anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"வாட் .....கம் அகைன் .....சிவகாமி மேடம் ,ருத்ரா சார் இதற்கு ஒத்துக்கொண்டார்களா ....இது என்ன புது ட்விஸ்ட் ...நான் வேற தானே கேள்வி பட்டேன் ...."என்றாள் மதுரா .
"அவங்க உனக்கு பாட்டி முறை ....ருத்ரா உனக்கு மாமா முறை ....சும்மா சார் ,மேடம் என்று எல்லாம் சொல்லிட்டு திரியாதே .....அப்புறம் இதை பற்றி சூர்யாவிடமும் ,விஜய் இடமும் நீயே பக்குவமாக சொல்லி விடு ....நாளைக்கு அவங்களோடு உன் பெயர் அடிப்பட கூடாது இல்லை ....அவங்களும் மனதில் ஆசை வளர்த்துக்க வேண்டாம் .....நீயே சொல்லிடு ...."என்று பேசி கொண்டே இருந்தவர் ,கதவை தட்டி விட்டு சிவகாமி ,ருத்ராவோடு உள்ளே வர எழுந்து நின்றார் .
"அத்தை !என்ன நீங்க என்ன இங்கே ?"என்றார்
"மருமக இப்படி ஹாஸ்பிடலில் கிடக்கா .....ஆத்தாக்காரி ஒரு தகவல் சொன்னாயா எனக்கு ...விஷயம் தெரிந்து நானா அடிச்சு பிடிச்சு ஓடியாரேன் ...."என்றவர் ,"என்ன பேத்தி பொண்ணு .....எப்படி இருக்கே ....பார்க்க கொத்தவரங்காய் மாதிரி இருக்கே ..அதான் மயக்கம் போட்டு விழுறே .....திருமணத்திற்கு முன் நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கோ ....என் பேரனை கவனிக்கணுமே ..."என்றார் அவர் .
அதை கேட்டு பவானி முகம் மலர ,ருத்ராவின் முகம் அஷ்டகோணலாய் மாற ,மதுராவின் முகம் யோசனையை தத்து எடுத்தது .
"செஞ்சுட்டா போச்சு மேடம் ...."என்றாள் மதுரா
"ச்சூ இன்னும் என்ன மேடம் .....கூடம் என்று சொல்லிட்டு திரியரே ...அழகா ,உரிமையா பாட்டி என்று கூப்பிடு ராசாத்தி ....பவானி நீ போய் நான் குடிக்க காபி வாங்கி வா ....ருத்ரா !டாக்டர் கிட்டே போய் மதுரா சாப்பிடும் மாத்திரை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கோ ....டாக்டர் நல்லவர் தானே ,ஒழுங்கா வைத்தியம் பார்ப்பவரா என்று விசாரி ....."என்றவர் அவர்கள் சென்றதும் ,மதுராவின் கட்டிலின் அருகே அமர்ந்து ,"சொல்லு பேத்தி பொண்ணு என் பேரனை கட்டிக்க உனக்கு சம்மதமா ?"என்றார் .
வெளியே வந்த ருத்திராவிற்கு எங்கேயாவது ஓடி விடலாம் போல் தோன்றியது .கையில் மட்டும் ராஜீ கிடைத்தால் அவளை உண்டு இல்லை என்று செய்யும் வெறியே வந்தது அவனுக்கு .அவளும் காலையில் இருந்து விடாமல் இவனை அழைத்து கொண்டு தான் இருக்கிறாள் ....இவன் கால் அட்டென்ட் செய்தால் தானே ....
'இவள் அப்பா விஷயத்தை சொல்லி இருப்பார் ....உடனே மேடம் டென்ஷன் ஆகி இருப்பாங்க .....இவ கால் செய்தால் உடனே அட்டென்ட் செய்யணுமா என்ன ....இத்தனை வருடம் தவிக்க விட்டே இல்லை ....படு ...நல்லா அவஸ்தை படு .....இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்டுறேன் ...வந்து மூக்கு முட்ட கொட்டிக்கொ ....'என்று உள் மனம் உலைக்களமாக பற்றி எரிந்து கொண்டு இருந்தது .
பாட்டியின் முடிவிலும் ஏதும் தவறு இல்லை என்று தான் அவன் சொல்வான் .....பிடி கொடுத்தலாவது இவளுக்காக பாட்டியிடம் பேசலாம் ....முடியவே முடியாது என்பவளை என்ன தான் செய்வது ?