All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!

இனிய தோழி,

காத்திருந்த காதலில்...
பெண்ணவள் நித்யசொந்தம் கண்டவன்
அதிரடியாய் அணைக்க...
அடங்கியது பூவிதழே!

பெண்ணவள் ஆத்மபந்தம் கண்டவன்
ஆசுவாசமாய் அணைக்க...
முடங்கியது பூந்தளிரே!

பெண்ணவள் சித்தாந்தம் கண்டவன்
ஆவேசமாய் அணைக்க...
இடங்கியது பூங்கொடியே!

அடங்கிய சொந்தம்
அன்பினில் உயிர்த்தது!
முடங்கிய பந்தம்
பண்பினில் சிலிர்த்தது!
இடங்கிய அந்தம்
வம்பினில் விதிர்த்தது!

பாண்டியனின் பாவத்தில்
பாவை அவள் பரிதவிக்க,
காதல் மகள் சுபாவத்தில்
காளை அவன் கவிபடிக்க
தாம்பத்திய சொந்தத்தில்
தாத்பர்யம் தரம் சுகமே!

மீராவின் இசையில்
கண்ணனின் ஆரோகணம்!
காதல் தேடாத கண்ணனின்
காதல் ராதை இவள்...!
கூதல் மூடாத ஆணவனின்
கூதல் போதை இவள்...!
நேர் கொண்ட பார்வையில்
நெருக்கமாய் நின்றாலும்
தேடாத சொந்தத்தில்
தேவதை தவமிருக்க...
வரம் கொடுக்க மாதவனும்
வருவானோ தேரினிலே!


ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா!
பல்லவியின் பரிமாணத்தில்
அனு பல்லவியின் பகுமானம்!
சரணத்தின் சாகரத்தில்
சர்வமும் சமரசமென்றால்
விரசமில்லா சரசத்தில்
விருந்தாகும் காதலின் இலக்கியப் பாடல்!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி




வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

Subasini

Well-known member
ராவணன்...

ராதையை ராதைக்காக நேசிக்கும் ராவணன்...

கணவனின் மார்ப்பில் துயில் கொண்ட படியே கண்ணனிடம் பேசும் ராதை...
அழகான சீன் ஸ்ரீ மா...

இது ஒன்று தான் அவன் எப்படி மாறியது என்பதற்கு உதாரணம்...

எங்கும் அவளை பற்றி யோசிக்காமல் பழி என உறுமிய சிங்கமாய் சிலிர்த்து நின்றவனை தன் கலங்கமில்லா நிலா முகத்தில் விரும்பியே மயங்கி கிறங்கி இருக்கும் இவன் தான் கிருஷ்ணார்ஜூனன்...

மயங்கும் கணவாய்
மயக்கும் காவலனாய்
மறுக்கும் துணைவனாய்
மண்டியிட்டு மருக்குபவனாய்
மார்பில் கிடைத்தி
தாலாட்டும் மணாளனாய்
அவளின் மித்தரனை
மதிக்கும் மாதவனாய்
என்றும் எங்கும் அவள்
வாழ்வில் அவன் மட்டுமாய்...

அழகு என்பது புரிதல் என்பது தான்... அருமை ஸ்ரீ மா...
அவனை மட்டுமே யோசிக்கும் மனையாளை பற்றி மட்டும் சிந்திப்பது தான் சிறந்த கணவன்...

நம்ம பாண்டி பையன் தான் இன்னும் ரசிக்க வைக்கிறான் 😂😂 அவள் கண்டிப்பாக மாற்ற அவன் கையாலும் விதம் சரி தான் உண்மையில் சிறந்த காதலன் அவன் மட்டுமே தான் 😂😂😂...

அடுத்த எபி வெயிட்டிங் ஸ்ரீ மா
அருந்ததி மூளைக்குள்ள ஓடுது ஏன் தெரியலை ஸ்ரீ மா...😂😂😂
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? எல்லா ஜோடிகளின் உணர்வுகளையும் ஓரே பதிவில் காட்டிய உணர்வு... அருமையான பதிவு...

அதிரடியான நந்தினியை தன் அதிரடியில் பேசாமடைந்தையாக்கி தாம்பத்திய வாழ்க்கையில் முதல் அடி வைத்த மணி...

உதய் மஞ்சு எதார்த்தமாக அழகாக வாழ்க்கை பாதையில் காலடி பதித்தது அழகு...

ஆனால் அச்சோ! பாண்டியனுக்கு மட்டும் ஏன் இப்படி?? சரிதா அவனை எப்போது புரிந்து கொள்வாள்? இருந்தாலும் சரிதா ரேப் என்ற வார்த்தையை சொல்லி அவன் மொத்த காதலையும் அசிங்கப்படுத்தி விட்டாளே... காதலன் பாண்டியன் அவன் காதலை சரிதா புரிந்து கொள்ளும் வரை படையெடுக்கும் செயல் அழகோ அழகு... கலக்குகிறான் பாண்டியன்... அற்புதமான காதலன்... காதலில் இவன் கஜினி முகமது தான்...

கிருஷ் அருந்ததியை கண்காணித்து கொண்டு தான் உள்ளானா? கிருஷ் சொல்வது சரி தான் மனோ நேரடியாக தாக்கினால் பரவாயில்லை முதுகில் குத்தினால் மொத்த குடும்பமும்??? இனி மணியும் இருவரையும் கண்காணிப்பானா?

கண்ணன் பிறந்த நாளில் அவனுக்கு வாழ்த்து சொன்ன ராதை தம்பதியர் நிலை அழகு என்றால் அதை கண்டு உள்ளம் மகிழ்ந்து பூரித்த கண்ணன் நிலை அழகோ அழகு...

ராதிகா கண்ணனுக்கு பிறந்த நாள் கொண்டாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது மற்றும் liftல் அவனையே ரசித்து கொண்டு வந்த ராதுவை கண்ட கண்ணனுக்கு சந்தேகம் முதல் அடி வைத்து இனி மேல் அவளை ஆராய்வானா? அவள் காதலை புரிந்து கொள்வானா?

இப்போதும் பல கேள்விகள் மனதில்... கேள்விக்கான பதிலை எதிர் நோக்கி...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 

Advikasri

New member
பாண்டி😍😍😍😍🔥🔥🔥🔥
நீ போகதடா, அவளே வரட்டும்😏😏😏.
மனோ பய வேலைய ஸ்டார்ட் பண்ணிடான் போல🙄🙄🙄
ராது சோ ஸ்வீட்🤩🤩🤩
 
Top