All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'என்னவளே' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஸ்பிடல்.....



கையிலிருந்த ரிப்போர்ட்டை வெறித்துப் பார்த்தபடி அதிர்ந்து அமர்ந்திருந்தான் அபினவ் ஆதர்ஷ்....



போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் படி அதில் உள்ள தகவல்கள் அவனை கதிகலங்க வைத்திருக்க ரக்ஷனின் அறையிலிருந்து வெளியே வந்த குமரன் நண்பன் நிலை பார்த்து பதற்றமாய் நெருங்கி வந்தான்.



"டேய் ஆதி... என்னாச்சு?" அவனிடம் பதிலில்லாமல் போகவும் ரிப்போர்ட்டை சட்டென வாங்கிப் படித்தவனின் கண்களும் அதிர்ச்சியில் தெறிக்க தூரத்திலிருந்தே அவர்களை பார்த்துக் கொண்டே வந்தவன் தன் வலக்கை சுட்டு விரல் மற்றும் நடு விரல் இரண்டையும் நெற்றிப் பொட்டில் அழுத்தத் தேய்த்தவாறே நெருங்கினான்.



"குமரா... " நண்பன் தோள் தொட சட்டென கலைந்தவன் அவனிடம் ரிப்போர்ட்டை நீட்ட வாங்கி கண்களை ஓட விட்டவனுக்கு கிடைத்த தகவல் அவனையும் சேர்த்து கதி கலங்க வைத்தில் அதிர்ச்சியாய் நிமிர்ந்தான் கதிர்வேல் கிருஷ்ணா...



ஷாலினியின் உடம்பில் எந்த ஆபரேஷனுமே நடந்திருக்க வில்லை என்பதுவே செய்தி!!!



அப்படியானால் ஷாலினி என்றொரு பிம்பம் பொய் பிம்பமா???



அவளும் சதி செய்யத் தான் உள்ளே நுழைந்தாளா???



ஆர்த்தியின் இதயம்???



மர்மங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன!!!!





"ம... மச்சான் என்னடா நடக்குது?" கதிர் கேட்கவே அவர்களும் அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.



"ஷாலினி உடம்புல எந்த ஆபரேஷனும் பண்ணலன்னா ஆர்த்தி ஹார்ட் எங்கடா?" அபி தான் கேட்டான்.



"கதிர் அன்னக்கி வர்ஷினி ஐ மீன் விக்ரம்ஸ் டாட்டர் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்த அதே நேரம் தான் நம்ம ஆர்த்தி அட்மிட் ஆகி இருக்கா ரைட்?" குமரனின் கேள்விக்கு தலையை ஆட்டினான் கதிர்.



"ஷாலினிக்கு தான் ஹார்ட் கொடுத்திருக்காங்கன்னு யாரு சொன்னா உன் கிட்ட?" அபி கேட்கவும்



"ஒரு நர்ஸ் தான் கால் பண்ணி வர சொல்லி இருந்தாங்க... அப்போ தான் தான் ஷாலினிய காட்னாங்க" முறுக்கிக் கொள்ளாமல் நண்பன் கேள்விக்கு விடையளித்தான் கதிர்.



"அப்போ அந்த நர்ஸ் கிட்ட விசாரிக்கலாமே?" குமரன் இடைபுக நண்பனை பார்த்தான் அபி.



"இதுல ப்ளட் க்ரூப் கூட சரியா மேட்ச் ஆகலடா" குழப்பமாய் சொன்ன கதிரின் வார்த்தைகளில் மீண்டும் அதிர்ந்து போயினர் நண்பர்கள்...



"மச்சான் அந்த ராம் நாயி தான் இதெல்லாம் பண்ணி இருக்கணும்.... ஆதி நீ ரக்ஷன் கூட இரு... கதிர் வா உடனே போயி நாம அந்த நர்ஸ் கிட்ட உறுதிப்படுத்தி கிட்டு அப்பறமா என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்" என்றவனை சட்டென இடைமறித்தான் கதிர்.



"குமரா... போன இடத்துல ஏதாவது கிடைச்சுதா?"



"அட மறந்தே போயிட்டேன்டா.... ஆமா இன்ஜெக்ஷன் மாதிரி ஏதோ கிடச்சுது... தோ... " கதிரையில் வைக்கப்பட்டிருந்த பழுப்பு நிற கவரை எடுத்து நீட்ட டாக்டர் சொன்னதை அப்படியே ஒப்பித்தவன் அவர்கள் அதிர்ச்சியை பொருட்படுத்தாது தொடர்ந்தான்.



"சோ நீ இத லேப்புக்கு கொண்டு போயி என்னன்னு பாரு... நான் அபி கூட கிளம்புறேன்... ரக்ஷனுக்காக வர்மாவ வர சொல்லலாம்" சரியென கேட்டுக் கொண்டவன்



"அப்போ நா கிளம்புறேன்டா" கதிரிடமும் அபியிடமும் சொல்லிக் கொண்டே அவன் கிளம்ப வர்மனை அழைத்து அவன் வந்த ரக்ஷனின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே கிளம்பி இருந்தான்.



......



"கிருஷ்.... "



"ம்... " ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தவன் தீவிர சிந்தனையில் இருப்பது அவன் புருவ முடிச்சுக்களிலேயே தெரிந்தது அபிக்கு...



"நாம ஏன் அமிர்தாவோட ரிப்போர்ட்டையும் செக் பண்ண கூடாது?"



"ஹாஸ்பிடல் போயி அன்னக்கி நடந்த ஹார்ட் ட்ராஸ்பர்மேஷன்ஸ் பத்தி விசாரிக்கலாம்... அப்பறமா அமிர்தா ரிப்போர்ட் பத்தி விக்ரம் சார் கிட்ட கேக்கலாம்"



"ஓகே டா பட்.... சப்போஸ் ஷாலினி கேரக்டர் பொய்யா இருந்தா அந்த நர்ஸும் பொய்யா தானே இருக்கணும்?"



"மே பீ... அத கண்டு பிடிக்கறது தான் உன்னோட சவால்னு அந்த நாயி சொல்லாம சொல்றான்"



"அவன் இருக்கற இடம் கூட தெரியாம எப்பிடி ரிஸ்க் எடுக்கறது?"



"கண்டு பிடிக்கலாம் அபி..." அத்துடன் அவன் அமைதியாகி விட இவனும் அது குறித்து யோசிக்க ஆரம்பித்து விட்டான்.



........



"எக்ஸ்க்யூஸ் மீ..... " ரிசப்ஷனில் போய் நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள் அந்த இளம் பெண்...



"ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ சார்?"



"மிஸ். சாருங்கறவங்க?"



"சாரு??"



"நர்ஸ்"



"சாரி சார்.... சாருங்குற பேருல யாரும் இங்க வேல பாக்கல" எதிர்பார்த்தேன் என்பது போல் அமைதியாகி விட "வாட்..." அபி தான் கத்தி விட்டான்.



கதிரிடம் கேட்ட போது தோன்றாத அதிர்ச்சி அவள் வார்த்தைகளில் வெளிப்பட நண்பன் கையை அழுத்தினான் கதிர்.



"உங்க ஹாஸ்பிடல்ல நடந்த ஹார்ட் ட்ராஸ்பர்மேஷனஸ் பத்தி டீடெயில்ஸ் வேணும்" அவளை பதில் பேச விடாது சட்டென அபியின் போலிஸ் ஐடியை நீட்ட கப்பென வாயை மூடி விட்டாள் பெண்.



((டேய் கதிர்.... ஆமா நீயும் ஒரு காலத்துல போலிஸா இருந்தல்ல... உன் ஐடி எங்கடா இருக்கும்???



இப்போ இது ரொம்ப முக்கியம்



ரைட்டு விடு... அதுக்கு ஏன் முறைக்கிற))



"சார் வாங்க சார்" அவள் இன்னொரு பெண்ணுக்கு விடயத்தை சொல்ல அழைத்தாள் அப்பெண்....



......



"மொத்தமா இது வரை ஐம்பது கேஸஸ் நடந்தப்பட்டிருக்கு சார்" பயத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த ஹாஸ்பிடல் சீப் டாக்டர்.



"கிருஷ்... லுக் ஹியர்டா.... ஒரு தாள் கிழிக்கப்பட்டிருக்கு" தலையை அழுத்தக் கோதியவன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்துக் கொண்டான் வழமை போலும்....



"அபி... அந்த ஏர்லயே அமிர்தாவோடது இருக்கும் பாரு...."



"எஸ் டா...." உட்சாகமானவன் "பட் டொனேட்டர் நேம் கூட இல்ல" மீண்டும் சோர்ந்து போக



"இட்ஸ் ஓகே.... நீ அத போட்டோ எடு" இவன் தான் யோசனை சொன்னான்.



எல்லாம் முடித்து விட்டு கிளம்ப அடுத்து ஏதோ ஹாஸ்டலில் வண்டியை நிறுத்தியவனை புரியாமல் பார்த்தான் அபி.



"இங்க தான் தங்கி இருந்தா... சப்போஸ் கிடைக்கலன்னா அவ காலேஜ் போயி தேடலாம்" ஆமோதிப்பாய் அசைக்க உள்ளே நுழைந்தவர்கள் போன வைகத்திலேயே திரும்பி வந்து விட்டனர்.



ஆம் அங்கும் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன.



"காலேஜ் போலாம் அபி...." ஜீப்பினுள் ஏறி அமர தானும் ஏறினான் அபி.



.....



"அபி... நம்மள்ல ஒருத்தர் போலிஸாவும் ஒருத்தர் ஸ்டுடென்ட்டாகவும் போலாம்"



"என்னடா உளர்ற?"



"போலிஸ்னு பிரின்ஸிபால் கிட்ட அறிமுகமாகிட்டு அவர் அவ க்ளாஸ சொல்ற அதே நேரம் நீ ஆர் நான் ஸ்டுடென்ட்டுங்குற முகமூடில அவ க்ளாஸுக்குள்ள போனா நிச்சயமா க்ளூ கிடைக்கும்.... ஏன் சொல்றேன்னா பிரின்ஸிபால் மறைக்க கூட சான்ஸ் இருக்கு"



" ம்.. ஓகே...."



"நீ போலிஸா போ.... நான் ஸ்டுடென்ட்டா போறேன்" கண்களை ஆமோதிப்பது போல் மூடித் திறந்தவன் போலிஸ் ஐடியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைய கொஞ்ச நேரம் கழித்து இறங்கியவன் முன்னுள்ள கடைக்குச் சென்று வெளியே வரும் போது கட்டியிருந்த வேட்டி ட்ரவுசராக மாறி இருக்க கையில் ஒரு புக் வேறு சுழன்று நர்த்தனமாடிக் கொண்டிருந்தது.



நடந்து கொண்டே இருந்தவன் அபியிடம் இருந்து மேஸேஜ் வரவும் மர்மமாய் புன்னகைத்துக் கொண்டே அவன் அனுப்பிய க்ளாஸை தேடிப் போனான்.



((டேய் கதிர்.... நீ ஸ்டுடென்ட்டா.... சிரிப்பு சிரிப்பா வருதுடா))



"எக்ஸ்க்யூஸ் மீ" திடீரென கேட்ட கம்பீரக் குரலில் மொத்தமாக அவன் புறம் சாய்ந்தன பார்வைகள் அனைத்தும்....



"வாவ்...." பெண்கள் கூச்சலிட வசீகரமாய் சிரித்தவன் வாத்தியாரை அனுமதி வேண்டுவது போல் பார்த்து வைக்க



"நியூ ஜாயினிங்கா.... கெட் இன்" அவர் மீண்டும் பாடத்தில் கவனம் பதிக்க க்ளாஸ் முழுவதையும் ஒரு அலசு அலசியவன் வந்ததிலிருந்து தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் போய் அமர்ந்து கொள்ள தள்ளி அமர்ந்து சிரித்தாள் பெண்.



((பொண்டாட்டி கிட்ட லவ்வ சொல்லிட்டு வந்துட்டு இங்க என்னடா பன்ற???



இரு போட்டு குடுக்குறேன்))



"நீங்க ஷாலினியோட ப்ரண்ட் தானே?" உள்ளுணர்வுக்கு கட்டுப் பட்டே அந்த கேள்வியை கேட்டு விட்டாலும் இல்லையென்றால் எப்படி கண்டு பிடிப்பது என யோசனையாகவே இருந்தது காளைக்கு...



ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல்

"எஸ் எஸ்.... பட் உங்களுக்கு எப்பிடி?" அவ்வளவு சந்தோஷம் அவள் குரலில்.



வந்த அந்த இளம் காளைக்கு அவளை பற்றி தெரிந்திருக்கிறதே!!!



'ஹப்பாடா' மனதில் பெரு மூச்சு விட்டுக் கொண்டவன்



"ஷாலு எனக்கும் ப்ரண்டு தான்.... உங்கள பத்தி சொல்லி இருக்கா.... போட்டோல பார்த்திருக்கேன்" நன்றாக அள்ளி விட்டான்.



" ஹௌ சுவீட்.... யூ ஆர் சோ ஹேண்ட்ஸம்"



"நீயும் அழகா தானே இருக்க?" திரும்பி அவன் கண்ணடிக்க தலையை குனிந்தாள் பெண்.



((அடேய் என்னடா பண்ணி கிட்ருக்க??? போலிஸ் கேஸ்னு வரும் போது மட்டும் கிருஷ்ஷா மாறி ஜொல்லு விட்ற... பின்றியேடா))



"ப்ச் ஷாலு அட்ரஸ் மறந்து போச்சு.... அவ ஊரு கூட ஏதோ.... " அவளை கடைக் கண்ணால் பார்த்தபடி அவன் இழுக்க



"பெஹல (Behala, kolkatta.)" அவசரமாக இடைபுகவும் பொங்கிய சிரிப்பை அடக்கியவன் நெற்றியை அழுத்தத் தேய்த்துக் கொண்டே எழ



"எங்க கிளம்பிட்டீங்க?" மீண்டும் இடைமறித்தாள் பெண்.



"வேலை இருக்கு... தேங்க்ஸ்.... "



"அப்போ அவ நம்பராச்சும் கொடுங்க... பழையது வேலை செய்ய மாட்டேங்குது"



"அ.. அது எனக்கும் தெரில..." அவள் மீண்டும் கேள்வி கேட்கு முன் அவசரமாக வெளியேற "ஹூ ஆர் யூ மேன்?" அந்த வாத்தியின் குரல் தூரத்தே கேட்பது தெரிய தலையாட்டி சிரித்துக் கொண்டான் எ.ஸி.பி கிருஷ்ணா.....



.........



"வேட்டி எங்கடா?" அவன் ஏறவும் ஏற்கனவே ஜீப்பில் அமர்ந்திருந்தவன் ஆச்சரியமாய் கேட்க திரும்பி ஒற்றை கண்ணை சிமிட்டியவன் மர்மமாய் சிரித்தான்.



"சரி விடு.... ஏதாவது க்ளூ கெடச்சுதா?"



"பெஹல"



"வாட்.... கொல்கத்தாவா.... கொல்கத்தால இருக்கறவ எப்பிடி சென்னை வந்தா?"



"தெரிலடா... பாக்கலாம்" மீண்டும் வழமை போல் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்துக் கொண்டான் காளை...



***



ஹாஸ்பிடல்.....



கையில் ஏதோ ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் அருகே வந்தனர் கதிரும் அபியும்....



"என்னாச்சு?" கதிரின் கேள்வியில் சட்டென கலைந்தவன் எழுந்து பத்திரத்தை நீட்டிக் கொண்டே சொன்னான்.



"நீ சொன்னது கரெக்ட் மச்சி.... பொட்டாசியம் சயனைட் தான் கலந்து இருக்கு... அதனோட விஷ முறிவுக்கு க்ளாரியோசா சூப்பேபா (Gloriosa superba) அப்பிடீங்குற மூலிகையும் சேர்க்கப்பட்டிருக்குனு லேப்ல சொன்னாங்க.... தட் மீன்ஸ் நம்ம நாட்டுல செங்காந்தல் மலர்னு சொல்லுவோமே அதானாம்"



((செங்காந்தல் மலர கார்த்திகை பூன்னும் சொல்வாங்களாம் நண்பா... சங்க கால இலக்கியங்கள்ல இந்த பூவ பத்தி பாடாத புலவர்களே இல்லயாம்... மருத்துவ குணம் மிக்க பூவாம்... அதனால விஷ முறிவுக்கான மூலிகைன்னும் சொல்வாங்கலாம்... இது ஜிம்பாப்வே ( Zimbabwe) நாட்டுட தேசிய பூ மட்டுமில்லாம தமிழ்நாட்டுட மாநில மலராவும் தமிழீழத்தின் மலராகவும் இருக்காம்....))



"தட்ஸ் பைன் குமரா.... ஷாலினியோட ஊரு பெஹல அப்பிடீன்னு மட்டும் தான் இப்போதைக்கான தகவல்.... ரக்.. க்கும்... ரித்விக் விஷயம் இப்போதைக்கு சேப்னால நாம இத பத்தி அப்பறமா பேசலாம்... நா கொல்கத்தா கிளம்பலாம்னு இருக்கேன்"



"நாங்களும் வர்றோம்டா"



"நோ அபி... அங்க நீயும் குமரனும் வந்துட்டீங்கன்னா இங்கே யாருமே இல்லாம ரொம்ப ஆபத்தாயிடும்.... ரித்விக்கோட பாதுகாப்பு முக்கியம்... அவன நைட்டுக்கே வீட்டுக்கு கூட்டிட்டு போயி அங்க ஒரு நர்ஸ பாத்துக்க வெச்சுக்கலாம்... மாமாக்கு சென்னைலயே இருக்க முடியாது பிகாஸ் அவருக்கு கொல்கத்தால நிறைய மீட்டிங்ஸ் இருக்கு.... சோ... நானும் மாமாவும் கிளம்பறோம்... மாமா வீட்ல தங்கறது எனக்கும் அவருக்கும் சேப் கிடையாததுனால மாமா அவரு வீட்ல இருக்கட்டும் எனக்கு வேற வீடு பாத்துக்கலாம்"



"பட் மச்சி நீ மட்டும் போறது டேன்ஜர் டா"



"எஸ் ஐ நோ குமரா... பட் நா தனிய இருந்தா தான் சந்தேகம் வராத மாதிரி காய் நகர்த்தலாம்... மே பீ மாமா கூட நான் பேசறேங்குற விஷயம் இன்னும் அவனுக்கு தெரியாது... அது அப்பிடியே இருக்கணும்னா நான் தனியா இருந்து தான் ஆகனும்"



"இல்ல கிருஷ் நானும் வர்றேன்டா" நண்பனின் முடிவில் மனம் பரிதவித்தது அபிக்கு...



"அபி... டோன்ட் ஒர்ரிடா.... நா பாத்துக்கறேன்..... இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் அண்ட்... நீங்க ரெண்டு பேரும் புதிய போன் அண்ட் புதிய சிம் வாங்கிக்கோங்க... நானும் வாங்கறேன்... அதுல நாம பேசிக்கறது கூட யாருக்கும் தெரிய வேணாம்... இப்போ இருக்க நம்பர் ட்ரேஸ் பண்ணுறானுங்க ஐ கெஸ்... இன்னொரு முக்கியமான விஷயம்... அபி... நீ குடும்பத்துல இருக்க எல்லோர் போனையும் ட்ரேஸ் பண்ணு... இன்கமிங் அவுட் கோயிங்... எல்லாம்.... அண்ட் குமரா... நீ வீட்ட சுத்தி யாருக்கும் தெரியாம மினி கேமரா பிக்ஸ் பண்ணிடு... நாளைக்கு நான் கொல்கத்தா கிளம்பறேன்னு கூட யாருக்கும் தெரிய வேணாம்... வேறு ஏதாவது காரணம் காரணம் சொல்லிக்கலாம்" மனமே இல்லாமல் தலையாட்டி வைத்தனர் நண்பர்கள் இருவரும்...



***



இரவு....



கதிர் சொன்னபடியே ரக்ஷனை வீட்டிற்கு அழைத்து வந்தவர்கள் அர்ச்சனா அவனுடன் இருப்பதாக சொல்லி விடவும் நர்ஸையும் தவிர்த்து விட்டனர்.



பதறிய குடும்பத்தினருக்கு வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டி விட்டாலும் கதிர் மட்டும் வீட்டுக்கு இன்னும் வந்திருக்காததில் பேதைக்குத் தான் மனம் அடித்துக் கொண்டது.



'என் மேல கோபமா இருக்காங்களா... என் முகத்த பாக்க பிடிக்காம தான் இன்னும் வீட்டுக்கு வர்லியா... சாரி மாமா... உங்க கிட்ட நான் பேசணும் ப்ளீஸ் வந்துடுங்க...' மனதிலேயே மன்றாடிக் கொண்டிருந்தவள் அனைவரும் சென்றாலும் ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.



நாளை கொல்கத்தா செல்வதற்கான ஏற்பாட்டை முடித்து விட்டு வர இரவு பதினொன்றை தாண்டியிருக்க சோர்வுடன் நுழைந்தவன் ஹாலில் அமர்ந்திருந்தவளை பார்த்து புருவம் சுருக்க சடாரென இருக்கையை விட்டு எழுந்தவள் கைகளை பிசைந்து கொண்டே நிற்கவும் அருகில் வந்தான் கணவன்.



"தூங்காம என்ன பண்ற?"



"இ.. இல்ல வந்து நீங்க..." அவள் தடுமாறவும் பக்கென சிரித்தவன்



"எனக்காக காத்துட்ருந்த ரைட்?" என்றான் உதட்டோர சிரிப்புடன்....



அவன் சிரிப்பில் நிம்மதி பெரு மூச்சு விட்டவள் ஆமென தலையாட்ட



"சாப்டியா?" என்றான் கடமை போலும்...



"ஆ... ஆமா... நீ... நீங்க?"



"எஸ் சாப்டேன்... ஏன் இல்லன்னா ஊட்டி விட போறியா?" சிரிப்பை அடக்கிக் கொண்டே அவன் சீண்டவும் செவ்வானமாய் சிவந்து போயின பாவையின் கண்ணங்கள்....



"நாளைக்கு கொல்கத்தா கிளம்புறேன் வர்ஷினி" அவள் தொடர்கிறாள் என நினைத்தவன் மாடியேற அப்படியே நின்றிருந்தவளுக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்ட அவன் சென்று விட்ட பின் அவனைத் தேடி ஓடினாள் அவனவள்...



"வரு இந்த விஷயம்..." பேசிக் கொண்டே திரும்பியவன் அவள் மூச்சிறைக்க நிற்பது கண்டு குழம்பிப் போனான்.



"ஏன் என்னாச்சு.... ஏன் இப்பிடி மூச்சு வாங்குது?"



"மா...மா... ப்ளீஸ் நானும் உங்க கூ.. கூட வரட்டுமா?" அவன் தன் மீது கோபித்துக் கொண்டு மறுத்து விடுவானோ எனும் தவிப்பு அவளிடம்....



காலையில் நடந்ததற்காகத் தான் தன்னை தவிர்க்க நினைத்து கொல்கத்தா போகிறேன் என சொல்கிறான் என நினைத்தவள் கேட்டே விட்டாள்.



"இல்ல கண்ணம்மா இது நான் முக்..."



"ப்ளீஸ் மாமா... ப்ளீஸ் உங்க கூட வர்றேனே?" அவன் சொல்ல வருவதை பொருட்படுத்துவதாகவே இல்லை அவள்...



"வரு ரிலாக்ஸ்..... என்னாச்சு உனக்கு... இப்பிடி வா" கையை பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவன் தண்ணீரை நீட்ட குடித்த பின்னே சற்றே ஆசுவாசமானாள் பெண்....



"இங்க பாரு வர்ஷினி.... நான் கொல்கத்தா...."



"ப்ளீஸ் மாமா..... நானும் வர்றேன்" கண்களை இறுக்க மூடித் திறந்து நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்தவனுக்கு மனைவி முதன் முதலாய் அவளாகவே கேட்டதை மறுக்க முடியாத நிலை வேறு....



"மாமா நானும் வர்றேன் ப்ளீஸ்...." அவள் முகத்தில் தெரிந்த பரிதவிப்பில் சட்டென இழுத்து அணைத்துக் கொண்டவன்



"ஓகே போலாம்.... பட் யாருக்கும் நாம கொல்கத்தா போறோம்குறது தெரிய கூடாது.... வீட்ல கேட்டா நானே சமாளிச்சுக்குறேன்...." முடிவாக கூறி விட அண்ணார்ந்து பார்த்வளின் நெற்றியில் இதழ் பதித்தவன் மீண்டும் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள முதன் முறை அவன் இடையை வளைத்து அணைத்தன அவள் கரங்கள்....



தொடரும்.....



09-08-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 09 [ B ]



தன் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தவளை திரும்பிப் பார்த்து சிரித்தான் கதிர்.



விமானம் தரையிறங்குவதற்கான நேரம் நெருங்கவே நடுவில் கொஞ்சம் சமாதானமாக அமர்ந்திருந்தாலும் ஏறிய போது எப்படி இருந்தாளோ அப்படியே நடுங்கிக் கொண்டிருந்தாள் காரிகை...



வீட்டில் உள்ளவர்களுக்கு கொல்கத்தா வரும் செய்தி தெரியாது.



வியாபார விஷயமாக எங்கோ செல்கிறான் என்பது மட்டுமே தெரிந்தாலும் தங்கையை விட்டு வந்தது மனதின் ஓரத்தில் வலித்தது.



அவள் அதை பொருட்படுத்தவில்லை தான்... அவளுக்கு அண்ணனுடன் அண்ணியும் சேர்ந்து கிளம்புகிறார் என்று சொன்னதும் ஒரே குஷியாகிப் போனது.



இருந்தாலும் அம்மா அப்பா அண்ணன் இறந்த பின் பாதுகாப்புக்காய் வெளிநாடு அனுப்பய போது தவிர எதற்குமே அவன் பிரிந்திருக்காதது கவலையாக இருந்தது.



விமானம் தரையிறங்கவும் ஒவ்வொருவராக வெளியேறியதில் மனைவியின் கைகளுக்கு அழுத்தம் கொடுத்தான் கதிர்.



சட்டென விழி திறந்தவள் சுற்றுமுற்றும் பார்த்து விழிக்க சிரித்தவன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டு வெளியேற்றினான் பின்னால் ராஜா ராமுக்கு கண் காட்டியவாறே...



***



தண்ணீர் க்ளாஸை கீழே வைப்பதற்காக வந்து கொண்டிருந்தாள் அமிர்தா.



அதே நேரம் முக்கியமான பைலொன்றை கதிரின் ரூமில் விட்டிருந்த குமரனும் தடதடவென படிகளில் ஏற ஏதோ யோசனையில் வந்து கொண்டிருந்தவள் அவன் மீதே மோத க்ளாஸிலிருந்த நீர் மொத்தமாய் அவன் மீது அபிஷேகமாகியதில் "சாரி சாரி" பதறி விலகினாள் பெண்.



தன்னை குனிந்து பார்த்தவன் மீண்டும் அவளை ஏறிட



"சாரி குமரன் சார்... சாரி நான் ஏதோ யோசனைல.. சாரி" அவசரமாக மன்னிப்பு வேண்டினாள்.



"இட்ஸ் ஓகே...." சொல்லி விட்டு அவன் அதே வேகத்தில் ஏறி சென்று விடவும் நாக்கை கடித்துக் கொண்டவள் கீழே இறங்கினாள்.



......



"என்னடி பண்ற?" போனை அப்படியும் இப்படியுமாக வளைத்துக் கொண்டிருந்த யாழினியின் பக்கத்தில் வந்தான் அபி.



"நா என்ன பண்ணா உங்களுக்கு என்ன?" வெடுக்கென கேட்டவளை பார்த்து



"குள்ள கத்திரிக்கா... நானும் பாத்துட்டே இருக்கேன்.... எதுக்கு சும்மா முறுக்கி கிட்டு திரியுற? "



"நான் குள்ள கத்திரிக்காவா?" கண்களை விரித்து மூக்கு விடைக்க அவள் கேட்டதில் மூக்கை பிடித்து ஆட்டியவனின் கையை வெடுக்கென தட்டி விட்டவள் இன்னுமின்னும் முறைக்க



"பேபி மா கூடுதலா கோபப்படாதடி... அப்பறம் இருக்கற இத்துனூன்னு முடியும் வெள்ளையாகிடும்... அப்பறம் யாருமே இந்த கிழவிய கட்டிக்க மாட்டாங்க" சமாதானப் படுத்துவது போல் கலாய்த்து வைத்தான்.



"யாரு கட்டிக்கலன்னா உங்களுக்கு என்ன?"



"உன் மாமன்ல பேபி அதான் நெஞ்சு துடிக்குது"



"துடிக்கும் துடிக்கும் "



"ஏன் பேபி நம்ப மாட்டியா? "



"அப்பறமா யோசிச்சு சொல்றேன்... "



" நக்கலூ... சரி யார போட்டோ எடுத்துகிட்ருந்த?"



"குமரன் அண்ணாக்கும் அமிர்தா அக்காக்கும் லவ் வர வைக்கலாம்னு அவங்க ரோமான்ஸ் ஸீன படம் புடிச்சிகிட்டேன்" இருவரும் மோதி நிற்கும் போது நெருக்கமாய் நின்ற கணத்தை அவள் படமாய் எடுத்திருக்க தலையில் ஓங்கி குட்டினான் அபி..



" ஆஆஆஆ.... அண்ணாஆஆஆ" வீடே அதிர அவள் கத்த வாயை சட்டென பொத்தியவனின் கையை கடித்தவள் ஓடி விட " குட்டி பிசாசு" கையை உதறிக் கொண்டே முணுமுணுத்தான் அபினவ் ஆதர்ஷ்.



........



வளவளத்துக் கொண்டே அமர்ந்திருந்தவளை புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரக்ஷன்.



ஹாஸ்டலில் தங்கி இருந்தவள் நிதினுக்கு பயந்து போய் ரக்ஷனை பார்த்துக் கொள்வதாக கூறவும் அவள் பாதுகாப்பு கருதி கதிரும் எதுவும் சொல்லவில்லை...



"ரித்விக் சார்... நா ஒன்னு கேக்கட்டுமா?"



"கேளு"



"உங்க அப்பாம்ம எங்க இருக்காங்க?"



"இறந்து போயிட்டாங்க" சட்டென பதில் வந்தது.



"ஓஹ் சாரி... அப்பா பேரு தெரிஞ்சிக்கலாமா?"



"ஷக்திவேல் அண்ட் அம்மா சத்யநந்தினி"



"வாட்... கதிர் சார் அப்பா பேரு கூட அதானே?"



"ம் ஆமா அவரு தான்"



"ஓ மை காட்... அப்போ நீங்க அவரு தம்பியா?" அவள் கேள்வியில் இறுக்கம் தளர்ந்து வாய்விட்டுச் சிரித்தான் ரக்ஷன்.



"ஏன் சார் சிரிக்குறீங்க?" இடையில் வந்து விழுந்த அவள் கேள்விக்கு கூட அவனால் பதில் சொல்ல முடியாதளவு சிரித்துக் கொண்டே இருக்க மென் புன்னகை உதட்டில் படர்ந்தாலும் முறைத்துப் பார்த்தாள் பாவை...



"சார் நிறுத்துங்க சார்.... கடுப்பேத்தி கிட்டு" அவள் சொன்ன விதத்தில் மீண்டும் அவன் சிரிக்க வேக வேகமாய் மூச்சை இழுத்து விட்டவள் சட்டென எழுந்து வெளியே போக எத்தனிக்க அவள் கையை திடீரென அவன் பிடித்து இழுத்ததில் அவன் மீதே மொத்தமாய் வீழ்ந்தாள் பெண்.



அவனும் இதை எதிர்ப்பார்க்க வில்லை தான்...



இருந்தாலும் இருவருக்கும் திடீரென உடல் சிலிர்த்து அடக்க படக்கென எழுந்தவள் மறுபக்கம் திரும்பி நிற்கவும்



"அ... சா.. சாரி அர்ச்சனா" அவனுக்குமே சங்கடமாய்....



"ரக்ஷன் அண்ணாஆஆ" திடீரென கத்திக் கொண்டே யாழினி நுழையவும் தன்னை இழுத்துப் பிடித்தவன்



"வா குட்டிமா" என்றான் சாதாரணம் போலும்....



அதில் அவளும் மெல்ல இயல்புக்கு திரும்ப அருகே வந்தாள் யாழினி கிருஷ்ணா.



"இந்த அபி மாமாவ பாருங்க.... சும்மா சும்மா மண்டைல கொட்றாங்க" உதட்டை பிதுக்கவும் அவளைப் பார்த்து அர்ச்சனா சிரிக்க உள்ளே நுழைந்த அபியை முறைத்தான் ரக்ஷன்.



"என்ன எதுக்குடா முறைக்குற... அவ தான் குட்டி பிசாசு... பாரு எப்பிடி கடிச்சு வெச்சிருக்கான்னு...." அவனும் நண்பனிடம் புகார் வாசித்தான்.



"மாமா தான் முதல்ல கொட்டினாங்க அண்ணா.... அதான் அப்பிடி பண்ணேன்...." அவசரமாக மறுத்தாள் பெண்.



"அவ என்ன பண்ணா தெரியுமா மச்சி... நம்ம குமரனும் விக்ரம் டாட்டர் அமிர்தாவும் தவறுதலா மோதி விழப்போனப்போ அத ரொமான்ஸ் சீன்னு போட்டோ எடுத்து கிட்ருக்கா" பக்கென சிரித்து வைத்த அர்ச்சனாவை ஒரு பார்வை பார்த்தவன் யாழினியிடம் திரும்பினான்.



"இல்ல இல்ல ரக்ஷன் அண்ணா..... அபி மாமா தான் அப்பிடி பண்ண சொன்னாங்க"



"அடிப்பாவி.... உன்ன.... " அவன் அடிக்க கையோங்கவும் துள்ளிக் குதித்தவள் அர்ச்சனாவின் பின் போய் மறைந்து கொள்ள



"மரியாதையா இங்க வந்துடு" கடுப்பில் கத்தினான் அபி.



"லக்ஷ்மி அத்ததததததததத" அவள் போட்ட கூச்சலில் அடித்துப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவரிடம்



"அபி மாமா அடிக்கிறாங்க" உதட்டை பாவமாய் பிதுக்க



"அபி..." கண்டித்தார் தாய்.



"மா அந்த குள்ள கத்திரிக்கா மேல தான் மா தப்பு.... மவளே தனிய மாட்டுவல்ல அப்போ இருக்கு" பல்லை கடிக்க "வெவ்வவெவ்வே....." வாயை வளைத்து பழிப்புக் காட்டியவள் தாயுடன் சென்று விட தலையாட்டி சிரித்தான் அபி.



***



கொல்கத்தா.....



"இல்ல மாமா..... நாங்க கிளம்பறோம்... பீ சேப்... எக்காரணம் கொண்டும் என் கிட்ட பேச முயற்சிக்காதிங்க.... தேவைன்னா அபி கிட்ட சொல்லுங்க நா பாத்துக்கறேன்..."



"சரி பா" காரணம் கேட்காமல் ஆமோதித்தவரை சட்டென அணைத்து விடுவித்தவன் கிளம்பி விட்டான்.



...........



குமரன் மூலம் வீடு தயாராகி இருக்க பெஹல (Behala, Kolkattha.) வுக்கு சற்று தொலைவில் தெற்கு கொல்கத்தா பக்கமாக வசதி படைத்த ஒரு குடியிருப்பு தெருவில் தான் வீடு இருந்தது.



ராஜாராம் வீடு இரு இடங்களுக்கும் அப்பாற்பட்ட நடு கொல்கத்தா பகுதியில் இருந்ததால் வீடு வந்து சேரவே இரவு இரண்டை தாண்டியிருக்க வீடு இருக்கும் தெருவில் காரை நுழைத்தவன் கிளைப்பகுதியில் திருப்பி வீட்டின் முன் காரை நிறுத்தவும் புன்னகையுடன் தன் கணவனை பார்த்தாள் பெண்.



தானும் திரும்பி புன்னகைத்தவனுக்கு எப்போதும் போல் அந்தப் புன்னகை ஒன்றே போதுமாய்....



"நான் உன் கிட்ட விழுந்ததே இந்த ஸ்மைல்ல தான்டி.... திரும்ப திரும்ப விழ வைக்காத" பட்டென கண்ணத்தில் முத்தமிட்டவன் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரியவும் சிரிக்க தலையை குனித்துக் கொண்டவள் அவன் சீண்டலில் சிவந்து போனாள்.



"இப்பிடியே இருக்க ஐடியானாலும் எனக்கு ஓகே கண்ணம்மா" அவன் கண்சிமிட்ட விழித்தவள் சீட் பெல்ட்டை கழற்றப் போக அந்நேரமாகப் பார்த்து அதுவும் வரமாட்டேன் என அடம் பிடிக்க கணவனை பாவமாகப் பார்த்தாள் காரிகை....



மீண்டும் மர்மமாய் சிரித்தவன் அவள் பக்கமாக சரிந்து அதை கழற்றி விட மிக அருகில் கணவன் முகம் கண்டதில் அவள் தான் தவித்துப் போனாள்.



"ம் ஓகே.... இப்போ இறங்கு" சட்டென திரும்பியவனின் உதட்டோடு பெண்ணவள் உதடு உரசியதில் கண்களை இறுக்க மூடியவளை புன்னகையுடன் பார்த்தவன் அழுத்தமான முத்தத்தை பரிசளித்து விட்டே நிமிர அவன் அடுத்து ஏதாவது செய்வதற்குள் அடித்துப் பிடித்துக் கொண்டு அவள் இறங்கவும் முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் தானும் இறங்கி அவள் புறம் வந்தான்.



உள்ளுக்குள் செவ்வானமாய் சிவந்து அமர்ந்திருந்தவள் இவள் தானா என சந்தேகிக்கும் படி பேயறைந்தது போல் வீட்டையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளை கண்டு புருவம் நெறித்தவன் அவள் தோள் தொட திடுக்கிட்டுத் திரும்பினாள் பெண்...



"என்னாச்சு வரு?"



"இ... இல்ல மாமா... இ... இந்த வீடு... இந்த வீடு.... எனக்குள்ள என்னமோ ப... பண்ணுது..."



"ஹே என்னடா..." கனிவாய் தோளை வளைத்துப் பிடிக்கவும் சட்டென ஒன்றியவளை குனிந்து பார்த்தவனின் முகத்தில் குழப்ப ரேகைகள் படிந்தன.



"கண்ணம்மா என்னடா... என்ன ஆச்சு? "



"தெ... தெரில மாமா... நாம வேற வீடு போலாமா.... எனக்கு இது வேணாம்"



"இப்போ என்னடா பண்றது.... மணி இரண்டு தாண்டுதே... இன்னிக்கு மட்டும் தங்கிக்கலாம்... அதான் நா இருக்கேன்ல.... வா" கை வளைவுக்குள் வைத்தே வாசலை அடைந்தவன் திறந்து கொண்டு உள்ளே நுழைய தானும் அடியெடுத்து வைத்தவளின் தேகம் தரையில் கால் பட்ட நொடி சிலிர்த்து அடங்கியது.



ஏதோ விவரிக்க முடியாத ஓர் உணர்வு மனம் முழுதும் வியாபிக்க தனக்கே தனக்கான இடத்திற்கு வந்த ஓர் மாயை அவளுக்குள்!!!



முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா????
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுற்று முற்றும் வீட்டை சுற்றி துழாவியவளுக்கு மூலை முடுக்கெல்லாம் ஏதேதோ ஞாபக அலைகள் மோத அப்படியே நின்று விட்டவளை கலைத்தான் கதிர்.

"வர்ஷினி..."

"ஹாங்..."

"உள்ள வா... ஏன் அங்கேயே நிக்குற?"

"இது யார் வீடு?"

"தெரிலடா... குமரன் தான் பாத்து வெச்சிருந்தான்.... நாளைக்கு பாக்கலாம்... இப்போ வா" கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல அறைக்குள் நுழையு முன் சட்டென அவள் பார்வை எதிரே இருந்த ரூமில் படிந்து மீழ தானும் பார்த்தவன் இன்னும் குழப்பமானான்.

"என்னாச்சு?"

"இ.... இல்ல... அ... அந்த ரூம்... அந்த ரூம் எனக்கு ரொ.. ரொம்ப நெருக்கமா இருக்கா மாதிரி ஏ.. ஏதோ"

"நீ மனச போட்டு குழப்பிகிட்ருக்க... இதுக்கு முன்னாடி இங்க வராத உனக்கு எப்பிடிடா?"

"இல்ல மாமா... சத்தியமா"

"சரி... சரி நம்பறேன்... வா" உள்ளே அழைத்துக் கொண்டு சென்றவன் அவளை அமர வைத்து விட்டு குளித்து முடித்து விட்டு வர தலையை தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்நாள் மனைவி.

"ஹே என்னாச்சு வரு... " அவசரமாக அருகில் வந்தவன் தன்னை நோக்கி அவள் முகத்தை உயர்த்த

"மா... மா... ஏதோ... பேங்க் மாமா... அ.. அங்க லாக்கர்ல எ... என்னவோ முக்கியமான ஆ.. ஆதாரம் இ... இருக்கு..." ஏதேதோ உளறினாள் பாவை...

"வாட்... பேங்க்கா... ஆதாரம் அதுவும் லாக்கர்லயா... கண்ணம்மா என்ன நடக்குது உனக்கு... இங்க பாரு... இங்க பாரு... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...."

"நம்புங்க மாமா... சத்தியமா... "

"நம்பறேன்டா.... நம்பறேன்... உன் மேல நம்பிக்க இல்லாமலா... " தன்னோடு சேர்த்து அணைத்தவனின் புருவம் நெறிந்தது.

"மா... மா... முக்கியமான... "

"ஷ்... நாளைக்கு பாத்துக்கலாம்... இப்போ தூங்கு.... " முதுகை தட்டிக் கொடுக்கவும் மீண்டும் மீண்டும் ஏதோ கூற வந்தவள் அவன் விடாதிருக்கவும் அப்படியே அடங்கி தூங்கிப் போக சற்று நேரம் கழித்து குனிந்து பார்த்தவன் அவள் உறங்கி விட்டிருப்பது உணர்ந்து முன்னால் மதிமுகத்தை மறைத்திருந்த கற்றை முடியை காதோரம் ஒதிக்கியவாறே நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவளையே பார்த்திருந்தான்.

...........

காலை....

சற்று தாமதாகத் தான் எழுந்திருந்தாள் பாவை...

கணவன் ஹாலில் யாருடனோ மொபைலில் பேசுவது கேட்கவும் தானும் குளித்து ஆயத்தமாகி வர உள்ளே நுழைந்தான் கணவன்.

இடையை தாண்டியிருந்த கூந்தலிலிருந்து வடிந்த நீர் நிவலைகள் நிலத்தில் சிந்தியிருக்க கண்ணாடியினூடு தன்னை பார்த்துக் கொண்டே தலையை சரித்து துவட்டிக் கொண்டிருந்தவளை சட்டென பின்னாலிருந்து அணைத்தான் காளை...

துள்ளி விலக எத்தனித்தவளின் இடையை அழுத்த கண்களை இறுக மூடிக் கொண்டவள் அசையாது நிற்கவும் அவள் முதுகில் இதழொற்றி எடுத்தவன் கழுத்து வளைவில் முகம் புதைக்க நிலத்தில் தன் பெருவிரலை ஊன்றினாள் கிளர்ந்த உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வர போராடியவாறே...

"வரூ...." அவன் குரலில் தாபம் அப்பட்டமாய் தெரிய "ம்..." என்று மட்டுமே பதிலளித்து வைத்தாள்.

"உனக்கு கல்யாணம் வேற ஒருத்தன் கூட நிச்சயமாகி இருக்குன்னு தெரிஞ்சதுலருந்து நான் நானாகவே இல்லடி.... எங்க நீ என் கைய விட்டு போயிடுவியோன்னு ரொம்ப பயந்தேன் கண்ணம்மா... அதான் அன்னக்கி அந்த மாதிரி தாலி கட்ட வேண்டிய நிலை வந்துடுச்சு... ஐ அம் சாரி.... நீ ரொம்ப பயந்து போய் இருந்த... அதுவும் நீ என்ன பாத்து அதிகமா பயப்பட்டுகிட்ருந்தது எனக்கு சுத்தமா பிடிக்கல... ரொம்ப ஹார்ஷா நடந்துக்கிட்டேன்.... சாரி.... எனக்கு நீ வேணும் வரு... அதுவும் இப்போவே... " அவளை தன் புறம் திருப்பி முகமேந்தி அனுமதி வேண்ட அவனையே இமைக்காமல் பார்த்தவள் எம்பி அவன் கண்ணத்தில் முத்தமிட்டு விலகு முன் இடையோடு இறுக்கியவன் அவளதரங்களை முற்றுகையிட்டிருந்தான்.

((நீ கேஸ் விஷயமா வந்தியா இல்ல ஹனிமூன் வந்தியாடா... சட்டுபுட்டுனு கண்டு பிடிடா கதிரு.... நான் கதைய முடிச்சுட்டு வேற வேலய பாக்க வேணாமா... ரொம்ப பண்ற நீ))

***

"டாடி எப்போ கிளம்பறோம்?" மீண்டும் மீண்டும் கேட்ட மகளை இயலாமையுடன் பார்த்தார் கமிஷ்னர் விக்ரம் குமார்.

"அம்மு(அமிர்தா)... இங்க வா" கை பிடித்து இழுத்து அருகில் அமர வைக்கவும் அமர்ந்து கொண்டவள் தந்தையை கேள்வியாய் நோக்கினாள்.

"க்ருஷ்ஷ லவ் பண்ணியாடா?" திடுமென அவர் கேட்கவும் தூக்கிவாரிப் போட்டது பேதைக்கு...

"சொல்லு அம்மு மா..."

"ட...டாடி...அ... அது... அது வந்து.. "

"சரி லவ் பண்ணி இருக்க... அவன் லவ் பண்ணலன்னு இப்போ தெரிஞ்சதும் விலகி இருக்க ட்ரை பண்ற நல்ல விஷயம்... உன்ன நினச்சு நா பெரும கூட பட்றேன்.... பட் இங்க இருந்து வேற இடத்துக்கு போறதால மட்டும் அவனோட நினைவுகள் அழிஞ்சுடும்னு நினக்கிறியா? "

"....."

"அப்பிடின்னா சொல்லு இப்போவே கிளம்பலாம்"

"...."

"அவன் கிட்ட எத பாத்து காதல்ல விழுந்த? ஏற்கனவே தெரிஞ்சவன்.... உன் மானத்தை காப்பாத்தி இருக்காங்குறதுக்காகவா? " ராதா எல்லாவற்றையும் ஒன்று விடாது ஒப்பித்து புலம்பி இருந்தார்.

விலுக்கென தந்தையை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் குனிந்து கொள்ள அவள் கூந்தலை வருடிக் கொடுத்தவாறே பேசினார் தந்தை.

"இதுபோல அன்னக்கி வேற ஒருத்தன் பண்ணி இருந்தா அவன் மேல காதல் வந்திருக்குமா? நீ அவன் மேல வெச்சது காதல் இல்ல அம்மு மா... அது ஒரு வகையான ஈர்ப்பு... நீ இவ்வளவு நாளா காத்துகிட்டு இருந்தது அவனும் நம்மல லவ் பண்றான்னு நெனச்சு கிட்டு தானே தவிர நீ அவன காதலிச்சதுனால இல்லடா... அவன் நம்மல லவ் பண்றான் நாம அவனுக்கு துரோகம் பண்ணிட கூடாதுன்னு நெனச்சவ யாரையும் காதலிக்க மறுக்குற... "

"இ....இல்ல டாடி... "

"சரி நா கேக்கறதுக்கு பதில் சொல்லு.... அவன் இன்னொரு பொண்ணோட புருஷன்னு தெரிஞ்சதும் அவன் உன்ன ஏமாத்தினான்னு தான் தோனுச்சா? "

"இ.... இ... இல்ல"

"நீ உண்மையா அவன் மேல காதல்ல விழுந்திருந்தின்னா அந்த வலி தானே உனக்கு ஏற்பட்டிருக்கனும்.... ஆனா ஏற்படலயே ஒய்.... பிகாஸ் யூ ஆர் நாட் இன் லவ் வித் ஹிம் "

"...."

"அவன அவன் மனைவி கூட பாக்கும் போது வலிச்சுதா? "

"இ... இல்ல... டாடி"

"நீ அவன லவ் பண்ணல... சோ அந்த வலி தெரில உணக்கு... நாம மட்டும் காத்துகிட்டு இருந்துருக்கோமேங்குற ஒரு ஏமாற்றம்... ஒரு கழிவிரக்கம்னால தான் உன் மனசு வலியில துடிச்சிருக்கு.... இப்போ சொல்லு உனக்கு அவன் மேல வந்தது லவ்வா க்ரஷ்ஷா?"

"அ... அது டாடி...." தந்தையை பாவமாய் ஏறிட்டவள் அவர் புன்னகைக்க கொஞ்சமாக தெளிந்திருந்தாள்.

"நல்லா யோசிடா.... அப்பறமும் உனக்கு லவ்னு தான் தோனுச்சுனா நாம போலாம்"

"ம்... "

"நாம கொல்கத்தால இருக்கும் போது உனக்கு பாத்த மாப்பிள்ள யாரு தெரியுமா? " திடுக்கிட்டு நிமிர்ந்தவள்

"டிடெக்டிவ் குமரன்" அவர் பதிலில் இன்னும் அதிர்ச்சியாய் கண்களை விரித்தாள்.

"என்னடா இப்போ போய் சொல்றானேன்னு யோசிக்காத அம்மு மா.... அவனும் உன்ன லவ் பண்ணி இத்தன வருஷமா காத்திகிட்ருக்கான்... நீ வேற ஒருத்தருக்காக காத்துகிட்ருக்க அப்பிடின்னும் போது அவனுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்"

"எ... எ... என்ன சொல்றீங்க டாடி?" அவளுக்கு அதை எப்படி எடுத்துக் கொள்ளவென்றே புரியாமல் இருக்க வார்த்தைகள் கூட வர மறுத்து சண்டித்தனம் செய்து வைத்தது.

அவளுக்கு அவன் மீது எப்போதுமே மரியாதை உண்டு... அதிலும் அவன் புத்தி கூர்மையில் அபார நம்பிக்கை வேறு இருக்கிறது தான்...

இருந்தாலும் அவனை ஒரு போதும் அந்த கோணத்தில் பார்த்ததே இல்லையே...

முக்கியமாக அவன் கூட அப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லையே.... பிறகு எப்படி???

ஒருவேலை அவள் தான் கவனிக்காமல் விட்டிருந்தாளோ???

நேற்று கூட சாதாரணமாகத் தானே கடந்து சென்றான்....

சாதாரணமாக கடந்து சென்றவன் அவளை ஒரு கணம் திரும்பிப் பார்த்த போது அவன் கண்களில் மின்னலாய் வந்து போன வலியை அவள் அறிவாளா???

"அம்மு..."

"ஹாங்.... டாடி..."

"அதனால தான்டா சொல்றேன்... நல்லா யோசிச்சு முடிவெடு.... குழப்பிக்காத" அவர் எழுந்து சென்றும் அப்படியே தான் அமர்ந்திருந்தாள் பெண்...

குமரனை அவருக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும்... அவர் நண்பனின் மகன்... அவர் கண் முன்னாள் வளர்ந்த பையன் அவன்...

அவர் தான் அவனை டிடெக்டிவ்வாக ஆக சொன்னதும்... அவ்வளவு நம்பிக்கை அவன் மீது...

முதலிலிருந்தே அவன் தான் மகளுக்கு என முடிவெடுத்திருந்தவர் அதை அவனிடம் சொன்ன பிறகே அவளை ஏறிட்டுப் பார்த்திருந்தான்.

அதுவரையில் அவளை தெரியும் தான்... வெறும் விக்ரமின் மகளாக... அதன் பிறகு தான் அவன் காதலிக்க ஆரம்பித்ததும்...

கதிர் கூட எத்தனையோ தடவை கேட்டிருந்தான் திருமணம் பற்றி... மழுப்பி விட்டிருந்தவன் அவன் வற்புறுத்தவும் தான் சொல்லி இருந்தான்.

அதன் பிறகு அவன் அதை பற்றி பேசுவது என்ன மூச்சு கூட விடுவதில்லை...

கதிருக்கு குமரன் ஒரு பெண்ணை காதலிக்கும் விடயம் மட்டுமே தெரிந்திருக்க அவள் அமிர்தா என்பது தெரியாது.

கதிரின் மனைவியையும் விதி வசத்தால் அமிர்தாவின் வருகைக்குப் பின்னரே மீண்டும் அவன் கண்ட போது இருவரும் ஒருவரல்ல என்பது புரிந்து அவன் மனம் அடைந்த நிம்மதியை வெறும் வார்த்தைகளில் அடக்கி விட்டிருக்க முடியாது யாராலும்...

***

மீண்டும் குளித்திருந்தவளை பார்த்து கணவன் வாய் விட்டுச் சிரிக்கவும் சிணுங்கினாள் காரிகை....

"வரு... நீ வெக்கப்படும் போது ரொம்ப கியூட்டா இருக்கடி" அவன் மறுபடி சீண்ட பறிமாறிக் கொண்டிருந்தவள் முகம் மலர்ந்து புன்னகைக்க மீண்டும் மீண்டும் வீழ்ந்து கொண்டிருந்தான் காளை....

"சாப்புடு..."

"இல்ல நீங்க..."

"புருஷன் சாப்டதுக்கப்றம் தான் பொண்டாட்டி சாப்புடனும்னு எந்த விதி முறையும் எனக்கு இல்ல கண்ணம்மா... சோ... உட்காரு..." அவளை இழுத்து அமர வைத்தவன் தானே பறிமாறவும் அவன் செய்கை அடியாழம் வரை சென்று தித்திக்க மீண்டும் மலர்ந்தது புன்னகை...

"எதுக்கிப்போ சிரிப்பு...? "

"அ... அ.. சாரி"

"ஹே நா சும்மா கேட்டேன்... ஏன் இவ்வளவு பயப்படற?"

"...."

"ரொம்ப பயந்த பொண்ணா இருந்தா அப்பறம் நா வேற பொண்ண..."

"மாமா...."

"ஹாஹா... பார்டா... உனக்கு கத்த கூட வருது"

"நீ.. நீங்க இவ்வளவு பேசுவீங்களா?"

"நா இதுக்கு பதில் சொல்லனும்னா நீ முதல்ல பயத்த விட்டு திக்கி திணறாம ஒரு கேள்விய கேளு சொல்றேன்"

"ப்ளீஸ்... "

"ஊஹூம் நோ வே டா... "

"நீ.. நீங்க... "

"முதல்லயே சொதப்பறியேடி"

"வரமாட்டேங்குது"

"சரி ஆரம்பி"

"நீங்க.. இவ்வளவு பே.. சுவீங்களா?" திணறாமல் கேட்டு விட்டாலும் அவள் இழுத்ததில் சிரித்தவன் சீண்டாமல் பேசினான்.

"ம்.. ஆமாடா.... அம்மா இ.. இறந்து போனதுக்கப்றமா எல்லாம் தலை கீழா மாறிடுச்சு" அவன் குரல் கமற மேசை மீதிருந்த கையை அழுத்தினாள் மனைவி.

"அதுக்கப்பறம் அப்பா அண்ணான்னு தொடரா இறந்து போனதுல நா ரொம்ப உடஞ்சு போயிட்டேன்... அந்த பலவீனம் தான் கோபமா மாறிடுச்சு... முன்னெல்லாம் கோபம் வராதுன்னு சொல்ல முடியாது... அப்பாக்கும் எனக்கும் எப்போவும் சண்டை தான்... அப்போல்லாம் ரொம்ப கோபப்பட்டு அம்மாவையும் அப்பாவையும் கத்தி கூட இருக்கேன்... அம்மா தான் சமாதானம் பண்ணி விடுவாங்க... அப்பாவ எனக்கு ரொம்ப புடிக்கும் வரு... பட் அவரு நான் செய்யறது சொல்றதுல எப்போவுமே ஏதாவது சொல்லி கிட்டே இருப்பாரு... அதனால தான் எதிர்த்து பேசுவேன்... அதுக்கும் கத்துவாரு... நானும் கத்துவேன்... இதான் எங்க வீட்ல நடக்கும்"

"....."

"அர்ஜுன் பிறந்து நான் அடுத்த வருஷம் பிறந்ததால அம்மாவுக்கு சிரமம்னு அத்தை கிட்ட தான் வளந்தேன்.. அதான் அத்தைக்கு என் மேல ரொம்ப பாசம்... ஆர்த்தி நான் சின்ன பையனா இருக்கும் போது பிறந்ததுனால அவ மேல யாருக்குமே இல்லாத பாசம் எனக்கு... பொம்மைன்னு தான் சொல்லிகிட்ருந்தேன்... அவளும் என் கூடவே தான் சுத்துவா... இதுனால அம்மாக்கு நான் ஆர்த்திய கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆச... பட் அப்பாக்கு அது ஏனோ பொருத்தமா படலன்னு சொன்னாரு... ஆர்த்தி படிக்க போயிருந்தப்போ தான் உன்ன கோயில்ல பாத்தேன்... அன்னக்கி என் பிறந்த நாள் வேற... அம்மா சொன்னாங்க இன்னிக்கு மட்டும் கோயிலுக்கு போ... உனக்கு புடிச்ச பொண்ண கடவுள் கண்ணுல காட்டுவாருன்னு... தெரிஞ்சு தான் அப்பிடி சொன்னாங்களான்னு தெரியாது... பட் உன்ன பார்த்த நொடி அம்மாவ கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கனும்னு தோனிச்சு... அது ஒரு விதமான உணர்வு வரு... அந்த நேரத்துல நா எப்பிடி உணர்ந்தேன்னு எனக்கே சொல்ல தெரில... ஏதோ.. ஏதோ பெரிய புதையல் கிடச்சா மாதிரி... விக்ரம்ஸ் டாட்டர் வர்ஷினி அப்போ தான் அறிமுகமாகி இருந்தா... உருவ ஒற்றுமைல ஒன்னா இருக்கறதனால அவன்னு நெனச்சு அவ பேர தான் உனக்கு சொல்லி கிட்டேன்... நீ கூட திரும்பி பாத்த... ஆனா விக்ரம் சார் வீட்டுக்கு போனப்போ அவ சுடில இருந்தா... கோயிலுக்கு பொய்ட்டு அதுக்குள்ள மாத்திட்டாவான்னு தோன்றினாலும் உன்ன பாக்கும் போது வந்த அந்த உணர்வு அவகிட்ட வர்ல கண்ணம்மா... அது ஏன்னு அன்னக்கி அவ வீட்டுக்கு வந்தப்போ தான் புரிஞ்சுது நா லவ் பண்ணது உன்னதானே தானே தவிர அவள இல்லன்னு... உன்ன தான் அதிஷ்டவசமா கல்யாணம் பண்ணி இருக்கேன்னு தெரிஞ்சதும் என்னால என்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடிலடி.... காலைல நீ என்ன பாத்து ஒதுங்கி போனப்போ தான் நான் நைட் குடிச்சு உன்ன ஹேர்ட் பண்ணி இருக்கேன்னு கன்பார்ம் ஆச்சு... சரகடிச்சா எனக்கு ஏதுமே ஞாபகம் வர்றதில்ல கண்ணம்மா... குடிக்கவே கூடாதுன்னு நெனச்சாலும் குடிக்கறேன்... அன்னக்கி என்ன நடந்துதுன்னு தெரில.. ரியலி சாரி டா"

"விக்ரம் சார கேஸ் விஷயமா பா.. பாக்க போனிங்கன்னா நீ... நீ.. நீங்க அப்போ போலிஸா மாமா?" அவன் கண்களை மூடித் திறக்க

"அப்போ... இப்போ ஏன் இப்பிடி? " என்றாள் அதிர்ந்து...

"அப்பா அமைச்சர் டா... ஒரு அமைச்சருக்கே பாதுகாப்பு கொடுக்க தெரியாத கவர்மென்ட்டுக்கு கீழ வேல பாக்கனுமான்னு ஒரு வெறுப்பு.... அதனால அந்த காக்கிய எனக்கு அதுக்கப்பறமா சுத்தமா பிடிக்கல... தூக்கி எரிஞ்சிட்டேன்... "

"மாமாவ கொன்னுட்டாங்களா மாமா?" கண் கலங்கி இருந்தது காரிகைக்கு...

"ஆமா கண்ணம்மா... அப்பா அம்மா அண்ணா எல்லோரையும் கொன்னுட்டான் அந்த நாயி"

"யா... யாரு?"

"அப்பாவும் அருணும் இறக்கறப்ப ராம்னு சொன்னதால நான் முதல்ல ராஜாராம் மாமான்னு தான் நெனச்சேன்... அதனால தான் அவங்க குடும்பத்த விளக்கி வெச்சு உன் மேலயும் கோபம் காட்டினேன்... அதுக்கப்பறமா தான் தெரிஞ்சுது அது ராம் மாமா இல்ல ராமலிங்கம்னு.... " அந்த பெயர் அவளை நிச்சயமாய் பெரும் நடுக்கத்திற்குள்ளாக்கியது என்பது மட்டும் மறுக்க முடியா உண்மை...

ஆனால் தனக்கு எப்படி கணவன் குடும்பத்தை அழித்தவனை தெரியும்???

தலை சுளீரென வலிக்க " ஆஆஆ" என கத்தியவளை அதிர்ந்து பார்த்தான் கதிர்!!!

தொடரும்.....

10-08-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10 [ A ]



"ஹே என்னாச்சு கண்ணம்மா...." பதறினான் கணவன்.



"தல ரொம்ப வலிக்குது மாமா... என்னால முடில.... ஆஆஆ"



"ஹா... ஹாஸ்பிடல் போலாமா... இரு இதோ வந்தட்றேன்" எழப்போனவனை இறுக்கப் பிடித்தவள்



"எங்கேயும் போகாதிங்க ப்ளீஸ்... ஏதேதோ தெரிது... எனக்கு ப... பயமா இருக்கு" கத்தினாள்.



" எ... என்னடா என்ன தெரிது...?"



"ஏ... ஏதோ ஹாஸ்பிடல்... அ... அங்க ஏதோ தப்பு நடக்குது மாமா... காப்பாத்துங்க... இல்லன்னா எல்லாம் அழிஞ்சு போயிடும்..."



"வாட்... காப்பாத்தணுமா... என்னடா உளர்ற... தெளிவா சொல்லு கண்ணம்மா " உண்மையில் பயந்து போனான்.



"ஹாஸ்பிடல்ல ஏதோ தப்பு நடக்குது மாமா.... அங்கிள் கிட்ட தான் ஆதாரம் இருக்கு? "



"அங்கிள்??? "



"ஆஆஆ.... வலிக்குது மாமா" அவள் தலையை சட்டென இழுத்தவன் முரட்டுத்தனமாய் அவளிதழ்களுக்குள் தன்னிதழ்களை பொருத்த கண்களை அகல விரித்தாள் பெண்...



நேற்று நடந்ததிலிருந்து அவன் கண்டு பிடித்திருந்த ஒரே வழி!!!



அவளை அந்நினைவுகளை விட்டு திசை திருப்ப வேண்டுமென்றால் தன் நினைவே அவள் மூளை முழுதும் ஆக்கிரமிக்குமாறு செய்ய வேண்டுமென்பது!!!



அதனால் தான் அப்படி நடந்து கொள்ள வேண்டியதாய் போயிற்று அவனுக்கு!!!



அவள் மூச்செடுக்க சிரமப்படவே சட்டென விட்டவன் அவள் உணர்ச்சிகளை படிக்க முயன்றான்.



அதிர்ச்சியிலிருந்த முகம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்க கணவனை ஏறிட்டு நோக்கின கண்கள்.



அவள் தன்னை பார்க்கவும் அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான் காளை...



"இப்போ சொல்லு... என்ன ஆச்சு... என்ன பாத்த?"



"...."



"நா உன்ன முழுசா நம்பறேன் கண்ணம்மா" அவன் ஒவ்வொரு செய்கையிலும் வீழ்ந்து கொண்டிருந்தது பெண் மனம்...



"சொல்லுடா... என்ன நடக்குது உனக்குள்ள?"



"இந்த வீட்டுக்குள வ.. வந்ததுல இருந்து ஏதோ.. ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு மாமா... அ.. அது எனக்கு ரொ.. ரொம்ப நெருக்கமா இருக்கு... எனக்கு பயமா இருக்கு..." அவள் கண்கள் கலங்கவும் எழுந்து அவளருகே வந்தவன் அவள் தோள் தொட்டு எழுப்ப அன்னார்ந்து பார்க்கவும்



"கொஞ்ச நேரம் தூங்குனா சரியாகும்டா... நாம அப்பறமா இது பத்தி பேசலாம்... வா" கனிவாய் வார்த்தைகளை உதிர்த்தவன் அறைக்குள் சென்று அவளை தட்டி உறங்க வைத்து வெளியே வந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் துவங்கினான்.



***



"டேய்... க்ருஷ் எங்க?" அர்ச்சனா வெளியில் இருக்க நண்பர்கள் இருவரும் அமர்ந்திருக்க ரக்ஷன் கேட்கவே



"க்ருஷ் உன் கிட்ட சொல்லல?" சந்தேகமாய் கேட்டனர் இருவரும்...



"என்ன சொல்லல?"



"அவன் கல்கத்தா போற விஷயத்த உன் கிட்ட சொல்லல?" அபிக்கு தான் சந்தேகமாக இருந்தது.



அவனும் தான் பார்க்கிறானே இருவர் முகங்களையும்...



"கல்கத்தாவா?" அவன் அதிரவும்



"அதுக்கு ஏன்டா இவ்வளவு ஷாக் ஆகற?" சிரித்தான் குமரன்.



"ஆமா... கிருஷ் உன் கிட்ட எப்போ பேசினான்?" அபி கேட்கவும்



"ஏ.. ஏன்?" வலித்தது மனம் ரக்ஷனுக்கு...



எத்தனை நாளாகி விட்டது அவன் தன்னிடம் பேசி...



பேசாவிட்டாலும் ஏறிட்டுக் கூட பார்ப்பதில்லையே...



மன்னிப்பு என்பதே அவன் அகராதியில் இல்லையோ???



தான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது வேறெங்கோ வெறித்தவனை குழப்பத்துடன் ஏறிட்டனர் இருவரும்...



"குமரா... அர்ஜன்ட் கேஸ் விஷயமா போணும்னு சொன்னல்ல... எனக்கும் கொஞ்சம் வெளில போக இருக்கு... வர்றியா?" அவன் தன்னுடன் தனியாக பேசவிழைகிறானென்பதை சட்டென யூகித்தவன்



"ஆமாடா... வர்றேன்..." ரக்ஷனின் தோளில் தட்டி விட்டு வெளியேற தானும் அவனை ஒரு பார்வை பார்த்து வைத்தவாறே வெளியேறினான் அபினவ்.



.......



தந்தை சொன்னதிலிந்த உண்மையில் முகம் தெளிந்திருந்தாளும் குமரன் விடயத்தில் மட்டும் குழப்பம் தீரவே இல்லை அமிர்தாவுக்கு...



அவளும் அன்றிலிருந்து அவனை பார்த்துக் கொண்டுதானிருக்கிறாள்... எங்கே அவன் இவள் இருக்கும் திசை பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை...



ஒருவேலை தந்தைக்கு அவன் காதலிப்பது கற்பனையாக இருக்குமோ???



அப்படி இருக்க வாய்ப்பில்லை... ஏனென்றால் விக்ரம் கற்பனையில் பேசும் ஆளல்ல...



குமரனும் அபியும் ரக்ஷன் ரூமை விட்டு வெளியே வர குமரைனையே ஆராய்ச்சியாய் பார்த்து வைத்தன ஹாலில் அமர்ந்திருந்த பாவையின் கண்கள்...



இவனுக்கு தன் மீது காதலாமா???



வாசலருகே சென்றவன் அவளை திரும்பிப் பார்க்க அது கண்டு அவள் கண்கள் ஆச்சரியமாய் விரியவும் அவள் கண்டு கொண்டது உணர்ந்து சட்டென திரும்பி நடக்க அவன் செய்கையில் முதன் முறை சிரித்தன அவளுதடுகள்.



தந்தை சொல்வது உண்மை தான்!!!



ஏனோ சற்று சுவாரஷ்யமாகவும் இருந்ததோ???



......



"எதுக்கு கூப்ட ஆதி?" வீட்டுக்கு வெளியே அழைத்து வந்து விட்டு யோசனையாய் நின்றிருப்பவனிடம் கேட்டான் குமரன்.



"கிருஷ்ஷுக்கும் ரக்ஷனுக்கும் ஏதோ பிரச்சன குமரா... நம்ம கிட்ட மறைக்குறானுங்க"



"என்ன சொல்ற?"



"எஸ் டா.... அன்னக்கி கார்டன்ல பேசிகிட்டு இருக்கும் போது கூட... இவன் இருக்காங்குறது தெரிஞ்சு அவன் வராம இருக்க.... அவன்.... தான் இருந்தேன்னா வரமாட்டான்னு எந்திரிச்சு போயிட்டான்"



" எஸ் எஸ்.... நானும் பாத்தேன்"



" உனக்கு ஒன்னு தெரியுமா.... கிருஷ்ஷும் ரக்ஷனும் சண்ட போட்டுகிறத பாத்தா எதிரிங்கன்னு சொல்வாங்க.... பட் ஒருத்தனுக்கு இன்னொருத்தன் மேல அவ்வளவு பாசம்.... கிருஷ், ரக்ஷன்.... இரண்டு பேருக்கும் கோச்சு கிட்டு கூட பேசாம இருக்கவே முடியாது... அப்பிடி இருந்தவனுங்க இப்போ ஏன் இப்பிடின்னு தான் யோசனையா இருக்கு" இருவர் நட்பிலும் பூரித்தது குமரனின் உள்ளம்.



அவனுக்கு தெரிந்து ரக்ஷனிடம் கதிர் பேசுவது குறைவு தான்... அதுவும் அவன் கண்டு ரக்ஷனுடன் கதிர் ஓரிரு வார்த்தைகள் தவிர பேச மாட்டான்... அபி சொன்னது போல் அவ்வளவு ஆழமான நட்பு இருவருக்குள்ளும் இருக்குமென்பது அவனுக்கு தெரியாதென்பதுவே நிஜம்.



யார் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்மாறாக செய்யும் கதிர்.... ரக்ஷன் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் உடனே அடங்கிப் போவதன் மர்மம் இப்போது தான் புரிவதாய்....



"கிரேட்" குமரனின் உதடுகள் முணுமுணுக்க



"ஆமா இப்பிடியே சொல்லி கிட்டு திரி... ஐடியா தருவன்னு பாத்தா சும்மா கடுப்பேத்திகிட்டு" கடுப்பில் பல்லை கடித்த அபியை பார்த்து சிரித்தான் குமரன்.



........



"ரித்விக் சார்... " அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள் அர்ச்சனா.



அவன் அப்போதும் எங்கோ வெறித்துக் கொண்டிருக்க முகத்துக்கு நேரே கைகளை ஆட்டவும் திடுக்கிட்டு கலைந்தவன் அவளை பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்து வைக்க



"எதுக்கு இப்போ பொய்யா ஒரு சிரிப்பு?" அவள் கேட்கவும் உண்மையில் பக்கென சிரித்து விட



"ம்... இது உண்ம தான்... ஒத்துக்குறேன்... இப்பிடி சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கீங்க" தானும் புன்னகைத்து விட்டு அவனருகே போடப்பட்டிருந்த நாட்காலியில் அவள் அமர அவளையே பார்த்திருந்தவன் அவள் நிமிரவும் சட்டென பார்வையை திருப்பினான்.



"சார் இப்போ எப்பிடி இருக்கு?"



"ம்... பரவால்ல"



"...."



"அன்னக்கி அந்த நிதின் ஏதாவது பண்ணானா?" ஏனோ அவன் பெயரே அவனை கோபத்தின் உச்சியில் ஏற்றி வைத்திருந்தது.



"நா ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன்.... அதனால அவனால உள்ள வர முடில" முகம் சோர்ந்து தலை கவிழ்ந்தாள் பெண்.



ஏனோ தன் வாழ்க்கை போக்கில் தொண்டை அடைத்தது பெண்ணவளுக்கு...



தந்தை இறந்திருக்காவிட்டால் இப்படியெல்லாம் நடந்திருக்காதோ???



"ஹோய்...." அவன் அழைப்பில் சட்டென நிமிர்ந்தவள் புன்னகையாலேயே வலியை மறைக்க முயன்றாள்.



"அர்ச்சனா வேணும்னா இங்க தங்கறியா?"



"இட்ஸ் ஓகே சார்... தேங்க்ஸ்... நா ஹாஸ்டல்லயே இருக்கேன்"



"ஏன் இங்க பாதுகாப்பு இல்லையா?" வேண்டுமென்றே அவன் கேட்க



"அச்சோ அப்பிடி இல்ல ரித்விக் சார்... ஏன் இப்பிடில்லாம் பேசறீங்க?" அவசரமாக மறுத்தாள் பாவை...



"அப்போ எனக்கு குணமாகுற வரை சரி தங்கிக்கோ"



"...."



"இல்லன்னா என்ன நீ பாக்க தேவயில்ல... வேற ஆள ஏற்பாடு பண்ணிக்குறேன்"



"...."



"சரி நீ கிளம்பு இனிமே வர தேவயில்ல" அவன் வார்த்தைகளில் ஏனோ மனம் அடிபட்டுப் போக பொங்கி வந்த கண்ணீரை இமை சிமிட்டி அடக்கியவள் எழுந்து வெளியேற அவனுக்கு புசு புசுவென ஏறியது.



'அவ்வளவு பிடிவாதம்... அந்ந நிதின் கிட்ட இருந்து காப்பாத்தலாம்னு பாத்தா ரொம்ப தான் பண்ற போடி' ஏனோ எரிச்சல் எரிச்சலாக வந்தது காளைக்கு....



அவனை பார்க்க வந்தவள் தான்.... இருந்தும் அவள் எப்படி அந்த வீட்டில் தங்க முடியும்???



அதை கேட்டால் கோபப்படுவான் என தெரிந்தே எழுந்து வந்து விட்டாலும் மீண்டும் மீண்டும் அவனிடமே நிலைத்த மனதை திசை திருப்ப முடியாமல் தவித்தாள் மாது.



..........



"ச்சே அண்ணி இல்லாம ரொம்ப போரா இருக்கு.... நாமளும் போயிருக்கலாம்..." முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டே படியிறங்கி வந்தாள் யாழினி.



'அது அர்ச்சனா அக்காவாச்சே.... ஏன் போறாங்க' திடிரென ஓடி வந்தவள் கடைசி படியை காணாது தரையில் கால் வைத்து தவறுதலாக விழப்போக "ஏய்...." குமரனுடன் பேசி விட்டு உள்ளே நுழைந்திருந்த அபி கத்திக் கொண்டே ஓடி வந்து தாங்கிப் பிடித்திருக்க கண்களை இறுக்க மூடி அவன் கழுத்தை கைகளால் இறுக்கியிருந்தவள் வேக வேகமாக மூச்சு விட தானும் கண்களை இறுக்க மூடித் திறந்தான் அபி.



ஒரு நிமிடம் அவனுக்கு இதயமே நின்று துடித்தது.



அவன் பிடித்திருந்ததில் அவன் கைகள் அவள் இடையை நன்றாக அழுத்தியிருக்க மெதுவாக கண்களை திறந்தவளுக்கு தான் அவன் மீது முழுதாக சரிந்திருந்த விதம் கூச்சத்தை கொடுக்க நெளிந்தாள் பெண்.



ஆண் வாசமே அறியாதவளல்ல என்றாலும் அவள் உடல் தீண்டிய முதல் ஆண்மகன் அவன் தானே!!!



"மா... மா..." எப்போதும் அவனுடன் சரிக்கு சமமாக வாயடிப்பவளுக்கு வாயிலிருந்து வெறும் காற்று தான் வந்தது அன்றைக்கு....



அவள் அழைத்ததில் படக்கென விழி திறந்தவன் நேராக நிறுத்தி விட்டு அவளை உறுத்து விழித்தான்.



"இடியட் இடியட்... பாத்து வர மாட்ட... அப்பிடி என்ன அவசரம் உனக்கு..." இன்னும் பதறியது அவனுக்குள்...



"அ... அது அர்ச்சனா கா... வந்து மாமா..."



"பேசாத... போ..." அவன் திட்டி விட்டு செல்ல வாயை வளைத்து பழிப்புக் காட்டியவள் "போடா" ஓடி விட



"உன்ன...." பல்லை கடித்தான் அபினவ் ஆதர்ஷ்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"சாவுடா" யாரோ ஒருவனுக்கு மீண்டுமொருமுறை வயிற்றில் கத்தியை இறக்கி விட்டு யாரோ தன்னை அழைத்ததில் இரத்தம் சொட்டச் சொட்ட திரும்பினார் ராமலிங்கம்.



தற்போது இருக்குமிடம் விஸ்டா, பிரேசில் (Boa Vista, Brazil.)



இரவு பகல் வித்தியாசத்தில் அங்கே தற்போது அதிகாலை மூன்றரை மணி.



"என்ன?"



"ஐ... ஐயா போனு" நடுங்கிக் கொண்டே அவரிடம் மொபைலை ஒருவன் நீட்ட கத்தியை தூக்கி தூரப் போட்டவர் கைகளை துடைத்துக் கொண்டே அருகில் வந்தார்.



"அந்த வேலன் வீட்டுக்கு வெளில ரொம்ப பாதுகாப்பா இருக்கு... ஒன்னுமே பண்ண முடில... என்ன பண்றது?" மறுமுனையின் கூற்றில் யோசனையில் இடுங்கியது அவர் புருவம்...



"...."



"ஐயா லைன்ல தான் இருக்கீங்களா?"



"நான் இந்தியா வர்றதுக்கு டிக்கெட் போடு" வைத்து விட்டு நிமிர்ந்தவரின் கண்கள் கோபத்தில் ஜொலித்தன.



அவனிடமிருந்து வந்திருக்கும் முதல் எதிர் தாக்குதல்!!!



அதிலேயே அவரால் ஒன்றும் பண்ண முடியாமல் செய்து விட்டானல்லா???



அந்த கோபம் அவருக்கு....



தொடருமா காயங்கள்???



.....



அவன் சொன்னது போல் அர்ச்சனா அன்று வராததில் கோபத்தில் பல்லை கடித்தான் ரித்விக் ரக்ஷன்.



கொபம் மட்டுமல்ல யாரை பார்த்தாலும் எரிச்சலாக வந்ததில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை புருவம் சுருக்கி பார்த்தவாறே உள்ளே நுழைந்தாள் யாழினி.



"அண்ணா"



"ம்..."



"என்னாச்சு... ஏன் இப்போ இஞ்சி திண்ண குரங்கு மாறி மூஞ்ச வெச்சிருக்கீங்க?" அவள் சிரியாமல் கேட்க தங்கையை பார்த்து முறைத்தான் ரக்ஷன்.



"சரி... சரி... நோ வயலன்ஸ் ப்ரோ..."



"...."



"அர்ச்சனா அக்கா நேத்து திடீர்னு பொய்ட்டாங்க... இன்னிக்கு காலைல இருந்து ட்ரை பண்றேன்... சுவிட்ச் ஆஃப்னு தான் வருது"



"ஏதாவது வேலையா இருக்கும்"



"இல்ல ணா... நீங்க ஒரு தடவ பண்ணுங்க" அவள் நேற்றே என்ன நடந்தது என கேட்டு விட்டிருக்க இன்று வேண்டுமென்றே தான் அவனையே பேச வைக்க எண்ணியிருந்தாள்.



"நா... நானா? "



"ஆமா நீங்க தான் பண்ணுங்க " அருகில் மேசை மேல் வைக்கப்பட்டிருந்த அவன் போனை எடுத்தவள் சட்டென அவளுக்கு அழைத்து விட திருதிருவென விழித்தான் அவன்...



"சொல்லுங்க சார்" மறுமுனையிலிருந்து கேட்ட குரலில் பல்லை கடித்தவன் அவளிடமிருந்து போனை வெடுக்கென பிடிங்கி கட் பண்ணி விட்டு தூக்கிப் போட வாய் பொத்தி சிரித்தாள் பெண்.



"எதுக்கு சிரிக்கிற?"



"சும்... மா" ஒரு மார்ககமாய் பதிலளித்துக் கொண்டே அவள் எழுந்து வெளியே செல்ல மீண்டும் போன் அலறவும் எடுத்து காதிற்கு கொடுத்தான் ரக்ஷன்.



மறுபடியும் அவளே தான் அழைத்திருந்தாள்.



"என்னாச்சு சார்?"



"ஒன்னு இல்ல... எதுக்கு கால் பண்ண?" சிடுசிடுத்தான் அவன்.



"அ.. அது.. நீங்க எடுத்தீங்கல்ல அதான்"



"நான் எடுத்திருக்கலன்னா நீ எடுத்திருக்க மாட்ட... அதானே?"



"...."



"வை போன" சட்டென துண்டித்தவன் வாசலில் யாழினியுடன் அவள் நிற்பதை கண்டு உண்மையில் அதிர்ந்து போனான்.



***



கொல்கத்தா....



ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவன் எழுந்து ரூமை விட்டு வெளியே வந்தான்.



நேற்றிரவு அவள் செய்த அலப்பறையில் காலையிலேயே தூக்க மாத்திரை கொடுத்து படுக்க வைத்திருந்தாலும் அவனுக்கு இன்று பெஹலவிற்கு ஷாலினியை தேடி போயே ஆக வேண்டிய கட்டாயம்.



இங்கு அவன் தாமதித்தால் உயிருக்கு ஆபத்து வருவது நிச்சயம்!!!



இவளை கூட்டிக் கொண்டும் அங்கு போக முடியாது... அதனால் தான் அப்படி செய்தான்.



வீட்டிற்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு இருக்க அவன் கட்டளைக்கிணங்கி கதிரின் ஆஸ்தான பனியாள் வர்மனும் அன்றிரவே அவனின் ராயல் என் ஃபீல்டுடன் வந்து சேர்ந்திருக்க அவனையே மனைவிக்கு பாதுகாப்பாக இழுக்கச் செய்து விட்டு கிளம்பி விட்டான்.



போகும் போது கூட ஒரே ஒரு கேள்வியே மண்டையை குடைந்து கொண்டிருந்தது.



அவனவளுக்கும் அந்த வீட்டிற்கும் என்ன தொடர்பு???



.......



மாலை ஐந்தை நெருங்கிக் கொண்டிருக்க ஒடுக்கமான செம்மண் வீதியில் தன் ராயல் என் ஃபீல்டை நுழைத்தான் கதிர்.



ஆங்காங்கே சில வீடுகள் தெரிந்தாலும் இதில் எதில் போய் அவளைத் தேடுவது???



பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்தான் வழமை பொலும்...



'ச்சேஹ்... அன்னிக்கு பெஹல இடத்துல எங்கன்னு கேட்டிருக்கலாம்' மனம் குமுற கண்களை இறுக மூடிக் கொண்டவன் ஷாலினியை முதல் நாள் பார்த்ததிலிருந்து அவள் செய்கைகளை மனக்கண் முன் கொண்டு வர நினைந்தான்.



அவள் நடை, உடை, பாவனை வைத்தாவது ஊரை கண்டு பிடிக்க முடியுமல்லவா???



கொல்கத்தா அவனுக்கு அத்துப்படி என்றாலும் பெஹலவிற்கு கேஸ் விஷயமாக எப்போதோ ஓர் நாள் ரக்ஷனுடன் வந்த ஞாபகம்....



இனிமையான நாட்கள் தான்.... ஆனால் நண்பன் பொய்யாகி அதையும் சேர்த்தே கருக வைத்து விட்டானே!!!



நண்பனை நினைத்து கோபமெல்லாம் இல்லை... ஏதோ ஓர் ஏமாற்றம்... கட்டிக் காத்த பொருளை இழந்த உணர்வு....



விழிகளை படக்கென திறந்தவன் தலையை உழுக்கி நண்பனை நினைவடுக்குகளிலிருந்து விரட்ட முயன்று மீண்டும் ஷாலினியை வலுக்கட்டாயமாக வரவழைத்தான்.



சட்டென மூளையில் மின்னல் வெட்டியது காளைக்கு...



ஆம்... அவன் என்றோ ஒரு நாள் நண்பனுடன் வந்த அதே ஊர் மக்கள் தான் அவள் நடை, உடை, பாவனையோடு ஒத்துப் போயினர்.



அவன் நின்று கொண்டிருக்கும் தெருவிற்கு இரண்டு தெரு தள்ளிப் போகவிருக்க உடனே கிளம்பி விட்டான்.



***



"ரக்ஷன் அண்ணா.... அர்ச்சனா கா இங்கேயே தங்கிக்கறதா சொல்லிட்டாங்க... சும்மா சும்மா கிருஷ் அண்ணாவ மாதிரி டெர்ரர் ஆபிஸரா மாறாதிங்க...." கலகலவென சிரித்தவள் அவன் முறைப்பதை கண்டு கொள்ளாமல் ஓடி விட அர்ச்சனாவை முறைத்தான் அவன்...



"இங்க வாங்க மிஸ். அர்ச்சனா தென்றல்" அவனின் அழைப்பு ஒருமையிலிருந்து பன்மைக்கு மாறி இருந்தது ஏனோ அவளுக்குள் சிறு வருத்தம் உண்டாக்கியது.



அவனையே பார்த்தவள் அவன் தன் மீதான பார்வையை விளக்கிக் கொள்ளாமல் போகவும் சட்டென விலக்கி விட்டு அவனருகே வந்து நின்றாள்.



"நேத்து பைல்ஸ் கேட்டேனே... எங்க?"



"அ... அது... ஹால்ல இருக்கு"



"ஹால்ல வேற யாராவது படிக்க போறாங்களா?"



"இல்ல"



"அப்பறம் என்ன... போய் எடுத்துட்டு வாங்க போங்க" கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவன் அவளிடம் கடுமை காட்டிக் கொண்டிருந்தான்.



'தன் பேச்சை மதிக்காமல் அடுத்தவர்களை மட்டும் மதிக்கிறாள்' மனதிற்குள் நன்றாக வறுத்தெடுத்தான்.



"ஏன் சார் கோபப்படுறீங்க?"



"அத கேக்க நீங்க யாரு மிஸ். அர்ச்சனா? " அவன் கேள்வி அவளை வதைக்க எதுவும் பேசாமல் அவள் திரும்பி நடக்கவும் அவளையே பார்த்திருந்தான் காளை...



......



"சார் பைல்..." அவள் நீட்ட



"பர்மிஷன் கேட்டுட்டு உள்ள வரனுங்குற பேஸிக் மேனஸ் கூட தெரிலயா உங்களுக்கு? " அதற்கும் அவன் குத்தம் சொல்ல கண்களை இறுக மூடித் திறத்தவள்



"சாரி" என்றாள் மென் குரலில்....



"சரி உக்காருங்க...." அவன் பக்கத்தில் அமர்ந்தவள் தலையை குனிந்து கொண்டே இருக்க



"ஏன் என்ன பாத்தா அந்த நிதின் ஞாபகத்துக்கு வர்றானா? " விலுக்கென நிமிர்ந்தவளுக்கு கண்கள் கலங்கியே விட சடாரென எழுந்து கொண்டவளின் கையை இருக்கப் பற்றி இருந்தான் ரித்விக்.



"நான் வேலைய ராஜினாமா பண்ணிட்றேன் சார்... ப்ளீஸ்" கையை உறுவ முயற்சிக்க மெதுவாக கட்டிலை விட்டு இறங்கியவன் அவன் முன் வந்து நின்று அவள் முகத்தை தாங்கியவன் அடுத்த நிமிடம் அவளதரங்களுடன் தன்னதரங்களை பொருத்தியிருக்க திமிறக் கூட முடியாமல் அதிர்ச்சியில் விரிந்தன காரிகையின் கண்கள்.



"ஐ திங்க்... ஐ அம் இன் லவ் வித் யூ அர்ச்சனா " அதிரடியாய் அறிவித்தவன் எப்போதும் போல் கட்டிலில் ஏறி சாய்ந்து கொள்ள சொன்ன விடயத்தை ஜீரனிக்கக் கூட முடியாமல் நின்றிருந்தாள் பெண்...



.........



"எங்க நம்மாளு கண்ணுலயே படல" மிக தீவிரமான யோசனையில் இருந்தான் அபி.



உண்மை தான்... இடை பிடித்த சம்பவத்திலிருந்து அவன் கண்ணுக்கு கூட படாமல் போக்கு காட்டிக் கொண்டு தான் இருந்தாள் பெண்.



அது ஏனோ ஒரு வித அவஸ்தை அவளுக்குள்....



"விக்ரம் சார்... உங்க பொண்ணு எப்பிடி என் தங்கச்சி போலவே இருக்கா?" பேச்சுத் துணைக்காக பக்கத்தில் பேப்பரில் மூழ்கியிருந்த விக்ரம் குமாரை கலைத்தான் அபி.



"அது தெரிஞ்சா நா ஏன் பா அன்னிக்கு அதிர போறேன்"



"நீங்க சொல்றதும் சரி தான்... பட் அச்சு அசலா ஒரே மாதிரி... அதான் குழப்புது"



"ஹாஹா எனக்கு அம்மு மட்டும் தான் குழந்தடா... சந்தேகம் தேவயில்ல"



"அப்பிடி இல்ல சார்" வாய் விட்டுச் சிரித்தான் அபி.



"ஆமா... நீ வேலைக்கு போகல? "



"சின்ன கேஸ் விஷயமா மப்டில இருக்கேன் சார்... இந்த கேஸ நான் தான் ஹேண்டில் பண்றேன்னு யாருக்கும் தெரியாது... அதான் அடிக்கடி மட்டும் போவேன்"



" வாழ்த்துக்கள் "



" நன்றி சார்" அவர் எதுவும் சொல்லாமல் புன்னகைக்க மீண்டும் கேள்விகளை தொடர்ந்தான் அபி.



"சார்... பொண்ணுங்க கடத்துற கேஸ நீங்க ஏற்கனவே கிருஷ் கூட சேந்து டீல் பண்ணி கிட்டு இருந்தீங்கல்ல? "



"எஸ்... "



"ஹெவி எவிடென்ட்ஸ் ஏதாவது கெடச்சுதா?"



"நோ ஆதி... சேர்த்தது சில ஆதாரங்கள் தான்... கிருஷ் கிட்ட தான் இருந்துது.... அதுவும் இப்போ கிடைக்காதுன்னு நெனக்கிறேன்.... "



"எஸ் சார்... அதுல சில ஆதாரங்கள் அத்த இறந்தப்போ வீட்டோட கருகிடுச்சு... சில ஆதாரங்கள அவனே அழிச்சிட்டான்"



"ஐ நோ ஆதி... கோபத்துல அழிச்சான்.. இருந்திருந்தா ஏதாவது யூஸா இருந்திருக்கலாம் "



"ம்... ஆமா.... "



.......



'ஹப்பாடா..... இன்னிக்கும் பொய்ட்டாரு' கண்களை சுழல விட்டவள் பதுங்கிப் பதுங்கி வெளியே வர "யாழினி" விக்ரம் திடீரென அழைத்ததில் அபி சடாரென திரும்பவும் அவனை கண்டு "அய்யய்யோ... பாத்துட்டாங்களே" அவள் கண்களை மூடி சிணுங்கவும் சரியாக இருக்க அவள் செய்கையை உதட்டோர சிரிப்புடன் பார்த்தான் அபி.



"கொஞ்சம் ராதாவ வர சொல்லுமா" தலையை ஆட்டியவள் அவனைப் பாராது செல்ல புருவம் சுருக்கியவன்

"தோ வந்தட்றேன் சார்" எழுந்து அவள் பின்னே சென்றான்.



"ஆன்ட்டி.... உங்கள விக்ரம் சார் கூப்புடுறாரு" தேவி மேலே மொட்டை மாடிக்கு சென்றிருக்க அமிர்தாவும் ரூமிலேயே அடைந்து கிடந்ததில் அவர் மட்டுமே தான் சமயலறையில் இருந்தார்.



"எங்கேடா இருக்காரு?"



"அதோ ஹால்ல.... " அவள் திரும்பி நின்றிருக்க வாசலில் நின்ற அபியை பார்த்து புன்னகைத்து விட்டு அவர் வெளியேற "இப்போ எப்பிடி போறது?" புலம்பிக் கொண்டே திரும்பியவள் அவன் தன்னையே பார்த்து நின்று கொண்டிருப்பது தெரிந்து "கடவுளே..." கண்களை இறுக மூடியவாறு மறுபக்கம் திரும்பி நிற்க அவளை உரசியவாறு பின்னால் வந்து நின்றவன் காதிற்கருகில் குனிந்து இன்னுமின்னும் கண்களை இறுக மூடியவளை பார்த்து சிரித்தவன் ஏதும் பேசாமல் வெளியேறி விடவும் படக்கென விழி திறந்தவள் "இது என்ன சோதன... அப்போ அவங்க நிஜம் இல்லயா.... என் கனவா" வெகுவாக குழம்பிப் போனாள்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொல்கத்தா....



பைக்கை வளைத்து திருப்பி நிறுத்தியவன் உண்மையில் அதிர்ந்து தான் போனான்.



அப்போதிருந்த வீடுகள் எதுவுமே இல்லை.... வீடுகள் என்ன.... மரங்கள் கூட அல்லாமல் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது கிராமம்.



தன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்துக் கொண்டே சுற்று முற்றும் கண்களால் துலாவ தூரத்தே ஒரு ஓட்டு வீட்டு வாசலில் முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பது கண்டு தான் சற்றே ஆசுவாசமானான்.



பைக்கை விட்டு இறங்கி அவசர எட்டுக்களில் அவரை அடைந்தவன் அவர் நிமிர்ந்து பார்க்க புன்னகைத்தான்.



"ஆருப்பா நீயி?"



"என் பேரு கிருஷ் தாத்தா... ஒரு தடவ இங்க வந்திருந்தப்போ கூட பேசினேனே?" வந்த சிரிப்பை அடக்கியவாறு பொய் சொல்ல அவனை அடையாளம் காண முயன்றார் முதியவர்.



"ஆருன்னு தெரியலயே ராசா..."



"பரவாயில்லை விடுங்க தாத்தா.... ஆமா... உங்க புள்ள வீடு பக்கத்துல இருந்துதே... எங்க காணும்"



"அவன் வெளிநாட்டுக்கு போயிட்டான் ராசா....தம்பிக்கு எந்த ஊரு?"



"நானும் கொல்கத்தா தான்"



"அப்படியா... நல்லது நல்லது... ஆமா என்ன சோலியா(வேலை) வந்திருக்க?"



"மிலிட்டரில வேல பாக்கறேன்.... அம்மாப்பாவ தேடி வீட்டுக்கு வந்தா ஊரு இருந்த அடையாளமே இல்ல... என்ன ஆச்சு தாத்தா? " வருந்தம் போலும் அவன் விடயத்தை வாங்க முயன்றான்.



"ராசா.... மிலிட்டரிலயா வேல பாக்குற... இங்க இருந்தவைங்க எல்லோரும் வேறு ஊருக்கு போய்ட்டாய்ங்க கண்ணு... "



"ஏன் என்னாச்சு? "



"எவனோ பேக்டரி கட்டுறேன்ன பேருல இந்த நிலத்தயெல்லாம் வாங்கிபுட்டாய்னாம்... "



"நிலத்த வாங்குனா வேறு நிலம் தர்றதா சொல்லி இருப்பாங்களே தாத்தா? "



"ஆமாடா கண்ணு.... இந்த ஊருக்கு வர்ற தெருவுல இன்னொரு தெரு இருக்குள்ள... அதுக்குள்ளார போனா ஒரு கிராமம் இருக்குயா... அங்கே தான் நிலம் கொடுத்திருக்காய்ங்க... "



"ஓஹ்... நீங்க ஏன் தாத்தா போல? "



"எனக்கு போக பிடிக்கல ராசா... அதான் இங்கேயே இருந்து புட்டேய்ன்"



"சரி தாத்தா.... அப்போ நான் கிளம்பறேன்... " சட்டென எழுந்து கொண்டவன் திரும்பி நடக்க அவரும் அவன் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்.



கொஞ்ச தூரம் சென்றவனுக்கு ஏதோ தோன்ற சலேரென திரும்பிப் பார்த்ததில் அந்த முதியவர் வீட்டுக்கு பின்னே நின்ற உருவம் சட்டென தன்னை மறைத்துக் கொள்ளவும் மர்மமாய் புன்னகைத்தவன் பார்க்காதது போல் திரும்பி நடக்க வீட்டுக்கு பின்னால் மறைந்திருந்த உருவம் பெரு மூச்சு விட்டுக் கொண்டதுவோ!!!



'நல்ல வேளை அவன் சென்றுவிட்டான்' பெரு மூச்சு விட்ட உருவம் நிமிர்ந்து பார்க்க அவன் முன்னால் நின்றிருந்ததில் உடல் தூக்கிப் போட அதிர்ந்து அடங்கியது மனம்.



அசுரனா இவன்!!!



இப்போது தானே அங்கே சென்று கொண்டிருந்தான்... அதற்குள் என் முன்னால் எப்படி???



மிரண்டு விழித்தாள் ஷாலினியை அறிமுகப்படுத்தி வைத்த நர்ஸ்!!!



விட்டால் அவளை கண்களாலேயே எரித்து பஸ்பமாக்கி விடுவான் போலும்....



தன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்தவாறே நிமிர்ந்தவன்



"யார் நீ?" ஒரு வார்த்தை தான் கேட்டான்.



குரலிலிருந்த சீற்றமே சொல்லாமல் சொல்லியது அவன் பொறுமையின் அளவை...



"சா... சாரு..."



"உன் பேரு ஊர் எனக்கு தேவயில்ல... நீ யாரு... உனக்கு பின்னாடி யாரு இருக்காங்க?"



"அ... அது அது... இல்ல இல்ல... யாருமே இல்ல... ப்ளீஸ் விட்டுடுங்க"



"யாரு சொல்லி ஷாலினிய அடையாளப்படுத்தின?"



"யா... யாருன்னு தெரிலங்க... ஒரு நம்பர்ல இருந்து கால் வந்துது... இவள காட்டலன்னா உன் குடும்பத்த உயிரோட வெக்க மாட்டோம்னு"



"அந்த நம்பர் இருக்கா? "



"இ... இருக்கு... இருக்கு"



"கொடு... " அதை குறித்துக் கொண்டவன் மீண்டும் தொடர்ந்தான்.



"ஷாலினி யாரு? "



"இ... இல்ல எனக்கு சத்தியமா தெரியாது... அவங்க இவ தான்னு சொன்னாங்க... பண்ணேன்... அவ்வளவு தான் சார்.. "



"சென்னைல இருக்க ஹாஸ்பிடலுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? "



"எந்த தொடர்புமே இல்ல சார்... நான் மதுர... அடிக்கடி சென்னை பக்கமா போவேன்..."



"ஏன் அடிக்கடி சென்னை? " குறுக்கிட்டான் அவன்.



"என் பொண்ணு சென்னைல தான் படிக்கறா... அவள பாக்க போறப்போ தான் இப்பிடி திடீர்னு கால் வந்துது... எனக்கு என்ன செய்றதுன்னு தெரில... என்ன மன்னிச்சுடுங்க சார்... "



"ஷாலினிய இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா? "



"இ.. இல்ல சார்... "



"சொந்த ஊரு மதுரைன்னா கொல்கத்தால எதுக்காக இருக்கீங்க? "



"அவங்க தான் சொன்னாங்க இனி தமிழ்நாட்டுல அவன் கண்ணுல பட்றா மாறி இருக்க வேணாம்னு... அதான் இங்க"



"எவ்வளவு இடம் இருக்கு... இங்க ஏன்?"



"தெ... தெரில சார்... அவங்க தான் சொன்னாங்க"



அவனுக்கு ஒன்று மட்டும் நிச்சயம்... கொல்கத்தாவில் தான் அவன் சாம்ராஜ்யம் இருக்க வேண்டும்.... அதனால் தான் அவன் கண் பார்வைக்குள் இருக்குமாறு திட்டம் வகுத்திருக்கிறான்.



உதட்டை ஏளனமாக வளைத்தவன் மீண்டுமொருமுறை தன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்துக் கொண்டான்.



"நான் உங்கள பாத்தது யாருக்கும் தெரிய கூடாது... தெரிஞ்சுதூஊஊ"



"தெ... தெரியாது சார்.. தெரியாது சார்... ரொம்ப நன்றி" கையெடுத்து கும்பிட்டவள் அவனை தாண்டிச் செல்ல சொடக்கிட்டு நிறுத்தினான் காளை.



அவள் பயந்து திரும்பவும் நிதானமாக அருகில் சென்றவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவள் கையிலிருந்த வளையலை உறுவி எடுக்க "ஐயோ" அலறினாள் பெண்.



முகத்திக்கு நேரே தூக்கிப் பார்த்தவன் முகத்தில் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது அதே ஏளனப் புன்னகை.



ஆம் அதில் ரெக்கார்டர் பொருத்தப்பட்டிருந்தது!!!



எப்படித்தான் கண்டு கொண்டானோ... உடைத்து தூர எறிந்தவன்



"நீங்க போலாம்" என்றான் புரியாது பார்த்துக் கொண்டிருப்பவளிடம்...



திரும்பி நடந்து அந்த முதியவரிடம் மீண்டும் வந்தவன்



"தாத்தா..." என்க



"இன்னா ராசா?" ஏற்கனவே அவன் பேசியிருந்ததில் உடனே பதில் வந்தது அவரிடமிருந்து.



"நீங்க தமிழ் நாடா?"



"ஆமாயா... ஏன் கேக்கற? "



"இல்ல பெங்காலி பேசறவங்களுக்கு நடுவுல நீங்க எப்பிடி?"



"என் வூட்டுக்காரி கொல்கத்தா டா"



"ஓஹ்... எனக்கு ஒரு உதவி பண்ணுறீங்களா?"



"சொல்லு கண்ணு"



"நான் இங்க வந்து உங்க கிட்ட பேசுனது.. கேட்டது எல்லாம் மறந்துடுங்க... யாரு வந்து கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லிடுங்க"



" ஏன்யா... என்ன பிரச்சினை? "



"நமக்கு எதிரி தொல்ல கொஞ்சம் அதிகம்... உயிர காப்பாத்திக்கனும்ல? "



"சரியா சரியா... நீ பத்திரமா போ... வெசனப்படாத (கவலைப்படாதே) "



"உங்க உதவிக்கு நன்றி" எழுந்து மீண்டும் நடக்கலானான்.



***



கண்களை திறக்க முயற்சித்தும் அசைக்க கூட முடியாமல் போனது காரிகைக்கு...



உடல் அசதி படுத்தி எடுக்க கஷ்டப்பட்டு விழி மலர்த்தியவள் சுற்று முற்றும் கண்களை சுழல விட கணவன் அருகில் இல்லாது போகவும் சட்டென ஒரு பாதுகாப்பின்மை மனதிற்குள்...



'மாமா... எங்க இருக்கீங்க... பயமா இருக்கு' மனம் மன்றாட எழுந்து கொள்ள முடியா நிலையில் தத்தளித்தாள் பாவை....



"மாமா...." அவள் குரல் ஈனஸ்வரத்தில் கேட்கவும் அதற்காகவே காத்திருந்தவன் போல் உள்ளே ஓடி வந்தான் வர்மன்.



"பாபி... ஆப்கோ க்யா ஹுவா?"

[[ bhaabhee... aapako kya hua_ அண்ணி... உங்களுக்கு என்ன ஆச்சு? ]]



((டேய் கதிர் இந்த வர்மன எங்க இருந்துடா பிடிச்ச... ஹிந்தி பேசி கொல்றான்))



"மாமா...." நல்ல வேலை தனக்குள் உழன்று கொண்டிருந்தவளுக்கு அவன் கேட்டது கருத்திற் பதியவில்லை...



"பய்யா வெளில போய் இருக்காரு..."



"எ... எங்கே பொயிட்டாங்க?"



"அது தெரில பாபி... இப்போ வந்துடுவாங்க... தரா நெஹி"

[[ dara nahin_பயப்படாதிங்க]]



"தண்ணி வேணும்"



"தோ... இருங்க எடுத்துட்டு வர்றேன்" அவன் செல்ல மீண்டும் கண்மூடிக் கொண்டவளுக்கு "ஸ்ரீ மா... அடம்பிடிக்காம இங்க வாடா" யாரோ ஒருவரின் பாசக்குரல் நெஞ்சம் நனைக்க அவளை மீறி புன்னகைத்தன அவளுதடுகள்.



***



"ஹலோ... வேல பாக்க முடிலன்னா கிளம்புங்க மிஸஸ். ரக்ஷன் " அவன் முத்தமிட்ட அதிர்ச்சியிலிருந்தே அவளால் வெளி வர முடியாமலிருக்க என்ன சொல்கிறான் இவன்???



கடவுளே... எங்காவது அடிபட்டு உளறுகிறானா???



சடாரென அவள் புறம் திரும்பவும் அவன் கண்ணடிக்க கண்களை இறுக மூடியவளை பார்த்து வாய்விட்டுச் சிரித்தான் அவன்.



"சார் விளையாட்டுக்கு ஒரு அளவு வேணாமா?" அவன் சிரித்ததில் சற்று சூடாகவே கேட்டாள் பெண்.



"நான் கிஸ் கொடுத்தது உனக்கு விளையாட்டா தெரியுதா?" மீண்டும் அவன் சிரிப்பை அடக்குவது கண்டு கோபமாய் வந்தாலும் கண்ணங்கள் சூடேறி செவ்வானமாய் சிவந்து தொலைக்க வேக மூச்சுக்களை இழுத்து விட்டவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.



"அட... நம்மாளுக்கு முறைக்க கூட வருதே... பரவாயில்ல... " அவன் சிலாகிக்க



" யூ.... " கைகளால் நன்றாக இரண்டு போடு போட்டவள் "இடியட் போடா...." கோபமாய் ரூமை விட்டு வெளியேற அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரித்தான் ரித்விக் ரக்ஷன்.



......





"உப்...." தலையை சிலுப்பிக் கொண்டு உள்ளே நுழைந்தான் குமரன்.



யாருமே வீட்டில் அல்லாதது போல் வெறிச்சோடி இருக்க தொப்பென சோபாவில் அமர்ந்தவன் கைகளால் கண்களை மறைத்துக் கொண்டு சாய

"குமரன் சார்" திடீரென அவன் முன் பெண் குரல் கேட்டதில் படக்கென விழி திறந்தவன் அமிர்தாவை அங்கு அதுவும் அவன் அருகில் சத்தியமாய் எதிர்ப்பார்த்திருக்கவில்லை...



"தண்ணி" அவள் க்ளாஸை நீட்ட அவளையும் க்ளாஸையும் மாறி மாறி பார்த்தவன் சடாரென அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழ அவள் பதறி விலகு முன் மீண்டுமொருமுறை நீர் அபிஷேகம் நடந்து விட்டதில் கீழே குனிந்து பார்த்தவன் அவளை ஏறிட



"சாரி ரியலி சாரி..." பதறிப் போனாள் மாது.



அவள் பதறுவது அவனுக்கு சிரிப்பை வரவழைத்ததுவோ!!!



கீற்றாக புன்னகைத்தவன் எதுவும் பேசாமல் நகரப் போக



"நா உங்க கிட்ட பேசணும்" அவன் நடைக்கு தடா போட்டாள் பெண்.



சட்டென நின்றவன் என்னவென்பது போல் பார்த்து வைக்க

"என்னன்னு வாய திறந்து கேளுங்க சொல்றேன்" ஏனோ அவனை சீண்டுவது அவ்வளவு சுவாரஷ்யத்தை கொடுத்தது பெண்ணுக்கு...



"...."



"அப்போ முடியாது.... பை" செல்லும் அவளையே பார்த்திருந்தவனுக்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.



அவளாக வந்தாள்... பேசினாள்... செல்கிறாள்...



ஒருவேலை தெரிந்திருக்குமோ???



இதயம் திக்கென அதிர அவன் நிமிர்வதற்குள் மாயமாய் மறைந்திருந்தாள் பெண்.



.......



'கடவுளே.... ஏன் என்ன இப்பிடி சோதிக்குற... எங்க போனாலும் அபி மாமா தான் கண்ணுக்கு தெரியுறாங்க... சரி விடலாம்னு பாத்தாலும் பாத்ரூம் கூட நிம்மதியா போக முடில... அங்கேயுமா???' கிட்டத்தட்ட அழும் நிலையில் புலம்பியவாறே அறையின் நீள அகலத்தை அளந்து கொண்டிருக்க மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு அவளையே ரசித்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அபி.



அவள் படும் பாட்டை பார்த்து சிரிப்பாய் வந்தாலும் அடக்கிக் கொண்டவன் "பேபி மா...." அவன் அழைப்பில் தூக்கிவாரிப் போட திரும்பியவள் அவன் வாசலில் நின்று கொண்டிருப்பது கண்டு சற்று சத்தமாகவே புலம்பினாள்.



"கடவுளே.... உனக்கு மனசாட்சியே இல்ல... இங்கேயுமா... என்ன பைத்தியம்னு சொல்ல போறாங்க இப்போ" அவன் வாய்விட்டுச் சிரிக்க சட்டென சுதாரித்தவள் அவனருகே செல்ல அவளை இழுத்து சுவற்றோடு சாய்த்தவன் அவள் புறம் குனிய "காக்க காக்க..." அவள் முணுமுணுப்பில் வயிற்றை பிடித்துக் கொண்டு அவன் சிரிக்க ஆரம்பிக்க திருதிருவென விழித்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.



***



முதியவர் சொன்ன தெருவுக்குள் கூட நுழைக்க தோன்றாமல் பைக்கை காற்றை கிழித்துக் கொண்டு செலுத்திக் கொண்டிருந்தான் கதிர்.



அவன் கணக்குப்படி மனையாள் விழிக்கும் நேரம் நெருங்கி விட்டிருக்க எழுந்து பயந்து விடக் கூடாதே என்றதிலேயே அவன் பதட்டம் அதிகரித்துக் கொண்டிருந்ததுவோ???



.......



"அம்மாஆஆஆ...." அவள் வீறிட்ட சத்தத்தில் அப்பொழுதான் வந்து பைக்கை நிறுத்தி விட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடியவன் ஈரெட்டில் அவளை அடைய கணவன் கழுத்தை பாய்ந்து கட்டிக் கொண்டவளின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது பயத்தில்...





"ஷ்.... ஒன்னில்ல ஒன்னில்ல... நா இருக்கேன்ல... ரிலாக்ஸ் கண்ணம்மா" முதுகை வருடிக் கொடுத்தவன் தனக்குள் மனைவியை ஆழமாய் புதைத்திருந்தான்.



சற்று நேரம் கழித்து அவள் நடுக்கம் குறைய தன்னை ஏறிட்டுப் பார்த்தவளை பார்த்து புன்னகைக்க தானும் புன்னகைத்தவளின் புன்னகையில் இருக்கும் ஒருவித புத்துணர்வு அன்று இல்லாதது கண்டு நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டவன் அவளை தன்னிலிருந்து விலக்க இன்னுமின்னும் ஒன்றியவளை பார்த்து அப்படியே விட்டு விட்டான்.



"கண்ணம்மா...என்னடா....?"



"ப..பயமா இருக்கு மாமா"



"என்னாச்சு?"



"என்னை யாரோ பேசறாங்க மாமா.... இப்போ இருக்க பேரு இல்ல.... வேற பேரு... எனக்கு ரொ.. ரொம்ப நெருக்கமானவங்க..."



"ஒன்னில்ல எல்லாம் சரியாகும்" திடீரென போனில் நாட்டிபிகேஷன் வந்து விழ கையுயர்த்தி பார்த்தவன்

அதில் தெரிந்த "ஜஸ்ட் ரீச்ட்" எனும் மேஸேஜில் கண்கள் பழிவெறி மின்ன மர்மமாய் சிரித்தாலும் மனைவியை தனக்குள் புதைத்தே இருந்தன கைகள்!!!



தொடரும்.....



14-08-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10 [ B ]



அவன் கணிப்பு பொய்க்கவில்லை!!!



ராமலிங்கம் இந்தியாவிற்குள் இப்போழுது தான் வருகிறான்.



அதற்காகத் தானே அவன் ஒரு ஆளை ஏர்போட்டில் நிறுத்தி தன் மாமாவுடைய புகைப்படத்தை கொடுத்து கவனிக்கச் சொன்னதும்.



இருவரும் இரட்டையர்களானாலும் நிறைய வித்தியாசங்கள் இருக்குமென்பது அவன் கருத்து.



அது தான் நடந்திருந்தது.



இந்த விடயம் அவனையும் அவன் நியமித்த ஆளையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.



தான் கொல்கத்தா வந்த செய்தி அவன் செவிகளுக்கு சென்று இன்னும் எட்டவில்லை என்ற போதே புரிந்து கொண்டான் அவன் நாட்டில் இல்லை என்பதை...



அவரை எழுத விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததற்கு அன்றுடன் முற்றுப் புள்ளி வைத்தாயிற்று!!!



இனி அவன் தான் விதி எழுதுவான்!!!



மர்மப் புன்னகை சடுதியில் மறைய தனக்குள் ஒன்றியிருக்கும் மனைவியை சமாதானப்படுத்தவிழைந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.



"வரு.... சாப்புடுறியா?"



"இ.. இல்ல இல்ல எனக்கு வேணாம்"



"கொஞ்சமாடா... என் கூட பேசறதுக்கு தெம்பு வேணாமா" அவளை விலக்கி அவன் கண்ணடிக்க மலர்ந்தது பெண் முகம்.



"இரு நான் இதோ வந்தட்றேன்" விலகப் போனவனை அவள் பயத்துடன் ஏறிட



"சரி சரி போல... வர்மா" கத்தி அழைத்தவன் அவளுடனேயே அமர்ந்து விட்டான்.



"க்யா பாத்ஹே பாய்? "

[[ Kya baat hai bhaee_ என்ன விஷயம் அண்ணா? ]] அடுத்த நிமிடம் உள்ளே நுழைந்திருந்தான் வர்மன்.



"சாப்பாடு எடுத்துட்டு வா"



"சரி பய்யா" அவன் செல்லவும் ஆச்சரியமாய் தன்னை பார்த்த மனைவியை புரியாமல் பார்த்தான் கதிர்.



"ஏன் அப்பிடி பாக்கற?"



"அவரு பேசறது புரியுதா உங்களுக்கு?"



"ஹாஹா... ஆமாடா... எதுக்கும் இருக்கட்டுமேன்னு படிச்ச மொழி ஹிந்தி... வர்மன ஹேண்டில் பண்ண ஈஸியா போச்சு"



"வர்மன் அண்ணா உங்களுக்கு தெரிஞ்சவரா மாமா?"



"அட திணறாம பேசற... முன்னேற்றம் தான் போ" அவன் சீண்ட



"மாமா... " சிணுங்கினாள் பெண்.



"கஞ்சா கேஸ் விஷயமா அவன் அப்பாக்கும் எனக்கும் எப்போ பாரு மோதல் தான்.... நா கேஸ் போடுவேன்... அவரு தப்பிச்சிடுவாரு... அந்த நேரத்துல தான் வர்மன தெரியும்... அப்பா கொல்கத்தால இருக்க அவன் டில்லில சுத்திகிட்ருந்தான்.... எட்டு வயசுல அப்பாக்காக ரவுடியிஸம் பண்ணி கிட்டு திரிஞ்சவன் அவன்... அடுத்த அரசியல் எதிரிங்களால அப்பா கொல்லப்பட ரொம்ப உடஞ்சு போயிட்டான்.... பாக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துது... அம்மாப்பா இல்லாத வலி ரொம்ப கொடும வரு... அவன் கிட்ட போயி இதெல்லாம் தூக்கி போட்டுட்டு என் கூட வந்தட்றியான்னு கேட்டேன்... வர்லன்னுட்டான்... அப்பா இறந்து காரியமெல்லாம் முடிச்சதுக்கப்பறமா ஒரு நாள் என் கிட்ட வந்து அண்ணா நா உங்க கூட இருந்துக்கவான்னு கேட்டான்... அன்னிலருந்து என் கூட தான் இருக்கான்... இங்க வந்து தமிழ் பேச கத்துகிட்டாலும் பதற்றமா இருக்கற டைம்ல தொடங்கிடுவான் அவன் பாஷைய.... ரொம்ப துடிப்பான பையன்... பாசக்காரன் தான்... என்ன இந்த ஹிந்தி தான் எல்லோரையும் குழப்பி விட்டுடும்...." அவன் சொல்லி முடிக்கவும் சாப்பாடு தட்டுடன் வர்மன் உள்ளே வரவும் சரியாக இருக்க அவனைப் பார்த்து புன்னகைத்தாள் பெண்.



"பாபி... பய்யா வந்த உடனே தான் உங்க முகம் பிரகாசமா இருக்கு" அவன் கூற்றில் மனைவியை திரும்பிப் பார்த்தவன் அவள் தலை குனிந்திருப்பது கண்டு புன்னகைத்தான்.



"இங்க கொடு..." கொடுத்து விட்டு அவன் வெளியேற தட்டை நீட்டவும் வாங்கிக் கொண்டு முதல் கவளத்தை வாய்க்குள் திணிக்கப் போனவள் கணவன் வார்த்தைகளில் அப்படியே கீழே இறக்கி விட்டாள்.



"எனக்கு ஊட்டி விடு... ரொம்ப பசி... கை வேற வலி" அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு அவன் சொன்ன விதத்தில் பக்கென சிரித்தவள்



"மாமா... நீங்க ரொம்ப மோசம்... அன்னிக்கு கூட பொய் சொன்னிங்க" சிரிப்புடனேயே கேட்டாள்.



"நான் மோசமானவனா.... மோசமானவன் என்ன ப..." அவனை அடுத்த வார்த்தை பேசவிடாது கையிலிருந்த கவளம் வாய்க்குள் இருக்க மனைவியை போலியாய் முறைத்தான் கணவன்.



***



"பேபி ஏன் இப்பிடில்லாம் பண்ற... ஹாஹா... என்னால கண்ட்ரோல் பண்ணிக்கவே முடில... " வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பவனை தன்னிலையடைந்து முறைத்தாள் யாழினி.



"ஓகே ஓகே... சிரிக்கல..." வாயை பொத்திக் கொண்டாலும் அதையும் மீறி சிரிப்பு வெடித்துக் கிளம்ப "சிரிக்காதிங்க மாமா.... " பல்லை கடித்தவள் அவன் மீது பாய நிலைதடுமாறி இருவருமே பெட்டில் விழ அவளை கீழே வைத்து மேலே அரனாகி நின்றான் அபினவ்.



மீண்டும் அவன் உடல் தன் மீது உரசி இருந்ததில் நெளிந்தவள் அவனைப் பாராது தலை குனிய



"எல்லா இடத்திலயும் ஒருத்தன் தெரியுறான்னா அர்த்தம் என்ன தெரியுமா பேபி?" விலுக்கென நிமிர்ந்தவளின் கண்களுக்குள் ஊடுறுவ முயன்றான் காளை.



"பிகாஸ்..."



"பி... பிகாஸ்...?"



"நீ அவன லவ் பண்..." அவன் முடிக்குமுன் அவனை தள்ளிவிட அவள் துடிக்க நிலையில்லாமல் அவள் மீது அவன் விழவும் இருவர் உதடுகளும் எதிர்பாராவிதமாக முத்தமிட்டுக் கொள்ளவும் சரியாக இருக்க சட்டென விலகியவன் அவள் அதிர்ந்த முகத்தை சிரிப்புடன் பார்க்க அவள் கண்கள் விரியவும் அதற்கு மேல் முடியாமல் அவளை இழுத்து அவளதரங்களை தன்னதரங்களோடு பொருத்த தானாய் மூடிக் கொண்டன அவனவளின் கண்கள்....



......



"இவ என்ன நம்ம மேல தண்ணிய கொட்டி விட்றதயே வேலையா வெச்சிருக்கா "புலம்பிக் கொண்டே டீ-ஷர்ட்டை கலற்ற "குமரன் சார்... அப்பா உங்கள..." திடீரென உள்ளே வந்தவள் அவன் கோலம் கண்டு சடாரென திரும்பி நிற்க தானும் அதிர்ந்து போய் நின்றிருந்தவனின் உதடுகளில் வந்து போனது ஓர் அழகான புன்னகை...



நேரே சென்று கதைவை தாழிட்டு விட்டு மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி ஒற்றை காலை நிலற்றில் குற்றி அதன் மீதே அவன் சாய்ந்து நிற்க தாழிட்ட சப்தத்தில் பதறி விழி திறந்தவள் தன் கண் முன் இரு இன்ச் இடைவெளி விட்டு நின்று கொண்டிருப்பவனை பார்த்து தூக்கிவாரிப் போட விலக எத்தனிக்க அவள் எண்ணம் புரிந்து இடையூடு கையிட்டு தன்னை நோக்கி அவன் இழுக்கவும் அவனில் மோதியதில் விதிர்விதிர்த்துப் போனாள் பெண்.



"என்ன சொன்ன... என்னன்னு வாய திறந்து கேளுங்க நான் சொல்றேன்னா.... இப்போ கேக்கறேன் சொல்லு.... என்ன விஷயம்?" அவளிடையில் அவன் அழுத்தத்தை கூட்டவும் கண்கள் படபடவென அடித்துக் கொள்ள மிரண்டு போய் நிமிர்ந்தாள் மாது.



"ம்... சொல்லு மா... அதான் கேட்டுட்டேன்ல?"



"அ... அது.... அது... ப்ளீஸ்... விடுங்க கு... குமரன்... சார்" அவன் கைகளில் அவள் நெளிய இன்னுமின்னும் இறுக்கியவன்



"அதெப்பிடி விட முடியும்... நீ கேட்டது நான் சொஞ்சுட்டேன்... நான் கேட்டதுக்கு உன் கிட்ட ரெஸ்பான்ஸே இல்லியே?" அவளை விட அவனுக்குத் தான் அவளை சீண்டுவது சுவாரஷ்யம் போலும்.



"சா... சாரி... இ... இனிமே... உ... உங்க வழிக்கே வர மாட்டேன்.... ப்ளீஸ்..."



"ஊஹூம்... அது செல்லாது... "



"ப்ளீஸ் கு...குமரன்" முதன் முறை அவனை பெயர் சொல்லி அழைத்திருக்கிறாள்... அப்போதும் விட்டானில்லை அவ்வாறடி ஆண்மகன்.



"கேக்கல... மறுபடி"



"சா... சாரி... சாரி... குமரன் சார் "



"ப்ச்... சார் விட்டுட்டு சொல்லு"



"அ... அது... "



"சொல்லிட்டு ஒரு முத்தம் கொடுத்தீன்னா விட்டுட்றேன்..." அதிர்ந்து பார்த்தவள்



"ஏன் இப்படி பண்றீங்க... ப்ளீஸ்" கெஞ்சத் துவங்கி விட்டாள்.



"அப்பிடிதான் பண்ணுவேன்... "



"ப்ளீஸ்... கு... குமரன்" அவள் அழைப்பில் அவன் உதடுகள் விரிய எம்பி அவன் கண்ணத்தை கடித்து வைத்தவள் அவன் சுதாரிக்கு முன் கதவை திறந்து வெளியே ஓடிவிட "ஆ... ராட்சஸி... " கண்ணத்தை தேய்த்துக் கொண்டே புலம்பினான் அவன்....



.........



நெஞ்சில் கை வைத்து ரக்ஷனின் அறையில் வெளி சுவற்றில் சாய்ந்திருந்தாள் அர்ச்சனா.



அவன் செய்கைகளை விட தான் அவனுக்கு மரியாதையின்றி பேசி விட்டு வந்ததுவே அவளை அதிகம் பதற்றப்பட வைத்துக் கொண்டிருந்தது.



"கடவுளே.... ஏன் இப்பிடி நடந்துக்கறாரு.... ச்சே என் வாய் வேற..." புலம்பிக் கொண்டிருந்தவள் "மிஸஸ். அர்ச்சனா ரக்..." உள்ளிருந்து கேட்ட குரலில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடியவள் பாய்ந்து அவன் வாயை மூடி சுற்று முற்றும் பார்க்க அவள் விழிகளையே பார்த்திருந்தான் அவன்....



பின்னே... எட்டூருக்கு கேட்குமளவு ஏலம் போட்டுக் கொண்டிருந்தால்???



"சார்...." பல்லை கடித்துக் கொண்டே திரும்பியவள் அப்போது தான் கவனித்தாள் அவன் கை தன் இடையை வளைத்திருப்பதை...



யாராவது கண்டுவிட்டால் என்ன நினைப்பார்கள்???



சட்டென துள்ளி விலகியவள்

"ரித்விக் சார்... என்ன தான் ஆச்சு உங்களுக்கு.... ஏன் இப்பிடில்லாம் பண்றீங்க... நான் வ..."



"கரப்பான் பூச்சி...." இடைநடுவில் அவன் திடீரென கத்த "ஐயோ..." மீண்டும் துள்ளியவள் அவன் கழுத்தை இறுக்கிக் கொண்டே அவனில் ஒடுங்க



"இப்போ யாரும் பாக்க மாட்டாங்களா மிஸஸ். ரக்ஷன்?" அவன் சிரிக்க சட்டென விலகி விட்டாலும் அவள் செய்கை அவளுக்கே கூச்சத்தை கொடுத்தது.



"சரி அந்த பைல எடு..." அவளை சீண்டுவதை விடுத்து அவன் வேலைக்குத் தாவ பெருமூச்சு விட்டவாறே அவனிடம் அதை எடுத்து நீட்டியவள் அருகில் அமர்ந்து கொண்டாள்.



நேற்று கதிருக்கு நடந்தது போலவே அவனுக்கும் நாட்டிபிகேஷன் வந்து விழ தூக்கிப் பார்த்தவனுக்கு அதே "ஜஸ்ட் ரீச்ட்" எனும் செய்தியில் கைககள் நடுங்கத் துவங்கின அவனுக்கு....



ராமலிங்கம் எங்கு செல்கிறான் இருக்கிறான் என்பது அவனுக்கு தெரியாவிடினும் எங்காவது சென்றிருந்து நாட்டிற்கு வந்து சேரும் போது மட்டும் அவனுக்கு இந்த நாட்டிபிகேஷன் எப்போதும் வரும்.



அவன் எதற்காக தனக்கு அனுப்புகிறானென்று அவனுக்கா தெரியாது!!!



உன் நண்பனை காப்பாற்றிக் கொள்!!!



இதுநாள்வரை கதிர் அருகில் இருந்ததில் வராத நடுக்கம் இப்போது அவன் தன்னை விட்டு வேறு எங்கோ இருப்பதில் திடீரென உண்டானதில் தன்னை புரிந்து கொள்ள மறுக்கும் நண்பன் மீது ஆத்திரமாய் வந்தது ரக்ஷனுக்கு...



அவன் உயிருக்கு ஆபத்து என்று தானே அவன் அவனுடனேயே இருக்கிறான்!!!



இருந்தும் தன்னிடம் ஓர் வார்த்தை கூட சொல்ல தோன்றவில்லையே அவனுக்கு....



அவ்வளவு தூரமாக்கி வைத்து விட்டானா???



"ரித்விக் சார் என்னாச்சு?" அர்ச்சனாவின் கேள்வியில் தன்னை இழுத்துப் பிடித்தவன்



"ந.. நத்திங்..." உடனே நண்பனுக்கு அழைத்தான்.



.....



"வரு... இந்த வீட்..." ஏதோ பேசிக் கொண்டிருந்நவன் மொபைல் அலறலில் சட்டென நிறுத்தி விட்டு திரையை பார்க்க அதில் ஒளிர்ந்த எண் அவன் மனநிலையை மாறச் செய்ய திடீரென இறுகியது முகம்.



"மா.. மா... என்னாச்சு?" அவன் முகத்தை இப்படி கண்டால் மட்டும் எங்கிருந்து தான் அந்தப் பயம் வந்து ஒட்டிக் கொள்ளுமோ அவளுக்கு மட்டும்....



ஒருதடவை அதிர்ந்து அடங்கி மறுபடி அழைப்பு வர தன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்தவன் அட்டென்ட் செய்து காதிற்கு கொடுத்தவாறே எழுந்து வெளியே சென்றான்.



"ம.. மச்சான்.. இன்னும் கொல்கத்தால தான் இருக்கியா?"



"...."



"கிருஷ் ப்ளீஸ் சென்னை வந்துடு மச்சான்... எ... எனக்கு அந்த ஆளு கிட்ட இருந்து நாட்டிபிகேஷன் வந்திருக்குடா... அவன் இந்தியா ரீச் ஆகற டைம் தான் இப்படி வரும்... ப்ளீஸ் வாடா" நண்பன் கூற்றில் அவன் முகம் இன்னும் இறுகியது.



"டேய் நீ நெனக்கிறா மாறி நான் அவன் கூட தொடர்புல இல்ல மச்சான்... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ... வந்துடு டா" அவன் குரலிலிருந்த வலியில் இவனுக்குத் தான் அதிகமாய் வலித்தது.



"...."



"டேய் கிருஷ் ப்ளீஸ்... உன் கால்ல வேண்னாலும் விழறேன் மச்சி... இந்த ஒரு தடவ நா சொல்றது கேளுடா" தொண்டை அடைத்து குரல் கரகரக்கத்ததுவோ...



"உன் அப்பன் கூட என்னால மோத முடியாது ஓடி ஒளியற அளவு நான் அவ்வளவு பலவீனமானவன்... ரைட்?" நண்பன் பேச்சு சத்தியமாக அவனுக்கு வலித்தது.



அவன் என்ன சொன்னால் இவன் என்ன சொல்கிறான்??



சட்டென துண்டித்தவன் போனை தூக்கி வீச சுவற்றில் மோதி தெறித்து விழுந்ததில் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள் அர்ச்சனா.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நண்பன் மொபைலை தூக்கி விசிறியடித்த அதே நேரம் பால்கனியில் நின்று கொண்டிருந்தவனும் கீழே தரையில் மொபைலை ஓங்கி அடிக்க சிதறியது அதுவும்!!!



மிரண்டு போனவளின் உடல் தூக்கிவாரிப் போட கனவனையே பார்த்திருந்தவளுக்கு அவன் தலையை அழுத்தக் கோதுவதும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து விட்டு திடீரென ஷிட் என கத்துவதும் ஏனென்று புரியாமலேயே போனது.



"மாமா..." மனைவியின் அழைப்பில் தன்னை கட்டுக்குள் கொண்டு வர போராடியவன் அவளருகே வந்தமர பயத்துடன் ஏறிட்டாள் பாவை...



"எ.. என்னாச்சு?" சட்டென தன்னவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அவளிடம் ஆறுதல் தேட முயன்றானோ???



அவள் கை தானாய் எழுந்து அவன் முதுகை வருட கண்களை இறுக்க மூடினான் காளை.



"யாரு மாமா உங்ள டென்ஷன் படுத்தினது?" கேட்கத் தெரியாமல் கேட்டு வைக்கும் குழந்தையை போல் அவள் கேட்ட கேள்வி அவனுதட்டை விரியச் செய்ய தன்னிலிருந்து பிரித்தவன் அவளையே பார்த்தான்.



"ஏ.. ஏ.. ஏன் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?" பதில் பேசாமல் தலையை இல்லையென ஆட்டியவன் புன்னகைக்க



"அப்போ என்னாச்சு? " என்றாள் மறுபடி..



"அது ஒன்னில்லடா... நீ யோசிக்காத" மனைவியே ஆனாலும் நண்பனை பற்றி வாயை கூட திறக்க முடியாமற் தான் போயிற்று அந்த ஆறடி ஆண்மகனுக்கு...



" ம்... " அவள் முனக "வா ஹாலுக்கு போலாம்" எழுந்து சட்டென அவளை கைகளில் கொண்டவனின் கழுத்தை கட்டிக் கொண்டவள் கண்களை இறுக மூடிக் கொள்ள தலையாட்டி சிரித்தவன் கொஞ்ச தூரம் நடக்க படக்கென விழி திறந்தவள் "மாமா... வி.. விடுங்க நானே வர்றேன்" அவஸ்தையில் நெளிந்தாள் மாது.



அதில் அவன் நடை சட்டென தடைபட்டு கண்கள் அவளை பார்க்க



"மாமா ப்ளீஸ்... எனக்கு கூச்சமா இருக்கு" சேலையினூடே தெரிந்த வெற்றிடையில் அவன் கை அழுத்தமாக பதிந்திருக்க கையை விலக்கி விட போராடவும் வேண்டுமென்றே இன்னும் அழுத்தியவன் குனிந்து அவள் இதழ்களை முற்றுகையிட செய்வதறியாது அடங்கிப் போயின பெண்ணவள் திமிறல்கள்!!!



***



காலுக்கு மறைவாக போர்த்தியிருந்த பெட்ஷீட்டை உறுவி வீசியவன் கட்டிலிலிருந்து இறங்க "ரித்விக் சார் என்ன பண்றீங்க?" பயந்து போனாள் பெண்.



"நா கல்கத்தா போணும்"



"வாஆட்... அங்க எதுக்கு... உங்க உடம்பு சரியாகுற வர ரெஸ்ட் வேணும்"



"நா நல்லா தான் இருக்கேன்.... ஐ வான்ட் டு கோ நவ்"



"சார் நீங்க நார்மலா தான் இருக்கீங்க... பட் அந்த ஊசியோட தாக்கம் உங்க உடம்புல இருக்கும்... சட்டுனு பலவீனமாயிடுவீங்க... ப்ளீஸ் "



"அதெல்லாம் எனக்கு தெரியாது அர்ச்சனா நா போணும்.... " அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தனர் அபியும் குமரனும்....



"ரக்ஷன்... எதுக்குடா எந்திரிச்சு இருக்க?" அபி கேட்க



"நான் கல்கத்தா பொணும்" எங்கோ பார்த்தபடி சொன்ன நன்பன் கூற்றில் அதிர்ந்த இருவரில்



"லூசா நீ? " கோபப்பட்டான் குமரன்.



"ஆமா லூசு தான்..."



"டேய் உனக்கு என்ன தான் ஆச்சு... ப்ளீஸ் நிலமைய புரிஞ்சிக்கோடா" அபி சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்த நொடி திடீரென அலறியது குமரனின் மொபைல்.



மனைவியின் மொபைலிலிருந்து கதிர் தான் அழைத்திருந்தான்.



"மச்சான்.... இது வரு நம்பர்... எனக்கு ஒரு வேல ப.. " ஏதோ சொல்ல வந்தவன் "முடியாது அபி... நான் கல்கத்தா போணும் தட்ஸ் ஆல்" ரக்ஷனின் பிடிவாதக் குரலில் நெற்றி சுருக்க அர்ச்சனா இருப்பது தெரிந்து சற்றே தள்ளி வந்தான்.



"என்னாச்சு குமரன்?"



"மச்சி... கல்கத்தா போயே ஆவேன்னு அடம் புடிக்கிறான்டா" இம்முனை பல்லை நரநரவென கடிப்பது குமரனுக்குமே கேட்பதாய்...



"டோன்ட் பீ ஆங்க்ரி கதிர்... நா சமாளிக்கிறேன்... நீ என்ன சொல்ல வந்த?"



"அபிக்கு இந்த நம்பருக்கு பேச சொல்லு..."



"ஓகே டா... பீ சேஃப்" அழைப்பு துண்டிக்கப்பட அபியிடம் விஷயத்தை சொன்னவன்



"ரித்விக்... உன் உடம்பு இருக்க நிலமைல நீ போறது சேப் கிடையாது... கதிர் கோபப்படறான்... ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டான்ட்... " ரக்ஷனிடம் புரிய வைக்க முயன்றான்.



"அவன் மேல உனக்கு நம்பிக்க இருக்குல்ல? " அபியின் கேள்வியில் விலுக்கென நிமிர்ந்தவன் "இருக்கு" ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டு அமைதியாகி விட "அபி... லெட்ஸ் கோ... " இருவரும் வெளியேறி விட்டனர்.



***



மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற லிமோசின். [[ Limousine White Car]]



((அதான் நண்பா நல்ல நீஈஈஈளமா இருக்குமே காரு... அதே அதே))



தன் டேப்பில் ஏதோ மும்முரமாக தேடிக் கொண்டிருந்தவர் முகம் திடீரென கோபத்தை தத்தெடுக்க



"அந்த சாரு நாயி... அவ கைல இருக்க ரெக்கார்டர கழட்டி இருக்கா" கர்சித்தது சாட்சாத் ராமலிங்கமே தான்.



"இவ கழட்டுனாவா இல்ல...." தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அடியாளை பார்த்த பார்வையில் நடுங்கி நின்றவன்



"சா... சார்... வேலு செ.. சென்னைல தான் இருக்கான்... சாருவோட ரெக்கார்டர் எப்பிடி இப்பிடி ஆச்சுன்னு த.. தெரில" வார்த்தைகளில் மரண பயம் அப்பட்டமாய்...



"ஓஹ்... சென்னை??? " உடனே அழைப்பு போனது அங்கு வீட்டின் முன் உளவாளியாக நின்றிருப்பவனுக்கு...



"சார்?"



"வேலு எங்கே இருக்கான்?"



"சென்னைல தான் சார்"



" ம்... " தாடையை தடவியவர் ஏதும் பேசாமல் அமைதியாகி விட்டாலும் ஏதோ நெருடியது...



.......



"ஹாஹா.... என் கிட்டவே மோதிட்டல்ல....?" வில்லத்தனமாய் முணுமுணுத்துக் கொண்டே காதிலிருந்த ப்ளூ டூத்தை எடுத்தான் கதிர்வேல்.



அவனுடைய ஆளையே விலை கொடுத்து வாங்கி அவன் மூலமே அந்த காருக்குள் ரெக்கார்டர் பொருத்தி இருந்தானே!!!



வீட்டின் முன் நின்ற உளவாளியை விலைக்கு வாங்கி அவன் மூலம் ராமலிங்கத்தின் ட்ரைவரையும் வாங்கி விட்டிருந்தவன் அவன் மூலம் தான் காய் நகர்த்தி இருந்தான்.



வீட்டை சுற்றி நிறுத்தி வைக்கப்பட்ட உளவாளிகளுக்கு ஒரே நேரத்தில் மொபைலில் அழைப்பு ஏற்படுமாறு செய்தவன் அவர்கள் அழைப்பை எடுத்த இடைவெளியில் ஒருவன் புரியாமல் நின்று கொண்டிருப்பதை கண்டு கொண்டு உடனே பிடியை இறுக்கினான்.



அவன் நினைத்தது போலவே அவன் தான் அந்த உளவாளியாய் போனதில் வெற்றிப் புன்னகைக்கு பதிலாக கேளிப் புன்னகையே மலர்ந்தது காளையில் உதட்டில்....



"கிருஷ்..." அழைத்திருந்நான் அபி.



"ஹாங் அபி..."



"என்ன விஷயம் டா... உன் போன் எங்க? "



"அது உடஞ்சிடுச்சு... லீவ் தட்... நீ ஒன்னு பண்ணு.... நாம அன்னிக்கு போனோம்ல ஷாலினியோட காலேஜ்?"



"ஆமா"



"குமரன் கூட போயி காலேஜ் என்டர் ஆகறப்போ டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி வெச்சிருப்பாங்கல்ல... அந்த இன்பர்மேஷன்ஸ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா அனுப்பி விடு...."



"ஓகே மச்சி.... இப்போவே கிளம்பறோம்"



"பீ கேர்புல்.... நீ என் வீட்ல இருந்து வெளில வர்றது யாருக்கும் தெரிய கூடாது"



"டன் டா " அவன் துண்டிக்க மொபைலை ஓரமாக வைத்தவன் ஹாலில் அமர்ந்திருந்த மனைவியிடம் வந்து நின்றான்.



"கெளம்பலாமா?" அவன் கேட்கவும் புன்னகைத்து எழுந்து கொண்டவளை தோளோடு வளைத்து அணைத்தவன் வெளியே அழைத்துச் சென்று கார் கதவை திறந்து ஏற்றி விட்டு தானும் மறுபக்கம் ஏறிக் கொள்ள விரைந்தது ஹாஸ்பிடல் நோக்கி....



......



நாராயணன் ஹாஸ்பிடல்.....



விதி தான் அவளை அங்கு கொண்டு வந்து சேர்த்திருந்ததுவோ???



"கண்ணம்மா.... அதோ அந்த மரத்துக்கு கீழ இரு... நான் பார்க் பண்ணிட்டு வந்தட்றேன்" சரியென தலையசைத்து கீழே தரையில் கால் வைத்தவளுக்கு உடம்பு முழுதுமாய் ஒரு வித சிலிர்ப்பு!!!



ஏதோ ஓர் சொல்ல முடியா பந்தம் தன்னை கட்டி இழுப்பது போல் தானாய் நடந்தவள் அவன் சொன்ன மரத்துக்கு கீழே போய் நின்று கொள்ள தூரத்தே அவளையே அதிர்ச்சியுடன் பார்த்து சிலையாய் சமைந்து நின்ற பெண்ணின் உதடுகள் "ஸ்ரீ...." தானாய் முணுமுணுக்க அது கேட்டோ என்னவோ சடாரென திரும்பிப் பார்த்தவள் மீண்டும் திரும்பியதில் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் ஓட்டமும் நடையுமாக அவளை நோக்கி செல்ல காரை பார்க் பண்ணி விட்டு மனைவியின் அருகே அதாவது வர்ஷினிக்கு நேரெதிரே வந்து கொண்டிருந்தவனின் கண்கள் அவளுக்கு பின் புறமாக வந்து கொண்டிருந்த பெண்ணை பார்த்து இடுங்க அதற்குள் இருவருமே வர்ஷினியை நெருங்கி விட்டிருந்ததில் கனவனை பார்த்து புன்னகைத்தவள் "ஸ்ரீ...." நா தழுதழுக்க யாரோ தோள் தொடவும் திடுக்கிட்டுத் திரும்பினாள் அவள் புறம்!!!



அந்தப் பெண்ணை பார்த்தில் ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்கிப் போயின பேதைக்கு!!!



"ஸ்ரீ...." அந்தப் பெயர் மீண்டும் முணுமுணுக்கப்பட "வரு... கம் லெட்ஸ் கோ...." மனைவியின் கை பிடித்து அவன் அழைத்துச் செல்ல திரும்பித் திரும்பிப் பார்த்தவளை நேரே பார்க்குமாறு செய்தவன் தான் திரும்பி அந்தப் பெண்ணிடம் வாயில் கை வைத்து "உஷ்...." என்றான் ஏதோ யூகித்தவன் போல்!!!



........



"குமரா... லெட்ஸ் கோ" காரிலிருந்து இரு பக்கமாக இறங்கினர் நன்பர்கள் இருவரும்.



"நேரடியா கேக்கலாம்குறியா ஆதி?"



"அப்கோர்ஸ் டா... போலிஸ் ஐடி வெச்சு போலாம்"



"சப்போஸ்... அந்த ரெக்கார்ட்ஸ் இல்லன்னா?" பேசிக் கொண்டே அவர்கள் வாசலை அடைந்திருக்க கேள்விக்கு பதிலளிக்காமலேயே நுழைந்து விட்ட அபியுடன் பின்னால் நுழைந்தான் குமரன்.



"சார்...." அபி ஏற்கனவே அறிமுகமாகி இருந்ததில் சட்டென எழுந்து நின்று வியர்வையை துடைத்தார் மனிதர்.



"கொஞ்சம் இன்வெஸ்டிகேட் பண்ணனும் மிஸ்டர். ரவி... கேன் ஐ?"



"தாராலமா சார்... உ.. உக்காருங்க..." அபிக்கு இருக்கையை காட்டியவர் குமரனையும் பணித்தார்.



"ஷாலினியோட ரெக்கார்ட்ஸ் வேணுமே"



"சா... சார்... இதோ எடுத்துட்டு வர சொல்றேன்..." பியூனை அழைத்து எடுத்து வருமாறு கட்டளையிட கதிர் மொபைலுக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டான் குமரன்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மச்சான் ரெக்கார்ட்ஸ்ல அழிக்கப்பட்டிருக்குடா" அதிர்ச்சியாய் அபி முணுமுணுக்க தானும் அதிர்ந்தவன் உடனே மொபைலை காதிற்கு கொடுத்தான்.



"குமரா... அசல் நகல்னு இரண்டு பைல் நிச்சயமா இருக்கும்... அந்த ரவிய நம்ம வழில கவனி... கக்கிடுவான்" அழைப்பு துண்டிக்கப்பட அபிக்கு கண்களை காட்டியவாறே எழுந்தவன் எப்படித்தான் மேசைக்கு மேலால் பாய்ந்து அவர் கழுத்தை இறுக்கி நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை அழுத்த காத்திருந்தானோ???



அபிக்கே ஒரு நிமிடம் திக்கென்று விட்டது.



"ஆதி... அந்த கதவ லாக் பண்ணு"



"சா... சார் எனக்கு எதுவும் தெரியாது சார்... ப்ளீஸ் என்ன விட்டுடுங்க ப்ளீஸ்"



"இது நகல் பைலாச்சே ரவி... அசல் ஒரிஜினல் பைல் எங்கே?" அபி தான் கேட்டான்.



"சா... சார் எனக்கு எதுவும் தெரியாது சார்...."



"ஏய்... அழுத்தினேன்னு வை... "



"சா... சார்... சொ.. சொல்லிட்றேன்.. சொல்லிட்றேன்... "



"அது... சொல்லுங்க அந்த பைல் எங்க" அபி கேட்க



"என் லாக்கர்ல... சா.. சாவி இதோ இருக்கு" பழைய இரும்புப் பெட்டியொன்றை அவர் கண்கால் காட்ட அதை திறந்து சாவியை எடுத்தவன் லாக்கரை திறக்க பதிய பைல் ஒன்று மட்டுமே இருந்ததில் 'இந்த ஒரு பைலுக்கு இவ்வளவு பாதுகாப்பா' நினைத்துக் கொண்டே எடுத்தவன் சாவியை தூக்கிப் போட்டு விட்டு கதிருக்கு மீண்டும் அழைப்பெடுத்தான்.



"க்ருஷ்... டன் மச்சி..."



"அந்த பிரின்ஸிபால போட்டுடு"



"மச்சான்..." உண்மையில் அதிர்ந்து தான் போனான்.



"எஸ்.... அவனால நமக்கு ஆபத்து வர வாய்ப்பிருக்கு"



"பட்..."



"டூ வட் ஐ சே ஆதர்ஷ்" அவன் குரலில் கடுமை தெறிக்க 'ஆஹா திரும்ப மலை ஏறிட்டான்'



"ஓகே" துண்டித்து விட்டு குமரனுக்கு தலையசைக்க அவனுமே அதிர்ந்து தான் போனான்.



"என்னடா சொல்ற?"



"டூ வட் ஐ சே குமரன்" விரைப்பாய் கூறியவன் பக்கென சிரித்து விட



"லூசு... விளையாட்ற நேரமாடா இது?" அவன் முகத்திலும் கதிரின் குரலில் அவன் சொன்னது புன்னகையை வரவழைத்திருந்தது.



"பின்ன... அந்த எரும இப்பிடி தான் சொன்னான்..."



"இங்க வெச்சு போட முடியாது... தூக்கிடலாம்"



"எப்போ?"



"நாம உள்ள வர்றத நிறைய பேரு பாத்துட்டானுங்க ஆதி... கதிர் சொல்றா மாதிரி இவன் உயிரோட இருக்கறது ஆபத்துன்னாலும் இங்க வெச்சு போட முடியாதேடா"



"கரெக்ட்... என்ன பண்றது...?"



"விட்டு பிடிக்கலாம்"



"அப்பறம் க்ருஷ் நம்மள விட்டு பிடிப்பான் பரவாயில்லயா?"



"ஏன்டா... "



"ஹாஹா... தெரியுதுல்ல... அப்போ ஒழுங்கான ஐடியாவா சொல்லு"



"ஆதி பீ சீரியஸ்... அவனுக்கு போன போடு"



.....



"ப்ச் எதுக்கு சும்மா கால் பண்ற ஆதி... வரு பக்கத்துல இருக்கா... எத்தன தடவ தள்ளி வந்து பேசறது? "



"சும்மா சும்மா கோபப்படாத மச்சான்... இவன எப்பிடி போட்றது?"



"ம்... கொல்கத்தா அனுப்பி விடு போட்றேன்" உச்ச கட்ட கடுப்பு அவன் குரலில்...



"டோன்ட் மேக் மீ ஆங்க்ரி கதிர்.... நாங்க வர்றத எல்லோரும் பாத்துட்டாங்க... இவன போட்டா சந்தேகம் வரும்.. " அவனும் கத்த தலையிலடித்துக் கொண்டான் குமரன்.



((இரு உன்ன யாழி கிட்ட போட்டு குடுத்தா தான் திருந்துவ))



"சோ வாட்... யூ ஆர் அ போலிஸ் ஆபிஸர்... ஏதாவது கேஸ் போட்டு மூடு" அவன் கூலாக சொன்னதில் 'மக்கு அபி... இந்த ஐடியா உனக்கு வராம போச்சேடா'



"ஹி... ஆமால்ல... நீ வை மச்சான் போன" நைஸாக கழன்று கொள்ள ஸ்பீக்கரில் போட்டிருந்ததில் வாய்விட்டுச் சிரித்தான் குமரன்.



"சிரிக்காத குமரா... இவன் கிட்ட மட்டும் ஏன் தான் என் மூளை குழம்பி போகுதோ" அவன் சிரிப்பு இன்னும் பீரிட்டுக் கிளம்ப திடீரென கேட்ட சத்தத்தில் அதிர்ச்சியாய் ஆதர்ஷை பார்த்தான் குமரன்.



ஆம் கையிலிருந்த துப்பாக்கி தோட்டா அவர் நெஞ்சை துளைத்திருந்தது.



"குமரா லெட்ஸ் கோ" வளைத்திருந்த கையை எடுத்து விட்டு தன் துப்பாக்கியை முதுகுக்கு பின்னால் சொறுகியவன் இணந்து நடந்தான் அபினவ்வுடன்....



***



"கொல்கத்தாக்கு போ" கட்டளை வந்தது ராமலிங்கத்திடமிருந்து.



"ச... சரிங்க ஐயா"



"அவன் வெளியில வர்றா மாதிரி எந்த வீடியோவும் வர்ல?"



"இ... இல்ல... இல்ல சார்... வர்ல"



"தப்பாச்சே" மீண்டும் தாடையை தடவிக் கொண்டவர்



"அந்த ராஜா வீட்டு நிலவரம் என்ன?" இல்லாவிட்டால் தான் அவனுக்கு உண்மை தெரிந்த விடயம் இவருக்கு தெரிய வந்து விடுமே...



அந்த பயம் அப்பட்டமாய்!!!



"நோ சார்... இன்னிக்கு காலைல கூட ராஜாராம கட்சி மீட்டிங்ல பாத்ததா நம்மாளு சொன்னான்"



"ம்.. நல்லது... எதுக்கும் இன்னும் கொஞ்சம் பேர அவன் வீட்ட சுத்தி இருக்க வை"



"ஓகே சார் ஓகே..." எங்கோ சென்ற கார் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்குள்ளே நுழைய



"எத்தன மணிக்கு கொல்கத்தா ப்ளைட்?" இறங்க தயாராகியவாறே கேட்டார் ராமலிங்கம்.



"இன்னும் ஒன் அவர்.. மார்னிங் டென் ஒ க்ளாகுக்கு சார்"



"ம்... " அவர் பதில் கூட உறுமலாகவே கேட்டதோ அருகிலிருப்பவனுக்கு???



***



காலை கட்டிக் கொண்டு முகத்தை உம்மென வைத்திருந்தாள் யாழினி.



கையடக்கத் தொலைபேசி மீண்டும் மீண்டும் அதிர்ந்து கொண்டிருந்தாலும் அதை எடுக்கும் எண்ணமே இல்லையோ பேதைக்கு???



அதிர்ந்து அடங்கி மீண்டும் ஏற்கப்பட அழைப்பை ஏற்று காதில் வைத்திருந்தவள் ஒரு வார்த்தை பேசினாளில்லை மறுமுனையில் கெஞ்சிக் கொண்டிருந்த அண்ணனிடம்...



"குட்டிமா சாரி சாரி சாரி டா"



"...."



"ஹே சத்தியமா மறந்து போகலடா... ஒர்க் டென்ஷன்.. ப்ளீஸ்"



"ஒன்னும் தேவையில்ல வைங்க போன.... உங்களுக்கு இப்போல்லாம் என் மேல பாசமே இல்ல நா செத்து போயிட்றேன்"



"யாழினி" அவன் கர்ச்சணையில் அவள் கேவல் வெடிக்க



"ஏன்டா இப்பிடி பேசற?" என்றான் பெரும் நிதானம் போல்....



"குட்டிமா சாரிடா சாரி... ப்ளீஸ் அழறத நிறுத்துடா... அப்போ அண்ணனும் அழட்டுமா?"



"தேவையில்ல போங்க" கேவிக் கொண்டே அவள் சொல்ல சிரித்தவன்



"இன்னும் கொஞ்ச நாள் தான்... அதுக்கப்பறம் வந்துடுவேன்"



"பேசாதிங்க என் கூட"



"அண்ணி கிட்ட பேசுறியா?"



"நா அவங்க கூடவும் கோபமா இருக்கேன்.... ரெண்டு பேருக்குமே நான் தேவையில்ல... என் மேல பாசமில்ல"



"குட்டிமா ஏன்டா இப்பிடில்லாம் பேசற?"



"எத்தன தடவ கால் பண்ணேன்... ஒரு தடவ சரி திருப்பி கூப்டீங்களா?"



"சாரி"



"என் கூடாத பேசாதிங்கன்னு சொல்றேன்ல... பேசாதிங்க... நான் கோபமா இருக்கேன்" அவள் பட்டென துண்டித்து விட மீண்டும் மீண்டும் அழைத்தவன் தலையை அழுத்தக் கோதிக் கொண்டே வராண்டாவில் தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த மனைவியின் அருகில் வந்தமர்ந்தான்.



"நான் பேசட்டுமா மாமா?"



"அவ உன் மேலயும் கோபமா இருக்காளாம்.... பேச தேவயில்ல உங்க ரெண்டு பேருக்கும் என் மேல பாசமே இல்லன்னு சொல்றா" அவன் வார்த்தைகளில் அவள் முகம் சோர்ந்து போகவும் டாக்டர் அழைப்பதாக நர்ஸ் ஒருவர் வந்து சொல்லவும் சரியாக இருக்க மனைவியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் கதிர்.



"டேக் யூர் ஸீட்" அந்த நியூராலஜி மருத்துவர் இருக்கையை காட்ட அமர்ந்து கொண்டனர் இருவரும்...



"சொல்லுங்க?"



"நாங்க சென்னை... முக்கிய வேலையா கொல்கத்தா வந்திருக்கோம்..." அவன் அன்று நடந்ததை அப்படியே ஒப்பிக்க தலையாட்டிக் கேட்டுக் கொண்டவர் வர்ஷினியின் புறம் திரும்பி கேட்க



"உங்களுக்கும் அந்த வீட்டுக்கும் எந்த மாதிரி உணர்வு ஏற்படுது?" கணவனை ஏறிடவும் கண்களை மூடித் திறந்தவன் சொல்லுமாறு தலையசைத்தான்.



"அது எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமா இருக்கு... ஏதோ ஒரு சொல்ல முடியாத பந்தம் மாதிரி"



"எந்த மாதிரி நினைவுகள்?"



"அது... அது... என்ன யாரோ கூப்டுகிட்டே இருக்காங்க... அவங்க குரல கேட்டு கிட்டே இருக்கணும் போல இருக்கு..."



"மிஸ்டர். கதிர்.... சி.டி. ஸ்கேன் ஒன்னு எடுத்துட்டு முடிவ பாக்கலாம்" மனைவி தன் கையை அழுத்தவும்



"ஷூர் டாக்டர் " அவளுக்கு தானும் கைகளை அழுத்தி தைரியமளித்துக் கொண்டே சொன்னான்.



"ஓகே... லேட்ஸ் செக்.... " அவர் எழவும் அவளை அனுப்பி வைத்தவனுக்கு தாங்கள் நுழையும் போது அவளை அழைத்துக் கொண்டே நெருங்கிய டாக்டரிடமே எண்ணம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.



அவனுக்கும் அவரை தெரியாது தான்... ஆனால் அவர் பதற்றமும் மனைவியின் கண்ணீரும் சந்தேகத்தை கிளப்பி இருக்க மனைவியின் மனது குழம்பி விடக் கூடாது என்றதில் அவரிடம் பேசாமலே அழைத்து வந்து விட்டிருந்தவன் திரும்ப சந்திக்க முடிவெடுத்திருந்தான்.



.....



"ரிப்போர்ட் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடும் மிஸ்டர். கதிர்... அதுவர வெயிட் பண்ண முடியுமா?" அந்த வைத்தியர் கேட்க



"ஷூர்... பட் வெளில எனக்கு கொஞ்சம் வேல இருக்கு... அது முடிச்சிட்டு வந்தட்றேன்..." மனைவியை அழைத்துக் கொண்டு வந்தவன் அவளை காரில் ஏற்றி விட்டு



"வரு... நான் ரிப்போர்ட்ட வாங்கிட்டு வந்தட்றேன் டா.... பயப்படாம இரு... " அவள் சொல்ல வருவதை கேட்காமல் கதவை வெளியால் லாக் பண்ணியவன் நேரே ரிசப்ஷனுக்கு சென்றான்.



"மிஸ். மலர்..." அவளின் டாக்டர் கோர்ட்டின் ஓரத்தில் குத்தப்பட்டிருந்ததை தான் அவன் விழிகள் படம் பிடித்திருந்ததுவே!!!



((ஷ்ப்பாஹ்... இவ எப்போ என்ன பண்றான்னே புரிய மாட்டேங்குதேஏஏ))



"அபாய்ன்மென்ட் இருக்கா சார்?"



"ஸ்ரீ ன்னு சொல்லுங்க" அவர் வழியிலேயே மடக்க முயன்றான்.



"ஓகே சார் வெயிட்...." அழைப்பு எடுத்து நிமிர்ந்து



"செகண்ட் ப்ளார்ல கோனர் ரூம் சார்... யூ மே கோ" புன்னகைத்தாள் அந்த இளம் மாது.



"தேங்க் யூ... யூ ஆர் சோ பியூட்டிபுல்" ஒற்றை கண்ணை சிமிட்டி விட்டு அவன் செல்ல தலை குனிந்தாள் பெண்...



((அடேய் அடேய்.... உன்ன எந்த கேட்டகிரில சேக்குறதுன்னே தெரியலடா டேய்... ))



......



"எஸ்கியூஸ் மீ" அனுமதி வேண்ட



"கம் இன் கம் இன்" பரவசமாக உள்ளே அழைத்தவரின் கண்கள் வர்ஷினியை தேட



"அவ வர்ல மிஸ். மலர்" என்றான் உணர்ந்து...



"ஓஹ்..." இருந்த உட்சாகமெல்லாம் வடிந்து போனதுவோ???



"சாரி... டேக் யூர் ஸீட்..." அமர்ந்தவன்



"ஹூ இஸ் ஸ்ரீ?" நேரடியாகவே விடயத்திற்கு வந்து விட்டான்.



"சா.. சார்... "



"ப்ரண்டா பேசுங்க... எனக்கு என் மனைவி முக்கியம்... கொல்கத்தா வந்ததுலருந்து அவக்குள்ள நிறைய மாற்றம்... தன்னை வேறு பெயர்ல யாரோ அழைக்கிறதா சொல்றா... உங்கள பாத்து கண் கலங்கறா... இது எல்லாம் எதனாலன்னு எனக்கும் தெரில... பட் நீங்க அவள உரிமையோட பார்த்த பார்வைல தான் உங்க கிட்ட கேக்கறேன்.... ஹூ இஸ் ஸ்ரீ?" அவர் பதிலில் புன்னகைத்தவருக்கு அவன் காதல் புரிவதாய்...



"ஸ்ரீ... ஸ்ரீமதி நாராயணன்... தி சீப் டாக்டர் ஆப் தி நாராயணன் ஹாஸ்பிடல்"



தொடரும்....



14-08-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11 [ A ]



"ரித்விக் சார்... இப்போல்லாம் ஏன் எப்போ பாரு எதையோ யோசிச்சு கிட்டே இருக்கீங்க?" அக்கறையாய் வெளி வந்த பெண் குரலில் விரக்தியாய் சிரித்துக் கொண்டவனுக்கு சட்டென கண்கள் கலங்கிப் போயின.



"என்ன உயிரா நெனச்சவனுக்கு முதுகுல குத்திட்டேன்" மலுக்கென கண்ணீர் கண்ணத்தை தொடவும் பதறிப் போனாள் பெண்.



"ரித்விக் ப்ளீஸ்... " கையை இறுக்கப் பற்றிக் கொள்ள அவளை திரும்பிப் பார்த்தவன் கண்களை இறுக மூடி சாய்ந்து கொள்ள



"க.. கதிர் சார் தான் ப்ராப்ளமா?" யூகித்து கேட்டவளுக்கு அவன் பதிலளிக்காமல் போகவும் ஒரு முடிவுடன் எழுந்தவள் ஜன்னலோரமாக சென்று கதிருக்கு தானே அழைத்து விட்டாள்.



அவளுக்கு அவன் அழுகை என்னவோ செய்தது மட்டும் உண்மையிலும் உண்மை...



"கதிர் ஹியர்...."



"சா.. சார்.. நான் அர்ச்சனா "



"அர்ச்சனா... ஓ... எஸ்.. சொல்லு அர்ச்சனா எனி ப்ராப்ளம்?"



"சார் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க.... என்ன ப்ராப்ளம்னு கூட எனக்கு தெரில... பட் ரித்விக் சார என்னால இப்பிடி பாக்க முடில... ஏன்னு தெரியாம திடீர்னு அழறாரு... அவரு கண்ணீர என்னால தாங்க முடில... யார் கூட பிரச்சனன்னு தெரில சார் உங்க கிட்ட சொல்லலாம்னு தோனிச்சு... " அவள் நீளமாக பேசி முடிக்க மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.



ஒரு பெரு மூச்சுடன் அவனருகே வந்தவள் தயங்கித் தயங்கி அவன் முடியை கோத சட்டென விழி மலர்த்தி பார்க்க



"சா.. சாரி" துள்ளி விலக முற்பட்டவளை இடையோடு சேர்த்தணைத்து அவன் கதற விக்கித்துப் போனாள் பாவை...



"சார்... என்ன இது... கன்ட்ரோல்"



"முடிலயே அர்ச்சு... ரொம்ப வலிக்குதுடி.... அவன் கூட என்னால பேசாம இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும் விலகி போறானே... நான் பண்ண தப்புக்கு தண்டனன்னாலும் அத ஏத்துக்க அவன் விலகல் இடம் கொடுக்கலியே.... நான் வாய் விட்டு அழற மாறி அவன் அழ கூட மாட்டான்... அது நெனச்சா இன்னும் வலிக்குதுடி... அவன் எனக்கு என்னோட கிருஷ்ஷா வேணும்... ப்ளீஸ்.... " கதறி துடிப்பவனை கண் கொண்டு பார்க்க முடியாமல் அவள் கண்ணங்களிலும் கண்ணீர் வழிந்தது.



***



மனைவி வைத்தியர் என்பதை ஜீரணிக்கவே சில கணங்கள் பிடித்திருக்க தண்ணீரை அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு நிமிர்ந்தவனையே அர்ச்சனா அழைத்திருக்கவும் அவன் முகம் இறுகி சடுதியில் இயல்புக்கு திரும்பியதில் மனநல மருத்துவரான அவர் கண்கள் சட்டென பிரச்சனையென ஊகித்துக் கொண்டன.



"கதிர்... ரிலாக்ஸ் பர்ஸ்ட்... எந்த ஒரு ஒரு பிரச்சனைக்கும் விலகல் தீர்வு கெடயாது" அதிர்ந்து நிமிர்ந்தான் கதிர்...



எப்படி யூகித்தார்???



"ஐ அம் அ சைக்காட்ரிஸ்ட்...."



"ஓஹ்...."



"உங்க மனசுல நிறைய வலிகள் இருக்கு... அத நீங்க மறைக்க முயன்றாலும் உங்க கண்கள் காட்டி கொடுத்துடுது... "



"லீவ் இட்... வரு பத்தி பேசலாம்" எதிலிருந்தோ தப்பிக்க முயல்பவன் போல் இருந்த அவன் செய்கையில் புன்கைத்தார் வைத்தியர்.



"ஓகே... "



"உங்களுக்கு எப்பிடி வரு தான் ஸ்ரீனு தெரியும்... உருவ ஒற்றுமைல வேற யாராவது கூட இருக்கலாம் இல்லயா?" தன்னை சட்டென சமாளித்தவனின் மனத்திடத்தை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை அந்த மனநல மருத்துவரால் கூட....



"ஒரு நண்பனை பற்றி மற்றவர் சொல்லி தான் தெரியனுமா?"



"வாட்... அ.. அப்போ... நீங்க வரு ப்ரண்டா?" அதிர்ச்சி தாங்காமல் கத்தி விட்டாலும் அவரின் வார்த்தைகள் ரக்ஷன் நினைவில் சுருக்கென தைத்தது.



அவர் சொல்வதில் என்ன தப்பு???



அவன் நண்பனை பற்றி அவனுக்கு தெரியாதா???



ஆனால் அவன் செய்கையை மன்னித்து ஏற்கும் பரந்த மனப்பான்மை அவனுக்கு இல்லவே இல்லை...



அவனை பொறுத்தவரை நண்பன் செய்தது துரோகம்!!!



உண்மையில் துரோகம் தான்.... இக்கட்டில் செய்யப்பட்ட வலி நிறைந்த துரோகம்!!!



"எஸ்... நான் ஸ்ரீ ப்ரண்டு தான்" சட்டென கலைந்தான் காளை....



"அ.. அவளுக்கு எ.. என்னாச்சு?" தெரிந்தும் கேட்டான்.



"அவளுக்கு என்னையே தெரியலன்னா.... ஷீ இஸ் எ பேஷன்ட்" அவன் ஏற்கனவே யூகித்தது தான்... இருந்தும் வலித்தது.



"உங்க கூட அவ்வளவு க்ளோஸா?"



"ஷீ இஸ் மை பெஸ்ட் ப்ரண்ட்" அடுத்த அதிர்ச்சியா???



"...."



"டாக்டர் நாராயணன்ஸ் ஒன் என் ஒன்லி டாட்டர்... ஸ்ரீமதி நாராயணன்... சீப் டாக்டர் ஆப் திஸ் ஹாஸ்பிடல்... அவள போல ஒரு தைரியமான பொண்ண நான் என் வாழ்க்கைல பாத்ததே இல்ல"



((அட போமா... நண்பா தைரியம்னா என்ன விலைன்னு கேக்குறவள போய்... இவங்க வேற...))



அவனுக்கு தெரியும் இந்த ஹாஸ்பிடலின் பெருமை... அந்த அளவு தரம் வாய்ந்த வைத்தியர்களாலான வைத்தியசாலைக்கு மனைவி தலைமை மருத்துவராக இருந்திருக்கிறாளா???



அதுவும் தைரியமான பெண்ணாகவா???



அப்போது அவள் வாழ்க்கை???



"இன்பாக்ட்.... என்ன இந்த ஹாஸ்பிடல்ல சேத்து கிட்டது கூட அவ தான்"



"அப்போ இப்ப ஏன் இப்படி?"



"மே பீ அவளுக்கு மொத்தமாகவே எல்லாம் மறந்து போயிருக்கணும்"



"ஐ கெஸ்ட்....இதுக்கு சல்யூஷன்?"



"அவளுக்கு முதல்ல எல்லாத்தையும் ஞாபகப்படுத்தறா மாதிரி செய்யனும்"



"ம்... பட் ஹௌ...?"



"அவளுக்கு பிடிச்ச விஷயங்கள்"



"இப்போ இருக்க வருக்க எதுவும் பிடிச்சா மாதிரி எனக்கு தெரில.... " அவன் சிரிக்க அவளும் நகைத்தாள்.



"அவளுக்கு பிடிச்ச விஷயங்கள் நான் சொல்றேன் கதிர்... கதிர்னு கூப்புடலாம் இல்லையா? "



"என் பொண்டாட்டி தவிர அத்தனை பேரும் என் பேரு சொல்றாய்ங்க... ஹூம்.... அவள எப்பிடி கரெக்ட் பண்றதுன்னே தெரியல மலர்" அவன் கூற்றில் கலகலவென அவள் சிரிக்கத் துவங்க தானுமே பக்கென சிரித்தவன் மனம் இளகி இருந்தது.



"யூ ஆர் சோ ஹியூமரஸ் [[ humorous_ நகைச்சுவை ]] நான் கூட பேசவே மாட்டீங்களோன்னு நெனச்சிட்டேன்" பதிலுக்கு சிறு புன்னகையை பரிசலித்தவன் மேலே சொல்லுமாறு தலையசைத்தான்.



"அவளுக்கு மழைன்னா ரொம்ப ரொம்ப புடிக்கும்"



"அப்போ கடவுள மிரட்டிட வேண்டியது தான்"



"ஹாஹா... கதிர் என்னால முடில... " அவளால் சிரிப்பை அடக்கவே முடியாமல் போனதுவோ???



"வேற?"



"வெயிட்..."



"சிரிக்கறத நிறுத்திட்டு சொல்லுங்க டாக்டரு... என் பொண்டாட்டி பயத்துல நடுங்குவா அப்பறம்"



"பயமா... அவளா? "



"அவ தான் வேற யாரு?"



"அப்போ நிறைய மாத்த வேண்டி இருக்கும் போலவே"



"ம்.. எஸ்..."



"மருத்துவம்னா அத விட பிடிக்கும்"



"இப்போ நான் ஹாஸ்பிடலா கட்ட முடியும்" போலியாக முறைத்தாள் பெண்.



"ஹைகிங் புடிக்கும்"



"வாவ்... அப்போ ஒரு ஹனிமூன் போக வேண்டியது தான்.... "



"ஹாஹா... போங்க... அப்பவாவது மடங்குறாளா பாருங்க"



"ம்... "



"வகை வகையான சாப்பாடு டேஸ்ட் பண்றது புடிக்கும்"



"நோட்டட்... "



"அவ கூட எப்போவும் பேசி கிட்டே இருக்கறது"



"அப்போ நாம மட்டும் தான் பேசனும்... அவ வாயே திறக்க மாட்டா"



"அப்பிடி இல்ல கதிர்... நீங்க அவகிட்ட பேசினா தான் அவ ஆழ்மனசுல இருக்கற விஷயங்கள் தானா வெளியில வரும்"



"ம்... ஓகே... நாளைக்கு திரும்ப வர்றேன்... " சட்டென எழுந்தவன் நேரமாவது உணர்ந்து விடைபெற்று வெளியே வந்தான்.



.....



"ரிப்போர்ட்ல எந்த ஒரு இஷ்யூஸும் இல்ல மிஸ்டர். கதிர்" பெரு மூச்சு விட்டவன் அதையும் கொஞ்ச நேரம் அலசி விட்டு வர சீக்ரெட் போனில் மீண்டும் நாட்டிபிகேஷன் வந்து விழுந்தது.



"ஒன் தி வே டு கல்கத்தா"



உண்மையில் அதிர்ந்தது மனது... மனைவியை மாற்றுவது மட்டுமல்லாமல் அவன் வந்த வேலையை முடிக்கவும் வேண்டும்!!!



அவனுக்கு நேரம் அதி விரைவாகவே சென்று கொண்டிருப்பது அப்போது தான் உறைக்க யோசனையுடனே காரில் வந்து ஏறிக் கொண்டான்.



***



"ஆதி... இந்த பைல எதுக்கும் இன்னொரு காப்பி எடுத்து வெக்கலாம்" குமரனின் கூற்றில் சரியென தலையசைத்தவன் நேரே அதற்கான வேலையே முடித்து விட்டு வீட்டுக்கு போலிஸ் ஜீப்பை திருப்பினான்.



"கதிருக்கு அனுப்பி விட்டுடு.." குமரனின் கைகளில் பைலை கைகளில் திணித்து விட்டு உள்ளே நுழைந்தவனின் கண்கள் யாழினியின் அழுத முகத்தை கண்டு சட்டென இடுங்கியது.



ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தவள் அவனை காணாது எழுந்து உள்ளே செல்ல தானும் அவளுடனேயே நுழைந்தவன் கதவை தாழிட திடுக்கிட்டுத் திரும்பியவளுக்கு அபி என்றதும் தான் மூச்சே வந்தது.



"என்னாச்சு மாமா..."



"...."



"மாமா...." அவன் தன்னையே பார்த்திருப்பது கண்டு அவனருகில் சென்று முகத்துக்கு நேரே கைகளை ஆட்டியவளை சட்டென இழுத்து அணைக்கவும் அதிர்ந்து போனாள் பெண்.



"அபி மாமா... என்ன பண்றீங்க... விடுங்க" அவள் திமிறியதில் அவன் பிடி இறுக



"ஏன் அழுத?" சட்டென நின்று போனது அவள் துள்ளல்...



"ம்... சொல்லு பேபி... ஏன் அழுத?" அடக்கி வைத்திருந்த சோகம் திரும்பவும் பீரிட்டுக் கிளம்ப



"அண்ணாக்கு நா தேவயில்லாம போயிட்டேன்" குழுங்கி அழவும் அதிர்ந்து போனான் காதலன்.



"ப்ச் என்ன பேசற பேபி மா... அவனுக்கு வேலையா இருக்கும்"



"என்ன வேலையா இருந்தாலும் என் கூட பேச முடியாதா? ரொம்ப மோசம்... எனக்கு அண்ணாவ பாக்கனும்" சிறு பிள்ளைத் தனமான அவள் கோரிக்கையில் மானசீகமாக தலையிலடித்தவன் நண்பனிடம் பேச முடிவெடுத்தான்.



***



"மாமா... "



"ம்... என்ன வரு" காரை ஓட்டிக் கொண்டே மனைவியை திரும்பிப் பார்த்தான் கதிர்.



"டாக்டர் என்ன சொன்னாங்க?"



"உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையாம்"



"ம்..."



"ஆமா... இப்போ திடீர்னு மழ வந்தா என்ன பண்ணுவ?" அவன் கேட்டு முடிக்க வில்லை சட்டென பிடித்துக் கொண்டது மழை...



கொஞ்ச தூரம் ஓட்டிக் கொண்டிருந்தவன் அதற்கு மேல் முடியாதென சாலையோரமாக காரை நிறுத்த காருக்குள் போடப்பட்டிருந்த செயற்கை குளிரூட்டிக்கும் சேர்த்து அவள் உடல் நடுங்கத் துவங்க தான் போட்டிருந்த ஷர்ட்டை உடனே கலற்றியவன் அவளை சுற்றி போட்டு விட வெறும் பனியனோடு மட்டுமிருந்த அவன் நிலை பார்த்து சங்கடமாய் அவள் குனிந்து கொள்ள வாய் விட்டுச் சிரித்தவன்



"மழைன்னா புடிக்காதா உனக்கு?" என்றான் அவளை அறிந்து கொள்ளும் பொருட்டு....



"இல்ல எனக்கு பிடிக்கும்"



"ரொம்பவா?"



"ம்... ஆமா மாமா... ரொம்ப பிடிக்கும்" கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் அவளை சுற்றிப் போட்ட ஷர்ட்டை எடுத்து போட்டுக் கொண்டு இறங்க



"மாமா... எங்க போறீங்க... " அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் புறம் வந்து அவளை தூக்கி வெளியில் நிறுத்த முழுவதுமாக நனைந்து அதிர்ந்து போய் கனவனை ஏறிட்டவளுக்கு அவன் பார்வையில் உள்ளுக்குள் குளிரெடுத்தது.



"ஏ... ஏ... ஏன் அப்பிடி பாக்கறீங்க மாமா?"



"ம்..." கேட்டுக் கொண்டே அவளை நெருங்கி அவள் கை பிடித்து இழுக்க அவன் மேல் மோதியவளை இடையோடு வளைத்து அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைக்க கிறங்கி நின்றவள் தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை பிடித்து தள்ளி விட மோகம் அறுபட்ட கோபத்தில் அவளை முறைத்தவன் விறுவிறுவென சென்று காரிலேறி தடாலென கதவை அடைத்து விட்டு



"ஏறு..." உறும கண்களை இறுக மூடித் திறந்தவள் சட்டென ஏறிக் கொள்ளவும் உறும விட்டுக் கொண்டே கிளப்பினான் எ.ஸி.பி கிருஷ்ணா...



கணவனை பாவமாக திரும்பிப் பார்ப்பதும் ஏதோ பேச வருவதுமாக இருந்தவளை ஏறிட்டுக் கூட பார்த்தானில்லை அந்த ஆறடி ஆண்மகன்.



அதிவேகத்தில் வந்த வண்டி வீட்டின் முன் குழுங்கி நிற்க மீண்டும் ஏதோ பேசப் போனவளை கண்டு கொள்ளாமல் இறங்கி கதவை தடாரென அடைக்க கணவன் செய்கையில் கண்கள் சட்டென கலங்கிப் போயின பேதைக்கு....



ஏதும் பேசாமல் இறங்க அதற்குள் அவன் வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றிருக்கவும் அவனை சமாதானப்படுத்தும் வழியறியாது விக்கித்து நின்றவள் அவன் பின்னே தானும் உள்ளே நுழைந்தாள்.



.....



ஏனென்றே தெரியாத கோபம் அவனுக்குள்!!!



இதுவரை எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தவள் முதன் முறை அவனை எதிர்த்ததில் விளைந்த கோபமோ???



தலையை அழுத்தக் கோதிக் கொண்டிருந்தவனை பின்னாலிருந்து இறுக அணைத்திருந்தாள் மனைவி.



அவளிடமிருந்து வரும் முதல் அணைப்பு...



மனம் சட்டென இளகினாலும் பொய்க் கோபம் காட்டிக் கொண்டிருந்தது அந்த வளர்ந்த குழந்தை...



"ப்ச்..." கையை சட்டென தட்டி விட்டவன் திரும்பி நிற்க அண்ணார்ந்து பார்த்தவள் மீண்டும் அவனை கட்டிக் கொள்ள மன்னவன் முகத்தில் கீற்றாய் புன்னகை அரும்பியதோ???



"சாரி மாமா... ப்ளீஸ்...." அவனுள் அவள் ஒன்ற அப்போது தான் கவனித்தான் இருவரும் ஈரம் சொட்டச் சொட்ட நின்றிருப்பதை...



"போய் ட்ரஸ் மாத்து" தன் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல் சட்டென அவளை தள்ளி நிறுத்தி விட்டு குளியலறை புக அவன் கோபம் போய் விட்டது தெரியாமல் சோர்ந்தது பெண் முகம்...



சற்று நேரத்திற்கெல்லாம் அவன் வெளியே வர தலையை குனிந்து கொண்டே உள்ளே சென்றவளுக்கு பல எண்ண ஊர்வலங்கள்...



அவன் காதலை தெளிவாக சொல்லி விட்டான் தான்.... இருந்தும் அவன் உன்னை கோவிலில் பார்த்தேன் என்றதில் ஏற்கனவே குழம்பிப் போயிருந்த மனதிற்கு அவன் நெருக்கம் ஏனோ ஒரு வித நெருடலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.



அவனுடன் இருக்க வேண்டும் என வந்து விட்டாலும் அவன் நெருங்கி வரும் போது ஏனோ மனம் விலகிச் சென்று கொண்டே இருந்ததில் அதுவும் இந்த வீடு, அவளை வேறு விதத்தில் அலைகழித்துக் கொண்டிருக்க இன்று நடந்த சம்பவம் வேறு குழப்பத்தில் நிறுத்திவிட்டிருக்க அவனை பிடித்து தள்ளி விட்டாலும் அவன் கோபத்தில் தான் தன் செய்கையே புரிந்தது காரிகைக்கு....



அவனை ஏற்கு முன் அவளுக்கு நிறைய குழப்பங்கள் தீர வேண்டி இருந்ததுவும் ஒரு காரணம்...



பெருமூச்சு விட்டுக் கொண்டே தன்னை சுத்தப்படுத்தி விட்டு வெளியே வந்தவளை புருவம் சுருக்கி பார்த்தவன் அவளருகே சென்று சொடக்கிட திடுக்கிட்டு நிமிர்ந்து கணவனை ஏறிட்டாள் மாது.



"நா அன்னிக்கு அவ்வளவு தெளிவா எடுத்து சொல்லியும் உனக்கு என் மேலயோ என் காதல் மேலயோ நம்பிக்க இல்ல... ரைட்?"



'கடவுளே இவர் என்ன பேசுகிறார்' உள்ளம் திடுக்கிட நிமிர்ந்தவள் அவனை அடிபட்ட பார்வை பார்க்க



"பின்ன எதுக்குடி விலகி போற... அன்னக்கி நடந்த சம்பவத்துல இருந்து இப்பிடி தான் இருக்க... அன்னிக்கு என்ன நடந்துதுன்னு எனக்கு தெரிஞ்சாகணும்... ரைட் நவ்" அவள் கண்களை ஊடுருவியது அவன் கூர் விழிகள்.



"அப்போ நான் கேட்ட கேள்விக்கு உன் பதில் எஸ்... ரைட்?"



"ஏன் மாமா இப்பிடி பேசறீங்க...?" கண்களில் கண்ணீர் விழவா வேண்டாமா என கேட்டுக் கொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தவளின் கண்ணம் தாங்கி விழி நீரை துடைத்து விட்டவன்



"சொல்லு வர்ஷினி... என் மேல நம்பிக்க இருக்கா இல்லையா?" அவன் செய்கையில் அவள் நெஞ்சம் நெகிழு முன் விட்ட இடத்திற்கே வந்து நிற்க அவனையே பார்த்திருந்தவள் கண்களை இறுக மூடிக் கொண்டே எம்பி அவனிதழ்களில் தன்னிதழ்களை பொருத்த பெண்ணவள் இடையை சுற்றி வளைத்து இறுக்கியது ஆடவன் கைகள்....
 
Status
Not open for further replies.
Top