மனதை மிகவும் பாதித்த அத்தியாயம் மேம்...
எளிமைப்படுத்த பட்ட சோகம்.....இளம் பச்சை சிறியமுள் எனினும் தனக்கான வேலையைச் சரியாக செய்வது போல ...மனதின் உள் நுழைந்து வலிக்கவே வைக்கிறது..
இந்த ஒரு பதிவிலேயே...வாழ்வின் நிரந்தரமின்மை...ஆதிக்கவெறி....ஏற்றத்தாழ்வுகள் எனும் கேலிக்கூத்து...அனைத்தும் அழகாய்...சொல்லிட்டீங்க மேம்..
மனம் கனத்து..ஒருதுளி கண்ணீர் வந்தது நிஜம்...
பதினேழு வயது பெண்...வாழ்வில் திடுமென நிகழும்..தலைகீழ் மாற்றம்...
நீரோட்டத்தில் செல்லும் இலை போல...அடித்துச்செல்லப்படுவது..பரிதாபம்.
....சென்று சேர்ந்த இடமும்...இரு பிரச்சனைகள் போலவே...
வள்ளியம்மை தான் ப்ரச்சனை என்று பார்த்தால்..ஜெயப்பிரகாஷ் ம்....விருப்பமின்றி மணக்கிறாரா...
அவரும்
இப்போது உயிரோடும் இல்லை...இன்னும் என்னென்ன அந்த சிறுபெண்ணிற்கு...
இம்முன்கதை சர்வாகமன் மனதில் என்னமாதிரியான விளைவை ஏற்படுத்தும்....ஆவலுடன் அடுத்த அத்தியாயத்தை எதிர்நோக்கி....