All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ama ama..பார்ரா !! சரணுக்குமா? View attachment 34099
வா சூப்பர் ஜீ. அழகியை ஆழியிலும் அந்திரனை லாரியின் அடியிலும் sri மேடம் அனுப்பியதை உங்கள் கவி வடிவில் அருமையாக சொன்னீர்கள். காதல் என்றும் தோற்பதில்லை.காதலர்கள்தான் தோற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய இடம் அது. நானும்அடுத்த பாகத்துக்கும் உங்களின் அடுத்த கவிக்காகவும் வெயிட்டிங்."அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.
இனிய தோழி,
பாசத்தின் பார்வையில்
பந்தமாய் வந்தவள்
நேசத்தின் கோர்வையில்
சந்தமாய் இருந்தவள்
துவேசத்தின் பிடியில்
விரோதியாய் நின்றதென்ன...?
பேசிவிட்ட வார்த்தைக்கு
நீதானே பொறுப்பு...!
சொல்லாத சொல்லுக்கு
விலையில்லை!
சொல்லிய சொல்லுக்கு
விலையுண்டே!
பழியாய் விலை சொன்ன
வேடனவன் வழக்கில்..
பலியாய்ப் போனாளே
அபிராமவல்லியவள் இலக்கில்!
பழி பழி என்று
பாவியாய் போனாயே!
பலி பலி என்று
ஆவியாய் போனாயோ!
காதலே...!
உன்னால் வாழ்ந்தவர்
கோடி சுகம் கண்டார்
உன்னால் தாழ்ந்தவர்
வாடி அகம் விண்டார்!
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
வீழாத காதலே...
உன் வீறுகொண்ட வாழ்வினில்
சாதலும் கூதலே!
தனக்கென வாழாத
வஞ்சியவள் வாழ்வில்...
எனக்கென மாளாத
ஏந்திழையின் ஏட்டில்...
காதலும் கற்றுணர
மன்மதனும் அழைத்தானோ..?
ஆத்மார்த்த காதலுக்கு
அர்த்தம் சொன்ன அந்திரனே...!
ஆடாத ஆட்டமெல்லாம்
ஆடித்தீர்த்த தந்திரனே...!
விதியோடு விளையாட
வினையான வேடனுக்கு...
மதியோடு விளையாட
துணையான தேவனுக்கு...
காதலின் விளையாட்டு
கற்றாலும் புரியாதோ...!
தங்கை தங்கை என்று
தாராதரம் தவறிவிட்டாய்...!
பேசிப் பேசி நின்று
வேசியென தூற்றிவிட்டாய்...!
காலத்தின் கட்டளைக்கு
வேடனாய் வந்தவன்
வேட்டைக்கு வந்தாலும்
தேவனாய் வென்றாலும்
அரசனவன் அநீதிக்கும்
அரங்கனிடம் தீர்ப்புண்டே!
அரங்கனவன் ஏட்டில்
திருமகளே ஆனாலும்
சாபம் பெற்ற காரிகையே!
பாற்கடலின் நாயகியே
சாபம் தீர தவமிருக்க...
கலியுக் காதலிக்கு
தவக்காலம் ஆரண்யமே!
சீதையவள் ஏட்டில்
ராமனே ஆனாலும்
சாபம் பெற்ற அவதாரமே!
அவதார மூர்த்தியே
சாபம் தீர்க்கத் தனித்திருக்க...
கலியுகத் தேவனுக்கு
அஞ்ஞாதவாசம் அபராதமே!
அழகியின் அந்திரன்
அரிதாரம் பார்த்து
அதிர்ந்திட்ட நடையில்
விதிர்த்திட்ட கருவில்
சில்லிட்ட மனமும்
சிலிர்த்திட்டதே!
வாழ்த்துக்கள் தோழி, அருமை அருமை தோழி. காத்திருந்த காலத்துக்கு முத்தாய் மிளிர்ந்த கதையின் அடுத்த பாகத்துக்கு ஆவலாய் காத்திருக்கிறோம். நன்றி தோழி.
11Today ud illaya mam Waiting