anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 28(3)
மகளையும் காப்பாற்ற வேண்டும் ,இந்த இருவருக்கும் மகள் கிடைக்கவும் கூடாது ,ஆனால் சோனா அண்ட் கோ எதிர்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் .இப்படி தசாவதானியாக ஒருவனுக்கு அவர் எங்கே போவார் ????இன்ஸ்டன்ட் காபி போல் இன்ஸ்டன்ட் ஆக்ஷன் ஹீரோவை பிளிப்கார்ட்இ,swiggyயிலா ஆர்டர் செய்ய முடியும் ??
வெளியே இருந்து சோனாவால் பிரச்சனை என்று பார்த்தால் ,வீட்டினுள் ஒரு சகுனி ஒருவர் இருக்காரே ...கணவன் என்ற பெயரில் . அவர் பாட்டுக்கு தான் தோன்றியாய் முடிவு எடுத்து விட்டு மற்றவர்ர்களின் மேல் அதை திணிப்பதே வேலையாக கொண்டு இருப்பவர் .இருபது வருடங்களுக்கு முன் சேதுவோடு சண்டை வந்த போதும் இப்படி தான் .வந்தார் .குன்னூரில் வேலை கிடைத்து இருக்கு .கிளம்பனும் என்று டெம்போ லாரியுடன் வந்து நின்றவர் .இன்னும் அந்த பழக்கம் மாறவில்லை .குடும்பம் என்ற கூட்டில் கணவன் ,மனைவி இருவரும் சமம் என்பதே இவர் அறிந்து இருக்கவில்லை .இவர் மட்டுமல்ல சராசரியாய் 60%ஆண்கள் இப்படி தான் .
இவர்களை பொறுத்த வரை வீட்டில் உள்ள பொருட்கள் பத்தோடு பதினொன்று மனைவி என்பவள் .கையில் உள்ள ஒரு விரல் போகும் வரை அதற்கு எப்படி நாம் முக்கியத்துவம் கொடுப்பது இல்லையோ அப்படியே மனைவி என்பவளுக்கு அங்கீகாரம் நிறைய வீட்டில் இருப்பது இல்லை .எடுக்கும் ஆடையில் இருந்து ,வாங்கி வரும் மளிகை சமான் வரை ,குழந்தைகளின் படிப்பு முதல் தாய் வீடு செல்வது வரை ,சமைத்து வைத்த உணவிற்கு பாராட்டு முதல் ,நோய் என்றால் டாக்டரிடம் செல்வது வரை பல இல்லத்தரசிகளுக்கு சுதந்திரம் என்பது இல்லை .
எவ்வளவூ தான் படித்து இருந்தாலும் ,எவ்வளவூ பெரிய வேலையில் இருந்தாலும் சில வீட்டு இல்லத்தரசிகளுக்கு கரண்டி பிடிக்கும் வேலை மட்டும் உடல் நலமில்லாத போது கூட விடுவதில்லை .ஒரு சிறு பாராட்டு ,சிறு ஆறுதலான வார்த்தை ,உடல் நலமில்லாத போது ஒரு கனிவு ,அக்கறை என்று எதிர் பார்த்தே பல இல்லறங்கள் ,துறவற மேடைகள் ஆகின்றன .இவை எதுவும் கிடைக்காமல் ,மற்றவர்களுக்கு வெளியே எதுவும் தெரியவிடாமல் ,போலி புன்னகையுடன் ,அரிதாரம் பூசாமல் நடித்து கொண்டு இல்லறத்தில் இருந்து கொண்டே துறவறம் பெற்று விட்ட மனைவிமார்கள் தான் ஏராளம் .பவானியும் அவ்வாறு மனதளவில் துறவறம் பெற்றவர் தான் .
எங்கு அவர் மனைவியாய் தோற்றார் .........எங்கு கணவனிடம் தன்னை விளக்க ,தன் விருப்பு ,வெறுப்பு ,எதிர்பார்ப்புகளை சொல்லி புரிய வைக்க தவறினார் என்று எப்படி யோசித்தும் அவருக்கு விளங்கவில்லை .ஒருவேளை இவர் பேசும் முன்னே இவருக்காக சங்கரன் எல்லா முடிவுகளையும் எடுத்து விட்டு பின் கூறுவதால் ஒரு நிலைக்கு மேல் இவரிடம் எதையும் கேட்பதும் ,ஏன் கணவன் ,மனைவியின் "பர்சனல் டைம் " என்பதே பேசுவதற்கு கூட இல்லாமல் போய் விட்டது தான் .
குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.
ஒளவை பாட்டி சொல்கிறார்
பாடல்
தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்
எளிமையான பாடல் தான்.
தாயோடு அறுசுவை போம் ...குழந்தை பிறந்தது முதல் அது தன் தாய் செய்யும் உணவைத்தான் உண்கிறது. தாயின் கை பக்குவம் தான் ஒரு குழந்தையின் அடிப்படை சுவை. உலகில் எவ்வளவு பெரிய சுவையான உணவு செய்தாலும், "எங்க அம்மா செய்தது போல வருமா " என்று சொல்லுவது எல்லோருக்கும் வழக்கம். காரணம், சுவை என்ற ஒன்றை அறிவதே தாயின் உணவில் இருந்துதான். எப்போதாவது கணவன் அவனுடைய மனைவியிடம் "எங்க அம்மா கை பக்குவம் உனக்கு இல்லை " என்று கூறினால், மனைவி கோபம் கொள்ளக் கூடாது. மனைவி எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும், அம்மாவின் சாப்பாட்டின் சுவை தான் அடிப்படை (base ). அதை மாற்ற முடியாது.
தந்தையோடு கல்வி போம் ... ஏன் ? பள்ளி மற்றும் கல்லூரிக்கு பணம் கட்ட தந்தை வேண்டும், தந்தை இல்லாவிட்டால் பிள்ளைகள் சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டி இருக்கும், அதனால் கல்வி தடை படும் என்பதாலா ? இல்லை.எவ்வளவோ வீட்டில் , தந்தை இருப்பார். அதிகமாக சம்பாதிக்க முடியாமல் இருப்பார். ஏழை குடும்பமாக இருக்கும். தந்தை இருந்தும் படிக்க வசதி இருக்காது. அந்த மாதிரி இடத்தில், தந்தை இருந்தும் கல்வி போய் விடுகிறதே ?
அவ்வை சொன்னது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அல்ல.தந்தை மகனுக்கு வேண்டியதைச் சொல்லித் தருவான். அனுபவ பாடங்கள். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை " என்று சொன்னது அதனால் தான்.ஒரு மகனின் அல்லது மகளின் முன்னேற்றத்தில் அவர்களின் தந்தையை விட அதிக அக்கறை கொண்டவர்கள் யார் இருப்பார்கள் ? தந்தை, தான் கற்றவற்றை, தான் செய்த தவறுகளை, அவற்றை திருத்திய விதத்தை எல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவான். எனவே தான், "தந்தையோடு கல்வி போம்"
சேயோடு தான் பெற்ற செல்வம் போம் .... பிள்ளைகள் தவறி விட்டால் எவ்வளவு செல்வம் சம்பாதித்து என்ன பயன் ? அவர்கள் இல்லை என்றால் இருக்கும் செல்வத்திற்கு ஒரு மதிப்பு இல்லை.
மனைவி என்பவள் ஒருவனுக்கு அனைத்துமாகி நிற்கிறாள். தாயாக, தந்தையாக, உடன் பிறப்பாக, உறவினர்களாக, பிள்ளையாக ...எல்லாமாகி நிற்கிறாள்.மனைவியோடு அறுசுவை உணவு, கல்வி, வாழ்க்கை, செல்வம், உடல் வலிமை என்று எல்லாம் போய் விடும் என்கிறாள் அவ்வைப் பிராட்டி. மனைியின் முக்கியத்துவத்தை சொல்லும் அதே நேரத்தில், ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றும் அவ்வை கூறுகிறாள்.மனைவி என்பவள் ஒருவனுக்கு, தாயைப் போல அன்பு காட்டி, தகப்பனைப் போல அறிவுரை கூறி, உடன் பிறப்பைப் போல வலிமை கூட்டி, உறவுகளை போல வாழ்க்கைக்கு வளம் சேர்த்து இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட மனைவி போனால், எல்லாம் போய் விடும்.
இத்தனையும் தரும் மனைவியை , ஒருவன் எப்படி கொண்டாட வேண்டும் ....இது புரிந்து இல்லறத்தை சொர்கமாய் மாற்றும் வித்தை பல கணவன்மார்களுக்கு புரிவதில்லை .மனைவி மட்டும் அல்ல கணவனும் ஒரு இல்லறம் என்ற வண்டிமாட்டுக்கு இன்னொரு அச்சாணி தான் .இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் வாழ்க்கை பயணம் சுமையாகி விடும் .
கணவனை எப்படி சமாளிப்பது ,மகளின் வாழ்வை எப்படி காப்பாற்றுவது ,சோனா அண்ட் கோவை எப்படி விலக்குவது என்று புரியாமல் மண்டை காய்ந்து போனார் பவானி .
சட்டென்று ஒரு எண்ணம் வலுப்பெற தன் போனை எடுத்தவர் ஒரு நம்பருக்கு அழைப்பு விடுத்தார் .நல விசாரிப்புகளுக்கு பிறகு ,முக்கிய விசயத்திற்கு வந்தார் பவானி
"உங்களை பார்த்து பேசணும் ..........விஷயம் உயிர் ,மானம் போகும் அளவு சீரியஸ் ........நாம் சந்திப்பது வேறு யாருக்கும் இப்போதைக்கு தெரிய வேண்டாம் .........."என்றார் பவானி
எதிர்புறம் ஒரு அட்ரஸ் கூறப்பட்டது ."நாளைக்கு இந்த பார்ம் ஹவுஸ்க்கு வா பவானி .........உனக்கு கொடுத்து இருக்கும் வாக்கு படி உனக்காக என் உயிரையும் நான் கொடுப்பேன் ...........நான் இருக்கும் வரை உனக்கோ ,உன் குடும்பத்திற்கோ எந்த பிரச்னையும் வர விட மாட்டேன் ..........என் பிரச்சனையில் மதுராவுக்கு வந்த ஆபத்தை நான் கவனிக்கவில்லை தான் .............இனி இந்த தவறு நடக்காது ............மதுராவின் வாழ்வூ இனி என் பொறுப்பு ...."என்றார் எதிர் முனையில் இருந்தவர் .
"தேங்க்ஸ் ..........ரொம்ப நிம்மதியா இருக்கு இப்போ தான் ..........ரொம்ப கலங்கி போய் இருந்தேன் .......தேங்க்ஸ் ....இனி நான் நிம்மதியா இருப்பேன் ............நாளை பார்ப்போம் ."என்றவர் தன் அழைப்பை துண்டித்தார் .
அவர் அழைப்பை துண்டித்த மறுகணம் சங்கரனிடம் இருந்து அழைப்பு வந்தது பவானிக்கு .இருந்த ஆத்திரத்திரத்தில் அவர்க்கு அந்த அழைப்பை ஏற்க மனமேயில்லை தான் .ஆனால் சங்கரனின் மன நிலையை அறியாமல் எதையும் மேலும் பேச பவானி விரும்பவில்லை .ஏனென்றால் சங்கரனுக்கு அடிக்க வேண்டியது வேப்பிலை மரத்தையே அல்லவா ?????
"பவா !............."மனைவியிடம் ஆறு மாதம் கழித்து பேசும் நெகிழிவூ சங்கரனனின் குரலில் பொங்கி வழிந்தது .
"சொல்லுங்க .........."பவானியும் பாதிப்பில் தான் இருந்தார் .ஏறக்குறைய முப்பது வருட தாம்பத்தியம் ஆயிற்றே .