All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'என்னவளே' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இறுதி அத்தியாயம்



"கதிர்..." திரும்பி வெளியேறப் போனவனை மேலிருந்து அழைத்தாள் மனைவி.



கண்களை இறுக மூடித் திறந்தவன் நிர்மலமான முகத்துடன் அவளை நோக்கி திரும்ப ஒரே நொடியில் அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திய விதம் அபியின் புருவங்களை உயரச் செய்திருந்தது.



"நீ போ நா வர்றேன்" மீண்டும் வர்மனிடம் திரும்பியவன்



"ராத்திரி பாக்கலாம்... நீ போய் ரெஸ்ட் எடு" அபியை தொட்டு மீண்ட பார்வையுடன் மீண்டும் மேலே ஏறிச் செல்ல அபிக்குத் தான் பதற்றம் தொற்றிக் கொண்டது போலும்...



....



"என்ன வரு?" உள்ளே நுழைந்தவாறே கேட்ட கணவனை முறைத்தாள் மாது.



"அமிர்தவர்ஷினிங்குற பேரு அழகு தான் கதிர்... பட் அவளும் என்ன மாதிரி இருக்கறதுனால தானே அந்த பேரு சொல்லி கூப்பட்றீங்க... அதனால எனக்கு பிடிக்கல..."



"சரி..." ஆமோதிப்பாய் தலையசைத்தவன் திரும்பி நடக்க அவன் கைகளை எட்டிப் பிடித்தாள் அவனவள்.



"எங்க போறீங்க...உங்க கிட்ட பேசணும்"



"சரி சொல்லு...."



"ப்ச்... ஏன் கடமைக்கா பேசறீங்க... டைமில்லன்னா சொல்ல வேண்டியது தானே?"



"ம்... சொல்லுடா" அவள் பதிலில் இறுக்கம் தளர்ந்து சிரித்தவன் அவள் பிடித்திருந்த கையை எடுத்து விட்டு தன்னை நோக்கி இழுக்க வந்து மோதியவளின் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்தவாறே கேட்டான்.



"நா சொல்ல மாட்டேன்... நா கோபமா இருக்கேன்... என்ன சமாதானப்படுத்துங்க" அவள் முகத்தை திருப்ப வாய் விட்டுச் சிரித்தவன்



"எனக்கு சமாதானப்படுத்த தெரியாதுடி" என்றான் சிரிப்பினூடே...



"அப்போ கைய எடுங்க... என் கிட்ட பேசாதிங்க..." சட்டென தட்டி விட்டவள் விலக எத்தனிக்க இடையூடு பிடித்து இழுத்தவன் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.



"சரி... சாரி... என்ன விஷயம் சொல்லுடா"



"...."



"கண்ணம்மா... ரொம்ப பிடிவாதமா இருக்க"



"நான் அப்பிடி தான்..."



"ஷ்ப்பாஹ்... உனக்கு ஞாபகம் வராமலேயே இருந்திருக்கணும்டி"



"ஆமா அப்போ தான் என்ன அடக்க முடியும்" கண்கள் ஏனோ கலங்க தன்னை நோக்கி திருப்பியவன்



"ஏன் இப்பிடி பேசற... இந்த வீட்ல நடந்தது வெச்சி தான் அப்பிடி நெனக்கிறியா...?" என்றான் தெளிவு படுத்தும் நோக்கில்...



"... "



"டாக்டர் ஸ்ரீமதியா உன் போல்ட்னஸ் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டியதுன்னு பிரம்மிச்சேன்... அது புடிச்சிருந்துதும் கூட... ஆனா அவ என் பொண்டாட்டி இல்லயே... என்ன காயப்படுத்தினாலும் என் கிட்டயே தஞ்சமாகுற என் பொண்டாட்டி இப்போ காணாம பொயிட்டா... அதுக்காக உன்ன அடக்கி வெக்கனும்னு நா நினக்கல கண்ணம்மா... ஏனோ அவள தான் எனக்கு பிடிக்கும்... அப்போ இருந்த உன் பயந்த பார்வையில் என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாம போயிடும் சில நேரம்... சில நேரங்கள்ல ஏன் என்ன பாத்து மட்டும் பயம்னு கோபம் கூட வரும்... அதனால தான் எதுக்கு பயம்னு திட்டி இருக்கேன்... ஆனா இப்போ இருக்கற நீ மொத்தமா மாறிட்ட... உன் பிம்பம் என் மனசுல வேறடி... இப்போ இருக்கறவளோட க்ளோஸாக எனக்கு டைம் கொடு...



அண்ட்... உன் கிட்ட நா அப்பிடி நடந்து கிட்டதுக்கு ரீஸன இந்நேரம் நீ யூகிச்சு வெச்சிருப்ப... இருந்தும் என் மேல கோபம் எஞ்சி இருக்கு... புரியுதுடா... சாரி... இதுக்கு மேல எப்பிடி சமாதானப்படுத்துறதுன்னு தெரில எனக்கு"



"அப்போ உங்க தங்கச்சிய மட்டும் சமாதானப்படுத்துவீங்க?"



"ஹாஹா... அவ என் குழந்தைடி... அப்பாவுக்கு அது எல்லாம் சொல்லி கொடுக்கணுமா... ஆனா பொண்டாட்டிய சமாதானப்படுத்தறது தான் கஷ்டம்... அத எவனும் சொல்லி கொடுக்கலியே?" அவன் அப்பாவியாய் உதட்டை பிதுக்க



"யூ.... " செல்லமாக முறைத்தாள் மனைவி.



"சரி இப்போ சொல்லு... எதுக்கு கூப்ட?"



"அந்த பூட்டி இருக்க ரூம் யாரோடது?" கோர்த்திருந்த கைகளை எடுத்தவன் முகம் வேதனையில் கசங்கியது.



"அ.. அது அம்மாப்பா அண்ணாவுக்காக நான் ஒதுக்குன ரூம்"



"அ.. அப்போ... உ.. உங்க அம்மாப்பா சி.. சின்ன வயசுலயே இ.. இறந்து போயிட்டாங்களா?" தான் ஆறுதலாக இருக்கவில்லையே என்ற உணர்வு மனமெங்கும் வியாபிக்க அவளால் பேசக் கூட முடியவில்லை...



இதை தான் அன்று ஹாஸ்பிடலில் வைத்து சொன்னானா???



தந்தையாவது இருக்கிறார் என சந்தோஷப்படுக் கொள் என???



"சின்ன வயசுல எல்லாம் இல்ல... விவரம் தெரிஞ்சதுக்கப்பறம் தான்... நான் கல்கத்தாவுல இருக்கற டைம் அம்மாவ கொன்னுட்டான்... அதுக்கப்பறம் அண்ணா... அதே நாள் அப்.. அப்பா..."



"மாமா..." எனும் கூவலுடன் அவள் அணைக்க கண்களை இறுக மூடியவன் தானும் இறுக்க அணைத்து அவளுள் ஆறுதல் தேட முயன்றானோ???



இதுவரை யாரிடமும் வெளிப்படுத்தாத சோகம்... அவளிடம் மன்டும் சொல்லத் தோன்றி விட்டதா???



"சாரி... "



"நீ எதுக்கு மன்னிப்பு கேக்கற.. விடு "



"ய... யாரு கொன்னாங்க?" அவள் உடல் நடுங்க இன்னும் தனக்குள் இறுக்கியவன்



"ராமலிங்கம்" அந்த ஒற்றை சொல்லில் அவன் உடல் விறைக்க பெண்ணுடல் தூக்கிப் போட்டது.



"ஆமா... அன்னிக்கு கோவிலுக்கு வந்தது உனக்கு ஞாபகம் இருக்கா?" சட்டென அவன் வேறு விடயத்திற்கு தாவ கொஞ்ச நேரம் கழித்தே நிதானத்திற்கு வந்தவள் அவனை விட்டு விலகி புரியாமல் நோக்கினாள்.



"அதான்மா... ஒரு தடவ தனியா வந்தியே?"



"நீங்க என்ன பாத்திங்களா?" அவள் கண்கள் திடீரென மின்னிய அடுத்த நொடி முகம் சோர்ந்து போனது.



"அன்னிக்கு என் மனசுக்கு நெருக்கமான ஒருத்தரோட பிறந்த நாள் கதிர்..."



"ஓஹ்..." அவன் முகம் கலையிழந்தது அவள் கவனத்திற் பதியவே இல்லையா???



"ஷக்தி அங்கிள் சன் கண்ணாவோடது... அவர நான் பாத்ததில்ல... ஆனா மனசுக்கு ஏனோ ரொம்ப நெருக்கமான உறவா தோனிச்சி... ஷக்தி அங்கிள் கூட சொல்லுவாரு என் மகன கட்டிக்கோனு... ஆனா அவரே இல்லாம போயிட்டாரே" திகைத்து விழித்தவனுக்கு கடவுள் முடிச்சை எண்ணி வியக்காமல் இருக்க முடியவே இல்லை...



இது தான் ஜென்ம பந்தமா???



தந்தை கடைசியாக உனக்கு ஆர்த்தி பொருத்தமில்லை என சொன்னது கூட இதற்காகத் தானா???



அவள் பார்க்கும் முன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன்

"ஏன் அவன லவ் பண்ணியா?" என்றான் ஒரு மார்க்கமான குரலில்...



"லவ் இல்ல கதிர்... ஏனோ அவர எனக்கும் என் மனசுக்கும் பிடிக்கும்... அங்கிள் அவரோட குறும்புத் தனம் பத்தி பேசும் பொது வாழ்க்கைல ஒரு தடவ சரி சந்திக்கணும்னு தோனும்.."



"அ... அப்... ஐ மீன் உன் அங்கிள் அவன பத்தி பேசுவாரா?" ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அவனுள்...



அந்த நேரம் தந்தையுடன் அப்படி நடந்து கொண்டதற்கு உன்மையில் மனம் ரணமாக வலித்தது.



இது தானா தந்தை பாசம்???



"அவர பத்தி பேசுவாரா இல்ல... அவர பத்தி மட்டும் தான் பேசுவாரு... அவர் குரல்ல அப்பிடி ஒரு பெருமை தெரியும் கதிர்... அப்போ தோனிச்சு கண்ணாவ மாதிரி ஒரு புள்ள கிடைக்க ஒரு அப்பா கொடுத்து வெச்சிருக்கணும்னு... ஷக்தி அங்கிள் அந்த வகைல லக்கினு தான் சொல்லுவேன்..." மலுக்கென கண்ணத்தை தொட்டது அவன் கண்ணீர்....



தந்தைக்கு தன் மீது அன்பில்லை என்றானே???



அப்போது இது???



கண்டிப்பு காட்டுபவர்கள் தான் அதிக அன்பை சுமந்து கொண்டிருப்பவர்களா???



"அதனால கண்ணன எனக்கு பிடிக்கும் கதிர்" அவள் பார்த்து விடாது நாசூக்காக தன் கண்ணீரை சுண்டி விட்டவன் வலுக்கட்டாயமாக புன்னகைத்து வைத்தான்.



"ஷக்தி அங்கிள் வீடு தெரியும்னு சொன்னீங்க... கூட்டிட்டு போங்க"



"குட்டிமாக்கும் அவர நல்லா பழக்கம் தான் கண்ணம்மா... அவ கிட்ட போயி கேளு சொல்லுவா... எனக்கு வேல இருக்கு... ராத்திரி வர லேட்டாகும்... காத்துட்ருக்காம தூங்கு..." கண்ணத்தை தட்டி விட்டு அவன் வெளியேற குழம்பி நின்றவள் உடனே யாழினியிடம் ஓடினாள்.



.....



அந்த பாழடைந்த குடோனுக்குள் நுழைந்தான் அவன்...



அவன் நுழைந்ததெல்லாம் அதிர்வே இல்லை என்பது போல் இருந்தது அவன் தோற்றம்!!!



இறுக்கிப் பிடித்த காக்கி சட்டைக்கு பாந்தமாக அடங்கி இருந்தது அவனுடல்!!!



நானும் அவனுக்கு அழகு சேர்ப்பேன் என்ற கருப்பு நிற கூலர்ஸுக்குள் மறைந்திருந்த கூர் விழிகள் அங்கு கட்டப்பட்டிருந்த மனிதரை பார்த்து மின்னின...



விழவா வேண்டாமா என இடது கையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அந்த ரோலக்ஸ் வாட்ச் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே நிமிர்ந்தவன் உதடுகள் அருகில் நிற்வனின் பிரம்மிப்பு பார்வையில் இலேசாக மலர்ந்து பின் மறைந்தனவோ???



அவன் எ.ஸி.பி கதிர்வேல் கிருஷ்ணா!!!



எதை தந்தைக்காக தூக்கிப் போட்டானோ அதை அந்த தந்தை சாவுக்கு காரணமானவனை அழிக்கும் நேரத்தில் அணிந்திருக்கிறான்!!!



இப்படி பார்க்கத் தானே அவன் தந்தை ஆசைப்பட்டதும்!!!



அதே காக்கி உடை!!!



கிட்டத்தட்ட வருடங்கள் பல கடந்து மீ்ண்டும் சென்னை சிட்டியின் அஸிஸ்டன் கமிஷ்னராக பதவி ஏற்றிருக்கிறான் நாளை தான் அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு....



அதுவும் இரவு ஒரு மணிக்கு!!!



கூலர்ஸை கலற்றி காக்கியின் பின் காலரில் ஸ்டைலாக சொறுகியவன் தன் காக்கி தொப்பியை சரி செய்து விட்டு வலது கையில் மாட்டியிருந்த ஐம்பொன் காப்பை மேலேற்றியவாறே அருகிலிருந்த வர்மனுக்கு சொடக்கிட்டான்.



"பையா... அப்பிடியே நான் பிரம்மிச்சு போயிருக்கேன்... என்னே ஒரு கம்பீரம்... ஐயோ... பாபி பாக்கணுமே பையா... ஏன் ராத்திரி நேரத்துல போட்டிருக்கீங்க?"



"சும்மா கேள்வி கேட்டுட்ருக்காம போய் அந்த சக்கரத்த ஏத்து டா" அவன் முதுகை பிடித்து தள்ளி விட்டவன் முன்னால் கட்டி வைக்கப்பட்டிருந்த ராமலிங்கத்தை வன்மமாய் நோக்கினான்.



அவன் கட்டளைக்கு ஏற்ப அந்த பெரிய சக்கரத்தை ஏற்றி விட்டு கதிரை பார்த்து கையை உயர்த்திக் காட்டினான் வர்மன்.



"தலைவா... என்ன பேசாம உட்காந்திருக்க.. ஓஹ்.. கஷ்டமா இருக்கா... வயசான காலத்துல இதெல்லாம் தேவையா சொல்லு... அதான் உனக்கு வலியே இல்லாம போறதுக்கு ஒரு முறை கண்டு பிடிச்சிருக்கேன்... புரியலயா...?"



"...."



"பிரேக்கிங் வீல் [[ Breaking wheel ]] பத்தி கேள்வி பட்ருக்கியா தலைவா... நீ முழிக்கறத பாத்தா இல்லன்னு தான் தோனுது... சரி இப்போ அனுபவிக்க போறல்ல... அப்போவே பாரு... ஹாங்... மறந்தே போயிட்டேன்... என் மாமானாருக்கு மோதிரம் வெச்சே குத்துனயாமே... என் ரசிகர்கள் தான் சொன்னாப்ல... அவங்களுக்கு உன் மூஞ்சிலயும் அதே மாதிரி குத்து விடனும்னு ஆச... என் கூட இவ்வளவு நாள் இருக்கறவங்களுக்கு இது கூட செய்யலன்னா எப்பிடி... அதான் செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்... எங்கே... உன் கை காட்டு தல" கையிலிருந்த மோதிரத்தை உருவி எடுத்தவன் அடுத்த நிமிடம் அவன் மூக்கிற்கே ஒரு குத்து விட உடைந்து குபுக்கென பாய்தது இரத்தம்...



"ஹப்பாடா... அவங்க ஆசைய நிறை வேற்றியாச்சு... உன் மோதிரம் அந்த காலத்து ட்ரெண்டுல இருக்கு தலைவா... எனக்கு தேவ இல்ல... நீயே வெச்சிக்கோ" முகத்திற்கே விசிறி அடித்தவன் சடாரென எழுந்து கொள்ள அவர் கண்கள் அவனையே பார்த்தது.



ஆம், அவருக்கு கண்களை மட்டுமே அசைக்க முடியும் படி பண்ணி விட்டிருந்தான் வர்மக் கலை மூலம்!!!



"வர்மா... இவன அந்த சக்கரத்துல ஏத்து... இவன் கத்துறது கூட இவன் இருக்க நிலைமையில கேக்காது..." கதிர் சொல்ல மேலே ஏற்றப்பட்டிருந்த சக்கரத்தின் மேல் இராமலிங்கத்தை ஏற்றினான் வர்மன்.

27399

27400

27401

[[ பிரேக்கிங் வீல் (Breaking wheel)!!!



பழங்காலத்தில் கொடுக்கப்பட்ட தண்டனைகளிலேயே இது தான் மிகக் கொடுமையானது.



இது பல ஆரைக் கால்களைக் கொண்ட பெரிய வண்டிச் சில்லை ஒத்தது.



சில சமயங்களில் தண்டனை விதிக்கப்பட்டவரைச் சில்லில் கட்டி மரக்கோல்களால் அல்லது நீளமான இரும்புக் கம்பிகளால் அடிப்பர். இதற்கு மாற்றாகச் சில வேளைகளில் தண்டனை பெற்றவரை இரண்டு மரவளைகளை "X" வடிவில் பொருத்திய "புனித ஆன்ட்ரூவின் சிலுவை"யில் கட்டி அடித்தபின் சிதைந்த உடலைச் சில்லில் கட்டிக் காட்சிக்கு வைப்பர். சில மரண தண்டனைகளின் போது தண்டனைக்கு உள்ளாகுபவர்களின் கால் கைகளை மரக்குற்றிகளில் உயர்த்தி வைத்தபின்னர் அவை முறியும்படி அவற்றின் மீது சில்லால் அடிப்பதும் உண்டு.



பிரேக்கிங் வீல் என்பது ஊசிகள் பதித்த சக்கரத்தின் மீது குற்றவாளிகளை கட்டி விடுவார்கள்... பின் கீழே நெருப்பை பற்ற வைத்து குற்றவாளியின் உயிர் போகும் வரை அந்த சக்கரத்தை சுற்றுவார்கள்.



18 ம் நூற்றாண்டில் ஜெர்மனி, ரொம், ரஷ்யா மற்றும் சுவீடன் பகுதிகளில் இந்த தண்டனை அதிகளவில் இருந்துள்ளது.



பிரான்சில் தண்டனை பெற்றவரை வண்டிச் சில்லில், கால் கைகள் சில்லின் ஆரைக்கால்களின் மீது பொருந்துமாறு வைத்து வண்டிச் சில்லை மெதுவாகச் சுழல விடுவர். பின்னர், பெரிய சம்மட்டிகள் அல்லது இரும்புக் கோல்களைப் பயன்படுத்தி எலும்புகள் முறியுமாறு செய்வர். இது ஒவ்வொரு காலுக்கும் கைக்கும் பல தடவைகள் திருப்பித் திருப்பிச் செய்யப்படும். சில வேளைகளில் தண்டனை பெற்றவரின் மார்பிலும், வயிற்றிலும் இறக்கும்வரை அடிக்குமாறு பணிப்பதும் உண்டு. இது "கருணை அடி" எனப்படும். இந்த அடி இல்லாவிட்டால் தண்டனைக்கு உள்ளானவர் இரத்தப் போக்காலும், தாகத்தாலும் இறக்கும்வரை பல மணி நேரங்கள் அல்லது பல நாட்கள் கூட உயிருடன் இருந்து வருந்தவேண்டி இருக்கும். சில தருணங்களில் சிறப்புக் கருணையின் பேரால் இரண்டு மூன்று அடிகளுக்குப் பின்னர் கழுத்தை இறுக்கிக் கொல்லுமாறு பணிப்பதும் உண்டு. கை கால்கள் உடைந்து குற்றுயிராகக் கிடக்கும் உடல்களின் கால் கைகளைச் சில்லின் ஆரைக் கால்களிடையே பின்னி, உடலைப் பறவைகள் தின்பதற்கு ஏதுவாக, அச் சில்லை உயரமான கம்பத்தில் ஏற்றிவிடுவர்.



புனித ரோமப் பேரரசில், கொடுமையான கொலைக் குற்றம் செய்தவர்களுக்கே "உடைக்கும் சில்லில்" தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் மிகக் கடுமையாக இல்லாவிட்டால் "மேலிருந்து கீழ்" முறையில் அடிக்குமாறு பணிக்கப்பட்டது. இதன்படி கழுத்தில் அடிக்கத்தொடங்குவர். இதனால் முதல் அடியிலேயே இறப்பு நிகழும். கடுமையான குற்றங்களுக்குக் "கீழிருந்து மேல்" முறையில் அடிக்குமாறு பணிக்கப்படும். இதன்படி அடி காலில் இருந்து தொடங்கும். எவ்வாறு, எத்தனை அடிகள் அடிக்கவேண்டும் என்பதைத் தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருப்பர்.



தற்போதைய பஞ்சாப் பகுதியில் 1746 களில் ஆட்சி செய்த பாய் சுபித் சிங் என்ற மன்னரும் இந்த தண்டனையை குற்றவாளிகளுக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]



அவனின் வர்ம தண்டனை முறையிலேயே இறந்து இறந்து பிழைத்துக் கொண்டிருந்தவர் கத்தக் கூட முடியாத நிலையில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமே வெளியேறிக் கொண்டிருந்தது.



கண்ணீர் விட்டால் அவர் செய்த பாவங்கள் குறைந்து விடுமா???



அல்லது உயிர்கள் தான் திரும்ப வந்து விடுமா???



[[KARMA IS BOOMERANG _ நீ விதைத்த வினை உன்னையே சேரும்]]



"வர்மா... லெட்ஸ் கோ... குடோன் சந்தேகம் வராம இருக்க மூணு மணிக்கு பாம் வெச்சிருக்கேன்... வா போலாம்...." வெளியேறி விட்டான்.



அவரை பார்த்து பரிதாபப்படும் நிலையெல்லாம் கடந்து வருடங்களாகி விட்டன!!!
 
Last edited:

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதவை திறந்து கொண்டு ரூமில் நுழைந்தவன் கழுத்தை "மாமா... வந்துட்டிங்களா?" ஓடி வந்து பாய்ந்து கட்டிக் கொண்டு அழுதாள் கதிரின் மனையாட்டி....



"என்னடா என்ன ஆச்சு... ஏன் அழற?" பதற்றத்தில் அவனுக்கு என்ன செய்வதென்று கூட தெரியவில்லை...



"நீங்க தான் ஷக்தி அங்கிள் பையன்னு ஏன் சொல்லல என் கிட்ட..." அவள் வார்த்தைகளில் அவனுதடுகள் சிரித்தன.



"அத பத்தி பேசினப்போ கூட வாய திறக்கவே இல்ல... உங்கள எனக்கு புடிக்கும்னு சொன்னப்போ கூட கல்லு மாதிரி நின்னு இருக்கீங்க?" மீண்டும் மீண்டும் சிரித்தான்.



"அவன் பேரு கண்ணா இல்ல கதிர்வேல் கிருஷ்ணான்னு ஏன் சொல்லல?"



"ஏன்னா... உன்ன சீண்டி பாக்கலாம்னு முடிவெடுத்தேன்" சட்டென விலகியவள் அவனுக்கு அடிக்க



"வலிக்குதுடி... விடு... " சிரித்துக் கொண்டே தடுத்தவனை நிறுத்தி விட்டு ஏறிட்டுப் பார்த்தவள்



"ஐ லவ் யூ மாமா" அவன் வெள்ளை ஷர்ட்டை இழுத்து அவன் முரட்டு அதரங்களை தன்னதரங்களுக்குள் பொருத்த அவள் இடையை பிடித்து தனக்குள் அவளை மொத்தமாக இறுக்கின காளையின் கைகள்!!!



****



_மீன்டும் ஓர் சங்கமம்!!!_



இரண்டு மாதங்களுக்கு பிறகு....



முதன் முதலா நாம எல்லோரும் கல்யாணத்துல தானே நண்பா சந்திச்சு கிட்டோம்...



அதாவது முதலாவது அத்தியாயத்த சொன்னேன்...



அதே கல்யாண மண்டபம் அன்று போல் அல்லாது சற்று பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது.



நாளு மேடைகள் அமைக்கப்பட்டிருக்க இரண்டு மேடைகளில் ரக்ஷன் மற்றும் குமரன் அமர்ந்திருக்க மற்ற இரண்டும் காலியாக இருந்தது.



ஒரு ஓரமாக மேடையை வெறித்துக் கொண்டிருந்த அபியை திரும்பிப் பார்த்தான் கதிர்.



ஆம், வர்மன் தான் தான் தன் தங்கைக்கு தேர்தெடுத்த மாப்பிள்ளை என கதிர் அறிவித்திருக்க அந்நாளிலிருந்து இந்த முகமாக தான் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான் அபினவ் ஆதர்ஷ்...



கதிருக்கு தான் கல்கத்தாவில் இருக்கும் போதே சந்தேகம் எழுந்து விட்டதே!!!



அவனொன்றும் காதலுக்கு எதிரி இல்லையே... அவ்வளவு தயக்கமா தன்னிடம் கூற???



கதிர் ஒரு புறம் முறுக்கிக் கொண்டிருக்க அவன் உயிர் நட்புக்காய் காதலையே மனதிற்குள் மறைத்து விட்டான் அபி.



மனமகளை அழைத்து வரும் போது கூட அவ்வளவு அழுத்தமாக நின்றிருந்தவன் வர்மன் மேடையேற திரும்பி நடக்கவும் அவனை நிறுத்தி இருந்தது மைக் ஒலி...



"லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ஸ்...



பாய்... நான் தமிழ்லயே பேசறேன்.... இந்தியில பேசுனா ரசிகர்களே அடிச்சு கொன்றுவாங்க போல...



இடைக்கிடை வரும்... அத கொஞ்சம் தெளிவு படுத்துங்க ப்ளீஸ்...." வர்மனை பார்த்து கண்ணடித்த கதிரை கொலை வெறியில் முறைத்தனர் நண்பர்கள் மூவரும்...



அவர்களுக்குமே ஏன் வர்மனை அறிவித்தான் என இன்னுமே தெரியாது...



ஏன் குமரனும் ரக்ஷனும் சொல்லியும் கூட அவன் கேட்கவே இல்லை என்பது தான் இங்கு குறிப்பிட வேண்டியதே!!!



"பாய முறைக்காதீங்க கைஸ்... முக்கியமான சீக்ரெட் என் கிட்ட தான் இருக்கு...



நான் இன்னிக்கு மாப்பிள்ளையா மேடை ஏறல... ஒரு அறிவிப்பாளராக தான் வந்திருக்கேன்...



அபி பையா என் மேல செம காண்டுல இருக்காங்க அவங்க ஆள நான் கட்டிக்க போறேன்னு... லேகின் சச்சாயி யே ஹே கி ஏஸா நெஹின் ஹே...



[[ lekin sachchaee yah hai ki aisa nahin hai_ ஆனா உண்மை அது இல்ல....]] " அவன் சொல்லி முடிக்க அங்கே பலத்த சலசலப்பு...



எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள சிரித்துக் கொண்டே தொடர்ந்தான் கதிரின் ஆஸ்தான பனியாள்.



"குழம்பாதிங்க... மாப்பிள்ளை... " அவன் திரும்ப ஆரம்பிக்க ஐயர் அவசரப்படுத்தவும் அபியின் கண்கள் சலேரென மேடை நோக்கி பின் நண்பனை தொட்டு மீண்டது.



"மாப்பிள்ளை நான் இல்ல... அபினவ் ஆதர்ஷ் தான்... பையா கிட்ட நான் இந்த இடத்துல ஒன்னு சொல்ல விரும்பறேன்...



பையா அபி பையா உங்க மேல ரொம்ப பாசம் வெச்சிருக்காங்க... அத இழந்துட கூடாதுன்னு அவங்க காதலையே மறைக்க நினச்சது உங்களுக்கு கோபமா இருந்தாலும் அவங்க நட்பு பார்வைல அவங்களுக்கு அது பெருமை தான்...



உங்க நட்பு விலை மதிக்க முடியாதது பையா... எனக்கு கிடச்சது போல... இங்க இருக்க எல்லோரும் எதை இழந்தாலும் உங்கள கண்டிப்பா இழந்துட கூடாதுன்னு தான் நினைப்பாங்க... அந்த அளவு நீங்க முக்கியமா இருக்கீங்க....



பையா.... எங்க குட்டிமா எப்போவும் உங்களுக்கு தான்... வாங்க" அவன் அழைக்க அதிர்ந்து நின்றிருந்தவன் மேடையிலிருந்த நண்பர்களை பார்க்க அவர்களுமே அப்படியே தான் அமர்ந்திருந்தனர்.



"பையா அடி கன்பார்ம்... " அவன் சொல்லி முடிக்கவில்லை அபியுடன் சேர்ந்து மேடையில் அமர்ந்திருந்த நண்பர்களும் பாய்ந்து இறங்கி வர "டேய்... தாங்காதுடா" கத்திக் கொண்டே ஓடிய கதிரை ரசித்துப் பார்த்திருந்தாள் அவன் மனையாள்...



இந்த இரண்டு மாதங்களுக்குள் அவனுக்குள் தான் எத்தனை மாற்றம்...



அல்லது அவன் இயல்பே அப்படி தானோ???



அப்படித்தான் இருக்கும்... ஷக்தியின் நினைவில் கண்களில் ஆனந்தக் கண்ணீர் அவளுக்கு....



அர்ச்சனாவின் கம்பெனியை அவளுக்கே மீட்டுக் கொடுத்தது தொடக்கம் சின்ன சின்ன வேலைகளில் கூட அவன் செயற்படும் விதம் உண்மையில் அவளை பிரம்பிக்கச் செய்திருந்தது.



சிட்டியின் அஸிஸ்டன் கமிஷனர் இவன் தான் என கை காட்டினால் லூசாப்பா நீ என கேட்குமளவு இருந்தது அவன் சேட்டைகள்...



"டேய் ப்ளீஸ் டா.... நா ஒரு ஜாலிக்கு பண்ணேன் டா... விடுங்கடா" மூவரும் சேர்ந்து அவனை அடி பின்ன கத்திக் கொண்டே தப்பித்து ஓடியவன் சடன் பிரேக் கிட்டு நின்றான் வாசலில் கீறீச்சென வந்து நின்ற ரோல்ஸ் ராய்ஸை பார்த்து...



நண்பர்களுக்கும் அதே அதிர்ச்சி தான் போலும்....



அவர்களுமே அப்படியே நின்று விட்டிருக்க உள்ளே இருந்து இறங்கினர் நாள்வர்!!!



"டாட்... சீக்கிரம் போணும்" அதில் ஒருவன் மற்ற மூவரில் ஒருவரை பார்த்து கத்த அவன் பார்த்த பார்வையில் கத்தியவன் வாய் அப்படியே அடங்கிப் போனது.



"கம் பேபி... குட்டிமா... வாடா" மனைவியையும் மகளையும் அழைத்தவன் மகள் கையை இறுக்கப் பற்றிக் கொள்ள தந்தையை முறைத்தவாறே தாயின் கையை இறுக்கப் பற்றினான் முதலில் கத்தியவன்...



"இவன் எதுக்குடா இங்க வர்றான்... ஆஹா... அடிக்க தொடங்கினா விட மாட்டானே... டேய் இவனுக்கு யாருடா சொன்னது" எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே தன் பக்கத்தில் அதிர்ச்சி மாறாமல் நின்றிருந்த நண்பர்கள் மூவரிடமும் பல்லை கடித்தான் கதிர்வேல் கிருஷ்ணா....



"நான் இல்லடா...நானும் இல்ல" அபியும் குமரனும் அதிர்ச்சி மாறாமல் வாயசைக்க சட்டென மண்டையில் பொறி தட்ட தன் ஆருயிர் நண்பனை திரும்பிப் பார்த்தான் கதிர்.



"பாவி... நீதானா இவன் கிட்ட சொன்ன... உன்ன கொல்லாம விட மாட்டேன்டா" ரக்ஷன் மீது பாய்ந்து புரட்டி எடுத்துக் கொண்டிருந்தவனை இழுத்து அடிக்க கையை ஓங்கியிருந்தான் அந்த புதியவன்....



"மச்சி.... நான்" கண்ணத்தில் கை வைத்துக் கொண்டு பாவமாய் முன் நின்றிருந்தவனை ஏறிட



"சொல்லாம கல்யாணம் பண்ணி இப்போ தங்கச்சிக்கு ப்ரண்ட்ஸுக்கு கல்யாணம் பண்ணி வெக்குற அளவு நீ பெரிய மனுஷனாயிட்ட இல்ல... ஒரு வார்த்த சொல்லனும்னு தோனல... ரக்ஷன எதுக்குடா அடிக்குற?" ருத்ர மூர்த்தியாய் கத்திக் கொண்டிருந்தான் அவன்!!!



தி கிரேட் பிஸ்னஸ் மேக்னட் ரிஷிகுமார் தேவமாருதன்!!!



"சாரி.... " கதிரின் குரல் நைந்து ஒலிக்க



"பேசாத என் கூட.... அஷு.... வாடா... " அவன் கோபமாய் உள்ளே போக மீண்டும் நண்பன் மேல் பாய்ந்தவன் அவனை அடிக்கத் துவங்க அப்போது தான் கலைந்திருந்தனர் அபியும் குமரனும்....



"பாவி... வேற ஆளே கிடைக்கலியா உனக்கு.... அவன் கிட்ட போட்டு குடுத்திருக்க.... ஒரு நிமிஷம் என் கன்னம் ஒரு பக்கம் திரும்பிடிச்சோனு தோனிச்சு.... படுபாவி... உன்ன...." மீண்டும் அடிக்கத் துவங்கியவன்



"அச்சோ கோபமா உள்ள போனானே... சமாதானப்படுத்தணுமே" திடீரென எழுந்து ஓடினான்.



.....



"மச்சான்.... " காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்த தேவின் அருகில் வந்தமர்ந்தான் கதிர்.



"சாரிடா... ரொம்ப பிரச்சனை... அதான்"



"நா உன்ன மன்னிக்கனும்... ஆனா நீ ரக்ஷன மன்னிக்க மாட்ட... ரைட்? "



'பாவி... எல்லாதையும் சொல்லிட்டானா'



"ஆமா சொல்லிட்டான்"



'இவன் ஒருத்தன்... மனசுல நெனக்குறதுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு....'



"நான் கேட்டதா ஞாபகம் மிஸ்டர். எ.ஸி.பி "



"நான் தான் இந்த கதையோட ஹீரோ... என் ரசிகர்களுக்கு சொன்னா என்ன ஆகும் தெரியுமா?"



"இருந்துட்டு போ... ஆனா நான் கேட்ட கேள்விக்கு பதில்"



"உன்ன....." கழுத்தை நெறிப்பது போல் கொண்டு சென்றவன்



"ரக்ஷன மன்னிச்சுட்டேன் தேவா... சின்ன வருத்தம் மட்டும் இருக்கு" அவன் முறைத்ததில் அப்படியே அமர்ந்து விட்டான்.



"என்ன வருத்தம்? "



"அவன் பண்ணது தப்பில்லையா? துரோகத்தோட வலி நான் சொல்லி தான் தெரியனுமா உனக்கு?"



"லுக் கதிர்... அவன் ரொம்ப பீல் பண்றான்டா... "



"இப்போ கொஞ்சம் முன்னாடி இருந்த வருத்தமும் போயிடுச்சு மச்சான்... சாவடிக்காத"



"தட்ஸ் குட்... போயி மேடைல உட்காரு" அவன் எழுந்து கையை விரிக்க பாய்ந்து நண்பனை கட்டிக் கொண்டான் கதிர்வேல்....



......



"இதே இடத்துல உன் அனுமதி இல்லாம உனக்கு தாலி கட்டினேன் கண்ணம்மா.... அதே இடத்துல வெச்சு கேக்கறேன்... என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?" தன் முன் மண்டியிட்டிருந்த கணவனை கன் கலங்க பார்த்தவள் ஆமென தலையாட்ட "வா..." என அழைத்துச் சென்றவன் மேடையில் அமர வைத்து தானும் அமரவும் அங்கே மங்கள வாத்தியங்கள் முழங்க நால்நாண்கள் ஏற்றப்பட்டது அவர்களின் துனைவியர் கழுத்தில்....



"தேவ்... " அழைத்த மனைவியை தன்னுள் இழுத்தவன் தன் கை வளைவுக்குள் அவளை நிறுத்த எப்போதும் போல் "இவன் என் கணவன்" எனும் பெருமை அவள் முகத்தில் அப்பட்டமாய்....



"ரக்ஷன்.... பி... பின்னால..." மேடையிலிந்தே திடீரென கதிர் கத்தவும் அதிர்ந்து விழித்தவன்



"எ... என்னடா... என்ன? " பதற்றமாகி மாலையை தூக்கிப் போட்டு எழ



"பி... பின்னால... பின்னால... பின்னால... ஹாங்...ஞாபகம் வந்துடிச்சு... ஒன்னுமே இல்ல" குழப்பமாய் நின்றிருந்தவர்கள் சிரிக்கத் துவங்க



"தாலி கட்ன சந்தோஷத்த கூட அனுபவிக்க முடியாம பண்ணிட்டியேடா பன்னி... உனக்கு என் கையால தான்டா சாவு...." தன்னை நோக்கி பாய்ந்து வந்த ரக்ஷனின் கைக்கு அகப்படாமல் ஓடிய கதிரைப் பார்த்து அந்த மண்டபமே சிரிப்பில் மூழ்கியது.



சுபம்!!!
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபிலாக்

5 வருடங்களுக்கு பின்....

"அண்ணாஆஆஆஆ" வீடே அதிரும்படி கத்திக் கொண்டிருந்தாள் யாழினி கிருஷ்ணா.

தன் காக்கி தொப்பியை தர மாட்டேன் என மல்லுக் கட்டிக் கொண்டிருந்த மனைவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவன் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓட எப்போதும் போல் வாய்விட்டுச் சிரித்தாள் திருமதி. கிருஷ்ணா...

....

"என்னாச்சு குட்டிமா?"

"அபி மாமா... என்ன வெளியில கூட்டி போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க"

"ஷ்ப்பாஹ்... இப்போவே கண்ண கட்டுதேஏஏ" இடுப்பில் கை வைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டவன்

"அபீஈஈ... வாடா இங்க" அவனுமே தங்கையை போல் கத்தியதில் தலையிலடித்துக் கொண்டு வெளியில் வந்தனர் ஸ்ரீ, ரக்ஷன், அர்ச்சனா, குமரன், அமிர்தா மற்றும் அபினவ்.

"எதுக்குடா கத்துற?" தானும் காக்கி உடையில் கை கடிகாரத்தை சரி பார்த்துக் கொண்டே கீழே இறங்கினான் அபி.

"என்னடா சொன்ன என் குட்டிமாக்கு?"

"அவ மாசமா இருக்கா... அதனால வெளியில கூட்டி போக முடியாதுன்னு சொன்னேன்... என்னாங்குற?"

"அவ ஆசைய நிறைவேத்தி வை..."

"அவ நல்லதுக்கு தானே முடியாதுங்குறேன்... நீயும் அவள போல அடம்பிடிச்சு கிட்டு இருக்க?"

"அதெல்லாம் எனக்கு தெரியாது... கூட்டி போற... டாட். "

"முடியாது "

"ஏன் முடியாது?"

"இன்னிக்கு கமிஷ்னர் கூட மீட்டிங் இருக்கு... உனக்கும் தானே இருக்கு... அப்பறம் என்ன?" நண்பனிடம் எகிறினான் அபி.

"அட ஆமா... குட்டிமா... " ஸ்லோ மோஷனில் தன் புறம் திரும்பிய அண்ணனை முறைத்துப் பார்த்தாள் தங்கை...

"ஹி.. நோ முறைப்ஸ் செல்லம்... இன்னிக்கு இல்லன்னா என்ன... நாளைக்கு கூட்டிட்டு போறேன் டா ப்ளீஸ்..."

"முடியாது... என் கூட பேசாத"

"என் செல்லம்ல?"

"இல்ல..."

"ப்ளீஸ்.... " அவன் கெஞ்சுவது கண்டு அபி வாய் பொத்தி சிரிக்க அவன் தலையிலேயே ஒரு போடு போட்டவன்

"பொண்டாட்டிய சமாதானப்படுத்தி தொலைடா... எரும... " என்றான் கடுப்புடன்...

"அபி... வேணாம்... அவனே சமாதானப்படுத்தட்டும்" இடையில் புகுந்த ரக்ஷனை கொலை வெறியில் முறைத்தவன்

"நீ இன்னுமா சாவல... இருடா வர்றேன்... உன்ன..." அவனை அடிக்ப் பாய்ந்தவனையும் தப்பித்துச் செல்ல முயன்றவனையும் அப்படியே நிற்க வைத்தது மூன்று குரல்கள்.

"ஏன்தா (ஏன்டா) என் உயிர் (உயிர) வாங்குத (வாங்குற)... போடா" ஒருவனை தள்ளி விட்டு முறைத்தது ஒரு வாண்டு.

கார்த்திக் ப்ரணவ்!!!

ரக்ஷன்-அர்ச்சனாவின் புதல்வன்... வயது மூன்று.

திட்டிக் கொண்டே இருந்தாலும் உயிர் வேண்டுமா எடுத்துக் கொள் என தோள் கொடுப்பவன்...

"ஹாஹா.... ஏன்னா நீ என் பிதென்டு (பிரண்டு)" அவனை நக்கலடித்தது வேறு யாராக இருக்க முடியும்???

துருவ் கிருஷ்ணா!!!

கதிர்-ஸ்ரீ தம்பதியினரின் ஒற்றை வாரிசு.... அவனுக்கும் வயது மூன்று தான்.

அப்படியே தந்தையை உரித்து வைத்திருந்த ஜாடை மட்டுமல்லாமல் சேட்டையும் கூடவே...

கிருஷ்ணனுக்கு ரக்ஷன் போல துருவ்விற்கு கார்த்திக்!!!

"ஏன்டா எப்போ பாரு சண்டை போட்றீங்க ?" பெரிய மனுஷியாய் தலையிலடித்துக் கொண்டது ஓர் அழகிய இளம் தேவதை.

அவள் மகிழினி!!!

குமரன்-அமிர்தா தம்பதியினரின் தவப் புதல்வி...வயது நான்கு...

குமரனை போல் நிதானம் மட்டுமல்லாமல் அமிர்தாவை போல் சேட்டையானாலும் அவளே இருவருக்கும் தாயாய்...

அவ்வளவு அன்பு....

நாராயணன், விக்ரம் - ராதா மற்றும் ராஜாராம் குடும்பத்தினர் கல்கத்தாவிலேயே இருந்து கொள்ள குமரன் தான் அங்கும் இங்குமாக வந்து போய்க் கொண்டிருந்தான்.

யாழினிக்கு படிப்பு முடியட்டும் என்று குழந்தை வேண்டாம் என ஒரேயடியாக மறுத்து விட்டிருக்க போன மாதம் அவள் கர்ப்பினி என உறுதி செய்யப்பட்டதிலிருந்து தங்கையை கையோடு அழைத்தே வந்து விட்டான் கதிர்.

ரக்ஷனும் அர்ச்சனாவும் அவர்கள் வீட்டிலும் கதிர் வீட்டிலுமாக மாறி மாறி இருந்து கொண்டிருந்தனர்.

நண்பனை அடிக்கப் பாய்ந்தவன் மகன் வார்த்தைகளில் ரக்ஷனை பார்த்து வாய் விட்டுச் சிரிக்க போலியாக முறைத்தவன் அதற்கு மேல் முடியாதென தானுமே சிரித்து விட்டான்.

தனக்கு போலவே மகனுக்கும் அந்த நட்பு கிடைத்ததில் அவ்வளவு கர்வம் அவனுக்கு!!!

"பையாஆஆஆ" வாசலில் திடீரென சத்தம் கேட்க முகம் மலர திரும்பினான் கதிர்.

"வர்மா... வாடா" இவன் அருகில் செல்வதற்குள் அவனே ஓடி வந்து அணைத்துக் கொள்ள அனைவர் உதடுகளிலும் அழகிய புன்னகை...

"ஆப் கஹான் ஹே பாய்?"
[[ aap kahaan hain bhaee_ எப்பிடி இருக்கீங்க அண்ணா? ]]

"தொடங்கிட்டான் டா... அபி எடுடா அந்த துடப்பத்த" கடுப்பாய் பல்லை கடித்த ரக்ஷனை பார்த்து மீண்டும் அனைவரும் வாய் விட்டுச் சிரிக்க கதிரை பாவமாய் பார்த்தான் வர்மன்.

"நல்லா இருக்கேன் வர்மா... நீ எப்பிடி இருக்க?" சரித்துக் கொண்டே கேட்டவன்

"வணக்கமுங்க டாக்டர் மேடம்" மலருக்கு சல்யூட் வைக்க

"கதிர்... " போலியாய் மிரட்டியவள் தன் தோழியை ஆரத் தழுவிக் கொண்டாள்.

"பையா என் பொண்டாட்டிய இன்ஸல்ட் பண்ணாதீங்க பையா... பாப்"
[[ paap_ பாவம் ]]

மலரை தாங்கிப் பேசிய வர்மனை பார்த்து பொங்கி வந்ந சிரிப்பை அடக்கிக் கொண்டே தோழியை பார்த்தாள் ஸ்ரீமதி.

"எப்பிடி இருக்க?"

"நல்லா இருக்கேன் ஸ்ரீ... நீ?"

"நானும் நல்லா இருக்கேன்" ஒரு வாரத்திற்கு முன்பு தான் திருமணம் முடிந்திருந்தது.

அவன் இந்திக்காகவே அவளை அவனை காதலிக்க அவள் தரம் பார்த்து மறுத்துக் கொண்டிருந்தவனை அரும்பாடுபட்டு சம்மதிக்க வைத்திருந்தனர் நன்பர்கள் நால்வரும்....

"துருவ்... வா விளயாதலாம் (விளையாடலாம்).... மம்மி டேடி வேணா... வா" கார்த்திக் கையை பிடித்து இழுக்க இவன் மகிழினியின் கையை பிடித்து இழுக்கவும் மீண்டும் சரித்துக் கொண்டனர் அனைவரும்...

"அப்போ நா கிளம்புறேன்..." முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த மனைவியை கடைக் கண்ணால் பார்த்தவாறே சொன்னான் அபினவ் ஆதர்ஷ்.

"ஓகே டா... ரக்ஷன்... நீயும் என் கூட வர்றியா?"

"இல்ல அபி... நீ கிளம்பு... நான் குமரன் கூட வர்றேன்..." சரியென தலையசைத்தவன் மனைவியின் அருகே வந்து சட்டென அவளை தூக்கிக் கொண்டு மாடியேற கலாய்த்துத் தள்ளி விட்டனர் அனைவரும்....

"வர்மா... நீ ரெஸ்ட் எடு... நாங்க கிளம்புறோம்... ஸ்ரீ... ரூமுக்கு வா" அவன் மாடியேற அர்ச்சனாவின் பின்னே சென்ற ரக்ஷனை பார்த்து தலையிலடித்துக் கொண்டே கிளம்பப் போன குமரனை எட்டிப் பிடித்தாள் மனைவி.

"என்ன அம்மு?"

"நா இருக்கேங்குறது ஞாபகம் இருக்கா இல்லயா?"

"ஞாபகம் தானே... நீயே வர வை... " அவளை பிடிக்கப் போக பாய்ந்து ரூமிற்குள் ஓடியவளை பார்த்து தலையாட்டி சிரித்தவன் அவள் பின்னே நுழைய திடீரென கதவு தாழிடப்படவும் திரும்பிப் பார்க்காமலே சிரித்துக் கொண்டிருந்தவனை பின்னாலிருந்து அணைத்தாள் பெண்.

"வேளைக்கு கிளம்பிட்டு இருக்கும் போது மனுஷன உசுப்பேத்தி விட்றதே வேளையா போச்சு உனக்கு?" சட்டென தன் பக்கம் இழுத்தவன் அவள் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்க்க கண்ணடித்து சிரித்தவளை இடையூடு தூக்கி தன் உயரத்திற்கு தூக்கியவன் அவள் ரசனைப் பார்வையை ரசித்துக் கொண்டே அவதரங்களை முற்றுகை இட்டான்.

.......

"பேபி மா" மனைவியை கட்டிலில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்து அவள் கண்ணமேந்தப் போக படக்கென தட்டி விட்டாள் மாது.

"ப்ச் ஏன்டி"

"என்கிட்ட பேசாதிங்க"

"பேசுவேன்"

"ஒன்னும் தேவயில்ல கிளம்புங்க.... யாராவது காத்துகிட்ருக்க போறாங்க"

"அங்க விஜின்னு ஒரு பொண்ணு இருக்கா பேபி.... என்ன லவ் பண்றாளாம்... நானும் இன்னிக்கு ஓகே சொல்லலாம்னு இருக்கேன்..." அவன் சிரியாமல் சொல்ல "என்ன சொன்னீங்க?" பல்லை கடித்தவள் அருகிலிருந்த தலையணையை எடுத்து அவனுக்கு நன்றாக அடிக்க சிரித்துக் கொண்டே தடுத்தவன் ஒரு கட்டத்தில் அதை தூக்கி வீசி விட்டு அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வர திமிறினாள் பெண்.

"விடுங்க என்ன.... தொடாதிங்க..."

"என்ன மீறி எவன்டி தொடுவான் உன்ன?" அவள் தலையோடு தன் கண்ணம் வைத்து அழுத்தி இருந்தவனுள் பாந்தமாக அடங்கி இருந்தாள் பாவை...

"...."

"பேச மாட்டியா பேபி... நாளைக்கு நானே கூட்டிட்டு போறேன்"

"..."

"சிரிக்க கூட மாட்டியா?" அவனை அண்ணார்ந்து பார்த்தவளின் நெற்றியில் காதலாய் இதழ் பதித்தவன் அவள் கண்களை மூடி இருப்பது கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான்.

........


"ஒன்னே ஒன்னு கொடுடி..."

"முடியாது போங்க "

"அர்ச்சு...என் செல்லம்.... " அவள் பின்னாலேயே நடந்து கொண்டு ஒரே ஒரு முத்தத்திற்காக கெஞ்சிக் கொண்டிருந்தான் ரக்ஷன்.

"முடியாது"

"தேவயில்ல... நா கோபமா போறேன்" அவன் திரும்பி நடக்க அவள் வாய் பொத்தி சிரிக்கவும்

"பாவி... நா கோபமா இருக்கேன்னு சொல்றேன்டி... சிரிக்குற?" சற்றே கடுப்பாக கூட இருந்ததுவோ???

"உங்களுக்கு கோபம் கூட வருமா ரித்வி....?" அவள் மீண்டும் சிரிக்க முகத்தை உர்ரென வைத்துக் கொண்டவனிடம் வந்தவள்

"இது வர நான் உங்க கிட்ட சொல்லாதது.... இப்போ சொல்ல போறேன்.... " அவன் கண்கள் மின்னின....

பின்னே அந்த மூன்று வார்த்தைக்காக எத்தனை வருடம் தான் காத்திருப்பான் அவன்???

"ஐ... "

"ஐ....? "

"ஐ..."

"சொல்லுடி... ஒரே எக்ஸைட்டட்டா இருக்கு" அவன் ஆர்வம் பார்த்து

"ஐ ஹேட் யூ ரித்விக்" சொல்லி விட்டு கலகலத்து சிரித்தவள் அவன் முகம் அஷ்ட கோணலாகியது கண்டு இன்னுமின்னும் சிரிக்க

"நானும் ஹேட் யூ போடி...." கோபமாய் நடக்கப் போனவனை ஓடிச் சென்று பின்னால் அணைக்க அவனுதடுகளில் புன்னகை....

அவனுக்கு தெரியாதா அவனவளின் ஹேட் யூ வுக்கான அர்த்தம்!!!

......

"ஏய் என் கேப்பை எங்கடி வெச்சிருக்க?" தன்னை கண்டு கொள்ளாமல் அங்குமிங்கும் சென்று கொண்டிருப்பவளிடம் கத்தினான் கிருஷ்ணா.

"...."

"உன்ன தான் கேக்குறேன் சொல்லு"

"...."


"இவள.... மதீஈஈஈ" அவன் உச்ச கட்ட கடுப்பில் கத்த அன்றொரு நாள் சிறிய சண்டைக்குப் பிறகான அவன் பிரத்தியேக அழைப்பு காணாமல் போய் இன்று வந்ததில் சிரித்துக் கொண்டவள் மறந்தும் நிமிர்ந்து பார்த்தாளில்லை கணவனை...

"மதி..."

"...."

"கண்ணம்மா ஏன்டா படுத்துற... இன்னிக்கு கமிஷனர் கூட மீட்டிங் இருக்குடி"

"..."

"மிஸஸ். கிருஷ்ணா?" அவள் முழங்கையை பிடித்து இழுத்தவன் தன் மேல் வந்து மோதியவளை தன்னுடன் இருக்க அவனையே பார்த்தாளே தவிர அப்போதும் வாயை திறக்கவே இல்லை அவன் மனையாட்டி.

"மதி... என்னாச்சு?"

"ஒன்னில்ல... அதான் உங்க ஸ்டேஷன்ல விஜின்னு ஒரு மினிக்கி இருக்கால்ல... அவ கூட போங்க"

"அவ அபிக்கு லவ் சொல்லிட்டாடி... எனக்கு வாய்ச்சது அவ்வளவு தான்"

"யூ...." கோபமாய் கத்தியவள் முகத்தை திருப்ப சிரித்தான் கள்வன்.

"யூ ஆர் மை லவ்.... அப்படித்தானே கண்ணம்மா?" அவன் கண்ணடித்து சிரிக்க சிரிப்பு வந்தும் தனக்குள் அடக்கியவள் உதட்டை சுழித்தாள்.

"மதீஈஈ... மாமான்னு நீயும் தானே சொல்லல... நான் மதின்னு சொல்லாதது ஒரு குத்தமா?"

"ஆமா"

"ஹப்பா பேசிட்ட... அப்பிடியே என் கேப்பையும் கொடு"

"என்ன சமாதானப்படுத்தற ஐடியாவே இல்லல உங்களுக்கு?"

"மாமனுக்கு சமாதானப்படுத்த தெரியாதுன்னு உலகத்துக்கே தெரியும்"

"ப்ச்... "

"நா வேணா கிஸ் பண்ணட்டா? "

"போடா... " அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள சிரித்துக் கொண்டே விடாது இறுக்கியவன் அவள் தலையை வலுக்கட்டாயமாக தன் நெஞ்சில் புதைக்க திமிறி விலக முயன்றாள் காரிகை....

"இப்போ என்ன.... சமாதானப்படுத்தனும் அவ்வளவு தானே? "

"ஆமா"

"சாரி... ஓகே வா?" சொல்லி விட்டு அவன் சிரிக்க

"விடுடா என்ன... விடு " அவன் நெஞ்சில் குத்தியவளை மீண்டும் அணைத்தவன்

"உன் பேரு ஊரு தெரியாதப்போவே உன்ன என் மனசுல இருந்து விலக்க முடில... நீ என்னவள்னு தெரிஞ்சதுக்கப்றம் ஈஸியா விட்டுடுவேன்னு நினச்சியா கண்ணம்மா?" அவன் வார்த்தைகளில் அவள் திமிறல்கள் அப்படியே அடங்கிப் போக

"போய் ரெடியாகு... உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு போறேன்..." சிரித்துக் கொண்டே வெளியேற "நில்லு துருவ்... உனக்கு அதிக்காம (அடிக்காம) வித மாத்தேன் தா (விட மாட்டேன் டா) " கார்த்திக் கத்திக் கொண்டே துரத்துவது இருவருக்கும் புன்கையை வரவழைத்திருந்தது.

.....

இரண்டு நாட்கள் கழித்து....

கல்கத்தா...

மகனை ரக்ஷன் பொறுப்பில் விட்டு விட்டு மனைவியை கல்கத்தா அழைத்து வந்திருந்தான் கதிர்.

"எங்க மாமா போறோம்... சொல்லுங்க ப்ளீஸ்...." இரண்டு நாட்களாக தன்னை கெஞ்ச வைத்துக் கொண்டிருப்பவனை பார்த்து கத்தினாள் பெண்...

"மாமாஆஆஆ"

"...."

"மாமா ப்ளீஸ்... சேலை வேற கட்ட சொல்லி இருக்கீங்க?" அதற்கும் சிரித்தவன்

"இறங்கு" என்றான் காரை ஓரமாக நிறுத்தியவாறே...

"ஏன்...?" புரியாமல் கேட்டாலும் தட்டாது இறங்கியவள் உண்மையில் ஆனந்த அதிர்ச்சியில் தான் நின்றிருந்தாள்.

ஆம், அவளை முதன் முதலாக பார்த்த அதே கோயிலுக்குத் தான் அழைத்து வந்திருந்தான் அவளவன்...

முகம் மலர அவசரமாக ஏறிச் சென்றவள் கோயில் மணியை அடிக்க, காரை நிறுத்தி விட்டு முதல் படிக்கட்டில் காலடி எடுத்து வைத்தவன் விலுக்கென நிமிர்ந்து பார்க்க அவளும் அவனையே தான் பார்த்திருந்தாள்.

"வா மாமா" கண்களை மூடித் திறந்தவள் அவனுக்கு சைகை செய்ய சட்டென கலைந்தவன் சிரித்துக் கொண்டே ஏற கண் மூடி கடவுள் முன் நின்றவள் ஐயரின் குரலில் கண்ணை திறக்கவும் அவளையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தவன் திருநீறை எடுத்து அவள் நெற்றியில் இட "டிங்ங்ங்...." என கேட்ட ஓசையில் அவன் திரும்பிப் பார்த்து விட்டு மனைவியை பார்க்க அவனுக்கு பிடித்த புன்னகையுடன் நின்றிருந்தான் அவனவள்!!!

அவனின் அவள்!!!

முற்றும்.

16-08-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுவரை என்னுடன் இக் கதையில் பயனித்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....



உங்க ஆதரவையும் அன்பையும் வெறும் வார்த்தையால சொல்லிட முடியாது நண்பா....


மிக்க மிக்க நன்றி 😍

மீண்டும் சந்திக்கலாம்

நன்றி.
ரிஷி.

16-08-2021.

27398
 
Status
Not open for further replies.
Top