All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'என்னவளே' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலை.....

"ரித்விக்...." வேஷ்டியை சரி செய்தவாறே மாடிப்படியிறங்கி வந்த நண்பனை நிமிர்ந்து பார்த்தான் ரக்ஷன்.....

" சொல்லு க்ரு... சாரி சாரி... கதிர்" அவன் வேறு ஏதோ பெயரை அரைவாசியில் நிறுத்தியது கண்டு புருவம் சுருக்கினாள் வர்ஷினி.

"இன்னிக்கும் ஆபிஸ்ல முக்கியமான வேல ஏதாவது இருக்கா ரித்விக்?"

"ஏன் மச்சி?"

"இல்ல முக்கியமான விஷயங்கள் டிஸ்கஸ் பண்ண இருக்கு.... நீயும் இருக்கணும்.. வேலை இருக்குன்னா விடு... நான் அப்பறமா எல்லா விஷயத்தையும் உன் கிட்ட சொல்றேன்"

"ம் ஓகே மச்சி..."

"ஆபிஸ் எப்பிடி போய்க்கிட்டு இருக்கு?"

" குட் டா... நீ ஒரு தடவ வரலாமே?"

"எனக்கு வேல இருக்கு கிளம்பறேன்" எப்போதும் இதே பதில் தான் அவன் வாயிலிருந்து வந்தாலும் என்றும் போல் இன்றும் பெருமூச்சு தான் வந்தது ரக்ஷனுக்கு....

"அண்ணா.... "

"சொல்லு வர்ஷினி"

"அவங்க பேரு என்ன?"

" என்னாது புருஷன் பேரு கூடவா உனக்கு தெரில? "

"இல்ல இல்ல எனக்கு அவங்க பேரு தெரியும்... நீங்க ஏதோ க்ரு... அப்பிடீன்னு நிறுத்தினீங்கல்ல... அத தான் கேட்டேன்"

"ஓ.. அதுவா... அவன் பேரு கதிர்வேல் கிருஷ்ணா.... அப்பாம்மா இறந்து போறதுக்கு முன்னாடி அவன க்ருஷ்னு தான் கூப்புடுவோம்... பட் அந்த சம்பவத்துக்கப்பறம் அவன் அப்பிடி யாரையும் கூப்பிட விட்டதில்ல... பழகிப் போனதால எனக்கு அப்பிடி தான் அடிக்கடி நாக்கு மக்கர் பண்ணும்... அவன் முறைச்சு பாக்குற பார்வைல தானா மாத்திடுவேன்.... அவன திருத்தவே முடியாது மா... " அவன் சொன்ன தினுசில் வாய்விட்டுச் சிரித்தாள் பாவை....

"அத்த மாமா எப்பிடி இறந்து போ... " யாழினி வருவதை கண்டு அவள் மனம் புன்பட்டு விடக்கூடாதே என நினைத்தவள் அப்படியே நிறுத்தி விட அவனும் அதை உடனே புரிந்து கொண்டான்.

" குட் மார்னிங் அண்ணி... மார்னிங் ரக்ஷன் அண்ணா...."

"குட் மார்னிங் யாழ்.... மார்னிங் குட்டிமா" ரக்ஷனுக்கு அருகே அவள் வந்து அமரவும் மீண்டும் கதிர் உள்ளே நுழையவும் சரியாக இருக்க மேசையில் உறங்கப் போனவள் சட்டென எழுந்தமர்ந்ததில் மனைவியின் முகம் செந்தாமரையாய் மலர்ந்து போனதை பார்த்துக் கொண்டே அருகில் வந்தான் கணவன்....

"மா... வந்து.... " அவள் திடீரென ஆரம்பிக்க சட்டென திரும்பினான் நண்பன்.

"ஹே கதிர்... வாடா... என்னாச்சு.... ஏன் திரும்பிட்ட?"

"நத்திங் டா... குட்டிமாவ லக்ஷ்மி அம்மா கூட்டிகிட்டு வர சொன்னாங்க அதான் வந்தேன்...."

"ஹே.... அத்த வீட்டுக்கு போறோமாணா.... ஜாலி... அண்ணி கிளம்புங்க கிளம்புங்க" அவள் துள்ளிக் குதிக்கவும் கணவனை பயத்துடன் ஏறிட்டவளுக்கு அவன் தங்கையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது பெரும் அதிர்வாய்...

அவனும் தன்னவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தானோ!!!

சட்டென மனைவியின் புறம் திரும்பியவன்

"நீயும் கிளம்பு" அவன் வார்த்தைகளில் அவள் முகத்தில் தோன்றிய ஒளியில் ஒரு நிமிடம் சந்தோஷம் ஏற்பட்டாலும் மறு நிமிடம் சிறு பொறாமையும் எட்டிப் பார்த்ததுவோ???

'என்ன விட்டு போறதுல அவ்வளவு சந்தோஷம் இவளுக்கு' இப்பிடித்தான் புலம்பிக் கொண்டிருந்தது மனசாட்சி.

"அப்போ நா கிளம்புறேன் மச்சான்...." ரக்ஷன் வெளியேற "மாமா.... எல்லோரும் எங்க கிளம்பிட்டீங்க?" கேட்டுக் கொண்டே வந்த ஷாலினியின் புறம் கவனம் பதிந்தது அனைவருக்கும்....

அப்போது தான் அவனுக்கும் அவள் இருப்பதுவே ஞாபகம் வந்தது போலும்....

"வாமா.... குட்டிமா லக்ஷ்மி அம்மா வீட்டுக்கு கிளம்ப போறா.... " அவளையும் அங்கு அழைத்துச் செல்வதில் அவனுக்கு மிக முக்கியமான பிரச்சனையொன்றிருக்க நீயும் வருகிறாயா என கேட்பதில் தயக்கம் காட்டினாலும் அவளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு போவதும் அவ்வளவு உசிதமாக தோன்றவில்ல அவனுக்கு....

என்ன செய்வது???

"அப்போ இவங்களும் கிளம்புறாங்களா?"

"ஆமா வர்ஷினியும் தான்..... நீ என் கூட கடைக்கு வர்றியா?" அவளை அடுத்த கேள்வி கேட்க விடாமல் அவன் கேட்டு விட்டதில் அண்ணனை எரிச்சலாய் ஏறிட்டாள் தங்கை....

"ஓகே மாமா" முகம் விகசிக்க அவள் கூறவும் ஒளிர்ந்திருந்த மனைவியின் முகம் அப்படியே கலையிழந்து போனது.

அது அவளை அவனுடன் அழைத்துப் போகிறான் என்பதற்கு அல்லவே அல்ல.... அவள் மாமா எனும் அழைப்புக்கு அவன் எதுவும் சொல்லவில்லை அல்லவா... அதனால் தான் சட்டென சோர்ந்தது முகம்....

ஏனோ அந்த அழைப்பை வேறு யாருக்கும் தற்காலிகமாகக் கூட விட்டுக் கொடுக்க முடியவில்லை பாவையால்....

"நா... நா... வர்ல...." தைரியத்தை வரவழைத்து சொல்லி விட்டவள் சட்டென தங்களறைக்கு செல்ல ஷாலினி உட்பட இருவருக்குமே ஒன்றுமே புரியவில்லை....

முக்கியமாக கதிருக்கு.... அவனுக்கு தெரியும் தன்னவளை பற்றி... பேசிக் கொண்டிருக்கும் போது இடை நடுவில் எழுந்து செல்லும் ரகமல்ல அவனவள்....

இந்த கொஞ்ச நாட்களாக அதுவும் ஷாலினி இந்த வீட்டிற்கு வந்ததற்கு பிறகு தான் இப்படி....

ஏன்???

விடை தெரியாமல் விழித்தவன் கிளம்புமாறு கூறி விட்டு தானும் மாடி ஏறினான்.

........

'நான் ஏன் இப்பிடி நடந்துக்குறேன்.... அவ மாமான்னு சொன்னா எனக்கு என்ன.... இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்துது.... பேசிட்ருக்கும் போது இடை நடுவில வர்றது கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்காங்களே....ஒரு வேல கோபப்படுவாங்களோ' கணவன் தன் பின் வந்து நின்றது கூட தெரியாமல் அறை நடுவில் வேறோடியது போல் நின்று கொண்டிருந்தவள் "வர்ஷினி" எனும் கணவன் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

அவளை நோக்கி ஒவ்வொரு எட்டையும் அவன் அழுத்தமாக எடுத்து வைக்க பயத்தில் இதயம் அதிர பின்னோக்கி சென்று கொண்டிருந்தவளுக்கு எமனாய் வந்து தடுத்தது சுவர்....

திடுக்கிட்டு மோதி நின்றவளின் அருகே வந்தவன் இடக்கையை அரணாக்க மிரண்டு போய் கணவனை ஏறிட்டாள் பாவை.....

"என்னாச்சு.... ஏன் போல?"

"அ... அ... அது அது... சும்மா மா... சு... சும்மாங்க" அவளின் வாங்க போங்க என்ற அழைப்பில் பற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு....

((அட பைத்தியமே.... அவள என்ன தான்டா பண்ண சொல்ற நீயி???))

"கதிர்னே கூப்புடு"

"அ... அ... அது மு... முடியாது"

" ஏன் முடியாது... நீ அப்பிடி தான் கூப்புட்ற... அவ்வளவு தான்"

"மு... முடியாதுங்க ப்... ப்ளீஸ்...."

"நோ... கால் மீ கதிர் ஆர் வேல் ஆஸ் யூர் விஷ்... சரி ஏன் அம்மா வீட்டுக்கு போல?"

"அ... அது... நா.. நா... எனக்கு... வந்து..."

"ம்...வந்து...போயி...அப்பறம்?"

"...."

"அவ மாமான்னு என்ன அழக்கறது உனக்கு பிடிக்கல... ரைட்? " ஒரு யூகத்தில் கேட்டு விட்டவனுக்கு அவள் அதிர்ந்த முகமே சந்தேகத்தை உறுதிப்படுத்த

"தாலி கட்டுன புருஷனாச்சேன்னு என் மேல லவ் வந்துடுச்சோ?" கேட்டவன் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரியவும் சிரித்துக் கொண்டான்.

"இ... இ... இல்ல மாமா... அப்பிடில்லாம் எ.. எதுவுமில்ல" அவசரமாக மறுத்தவளை ஆழ்ந்து பார்த்தவன்

"அப்போ என் மேல உனக்கு லவ் இல்ல அப்பிடித்தானே?" என்க மலங்க விழித்தாள் காரிகை....

"அத விடு.... அவ எனக்கு மாமான்னு சோல்றது உனக்கு ஏன் பிடிக்கலன்னு சொல்லு... விட்டுட்றேன்... "

".... "

"போக தேவயில்லன்னா இப்பிடியே என் முன்னாடி இரு"

"அ.. அது... அது... நீ... நீங்க நான் சொல்லும் போது கோ... கோபப்பட்றீங்க... அவங்க சொல்லும் போது எதுவுமே சொல்ல மாட்றீங்க... எனக்கு அவங்க அப்பிடி உங்கள கூப்புட்றது ஏ.. ஏனோ பிடிக்கல... வலிச்சுது மாமா...வலிக்குது.... ஏன் உங்களுக்கு எ... என்ன பிடிக்கல... பிடிக்கலன்னா ஏன் க.. கல்யாணம் பண்ணிகிட்டீங்க... என்ன தவிர எல்லோரையும் உங்களுக்கு புடிக்கும்ல... பட் ஏன் மாமா... என்ன ம.. மட்டும் பிடிக்கல... எ.. என்னால இதுக்கு மேல முடில... உங்க கூட நின்னு பேச கூட பயமா இருக்கு... சில கேள்விகளுக்கு விடை தெரியாம மண்டையே குழம்புது... இதுக்கு மேல ஒன்னுமே தேவயில்லன்னு சில நேரங்கள்ல செத்துப் போயிட" அடுத்த வார்த்தை பேச அவகாசமலிக்காமல் அவள் அதரங்களை சிறை செய்ய வழிந்து கொண்டிருந்த கண்ணீர் அப்படியே நின்று போனது.

மிக ஆழமான முத்தம்!!!

தன் காதலை... எல்லோரையும் விட ஏன்... அவன் தங்கையையும் விட இந்த உலகத்திலுள்ள அனைத்தையும் விட அவளைத் தான் அவனுக்கும் அவன் மனதுக்கும் பிடிக்கும் என்பதை அந்த ஒற்றை முத்தத்தில் உணர்த்தி விட எண்ணி விட்டானோ!!!

அவள் மூச்செடுக்க சிரமப்படவும் தான் தன்னிலிருந்து பிரித்தவன் அவள் முகத்தை தாங்க ஏதோ கனவு தான் கண்டு கொண்டிருக்கிறோமோ என அதிர்ச்சி மீறாமலேயே அவனையே பார்த்தாள் பெண்....

"உன்ன எனக்கு பிடிக்கலன்னு எப்போதாவது உன் கிட்ட சொல்லி இருக்கேனா நான்?" ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் கேட்ட மேனரிசம் ஆணித்தரமாய் பதிந்து போனது பேதை மனதில்...

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க
"அம்மா வீட்டுக்கு போகலன்னா நீயும் என் கூட கடைக்கு கிளம்பு.... " அவள் முன் நெற்றி முடியை காது மடலுக்கு பின்னால் ஒதுக்கியவன் மனைவியின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு விட்டு அகல அவனுக்குள் ஏதாவது நடந்து விட்டதோ என்ற வகையில் தான் இருந்தது அவன் செய்கை அவளுக்கு...

.......

" அண்ணீஈஈஈஈ....." திடீரென கேட்ட யாழினியின் குரலில் திடுக்கிட்டு கலைந்தவன், தான் அவன் விட்டுச் சென்ற கோலத்திலேயே நின்று கொண்டிருப்பது கண்டு அவசரமாக புடவையை மாற்றி விட்டு ஓடினாள்.

......................................................................

"கடைக்கு வர்றியா.... இல்ல?" அவன் கேள்வியாய் நிறுத்த

"இ.. இல்ல இல்ல நா.. நான் அ.. அம்மா வீட்டுக்கே போறேன்" அவசரமாக பதிலளித்தவள் சட்டென இறங்கிக் கொள்ள பொங்கி வந்த சிரிப்பை அடக்கி விட்டு

"குட்டிமா.... பின் வழியா யாருக்கும் சந்தேகம் வராம போங்க.... யார் கண்ணுலயும் சிக்கிடாதிங்க ஜாக்கிரதை...." என்றான் பொறுப்புள்ள அண்ணனாக....

" ஓகே ணா.... பை... அண்ணி வாங்க" அவர்கள் உருவம் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்தவன் ஷாலினியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

***

யாழினி (ஹைபர் மார்க்கெட்)

காரை ஓரமாக அவன் நிறுத்திக் கூட இருக்கவில்லை முன் கண்ணாடியை திடீரென அதிவேகமாக துளைத்த தோட்டா அதே வேகத்துடன் ஷாலினியின் நெற்றிப் பொட்டை துளைத்துக் கொண்டு செல்ல கண்ணாடி உடைந்ததில் தலையை கைகளால் தாங்கி குனிந்திருந்தவன் எழுந்து அவளை பார்க்க அவள் இருந்த தோற்றத்தில் ஆயிரம் வால்ட் மின்சாரம் ஒரே நேரத்தில் தாக்கியது போல் அதிர்ந்து போய் நிலைகுலைந்து அமர்ந்திருந்தான் கதிர்வேல் கிருஷ்ணா!!!

ஆம் அவள் இறந்திருந்தாள்!

'மாமா.... உன் கூட வாழறதுக்கு எப்போவும் எனக்கு தகுதியோ கொடுப்பினையோ இல்ல போல மாமா.... இனி என்னால உன் கிட்ட இருக்க முடியாது.... நா... நான் நான் போறேன் மாமா.... அடுத்த ஜென்மத்துலயாவது உ.... உனக்கு ப... பொண்டாட்டியா ப... பொறக்கனும் மாமா.... ஐ... ஐ... ஐ லவ் யூ மாமா.... நான் போறேன்.... நான் போ... றேன்' ஷாலினியின் உடலிலிருந்த உயிர் மேல் நோக்கி செல்ல ஏதோ அசரீரியாய் ஒளித்த அவள் குரலில் "நோஓஓஓ" என கத்தியவன் கதறி அழத் துவங்கினான்!!!

தொடரும்.....

31-07-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27243

அத்தியாயம் 07 [ B ]



சில வருடங்களுக்கு முன்பு....



பரந்து விரிந்திருந்த வயல்வெளிகளுக்கு நடுவே தன் டூவிலரை திட்டிக் கொண்டே நகர்த்திக் கொண்டிருந்தாள் ஓர் தேவதை!!!



அவளது ஸ்கூட்டி தான்... இருந்தும் அவளை மட்டுமே ஏற்றிக் கொண்டு போகும்



((புரிலல்ல நண்பா... அவளோட டப்பா வண்டிங்க அது... அம்மணி சின்ன வயசுல இருந்து சேத்து வெச்ச உண்டியல் பணத்துல கஷ்டப்பட்டு வாங்குனதாம்... அப்பா பெரிய பணக்காரரு... அந்த டப்பா வண்டிய தூக்கி போட்டுட்டு கார்ல போன்னு சொன்னதுக்கு அம்மணி என்னே ஒரு திட்டு... இன்னிக்கும் சண்ட புடிச்சிட்டு காலேஜ் போனாங்களா... அது வேலைய காட்டிடுச்சு... அதான் செம திட்டு... வாங்க பாக்கலாம்...))



"எரும... எரும உன்னயும் நம்பி வந்தேன் பாரு... உன்ன கூடவே வெச்சிருக்கேன்ல... அந்த திமிரு தான் உனக்கு.... கொஞ்சமாச்சும் அறிவிருக்கா... ஆஆமா... அறிவிருந்தா நீ ஏன் இப்பிடி இருக்க போற... எல்லோரும் டப்பா டப்பான்னு திட்டும் போது உனக்காக வக்காலத்து வாங்கினேன்ல எனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்... உன்ன" திட்டிக் கொண்டே இலேசாக உதைந்தவள் "ஆஆஆ...அம்மா... பக்கி... வலிக்குது" அதில் கால் அடிபடவும் மீண்டும் அதனிடமே எரிந்து விழுந்தாள்.



"ஹே பேபி... (அவ டப்பா வண்டியோட பேரு) மழ வர்றா மாறி இருக்கு... நனஞ்சன்னு வையி... ஆத்தா காளி அவதாரம் எடுத்துடும்... ப்ளீச் கோப்பரேட் மீ பேபி...." வண்டியில் ஏறி மீண்டுமொருமுறை தன் சாவியை அவள் நுழைக்கவும் மழை சோவென ஊற்றவும் சரியாக இருக்க "பேபீஈஈஈஈ" அது அப்போதும் மக்கர் பண்ணியதில் கத்தியே விட்டாள்.



" என்ன ஊருல உள்ளவய்ங்க பூரா ராட்சசி ராட்சசின்னு திட்டி கிட்டு இருக்காய்ங்க... இதுல நீ வேற என்ன கொலகாரி ஆக்காத சொல்லிபுட்டேன்" வேக மூச்சுக்களை இழுத்து விட்டவள் வண்டியை விட்டு இறங்கிய நொடி வேகமாக வந்த அந்த பைக் அவள் மீது சேற்றை வாரி இறைக்க வந்த கோபத்திற்கு கீழிருந்த கல்லை எடுத்து விட்டாள் அவன் மண்டைக்கே...



"ஆ... அம்மா.... " திடீரென தலையில் கல் மோதி விழவும் நிலைகுலைந்தவன் கடைசி நிமிடத்தில் விழாமல் தப்பித்து விட்டாலும் வண்டியை ஓரம்கட்டி விட்டு வந்தான் பெரும் கடுப்புடன்....



"வாடா வா.... நீயா வந்து சேத்த அடிச்சுட்டு திரும்பி கூட பாக்காம போவ... நா கை கட்டி வேடிக்க பாக்கணுமா? " வாய்க்குள் முணுமுணுத்தவள் வந்து நின்றவனை உக்கிரமாக முறைத்து நிற்க அவனும் முறைத்துக் கொண்டே நின்றான்.



"இடியட்"



"ஸ்டுப்பிட்" அவளும் விடுவதாகவே இல்லை...



"எதுக்குடி கல்ல விட்டெரிஞ்ச?"



"ம்.. வேண்டுதல்டா லூசு"



" மரியாதயா பேசுடி"



" நீ முதல்ல பேசுடா"



" என்னயவே டா போட்டு பேசுறியா நீ... நா யாருன்னு தெரியுமாடி?"



"அய்யய்யோ பயமா இருக்கே... எந்த நாட்டு ஜனாதிபதி சாரே?" வலது கையை இடது தோள் புஜத்திலும் இடது கையை வலது தோள் புஜத்திலும் வைத்து முதுகை வளைத்து நக்கலடித்தவளை பார்த்து பல்லை கடித்தான் எ. ஸி. பி கிருஷ்ணா!!!



"சரியான பஜாரிடி நீ"



" நா அப்பிடி தான்டா... உனக்கென்ன வந்துது? "



"ச்சேஹ்... இவளயெல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி உள்ள வைக்கணும்... அப்போதான் திருந்துவாளுங்க" அவன் முணுமுணுத்துக் கொண்டே திரும்பி நடக்கவும் தான் அவன் உடையை கவனித்தாள்.



காக்கி!!!



'அச்சோ போலிஸா' மனம் நடுங்கினாலும் "பேரு அமிர்தவர்ஷினி... போ... போயி கம்ப்ளைன்ட் கொடுடா..." விடுவேனா என சண்டித்தனம் செய்து வைத்தது நாவு....



" போடி பஜாரி" அவன் திட்டிக் கொண்டே வண்டியிலேற "நீ தான்டா டுபாக்கூர் போலிஸு" தொண்டை கிழிய கத்தினாள் பெண்....



..............................................................................



"பேபி.... ஆத்தா வாசல்லயே நிக்கிது... அந்த லூசு வேற இப்பிடி பண்ணிபுட்டு பொய்ட்டான்... என்ன நடக்க போகுதோ" வாய்க்குள் அர்ச்சனையுடன் உள்ளே நுழைந்தவள் அதே பைக் வாசலில் நிற்கவும் அதிர்ந்து போனாள்.



'ஆத்தீ... இவன் என்ன கம்ப்ளைன்ட் கொடுக்க வீட்டுக்கே வந்துபுட்டானா... வரூ... டுபாக்கூர் போலிஸ்னு நெனச்சா கடமை தவறா போலிஸா இருப்பான் போலயே... ஆத்தா ஏன் நம்மள இந்த முறை முறைக்குது.... ஒருவேல அவன் பேசுனது இது காதுலயும் விழுந்துடிச்சோ....' மனம் வழமைபோல் அதன் வேலையை ஆரம்பிக்க (அதாங்க கவுண்டர் கொடுக்கறது) திட்டி அடக்கியவள்



"ஹி... மம்மி... வர்ற வழில மழ அடிச்சு ஊத்திடுச்சு.... என் பேபி வேற வர மாட்டேன்னு அடம்புடிச்சா...." அசடு வழிந்தவாறே கதை அளந்தவளை முறைத்தவர்



"என்னடி கோலம் இது... படிக்க போனியா மாடு மேய்க்க போனியா?" அவர் கையில் சூலாயுதம் இல்லாதது தான் குறையாக கர்ச்சிக்க குளிரெடுத்தது பேதைக்கு....



"அது வந்து இ.. இல்ல மா நா அந்த லூஸு போ.... " அவன் அவள் தந்தையுடன் பேசிக் கொண்டே வெளியே வர கண்களால் மிரட்டிய அன்னையையும் கண்டுகொள்ளாது முகத்தை மறைத்தவாறே திரும்பி நிற்க



"அம்மு... என்னமா இது?" குட்டையை குழப்பி விட்டார் தந்தை....



பேச்சில் கவனமாக இருந்தவன் அப்போது தான் அவளை கண்டு கொள்ள அதிர்ந்த முகம் அவள் தன்னை காண பயந்து மறுபக்கம் திரும்பியிருந்ததும் சிரிப்பு பொங்கியது.



"நைனா.... உனக்கு ஏன் எம் மேல இத்தன பாசம்.... ச்சி காண்டு" பல்லை கடித்தவள் இளித்துக் கொண்டே திரும்ப



"என்னமா இது... என்ன ஆச்சு?" மீண்டும் கேட்டார் தந்தை...



"வர்ற வழில என் பேபி மக்கர் பண்ணிடுச்சு டாடி..."



"உன் டப்பா வண்டி எப்போ தான் பிரச்சன பண்ணாம இருந்திருக்கு...." கடுப்பாக தந்தை கத்த அவளுக்கு பின்னால் சற்றே தள்ளி நின்ற அவள் வண்டியை வேண்டுமென்றே எட்டிப் பார்த்தான் க்ருஷ்.



"எனக்கு என்ன வேணா சொல்லுங்க என் பேபிய திட்டாதிங்க... " அவன் நக்கலாய் எட்டிப் பார்த்தது கோபத்தை மூட்ட தந்தையுடன் மல்லுக்கு நின்றாள் மகள்....



"க்கூம்... அத நீதான் மெச்சிக்கணும்.... உள்ள போயி முதல்ல ட்ரஸ்ஸ மாத்துங்கடா..." பாசமாய் சொன்னவர் கிருஷ்ணாவிடம் திரும்ப " லூசு.... " அவனை ஓரக் கண்ணால் பார்த்து திட்டிக் கொண்டே வீட்டின் பின்னால் செல்ல "பஜாரி" கடுப்பாய் முணுமுணுத்தான் மனதிற்குள்....



"ஓகே கிருஷ்ணா.... நாம இத பத்தி அப்பறமா டிஸ்கஸ் பண்ணலாம்.... "



"ஷூர் சார்.... அப்போ நா கெளம்புறேன்...."



"இருன்னாலும் இருக்க மாட்ற... சரி பாத்து போயிட்டு வாபா" அவன் முதுகை தட்டிக் கொடுக்க புன்னகைத்துக் கொண்டே கிளம்பி விட்டான்.



((நண்பா... கிருஷ்ணா ஒரு பெண் கடத்தல் கேஸ்ல இன்வால்வாகி அந்த கேஸ டீல் பண்ணான்னு சொன்னேன்ல.... அதே அதே தான் பா... நம்ம வர்ஷினியோட அப்பா தான் அவன் மேலதிகாரி.... அது பத்தி பேசத்தான் வந்திருந்தான்... வர்ற வழில தான் அந்த தரமான சம்பவம் நடந்துது))



..............................................................................



"மச்சான் எங்க இருக்க?" ரக்ஷனிடம் அழைப்பேசியில் கேட்டான் கிருஷ்ணா.



"கேஸ் விஷயமா ஒருத்தர மீட் பண்ண வந்தேன் மச்சி... ஏன்டா?"



"இல்ல சும்மா தான்"



"ஆமா விக்ரம் சார மீட் பண்ண போனியே என்னாச்சு?"



"பேசிட்டேன் டா... திரும்ப வர சொல்லி இருக்காரு... நீ ஒர்க்க முடிச்சிட்டு வா நா அபி வீட்ல வெயிட் பண்றேன்"



"ஓகே மச்சான் பை"



"பை... டேய் டேய்.... " விடைபெற்று விட்டு அழைப்பேசியை அணைக்காமல் திடீரென நண்பன் கத்தியதில் பதறிப் போனான் ரக்ஷன்.



" என்னாச்சு என்னாச்சுடா? "



" ஏன் என்னாச்சு? "



" எரும.... எதுக்கிப்போ கத்துன? "



" ஓ... அதுவா... அது... அது.... உ.. உன்ன.... கூப்டு பாத்தேன் மச்சான்" அவன் இழுத்த இழுவையில் எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது ரக்ஷனுக்கு....



"ஏன்டா ஏன்?"



"இப்போ தான் பிள்ளயார பாத்தேன்... வேண்டுதலா இருக்கட்டுமேன்னு நினச்சுகிட்டேன்" அவன் சிரியாமல் கலாய்க்க பல்லை கடித்தான் நண்பன்.



"நீயெல்லாம் இந்த ஜென்மத்துல திருந்த மாட்டடா... உன் வாய அடக்கிறதுக்காக ஒரு பஜாரி வரனும்டா... இது என் சாபம்... சாவுடா... எரும லூசு பரதேசி.. நக்கலுக்கு பொறந்தவனே கிட்ட இருந்த மவனே நீ செத்தடா" இடைவிடாமல் அவன் திட்ட சிரித்துக் கொண்டே மொபைலை காதிலிருந்து எடுத்தவன் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும்



" மச்சான் சரியா கேக்கல... முதல்ல இருந்து திட்றியா? " அவன் வார்த்தைகளில் கொலைகாண்டுக்கே போய்விட்டான் ரக்ஷன்.



" படுபாவி.... இருடா வந்து வெச்சுக்குறேன் உன்ன"



" என்னாது.... வெச்சுக்குவியா... அடேய் நா ஆம்பளடா... சீசீ... உன் ப்ரண்ஷிப் கட்"



"கருமம் புடிச்சவனே நா என்ன சொல்ல வந்தா நீ என்ன அர்த்தம் எடுக்குற? "



" கட் கட் கட்"



"பன்னி பரதேசி உயிர வாங்காம வைடா போன..." பல்லை கடித்துக் கொண்டே அவன் சட்டென துண்டித்து விட வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான் எ.ஸி.பி கிருஷ்ணா....



..............................................................................



"டாடி.... " குளித்து முடித்து கையில் ஸ்னாக்ஸுடன் அருகில் வந்தமர்ந்த மகளின் அழகில் பூரித்துப் போனது ஹாலில் பேசிக் கொண்டிருந்த பெற்றோர் இருவரின் உள்ளங்களும்...



"டாடிஈஈஈ"



"ஏன்டி கத்தற?" மகளை கண்டித்தாள் தாய்.



"ஆமா எப்போ பாரு எனக்கு மட்டும் அர்ச்சனை பண்ணி கிட்டே இருங்க... நா கூப்டும் கேக்காத மாதிரி இருந்தவருக்கு திட்டாதிங்க" மகள் முகத்தை தூக்கி வைக்க சிரித்தார் தந்தை.



"எதுக்கிப்போ உங்களுக்கு சிரிப்பு... அவ கூப்டும் ஏன் ஏன்னு கேக்கல?" தன்னை விட்டு விட்டு அன்னை தந்தையை பிடித்துக் கொண்டதில் கலகலத்து சிரித்தாள் மகள்.



"இப்போ நான் மாட்டிகிட்டேனா....? " கேட்டாலும் ஒரு வார்த்தை மனைவியிடம் திரும்ப பேசிவிட மாட்டார் கமிஷ்னர் விக்ரம் குமார்.



" அம்மா விடு மா... அவரே பாவம் உன் கூட வாழ்ந்து வாழ்ந்து நொந்து போயிருக்காரு.... நீ வேற"



"அடிங்க... இவ வாயி ரொம்ப நீளமா போச்சுங்க"



"எந்த அளவு நீளம் மம்மி ஜி.... ஒரு ஒரு முழம்... இரண்டு... மூஊஊஊ" அவர் அடிக்க கை ஓங்கவும் பழிப்புக் காட்டி விட்டு எழுந்து ரூமிற்கு ஓடிய மகளை பார்த்து சிரித்தவரிடம் மீண்டும் காய்ந்தார் தாயார் ராதா.



"எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான்... ஊருல உள்ளவன் பூரா வாசல் வர வந்து காரி துப்பிட்டு போறான்... இதுல அம்மணி சின்ன பசங்க கூட சேந்து சைக்கிள் வேற ஓட்டிட்டு திரியுறாங்க... அது போகட்டும்னு விட்டாலும் வர்றவனுங்க போறவனுங்க கூட எல்லாம் மல்லுக்கு நிக்கிறா... நா சொன்னா எங்க கேக்குது... நீங்களாவது கொஞ்சம் கண்டிச்சு வைங்க"



" இவளா வம்புக்கு போயிருக்க மாட்டா மா... அவனுங்களும் ஏதாவது பண்ணி இருப்பானுங்க... நம்ம குழந்த மேல நமக்கே நம்பிக்க இல்லன்னா எப்பிடி மா? "



" நம்பிக்க இல்லாமலாங்க... அவள கண்டிச்சு தானே விட சொல்றேன்"



" விடு ராதா... அவ இப்பிடி இருந்தா தான் அழகு" தந்தையின் வார்த்தைகளில் பாவைக்கு கண்களில் ஆனந்தத்தில் குளம் கட்டியது நீர்...



பெற்றோரின் நேசம் அவளை நெகிழ வைத்திருந்தது உண்மையிலும் உண்மை...



வாசலில் நின்றவள் அரவம் எழுப்பாமல் உள்ளே சென்று கட்டிலில் மல்லாக்க விழ அழையா விருந்தாளியாய் வந்து முறைத்துக் கொண்டே நின்றான் எ.ஸி.பி கிருஷ்ணா....



"அடக்கடவுளே... இவன எப்பிடி மறந்தோம்.... என் பேபியவே நக்கலா எட்டிப் பாத்து சிரிக்குறான் பரதேசி... மவனே அப்பா கிட்ட நாளைக்கும் பேச வருவல்ல... உன் வண்டிய என்ன பண்றேன் பாரு... வண்டியாம் வண்டி... உன்னோட தான்டா டுபாக்கூர் வண்டி... லூசு டுபாக்கூர் போலிஸு" நன்றாக திட்டித் தீர்த்தாலும் கோபம் மட்டும் அடங்குவேனா என சண்டித்தனம் செய்ய " ஆஆஆஆ" கத்திக் கொண்டே எழுந்தமர்ந்தவள் உடனே கிளம்பி விட்டாள் சைக்கிளோட்ட....

***



வீட்டின் முன் வாசலில் வண்டியின் சத்தம் கேட்க வெளியே வந்தான் அபினவ் ஆதர்ஷ்.



((நண்பா பொம்ம... அதான் அவன் அத்தை பொண்ணு ஆர்த்தி படிக்க போயிருந்தான்னேல்ல... அதனால அவ வீட்டுல நெஹி...))



"வா மச்சி..." அவன் வரவேற்கவே வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியவன் நண்பனை அணைத்து விடுவித்தான்.



"என்னடா ரெண்டு நாளா ஆளயே காண முடில...?"



"சொன்னேன்ல மச்சி அந்த பொண்ணுங்க கடத்தல் கேஸ்னு... அது விஷயமா அலஞ்சுகிட்டு இருக்கேன்...விக்ரம் சார பாக்க இன்னிக்கு தான் டைம் கிடச்சுது... அதான் அவரையும் பாத்து பேசிட்டு வர்றேன்... திரும்ப வர சொல்லி இருக்காரு... நாளைக்கு போலாம்னு இருக்கேன் டா... "



" ஓகேடா ஓகே... வா உள்ள... சாப்டியா? "



"ம்... ஆமா ஆச்சு... வர்ற வழில சாப்டேன்.... மழை திடீர்னு ஊத்திகிச்சு மச்சான்.... ட்ரஸ் ஈரமாகி காஞ்சும் போயிடுச்சு...நா மாத்திட்டு வந்தட்றேன் டா... " அபி சரியென தலையாட்டவும் மாடிப்படியேறிவனுக்குள் திட்டிக் கொண்டே வந்து நின்றாள் வர்ஷினி.



" சரியான பஜாரி... கல்ல விட்டெரிஞ்சே கொன்னுருவா போல... கொலகாரி... அவளும் அவ டப்பா வண்டியும்... " வாய் விட்டே திட்டியவன் அதற்குள் குளியலறைக்குள் சென்றிருக்க அவள் இருந்த கோலம் திடீரென ஊசலாடவும் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரித்தான்.



"பஜாரியா இருந்தாலும் பாசக்காரி தான் போல" வாய் தானாக முணுமுணுக்க தலையை உலுக்கி அவளை விரட்டினான் எ.ஸி.பி கிருஷ்ணா.....
 
Last edited:

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"டேய்... ரக்ஷன் எங்கடா....?" நன்றாக தூங்கி எழுந்து விட்டு இரவு கீழிறங்கி வந்து அவனை கேட்பவனை முறைத்தனர் நண்பர்கள்....



"வா கண்ணா.... வந்து சாப்புடு டா" அனைவரும் டைனிங்க டேபிளில் அமர்ந்திருக்க ராஜா ராம் அழைக்கவும்



"எனக்கு பசியில்ல மாமா... நீங்க சாப்புடுங்க" சோபாவில் போய் அமர்ந்தவன் தொலைக்காட்சியை ஓட விட்டான்.



"கண்ணா வந்து சாப்புடு"



"எனக்கு பசியில்ல லக்ஷ்மி மா... எனக்கு வேண்டாம்" ஹாலிலிருந்தே அவன் கத்த நேரே அவனிடம் வந்தவர் டீவியை ஆப் பண்ணி விட்டு அவனை பிடித்து இழுத்துக் கொண்டு போய் டைனிங் டேபிளில் அமர வைக்க



"உங்க குழந்தைக்கு அப்பிடியே ஊட்டி விடுங்க அத்தை" கலாய்த்த ரகுஷனுக்கு ஹைபை போட்டான் அபி.



" நான் ஊட்டி விடத் தான் போறேன்... நீங்க சும்மா இருங்கடா தடிமாடுகளா" அவர்கள் இருவருக்குமே திட்டி விட்டு அவர் உள்ளே செல்லவும் வாய் பொத்தி நக்கலாக சிரித்த கிருஷ்ணாவை நண்பர்கள் மீண்டும் முறைத்து வைக்க சிரித்தார் ராஜாராம்.



காலை....



"டேய் ரக்ஷன்... யாருக்குமே ஆக்ஸிடெண்ட் ஆகலடா" தூங்கிக் கொண்டிருந்த நண்பனை பதற்றமாக கிருஷ் தட்ட ஆக்ஸிடெண்ட் என்ற வார்த்தையில் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தான் ரக்ஷன்.



"என்னடா என்ன ஆச்சு.... யாருக்குடா ஆக்ஸிடெண்ட்?" பேயறைந்தது போல் வெளுத்துப் போயிருந்த அவன் முகத்தை பார்த்து அடக்க மாட்டாமல் கிருஷ் சிரிக்க ஆரம்பிக்க ஸ்டேஷனுக்கு கிளம்பிக் கொண்டிருந்த அபியும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான்.



"அவன ஏன்டா இந்த பாடு படுத்தற?" கேட்ட அபிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் போக கொலைவெறியுடன் ஏதோ அடிக்க தேடிக் கொண்டிருந்த ரக்ஷனை பார்த்து விட்டு எழுந்து வெளியே கிருஷ் ஓடவும்



"பரதேசி... குழப்பத்துக்கு பொறந்தவனே... உன்ன கொல்லாம விட மாட்டேன்டா...." அருகிலிருந்த அபியின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தானும் எழுந்து ஓடினான் ரக்ஷன்.



"டேய் டேய் அது என் துப்பாக்கிடா..." அபியின் காட்டுக் கத்தல் காற்றில் கரைந்து போனது.



......



"நில்லுடா எரும.... உன்ன இன்னிக்கு கொல்லாம ஓய மாட்டேன்டா" திட்டிக் கொண்டே துரத்திக் கொண்டிருந்தவனுக்கு போக்கு காட்டி ஓடிக் கொண்டே இருந்தவன் ஒரு கட்டத்தில் இளைப்பாற நின்று விட அவனுக்கு அருகே வந்து நின்வனும் அவனை போலவே இளைப்பாற திரும்பி நண்பனை பார்த்தவன் மீண்டும் சிரிக்க ஆரம்பிக்கவும் அவனை கீழே புல்லில் தள்ளி விட்டு அவன் மேல் ஏறி அமர்ந்து அடிக்கத் துவங்கினான் ரக்ஷன்.



***



"அம்மு.... இன்னிக்காச்சும் அந்த டப்பா வண்டிய விட்டுட்டு கார எடுத்துட்டு போமா" கெஞ்சிய தந்தையை பார்த்து உதட்டை சுழித்தவள்



"என் பேபிய டப்பான்னு சொல்லாதிங்கன்னு சொல்லி இருக்கேன்ல....?" பத்ரகாளியானாள்.



"ஆமா... இன்னிக்கு சன்டேல்ல.... எங்க மா கிளம்பிட்ட?"



"வேற எங்க போக போறா... அந்த பசங்க கூட தான் சுத்திகிட்டு திரிய போகும்" உள்ளிருந்து திட்டிக் கொண்டே வெளியே வந்தார் தாய்.



"சும்மா திட்டாத மம்மி.... நா இன்னிக்கு எங்கேயும் போறதா இல்ல... வீட்ல தான் இருக்க போறேன்... "



" வெளில இடியுடன் கூடிய மழை வர்ற சான்ஸ் இருக்குங்க.... நா இப்போவே ட்ரஸ்ஸெல்லாம் எடுத்து வெச்சுட்றேன்" நக்கலடித்த தாய்க்கு பழிப்புக் காட்டியவள் அறைக்குள் செல்ல எத்தனிக்க வெளியே வந்து நின்றது கிருஷ்ணாவின் வண்டி.



'அட.... டுபாக்கூர் வந்தாச்சு... இருடா உனக்கு இன்னிக்கு இருக்கு....' மனதிற்குள் கருவிக் கொண்டவள் நல்ல பிள்ளையாய் அறைக்குள் சென்று விட உள்ளே நுழைந்தான் எ.ஸி.பி....



"வணக்கம் சார்"



"வாபா கிருஷ்.... வா வா.... உட்காரு" அவர் இருக்கையை காட்டவே புன்னகையுடன் அமர்ந்து கொண்டவனை எட்டிப் பார்த்தவள்



' ஓஹோ.... மூஞ்சியில சிரிப்பு வேறயாடா லூசு.... பெரிய புன்னகை மன்னன்னு நினைப்பு.... இரு தோ வர்றேன்' மனதிற்குள் கருவிக் கொண்டே ரூமை விட்டு வெளியேறி ஹால் பக்கமாக அவள் வரவும் அவள் முகத்திலிருந்த குதூகலத்தை புருவம் சுருங்க பார்த்தவனுக்கு ஏதோ இடித்தது.



'ஆஹா.... இந்த பஜாரிட முகமே சரியில்லயே... எதுக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கா.... நமக்கு ஏதாவது ஆப்பு வைக்க கிளம்பிட்டாளோ.... நம்ம பொருள் எல்லாம் தான் நமக்கிட்ட இருக்கே அப்பறமென்ன.... கடவுளே என் பைக்கு' மனதிற்குள் அலறியவன்



"சா.. சார் பைக்கு... பைக் சாவிய வண்டிலயே விட்டுட்டு வந்துட்டேன்.... எடுத்துட்டு வந்தட்றேன்" வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டி விட்டு வெளியே ஓட.....



"ஹப்பாடா.... வந்த வேல முடிஞ்சுடுச்சு.... டாங்க் யூ கடவுளே.... டாங்க் யூ.... ஹாஹா... யாருகிட்ட டா" கையை தட்டி விட்டு எழுந்தவள் இடுப்பில் கை வைத்து அவளை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தவனையும் கூடவே பத்ரகாளியாய் மாறியிருந்த அன்னையையும் பார்த்து அதிர்ந்து போனாள்!!!



'ஆத்தாடீஈஈஈ' இம்முறை தாய் நின்றிருந்த கோலம் கண்டு வயிற்றுக்குள் புளியை கரைத்தது பாவைக்கு...



"உள்ள வா" அவர் உறுமி விட்டு நகரவே அவன் முகத்தை கூட பார்க்காது நைஸாக நழுவப் போனவளின் முன் தடுத்தபடி வந்து நின்றான் கிருஷ்.



"மரியாதையா டயருக்கான பணத்த கொடுத்துட்டு கிளம்பு இல்ல... உன் டப்பா வண்டி சி... சாரி மேடம் ஜி... உங்க பேஏஏஏபி நாளைக்கு இருந்த இடத்துல இருக்காது" வெளிப்படையாகவே மிரட்டியவனை அதிர்ந்து பார்த்தவள் "கொடுத்துட்றேன்" அமைதியாய் நகர்ந்து விட அவனுக்குத் தான் அவள் அமைதி ஏனோ பிடிக்கவில்லை...



"இப்போ எப்பிடி வீட்டுக்கு போறது... ஓ காட் விக்ரம் சார பாக்க வந்துட்டு என்ன வேலைடா பாத்துகிட்ருக்க கிருஷ்" புலம்பிக் கொண்டே உள்ளே காலடி எடுத்து வைக்கவும் பளாரென்ற சத்தம் கேட்கவும் சரியாக இருக்க அதிர்ந்து திடுக்கிட்டு திரும்பினான் காளை...



விக்ரமுக்கும் அதே அதிர்ச்சி தான் போலும்.... கிருஷ்ஷை புரியாமல் பார்த்தவர் உள்ளே விரைய நாகரிகம் கருதி ஹாலிலேயே நின்று விட்டான்.



........



கண்ணத்தில் கை வைத்தபடி கண்கள் கலங்க அன்னையை அதிர்ந்து பார்த்திருந்தவள் தந்தை வந்ததும் விறுட்டென வெளியேற மனைவியை கேள்வியாய் பார்த்தார் விக்ரம்.



"என்ன பண்ணி வெச்சிருக்கா தெரியுமா?" அவர் நடந்ததை கூறி முடிக்க



"அதுக்காக அவ மேல ஏன் கை வெச்ச ராதா?" கோபமாக கேட்டார் கணவர்.



"நானும் எவ்வளவு தான் கண்டிச்சு வெக்கிறதுங்க... சொன்ன சொல் கேக்குறாளா... இப்போ பாவம் அந்த தம்பி..."



"டயர அவ அப்பிடி செஞ்சான்னா இரண்டு பேருக்குள்ளயும் ஏதோ நடந்திருக்கனும்... அதான் பாப்பா இப்பிடி பண்ணி இருப்பா... விசாரிக்காம நீ பண்ணது தப்பு மா" கணவரும் தன்னையே குற்றம் சொல்லவும் தொங்கிப் போனது அவர் முகம்....



.......



தலை குனிந்தபடியே வெளியே வந்தவளை கண்டு சட்டென எழுந்தவன் அவள் முன் போய் நிற்க பல்லை கடித்தவள் அவனை நிமிர்ந்து முறைத்தாள்.



" ஹே.... ஐ... ஐ.. ஐ அம் சாரி... நான் இத எதிர்பாக்கவே இல்ல "



"பண்ணுறதையும் பண்ணிட்டு சாரி கேக்..."



"ஹோய் இருங்க... இருங்க மேடம் ஜி... அப்பிடீன்னு உன் கிட்ட வந்து சாரி கேப்பன்னு எதிர் பாக்காதன்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ள நீங்க வேற...." ஏதோ பேசப் போனவள் அவனின் அடுத்த வார்த்தைகளில் கண்கள் அதிர்ச்சியில் தெறிக்க நின்றிருந்தாள்.



" உனக்கு இந்த கண்ணத்துக்கும் பளார்னு விட்ருக்கனும்டி... அப்போதான் திருந்துவ... என் பைக்கு மேல கை வெச்சிட்டல்ல... கண்டிப்பா இனிமே உன் பைக்கு உன் கிட்ட இருக்காது... வர்ட்டா" அவனை எதிர்த்து பேச வேண்டும் என்று கூட தோன்றவில்லை பேதைக்கு...



இப்படியுமா பழிக்குப் பழி வாங்குவது என்றுதான் இருந்தது அவளுக்கு....



பின்னால் அரவம் உணர்ந்து அவசரமாக அறைக்குள் சென்றவள் தாழிட்டு விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் துவங்கி விட்டாள்.



'என் மேல அம்மாவ கையோங்க வெச்சிட்டல்ல... உன்ன பழிவாங்காம விட மாட்டேன்டா டுபாக்கூர்.... பணமா கேக்கற... கொடுத்துட்டா போச்சு' மனதில் ஏதேதோ திட்டம் வகுத்தவள் வெளியே கிளம்ப ரூமை விட்டு வெளியே வரவும் தந்தை உள்ளே நுழையவும் சரியாக இருக்க சட்டென நின்றவள் அருகே வந்தார் விக்ரம் குமார்.



((கிருஷ்ஷிடம் மன்னிப்பு கேட்டு தங்கள் காரை வலுக்கட்டாயமாக எடுக்க சொல்லியும் அவன் எடுக்காமல் போக குமரன் வந்து அழைத்துப் போகும் வரை நின்றவனுடன் கூடவே இருந்து அவன் கிளம்பிய பின் தான் உள்ளே நுழைந்திருந்தார்...))



"அம்மா மேல கோபமா இருக்கியா மா" அவர் வாஞ்சையாக தலையை தடவவும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் மலுக்கென கண்ணத்தை தொட தந்தையை கட்டிக் கொண்டாள் மகள்.



"அந்த டுபாக்கூர் தான் டாடி நேத்து என் மேல சேத்த தெறிச்சு விட்டான்... ஒரு சாரி கூட கேக்கல... என் பேபிய வேற நக்கலா எட்டி பாத்தான்... அதான் அப்பிடி பண்ணேன் சாரி டாடி..."



"எனக்கு உன்ன பத்தி தெரியும் அம்மு... நீ செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன் பட் அம்மா அப்பிடி பண்ணதுக்கு சாரிடா"



((அடேய் போலிஸ்... அவ திரும்ப பழிவாங்க கிழம்பி இருக்கா நீ அவள நல்லா சமாதானப்படுத்து))



" இட்ஸ் ஓகே டாடி... நீங்க எதுக்கு என் கிட்ட சாரி சொல்றீங்க... நா அத உங்க பொண்டாட்டியோட கணக்குல பாக்கியா பாத்துக்குறேன்... நா வெளில பொய்ட்டு வர்றேன்... உங்க பொண்டாட்டி கிட்ட சொல்லிடுங்க பை.." அவர் கண்ணத்தில் முத்தம் வைத்தவள் வெளியேற மகளை நினைத்து உதட்டில் புன்னகை மலர்ந்தது தந்தைக்கு...



((அடப்பாவிகளா... என்னடா நடக்குது... நீயும் திருந்த மாட்ட அவனும் திருந்த மாட்டான்... போங்கடாஆஆஆ))



***



'அவ கிட்ட நடந்து கிட்ட முறை தப்பு கிருஷ்' மனசாட்சி எடுத்துறைக்க அதையும் முறைத்து அனுப்பி வைத்தவன் அமைதியாக வரவும்



"என்னாச்சு மச்சி?" அவனை கலைத்தான் குமரன்.



"அந்த பஜாரி தான்டா எல்லாத்துக்கும் காரணம்" நன்பணின் முகத்தில் தெரிந்த கடுப்பில் சிரிப்பாக வந்தது குமரனுக்கு...



"என்ன பண்ணா உன் பஜாரி?"



"உவ்வேக் என் பஜாரியா...வாந்தி வருது..."



"ஓகே ஓகேய்ய்ய்ய்... என்ன பண்ணா?" சிரித்துக் கொண்டே அவன் கேட்கவும் இருவருக்கும் நடந்த சந்திப்பு முதல் இன்று அவள் செய்து வைத்தது அவனின் சவால் என அனைத்தையும் கூறி முடிக்க "அடப்பாவி.... அப்பிடியாடா பண்ணா... சரிதான் பஜாரி தான்" வாயைப் பிளந்தான் குமரன்.



((குமரன் டிடக்டிவ்னு ஏற்கனேவே உங்க கிட்ட சொன்னதா ஞாபகம் நண்பா... விக்ரம் குமாரோட நம்பிக்கையான ஆபிஸர்... இந்த கேஸ நம்ம எ.ஸி.பி எடுத்தப்போ விக்ரம், குமரனை தான் அவனுக்கு உதவியா இருக்க நியமிச்சிருந்தாரு... இரண்டு பேரும் இந்த கேஸ் விஷயமா அழையுறப்போ தான் ப்ரண்ட் ஆனாங்க...



அப்பிடி இருந்தும் நம்ம குமரனுக்கே கிருஷ் ஒரு பொண்ண லவ் பண்ணாங்குற விஷயம் இன்னிக்கு வரை தெரியாதுங்கறப்போ அபியும் ரக்ஷனும்??))



"பட் விக்ரம் சாருக்கு இப்பிடி ஒரு மகளான்னு யோசிக்க கூட முடில... திமிரு புடிச்சவ"



"அப்போ நாளைக்கு பைக்க தூக்கிட போறியா?"



"ச்சே ச்சே... அது அவள சும்மா மிரட்ட சொன்னது மச்சி.... அப்போ அவ மூஞ்ச பாக்கனுமே நீ.... ஹாஹா... அவ வாய் அதிர்ச்சியானா தான் அடங்கும் போல.... என்னே வாய்டா சாமி... " நண்பனை பார்த்து தானும் சிரித்தவன் "பாவம் டா... " வக்காலத்து வாங்க



" எதூஊஊஊ???? பாவ..... மாஆஆஆஆ?? போடாஆஆஆஆங்..... " கேவலமாக திட்ட வந்தவனை



" ஏஏஏஏஏ.... ஐயா சாமி துவங்கிடாத டா மச்சான்.... நா எதுவுமே சொல்லல" அலறியபடியே ஜகா வாங்கிக் கொள்ள " அஃது" நண்பனை கெத்தான பார்வை பார்த்து வைத்தான் எ.ஸி.பி....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மர நிழலில் தாடையில் கையை குற்றி சோகமாக அமர்ந்திருந்தவளை சுற்றி அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தன அந்த சிறிய வாண்டுகள்...



((ஒருத்தனுக்கு அஞ்சு வயசு இன்னொருத்தனுக்கு ஆறு அடுத்தவனுக்கு ஏழு இன்னொருத்னுக்கு வெறும் நாளு தாங்க..... பட் அவன் பேசுற பேச்சுக்கும் அவன் வயசுக்கும் சம்மந்தமே இருக்காது... இவனுங்க தான் நம்ம அம்மணியோட ப்ரண்ட்ஸாஆஆஆம்... அவங்க தான் சொல்லிக்குறாங்க.... நடந்தது எல்லாம் சொல்லி ஐடியா கேட்டு உக்காந்து இருக்காங்க... அதுக்கு தான் இந்த போஸு))



"எங்க அக்காவையே மிரட்டி இருக்கான்டா... அவனுக்கு கண்டிப்பா நாம யாருன்னு காட்டணும்" தொடங்கி வைத்தான் ச்சி வைத்தார் ரவி.... வயசு ஆறு பையன்...



"ஆமாடா நாம அவன தும்மா (சும்மா) விட கூலாது (கூடாது)" அதுக்கு ஒத்து ஊதறது நம்ம பெரிய ஐயா சந்தோஷ் ஐயாக்கு வயசு நாலு...



((ஒழுங்கா பேச கூட தெரில இவன்லாம் ப்ரண்டா வெச்சிகிட்டாமா நீ சுத்துறன்னு உங்க ஹீரோயின பாத்து நீங்க கதர்றது எனக்கும் புரியுது... இருந்தாலும் என்ன தான் பண்றதுங்க நண்பர்களே... நம்ம நிலம அப்பிடி))



"அவன பேசாம கடத்திடலாமா?" குரலில் குதூகலம் கொப்பளிக்க நம்ம எ.ஸி.பிய கிட்னாப் பண்ண ஐடியா கொடுக்குறவரோட பேரு ராஜ்.... அந்த பெரீஈஈஈய மனுஷருக்கு வயசு வெறுஉஉஉம் அஞ்சு....



((வடிவேலு டயலாக் : ஆஹாஆஆஆ இவன் தாய்யா நம்மாலு.... நம்ம சங்கத்துக்கு தலைவன் இவன் தாய்யா.... தூக்குங்கடா))



"கா... நம்ம சிம்பு சார் நடிச்ச வாலு படத்துல கூட வருமே அந்த பஞ்சர் பின்னு...." இருக்கறவன்லயே உறுப்படியான ஐடியாவ கொடுத்தவரு பேரு சரண் வயசு ஏழு...



சரண் சொல்லவும் தொங்கிக் கொண்டிருந்தவள் முகம் சட்டென பிரகாசமானது.



"டேய் ஆமாடா... அது பேரு கூட என்னவோ.... ஹாங் டையர் பஞ்சர் நெயில் [[Triangle tire puncher nail]] சூப்பர் சூப்பர்டா சரணு... என் செல்லம்... நானே போயி அது வாங்கிட்டு வந்தட்றேன்.... நாம இடத்த டிஸ்கஸ் பண்ணலாம்" அவள் மடமடவென பேசத் துவங்க ஒரே குஷியாகிப் போனது அனைவருக்கும்...



***



"லக்ஷ்மி மா நா இன்னிக்கு வீட்டுக்கு கிளம்பலாம்னு இருக்கேன்" வந்ததும் வராததுமாக அறித்தவனை கண்டு முறைத்தார் லக்ஷ்மிதேவி...



((டேய் டேய் போயிடாதடா... அவ கஷ்டப்பட்டு உனக்கு அல்வா ரெடி பண்ணி இருக்கா... ப்ளீஸ் போயிடாதிங்க போலிஸ்கார்... இந்த ரைட்டருக்காகவும் உங்க ரசிகர்களுக்காவும் இது கூட செய்யலன்னா எப்பிடிங்க போலிஸ்கார்... ))



"முடியாது... இன்னிக்கு இருந்துட்டு தான் போற"



((ஹப்பாடா நம்ம லக்ஷ்மி அம்மா இருக்க பயமேன்... இல்ல நண்பா???))



"இல்ல லக்ஷ்மி மா... அம்மா கூப்டுகிட்டே இருக்காங்க..."



"நானும் அம்மா தானேடா... நான் உன்ன இருக்க சொல்றேனே... அப்போ என்ன நீ அப்பிடி நினைக்கவே இல்ல அப்பிடிதானே? "



" நீங்க வேற... ஏன் இப்பிடில்லாம் பேசுறீங்க... இப்போ என்ன... நான் இருந்துட்டு போணும் அவ்வளவு தானே.... சரி இருக்கேன்.... இப்பவாவது சிரிங்க மா" அவர் தாடையை பிடித்து கொஞ்சிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தார் ராஜாராம்.



" அட... அட... அட... என்ன ஒரு பாசம் என்ன ஒரு பாசம்"



"ஆமா... உங்களுக்கு என்ன வந்துது?" மனைவி காயவும் கப்பென வாயை மூடிக் கொண்டவரை பார்த்து வாய்பொத்திச் சிரித்தவனை முறைத்தார் ராம்.



"எதுக்கு மாமா சும்மா வாங்கி கட்டிக்குறீங்க?"



"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா"



"ஆமாமா உங்க சாக்கடை அரசியல பத்தி தான் இந்த உலகத்துக்கே தெரியுமே... உங்களுக்கு சாதாரணமா தான் இருக்கும்"



"அட ஏன்டா நீ வேற... சரி சாப்டியா?"



"இப்போ தான் நானும் வந்தேன் சேர்ந்தே சாப்புடலாம் மாமா... நான் ப்ரஷ்ஷாகிட்டு வந்தட்றேன்" அவன் அவசரமாக மாடியேற அவனை பார்த்து புன்னகைத்தனர் அவனின் பெற்றோர்கள் அல்ல பெற்றோர்களுக்கு நிகரானவர்கள்.



அவன் கீழே வரும் போது அபியும் ரக்ஷனும் வந்து விட்டிருக்க அவர்களும் சேர்ந்தே இவனுக்காக சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்தனர்.



"அட... எல்லோருமே வந்தாச்சா?"



"ஆச்சு ஆச்சு.... நீ வா அவசரமா... ரொம்ப பசிக்குது..." ரக்ஷன் கத்தவே



"அவசரமா தானே ரக்ஷன் அண்ணா வரணும் இதோ வர்றேன்" என்றவன் திரும்பவும் அறைக்குப் படியேறி விட்டு இடை நடுவில் நின்றவன் மீண்டும் மெது மெதுவாக இறங்கி வர



"எரும மாடு... வாடா... " கடுப்பில் கத்திய ரக்ஷனை பார்த்து சிரித்த அபியுடன் தாங்களுமே கலகலவென சிரிக்கத் துவங்கினர் பெற்றோர் இருவரும்....



"தப்பா வாய தொறந்துட்டேன்டா சாமி.... மன்னிச்சிடு... வா..." அவன் கையெடுத்து கும்பிட சிரித்தவன் கண்ணடித்துக் கொண்டே அவனெதிரில் போய் அமர்ந்தான்.



"ரக்ஷன் உனக்கு சொல்ல மறந்தே போயிடுச்சு டா" கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் மீண்டும் ஆரம்பிக்க நிமிர்ந்து நண்பனை சந்தேகமாக பார்த்தான் ரித்விக் ரக்ஷன்.



" சொன்னா நம்ப மாட்ட..."



"நீ முதல்ல சொல்லு அப்பறமா நான் நம்பலாமா வேணாமான்னு முடிவு பண்ணிக்குறேன்"



"சொல்லிடுவேன்... "



" சொல்லித் தொலைடா குழப்பத்துக்கு பொறந்தவனே"



"நீ இப்பிடில்லாம் என்ன புகழ்ந்தீன்னா நா சொல்ல மாட்டேன் போ"



"இவன.... சொல்லுங்க மகாராஜா... உங்கள் வார்த்தைகளுக்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன்"



" இருக்கட்டும் இருக்கட்டும்.... அது வந்து... வந்துஊஊ அன்னக்கி நாம ஒரு கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணோம்ல?" நண்பன் சீரியஸாக தொடங்கவும் உன்னிப்பாக கேட்கத் துவங்கினான் ரக்ஷன்.



"ஆமா... அந்த பொண்ணு கேஸு"



" அதே தான்... அந்த பொண்ணோட இரத்தம் இன்னிக்கு மார்கெட்ல கிடச்சுதாம்னு நல்லா இருக்குமேன்னு லக்ஷ்மி அம்மா குழம்பு வெச்சாங்கலாம்டா.... நல்லா இருக்குல? "



" வாட்??? " நண்பன் சொன்னதை ஜீரணித்து முடிந்த அடுத்த நொடி அவன் வாந்தி எடுக்கும் சத்தம் வீட்டையே நிறைக்க



"பாவம்டா அவன்... அவனுக்கு தான் இப்பிடி சொன்னாலே வாந்தி வந்துடும்னு தெரியும்ல.... ஏன்டா படுத்துற? " அபி வழமை போல் அவனுக்காக பரிந்து கொண்டு வரவும்



" நிம்மதியா சாப்புட கூட விட மாட்டியாடா பரதேசி" துரத்திக் கொண்டே வந்தவனிடமிருந்து தப்பி ஓடினான் எ.ஸி.பி....



***



"கமான் கா.... " அவள் அந்த பஞ்சர் நெயில்களை பாதையில் தூவி விட்டு வர மரத்துக்குப் பின்னாலிருந்து கத்திக் கொண்டிருந்தன அந்த வாண்டுகள்....



அவளும் அவர்களைப் போலவே பின்னால் வந்து ஒளிந்து கொண்டு பார்க்க ஆரம்பிக்க அவன் வண்டியை தவிர அனைத்துமே வருவதும் போவதுமாக முக்கியமாக அதில் படாமல் இருக்க இவள் தான் மீண்டும் மீண்டும் எடுத்து விட்டு வைக்க வேண்டி வந்ததில் கடுப்பின் உச்சிக்கே போனவள் அவன் வண்டி தூரத்தில் தெரியவும் ஒரேயடியாக குளிர்பிரதேசத்திற்கு சென்று விட்டாள்.



"டேய் அவன் தான்..." அவள் தூரத்தில் கை காட்டவும் வாண்டுகள் முறைப்புடன் எட்டிப் பார்க்கவும் சரியாக இருக்க அவனும் நெருங்கிய அதே நேரம் எதிர்பாராமல் இந்தப் பக்கமாக வந்த ஜீப் அவள் வைத்த வலையில் சிக்க வண்டி திடீரென நின்றதில் தலையில் கை வைத்தது வண்டிக்குள்ள இருந்தவனுங்க மட்டுமில்ல நண்பா நம்ம அம்மணியும் அவ ப்ரண்ட்ஸும் தான்.



"ச்ச... வண்டி நின்னுடுச்சு... கடுப்பாக ஓட்டிக் கொண்டிருந்தவன் மொழிய இடப்பக்க கதவை திறந்து கொண்டு இறங்கினான் ஒருவன்.



"அடக்கடவுளே.... இப்பிடி சொதப்பிடுச்சேடா" தலையில் கை வைத்து முகத்தை சுருக்கிக் கொண்டே அவன் இருப்பதை மறந்து மறைந்திருந்தவள் வெளியே வர அவளை அங்கு எதிர்பாராதவன் திடுக்கிட்டு அப்போது தான் தனக்கு சற்று முன்னே நின்ற வண்டியை பார்த்தான்.



"அடிப்பாவி... நேத்து வாங்குன அறையிலயே திருந்திடுவன்னு பாத்தா.... நல்ல வேலடா சாமி இந்த பஜாரி கிட்ட இருந்து தப்சுடேன்" பெருமூச்சு விட்டான் கிருஷ்.



.......



"வழில யாரோ பஞ்சர் நெயில்ஸ் வெச்சிருக்காங்கணா" குனிந்து பார்த்து விட்டு உள்ளே இருந்தவனிடம் சொன்னான் மற்றையவன்.



" ச்ச.... இப்போ என்ன பண்றது.... கால் பண்ணி வேற வண்டிய அனுப்ப சொல்லு.... " என்றவன் தானும் இறங்க அவன் கண்ணில் பட்டது ஓரமாய் வீற்றிருந்த மரம்.



"வா அங்க போயி உக்காந்துக்கலாம்" சொல்லி விட்டு அவன் நடக்கவே அவனுடன் இனைந்து நடக்க இருவரும் அப்போது தான் கண்டு கொண்டனர் அங்கே நின்று கொண்டிருந்த பெண்ணை....



" யாருடா இது.... இவ்வளவு அழகா இருக்கா"



"கமிஷ்னர் பொண்ணு ணா..."



"ஓஹோ... பொண்ணா... கொஞ்சம் அப்பாவ கேட்டுட்டு வந்துடலாம் வா"



அவர்கள் தன்னை நெருங்கி வர கிளம்பியவள், நடக்க ஆரம்பிப்பதற்குள் அவளிடம் வந்து விட்டிருந்தனர் அந்த ரவுடிகள்.



"ந்தாமா அதான் உன் கிட்ட வர்றோம்னு தெரியுதில்ல இரு" மறைத்தவாறு வந்து நின்றவர்களை நிமிர்ந்து முறைத்தாள் காரிகை...



" இன்னாடி முறைப்பு? "



"...."



"என்னா திமிரு.... திமிர அடக்கிடலாமா... டேய் தூக்குடா அவள" அவன் சொல்லி முடிக்க "அக்கா மேல கை பட்டுச்சு... கொன்றுவோம்" அரனாய் வந்து நின்று கொண்டன வாண்டுகள்.



"கொசுத்தொல்ல தாங்க முடிலடா... டேய் முதல்ல இவனுங்கள வண்டில தூக்கி போடு" அவன் சொன்ன அடுத்த நொடி அவர்கள் திமிரத் திமிர இரண்டு கையிலும் இருவர் இருவராக நாள்வரையும் அலேக்காக தூக்கியவன் வண்டியை நோக்கி செல்ல அவளிடம் திரும்பினான் மற்றையவன்.



"அச்ச்சோ இப்போ என்ன பண்றது டார்லிங்" கேட்டுக் கொண்டே அவன் முன்னேற அவள் நண்பர்களை பிடித்ததில் அதிர்ந்து மிரண்டிருந்தவள் பயந்து பின்வாங்க அவன் அவள் துப்பட்டாவை இழுத்து வீசிய அந்நொடி எங்கிருந்து வந்து தான் அவள் மானத்தை மறைத்து நின்றானோ!!!



கதிர்வேல் கிருஷ்ணா!!!!



சட்டென அவன் முதுகில் ஒன்ற முன் நின்றவனை முறைத்தவன் என்ன செய்தானோ அடுத்த நொடி துடித்துக் கொண்டே கீழே விழ காரில் சிறுவர்களை லாக் பண்ணி விட்டு வந்தவன் அவன் நிலைமையை பார்த்து மிரண்டு அவர்கள் கார் வரவும் அவசரமாக தூக்கிக் கொண்டு ஓட அவள் இன்னும் ஒன்றுவது புரிந்து கீழே ஓரமாக கிடந்த துப்பட்டாவை குனிந்து எடுத்தவன் கண்ணுக்கு கீழே பார்வையை தாழ்த்தாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அவள் மேல் அதை போர்த்தி விட்ட அந்நொடி... மொத்தமாக அவள் உயிர் அவனிடமே சரணாகதி அடைய அவன் முகத்தையே விழியெடுக்காமல் பார்த்திருந்தாள் காரிகை....



"ஆர் யூ ஓகே???"



"...."



"ஹோய்..." அவன் சொடக்கிட திடுக்கிட்டு விழித்தவள்



"தேங்க்ஸ்" தலையை தாழ்த்திக் கொள்ள வசீகரமாய் சிரித்தவனுக்கு அவள் குனிந்து கொண்டிருப்பது இதய மூலையின் ஓர் ஓரத்தில் ஏனோ பிடித்துத் தொலைத்தது!!!



"இரு வர்றேன்" நின்றிருந்த காருக்கு அருகில் சென்று அப்படியே விட்டுப் போயிருந்த சாவியை எடுத்து அன்லாக் பண்ணியவன் சிறுவர்களையும் வெளியே எடுத்து விட்டு அவளை பார்க்க



"சாரி" நாக்கை கடித்துக் கொண்டே அவள் கண்களால் கெஞ்சிய மேனரிசம் அழியா நினைவலையாய் தங்கிப் போனது காளையின் மனதிற்குள்!!!



((நண்பா திடீர்னு அவன் விழுந்தான்ல... அது வர்மக்கலை அப்பிடீங்குற ஒரு வகை தற்காப்பு பயிற்சிக்காக படிக்குற ஒரு கலை... நம்ம உடம்புல வர்மப் புள்ளிகள் அப்பிடீன்னு இருக்கு... அந்த இடத்துக்கு அழுத்தம் கொடுத்தோம்னா மரணிக்கவும் சான்ஸஸ் இருக்கு...



உதாரணத்துக்கு கழுத்து பகுதியில நாம கொடுக்குற அல்லது தாக்கும் போது ஏற்பட்ற அழுத்தம் ஒரு மனுஷன கோமா வரை கொண்டு போகும்...



இத யாராலும் குணப்படுத்த முடியாது... ஏன் நவீன மருத்துவங்களால கூட... தாக்கினவர் மட்டும் தான் அவன சரிப்படுத்த முடியும்... டைமிருந்தா தேடி படிச்சு பாருங்க...))



"போலிஸ் அண்ணா... நீங்க நல்லவரா இருக்கீங்க... அக்காவையும் எங்களையும் காப்பாத்தினதுக்கு நன்றி" பெரிய மனுஷனாய் மாறி விட்டார் நம்ம ஏழு வயசு பெரிய மனுஷரு சரண்.



"அது என் கடமை இல்லயாடா?" அவன் உண்மையில் அப்படித்தான் நினைத்தான்.



ஆனால் தன்னை கொள்ளை கொண்டவன் கடமைக்காகத் தான் உன்னை காப்பாற்றினேன் என்று சொன்னதில் அவள் முகம் கலையிழக்க பேச்சு ஆர்வத்தில் அவன் சரியாக கவனிக்கவும் இல்லாமல் போக கடுப்பானாள் பெண்...



"டேய் உங்க எல்லோரையும் அம்மா கூப்டாங்கடா" அவள் அள்ளி விட அடுத்த நிமிடம் மாயமாக மறைந்தவர்களை பார்த்து அதிர்ந்தவன் பக்கென சிரித்து விட்டான்.



"என் ஆப்புல அவனுங்க சிக்கிட்டானுங்க?" அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க கண்களை இறுக்க மூடினாள் பெண்.



"சாரி"



"எங்க உன் வண்டி? "



" அதான் சாரி கேக்குறேன்ல.. இப்போ எதுக்கு அது?"



"ஹாஹா பயப்படாத உன் டப்பா வண்டிய நா ஒன்னும் பண்ண மாட்டேன்" அசடு வழிந்தவள்



"ப்ரண்ட்ஸ்? " உடனே கையை நீட்ட சிரித்தவன் தானும் கை பற்றி குழுக்கினான்.



"அன்னக்கி அடிச்சதுக்கு சாரி ப்ளீஸ்"



" நானும் சரியா கவனிக்கல வர்ஷினி.. சாரி"



" அதான் ப்ரண்ட்ஸ் ஆகிட்டோம்ல... இனி நோ சாரி நோ தேங்க்ஸ்"



"ஓகே" உடனே ஒப்புக் கொண்டு சகஜமாக உரையாடியவனை இன்னுமின்னும் பிடித்தது பேதைக்கு...



"அப்போ நா கிளம்புறேன்... இனிமே இப்பிடி பண்ணாத... நார்மல் ரவுடிங்கனால சும்மா விட்டானுங்க... இல்லன்னா விளைவு ரொம்ப மோசமாயிடும்... "



"எதுக்குங்க பயம் காட்றீங்க? "



" ஓ... உனக்கு பயம் கூட வருமா?"



"போடாஆஆ"



"அதானே பாத்தேன் என்னடா இவ மரியாதையா பேசுறாளேன்னு"



"அடுத்தவங்கள கலாய்ச்சுகிட்டே இருக்கணுமா உங்களுக்கு?"



"அடுத்தவங்க கிட்ட சண்ட போட்டு கிட்டே இருக்கனுமா உனக்கு? " அவன் அவளை போலவே பேசியதில் போலியாக முறைக்க



"ஓகே ஓகே சரண்டர்... நா கிளம்புறேன்.. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு உங்க அப்பாவ பாக்க நாளைக்கு வர்றேன்... " அவன் சிறு தலையசைப்போடு கிளம்பி விட அவன் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள் சிரித்துக் கொண்டே கிளம்பி விட்டாள்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"பேட்லி மிஸ் யூஊஊஊ மம்மி" காலையில் மொபைல் அலறவும் எடுத்து காதிற்கு கொடுத்தவன் மறுமுனையில் தாயின் குரல் கேட்கவே அவரை பேச விடாது இவனே துவங்கினான்.



"இன்னும் எந்திரிச்சிருக்க மாட்டாரே மகாராஜா" தந்தை திட்டுவது நன்றாகவே கேட்க



"மா... தள்ளி வந்து பேசுமா... அந்த ஆளு குரல கேக்கவே முடில" பல்லை கடித்தான்.



"டேய்..."



"ஆமா இவரு பெரீய குரலழகன்... காலங்காத்தால ஏன்டி அவன் கூட பேசிகிட்ருக்க" தாயின் குரலையும் தாண்டி தந்தையின் குரல் உச்ச கடுப்பில் கேட்க



"மா அந்தாள ஏன்மா கல்யாணம் பண்ணிகிட்ட... ச்சேஹ் பேச கூட முடில" கடுப்பாக கத்தினான் மகன்.



"ஏங்க நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க... பொறந்த நாள் அதுவுமா அவன ஏன் திட்றீங்க? "



"அவன் பொறந்ததே வேஸ்டு... இதுல நாள்கணக்கு வேறயா?"



"அவரு பொறந்தது மட்டும் என்னமோ நாட்டுக்கு பேருதவியா இருக்கு... வந்துட்டாரு... " இம்முனையில் காய்ந்தான் மகன்.



"அவன சும்மா இருக்க சொல்லு சத்யா"



" முதல்ல அவர வாய மூடிட்டு கிளம்ப சொல்லுங்க மா... காத்து வரட்டும்"



" பாத்தியா எப்பிடி பேசறான்னு... கொஞ்சம் கூட மனுஷனுக்கு மரியாத தர்றானா பாரு"



" கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட்னு சொல்லுங்க மம்மி..."



"இதுல இங்கிலீஷு தான் ஒரு கேடு"



"நீங்க பேசுறதே இல்ல பாருங்க" இவனும் விடுவதாகவே இல்லை...



" இரண்டு பேரும் கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா... நீங்க வேலைக்கு கிளம்புங்க... நீ வை போன நா அப்பறமா பேசறேன்" துண்டித்தவர் கணவரை அனுப்பி விட்டு மீண்டும் மகனுக்கு அழைக்க



" எப்பிடிமா அந்தாளு கூட குடும்பம் நடத்தற? " எடுத்தவுடன் கேட்டான் மகன்.



"கண்ணா அப்பாவுக்கு அப்பிடீல்லாம் அந்தாளு வா போன்னு பேசாத டா... "



"அவரு மட்டும் மகன்னு பாசம் காட்றாரா மா? "



"என்ன தான் இருந்தாலும் அப்பால்லடா கண்ணா"



"சரீஈஈஈ சரீஈஈஈ... சென்டிமென்ட்டா பேசாத.... செட்டாகல"



"உன்ன.... " வாய் விட்டுச் சிரித்தான் மகன்.



"வீட்டுக்கு வாடா"



" லக்ஷ்மி மா விட மாட்றாங்க மா... நாளைக்கே வர்றேன்"



"ம் சரிடா... அப்பறம் இப்போவே கிளம்பி கோயிலுக்கு போற"



" ம்மாஆஆஆஆ.... கோயிலுக்கெல்லாம் போ முடியாது போமா" சிறு பிள்ளை போல் சிணுங்கினான் அந்த ஆறடி ஆண்மகன்.....



"இன்னிக்கு மட்டும் அம்மாக்காக போடா"



" ப்ளீஸ் மம்மி... "



"சரி போகாத"



"போய் தொலையுறேன்... மூஞ்ச அப்பிடி வெச்சுக்காத சகிக்க முடில" என்னவோ நேருக்கு நேர் பார்த்து பேசுவது போல் தான் இருந்தது அவர்கள் சம்பாஷணை...



"என் செல்லம்... உனக்கு புடிச்ச பொண்ணு கண்டிப்பா உன் கண்ணுக்கு தெரிவா"



" என்னமா ஜோசியம் ஏதாவது பாத்துட்ருக்கியா?"



"போடா... சொல்லனும்னு தோனிச்சுடா" அவர் ஆர்த்தியை மனதில் வைத்துக் கொண்டு சொல்ல அவர் வாக்கு அன்றே பழித்து விடப் போவதை அறியவே இல்லை அவர்...



இரவு அவனுக்கு பார்ட்டி வைத்து நேரம் சென்றே தூங்கியிருந்த நண்பர்கள் அவசர வேலையாக காலையிலேயே கிளம்பி இருக்க ஆயத்தமாகி கீழே வந்தவன் லக்ஷ்மியிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.



......



"டிங்ங்ங்ங்" அவன் கோயில் வாசலில் கால் வைக்கும் போதே பெரிதாக கோயில் மணியோசை கேட்க நிமிர்ந்து பார்த்தவனிற்கு பின்புறமாக கூந்தலை பரிசாக காட்டிக் கொண்டு நின்றிருந்தாள் காரிகை!!!



தாயின் வாக்கு செவிப்பறையில் மோத புன்னகைத்துக் கொண்டவன் மீண்டும் நிமிர்ந்து பார்க்க இருந்த இடத்தில் இல்லை அவள்...



'யாரா இருக்கும்... எங்க போனா' மனம் தேடச் சொல்லி உந்த கண்களால் அலசியவனுக்கு தூரத்தே அவள் நின்றிருப்பது கண்ணில் பட கடவுளை ஒரு முறை திரும்பிப் பார்த்தவன் மீண்டும் அவளிடம் திரும்ப இம்முறையும் அவள் இல்லை...



'என்னடாது... நமக்கே டிமிக்கி காட்றா' ஏனோ அவள் முகத்தை பார்த்திட சுவாரஷ்யம் கூடவும் மீண்டும் கண்களை நாளா புறமும் அலசியவன் குளக்கட்டுக்கு அருகே அவள் செல்வது கண்டு விரைய யாருடனோ மோதி இவன் திரும்புவதற்குள் மீண்டும் மாயமாகி இருந்தாள் பெண்...



'கடவுளேஏஏ.... இங்கேயும் சோதனையா' மனதிற்குள் புலம்பித் தீர்த்தவன் மீண்டும் கேட்ட கோயில் மணி ஓசையில் சடாரென திரும்ப அவள் மதிமுகத்தின் அழகை ரசிக்கத்தான் அந்த சூரியனும் அவளை நோக்கி திரும்பி இருந்ததோ!!!



அவளுக்கும் கண்கள் கூசிற்று போலும்!!!



கண்களை இறுக்க மூடித் திறந்தவள் சற்றே தள்ளி வந்து நிமிர



"அக்கா...." எங்கிருந்தோ ஓர் குரல் கேட்கவும் "தோ வர்றேன்" சிரித்தவளின் அந்தப் புன்னகையில் மொத்தமாக வீழ்ந்து போனான் எ.ஸி.பி....



"வரூ...." இதயம் தாளம் தப்பியதில் பெண்ணவள் பெயரை அவன் முணுமுணுக்கவும் அவன் பேசுவது கேட்டு விட்டதோ பேதைக்கு....



திரும்பிப் பார்த்து அவனை காணாது தலையாட்டி சிரித்து விட்டு திரும்பி நடந்தாள் அமிர்தவர்ஷினி.



'வரூஊஊஊஊஊ' மனம் கூக்குரலிட இம்முறை வசீகரமாய் சிரித்துக் கொண்டே கடவுளை பார்த்தவனுக்கு அவரும் அவனை பார்த்து சிரிப்பது போலவே தோன்றிற்று!!!



.......



பைக்கை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தவனின் மனம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்ததென்றால் அது மிகையாகாது.



'தேங்க் யூ மம்மி.... லவ் யூஊஊ' ஓரமாக வண்டியை நிறுத்தியவன் பார்க் பண்ணி விட்டு இறங்க வாசலிலேயே நின்றிருந்தாள் பெண்...



'வந்து புடவ கூட மாத்திட்டாளா' யோசித்துக் கொண்டு நின்றவனை



"ஹாய்" அவள் உட்சாக குரல் கலைக்க

'கோயில்ல என்ன ஒரு அடக்கம்' நினைத்துக் கொண்டவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.



ஏனோ அவளை கோவிலில் புடவையுடன் அதி முக்கியமாக அந்த புன்னகையுடன் பார்த்த போது மனதிற்குள் ஏற்பட்ட தாக்கம் அவளை சுடிதாரில் பார்க்கும் போது வர மறுத்தது.



"வாங்க எ.ஸி.பி சார்.... அப்பா உள்ள தான் இருக்காரு" அவன் எதுவும் பேசாமல் உள்ளே நுழைய



"ஹேப்பி பர்த்டே" கையை நீட்டியவளை ஆச்சரியமாக பார்த்தான் கிருஷ்.



"கோயில்ல பாத்ததா ராஜ் சொன்னான்"



'லூசு... அப்போ இவ என்ன பாக்கலயா... திரும்பி பில்டப் எல்லாம் கொடுத்தாளே.... நானும் என்னவோன்னு நெனச்சுட்டேன்' மனதிற்குள் திட்டியவன்



"ஆமா நீ ஏன் கோயிலுக்கு வந்த? " கையை பற்றி குழுக்கிக் கொண்டே கேட்டான்.



" அதுவா... அம்மா..." எனும் போதே விக்ரம் ஹாலுக்கு வர அவசரமாக கையை விலக்கியவன் உள்ளே சென்று விட இவளும் வெளியேறி விட்டாள்.



............................................................



அதன் பிறகு தந்தை வலுக்கட்டாயமாக மகனை அழைக்கவும் உச்ச கட்ட கடுப்பில் தான் சென்னை சென்றான் கிருஷ்ணா....



அதுவும் அவளிடம் காதலை தெறிவிக்க அவன் நேரம் பார்த்துக் கொண்டிருந்த அந்த இடைவெளி மற்றும் கேஸின் கடைசி கட்டம் என்ற இடைநடு நேரங்களில் தந்தை அழைத்து விட்டதால் உண்மையில் வெறுத்துப் போனது காளைக்கு...



அதன்பிறகு அம்மா அப்பா அண்ணன் எல்லோரையும் பறி கொடுத்து முடித்து அன்று மூவரின் பெயரிலும் அர்ச்சனை செய்வதற்காக கொல்கத்தா போனவன் தான்....



அன்றும் தன் மாமன் மகளை பறி கொடுக்க நடந்த சம்பவங்களில் சுத்தமாக அவளை மறந்தே போயிருந்தவன் அன்று தான் பார்த்தான் அவளை!!!



ஆர்த்தியை குத்தியவன் தப்பித்து ஓட அவன் முகத்தை இவன் பார்க்கத் திரும்ப எதிரே கோவிலுக்கு வெளியே நின்று அவனை அவள் தைரியமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்ததை இவன் பார்த்த நொடி அவள் உதவிக்காக மண்டியிடக் கூட தயங்க மாட்டேன் என்று தான் இருந்தான்.



கடைசியாக ஐ.சி.யுவில் மாமன் மகள் கேட்ட உதவியும் அது தானே!!!



"மா... மா...."



"பொம்ம..."



"எ.. எனக்கு ஒரு க..கடைசி ஆ... ஆச"



"நீ வா... அப்பறம் பேசலாம்"



"இல்ல... நா பிழைக்க மா.. மாட்டேன்னு எனக்கு தெரியும் மாமா.... அ... அதனால... என் ஆர்கன்ஸ... தானமா கொடுத்துடு மாமா"



"முடியாது முடியாதுஉஉ"



"முக்கியமா... நா... நான் வரும் போது ஒ... ஒருத்தங்களுக்கு ஹார்ட் வே... வேணும்னு பே... பேசி கிட்டாங்க... அவங்களுக்கு எ... எ... என் ஹார்ட்ட கொடுத்து... அ... அவங்கள பாத்துக்க மா... மா... நா உ.. உன் கூட.. இ... இருக்க ஆசப்பட்றேன் மா... மா"



"லூசாடி நீ... இடியட்... "



அவள் சொன்னது போலவே அங்கே ஒரு பெண்ணுக்கு ஹார்ட் தீவிரமாக தேடிக் கொண்டிருக்க மனதை இரும்பாக்கியவன் அதை கொடுக்க கைச்சாத்திடும் போது தான் தெரிந்தது அது கொடுக்கப் போவது அவளவனுக்கென்று....



உலகம் தட்டமாலை சுற்ற அப்போது கண்டவளுக்கு என்ன நடந்ததென யூகிக்க கூட முடியாத நிலையில் தொப்பென அமர்ந்தவன் இப்போது இவளுக்காக அழுதான்.



மணித்தியாலங்கள் கடக்க தன்னை திடப்படுத்திக் கொண்டு எழுந்தவனுக்கு உலகம் இருண்டது.



எந்த வழியில் நுழைவது யாரை நம்புவது தங்கையை எப்படிக் காப்பது எதுவுமே புரியாத நிலையில் தங்கையை நண்பன் ஒருவனின் பாதுகாப்பில் இருக்குமாறு வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தவன் நேரே சென்றான் தன்னவளை தேடி...



ஆனால்.... அவள் அங்கு இல்லவே இல்லை.... அங்கு அல்ல அவள் எங்குமே இல்லை....



விசாரித்ததில் வந்த பதில் இதுதான்.

"அந்த பொண்ணோட அப்பாம்மா இறந்துட்டாங்க சார்... அவங்களுக்கு ஹார்ட் ஆப்பரேஷன் பண்ணி அவங்களும் பொய்ட்டாங்க"



வீட்டிற்கு தேடிச் சென்றவனை பார்க்கவே விடவில்லை அவள்!!!



"உங்க அத்த பொண்ணோட சாவுக்கு காரணமானவனோட போட்டோவ என்னால கொடுக்க முடியாது சார்... நீங்க கிளம்பலாம்" நெருப்புத் துண்டங்களாய் வந்து விழுந்த வார்த்தைகளில் அவன் காதலும் சேர்ந்து கருகிப் போக மனம் இன்னுமின்னும் இறுகிப் போனது.



அவன் அதற்காகவா அவளை தேடிச் சென்றான்???



இரண்டு மாதங்கள் கடந்திருக்கும்... மீண்டுமொருமுறை காண நேர்ந்தது அவள் பாதையோரமாக மயங்கிக் கிடக்கையிலே!!!



மனம் பதறித் துடிக்க தூக்கியவன் ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு காத்திருக்க அடுத்த அதிர்ச்சி!!!



அவனை அவளுக்கு அடையாளமே தெரியவில்லையாம்!!!



'உன் கூடவே வெச்சிக்க மாமா' ஆர்த்தியின் வார்த்தைகளுக்காக அவளிடம் பேசி ரக்ஷனை ராஜாவிடம் பேசச் சொன்னவன் நடந்ததை கூற மகளின் இதயம் அந்தப் பெண்ணுக்குள் தான் இருக்கிறதென்பதை ஜீரணித்துக் கொள்ளவே சில கணங்கள் தேவைப்பட்டது அவர்களுக்கு...



அவள் மிரண்டு விழிக்க வாஞ்சையாய் தலையை தடவிய லக்ஷ்மி தேவியின் அன்பில் உருகித் தான் போயிற்று பெண்ணவளுக்கு...



அப்படித் தான் அவர்களுக்கு அவள் மகளாய் சென்றதும் அவளுக்கு எதுவுமே தெரியவில்லையென கதிரிடம் கேட்டதும்...



இடையில் அன்று ஹார்ட் கொடுத்ததற்காக அவர்கள் நன்றி சொல்ல அழைத்திருக்க அந்தோ பரிதாபம் அடுத்த அதிர்ச்சி!!!



ஆர்த்தியின் இதயம் வர்ஷினிக்கு கொடுக்கப்படவில்லை இந்தப் பெண்ணுக்குத் தான் கொடுக்கப்பட்டது என ஷாலினியை காட்ட தூக்கிவாரிப் போட்டது காளைக்கு....



இப்போது என்ன செய்வது???



நீங்கள் யாரென ஷாலினி கேட்ட கேள்விக்கு மாமா என தான் பதிலளித்தான்.



அந்த இதயத்திற்கு அது தான் உண்மை!!!



இதை நிச்சயமாக வீட்டிலுள்ளவர்களும் தாங்க மாட்டார்கள் அவனவளும் தாங்க மாட்டாள்.



அதனால் மறைக்க மொத்தப் பழியும் அவன் மேல் வந்து விழவும் எல்லோருக்குமே கெட்டவனாகிப் போனான்.



அவள் மேல் காதல் இருந்தும் கைகள் கட்டப்பட்ட நிலை.... அவள் அன்று அப்படிச் சொன்னது... தன்னையே மறந்து போனது என அனைத்தும் அவன் காதலை மரித்துப் போகச் செய்ய மிருகமாகத் தான் தெரிந்தான் அவனவளின் கண்களுக்கு!!!



ஷாலினியை கண்டால் அவள் இதயம் தன்னவளிடம் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் அலைகழிக்கத் துவங்க மனைவியின் முகத்தை பார்த்தாலே அது தான் ஞாபகம் வந்து தொலைக்கவும் முழு மிருகமாகத் தான் மாறுவான் அந்நொடி!!!



அவன் எப்படி அவளிடம் நடந்து கொண்டாலும் அவள் முகத்திலிருக்கும் அந்தப் புன்னகை வாடுவது எந்நிலையிலும் அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது.



காதல்!!! காதல்!!! காதல்!!!



உயிராயிருப்பவன் எப்போது மாறப்போகிறான்!!!



***



"ஏன் மா இப்பிடி பண்றாங்க... பொம்மைய என் கிட்ட இருந்து பிரிச்சிட்டானுங்களே மா... இப்போ எல்லோர் கிட்டவும் என்னமா சொல்லுவேன்.... ஐயோ சத்தியமா என்னால வாழ முடில மா... எனக்கு இந்த வாழ்க்க பிடிக்கலமா... ப்பா... அர்ஜு.... நானும் உங்க கூடவே வந்திருக்கலாமே மா.... முடில மா... நானும் எத்தன தான் மா தாங்குவேன்... கு... குட்டிமாவ பாதுகாப்பேனான்னு எனக்கே பயம் வந்துடுச்சு மா.... அவ மட்டும் இல்லாம போனா நான் எந்த விதத்திலயும் தகுதி இல்லாதவனா போயிடுவேன் மா... குடும்பத்துல கடைசியா சாகறவன் நானா தான் மா இருக்கனும் குட்டிமா பத்தறமா இருக்கணும்மா" ஷாலினியை கட்டிப் பிடித்து கதறித் தீர்த்தான் கதிர்வேல் கிருஷ்ணா!!!!



தொடரும்.....



04-08-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27293

அத்தியாயம் 08 [ A ]



"மச்சான்" நடந்த சம்பவத்தில் அதிர்ந்து நின்றிருந்த மக்கள் ரக்ஷனினதும் அபியினதும் பதற்றக் குரலில் தான் சுயநினைவுக்கே வந்தனர்.



அழுது கொண்டிருந்தவனுக்கு நண்பர்கள் குரல் கேட்டதும் இன்னுமே துக்கம் தொண்டையை அடைத்ததுவோ....



எப்படி சமாளிப்பான்... யாரென்று கூறுவான்??



கூறிவிட்டால் அவனவளின் நிலை... அவள் முற்றாகவே உடைந்து போவதை பார்க்கும் சக்தி அவன் இதயத்திற்கு அல்லவே!!!



பெற்றோரை கொடுத்து விட்டு பொம்மையை குழந்தையிடமிருந்து பறிப்பது போல் பறித்து விட்டானென்றல்லவா ஆகும்???



அவனுக்கு வழியே இல்லை... இருந்தாலும் சொல்லியே ஆக வேண்டும்... நினைத்தவனுக்கு தொண்டையிலிருந்து வார்த்தைகள் வர மறுத்து சண்டித்தனம் செய்ய தன்னை கட்டுப் படுத்திக் கொள்வதே அவளவனுக்கு பெரும் சவாலாய்...



மீண்டும் ஜீப் கதவு பலமாக தட்டப்பட கஷ்டப்பட்டு தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அவளை விட்டு விலகியவன் கதவை திறந்து கொண்டு இறங்க



"மச்சான் என்னடா ஆச்சு?" பதறினர் நண்பர்கள்...



"ஷா... ஷா... ஷாலினிய தூ.. தூ... க்... கிட்டானுங்க" அழுகையை அரும் பாடு பட்டு தனக்குள் அடக்கியன் கூறி முடிக்க



"வாஆஆட்" ஒரு சேர அதிர்ந்து கத்தினர் இருவரும்...



"பட் எப்பிடி?" அபி தான் கேட்டான்.



"பார்க் பண்ண நின்ன நொடி புல்லட் மண்டைல இறங்கிடுச்சு" வெளியே வெறித்தவன் மறுபக்கம் முகத்தை திருப்ப நடந்தது என்னவென ஊகிக்க முடியாமல் உள்ளே எட்டிப் பார்த்தவர்களுக்கும் அவள் கண் மூடியிருந்த நிலை கலக்கத்தை கொடுக்க நகர்ந்து நின்றாலும் ரக்ஷனுக்கு சற்றே குற்றவுணர்வாயும் இருந்தது.



'உதாசீனப்படுத்தாமல் இருந்திருக்கலாமோ???'



"மச்சி... நா ஸ்டேஷன்ல எப்.ஐ.ஆர் பைல் பண்ண சொல்லிட்டு வந்தட்றேன்... நீ அவன பாரு" நண்பனை ஒரு பார்வை பார்த்து விட்டு அபி கிளம்ப குமரனும் வர்மனும் வந்து சேரவே தான் ஆசுவாசமானான் ரித்விக்.



"என்னாச்சு?"



"ஷாலினிய போட்டுட்டானுங்க" சுரத்தே இல்லாமல் ரக்ஷன் சொல்ல "வாடாஆட்" இம்முறை அதிர்ந்து கத்துவது வந்த இருவரின் முறையாயிற்று....



" யாரு? " கேட்ட வர்மனை ஒரு பார்வை பார்த்து வைத்தான் ரக்ஷன்.



பின்னே அது தெரிந்தால் அவன் ஏன் சும்மா இருக்கப் போகிறான்???



"சாரி ரக்ஷன் பையா" நாக்கை கடிக்க தலையிலடித்து விட்டு நண்பன் தோள் தொட்டு தன் புறம் திருப்பினான் குமரன்.



"கதிர் வீட்டுக்கு கிளம்பு மச்சான்" தன் தோளிலிருந்த கையை தட்டி விட்டவன் திரும்பி உயிர் நண்பனை பார்க்க



"குமரா நீ அவன் கூட கிளம்பு... நானும் வர்மாவும் பாடி செக் அப் முடிச்சுட்டு வந்தட்றோம்" என்றான் நண்பனின் பார்வையை உணர்ந்தவனாய்...



***



"சாரி அண்ணி... நா அவங்க கிட்ட அப்பிடி நடந்து கிட்டு இருந்திருக்க கூடாதுல்ல?" தன் மடியில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த யாழினியின் தலையை பாவையின் கை வருடிக் கொண்டே இருந்தாலும் கால் மேல் கால் போட்டு எங்கோ வெறித்து அமர்ந்திருந்த கணவனிலேயே நிலைத்திருந்தன கண்கள்....



வீட்டை விட்டு போகும் போது அவன் முகத்தில் இருந்த கனிவு வீட்டுக்குள் வரும் போது சுத்தமாக துடைத்தெறியப்பட்டிருக்க அவளை திரும்பிக் கூட பார்க்காத அவன் செய்கை உள்ளுக்குள் பயப்பந்தை உருளச் செய்து கொண்டிருந்தது.



"அண்ணி... ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணி..." சட்டென கலைந்து



"கவலப்படாத யாழ்" ஆறுதலளிக்க முயன்றாள் பெண்...



"இல்ல அண்ணி.... அண்ணா அப்போவே சொன்னாங்க அவங்க மரியாத தரலேன்னாலும் நாம கொடுக்கணும்னு... இப்போ என்ன ஆகி இருக்கு பாத்தீங்களா... எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு... "



" அப்பிடில்லாம் எதுவுமில்லமா.... நீ வேணும்னு பண்ணலல்ல... இதுல கில்டியா பீல் பண்ண என்ன இருக்கு? அண்ணாக்கு நீ தானே ஆறுதலா இருக்கனும் யாழ்... நீயே அழுதுகிட்ருந்தா என்ன அர்த்தம் மா?"



"...."



"முதல்ல இந்த தண்ணிய குடி... அழறத நிறுத்து" அவளை விலக்கி தண்ணீரை புகட்ட பாவையின் கண்களிலிருந்தும் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்த கண்ணீரை துடைத்து விட யாழினியை பார்த்து புன்னகைத்த அந்த சிரிப்பில் தன் அழுத்தங்களே மறந்து போனது யாழினிக்கு....



"தேங்க் யூ அண்ணி.... " அவளை கட்டிக் கொண்டவளின் மனம் அன்பில் திளைத்திருந்தது.



அவளை எரித்து விட்டு கதிர் மட்டுமே வந்திருக்க அப்போது தான் உள்ளே நுழைந்தனர் அனைவரும்....



யாருக்கும் அவள் யாரென்றே தெரியாததனால் அவ்வளவு பெரிதாக தாக்கம் எதுவும் இல்லாமலிருக்க கதிர் இவ்வளவு கலங்குவதற்கான காரணம் தான் யாருக்கும் புரியவே இல்லை...



"மச்சி.... நீ இவ்வளவு ஹேர்ட் ஆகுறன்னா ஷாலினி உன் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியாமனவளாடா?" அரித்துக் கொண்டிருந்த கேள்வியை அபியே கேட்டு விட அதிகமாக அதிர்ந்து போனது கதிர் மட்டுமல்ல அவன் மனையாளும் தான்...



அவளை தவிர அனைவருமே அவனுக்கு முக்கியமானவர்கள் தானா???



"ஆமா" நெஞ்சம் படபடக்க கணவனையே பார்த்திருந்தவளுக்கு அவன் சொன்ன வார்த்தைகளில் மனம் கனத்தது.



"ஆமான்னா யாரு அவ?" இம்முறை ரக்ஷன் வர்ஷினியின் கசங்கிய முகத்தை பார்த்து சற்று அழுத்தமாகவே கேட்டான்.



"சொல்லு கதிர்" குமரனும் சேர்ந்து கொள்ளவே ஆழப்பெருமூச்செடுத்து தன்னை சமன் செய்து கொண்டவன் அடுத்து சொன்ன வார்த்தைகளில் அனைவரும் ஸ்தம்பிக்க இரண்டடி பின்னால் நகர்ந்தான் அபி.



"பொம்மையோட ஹார்ட் ஷாலினிக்குள்ள தான் இருந்துது"



அங்கே கனத்த மௌனம் நிலவ குழம்பினாள் பாவை...



'பொம்மை யாரா இருக்கும்' நெற்றி சுருக்கவே



"அப்போ இவ்வளவு நாளா எங்கள எல்லாம் ஏமாதிட்டு இருந்தியாடா நாயே?" அண்ணன் ஆவேசமாக கணவன் சட்டையை பிடித்ததில் பயந்து சடாரென எழுந்தாள் பெண்...



" அபி... விடு அவன... " "என்ன பண்ற ஆதி...?" "மாமாஆஆ" "அண்ணா...." "பையா..." ரக்ஷன், குமரன், யாழினி, வர்ஷினி மற்றும் வர்மனின் குரல் மாறி மாறி கேட்டாலும் அழுத்தமாக நண்பனையே பார்த்திருந்தவன்



"சொல்லுடா.... இவ்வளவு நாளா அம்முக்கு தான் ஹார்ட் கொடுக்கப்பட்டிருக்குன்னு எங்கள எல்லாம் ஏமாத்தினியா?" மீண்டும் உலுக்க கண்கள் தெறித்து விழுமளவு அதிர்ச்சியுடன் அண்ணனையே பார்த்திருந்தாள் அவனவள்....



அவனிடம் எதற்குமே பதில் இல்லவே இல்லை....



அவன் முகத்தை பார்க்க சங்கடப்பட்டவனாய் கண்களை இறுக்க மூடி மறுபக்கம் திரும்ப



"இவ்வளவு நாளா எங்க குடும்பம் துரோகம் பண்ண பண்ணன்னியே.... இதுக்கு பேரு அப்போ துரோகமில்லல்ல மிஸ்டர். கதிர்?" கோபத்தில் வார்த்தைகள் தெறிக்க அவன் கண்களும் அவனையே முறைத்துக் கொண்டிருந்தாலும் வாயை மட்டும் திறந்தானில்லை அந்த ஆறடி ஆண்மகன்....



"உங்க அகராதியில இதுக்கு வேற அர்த்தமோ.... ஆமா யாருடா இவ.... அன்னிக்கு கூட அனாதன்னியே இவ அனா... " அவன் கேட்டு முடிக்கு முன்



" ஏய்...." கண்கள் இரத்தமென சிவந்திருக்க கர்ச்சனையுடன் எழுந்து அவனை தள்ளி விட்டான் கதிர்.



"உண்ம அதானே..... அதனால தானே கோபம் வருது... இனிமே உன் கிட்ட எனக்கென்னடா பேச்சு.... உன் ப்ரண்ட்ஷிப் கிடச்சதுக்காக எத்தனையோ நாள் கடவுள் கிட்ட நன்றி சொல்லி இருக்கேன்.... ஆனா இப்போ சொல்றேன் கேட்டுக்கோடா.... அப்பிடி உன் கிட்ட தான் ப்ரண்டா இருந்திருக்கேன்னு நெனக்கிறப்போ என்ன நெனச்சா எனக்கே வெக்கமா இருக்கு..... ச்சேஹ்" கோபப்பட்ட ரக்ஷனையும் நெஞ்சில் கை வைத்து தள்ளி நிறுத்தி விட்டே அவன் வெளியேற தன் இருக்கையில் தொப்பென அமர்ந்து விட்டான் கதிர்வேல் கிருஷ்ணா....



((தங்கள் வாக்குவாதத்தில் உள்ளம் அதிர நின்றவளுக்குள் ஏற்பட்ட வலியை அங்கு யாருமே உணர்ந்திருக்கவில்லை என்பதுவே நிஜம்))



***



தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் கதிர்...



அபியை சமாதானப்படுத்துவதை விட அந்த ராமை அழித்தே தீர வேண்டும் என்பதே மனம் உந்திக் கொண்டிருந்ததில் அனைத்தையும் தனக்குள் போட்டு புதைத்துக் கொண்டவன் யோசித்துக் கொண்டே நடக்க திடீரென கேட்ட கோபக் குரல் சட்டென தேக்கியது நடையை....



"முடியாது...." சந்தேகமே இல்லை அது அவன் குரலே தான்....



மனம் இருந்து விடக் கூடாதே என வாதாடினாலும் கால்கள் அதன் வேலையை செய்ய அரவம் எழுப்பாமல் பேசிக் கொண்டிருந்தவனின் பின்னால் போய் நிற்க



"அதான் இவ்வளவு நாளா நீங்க சொன்னது எல்லாம் பண்ணேன்ல டாட்.... இன்னிக்கு கூட ஷாலினி கூட போயிருக்கான்னு நீங்க கேட்டதுனாலதானே சொன்னேன்..... உங்களுக்கு மனசாட்சிங்குறதே கிடையாதா.... அவள எதுக்கு கொன்னீங்க.... அவளால என் நண்பன்ல இடிஞ்சு போயிருக்கான்... ப்ளீஸ் டாட்.... எதுவும் பண்ணிடாதிங்க உங்கள கையெடுத்து கும்புட்றேன் அவனுக்கு துரோ..... " மொபைல் தூரப் போய் விழுந்ததில் அதிர்ச்சியாக திரும்பினான் அவன்....



ரித்விக் ரக்ஷன்!!!



துரோகம்!!!

இனி எழும்பவே முடியாத அளவு பெரிய அடியைத் தான் வைத்திருந்தது அவன் வாழ்க்கை!!!



மாமன் மகன் அபியாக இருந்தாலும் அவனை விட இவனைத் தானே நம்பித் தொலைத்தான்!!!



சாப்பிட்டாயா என்று கேட்பது தொடக்கம் யாரிடமும் சொல்லாத இரகசியங்களை கூடச் சொன்னானே???



என்ன தான் அவனை கடுப்பேற்றிக் கொண்டிருந்தாலும் உயிருக்கும் மேலாலல்லவா வைத்திருந்தான்...



முதன் முறை தான் அநாதையென சொன்ன போது அபியுடனும் என்னுடனும் இருந்து கொள் என வீட்டிற்கே அழைத்து வந்து தன் குடும்பத்தையே ஏன் தாய் தந்தையை கூட அவனுக்காகத் தானே விட்டிருந்தான்...



தன்னை போலவே தன் உறவுகளை அவன் அழைக்கும் போது எவ்வளவு சந்தோஷப்பட்டிருக்கிறான் யாருமே கொடுக்காத ஓர் பரிசை உயிர் நண்பனுக்கு அளித்திருக்கிறோமென...



எல்லாம் தூக்கியெறியப்பட்டு விட்டதா???



அபியின் வார்த்தைகளில் பொம்மையின் பிரிவில் வராத வலி இதயத்தை தாக்க சுளீரென இதயவோரம் வலிக்கவும் நெஞ்சுப் பகுதியை இறுக்கப் பற்றியவன் அவனை நிமிர்ந்து பார்த்த பார்வை...



அவன் தள்ளாட எங்கே விழுந்து விடுவானோ என நினைத்து கையை நீட்டிய ரக்ஷனை பார்த்து



"நீ... நீ கூ..ட எனக்கு உண்மையா இருக்கலியே மச்சான்... உன்ன நான் ப்ரண்டா மட்டும் பாக்... கல்லியேடா... அப்பாம்மா அர்ஜு சாவுல கூட உன்ன தவிர மத்தவங்கள தானேடா சந்தேகப்பட்டேன்... நீ... நீ அனாதைன்னு சொன்ன அந்த நொடியில இருந்து உனக்கு நா இருக்கேன்னு நெ... நெஞ்ச நிமித்தி கிட்டு நின்ன என் முதுகுல குத்திட்டியே... உன்ன நா கொல்ல வந்தவன்... உன் குடும்பத்த அழிக்க உதவி பண்ணவன்னு சொ... சொல்லியிருந்தா கத்திய எடுத்து என்ன கொல்லுன்னு நெஞ்ச காட்டி இருப்பேனே... உயிர கொடுத்தாவது உன்ன துரோகியாக விட்டிருக்க மாட்டேனே ம.. மச்சான்... ரொ... ரொம்ம்ம்...ப வ... வலிக்குது ரக்ஷன்... ஆழமா குத்தி இருக்கடா... நா.. நா... அப்பிடி என்ன பண்ணிட்டேன்... உனக்கு நண்பனா வந்தது தான் எ... என்னோட த... தப்பா... எப்பிடி மச்சான் முடிஞ்சுது உன்னால... குட்டிமா பாதுகாப்பா உன் கிட்ட மட்டும் தான் இருப்பா... அப்பிடிங்குற நம்பிக்க கூட இருந்துதுன்னா நா... நா உ.. உன்ன எந்த... அளவு நம்பி தொலச்சிருக்கேன்... எல்லாம் நடிப்பு... என் மேல அன்பு காட்னது... என் மேல பாசம் காட்னது... ஏன்... க... க.. கடைசியில... எ... எனக்காக நீ துடிச்ச ஒ... ஒவ்வொரு நொடியும்... எனக்காக எப்போவும் நீ இருப்பன்னு நெனச்ச ஒவ்வொரு நொடியும் நடிப்... நடிப்பா போயிடுச்சுல்ல ம... மச்சான்... ரொம்ப நம்பிட்டேன் போலடா உ... உன்ன... அதான் நெஞ்சு ரொம்ப ஆழமா வலிக்குது.... ப்ளீஸ் என் கண் முன்னாடி நி... நி.. நிக்கதடா... என் கையால நானே உன்ன கொன்றுவேன்... நா இந்த ஜென்மத்துல உன்ன பாக்க கூடாது... ப்ளீஸ் போடா... உன்ன கையெடுத்து கும்புட்றேன் மச்சி.... எ... என்ன விட்டு போயிடு.... " நெஞ்சு மீண்டும் சுளீரென வலியெடுக்க இடக்கையால் அழுத்தியவன் அப்படியே கீழே விழ துடி துடித்துப் போனான் நண்பன்....



" ம... மச்சான் "



"ம.. மச்சான்னு நீ கூப்புட வேண்டிய அவஷியம் இல்ல ரித்விக்... ப்ளீஸ் கிளம்பு... நா சாக மாட்டேன்... உன் துரோகத்துல ஏற்கனவே செத்து கிட்டு தானே இருக்கேன்... நீ போ"



"இல்ல நா உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன்... உன் கூட தான் இருப்பேன்... நா உனக்கு துரோகி கிடையாது மச்சான்... நா சொல்றத கேளுடா... நீ எந்த அளவு என்ன நம்புனியோ அதே அளவு நம்பிக்க தான்டா நானும் வெச்சிருக்கேன்... எப்போவும் நா உனக்கு ப்ரெண்டு தான்டா.... தூக்கி எறிஞ்சிடாத மச்சி... வலிக்கும்டா...." கதறி அழுதவனையே வெறித்தன கதிரின் கண்கள்....



"ராம் என்னோட அப்பாவா இருந்தாலும் என்னைக்குமே அந்த நாய அப்பிடி நெனச்சதே இல்லடா.... உன் உறவ தான்டா நானும் உறவா ஏத்துகிட்டு இருந்தேன்... ஏன் மச்சான் இப்பிடில்லாம் பேசுற... நா சொல்ல வர்றத கொஞ்சம் கேளு ப்ளீஸ்.... " கதறி அழுதவனுடன் சேர்ந்து தானுமே அழுதான் கிருஷ்ணா...



"என்ன விட்டு போயிடு மச்சான்... இன்னொரு கொல பண்ண வெச்சுடாதடா... ப்ளீஸ் போடா.... " மண்டியிட்டு அழுது கொண்டிருந்தவனின் நெஞ்சில் கை வைத்து தள்ள மீண்டுமே நண்பனிடமே வந்தான் ரக்ஷன்....



" இ... இல்ல இல்ல நா போ மாட்டேன்... நா போனா உன்ன கொன்னுடுவாங்கடா... புரிஞ்சிக்கோ கிருஷ்... "



"எனக்கு எதுவும் தேவயில்ல... நா செத்தா உனக்கென்னடா... அதான் உயிரோட புதச்சிட்டியே?"



"கிருஷ் நா சொல்ல வர்றத கேளுடா... உனக்கு போய் துரோகம் பண்ணுவேனாடா நான்...நீ...நீ... ஒரு தடவ வர்மம் மூலமா ஒருத்தன செயலிழக்க வெச்சல்ல... அது ராமோட பையன் தான்டா... எனக்கு அண்ணன்... அவன் செத்துட்டான்... ராமுக்கு என்ன விட அவன் மேல தான் பாசம்... ஏன்னா அவன் ராம போல அடுத்தவங்களுக்கு அநியாயம் பண்ணிகிட்டே தான் இருப்பான்... அவன் செத்தத ராமால தாங்கிக்க முடில... அப்போ தான் ஆரம்பிச்சுது இந்த பகை... நா உன் ப்ரண்டுன்னு தெரிஞ்சதும் அம்மாவ கடத்திட்டு என்ன மிரட்டினான்... நா முடியாதுன்னு சொல்ல கண் முன்னாடியே இன்னொரு பொண்ணோட குடு... குடும்பம் நடத்தி கொன்னுட்டு நீ முடியாதுன்னு சொல்லிட்டே இருந்தீன்னா தினமும் ஒவ்வொரு பொண்ணுங்க சாவாங்கன்னு சொன்னான்... அவங்கள காப்பாத்தி அம்மாவையும் காப்பாத்த எனக்கு வேற வழி தெரில மச்சான்... பட் சத்தியமா அப்பா (ஷக்திவேல்) சாவுக்கோ அம்மா அர்ஜு சாவுக்கோ எனக்கு சம்பந்தம் கிடையாதுடா...நம்புடா"



"அந்த பொண்ணுங்களயும் உன் அம்மாவையும் காப்பாத்த வேற வழி தெரியலன்னதும் என்ன யூஸ் பண்ணி கிட்ட இல்ல?"



"டேய் கிருஷ் ப்ளீஸ் மச்சான்... சத்தியமா இல்லடா" அவன் அழுத அழுகையில் அவனுக்குத் தான் அதிகமாக வலித்தது.



"பென்ட்ரைவ் மாத்துனது நீ தானே?"



"...."



" சொல்லு இடியட் நீ தானே?"



"ஆமா"



"என் நெக்ஸ்ட் மூவ அவனுக்கு சொன்னதும் நீ தானே?"



" ஆமா"



"யாழினி வர்றத இன்பார்ம்??? "



" சத்தியமா அது நா இல்ல மச்சான்... குட்டிமாவ நானும் தங்கச்சியா தான்டா பாக்குறேன்"



"ஓஹ்..." ஏளனம் வலிந்தது அவன் குரலில்...



"கிருஷ்.... "



"எல்லோரையும் உறவா தான் நினச்சிருக்க... என்ன த.. தவிர"



"மச்சான் உன்ன உறவுங்குற அந்தஸ்து தான்டி வெச்சிரு.... " அவன் கூறி முடிக்க வில்லை



"உன்ன போன்னு சொல்லி ரொம்ப நேரமாச்சு" இடை புகுந்தவனின் குரலில் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது.



"நா உன்ன விட்டு போ மாட்டேன் மச்சான்... எனக்கு உன் கூட இருக்கனும்... உன் ப்ரண்ட்ஷிப் வேணும்... "



"போன்னு சொல்றேன்ல... போஓஓடாஆஆ" வீடு அதிர கத்தியவன் அவன் நெஞ்சில் கை வைத்து ஒரே தள்ளாக தள்ளி விட்டு எழ



"போகணும்னா அப்போ நீயே என்ன கொன்று மச்சி" அவன் வார்த்தைகள் சற்றே அசைத்துத் தான் பார்த்தது காளையவனை....



ஆனாலும் மீண்டுமொரு துரோகத்தை தாங்க அவன் உடலிலும் சரி மனதிலும் சரி சக்தியே இல்லை...



"போயிடு ரக்ஷன்" அவன் பெயரை அழைத்த கடைசி அழைப்பு அதுவோ???



***



மனம் கனத்துப் போயிருந்தது காரிகைக்கு...



அதிலும் அன்றைய அபியின் பேச்சுக்கள் வாழ்க்கையையே வெறுத்துப் போக வைத்திருந்தாலும் கணவன் தனக்காக கோபப்பட்டது கொஞ்சம் ஆறுதலளிக்க தன்னை கட்டுக்குள் கொண்டு வர போராடினாள் பெண்...



இருந்தும் நிற்காமல் வழிந்து கொண்டே இருக்கும் கண்ணீருக்கு அவள் என்ன தான் செய்வது???



தான் அநாதை மட்டுமல்லாமல் யாருக்கோ சொந்தமான இதயத்தையும் சேர்த்தே சுமந்து கொண்டிருக்கிறாளாம்...



சத்தியமாக மூளை வெடித்து சிதறி விடும் போல் தான் இருந்தது.



முழுதாக இரண்டு நாட்களாகி விட்டது கணவனை கண்டு!!!



ரக்ஷனை கூட ஒரே ஒரு தடவை தான் கண்ணால் கண்டாள் பெண்.... அதுவும் சோகமே உருவாக...



முன்பு எப்போதும் பேசிக் கொண்டு இருப்பவன் இப்போது அவளை பார்த்து சிரிக்கக் கூட மறுக்கிறான்...



"ரக்ஷன் அண்ணாக்கும் கிருஷ் அண்ணாக்கும் என்னாச்சு அண்ணி... ஏன் வீட்டுக்கே வர்றதில்ல?" தனக்கே தெரியாத யாழினியின் கேள்விக்கு என்னவென்று பதில் கூறுவாள்???



என்ன நடந்தது நடக்கிறது என எதுவுமே புரியவில்லை பெண்ணவளுக்கு....



இரவு மணி பன்னிரண்டை தாண்டியிருக்க அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்தவள் திடீரென கேட்ட சத்தத்தில் தூக்கிவாரிப் போட நிமிர அவள் காலடியே உருண்டு வந்தது மது பாட்டிலொன்று!!!



அன்று போலவே மனதை குத்தி கிழிக்கப் போகிறானா???



நெஞ்சம் அதிர நிமிர்ந்தவளை நோக்கி அவன் வர ஆரம்பிக்க பின்னால் நகர்ந்து கொண்டே சென்றவள் எதிர்பாராவிதமாய் கட்டிலில் விழ அவனும் விழவும் நடுங்கினாள் பெண்....



"மா... மா.... ப்ளீஸ் வேணாம் மாமா... எ... எனக்கு ப... பயமா இருக்கு" அவள் குரல் அவனை அடையவே இல்லை...



அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் அப்படியே இருக்க அவன் ஸ்பரிசத்தில் சிலிர்த்த தேகம் பயத்தில் தூக்கிப் போட்டது....



"இ... இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?"



"எ... என்ன மாமா?"



"நா உன் கிட்ட என் காதல சொல்ல வந்து நீ என் காதல உயிரோட புதைச்ச நாள்டி.... உன்ன தேடி வந்த என்ன நீ தூக்கியெறிஞ்ச நாள்"



'என்ன சொல்றாங்க இவங்க.... காதலா???' அன்றொரு நாள் அவன் காதலிப்பதாக சொன்னது ஞாபகம் வர சிலிர்த்த தேகம் திடீரென விரைக்க அவன் பிடி இறுகியதில் அவள் உணர்வுகளும் மரித்துப் போக ஆரம்பித்திருந்தது.



"மாமா ப்ளீஸ் விடுங்க என்ன... "



"முடியாதுடி"



"ப்ளீஸ் மாமா... உங்கள கெஞ்சி கேக்க... " அவன் அவளதரங்களை பேச விடாமல் சிறை செய்திருக்க மீண்டும் அழுகை தொண்டையை அடைத்தது பேதைக்கு....



"உன்ன முதன்முதலா ரோட்ல பாத்தப்போ.... இரண்டாவது தடவ வீட்ல.... ஏன் மூனாவது தடவ அந்த ரவுடி கிட்ட பாத்தப்போ கூட எனக்கு லவ் வர்லடி உன்மேல.... முத முத எப்போ உன்ன கோயில்ல அந்த சேலைல இல்ல இல்ல அந்த சிரிப்போட பாத்தேனோ அப்போ தான் நீ எனக்குள்ள வந்த... உன்னோட அந்த சிரிப்பு தான்டி என்னோட உயிர்.... ஐ லவ் யூ டி... ஐ லவ் யூ.... " உண்மையில் காதலாய் அவன் அவளை ஆக்கிரமிக்க ஏற்கனவே வேறு ஒரு பெண் தான் என நம்பியிருந்த மனம் அவன் வார்த்தைகளில் உயிருடன் மரித்தது.



நிச்சயமாக அது அவளல்ல!!!



வேறு ஒரு பெண்ணாக நினைத்துத் தான் கணவன் தன்னை ஆள்கிறானா???



இவ்வளவு நாள் அவன் என்ன செய்தாலும் பொறுத்த இதயம் அதை தடுக்கப் போராடியது... முடியவில்லை... அழுது ஓய்ந்து அவனுக்குள் விருப்பமின்றியே கரைந்து போனாள் பெண்!!!



***



ஏதோ கெட்ட கனவு கண்டது போல் திடுக்கிட்டு எழுந்தமர்ந்து விழித்தான் கதிர்!!!



நிச்சயமாக ஏதோ விபரீதம் நடந்திருக்குமென உள்மனம் அடித்துக் கூற திரும்பி மனையாளை தேடிய கண்கள் படுக்கை என்றுமல்லாமல் கசங்கி இருப்பது கண்டு அதிர இரவு நடந்ததை வரவழைக்கப் போராடினான் காளை....



ம்ஹூம்.... முடியவே இல்லை....



மறதி அவனுக்கு சாபமாக போய்விட்டது!!!



"வர்ஷினீஈ" வீடதிர அவன் கத்த எப்போதும் உடனே நடுங்கிக் கொண்டு வந்து நிற்பவள் இன்று ஏனென்று கூட கேட்காதது உள்ளுக்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்த முகத்தை கூட கழுவாமல் எழுந்து கீழே ஓடியவனை வெற்றிடமே வரவேற்க சுற்றுமுற்றும் கண்களால் தேடியவனின் பார்வை நிலைகுத்தி நின்றது வாசலில்....



ஆம்... அவள் போய் விட்டாள்!!!



ஆனால்.... ஆனால்.... வாசலில் செத்து விட்டதாக சொல்லப்பட்ட விக்ரம் குமார் மற்றும் ராதாவுடன் நின்று கொண்டு தன்னையே கண் கலங்க பார்த்துக் கொண்டிருப்பவள்???



இவள் அமிர்தவர்ஷினி என்றால் அவன் அமிர்தவர்ஷினி என நினைத்துக் கொண்டு தாலி கட்டி அவனவளாக காதலித்த மனைவி யார்???



விதியின் பக்கங்கள் மாறிவிட்டனவோ???



அல்லது பெரும் பிழை செய்து அவன் தான் பக்கங்களை மாற்றி விட்டானா???




தொடரும்.....



08-08-2021.
 
Last edited:

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27292
அத்தியாயம் 08 [ B ]



'அ..அப்போ...இவள நா கல்யாணம் பண்ணிகலியா... எங்க போயிருந்தா... கடவுளே' தலை சுற்றிக் கொண்டு வந்தது கதிருக்கு...



"கிருஷ்" ஓடி வந்து அவனை அவள் அணைத்துக் கொண்டு கதறினாலும் தன்னிலைக்கு வர முடியவே இல்லை அந்த ஆறடி ஆண் மகனால்...



அவன் வாழ்க்கையில் மட்டும் என்ன தான் நடக்கிறது???



வேறு யாராவது வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா???



அப்படித் தான் நினைக்கத் தோன்றியது காளைக்கு...



"என்ன மன்னிச்சுடு ப்ளீஸ்... அன்னக்கி நா போட்டோ தர மாட்டேன்னு உன் கிட்ட சொல்லவே இல்லடா... என் குரல வச்சு ஒருத்தன் உன் கிட்ட பேசுனான்... சாரி டுபாக்கூர்... அம்மாவையும் அப்பாவையும் கொண்ணுடுவேன்னு கத்திய கழுத்துல வெச்சிருக்கும் போது நா எப்பிடி உன் கிட்ட பேசுவேன்... இ... இப்போ இப்போ கூட எ... எங்கள தேடி கிட்டு தான் இருக்காங்க... அன்னக்கி ஆர்த்திய குத்துனவன போட்டோ எடுத்துட்ருக்கும் போது வேகமா வந்த லாரி இடுச்சு நெஞ்சும் தலையும் பலமா அடிபட்டு மயங்கிட்டேன்... ஹார்ட் தேவப்பட்டுச்சு.... ஹார்ட் உடனே கிடச்சு சர்ஜரி பண்ண அடுத்த நிமிஷம் என்னையும் அப்பாவையும் அம்மாவையும் கடத்திட்டானுங்க... நீ வீடு தேடி வருவன்னு... அம்மாப்பா இறந்து போயி என்ன தெரியாதுன்னு பொய்யும் சொன்னாங்க... இதெல்லாம் அன்னக்கி அந்த ராம் தான் எங்க கிட்ட சொன்னான்... அவனுங்க கிட்ட இருந்து தப்பிச்சு போயி அப்பாவோட ப்ரண்டு வீட்டுல ரகசியமா தங்கி இருந்தோம்... அவரு இறந்து போயிட்டாரு... திரும்ப உன் கிட்ட வந்து சேருறதுக்குள்ள என் உசுரே போயிடுச்சுடா.... இனிமே நா எங்கேயும் போக மாட்டேன் உன்ன விட்டு... ப்ளீஸ் மன்னிச்சுடு கிருஷ்... " அவள் கண்ணீர் அவன் மார்பை நனைக்க அணைத்திருந்தவளை திரும்ப அணைக்கக் கூட தோன்றாமல் சிலையாய் சமைந்திருந்தவன் அவள் கண்ணீர் நெஞ்சை நனைக்கவும் தான் நினைவுக்கே வந்தான்.



"எ... எ... என்ன சொல்ற... அப்போ அப்போ உனக்கு எ... எதுவும் மறந்து போகலயா?"



"இல்ல கிருஷ்" அவனை இறுக்கமாக அவள் கட்டிக் கொள்ள அப்போது தான் நெற்றிப் பொட்டில் ஆணியடித்தது போல் அந்த உண்மை உரைத்தது கதிருக்கு!!!



ரோட்டில் மயங்கிக் கிடந்தது இவளல்ல!!!



மயங்கி இருந்தது அவன் மனைவி.... அவளுக்கு கூட எதுவும் மறந்திருக்கவில்லை... உண்மையில் அவளுக்கு தான் யாரென்று தெரியாது தான்....



அவன் தான் தன்னை மறந்து விட்டதாக எண்ணி இவர்கள் தான் உன் அப்பாம்மா அண்ணன் என அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறான்...



இதில் உண்மையில் ராஜாராம் லக்ஷ்மிதேவி மற்றும் அபினவ், 'ஆர்த்தியின் இதயம் பொருத்தப்பட்டிருப்பவள்' என ஏற்றுக் கொள்ள உண்மையில் அனாதையான பெற்றோரின் சகோதரனின் பாசத்திற்கும் அன்பிற்கும் ஏங்கிக் கொண்டிருந்த அவள் மனம் இவன் சொன்னதை உடனே ஏற்றுக் கொண்டிருக்கிறது...



மொத்த பிழையும் அவன் தான் செய்திருக்கிறான்!!!



தவறாக புரிந்து கொண்டு சும்மா இருந்தவளுக்கு அப்பாம்மா என கொடுக்கப் போய் அவள் மனதை ரணமாக்கி விலகிச் செல்லவும் வைத்திருக்கிறான்....



எது எப்படியிருந்தாலும் அவனை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தது ஒரு விடயம் தான்!!!



அது... அவன் காதலித்தது அவன் மனையாளான அமிர்தவர்ஷினியை தான்!!!



அன்று கோயிலில் பார்த்தும் அவளை தான்!!!



அவளுக்கு அவனை தெரியாததற்கு அவள் கோயிலில் தன்னை காணாததே காரணம்...



அதன் பிறகும் விக்ரம் வீட்டிற்கு வந்தானே... அவன் மனைவியிடம் ஏற்பட்ட அந்த உணர்வு விக்ரமின் மகள் அமிர்தவர்ஷினியிடம் வரவில்லையே???



ஹாஸ்பிடலில் விக்ரம் மகள் வர்ஷினிக்கு இதயம் வேண்டுமென அவர்கள் தேடிக் கொண்டிருக்க அவன் அதை கேள்விப்பட்ட நொடி அவன் இதயம் அதிர்ந்து போனதே தவிர வலிக்கவில்லையே....



ஆனால் அவன் மனைவி மயங்கி ரோட்டில் கிடந்த போது இதயம்துடித்த துடிப்பு.... அதை விட அவனுக்கு ஏற்பட்ட பதற்றம்... அப்பப்பா.... அதை மீண்டுமொருமுறை நினைக்கவே உடல் நடுங்கியது அவனுக்கு....



உருவ ஒற்றுமையில் ஒரு சின்ன வேறுபாடு கூட இல்லாததுவே இத்தனைக்கும் காரணம்!!!



அவள் பெயரும் அமிர்தவர்ஷினியாகவே இருந்தது அடுத்த காரணம்!!!



அப்படியென்றால் அன்று கோயிலில் அவள் பெயரை தெரியாமலேயே தான் உருவத்தை வைத்து அவள் பெயரை உச்சரித்திருக்கிறான்!!!



எல்லாவற்றையும் விட.... அவனையே மறக்கச் செய்யும் புன்னகை அவன் மனைவியுடையது!!!



அவனவளின் அவனுக்கேயான புன்னகை!!!



துரதிஷ்டவசமாக இருவருக்கும் ஒரே பெயர் வேறு....



ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு போல் அவளும் அவனை திரும்பிப் பார்த்தாளே???



இது தான் கடவுள் முடிச்சோ???



விதி வலியதென்றே தோன்றிற்று அந்த ஆறடி ஆண் மகனுக்கு!!!



"அ.. அன்னக்கி கோயிலுக்கு நீ வர்லியா அப்போ?"



"இல்லடா லூசு... நா கோயிலுக்கு வர்ல... அம்மா அவங்க ப்ரெண்டு வீட்டுக்கு போயி அவங்க பொருள வாங்கிட்டு வர சொன்னாங்க... வாங்கிட்டு வர்ற வழியில தான் ராஜ் சொன்னான் உன்ன பாத்ததா..."



இதற்கு தான் அன்று அம்மா என ஏதோ சொல்ல வந்தாளோ???



அப்படித்தான் இருக்கும்...



வலக்கை சுட்டு விரல் மற்றும் நடு விரல் இரண்டையும் சேர்த்து தன் நெற்றிப் பொட்டை அழுத்தமாக தேய்த்தவன் தன்னை கட்டிப் பிடித்திருந்தவளை விலக்கி விட்டு விக்ரமிடமும் ராதாவிடமும் செல்ல அவனை பார்த்து நெற்றி சுருக்கியவளுக்கு கதிரில் பெரும் மாற்றமாய்....



.....



"நீ பண்ணது கொஞ்சம் கூட நல்லால ஆதி" நண்பனிடம் கோபமாக பேசிக் கொண்டிருந்தான் குமரன்.



"அப்போ அவன் பண்ணது மட்டும் என்னடா?"



"நீயா இப்பிடி நடந்துக்கறன்னு என்னால சத்தியமா நம்ப முடிலடா... கதிர் பத்தி நான் சொல்லி தான் உனக்கு தெரியனும்னு இல்ல... பட் அவன் தெரிஞ்சே பண்ணி இருக்க மாட்டான் டா.. தெரிஞ்சே தான் பண்ணி இருந்தாலும் நீ வர்ஷிய அப்பிடி பேசுனது ரொம்ப தப்பு"



"ஐ நோ குமரா... அம்மு கிட்ட நா அப்பிடி நடந்துகிட்டு இருந்திருக்க கூடாது தான்... கோபத்துல பேசிட்டேன்... அவள பாக்க போலாம்னு தான்டா இருக்கேன்... சாரிடா"



"இத அவ கிட்ட போயி கேளு... பாவம்டா"



"சாரி மச்சி... " அவன் மொபைல் அலற



"ரக்ஷன் தான் கால் பண்றான்... அவனுக்கு என்ன பிரச்சனன்னே தெரில தேவதாஸ் மாறி சுத்தி கிட்ருக்கான்... பேசுனாலும் பேச மாட்றான்... அட்லீஸ் கால் கூட அடண்ட் பண்ண மாட்டேங்குறான்... இன்னிக்கு சாரா எடுக்குறாரு.. இரு பாக்கலாம்" குமரனிடம் சொல்லிக் கொண்டே அடண்ட் பண்ணி ஸ்பீக்கரில் அபி போடவும்



"ம... மச்சான்... மச்சான்" மறுமுனையில் கேட்ட பதற்றக் குரலில் இருவருமே பதறினர்.



"ஹே மச்சான் ஆர் யூ ஓகே... எங்க இருக்க... என்னாச்சு?"



"டேய் அபி... குமரா... கமிஷனர் விக்ரம் சார் சாகலடா"



"என்னடா சொல்ற?" உச்ச கட்ட அதிர்ச்சியில் கத்தினர் இருவரும்...



"கிருஷ் வீட்டுக்கு கிளம்பி வாங்கடா... என்னமோ நடக்குது" அவன் துண்டிக்க அடித்து பிடித்துக் கொண்டு கிளம்பினர் இருவரும்...



அபி அப்படி பேசி விட்டுச் சென்றது தன் நண்பனுக்கு எத்தனை வலிக்குமென்று நண்றாகவே தெரியும் ரக்ஷனுக்கு....



இதில் தானும் அப்படி செய்ததில் முழுதாக உடைந்து போயிருப்பவனுக்கு நிச்சயமாக ஆறுதல் தேவை...



கதிர் கமிஷனர் விக்ரமை கண்ட அதே நேரம் தான் வீட்டுக்குள் நுழையப் போன அவனுமே கண்டு விட்டிருந்தான்.



((அதான் அவன் நா உன்ன விட்டு போக மாட்டேன்னு சொன்னான்ல... அதனால அங்க தான் இருக்கான்... என்ன... நம்ம ஹீீரோ தான் அவன் மூஞ்ச கூட பாக்கறதில்ல))



கதிரை போலல்லாமல் அவனுக்கு விக்ரம் மகள் வர்ஷினியை பார்த்தவுடனே புரிந்து போயிற்று இது நண்பன் மனைவியல்ல.... நிச்சயமாக ஏதோ விபரீதம் நடந்திருக்கிறதென....



அபி வந்து நேரில் பார்த்து தெரிந்து கொண்டாவது நண்பனிடம் பேசட்டுமே... அப்போதாவது சிறு ஆறுதல் கிடைக்குமே என்று தான் உடனே அழைத்து விட்டான்.



தன்னிடம் பேசாவிட்டாலும் அபி பேசி விட்டாலாவது அவன் மன அழுத்தம் குறையட்டுமே என்று தான் இருந்தது அந்த ஆருயிர் நண்பனுக்கு!!!



***



"வாங்க சார்... வாங்க மேடம்..." அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே "அண்ணா... யாரு இவங்க?" கொட்டாவி விட்டவாறு கேட்டுக் கொண்டே கீழிறங்கி வந்தாள் தங்கை யாழினி கிருஷ்ணா.



"அண்ணி....எந்திரிச்சுட்டீங்களா?" அவள் அருகில் போய் நிற்க அவள் அழைப்பில் அவள் முகம் பூவாய் மலர கதிரின் முகம் எரிச்சலானது.



அவன் மனைவி அல்லவே நின்று கொண்டிருப்பவள்...



((போடா போடா... பக்கத்துல இருக்கும் போது அவள கண்டுக்காம இருந்துபுட்டு... அவ போனதுக்கு அப்பறம் இப்போ எரிச்சலாம்))



" யாழினி... கம் ஹியர்" அவளை வர சொல்லி விட்டு மீண்டும் அவர்கள் புறம் திரும்பியவன் உள்ளே அழைத்து வந்தான்.



"ஏன்ணா என்னாச்சு?" கேட்டுக் கொண்டே அவள் வரவும் லக்ஷ்மி, ராஜா, அபி, ரக்ஷன் மற்றும் குமரன் அனைவரும் பதற்றமாய் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.



"சார்...." குமரன் அதிர்ந்து வாசலிலேயே நின்று விட பின் வந்தவர்களும் அப்படியே நிற்கவும் ராஜாராமும் தேவியும் தான் சற்றே சுதாரித்து தெளிந்தனர்.



"மிஸ்டர். விக்ரம் குமார்... நீங்க?" ராஜாராம் இடையில் நிறுத்த நடந்தது அனைத்தையும் சொன்ன விக்ரமின் பதிலில் குழப்பமாய் கதிரை பார்த்தனர் அனைவரும்....



"கண்ணா.... அ... அம்மு... இவங்க பொண்ணா?" தாயல்லவா.... உண்மையை ஜீரணிக்கவே முடியவில்லை அவரால்...



"இல்ல லக்ஷ்மி மா... " அவன் பதில் இன்னுமே குழப்பியது.



"அப்போ?" குமரன் நெற்றி சுருக்க விக்ரம் மகள் அமிர்தாவை பார்த்ததிலிருந்து அவன் மனைவி வர்ஷினி மேல் காதல் கொண்டது பெற்றோர் மற்றும் அண்ணனின் மரணம் ஆர்த்தி சம்பவம் இதயம் கை மாறியது அவனே குழப்பிக் கொண்டது என ஒன்று விடாமல் ஒப்பிக்க மண்டையே கிறுகிறுத்தது அனைவருக்கும்....



இதில் அனைவருடனும் சேர்ந்து விக்ரம் ராதா இருவரும் அதிர்ந்து போக கரகரவென கண்ணீர் வழிந்தது பாவை(அமிர்தா)யின் கண்களிலிருந்து...



((நண்பா இனிமே விக்ரமோட மகள அமிர்தான்னும் நம்ம ஹீரோயின வர்ஷினின்னும் கூப்டுகலாம்... பட் இந்த அம்முன்னு சொல்றதுல குழப்பம் வரும்... நான் அப்போ பேரு மென்ஷன் பண்றேன்))



'அப்போ என் மேல காதல் வரலியா.... நான் மட்டும் தான் இவன இத்தன வருஷமா காதலிச்சு காத்துகிட்ருக்கேனா?' தாங்கவே முடியவில்லை அவளால்....



"இப்போ எதுக்கு கண்ணா தலைய தொங்க போட்டுகிட்டு இருக்க.... உன் மேல எந்த தப்புமே இல்ல... இது தான் விதின்னு எழுதப்பட்டிருக்கு.... அதுக்கு நீ என்ன பண்ணுவ சொல்லு... நாங்க அம்முவ(வர்ஷினி) ஏத்துக்க மாட்டோம்னு பயப்பட்றியா... அப்பிடி எல்லாம் எதுவுமில்ல... என்ன தான் இருந்தாலும் ஆர்த்திய போல அவளும் என்னோட குழந்தை தான்... " விலுக்கென நிமிர்ந்தவன் "தேங்க்ஸ் லக்ஷ்மி மா" அவரை அணைத்துக் கொள்ள அபிக்குத் தான் குற்றவுணர்வாய் போயிற்று....



"ஓ மை காட்.... அப்போ இது அண்ணி இல்லயாணா.... அப்பிடீன்னா அண்ணி எங்க?" திடீரென கேட்ட தங்கையின் குரலில் தூக்கிவாரிப் போட்டது கதிருக்கு...



அவள் தான் வீட்டை விட்டு சென்று விட்டாளே!!!



"ம்... ஆமா அம்மு(வர்ஷினி) எங்க பா?" ராஜாராம் வாயை திறக்க



"அ... அ... அது... அது அ.. அவ பொய்ட்டா மா.. மா" தொண்டை அடைக்க கூறியவனுக்கு ராஜாராமை மாமா என அழைக்க கூட முடியவில்லை... அங்கும் மனைவியே வந்து நின்றாள் கலங்கிய கண்களோடு....



"வாட்" அபி கத்த "என்னணா சொல்றீங்க?" யாழினியின் கண்களில் நீர் திரண்டது.



"கண்ணா என்னடா என்ன ஆச்சு? "



"அவ வீட்ட விட்டு பொய்ட்டா லக்ஷ்மி மா" எவ்வளவு முயன்றும் அவன் குரல் கரகரக்க அவனை ஆச்சரியமாக பார்த்தனர் அனைவரும்...



"நீ என்ன பண்ண?" அபி மீண்டும் எகிற



"சும்மா சும்மா அண்ணாக்கு திட்டாதிங்க அபி மாமா... அன்னக்கி கூட புரிஞ்சிக்காம கத்துனீங்க... இப்போவும் அதே தான் பண்றீங்க... ஒருத்தர் மேல மட்டும் தான் தப்பு இருக்குமா... அவங்க அண்ணாவ தப்பா புரிஞ்சு கிட்டு இருந்திருக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?" தன்னவள் வார்த்தைகளில் அவன் வாய் கப்பென மூடி விட்டாலும் 'குள்ள கத்திரிக்கா... என்னா வாயி' அந்த நேரத்திலும் மனதில் சிரிப்பு பொங்கியது அபிக்கு...



"குட்டிமா அமைதியா இரு"



"ஆமா எப்போ பாரு என்னையே சொல்லுங்க... ஏன் உங்க நண்பன வாய அடக்க சொல்ல வேண்டியது?"



"இப்போ எதுக்கு மாறி மாறி சண்ட போட்டுக்குறீங்க எல்லோரும்... முதல்ல அந்த பொண்ண தேடலாம்" ராதா முதன்முறை வாயை திறக்கவும் அதுவே சரியென பட்டது அனைவருக்கும்....



" நானே போயி தேட்றேன்... " கதிர் ஆரம்பிக்க



"நானும் வர்றேன்" முகத்தை உர்ரென வைத்துக் கொண்டே நண்பனிடம் பேசினான் அபி.



"இல்ல வேண்டாம்.... நா மட்டும் போறேன்... இங்க பாதுகாப்பு தேவை" அவன் பதிலை எதிர் பார்க்காமலேயே அவன் வாசல் தாண்ட



'புடிவாதம் புடிச்சவன்... அன்னக்கி அப்பிடி நடந்து கிட்டதுக்கு வச்சி செய்றான்' அபியின் முணுமுணுப்பில் இலேசாய் சிரித்தான் ரக்ஷன்.
 
Last edited:

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராயல் என்பீல்டை ஓரமாக நிறுத்தி விட்டு பெட்ரோல் டேங்க்கின் மீது ஹெல்மெட்டை வைத்து அதில் தலை கவிழ்ந்திருந்தான் கதிர்வேல் கிருஷ்ணா....



மனம் காலையில் நடந்ததிலேயே நிலைத்திருந்தது.



தூங்கி எழுந்தவன் மனைவியை காணாமல் நெஞ்சு பதற உடனே மொபைலை எடுத்து சென்ஸார் கருவி மூலம் இடத்தை தேட அது ட்ரெஸ்ஸிங் டேபிளின் மேலே இருப்பது கண்டு முழுவதுமே சோர்ந்து போனான்.



அதன் பிறகு தான் அவன் கீழே வந்ததும்...



'அப்போ உனக்கு நா வேணாமா வரு?' ஏனோ கண்கள் சட்டென கலங்கி விட சடாரென எழுந்தவன்



'நா உனக்கு தேவயில்லன்னாலும் எனக்கு நீ வேணும்டி.... ப்ளீஸ் வந்துடு கண்ணம்மா... ரியலி சாரிடி... இனிமே உன்ன நல்லா பாத்துப்பேன்டி...' மனம் புலம்பித் தீர்க்க ஹெல்மெட்டை மீண்டும் போட்டுக் கொண்டு கிளம்பினான்.



***



கோயில்....



படிக்கட்டில் தூரத்தே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு ஏனோ ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவே இல்லை...



அவ்வளவு புன்பட்டு மறத்துப் போயிருந்தது இதயம்!!!



அவ்வளவு நாள் கணவன் பேசிய பேச்சுக்கள் கூட அவ்வளவு வலித்திருக்கவில்லை பேதைக்கு...



ஆனால் அவன் நேற்று நடந்து கொண்ட விதம் இப்போது நினைத்தாலும் உடல் கூசியது.



'ஏன் மாமா... ஏன் அப்படி நடந்து கிட்டீங்க... எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கறது மறந்து போச்சா உங்களுக்கு.... நா அன்னக்கி மயக்கத்துல இருந்து விழிச்சப்போ என் கண்ணுக்கு உங்கள தவிர வேறு எதுவுமே தெரில மாமா.... ஏதோ என்ன காப்பாத்த வந்த கடவுள் மாறி இருந்தீங்க அன்னக்கி.... அம்மாப்பா அண்ணா இவங்க தான்னு நீங்க காட்னப்போ உங்களுக்கு உறவாக வரம் கிடைக்காதான்னு தான் இருந்தேன்... எதிர்பாராவிதமா உங்க கையால தாலி வாங்கினப்போ உங்கள பாத்து பயந்ததையும் மீறி நா எப்போவும் உங்க கிட்ட பாதுகாப்பை உணர்ந்திருக்கேன் மாமா... யாழ்கிட்ட நீங்க தன்மையா பேசும் போது என்கிட்ட அப்பிடி பேச மாட்டீங்களான்னு ஏங்கி இருக்கேன்.... நீங்க குடிச்சுட்டு வர்ற ஒவ்வொரு தடவையும் ஏன் என் கிட்ட உங்எளுக்கு ஆறுதல் தேட தோனலன்னு யோசிச்சிருக்கேன்.... நீங்க கோபப்பட்டாலும் அதுல இருக்க அக்கறைய ரசிச்சிருக்கேன்.... உங்க கண்ணுல திடீர்னு வந்து போற அந்த ஒரு நொடி காதல்ல மொத்தமா தொலஞ்சு கூட போயிருக்கேன்.... பட் அது எனக்கானது இல்லன்னு இப்போ தான் மாமா புரியுது.... உங்கள எனக்கு அவ்வளவு புடிக்கும் மாமா... உங்கள பாத்த நொடியில இருந்து உங்கள அவ்வளவு புடிக்கும் எனக்கு.... என்னதான் புடிச்சிருந்தாலும் ஏன் உங்களுக்கு என்ன பிடிக்கல மாமா?' இதயம் அவனிடம் தூது அனுப்பிக் கொண்டிருக்க அதே கோயிலின் முன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியிருந்தான் கதிர்.



......



'உன் கிட்ட முதன் முதலா வந்தப்போ அவள எனக்கு கொடுத்த.... இப்போ என் வருவ தொலச்சிட்டு வந்து நிக்கறேன்.... எனக்கு அவ வேணும்... ப்ளீஸ் நீ தான் அவள என் கண்ணுக்கு காட்டனும்' மனதார வேண்டிக் கொண்டவன் ஒரு வித எதிர்ப்பார்புடனேயே கோயிலுக்குள் நுழைய அவ்வளவு நேரம் அமர்ந்திருந்தவள் வெளியேற எண்ணி வாசலை நோக்கி நடக்கத் துவங்கினாள்.



அவள் ஏதோ யோசனையில் வந்து கொண்டிருக்க அவன், கண்களை அலசிக் கொண்டே வர இருவரும் எதிர்பாரா விதமாய் இடித்துக் கொள்ளவும் அவள் விழாதிருக்க பெண்ணிடையை இறுக்கப் பற்றியவனின் பார்வை அவளை ஏறிட்ட அதே நொடி சற்று தூரத்தே கேட்ட "டிங்ங்...." எனும் கோயில் மணி ஓசையில் பயந்து இறுக்க கண்களை மூடியிருந்தவளும் திறந்து அவனை பார்க்க இருவர் பார்வைகளும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டன.



திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!!!





'வரூஊ...' இதயம் முணுமுணுக்க கோயிலென்றும் பார்க்காமல் அவளை முத்தமிட குனிந்தவனை கண்டு கண்களை இறுக்க மூடித் திறந்தவள் சட்டென விலக தன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்தான் கதிர்.



'கிருஷ்... கண்ட்ரோல்டா... கண்ட்ரோல்...' தலையை அழுத்தக் கோதிக் கொண்டு நிமிர்ந்தவன் தலை குனிந்து நின்றிருந்தவளின் கை பற்றி கடவுள் முன் அழைத்துச்சென்று நிறுத்தி தாலியை முகத்திற்கு நேரே தூக்கிக் காட்ட தூக்கிவாரிப் போட்டது பேதைக்கு...



"நா உனக்கு வேணாம்னு தான் தூக்கி போட்டுட்டு வந்தியா வர்ஷினி?" விலுக்கென நிமிர்ந்தவளின் கண்கள் ஏகத்திற்கும் கலங்கி இருந்ததுவோ...



"நீயா நெனச்சாலும் என்ன விட்டு பிரிஞ்சு போக முடியாதுடி" அவள் கழுத்தில் அதே கடவுள் சாட்சியாக மங்கல நாணை ஏற்றவும்

"டிங்ங்" மீண்டும் கேட்டது கோயில் மணியோசை...



"வா... " திரும்பி நடக்க முற்பட்டவனின் கையை உதறி விட்டவளிடம் அதிர்ச்சியாக திரும்பினான் கதிர்.



"ந... நா வர்லங்க"



"தோ பார் வர்ஷினி... ராத்திரி என்ன நடந்துதுன்னு எனக்கு தெரில... பட் ஐ அம் ரியலி சாரி... ப்ளீஸ் வா"



" இ.. இல்ல நா வர்லங்க" மனைவியுடன் கூடலுடன் இருந்ததை கூடவா ஒரு மனிதன் மறந்து போவான்???



தொண்டை அடத்தது பேதைக்கு....



அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு அவள் மறுக்க அவளை ஆராய்ச்சியாய் பார்த்து வைத்தான் கணவன்.



"சரி வர்ல... எங்க தங்கிக்க போற? "



"...."



"வர்ஷினி.... ஐ அம் ரியலி சாரி... நிஜமாலுமே என்ன நடந்துதுன்னு எனக்கு தெரில சாரி..அம்மா அப்பா எல்லாம் உனக்காக காத்துகிட்ருக்காங்கடி... ப்ளீஸ்?"



"அம்மாப்பால்லாம் எனக்கு இருக்காங்களா மா... இருக்காங்களாங்க? " சாட்டையடியாய் வந்து விழுந்த கேள்வியில் மீண்டும் கண்களை இறுக்க மூடித் திறந்தவன்



"யாரும் இல்லன்னா என்ன... நா இல்லயா உனக்கு... நா என்ன செத்தா பொய்ட்... "



" மாமா.... " தன்னையறியாமல் அவள் கத்தி விடவும் இதழோரம் சிரித்தவன் அதற்கு மேல் முடியாதென்று அவளை சட்டென இழுத்து அணைக்க அதற்காகவே காத்திருந்தவள் போல் கதறி விட்டாள் பெண்....



"எனக்கு யாரும் வேணாம் மாமா... ப்ளீஸ் போயிடுங்க... " அவள் வார்த்தைகளில் அவன் பிடி இறுக கூந்தலை ஆதரவாக வருடிக் கொடுத்தன கைகள்....



"நா வீட்ல இருக்கறதுனால தான் வீட்டுக்கு உன்னால வர முடிலன்னா நா வீட்டுக்கே வர்லடி.... பட் நீ வீட்ல தான் இருக்கணும்... ப்ளீஸ்.... "



" இ.. இல்ல... நா... நா அம்மா வீட்டுக்கு போறேன்"



"ப்ச் அடம் புடிக்காத கண்ணம்மா.... புரிஞ்சிக்கோ" சட்டென அவனை விட்டு விலகியவள் சங்கடமாய் நிலம் பார்க்க



"உனக்கு வீட்டுக்கு போணும் அதானே... சரி வா" அவள் கையை இறுக்கப் பற்றியவன் இழுத்துக் கொண்டே சென்று விட்டான்.



***



"போலாம் டாடி... " அழுது ஓய்ந்து போய் விக்ரமிடம் போய் நின்ற அமிர்தாவை பார்க்கவே பாவமாகிப் போனது அனைவருக்கும்....



"கண்ணன் வரட்டும்மா... அப்பறம் பாக்கலாம்" தேவி இடைபுக பெயருக்காய் சிரித்து வைத்தவள்



"இல்ல ஆன்ட்டி... இங்க இருக்க முடியாது" தன்மையாகவே மறுத்து விட்டாள்.



இருக்க முடியாதென்பதை விட இருக்க பிடிக்கவில்லை என்பதுவே நிஜம்...



அந்த வீட்டிற்கு எவ்வளவு உரிமையுடன் நுழைந்தாளோ அவ்வளவு அந்நியத்தனமாய் தெரிந்தது இப்போது...



கதிரை பார்க்கும் போது ஏதோ தனக்கு சொந்தமான பொருள் திருடு போன வலி நெஞ்சை அழுத்தியது.



தான் காதலித்தவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதை எந்த காதல் கொண்ட நெஞ்சத்தால் தான் தாங்க இயலும்???



இதற்கு மேலுமிருந்தால் பைத்தியம் தான் பிடித்து விடும் அவளுக்கு...



"கிருஷ்ணா கிட்ட ஒரு வார்த்த சொல்லிடலாம் மா" அவருக்குமே மகளின் மனவேதனை புரிவதாய்...



"இல்ல டாடி... போலாம்"



"கொஞ்சம் இருங்க சார்... கதிர் வந்துடுவான்" குமரனின் பேச்சிற்கு கட்டுப்பட்டு அவர் மகளை ஏறிட கண்களை இறுக்க மூடித் திறந்தவள் ஓரமாய் சென்று அமரவும் அருகே சென்ற யாழினியையே ரசனையாய் வருடியது அபியின் பார்வை...



"அ... அக்கா..." அவள் தோள் தொடவும் நிமிர்ந்து பார்த்தவள் வலுக்கட்டாயமாக புன்னகைக்க தானும் புன்னகைத்தவள்



"எல்லாம் கடவுளோட செயல் கா... எதுக்கும் கவலப்படாதீங்க... நிச்சயமா உங்க கூட கடவுள் இருக்காரு... மனசு கஷ்டப்பட்றா மாறி ஏதாவது நடந்தா அதை விட பெட்டரா கொண்டு வந்து கொடுப்பாரு" கசப்பாய் புன்னகைத்தவளின் கையை இறுக்கப் பற்றிக் கொள்ள மனைவியுடன் உள்ளே நுழைந்தான் கதிர்.



"அண்ணீஈஈ... " கையை விட்டு விட்டு ஓடிய யாழினி அவளை தாவி அணைக்க அதை ஒரு வித வலியுடன் பார்த்த(அமிர்தா)வளின் பார்வை வந்திருப்பவளை கண்டு மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்ததில் எழுந்தே விட்டாள் பெண்...



கதிர் சொல்லும் போது புரியாதது இப்போது நன்றாகவே புரிந்தது.



ஒரு சின்ன வேற்றுமை கூட இல்லாமல் அவ்வளவு கட்சிதமாக இருந்தது இருவர் உருவ அமைப்பும்!!!



என்னே... தாலியும் குங்குமமும் அவளை அவன் மனைவி என அடையாளம் காட்ட அதிர்ந்திருந்தவள் சட்டென நிதானத்திற்கு வர நெஞ்சு இன்னுமின்னும் அதிகமாய் வலித்தது.



விக்ரமுக்கும் ராதாவுக்கும் கூட அதே அதிர்ச்சி தான் போலும்!!!



சிலையாய் சமைந்திருந்தவர்கள் திரும்பி மகளையும் அவளையும் மாறி மாறி பார்த்திருக்க யாழினியை விட்டு விலகியவள் வேறோடியது போல் அப்படியே அதிர்ந்து நின்றாள்.



'யாரு இவங்க?' மனம் கேட்ட கேள்வி வெளியில் வர முடியாதளவு அப்படியொரு அதிர்ச்சி பெண்ணவளுக்கு!!!



"அம்மூஊஊ..... (வர்ஷினி)" தேவி அழைக்க "அ... அம்மா..." தாய் மடி தேடிய கன்றாய் பாய்ந்து கட்டிக் கொண்டாள் தாயை...



அபிக்கு உண்மையில் கண்கள் கலங்கி சிவந்து போக நண்பன் நிலையறிந்து கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டான் ரக்ஷன்.



"கிருஷ்.... நாங்க கிளம்புறோம் பா" திடீரென விக்ரம் பேசவும் மனையாளையே பார்த்திருந்தவன் சட்டென கலைந்து



"இல்ல சார்... நீங்க இப்போ வெளியில போறது சேப் கிடையாது... இங்கேயே தங்கிக்கலாம்" என்க மகளை பார்த்த திசையை நோக்கி தானும் பார்த்தவன் மென்மையாய் சிரித்து விட்டு அவளருகே செல்ல தாயை விட்டு விலகியிருந்த மனையாளுக்குத் தான் மனது படபடவென அடித்துக் கொண்டது.



"ஹோய்.... " தலை குனிந்து நின்றிருந்தவளின் நாடியை பற்றி நிமிர்த்த அவனை ஏறிட்டவளின் பார்வையில் தெரிந்த வலியில் தன்னை இழுத்துப் பிடித்தவன்



"நான் முதன் முதலா ரோட்டுல பாத்த அந்த பஜாரி வர்ஷினி இது இல்லயே?" எனவும் பக்கென அவள் (அமிர்தா) சிரித்து விட கணவனின் கூற்றில் மொத்தமாக உடைந்து போனாள் மனைவி.



'இவங்கள தான் மாமா லவ் பண்ணி இருக்காரா.... அதான் அன்னக்கி கூட சொன்னாரே ரோட்டுல பாத்ததா... அ... அப்போ... அ... அப்போ இவங்கன்னு நெனச்சு கிட்டு தான் கல்யாணம் பண்ணி அன்னக்கி அப்பிடி நடந்து கிட்டாரா?' மனம் மீண்டும் மீண்டும் மரிக்க நிற்க முடியாமல் தள்ளாடி விழப்போக அவளையே பார்த்திருந்த அபி ஓடி வந்து சட்டென தாங்கிக் கொண்டான் தங்கையை....



"என்னாச்சு அம்மு(வர்ஷினி)?" அபியின் பதற்றக் குரலில் சடாரென திரும்பியவன் தானும் பதற்றமாய் மனைவியை நெருங்க நெருங்காதே என்பது போல் அண்ணனிடம் ஒன்றியவளை பார்த்து முதன் முறை அடிபட்டுப் போனது கதிரின் மனம்.



நீட்டிய கையை தனக்குள் இழுத்துக் கொண்டவன் முகம் கசங்க உயிர் நண்பனின் மனம் புரிந்து போயிற்று ரக்ஷனுக்கும் குமரனுக்கும்....



"வீ... வீட்டுக்கு போலாம்மா" அபியை விலக்கியவள் தாயிடம் கேட்க குமரனை பாவமாய் பார்த்தான் அபி.



"யாரும் எங்கேயும் போக தேவயில்ல லக்ஷ்மி மா... இனி எல்லோரும் இங்கேயே தான் இருக்கனும்..." அவன் முடிவாய் கூறி விட அமைதியாக கேட்டுக் கொண்டாளே தவிர எதுவும் பேசவில்லை.....



.........



இரவு....



விக்ரம் ராதா மற்றும் அமிர்தாவை ஏற்கனவே ரூமிற்கு அனுப்பி இருந்தவன் ஹாலில் அமர்ந்திருக்க அருகே வந்தமர்ந்தார் ராஜாராம்....



"கண்ணா.... கட்சி வேல நிறைய இருக்கு.... நான் மட்டும கிளம்புறேன் பா"



"இல்ல மாமா.... இட்ஸ் டேன்ஜரஸ்.... என்ன வேலைன்னாலும் இங்க இருந்தே பாருங்க... வெளில போகாதிங்க நா ரிஸ்க் எடுக்க விரும்பல"



"அது இல்ல கண்ணா...."



"நோ மாமா.... நீங்க போக கூடாது அவ்வளவு தான்.... "



" குமரா.... " அவன் அழைத்துக் கொண்டே எழுந்து செல்ல வேறு வழியின்றி அவரும் இருந்து விட்டார்.



"மச்சான் வெளில இருக்கேன்டா" அவன் கத்த வெளியே சென்றவன் ரக்ஷன் அமர்ந்திருப்பது கண்டு



"நா அப்பறமா பேசறேன்டா... " திரும்ப முற்பட



"மச்சி எனக்கு கொஞ்சம் ஆபிஸ் ஒர்க் இருக்கு.... நீங்க பேசிட்ருங்க நா இதோ வந்தட்றேன்...." அவர்கள் என்னவென கேட்பதற்கு முன்னரே அவன் உள்ளே சென்று விட இறுகிய முகத்துடன் நின்றிருந்தவனை மீண்டும் அழைக்க எதுவும் பேசாமல் போய் உட்கார்ந்து கொண்டான் கதிர்.



"டேய் அவனுக்கு என்னதான் ஆச்சு... யார்கூடவும் சரியா பேச கூட மாட்டேங்குறான்.... " நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டாலும் வாயை திறந்து ஒரு வார்த்தை பேசினானில்லை கதிர்.



ரக்ஷனை பற்றி பேசவே பிடிக்கவில்லை என்பதை விட அவனை யாரும் தப்பாக நினைத்து விடக் கூடாது என்றதில் கவனமாக இருந்தவன் நடந்ததை யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டான்.



((கதிர் கிரேட்ல நண்பா???))



தனக்கு துரோகம் செய்தாலும் அடுத்தவர்களுக்கு நல்லவனாகத் தானே இருந்திருக்கிறான்...



அது அப்படியே இருக்கட்டுமென்று தான் விட்டு விட்டான்.



அன்று அவன் அப்படி செய்ததற்கான காரணத்தை சொல்லி கதறி அழுத போது அனைத்தையும் நம்பினான் தான்.... அவனுக்கு தெரியும் அவன் நண்பனை பற்றி... சூழ்நிலை கைதியாகத் தான் இருந்திருக்கிறான்.... இருக்கிறான்.... இல்லையென்று சொல்லுவதற்கில்லை....



இருந்தாலும் அவன் தனக்கு செய்த துரோகம் அவன் நெஞ்சின் அடியாழம் வரை சென்று வலித்தது.



அவன் முகம் பார்த்தால் எங்கே ஏதாவது செய்து விடுவோமோ என பயந்து தான் விலகி இருக்க முயற்சிக்கிறான்...



ஆனால் முடியவில்லையே!!!



ரக்ஷன் அப்படி இருப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாயினும் மௌனம் மட்டுமே அவனிடம் மொழியாய்....



"கதிர்....டேய் கதிர்...."



"...."



"கிருஷ்...." அபி தோள் தொடவும் "ஹாங்...." திடுக்கிட்டு கலைந்தவன் அவனை முறைத்து விட்டு கையை தட்டி விட சிரித்தான் குமரன்.



"டேய் சாரி மச்சி...." மீண்டும் தொட மீண்டும் தட்டி விட்டான்.



"அதான் சாரி கேக்குறேன்லடா?"



"சாரி கேட்டா ஆச்சா?" குமரன் வேண்டுமென்றே வம்பிலுக்க



"என்ன கொலகாரனாக்காத குமரா..." பல்லை கடித்தான் அபி.



"கிருஷ்... டேய் சாரிடா"



"கைய எடுக்க சொல்லு குமரா"



"என்ன நடுவுல இழுத்து விட்டு அப்பறம் ரெண்டு பேரும் சேந்து முறைப்பீங்க... என்னால முடியாது... நீ உன் அபி கூடவே பாத்துக்க"



"ப்ச்..." தோளிலிருந்த கையை மீண்டும் தட்டி விட



" டேய்... ரொம்ப பண்ணாத மச்சான்... தப்பு தான்... சாரி சாரி... சாரீஈஈஈ... இப்போ என்ன தான் பண்ணனுங்குற?" பாவமாய் கேட்டான் அபி.



"இவன் ஒருத்தன்.... உன்ன ரக்ஷன் எப்பிடி தான் சமாளிக்கிறானோ... அவன் தான் உனக்கு சரி..." சடாரென இருக்கையை விட்டெழ ஒரு நிமிடம் நண்பர்களுக்கே தூக்கிவாரிப் போட்டது.



"என்னாச்சு கதிர்?" குமரன் தான் கேட்டான்.



"ஒன்னில்ல... நான் கிளம்பறேன்..."



"டேய் டேய் கொஞ்சம் இரு மச்சான்...." அபியின் குரல் காற்றோடு கரைந்து போனது.



.......



பால்கனியில் வெளியே வெறித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தவளை சட்டென பின்னால் வந்து அணைத்து தோளில் நாடி குற்றி நிற்க பயத்தில் நடுங்கிய உடல் அடுத்த நிமிடமே விறைத்தது.



அவனுக்கும் புரிந்தது அவள் மாற்றம்...



இருந்தும் என்ன நடந்ததென தெரியாமல் அவனும் என்னதான் செய்வது???



அதனால் தான் நடப்பது நடக்கட்டுமென காதலை உணர்த்த துவங்கி இருந்தான் பெண்ணவளிற்கு...



((அடேய் மடயா... முதல்ல லவ்வ சொல்லித் தொலைடா... உணர்த்த கெளம்பி இருக்காராம்... போடாஆஆங்ங்ங்ங்....))



"விடுங்க" அவள் விடுபட திமிற வயிற்றை சுற்றி இருந்த அவன் பிடி இறுகியதில் நெலிந்தாள் பெண்...



"சாரிடி...."



"...."



"ஆர்த்தி அக்காவ உங்களுக்கு அ... அவ்வளவு புடிக்குமாங்க?" சட்டென விலகியவன் அவள் முகத்தை ஆழ்ந்து பார்க்க தலை கவிழ்ந்தாள் பெண்...



"என்ன விடுங்க... நீங்க பிடிக்கறது எனக்கு பிடிக்கலன்னு சொல்லி இருந்தா விட்ருப்பேன் வர்ஷினி... பொம்மையை பத்தி கேட்டு தான் நீ என்ன திசை திருப்பனும்னு அவஷியம் இல்ல... போ... போய் நிம்மதியா தூங்கு... நா டிஸ்டர்பா இருக்க மாட்டேன்...." அவன் கண்டு பிடித்து விட்டதில் சங்கடமாய் இருந்தாலும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் ரூம் வாசலை நெருங்க



"இன்னிக்கு.... ஐ மீன் இப்போதைக்கு மட்டும் தான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னேன்... நாளைக்கு பண்ணுவேன்... இத மாதிரி காரணங்கள சொல்லி கிட்டு இருந்தீன்னா அப்பறம் நடக்கறதுக்கு நா பொறுப்பு கிடையாது" அதிர்ந்து நின்றவளை பார்த்து சிரிப்பு பொங்கினாலும் அடக்கிக் கொண்டவன் அவள் கண்ணங்களை தட்டி விட்டு உள்ளே சென்று விட அப்படியே நின்றிருந்தாள் பாவை.....



தொடரும்.....



08-08-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 09 [ A ]



கிருஷ்ணன் க்ரூப்ஸ் ஆப் கம்பெனீஸ் தலைமையகம்....



சுழல் நாட்காலியில் யோசனையுடன் அமர்ந்திருந்தான் ரக்ஷன்.

இப்பொழுதெல்லாம் மனதிற்குள் விபரீத எண்ணங்களே அதிகமாய்...

செத்து விடலாம் அல்லது எங்காவது போய்விடலாம்... அப்படித்தான் அடிக்கடி வருகிறது.

அவனும் கதிரிடம் பேச அவ்வளவு முயற்சிக்கிறான்.... ஊஹூம் முகத்தை காணவே மறுப்பவனிடம் என்ன தான் செய்வது???

பிழை தான்... அவன் செய்தது முழுக்க முழுக்க துரோகம் தான்... இருந்தும் அவனொன்றும் வேண்டுமென செய்யவில்லையே???

அம்மாவை காப்பாற்றப் போய் உயிர் நண்பனை இழந்து விட்டானே!!!

அதிலும் கதிர் யாரிடமும் அதை மூச்சுக் கூட விடாதது இன்னுமின்னும் கூனிக் குறுக வைத்துக் கொண்டிருந்தது.

அந்த ராம் எங்கிருக்கிறான் என்று அவனுக்குமே தெரியாது... இருந்தால் தந்தையென்றும் பார்க்காமல் எப்போதோ கொன்றிருப்பான்..



"எஸ்கியூஸ் மீ" திடீரென கேட்ட குரலில் சட்டென கலைந்தவன்

"கம் இன்" என்றான் சுரத்தே இல்லாமல்...

வந்திருந்தது அர்ச்சனா.

"சார்"

"...."



"ரித்விக் சார்"

"ஹாங்... சாரி சாரி அர்ச்சனா... சொல்லுங்க"



"இன்னிக்கு மிஸ்டர். குப்தா கூட ***ஹோட்டல்ல மீட்டிங் இருக்கு" அவனை ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டே சொன்னாள் பெண்...



"ஓஹ்..."



"அப்பறம் இதுல சைன் வேணும்" நீட்டிய பைலையல்லாது அவன் வேறு பைலை எடுக்கப் போக



" சார் சார்... இது.. இந்த பைல்" அவசரமாக அவன் முன் வைக்க



" சாரி" மீண்டும் மன்னிப்பு கேட்டான்.



"சார்"



"சொல்லுங்க"



"எனி ப்ரா.. ப்ளம்?" அவளுக்குமே கேட்க ஒரு மாதிரியாக இருந்தாலும் எப்போதும் கலகலவென இருப்பவனை இப்படி பார்க்க கஷ்டமாக இருந்தது பேதைக்கு...



"ம்... நோ.. நோ.. நத்திங்" அதையும் அவன் கொஞ்ச நேரம் கழித்தே சொல்ல புருவம் சுருக்கியவள்



"ஓகே சார்... " எதுவும் பேசத் தோன்றாமல் வெளியேறி விட்டாள்.



..........



"எஸ்கியூஸ் மீ" இரண்டு மணி நேரம் கழித்து அவள் மீண்டும் அனுமதி கேட்க அதற்கும் கொஞ்ச நேரம் கழித்தே பதில் சொல்லவும் என்னதான் ஆயிற்று இவருக்கு என்று தான் இருந்தது பாவைக்கு....



"சார் இன்னும் பிப்டீன் மிடிட்ஸ்ல மீட்டிங் ஆரம்பிக்குது... இப்போவே..."



"அர்ச்சனா ப்ளீஸ் நீங்களே பொய்ட்டு வர்றிங்களா?" சட்டென இடை புகுந்தான் ரக்ஷன்.



"சார்... நீங்களே வர்றேன்னு சொன்னதுக்கப்பறம் தான் இந்த ப்ராஜெக்ட்டுக்கே ஒத்து கிட்டாங்க... நா எப்பிடி?"



"...."



"சார் ஆர் யூ ஓகே?"



"எஸ்... "



"அப்போ கிளம்பலாமா சார்"



"ஓகே " ஒரு பெருமூச்சுடன் அவன் வெளியேற அவனையே தொடர்ந்தவளுக்குள் பெரும் குழப்பம்...



***



'விடிந்து விட்டதா... கடவுளே மறுபடியும் கிருஷ்ஷ பாக்கணுமா?' விழித்தெழுந்தவளுக்கு மீண்டும் மனம் வலித்தது.







'அவன லவ் பண்ணாம இருந்திருக்கலாமே?' அப்படியே அமர்ந்திருந்தவளை கலைத்தார் ராதா.



"அம்மு(அமிர்தா)..."



"என்ன மா?"



"ஏன் உன் மூஞ்சு இப்பிடி இருக்கு... வந்ததிலிருந்து நானும் பாத்துகிட்டே இருக்கேன்... நேத்து எங்களுக்குமே அதிர்ச்சி தான்.. ஆனா அழற அளவுக்கு இல்ல" நேற்று அவள் உடனே படுத்து விட்டதால் நேற்றைய கேள்விகள் இன்று தொடர்ந்தன.



"சொல்லு...அந்த தம்பி கூட உன் கிட்ட நல்லா பேசுச்சே... அன்னக்கி வீட்ல பாக்கறதுக்கு முன்னாடியே தெரியுமா? "



"...."



"அம்மு... என்னமா... அம்மா கிட்ட சொல்லு" அவளருகே அமர்ந்து கூந்தல் வருடவும் அடக்கி வைத்திருந்த சோகம் கேவலாய் கிளம்ப அனைத்தையும் சொல்லி கதறியவளை பார்த்து வலித்தது தாய் மனம்...



.........



"முடில.... " வெளியே எங்கோ போய் விட்டு உள்ளே நுழைந்தான் அபி.



"எங்கே எல்லோரும்....? " சோபாவில் தொப்பென அமர்ந்தவனின் கண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்தவளை உரிமையுடன் வருடிக் கொடுக்க பேச எண்ணி அருகில் அழைத்தான் தன்னவளை....



"பேபி மா" அவன் அழைக்கவும் முறைத்துக் கொண்டே வந்து நிற்க



"மாமாக்கு தண்ணி எடுத்துட்டு வாடா... ரொம்ப தாகமா இருக்கு" வேண்டுமென்றே சீண்டினாலும் உண்மையில் தாகமாகத் தான் இருந்தது அவனுக்கு...



"ஏன் நீங்க போயி எடுத்து குடிக்க வேண்டியது?"



"தண்ணி கூடவா கொடுக்க மாட்ட பேபி?"



"ஆமா ஆமா"



"பேபி மா எதுக்குடா கோபமா இருக்க? "



"பின்ன நீங்க பண்ண வேலைக்கு உங்கள கொஞ்சுவாங்களா? "



"சாரி மா சாரி... அன்னக்கி..."



"அன்னக்கி மட்டுமில்ல எப்போவும் அப்பிடி தான் நடந்துக்குறீங்க மாமா... நீங்க ரொம்ப மாறிட்டீங்க... முன்னெல்லாம் யார் மனசும் நொந்துட கூடதுன்னு நினைப்பீங்க... இப்போ அப்பிடி இல்ல"



"பேபி மா சாரிடா... சாரி"



"என் கிட்ட எதுக்கு கேக்கறீங்க... அன்னைக்கு அண்ணா ஷாப் முன்னாடி கூட ரொம்ப மோசமா நடந்து கிட்டீங்க... செய்யுறதயும் செஞ்சிட்டு மன்னிப்பு மட்டும் கரெக்டா கேட்டுடுவீங்க... "



"இப்போ நா என்னதான் பண்ணனும்? "



"ஒன்னும் தேவயில்ல அப்பிடியே இருங்க" போக முற்பட்டவளின் கையை எட்டிப் பிடித்தவன் எழுந்து நிற்க அவனை திரும்பி முறைத்தவள் கையை உதறினாள்.



"கைய விடுங்க மாமா"



"விட்றதுக்காக நான் பிடிக்கல பேபி மா"



"என்ன உளறிகிட்ருக்கீங்க... விடுங்க முதல்ல"



"முடியாது "



"மாமா நாம ஹால்ல இருக்கோம்"



"அப்போ ரூம்ல பிடிச்சா"



"ச்சி என்ன பேசறீங்க... விடுங்க முதல்ல..." கையை உறுவ முயல அவன் பிடி இன்னும் இறுகிற்று...



"பேபி மா ப்ளீஸ்... நா சொல்ல வர்றத கேளு... "



"நா எதுவும் கேக்கறதா இல்ல... முதல்ல விடுங்க மாமா"



"ஏன்டி கோபப்பட்ற? "



"நீங்க எல்லோர் கிட்டவும் கோபப்பட்றீங்கல்ல அதான் நா உங்க கிட்ட கோபப்பட்றேன்"



"ஹே பேபி நா சொல்றத..."



"கேக்கறேன் மாமா... கைய விடுங்க" சட்டென அவன் கையை விலக்கவும் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டவள் வேறெங்கோ பார்த்து நின்றாள்.



"பேபி மா நான் பண்ணது பண்றது தப்பு தான்... பட் கோபம் வரும் போது நான் நானாகவே இல்லடி"



"அதான் சொல்றேனே மாமா... நீங்க மாறிட்டீங்க.... கோபமே வராத உங்களுக்கு கூட கோபம் வருதுன்னா என்ன சொல்றது?"



"சரிடி வாயாடி இனிமே கோபப்படல... சிரி"



"நான் வாயாடியா உங்களுக்கு... நீங்க தான் லூசு"



"எத??? லூசா... சரி பரவாயில்ல உனக்கு லூசாவே இருக்கறேன்...."



"ஐயே ரொம்பத்தான்"



"அதெல்லாம் அப்பிடி தான்.... அப்போ கடைசி வர குடிக்க தண்ணி கூட கொண்டு வர மாட்ட? "



"இனிமே கோபப்பட மாட்டேன்னு சொன்னதால தர்றேன்... திரும்ப இப்பிடி நடந்துகிட்டீங்க.... அப்பறம் என் கூட பேசாதிங்க" அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு உள்ளே செல்ல தலையாட்டி சிரித்துக் கொண்டான் அபி.



அவன் அவளிடம் கவரப்பட்டதே இதில் தானே!!!



சின்ன வயதிலிருந்து யார் தப்பு செய்தாலும் அமைதியாக இருப்பவள் அவன் செய்தால் மட்டும் பத்ரகாளி ஆகி விடுவாள்.



ஏனோ ஒருவித உரிமையுணர்வு இருவருக்குள்ளேயும் இழையோடிக் கொண்டிருக்க அவன் உணர்ந்து கொள்ள அவள் மறுக்கிறாள்!!!



***



மனம் ஒருநிலையிலல்லாமல் தவித்திக் கொண்டிருக்க முக்கியமான ஆடர்களை பார்த்திருந்தவன் அது முடியாமல் போகவும் நேரே ஆபிஸ் ரூமிற்கு வந்து கண்மூடி சாய... மூடிய இமைகளுக்குள் வந்து போனான் நண்பன்.



'ச்சே... இவன் கூட பேசாம இருந்தாலும் நமக்கு தான் எரிச்சலா இருக்கு' மனதிற்குள் திட்டிக் கொண்டே ரக்ஷனின் பாதுகாப்புக்கு வைத்திருந்த பாடிகார்டுக்கு அழைத்தான் கதிர்.



"சொல்லுங்க சார்"



"இஸ் ரக்ஷன் சேஃப்?"



"எஸ் சார்"



"எங்க இருக்கான்?"



"ஏதோ ப்ராஜெக்ட் விஷயமா மிஸ்டர்.குப்தாவ மீட் பண்ண வந்திருக்காங்க போல"



"ம்.... ஓகே... ப்ராப்ளம்னா கால் பண்ணு" அழைப்பை துண்டித்தவனுக்கு அவன் அப்படி நடந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வந்த நொடி கோபத்தில் சிவந்தது முகம்.



***



ப்ராஜெக்ட் பற்றி பேசும் போது கூட ஏதோ மாய உலகில் இருப்பவனை போல் அமர்ந்திருந்தவனை பார்த்து மீண்டும் மீண்டும் குழம்பியவள் தானே அனைத்தையும் கவனித்து சரியாக முடித்து அவனை உலுக்கி சைன் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்து விட்டு அவன் புறம் திரும்ப அப்போதும் அப்படியே தான் அமர்ந்திருக்கவும்



"சார்... எதிர்ல இருக்க அந்த பார்க் வர நடந்து பொய்ட்டு வர்லாமா?" என்றாள் அவன் மனதை மாற்றும் பொருட்டு...



அவளையே பார்த்திருந்தவன் சரியென தலையாட்ட அவனிடம் கேட்க வேண்டுமென்ற முடிவுடன் எழுந்து நடந்தாள் பாவை...



"சார்..."



"ம்...." சுற்றுப் புறம் பார்த்துக் கொண்டே வந்ததில் இலேசாக தெளிந்திருந்தான் போலும்...



"ஏற்கனவே கேட்டுட்டேன் தான்... இருந்தாலும் திரும்ப கேக்கறேன்.... ஏன் இப்பிடி நடந்துக்குறீங்க.... என்ன ஆச்சு உங்களுக்கு?" வேதனையில் அவன் முகம் கசங்கவும்



"இல்ல சார் நாம வேற ஏதாவது பத்தி பேசலாம்" உடனே மறுத்தவளை பார்த்து அழகாக விரிந்தன அவன் உதடுகள்....



"அட.... சிரிக்குறீங்க சார்"



"ஏன் எனக்கு சிரிக்க வராதா? "



"இந்த கொஞ்ச நாளா அப்பிடி தான் இருக்கீங்க" மீண்டும் அவன் முகம் கலையிழக்க நொடிக்குள் தன்னை மீட்டுக் கொள்ள "தட்... தட்.... " என்ற கை தட்டுமோசையில் இருவருமே திடுக்கிட்டு முன்னால் பார்த்ததில் வந்திருந்தவனை பார்த்து பயந்து தனக்குள் ஒன்றிய அர்ச்சனாவை புருவ முடிச்சுடன் திரும்பிப் பார்த்தான் ரக்ஷன்.



"நி... நி... நிதின்...." அவள் பெயரை உச்சரிக்க சடாரென திரும்பியவன் உக்கிரமாக முறைத்து வைத்ததில் "பார்டா... சாருக்கு கோவமெல்லாம் வருது" நக்கல் தொனித்தது அவன் குரலில்....



................



"சார்...."



"சொல்லு... எனி இஷ்யூஸ்...?" இம்முனையில் கதிரின் குரல் குழப்பமாய் வந்தது.



"அந்த நிதின் ரக்ஷன் சாருக்கு முன்னாடி வந்து பேசிகிட்ருக்கான்... அவரோட இருந்த பொண்ணு கூட பயந்து போய் இருக்கு.... அவரும் கோபமா இருக்குறா மாறி தான் இருக்கு சார்....."



"சரி நீ லோக்கேஷன் அனுப்பி விடு... நா வந்தட்றேன்" பேசிக் கொண்டே அவசரமாய் கிளம்பி இருந்தான் கதிர்வேல்.



...................



"உன்ன பாக்கவே பிடிக்கலன்னு என் அம்மா வேலைக்கு அனுப்புனா.... வேலைக்கு போறேங்குற பேருல நீ எவன் கூடவோ கூ.... "



"ஏய்..... " அவனை அடுத்த வார்த்தை பேச விடாது ரக்ஷன் கத்தியதில் சட்டென நிறுத்தியவனுக்கும் கொஞ்ச நேரம் நா வரண்டு போனது.



"முதல்ல ஒரு பொண்ணு கிட்ட மரியாதயா பேச கத்துக்கோ.... "



"அத சொல்ல நீ யாருடா.... " தன்னை சமாளித்தவன் "ஏய் வாடி.... " கத்திக் கொண்டே வந்து கையை பிடிக்கப் போக அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவன் தன் கைக்குள் இறுக்கப் பற்றிக் கொண்டான் பெண்ணவள் கையை.....



குனிந்து தன் கையை பார்த்தவள் அப்படியே நிமிர்ந்து அவனை பார்த்த நொடி மனம் என்றுமில்லாத பாதுகாப்பை உணர்ந்ததில் நெகிழ்ந்தது நெஞ்சம்.







"என் மேலயே கை வெக்கிறியா?" மீண்டும் அவன் சீறிக் கொண்டே முன்னே வர



"நிதின் திஸ் இஸ் தி லிமிட்..." பல்லை கடித்தவாறே பளாரென அவன் கண்ணத்திலொன்று விட்டான் ரக்ஷன்.



"ஏய் வாங்கடா...." அடிபட்ட அவமானத்தில் அவன் கத்த மறைத்திருந்த அடியாட்கள் திடீரென பாயவும் கதிரின் ஜீப் பார்க் வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருக்க திடீரென வந்த தலைசுற்றலை கண்களை இறுக்க மூடித் திறந்து விரட்டியவன் அர்ச்சனாவை முதுகுக்குப் பின்னால் இழுத்து நிறுத்தி வைத்தான்.



"என்னடா பாத்துட்ருக்கீங்க... அவள இழுத்துட்டு வாங்க...." நிதின் கத்தவே ஒருவன் முன்னால் செல்ல ரக்ஷனை அடிக்க கையோங்க...



அது வரை மட்டுமே நிதினுக்கு கண்ணுக்கு தெரிந்தது...



அடுத்த நிமிடம் அவன் துடித்து கொண்டே விழவும் அதிர்ச்சியாய் நிமிர அங்கே ரக்ஷனுக்கு முன்னால் அசுரனாய் நின்றிருந்தான் கதிர்வேல் கிருஷ்ணா!!!



"வே.. வேலு....வேலு இது அவனுக்கும் எனக்கும் இடையிலுள்ள பிரச்சன.... நீ நடுவுல தலையிடாத" அவன் குரல் நடுங்கியது.



கதிர்வேலின் கோரதாண்டவம் அறியாதவனா அவன்???



கதிரிடம் எதற்குமே பதிலல்லாது போகவும்



"இதோ பார் வேலு.... நா உன்கிட்ட பிரச்சனை பண்ண வர்ல... இது... " பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கண் காட்டவும் "சாஆஆர்" என்ற அர்ச்சனாவின் அலறல் கேட்கவும் சரியாக இருக்க பதற்றமாய் திரும்பியவன் நண்பனிருந்த நிலை பார்த்து கதிகலங்கித் தான் போனானோ???



வாயில் நுரை தள்ளி கண்கள் சொறுக தன்னையே பார்த்திருந்தவனை கண்டு கண்கள் அதிர்ச்சியில் தெறிக்க "ரக்ஷன்...." அலறியவன் ஏதோ யூகித்தவனாய் சட்டென குனிந்து



"இடியட் இடியட் பாய்சன் சாப்டியாடா?" நண்பன் கண்ணங்களை கோபமாக தட்டினான்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"டேய்... இடியட்..." திட்டிக் கொண்டே பதற்றமாய் தட்டவும் ரக்ஷனுக்காக நியமிக்கப்பட்ட ஆள் வரவும் சரியாக இருக்க அவனிடம் நண்பனை ஒப்படைத்து விட்டு அர்ச்சனாவையும் அவர்களுடன் அனுப்பியவாறே திரும்பினான் மற்றவர்கள் புறம்...



வேட்டியை மடித்துக் கட்டி கையிலிருந்த ஐம்பொன் காப்பை அவன் மேலேற்றிய விதமே அடிக்க வந்தவனை பின்வாங்கச் செய்ய கத்தினான் நிதின்.



"இங்க பாரு வேலு... உனக்கும் எனக்கும் பேச்சு வார்த்த இல்ல... மரியாதையா விலகிடு..." தைரியமாக பேச முயன்றாலும் வார்த்தை தடுக்க காதை வேண்டுமென்றே குடைந்தவன்



"சரியா கேக்கல திரும்ப சொல்லு" என்றான் முகத்தில் எள்ளல் வழிய...



"ஏய் வேணாம் வேலு... நான் யாருன்னு உனக்கு தெ... தெரியாது"



"நீ யாருங்குறத தெரிஞ்சு நான் என்னடா பண்ண போறேன்?"



"ஏய்... அடிச்சு கொல்லுங்கடா அவன" அவன் நடுவிலிருந்து கத்த அவனை நோக்கி வந்தவர்களை அவன் என்ன செய்து அந்த நிலமைக்கு தள்ளி விடுகிறானென சத்தியமாக தெரியவே இல்லை நிதினுக்கு...



கடைசியில் இருவர் மட்டுமே எஞ்சியிருக்க



"வேலு.... மறுபடியும் சொல்றேன்... இது உ.. உ... னக்கு" அவன் முன்னே வர பேச்சு தடைபட்டது பயத்தில்...



அவன் ஷர்ட் காலரை கெத்தாக பற்றியவன் என்ன நினைத்தானோ பிடியை விட்டு விட்டு தலையாட்டி சிரித்துக் கொண்டான்.



"நிதின்.... உன் பேரு கூட என் பாடிகார்ட் சொல்லி தான் தெரியும் எனக்கு... உன்னெல்லாம் எதிரியா வெச்சுகிட்டு நா என்ன பண்ண போறேன்.... அதனால... பேசாம ஓடிடு..." தப்பித்தோம் பிழைத்தோம் என திரும்பியவனை சொடக்கிட்டு அழைத்தவன்



"நீயும் நானும் எதிரி இல்ல பட்.... என் நண்பனுக்கு எதிரியா இருக்கனும்னு முடிவு பண்ணி இருந்தேன்னா இன்னியோட அத டெலிட் பண்ணிடு... ஏன்னா அப்பறம் வாழ்நாள்ல மறக்க முடியாத எதிரியா நானா தான் மாறுவேன்.... மனசிலாயி?" கண்ணத்தை தட்டி விட்டு விறுட்டென வெளியேறினான் நண்பனை பற்றியறிய....



........



ஹாஸ்பிடல்....



தலை குனிந்து அமர்ந்திருந்த அர்ச்சனாவுக்கு அருகே நின்றிருந்த பாடிகார்டிடம் பதற்றமாய் நெருங்கினான் கதிர்.



"என்ன ஆச்சு?"



"நோ ப்ராப்ளம்னு சொன்னாங்க சார்... பட் அவர் வாயில நுரை வர்றதுக்கு காரணம் நாம நெனக்கிறா மாறி பாய்சன் இல்லயாம்... வேறு ஏதோ..."



"வாஆஆட்..." அதிர்ந்து கத்தினான் கதிர்.



"எஸ் சார்... டாக்டர் அப்பிடி தான் சொன்னாரு"



"சரி நீ இரு நா டாக்டர பாத்துட்டு வந்தட்றேன்"



.....



" எக்ஸ்க்யூஸ் மீ"



" கம் இன்... வாங்க மிஸ்டர். கதிர்... ஹேவ் அ ஸீட்"



"ரக்ஷனுக்கு என்னாச்சு.... காரணம் பாய்சன் இல்லன்னு நீங்க சொன்னதா சொன்னானே?"



"எஸ் மிஸ்டர். கதிர்... பேஷன்ட்டுக்கு நுரை தள்ளியிருக்கறதுக்கான காரணம் பாய்சன் கிடையாது "



"வட் டு யூ மீன்?"



"பேஷன்டுக்கு பொட்டாசியம் சயனைட் கலந்த ஊசி செலுத்தி இருக்காங்க... அது செலுத்தினது கூட இப்போ இல்ல... கொஞ்ச நாள் அல்லது ரொம்ப நாளுக்கு முன்னால செலுத்தப்பட்டிருக்கு.... பொட்டாசியம் சயனைட் உடம்புல பட்டாலே நம்ம சுயநினைவு இழந்து இறந்து போயிடுவோம்... பட் இவருக்கு உடனே இறக்காம இருக்கறதுக்காக விஷ முறிவு மூலிகை அப்பறம் உடம்புல மாற்றங்கள் தெரியாம இருக்க சில மாத்திரைகள்னு கலந்து கொடுக்கப்பட்டிருக்கு... கடவுளோட சித்தம் போல அவருக்கு பொட்டாசியம் சயனைட் உடம்புல தாக்கத்த ஏற்படுத்த முன்னாடி அவங்க சேர்த்திருக்கற அந்த விஷ முறிவு மூலிகை இவர காப்பாத்தி இருக்கு" அசைவற்று அமர்ந்திருந்தான் கதிர்...



அவனுக்கு அவர் சொன்னதை ஜீரணிக்கவே சில கணங்கள் தேவைப்பட்டது!!!



அவ்வளவு பாதுகாப்பு கொடுத்துமா நண்பனுக்கு இந்நிலை???



கடவுளே.... என்ன தான் நடக்கிறது???



"இனி உயிருக்கு ஆபத்து வராதில்ல?"



"இல்ல கதிர்... ஹீ இஸ் பர்பக்ட்லி ஆல்ரைட்... இனி எந்த இஸ்யூஷும் இல்ல"



"தேங்க் காட்"



"கதிர்... ஆர் யூ ஓகே?? " டாக்டரின் குரலில் நடப்புக்கு வந்தவன் இருக்கையை விட்டு எழுந்த வேகத்தில் பயந்து போனார் அவர்...



"நா... நான் நான் ரக்ஷன பாத்துட்டு அப்பறமா வந்து பேசறேன் டாக்டர்" அவர் பதிலை எதிர்பாராமலேயே விறுட்டென வெளியேறிவன் வராண்டாவில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டான்.



உலகமே தட்டமாலை சுற்றிக் கொண்டிருந்தது.



அவனை சுற்றி பின்னப்பட்ட வளையின் ஓர் அங்கம் தானா இதுவும்???



எங்கு தவறு நடந்தது???



நண்பனை விட்டு நகரக் கூட இல்லையே அவன்???



சட்டென பொறி தட்டியது மண்டைக்குள்... ஆமாம் அன்று கடத்தப்பட்டானே.... அப்போது தான் ஏதோ நடந்திருக்க வேண்டும்!!!



சற்றும் தாமதிக்காமல் குமரனுக்கு அழைக்க உடனே ஏற்கப்பட்டது அழைப்பு...



"சொல்லு கதிர்"



"குமரன்... அன்னக்கி ரக்ஷன கிட்னாப் பண்ணி வெச்சிருந்தாங்கல்ல?"



"ஆமா... ஏன் டா?"



"நீ உடனே கிளம்பி போயி அங்கே சந்தேகம் வர்றா மாதிரி ஏதாவது பொருள் இருக்கான்னு பாத்து எடுத்துட்டு வா... அப்பறமா பேசறேன்"



"ம் ஓகே டா" அழைப்பை துண்டித்து விட்டு எழுந்து நடந்தவனின் மூளை தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.



..........



"சார் ஆர் யூ ஓகே?" மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியையே கேட்டுக் கொண்டிருப்பவளை பார்த்து புன்னகைத்தான் ரக்ஷன்.



"சும்மா சிரிச்சு மழுப்பாம வாய திறந்து பேசுங்க ரித்விக் சார்"



"ஐ அம் ஓகே அர்ச்சனா"



"ம்... குட்" தலையாட்டி அவள் சொன்ன விதத்தில் மீண்டும் புன்னகைக்க கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் நண்பன்.



புன்னகை அப்படியே மறைந்து போக கண்கள் மன்னிப்பை யாசித்துக் கொண்டே இருக்கவும் கதவு திறக்கப்பட்டதில் சட்டென திரும்பிப் பார்த்தவள் எழுந்து நிற்க நண்பனருகே வந்தான் கதிர்.



"சாக இருக்குற நேரத்துல மட்டும் தான் என் கூட பேசுவியா மச்சான்....?" கண்கள் கலங்க அவன் கேட்ட கேள்வியில் அவனையே பார்த்திருந்தவன் அர்ச்சனாவிடம் கண்ணை காட்டி விட்டு எதுவும் பேசாமல் வெளியேற கண்களை இறுக மூடித் திறந்தான் ரக்ஷன்.



.........



இரவு....



தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனுக்கு மனைவி அப்போதும் ரூமிற்கு வராதது கருத்தில் படவே இல்லை...



மொபைல் சிணுங்கலில் சட்டென கலைந்தவன் எடுத்து பேசி விட்டு வைக்கவும் தான் உணர்ந்தான் மனைவி இல்லாதது.



'எங்க போனா' வெளியே செல்ல சோபாவை விட்டு எழவும் அவள் உள்ளே நுழையவும் சரியாக இருக்க தலை குனிந்தே இருக்கும் அவள் தோற்றம் சிரிப்பை தான் வரவழைத்தது காளைக்கு...



"வர்ஷினி...." அவன் அழைப்பில் விழுக்கென நிமிர்ந்தவள் அவனையே பார்க்க



"என்ன மாமான்னு கேளு சொல்றேன்" என்றான் அவளை சீண்ட எண்ணி....



"சொ... சொல்லுங்க"



"அட... நான் சொல்றத கேக்க கூடாதுன்னு முடிவெல்லாம் பண்ணி இருக்க... தைரியம் தான் போ"



"...."



"நா இன்னும் சாப்புடவே இல்ல... எனக்கு பசிக்குது... புருஷன் சாப்டானா இல்லயான்னு கவலை கூட இல்லல்ல உனக்கு? "



"அச்சோ மாமா அப்பிடி இல்ல... இருங்க இதோ எடுத்துட்டு வர்றேன்.... சாரி மாமா " அடுத்த நிமிடம் மாயமாய் மறைந்தவளை பார்த்து வாய்விட்டுச் சிரித்தான் கதிர்.



........





அவள் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வருவதற்குள் சோகமாய் முகத்தை மாற்றிக் கொண்டு அமர்ந்திருந்தான் அந்தக் கள்வன்.



"சாப்புடுங்க" அவனருகில் சென்று அவள் நீட்டவும்



"என் கை பாரு ரொம்ப காயமா இருக்கு.... நீயே ஊட்டி விடு கண்ணம்மா" பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சிய கணவனை சந்தேகமாய் பார்த்து வைத்தாள் மனைவி.



பின்னே போகும் போது கையில் இல்லாத கட்டு வரும் போது இருந்தால்???



"ஊட்டு கண்ணம்மா ரொம்ப பசிக்குதுடி" அப்பாவியென்றால் அத்தனை அப்பாவித்தனம் முகத்தில்...



இலேசாக சிரிப்பு கூட எட்டிப் பார்த்ததோ பேதைக்கு....



எதுவும் பேசாமல் அவள் ஊட்ட அவளையே பார்த்திருந்தவனின் பார்வை சுவாரஷ்யமாய் அவனவளில் படிந்தது.



"நீ சாப்டியா?" இடையில் வந்து விழுந்த அவன் கேள்விக்கு தலையை மட்டும் ஆட்டி வைத்தவள் மறந்தும் அவன் கண்களை பார்க்கவே இல்லை...



அவன் கண்களில் தெரிந்த காதல் அவளை புரட்டிப் போட்டு என்னவோ செய்தது உண்மையிலும் உண்மை!!!



"தண்ணி?"



"தோ...." அவள் க்ளாஸை நீட்ட



"கை ரொம்ப வலிக்குது கண்ணம்மா..." குறும்புக் கண்ணனாய் உதட்டை மீண்டும் வளைத்தான் கணவன்.



அவனருகே சென்றவள் நீரை புகட்டி விட்டு தண்ணீர் க்ளாஸை டேபிளில் வைத்து விட்டு நிமிர கையை பிடித்து அவன் இழுத்ததில் அவன் மடியிலேயே வந்து விழுந்தாள் காரிகை.....



அவள் எழ முற்படவும் அவள் கைகளோட தன் கைகளை அடக்கி வளைத்துப் பிடித்தவன் அவள் முதுகில் தன் நெஞ்சம் படுமாறு அமர்ந்திருந்தான்.



"வி... விடுங்க...."



"ஊஹூம் முடியாது"



"ப்... ப்ளீஸ்..."



"நான்தான் சொன்னேன்ல உன்ன டிஸ்டர்ப் பண்ணுவேன்னு.... நீ எதிர்பார்த்துட்ருக்க வேணாமா பேபி?"



"வி... விடுங்க"



"தேஞ்சு போன ரெக்கார்ட் மாறி திரும்ப திரும்ப அதே சொல்லிட்ருக்காத கண்ணம்மா.... ஏன்னா நா இன்னிக்கு உன்ன விட்றதா இல்ல"



"...."



"சரி... எதுக்கு கோபம்னு சொல்லு விட்றேன்" அவள் திமிறல் அப்படியே அடங்கிப் போக மீண்டும் இழுத்து பக்கத்தில் அமர வைத்தவன் அவள் கண்ணம் தாங்க அலைபாய்ந்து தவித்தன பெண்ணவள் கயல்விழிகள்.



"என்னடா....? " அவன் கனிவில் அவன் நெஞ்சிலேயே தலைசாய்த்து விட மாட்டோமா என்றிருந்த பேதையின் எண்ணங்களை சட்டென படித்தவன் போல் அவளை இறுக்க தனக்குள் அணைத்துக் கொள்ள கணவனுக்குள் முதன்முறை விரும்பி ஒன்றினாள் பாவை.....



..........



ஹாஸ்பிடல்....



நேற்றிரவு கதிர் சென்றிருக்க அபியும் குமரனும் தான் நின்றிருந்தனர்.



"குமரா....நேத்து கிளம்பி போனியே என்ன ஆச்சு?"



"சந்தேகம் வர்றா மாறி எதுவும் இல்ல ஆதி.... பட் ஏதோ இன்ஜெக்ஷன் மாதிரி இருந்துது... எதுக்கும் இருக்கட்டுமேன்னு எடுத்து கிட்டு வந்திருக்கேன்... கதிர் ஏன் கேட்டான்னு தெரிலடா"



"முக்கியமான விஷயமா இருக்கும்.... இப்போ வந்துடுவான்.... பாக்கலாம்"



"ஆதி.... ஷாலினியோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போட் வந்துடுச்சா.... செக் பண்ணிட்டியா.... கேஸ் போட்டிருக்கா? "



"ப்ச் நோ டா.... அன்னக்கி ரக்ஷன் கூட போய் கொடுத்துட்டு வந்துட்டேன்.... அதுக்கப்பறமா கிருஷ் மேலுள்ள கோபத்துல மறந்தே போயிட்டேன்.... கேஸ் கூட இனிமே தான் பாக்கணும்.... அவன் இத பத்தி பேச கூட மாட்டேங்குறான்.... முறுக்கி கிட்டு திரியுறான்.... இன்னிக்கு தான் கேக்கணும்.... "



"இதே ஹாஸ்பிடல் டாக்டர் தானேடா... கதிர் வரும் வர நீ போயி ரிப்போர்ட்ட வாங்கிட்டு வந்துடு... அந்த ராம் பத்தி ஏதாவது சின்ன க்ளூ கிடைக்கலாம்" அவன் கூற்றை ஆமோதித்தவனாய் டாக்டரை தேடிச் செல்ல ரக்ஷனிடம் சென்றான் குமரன்.



***



கணவனுக்கு காபி எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு கணவன் தோற்றம் மூச்சடைக்க சட்டென திரும்பி கண்களை இறுக மூடிக் கொண்டாள் காரிகை...



அப்போது தான் குளித்து முடித்து வந்திருப்பான் போலும்....



வெற்று மார்புடன் இருந்தவனின் கட்டமைப்பான உடல்வாகுக்கிடையில் நீர்த் திவலைகள் வழிந்தோட மனைவி திரும்பி நிற்பதை கண்டவனின் உதட்டில் விஷமப் புன்னகை மலர அழுத்தமாய் அவள் முதுகுப் புறம் வந்து நின்று அவள் கழுத்தில் முகம் புதைக்கவும் அவன் மூச்சுக் காற்று பட்டதில் மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க சிலிர்த்து பெண் தேகம்...



பிடித்திருந்த காபி கப்பில் அவள் அழுத்தத்தை கூட்டவும் சேலைக்குள் மறைந்திருந்த இடையினூடு கைகளை கொண்டு போனவன் தனக்குள் இறுக்க கண்கள் இன்னுமின்னும் இறுக்கி மூடினாள் மாது.



"வரு..." மோகமாய் அவள் காதில் கிசுகிசுக்க அந்த ஒற்றை அழைப்பில் மொத்தமாய் பெண்ணவளுக்கு வடிந்து போயிற்று அதுவரையிருந்த மோகம்!!!



அவன் கையை விலக்கி விட்டு சட்டென விலகியவளுக்கு கணவன் தன் உருவ அமைப்பில் இருப்பவளை நினைத்துத் தான் உருகி கரைகிறான் என நினைவு உணர்த்தியதில் நெஞ்சம் துடிக்க கண்களில் மலுக்கென எட்டிப் பார்த்தது கண்ணீர்....



திடீரென அவள் பதறி விலகியதில் கொஞ்ச நேரம் பிடித்தது காளைக்கு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள...



கட்டிலிலிருந்த ஷர்ட்டை அவசரமாக அணிந்து கொண்டவன் தலையை அழுத்தக் கோதிக் கொண்டு அவளை பார்க்க அவள் கண்களில்.... அவள் முகத்தில் தெரிந்த சோகம்... வேதனை... வலி.... அவனுக்குள்ளும் சுளீரென வலித்தது.



காபி கப்பை எடுத்து வைத்தவன் அவள் கன்னம் தாங்கிய அடுத்த நிமிடம் அவளதரங்களை ஆழமாக கவ்விக் கொள்ள தானாய் மூடிக் கொண்டன பேதையின் கண்கள்...



"கண்ணம்மா.... நா உன்ன ரொம்ப ஹேர்ட் பண்ணி இருக்கேன்னு புரியுது.... பட் எல்லா நிலையிலயும் ஒன்னே ஒன்ன ஞாபகத்துல வெச்சிக்கோ.... எப்போவும் என் மனைவிக்கு தவிர.... அதாவது உனக்கு தவிர இங்க (இதயம்) வேறு யாருக்கும் எவளுக்கும் உரிமை இல்ல... என் மனசுல நீ... நீ மட்டும் தான் இருக்க... நான் லவ் பண்ணது உன்ன தான்.... விக்ரம் மகள் வர்ஷினிய இல்ல.... இதில் தான் நீ குழப்பமா இருக்கன்னா அந்த குழப்பமே தேவயில்ல... உருவ ஒற்றுமைல ஒன்னா இருந்தாலும் உன் கிட்ட வர்ற உணர்வு வேறு எந்த பொண்ணு கிட்டவும் வந்ததே இல்ல... அந்த உணர்வு உன் கிட்ட மட்டும் தான் வரும் பிகாஸ் ஐ லவ் யூ.... யூ மீன் யூ ஆன்லி.... நாட் விக்ரம்ஸ் டாட்டர்.... " நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவன் வெளியேற வேறோடியது போல் நின்றிருந்தவளுக்கு அவனை திரும்ப அழைக்க கூட விடாமல் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது நாவு.



கணவன் மனதில் அவள் தான் இருக்கிறாளா???



தவறாக புரிந்து ஒவ்வொரு தடவையும் அவன் உணர்வுகளை தடைபட செய்தாளா???



மனதிலிருப்பதை படித்தவன் போல் எவ்வளவு அழகாக காதலை சொல்லி விட்டான்!!!



மலர் தூவி சொல்லும் காதலை விட எந்த விதத்தில் குறைந்து போனது அவன் காதல்???



அவளுக்கு மலரெல்லாம் தேவையே இல்லை.... அவன் சொன்ன அந்த ஒற்றை சொல்லே போதும்!!!



ஆனால்???
 
Status
Not open for further replies.
Top