revathyrey04
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 14 :
ADS Group of companies
இன்றோடு வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் கம்பெனியின் முறைப்படி மூன்றாம் மாதத்தில் ப்ராஜெக்ட்டின் ரிவ்யூ நடக்க உள்ளதால் ஒவ்வொரு டீமும் தங்களை தயார் படுத்திக்கொண்டிருந்தனர். தீக்ஷா ஒரு டீமிலும் யாழினி ஒரு டீமிலும் என பிரித்து இருந்ததனர். ஒவ்வொரு டீமிலும் சீனியரில் இருந்து ஒருவரும் ஜூனியர்சில் இருந்து ஒருவரும் தான் ப்ரெசென்ட் செய்யவேண்டும் என்பது ஆதியின் முடிவு.
எனவே தீக்ஷா ஜூனியர்ஸ் லெவெலில் ப்ரெசென்ட் செய்வது என பொறுப்பை ஏற்று கொண்டு அதற்கான பவர்பாயிண்ட் டாக்குமெண்டும் தயாராக வைத்திருந்தாள். அவள் தான் பெர்பெக்ஷன் ஆச்சே. ப்ரெசென்ட் செய்வதிலும் எந்த தயக்கமோ பயமோ தடுமாற்றமோ இல்லாது இருந்தாள்.
இன்னும் சிறிது நேரத்தில் மீட்டிங் என்பதால் தீக்ஷா தற்பொழுது பார்க்கும் ப்ராஜெக்ட்டில் உள்ளவர்கள் மட்டும் மீட்டிங் ஹாலை அடைத்தனர். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆதி,ஷர்மிளா, மற்றும் வேறு இரண்டு பேரும் ஹாலில் நுழைந்தனர். ஒரு நொடி ஆதியை பார்த்து தீக்ஷா திகைத்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
தீக்ஷா மற்றும் அல்ல அங்கு உள்ள மற்ற பெண்களும் தான். இன்று சனிக்கிழமை என்பதாலும்,இந்த மீட்டிங்கில் கலந்து கொள்பவர்களை தவிர மற்ற அனைவருக்கும் விடுமுறை என்பதாலும், மீட்டிங் முடிந்து வெளியில் செல்ல வேறு வேலை இருப்பதன் காரணமாக வொயிட் டிஷர்ட் ராயல் ப்ளூ ஜீன்ஸ், வழக்கமாக அணியும் சன் க்ளாஸ் அவனின் ட்ஷர்ட்டில் மாட்டப்பட்டு, ஜெல் தடவப்படாத அடர்ந்த கேசத்தினை ஸ்டைலாக கோதியபடி உள் நுழைந்தவனை கண்டு அனைவரும் ஆச்சரியத்துடனும்,வியப்பிலும் பார்த்திருந்தனர்.
பர்சனல் வேலை இருந்தால் ஷர்மிளா மட்டும் அலுவலகம் வரவேண்டிய சூழ்நிலைகளில் அவள் இதே போல் டீசர்ட் ஜீன்ஸில் அவனை பார்த்திருந்தாலும் இன்று மீண்டும் புதிதாக அவனின் தோற்றத்தை பார்ப்பது போல் ஜொள்ளினாள்.
உள்ளே நுழைந்தவன் அனைவரையும் பார்த்து மீட்டிங் ஹாலில் தனக்கென்று போடப்பட்டிருந்த பிரத்யேகமான நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அவன் அமர்ந்த தோரணை அனைவரையும் தடுமாற செய்தது என்னவோ உண்மை தீக்ஷா என்ன மாதிரி உணர்ந்தாள் என்பது அவளே அறியவில்லை.
ஆதி தன்னை கவனிப்பதை உணர்ந்தவள் தன்னை நிலை படுத்திக்கொண்டு ஆதியின் பேச்சினை கவனிக்க ஆரம்பித்தாள் ஆதியின் ஒவ்வொரு செய்கையும் கவனித்தாலும் இந்த ப்ரொஜெக்ட்டிலே அவனுடைய திட்டமிடுதலும் வேலையை நுண்ணியமாக எவ்வாறு செய்ய வேணும் என்பதை அவன் விவரிக்கும் பாங்கும், அவனின் சிந்திக்கும் அபார சிந்தனை ஆகட்டும் ஒவ்வொரு செய்கையும், அவனை விட்டி கண்ணை அகற்ற இயலாது செய்தது. ஆதியின் பேச்சு முடிந்ததும் ப்ரொஜெக்ட்டிங் ஹெட் பேச எழவும் ஒரு சிறி தலை அசைப்பை பதிலாக அனுமதி அளித்தான்.
அடுத்ததாக தீக்ஷா பேச ஆரம்பித்தாள். எப்பொழுதும் போல் இப்போழுதும் நிமிர்வுடன் தங்கு தடையின்றி பேசியவளை பார்த்தவனின் பார்வை ரசனையாக மாறியது. அவள் பேசி முடித்ததும் ஆதியை பார்க்க அவன் கண்களில் இருந்த தனக்கான பாராட்டினையும், மெச்சுதலையும் கண்டு கொண்டவள் தன் இருக்கையில் அமர்ந்தாள்.
மீட்டிங் முடிந்தவுடன் அனைவரையும் கிளம்ப சொன்னவுடன் தீக்ஷாவிடம் “மிஸ் தீக்ஷா, கேன் யூ கம் டூ மை கேபின் ஆஃப்டர் டென் மினிட்ஸ்” என்று அவள் கண்களை பார்த்தபடி கூறவும், அவன் அனைவரின் முன்பும் அதுவும் மீட்டிங் முடிந்தவுடன் சீனியரை அழைக்காது தன்னை அழைத்ததும் தடுமாறியவள் “இவ்வளவு நேரம் நான் தைரியமா பேசுனதே பெரிசு, இவரு வேற இப்ப எதுக்கு கூப்பிடுறாரோ “ என்று நினைத்தவள் அவனிடம் “ஓ.கே சார்,வில் கம்” என்பதோடு முடித்து விட்டு கிளம்பினாள்.
ஆதி தீக்ஷாவிடம் சொன்ன பத்து நிமிட இடைவெளி அவன் தன்னை நிலைப்படுத்தி கொள்ளவே. அவளை பார்த்த முதல் நாளில் இருந்து தற்பொழுது முடிந்த மீட்டிங் வரை நடந்த ஒவ்வொரு விஷயமும் கண்முன் விரிய யோசனையுடன் தன் இருக்கையில் கண் மூடி யோசித்து கொண்டு இருந்தவனின் யோசனையை அவன் எண்ணத்தின் நாயகியின் வருகை தடை செய்தது.
உள்ளே நுழைந்தவளை தன்னுடைய பார்வையால் அளந்தவன் எதுவும் பேசாது அவளை பார்ப்பது மட்டுமே என்னுடைய தலையாய கடமை என்பது போல் பார்த்திருந்தான் அவளிற்கும் அவனின் பார்வையின் அர்த்தம் புரியாது இருக்க சிறு பிள்ளை அல்லவே இருந்தும் எதுவும் செய்ய இயலாது க்கும் என்று தன்னுடைய இருப்பை தெரிவித்தாள் அவளின் செய்கையை சிரிப்புடன் பார்த்தவன் எஸ் மிஸ் தீக்ஷா டேக் யுவர் சீட் என்றான் இந்த மூன்று மாத இடைவெளியில் அவனிடம் தான் ரிப்போர்ட் செய்வதன் மூலமும் தேவைப்படும் போகுது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஆதியை நேரடியாக அணுகியும் பேசியிருக்கிறாள் அப்பொழுது எல்லாம் அவனின் அறைக்கு வர நேர்ந்தாலும் வேலை முடிந்ததும் கிளம்பிவிடுவாள் அவனும் அவளை அமர சொல்வதோ இல்லை இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் இருந்தது இல்லை.
இன்று இவனின் செய்கை வித்தியாசமாக பட யோசனையுடன் அவனின் எதிரில் அமர்ந்தாள் தீக்ஷா ஒர்க் எல்லாம் எப்படி போகுது ஏதும் கஷ்டம் இருக்கா என்று பேச்சை ஆரம்பித்தான் தான் வந்ததில் இருந்து எதுவும் பேசாது இப்பொழுது இவ்வாறு கேட்கவும் அவனின் கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.
“ஓ.கே தீக்ஷா நாளைக்கு ஒரு சின்ன டின்னர் அரென்ஜ் பண்ணிருக்கேன். இட்ஸ் ஒன்லி ஃபார் நியூ ஜாய்னர்ஸ் யூ ப்யூபிள். அதனால இதை எல்லாருக்கும் நீங்க சொல்லிடுங்க ஐ ஜஸ்ட் டிசைடட்” என்றான். “ஏன் திடீரென்று,எதும் விஷேசமா” என்ற கேள்வியுடன் ஆதியை பார்த்தாள் ஆதி எந்த பதிலும் சொல்லாது “என்ஜாய் யுவர் டின்னர் என்பதோடு முடித்து கொண்டான்” காரணம் சொல்லாது தன்னுடைய பேச்சு முடிந்தது என்பது போல் பார்க்கும் ஆதியை என்ன செய்தால் தகும் என்ற கோபத்துடன் “ஓகே சார் இன்போர்ம் பண்ணிட்றேன்” என்று கிளம்பிவிட்டாள் தீக்ஷாவும். ஆதியின் பார்வையை உணர்ந்தாலும் அவனின் பார்வையில் தடுமாறினாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது இருந்தாள்.
வெளியில் செல்லுபவளின் கோபத்தினை அவளின் முகமே காட்டி குடுக்க “ஆளாளுக்கு கொல்றாளுங்களே ஒன்னு என்ன பார்த்து ஜொள்ளுதுங்க இல்லன்னா முறைக்கிதுங்க ஐயோ ஆதிக்கு வந்த சோதனையாடா இது” என்று தனக்குள் நொந்து கொண்டவன் வெளியில் செல்ல கிளம்பினான்.
கார் பார்க்கிங் ஏரியாவில் தன்னுடைய காரினை எடுத்து கிளம்பும் பொழுது தான் கவனித்தான் தன்னுடைய வண்டியில் வராது அலுவலகத்தின் வாயிலில் ஆட்டோவிற்காக காத்துக்கொண்டிருந்தாள் தீக்ஷா. அவளின் அருகில் சென்று காரினை நிறுத்தியவன் கார் கண்ணாடியை இறக்கி விட்டு “என்ன தீக்ஷா வண்டியில வரலையா இங்க நின்னுட்டு இருக்கீங்க, அல்மோஸ்ட் எல்லாரும் கிளம்பி போயிட்டாங்க நான் வேணும்னா ட்ராப் பண்ணவா” என்றான்.
அவனை பார்த்தவள் “இல்லை சார் நானே போய்கிறேன் பக்கத்தில தான் வீடு” என்றவள் “இன்னைக்கு ஒரு நாள் வண்டியில வர வேணாம்னு தான் வந்தேன் உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் இதுல நான் வேற உங்க டைமை வீணாக்கனுமா சார்” என்று முன்னோக்கி அடக்க துவங்கினாள் மீண்டும். அவளின் அருகில் காரை நிறுத்தியவன் “உங்க ஏரியா சைடு தான் போறேன் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நானே விட்றேன்” என்று அவள் ஏறுவதற்கு கதவினை எட்டி திறந்து விட்டான்.
அலுவலகத்தில் வாயிலில் நின்ற செக்யூரிட்டி தன்னுடைய முதலாளியை கண்கள் விரிய பார்த்து கொண்டிருந்தார். ஆதியை பற்றி நன்கு அறிந்தவர் இன்று தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்ணிடம் நின்று பேசியதும் அல்லாது தன்னுடைய காரில் ஏறவும் செய்தவனை பார்த்தவாறு நின்றிருந்தார். திக்ஷா வேறு எதுவும் பேசாது மௌனமாக "இவருக்கு எப்படி நாம இருக்க ஏரியா தெரியும் கரெக்டான ரூட்ல போறாரு" என்று
ஏறினாள். அதில் ஆதியின் உதட்டில் அவள் அறியாது புன்னகை மலர்ந்தது.
நாளைய டின்னர் தன் வாழ்வையே மாற்றி அமைக்க போவதற்கு முதல்படி என்பதை அறியாது இருந்தவளின் நிலை அந்தோ பரிதாபம் என்று தான் சொல்ல வேண்டும்.