்பினையும் மிஞ்சும் வல்லமை கொண்ட உறவு.



ஆதியும் தன் உயிரானவளின் நிலை என்னவென்றே தெரியாத நிலையாக இருப்பதினால், தன்னுடைய வண்டியை ராட்சசன் போல் விரட்டி கொண்டு இருந்தான். ஆதியை பொறுத்தவரை தொழிலிலும், தனிப்பட்ட முறையிலும் எதிரிகள் இல்லை, பின் யார் இவளினை சம்மந்தம் இல்லாது வரவழைத்தது? என்று யோசித்தபடி பயணித்தான். மனம் விடாது பதைபதைத்து கொண்டு, தீக்ஷாவிற்காக அடித்துக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு சிஃனலிலும் நிறுத்தும் நிறுத்தும் பொழுது ஸ்டியரிங்கில் கை முஷ்டியை குத்தி கொண்டு இருந்தான்.



தீக்ஷா பயத்தினில் மிரண்டு விழித்ததினை சிறிதும் கண்டு கொள்ளாது அவளின் எதிரில் நின்றிருந்த இருவரும் அந்த குடோன் போல் இருந்த கட்டிடத்திற்குள் இழுத்து சென்றனர். கைகளினை கட்டியதும் அவளின் முன் சொடக்கிட்டு அஷ்ட கோணல் சிரிப்புடன் அவளின் மேனியை மேலிருந்து ஏறி இறங்க பார்த்ததில் துடித்து போனாள். அவனின் பார்வையில் அருவருத்தவள் மற்றொருவனின் பிடியில் இருந்து திமிற பலன் இல்லை. அவள் என்னவென்று யோசிக்கும் முன் அவளை துடிதுடிக்க செய்தனர்.


எதிரில் இரு அந்நிய ஆணவனின் முன் தான் நின்ற கோலம் தனக்கு எதிரிகளாய் பிடிக்காதவர்களாய் இருந்தாலும் அவர்களுக்கு கூட தன் நிலை வர கூடாது என்று நினைத்தாள். தான் உயிராய் நேசிக்கும் தன்னவன்,இன்னும் சில மாத காலங்களில் திருமணம் செய்ய போகும் தன்னுடைய உயிரானவன் தன்னை ஓரிரு முறை குடுத்த அணைப்பும்,முத்தங்களினையும் தவிர வேற்று பார்வை கூட பார்த்திராது இருக்க அந்நியவரின் முன் நின்றதில் துடித்தாள், உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது போல் உணர்ந்தாள்.


அவளின் அதிர்ந்த தோற்றம் பார்ப்பதற்கு உயிர் உடலில் இன்னும் இருக்கிறதா என்று நினைப்பது போல் அசையாத தீக்ஷாவின் தோற்றத்தினை கண்டவர்கள் மீண்டும் சொடக்கிட அதில் சுயநினைவு வந்தவளின் முன் மீண்டும் சொடக்கிட்டு "என்னடி பெருசா பத்தினி மாதிரி, உலகத்திலேயே நீ ஒருத்தி தான் அழகுன்னும்,ரதினும் நினைச்சுட்டு ஒரு படம் ஓட்டிட்டு, அவன்கூட மட்டும் ஒட்டிட்டே இருப்பியே, பாவம் அவனுக்கு தான் இப்போ உன்ன ரசிக்க நேரம் இல்லையே,ச்சு....ச்சு" என்றான்.


அவனின் பேச்சினை கண்டு முகத்தினை சுளித்தவளை கண்டு "சும்மா இப்பவும் சீன் போடாதடி,உன்ன எதுக்கு நாங்க இங்க வர சொல்லி இந்த கோலத்தில நிக்க வச்சிருக்கோம்? இதை நினைச்சு நினைச்சு நீ சாகனும், இதுவே உன்ன நாங்க மயக்கத்தில வச்சு என்ன பண்ணுனாலும் நடந்த எதுவும் உனக்கு நியாபகம் இருக்காது,உன்னோட ஹீரோவும் அதெல்லாம் மறச்சுட்டு உன்கூட குடும்பம் நடத்த ரெடி ஆகிடுவான், நீ தான் பெரிய உத்தமி ஆச்சே நீ உனக்கு நினைவு இருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்ட, நாங்களும் உன்ன இப்போ ஸ்வாகா பண்ண போறோம்" என்றான்.


அவனின் பேசினில் நஞ்சு மட்டுமே கலந்து இருந்தது. உடனே மற்றொருவன் "ஏன் ப்ரோ பியூட்டி கிட்ட பேசி டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க,நம்ம பியூட்டி வேற எப்போடா அவளோட ஹீரோ வருவான்னு எதிர் பார்த்துட்டு இருக்கா, ஆனால் அவன் இந்நேரம் வெளிநாட்டுல எந்த வெள்ளைக்காரி கூட குடிச்சுட்டு எந்த பப்ல ஆடிட்டு இருப்பானோ..? " என்று போலி வருத்தத்துடன் தீக்ஷாவிடம் சொன்னவன் மேலும் தொடர்ந்து "இப்போ பாப்போம்டி, எவன் வந்து உன்ன காப்பாத்துவான்னு" என்று சொல்லி கொண்டே அவளின் மேனியில் அத்துமீற கை வைப்பதற்குள் "அவள் கட்டிக்க போறவன் வேணும்னா வெளிநாட்டுல வெள்ளைக்காரி கூட பப்ல குடிச்சுட்டு ஆடிட்டு இருக்கலாம், ஆனா அவளோட அண்ணன் காப்பாத்த வரலாம்ல என்று அந்த கட்டிடமே அதிரும் வண்ணம் பிரதிபலித்தது சாட்சாத் பிரபாவின் குரல் தான்.
 
Status
Not open for further replies.
Top