anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"தவறு இவர்கள் மேல் இல்லை ....சமுதாயத்தின் மேல் .....ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் இவர்களுக்கு எந்த பட்டபெயரும் வருவது இல்லை .....ரெண்டாம் தாரம் என்ற பெயர் பெண்ணிற்கு மட்டும் தான் .....உங்களுக்கு ஏற்பட்ட குத்தல் பேச்சுக்களை பார்த்து வளர்ந்தவள் அத்தை நான் .....ஆதி மாமாவை யாரும் விரல் நீட்டி அப்படி சொன்னது இல்லை ...அப்படி சொன்னதை கேட்டு நீங்க எத்தனை முறை கண் கலங்கி நின்று இருந்தீர்கள் என்று கூட இருந்து பார்த்தவள் நான் ....மேடை போட்டு பெண் சுதந்திரம் ,பெண்ணியம் பேசிடலாம் ...ஆனால் இது போன்ற பட்டப்பெயர்கள் என்றும் நீங்குவதில்லை .....இப்போ ஒரு திருமணத்திற்கு சென்றேன் ...மணமகளின் அப்பாவிற்கு முதல் மனைவி இறந்து விட்டு இருக்க ,மனைவியின் தங்கையையே மணந்து இருந்தார் .இதற்கும் அந்த பெண்ணிற்கு முதல் திருமணம் ,மனனமகளை விட 5-6 வயது மட்டுமே அதிகம் ....ஆனால் அங்கு இருந்தவர்கள் அந்த மனைவியை எப்படி அறிமுகம் செய்தார்கள் தெரியுமா ?????இவங்க தான் உயர்திரு ------ரெண்டாம் மனைவி .....மனைவியை இழந்தது அந்த ஆண் ....ஆனால் ரெண்டாம் தாரமாய் மணந்த அந்த பெண்ணுக்கு தான் பட்ட பெயர் ......நீங்க எல்லாம் பட்ட கஷ்டத்தை என் மகள் பட ,அதை பார்க்க நான் தயாராய் இல்லை .....என் மகளுக்கு இவர்களில் இருவரில் யாரை மணந்தும் தியாகம் செய்ய வேண்டிய கடமை இல்லை .....இதனால் என் மகளுக்கு யாரும் சிலையும் வைக்க போவது இல்லை ......"என்றார் பவானி ரௌத்திரமாக .
இதற்கு பதிலை அவர்களால் சொல்ல முடியவில்லை .சமுதாயத்தின் நிதர்சனம் இது தானே ....சமுதாயமும் மக்களும் சில விஷயங்களை தவிர்த்து தேவை அற்ற ஒன்றுக்காகவே போராடுகின்றனர் என்பது தான் உண்மை .
சபரிமலைக்கு 18-60 வயது வரை போகலாம் என்று வாதிடுபவர்கள் ,பெண்களின் மாதவிடாய் காலத்தில் கட்டாய அலுவலக விடுமுறை என்று போராடவில்லை .அனைத்து போது இடங்களிலும் இலவச நாப்கின் என்று போராட வில்லை .பல்வேறு போட்டி தேர்வுகளில் பெண்களுக்கு வயது வரம்பு சலுகை என்று போராடவில்லை .வெளிநாடுகளில் கற்பழிப்பு போன்ற குற்றங்களை விசாரிக்க "ஸ்பெஷல் victims யூனிட் "என்ற போலீஸ் டிபார்ட்மென்ட் ஒவ்வொரு நகரத்திலும் செயல் படும்.அது இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திலும் தேவை என்று போராடவில்லை .ஒவ்வொரு நகரத்திலும் pedhophiles ,sexual offenders லிஸ்ட் கொண்ட வெப்சைட் ,அந்த அந்த தெருவில் வசிக்கும் பெண்கள் தொடர்பான குற்றவாளிகளின் டீடைல் பிரசுரிக்க படுவதில்லை .ஜாதி ,மதம் பார்த்து தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் சில இடங்களில் பதிவு செய்ய படுகிறது .
அரசு அலுவலகத்தில் பணியாற்றும் கணவன்மார்கள் கட்டாயமாக தங்கள் மனைவிக்கு மாதம்தோறும் கை செலவுக்கு பணம் தர வேண்டும் .அப்படி இல்லை என்றால் மனைவி புகார் கொடுத்தால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க படும் .ஆனால் பெரும்பாலான குடும்ப தலைவிகள் இந்த சுதந்திரத்தை பெறுவது இல்லை .மனதிற்குள் மூடி மறைத்து ,வெளியே சொல்ல முடியாமல் புழுங்கி கொண்டு இருக்கும் பெண்கள் தான் அதிகம் .
இது எல்லாம் எவ்வளவூ இன்றியமையாதது என்று புரியாமல் போராடாமல் இருக்கும் இவர்கள் தான் "பேச்சுவாக்கில் "சொல்ல படும் இது போன்ற வார்த்தைகளுக்காக போராட போகிறார்கள் ?? விதவை ,கைம்பெண் ,ரெண்டாம் தாரம் ,மலடி போன்ற சொற்கள் ,குழந்தை இல்லை என்றால் இந்த விரதம் ,அந்த கோயில் என்று பெண்களை மட்டும் அலைக்கழிக்கும் நிலை தான் உள்ளது .சொன்னால் சொல்லி விட்டு போகட்டும் என்ற மனப்பாண்மை அனைவர்க்கும் வந்து விடாது .ஒரு சொல் வெல்லும் ,ஒரு சொல் கொல்லும் என்பது இது தான் .
இதில் பவானியின் குமுறல் நியாயமானது தான் .60 வயதான பின்னும் இது போன்ற அடைமொழிகள் தொடரும் வயதான பெண்களை ,அவர்கள் அறிமுகம் செய்ய படும் விதத்தை இன்றும் கண்கூடாக பார்க்க முடியும் .
சிவகாமியும் இதனை தாண்டி வந்தவர் என்னும் போது ஒரு அன்னையின் குமுறலை எதிர்த்து அவரால் பேச முடியவில்லை .
"புரியுது பவா .....மக்கள் மனம் மாற வேண்டும் .....அதற்கு இன்னும் எவ்வளவூ காலம் ஆகுமோ ...."என்றார் சிவகாமி
"சமுதாயம் எப்படியாவது போகட்டும் ....எனக்கு என் மகள் தான் முக்கியம் அத்தை ..."என்றார் பவானி .
"சரி பவா இதற்கு என்ன செய்ய போகிறாய் ?"என்றார் சிவகாமி .
"அத்தை ...என்னால் எப்போ ,எப்படி ,யாரால் என் மகளுக்கு ஆபத்து வரும் என்று என்னால் ஒவ்வொரு நொடியும் உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ முடியாது .......இந்த மாதத்திலேயே மதுராவிற்கு திருமணம் முடித்து விடலாம் என்று நினைக்கிறேன் .........அதற்கு உங்கள் உதவி வேண்டும் ...அதற்காக தான் வந்து இருக்கிறேன் ."என்றார் பவானி .
"உதவி என்று எல்லாம் ஏன் சொல்கிறாய் .....என்ன செய்ய வேண்டும் என்று சொல்லு ...."என்றார் ஆதி .