revathyrey04
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்பொழுது ரேஷ்மா கிளம்பினால் வைஷ்ணவியின் வீட்டினை அடைய அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகும், தாங்கள் இப்போது இங்கு இருந்து கிளம்பி சரியான பாதையில் எவ்வளவு மெதுவாக வண்டியை செலுத்தினாலும் பதினைந்து நிமிடங்கள் தான் ஆகும் என்றே நான்கு வழி பாதையில் சென்றான். இன்னும் முகத்தினை தூக்கி வைத்து கொண்டு வருபவளை வண்டியின் கண்ணாடி வழியே கண்டவன் தாங்கள் செல்லும் பாதையின் இடதுபுறம் ஒரு சிறிய பாதை போன்ற மண் ரோடு செல்வதை கண்டவன் அதில் தன் வண்டியை திருப்பினான்.
தனி ரோட்டில் செல்லும் பொழுது கூட வைஷ்ணவியின் முகத்திலோ , கண்களிலோ சிறிதும் பயம் இல்லாது வாயினை இறுக மூடியபடி அமர்ந்திருந்தாள். சிறிது தூரம் சென்றதும் வண்டியை சடாரென நிறுத்தியதில் வண்டி ஒரு குலுங்களுடன் நின்றது. அப்படியேனும் அவள் அருகில் நெருங்கி அமர்வாள் என்ற நல்ல எண்ணத்தில்.. ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.
எங்கு அவள் தான் தருணுக்கும் தனக்கும் இடையில் ஒரு நபர் அமரும் இடைவெளி விட்டிருந்தாளே ? வண்டியை சடாரென நிறுத்தியும் வண்டியின் பின்புறம் பிடிமானத்திற்காக இருக்கும் கம்பியினை பிடித்து கொண்டாளே தவிர தருணின் மேல் தன் நுனி விரல் கூட படாது அமர்ந்திருந்தாள். அவளின் செயலில் தருணிற்கு சிரிப்பு தான் வந்தது. சிறு பிள்ளை போன்று முகத்தை தூக்கி வைத்திருந்தாள்.
வண்டி நின்றும் கீழே இறங்காது இருந்தவளை சீண்டும் எண்ணமும், யாரும் இல்லாத தனிமையில் தன்னவளினை நெருங்க எழும் ஆசையினையும் கட்டுப்படுத்த மிகவும் பிரயத்தனப்பட்டான். எனினும் அவளை சீண்டி பார்க்க ஆசை எழ வண்டியில் அமர்ந்தபடி குலுக்கினான். அதில் கடுப்பானவள் கீழே இறங்கி நின்று சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். இருந்தும் அந்த பார்வை அலசலில் பயம் இல்லாது போக அது தருணிற்கு விவரிக்க இயலாத உணர்வாக தோன்றியது.
ஏனெனில் உயிருக்கு உயிராக காதல் செய்யும் எந்த பெண்ணாக தன் உயிரின் மேலானவர்கள் மேல் அளவு கடந்த காதல் வைத்திருந்தாலும் இது போன்ற அசாத்திய நேரங்களில் பயம் கொள்வர். தன்னவள் தன் மேல் வைத்துள்ள கட்டுக்கடங்காத நம்பிக்கையில் தருணின் காதல் அளவிலடங்காத ஆட்டாற்று வெள்ளம் போல் பெருகியது.
“ஏன்டி யாருமே இல்லாத காட்டு பகுதி மாதிரி இருக்குற இடத்துல வண்டியை நிப்பாட்டி வச்சிக்கிட்டு உன் பக்கத்துல இவ்வளவு நெருக்கமா நின்னுட்டு இருக்கேன்,உன்னய எதாவது செய்துட்டான்ற மாதிரி பயமே வரலையாடி, இந்நேரம் இதே இது வேற பொண்ணா இருந்திருந்தா இந்த இருட்ட பார்த்துட்டு அட்லீஸ்ட் ஒரு சொட்டு கண்ணீராதும் விட்டிருப்பா, நீ என்னனா இப்படி என்ன உரசிட்டு நிக்கிற” என்று கூறியவன் தான் அவளை உரசியபடி நின்றிருந்தான்.
அதில் தருணை திரும்பி பார்த்தவள் “நீ வந்து பக்கத்துல நின்னுட்டு நான் உன்ன உரசுறேனா, இருக்கிற கடுப்புல எதும் பேசாம வண்டிய எடுக்கிற வழியை பாரு, அப்பறம் என்ன சொன்ன நீ என்ன எதாதும் செய்திடுவனு பயப்படனுமா, உன்னய பத்தி எனக்கு தெரியாது லவ் மட்டும் பண்ற சாமியார்னு தெரியாத ” என்றாள் கடுப்புடன். அதில் கடுப்பு எந்த அளவு இருந்ததோ அதே அளவு தருணின் மேல் நம்பிக்கையும் இருந்தது.
காதலை தன்னிடம் கூறிய நாட்களில் இருந்து எத்தனையோ முறை வெளியில் சென்றுள்ளனர்.. அப்போது எல்லாம் வைஷ்ணவியிடம் கடைபிடுக்கும் கன்னியம் அவள் அறிந்ததே. இருவரும் கை கோர்த்து கொண்டு பேசுவதும்,சில சமயங்களில் அவனின் தோலில் இவளாக தான் சாய்ந்து கொள்வாளே தவிர தருண் அல்ல. தருணை பொருத்த வரை தன்னவளை உரிமையுடன் திருமணத்திற்கு பின்பே நெருங்க வேண்டும் என நினைத்திருந்தான்.
இது நாள் வரை தன்னிடம், தன்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு குடுத்து விலகி இருந்த தன் மனம் கவர்த்தவனின் இன்றைய நெருக்கம் இன்னும் சில மாதங்களில் வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்க வாய்ப்பு வந்து விடும் என்று இப்பொழுதே பிரிவின் கலக்கத்தில் இருந்தவளிற்கு இந்த நெருக்கம் எல்லை இல்லாத ஆறுதல் தான், இருந்தாலும் அவனிடம் முறுக்கி கொண்டு தான் நின்றிருந்தாள். தன்னை சமாதானம் செய்வதற்கு தருண் என்னவெல்லாம் செய்ய போகிறான் என்று அறிந்து கொள்ளும் ஆவலில்.
ஆனால் தருணோ வைஷ்ணவியை அதிகம் யோசிக்க விடாது “யாரை பார்த்துடி சாமியாருனு சொன்ன, எதோ சின்ன புள்ள பாவம் படிக்கிற வரைக்கும் விட்டு வைப்போமே, அதும் நீ என்கிட்ட காலுல விழுகாத குறையா டிஸ்டன்ஸா இருப்போம்னு கெஞ்சினியேனு அமைதியா இருந்தா, என்ன சாமியார்னா சொல்ற, இப்போ பாருடி என் டார்லி இந்த சாமியார் என்ன எல்லாம் பண்றேன்னு, இந்த வாய் தான சொல்லுச்சு இந்த வாய்க்கு தண்டனை கொடுக்கனுமே” என்று அவளை மேலும் நெருங்கி நின்றவன் இந்த இருட்டில் யாரும் வரும் வாய்ப்பே இல்லை என்று இருட்டு தந்த சுதந்திரத்தில் அவளின் இதழில் வலது கையின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை வைத்து வருடியவன் அடுத்த நிமிடம் வைஷ்ணவி யோசிக்கும் முன்பே அவனின் இதழ்களில் வைஷ்ணவியின் இதழ்கள் தொலைந்து காணாமல் போனது.
“இமைக்கும் விழிக்கும் உள்ள தூரம் கூட என்னால் உன்னை பிரிய இயலாது”
பூக்கும்.