கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 24)
அய்யோ ராமா....! இந்த கூல் சக்தீஸ்வரனை நினைச்சா சர்வேஸ்வரனுக்கு மட்டுமா மண்டை காயுது...? எங்களுக்கும் தானே மண்டை குழம்புது...! அத்தனை தூரம் ஓட்டல் ரூம்ல சக்குவை கேவலமா பேசிட்டு, இப்ப எப்படி இவனால ஜொள்ளு விட முடியாது. அவ கோபமா இருந்தாலும், அதை பூக்களால தட்டி விடற மாதிரி தட்டி விடுறானே அதெப்படி..?
இந்த நிதானம் எப்படி வந்தது ?
ஏன் வந்தது ? ஒருவேளை, சக்கு சொன்னதும் உண்மை தானோ? அவ வயித்துல அவன் குழந்தை வந்ததாலத்தான் அவளையே கட்டிக்க சம்மதிச்சான்ங்கறப்ப, இந்த நிதானமும் பொறுமையும் கூடவே வந்திடுச்சோ..? ஆனா, இது தப்பான எண்ணம் தானே ? அதாவது அவ வேணாம், ஆனா அவ வயித்துல வளருற குழந்தை மட்டும் வேணுமோ..?
அப்ப சக்குவோட கோபமும் நியாயம் தானே..? தவிர, தர்சனாவோட ரூம் வரைக்கும் போய் கூத்தடிச்சிருக்கிறான் வேற...? அதை சக்கு பார்த்துட்டாளேங்கிற ஃபீலிங் கொஞ்சம் கூட இல்லையே. அவளை சமாதானப்படுத்தவும் தோணலை. ஆனா, ஏளனமா பேசி ஆர்ப்பாட்டம் மட்டும் பண்ணியிருக்கான்.
அப்படின்னா, இவங்களுக்குள்ள எதிர்பாராத சந்தர்பத்துல கூடல் ஏற்பட்ட பிறகும், சக்குவை சக்தி அவாய்ட் பண்ணத்தான் பார்த்திருக்கிறான்ங்கிறது தானே உண்மையாகுது. அப்புறம் எதுக்கு திரும்பவும் ஒண்ணு சேரணும்...?
எதுக்கு தவிர்க்கணும்...?
குழந்தை மட்டும் தான் காரணமா...? இல்லை காதல் காரணமா...? ஒருவேளை, குழந்தை உண்டாகலைன்னா
விலகி போயிருப்பானோ..? அப்படி போனவன் தானே...? அப்ப, அவ மேல உண்மையான காதல் இல்லையா...? அடிக்கடி, நான் என்ன பண்ணாலும், எது பண்ணாலும் உன்னோட நன்மைக்காத்தான்.. என்னை நம்புற தானேன்னு சக்குவை பார்த்து கேட்பானே.....
அப்ப அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்..?
இதுக்கெல்லாம் என்ன காரணம்...?
ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம் இவனால சக்கு ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கா. சும்மாவா சொன்னாங்க..."தீயினால்
சுட்டப்புண் உள்ளாறும், ஆறாதே
நாவினால் சுட்ட வடு"ன்னு..
ம்... இனி இவன் சக்குவை சமாதானப்படுத்த தலைகீழ் நின்னு தண்ணி குடிக்கணும் போலவே...? குடிக்கட்டும், குடிக்கட்டும்... உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தானே ஆகணும்.
CRVS (or) CRVS 2797