All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semms semma emtional episode.... தாமரை அப்பா oda தங்கச்சி பொண்ணு தான் niranthari.... வள்ளியம்மை வீடு kula sekka maatanga nu avaroda paiyanukku கல்யாணம் panni vechitaaraa... Romba romba aniyayam la avalloda குடும்பம் ah ezhanthutaale... Avalloda அம்மா இறந்தது romba romba கொடுமை அது paathuthaan avaluku வாய் pesa mudiyama pochcha.... Avalloda thambi enna aanaanu theriyala.... Eppadi இருந்த ஊரு ஒரு பத்து நிமிஷத்துல ஒண்ணுமே illama ஆயிடுச்சி la... O my God.... இதுகாலம் விடுவு காலம் eppo வரும்... God only knows... Super Super Super... Eagerly waiting for next episode
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka enna sollurathunu theriyala romba emotional epi akka manasu valikkuthu innamum antha nelai marala akka ippo varai athu apdiye tha irukku ithuku la eppo oru nelaiyana mudivu varum samma epi akka ilove it akka ne antha santaiya pathu irukiya atha uththam natantha edathula ne irunthiya. Romba kasta pattu iruppa la love you akka ellathukum oru vidivu irukkum akka love you love you akka enna azha vechita poooo
 

Subasini

Well-known member
Valikalil migaperiya vali than uuravikali izhapathu, than kannumum than irupidam aazhika paduvathu uuravidam illamal (aagathi intha varthai yennai rombha pathikum varthai) veru idam thedi thavipathu apaaa yenna oru vali migunthaepathivii oo god iraivan illai yennra mudivu yedukum tharunagalili ithu onru.
Emotional pathivu dear
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்றைட பதிவை படித்து முடிக்கும் வேளையில் மனம் கணத்து போனது எம் ஈழத் தமிழர்கள் பட்ட துயரங்களை... கண்ணீரை.....கஷ்டங்களை ஏற்கனவே நிறைய படித்திருந்தாலும் இம்மாதிரி படிக்கும் ஒவ்வொரு முறையும்... அதே வலி எழத்தான் செய்கிறது.... சண்டிலிப்பாய் கிராமத்து நிகழ்வை அப்படியே கண்முன்னே நடந்தது போன்றதொரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய உங்கள் எழுத்து நடை அபாரம்....! சொந்த நாட்டையிழந்து அடுத்த நாட்டில் தஞ்சம் புகுவது துயரமென்றால்....சொந்த நாட்டிலேயே.... வீடிழந்து வாசலிழந்து அகதிகளாய் திரிவது அதனினும் பெருந்துயரமே.... !! ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் ... அவர்களது சொந்த நாட்டில் குடியேறும் நிலை சீக்கிரமே வரவேண்டும் என்பதே எங்களின் பிரார்தனை..! கொழுந்து..... ராஜவேலு இவர்களின் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது ஒரே நாளில் அனைத்து உறவுகளையும் கண்முன்னே இழந்த கொடுமையை அனுபவித்த நிரந்தரியின் நிலையும் அதிர்ச்சியில் அவளது பேசும் திறன் பறி போனதும் பரிதாபத்துக்குரியது....! ஆனால் குல சூரியர் அதற்காக நிரந்தரியை மருமகளாக்க எண்ணியது தான் சற்றே நெருடல் . மனதை கணக்க வைத்த பதிவு டியர்.. வாழ்த்துக்கள்.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதை மிகவும் பாதித்த அத்தியாயம் மேம்...

எளிமைப்படுத்த பட்ட சோகம்.....இளம் பச்சை சிறியமுள் எனினும் தனக்கான வேலையைச் சரியாக செய்வது போல ...மனதின் உள் நுழைந்து வலிக்கவே வைக்கிறது..

இந்த ஒரு பதிவிலேயே...வாழ்வின் நிரந்தரமின்மை...ஆதிக்கவெறி....ஏற்றத்தாழ்வுகள் எனும் கேலிக்கூத்து...அனைத்தும் அழகாய்...சொல்லிட்டீங்க மேம்..
மனம் கனத்து..ஒருதுளி கண்ணீர் வந்தது நிஜம்...

பதினேழு வயது பெண்...வாழ்வில் திடுமென நிகழும்..தலைகீழ் மாற்றம்...
நீரோட்டத்தில் செல்லும் இலை போல...அடித்துச்செல்லப்படுவது..பரிதாபம்.
....சென்று சேர்ந்த இடமும்...இரு பிரச்சனைகள் போலவே...
வள்ளியம்மை தான் ப்ரச்சனை என்று பார்த்தால்..ஜெயப்பிரகாஷ் ம்....விருப்பமின்றி மணக்கிறாரா...😐😐😐😐😐😐😐அவரும்
இப்போது உயிரோடும் இல்லை...இன்னும் என்னென்ன அந்த சிறுபெண்ணிற்கு...

இம்முன்கதை சர்வாகமன் மனதில் என்னமாதிரியான விளைவை ஏற்படுத்தும்....ஆவலுடன் அடுத்த அத்தியாயத்தை எதிர்நோக்கி....
அழகான ஆழ்மனதை உணர்த்தும் கருத்துக் பதிவு தாமரை. நிஜம்... ஈழத்தமிழர்களின் அல்லாட்டம் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த கால கட்டத்தில் 16 வயது பெண்களுக்கு வெளிநாடுகளில் உள்ள ஆண்களுக்கு அவசர அவசரமாக திருமணம் முடித்து வைத்து அந்த பிள்ளைகளாவது உயிர்பிழைக்கட்டும் என்று அனுப்பி வைத்த கதைகளும் ஏராளம். இளம் திருமணத்திற்கு அனைவரும் கோபப்படும் பொது, நான் அதை ஏற்றுக்கொள்வதற்கு அதுவும் ஒரு காரணம். அவன் அவன் எந்த எந்த சூழ்நிலையில் சிக்கிக்கொண்டானோ என்று. அந்த நேரம் எல்லாம் நாளை என்கிற பேச்சுக்கே இடமிருந்ததில்லை. நாளை இருப்போமோ என்று கூட தெரியாது. இந்தக் கணம், இந்த நிமிடம் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். உங்கள் உணர்வுபூர்வமான கருத்துக்கு மிக மிக நன்றி தாமரை.:love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு சகோதரி....கவலை வேண்டாம்.... எல்லா பிரச்சினை யும் ஒரு நாள் முடிவுக்கு வரும்... ஆனால் அதற்குள் இழப்புகள் எத்தனையோ.... விரைவில் சரியாக இறைவனை பிரார்த்தனை செய்வோம்.....
உண்மைதான். போனவை போன்றவையே... தீரும்பப் பெறமுடியாத தூரம்தான். ஆனாலும் அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.:love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொந்த நாட்டிலேயே அனைத்தும் துறந்து அகதிகளாகுற அவலம் மிக கொடுமையே😔😔

யாரோ சிலரோட ஆதிக்கவெறி பல ஆயிரக்கணக்கான தமிழர்களையும் கொன்று குவிச்சிருக்கு😔😔

எத்தனை எளிமையான வார்த்தைகளில் சொன்னாலும் அந்த ரணங்கள் கிளறிவிடப்பட்ட வலிதான்..

நிரந்தரி வாழ்க்கையோட அவலமும் வலியுள்ளதுதான்..
பேச்சும் வராம அம்மாவோட அரவணைப்பும் இல்லாம ஆதரிக்கவும் யாருமில்லாம இருந்தவ இப்போ மாமான்னு உறவு கிடைச்சும் மகிழும்படி ஏதுமில்லை..

ஜெயபிரகாஷ் தந்தைக்காக விருப்பமில்லாத திருமணத்துக்கு சரி சொல்லிருக்கான்.. அவனும் உயிரோடு இல்லை..
வள்ளிம்மையின் சுடும் வார்த்தைகள் மட்டுமே நிரந்தரி வாழ்க்கைன்னு ஆகியிருக்கு..
சர்வாகமன் அத்தனையும் தெரிஞ்சதும் என்ன முடிவு எடுக்கப்போறான்..

ரொம்பவே கனமான பதிவு சிஸ்😔

அடுத்த அடுத்த பதிவுகளை ஆவலோடு எதிர்பாக்குறோம்😍😍
மிக மிக அழகான பதிவு புனீத். உண்மை ரணங்கள் மாறினாலும் வடுக்களும், அதன் வழிகளும் மாறுவதில்லை. நடந்து 22 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் நேற்று நன்னடத்தை வலி போல இன்றும் மாறவில்லை.

ஈழத்தமிழர்களின் பிரச்சனை 83 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்த பிரச்சனை. அன்றில் இருந்து இடம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். எப்போது நமது ஓட்டம் நிற்கிறது என்று பார்க்கலாம்.

உங்கள் அழகான பதிவுக்கு மிக மிக நன்றிமா.

சார்வாகாமன், என்ன முடிவு எடுப்பான்... திங்கள் தெரியும் பாருங்கள்.:love::love::love::love:
 
Top