அனுராதை கிருஷ்ணார்ஜூனனாக...
பெண் மனம் என்ன வென்று தெரியலை.மனைவியை புரிந்து கொள்ள முயற்சி செய்யலை...
பழி பழி என்று அவன் சிதறிய வார்த்தைகள் தான் அவளை பலவாறு வேதனை படுத்த, சந்தர்ப்ப சூழ்நிலையால் தன்னால் அவனுக்கு ஏற்ப்பட்ட காயத்தை தீர்க்கும் மருந்தாக ஒரு மருத்துவராக அவள் தன் கணவனுக்கு நியாயம் செய்ய துணிந்த பெண்....
அவள் மனதில் கணவன் என்ற எண்ணம் இருந்தது தான் என்பதை அவளே தன் வார்த்தை கொண்டு சொல்லி விட்டாள்...
அவனுக்கு தான் ஆத்திரம் கண்ணை மறைத்தது...
என்ன சொல்லி என்ன பெண் மனம் என்பது தெளிந்த நீரைப் போல தான்....
அதில் தன் அகங்காரம் என்னும் கல்லை எறிந்து கலக்கிய பின் அவளிடம் அதே தெளிமையை எதிர் பார்த்தால் எப்படி .
அதற்கு சமயம் எடுக்கும் என்ற அறிவி இந்த அமைச்சருக்கு தெரியலை பாருங்க....
அப்பாவி அபலை கிண்டல் பண்ணும் மக்களே இந்த எபி ஆழ்ந்து படிச்சா புரியும் அவள் அப்பாவி தான் என்று....
கல்வி அறிவு என்பது வேறு...கபடமற்ற வெள்ளை மனம் என்பது வேறு என புரிதல் இங்கே அவசியம்
....
மணாளன் இவனே என பதிந்த
உன் உருவம் பழி வாங்க என் முன்னே வருமமேயானால
பலியாக என்னையே தருவேன்...
கணவனாக நான் வரித்த
உறவை களவாட யாரேனும் வருவாறேயானால் பலியெடுக்க
நானே வருவேன்...
காதல் காவியமாகலாம்
காமம் கலவியில் கலக்கலாம்
என் ஆழ் மனநேசம்
அந்த மழைநீர் போல
நீ தடுத்தாலும் உனை
நனைத்தே உருகி உறையவைக்கும்...
ஸ்ரீ மா...
அவள் அவனை புரிந்து கொள்ள வில்லை, அவள் அதை பேசினா இதை பேசினா என்று சொல்லி சொல்லி அவளை அவள் கேரக்டர் என்ன அழகாக சொல்லி இருக்கீங்க...
அவனிடம் அவ சொல்லி இருக்கனும் தானே அவ மன கஷ்டத்தை கேட்ட மக்களே இந்த டெரர் அவ பார்த்ததே ஒருத்தன அடிக்கும் போது தான் அப்போ எப்படி அவனிடம் தைரியமாக சொல்லுவா
...
எல்லாம் புரிந்து சும்மா சப்பை கட்டு கட்டாதீங்க
அவளுக்கு கண்ணனுக்கு ஆன உறவை அழகா சொல்லியிருக்கா எங்க ஹீரோயின் உங்க ஆளுக்கு அது புரிந்ததால் தான் இன்னைக்கு எபியில் வரும் போன் கால் சீன்
ஸ்ரீ மா அடுத்த எம்பிக் வெயிட்டிங்..மாலை என்ற நேரம் ரொம்ப நீண்ட நெடியதாக தோனுது
எனக்கு...
காத்திருப்பு காதலில் மட்டும் இல்ல நமக்கு பிடிச்சவங்க எழுதும் கதை படிக்கிறதிலும் இருக்கு சொல்லிக்கொண்டே