ஹாய் ப்ரண்ட்ஸ் என்னுடைய முழு பெயர் ஸ்ருதிஜனனி ஆனா என்னோட எல்லா பர்த் சர்டிபிகேட்ல ஜனனி மட்டும் கொடுத்ததால் ஸ்ருதி என்ற பெயர் யாருக்குமே தெரியாது என் சொந்தங்களுக்கு கூட அப்படி ஓரு பெயர் இருப்பதை மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இவ்வளவு ஏன் எனக்கே நான் ஐந்தாவது படிக்கும் போது தான் என்னுடைய முழு பெயர் தெரியும்
அதான் ஸ்ருதியை புனை பெயராக
வைத்துக் கொண்டேன்
சரி என்னை பற்றி சொல்லிவிட்டேன் நான் முதன் முதலில் படித்த கதை அப்படினா அது ரமணி சந்திரன் நாவல் தான் அதுவும் பத்தாவது படிக்கும்போது தான் நான் முதன் முதலில் படித்த நாவல் ஜோடி புறாக்கள் அதுவும் அரையாண்டு தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு தொடர்ந்து 4மணி நேரத்தில் முழு கதையையும் படித்து முடித்து விட்டு தான் ஒய்ந்தேன் என்று சொல்ல வேண்டும் அதன் பின் ஒரே வருடத்தில் ரமணி அம்மாவின் நூற்றியெழுவதிற்கும் மேற்பட்ட நாவல்களை தேடித்தேடி படித்தேன் பின் கல்கியின் பொன்னியின் செல்வன் , சிவகாமி சபதம்,முத்து லக்ஷ்மி ராகவனின் ஏழு ஸ்வரங்கள் என்று நீண்டு கொண்டே போகும் பின் தள கதைகள் என நிறைய படிக்க ஆரம்பித்தேன் எல்லாம் நானும் ஒரு சைலண்ட் ரீடர் தான்
எனக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆசை ஓரு வருடத்திற்கு முன்பே தோன்றி விட்டது ஆனால் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாததோடு என்னுள் இருந்த தாழ்வு மனப்பான்மையும் என்னை எழுத விடாமல் தடுத்தது
இப்பொழுது நான் எழுதும் அவளே என் தோழனின் வசந்தம் கதை எப்படி எனக்கு தோன்றியது என்பதை எல்லாருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் சாதாரணமாக எல்லேருக்கும் கதை என்பது அவரவர் கற்பனையில் உதிப்பது தான் ஆனால் எனக்கு கனவாக தோன்றியது தான் இக்கதைக்கு அடித்தளம் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் அதுவும் சாதாரணம கனவு அல்ல விடியகாலை தூங்கும் போது ஒரு பேய் இன்னொரு பெண்ணிடம் பேசுவது போல் வந்தது அக்கனவு இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் இது ஏன் இதை யாரும் நம்பாமல் கூட போகலாம் ஆனால் இது தான் உண்மை அந்த கனவு தான் என் எல்லா தடைகளையும் உடைத்து கொண்டு கதை எழுத முயற்சிக்கும் படி என்னை ஊந்தியது எனக்கு தெரியும் என்னுடைய கதையில் அதாவது நான் இதுவரை எழுதியதில் நிறைய தவறு இருக்கிறது என்று ஆனால் அதை திருத்திக் கொள்ள உங்கள் அனைவரின் உதவியும் எனக்கு தேவை என்னுடைய அடுத்த கதையும் கனவின் மூலமாக தயாராகி விட்டது அதையும் உங்கள் முன் வைக்க வேண்டும் என்றால் உங்கள் அனைவரின் உதவியும் வழிகாட்டுதலும் உறுதுணையும் எனக்கு அவசியம்