All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Thani

Well-known member
யப்பா ..!என்ன பொண்ணு இந்த அகிலா 😡கூடப்பிறந்தவள் என்றும் பாக்காம என்ன பேச்சு பேசினாள் 😡
இந்த அபியும் அண்ணனுக்காக அந்தினை அகிலாக்கு தாரவாக்க ரெடிஆகிறாளோ..???😡
முதலில் இவளுக்கு நாலு சாத்து சாத்தணும்😡

முன்னோட்டம் சூப்பர்👌 இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்கள் என்று தோணுது .....அவன நம்பி கையை கொடு அபி😀
 
நான் என்ன சொல்லறது,அதை எப்படி சொல்லறது..அதிரசத்தை அப்படியே கடிச்சி சாப்பிட தோணுதே.அபிகாக விட்டுக்கொடுக்கறேன் அவன மாதிரி ஒருத்தன் கிடைக்க அகிலா மாதிரி என்ன வேணா செய்யலாம்.
இன்னைக்கு தயிர் சாதம் இறங்கி வந்தா அதிரசம் விலகிடுச்சி முடியல இவங்க ரெண்டு பேரோட போராட என்னால.

அபி அகிலாக்கு குடுக்கற பதில் எல்லாம் செரு**படி அக்கா லவ்வை பாத்தும் ஆங்காரம் குறையலனா வேப்பிலை அடிச்சி தான் விடனும்.

ஆனாலும் உறவை கெடுக்காம அதிரசம் நல்லாவே பேய் ஓட்டுவான்.அகியோட ஆங்கார பேயை..

அபி இன்னைக்கு இருந்த நம்பிக்கை ஒரு வருஷம் முன்னாடி இருந்திருந்தா இவ்ளோ மனவேதனை பிரிவு ரெண்டு பேருக்கும் இல்ல.

அப்புறம் முக்கியமான சந்தேகம் அதிரசம் எதுக்காக அவளை கெஸ்ட் ஹவுஸ் வர சொன்னான்.அதை நீங்க சொல்லல.
 

Divya kishore

Active member
அகிலா பாப்பா இது சும்மா சாம்பிள் இதுக்கே உனக்கு உசுரு போகுதா இனியும் அவன்கிட்ட இவ வச்சிகிட்ட பெரிய கேச போட்டு மாட்டி விடுவான்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

இன்னுமா அபி அவளுக்கு பாவம் பாக்குற தங்கச்சி தங்கச்சின அவ திரும்ப திரும்ப முதுகுல குத்துவ 🤭🤭🤭🤭

இன்னக்கி அகிலாவ வச்சி செஞ்சது பத்தல பத்தல இன்னும் இன்னும் எதிர்பார்கிறேன் 🙄🙄🙄🙄

பணமா வேணும் பணம் அத வச்சே திருடி பட்டம் கட்டிட்டான் 😃😃😃😃😃😃🤭🤭🤭🤭🤭🤭

அகிலாகுனு ஒரு பிராடு வராமல போவான் அதுக்காக வெயிட்டிங்😋😋😋😋
 

Thani

Well-known member
அகிலாவை வச்சு செஞ்சானா ...😀அபியின் தீரா👌சூப்பர்😀என்னா வாய் இந்த அகிக்கு😡
தீரா.ரமி இருவரும் புரிந்து கொண்டார்களே ...அபி ...அரசனின் கைபிடித்து அவனின் போக்கிலே போக ரெடி 😀
சூப்பர் ❤️
 

Vaishanika

Bronze Winner
அகிலாவோட திமிருக்கு சரியான பதிலடி அரசன் குடுத்தான். சும்மாவே ஒரு வார்த்தை சம்பந்தப் பட்டவங்களை சொன்னா வச்சு செய்வான். இதுல இந்த அகிலா அவன் உயிரா நினைக்கிற அபிய சொன்னா வுட்டுருவானா? அதுவும் சொடக்குபோட்டு சவால் வுடறா. சும்மாவே ஆடுவான் சலங்கை கட்டுனா .அதான் அகிலாவுக்கு ஆப்பு வச்சிருக்கான். ஆனா இதுக்கெல்லாம் அகிலா திருந்தறதுங்கிறது எனக்கென்னவோ சந்தேகமாத்தான் இருக்கு.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

திட்டம் போட்டு
வட்டம் போட்டு
கட்டம் கட்டினாலும்
பித்தலாட்டம் ஆடும்
மாயா லோகத்தில்
மாயமாய் போகாதோ
பொய்மானின் ஆட்டமிங்கு!

வேடனின் குறிக்கு
வசமான குள்ள நரி
தந்திரம் புரிந்தாலும்
மந்திரம் புரிந்தாலும்
இயற்கையின் நியதிக்கு
சிங்கத்தின் ஈடாமோ...?

அந்திரன் ஆட்டத்தில்
அகப்பட்ட அபலைக்கு
சகலமும் தடுமாற
கரை மோதும் மீனாக
துடிக்கின்ற வேளையிலே...
தன்னுயிறே பெரிதென்ற
சுயநலமே தீர்வாகுமோ...!

காதல் கொண்ட கோதைக்கு
காதல் சொன்ன தேவனுக்கு
காதலும் கூதலும்
கரை கண்ட வித்தையன்றோ!
தீரா காதலில்
தவிக்கின்ற ஆரணங்கு
தீர்வான தேவனுக்கு
தன்னையே தந்திங்கு
தன் காதல் காட்டி நிற்க...
ஆறாத காதலில்
ஆர்ப்பரிக்கும் அரசனவன்
ஆத்மார்த்த ராணிக்கு
தன்னுணர்வை தந்திங்கு
தன் காதல் மீட்டி நிற்க...
நிமிர்ந்திட்ட வல்லியவள்
துணிந்திட்ட காதலிலே
ஆசுவாசம் தேடி நிற்கும்
அந்திரனரசவன்...
ஆடுபுலி ஆட்டத்தில்
சிக்கியதோ சிறு நரியே!

வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Top