All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'என்னவளே' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அர்ச்சனா... அந்த பைல எடு..." இன்னொரு பைலை புரட்டிக் கொண்டே அவன் கையை நீட்ட அவளிடம் அசைவில்லாமல் போகவும் நிமிர்ந்து பார்த்தவன் அவள் தன்னையே பார்த்திருப்பது கண்டு சொடக்கிட திடுக்கிட்டு கலைந்தாள் பெண்....



"சார்..."



"அந்த பைல எடுன்னேன்.." என்றான் அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே...



அதில் அசடு வழிந்தவள் அவசரமாக அவன் கேட்டதை நீட்ட மீண்டும் ஆராய்ச்சியாய் பார்த்து வைத்தவன் எடுத்து கண்களை அதில் சுழல விட நாட்டிபிகேஷன் வந்து விழுந்தது மொபைலில்...



"நான் உன்ன சந்திக்கணும்" உடல் கோபத்தில் நடுங்க அந்த மேஸேஜையே வெறித்தவன் உடனே நண்பனுக்கு அழைத்தான்.



முதலில் அழைப்பு துண்டிக்கப்பட்ட மீண்டும் மீண்டும் அழைத்ததன் பின்னரே எடுக்கப்பட்டாலும் மறுமுனையில் மயான அமைதி.



"கிருஷ்...ராம் என்ன சந்திக்கனும்னு சொல்றான்"



"...."



"நா என்ன பண்ண?"



"...."



"அப்போ நா உயிரோட இருந்தாலும் இல்லன்னாலும் உனக்கு எதுவுமில்ல ரைட்...?"



"இடியட் மாதிரி பேசாத ரக்ஷன்" மறுமுனையில் வெடித்திருந்தான் நண்பன்.



அவன் பேசியதில் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிந்தாலும் அதற்கு ஆயுற் காலமே இல்லை என்பது அவனுக்குமே தெரிந்து தான் இருந்தது.



"தே.. தேங்க்ஸ் டா... "



"மறுபடியும் நீ நடிக்கலங்குறதுக்கு என்ன ஆதாரம்?" நண்பன் வார்த்தைகளில் மனம் ரணமாய் வலிக்க



"நான் எப்போவுமே உனக்கு துரோகியாவே இருந்தட்றேன் டா... ரொம்ப நன்றி இத்தன வருஷ புரிந்துணர்வுக்கு.... இனி என்னால உனக்கு கஷ்டம் வராது... என் கூட பேசறது நெனச்சி நீ வெறுப்படையவும் தேவயில்ல... இதுவே நான் உன்ன கடசியா அழைச்சதா இருக்கட்டும்" சட்டென துண்டித்தவன் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு நிமிர்ந்து அமர அவனையே கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்....



***



விமானம் தரையிறங்க எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தார் ராமலிங்கம்.



ரக்ஷன் மீது சந்தேகம் எழுந்திருந்ததில் அப்படி மேஸேஜை அனுப்பச் சொல்லி பணித்து விட்டாலும் அவனை சந்திப்பது இப்போதைக்கு முடியாத காரியமாகவே தோன்றியது.



"சார்... போலாம்" அவருக்கு முன்னே கார் வந்து நிற்க சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே ஏறியவர்



"பெஹல ஏரியாவுக்கு போ" என்றார் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறே...



அதில் அருகில் அமர்ந்திருந்தவனின் உடல் தூக்கிப் போட அந்த செய்தியை கதிருக்கு அனுப்புவதற்குள் அவன் பட்ட பாடு... ஹப்பப்பா!!!



......



வர்ஷினி சமையலறையில் இருக்க ரூமில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் கதிர்.



ராமலிங்கம் கல்கத்தா வருவது அவனுக்கு அவ்வளவு சரியாக படாத அதே நேரம் தான் இங்கு தான் இருப்பது தெரிய வந்தால் நிச்சயம் ஆபத்து தான்!!!



இதில் ரக்ஷன் வேறு அவன் டென்ஷனை ஏற்றிருக்க ஒழுங்காக முடிவெடுக்க முடியாமல் தத்தளித்தது மனது!!!



....



"ஸ்ரீ... எதுக்குமா இங்க வந்த... நா பாத்துக்குறேன்... போ.. போயி படிக்குற வேலைய கச்சிதமா முடிச்சிட்டு அப்பறமா சமையல் கட்டு பக்கம் வாடா...." தன் பிடித்து ஒரு உருவம் பாசமாய் தள்ளி விட்ட உணர்வில் தலை அப்படியே கிறுகிறுத்தது பேதைக்கு...



வியர்த்து வழிய நின்றிருந்தவளின் உடல் வெளிப்படையாகவே நடுக்கத்தை காட்ட "மா....மா... " அவள் சிறு முனகல் ஒலி காளைக்கு கேட்காமலே போய் விட்டதில் தலையை கைகளால் தாங்கியவாறு அப்படியே மடங்கி அமர்ந்தாள் பெண்.



"அப்பாக்கு ஹாஸ்பிடல்ல கொஞ்சம் வேல அதிகம் போலடா... நீயும் கொஞ்சம் உதவியா இருக்கலாம்ல?" ஆதங்கப்பட்ட குரல் இன்று நடந்தது போல் இருந்ததில் நெஞ்சின் ஓரம் சுளீரென வலிக்கவும் "மாமா..." கொஞ்சம் சத்தமாக முனக மனைவியின் குரல் ஈனஸ்வரத்தில் கேட்டதில் அடித்துப் பிடித்துக் கொண்டு சமையலறை வந்தான் கதிர்.



"கண்ணம்மா.... " அவளருகே ஒடிச் சென்று தானும் தரையில் மண்டியிட



"மாமா... எ.. என்னால முடில... ப்ளீஸ்..." அவள் வலியை பொறுக்க முடியாமல்



"வ... வரு.. வரு... இங்க பாரு.... என்ன பாருடா... வ.. வரூ..." பதற்றமாக தட்டியவன் அவளின் கவனம் திசை திரும்பாதது கண்டு "மதீஈஈ.... " கத்திக் கொண்டே உலுக்க அதிர்ச்சியாய் சில கணம் நின்றவள் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்கு திரும்ப நெஞ்சோடு சேர்த்தணைத்தவன் "வர்மா..." கத்தினான் ஹை டெஸிபலில்....



"க்யா பாய்... தும் க்யான் பரேஷான் ஹோ? "



[[ kya bhaee tum kyon pareshaan ho_என்ன ணா... ஏன் பதட்டமா இருக்கீங்க? ]]



பதற்றமாய் நுழைந்தவன்



"பாபி... பாபி கோ க்யா ஹுவா பாய்?"

[[ bhaabhee ko kya hua bhaee_ அண்ணீஈஈ... அண்ணிக்கு என்னாச்சு ணா? ]]



அவள் நிலை கண்டு இன்னும் பதற்றமானான்.



"த... தண்ணி... தண்ணி எடுத்து தா..." அவளுக்கொன்று என்றால் மட்டும் ஏன் தான் அவனுக்குள் அத்தனை பதற்றமோ???



உடனே தண்ணீரை எடுத்து நீட்ட மயங்கப் போனவளின் முகத்துக்கு தெளித்தவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு அறைக்குள் நுழைய தானும் நுழைந்தான் வர்மன்.



கட்டிலில் கிடத்தி விட்டு நிமிர்ந்தவனுக்கு ராமலிங்கம் கல்கத்தா வருவது திடீர் திடீரெ ஞாபகம் வந்து தொலைக்க தலையை அழுத்தக் கோதிக் கொண்டவன் தன்னையே பார்த்திருந்த மனைவியின் அருகில் அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்திப் பிடிக்க அவள் ஒற்றை புன்னகையே போதுமாய்....



"என்ன பேரு சொல்லி என்ன கூப்டீங்க மாமா?"



"வருன்னு தான் கூப்டேன் டா... ஏன்?"



"இல்ல...வேற ஏதோ நெருங்கின பேரு கூப்டா மாதிரி இருந்துது... அதான்"



"அப்போ அமிர்தவர்ஷினின்னு சொல்லும் போது உனக்கு எப்பிடி பீல் ஆகுது?"



"அ... அ... அது.. நீங்க முத முதல்ல என்கிட்ட சொன்னப்போ எதுவும் தோனல மாமா... இந்த வீட்டுக்கு வந்ததுக்கப்பறமா அது எனக்கு சொந்தமில்லாத பேரு மாதிரி இருந்துது... எனக்கு சொந்தமானது வேறு ஏதோன்னு மனசு சொல்லி கிட்டே இருக்கு... "



"நேத்து ஹாஸ்பிடல்ல உன்ன ஸ்ரீனு கூப்டாங்களே... அது எப்பிடி? "



"அ..அது அந்த பேரு... அது சொல்லி தான் மாமா என்ன யாரோ கூப்டாங்க" அவள் உடல் மீண்டும் தூக்கிப்போட



"ரிலாக்ஸ் டா... அது பத்தி நாம பேச வேணாம்.... ரிலாக்ஸ்.... " கையை தட்டிக் கொடுத்தான் காளை....



"எனக்கு வெளியில முக்கியமான வேலை இருக்கு கண்ணம்மா... வர்மனும் இருக்கான்... தனியா இருந்துப்பியா?"



"அண்ணா இருக்காங்கல்ல.... நா இருக்கேன் மாமா... ஆனா சீக்கிரம் வந்துடுங்க... " மேசையிலிருந்த அவன் புதிய மொபைல் அதிர "அபி காலிங்" என திரையில் விழவும் நெற்றி சுருக்கியவன் எழுந்து கொள்ள



"பட் வர்மன் அண்ணாக்கு ஹிந்தி பாஷைல பேச கூடாதுன்னு சொல்லுங்க மாமா... ப்ளீஸ்" அவள் கூற்றில் வாய் விட்டுச் சிரித்தவனை அவள் ஆச்சரியமாய் பார்க்க அசடு வழிந்தான் வர்மன்.



"வர்மா... தப்பி தவறி கூட உன் ஹிந்திய இவ கிட்ட அடிச்சு விட்றாதடா... பாவம் என் பொண்டாட்டி"



"சரி பையா... நா பாத்துக்கறேன்... நீங்க பத்தரமா போயிட்டு வாங்க" மொபைலை காதிற்கு கொடுத்தவன் இடது கையால் மனைவியின் தலையை வருடி விட்டு வெளியேற அவனையே பார்த்திருந்தாள் பாவை...



....



"சொல்லு அபி?" காரை லாவகமாக ஓட்டிக் கொண்டே ப்ளூ டூத்தில் கனெக்ட் பண்ணி பேசிக் கொண்டிருந்தான் கதிர்.



"என்ன சொல்லு அபி...கொஞ்சம் கூட அக்கறையே இல்லயா பே... க்கும்... யாழினி மேல... அவ அண்ணன இப்போவே பாத்தாகணும்னு அழறா" மறுமுனையில் அவன் படபடவென பொரிய யோசனையில் சுருங்கிய நெற்றிப் பொட்டை வழமை போல் அழுத்தத் தேய்த்தான் காளை...



அவன் சாதாரணமாக கேட்டிருந்தால் சந்தேகம் எழுந்திருக்காதோ???



"யாழினி எங்க? "



"ரூம்ல தான் இருக்கா"



"நான் பேசறேன்... "



"ம்... குமரன் டீடெயில்ஸ் அனுப்பிட்டான்... மெயில் செக் பண்ணியா?"



"ஸ்....நோடா... டென்ஷன்ல மறந்துட்டேன்... நா பாக்கறேன்..."



"பீ கேர்புல் மச்சி..."



"ம்... ஓகே... ரித்விக் எங்க... இப்போ எப்பிடி இருக்கு? "



"இப்போ பரவாயில்ல... பட் அவன் மூஞ்சே சரி இல்ல...நீ யாழி கிட்ட பேசு... நா வெச்சுட்றேன்"



"ஓகே டா... பை... நீயும் பத்தரமா இரு" காலை கட் பண்ணியவன் தங்கைக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே ஏற்கப்பட்டது அழைப்பு.



"குட்டிமா நீ வேணா கல்கத்தா வர்றியா?"



"...."



"சந்தோஷமா தானேடா அனுப்பி வெச்ச... இப்போ என்னாச்சு?"



"...."



"ஹே... ஏதாவது பேசுடா.. "



"எதுக்கு பேசணும் நானு... நான் கோபமா இருக்கேன்னு சொன்னேன்ல?" தங்கையின் சிறு பிள்ளை தனமான கோபத்தில் வாய் விட்டுச் சிரித்தான் அண்ணன்.



"சாரிடா செல்லகுட்டி... "



"ஒன்னும் தேவையில்ல...ஐ ஹேட் யூ ஐ ஹேட் யூஊஊ" அவள் கத்த சட்டென அமைதியானவனுக்கு ஏனோ அவள் வார்த்தைகள் வருத்தத்தை கொடுத்தது.



அவனும் எத்தனை பிரச்சனைகளை தான் சமாளிப்பது???



எல்லாம் ஒரே நேரத்தில் வந்தால் அவனுக்கும் சறுக்கல் வருவது இயல்பு தானே???



ஒன்றா இரண்டா??? ராமலிங்கம், ஷாலினி, மனைவி, நண்பன், தங்கை என ஒட்டுமொத்தமாகவே அவனையே குற்றம் சொன்னால்???



திடீரென தாயின் நினைவு மின்னி மறைந்ததில் கண்ணீர் பார்வையை மறைக்க சட்டென துண்டித்தவன் கண்களை அழுத்தத் துடைத்துக் கொண்டு வேதனையை அப்படியே விழுங்க



"கண்ணா... ஆயிரம் தான் பிரச்சன வந்தாலும் எப்போவும் மனசு தளர கூடாது... அம்மா எப்போவும் பக்கத்துல தான் இருப்பேன்.... என் மகன் தான் என்னைக்கும் ஜெயிப்பான்... என்னோட ஆசிர்வாதம் உன் கூடவே தான் இருக்குடா... நீ கலங்கினா அம்மாக்கு புடிக்குமா சொல்லு?" தலைவருடலில் கண்களை இறுக மூடியவனின் உதடுகள் "உன் மகன் தான் மா ஜெயிக்க போறான்... ஏன்னா இந்த தடவை விதி எழுதி இருக்கறது நான் மா... நீ கூட இருந்தாலே போதும் மா" மெதுவாய் முணுமுணுத்துக் கொண்டன உதடுகள்.



***



அந்த மண் சாலையில் இறங்கி நடந்தார் ராமலிங்கம்...



தூரத்தே அந்த முதியவர் மட்டும் அமர்ந்திருப்பது கண்டு கால்கள் அவரை நோக்கி நடக்க கண்கள் நாளாபுறமும் சுழன்று கொண்டிருந்தது.



"ஆருப்பா அது?" அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டவர்



"என் பேரு ராம்... எம். எல். ஏ வா இருக்கேன்" விஷமாய் விழுந்தது வார்த்தைகள்.



"எம். எல். ஏ வா... அட என்னயா நீ வேற நேரம் காலம் தெரியாம காமடி பண்ணி கிட்டு" முதியவர் பதிலில் அவர் முகம் கறுக்க



"அது இருக்கட்டும்...ஆமா... இங்க யாராவது வந்துட்டு போனாங்களா?" நேரே விடயத்திற்கு வந்தார் ராமலிங்கம்.



"இல்ல... " பதற்றப்படாத முதியவர் பதில் சந்தேகத்தை போக்க



"ம்... " தாடையை தடவிக் கொண்டே எழுந்தவர்



"நாங்க கெளம்பறோம்" வந்த வழி நடக்க ஆரம்பிக்க முதியவர் மனம் நிம்மதியில் திளைத்தது.



"அந்த ஷாலினி அப்பாம்மா நாளை காலை பிணமா இருக்கணும்" குரூரமாய் வெளிவந்த வார்த்தைகளில் அருகிலிருப்பவன் மனம் அதிர்ந்து அடங்கியது.



***



நாராயணன் ஹாஸ்பிடல்....



காரை ஓரமாக நிறுத்தி விட்டு இடையில் பேண்டுக்கு மாறி இருந்த தன் உருவம் கச்சிதமாக இருக்கிறதா என ஒரு முறை சரி பார்த்தவன் டீ ஷர்ட்டுடன் இணைந்து வந்த தொப்பியை எடுத்து தலையை மறைக்க மின்னலாய் வந்து போனது மர்மப் புன்னகை!!!



அவன் கல்கத்தாவில் இருப்பது எக்காரணம் கொண்டும் அவன் எதிரிக்கு கசிந்து விடாதிருக்க அவன் தன்னையே மாற்ற வேண்டி இருந்தது.



இறங்கி உள்ளே சென்றவன் ரிசப்ஷனில் அனுமதி பெறாமலே டாக்டர் மலரின் கேபினின் முன் நின்று அனுமதி வேண்ட ஓய்வு நேரத்தில் இருந்தவர் குழப்பத்துடனே அனுமதி வழங்க உள்ளே நுழைந்தவனை பார்த்து மலர்ந்தது அவர் முகம்...



"ஷ்ப்பாஹ்...." தலையில் மாட்டியிருந்த தொப்பியை கலற்றியவாறே அமர்ந்தவனை பார்த்து



"ஏதோ விடயத்துல இருந்து எச்சரிக்கையா இருக்குறா மாதிரி இருக்கு" என்றார் சிரிப்புடன்....



"எச்சரிக்கை தான்... நேர விஷயத்துக்கு வர்றேன் மலர்...." இன்று நடந்ததை அப்படியே ஒப்பித்தவன்



"எனக்கு என் வருவோட கடந்த காலம் பத்தி தெரியணும்... எனக்கு டைமில்ல அவள கொஞ்சம் கொஞ்சமா மாத்த... ஏனோ அவ விலகல் பயமா இருக்கு மலர்.. ப்ளீஸ்" அவன் வார்த்தைகளில் தெரிந்த தவிப்பு அவரை இளக வைக்க அவர் மனம் கடந்த கால விடயங்களில் ஆழ்ந்து போனது!!!



தொடரும்.....



15-08-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27390

அத்தியாயம் 11 [ B ]


சில வருடங்களுக்கு முன்பு....



"ப்ளீஸ் அமைதியா இருங்க சார்..." ரிசப்ஷனில் நின்று கத்திக் கொண்டிருந்த மனிதரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்...



"எப்பிடி அமைதியா இருக்கறது... ஹாஸ்பிடல் சேத்து அரை மணி நேரமாச்சு... புள்ள உயிரோட இருக்கானா இல்லயான்னு கூட சொல்லாம உள்ள அப்பிடி என்ன பு..."



"சார் ப்ளீஸ்... சீப் டாக்டர் வர்ற நேரமாச்சு... பேஷன்ட்ஸ் இருக்கற இடத்துல கத்தறது அவங்களுக்கு பிடிக்காது... காம் டவுன் சார்... ப்ளீஸ்" அவரை அடுத்த வார்த்தை பேச விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு தலைமை மருத்துவர் வந்து விட்டால் என்ன செய்வது என்றே பதற்றமே அதிகமாய்...



"எங்கே அவ... வர சொல்லு அவள... ரெண்டுல ஒன்னு பாக்காம நான் இன்னிக்கு கிளம்ப" தட் என்ற சத்தத்தில் அதிர்ந்து நின்றிருந்தவரின் கைகள் கண்ணத்தை பிடிக்க வந்திருந்தவளை பார்த்து அவசரமாக எழுந்து நின்றாள் அந்த ரிசப்ஷன் மாது.



ஸ்டெதஸ்கோப் கழுத்தில் பந்தமாய் அடங்கியிருக்க கண்களாலேயே அவரை பொசுக்கி விடுவது போல் நின்றிருந்தாள் காரிகை...



தலைமை மருத்துவர் ஸ்ரீமதி நாராயணன்!!!



"எதுக்கு பேஷன்ட்ஸுக்கு டிஸ்டர்பா இருக்கீங்க மிஸ்டர்?" கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டிருந்தவளின் நேர் பார்வையில் தானாய் மாரியாதை வந்து விட்டதோ???



"அது இல்ல மேடம்... என் புள்ளய ஹாஸ்பிடல் சேத்து அரை மணி நேரமாச்சு... இன்னும் எந்த பதிலுமே சொ.. சொல்லல... அதான்" கைகளை கீழே இறக்கியவரின் குரல் நைந்து ஒலித்தது.



"இந்த ஹாஸ்பிடல்ல உங்க புள்ளக்கு மட்டும் தான் ட்ரீட்மெண்ட் நடக்குதா?"



"...."



"ம்...சொல்லுங்க"



"இல்ல...சாரி"



"இந்த சாரி கேக்கறதுக்கு முதல்லயே அமைதியா இருக்க வேண்டியது தானே?"



"...."



"அதோ எங்கேயோ வெறிச்சு கிட்டு உக்காந்திருக்காங்களே... அவங்க பொண்ணையும் உங்க பையன சேத்த அதே டைம்ல தான் சேத்தாங்க... உங்க பையன விட ஆக்ஸிடெண்ட்ல காயம் அதிகம்.... இருந்தும் சாதாரண பூச்சி மருந்து குடிச்ச உங்க பையன தான் முதல்ல பாத்தாங்க.... இப்போ அவங்க பொண்ணு உயிரோட இல்ல... அதுக்கு உங்க பையன் காரணமா ஆவானா... இல்லல்ல... அதே தான்... உங்க பையன் பொழைக்கனும்னு இருந்தா அந்த விதிய யாராலும் மாத்த முடியாது.. அந்த பொண்ணோட விதி முடிஞ்சுடிச்சு... டாக்டர்ஸ் கடவுள் இல்ல சார்... அவங்களும் சாதாரண மனுஷங்க தான்... " அவள் கை காட்டிய திசையில் பார்த்தவருக்கே மனம் கனத்துப் போக



"சாரி மேடம்" என்றவரின் தலை கவிழ்ந்து கொண்டது.



"இட்ஸ் ஓகே... பேஷன்ட்ஸ் இருக்க இடத்துல அமைதியா இருக்க கத்துக்கோங்க... அவங்களுக்கு மன அமைதியே பெரிய ஆறுதல் தான்" அவரின் தோல் தட்டி விட்டு அவள் நடக்க அவர் மனதில் வர்ணிக்க முடியா பிரம்மிப்பு....



.....



"டாட்..." தன் கேபினில் தனக்கு முன்னே வந்து காத்துக் கொண்டிருப்பவரை பார்த்து உள்ளே நுழைந்தவாறே அவள் அழைக்க அவளை பார்த்து புன்னகைத்தவர் எழுந்து வந்து அவளை அணைத்துக் கொள்ள வாகாய் சாய்ந்து கொண்டாள் தந்தை நெஞ்சில்...



அவர் நாராயணன்!!!



தி சேர்மன் ஆப் தி நாராயணன் ஹாஸ்பிடல்....



"என்னாச்சு டாட்?" அண்ணார்ந்து கேட்ட மகளை



"உன்ன நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு டா" தலை தடவி உச்சிமுகர்ந்து கொள்ள மனம் சாந்தமானது பேதைக்கு...



தந்தை தன்னால் பெருமை படுவதை விட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு???



"டாட்... இன்னிக்கு உங்க ப்ரண்டு மக இன்டர்வியூ வர்றதா சொன்னீங்களே...?" அவருக்கு நினைவு படுத்த முயல



"ஓ... எஸ் எஸ்... இப்போ வந்துடுவான்னு சொன்னான்" தலையாட்டி ஆமோதித்தார் தந்தை...



"சரிடா... நான் கெளம்பறேன்..." தலை வருடி விட்டு அவர் வெளியேறிய கொஞ்ச நேரத்தில் "எஸ்கியூஸ் மீ" அனுமதி வேண்டியது ஒரு பெண் குரல்....



"எஸ் கம் இன்..." அந்த குரலில் முதல் பார்வையில் பிரம்மிப்பு தாளவில்லை உள்ளே நுழைந்த மலருக்கு...



ஆண்கள் மட்டும் தான் கம்பீரமாக பேசுவார்களா???



"எஸ்.. உட்காருங்க மலர்" புன்னகைத்தவளின் புன்னகையில் அவள் முகமே மலர்ந்தது போல் இருக்க தானும் புன்கைத்தவாறே உட்கார்ந்தாள் பெண்.



"ஐ அம் மலர்..." தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவள் பைலை நீட்ட அதை தூக்கி ஓரமாக வைத்தவள் கைகள் இரண்டையும் கோர்த்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.



"நீங்க எம்.பி.பி.எஸ் பாஸானாலே பைல்ல எல்லாம் கரெக்ட்டா தான் இருக்கும் மலர்..."



அவள் சொல்வது உண்மைதானே???



இலேசாக புன்னகைத்தவள்

"இப்போ என்ன பண்ண மேடம்?" என்றாள் அதே புன்னகையுடன்...



"மேடம் எல்லாம் வேண்டாம்... ஸ்ரீனே கூப்புடுங்க..."



"இருந்தும் ஒரு மரியாதை இருக்கனும்ல? "



"சரி தான்... பட் அது மனசுல இருக்கட்டும்... ஸ்ரீனே கூப்புடுங்க"



"யூ ஆர் சோ சிம்பிள்... தேங்க்ஸ் ஸ்ரீ"



"லெட்ஸ் கோ.... " எழுந்தவளை புரியாமல் பார்க்க



"பைல தூக்கி வெச்சிட்டேன்னு இன்டர்வியூ நடத்தாம இருக்க முடியுமா.... எனக்கு பேப்பர்ல இருக்க திறமைய விட செயற்பாடுகள் மேல தான் நம்பிக்க அதிகம்.... அதனால இப்போவே நீங்க ஒரு டெமோ காட்டிடுங்க"



அந்த இடத்தில் அவளின் புத்தி கூர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை மலரால்!!!



ஒவ்வொன்றிலும் ஆழமாக சிந்தித்து அவள் செயற்படும் விதம் மலரின் புருவங்களை உயரச் செய்து கொண்டே இருந்ததென்றால் அது மிகையாகாது.



........



அவளுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஏனோ சுவாரஷ்யத்தை கொடுத்திருக்க இன்டர்வியூ முடிந்து கேபின் வருவதற்குள் இருவருக்கும் வா போ என பேசுமளவிற்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது.



ஸ்ரீயின் உடனே பழகிக் கொள்ளும் விதம் அவளை அவ்வளவு கவர்ந்தது.



"இதுக்கு மேல முடில மலர்.... நீ வேணா போய் பேஷன்ட்ஸ் பாரு... நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்" இருக்கையில் தொப்பென அமர்ந்தவளை பார்த்து புன்னகைத்தாள் பெண்.



"எதுக்கு இப்போ சிரிக்குற.. ஆமா உனக்கு கோபமே வராதா... அமைதியாவே இருக்கு உன் முகம்... ஐ லைக் இட்..."



"...."



"ஓ..ஓ.. மனோ தத்துவ மருத்துவர்னு ஒவ்வொரு செயல்லயும் காட்றியாக்கும்?" அவள் கூற்றில் பக்கென சிரித்தவளுடன் தானும் இணைத்து சிரித்தாள் பாவை...



"எக்ஸ்க்யூஸ் மீ.... " பதற்றமாக வெளியிலிருந்து கேட்ட குரலில் சட்டென எழுந்தவள்



"எஸ்... கம் இன்.... " என்றாள் தனக்கும் அதே பதற்றம் தொற்றிக் கொள்ள...



"ஸ்ரீ மேடம்... எமர்ஜென்சி.... கிரிடிகல் சிடுவேஷன்ல இருக்கா பேஷன்ட்..."



"இ... இதோ... இதோ வர்றேன் மீரா... நீங்க போங்க.... மலர்... நீ வீட்டுக்கு கிளம்பு... நாளைக்கு ஜாயின் பண்ணிக்கலாம்.... பை.... அப்பறமா பேசலாம் மா.... பீ கேர்புல்... பத்தரமா போய் சேரு" அந்த பதற்றத்திலும் அவள் அக்கறையில் மனம் நெகிழ்ந்து போக



"ரிலாக்ஸ்ட்டா இரு ஸ்ரீ.... பதற்றப்பட்டு ஒன்னும் ஆயிடாது" தோழியை தட்டிக் கொடுக்க அதற்கு கூட அவகாசம் இல்லாமல் வெளியே ஓடினாள் பெண்...



இரவு....



வெளி நிலவை வெறித்திருந்தவளுக்கு மனம் கனத்துப் போயிருந்தது.



அவள் மருத்துவ வாழ்க்கையில் எத்தனையோ உயிர்கள் பிரிவது கண்டிருந்தாலும் இன்று உலகை விட்டுப் போன அந்த மூன்று வயது மழலை மாறா குழந்தை அவளை மிகவும் பாதித்திருந்தது.



முதலிலிருந்தே அவள் தான் அதை கவனித்து ட்ரீட்மெண்ட் அளித்துக் கொண்டிருந்தாள்.



நேற்று சிரித்த குழந்தையின் சிரிப்பில் ஒரு தெம்பு வந்திருக்க இன்று அது உயிரற்று போனதில் மனம் உண்மையில் வலித்தது.



மருத்துவர்கள் உயிர்களை காப்பாற்றி விடும் போது கடவுளாக மதிக்கப்படுகிறார்கள் தான்.... ஆனால் சாதாரண மனித உணர்வின் அடிப்படையில் உயிர் கண் முன்னே பிரியும் போது உறவுகளை விட அவர்களுக்கே அதிகம் வலிக்கிறது.



அதிலும் பச்சிளம் மாறா குழந்தைகளின் பிரிவு அவர்கள் நிலைகுலைந்து போகச் செய்து விடும்.



அந்த நிலையில் தான் பெண்ணவள் மனமும் இருந்தது.



"மேடம்... ஹாஸ்பிடல் வர முடியுமா?" அதிகாலை மூன்று மணியளவில் ஹாஸ்பிடலை விட்டு கிளம்பி இருந்தவளை அரை மணி நேரம் கடப்பதற்குள் மீண்டும் அழைப்பது மறுமுனைக்கே சங்கடமாய் இருந்தது போலும்...



"தோ கிளம்பிட்டேன்" வேதனையை தூக்கி தூர எறிந்து விட்டு உடேனே கிளம்பி விட்டாள் பெண்!!!



மருத்துவம் மதிக்கப்படுவது போல் மருத்துவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே!!!



.....



"ஸ்ரீ...." கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் மலர்....



அந்த சுழல் நாட்காலியில் தன்னையறியாமல் நண்பி உறங்கி விட்டிருப்பது கண்டு அவளை கனிவாய் பார்த்துக் கொண்டே அருகில் சென்றவள் அவள் தலை வருட சட்டென கண்களை திறந்தவளின் எச்சரிக்கை உணர்வில் இரக்கம் பிறந்தது நண்பிக்கு....



"என்ன ஸ்ரீ மா... ரொம்ப டயர்டா இருக்க?"



"வா மலர்... அதெல்லாம் இல்ல... சும்மா... பழக்கமாயிடுச்சு..." அவள் நிமிர்ந்து அமர முன்னால் சென்று அமர்ந்து கொண்டவளின் முகம் நண்பியின் நிலை பார்த்து வேதனையில் கசங்கியது.



"ஹே என்ன மேடம் மூஞ்சி ஏன் இப்பிடி இருக்கு"



"சும்மா சமாளிக்காத ஸ்ரீ.... உன்ன பாத்தாலே தெரியுது எவ்வளவு சோர்ந்து போயிருக்கன்னு... இதெல்லாம் தேவையா?"



"உன் கிட்ட ஒன்னு கேக்கட்டுமா?"



"ப்ச் நா என்ன பேசறேன்... நீ என்ன கேக்கற?"



"கேக்கட்டுமா?"



"சரி கேளு" அமைதியான அவளுக்கே நண்பியின் நிலை கவலையை கொடுக்க அவள் வேறு ஏதோ பேசியதில் கடுப்பாகி விட்டாள்.



இயற்கை கோபம் தான்!!!



"உன் கிட்ட ஒருத்தங்க பொறுப்பா ஒரு விஷயத்த ஒப்படைச்சா என்ன பண்ணுவ? "



"இது என்ன கேள்வி... நம்மள நம்பி தானே ஒப்படைக்குறாங்க... அந்த நம்பிக்கைய காப்பாத்தனும்ல?"



"அதே தான் மலர்... கடவுள் கிட்ட நேரடியா பேச முடியும்னா அவங்களுக்கு மருத்துவர்கள் உதவியே தேவயில்லயே... கடவுள் மேல இருக்க நம்பிக்க வேற தான்... பட் உயிர்னு வரும் போது கடவுளா நம்மள மதிச்சு எங்கள நம்பி காப்பாத்தி கொடுங்கன்னு சொல்றவங்க நம்பிக்கைய காப்பாத்தாம போனா எப்பிடி?" நண்பியின் கூற்றில் இருந்த உண்மை சுட வாயடைத்துப் போனது மலருக்கு...



"நல்லா பேசி வாய அடச்சிடு... உன் நல்லதுக்காக தானே சொல்றேன் ஸ்ரீ... கொஞ்ச நேரம் ரெஸ்ட் கூட எடுக்க முடிலன்னா...?" ஆதங்கப்பட்ட நண்பியை புன் சிரிப்புடன் பார்த்தாள் பாவை....



"நாம ரெஸ்ட் எடுத்தா ஒரு உயிரோ ரெண்டு உயிரோ வாழ்க்க பூரா ரெஸ்ட்ல இருக்குறா மாதிரி ஆகிடும்" சொல்லி விட்டு சிரித்தவளை போலி கோபத்துடன் முறைத்தாள் நண்பி.



"எனக்கு ரவுண்ட்ஸுக்கு டைமாச்சு... " வாட்ச்சை பார்த்துக் கொண்டே எழுந்தவள் சுழல் நாட்காலியிருந்த தன் கோர்ட்டை எடுத்து போட்டுக் கொள்ள தானும் எழுந்தாள் மலர்....



"மதியம் லஞ்ச்சுக்கு பாக்கலாம் ஸ்ரீ... பட் நீ இப்பிடி ஓடிகிட்டே இருக்கறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு" அவள் வெளியேற அவளையே பார்த்திருந்தவளின் முகம் மலர்ந்திருந்தது.



காதல் போல் இல்லை அல்லவா நட்பு...

காதல் ஒரு வித்தியாசமான உணர்வென்றால் நட்பு மாறுபட்ட உணர்வு.



இங்கு சுயநலம் காதலில் மட்டுமில்லை நட்பிலும் உண்டு...



தன் நண்பிக்கென்று வரும் போது மட்டும் வரும் அந்த உரிமை கோபம் பெண் நெஞ்சை நெகிழச் செய்ய மனதார கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு வெளியேறினாள் காரிகை...
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உட்காரு..." முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த நண்பியை பார்த்து சிரித்துக் கொண்டே அந்த கேண்டீன் டேபிளின் மறுபக்கம் அமர்ந்தாள் ஸ்ரீமதி.



"சாப்டாச்சா மலர்?"



"சும்மா கடுப்பேத்தாத... சாப்புடு முதல்ல... அங்கிள் சொன்னாரு நீ ராத்திரி வீட்ல தூங்கலன்னு"



'டாஆஆட்....' மனதிற்குள் பல்லை கடித்தவள் சமாளிப்பாய் இளிக்க



"சிரிக்காத ஸ்ரீ..." பல்லை கடித்தாள் நண்பி.



"இன்னிக்கு ஒரு கேஸ் மலர்... காதலுக்காக சூஸைட் அடம்ப் பண்ணி இருக்கான்... அவங்க அப்பாம்மா அழறது பாத்து எனக்கே மனம் கனத்து போச்சு... பெத்தவங்கள விட அப்பிடி என்ன பெரிசா போயிடுச்சு காதல்?"



"நா பதில் சொல்றேன் நீ மூடிகிட்டு சாப்புடு முதல்ல" தலையாட்டி சிரித்துக் கொண்டே சாப்பிட்டு கைகளை துடைத்துக் கொண்டவள் விட்ட இடத்திற்கே வந்து நின்றாள்.



"சரி சொல்லு... "



"காதல் உசத்தியும் இல்ல அதை விட பெத்தவங்க உசத்தியும் இல்ல ஸ்ரீ.... இங்க அவங்க அது அதுக்கு கொடுக்கற முக்கியத்துவத்துல தான் எல்லாம் இருக்கு"



"ஓ... மேடம் அப்பிடி வர்றீங்களா... சரி.. ஒரு விஷயத்துக்கு இம்பார்டென்ட் கொடுக்கறப்போ அடுத்த சைடுக்கும் அத புரிய வெக்கனுமில்ல அப்போ?"



"எஸ்.... நீ சொல்றது கரெக்ட்... இரண்டு பக்கங்களையும் பகச்சுக்காம இருக்கறதுல தான் இருக்கு வாழ்க்கை"



"சரி தான்.... ஆனா... " திடீர் கூச்சல் சத்தம் கேட்க அதிர்ந்து திரும்பிப் பார்த்தவள் கூட்டம் கூடி இருப்பதை கண்டு எழுந்து ஓடினாள்.



......



"ஸ்ரீ.... " தோல் தொட்டு தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டாள் நண்பியை...



"ஒவ்வொரு கேஸ் பாக்கும் போது ஏன்டா இந்த படிப்புல காலடி எடுத்து வெச்சோம்னு தோனுது மலர்.... ரொம்ப கஷ்டமா இருக்கு" உள்ளத்து உணர்வை வெளிக்காட்டாமல் இருக்க அவள் போராடுவது நன்றாகவே தெரிந்தது.



இன்று நடந்திருந்தது ஒரு ரேப் கேஸ்... ஒரு பதினைந்து வயது குழந்தையை எட்டு பேர் முடக்கினாள்???



வெளியே தைரியமாக அனைத்தையும் செய்யும் போது நண்பியின் மன தைரியம் அவளை பிரம்மிப்புக்குள்ளாக்கியிருக்க தனிமையில் குழந்தையாய் மாறி விடுபவளை இன்னுமின்னும் பிடித்துப் போனதுவோ???



"ஸ்ரீ.... வெளியில செம மழ.... வீட்டுக்கு கிளம்பறியா?" திசை திருப்ப முயன்றாள் பெண்...



"இல்ல மலர்... நான்... எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு.... நீ கிளம்பு" தன்னை சமன்படுத்திக் கொண்டு விலகியவளை கையோடு இழுத்துச் சென்றவள் பிடித்து வெளியே தள்ளி விட நண்பியின் திடீர் செய்கையில் அதிர்ந்து நின்றவள் சுதாரிப்பதற்குள் முழுதாக நனைந்து விட்டிருக்க சட்டென மனநிலை மாறி நண்பியையும் பிடித்து இழுத்தாள் பாவை...



"ஹே... என்ன பண்ற ஸ்ரீ... லூசு..." அவள் அடிக்க கையோங்க துள்ளி ஓடியவள் கொஞ்ச நேரம் ஆட்டம் காட்டி விட்டு திடீரென அதிர்ந்து நிற்க அவள் பார்வை போன திசையில் தானும் பார்வையை திருப்பியவளுக்கு அங்கே நாராயணன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நிற்பதை பார்க்க இருவருமே அதிர்ந்து போயினர்.



"வாட் இஸ் திஸ் ஸ்ரீ.... வாங்க ரெண்டு பேரும் என் கூட" நண்பியை பாவமாய் பார்த்தவள் தலையை குனிந்து கொண்டே அவர் பின் செல்ல சிரித்தாள் நண்பி.



"எல்லாம் உன்னால மலர்..."



"ஹாஹா..."



"சிரிக்காதடி... நீயும் சேந்து தான் வாங்கி கட்ட போற" அவள் அதிர கிளுக்கிச் சிரித்தாள் பெண்.



.....



"இப்பிடி உக்காருங்க ரெண்டு பேரும்" கண்டிப்பாய் சொன்னவர் இருவரும் அமரவே உள்ளிருந்த டவலை எடுத்தி வந்து இருவருக்கும் துவட்டி விட்டு தன் இருக்கையில் அமர அவர் செய்கையை ஆச்சரியமாய் பார்த்தாள் மலர்...



அவளுக்குத் தான் அவள் தந்தை பற்றி தெரியாதே....



முதலில் துவட்டி விடுவபவர் அதன் பிறகே ஆரம்பிப்பார்.



"டாட்.... நா..."



"ஷட் அப் ஸ்ரீ... என் கூட பேசாத" அவரின் தண்டனை அது தான்...



கெஞ்சிக் கொஞ்சி சமாதாணப்படுத்துவது தான் மகளின் கடமை... அதுவும் ஒரு நாள் முழுதும் கெஞ்ச விட்டே விடுவார்.



"அங்கிள் சாரி... அது நான் தா..."



"என் கூட பேசாதன்னு சொன்னது உனக்கும் சேத்து தான்... " நண்பியை பாவமாய் பார்க்க பொங்கி வந்த சிரிப்பை வாய் பொத்தி அடக்கியவளை பார்த்து கண் காட்டி எச்சரித்தாள் மலர்.



"டாட் சாரி டாட்... ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ் டாட்... ஆமா அங்கிள் சாரி... ப்ளீஸ்... " இருவரும் சேர்ந்து கெஞ்சத் துவங்க அமைதியாய் அமர்ந்திருந்தவர் பைலை புரட்ட



"டாட்...நான் பேசிகிட்டு இருக்கேன்... மாம் கிட்ட நீங்க எனக்கு திட்னீங்கன்னு போட்டு கொடுக்கறேன் இருங்க... வா மலர்..." அவள் கோபமாய் வெளியேற அவர் உதட்டில் புன்னகை அரும்பிற்று...



யார் சொன்னது பெண் பிள்ளைகள் என்றாலே அப்பா செல்லம் என்று???



இவள் இருக்கிறாளே அந்த விதியை மாற்ற!!!



ஆம்... அவள் அம்மா பிள்ளை தான்... ஒரே ஒரு மகள் தான் வேண்டுமென பிடிவாதமாய் பெறப்பட்ட குழந்தை அவள்!!!



அப்பாவை போல் கோபம் நேர்மை தைரியம் துணிவு மட்டுமே!!!



மற்றபடி சட்டென இளகும் மனம் துவங்கி உடனே ஒட்டிக் கொள்ளும் பழக்கம் வரை அம்மா தான் அவள்!!!



நாராயணனாக இருந்தவள் தான் தான் சுபத்ராவாக (தாய்) மாறிப் போனாளோ???



.......



"சரி நா கிளம்பறேன் ஸ்ரீ... அம்மா தேடுவாங்க... அப்..." அவள் பேச்சை தடை செய்தது ஒரு பெண் குரல்...



"கம் இன்..." அனுமதி வழங்கப்பட உள்ளே நுழைந்த பெண்ணை பார்த்து பாவை சிரிக்க ஆராய்ச்சியாய் பார்த்து வைத்தாள் மலர்.



"உனக்கு சொல்ல மறந்தே போயிட்டேன் மலர்... இவ ஷாலினி... கைனகாலஜிஸ்ட்" தன் மொபைலை எடுத்து கதிருக்கு அவர்கள் இருந்த க்ரூப் போட்டோவை காட்ட வேறு யாரோ அதே பெயரில் என நினைத்தவன் உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளானான் அவள் மொபைலில் டாக்டராக இருந்த அதே ஷாலினியை பார்த்து!!!



.....



"இ... இவ.. இவ டாக்டரா... அதுவும் வரு ப்ரண்டா?" அதிர்ச்சியில் அவன் வார்த்தைகள் கூட தந்தியடிக்கத் துவங்க



"ஆமா கதிர்.. ஷாலினி டாக்டர் தான்... ஏன் உங்களுக்கு இவங்கள முன்னாடியே தெரியுமா?" அவள் பார்வை ஆச்சரியமாய் அவன் மீது படிந்தது.



"க்கும்.... இல்ல தெரியாது" திட்டவட்டமாக மறுத்தவனின் முகம் உணர்ச்சிகளை துடைத்திருக்க அவளுக்கு அவன் முகத்தை பார்த்து எதுவும் யூகிக்க கூட முடியாமற் தான் போயிற்று.



"அதுக்கப்பறம் என்னாச்சு மலர்?"



"திரும்ப ஒரு மாசம் கழிச்சு எங்கள டாக்டர்ஸ் கேம்பிங்குக்கு அழைச்சிட்டு போறதா மேனேஜ்மெண்ட் அறிவிப்பு தர நானும் வந்தே தீருவேன்னு அடம்பிடிச்சு எங்க கூட வந்தா... மலைப்பாங்கான பிரதேசம்னு சொன்னதும் அவளுக்கு ஒரே குஷி... கேம்பிங்குக்கு வந்தவ ஹைக்கிங் வந்தா மாறி பிஹேவ் பண்ணது பாத்து எல்லோருக்கும் ரொம்ப ஆச்சரியம்... அவள ஹாஸ்பிடல்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா கண்டதுல அவ துடுக்குத்தனம் அப்போ தான் வந்திருந்த டாக்டர்ஸுக்கே புரிஞ்சுது.... ரொம்ப ப்ரண்ட்லி டைப்... எல்லோர் கூடவும் சட்டுனு ஒட்டிகிட்டா"



"ஷாலினி எப்பிடி... ஐ மீன் கேரக்டர்...?"



"என்ன பொருத்தவரை நல்ல பொண்ணு தான்... ஏன் கேக்கறீங்க?"



"இல்ல சும்மா தான்... ஆமா வரு ஷாலினி கூட எந்தளவு க்ளோஸ்? "



"பெஸ்ட் ப்ரண்ட்ஸ்னு சொல்ல முடிலன்னாலும் திக் ப்ரண்ட்ஸ் தான்"



"அவங்க எப்பவாவது வரு கூட கோபமா இல்லன்னா வரு அவ மேல கோபமா நடந்துகிட்ருந்திருக்காங்களா?"



"ம்... இல்லயே கதிர்"



"ஓஹ்.. ஓகே மேல சொல்லுங்க"



"அதுக்கப்பறமா எந்த ப்ராப்ளமும் இல்லாம தான் போய்கிட்டு இருந்துது... யாரையோ மீட் பண்ண போறதா கூட ஒரு நாள் சொன்னா என்கிட்ட... அன்னிலருந்து ரெண்டு பேருக்கும் ரொம்ப கேப்... அவள கண்ணுல காண கூட முடில... எதேச்சையா கண்டா கூட ஏதோ ஆழ்ந்து சிந்துச்சு கிட்டு தான் இருப்பா... ஒரு நாள் அவள தேடி போயி ரொம்ப சண்ட போட்டேன்... மறுத்து எதுவுமே பேச கூட இல்லாம இருந்தவ திடீர்னு என்ன கட்டிபிடிச்சு அழுதா... நான் முக்கியமான ஒருத்தர மீட் பண்ண போறேன்... அம்மாப்பாவ பாத்துக்கன்னு சொல்லிட்டு போனவ தான்... எங்க போறேன்னு கூட சொல்லல.. அவள நான் க... கடைசியா அன்னிக்கு தான் பா.. பாத்தேன்... அதுக்கப்பறமா இத்தன வருஷம் கழிச்சு அன்னிக்கு உங்க கூட... " முகத்தை மூடிக் கொண்டு அவள் குழுங்கி அழ மனைவியின் நிலைக்கு அந்த இடைப்பட்ட காலத்தில் தான் ஏதோ நடந்திருக்க வேண்டும் அதுவும் அவள் சந்திக்கச் சென்ற ஆள் மூலம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிந்து போக மலரை சமாதானப்படுத்தி வெளியே வருவதற்குள் அவன் உயிரே போய் விட்டது.



அவனுக்கும் புரிந்தது அவர்களின் நட்பின் ஆழம்!!!



இருந்தும் மனைவியின் இந்நிலமைக்கான காரணம் தான் யோசிக்க வைக்க அதே எண்ணங்களுடன் உழன்று கொண்டிருந்தவனை கலைத்தது மொபைல் நாட்டிபிகேஷன் சவுண்ட்...



"ஷாலினியோட அம்மாப்பாவ லிங்கம் போட்டு தள்ளிட்டான் பாஸ்" சடன் பிரேக்கிட்டு நின்றது வண்டி...



அதற்குள்ளாகவா???



'காட்... மெயில் செக் பண்ண கூட இல்ல... இருந்த ஒரு ஆதாரமும் போச்சு' தன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்தவாறே நிமிர்ந்தவனை மீண்டும் அழைத்தது மொபைல்...



இப்போது மனைவி...



"சொல்லு வர்ஷினி" தன் இயலாமையை அவளிடம் காட்ட முடியாமல் இருக்க பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருந்தது அந்த ஆறடி ஆண்மகனுக்கு....



"எங்க இருக்கீங்க மாமா... ப்ளீஸ் வாங்க... எனக்கு ரொ.. ரொம்ப பயமா இருக்கு"



"எ.. என்னாச்சு... வர்மா எங்கே... தோ கிளம்பிட்டேன்... "



......



"வர்ஷினி... ஆர் யூ ஓகே...." பதற்றமாய் அருகில் அமர்ந்தவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் ஏகத்திற்கும் கலங்கி இருக்க அவன் முகமும் கலங்கிற்று...



"ஏன்டா...?"



"என்னால எல்லோருக்கும் கஷ்டம் தான்... "



"அப்பிடி இல்ல கண்ணம்மா" ஷாலினியின் பெற்றோரை போய் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு..



"பொய் சொல்றீங்க... எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா... ஏதோ தப்பா நடக்க போறா மாதிரி பீல் ஆகுது... நீங்க என்ன விட்டு விலகுறா மாதிரியும் இருக்கு... " அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவனுக்கு அவளை விட பயம் அதிகமாய்....



இப்படி அவள் வேதனைப்படுவதற்கு பழையது ஞாபகம் வருவது அவனுக்கு சந்தோஷம் தான்... இருந்தும் அவள் விலகலை ஒரு போதும் அவனால் அனுமதிக்க முடியாதே...



மீண்டும் நாட்டிபிகேஷன் வந்து விழ கண்களை இறுக மூடித் திறந்தவன் அவளை விலக்கி விட்டு எழுந்தான்.



"அர்ஜென்ட்டா போகணும் வரு..."



"ப்ளீஸ் மாமா... என் கூட இருங்க இன்னிக்கு மட்டும்..."



"...."



"நா வேணா உங்க கூட வ.. வரட்டுமா?"



"வாட்..?" உண்மையில் அதிர்ந்தது மனது...



அவன் செல்ல இருப்பதே அவர்களை பார்க்க... இதில் இவள் வேறா???



"ப்ளீஸ் மா.. மா.. எனக்கு உங்க கூட இருக்கணும்னு தோனுது... ப்ளீஸ்... " அவள் இதுவரை இப்படி நடந்து கொண்டிராதது வேறு அவனை நெருடலுக்குள்ளாக்க தன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்தவன்



"சரி கிளம்பு...." போயாக வேண்டிய கட்டாயத்தில் அவளையும் கிளம்பச் சொன்னான்.



அப்படி செய்யாமல் இருந்திருக்கலாமோ???



***





"டேய் மச்சான்... நாட்டிபிகேஷன் பாத்தியா?" மும்முரமாக ஏதோ வேளையில் ஈடுபட்டிருந்த குமரனை வெளியே இழுத்துக் கொண்டு வந்தான் அபி.



"ஏன் என்னாச்சு...."



"ஷாலினி அப்பாம்மாவ அந்த லிங்கம் போட்டுத் தள்ளிட்டானாம்"



"வாஆட்..."



"கதிர் தான் மேஸேஜ் அனுப்பி இருக்கான்..."



" நாம கலெக்ட் பண்ண டீடெயில்ஸ்?"



"அவன் பாக்க மறந்துட்டான் போல"



"இடியட்... இந்த விஷயத்துக்காக தானே போனான்.... என்ன பண்ணிகிட்ருக்கான்"



"கூல் டவுன் குமரா... அவனுக்கு நிறைய பிரச்சனைகள் சமாளிக்க வேண்டி இருந்திருக்கலாம்"



"வாட் எவர்... அதுக்காக இப்பிடியா கேர்லெஸா இருப்பாங்க... இருந்த ஒரே ஆதாரமும் போச்சு... "



"குமரா ப்ளீஸ் கண்ட்ரோல் டா.... கதிர் சமாளிப்பான்... இப்போ நாம என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்"



"அவன் சென்னை வந்து சேரட்டும் இருக்கு அவனுக்கு..."



அங்கு நடந்து கொண்டிருப்பது பற்றித் தான் அவனுக்கு தெரியாதே???



நியாயமான கோபம் தான்... இருந்தும் அவன் நிலைமையிலிருந்தும் யோசிக்க வேண்டுமே!!!



அவரவர் நியாயம் அவரவருக்கு!!!



***



"ஏன் ஏதோ மாதிரி இருக்கீங்க மாமா? "



"ஒன்னில்லடா... கொஞ்சம் டென்ஷன்"



"ஏன் என்னாச்சு?"



"நத்திங் நீ குழப்பிக்காத..." நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்க அதை கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதில் அவன் மீதே கட்டுக்கடங்காமல் கோபம் பெருகிற்று அவனுக்கு...



தந்தை சொல்வது போல் அவனுக்கு எதற்குமே தகுதி இல்லை தான்...



'மிஸ் யூ பா... சாரி' அரற்றியது மனது...



....



"ஏன் இவ்வளவு கூட்டமா இருக்கு மாமா?"



"ஒருத்தங்க பேரண்ட்ஸ் செத்துட்டாங்க டா... அதான்..."



"ஓஹ்..."



"இறங்கு...." காரை பார்க் பண்ணி விட்டு வந்தவன் அவள் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டே உள்ளே நுழைய தன்னையறியாமல் உடல் தூக்கிப் போட்டதில் மனைவியை புரியாமல் பார்த்தவன் அவள் கண்கள் அந்த இரு பிணங்களின் மீதே நிலைத்திருப்பது கண்டு தோள் தொட அதை அவள் உணர வேண்டுமே???



முதற் கட்ட அதிர்ச்சி இதே போல் மாறி மாறி கண்களுக்குள் வந்து போன இரு உடல்கள்!!!



சட்டென இவள் உடலில் ஒரு விறைப்புத் தன்மை!!!



"வர்ஷினி...." அவன் உலுக்கியும் பார்வையை மட்டும் அகற்றினாளில்லை காரிகை...



"அ... அம்... மா... டா.. டாடி...." குழரலாக வெளிவந்த குரலில் அவன் அதிர்ந்து திரும்பு முன் திடீரென மயங்கிச் சரிந்தாள் பெண்!!!



காயங்கள் தொடருமா???



தொடரும்....



15-08-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12 [ A ]



நாராயணன் ஹாஸ்பிடல்....



"கதிர் காம் டவுன்... ஸ்ரீக்கு எதுவும் ஆகாது" அதீத கலக்கத்தில் நின்றிருப்பவனை தேற்ற முயன்றாள் மலர்.



"பழசு ஞாபகம் வர்றப்போ இப்போ நிகழ் ஞாபகத்துல இருந்து ம.. மறந்துடுமா மலர்?" கண்கள் இலேசாக கலங்கி இருந்தனவோ???



"அப்பிடீன்னு உறுதியா சொல்ல முடியாது... சிலவங்களுக்கு அப்பிடி நடந்து இருக்கு தான்... பட் எல்லோருக்கும் அப்பிடி இல்ல... டோன்ட் ஒர்ரி..."



"இப்போ எப்பிடி இருக்கா? "



"ட்ரீட்மெண்ட் நடந்துகிட்ருக்கு... பாக்கலாம் "



"திடீர்னு ஏன் இப்பிடி... போகும் போது கூட நல்லா தானே இருந்தா? கடைசியில அம்மா டாடி ன்னு கூட முணுமுணுத்தாளே? விச் மீன்ஸ் என்ன?"



"அவ மனசளவுலயும் உடலளவுலயும் ரொம்ப பலவீனமா இருக்கா... அதுமட்டுமில்லாம அவ ஒரு பேஷன்ட்... நினைவுகள் மொத்தமாக அழிந்து போயிருக்க ஒருவருக்கு அவர் இருந்த இடம், சூழ்நிலைகள எதேச்சையா பாக்கறப்பவோ சந்திக்கிறப்பவோ ஆழ்மனசுல இருக்க அந்த நினைவுகள் மீண்டும் வெளி வரும்... மேபீ அவளோட அம்மா அப்பா கூட ஒரே நேரத்துல இறந்து போறத இவ பாத்திருக்கணும்... அதனால தான் ஷாலினியோட பேரண்ட்ஸை பாத்ததும் அவளுக்கு அவளோட அம்மா அப்பா ஞாபகம் வந்திருப்பாங்க... அம்மா டாடின்னு அவ சொன்னது ஷாலினியோட பேரண்ட்ஸை பாத்து இல்ல கதிர்... அவளோட நினைவடுக்குகள்ல அவ அம்மாப்பா வந்து போகவும் தான் அப்பிடி சொல்லியிருப்பா... சரி... நீங்க இப்போ இருக்கறது யார் வீடுன்னு நெனக்குறீங்க? "



"வ... வருவோடதா?"



"ம்... எஸ்... அது அவங்க வீடு தான்... விதி வசத்தால நீங்க அங்க போயி இருக்கீங்க... அவ வாழ்ந்த இடம்குறதால தான் அவளுக்கு அந்த நினைவுகள் தாக்கி இருக்கு... இப்போ நடந்திருக்கறது மே பீ... இதே மாதிரி ஒரு சம்பவம் அவளுக்கு ஏற்கனவே நடந்திருக்கலாம்... தட்ஸ் வொய்... அதே சம்பவம் மீண்டும் நடக்குறப்போ கூட நினைவுகள் திரும்ப வாய்ப்பிருக்கு... ஐ அம் ஷூர் ஸ்ரீக்கு இந்த சம்பவத்துல நினைவுகள் திரும்ப சான்ஸஸ் அதிகமாவே இருக்கு.... "



"பழைய ஸ்ரீமதியா வருவாளா?"



"உடனே நடந்துடாது... அவளுக்கு ஞாபகம் வந்த உடனே உங்க ஞாபகங்கள் பின்னுக்கு செல்லப்படலாம் ஆர் மறக்கலாம்... பின்னுக்கு செல்லப்பட்டா அவளே ஞாபகப்படுத்திக்குவா... அவளும் ஒரு டாக்டர் தான்... பயப்பட எதுவுமில்ல கதிர்... நான் அவள பாத்துட்டு வந்தட்றேன்... "



"நானும் வர்றேன்... " ஆமோதிப்பாய் தலையசைக்க அவள் பின்னோடு உள்ளே நுழைந்தான் கதிர்வேல் கிருஷ்ணா.



.......



####



கையிலிருந்த க்ளவுஸை கழற்றி வைத்து விட்டு இருக்கையை நோக்கி நடக்கப்போனவள் வெளியே கேட்ட பேச்சு சத்தத்தில் புருவம் சுருக்கி ஜன்னலருகே சென்று திரைச்சீலையை நகர்த்த கீழே ஷாலினிக்கு யாரோ ஒருவர் பணம் கொடுப்பது தெரிய சத்தம் கேட்காத வண்ணம் அவசரமாக கீழே நோக்கி ஓடினாள் பாவை...



"இங்க வராதீங்கன்னு எத்தன தடவ சொல்றது... யாராவது பாத்தா மொத்தமா மாட்டிப்போம்.... இனி இப்பிடி நடக்க கூடாது..."



"ஐயா சொன்னாரு செஞ்சேன்... அவ்வளவு தான் டாக்டரு..." அவள் எச்சரிக்கைக்கு அவன் பயப்பட்டதாகவே தெரியவில்லை...



"ஏய்..." எச்சரிக்கை விடுக்கப் போனவள் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு இடம் கருதி கையை மடக்கிக் கொண்டாள்.



"அப்போ நா வர்றேன்...' மிஷன் பீ சரீர' [[ Mission B Śarīra' ]] ஞாபகம் இருக்குல்ல? "



"அது கரெக்ட்டா வந்து சேரும்... முதல்ல இடத்த காலி பண்ணு..." அவனை அனுப்பி விட்டால் போதுமென்று தான் இருந்தது அவளுக்கு...



அவனும் எதுவும் பேசாமல் கிளம்பி விட அவள் உள்ளே வர திரும்பவும் அருகிலிருந்த தூணுக்கு பின்னால் மறைந்து கொண்டவளின் மூளை அதி தீவிர சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.



'மிஷன் பீ சரீர னா... காட்... ஏதாவது தப்பு நடக்க போகுதா... இப்போ எப்பிடி கண்டு பிடிக்கறது.... அங்கிள் கிட்ட கேக்கலாமா?' ஷாலினி கடந்து சென்றது கூட தெரியாமல் தீவிர சிந்தனையில் இருந்தவள் அவசரமாக தன் கேபின் நோக்கி ஓடினாள்.



"என்னவா இருக்கும்..." நோட்பேடை கையில் வைத்தவள் தனக்கு எட்டிய வரை அனைத்தையும் கிறுக்கி முடிக்க எதுவுமே ஒத்துப் போகாதது போல் இருந்ததில் அதை தூக்கிப் போட்டு இருக்கையில் சாய திடீரென கண்ணுக்கு விழுந்தது அன்று யாருக்கோ வாங்கி வைத்திருந்த ஆங்கில எழுத்துக்களின் அட்டை ஒன்று...



துள்ளி எழுந்தவள் அதையே கொஞ்ச நேரம் பார்த்திருந்து விட்டு சலிப்புடன் வைக்கப் போக மின்னலாய் வந்து போயின இலக்கங்கள்...



"ரைட்... இந்த ஆல்பபெட்ல (Alphabet) ஏ க்கு நம்பர் ஒன்ன கொடுத்தாலும் லெட்டர் பீ க்கு நம்பர் டூ வரும்... எஸ் கரெக்ட்... மிஷன் பீ மீன்ஸ்.... மிஷன் டூ... அப்போ சரீர... அப்பிடீன்னா.... ஐடியா" தன் மொபைலை எடுத்து அவசரமாக கூகுளில் தேடிப் பார்த்தவளுக்கு அது பெங்காலி மொழியில் உடலுக்கு பயன்படுத்தப்படும் சொல்லென தகவல் கிடைத்ததில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் ஸ்ரீமதி.



"மிஷன் பீ மீன்ஸ்... மிஷன் டூ... சரீர மீன்ஸ்... பாடி... தட் மீன்ஸ் மிஷன் டூ பாடீஸ் [[Mission two bodies]].... இரண்டு உடல்கள்கள வெச்சு ஏதாவது நடக்கப் போகுதா?" உடல் வெளிப்படையாகவே நடுங்கியதில் தலையை பிடித்துக் கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் போக இயலாமையில் கண்கள் தானாய் கலங்கிப் போயின.



"கடவுளே... என்ன நடக்க போகுது... ஹாஸ்பிடல் பாடீஸ தான் எடுக்க போறாங்களா?" வாய் விட்டே புலம்பி நிமிர்ந்து அமர்ந்தவளின் கண்களில் அத்தனை தீவிரம்...



"நோ... இது நடக்க கூடாது... நடக்க விட மாட்டேன்...." எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தவளுக்கு தூக்கம் தூரப் போயிருந்தது.



........



காலை....



"மீரா... கைனகாலஜிஸ்ட் ஷாலினிய என் கேபினுக்கு வர சொல்லு..." அதீத கடுமை தெறித்தது முகத்தில்...



"எக்ஸ்க்யூஸ் மீ மேடம்... "



"எஸ்... " சாதரணமாக முகத்தை மாற்றி இருந்தாலும் உடல் இலேசாக நடுங்கியது கோபத்தில்..



"வொய் ஸ்ரீ... எனி ப்ராப்ளம்?"



"நத்திங்... இன்னிக்கு முக்கியமான கேஸஸ் இருக்கா?"



"ம்.. நோ... நான் ப்ரீ தான்..."



"ஓகே தென்... நெக்ஸ்ட் மன்த் நடக்க போற டாக்டர்ஸ் கேம்பிங்குக்கு யாரெல்லாம் கலந்துக்க போறாங்கங்குற லிஸ்ட் வேணும்... முடியுமா?"



"எஸ்... ஷ... ஷூர் மேடம்" இன்று அந்த இரு உடல்களை ஒப்படைக்க வேண்டி இருந்ததில் அவளுக்கு கைகள் கட்டப்பட்ட நிலை....



இதை தானே அவள் எதிர்ப்பார்த்ததும்...



"நானும் வர்றேன்.... " அவள் எழுந்து கொள்ள அசையக் கூட முடியாத நிலை ஷாலினிக்கு....



......



இடைக்கிடையே அழைப்பேசி அழைத்துக் கொண்டிருக்க ஸ்ரீ அருகிலேயே இருந்ததில் இருந்ததில் அவஸ்தையில் நெளிந்தாள் பெண்.



"ஏன் என்னாச்சு ஷாலினி... போன் அடிக்குது பாருங்க... எடுத்து பேசுங்க"



"இல்ல இருக்கட்டும்... நான் வாஷ்ரூம் போயிட்டு வந்தட்றேன்..." அவள் எழ பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவள்



"வாஷ்ரூமுக்கு எதுக்கு மொபைல்?" என்றாள் ஆச்சரியம் போலும்...



"அ.. அது... ம.. மறந்துட்டேன்... " டேபிளை வைத்து விட்டு திரும்பிப் பார்த்துக் கொண்டே அவள் செல்ல வேறு வேலையில் கவனமாக இருப்பது போல் இருந்தவள் அவள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு அட்டென்ட் செய்து காதில் வைக்க



"ராத்திரி ரெண்டு மணி" அத்துடன் அழைப்பு துண்டிக்கப்பட பல்லை கடித்தவள் சாதாரணம் போல் இருந்து கொண்டாள்.



.....



இரவு இரண்டு மணி...



தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தவள் வெளியே பேச்சுக் குரல் கேட்க சட்டென எழுந்து கீழ் தளம் நோக்கி ஓடியவாறே கையில் தயாராக வைத்திருந்த லைட்டரை பயர் அலார்முக்கு காட்ட திடீரென பரப்பாகியது நாராயணன் ஹாஸ்பிடல்....



.....



"ஓ காட்... பயர் அலார்ம் அடிச்சிடுச்சு... இப்போ பாடீஸ வெளிய எடுக்கறது டேன்ஜர்... ஐயா கிட்ட சொல்லுங்க நாளைக்கு பாத்துக்கலாம்னு... கிளம்புங்க அவசரமா..." அவர்களை வெளியேற்றி விட்டு அந்த இரு உடல்களையும் உள்ளுக்கு தள்ளியவள் அந்த கலேபரத்தில் யாரும் தன்னை பார்க்க வில்லை என உறுதிப்படுத்திக் கொண்டு அதை கீழிருந்த வார்டுக்குள் தள்ளி விட தூரத்தே கைகளை கட்டி அவளையே பார்த்திருந்த காரிகையின் உதடுகள் இகழ்ச்சியாய் வளைய கண்கள் கோபத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.



.....



"இத இப்பிடியே விட கூடாது... அங்கிள் கிட்ட சொல்லிட்டு டாட் கிட்ட பேசலாம்" தன் மொபைலை எடுத்து அழைத்தாள் அவளுடைய அங்கிளுக்கு...



"டாக்டர் ஸ்ரீமதி நாராயணன்"



"கலாய்க்காதீங்க ஷக்தி அங்கிள்" அவள் செல்லமாய் கோபித்துக் கொள்ள மறுமுனை வாய்விட்டுச் சிரித்தது.



"எப்பிடி மா இருக்க?"



"நல்லா இருக்கேன்... நீங்க?"



"நானும் நல்லா இருக்கேன் மா... எங்கே அவன்... கால் எடுத்தாலும் ஆன்ஸர் பண்ண மாட்டேங்குறான்"



"டாட் க்கு கொஞ்சம் வேலை அங்கிள்..."



"அந்த ஒரு காரணத்துக்காக தான் பேசாம இருக்கேன்"



"அங்கிள் நான் உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்..."



"ஏன் கல்யாணம் பண்ணிக்க போறியா.... அதான் என் பையன் இருக்கான்ல?" சொல்லி விட்டு அவர் சிரிக்க



"அங்கிள்....." சிணுங்கினாள் பெண்.



"சரி சொல்லு... என்னமா விஷயம்?" அவர் விடயத்திற்கு வர அனைத்தையும் சொல்லி முடிக்கவும் மறுமுனையில் அதிர்ந்து அமர்ந்திருந்தார் அவளின் அங்கிள்.



அமைச்சர் ஷக்திவேல் கிருஷ்ணா!!!



***



"வாஆஆட்... அவ அங்கிள்னு சொன்னது ஷ.. ஷக்திவேல் கிருஷ்ணாவையா?" அவனால் அதற்கு மேல் பேசக் கூட முடியவில்லை...



அவ்வளவு அதிர்ச்சி!!!



டாக்டர் நாராயணனை அவனுக்கு தெரியும் தான்.... ஆனால் அவர் தான் இவராக இருப்பாரென அவனென்ன கனவா கண்டான்???



அப்பா ஷேர் செய்து கட்டப்பட்ட ஹாஸ்பிடலொன்று கல்கத்தாவில் இருப்பது நிச்சயமாக தெரியாவிட்டாலும் அப்பா திட்டும் போது எதேச்சையாக காதில் விழுந்திருந்தது பல தடவை...



அப்போதும் கூட 'இவரு ஹாஸ்பிடல் கட்டி தான் மக்களை காப்பாத்த போறாராமா... என்னமா நீ இந்தாளு சொல்றத அப்பிடியே நம்பிடுவியா' என்றோ ஓர் நாள் அங்கு சென்று வருமாறு தாய் கூறியதற்கு கூட நக்கல் செய்தானே!!!



தந்தையிடம் பதிலுக்கு பதில் பேசுவதிலேயே குறியாக இருந்தவன் அவர் மறு பக்கத்தை பார்க்க தவறி விட்டானா???



அவர் சொல்லாவிட்டால் கூட இவனல்லவா போய் கேட்டிருக்க வேண்டும்...



தந்தை இதற்குத் தான் திருத்த முயன்றாரோ???



என்ன செய்து என்ன பயன்???



அவரையும் புரிந்து கொள்ளாது அவர் கண்டிப்புக்கு பின்னால் இருக்கும் அன்பையும் புரிந்து கொள்ளாது மடத்தனமாய் இருந்திருக்கிறானே!!!



அதற்கென்று தந்தை மீது பாசம் இல்லாமல் என்றெல்லாம் இல்லை...



அவருக்கே தெரியாமல் அவர் வழியில் குறுக்கிட நினைப்பவர்கள் எத்தனையோ பேரை அவர் காண்பதற்கு முன்னே அழித்து விட்டவன் அவன்!!!



பெண் கடத்தல் கேஸ் மட்டுமல்லாமல் தன் காதலை அவளிடம் அந்நேரம் சொல்ல விடாது செய்தவர் மீது எப்போதுமல்லாத ஆத்திரம் எழ அவர் போன் காலை ட்ராக் செய்வதை விட்டதால் அவர் மிரட்டப்பட்டது தெரியாமல் போய் விட்டது அவனுக்கு...



அந்த இடத்தில் சறுக்காமல் இருந்திருந்தால் தந்தையும் தாயும் சகோதரனும் பக்கத்தில் இருந்திருப்பார்களோ???



தங்கை யாழினிக்கு மனக் கஷ்டம் வர விடாமல் செய்திருக்கலாமோ???



எல்லாம் அவன் தப்பு.... எல்லாமே... நடந்த அனைத்திற்கும் மறைமுகமாக அவனும் காரணமாக இருந்திருக்கிறான்....



நினைக்க நினைக்க மனம் இன்னுமின்னும் வலித்தது.



"கதிர்...."



"...."



"கதீஈர்..."



"ஹாங்..."



"அப்பிடி என்ன யோசன உங்களுக்கு... அங்க பாருங்க உங்க பொண்டாட்டி முகத்துல வர்ற உணர்வுகள" அவள் கை காட்ட சலேரென திரும்பிப் பார்த்தவனுக்கு அவளின் குழப்ப முகம் பக்கென்றது.



மறந்து விடுவாளோ???



முடியுமா அவளால்... அவளால் என்பதை விட அவனால் முடியுமா???



அவள் முன் அந்நியனாக நடிக்க வேண்டி வந்தால் அவன் கடவுள் சாட்சியாக கட்டிய தாலிக்கு என்ன மதிப்பு???



இல்லை... அவளுக்கு அவன் தான்... அவள் மறந்தாலும் அவன் எப்போதும் அவளுடையவன் தான்... அவள் அவனுடையவள் தான்!!!



அதை யாராலும் மாற்றி விட முடியாது... மாற்றி விட்டாலும் அவன் மாற்றி எழுத வைப்பான்!!!



ஜெயம்!!!
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
###



"என்னமா சொல்லற... எப்போ நடந்துது... நாரயணா கிட்ட சொன்னியா?" மறுமுனையில் படபடத்தார் ஷக்திவேல்.



"இன்னும் இல்ல அங்கிள்... அப்பா டென்ஷனாயிடுவாரு... அதான் சொல்லல..."



"என்ன பொண்ணுமா நீ... முதல்ல அவன் கிட்ட சொல்லு... நான் கிளம்பி வர்றேன்"



"ஐயோ அங்கிள்... நீங்க வராதீங்க... இங்க நா பாத்துக்கறேன்"



"ஸ்ரீ... பத்தரம் டா... நான் இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கன்னு தேட முயற்ச்சிக்குறேன்... கண்ணா ஏதோ பெண் கடத்தல் கேஸ்னு அங்கே தான் சுத்திகிட்ருக்கான்... நீ வேணா அவன மீட் பண்றியா?"



"இல்ல தேவயில்ல அங்கிள்... நாம இத முதல்ல கண்டு பிடிக்கலாம்... அப்பறமா உங்க பையன் கிட்ட கேக்கலாம்... மே பீ... கண்ணா எடுத்திருக்க கேஸுக்கும் இதுக்கும் லிங்க் இருக்கும்னு தோனுது... இன்னிக்குள்ள நான் கண்டு பிடிச்சிட்றேன் அங்கிள்.... நம்புங்க"



"நம்பிக்க இருக்குடா... பட் பீ கேர்புல்... "



"ஓகே அங்கிள்... பை... " அவரின் காண்ணா எனும் அழைப்பு தான் அவனை அடையாளம் தெரியாமல் போவதற்கு காரணமாகப் போகிறதோ???



திறந்திருந்த கதவின் வழியே அவள் பேசுவதை கேட்டிருந்த ஷாலினிக்கு முகத்தில் குரூரப் புன்னகை தோன்றி மறைந்ததுவோ???



நீதி எப்போதும் சமநிலையில் இருப்பதில்லையே!!!



சில நேரங்களில் தர்மம் பக்கம் சாய்ந்தால் சில நேரங்களில் அதர்மம் பக்கம் சாயும்!!!



அதர்மம் பக்கம் சாய்ந்தே கிடந்தாலும் கடைசியில் தர்மமே வெல்லும்!!!



அது தான் உலக நியதி!!!



.....



அன்றிலிருந்து ஷாலினியின் ஒவ்வொரு அசைவு அவளுக்கும் பெண்ணவளின் ஒவ்வொரு அசைவு ஷாலினிக்கும் அத்துப்படி....



அங்கே தர்மமும் அதர்மம் மாறி மாறி சாய்ந்து கொண்டிருந்தது.



ஷாலினி எந்த நேரத்தில் என்ன செய்வாள் யாருடன் பேசுவாள் என்றெல்லாம் அறிந்தாலும் அந்த ஐயா என அழைக்கப்படும் பெயருக்கு சொந்தக் காரனை தான் அவளால் பிடிக்க முடியாமல் போயிற்று...



அதுவும் தான் ஷாலினியால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியும் வரை தான்...



அதன் பிறகு தான் அவள் களத்திற்குள் இறங்கினாளென்றே சொல்ல முடியும்....



ஷாலினிக்காக வைத்திருந்த ஸ்பையை நீக்கி விட்டவள் அசட்டையாய் இருப்பது போல் நடிக்க அந்த இடத்தில் முதலில் சறுக்கியது அதர்மம்.



அவர்களும் அத்துடன் அப்படியே இவளை கண்காணிப்பதை விட இகழ்ச்சியாய் உதட்டை வளர்த்தவளுக்கு மர்மமாய் ஓர் புன்னகை மின்னி மறைய அன்றிலிருந்து மீண்டும் ஷாலினியை பின் தொடர்ந்ததில் தெரிந்து கொண்டது அந்த ஐயா என்ற பெயருக்கு சொந்தக்காரனை பற்றி!!!



ராமலிங்கம்!!!



அதர்மத்தின் மறு உருவமாய்!!!



பணத்தை விட்டெரிந்து மக்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருபவனாய்!!!



அதில் தான் ஷாலினியும் சிக்கி இருந்தாளோ???



எவ்வளவு தான் விஸ்வாசமாக நடந்து கொண்டாலும் கடைசியில் அவர் தோட்டாவிற்கே அவள் இரையாகிப் போனதன் மர்மம் என்னவோ???



இங்கு பணம் தான் எல்லாமே... அது தீய வழியில் செலுத்தப்பட்டால் இறப்பதற்கு முன்னே தீய குணங்களால் இறந்து போகும் மனிதன் நல்வழியில் செலுத்தப்பட்டால் இறந்த பின்னும் வாழ்வான்!!!



பெண் கடத்தல் கேஸிற்கும் அவருக்கும் அவள் நினைத்தது போலவே தொடர்பு இருந்தது.



அதுவும் ஆரம்பப் புள்ளியே அவராக!!!



சாதாரணமாக அவள் விளையாட்டிலிருந்து ஷாலினி வந்து விட்டாலும் அவர் அப்பிடி இருக்காமல் போனது தான் வினையோ...



அவள் தன்னை பற்றி துப்பு துலக்குகிறாள் என்பதை கண்டறிய அவருக்கு நிமிடங்கள் போதுமாக இருக்க அவர் சாம்ராஜ்யம் அப்படி!!!



.....



"ஸ்ரீ... எதுக்குடி பேச மாட்டேங்கற?" கதவை உடைப்பவள் போல் தட்டிக் கொண்டு வந்து நின்ற நண்பியை சலனமே இல்லாமல் பார்த்தாள் ஸ்ரீமதி.



"என்ன ப்ராப்ளம் உனக்கு?"



"...."



"ஓஹ்... அவ்வளவு தூரமா போயிட்டேன்ல நான்... சரி பரவாயில்ல" திரும்பி நடக்கப் போனவளின் முன் ஓடி வந்து மறைந்து நின்றவள் அவள் கழுத்தை கட்டிக் கொண்டு அழுது தீர்த்து விட்டாள்.



"என்னமா என்னாச்சு.... ஏன் அழற ஸ்ரீ?"



"மலர்.... ஐ அம் சாரிடி... அம்மாப்பாவ நல்லா பாத்துக்கோ.... நான் முக்கியமான ஒருத்தர மீட் பண்ண போறேன்... " விலகி நடந்தவளை எட்டிப் பிடித்தாள் நண்பி.



"எங்கே போற ஸ்ரீ?"



"...."



"சரி... திரும்ப வருவல்ல?" அதற்கு பதிலில்லை பாவையிடம்...



அவள் உயிருக்கு உத்தரவாதமில்லையென்று தான் அவளுக்கு தெரியுமே!!!



"வர்றேன்" கையை விலக்கியவள் திரும்பிப் பார்க்காமல் நடக்க இவள் கண்களும் ஏனென்றே தெரியாமல் கலங்கிப் போயிருந்தன.



அன்று ஸ்ரீமதி யாக சென்றவள் வர்றேன் என சொன்னது வர்ஷினியாக வருவதற்கு தானோ???



......



தான் திரட்டிய ஆதாரங்களில் ஒன்றை ஏற்கனவே தந்தையிடம் கொடுத்து விட்டு மற்றையதை கையில் பற்றி இறுக்கியவள் நேரே ஷக்திவேலிடம் சென்று ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு வர தாயும் தந்தையும் அமர்ந்திருப்பது கண்டு அவர்கள் நடுவே சென்று அமர்ந்து தாயின் தோளில் சாய்ந்து கொண்டாள்.



ஆனால் இருவரிடம் தான் எந்த அசைவுமே இல்லையே....



கொஞ்ச நேரம் கழித்துத் தான் உணர்ந்தாளோ பேதை...



"டாடி... என்னாச்சு... அம்மா..." இருவரையும் அண்ணார்ந்து மாறி மாறி பார்க்க திடீரென வெடித்துக் கிளம்பியது சிரிப்பொலி...



திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவளுக்கு முன்னே குரூரமாய் நின்றிருந்தவரை பார்த்து உடல் தூக்கிவாரிப் போட அந்த சந்தத்தில் மயங்கி இருந்த தாயினதும் தந்தையினதும் மனங்கள் விழித்துக் கொண்டனவோ....



காலில் ஏதோ பிசைய கீழே குனிந்து பார்த்தால் போடப்பட்டிருந்த சோபாவிற்கு கீழே முழுவதுமாக இரத்த ஆறு....



அப்போது தான் கவனித்தாள் தாயும் தந்தையும் வயிற்றை பிடித்துக் கொண்டு மயங்கி இருப்பதை....



"ஸ்ரீ..." தந்தை தோள் தொட "மதி..." தாயும் தொட்டார்.



"இ... இங்க இருந்து த.. தப்பிச்சு பொ... டா... இவன்... கைல சிக்கிடாத" தந்தை சொல்வது காதில் விழுந்தாலும் அவளுக்கு ஏற்பட்டிருந்த அதிர்ச்சி அதை விட மோசமாக இருக்க அவளால் எப்படி நகர முடியும்!??



அவள் உயிருக்கு உத்தரவாதமில்லை என நினைத்திருந்தால் தாயும் தந்தையுமா அதில் பழியானார்கள்??



"ஸ்ரீ.... போ... இங்க இருந்து போ" அவன் மகளை நெருங்கி வந்து கொண்டிருப்பது கண்டு தன் பலத்தையெல்லாம் திரட்டி அவளை தள்ளி விட "டாடி... அம்மா" அழக் கூட அவகாசம் கொடுக்காமல்



"மதி... போமா அம்மா சொன்னா கேப்பல்ல.. போ.... இங்க இருந்து போ" கிட்டத்தட்ட கத்தினார் தாய்....



"அ... அம்மா.... டாடி.... " அவன் நெருங்க ஒரு இன்ச் இடைவெளியில் "மதி.... போஓஓஓ" அவர் உச்சாஸ்தியில் கத்த வெளியே கேட்டை தாண்டி ஓடியவளை அடித்துத் தூக்கியது ஒரு லாரி.



வீசப்பட்டு தூரப்போய் விழுந்தவளின் கண்கள் வீட்டிலேயே நிலைத்திருக்க வெளியே வந்து அவளையே இகழ்ச்சியாய் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார் லிங்கம்.



கடைசியில் அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் தாயையும் தந்தையையும் என்ன செய்தானோ என்ற பயம் இரண்டுமே அவளை பழைய ஸ்ரீமதியிலுருந்து தூர விலக்கி வைத்திருந்தது.



ரோட்டில் அடிபட்டு கிடந்தவளை யாரோ ஒருவர் ஆசிரமத்தில் சேர்க்க அவள் வாழ்க்கை அங்கேயே கழிந்ததில் ஷக்தியின் வாழ்க்கை மனைவி சத்யநந்தினி மற்றும் சகோதரன் அர்ஜுன் கிருஷ்ணா என அனைவர் வாழ்விலும் விதி ராம் ரூபத்தில் விளையாடி இருந்தது.



உடற் சோர்வினால் ஒரு தடவை ஆசிரமத்தின் முன் மீண்டும் மயங்கி இருந்தவளை தான் கதிர் கண்டதும்... தன்னை அறிமுகப்படுத்தி அபியின் குடும்பத்தை பெற்றோராக சகோதரனாக கொடுத்ததும்...



இதனால் தான் கதிர் அவளை அநாதையென திட்டிய போது உடனே உடைந்து போனாள்.



அவளுக்கு தெரியாதல்லவா அவளைப்பற்றியே???



உன் அம்மா அப்பா அண்ணன் என அறிமுகப்படுத்திய அவனே நீ ஒரு அநாதை என்றால் அவள் மனம் காயம்பட்டு போயிருக்காதா???



அடுத்தது ஷாலினி... அவள் வர்ஷினியை தெரிந்தே தான் வீட்டுக்குள் நுழைந்தாள் அதுவும் அவளை வேவு பார்க்க...



இனி நீ தேவையில்லை எனும் போது அவரே ஷாலினியின் உயிரை எடுத்து விட்டார் அவ்வளவே...



ஞாபகங்கள் மறந்திருக்கா விட்டால் அவள் உயிரும் போய் சேர்ந்திருக்கும் தான்...



தெரிந்த மாதிரி காட்டிக் கொண்டால் கதிருக்கு சந்தேகம் வரும் என்பது ராமலிங்கத்துக்கு தெரியாதா???



அவனைப் பற்றி அதிலும் அவன் தீவிரம் பற்றி நன்றாகவே தெரியுமென்றாலும் இன்னொரு பக்கம் அவள் அவன் மனைவியாக அவன் பாதுகாப்பில் இருந்தது வேறு அவருக்கு தடையாக இருந்தது.



அவள் அன்றே இறந்திருப்பாள் என எண்ணியிருக்க அவனின் மனைவியாக அறிமுகமானதே அவருக்கு பெரிய அடிதான்.



இதற்கிடையில் ஸ்ரீமதியை போலவே இருந்த அமிர்தவர்ஷினி கடத்தப்பட்டதும் இதே காரணத்துக்காக தான்....



அவள் ஸ்ரீமதியாக இருக்குமென கடத்தியிருக்க அவள் வேறு யாரோ என தெரிந்து கொண்டதினால் அவர்கள் தப்பித்து சென்றதை கூட அவர் பெரிதாக எடுக்காமல் விட்டு விட்டார்...



அவருக்கு தேவை ஸ்ரீமதி நாராயணன்!!!



அவள் இப்போது கதிரின் கட்டுப்பாட்டில் இருக்க அவளுக்கு மறந்து போயிருக்கிறது என்றதில் அவர் அசட்டையாக இருக்கிறார்.



எதிரி அசந்த சமயமே கதிர் தனக்கான திட்டத்தை வகுத்தது.



இதோ இப்போதும் கூட அவள் கண் விழித்து மலரை கட்டிப் பிடித்து தேம்பி அழுது கொண்டிருப்பது கூட அவனை அசைக்காத அளவிற்கு அவள் வாழ்க்கை அவளை சுழற்றி அடித்த விதம் அசைத்திருந்தது.



தன் முன்னால் ஒரு வார்த்தை பேச பயப்பட்டு அஞ்சி நடுங்கும் தன் மனைவியா அவ்வளவு தைரியமாக விடயத்தை எதிர் கொண்டிருந்திருக்கிறாள்!!!
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"கதிர்...." மலரின் அழைப்பில் சட்டென கலைந்தவன் அவள் கண் காட்ட தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளை தானும் பார்த்தான்.



அவன் பார்வை அவளை துளைக்க பின் செல்லப்பட்டிருந்த நினைவுகளில் அவன் அவளுக்கு திடீரென தாலி கட்டியது தெளிவாகவே ஞாபகம் இருந்தது.



அப்போது இவன் தான் தன் கணவனா???



"ஸ்ரீ.... இவர் கதிர்வேல்... உன் கணவர்" நண்பியை பார்த்திருந்தவள் அப்படியே கதிரை பார்க்க அவன் தன்னையே பார்த்திருந்தது அவஸ்தையை கொடுக்க தலை கவிழவும் உதட்டோரம் சிறு புன்னகை உதயமானது அந்த ஆறடி ஆண்மகனுக்கு!!!



.......



மலரிடம் பல அறிவுறைகள் கேட்ட பின்பே வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாலும் இதுவரை இல்லாத தயக்கம் இருவருக்குள்ளும்...



வீட்டை பார்த்தவுடன் அவள் கண்கள் கலங்க கூடவே அவன் ஆதரவான செய்கைகளும் அலைமோதியதில் மனப்பாரம் சற்றே குறைந்தது பேதைக்கு...



((சென்னை போமா... அவன் நடந்து கிட்டது ஞாபகத்துல வந்தா நீ பத்ரகாளி ஆவ ))



அவளை அறையில் விட்டு விட்டு வந்து சோபாவில் கண் மூடி சாய்ந்திருந்தவனுக்குள் பலத்த யோசனை...



ஏதோ ஒரு வெறுமை மனதில் சூழ மனம் அலைப்பாய்ந்து கொண்டே இருந்ததில் அவன் முகத்தில் குழப்ப ரேகைகள்...



அடுத்து என்ன செய்வது???



அந்த ராமலிங்கத்தை பழி தீர்க்கு முன் அடுத்த பிரச்சனைகள் அவனை தீர்த்து விடும் போலும்.



"க்கும்..." சட்டென கலைந்தவன் முன் நின்றிருந்தவளை ஏறிட்டுப் பார்க்க அவள் புடவையிலிருந்து சுடிதாருக்கு மாறியிருந்ததில் அவன் புருவங்கள் மேலுயர்ந்தன.



ஆனால் அவனுக்கு புடவை தானே பிடிக்கும்!!!



"வந்து.... மா.. கதிர்... சாப்டீங்களா?" மாமா எனும் அழைப்பு போய் கதிர் வந்து விட்டதா???



((இதுக்கு தானே ஆசப்பட்ட... அனுபவி ராஜா... அனுபவி))



"எனக்கு பசி இல்ல... இரு நான் வாங்கிட்டு வந்தட்றேன்" அவசரமாக எழுந்தவனை தடுத்தாள் பெண்.



"நானும் வரட்டுமா கதிர்... தனிய இருக்க ரொம்ப போரா இருக்கு"



"இல்ல வெளியில போறது ஆபத்து வ... ஐ மீன் ஸ்ரீ.. நான் இப்போ வந்தட்றேன்" அவன் வெளியேற அவன் தடுமாற்றத்தில் வாய் விட்டுச் சிரித்தவளின் அதரங்கள்

"இண்ட்ரெஸ்டிங்" மெதுவாய் முணுமுணுத்துக் கொண்டன.



....



"கொஞ்சம் பேசணும் கதிர்" தலை குனிந்து யோசனையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் "ம்" என தலையாட்டினானே தவிர அவளை நிமிர்ந்து பார்த்தானில்லை....



"அது... அந்த ராம்... உயிரோட தான் இருக்கானா இன்னும்?"



"ம்..."



"நான் அந்த ஆதாரங்கள திருப்பி தேடலாம்னு இருக்கேன்" விலுக்கென நிமிர்ந்தவன்



"ஏன் மறுபடி அடிபட்டு விழறதுக்கா?" என்றான் சுள்ளென்று...



"அது...இல்ல வந்து" அவள் தலை கவிழ



"நீ எதுவும் பண்ண தேவயில்ல... மூடிகிட்டு இரு" கோபமாய் கையை உதறிவிட்டு எழப் போனவனை இழுத்து அமர வைத்தவள்



"இப்போ எதுக்கு பாதியில எந்திரிச்சு போறீங்க... தேவயில்லன்னா விடுன்னு சொல்றத விட்டுட்டு அது என்ன கோபம்... சாப்புடுங்க... ம்" கோபமாய் கண்களை காட்ட அவளை ஒரு மார்க்மாய் பார்த்துக் கொண்டே அவன் மீண்டும் சாப்பிட துவங்க உதட்டோரம் சிறு புன்னகை மலர்ந்தது பெண்ணுக்கு....



'இவ நம்மள மறந்துட்டாளா இல்லயா... தாளி கட்னது மட்டும் தான் ஞாபகம் இருக்கறதா சொன்னான்னு மலர் சொன்னாளே... ஒரு வேல பழிவாங்குறாளா... ராட்சஸி...' அவன் மனதிற்குள் இது தான் ஓடிக் கொண்டிருந்தது.



***



"நான் நாளைல இருந்து வேலைக்கு வர்லாம்னு இருக்கேன்" அறிவிப்பாய் சொன்னான் ரக்ஷன்.



"பட் சார் கதிர் சார் வர்ற வர உங்கள வேலைக்கு அனுப்ப கூடாதுன்னு சொல்லி இருக்காரு"



"நா பேசறது அவன் கேக்காதப்போ அவன் சொல்றது மட்டும் நான் ஏன் கேக்கணும்?" எரிந்து விழுந்தான் அவளிடம்...



"சார்.. அவர் உங்க நல்லதுக்கு தானே சொல்றாரு"



"அவனுக்கு கீழ வேல பாக்குறியா.. இல்ல எனக்கு கீழவா?" அவன் கோபப்பட



"சாரி... " சட்டென எழுந்து நகரப் போனவளின் கை பிடித்து தடுத்தான் அவன்...



"சரி... உட்காரு"



"இப்போல்லாம் சும்மா கோபப்பட்றீங்க ரித்விக் சார்"



"சரிடி... உட்காரு கோபப்படல" முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்தாள் அர்ச்சனா.



"அவனுக்கு போன போட்டு தா... படுபாவி என் உயிர வாங்க பிறந்திருக்கான்.... பேசாம இருக்கவும் முடில" அவன் புலம்ப கலகலவென சிரித்தவள் அவன் மொபைலை எடுத்து நீட்டினாள்.



"கதிர்... நான் கல்கத்தால இருக்கேன்" அதிர்ந்து ரக்ஷனை பார்த்தாள் பெண்.



'எதுக்கு பொய் சொல்றாரு'



"வாட்...?" மறுமுனை அதிர்ந்து கத்த



"பேசிட்டல்ல... நன்றி... நா வெச்சிட்றேன்... பத்தரமா இரு" சட்டென துண்டித்தவன் அவளை பார்த்து கண் சிமிட்ட "அடப்பாவி" வாயில் கை வைத்தாள் பெண்.



"எதுக்கு பொய் சொன்னீங்க சார்?"



"அவன கடுப்பேத்த தான்"



"அவரு நம்பிட்டார்னா?"



"அவனாவது நம்பறதாவது... இப்போ பல்ல கடிச்சி கிட்டு எதிர்ல இருக்கறவன கடிச்சு குதறுவான்"



"அப்போ வர்ஷினி அண்ணி பாவம்"



"அவ கிட்ட கோபத்த காட்ட மாட்டான்குற நம்பிக்க"



"நீங்க ரொம்ப மோசம் சார்... " அவள் பதிலில் அவன் வாய் விட்டுச் சிரிக்க அவளுக்குமே புன்னகை...



.......



தீவிர சிந்தனையில் இருந்தனர் அபியும் குமரனும்...



அவர்களுக்குமே அடுத்து என்ன செய்வதென தெரியவே இல்லை...



"இப்போ என்னடா பண்றது?"



"கதிர் பேசினானா ஆதி? "



"இல்லடா... "



"வேற ஏதாவது பிரச்சனைல மாட்டி கிட்டானா?"



"தெரில குமரா... பயமா இருக்குடா"



"அவன் ஜெயிப்பான் மச்சி... டோன்ட் ஒர்ரி... திரும்ப கால் பண்ணு" அவன் ரகசிய கைப்பேசிக்கு அழைக்க உடனே ஏற்கப்பட இவனை முந்திக் கொண்டு அவன் தான் பேசினான்.



"ர.. ரக்ஷன் எங்கேடா?"



"ஏன் என்னாச்சு... வீட்ல தான் இருக்கான்... ஏன்டா?"



"டாமிட்.... கல்கத்தால இருக்கேன்னுட்டு வெச்சிட்டான்... மூளை இருக்கா இல்லயா அவனுக்கு... நான் எவ்வளவு டென்ஷனாயிட்டேன் தெரியுமா இடியட்... கைல மாட்டிடாதன்னு சொல்லி வை அவன்கிட்ட... கொல பண்ண கூட தயங்க மாட்டேன்... இடியட் இடியட்... ஸ்டுப்பிட்" வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகள் எல்லாம் அபியின் காதில் விழுந்ததில் மொபைலை விலக்கிப் பிடித்தவன் குமரனை பாவமாக பார்த்து வைக்க புருவம் சுருக்கினான் அவன்...



"திட்றான்டா"



"எதுக்கு ஆதி? " சரிப்பை அடக்குவது பெரும் பாடாகிப் போனது குமரனுக்கு..



"அந்த பாவி இவன கடுப்பேத்தி விட்ருக்கான்... அம்மு (வர்ஷினி) மேல கொபம் காட்ட முடியாதில்ல... அதான் நா மாட்டிகிட்டேன்"



"ரித்விக்கா?" அவன் வாய்விட்டுச் சிரிக்க



"பாவி சிரிக்காதடா..." மீண்டும் காதிற்கு கொடுத்தான் மொபைலை...



"டாம்ன் கல்ப்ரிட்... ***"



"டேய் டேய்... போதும் டா... பாவம்ல நானு?" மறுமுனையில் பல்லை கடிப்பது நன்றாகவே தெரிந்தது அவனுக்கு...



"திரும்ப ஆரம்பிச்சிடாத மச்சான்... இப்போ என்ன ப்ளான்?"



"அவன் கோட்டைக்குள்ள போக போறேன்"



"வாட்... லூசா நீ...?"



"ஏன் என்னால முடியாதா?"



"இடியட் மாறி பேசாத கிருஷ்... "



" பின்ன என்ன என்னடா பண்ண சொல்ற நீ... எவ்வளவு நாளா இந்த டென்ஷன் எனக்கு... சத்தியமா முடில டா... இதுல குட்டிமா வேற படுத்துறா என்ன " நண்பனின் நிலை அவனுக்குமே புரிவதாய்...



இருந்தாலும் அவனை தனியே அனுப்பி வைக்க முடியுமா அவனால்???



"ஷாலினி விஷயம் என்னாச்சு?"



"வேற என்ன ஆகணும்... இருந்த ஆதாரமும் போச்சு.... நீ விக்ரம் சார் கிட்ட பேசி அமிர்தாவோட (விக்ரம் டாட்டர்) ஹார்ட் ட்ரான்செக்ஷன் பைல வாங்கி படி... எனக்கென்னவோ பொம்மயோட ஹார்ட் அவளுக்கு போயிருக்கும்னு தான் தோனுது"



"ம்.. சரி மச்சி... அப்போ ஷாலினி?"



"மே பீ... அந்த இடத்துல கூட அவன் விளையாடி இருக்கான்"



"ஆனா எதுக்காக மச்சான்... ஆர்த்திக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்க போகுது?" அபி கேட்கவும் திடீரென உஷாரானான் கதிர்...



"என்ன கேட்ட?"



"ஆர்த்திக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?"



"கரெக்ட்... அந்த ஹார்ட்டோட க்ளூ இந்த கேள்வில தான் இருக்கு அபி... ஏதோ நடந்திருக்கு" குமரனுக்கும் அபிக்கும் சட்டென அந்த பதற்றம் தொற்றிக் கொள்ள



"என்னடா சொல்ற?" அதிர்ந்து போயினர் இருவரும்....



"ஆர்த்தியோட ஒரிஜினல் பைல் என் பீரோக்குள்ள தான் இருக்கு... டூப்ளிகேட் தான் அந்த ஹாஸ்பிடல்ல இருக்கு"



"வாட்... அது எப்பிடி?"



"அது அவனுங்க பைல நானும் ரக்ஷனும் தான் தூக்குனோம்.... ஹாஸ்பிடல்காரனுங்களுக்கு கூட தெரியாது இந்த விஷயம்..."



"அடப்பாவிகளா... மாட்னா சங்குடா" அபிக்கு சிறு புன்னகை தோன்றிற்று...



"இப்போ என்ன சொல்ல வர்ற?" இடைபுகுந்தான் குமரன்.



"அந்த பைலயும் விக்ரம்ஸ் டாட்டர் வர்ஷினி பைலையும் கம்பேர் பண்ணி பாரு.... ஐ ம் ஷூர்... விக்ரம்ஸ் டாட்டருக்கு பொம்மை ஹாட்ர் போயிருக்கும்... இந்த ஹார்ட் விஷயத்துல அந்த நாயி ஷாலினிய வெச்சு என் கூட விளையாடி இருக்கான்னா... பொம்மைய கொல பண்ணி இருக்கவனும் அவனா தான் இருக்கனும்"



"அதான் ஏன்? "



"அது தான் அவன் நமக்கு வெச்சிருக்க செக்" இரு முனையும் மயான அமைதி...



"நான் ராம் மாமா வீட்டுக்கு போயி ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பாத்துட்டு வர்றேன்... அதுக்கு இடைல நீங்க ஹார்ட் விஷயத்த க்ளியர் பண்ணிடுங்க... "



"ஓகே மச்சான்... பீ கேர்புல்... அம்மு எங்க?"



"இருக்கா... பை... " அழைப்பை துண்டிக்க தாங்களும் துண்டித்தவர்கள் உடனே கிளம்பினர்.



***



ட்ரைவரல்லாமல் காரை எடுத்துக் கொண்டு ஊரின் ஒதுக்குப்புறமாக சென்று கொண்டிருந்தார் லிங்கம்.



தூரத்தில் கார் வருவது கண்டே கேட் திறக்கப்பட்டிருக்க காரை அவர் நுழைக்கவும் மீண்டும் அது மூடப்பட்டது.



காரை கராஜில் நிறுத்தி விட்டு இறங்கியவர் தன் கையிலிருந்த சாவி கொண்டு அந்த பெரிய பூட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைய அங்கே இரத்தம் தோய்ந்த முகத்துடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர வைக்கப்பட்டிருந்தார் ஒருவர்!!!



தொடரும்......



26-08-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12 [ B ]



வாயிலிருந்து இரத்தம் வடிய நிமிர்ந்து பார்த்தவர் பார்வை அவரை முறைக்க



"என்னடா முறைப்பு?" பளாரென்றொன்று விட்டார் லிங்கம்.



"உம் மவளுக்கு எதுவும் ஞாபகம் இல்லாததுனால தான் உயிரோட இருக்கா... இல்லன்னா உன் பொண்டாட்டி கூடவே அனுப்பி வெச்சிருப்பேன்"



ஆம், அங்கு இருந்தது நாராயணனே தான்!!!



"அந்த ஷாலினிய வேவு பாக்க அனுப்பி வெச்சா அந்த வேலன் மேல லவ்வாம்... அவன் கல்யாணம் பண்ணிக்க போறாளாம்.... அதான் ஆதாரமா இருந்தாலும் விஸ்வசமா இருந்தாலும் நானே போட்டேன் "



"...."



"அந்த வேலுக்கு அது கூட தெரில... அவன் பொண்டாட்டி பத்தி எப்பிடி தெரியும்?" எகத்தாளம் நிரம்பி இருந்தது வார்த்தைகளில்...



"எ... என் பொ... பொண்ணு... பொண்ண... ஒன்னும் ப.. பண்ணிடாத... ப்.. ப்..ப்ளீஸ்... " குழுங்கி அழுதார் தந்தை....



"ஹாஹா... அப்போ ஆதாரம் எங்க இருக்குன்னு சொல்லு.... ஷாலினிய அனுப்பி பாத்தும் கூட ஒரு க்ளூவும் கிடைக்கல... சொல்லு... எங்க வெச்சிருக்க?"



"...."



"சொல்லு டா " அவர் தலைமுடியை கெத்தாக பற்றியவர் முகத்தில் குத்த மோதிரம் போட்டிருந்ததில் மூக்குடைந்து இரத்தம் பீரிட்டது நாராயணனுக்கு...



"ம.. மக்கள அ.. அழிக்கற... எந்த வி... விஷயத்திக்கும் நா... நா... துணை போக மாட்டேன்"



"ஏய்... ஏய்...." கண் காட்டியவர் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரப்பட அதில் நாராயணன் முகத்தை அமிழச் செய்து மூர்ச்சையாக்கி பிடித்து தள்ளி விட மீண்டும் மயங்கிப் போனார் அந்த மனிதர்.



"ரக்ஷனுக்கு கால போட்டு அந்த வேலன் எங்க இருக்கான்னு கேளு" அங்கே இருந்த ஆஜானுபாகுவான ஒருவனிடம் சொன்னார் அவர்...



***



"கதிர்... என்னாச்சு?" தலையை அழுத்தக் கோதிக் கொண்டு அங்குமிங்கும் நடந்தவனின் முன் வந்து நின்றாள் பேதை...



அவளை ஒரு கணம் பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை அவன்...



"என்னாச்சுன்னு கேட்டேன்"



"ஒன்னில்ல வரு... போ"



"வரு???"



"ப்ச்... இவ ஒருத்தி... ஸ்ரீ... போதுமா போ"



"வரு யாரு?"



"என் மனைவி"



"வாட்?"



"என்ன வாட்... உன் பேரு தெரிய முன்னாடி அதான் உன் பேரு... அமிர்தவர்ஷினி"



"உவ்வேக்... என்து எவ்வளவு அழகான பேரு... அது சொல்லி ஏன் கூப்டீங்க?"



"ம்... ஆச... போவியா"



"இல்ல... எனக்கு அந்த பேரு பிடிக்கல... "



"சரி கூப்புடல போ.. "



"எனக்கு உங்க கூட பேசணும்"



"சொல்லு" இருக்கும் கலேபரத்தில் அவள் வேறு கடுப்பேற்றிக் கொண்டிருக்க எரிச்சலானான் காளை...



"எதுக்கு எப்போ பாரு டென்ஷனாவே இருக்கீங்க கதிர்"



"முதல்ல கதிர் போட்றத நிறுத்துறியா... இர்ரிடேடிங்"



"அப்போ என்ன சொல்லணும்? "



"ப்ச்... விடு... "



"ஷ... ஷக்தி அங்கிள் இருக்காறா?"



"இல்ல"



"ஏன் என்னாச்சு?"



"கொ...க்கும்... கொன்னுட்டாங்க" அவள் விழிகள் சட்டென கலங்கிப் போக அவனதும் சிவந்திருந்தது.



"அவரு... அவர உங்களுக்கு தெரியுமா கதிர்?"



"எஸ்... "



"அவ... அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா?" அவளை விசித்திரமாக பார்த்து வைத்தானே தவிர தன் தந்தையென சொல்லவில்லை அவன்...



மறந்து விட்டானா அல்லது தேவையில்லை என்று நினைத்தானா???



"ம்..."



"தேங்க்ஸ்..."



"... "



"நாம ஏன் இங்க தனியா இருக்கோம்? "



"சின்ன வேலையா கல்கத்தால இருக்கோம்... வீடு சென்னைல இருக்கு"



"ஓஹ்..."



"..."



"இப்போ டென்ஷன் போயிடுச்சா?" உண்மையில் போயிருந்தது தான்...



அவளை பார்த்து மென்மையாய் புன்னகைத்தவன் அவளை இழுத்து அணைக்க அதிர்ந்து போனாள் பெண்.



"ஒரே வீட்டுக்குள்ள இருந்தும் விலகினா மாறி பீல் ஆகுது கண்ணம்மா... என்னமோ மனசு வெறுமையா இருக்கு " அவன் அணைப்பு இறுக கண்களை இறுக மூடியவள் அவனுள் புதைய முயன்றாள்.



மலர் சொன்னது போல் அந்த வீட்டில் நடந்தது மட்டுமே ஞாபகம் இருந்தாலும் வேண்டுமென்றே தான் கதிர் போட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறாள்.



இப்போது அவன் வெறுமை என்று சொன்னதை அவளால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...



அதனால் தான் அவனுள் பாந்தமாக அடங்கிப் போய் நின்றாளோ???



***



"சார்...." விக்ரமின் முன் வந்து நின்றனர் அபியும் குமரனும்...



"வாங்கடா... உக்காருங்க"



"முக்கியமான விஷயம் பத்தி பேசணும்"



"சொல்லு குமரா" நண்பனை பார்த்தவன் சொல்லுமாறு கண் காட்டினான்.



"சார்... வர்ஷினியோட ஹார்ட் ட்ரான்செக்ஷன் இன்பர்மேஷன் பைல் தர முடியுமா?" அதன் டூப்ளிகேட் அவரிடம் தான் இருந்தது.



கண்களை இருவர் மீதும் படர விட்டவர் எதுவும் பேசாமல் உள்ளே சென்று ஒரு பைலை எடுத்துக் கொண்டு வந்து நீட்ட



"சார்... ஏன் எதுவும் பேச மாட்டேங்குறீங்க? " இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை...



"நானும் ஒரு போலிஸ்காரன் தான்.... சோ அந்த எதுக்குன்ன கேள்வி அவஷியமில்ல" இருவர் உதட்டிலும் புன்னகை...



குமரன் கையிலெடுக்க இருவரும் செல்வதை பார்த்துக் கொண்டே தந்தை அருகில் வந்தமர்ந்தாள் அமிர்தா.



.....



கண்களை படர விட்ட அபி

"கிருஷ் சொல்றது கரெக்ட் மச்சி... இவங்க ரெண்டு பேருக்கும் தான் மேட்ச் ஆகுது எல்லாம்... " புன்னகையுடன் நிமிர்ந்தான்.



"ஹார்ட் ப்ராப்ளம் முடிஞ்சுது.... இப்போ பாக்கி இருக்கறது ஏன் அவ கொலை செய்யப்பட்டாங்குறது மட்டும் தான்" குமரனின் கூற்றை ஆமோதித்தான் அபினவ் ஆதர்ஷ்.



"கதிருக்கு கால போடு"

...



"எஸ் டா... "



"நீ கெஸ் பண்ணது கரெக்ட் மச்சி... ஆர்த்தி ஹார்ட் அமிர்தாவுக்கு தான் போயிருக்கு"



"குட்.... மீதிய நான் பாத்துக்கறேன் குமரா.... "



"பீ கேர்புல் டா"



"ம்... " அழைப்பு துண்டிக்கப்பட்ட இருவரும் வெளியேறினர்.



.....



"அபி மாமா.... " கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் பெண்.



"சொல்லு பேபி"



"அண்ணா கால அட்டென்ட் பண்ண மாட்டேங்குறாங்க"



"நான் பேசிகிட்டு இருந்தேன்... கவனிச்சிருக்க மாட்டான்... இப்போ எடு"



"ம்..." அவன் பதிய மொபைலுக்கு அழைக்க உடனே எடுத்து விட்டான் காளை...



"எப்பிடிடா இருக்க?"



"நல்லா இல்ல"



"ஏன் என்னாச்சு....?" அவன் பதற்றம் இவளுக்கு அழுகை வர வைத்தது.



"சாரி"



"ஏய் எதுக்குடா அழற? "



"நான் ரொம்ப கஷ்டப்படுத்தறேன்ல உங்கள?"



"ப்ச் அப்பிடி இல்லடா.... அழறத நிறுத்து முதல்ல..."



"ம்.... எப்போ வருவீங்க?"



"சின்ன வேலை இருக்கு அது முடிஞ்ச உடனே வந்துடுவேன்டா... "



"அண்ணி நல்லா இருக்காங்களா?"



"ஆமா டா... இருக்கா... பேசறியா?"



"இல்ல என் மொபைலுல சார்ஜ்... " அவள் முடிக்கு முன் அணைந்திருந்தது மொபைல்.



"ஆப் ஆகிடுச்சு மாமா" பாவமாய் தன்னை ஏறிட்டவள் குரலில் அவளையே ரசித்திருந்தவன் திடுக்கிட்டு கலைந்தான்.



"என் மொபைலுல பேசறியா?"



"ஊஹூம்.... நா அப்பறமா பேசறேன்" திரும்பி நடக்கப் போனவளின் கை பிடித்து இழுக்க தன் மேல் வந்து மோதியவளை பின்னாலிருந்து அணைத்தான் அபி..



"மா... மா... விடுங்க"



"என் கேள்விக்கு பதில் சொல்லு விட்றேன்..."



"சரி கேளுங்க..."



"நா உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா என்ன பண்ணுவ?" அதிர்ந்தவள் அவனை தள்ளி விட்டு ஏறிட்டாள்.



"எ... என்ன பேசறீங்க மாமா?"



"பதில்"



"நா... நா... வேற ஒருத்தர லவ் பண்றேன்" அவள் திரும்பி நடக்க அதிர்ந்து நின்றவனுக்கு உலகமே தட்டமாலை சுற்றியது!!!



வெளியேறப் போனவளை ஈரெட்டில் அடைந்தவன் அவளைப் பிடித்து ஆக்ரோஷமாக தன் பக்கம் திருப்பி அவள் உணரும் முன்பே அவளதரங்களை முரட்டுத் தனமாக சிறைபிடித்திருக்க அவள் கண்கள் அதிர்ச்சியில் தெறித்து விடுமளவு விரிந்து கொண்டது.



முத்தமிட்ட பின் இருந்த ஆக்ரோஷமெல்லாம் வடிந்து போய் விட்டதோ காளைக்கு???



அவன் கண்கள் தானாய் மூடிக் கொள்ள அவளிடையை வளைத்து இறுக்கியன அவன் கைகள்....



கொஞ்சமாக சுயநினைவடைந்தவள் அவன் மார்பில் கை வைத்து தள்ள திடீரென தள்ளப்பட்டதில் சமநிலையின்றி விழப்போனவன் காள்களுக்கு அழுத்தம் கொடுத்து சமன்படுத்திக் கொண்டு அவளை ஏறிட



"நா வேற ஒருத்தர லவ் பண்றேன்னு தெரிஞ்சும் கிஸ் பண்றீங்க... வெக்கமா இல்ல?" சீறினாள் பெண்.



"நீ தானே வேற ஒருத்தன லவ் பண்ற... நான் இல்லையே.... பின்ன எதுக்கு வெக்கப்படணும்?"



"நீங்க லவ் பண்ணா மட்டும் போதுமா?"



"இல்லதான்" அவள் இடையூடு கையிட்டு தன்னை நோக்கி இழுத்தவன்



"பட் நீயும் என்ன லவ் பண்ற?" என்றான் அமர்த்தலாக...



"விடுங்க... "



"ஐ லவ் யூ பேபி மா... ரொம்ப வருஷமா லவ் பண்றேன்டி... கிருஷ் ஏத்துக்காம போயிடுவானோன்னு பயந்தே இது வர வெளிப்படுத்த தயங்கினேன்... பட் உன் கூட இருக்கும் போது என்னால என்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடிலடி... "



"அண்ணா எதுக்கு ஏத்துக்கணும்... ஏத்துக்க வேண்டியது நான்?"



"அப்போ நா வேணாமா உனக்கு? "



"...."



"அப்போ நீயே எனக்கு பொண்ணு பாத்து கொடு" திமிறி விலகியவள்



"என் கிட்டயே பொண்ணு பாக்க சொல்றியா இடியட்... " அவன் ஷர்ட் காலரை கெத்தாக பற்ற வாய் விட்டுச் சிரித்தான் அவன்...



"பேபி மாஆஆ" அவள் இரு கண்ணங்களையும் பிடித்து ஆட்டியவன்



"உன்ன விட்டு நான் வேற பொண்ணு கூட பேசுனது கூட குறைவு... அப்பறம் எப்பிடி வேற ஒருத்திக்கு தாலி கட்டுவேன் சொல்லு" அவள் நெற்றியில் இதழ் பதிக்க கண்களை இறுக மூடிக் கொண்டாள் பெண்....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் காரிகை...



கணவன் நினைவுகளே அவளை பெரிதும் பாதித்திருக்க அவன் ஒரு தடவை அவனைப் பற்றி சொன்னது மாறி மாறி நினைவடுக்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.



சற்று நேரத்தில் அவன் எங்கோ கிளம்பப் போவதாக கூறியிருக்க தானும் வர வேண்டும் என கூறியதற்கு கோபப்பட்டு குளியலறை சென்றவனை முறைத்து பழிப்புக் காட்டியவள் அப்படியே அமர்ந்து விட்டாள்.



குளித்து முடித்து உடை மாற்றி வந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வர்மனை அழைக்க கலைந்தாள் பெண்....



"கதிர்"



"ம்..."



"நானும் உங்க கூட வரட்டுமா?"



"அதான் தேவயில்லன்னு சொல்றேன்ல... அப்பறமும் என்ன?"



"ப்ளீஸ் கதிர்... ரொம்ப போரிங்கா இருக்கு..."



"வேண்டாம் ஸ்ரீ.... நான் இன்னிக்குள்ள வந்துடுவேன்... நாம கல்கத்தால இருக்கறதே ரிஸ்க்கான விஷயம் டா.... புரிஞ்சிக்க ட்ரை பண்ணு" நிதானமாக விளக்க முயன்றான்.



"மாமா..." அவன் ஷர்ட் காலரை பற்றி திடீரென இழுத்து அவன் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவள் அவன் ஆச்சரியப் பார்வையில் மெலிதாய் சிரிக்க அவள் சிரிப்பில் மயங்கிப் போனான் காளை...



"பீ கேர்புல்" அவன் நெற்றியில் இதழ் பதித்தவள் அவனை விட்டு விலக எத்தனிக்க அவளை இழுத்து பின்னாலிருந்து அணைத்தவன் அவள் தோளில் தன் முகவாயை பதித்து நிற்க அமைதியாய் நின்று கொண்டாள் பாவை...



"என்னாச்சு கண்ணம்மா?"



"ப்ச் ஒன்னில்ல கதிர்"



"அப்போ ஏன் மூஞ்சி இப்பிடி இருக்கு?" தன்னை நோக்கி திருப்பியவன் அவள் கண்ணமேந்த



"அந்த ராமலிங்கத்த அழிக்கறதுக்கு துணிஞ்சவங்க அவன் முன்னாடியே போயிட்றாங்க... நீங்களும் இதுல இறங்கி இருக்கீங்க... உங்க மேல முழு நம்பிக்க இருந்தாலும் பயமா இருக்கு கதிர் " கண் கலங்க அவனை பார்த்தவளை மென்மையாய் அணைத்துக் கொண்டவனின் பிடிக்கு மாறாக கண்கள் பழிவெறியில் பளபளத்தது.



"என் மேல நம்பிக்க வைடா... அவனுக்கு சமாதி கட்டிட்டு தான் நாம சென்னை போறோம்.... இன்னும் ரெண்டு நாள்ல நியூஸ் வரும்" அவன் முகம் பார்க்க முற்பட்டவளின் தலையை தன்னுள் புதைத்தவன் முகத்தை நல்ல வேளையாக அவள் பார்க்கவில்லை....



***



"குமரா... கிருஷ் எப்போ வர்றதா சொன்னான்?" வெளியே ஹாலில் அமர்ந்திருந்தனர் நண்பர்கள் மூவரில் ரக்ஷன் தான் கேட்டான்.



"இன்னிக்கு கால் எடுக்காதேன்னு சொன்னான் ரக்ஷன்... ஏன்னு தெரில"



"என்னாச்சு... ஏ... ஏன்?" அவன் உடனே பதற இருவரும் சிரித்துக் கொண்டனர்.



"சிரிக்காதிங்கடா.... அவன் கல்கத்தா போனது எனக்கு சுத்தமா பிடிக்கல"



"ஆதி... இவன் கிட்ட சொல்லாம போன கோபத்த எப்பிடி சமாளிக்கிறான் பாரு" அபியை துணைக்கழைத்தான் குமரன்.



"ஹாஹா ஆமா ஆமாடா..."



"ரெண்டு பேரும் சேந்து கலாய்க்குறீங்களாடா?"



"இல்லயா பின்ன?" அபி சிரிக்க கோபமாய் குஷனை தூக்கி எறிந்தவன் அவனை அடிக்கப் பாய விலகி ஓடவும் வாய்விட்டுச் சிரித்தான் குமரன்.



"க்கும்..... " அருகில் வந்து நின்று தொண்டையை கணைத்தாள் பெண்.



சிரிப்பு தடைபட புருவம் சுருக்கி நிமிர்ந்தவன் அவளை கண்டு எழப் போக



"இருங்க குமரன் சார்" அவன் தோளை பிடித்து அமர வைக்க அவளையும் கையையும் மாறி மாறி பார்த்தானே தவிர எதுவும் பேசினானில்லை....



"சார்.... அப்பா... "



"அப்பா சொன்னாரா உனக்கு பாத்த மாப்பிள்ளை நான்னு...?" அதிர்ந்து விழித்தவளை நிமிர்ந்து கூட பார்க்க தோன்றாமல் கைகளை மார்புக்கு குறுக்கா கட்டிக் கொண்டவன் நேரே பார்த்து அமர்ந்திருந்தான்.



"அது..."



"நீ கதிர லவ் பண்ணியா?" ஏனோ என்ன முயன்றும் அவனுக்கு அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.....



"இல்ல... பட் ஈர்ப்பு இருந்துது"



"அப்பா சொல்லலன்னா அது கூட தெரியாம போயிருக்கும் இல்லயா?"



"...."



"லீவ் இட்... சொல்லு என்ன பேச வந்த?" அவன் எழுந்து கொள்ள



"கொஞ்சம் தனியா பேசணும் " அவனை கெஞ்சுதலாக பார்த்தாள் மாது.



"தனியா தானே இருக்கோம்... சொல்லு"



"ஹால்ல நிக்கிறோம் குமரன் சார்... "



"உனக்கும் எனக்கும் நடுவுல எதுவுமில்ல.... அப்பறம் என்ன?" தாண்டி நடக்கப் போனவனை கை பற்றி தடுக்க நின்றானே தவிர எதுவும் பேசினானில்லை....



"ஏன் இப்போ இப்பிடி நடந்துக்கறீங்க குமரன்.... நான் என்ன பண்ணேன்? " கோபமாய் திரும்பி அவளை உறுத்து விழித்தவன்



"நீ எதுவும் பண்ணலமா தாயே... தப்பு பண்ணது நான் தான்.... அத்தன வருஷம் காத்துகிட்ருந்தவனுக்கு நீ கொடுத்த வலி மறக்குமா... எப்பிடி என்னால சகஜமா பழக முயும்னு நெனக்குற?" கிட்டத்தட்ட கத்தினான்.



"நான் உன்ன லவ் பண்றேன்னு நீங்க என்னைக்காவது என் கிட்ட சொல்லி இருக்கீங்களா குமரன்... நீங்க வாயே திறக்காதப்போ எனக்கு எப்பிடி தெரியும்.... எல்லோரும் காதலை உடனே உணர்றது இல்ல... சிலவங்க சொன்னா தான் உணருவாங்க... அதுக்கு நீங்க வாய்ப்பே தராம என் கிட்ட பேசாம இருந்தா என்ன அர்த்தம்?" கண்ணீர் விழவா வேண்டாமா என கேட்டுக் கொண்டிருக்க அவன் கையை விட்டவள் விலகி நடக்க அப்போது தான் அவன் தப்பே உறைத்தது அவனுக்கு.....



***



மாமன் மகளின் அறையில் தன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்தவாறே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் கதிர்வேல்.



என்ன முயன்றும் அவனால் சந்தேகப்படும் படி ஒரு பொருளை கூட காண முடியாமல் போக கட்டிலில் அமர்ந்தவன் தலையனையை எடுத்து வீச அதனுடன் சேர்ந்து விழுந்தது சின்ன போட்டோ பிரேமொன்று...



அவள் இறந்து இன்று தான் அவள் ரூமிற்குள் நுழைந்நிருக்கிறான்....



மனம் கணத்தாலும் அவள் சாவிற்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற உந்துதலே அவனை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தது.



தன் நெற்றிப் பொட்டை மீண்டும் அழுத்தத் தேய்த்துக் கொண்டவன் அதை எடுத்து முன்னும் பின்னும் திருப்ப அதில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாளே தவிர எந்த சந்தேகமும் வரவில்லை அவனுக்கு...



"ப்ச் பொம்ம.... சாரிடி" தூக்கி போடப் போனவன் ஏதோ தோன்ற மீண்டும் அவசரமாக எடுத்துப் பார்க்க அவள் சிரிப்பிற்கு அதாவது அவள் சிரிப்பது போலவே பொறுத்தப்பட்டிருந்தது ஒரு சாவி!!!



மெதுவாய் அதை தொட்டவன் அது பிரம்மையல்ல என் தெறிந்த மறு நொடி கைகளில் எடுத்தவனுக்கு அது அமைக்கப்பட்டிருந்த முறையே பிரம்மிப்பாய்....



உண்மையில் அது போட்டோ பிரேம் அல்ல.... அது போல் வடிவமைக்கப்பட்ட ஒரு பெட்டி!!!



கையிலிருந்த சாவி கொண்டு அவள் வாய் பகுதியில் நுழைக்க சட்டென திறந்து கொண்டது அந்த புகைப்பட சட்டம்!!!



உள்ளே இரண்டு பெண்ட்ரைவ் மற்றும் ஒரு மினி சிப்.....



ஆச்சரியம் என்பதை விட அதிர்ந்து அமர்ந்திருந்தவனுக்கு அவள் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் சற்றே தட்டுப்படுவதாய்....



நிச்சயம் ராமலிங்கம் பற்றி அவளுக்கும் தெரிந்திருக்கிறது!!!



அதனால் தான் கொலை நடந்தேறி இருக்கிறது!!!



ராஜாராமின் லேப்டாப்பை அவசரமாக எடுத்துக் கொண்டு வந்தவன் நேரம் கடப்பது உணர்ந்து பெண்ட்ரைவை போட்டு அவசரமாக கீ போர்ட்டை தட்டினான்.



முதலில் ஒரு ஆடியோ தான் இருந்தது.



அதுவும் அவன் மாமன் மகளின் உருக்கமான குரலில்....



"மாமா... இத நீ கேக்கும் போது நா உன் பக்கத்துல நிச்சயமா இருக்க மாட்டேன்... ஏன்னா நான் சிக்கி இருக்க வலை அப்பிடி...



ஏன் மாமா... அத்தன வருஷமா ஒன்னா இருந்து கூட... என்ன விடு... அம்மா அப்பா அபி அண்ணா மேல இருந்த நம்பிக்க எப்பிடி தரைமட்டமாச்சு???



யாரோ ஏதோ சொன்னா உன் உறவுகள ஒதுக்கி வெச்சிடுவியா???



அண்ணா ரொம்ப உடஞ்சி போயிட்டான் மாமா... அவன என்னால அப்பிடி பாக்க முடில... ப்ளீஸ் வா மாமா... அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே உன் பேச்சு தான்... ரொம்ப டிஸ்டர்பா இருக்காங்க...



என் காதலை சொல்லியும் நீ பாக்கற அந்நிய பார்வ என்ன கொல்லுது மாமா... ஏன் உனக்கு என்ன பிடிக்கல???



எங்க குடும்பத்த விலக்க நீ சொன்ன காரணங்கள்ல என்னால நம்ப முடில... நேத்து இருந்தவன் இன்னிக்கு செத்துட்டா மாதிரி ஒரே நிமிஷத்துல தூக்கி எறிஞ்சிட்டல்ல???



உன் கிட்ட உண்மைய தெளிவு படுத்த தோனிச்சு மனசுக்கு... உன் குடும்பத்த அப்பா கொலை பண்ணலன்னு தெரியும்... ஆனா அப்பா பேரு போயிருக்கு.... இது எப்பிடின்னு எனக்கு தெரில....



தெரிஞ்ச வர யோசிச்சேன்... எதுவும் புரியல... அப்பா டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண தொடங்கினப்போ தான் அப்பாவோட இன்னொரு ரெட்டை சகோதரர் பிறந்து இறந்து போயிட்டாருன்னு தெரிய வந்துது...



என்னால அத சத்தியமா நம்ப முடில...



தூக்கி போட்டுட்டு இருந்தாலும் நீ தினம் தினம் பேசாம கொன்னுகிட்டு இருந்த...



என்னால தாங்க முடில மாமா... திரும்ப அதே டீடெயில்ஸ் வெச்சி அந்த ஆள பத்தி யாருக்கும் தெரியாம தேட துவங்கினேன்...



நா நம்புனதுக்கு மாற்றமா அவரு உயிரோட இருக்காருன்ன விஷயத்த என்னால ஜீரனிக்கவே முடில...



அப்போ புரிஞ்சிது ஷக்தி மாமாவ கொலை பண்ணது அப்பா இல்ல தலைமறைவா இருக்கற அவரு தான்னு...



அப்பா கிட்ட பேச்சு கொடுத்து அவர் குணம் பத்தி கேட்டப்போ தாத்தா எப்போவும் அப்பா மேல தான் பாசம்னு சண்ட போடுவாராம்... அதுல அப்பா மேல ஒரு வன்மம் இருந்திருக்கும்னு நெனச்சேன்...



அதுக்கும் காணாம போறதுக்கும் என்ன சம்பந்தமா இருக்கும்னு சத்தியமா புரில....



அப்போ தெரிஞ்சது அவருக்கு ஊருல இருக்க பெரிய தாதாக்கள் கூட பழக்கம் இருந்திருக்கு.... கஞ்சா கேஸ்ல ஒரு தடவ மாட்டியிருக்க தாத்தா ரொம்ப அடிச்சு போலிஸ்ல பிடிச்சு கொடுப்பேன்னு மிரட்டியிருக்காரு....



அந்த கோபத்துல தாத்தாவ கொலை பண்ணி இருக்காரு.... அது தான் அவரோட முதல் கொலை.... அந்த வீட்ல இருந்தா அவர் வழியில போக முடியாதுன்னு தான் செத்ததா நம்ப வெச்சிட்டு தலைமறைவாகி இருக்காரு....



இது நான் அவர பத்தி தேடினதுல கிடச்சது தான்...



அவரை அவர் எப்பவும் வெளிப்படுத்தி கிட்டது இல்ல.... அப்பிடி வெளிப்பட்ற சம்பவம் வந்தா அவன அழிக்கிறது தான் அந்த லிங்கத்தோட பழக்கம்....



நா அவர பத்தி தேடுனது எப்படி தெரிஞ்சுதுன்னு தெரில... ஒரு தடவ மிரட்டல் வந்துது... பயந்து போயி கொஞ்ச நாள் அமைதியா இருந்தேன்... உன் கிட்ட சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம்...



பட் நீ அதுக்கு வாய்ப்பே தர்ல மாமா.... ரொம்ப வலிக்குது....



இத உன்கிட்ட எப்போ கொடுப்பேன்னு தெரில... எனக்கு உன்ன பாக்கணும் மாமா...



அப்பா தப்பு பண்ணல... நம்பு மாமா...



இத கேட்டும் நீ நம்பலன்னா ஒரு வேல அவனால நா செத்துட்டேன்னா என் தேடலுக்கு அர்த்தமே இல்லாம போயிடும் மாமா...



மாமா... புரிஞ்சிக்கோடா... அப்பாவும் அண்ணாவும் தப்பு பண்ணல டா... வந்துடு மாமா" ஆடியோ முடிய அவள் அழவும் அவனுக்கும் மலுக்கென கண்ணத்தை தொட்டது கண்ணீர்.



கொஞ்சம் யோசித்திருந்தால் அவள் உயிரையாவது காப்பாற்றி இருக்கலாமோ???



இப்போது அவனுக்கு எல்லாம் புரிந்தது.



ஸ்ரீமதி மற்றும் அவன் மாமன் மகள் ஆர்த்தி என இருவரும் ஒரே காலகட்டத்தில் தான் சிக்கியிருக்க வேறு வேறு இடங்களில் இருந்ததில் கொலைகளுக்கு சந்தேகம் ஏற்படவும் வாய்ப்புக்கள் குறைவு.



ஸ்ரீமதி ஆக்ஸிடெண்ட்டில் இறந்து விட்டாள் என நினைத்திருக்க அவளைப் போலவே உருவ ஒற்றுமையுள்ள அமிர்தவர்ஷினி ஆர்த்தியை குத்துவது வீடியோ எடுப்பது கண்டு அவளாக இருக்குமென நினைத்து தான் அமிர்தாவுக்கும் கொலை முயற்சி நடந்திருக்கிறது.



இதில் இதயம் மாற்றப்பட்டதில் விளையாடி இருப்பதுவும் அவன் தான்...



அப்போது தானே ஷாலினியை உள்ளே நுழைக்க முடியும்.



உண்மை தான்... ராமலிங்கம் அழகாக காய்களை நகர்த்தி விளையாடி இருக்கிறார்.



ஆர்த்தியுடைய ஹார்ட் அமிர்தவர்ஷினிக்கு போயிருப்பது அவருக்கு தெரிய வந்திருக்காது...



ஹார்ட் மாற்றம்... என்ற அந்த ஒரு வசனத்தை வைத்தே ஷாலினியை பகைடைக்காயாய் ஆக்கி இருந்தவர் ஹார்ட் உண்மையில் பொருத்தப்பட்ட அமிர்தவர்ஷினியை மறந்து விட்டார்.



ஸ்ரீமதி என நினைத்து கொல்ல நினைத்தவர் அவள் உயிரோடு இருப்பது விரும்புவாரா???



அது தான் அவரே அறியாத அவரின் முதல் சறுக்கல்....



அதன் பின் அமிர்தாவை அவர் கடத்தியதாக அவள் அன்று கூறியதிலிருந்தும் ஒன்று புரிந்தது.



உண்மையில் அவளுக்கு லிங்கத்தை பற்றி தெரியாததனால் அவள் முழிக்க அவளுக்கு அடிபட்டதில் மறந்து விட்டது என இகழ்ச்சியாய் நினைத்து அவளும் விக்ரம் ராதாவும் தப்பிச் சென்றதை கண்டு கொண்டிருக்க மாட்டார்.



அதே நேரமே கதிருடன் ஸ்ரீ இருப்பது தெரிய வந்திருக்க அவளை வேவு பார்க்கவே ஷாலினி!!!



திருமணமாகாதவன் என ஷாலினி நினைத்ததினால் தான் ஸ்ரீயை அவன் மனைவி என அறிமுகப்படுத்தியது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.



வேவு பார்க்க அனுப்பப்பட்டவள் காதலில் விழுந்தது அவள் உயிரையே காவு வாங்கி விட்டது போலும்!!!



எதிரியை பலமிழக்க வைக்க வேண்டுமென்றால் முதலில் அவன் இதயமே குறி பார்க்கப்படும்!!!



அது தான் தந்தை வாழ்வில் நடந்திருக்கிறது.



அவருக்கும் விடயம் தெரிந்தது லிங்கத்துக்கு தெரிய வர அவருக்கு உயிரான மனைவியை முதலில் கொன்று விட்டிருக்கிறார்.



அவர் நினைத்தது போல ஷக்திக்கு அது பெரிய அடி தான்!!!



அர்ஜுன் இதில் அப்பாவியாய் கொல்லப்பட்ட உயிர்!!!



தாய்க்காக தனியாளாக போராட நினைத்தவன் கடைசி நேரத்தில் உண்மை தெரிய வந்து செத்து விட்டான்!!!



அவன் தனியாக மாட்டியதையும் சாதகமாக எடுத்தவர் ஷக்திக்கு அடுத்த பலமான அடியாக அடித்து விட்டார்.



அப்போது தானே அவரின் வழிக்கு வரமாட்டார்கள்!!!



கொலை செய்ய சின்ன காரணமே ஒரு மனிதனுக்கு போதுமாய் அமைந்து விடுகிறது.



ரக்ஷனின் அண்ணனை கதிர் தன்னையறியாமல் கொலை செய்து விட்டிருந்ததில் தொடர்ந்த பகை ஷக்தி, ஆர்த்தி, ஸ்ரீ என அனைவரும் அவரைப் பற்றி துப்பு துலக்கியதில் வெறியாக மாற எத்தனையோ உயிர்கள் இடையில் அப்பாவியாய் காவு வாங்கப்பட்டு விட்டன.



கதிருக்கு உண்மை தெரிய வந்து விடக் கூடாது என்பதில் அவர் எப்போதும் கவனமாகவே இருந்திருக்கிறார்.



அதிலும் ராஜாராம் பகைடைக்காய் அவருக்கு.... பெயரின் முன் ஒரே மாதிரி இருந்தது வேறு கூடுதல் அதிஷ்டம்....



கதிருக்கு சின்ன சந்தேகம் வந்தால் கூட அவர் அழிவது உறுதி என தெரிந்தே அவனுக்கு ராஜாராம் மேல் எப்போதும் சந்தேகம் வருவது போல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.



அவனும் அந்த வலையில் வீழ்ந்தது தான் விதி செய்த சதியோ!!!



அடுத்தவர்களை பகடைக்காயாக்க நினைப்பவருக்கு மகன் மட்டும் எம்மாத்திரம்???



சொந்த மனைவியை வைத்து மிரட்டி ஒரு அழகான ஆழமான நட்பை கலைத்து விட்டவரும் அவரே!!!



மொத்தத்தில் பக்கா சுயநலம் மிக்க மனிதர்... அல்ல மிருகம்!!!



எல்லாவற்றிற்கும் ஆரம்பப் புள்ளியை அவர் வைத்து விட்டிருக்கலாம்....



ஆனால் முற்றுப் புள்ளியை இடப்போகிறவன் அவன் ஒருவனே!!!



எ.ஸி.பி கதிர்வேல் கிருஷ்ணா!!!
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காரை கிளப்பிக் கொண்டு வெளியேறிவரின் வண்டி திடீரென இடை நடுவில் நின்று விட என்றுமல்லாமல் அப்படி நடந்ததில் புருவம் சுருக்கினார் ராமலிங்கம்...



நாராயணன் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சற்று தொலைவே வந்திருக்க காரை விட்டு இறங்கியவர் சற்று தள்ளி வந்து அங்கே இருக்கும் ஒரு காரை அனுப்பி வைக்க சொல்லி விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தார்....



.....



அவரை உரசுவது போல் வந்து நின்றது அந்த லம்போர்கினி.



சட்டென எழுந்த கோபத்துடன் திட்டிக் கொண்டே உள்ளே ஏறி அமர அடுத்த நிமிடம் கார் கதவுகள் லாக் செய்யப்பட உச்சகட்ட அதிர்வுடன் அப்போது தான் தன் அருகில் இருந்தவனை கண்டார் அவர்.



அருகிலிருந்து அவரை அலட்சியமாக பார்த்துக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல வர்மனே தான்!!!



((அவன் அடிப்படைல ரவுடி தானே நண்பா...))



இப்படி ஒரு நாள் வருமென்று எதிர்ப்பார்த்திருப்பாரா???



இப்போது விதி எழுதிக் கொண்டிருப்பவன் அவனல்லவா!!!



"ஏஏய்...." அவர் கர்ச்சிக்க



"தலைவர் வாழ்க!" தன் கேப்பை கழற்றி விட்டு பின்னால் திரும்பி கண் சிமிட்டினான் ட்ரைவர்!!!



கதிர்வேல்!!!



"என்ன தலைவா... எப்பிடி இருக்க... பாத்து ரொம்...ப நாள் ஆச்சுல... மனசு கேக்கவே மாட்டேன்னு சொன்னதுன்னா பாத்துக்கோயேன் உன் மேல எனக்கு எவ்வளவு பாசம்னு.... பாசத்துக்கு சின்னதா ஒரு டெமோ காட்டிடட்டுமா.... வன்... டூ... த்ரீ... டுப்...." கையை வெடிப்பது போல் சைகை செய்ய அவர் நிறுத்தி வைத்த கார் பின்னால் வெடித்து சிதறியது!!!



"பாசம்னு இப்போ ஒத்துக்கணும்... ஏன்னா நா உன்ன காப்பாத்தி இருக்கேன்ல.... போலாமா?" சாதாரணமாக இருந்த அவன் முகம் கோரமாய் மாற உயர் வேகத்தில் பறந்தது அந்த லம்போர்கினி.



அவர் அதிர்விலிருந்து மீலாமலே இன்னும்!!!



........



நாராயணன் ஹாஸ்பிடல்...



ஐ.சி.யூ....



நாராயணன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்க தந்தை உயிருடன் இருக்கிறார் என்பதில் சந்தோஷிக்க கூட முடியாமல் கைகளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள் காரிகை...



நாராயணன் உயிருடன் இருக்கிறார் என்பதை தான் யாருக்கும் தெரியாமல் ராமலிங்கத்திற்கு வைத்த ஸ்பை மூலமே கண்டு பிடித்தான் கதிர்.



இருந்தாலும் உடனே காப்பாற்ற முடியாத சூழல்!!!



அவன் ஆர்த்தியின் ஆடியோவை கேட்டுக் கொண்டிருக்கும் போது தான் அந்த ஸ்பை இடமிருந்து தகவல் வந்திருந்தது.



வாய்விட்டு அழக் கூட முடியாத தன் நிலையை உண்மையில் வெறுத்தான் அந்நேரம்!!!



மாமாவிடம் சொல்லி விட்டு உடனே கிளம்பியவன் ஸ்ரீக்கு இன்னும் இருவரை பாதுகாப்பாக நிற்க வைத்து விட்டு வர்மனை உடனே அழைத்திருந்தான்.



அவர் உள்ளே இருந்த நேரம் கார் வரும் பாதையில் பஞ்சர் நெயில்ஸை வைத்தவர்கள் உடனே சென்று அங்கே மதிலுக்கு பின் உள்ளே நுழைய தயாராக நின்றிருக்க அவர் வெளியேறிய அடுத்த நொடி மற்றவர்களை அடக்குவது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை...



மயங்கி இருந்த நாராயணனை வந்த நால்வரில் இருவர் ஹாஸ்பிடல் சேர்க்க கதிரும் வர்மனும் அவர் காலுக்காகவே காத்திருந்தது போல் கடத்தி விட்டனர்.



....



மனைவியின் அருகில் வந்து அமர்ந்தவனுக்கும் அவளை என்ன சொல்லி தேற்றுவதென புரியவே இல்லை....



நாராயணன் நிலை படு மோசமாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லை என்பது மட்டுமே அப்போதைய நிம்மதியாக இருந்தது அவனுக்கு...



"வரூ..." முகத்திலிருந்த கையை அகற்றி தன் நெஞ்சோடு சேர்த்தணைக்க நிற்காமல் வழிந்து கொண்டே இருந்த கண்ணீருடன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள் மாது.



"அம்மா போயிட்டாங்களே மாமா... ரொம்ப வலிக்குது... அவங்களுக்கு சின்ன கஷ்டம்னா கூட தாங்க முடியாது.... சாகுறப்போ எவ்வளவு வலிச்சிருக்கும்...?" தன் தாய் கூட அதை விட மோசமாக அல்லவா இறந்து போனார்.



கண்கள் கலங்கும் போல் இருந்தது அந்த ஆறடி ஆண்மகனுக்கு....



"டோன்ட் ஒர்ரி கண்ணம்மா... உறவுகள் இனி இல்லங்குறப்போ வர்ற வலி ரொம்ப கொடுமை தான்.... ஆனா அப்பா சரி கூட இருக்காங்களேன்னு நினை டா... "



"டாட் எப்போ கண் விழிக்கிறதா சொன்னாங்க?"



"இன்னிக்குள்ள முழிச்சிடுவாராம் ஸ்ரீ... பயப்படாத"



"ம்..." அவனை விட்டு விலக முயல பிடியை இறுக்கியவன்



"இப்பிடியே இரு... " என்றான் பிடிவாதமாய்...



.......



இரண்டு நாட்களுக்கு பின்...



காலை....



சென்னை விமான நிலையம்...



மகளை பார்த்த சந்தோஷத்தில் சற்றே தேறி இருந்தார் என்று தான் கூற வேண்டுமோ???



விடாது அவள் கையை இறுக்கப் பற்றி இருந்தவரின் தவிப்பு புரிந்து தானே விலகி நடந்தான் கதிர்.



மகளை பார்த்த சந்தோஷத்திலும் பார்க்க கதிர் அவர் மகளின் கணவன் என்ற விடயமே அவரை இன்னும் உற்சாகமாக்கி இருந்தது.



அவர் நண்பனின் மகன்!!!



ஷக்தியின் ஆசை நண்பனுக்கு மட்டுமே தெரியும்.



ஏனெனில் சத்யநந்தினிக்கு ஆர்த்தியை தான் பிடிக்கும்... ஆனால் ஷக்திவேலுக்கு ஸ்ரீமதி...



மகன் குணத்திற்கு அவனை மாற்ற ஸ்ரீயே பொருத்தமாக இருப்பாள் என்றொரு எண்ணம் அவருக்கு...



நாராயணனிடம் மட்டுமே அதனை வெளிப்படுத்தி இருந்தவர் நண்பனுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றதில் சந்தோஷமாகி விட்டார்.



அன்று மனைவியிடம் மறுத்ததும் மகனிடம் சொன்னதும் இதற்காகத் தான்!!!



......



"அண்ணாஆஆஆ..." படியிலிருந்து தடதடவென இறங்கி வந்தவள் கதிரின் கழுத்தை பாய்ந்து கட்டிக் கொள்ள அவள் சத்தத்தில் உள்ளே இருந்து வந்த அனைவருக்குமே இன்ப அதிர்ச்சி...



அதிலும் ரக்ஷனுக்கு... எத்தனை நாட்களாகி விட்டது நண்பனை பார்த்து???



மெலிதாக புன்னகைத்தவன் யாழினியை இறுக்க அணைத்திருந்தவனையே கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தான்.



எந்த ஆபத்துமே இல்லாமல் திரும்பி வந்து விட்டதுவே அந்த உயிர் தோழனுக்கு போதுமானதாய்....



தங்கை அழுவது அப்போது தான் உணர்ந்தானோ காளை???



"குட்டிமா..." பதறி விலக்கியவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டு தன்னோடு அணைத்துக் கொண்டே நிமிர அனைவர் பார்வையும் நாராயணன் மீதே நிலைத்திருப்பது கண்டு



"இது நாராயணன்... வருவோட அப்பா" அறிமுகப்படுத்த ஒரு சேர அதிர்ந்தவர்களுக்கு அது அதிர்ச்சி என்றால் நாராயணனுக்கு அமிர்தவர்ஷினியை பார்த்த அதிர்ச்சி!!!



இது எப்படி சாத்தியம்!!!



மகள் போலவே இன்னொருத்தி!!!



அவன் நடந்த அனைத்தையும ஒன்று விடாமல் சொல்ல வேறோடியது போல் நின்றிருந்தவர்களுக்கு மாற்றமாக தன் நினைவலைகளில் சிக்கிக் கொண்டிருந்தாள் மாது.



தன் கணவனுக்கு தன்னை பிடிக்கவில்லையா???



மாமா எனும் அழைப்பு கூடவா??



அவ்வளவு வெறுப்பு கண்களில்!!!



ஆனால் அதன் பிறகு எப்படி பிடித்தது???



காதலை கூட கூறி இருக்கிறான்...



சிக்கி தவித்தது பேதை மனம்!!!



இப்போது அவளுக்கு தன் முழு வாழ்க்கையும் ஞாபகம் இருக்கிறது தான்... இருந்தும் கல்கத்தாவில் இருந்த ஒட்டுதல் தன்மை கணவனை நினைக்கும் போது வர மறுத்து சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது.



"அம்மு...." தாய் லக்ஷ்மிதேவியின் குரலில் சட்டென நிதானித்தவள் அவள் தன்னை அழைப்பது தெரிந்து ஓடிச்சென்று அவர் கைகளுக்குள் புக அனைவர் மனதுமே பாரமானது.



என்ன தான் எவ்வளவு தான் நடந்து விட்டாலும் ஒரு தாய்க்கு எப்போதும் தன் பிள்ளை குழந்தை தானே!!!



அந்த பாசம் எப்பொதும் மாறி விடுவதில்லையே!!!



அவர் குரலில் தானும் கலைந்த நாரயணனுக்கு மகள் உறவுகளுடன் இருந்திருக்கிறாள் என்பதே பெரிய ஆறுதலை கொடுக்க நன்றி உணர்ச்சியோடு மருமகனை திரும்பிப் பார்த்தார் அவர்....



"குட்டிமா.... அழாதீங்க... அதான் வந்துட்டேன்ல?" தங்கையை சமாதானப்படுத்த முடியாமல் திணறுபவனை பார்த்து உதடுகளில் புன்னகை அரும்பினாலும் தாய் தந்தை சகோதரனை இழந்து நிற்பவனை நினைக்க மனம் கனத்தது.



ஆம், இராமலிங்கம் தான் அன்றே அவரிடம் கூறி இருந்தார் உன் நண்பன் குடும்பம் அழிந்து விட்டதென... இல்லையில்லை அழித்து விட்டேன் என...



கதிரை பார்த்தவுடன் புரிந்து கொண்டார் அவன் மட்டும் தப்பியிருக்கிறான் என்று... ஆனால் உண்மை அதுவல்ல தங்கையையும் காப்பற்றி தான் உயிரோடு இருக்கிறேன் என வீட்டுக்கு காலடி எடுத்து வைத்த நொடி புரிந்தது அவருக்கு...



"அப்பறமா பேசலாம்... அவங்களுக்கு ரெஸ்ட் கொடுங்க..." வீட்டின் மூத்தவராய் விக்ரம் கட்டளை பிறப்பிக்க ஆமோதித்தவர்கள் கலைந்து செல்லவே நாராயணனுக்கு கீழ் அறைய கொடுத்தவன் தங்கையை அரும்பாடு பட்டு சமாதாப்படுத்தி அனுப்பி வைத்தவாறே தயங்கி ஹாலில் நின்றிருந்தவள் அருகில் வந்தான்.



"வரூ.. " பார்த்தாளே ஒரு பார்வை....



'ஆஹா... முறைக்குறா... காட்... அப்போ ஞாபகம் வந்துடிச்சா' உண்மையில் அலறியது மனம்.



"விக்ரம்ஸ் டாட்டர மாதிரியே நான் இருக்கறதால தான் என்ன இத்தன நாளா வருன்னு கூப்டீங்களா கதிர்?"



((மாட்டிகின்டான்))



"எஸ் ஆமா...." தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்ட நேர்மை அவளை வசீகரித்தது.



"ஓஹ்.... அப்போ அவள ஏன் கல்யாணம் பண்ணிக்கல?" கோபம் கோபமாக வந்தது அவளுக்கு...



"ஏன்னா நான் லவ் பண்ணது என் பொண்டாட்டி உன்னை தான்.... நாட் விக்ரம்ஸ் டாட்டர்" அவள் கண்களுக்குள் ஊடுறுவ முகத்தை திருப்பினாள் பெண்.



"ஒரு வேலை... அவள கல்யாணம் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?"



"அதான் நடக்கலியே... அப்பறமும் என்ன?"



"நான் கேட்டதுக்கு பதில்"



'ராட்சஸி' முணுமுணுத்தது மனசாட்சி.



"அவள லவ் பண்ணி இருப்பேன்"



"வாஆட்"



"எஸ் ஸ்ரீ... ஒருத்திய கல்யாணம் பண்ணி கிட்டு அடுத்தவள நினைக்குற கேரக்டர் நான் கிடையாது... என் மனசாட்சிக்கு நானே துரோகம் பண்ணி ஏமாத்துறா மாதிரி இருக்கும்" அவன் பதில் அவளுக்கு பிடித்தது.



அந்த நேர்மையை மனதிற்குள் மெச்சிக் கொண்டாலும் ஏனோ சாதாரணமாக அதை கடந்து விட முடியாமற் போக அவனை பார்க்காமல் விலக எத்தனித்தவளை பிடித்து தடுத்தான் காளை!!!



.......



அர்ச்சனா வெளியில் சென்றிருக்க கோபத்தில் சென்ற மனைவியை நினைத்து தலையாட்டி சிரித்துக் கொண்டே ரக்ஷனின் அறைக்குள் நுழைந்தான் கதிர்.



நண்பனிடம் மிக முக்கியமான செய்தி பகிர வேண்டி இருந்ததுவே காரணம்...



நண்பன் வந்ததை நம்ப முடியா ஆச்சரியத்தில் பார்த்தவன்

"மச்சி.." என்றான் ஆவலாய்...



அவன் அவனை சமாதானப்படுத்தவெல்லாம் வரவில்லை போலும்!!!



தன்னை அணைக்க வந்தவனை கை நீட்டி தடுக்க அதிர்ச்சியாய் நின்று விட்டவனிடம்



"உன் அம்மா செத்து ஒரு வருஷமாகிடுச்சு ரித்விக்... இது கூட மறைச்சு தான் உன் அப்பா உன்ன அவனுக்கு யூஸ் பண்ணி கிட்டு இருந்திருக்கான்... நாராயணன் சார காப்பாத்த போனப்போ அதுக்கு பின்னாடி இருக்க ரூம்ல இருந்து தான் இந்த விஷயம் தெரிஞ்சுது... உன் அம்மாக்கு போட்டோ மாட்டி அதுல இறந்த திகதி எழுதப்பட்டு இருந்துது..."



தாய் இறந்த விடயத்தை சாதாரணமாக சொல்லும் நண்பன் அவன் நண்பனல்ல...



அப்போது முற்றிலுமே தான் தேவையற்றவனாகிப் போனோமா???



தாயிற்காக தாயிற்காகவென்று செய்யப் போய் நண்பனையே இழந்து நிற்பவன் அந்த தாயே இல்லாமல் தான் நண்பனுக்கு துரோகம் செய்திருக்கிறானா???



அவன் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த பின்பும் அவன் எதுவும் பேசவுமில்லை... அறையை விட்டு வெளியேறவுமில்லை....



தாய் இறப்பின் வலி அறிந்தவன் அவன்!!!



நண்பனுக்கென்று வரும் போது தானே ஆறுதலாக இருந்து விட வேண்டும் என்று தான் அப்படியே நின்று விட்டிருந்தான்.



திடீரென தள்ளாடி விழப்போனவனை அவசரமாக தாங்கி பிடிக்க



"அம்மா அ... அம்மாக்காகன்னு க... கடைசியில.. அவ.. அவங்களே இல்லாம போனது கூட தெ... தெரில பாத்தியா மச்சி... நான்லாம் ஒரு புள்ளன்னு சொன்னா... கா... காரி துப்புவாங்க இல்லயா?" கரகரவென வழிந்த கண்ணீருடன் தன்னை நிமிர்ந்து பார்த்த அவன் பார்வையை நிச்சயம் அந்த ஆருயிர் நண்பனால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை...



"இல்ல... நீ அவங்களுக்கு சிறந்த மகனா தான் இருந்திருக்கங்குறதுல சந்தேகமே இல்ல ரக்ஷன்... " தன் வலி மறைக்க முயன்றாலும் நண்பனின் கண்களில் கண்டு கொண்டவன் அவனை பார்த்து வலியுடன் சிரித்தான் ரக்ஷன்.



"சிறந்த மகனா இருக்க நினச்சவன் உன் நட்ப கொன்னுட்டு நிக்கிறேனேடா... ரொம்ப வலிக்குது கிருஷ்..." அவன் கதறி அழ அதற்கு மேல் முடியாதென தோன்றி விட்டதோ அந்த காளைக்கு???



சட்டென இழுத்து அணைத்தவன் அவனுடன் சேர்ந்து தானும் அழுதான்.



அவன் தாய் இறந்த தினமும் அதுவே அல்லவா???



நண்பனுக்காக அவன் இருக்கிறான்... அவனுக்கு???



"அம்மா பாசம்னா என்னன்னு கூட எனக்கு தெரியாது மச்சி... அப்பா... சொல்லவே தேவயில்ல... ஆனா நான் அனுபவிச்சேன்... உன் பெற்றோர் மூலமா வந்தது விட உன் மூலமா தான் அதிகமா அனுபவிச்சு இருக்கேன்... உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்டா... அம்மாவ காட்டி மிரட்டினப்போ முதல் தடவ அம்மா கண்ணுல தெரிஞ்ச தவிப்பு என்ன அப்பிடியே புரட்டி போட்டுடிச்சு... உனக்கு துரோகியா இருக்க நா விரும்புவேனாடா... என் சூழ்நிலை அப்பிடி... பட் நீ பேசாதப்போ என்ன நெனச்சு எனக்கே வெறுப்பா இருந்துது.... மன்னிப்பு கேக்க கூட எனக்கு அருகதை இல்ல... ஏன்னா அந்த நட்புங்குங்குற வார்த்தைக்கு தகுதியே இல்லாம போயிட்டேன் நான்... இப்போ கூட என் மேல கோபம் இருந்தும்... என்ன மன்னிக்க முடியாம இருந்தும் எனக்காக நிக்கிற பாத்தியா... அது நெனச்சு சந்தோஷப்பட முடில... ஏன்னா அந்த துரோகத்த நினச்சா ரொம்ப ஆழமா வலிக்குது கிருஷ்..." அவன் கதற முதுகை ஆதரவாய் தடவிக் கொடுத்தவனுக்கு மனம் கனத்தது.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாய் இறந்து போனதை விட நண்பனுக்கு அப்படி செய்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியே அங்கு அதிகமாய் ரக்ஷனுக்கு....



உண்மை தான்.... ரக்ஷனுக்கு தாய் இறந்தது வலியே தவிர அந்தளவு அதிர்வு இல்லவே இல்லை...



ஏனென்றால் அவன் தாயை கண்டிருப்பது ஓரிரு முறை மட்டுமே...



அது மட்டுமல்லாது அவன் மனதில் தாய்க்கான இடம் சத்யநந்தினிக்கே!!!



அது கதிருக்கும் நன்றாகவே தெரிந்து தான் இருந்தது.



தன் தாய் என்ற உணர்வே நண்பனுக்கு துரோகமிழைக்க உந்தினாலும் நண்பனென்று வரும் போது கதிருக்கு அவன் இழைத்தது மன்னிக்க முடியாத குற்றம்!!!



அவன் கண்ணீரே அவன் துரோகத்தை குறைப்பது போல் தெரிகின்ற அதே நேரம் இதே இடத்தில் கதிர் அழுதிருந்தால் அந்த துரோகம் பெரிதாய் பேசப்பட்டிருக்கும்...



_வலி இருவருக்குமே உண்டு..._



_அதை வெளிப்படுத்தும் விதம் தான் வேறு வேறு!!!_



இங்கு கண்ணீருக்கே முதல் இடம்!!!



அதை பாதித்தவர் வெளிப்படுத்தினால் கூட பாதிக்கப்பட்டவரையே குற்றவாளி ஆக்கி விடும்!!!



அத்தனை வலிமையானது அது!!!



***



"நான் அம்முவ கல்யாணம் பண்ணிக்க ஆசப்பட்றேன்" நேரடியாய் விக்ரமிடம் பேசி அனுமதி வாங்கி விட்டே அவள் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான் குமரன்.



திடுக்கிட்டு திரும்பியவள்

"குமரன் சார்... என்ன பண்றீங்க... அப்பா பாத்தா என்ன நினைப்பாங்க" சட்டென பதட்டமாக பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன் அவளை நோக்கி வரவும்



"கு... குமரா.. ப்... ளீஸ்..." வார்த்தைகள் தந்தியடிக்க சுவர் தடுத்ததில் அதிர்ந்து நிமிர்ந்தவளை இரு பக்கமும் சிறை செய்தான் காளை....



"அன்னக்கி அவ்வளவு பேச்சு பேசுன... இப்போ நா சொல்றேன் நீ கேளு... லவ்வ உணர்றது வேற தான்... ஆனா லவ்வ புரிய வெக்கிறதுன்னு ஒன்னு இருக்குல... அத நான் செஞ்சதா ஞாபகம்... அன்னிக்கு என் ரூம்ல வெச்சு முத்தம் கொடுத்தப்போ அதுல இருக்க காதல் உனக்கு புரியல... சரி உணரவாவது இல்ல? "



"...."



"இதே மாதிரி எல்லா பொண்ணுங்களுக்கும் முத்தம் கொடுத்துட்டு திரியுற கேரக்டரா என்ன நெனச்.... " எம்பி அவனிதழ்களை அடைத்தவளின் செயலில் அதிர்ந்து நின்றிருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்....



......



"அ... அண்ணி" தயங்கி படி உள்ளே நுழைந்த யாழினியை பார்த்து அவள் உதடுகள் மலர்ந்தன.



யார் என்ன சொன்னாலும் பரவாயில்லையென தன் மீது பாசம் மட்டுமே காட்டிய ஓர் உறவை அவள் எப்படி மறப்பாள்???



"வா யாழ்..." அவள் அழைக்க இருந்த தயக்கமெல்லாம் நொடியில் மறைந்து போக பாய்ந்து கட்டிக் கொண்டாள் கதிரின் மனையாளை...



"எங்க மறந்துட்டீங்களோன்னு பயந்துட்டேன் அண்ணி...."



"உன்னை போய் மறக்க முடியுமா யாழ்" அவள் முதுகை ஆதரவாக தடவிக் கொடுத்தவளுக்கு என்றுமே கணவன் தங்கை தன் முதல் குழந்தை தானே!!!



"எப்பிடி இருக்கீங்க?" விலகி மூக்கை உறிஞ்சி கேட்டவளின் கண்ணீரை துடைத்து விட்டவள் அவளை அழைத்துக் கொண்டு போய் அமர்ந்து தானுமே அமர்ந்து கொண்டாள்.



"நல்லாஆஆ இருக்கேன்... நீ?"



"நானும் தான்"



"எதுக்கு கதிர் மேல கோபமா இருக்க?" அவள் அழைப்பில் அதிர்ந்து நிமிர்ந்தாள் பெண்....



"உங்களுக்கு பயமா இல்லயா அண்ணி....?"



"ஏன்?" புரியாமல் புருவம் சுருக்கினாள் பாவை...



"கதிர்னு சொல்றீங்க?"



"இதுல என்ன இருக்கு?"



"அண்ணாவ கண்டாலே உங்க உடம்பு நடுங்குறது பக்கத்துல இருக்கவங்களுக்கு தெரிஞ்சிடும்..." பழைய நினைவலைகளில் மீண்டும் மலர்ந்தன அவளுதடுகள்...



"...."



"ஆனா நீங்க மாமான்னு சொல்றது தான் அழகு அண்ணி... அண்ணாக்கு அது தான் பிடிக்கும்"



"இல்ல யாழ்... அவங்களுக்கு அது பிடிக்காது"



"நோ அண்ணி... நீங்க தப்பா புரிஞ்சி கிட்டு இருக்கீங்க"



"கதிருக்கு நான் அப்பிடி கூப்புடும் போது அவரோட பொம்ம ஞாபகம் வர்றதா ஒரு தடவ சொல்லி இருக்காரு... " தலை குனிந்து கொள்ள தன்னை நோக்கி அண்ணியை திரும்பினாள் யாழினி கிருஷ்ணா.



"அண்ணாக்கு சின்ன வயசுல இருந்து ஒரு பழக்கம் இருக்கு... ஏதாவது ரொம்ப புடிச்சு இருந்துதுன்னா பிடிக்கலன்னு சொல்லுவாங்க... இதுல ஆர்த்தி அக்கா அவங்களுக்கு ஒரு ரீஸன் "



"ஆ.. ஆர்த்திய அவங்களுக்கு எவ்வளவு புடிக்கும் யாழ்?"



"எவ்வளவு புடிக்கும்னு எல்லாம் இல்ல... அந்த அளவு பாசம் அவங்க மேல மட்டும்... ஒரு அப்பா தன்னோட குழந்தை மேல எப்பிடி பாசம் வெச்சிருப்பாரோ அந்த மாதிரி பாசம்.... ஆர்த்தி அக்காவுக்கும் மாமான்னா உயிர்... மத்தபடி நீங்க நெனக்கிறா மாறி அண்ணாக்கு லவ் எல்லாம் இல்ல அண்ணி... அவங்க லவ் பண்றது உங்கள தான்... "



இப்போது அவளுக்கு சில விடயங்கள் தெளிவாகியது.



அதாவது ஆர்த்தி விடயத்தில் எப்போதும் அவள் கணவன் பலவீனமாய் இருந்திருக்கிறான்.



அதனால் தான் ஹார்ட் விடயத்தில் யார் மீதும் சந்தேகம் எழாமல் இருந்திருக்கிறது.



வர்ஷினியை தேடிப் போனது கூட ஒரு வகையில் பொம்மைக்காக என்றாலும் நான் உனக்காக வந்தேன் என அவன் சொன்னது அவள் மீது அதாவது ஸ்ரீமதியான அவள் மீதுள்ள காதலினால் மட்டுமே!!!



அவள் முகம் கசங்குவது அதனால் தானே அவனுக்கு எப்போதும் பிடிக்காது...



எவ்வளவு கோபம் இருந்தாலும் அந்த இரவிற்குள் அவள் முகத்தில் சிரிப்பை வரவழைத்து விட்டே தான் விடுவான் என்பது அவள் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்து கொஞ்ச நாளிலேயே புரிந்து கொண்ட விடயம்...



அதிலும் அவளுக்கு வலித்தது வேறு பெண் என தானே நினைத்தது தானே...



அதற்கு தான் அன்றே தெளிவாய் அவன் காதலை வெளிப்படுத்தி இருந்தானே!!!



வேறு என்ன வேண்டும் அவளுக்கு???



"யாழ்... நன்றி" கணவன் தங்கையை அணைத்துக் கொண்டவள் மனம் கனிந்திருந்தது.



......



"ரித்விக் சார்... ரக்ஷன்..." அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர் அபியும் அர்ச்சனாவும்....



இன்று அவனுக்கு முழு உடல் பரிசோதனை செய்யவிருக்க அர்ச்சனா தான் அபியிடம் சொல்லி அவனையும் சேர்த்தே அழைத்து வந்து விட்டிருந்தாள்.



நண்பன் குரலில் சட்டென ரக்ஷனிடமிருந்து விலகினான் கதிர்.



இருவரது கண்களும் கலங்கி சிவந்திருக்க அதிர்ந்து அப்படியே நின்ற இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை....



"கிருஷ்...." தன்னை நோக்கி திருப்பிய அபியின் முகம் காண மறுத்தவன் வெளியேறப் போக தடுத்துப் பிடித்திருந்தன அவன் கைகள்...



"என்னாச்சு?"



"ஒன்னில்ல அபி..."



"அத என் முகத்தை பாத்து உன்னால சொல்ல முடிலன்னா நீ நிச்சயமா பொய் சொல்ற"



"அப்பறமா பேசலாம் ஆதி... ப்ளீஸ்..." அவன் அழைப்பு நான் தனிமையை நாடுகிறேன் என உணர்த்த சட்டென கையை விடவும் அவன் வெளியேறி விட அர்ச்சனாவிடம் கண்ணை காட்டி விட்டு தானும் வெளியேறிய அபி உள்ளே நுழைந்த வர்மனை பார்த்து சிரிக்க அவன் "பையா..." என அழைத்துக் கொண்டே வந்ததில் மாடியேறப் போனவனின் கால்கள் அந்தரத்தில் நிற்க கண்கள் வெறியில் மின்ன சட்டென திரும்பினான் வர்மன் புறம்!!!



வர்மன் வந்து விட்டானென்றால் அவன் சொன்ன வேலைகளை முடித்து அவனோடு ராமலிங்கமும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு இருக்கிறான் என்றே அர்த்தம்!!!



இனி தான் அவனுக்கு வேலைகள் இருக்கிறதுவே!!!



இளகி இருந்த மனம் ராமலிங்கம் என்ற பெயரில் கூட பழிவெறியில் மின்னினால் அந்த அளவு அவரால் அவன் காயப்பட்டிருக்கிறான்....



"வர்மா... முடிச்சுட்டியா?" உள்ளே அறையில் இருந்த போது இருந்த நண்பனின் குரல் முற்றாக நீங்கிப் போய் ஏதோ பழிக்காக சாதிக்க காத்திருப்பவன் போல் அவன் கேட்ட கேள்வி அங்கிருந்த அபியையே உலுக்கியதென்றால் அது மிகையாகாது.



"எஸ் பையா... யே சாப் கத்ம் ஹோ கயா ஹே பாய்... தும்ஹாரா கேல் ஹீ பச்சா ஹே..."



[[ yah sab khatm ho gaya hai bhaee ... tumhaara khel hee bacha hai_ எல்லாம் முடிந்தது அண்ணா... உங்கள் ஆட்டம் மட்டுமே எஞ்சி இருக்கிறது ]]



தன் நண்பனையும் வர்மனையும் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்த அபியின் பார்வைக்கு மாற்றமாக மின்னலென வந்து மறைந்து போனது காளையின் மர்மப் புன்னகை!!!



தொடரும்.....



16-08-2021.
 
Status
Not open for further replies.
Top