இரண்டாம் பாகம் ஆரம்பித்த விதம், ஆரம்பமே அதிரடி தான்... உங்கள் எழுத்தில் அனைவரின் மனநிலையும் எப்படி இருக்கும்னு படிக்கும் போது சந்தோஷமாக இருக்கு... அதே சமயம் வேதனையாகவும் இருக்கு...
தீரன்
இவனை நான் என்ன சொல்றது.... ஹீரோவை போட்டு தள்ள சொல்ற அளவுக்கு இவன் எங்களை சொல்ல வச்சிருக்கான்னா பாருங்க... ரொம்ப படுத்தி எடுக்கிறான். ஆனால் இனி இவனோட கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது இவன் வேற மாதிரி ( நல்லவனா) தெரிய நிறைய விஷயம் இருக்கிறது... இவன் எதை இழந்து எதை மீட்டெடுக்க போறான்னு இனிமேல் தான் வரும்னு நம்பறேன்...
அபிராமி:
கண்ணனுக்கு காத்திருந்த மீரா காதலை மட்டுமே கொண்டிருந்து காத்திருந்தாள்.
இவளும் காத்திருந்தாள்... தன்னவனுக்கு காதலை கொடுத்து அவனிடம் இருந்து இருமடங்கு காதல் கிடைக்க...
கிடைச்சது என்னவோ... வேசி என்ற சொல் மட்டும்....
இந்த உலகத்தில் ஒன்றை படைக்கவும் அழிக்கவும் செய்யும் ஆயுதம் சொல்தான்...
பார்க்கலாம் இருபேரையும் சேர்க்குதா? பிரிக்குதா? என்று...
மஹா, கௌஷிக் நிலைமை இன்னும் தெளிவாக தெரியவில்லை... அவன் கடந்த காலத்தை நினைக்கும் போது
அவன் செஞ்சது தவறு தான்...
அவனை அப்படி செய்ய தூண்டுவது அவளோட சொல் தானே!
எல்லோரும் நலம் வாழ
தன்னை அழித்துக் கொண்டு
உயிர் வாழ ஒன்றே காரணம்...
உனக்குள் நானும்
எனக்குள் நீயும் இருக்க
பிரிவென்பது உடலுக்கு தான்...
மனதிற்கு இல்லை...
நீ மீராவாய் காத்திருந்தால்
உன்னை தேடி சரணடைவேன்
கண்ணனாய்....
இதுக்கு மேல என்னால சொல்ல முடியல ஸ்ரீமா.... கதை அவ்ளோ சூப்பரா இருக்கு.... வாழ்த்துகள் ஸ்ரீமா