All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 29(2)

"எனக்கு தெரியாதுங்க மேடம் .....நடுராத்திரி டெம்போ வரும் ....பெண்களை எங்களிடம் விட்டு போவாங்க...நம்பர் வைத்து . ....ஒரு வாரத்தில் அவர்களை ஏலம் விட வேண்டும் .....ஏலம் போன பெண்களை அவர்கள் சொல்லும் குடோன்நில் விட்டு வருவோம் ....அங்கு உள்ள கன்டைனரில் ஏற்றி துறைமுகம் மூலமாக வெளிநாடுகளுக்கு விற்று விடுவாங்க .....ஹார்போர் வேலை பார்ப்பது நான் இல்லை ....அது வேறு ஒரு ஆள்.நான் வேலைக்கு சேர்ந்தே ஆறு மாசம் தான் ஆகுது .எனக்கு முன் இருந்தவன் ஏதோ ஏமாத்திட்டான் என்று போட்டு தள்ளிட்டாங்க ......எனக்கு வேறு எதுவும் தெரியாது ."என்றான் அவன் .
View attachment 1540788680859.png

"அந்த HARBOUR ஆளை எப்படி பிடிப்பது ????"

"மேடம் ! துறைமுகத்தில் எங்களுக்கு என்றே கோடௌன் இருக்கு .....அங்கு எங்க ஆட்கள் தான் செக்யூரிட்டி இருப்பாங்க .....நேத்து கூட சில பெண்களை அங்கு விட்டு தான் வந்தேன் ...இன்னைக்கு ஒரு ஷிப்மென்ட் கிளம்ப போகுது."என்றான் அவன் .

கமிஷனர் உதவியோடு ,கஸ்டம்ஸ் துறைக்கு தகவல் தரப்பட்டு ,அன்று கிளம்ப இருக்கும் கப்பல்கள் நிறுத்தப்பட்டன .பிடிபட்டவனை உடன் அழைத்து சென்று அந்த கோடௌன் அடையாளம் காணப்பட்டு ,போலீஸ் ,கஸ்டம்ஸ் கூட்டு முயற்சியால் கண்டைனர்களில் அடைக்கப்பட்டு இருந்த பெண்கள் ,10 குழந்தைகள் ,மூன்று பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டன .அனைவர்க்கும் மயக்கமருந்து கொடுக்க பட்டு இருந்தது .சத்தம் வெளியே வராமல் இருக்க .
View attachment 1540788704490.png

அவர்கள் இருந்த இடம் ,நிலைமையை கண்ட ராஜேஸ்வரியின் கண்கள் தானாக நீரை உகுத்தன .பாசி பிடித்த கேன் தண்ணீர் ,உண்ண ,உறங்க ஒரே இடம் ,இயற்கை உபாதைக்கு ஒரு பக்கெட் .இந்த கோராமையை கடவுளால் கூட கண் கொண்டு காண முடியாது .
பெண் கடவுள்களுக்கு கையில் ஆயுதம் கொடுத்து விட்டு ,இப்படி பெண்களை போதை பொருளாக மட்டும் பார்க்கும் இருள் உலக வகிரங்களும் நடக்க தான் செய்கின்றன .12 பெரிய துறைமுகம் ,120 சிறிய துறைமுகம்.இதில் தினமும் வந்து போகும் கண்டைனர் மட்டும் குறைந்தது பல லட்சங்களை தாண்டும் .இந்த அனைத்து கண்டைனர்களையும் செக் செய்து அனுப்புவது என்பது இயலாத காரியம் .பேருக்கு ஒரு கம்பெனியின் கண்டைனர் பார்த்து விட்டு அவர்கள் அனுப்பும் கண்டைனர் 100 என்றாலும் எல்லாம் சரி என்று தான் அதிகாரிகள் கையெழுத்து போடுவார்கள் .
View attachment 1540788740121.png

கண்டைனர் ஸ்கேனிங் என்பது இந்தியாவில் மிகவும் அரிது .அப்படி ஒரு மெஷின் இருக்கிறதா என்பதே கேள்வி .இந்த மெத்தனம் ,லஞ்சம் தானே இரு நூறு மேற்பட்ட மெஷின் துப்பாக்கிகளை நாட்டிற்குள் வர விட்டது .???

துறைமுகத்தின் கதி இது என்றால் நாட்டில் எத்தனையோ லாட்ஜ் ,ரிசார்ட் ,பியூட்டி parlour, highwayகள் ,வேலை தேடி இடம் பெயரும் அடுத்த மாநிலத்து பெண்கள் ,அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து நாட்டினை கெடுக்கும் விஷக்கிருமிகள் என்று .....எங்கு எது நடக்கிறது என்று யாருக்கு தெரிய போகிறது ???

முதல் அமைச்சருக்கு தகவல் தர பட ,மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரோடு ஆலோசனைக்கு பின் அன்று மாலைக்குள் சென்னையில் இருந்த அனைத்து லாட்ஜ் ,ரிசார்ட் ,தங்கும் விடுதிகள் ஒரே சமயத்தில் ரைட் செய்யப்பட்டது .பள்ளி கல்லுரிகளுக்கு பெண்களை காதல் வலையில் ஏமாற்றி விற்கும் கும்பல் பற்றியும் ,சுற்று புறத்தில் கண்காணிப்பு ஏற்பாடு செய்யவும் தகவல் போனது .இந்த ரைட் விஷயத்தால் காப்பாற்ற பட்ட பெண்கள் ,குழந்தைகள் ,சிறார்கள் ,கொத்தடிமைகள் எண்ணிக்கை 100 தாண்டியது .அது மட்டும் இல்லாமல் உடன் போதை மருந்துகள் ,மெஷின் துப்பாக்கிகள் ,சில டைம் bomb ,தமிழகத்தில் பல்வேறு நாசவேலைகளுக்காக வெளி மாநிலங்களில் இருந்து தருவிக்க பட்டு இருந்த சில தீவிரவாதிகளும் பிடிபட்டனர் .ஒட்டுமொத்த தமிழகமும் விஷயம் கேள்வி பட்டு அதிர்ந்து போனது .

இந்த கடத்தல் கும்பலிடம் இருந்து கை பற்ற பட்ட டாக்குமெண்ட்ஸ் ,பென் டிரைவ் மூலம் வெளிநாடுகளுக்கு விற்க பட்ட சில பெண்கள் ,குழந்தைகள் தகவல்கள் மத்திய பெண்கள் நலத்துறைக்கும் ,மத்திய உள்துறை அமைச்சரகத்திற்கும் அனுப்பபட்டு இன்டர்போல் வரை நடவடிக்கை எடுக்க பட்டது .எல்லா ஊடகங்களும் இதை மட்டுமே பிரதானமாக ஒளிபரப்பி கொண்டு இருந்தது .ஒட்டு மொத்த இந்தியாவிலும் இது போன்ற ரைட் நடக்க வேண்டும் என்று ப்ரெசிடெண்ட் அனைத்து மாநிலங்களையும் கேட்டு கொண்டார் .

இந்த ரைட் பற்றிய விஷயங்களை செய்தியில் பார்த்து கொண்டு இருந்த ஒருவன் ,தன் கையில் இருந்த பீர் பாட்டில்லை தூக்கி விசிறி அடித்தார் கஜேந்திரன் . .கோபத்தில் கண்கள் சிவக்க ஏதோ ஒரு நம்பரை அழைத்தார்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர் முனை எடுக்க பட்டதும் ,"எப்படி இது நடந்தது ????ஒரு தகவலும் வரவில்லை ....உங்களுக்கு எல்லாம் மாச மாசம் எதற்கு லட்சக்கணக்கில் கொட்டி கொடுக்கிறேன் ????தவிர கேட்கும் எல்லாவற்றையும் ,பெண்கள் உட்பட அனுப்பி வைத்து கொண்டு தானே இருக்கிறேன் ....பின் என்ன ?????"என்று உறுமினார்

"எங்களுக்கு தெரியாது சார் ....இது நேரிடையாக முதலமைச்சர் ராஜதரங்கனி ,மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஈடுபட்டு உள்ளனர் .உங்களுக்கே தெரியும் முதலமைச்சர் ரொம்ப ஸ்ட்ராயிட் forward பெண்மணி .....கை வெகு சுத்தம் .அவங்க கூட இருக்கும் ஐந்து பேர் மட்டுமே நமக்காக வேலை செய்பவர்கள் .......அவங்களை கூட கண்காணிக்க ஆரம்பித்து விட்டாங்க .....இந்த GST வந்த பிறகு எல்லாருடைய வருமானமும் ,வரியும் ,ஒவ்வொரு பணபரிமாற்றமும் கண்காணிக்க படுகிறது .....காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு செல்ல வேண்டிய கணக்கில் வராத பணம் ,ஹவாலா ,PARALLEL எகானமி என்ற நிழல் உலக பணப்பரிவர்த்தனை எல்லாம் நின்று போய் இருக்கிறது ..... நாம நடத்தி வந்த போலி தொண்டு நிறுவனம் ,அதற்கு வந்த அந்நிய நாட்டு பணம் ,போலி மத்திய உணவு கணக்கு ,போலி scholarship என்று எல்லாவற்றையும் நோண்ட ஆரம்பித்து விட்டனர் . பாதிப்பு உங்களுக்கு மட்டும் இல்லை ...நடிகர்கள் முதல் வரி ஏய்ப்பு செய்யும் எல்லோருக்கும் தான் ....சார் பிடிபட்ட ஆட்கள் ஸ்பெஷல் நீதிபதி முன் ஆஜர் படுத்தி மூன்றே மணி நேரத்தில் விசாரித்து முடித்து உள்ளனர் ....தவிர சப் இன்ஸ்பெக்ட்டர் சுட்டு விட்டு 10 பேர் தப்பி விட்டதாக வேறு சொல்ராங்க ....".என்றது எதிர்முனை பதட்டத்துடன்
View attachment 3312594492.jpg


"சார் ...நம்ம ஆட்கள் யாரும் இதை செய்யலை ....செத்து போன போலீஸ் அதிகாரிங்க கூட எல்லோரும் நம்ம ஆட்கள் தான் .....அவர்களை சுட்டு விட்டு தப்பி விட்டதாக ஜோடனை செய்து ,ஷூட் அட் சைட் ஆர்டர் வாங்கி இருகாங்க .....கணக்கு பண்ணி எல்லாரையும் போட்டு தள்ளிட்டாங்க சார் .....கடைசி வரை தப்பித்து விட்டனர் என்று தான் ரெகார்ட் இருக்கும் .........உங்க பெயர் மட்டும் தான் இந்த ரைடில் வெளியே வரவில்லை .....இது எல்லாவற்றிலும் நீங்களும் இருக்கிறீங்க .....என் கை மீறி போய் விட்டது சார் .....என்னால் இனி எதுவும் செய்ய முடியாது ......எதற்கும் நீங்க வெளிநாட்டிற்கு சென்று விடுவது நல்லது ..."என்றது எதிர்முனை .

கோபத்தில் இருந்தவர் ,இப்பொழுது திணற ஆரம்பித்தார் .தலையை பிய்த்து கொள்ளாத குறை .தீடிர் என்று எல்லா அரசாங்க அதிகாரிகளும் மனசாட்சிக்கு பயந்து ,வாங்கும் சம்பளத்திற்கு மேலாக உழைக்க ஆரம்பித்து விட்டார் இவரை போன்றவர்களின் கதி என்ன ஆவது ????மக்கள் இடையே தவறு செய்வது அரசியவாதிகள் மட்டுமே என்ற பிம்பம் இருக்கும் வரை தான் இவரை போன்றவர்களின் நிழல் உலக அரசாங்கம் நடக்கும் .....சட்டம் இயற்றுவதே அரசு அதிகாரிகள் தான் என்பதும் ,அப்படி இயற்ற படும் சட்டம் ஜெய்ப்பதும் ,சாமானிய மக்களுக்கு நல்லது ஏற்படுத்துவதும் ,இல்லை ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்புவதும் அரசாங்க அதிகாரிகள் நினைத்தால் மட்டுமே முடியும் .,அதற்கு கை எழுத்து போடுவது மட்டுமே அரசியல்வாதிகள் என்றும் ,பல அரசியல் வாதிகளை பின் இருந்து ஆட்டுவிப்பது அரசாங்க அதிகாரிகள் என்பதும் மறைக்க பட்ட உண்மை என்பதே நிதர்ச்சனம் .

விஜய் இவர் மீது சந்தேக பட்டது உண்மை என்று நிரூபணமாகி இருந்தது .ஆனால் அது அவனே இந்த அளவு இவர் செயல் பட்டு இருப்பர் என்று எதிர் பார்த்து இருக்க மாட்டான் .ஏதோ பணக்காரர்களின் பினாமி ,ரெசார்ட்களில் பெண்களை பயன் படுத்துகிறார் ,அதை வைத்து பெரிய புள்ளிகளை பயமுறுத்துகிறார் என்று மட்டுமே அவன் நினைத்தது .ஆனால் இவரோ பெண்கள் ,குழந்தைகளை கடத்துவது ,தீவிரவாதிகளுக்கு ஆயுதம் ,பணம் சப்ளை செய்வது ,பெண்களை ,குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது என்று சட்டத்திற்கு புறம்பான எல்லாவற்றிலும் நுழைந்து வேலை பார்த்து கொண்டு இருந்தார்.

அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை அவருக்கு .யோசித்து யோசித்து தலை பிடித்து அவர் அமர்ந்து இருந்த சமயம் அவருக்கு மொபைல் அழைப்பு வந்தது .
View attachment Nikitin-Dheer-Feature.jpg

" எப்படி நடந்தது இது .....ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் எல்லாவற்றையும் எப்படி பிடித்தார்கள் .....நம்ம காசு கொடுத்தது எல்லாம் வீணா ?"என்று எதிர் முனையில் இருந்து கத்தினான் சுமன்

"யாருக்கு தெரியும் ????எவன் பின்னால் இருந்து இதை எல்லாம் செய்ய வைக்கிறான் என்று தெரியவில்லை ....அவன் மட்டும் என் கையில் கிடைத்தான் ......."என்றார் கஜேந்திரன்

"எனக்கு தெரியும் .............நிச்சயம் இது சூர்யா பிரதாப் தான் .....நேத்து சோனாவை போதை மருந்து வழக்கில் உள்ளே தள்ளினான் ...இன்று இது ..........."என்றான் சுமன் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேலை செய்தது என்னவோ விஜய் ....ஆனால் சூர்யா தான் இவற்றை எல்லாம் செய்வதாக அவர்கள் உறுதியே செய்து கொண்டனர் .

"அவனா ..........?அவன் எமகாதகன் ஆச்சே .......எல்லாம் உன்னால் தான் .........நான் உன்னை அவன் தங்கச்சியை கடத்தி திருமணம் செய்ய சொன்னேன் ...நீ அவளுக்கு பதில் அவன் மனைவியை தவறாக கடத்தியது தான் கடத்தினாய் ....விட்டு தொலைக்க வேண்டியது தானே ........உன் கிட்டே போய் இந்த வேலையை கொடுத்த என் புத்தியை தான் செருப்பால் அடிச்சிக்கனும் ......அதான் கடத்தற பெண்கள் எல்லாரையும் முதலில் உன் கிட்டே தானே வராங்க ....பிறகு ஏன் அவன் பொண்டாட்டி மேல் கை வைச்சே .....சந்தேகம் வந்ததிற்கே இது வரை வெளியே தெரியாம நாலு பேரை போட்டு தள்ளி இருக்கான் .....அவன் மனைவி சாவுக்கு காரணம் நாம தான் என்று தெரிந்து செய்யறானா ,தெரியாமல் செய்யறானா என்றே புரியலையே ....அங்கு அங்கே பணம் ,வஸ்துக்கள் பிளாக் ஆகி நிற்குது .....80% பொருட்களை பிடிச்சுட்டாங்க ....அதுல டெலிவரி செய்ய வேண்டிய துப்பாக்கிகள் ,வெடிகுண்டுகள் வேற இருக்கு .....கொஞ்ச நாளுக்கு எதுவும் வேண்டாம் .....மீதம் உள்ள ஆட்களை பதுங்கிக்க சொல்லு .....கொஞ்சம் மாசம் போகட்டும் .

"இவனுங்களுக்கு எல்லாம் பயப்பட சொல்றியா .........பார்த்துடலாம் .........."என்றான் சுமன் .

"லூசு மாதிரி பேசாதே .....போலீசில் நம்ம பக்கம் இருந்த ஐந்து பேரை அவங்க டிபார்ட்மென்ட் போட்டு தள்ளி இருக்கு .....இப்போ மாட்டினோம் ஒட்டுமொத்த காவல் துறை நமக்கு எதிராக திரும்பிடும் .....நாம செய்யறது எல்லாம் என்ன சமூக சேவையா ....ஆட்கடத்தல் ,போதை மருந்து,துப்பாக்கி ,வெடிகுண்டு விற்பனை ,பாலியல் தொழில் ,பிளாக்மெயில் ,ஹவாலா ,என்று லிஸ்ட் போயிட்டே இருக்கு ........லாஸ் தான் .....உயிரோடு இருந்தால் தான் மீண்டும் தொடங்க முடியும் ...........இப்போ எதுவும் வேண்டாம் .....எல்லாவற்றையும் நிறுத்தி வை வெளிநாட்டு ஆட்களுக்கு வேறு பதில் சொல்ல வேண்டும் ....அவங்களின் பணம் ,பொருள் திரும்ப தர வேண்டும் ....அதற்கான ஏற்பாடுகளை செய் .....இல்லைன்னா உயிரோடு விட மாட்டானுங்க ..........சொல்வதை செய் ."......புரிந்ததா ????"என்றார் கஜேந்திரன் .

எதையும் பேசாமல் சுமன் அழைப்பை துண்டித்து விட ,கஜேந்திரனுக்கு தலை மீண்டும் வலித்தது .சுமன் ஏடாகூடமாக ஏதாவது செய்து வைப்பான் என்று உணர்ந்தே இருந்தார் .ஆனால் அவனை தடுக்க என்றுமே அவரால் முடிந்தது இல்லை .
View attachment ZL2QEyE.png

"சூர்யா !......என் மேலயா கை வைக்கிறாய் ......விட மாட்டேன் ......உன்னை மீண்டும் கதற வைக்கிறேன் ....இந்த முறை நீ மீளவே கூடாது .....தூக்கிறேன் ...மதுராவை உன் கண் முன்னரே தூக்கறேன் .....மதுரா ஒருமுறை தப்பிச்சுட்டே .....இந்த முறை உன்னை என்னிடம் இருந்து எவன் காப்பாற்றுவான் என்று பார்க்கிறேன் .....நீ எனக்கு தான் ."என்று உரக்கவே கத்தினான் சுமன் போதை மருந்தின் தாக்கத்துடன் .

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 29(3)

அன்றைய நாள் சிலர் வாழ்வில் விடியலையும் ,சிலருக்கு பழி வாங்கும் வெறியினையும் ,சிலருக்கு எதிர்கால கவலையையும் கொடுத்து விட்டு சென்றது .மறுநாள் சில புதிய உறவுகள் ஏற்படவும் ,சிலருக்கு மனவேதனையையும் ,சிலருக்கு ஞானோதயம் பிறக்கவும் ஆவண செய்ய புலர்ந்த பொழுது நன்றாக ஆரம்பமானது .

காலை மணி எட்டுக்குகுள் உத்தமை ஒரு வழி செய்து இருந்தான் சூர்யா .சினிமாவில் காட்டுவது போல் மொத்த உடைகளையும் மாற்றி மாற்றி பார்த்து உத்தமை நடுவராக நியமித்து அவனை திணற வைத்ததில் ஆரம்பித்தது அவர்கள் காலை .
View attachment Ram-Charan_6097.jpg

மதுராவோ ஆழந்த உறக்கத்தில் இருந்தாள் .விடியற்காலை நான்கு மணி வரை அவளுக்கு உறக்கம் வரவில்லை .சில பல மாதங்களாக அவள் சரியாக உறங்கியது இல்லை .நேற்று இன்னும் மோசம் .எதை எதையோ யோசித்து மனதை குழப்பி கொண்டு இருந்தவள் உறங்கவே நான்கு மணி ஆனது .அவளின் காலை வேளை விஜய்யின் மொபைல் அழைப்புடன் ஆரம்பமானது .

View attachment 29400927_204026880369889_6676109744861609984_n.jpg

ஹோட்டல் அறையில் வாழக்கையை வென்று விட்ட களிப்புடன்,இந்த ஆனந்தத்தில் மாணவியை தான் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை அறியாமல் உறங்கி கொண்டு இருந்த சங்கரனின் காலை பலவித அதிர்ச்சிகளை கொடுக்க இனிதாக ஆரம்பமானது .

பவானியோ மகளின் எதிர்காலத்தை நினைத்து பயந்தவாறு உறங்காமல் தவித்து ,மகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு யாரிடம் விடை இருக்கிறது என்று புரியாமல் ,தன் முயற்சியால் பலர் வாழ்வு தடம் மாற போகிறது ,பலரின் மன வேதனைக்கு தான் காரணமாக போகிறோம் என்பதை அறியாத அவரின் காலை பெருமூச்சோடு ,வேதனையோடு,குழப்பத்தோடு ஆரம்பமானது .

View attachment images (14).jpg View attachment images (17).jpg

இவர்கள் ஒருவர் வாழ்வில் மற்றொருவர் ஏற்படுத்த போகும் பாதிப்பினை பற்றி அறிந்த விதியும் இவர்களின் போக்கினை நினைத்து சிரித்து கொண்டு இருந்தது .

சூர்யா மதுராவை சந்திக்க துடித்து கொண்டு இருந்ததில் அவனுக்கு உறக்கமே வரவில்லை .காதல் அவனை பாடாய் படுத்தி கொண்டு இருந்தது .

"பூவுக்கு எல்லாம் சிறகு முளைத்தது
எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் ஆனது
எந்தன் வானத்தில் "

என்று பாடாத குறை .உத்தம் விழி பிதுங்கி நின்றான் .காதலிப்பவர்களோடு இருப்பவர்களுக்கு இந்த அவஸ்தை புரியும் .மதுராவை தன் இல்லத்திலேயே சந்திக்க தான் விரும்பினான் என்றாலும் அவள் எப்படி ரியாக்ட் ஆவாள் என்று கணிக்க முடியாததால் அலுவலகத்தை தேர்ந்து எடுத்தான் .10 மணிக்கு அலுவலகத்திற்கு வர போகிறவளுக்காக எட்டு மணியில் இருந்து தொடங்கியது அவன் தவம் .ஆயிரம் தடவை மணி பார்த்தாலும் அது அதன் போக்கில் தான் நகரும் என்பதை அந்த காதல் கிறுக்கனுக்கு யார் சொல்வது ???உத்தம் மாட்டி தவிப்பது போதாதா ?

உறங்கி கொண்டு இருந்த மதுராவை எழுப்பியது அவளின் மொபைல் அழைப்பு .பல அழைப்புகளுக்கு பிறகே தன் கனவுலகத்தை விட்டு வெளி வந்தவள் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் .அவளின் கனவு அப்படி பட்டது .விஜய் ஒரு பக்கம் ,சூர்யா ஒரு பக்கம் கையில் தாலியோடு அவளை விரட்டி கொண்டு இருந்தனர் .உசைன் போல்ட் ரேஞ்சுக்கு இவள் ஓடினாலும் இருவரும் இவளை விடுவதாக இல்லை .நடுவே சோனா வேறு வந்து கழுத்தில் கை வைத்து கோடு போல் சைகை காட்டி "நீ காலி "என்றாள் .இன்னொரு பக்கம் முகம் தெரியாத மாப்பிளை ஒருவனோடு நின்றார் பவானி .சங்கரன் சோனா அழைத்து வந்த ஒருவனோடு நின்றார் .இப்படி ஆளுக்கு ஒருத்தர் கையில் தாலியோடு தொரத்தினால் மதுரா பயந்து போனாள் .ஆபத்பாந்தவனாக அவளின் கனவினை நிறுத்தியது அந்த மொபைல் அழைப்பு .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 111.jpeg

"ஹலோ "என்றாள் உறக்கம் கலையாமல் ,கனவின் பாதிப்பு நீங்காதவளாக .

எதிர் முனையில் இருந்து சிறிது நேரம் எந்த சப்தமும் வரவேயில்லை .இவளும் காலர் ஐடி பார்க்காமலே அழைப்பை ஏற்று இருந்தாள் .

"ஹலோ யாருங்க ....தூங்கிட்டு இருந்தவளை கால் செய்து எழுப்பிட்டு பேசாம என்னப்பா செய்யறீங்க .....பேசுங்க பா .....இல்லைனா ஆளை விடுங்க நான் மீண்டும் தூங்க போறேன் ."என்றாள் மதுரா .

"உடம்பு சரி இல்லையா என்ன ?"என்றது எதிர்முனை பதட்டத்துடன் .

குரல் யார் என்று புரிந்து விட ,அவளையும் அறியாமல் அவள் வாய் ,"விஜய் !"என்றது .

"ம்ம்ம்ம் ....விஜய் தான் பேசறேன் .....உடம்பு சரி இல்லையா என்ன ?"என்றான் அவன் பதட்டம் தணியாமல் .

"நல்லா தான் இருக்கேன் ......"என்றாள் மதுரா ஒன்றும் விளங்காமல் .

"இல்லை எப்பவுமே மார்னிங் ஆறு மணிக்கு மேல் தூங்க மாட்டியே ....இந்நேரம் ஏதாவது exercise ,யோகான்னு செய்துட்டு இருப்பே .....மணி எட்டாகியும் இன்னும் தூக்க கலக்கத்துடன் பேசுறே ....அதான் உடம்புக்கு ஏதாவது முடியலையா ....டாக்டர் அழைச்சுட்டு வரவா ?"என்றான் .

'ஆமாம் நான் எப்போ எழுந்துப்பேன் என்பது முதற்கொண்டு எல்லாம் தெரியும் .....ஆனால் கேட்டா லூசு மாதிரி பதில் சொல்லு ......மாத்தி மாத்தி ஒருத்தியை இப்படி torture செய்தா ...வேறு என்ன தான் நடக்கும் ?'என்று மனதிற்குள் நினைத்தவள் ,"நைட் தூக்கம் வரலை ....இப்போ தான் தூங்க ஆரம்பித்தேன் ....என்ன விஷயம் விஜய் ?"என்றாள் மதுரா .

என்னவென்று சொல்வான் ....அவனுக்கே அவன் என்ன நினைக்கிறான் ,எதை எதிர்பார்க்கிறான் என்று புரியவில்லையே .....தன்னிடம் உள்ள பொம்மையை யாரவது பறித்து கொள்ள போகிறார்கள் என்று தவித்து கொண்டு இருக்கும் ஒரு குழந்தையின் மனநிலையில் தான் இரவு முழுவதும் தவித்து கொண்டு இருந்தான் .

"சொல்லுங்க விஜய் ....என்ன விஷயம் ....தூக்கம் வருது ....இன்னும் கொஞ்ச நேரம் தூங்க போறேன் ...சொல்ல வந்ததை சொல்லுங்க ."என்றாள் மதுரா வந்த கொட்டாவியை அடக்கியபடி .

"அது ....நீ ....இன்னைக்கு சூர்யாவை பார்க்க போறியா .....சூர்யாவை பார்த்தே ஆகணுமா என்ன ?"என்றான் விஜய் .

View attachment full (1).jpg

அதை கேட்ட மதுராவின் புருவங்கள் உச்சிமேட்டை வியப்பில் தொட்டன .அவன் வார்த்தைகளில் "போய் விட கூடாது என்ற தவிப்பும் ,போகவே கூடாது என்ற மறைமுக கட்டளையையும் இருப்பதை விஜய் உணர்ந்தானோ இல்லையோ மதுராவிற்கு அது நன்கு விளங்கியது .

"ஆமா மாம்ஸ் போய் தானே ஆகணும் ....நாலு கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றாலும் ஒரே நாளில் சோனாவோடு என்னுடைய பிரச்னையை முடித்து இருக்காரே ....அதற்கு நன்றியாவது சொல்லணும் இல்லையா ?தவிர அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர் வேற கையில் கொடுத்து இருக்கார் ....courtesy என்ற ஒன்று இருக்கே ....."என்றாள் மதுரா .

"நீ நன்றி சொல்லவில்லை என்றால் அவன் உயிர் வாழ மாட்டானா என்ன ?இல்லை உன் நன்றி இல்லை என்றால் அடுத்த வேலை சாப்பாடு அவனுக்கு இறங்காதா ?"என்றான் விஜய் கடுப்புடன் .

"இங்க பாருங்க விஜய் ....நீங்க டென்ஷன் ஆக இதில் என்ன இருக்கு என்று தெரியவில்லை .....அவர் அதை எதிர் பார்க்கிறாரோ இல்லையோ நன்றி சொல்லும் கடமை எனக்கு இருக்கு ."என்றாள் மதுரா .

"அவராம் அவர் .....அந்த அவர் தான் சோனா மாதிரி உன் டாட்டிக்கு கேரட் காட்டி ஒட்டுமொத்த குடும்பத்தையும் இங்கேயே இருக்கும் படி செய்த அவர் .....சோனா செய்ததற்கும் இவன் செய்தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ....அவள் அக்ரீமெண்ட் காட்டினாள் என்றால் இவன் உன் parents க்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கான் ...."என்றான் கத்தினான் விஜய் .அவன் பொறுமை எல்லை கடந்து கொண்டு இருந்தது .

"அதை பற்றி கேட்கவும் தான் போகிறேன் விஜய் ....."

"அதை தெரிந்து கொண்டு என்ன செய்வதாக உத்தேசம் ?"

"லுக் விஜய் .....அவர் யார் என்ன என்று எதுவும் தெரியாது .....தெரியாத எனக்கு இப்படி ரிஸ்க் எடுத்து வேலை செய்யணும் என்று அவருக்கு அவசியமே இல்லை ....அப்படி இருந்தும் செய்து இருக்கார் உங்களை போலவே ....உங்களுக்கும் எனக்கும் கூட தான் எந்த உறவும் இல்லை .....நீதி ,நேர்மை ,நியாயம் இதற்காக நீங்க எனக்கு உதவுவது போலவே அவரும் உதவுகிறார் ........வாய் கிழிய நான் ஆயிரம் பேசலாம் ...ஆனால் சோனா ,சுமன் ,சொர்ணா ,காஜா இவர்களை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் அளவு நான் பெரிய ஆள் கிடையாது .....என் மானத்தை காக்க யார் முன் வந்தாலும் நன்றி சொல்லி அவர்கள் செய்யும் உதவியினை ஏற்று கொள்ளும் ஒரு நிலையில் தான் சுமனும் ,சோனாவும் என்னை நிறுத்தி உள்ளனர் .....இது வரை நீங்க செய்த உதவிகள் வெளியே தெரியாமல் இருக்கலாம் ....ஆனால் இனியும் வெளியே தெரியாமல் செய்ய முடியாது .....அப்படி தெரிய வந்தால் அவர்கள் இருவரும் சேர்ந்து என் மானத்தை வெளியுலகில் நாச படுத்தாமல் விட மாட்டார்கள் .இவர் உதவுகிறேன் என்று வருகிறார் ....."என்றாள் மதுரா .

"அப்போ என் உதவி தேவை இல்லை என்கிறாய் அப்படி தானே .....புதுசாய் ஒருவன் வந்த உடன் பழையது தூக்கி அடித்து விடலாம் ....அப்படி தானே மதுரா ."என்றான் விஜய் நக்கலாக .

"லூசு மாதிரி உளறாதே விஜய் .....நீ உதவி செய்வதாக வந்தால் சோனா அதற்கு வேறு அர்த்தம் கற்பித்து விடுவாள் .....உதவியின் வர்ணமே மாறி விடும் .உனக்கு நிறைய தலைகள் இருக்கு விஜய் ....அதை மீற உன்னால் முடியாது ....சூர்யாவிற்கு நன்றி சொல்வதால் உன்னை நான் தூக்கி எறிவதாக அர்த்தம் இல்லை ......நீ பேசுவது டபுள் அர்த்தம் கொடுக்கிறது .....வேண்டாம் ....வார்த்தைகளை விடாதே ...பிறகு கஷ்டம் ....நான் என் parents மட்டுமே கட்டுப்பட்டவள் .....உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லாத போது இது மாதிரி பேசுவது அபத்தம் .....வார்த்தை தடிக்கிறது .....நீங்க கோபத்தில் இருக்கீங்க ...என்ன பேசுகிறோம் என்று கூட புரியாமல் பேசறீங்க ....அமைதியா இருந்து யோசியுங்க .....இப்போ வைக்கிறேன் ..."என்றவள் அவன் அழைப்பை விட்டு தன் தூக்கத்திற்கான ஆயுட்காலம் கொஞ்சம் என்று புலம்பியவாறு காலை கடன்களை முடித்து ,சூர்யாவை சந்திக்க ரெடி ஆகி வெளியே வந்தாள் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதற்குள் பவானி காலை டிபன் ரெடி செய்து இருக்க ,பாலாஜி ,சுபா ,ரகு ,கார்த்திக் ,பூரணி அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர் .

"ஏம்மா நீ தான் செய்தியா ?????ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே ...நான் வந்து செய்து இருக்க மாட்டேனா ?"என்றாள் மதுரா .

"ஆமாடீ நீ ஆடி அசைஞ்சு பத்து மணிக்கு எழுந்து வருவே .....நீ வந்து ஆக்கி போடும் வரை புள்ளைத்தாய்ச்சி பெண் சாப்பிடாமல் இருக்கணுமா ????/friend ன்னு வாய் வார்த்தையால் சொல்லிட்டு இருந்தா மட்டும் பத்தாது ...அது செய்கையிலும் இருக்கனும் .....பாலு தம்பி வேற ஆபீஸ் கிளம்பனும் இல்லை ....வாயை விடாமல் பேசாம சாப்பிட்டு எழுந்து போகும் வழியை பாரு ."என்று கடித்த பவானியிடம் இருந்து தப்பிக்க ,வெகு வேகமாக சாப்பிட்டு முடித்தாள் மதுரா .

சாப்பிட்டு முடித்து நல்ல பிள்ளையாக அனைத்தையும் ஒதுக்கி வைக்க பவானிக்கு உதவி செய்தாள் மதுரா .அவர் சற்று நகர்ந்ததும் ,மதுராவை கை பிடித்து பின்புறம் இழுத்து சென்றாள் சுபா .

"என்னடீ .....எதுக்கு எப்படி இழுத்துட்டு போறே ....என்ன விஷயம் ?"என்றாள் மதுரா இருவரும் பின்னால் வந்ததும் .

அங்கு ஏற்கனவே பாலாஜி இவர்களுக்காக காத்து இருந்தான் .அவனை கண்டதும் என்ன என்று சற்று புரிய எதையும் பேசாமல் நின்றாள் மதுரா .

"மதுரா !....நீ இப்போ சூர்யாவை பார்க்க போகிறாயா என்ன .........அது நல்லதிற்கு அல்ல என்று தோன்றுகிறது ..."என்றாள் சுபா விசயத்திற்கு நேரிடையாக வந்து .

"யாருக்கு நல்லது இல்லை என்கிறாய் சுபா ?"என்றாள் மதுரா வெகு நிதானமாக .

"மதுரா !...."அதிர்ந்து போனவளாய் சுபா திக்கி திணறினாள் .

"சொல்லு சுபா .........நான் சூர்யாவை சந்திப்பது யாருக்கு நல்லது இல்லை என்கிறாய் ???என்னை சோனாவிடம் இருந்து காப்பாற்றி இருப்பவருக்கு நன்றி சொல்வது எனக்கு எப்படி கெட்டதாகும் ????இன்னும் சொல்ல போனால் சோனாவிடம் இனி நான் வேலை பார்க்க வேண்டி வராது ....நாலு கோடி ரூபாய் கணக்கு இருக்கிறது சுபா .....இல்லை நான் சூர்யாவை சந்திப்பது விஜய்க்கு நல்லது இல்லை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் ?????இல்லை நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறாய் ???தெளிவாக சொல்லி விடு .....விஜய்க்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத போது தானாக வலிய வரும் நட்பை நான் ஏன் இழக்க வேண்டும் ????விஜய்க்கும் எனக்கும் ஒத்து வராது என்று உனக்கே தெரியும் .....ஒத்து வந்தாலும் ஊர் உலகம் முக்கியமாக சோனா அண்ட் கோ அதை சிதைக்க பார்ப்பார்கள் ....சாதாரண நன்றி கூற போவதற்கு எதற்கு இத்தனை தடை ,கேள்வி என்று தான் புரியவில்லை ...."சரி ...சூர்யாவை பார்க்க முடிவு பண்ணிட்டே ......இரு நாங்களும் கூட வரோம் ..."என்றாள் சுபா .

"நீ எதற்கு bodyguard வேலை செய்யறதற்கு ????அதான் உத்தம் அண்ணா வராங்க என்னை கூட்டி போக .....அவரே பத்திரமா திரும்ப வந்து விடுவார் ....அந்த விஷயத்தில் எல்லாம் அவர் பாலாஜி அண்ணாவையே மிஞ்சிடுவார் ...."என்றாள் மதுரா .

"இல்லைம்மா ...எதற்கும் நாங்களும் கூடவே வருகிறோம் ."என்றான் பாலாஜி .

"என்ன அந்த அண்ணா உங்க உயிர் நண்பரின் கட்டளையா .....ஹெல்ப் தேவை பட்டா நானே கேட்கிறேன் என்று சொல்லுங்க .....அவர் நம்பர் என் எமெர்ஜ்ஜெனிசி லிஸ்ட்ல இருக்கு .....ரொம்ப ஓவர் ரா built up வேண்டாம் என்று சொல்லுங்க ......காலையில் அவர் பேசினதற்கே கடுப்புல இருக்கேன் ....இது மாதிரி எதையும் அவர் சொல்லறார் ,இவர் சொல்லறார் என்று செய்து வைக்காதீங்க ....ப்ளீஸ் காப்பாத்தறேன் என்ற பெயரில் மூச்சு அடைக்க வைக்காதீங்க ...."என்றவள் அவர்கள் மேலும் பேசும் முன் அங்கிருந்து அகன்றாள் .

பெருமூச்சு விட்ட பாலாஜி தன் சட்டை பையில் ஆனில் இருந்த போனை காதில் வைத்து ,"கேட்டுச்சா ....என்னத்தை சொல்லி வைத்தே ......ஏன்டா கூழுக்கும் ஆசை ,மீசைக்கும் ஆசைன்னா நான் என்ன செய்ய முடியும் ????.........இப்போ சொல்லு சோனாவை விவாகரத்து செஞ்சுட்டு மதுராவை தூக்கி போய் தாலி கட்டறேன்னு சொல்லு ....கடைசி வரை உனக்கு துணையாக நாங்க நிற்கிறோம் .....அதை விட்டு அவ சூர்யாவை பார்க்க போவது உனக்கு எறியதற்கு எல்லாம் நாங்க எதுவும் செய்ய முடியாது ......ஒண்ணு அவ தான் வேண்டும் என்று ஸ்டெடியா நில்லு ...இல்லை சூர்யாவிற்கு வழி விட்டு நில்லு ....அவனாவது தன் காதலில் ஜெயிச்சிட்டு போகட்டும் ....."என்ற பாலாஜி கடுப்போடு அழைப்பை துண்டித்தான் .

PENANCE WILL CONTINUE......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 29(4)

"இவன் செய்யும் வேளைக்கு நானும் ஆல்வினும் தான் கீழ்ப்பாக்கம் போக போறோம் .....முடியலை சுபா இவனோடு ....."என்றான் பாலாஜி சுபாவிடம் .

"என்ன பாலு இது ????இது மாதிரி அண்ணா நடப்பது என்ன நமக்கு புதுசா ?????மதுராவை குன்னூரில் மீட் செய்ததில் இருந்தே கடந்த நாலு வருசமா இதே பல்லவி தானே .....அவரால் மதுராவை விட்டு கொடுக்கவும் முடியலை ....அவளை வெளிப்படையாய் ஏற்கவும் முடியலை ....சோனா இருக்கும் வரை இவர் இந்த முடிவு எடுத்தாலும் நிச்சயம் மதுராவிற்கு தான் பாதிப்பு என்று தெரிந்து தானே அமைதியா இருக்கார் .....பழைய கருணா அண்ணாவா இருந்தா இந்நேரம் தடால் அடியாய் மதுரா கழுத்தில் தாலியே கட்டி இருப்பார் .....இந்த அண்ணா ............ஹ்ம்ம் ..........விடுங்க பாலு ....நம்மை மீறி தான் அந்த சூர்யா மதுராவை மணக்க முடியும் ....பார்த்துக்கலாம் ...."என்றாள் மதுரா .
View attachment 0 (130).png

பகலில் பக்கம் பார்த்து பேசு ...இரவில் அதையும் பேசாதே என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள் ...இவர்கள் பேசுவதை எல்லாம் செடியின் மறுபுறம் இருந்து கேட்டு கொண்டு இருந்தாள் மதுரா .இந்த பக்கம் போவது போல் போக்கு காட்டி அவர்களின் பின் புறம் வந்து நின்று கொண்டு இருந்தாள் .அவர்கள் பேசியதை கேட்டவளின் கண்கள் ஆழந்த சிந்தனையில் சுருங்கி விட ,நெற்றியை தேய்த்து கொண்டாள் .

சுபா அவளோடு குன்னூர் கல்லுரியில் ஒன்றாய் படித்த உயிர் தோழி தான் என்றாலும் அவளின் விசுவாசம் விஜய் பக்கம் என்று புரிந்து கொண்டாள் .விஜய் உயிரை காப்பாற்றியது தான் என்பதையும் ,காப்பாற்ற முன் வந்த அந்த நொடி முதல் அவன் தன்னை ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக காதலிப்பது அவன் கை பட எழுதிய டைரியில் இருந்து அறிந்து கொண்டாள் .ஆனால் இந்த காதல் இவன் ஏன் தன்னிடம் சொல்லவில்லை ....நடந்தது முழுவதும் இவர்களுக்கு தெரியும் ...இவர்களிடம் கேட்டால் உண்மை சொல்லி விடுவார்களா ....பாலாஜியின் புலம்பலில் விஜய்யின் இரட்டை நிலைப்பட்டால் தலை சுற்றி போய் இருக்கும் இந்த சமயத்தில் கேட்டால் உண்மை கிடைக்கும் என்று தோன்ற அவர்களை நோக்கி அவள் போக முயன்ற சமயம் வீட்டின் உள் இருந்து பவானி இவளை அழைக்கும் குரல் பலமுறை கேட்கவே தன்னுடைய அந்த எண்ணத்தை உள்ளுக்குள் போட்டு வைத்து கொண்டவள் ,பவானியை தேடி சென்றாள் .ஒருவேளை தான் அறிய போகும் உண்மை மிகுந்த மனவலியை கொடுக்கும் என்று உள்ளுணர்வு எச்சரித்ததால் கேட்க வந்ததை கேட்காமலே விட்டு விட்டாளா இல்லை நண்பர்களே ஆனாலும் அந்தரங்கம் என்பது மிகவும் அந்தரங்கமானது .இதை விஜய் சொல்லி தெரிந்து கொண்டால் அதில் அர்த்தம் இருக்கிறது .ஆனால் மூன்றாம் நபரின் வாய் மொழி மூலம் அதை அறிய தயக்கமாக இருந்ததால் விலகி சென்றாளோ

"என்ன மம்மி கூப்பிட்டிங்க ?"என்றாள் மதுரா .

"நானும் ரகுவும் வெளியே போறோம் .....நீ உத்தமோடு சூர்யாவை பார்க்க போக தான் போகிறாயா ....தேவை அற்ற வேளை என்று புரியவில்லையா ...?"என்றார் பவானி .

'ரவுண்டு த்ரீ .....மார்னிங் எழுந்ததில் இருந்து ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கேட்கும் ஒரே கேள்வி ,'சூர்யாவை பார்க்க போகிறாயா 'என்று ஏன் கடுப்பு அடிக்கறீங்க ......ஆமா அவன் பாகிஸ்தான் அதிபர் ,நான் இந்திய அதிபர் பாரு .....அப்படியே நாங்க மீட் செய்வது உலகத்திற்கே விடிவு காலம் பொறக்க வைக்க .....நன்றி சொல்ல நினைப்பது ஒரு தப்பா .........வேண்டாம் ...விட்டுடுங்க .............முடியலை ...அழுத்துடுவேன் ....'என்று வடிவேலு வொய்ஸ்சில் மனதிற்குள் புலம்பி கொண்டு இருந்தாள் மதுரா .

"சரி மா போகலை ....நாலு கோடி கேட்டு நோட்டீஸ் வந்தா நீங்களும் அப்பாவும் அதை கட்டிடுங்க ....நான் போய் கவுந்து படுத்து விட்ட தூக்கத்தை continue செய்யறேன் ...."என்றவளை முறைத்தார் பவானி .

"அம்மா சும்மா முறைக்க வேண்டாம் .....அவர் சோனா கிட்டே இருந்து காப்பாற்றி இருக்கார் .....அதற்காக நன்றி சொல்ல போவது என்ன கொலை குற்றமா ....அதற்கு காலையில் இருந்து மாற்றி மாற்றி இப்படி ஒருத்தர் விடாம lecture அடிச்சா கடுப்பாகுது ....."என்றாள் மதுரா கோபத்துடன் .

"வேறு யாரு உன்னை போக வேண்டாம் என்று சொன்னது ?"என்றார் பவானி குழப்பத்துடன் .

"ஹ்ம்ம் ......வேறு யாரு உங்க குலதெய்வம் தான் .........என்னம்மா இப்படி முழிக்கறீங்க ...நீங்க தானே உங்க மாப்பிளை விஜய கருணாகரனை குல தெய்வம் என்று சொல்லி ஒரு அண்டார்டிகா கண்டத்தையை அவர் தலையில் வைத்தது .....அந்த தெய்வம் தான் சூர்யாவை சந்திக்க கூடாது என்று சொல்லி கடிச்சு வைத்தது ....அதன் பிறகு என் அருமை தோழியும் அவரின் கணவரும் .....முன்றாவதாக நீங்க ...."என்றாள் மதுரா .

பெருமூச்சு விட்ட பவானி ,"சரி சரி ....போய்ட்டு வா ....ஆனா கூட கார்திக்க்கை கூட்டி போ ..."என்றார் .

"எதற்குமா இந்த புல் தடுக்கி பயில்வான் ....ஒஹ்ஹ ...சூர்யாவிடம் இருந்து காப்பாற்ற இந்த bodyguard ????சூர்யா உனக்கு வந்த சோதனையை பாரு .....ஹீரோ மாதிரி காப்பாத்தினா உன்னை வில்லன் ரேஞ்சுக்கு பிக்ஸ் செய்யறாங்க ..."என்று வாய் விட்டே புலம்பினாள் .

"கார்த்திக்க்கொடு போவதாக இருந்தா போ இல்லைன்னா விட்டுடு ...நானும் ரகுவும் கிளம்பறோம் .....அங்கே இருந்து கிளம்பும் முன் எனக்கு கால் பண்ணிடு ....ரொம்ப நேரம் இருக்க வேண்டாம் ...."என்றார் பவானி .கார்திக்க்குக்கு கண் காட்டி விட்டு அவர் ரகுவோடு வெளியேசென்று விட்டார் .

ஒருவேளை மகள் அன்று அவரை அழைக்கும் நிலையில் இருக்க போவது இல்லை என்று தெரிந்து இருந்தால் ஒருவேளை தான் சந்திக்க போவதை தள்ளி போட்டு ,மகளுக்கு காவலாக போய் இருப்பாரோ ....விதி யாரை விட்டது ?

பவானி ரகுவுடன் கிளம்பி விட ,தாயார் எங்கே செல்கிறார் என்று கூட மதுரா கேட்கவில்லை .கேட்கும் மனநிலையிலும் அவள் இல்லை .ஒருவேளை கேட்டு இருக்க வேண்டுமோ ....கேட்டு இருந்தால் பலரின் மனம் சங்கட படாமல் இருந்து இருக்குமோ .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவானி கிளம்பி விட்ட பிறகு ஹாலில் அமர்ந்து இருந்த கார்த்திக் அருகே சென்று அமர்ந்தாள் மதுரா .

"இது தேவை தானா மதுரா ?"என்றான் கார்த்திக் .

"டேய் நீயும் ஆரம்பிக்காதேடா ....அழுதுடுவேன் ......"என்றாள் மதுரா .
View attachment aaamoviehitteaser1.jpg

"உனக்கே இப்படி இருந்தா ,காலை ஐந்து மணியில் இருந்து அத்தையின் அட்வைஸ் மழையில் நனைந்த எனக்கு
எப்படி இருக்கும் ....நீயே சொல்லு ....."என்றான் கார்த்திக் அவளை விட பாவமாக .

"என்னடா சொல்றே ....அம்மா உன்னை அப்படி என்னடா கடிச்சி வைச்சாங்க ?"என்றாள் மதுரா

"ஒரு மணி நேரத்திற்கு சூர்யாவையும் ,விஜயயையும் கரித்து கொட்டினாங்க ....ஊருல உலகத்துல அவனுகளுக்கு வேற பெண்ணே கிடைக்கலையா என்று ஒரே புலம்பல் .....உன்னையும் தாளிச்சு எடுத்தாங்க ....போனில் ஒரு thank யு சொல்லிட்டு போகாம அவன் என்னவோ பெரிய ஜனாதிபதி அவனை நேருக்கு நேரா சந்திச்சு நன்றி கூறினால் தான் ஆச்சான்னு .....பெரிய etiquette கடை பிடிக்கறாளாம் என்று ..."என்றான் கார்த்திக் .

"என்ன சேதாரம் ரொம்ப பலமோ ?????...ஆனா ஹிட்லர் இதை எல்லாம் என்னிடம் சொல்லி இருக்கலாமே ....பச்ச புள்ளையை இப்படி டேமேஜ் செய்து இருக்காங்க ."என்றாள் மதுரா அவன் தோளில் சாய்ந்து .

"யாரு உன் கிட்டே .....பேசி யாரவது மீள முடியுமா ????போகும் போது கேட்டதற்கே உன் பதிலில் டென்சன் ஆகிட்டாங்க ......இதுல உன் கிட்டே சொல்லிட்டாலும் ????.....ஆமாம் சூர்யா ப்ரொபோஸ் செய்தா என்ன செய்வதாக உத்ததேசம் .....விஜய்யும் உன்னை பார்க்கும் பார்வை ....புரியாம இல்லை தான் .....ரெண்டு பேரில் யார் உன் சாய்ஸ் ராணிமா ?"என்றான் கார்த்திக் .

"நோ ஐடியா கார்த்திக் ....எனக்கு இருக்கும் குழப்பத்தில் ,சோனா மாட்டி வைத்து இருக்கும் சிக்கலில் மேரேஜ் பத்தி எல்லாம் நினைக்க கூட முடியலை .....சூர்யா ப்ரொபோஸ் செய்தாலும் என் பதில் இதுவா தான் இருக்கும் .....விஜய் அவர் அல்டிமேட்ட குழப்பவாதி ....அவரும் குழம்பி ,நம்மளையும் குழப்பி விடுவார் .....அவரையும் குறை சொல்ல முடியாது தான் ...எந்த விஷயமும் அவர் அவர் நிலையில் இருந்து பார்த்தா தான் புரியும் .....பார்க்கலாம் .....அடுத்த முகூர்த்தத்திலேயேவா எனக்கு திருமணம் நடக்க போகிறது ....நிறைய யோசிக்கணும் ....."என்றாள் மதுரா .

"எப்படி மதுரா நீங்க எவ்வளவூ ரிலாக்ஸ்சா யோசிக்கிறீங்க ......நீங்க அதிகம் பேசுறது இல்லை தான் ...ஆனா பேசினா உங்களை எதிரித்து இன்னொருவர் ஜெயிக்க முடியாத படி தான் இருக்கு உங்க பேச்சும் நடவடிக்கையும் ....ஒரு பக்கம் விளையாட்டு பிள்ளை போல் இருக்கீங்க ...இன்னொரு பக்கம் தெளிவா பிளான் செய்யறீங்க ....எப்படி மதுரா "என்றாள் பூரணி வியப்புடன் .

"ஐஸ்சு?????...ரொம்ப குளிருது ......"என்றாள் மதுரா .

"இல்லங்க உங்களை மீட் செய்து ரெண்டு நாள் தான் ஆகுது என்றாலும் நீங்க செஸ் கேம் போல் இவங்களை எல்லாம் எப்படி டீல் செய்யறீங்க என்று பார்த்து கொண்டு தானே இருக்கேன் .....இந்த மாதிரி பிளானிங் எல்லாம் விஜய் மாமா தான் செய்வாங்க .....என்னை சோனா கண் பார்வையில் இருந்து மறைக்க ,உங்களை ஒரு வருசமாய் காப்பாற்ற என்று பிளான் போடும் போது எல்லாம் இப்படி தான் மத்தவங்களை வைத்தே தான் நினைத்ததை நடத்திடுவாங்க ....அதே மெத்தெட் ஆப் பிளானிங் உங்க கிட்டே இருக்கு மதுரா ...."என்றாள் பூரணி .

"அம்மா ட்ரைனிங் தான் ...எப்பவுமே அதிகமா கவனிக்கணும் ...குறைவா பேசணும் ....அடுத்தவங்க நிலையில் இருந்து யோசித்து எதையும் அவங்க மறுக்க முடியாத படி செய்யணும் ....சொல்லி கொடுத்தது அம்மா தான் என்றாலும் அவங்க அதை என்றுமே கடைப்பிடித்தது இல்லை .....அவங்க சொன்னதை நான் கெட்டியா பிடிச்சுட்டேன்ன்னு நினைக்கிறன் ...."என்றாள் மதுரா தோளை குலுக்கி .

அதே சமயம் "பெஹன் "என்று அழைத்து கொண்டு உள்ளே வந்தான் உத்தம் .

"ஹாய் பைய்யா ....வாங்க வாங்க ....என்ன சாப்பிடறீங்க ..."என்றாள் மதுரா

"நோ தேங்க்ஸ் பெஹன் ...சாப்பிட்டு தான் வந்தேன் ....கிளம்பலாமா ...பாஸ் வெயிட் செய்துட்டு இருப்பாங்க ....."என்றான் உத்தம் .

"நாங்க ரெடி தான் ...இது கார்த்திக் .....ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்லை ....இவரும் கூட வரார் ."என்றாள் மதுரா .

"பெஹன் ...என்ன என் மேல் நம்பிக்கை இல்லையா ....?"என்றான் உத்தம் முகம் தொங்கி போனவனாக .

"சாரி ப்ரோ ....இது என் அத்தையின் ஏற்பாடு ....மீற முடியாது ....உங்களை நம்பாமல் என்று இல்லை ....ஆனா உங்க பாஸ்க்கு நீங்க கட்டுப்பட்டவங்க ....அதை மீற உங்களாலும் முடியாது .....மதுரா உங்களையும் ,உங்க பாஸ்சையும் நம்பலாம் ...அத்தை தயாராய் இல்லை ....."என்றான் கார்த்திக் .

தோளை குலுக்கி விட்டு உத்தம் வெளியே சென்று விட்டான் .பூரணி ,சுபா ,பாலாஜியிடம் சொல்லி விட்டு அவர்கள் கிளம்ப ,அவர்களை பின் தொடர்ந்தது ஒரு கார் .சூர்யாவின் அலுவலகம் வரும் வரை உத்தம் வேறு எதையும் பேசவில்லை .அவன் வருத்தத்தில் இருக்கிறான் என்பது புரிந்து இருந்தாலும் மதுரா அதை போக்க எதையும் செய்யவில்லை .

கார்த்திக் பவானிக்கு அழைத்து தாங்கள் கிளம்பி விட்டதாக சொல்ல ,பத்து நிமிடத்திற்கு மீண்டும் அவர் ஒரு கிளாஸ் எடுத்த பிறகே அழைப்பை வைத்தார் .அவன் முகம் பிண போக்கை கண்ட மதுரா ,தன் தலையில் அடித்து கொண்டாள் .

"தேவையாடா இது உனக்கு ?"என்றாள் .

"இல்லைன்னா வீடு வந்த பிறகு பத்து நாளைக்கு பேய் ஓடிடுவாங்க .....அதற்கு இதுவே மேல் ...."என்றான் கார்த்திக் .

"பரவாயில்லை மகனே தேறிட்டே ...."என்றாள் மதுரா .

View attachment 14hyykc01-Microsoft Green campus_GIO1J896V.1+HY15MICROSOFT.jpg
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த இருபது நிமிடத்தில் சென்னையின் பிரதானமான இடத்தில் இருந்த அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது அவர்கள் கார் .அந்த அலுவலக வளாகத்தின் ஓடுபாதையே சில பல கிலோமீட்டருக்கு நீண்டது.அலுவலக காம்பௌண்டுகுள் செயற்கை குளம் ,நீர் ஊற்று ,பார்க் என்று பல வசதிகள் இருந்தன . .சுற்றிலும் வானளாவ எழுந்து நின்றது பல கட்டிடங்கள் .மெயின் ஆபீஸ் செல்ல அப்படி பல கட்டிடங்களை தாண்டியே செல்ல வேண்டி இருந்தது .

மெயின் ஆபீஸ் முன் இவர்கள் வந்த கார் நிற்க ,கதவை பல செக்யூரிட்டி ஆட்கள் வந்து திறந்து விட்டனர் .ஒரு பெண் மதுராவிற்கு சிகப்பு நிற ரோஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றாள் .பத்து படி ஏறி லாபிக்கு வந்தவர்களை அந்த கட்டிடத்தின் பிரமாண்டம் வாய் பிளக்க வைத்தது .லோபிபியில் இருந்து லிப்ட் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்ல பேட்டரி operated கார் இருந்தது .அதில் ஒரு காரை உத்தம் இயக்க ,மதுராவும் ,கார்திக்க்கும் ஏறி அமர்ந்து கொண்டனர்

View attachment 623d9668_z.jpg

எதற்கு இந்த built up என்று நினைத்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள ,ஆனால் அது பணக்காரத்தனம் ,டாம்பீகம் அல்ல ,நடைமுறை தேவை என்று விளங்கி விட்டது .லாபிக்கும் இவர்கள் செல்ல வேண்டிய லிப்ட்க்கும் இடைவெளி மறு கட்டிடமாக இருந்தது .

"ஆமா அண்ணா .....இதை எல்லாம் சுத்தி பார்க்கவே ரெண்டு மூன்று நாள் ஆகும் போலெ இருக்கே ....இது ஆபீஸ் தானா இல்லைன்னா தீம் பார்க்கா ...இவ்வளவூ பெரிசா இருக்கு .....இந்தர் இண்டஸ்ட்ரீஸ் கூட இவ்வளவூ பெருசு ,பிரம்மாண்டம் இல்லையே ....."என்றாள் மதுரா .

"இது பாஸ் ஹெட்ஆபீஸ் பெஹன் ....எல்லாமே எக்ஸ்போர்ட் பிசினஸ் .....பரம்பரை தொழில் .....க்ரானைட் ,கார்மெண்ட்ஸ் ,ஸ்டீல் ,ஆயில் ,டைமென்ட் கட்டிங் அண்ட் பாலிஷிங் என்று பாஸ் இறங்காத துறையே இல்லை ....இந்தியா முழுவதும் பல கிளைகள் இருக்கு ....அது எல்லாவற்றையும் இங்கு இருந்து தான் கண்ட்ரோல் செய்யறார் ...."என்றான் உத்தம் பெருமையுடன் .

"ஆமாம் உங்க பாஸ் தூங்குவாரா இல்லை 24 மணி நேரம் இங்கேயே சுத்திட்டு இருப்பாரா .....ஒரு வேலைக்கே தலை சுத்தி போகுது ....இதில் இத்தனை என்றால் ..."என்றான் கார்த்திக் ப்ரஹ்மிப்பு நீங்காதவனாக .
View attachment kampus-lichtwiese.jpg

உத்தம் பதில் சொல்வதற்குள் சூர்யாவின் அலுவலக கட்டிடம் வந்து விட ,அவர்களுக்கு வழி காட்டியவாறு முன்னே சென்றான்.திறந்த வாய் மூடாமல் அந்த அலுவலகத்தினை பார்த்தவாறே பின் தொடர்ந்தனர் இருவரும் .இவர்கள் வந்த கார் காம்பௌண்டிற்குள் வந்தது முதல் cctv கேமரா மூலம் மதுராவையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான் சூர்யா .அவன் கைகள் தானாக உயர்ந்து டிவியில் தெரிந்த மதுராவின் தலையை தடவி கொடுத்தது .கண்கள் தானாக கலங்கி விட ,நெஞ்சில் சொல்ல முடியாத ஒருவித அழுத்தம் கூட தன் இருக்கையில் நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் சூர்யா .

மதுரா உத்தம் கார்த்திக்க்கொடு லிப்ட்டில் ஏறி நான்காவது தளத்தில் முழுவதும் அமைக்க பட்டு இருந்த சூர்யாவின் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் .லிப்ட் விட்டு வெளியே வந்தவர்களை முதலில் வரவேற்றது பிரம்மாண்ட கண்ணாடி கதவும் ,இரு செக்யூரிட்டி ஆட்களும் .உத்தமை கண்டதும் இருவரும் சலூட் வைத்து கதவை திறந்து விட்டனர் .அறைக்குள் அறைக்குள் அறை என்று வித்தியாசமான வடிவமைப்புடன் இருந்தது அந்த தளம் .ஏறக்குறைய அந்தக்கால ராஜவம்ச தர்பார் எப்படி பலகட்டங்களை தாண்டி செல்லுமோ அதே போல் இருந்தது .
செக்யூரிட்டி தாண்டியதும் ரெசிப்டியோனிஸ்ட் அறை வந்தது .உத்தமை கண்டதும் எழுந்து நின்று விஷ் செய்தாள் அந்த பார்பி டால் .

"வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாங்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம தான் வளத்தாங்களா "


கார்த்திக்கின் மூலையில் இந்த பாடல் தான் ஓடியது .அந்த பெண் அவ்வளவூ அழகாக ரோஸ் நிற பார்பி டால் மாதிரி தான் இருந்தாள் .
(ஹலோ பூரணியா ......?))))

அந்த அறை கதவை தாண்டி உள் சென்றதும் விருந்தினர் lounge மாதிரி இருந்த அறையில் கார்திக்க்கை தடுத்து நிறுத்தினான் உத்தம் .

"சாரி கார்த்திக் .....நீங்க இங்கேயே வெயிட் செய்யுங்க ....பெஹன் மட்டும் பாஸ் மீட் செய்ய போகட்டும் ."என்றான்

"இல்லை நானும் ..."என்று ஆரம்பித்தவனை மதுராவின் ஒரு பார்வை தடுத்து நிறுத்தியது .

"சரி சரி .....முறைக்காதே ....இங்கேயே வெயிட் செய்யறேன் ...."என்றான் கார்த்திக் அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தபடி .

அவனுக்கு தேவையான ஸ்னாக்ஸ் ,கூல் ட்ரிங்க்ஸ் எடுத்து வந்து வைத்தாள் அந்த பார்பி .சில magazines படிக்கச் கொடுக்க பட்டது .கார்திக்க்கை விட்டு மறு அறைக்குள் நுழைந்த மதுரா திகைத்து நின்றாள் அங்கு வரவேற்கும் விதமாக நின்றவனை கண்டு ----அவளுக்கு மிகவும் பழக்கமான முகம் தான் அது .தான் காண்பது கனவா நினைவா என்று புரியாமல் தன் கண்களை இரு முறை கசக்கி விட்டு கையை வேறு கிள்ளி பார்த்தாள் .உறுதி படுத்தி கொள்ள உத்தமை வேறு பார்த்தாள் .அவன் புன்னகைக்க மதுராவின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது .

அடுத்த நொடி ,"டேய் சின்ன தம்பி எப்படி டா இருக்கே "என்ற கூவலுடன் அங்கு நின்றவனின் அருகே ஓடினாள் மதுரா .அவளை தூக்கி தட்டாமாலை சுற்றி இறக்கி விட்டான் சின்னத்தம்பி

அவள் குரலை கேட்டு என்னவோ எதுவோ என்று பயந்து உள்ளே ஓடி வந்தான் கார்த்திக் .ஆனால் அங்கு நடந்ததே வேறு.

(சின்ன தம்பியா ????இது யாரு புது என்ட்ரி ?))))

PENANCE WILL CONTINUE......
 
Status
Not open for further replies.
Top