All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 29(5)

View attachment maxresdefault (2).jpg

"இன்னும் உன் சின்ன தம்பியை மறக்கலையாடீ நீ ...."என்றான் அவன் கண்களில் கண்ணீருடன்.

"லூசு மாதிரி பேசாதேடா .....சொல்லாமல் கொள்ளாமல் ஆள் அட்ரஸ் இல்லமால் அந்த உத்தம் உடன் ஓடியது நீ தான் ....லூசு லூசு ....எத்தனை முறை போன் செய்தேன் ....போனை ஆப் செய்துட்டு என்ன ........செய்துட்டு இருந்தே ........போடா ...........உன் கூட பேசவே கூடாது என்று இருந்தேன் ."என்றவள் அவனை மொத்தி எடுத்தாள் .

அடியேய் வலிக்குதுடீ விடு ...விடு ...ஐயோ அம்மா ...என்னை கொல்றா ...உத்தம் காப்பாத்துடா ...."என்றவாறு அந்த அறை சுற்றி ஓடினான் சின்னத்தம்பி .மதுரா விடாமல் துரத்த கார்த்திக்கின் பின் ஒளிந்தவன் பின் அறையை விட்டு வெளியே ஓடினான் .விடாமல் துரத்தி ஓடினாள் மதுரா .பார்பி டால் ,செக்யூரிட்டி ,அலுவக ஆட்கள் என்று எல்லோரும் அவரவர் இடத்தில அதிர்ந்து போய் நின்றனர் .அதற்குள் இங்கு நடப்பதை பார்த்து விட்டு செக்யூரிட்டி உத்தமிற்கு அழைக்க ,"ஸ்டாண்ட் டவுன் ...இட்ஸ் நத்திங் ."என்றான் .

ஓடி களைத்து மீண்டும் உத்தம் ,கார்த்திக் இருந்த அறைக்கே திரும்பி வந்த இருவரும் மேல் மூச்சு ,கீழ் மூச்சு வாங்க அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தனர் .அவர்கள் குடிக்க கூல் ட்ரிங்க்ஸ் எடுத்து கொடுத்தான் உத்தம் புன்னகையுடன் .

" ராட்சஸி ....என்னமா அடிக்கரடீ .....வலிக்குது ....பிசாசு .....ஆள் பார்க்க இந்த பூனையும் மில்க் குடிக்குமான்னு இருக்க வேண்டியது ...செய்யிறது எல்லாம் ஜாக்கி சான் வேலை ..."என்றான் சின்ன தம்பி .

"ஏதோ நல்ல மூடில் இருக்க போய் உன்னை இத்தோடு விடறேன் ......பொழைச்சி போ .....நீ செய்து வாய்த்த வேலைக்கு உன்னை கொல்லனும் ...."என்றாள் மதுரா .

தலையும் புரியாமல் காலும் புரியாமல் நின்ற கார்த்திக் ,"மதுரா இவரை உனக்கு முன்னமே தெரியுமா என்ன ?"என்றான்

"உனக்கு அடையாளம் தெரியலையாடா இவனை ?????பிரபு டா ....சின்ன தம்பி பிரபுடா .....நான் காலேஜ் படிக்கும் போது சீனியர் ஒருவரை ஜீனியர் என்று நினைத்து ராக்கிங் செய்தேனேடா ....அந்த சீனியர் எனக்கு கிளோஸ் friend ஆகிட்டார் என்பேனே ....குன்னூர் வீட்டுக்கு சண்டே ஆனா ஹிட்லரின் பிரியாணிக்கு ஆஜர் ஆகிடுவானே ...நீ கூட என்னை பத்திரமா பார்த்துக்க சொல்லி போனில் lecture அடிப்பாயேடா அந்த பிரபு டா ....சின்ன தம்பி பிரபு .காலேஜ்ஜில் என் சீனியர் ....என் பெஸ்ட் நண்பன் .... ."என்றாள் மதுரா ஆனந்தத்துடன் .

((((ஒஹ்ஹஹ் .....பிரபு என்பதற்கு தான் "சின்ன தம்பி" என்ற செல்ல பெயரா ?????....உடனே யார் இந்த சின்னத்தம்பி என்று கபரா கிளம்பிடுச்சு ......ஆமாம் இவன் யாரு ????இதுல தம்பி என்றதும் மேரேஜ் லிஸ்ட் ஆள் குறைஞ்சுடுச்சுனு யாரோ சொன்னாங்க பா ....விட மாட்டியே ஹனி நீ ))))

"ஓஹ் ....அந்த அப்பாவி ஜீவன் நீங்க தானா ப்ரோ ....சாரி போர் யுவர் பாட்லக் ....உங்களை நேரில் பார்த்தது இல்லை ...சோ யாருன்னு தெரியலை ப்ரோ ..."என்றான் கார்த்திக் கைகளை நீட்டி .

அவன் கையை குலுக்கிய பிரபு ,"உங்களை நேராக பார்த்ததில் மகிழ்ச்சி ப்ரோ ."என்றான் அவன் கார்த்திக் கைகளை குலுக்கியபடி .

"ஆமாம் நீங்க எப்படி இந்த டிராகுலா கிட்டே மாட்டினீங்க .....வெச்சு செஞ்சு இருப்பாளே ..."என்றான் கார்த்திக் .

"பாரு பிரபு .........என்னை கிண்டல் செய்யறான் ..."என்றாள் மதுரா .

"அழ கூடாது டிராகன் ....உண்மையை தாணேடீ சொல்லறான் என் நண்பன் .....உன்னால் பாதிக்க பட்டவர்களின் சங்க உறுப்பினர்கள் ஆயிற்றே ...."என்றவனுக்கு ஹை பைவ் கொடுத்தான் கார்த்திக் .

(ட்ராகனா ...இப்படியுமா செல்ல பெயர் வைத்து கொஞ்சுவாங்க ???? )

"போங்கடா ....போண்டாஸ் ...."என்று முகம் திருப்பி அமர்ந்தவளின் முன் ஒரு பௌல் நிறைய ரசமலாய் நீட்டினான் பிரபு .

"எனக்கு ஒண்ணும் வேண்டாம் .....நீங்களே கொட்டிக்கோங்கோ ...."என்று ஒழுங்கு காட்டி விட்டு திரும்பி கொண்டாள் மதுரா .
View attachment tumblr_o6pjrqEWP51rhwfb2o2_400.gif

"ஹே டால் ....ப்ளீஸ் ....என் செல்ல டிராகன் இல்லை நீ ....சாரி .....இந்தா உனக்கு இது ரொம்ப பிடிக்கும் தானே ....அதுவும் ஸ்பெஷல்லா உனக்காகவே செய்ய சொன்னேன் .....எடுத்துக்கோடீ ...."என்று அவன் கெஞ்சலில் இறங்க இவர்களின் நட்பை விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தான் கார்த்திக் .சிறு பொறாமை கூட எழுந்தது .

"அப்போ அந்த மாங்கா மண்டையனின் தலையில் கொட்டுடா ...அப்போ தான் சாப்பிடுவேன் ."என்றாள் மதுரா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த நொடி பிரபு கார்த்திக் தலையில் ஓங்கி கொட்டி விட ,"ப்ரோ !...என்னதிது?"என்று அலறினான் கார்த்திக் .

"மதுரா சொல்லிட்டா நோ மறுப்பு நண்பா ....எனக்கு என் டிராகன் முக்கியம் ...நீ சாப்பிடுமா ."என்றான் பிரபு .

நான்கு முழு ரசமலாய்களை உள்ளே தள்ளிய பிறகே நிமிர்ந்தாள் மதுரா .அவள் சாப்பிடுவதை ஒரு அன்னையின் வாஞ்சையுடன் பார்த்து கொண்டு இருந்தான் பிரபு .

"ஆமாம் .....நீங்க ரெண்டு பெரும் கராஜ் வைக்க போவதாகவும் ,உலகம் சுற்றும் வாலிபர்களாக உலகம் முழுவதும் சுற்றி கொண்டு இருப்பீங்கன்னு பார்த்தா ....என்ன ரெண்டு பேரும் இங்கே அடியாட்களாக சேர்ந்துட்டிங்களா என்ன ?"என்றாள் மதுரா .

"ஆமாம் நீங்க ரெண்டு பேரும் தான் அடிதடி என்றால் காதா தூரம் ஓடுவீங்களே ...நீங்க எப்படி இங்கே ....அதுவும் "terror "என்று பெயர் எடுத்த ஆளிடம் ????தூங்கும் போது கூட அந்த சூர்யா கையில் துப்பாக்கி வைத்து கொண்டு தான் தூங்குவானாமே .....எப்படி வேலைக்கு சேர்ந்தீங்க ?"என்றாள் மதுரா .

"அதை பாஸ் கிட்டேயே கேட்டுக்கோ டிராகன் ....சார் வெயிட் செய்துட்டு இருப்பார் ...வா போகலாம் ."என்றான் பிரபு .

"கேட்க தான் போறேன் ...எவ்வளவூ தைரியம் இருந்தா என் நண்பனையும் ,என் அண்ணனையும் அடியாட்களாக வைத்து இருக்கிறாய் என்று கேட்க தான் போகிறேன் ...."என்று படபடவென பொரிந்து தள்ளினாள் .

"ஐயோ பாஸ் கிட்டே அப்படி எல்லாம் கேட்டுடாதே டிராகன் ....வேலைக்கு உலை வைச்சுடாதே ...அடுத்த வேலை புவாவுக்கு என்ன செய்வது ...."என்றான் பிரபு .

"நான் இருக்கேன் சின்ன தம்பி ...."என்றாள் மதுரா .

"நீ இருப்பே ...நான் இருப்பேனா தாயி ....வேண்டாம் பாஸ் திட்டுவார் ..."என்றான் பிரபு .

"இல்லை ...உண்டு இல்லைன்னு பார்க்காம விட மாட்டேன் பிரபு ."என்றாள் மதுரா

நால்வரும் கடைசியாக இருந்த அந்த அறைக்குள் நுழைந்தனர் .அவர்களை வரவேற்றது காலியான இருக்கை .

"எங்கேடா உங்க பாஸ் ?"என்ற மதுராவின் கேள்விக்கு விடை அளிக்காத பிரபு ,நேராக சென்று அந்த இருக்கையில் அமர்ந்தான் புன்னகையுடன் .

இருக்கையில் அமர்ந்தவன் தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து ,"வெல் மிஸ் மதுராக்ஷி சங்கரன் .....என்னவோ கம்பளைண்ட் செய்ய போவதாக சொன்னீங்க ...என்ன கம்பளைண்ட் ?"""என்றான் பிரபு என்கிற சின்ன தம்பி என்கிற சூர்யா பிரதாப் ரத்தன் சிங்.

(ஹை நிறைய பேர் சரியாய் கெஸ் செஞ்சுட்டாங்க ....நானும் தான் .....பிரைஸ் என்ன ஹனி ???----ஹ்ம்ம்ம் சோனாவை ஒருவாரம் வீட்டுக்கு அனுப்பி வைக்கவா .????....மீ அப்ஸ்காண்ட்)

ஒரு கணம் விழித்த மதுரா ,அவன் யார் என்று புரிந்து விட அங்கு இருந்த தலையணையை எடுத்து ,"பிராட் ,420,லயர் ,சீட்டெர் ......பொய் சொல்லி ஏமாத்திட்டே இல்லை .....பாவி பாவி ஜெய்ப்பூர் இளவரசனா நீ .....மவனே அடுத்த வேலை சோறு இல்லைன்னு என் டிபன் பாக்ஸ் மொத்தத்தையும் எத்தனை தடவை காலி செய்து இருக்கே .....சினிமாவிற்கு போக காசு இல்லை ,வண்டி ரிப்பேர் என்று சொல்லும் போது எல்லாம் என் பாக்கெட் மனியை தூக்கி கொடுத்தேனே .....பொய்யாடா சொன்னே ...."என்று அவனை புரட்டி எடுத்தாள் .

"ஹே சாரி சாரி ....டிராகன் ...சாரி மா ...சாரி என் செல்லம் இல்லை ....ப்ளீஸ் ...ப்ளீஸ் .....நீயா தாண்டீ நான் ஏழை என்று முடிவூ செய்துட்டே .....நான் எத்தனையோ தடவை நான் யார் என்று சொல்ல வந்தேன் ....நீ தான் சொல்லவே விடலை ...."என்றான் சூர்யா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போடா டேய் ....ஏன் உத்தம் அண்ணா ...நீங்க கூட இந்த எருமைக்கு சப்போர்ட் அப்படி தானே .....பெஹன் ,பெஹன் என்பது எல்லாம் சும்மா அப்படி தானே .....ரெண்டு பேர் கூடவும் பேசமாட்டேன் .....கெட் லாஸ்ட் ..."என்றவள் அறை கதவை திறக்க போக அவள் கையை பிடித்து கொண்டான் சூர்யா .

View attachment 123.jpg


"சாரி டீ .....நான் எப்பவுமே உனக்கு சின்ன தம்பி பிரபு தாண்டீ ...அப்படி இருக்க தான் விரும்பறேன் .....இத்தனை வருடம் உன் பிரபுவாய் இருந்த நாட்கள் தான் என்னை உயிர்ப்போடு இருக்க வைத்து இருக்கிறது ....ப்ளீஸ் உன்னை ஒரு முறை இழந்துட்டு நான் தவித்தது போதும் ....மீண்டும் என்னை விட்டு போய் விடாதே .....சாரி டிராகன் ."என்றவனை சில நொடி பார்த்தவள் அழுது கொண்டே அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் .
"அப்போ எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரணும் .....என் கிட்டே பிடுங்கி சாப்பிட்டதற்கு எல்லாம் திரும்ப வாங்கி தரணும் .....தருவியா ....?"என்றாள் மதுரா புன்னகையுடன் .

"ஆனா பில் நீ தான் கட்டணும் டிராகன் ....நான் ரொம்ப ஏழை தெரியுமா ?"என்றான் சூர்யா

வாய் விட்டு நகைத்தாள் மதுரா .வாய் சிரித்து கொண்டு இருக்க ,கண்கள் கண்ணீரை பொழிந்து கொண்டு இருந்த அருமையான நட்பின் தருணம் அது .

"உன்னை எவ்வளவூ மிஸ் செய்தேன் தெரியுமா ....சொல்லாம போய்ட்டிங்க ...யாரை விசாரித்தாலும் யாருக்கும் எதுவும் தெரியலை .....உங்க ரெண்டு பேருக்கும் என்னவோ ஏதோ என்று பயந்து போனேன் .....நீங்க காணாம போன முன் வாரம் தானே என்னை ஒரு பொறுக்கி கிட்டே இருந்து காப்பாற்றினீங்க ...அவன் ஏதாவது செய்து விட்டானா என்று எப்படி துடிச்சேன் தெரியுமா .....போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க தான் நினைத்தேன் ...ஆனா ஹிட்லர் தான் விடலை ....ச்சே போடா ....ஏண்டா சொல்லாம போனீங்க ரெண்டு பெரும் ?"என்றாள் மதுரா சூர்யாவின் சட்டையை பிடித்து .

"சாரி டிராகன் ....அப்பாவை கொல்ல ட்ரை செய்து இருந்தாங்க ....அப்பா ரொம்பவே கிரிட்டிகள் .....மொத்த குடும்பத்தையும் டார்கெட் செய்துட்டாங்க ....சோ உடனடியா என்னை சேப்டி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ....எனக்காக இல்லை என்றாலும் எங்களை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்காக அவங்க குடும்பத்திற்காக .....சோ போலியான ஒரு ஆக்ஸிடெண்டில் ஜெய்ப்பூர் இளவரசர் இறந்து விட்டதாக வெளி உலகம் நம்ப வைக்க வேண்டி இருந்தது ....இது எல்லாம் கருப்பு பக்கம் ,நரகம் ...உன்னை மாதிரி angel இன்வோல்வ் ஆக்க முடியாது .....அதான் ....ஆனா உன்னை மறக்கவேயில்லை ....அந்த ஆபத்தில் என்னை பல முறை புன்னகைக்க வைத்தது உன் நட்பு தான்டீ ......நான் யார் என்று தெரியாமலேயே என்னை சமமாய் நடத்திய உன் நட்பை இழக்க விரும்பலை ....ஒருவேளை உண்மை தெரிந்தால் அதன் பிறகும் உன்னால் சகஜமாக பழக முடியுமா என்று ரொம்பவே கவலை பட்டோம் மதுரா ....பயம் ....எங்கே எங்களை விட்டு போய் விடுவாயோ என்று பயம் ...ஆனா விதி சொல்லாம அப்ஸ்காண்ட் ஆனது நாங்க ரெண்டு பேர் தான் ....சாரி மா ...ரியல்லி சாரி ...."என்றான் சூர்யா மதுராவின் கைகளை பிடித்து கொண்டு .

"ச்சே மடையா ....லூசா நீ ....நீ எப்பவுமே என் நண்பன் தாண்டா .....பணமா நட்பை முடிவூ செய்ய போகுது ....முட்டாள் ....சொல்லிட்டே போய் இருக்கலாம் ....."எப்பொழுது எந்த கெட்ட தகவல் வர போகிறது என்று தினமும் தான் பயந்து கொண்டு இருந்தது மட்டும் தெரிந்தாள் அவன் வேதனை படுவான் என்பதால் அதை சொல்லமால் விடுத்தாள் மதுரா .

ஆமா டாடி இப்போ எப்படி இருக்கார் ....அம்மா ,சந்திரா எல்லாரும் நலமா ...."என்றாள் மதுரா .

"எல்லாரும் நல்லா இருக்காங்கடீ ....எல்லாரும் உன்னை ரொம்பவே மிஸ் செய்தாங்க .....உன்னை நேரில் பார்த்தது இல்லை தான் என்றாலும் நீ தான் வாராவாரம் அவங்க கூட பேசிடுவியே .....தே மிஸ் யு எ லாட் டிராகன் ."என்றான் சூர்யா

"ஒகே ஒகே ஒரு நாள் மீட் செய்துடலாம் ....ஆமா இளவரசரின் வனவாசம் முடிந்து விட்டதா இல்லை மீண்டும் தொடருமா ?"என்றாள் மதுரா .

"சும்மா ஒட்டாதே .....அந்த பிரச்சனை எல்லாம் எப்பவோ சால்வ் செய்தாச்சு ....ஆனா உன் கூட நான் இல்லை என்றதும் நீ தான் நிறைய பிரச்சனையில் மாட்டி இருக்கே போல் இருக்கே .....கை ,கால் வைத்துட்டு சும்மா இருந்ததா தானே .....சிங்கத்திற்கு பிரஷ் செய்தே விடுவேன் என்றால் அது கடிச்சு தாணேடீ வைக்கும் ....உனக்கு இந்த வேலை தேவையா ....இந்த லட்சணத்தில் என்னை லூசுன்னு சொல்றே ....நீ தாண்டீ லூசு ..."என்றான் சூர்யா அவள் தலையில் கொட்டி .

"நீ தாண்டா லூசு ..நட்டு போல்ட் கழன்றவன் ...."என்றாள் மதுரா .

"நீ தாண்டீ லூசு "

"நீ தாண்டா "

இவர்கள் இப்படி அடித்து கொள்ள அந்த குழாய் அடி சண்டையை திறந்த வாய் திறந்த படி இருக்க பார்த்து விழித்து கொண்டு இருந்தான் கார்த்திக்


PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 30

அவன் தோளில் கை வைத்த உத்தம் ,"என்ன .....அப்படி பார்க்கறீங்க .....இப்படி அடிச்சிகிறாங்க என்றா .....அது அப்படி தான் ....ரெண்டும் சரியான லாரல் ஹாடி ,டாம் அண்ட் ஜெர்ரி .....உள்ளே நாம போனோம் நாம் காலி .....ரெண்டும் சேர்ந்து நம்மை குதறி வைப்பாங்க .....இது சகஜம் ...கண்டுக்காதீங்க ...."என்றான் .

"அது இல்லை ப்ரோ ...சார் ....பாஸ் ....எவ்ளவோ பெரிய பிசினெஸ் மக்னெட் ...நீங்க இவளுக்கு சரிக்கு சமமாய் ....."என்று இழுத்தான் கார்த்திக் கண்ணால் காண்பதை நம்ப முடியாமல் .

"ரிலாக்ஸ் கார்த்திக் .....எதுக்கு இவ்வளவூ டென்ஷன் ???ஜஸ்ட் கால் மீ ப்ரோ ....சார் ,பாஸ் எல்லாம் வேண்டாமே .......எவ்வளவூ பெருசு கார்த்திக் ???ஒரு ஏழு எட்டு அடி இருப்பேனா ????...நீங்க வேற .....இவ friendடா கிடைத்ததற்கு நான் தான் கடவுளுக்கு நன்றி சொல்லணும் .....அன்றும் இன்றும் மதுராவின் பார்வையில் நான் அவளின் சின்ன தம்பி பிரபு தான் .....என் பணத்திற்கோ எனக்கு என்று இருக்கும் பெயருக்கோ அவள் மதிப்பு தரவில்லை ..... அவளே டென்ஷன் ஆகாம இருக்கா ...நீங்க தான் ரொம்ப குழம்பறீங்க ....ரிலாக்ஸ் கார்த்திக் ...."என்றான் சூர்யா .

"சரிப்ரோ ....எப்படி இந்த பிசாசு கிட்டே மாட்டினீங்க .........பிளாஷ்பேக் என்ன ஆச்சு ?"என்றான் கார்த்திக்

பிரபுவும் ,மதுராவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு தங்களின் காலேஜ் வாழ்க்கை ,மோதல் ,நட்பு பற்றி சொல்ல ஆரம்பித்தனர் .

(ஒரு tortoise கொசுவத்தி சுருள் சுத்தவிடுங்க பா .....)

இடம் :---குன்னூர் -----ஐந்து வருடங்களுக்கு முன்

டைம் மெஷின் ஏறி நாம் இறங்க வேண்டிய இடம் குன்னூரில் உள்ள " குறிஞ்சி கலை கல்லூரி .".புது அட்மிஷன்,வருட விடுமுறை முடிந்து அந்த கல்வியாண்டுக்கான முதல் நாள் கல்லூரி அன்று தான் திறக்க பட்டு இருந்தது .கோ education .(ஐ ஜாலி ).

பல ஏக்கருக்கு பறந்து விரிந்து ,இயற்கை அன்னையின் மடியில் அமைந்து இருந்தது அந்த காலேஜ் .மாணவ மாணவிகளுடன் நாமும் உள்ளே நுழைந்தால் ஒரு மரத்திற்கு சுத்தி நிறைய பேர் நின்று கொண்டு இருந்தனர் .பார்த்தாலே தெரிகிறது அவர்களில் பெரும்பாலானோர் அந்த வருடம் சேர்ந்த புது மாணவ மாணவியர் .ஒஹ்ஹஹ் ராக்கிங் நடக்கிறதோ ....சரி சென்று பார்ப்போம் .

"ஹலோ நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் ....இங்கே என்ன நடக்குது ???/ராக்கிங்கா????"என்றாள் புது மாணவி ஒருத்தி தன் அருகில் இருந்த மற்றொரு சக மாணவியிடம் .

"ராக்கிங் இல்லை என்று தான் மாணவ மாணவியர் ரெப்ரெசென்டடிவ் வார்னிங் கொடுத்துட்டு ,ஒவ்வொருவரும் எது எதில் டாலேண்ட் இருக்குன்னு விசாரித்து cultural டீம் ஹெட் கிட்டே நேம் கொடுக்க சொல்லி இருக்காங்க .....தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் கூட எங்கு எந்த வித காம்பெடிஷன் நடந்தாலும் காலேஜ் சார்பில் அனுப்பி வைப்பாங்க ....சீனியர்ஸ் கிட்டே நோட்ஸ் ,புக்ஸ் வாங்கி கொள்ளவும் ,ஹாஸ்டல் நடைமுறை ,ஏதாவது குறை ,தேவை என்றால் யாரை அணுகுவது ,இங்கு நடக்கும் volunteer ப்ரொக்ராம்ஸ் -ரத்ததான முகாம் ,ஏழை மாணவர்களுக்கு சனி ஞாயிற்றில் வகுப்பு எடுப்பது ,கிளீனிங் ,NCC ,ரெட் கிராஸ்,எல்டர்ஸ் விசிட் ,ஒய்ய்வு பெற்ற ராணுவ வீரர்களின் மறுவாழ்வூ ,மகளிர் சிறுதொழில் பயிற்சி ,மாணவ மாணவியரின் கை பொருட்கள் விற்பனை என்று பல தொண்டு செய்யும் விளக்கமும் கொடுத்தாங்க பா .....ஒவ்வொன்றுக்கும் ஒரு டீம் ஹெட் இருக்காங்களாம் .அவங்க யார் யார் என்று இன்ட்ரோ செய்தாங்க ....வாட்ஸாப்ப் குரூப் இருக்காம் ."என்றாள் அவள் .

(என்னப்பா இது ....அநியாயத்திற்கு நல்லவங்களா ,வல்லவங்கள இருக்காங்க இந்த காலேஜ் பசங்க .....)

அடுத்த அரைமணி நேரத்தில் அந்த கூட்டம் களைந்து விட ,அந்த மரத்தடியில் ரெப்ரெசென்டடிவ் ,டீம் ஹெட் மட்டும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர் .அந்த சமயம் "தல ...தல "என்று கத்தி கொண்டு ஒருவன் ஓடி வந்தான் .

"டேய் !....எத்தனை தடவை சொல்வது இப்படி தலைன்னு கூப்பிடாதே .....மக்கள் டென்ஷன் ஆகிடுவாங்க ....பான்ஸ் கொலைவெறி ஆகிடுவாங்க ..."

"அப்போ பாஸ் ஒகேவா ?"

"இல்லை ...இல்லை ...லீடர் ....இது எப்படி ?

"அடங்குங்க பா ......நாம என்ன கொள்ளை கூட்டமா நடத்தறோம் ...பாஸ் ,லீடேர்னு built up கொடுக்க ????நீ சொல்ல வந்த மேட்டரை சொல்லு ...."

"நம்ம சிவா மேட்டர் தான் பா .....ராதா கிட்டே போய் லவ் சொன்னதற்கு ,ராதாவின் friendஸ் முக்கியமா நம்ம காலேஜ் chairman தூரத்து ரிலேட்டிவ் ரொம்ப பேசி அவமானம் படுத்தி திருப்பி அனுப்பியிருக்காங்க ."என்றான் அவன் .

"அடச்சே இதுங்களுக்கு இதுவே வேலையா போச்சு .........எப்ப பார்த்தாலும் அடிச்சிக்க வேண்டியது ...ஒரு லவ்ன்னு நம்ம உயிரை வாங்க வேண்டியது ....மீண்டும் முடிக்க வேண்டியது .....இதுங்களுக்கு நாட்டாமை வேலை பார்த்தே நம்ம ஆயுசு முடிஞ்சுடும் போல் இருக்கு ."என்று அலுத்து கொண்டது ரெப்ரெசென்டடிவ் .

"அது சரி லீடர் ....முறைக்காதே ....வாய் தவறி வந்துடுச்சு .....chairman உறவுனா அதுக்குன்னு எது வேண்டும் என்றாலும் பேசி விடலாமா என்ன .....இதை விட கூடாது ......"என்றான் ஒருவன் .

"தேவை இல்லாத வேலை ....சிவா ,ராதா ரெண்டு பெரும் பேசி தீர்த்துக்கட்டும் ...நாம் இதில் நுழைய வேண்டாம் ....."

"போ பாஸ் .....மாணவர்களுக்கு நடுவே chairman ,அட்மின் என்று உறவு கொண்டாடிட்டு பிரச்சனை கிளப்புவாங்க ..நாம அமைதியா இருக்கணுமா என்ன .....'குறிஞ்சி தண்டெர்ஸ் 'கேங் என்றால் சும்மாவா ???நம்ம பவர் காட்டணும் .....இனி யாருக்காவது சீன் போட நினைச்சாலே அல்லு உட்டுரனும் ....."என்றான் ஒருவன் .

"தோ ...அது தான் chairman உறவு ......"என்றான் கம்பளைண்ட் செய்தவன் .

"எதை வைத்து டா சொல்றே ????"என்றாள் ஒருத்தி .

"நம்ம பசங்க இல்லை பொண்ணுங்க ல யாரு காரில் வந்து இறங்க போறாங்க ????....சீன் பார்ட்டி ...chairman ரிலேட்டிவ்ன்னு பந்தா ......பாரு பார்க்கவே திமிர் ,பந்தா ,அலட்டல் எல்லாம் தெரியுது ."என்றவன் கை காட்ட chairman ரிலேட்டிவ் என்று குறிப்பிடப்பட்டவர் போனில் யாருடனோ பேசி கொண்டே வந்து கொண்டு இருந்தார் .

ரெப்ரெசென்டடிவ் விசில் மூன்று முறை விசில் அடித்தும் ,போனிலேயே வந்தவரின் கவனம் இருந்தது .கவனிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

"அடங .....போய் டோல்ல்கேட் போட்டு ராஜமரியாதையோடு கூட்டி வாங்க ...."என்று ரெப்ரெசென்டடிவ் சொல்ல நான்கு பேர் புது நபரை நோக்கி சென்றனர் .

முன்னே சென்று கை நீட்டி தடுக்க ,போனில் பேசியவர் ,"பிறகு பேசறேன் அப்பா ....பை "என்று அழைப்பை துண்டித்து ,"யெஸ் வாட் கேன் ஐ டூ போர் யு ஆல் ?"

"தோ டா ராபர்ட் கிளைவ் ......எலிசபெத் ராணியோடு வாரிசு ....வாயை திறந்தா இங்கிலிஷ் தான் வரும் போலெ .....உலகத்தில் எங்களுக்கு பிடிக்காதது இங்கிலிஷ் .....தமிழ் தெரியும் தானே ....தமிழில் பேசு ....தமிழ்நாட்டில் தானே இருக்கே ....."

"எங்க லீடர் வர சொன்னாங்க .....வந்து மரியாதையையா பேசிட்டு ...நீ செஞ்சு வச்சு இருக்குற வேலைக்கு மன்னிப்பு கேட்டுட்டு பொழைச்சி போ ...வந்தோமா ,படிச்சோமான்னு இல்லாமா இது எல்லாம் என்ன வேலை ?????"என்றாள் ஒருத்தி

"யார் உங்க லீடர் ?"

"அதோ அங்க மரத்துக்கு கீழே இருக்காங்க ....வா "என்று இழுக்காத குறையாய் இழுத்து சென்று அவர்களின் லீடர் முன் நிறுத்தினார் .

"லீடர் நீங்க சொன்னா மாதிரி கூட்டிட்டு வந்துட்டோம் ...."என்று அறிவிக்க லீடர் நிதானமாக திரும்ப ,திரும்பிய லீடர் ரை கண்டு இழுத்து வரப்பட்டவர் அதிர்ந்து ,திகைத்து ,ஸ்தம்பித்து நின்றார் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லீடர் என்றதும் ,"யாரோ ஒரு ரவுடி ,காலேஜ் படிக்கச் என்று வந்து விட்டு சீட் தேய்ப்பவன் ' என்று நினைக்க ,திரும்பியதோ ஒரு இளம் பெண் .....அதுவும் மிகவும் அழகான இளம் பெண் .அந்த பெண்ணின் பார்த்த மறுநொடி மின்சாரத்தால் தாக்கபட்டவன் போல் நின்றான் சூர்யா .

(அட ராக்கிங் செய்ய போவது சூர்யா என்று பார்த்தால் ,சூர்யாவை கூப்பிட்டு ராக்கிங் செய்வது மதுராவா ?????)

அனுமதி பெறாமலே அந்த பெண் அவன் இதயத்தை ஆக்ரமித்து கொண்டாள் .லவ் அட் 1ஸ்ட் சைட் என்பதில் நம்பிக்கை இல்லாதவனை அடிமை படுத்தி இருந்தது காதல் .யெஸ் சூர்யா இஸ் இன் லவ் .

1942 லவ் ஸ்டோரியில் அனில் கபூர் மனிஷா கொய்ராலாவை பார்த்ததும் பாடும் பாடல் இவன் மனதில் ஒலிக்க ஆரம்பித்தது .

இந்த பெண்ணை பார்த்த போது ,இந்த பெண் எனக்கு
மலரும் புது ரோஜாவை போல்
ஒரு கவிஞ்சனின் கற்பனை போல்
சூரியனின் அதிகாலை ஒளியை போல்
காட்டினில் ஓடும் மான் போல்
இரவு நிலவு ஒளியை போல்
மென்மையான வார்த்தை போல்
கோயிலில் சுடர்விடும் தீபம் போல்----எனக்கு தோன்றுகிறாள்

காலையின் அழகினை போல்
பனிக்கால சூரிய ஒளி போல்
புல்லாங்குழலின் இன்னிசை போல்
வண்ணங்களின் மொத்த கலவை போல்
திராட்சை கொடியினை போல்
அலைகளின் அசைவு போல்
குளிர்ச்சியான பனி காற்றினை போல்---எனக்கு தோன்றுகிறாள்

காற்றில் ஆடும் இறகு போல்
பட்டு நூல் போல்
தேவதையின் மெல்லிசை போல்
சந்தனத்தின் நறுமணத்தை போல்
பதினாறு விதமான அணிகலன்கள் போல்
புத்துணர்ச்சி தரும் மழை போல்
மென்மையாக பரவும் போதை போல்---எனக்கு இவள் தோன்றுகிறாள்


என்று பாடி முடிக்க ஷாருக் கான் போல்காதல் கொண்ட மனம் ஊட்டி ட்ரெயின் மீது மனம் ஏறி ,"

ஒறு பார்வையிலே என்னை உறையவைத்தாய்
சிறு புன்னகயல் என்னை உருகவைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்
நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும் என்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ....


என்று பாடி கொண்டு இருந்தது .

ஹலோ .....மிஸ்டர் ....ஹலோ ...."என்று பலமுறை அழைத்தாள் மதுரா .

பதில் வந்தால் தானே ....அவன் தான் சிறகு இல்லாமல் வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறானே .

"சார் "என்று மதுரா கத்தியே விட ,"யெஸ் "என்றான் சுயநினைவுக்கு வந்து அவன் .

"நீங்க ஒகே தானே ....உடம்பு ஏதாவது முடியலையா என்ன ...ஏதாவது உதவி வேண்டுமா ?"என்றாள் மதுரா .

'யெஸ் நீ தான் இனி என் மூச்சின் கடைசி காலம் வரை வேண்டும் '

"சார் ...ஏதாவது பேசுங்க ..."

'ஐ லவ் யு '

"பாஸ் ...கொஞ்சம் உட்காருங்கோ ....என்ன ஆச்சி உங்களுக்கு ?....ஏய் என்ன செய்து வைத்தீங்க .....அடிச்சிடீங்களா என்ன ?"என்றாள் மதுரா தான் தோழர் ,தோழியரிடம் .

"ஏய் இல்லவே இல்லை பா ....கை எல்லாம் வைக்கலை ....கிண்டல் தான் செய்தோம் ....."

"ஒருவேளை பேய் பிடிச்சிகிச்சோ ?"என்றாள் ஒருத்தி பயந்தவளாய் .

"இல்லைன்னா ஒரு வேலை மெண்டல் ஹாஸ்பிடல் கேஸ் சா ?"என்றாள் மற்றொருத்தி .

அவனுக்கு பேய் தான் பிடித்து இருந்தது ,அழகான மோஹினி பேய் மதுரா என்ற பெயர் கொண்ட பேய் .அவனுக்கு மூளை குழம்பி தான் போனது ,மதுரா என்ற பெண்ணை பார்த்த அன்று .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உனக்கு தெரியுமா கார்த்திக் ....இவன் இருந்த நிலையை கண்டு இவன் பைத்தியம் என்றே என் கேங் முடிவு செஞ்சுட்டாங்க ."என்றாள் மதுரா கார்த்திக்கிடம் இன்று .

கார்த்திக் சூர்யாவை அதிர்ந்து பார்க்க ,அவனோ புன்னகையுடன் மதுராவையே கண்களால் ரசித்து கொண்டு இருந்தான் .கார்த்திக்கின் மூளையில் அபாய மணி அடித்தது .அன்று போல் இன்றும் சூர்யாவின் நிலையை அறியாதவளாய் நடந்ததை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள் மதுரா .

"சார் ......என்ன ஆச்சு சார் உங்களுக்கு ?"அவனின் ஆடை ,அவன் கம்பீரம் தானாகவே மரியாதையாக பேச வைத்தது மதுராவை .

"நத்திங் ...."

"உங்க பெயர் பிரபு தானே ? நீங்க chairman ரிலேட்டிவ் வா ?"என்ற மதுராவின் கேள்விக்கு பூம் பூம் மாடாக தலை ஆட்டினான் சூர்யா .அவன் எங்கே இவள் பேசுவதை கவனித்தான் ???அவன் கவனம் எல்லாமுமே அவளின் அழகில் அல்லவா லயித்து கிடந்தது ....அந்நேரம் மதுரா எருமைமாடு ஏரோபிளேன் ஓட்டுது என்று கூறி இருந்தால் கூட ஆமாம் சூப்பர்ரா ஓடுதுன்னு ஜால்ரா அடித்து இருப்பான் .

மதுராவிடம் சிவா ராதா விஷயத்தை கூறிய நண்பனும் பெயரை தவறுதலாக மாற்றி தான் கூறி இருந்தான் . அதனால் சூர்யா --பிரபுவாக தான் மதுராவுக்கு பரிச்சயம் ஆனான் .பிரபு என்றதும் அடைமொழியாக "சின்ன தம்பி "இணைந்து விட்டது .சூர்யாவும் மதுரா கேட்பதை கவனிக்காமலே அதை ஒத்து கொண்டு இருந்தான் .

"சார் ....நீங்க சிவா ராதா விஷயத்தில் இன்வோல்வ் ஆகாதீங்க .....அவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலை தான் .இன்று சண்டை போடுவாங்க ...நாளை சேர்ந்துப்பாங்க .....இன்வோல்வ் அகறவங்க தான் லூஸாகி நிற்பாங்க ....அதை சொல்ல தான் கூப்பிட்டோம் ...."என்றாள் மதுரா புன்னகையுடன் .

"சரி ....நீங்க சொல்லிட்டா அப்பீல் ஏது ???/கண்டிப்பா இன்வோல்வ் ஆக மாட்டேன் ....ஆமா உங்க பெயர் ?"என்றான் சூர்யா .

"ஐம் மதுராக்ஷி சங்கரன் ....பி .எஸ் .சி .கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் வருடம் ?நீங்க ?"என்றாள் மதுரா .

அவன் பதில் சொல்வதற்குள் சிவா ராதாவுடன் அங்கு வந்து சேர்ந்து ,"ஏய் ...என்னவோ ராதா friend படுத்தி எடுக்கறீங்க என்று நியூஸ் வந்துச்சு .....நீ ஏண்டீ இதில் இன்வோல்வ் ஆகறே "என்றாள் சிவா என்கிற சிவசங்கரி .

"பாருங்க ...நான் சொன்னேனா இல்லையா ......நீங்களே உங்க friend கிட்டே சொல்லுங்க நாங்க உங்களை படுத்தியா எடுத்தோம் .?"என்றாள் மதுரா .

"ஏய் யாருடீ இது ....இவரை ஏன் என் friend என்கிறாய் ?"என்றான் ராதா என்கிற ராதாகிருஷ்ணன் .

(ஏய் ஹனி ...போதும் கடிக்காதே .....)

"இவர் தானே உங்க friend ?.....chairman ரிலேட்டிவ் ?"என்றாள் மதுரா .

"ஐயோ லூசு மதுரா .....இவர் யாருனே எனக்கு தெரியாது ...இப்போ தான் பார்க்கிறேன் ."என்றான் ராதாகிருஷ்ணன்

"டேய் நீ தானேடா இவர் தான் ராதாவின் நண்பன் என்று கை காட்டினே ?"என்று முதன் முதலில் கம்பளைண்ட் செய்தவனை கேட்டாள் மதுரா .

"ஹி ஹி ஹி ....மதுரா அது வந்து சார் காரில் வந்து இறங்கினாரா ....பார்க்க அப்படியே பெரிய இடத்து பையன் போல் இருந்தாரா .....அதான் இவர் தான் chairman ரிலேட்டிவ்வாக இருப்பார் என்று நினைத்து ...."என்று தலையை சொரிந்து நின்றான் அவன் .

"போடாங் .....உன் நினைப்பில் அனகோண்டா வந்து கொத்த ....சாரி ஜி ...உங்களை இவன் தோஸ்து என்று நினைத்து தான் .....ஆமா நீங்க யாரு ?"என்றாள் மதுரா .

மீண்டும் சூர்யா பதில் சொல்வதற்குள் ,"ஏய் அதான் பா நார்த் இந்தியன் ஒருவர் MBA சேர போவதாக நம்ம கிரி சொல்லிட்டு இருந்தானே ...அந்த MBA ஆள் இவர் தான் போல் இருக்கு ...."என்றான் ராதாகிருஷ்ணன் .

"வெல்கம் டு அவர் காலேஜ் சீனியர் ....."என்ற மதுரா கை நீட்ட அவளின் கை பிடித்து குலுக்கினான் அந்த கல்லூரியை விலைக்கு வாங்க வந்த தொழிலதிபர் சூர்யா பிரதாப் ரத்தன் சிங் .

(எவ்வளவூ காலத்திற்கு தான் சீனியர் ,ப்ரோபஸ்ஸோர் ,சேர்மன் ரிலேட்டிவ் என்று படிப்பது ???அதான் புதுசா காலேஜ் வாங்க வந்ததாக BUILT UP .ஹி ஹி நோ அழுகின முட்டை .)

காலேஜ் வாங்க வந்தவனை வாங்கி விட்டாள் அந்த பெண்பாவை.கல்லூரியை விலைக்கு வாங்க வந்தவனை மாணவன் ஆக்கி விட்டது அவன் மதுராவின் மேல் கொண்ட காதல் .அடுத்த ஆறு மாதத்திற்கு மதுராவிற்காகவே தான் வாங்க வந்த கல்லூரியில் மாணவனாகி மதுராவின் சிறந்த நண்பன் ஆனான் .இவனுக்கு காவலாக வந்து சேர்ந்த உத்தம் ,இவனின் நண்பனாக வந்து மதுராவின் சகோதரன் ஆகி போனான் .

"இது தான் பா எங்க பிலாஷுபாக் .....சீனியர் இவன் .....அது தெரியாமல் குழப்பத்தில் இன்ட்ரோ ஆகி சிறந்த நண்பன் ஆகிட்டான் ."என்றாள் மதுரா .

"இது எப்போ நடந்தது ?"என்றான் கார்த்திக் .

"ஒரு ஐந்து ஆறு வருஷம் இருக்கும் ....நான் bsc மூன்றாம் ஆண்டு படிக்கும் போது....ஏண்டா கேட்கிறே ?"என்றாள் மதுரா .

"நீ எந்த அளவூ லூசா இருக்கே என்பதை தெரிஞ்சுக்க தான் ...."என்றான் கார்த்திக் .

"ஏய் என்னடா ....."என்றாள் மதுரா ஒன்றும் புரியாமல் .

PENANCE WILL CONTINUE....
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 30(1)

"நீ எந்த அளவூ லூசா இருக்கே என்பதை தெரிஞ்சுக்க தான் ...."என்றான் கார்த்திக் .

"ஏய் என்னடா ....."என்றாள் மதுரா ஒன்றும் புரியாமல் .

View attachment 2504963a75175e001580fc7fac3505de.jpg

"நீ சொல்லும் வருடத்தில் இவர் தன் தந்தையின் தொழிலில் இறங்கிட்டார் ...அதுவும் அமெரிக்காவில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் ---உலகின் தலை சிறந்த ,முதல் இடத்தில உள்ள யூனிவர்சிட்டியில் பட்டம் பெற்ற பிறகு .....அங்கு படித்து பட்டம் பெற்றவர் தான் உன் காலேஜ்ஜில் படிக்கச் வந்தார் என்பது மூளை உள்ள யாருக்குமே ஒத்துவராத கதை ....என்ன ஏது என்று விசாரித்து வை ....எப்போ கிளம்பரியோ அப்போ சொல்லு ...நான் வெளியே வெயிட் செய்யறேன் ....சாரி பாஸ் ...எனக்கு மதுரா முக்கியம் ...."என்ற கார்த்திக் உத்தமோடு வெளியே சென்று விட்டான் .

அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தாள் மதுரா . சூர்யாவை திரும்பி பார்த்தார் போல் அமர்ந்த மதுரா ,"அவன் சொல்வது எல்லாம் உண்மையாடா ....."என்றாள் மதுரா

"உண்மை தாண்டீ ..."என்றான் சூர்யா அவள் கைகளை பிடித்து கொண்டு .

"ஏன் ?"

"உனக்காக தான் ....உன்னை பிரிய முடியாமல் தான் ....என் டாடி தான் அந்த காலேஜ் வாங்க போவதாக இருந்தது ....மம்மிக்கு உடம்பு சரி இல்லை என்றதும் என்னை போக சொன்னார் ....வேண்டா வெறுப்பாக தான் வந்தேன் ....வந்த இடத்தில உன்னை பார்த்ததும் கம்ப்ளீட் பிளாட் ஆகிட்டேன் .....நீயும் உன் நண்பன் பேச்சை நம்பி என்னை "பிரபு ",mba படிக்கச் வந்தவன் என்று முடிவூ செய்துட்டே ....அதை மாற்ற தோன்றவில்லை ....உன்னுடன் இருக்க ,உன்னுடன் படிக்கச் உன்னை பற்றி தெரிந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் என்று அதை யூஸ் செய்துட்டேன் ....உன்னோடு இருந்த அந்த 6 மாசம் கோல்டன் டைம் ஆப் மை லைப் மதுரா ....எனக்குமே இது உண்மையான லவ் தானே இல்லை வெறும் இனக்கவர்ச்சியான்னு தெரிய வேண்டி இருந்தது .....உன்னை மிஸ் செய்ய முடியலை ....அதான் ....உனக்காக பிரபுவாகவே இருந்துட்டேன் .......உன் பர்த்டே அன்னிக்கு ப்ரொபோஸ் செய்தேன் ....நீயும் மறுத்துட்டே .....அதன் உன்னை கன்வின்ஸ் செய்வதற்குள் டாடியை கொல்ல பார்த்தாங்க .....எனக்கும் உன் மறுப்பு ரொம்பவே ஹுர்ட் செய்துடுச்சு .....அதான் சொல்லமா கொள்ளாம கிளம்பிட்டேன் ....ஆனா விட்டு போய் இருக்க கூடாது .....உன்னை கன்வின்ஸ் செய்து இருக்கனும் ....பைத்தியகாரன் மாதிரி உன்னை இழந்துட்டேன் ......"என்றான் சூர்யா ஜன்னலின் அருகே சென்று நின்று வெளியே பார்த்தவாரு .

"எதிலுமே நான் தோத்தது இல்லை ....ஆனா வாழ்க்கையில் தோற்ற எனக்கு ..உன்னை பேஸ் செய்யும் தைரியம் இல்லை ...நான் திரும்பி வருவதற்குள் நிறைய நடந்து போச்சு ......ஒரு வருஷத்தில் டாடியும் எனக்கு மேரேஜ் ஏற்பாடு செய்துட்டார் .... அவர் கொடுத்த வாக்கினை காப்பாற்ற நான் திருமணம் செய்யும் நிலை வந்து விட்டது ....உன் சம்மதமும் இல்லை என்னும் போது உன்னை வருத்த எனக்கு இஷ்டம் இல்லை ...காதல் தானாக வர வேண்டும் .....உன்னை போர்ஸ் செய்ய மனம் இல்லை ...எங்கே உன்னை வருந்தும் படி செய்து விடுவேனோ என்று தான் மேரேஜ்க்கு ஒகே சொல்லிட்டேன் .....எங்கே வரம்பு மீறி விடுவேனோ என்ற பயம் ....சாரி மதுரா ..."என்று கண்கள் கலங்க கண்ணை மூடி ஜன்னலில் தலை சாய்த்து பேசி கொண்டு இருந்தான் சூர்யா .

View attachment Ram Charan.jpg

"மன்னிச்சுடு மதுரா .....உன் கிட்டே எல்லாம் சொல்லி இருக்கணும் .....சொல்ல தைரியம் வரலை ....சாரி .....அப்போ தைரியம் இல்லை ....இனி நீ இல்லாமல் வாழ முடியாது மதுரா ....என்னை திருமணம் செய்து கொள்கிறாயா ?உன்னை என் கடைசி மூச்சு உள்ளவரை உயிராய் பார்த்து கொள்வேன் ....எனக்கு உன் கொள்கைகள் தெரியும் தான் ....ஸ்ரீராமன் போல் ஒருவன் கணவனாக வர வேண்டும் என்று என்னிடமே சொல்லி இருக்கிறாய் .....அப்போ ஸ்ரீராமனாக இருந்த போது நீ ஏற்று கொள்ளவில்லை .இப்போ நான் ஸ்ரீராமன் இல்லை தான் .....ஆனால் உன்னை மட்டுமே விரும்புகிறேன் மதுரா அன்றும் இன்றும் உனக்கான என் காதல் அப்படியே தான் இருக்கிறது ....ப்ளீஸ் எனக்கு இன்னொரு சான்ஸ் கொடு மதுரா . "என்றான் சூர்யா

வெகு நேரம் மதுராவிடம் இருந்து பதில் வராமல் போகவே திரும்பியவன் ,"மதுரா !"என்று அலறியப்படி அவளிடம் ஓடினான் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுரா மீண்டும் மயங்கி இருந்தாள் .அவள் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது .

"என்னடி ஆச்சு ....கண்ணை திற ....மதுரா கண்ணை திற ...."என்று அவள் கன்னத்தில் தட்டியவன் அவள் விழிக்காமல் போகவே ,தண்ணீர் தெளித்து பார்த்தான் .அப்பொழுதும் அவள் கண் விழிக்கவில்லை என்றதும் அவளை கையில் தூக்கி கொண்டு வெளியே ஓடினான் .

மதுராவை தூக்கி கொண்டு புயல் என அவன் வருவதை கண்ட கார்த்திக்க்கும் ,உத்தமும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று அவன் பின்னால் ஓடினார்கள் பயத்துடன் .

"என்ன ஆச்சு சூர்யா ....."என்றான் கார்த்திக்

"தெரியலை ...நான் தான் பேசிட்டு இருந்தேன் ....திரும்பி பார்த்தா மயங்கி கிடக்கா .....மூக்கில் இருந்து ரத்தம் வழியுது .....தண்ணீர் தெளிச்சு கூட பார்த்தேன் .....மயக்கம் தெளியலை ....உத்தம் டாக்டருக்கு போன் செய் .....நம்ம ஹோச்பிடலில் உள்ள specialist எல்லோரும் அங்கே இருக்கனும் ......கெட் தி கார் ரெடி ...."என்றவன் உதறிய கை ,கால் ,பதறிய இதயத்தை வெளிக்காட்டாமல் அவளுக்காக கலங்கி கொண்டு இருந்தான் உள்ளுக்குள் .

(என்னப்பா நடக்குது இங்கே ....அங்கே ஒருத்தன் முத்தம் கொடுத்தே இவளை மயங்க வைத்தான் ...இங்கே இவன் ப்ரொபோஸ் செய்தே மயங்க வைத்து விட்டான் .....இந்த பிள்ளையும் அடிக்கடி மயங்கி மயங்கி விழுது .....வாழ்வே மாயம்மா,பாலைவன சோலைகளா ...இல்லை நெஞ்சிருக்கும் வரை யா ?...சுயவரம் மாதிரி ஒரு பெண்ணிற்கு இத்தனை மாப்பிளை வரும் போதே நினைத்தேன் ..... )

மதுராவை தூக்கி கொண்டு முன்புற வாசலுக்கு சூர்யா விரைய ,உத்தம் ஏற்கனவே போனில் சொல்லி இருந்ததால் கார் ஒன்று அந்த building வாயிலில் வந்து நின்றது.உத்தம் டிரைவர்ரை விலக சொல்லிவிட்டு அவன் டிரைவர் சீட்டில் அமர்ந்தான் .கார்த்திக் முன்புறம் ஏறிக்கொள்ள ,மதுராவின் தலையை தாங்கியபடி பின்னால் ஏறினான் சூர்யா .

இதனை அந்த அலுவலகம் திகைத்து பார்த்து கொண்டு இருந்தது .ஏற்கனவே சூர்யாவை மதுராவை அடிக்க தூரத்தியது வைரல் நியூஸ் போல் அந்த காம்பௌண்ட்டில் பரவி கொண்டு இருந்த வேளையில் ,சூர்யா மயங்கிய பெண் ஒருத்தியை தூக்கி கொண்டு பதட்டத்துடன் ஓடியது மேலும் பல கதைகளை பரவ செய்தது .அதில் ஒருவன் தனியாக சென்று யாருக்கோ அழைத்து விஷயத்தை சொன்னது மட்டும் இல்லாமல் ,ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த விடீயோக்களை பேசிய நபருக்கு அனுப்பி வைத்தான் .

அவன் அனுப்பி வைத்த நபர் விஜய கருணாகரன் .முதல் விடியோவை கண்டு கொதித்து போன விஜய் ,இரெண்டாவது வீடியோ கண்டு பயந்து போனான் .அடுத்த நொடி சூர்யாவின் மல்டி speciality ஹாஸ்பிடல் நோக்கி சீறி பாய்ந்தது அவன் கார் .

இங்கு உத்தம்மை விரட்டி கொண்டு இருந்தான் சூர்யா .சென்னை ட்ராபிக்கில் அவனும் தங்கள் முடிந்த அளவூ விரைவாக தான் ஒட்டி கொண்டு இருந்தான் என்றாலும் சூர்யாவிற்கு எவ்வளவூ வேகம் எடுத்தாலும் பத்தவில்லை .கார்த்திக் உத்தம் டிரைவிங் ஸ்பீட் கண்டு ,வாய் உலர்ந்து சீட் உடன் சீட்டாக புதைந்து அமர்ந்தவாறே பவானிக்கு போனில் அழைப்பு விடுத்து கொண்டு இருந்தான் .

ஒரு பார்ம் ஹவுஸ்குள் அப்பொழுது தான் நுழைந்து கொண்டு இருந்த பவானி அந்த அழைப்பினை ஏற்காமல் இருந்தார் .அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்து இருந்த வெற்றி மாறன் ,எழுந்து நின்று ,"வா பவானி ...எப்படி மா இருக்கே ?"என்றார் புன்னகையுடன் .

"நல்லா இருக்கேன் சார் ...நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க ?"என்றார் பவானி .

"எல்லோரும் ஆண்டவன் அருளில் மிக நன்றாகவே இருக்கோம் .....நீ இந்த சார் ரை விட மாட்டியா ???? எத்தனை தடவை சொல்வது????"என்று செல்லமாக கோபித்து கொண்டார் .

பவானி வெறும் புன்னைகையை பதிலாக கொடுக்க ,"உன்னை திருத்த முடியாது ...இது ரகு தானே ...என்னமா வளர்ந்துட்டான் ....சின்ன வயசுல பார்த்தது ......காலம் எவ்வளவூ வேகமா ஓடுது இல்லை ......ஹ்ம்ம்ம் ....உன் புருஷன் எப்படி இருக்கார் ??????."என்றார் வெற்றிமாறன் .

"அவருக்கென நல்ல தான் இருக்கார் ....எங்க உயிரை வாங்கிட்டு ....."என்றார் பவானி கடுப்போடு .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என்ன பவானி இது ????சங்கரன் பத்தி இப்போ தான் உனக்கு தெரியுமா என்ன ?????அவர் நல்ல மனசுக்காரர் .....வெள்ளந்தி ....என்ன கொஞ்சம் தான் மட்டுமே குடும்பத்தில் எல்லா முடிவையும் எடுக்கணும் ,எல்லோரும் அதற்கு கட்டுப்படணும் என்று எதிர் பார்ப்பார் ......நிறைய குடும்பத்தில் இது தானே நடக்குது .....உன்னை விட மோசமான நிலையில் தான் பல மனைவிகள் இருக்கிறார்கள் .....சரி எல்லாம் சரி ஆகிடும் ....வா வா அம்மா உனக்காக ரொம்பவே ஆவலா காத்துட்டு இருக்காங்க ...."என்றவர் மாடியில் இருந்த ஒரு அறைக்குள் அழைத்து

இவர்கள் உள்ளே நுழைய ,எழுந்து நின்ற சிவகாமி தன் இரு கைகளையும் நீட்டி ,"பவா ....வாடா கண்ணா "என்றார்

ஓடி சென்ற பவானி அவரை அணைத்து கொண்டு கண் கலங்கினார் ."எப்படி இருக்கீங்க ...."என்றார்

"எனக்கு என்னடா கண்ணா குறை ?ரொம்ப நல்லா இருக்கேன் ....நீ எப்படி இருக்கே ....இத்தனை வருடம் பார்க்காமலேயே இருந்துட்டியே ......இப்பாவது என்னை பார்க்க வரணும் என்று தோணிச்சே ......"என்றார் சிவகாமி பவானியை அணைத்தபடி .

சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்த படி பேசாமல் அப்படியே நின்றனர் ."ஹ்ம்ம் உன்னை சொல்லி என்ன பிரயோஜனம் ????நாங்களும் உனக்கு சங்கரனோடு திருமணம் நடந்ததும் விலகி போனது தப்பு தான் .....சங்கரன் குடும்பம் அவர் அண்ணன் பற்றி தெரியாமல் உன் அப்பா நடத்தி முடித்த திருமணத்திற்கு நீ என்ன செய்ய முடியும் ???அப்பொழுது சிலரை எதிர்க்கும் சக்தியும் எங்களிடம் இல்லையே ....என்னையும் கருவில் இருந்த வெற்றியையும் காப்பாற்றி ,எனக்கு மறுத்திருமணம் செய்து வைத்தது உன் அப்பா என்பது சிலருக்கு தெரிய கூடாது என்றும் தான் விலகி போனேன் ....அப்படியே தொடர்பு விட்டு போச்சு .....உன் அப்பா ,அம்மா இறப்புக்கு கூட நாங்க வரமுடியலை .....விதி எப்படி எல்லாம் சோதிக்கிறது ...இப்பாவது நீ என்னிடம் திரும்பி வந்தாயே ....அதுவே போதும் ....நான் தூக்கி வளர்த்த பெண் .....ரத்த சொந்தம் இல்லை என்றாலும் ,எனக்கு சொந்தம் என்று இருப்பது நீ மட்டும் தானேடீ ....."என்றார் சிவகாமி உணர்ச்சி வசப்பட்டவராய் கண்ணில் கண்ணீர் வழிய .

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 30(2)

கஜேந்திரனால் ஏமாற்ற பட்டு ,நடுத்தெருவில் ஜீவனாம்சமோ ,இருக்க இடமோ இல்லாமல் தொரத்தி அனுப்ப பட்ட சிவகாமியை காப்பாற்றி ,வெற்றிக்கு 10 வயது ஆகும் வரை துணை இருந்தது பவானியின் குடும்பம் தான் .பவானிக்கு இன்னொரு அன்னையாய் மாறியது சிவகாமி.வெற்றி மாறனை தூக்கி வளர்த்தது பவானி .சிவகாமியின் வாழ்வு அடிகேசவனோடு தொடங்கவும் ஏற்பாடு செய்தது பவானியின் குடும்பம் .

பாட்ஷா படத்தில் வரும் டயலொக் ,"கடவுள் நல்லவர்களை ரொம்ப சோதிப்பான் ,ஆனா கை விட மாட்டான் ."அது சிவகாமியின் வாழ்வில் நடந்தது .கஜாவிடம் சிக்கி வாழ்வை இழந்தவருக்கு ஆதிகேசவன் என்ற உண்மையான ஆண்மகன் கணவனாய் வந்து வாழ்வை வசந்தமாக்கினார் .கடவுள் சோதித்தார் ஆனால் கை விடவில்லை .

"வா ...உட்காரு ....இவர் தெரியும் தானே ....ஞாபகம் இருக்கா ...வெற்றியின் அப்பா ஆதி என் கணவர் ."என்றவரை கண்டு ஆதியும் ,வெற்றியும் புன்னகை புரிந்தனர் .

வெற்றிக்கு உயிர் கொடுத்தது வேண்டும் என்றால் கஜாவாக இருக்கலாம் ஆனால் அவர் தந்தை யார் என்று கேட்டால் அடுத்த நொடி அந்த குடும்பத்தின் பதில் ஆதி என்பது தான் .சில சொந்தங்களை ரத்த சம்பந்தம் நிர்ணயிப்பது இல்லை .

"சொல்லு எல்லோரும் எப்படி இருக்கீங்க ......."என்றார் சிவகாமி உபசரிப்புகளுக்கு பின் .

"நல்லா இருந்தா உங்க உதவி தேடி ஏன் அத்தை வர போறேன் ?"என்றார் பவானி .

"எதை சொல்றே ...சோனா வெறி பிடித்து உன் மகளை torture செய்ததை சொல்றியா ...இல்லை அக்ரீமெண்ட் விஷயமா ....இல்லை சுமனா ...இதில் எது ?"என்றார் சிவகாமி அலட்டி கொள்ளாமல்

அதிர்ந்து தான் போனார்கள் பவானியும் ,ரகுவும் ."உங்களுக்கு எப்படி ....."என்றார் பவானி திகைப்பு நீங்காதவளாக .

"அநியாயத்தை எதிர்க்க எப்பொழுதுமே கடவுள் நேரில் வர மாட்டார் பவா ....சில மனிதர்கள் தெய்வமாய் இருந்து தான் இந்த வேலையை செய்வார்கள் .....உன் குடும்பம் என்னை மனதளவில் உடையாமல் ,வாழ்க்கை வெறுத்த சமயத்தில் அடைக்கலம் கொடுத்து ,மறுவாழ்வினை கொடுத்தது போல் ,மரகதம் அக்கா தேவையான பணஉதவியினை ,பக்க பலமாக அவர்கள் பேரன் விஜய் எங்களுக்கு மறைமுகமாக உதவி கொண்டு தான் இருக்கிறார்கள் .....உன் மகளையும் ஒரு வருடமாய் காப்பாற்றுவது விஜய்யும் அவன் நண்பர்களும் தான் ....அவர்களையும் எங்களையும் மீறி தான் உன் மகளை யாருமே நெருங்க முடியும் .....அவளுக்கே தெரியாமல் அவளை சுற்றி பல அடுக்கு காவல் இருக்கும் போது எதற்கு பவானி எப்படி கவலை படுறே .....நாங்க எல்லோரும் இருக்கோம் ...."என்றார் சிவகாமி பவானியின் கைகளை தட்டி கொடுத்தவாறு .

பெருமூச்சு விட்ட பவானி ,"முழு விஷயம் தெரியாது தான் என்றாலும் விஜய் தம்பி ,அவர் நண்பர்கள் ,சூர்யா எல்லோரும் காப்பாற்றுவது இப்போ தான் தெரிய வந்தது .இந்த சோனா ஏன் இப்படி எல்லாம் ....பெண்ணாய் இருந்து இன்னொரு பெண்ணின் வாழ்வை ..........."என்று முகத்தை மூடி அழுதார் .

"ச்சூ ...என்ன பவானி நீ .....அவளை எல்லாம் பெண் என்று சொல்லி பெண்ணினத்தை கேவல படுத்தாதே .....அவ ஒரு psycho ......தானும் வாழாது ,மற்றவர்களையும் வாழவிடாதவள் ....இல்லை என்றால் விஜய் போன்ற உயர்ந்த மனிதன் கிடைத்தும் கண்டவனோடு அலைவளா ????....மதுராவிற்கு எதுவும் ஆக விடமாட்டான் விஜய் அதை மட்டும் மனதில் வை ......."என்றார் ஆதி .

"பிரச்சனையே அது தான் ....சோனாவிடம் இருந்து மதுராவை விஜய்யும் ,சூர்யாவும் காப்பாற்றி விடுவார்கள் .ஆனால் இந்த இருவரிடம் இருந்து என் மகளை எப்படி காப்பாற்றுவேன் ???/கெட்டவர்களாய் இருந்தால் மோதலாம் ....ஆனால் இருவருமே என் மகளின் உயிரை ,மானத்தை காப்பாற்றும் கடவுள் ....."என்றார் பவானி வேதனையுடன் .

"இதில் என்ன இருக்கு ????அவங்க கிட்டே இருந்து மதுராவை காக்கும் அவசியம் என்ன ஏற்பட்டது இப்போ .....எதற்கு இப்படி எல்லாம் பேசறே ?"என்றார் சிவகாமி

"மகளை காப்பாற்றினால் நன்றி கூறலாம் ....வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருக்கலாம் ....தெய்வமாய் கூட வணங்கலாம் ...ஆனால் இதற்காக எல்லாம் மகளையே தூக்கி கொடுக்க முடியுமா என்ன ?????விஜய்யும் ,சூர்யாவும் மதுராவை விரும்பறாங்க .....விஜய் குழப்பத்தில் இருப்பது போல் இருக்கு ....சோனா மனைவியாக ஊர் உலகத்திற்கு முன் இருக்கிறாள் .....சூர்யாவிற்கு அப்படி எல்லாம் தடை இல்லை ....அவனை தடுக்க எங்களால் முடியவில்லை என்பதற்கு பதில் தடுக்கும் எந்த ஒரு வழியையும் அவன் வைக்கவில்லை ...."என்றவர் சூர்யா செய்த ட்ரான்ஸபெர்,மகளுக்கு வேலை போன்றவற்றை சொல்லி முடித்தார் .

"நீ தேவை இல்லாம குழம்பறே என்று தோன்றுகிறது பவா ....ரெண்டு பேரையும் எனக்கு மிக நன்றாகவே தெரியும் .....ரெண்டு பேரும் ஜெம் ஆப் எ பெர்சொன்ஸ் .....ரொம்ப நல்லவங்க .....பெண்களை மதிப்பவங்க ....."என்ற ஆதிதியை நிறுத்தினார் பவானி .

"அவங்க ரொம்ப நல்லவங்க .....எப்படியோ இருந்துட்டு போகட்டும் ....ஆனால் என் மகளுக்கு ரெண்டு பேருமே வேண்டாம் ....."என்றார் பவானி உறுதியாக .

"பவானி !......என்னமா .....இவர்கள் ரெண்டு பேருக்கும் என்ன குறை ????"என்றார் சிவகாமி பவானியின் போக்கு அறியாதவராக .

"குறை எல்லாம் இல்லை ....ஆனால் ரெண்டு பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது .....ஒருத்தருக்கு மனைவி உயிரோடு இல்லை ...இன்னொருத்தருக்கு மனைவி என்றே சொல்ல தகுதி இல்லாதவள் மனைவி ......"என்றார் பவானி .

"இதில் இவர்கள் தவறு என்ன இருக்கு ?"என்றார் சிவகாமி
 
Status
Not open for further replies.
Top