All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!

இனிய தோழி,

ராதையின் காதலில்
ராகவன் தேடலில்
ரகசிய மோதலில்
உரசிய கூடலில்
பேசிய பாஷைகள்
கூதல்...
போதையின் ஓசைகள்!
காதல்...

போதையின் ஆசைகள்!


காதலின் தருணங்கள்
அரங்கேறும் நேரம்...
காதலர் கனவெல்லாம்
கரை சேரும் காலம்...!

மோதலின் தருணங்கள்
அரங்கேறும் நேரம்...
மூர்க்கர்கள் நனவெல்லாம்
முறை மாறும் கோலம்...!


அமர்க்களம் போடும்
கல்யாணக் கோலங்கள்!
போர்க்களம் நாடும்
கலிகாலக் கோலங்கள்!
குறி வைத்த வில்லவன் வேகத்தில்
புதிர் வைத்த வல்லவன் விவேகத்தில்
வெறி கொண்ட வில்லனவன் வேசத்தில்
எதிர் கொண்ட கள்ளனவன் ஆவேசத்தில்
விதிர்த்திட்ட உள்ளங்கள்
விபரீத வெள்ளங்கள்
புயலாய் சுழன்றிட....
புதைக்குழிக்கு இலக்கு
புல்லுருவிக்கு வழக்கு
இலக்கும் வழக்கும்
கலக்கும் நேரம்
காவியக் காதல்
அரங்கேறும் திண்ணம்!



வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

TM Priya

Well-known member
மணிக்கும் நந்தினிக்கும் திருமணம் முடிந்துவிட்டது சூப்பர் மா..பரசு,மனோ வாங்க வாங்க வந்து அர்ஜுன்டா நல்ல வாங்கிட்டுப் போங்க...பாண்டி எந்த இடத்தில் இருந்தாலும் நீ ரொம்ப தெளிவா இருக்க:ROFLMAO::ROFLMAO::love:waiting for next epi srimam
 

Subasini

Well-known member
ராதைக்கேற்ற ராவணன்...


ரொம்ப எதார்த்தமாக தான் அவள் இருக்காள்...


வேறெதை பற்றியும் சிந்திக்காமல் அந்த வீட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ தயாரான ராதா...


எந்த காலக்கட்டத்திலும் மாமியார் மாமியார் தான் நிறுப்பிக்கும் மாதவி...


மருமகள் என்றாலே பிடிப்பது கஷ்டம் அதுவும் பிடிக்காத மருமகள் ரொம்ப கஷ்டம் தான்...


இருந்தாலும் தன் புகுந்த வீட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ முயலும் ராதா...


பழி வாங்க வந்தவன், தன் பழிக்காக அவளை பலியாக்க துடித்தவன் அவளை பள்ளி செல்லும் பிள்ளையாய் சீராட்டிகிறான்...


யோசிக்க வேண்டிய விஷயம்...
அவ்வளவு காதலா????


அவள் வார்த்தைகள் ஏழு வருடங்கள் உறங்க விடாமல் தொரத்த,அது இந்த சில தினங்களில் மறைய காரணம் எது....


அவளே தான்!!!


அவள் முகம் மற்றும் அவள் அகம் ❤️


காவியத்தில் கண்ணனின் காதல் ராதைக்கு யாமுனா நதி கரையோடு நின்றுவிட்டது அதே போல தான் இந்த ராதைக்கும்... கண்ணனின் பாசம் கணவன் வரும் வரை மட்டுமே...


மனதளவில் தெளிவாக இருக்கும் அனுராதா இந்த தெளிவு தான் அவள் படித்த படிப்பின் பிரதிபலிப்பாக உணர முடிகிறது...


சென்னை பயணம் இன்னும் பல திருப்பங்களை கொண்டு வரும் என எதிர்பார்பை ஏற்படுத்துகிறது ஸ்ரீ மா...


பாண்டியன் காதலை சரிதா உணர தொடங்கினாள் என்றாலும் அதில் கொஞ்சம் அழுத்தம் வேணும் கேட்டுக்கொள்கிறேன்...


அவன் மனம் வெள்ளை, அதிரடி மன்னன் தான் என்ற போதும் ஆரம்பத்தில் இருந்தே அவன் மனம் சரிதா என்று தான் துடித்தது...
அவள் தான் தன் பெயருக்கு ஏற்றபடி சரிந்து போய்கொண்டு இருக்கிறாள் அவள் காதலில் ❤️❤️❤️


எல்லா ஜோடிக்கும் ஒரு வசந்தம் வந்திருச்சு ஆனால் கண்ணன் என்பவனுக்கு அன்பு மட்டுமே இருந்தது... காதல் அவனை எப்படி சீராட்டும் என படிக்க ஆவலாக இருக்கிறேன் ஸ்ரீ மா


செம முடிய போகுது சொல்லுறீங்க ஆனாலும் கடைசி எபி வரை என்ன நடக்கும் ஏன் இப்படி என்ற கேள்விக்கு பதிலை தேட விடறீங்க ஸ்ரீ மா 😁😁😁😁 ரொம்ப ஆர்வமாக படிக்கிறேன் ஒரு ஒரு எபியும்
அடுத்த எபிக்கு வெயிட்டிங் 😍
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்.. நேற்று என்னால் comment செய்ய முடியவில்லை.. எங்கள் deptல் covidஆல் ஒருவர் இறந்த செய்தி எங்கள் எல்லோரையும் அதிர்வடைய செய்து விட்டது..
 

ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்.. நேற்று என்னால் comment செய்ய முடியவில்லை.. எங்கள் deptல் covidஆல் ஒருவர் இறந்த செய்தி எங்கள் எல்லோரையும் அதிர்வடைய செய்து விட்டது..
ஓகே மா... இப்போது கேள்விப்படும் விசயங்கள் அப்படித்தான் இருக்கு. அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். பத்திரமாக பாதுகாப்பாக இருங்கள் தோழி... நேரம் இருக்கும் போது கதை படியுங்கள்.
 

Banumathi Balachandran

Well-known member
பாண்டியா கலக்கிற போ...

மனோ என்ன திட்டம் போடுகிறானோ அதை கிருஷ் தடுத்து நிறுத்தி விடுவானா?

ராதிகாவின் காதலை அறிந்து கொள்வானா கண்ணா?
 
Top