All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'என்னவளே' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26965


அத்தியாயம் 05 [ A ]



அவள் வார்த்தைக்காக மட்டுமே இன்று வரை பாதுகாப்பு கொடுத்தான் அவர்கள் மேல் கோபம் இருந்தாலும்.....



அந்த ஒற்றை சொல் தான் இன்று வரை அவர்களை தன் கண்கானிப்பில் வைத்திருப்பதற்கும் காரணம்...



அவளுக்காக செய்து விட்டான் ஆனால் தாயின் கடைசி ஆசை???



நிறைவேற்ற முடியாமலே போனதுவோ!!!



கண்கள் சட்டென கலங்க இமை சிமிட்டி அடக்கியவன் தன்னை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் பெரும் பாடு பட்டுப் போனான்.



இதற்கு மேல் முடியாதென தோன்றி விடவே கையை உயர்த்தி மணி பார்த்தவன் அது காலை ஐந்தை காட்ட ரித்விக்குக்கு அழைத்தான்.



அவன் "ரித்விக் ரக்ஷன்!!!"



"டிடெக்டிவ் ஏஜன்ட்"



"மச்சான்" தூக்க கலக்கத்தில் அவன் பேச



"ஹாஸ்பிடல் வா" வைத்து விட்டான்.



.....



"இவனுக்கு இதே வேலையா போச்சு" புலம்பித் தள்ளியவன் அடுத்த பத்தாவது நிமிடம் அவன் முன் நின்றிருந்தான்.



"டேய் என்னடா ஆச்சு...?" பதற்றமாய் கேட்க



"ப்ச் ஒன்னில்ல நீ இரு நா கிளம்புறேன்...." கண்டு கொள்ளாமல் சென்றவனை பார்த்து பெருமூச்சு விட்டவன் வர்ஷினியிடம் திரும்பினான்.



"இப்போ அபிக்கு எப்பிடி மா இருக்கு?"



"நல்லா இருக்காங்கண்ணா"



"சரி நீ இரு நா ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன்" ஆமோதித்தவள் ஓரமாய் அமர்ந்து கொண்டாள்.



***



நேரே வீட்டுக்கு வந்தவன் மேல் மாடியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறையை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.



வலப்பக்க சுவர் முழுதுமே குடும்ப புகைப்படங்கள் தான் மாட்டி வைக்கப்பட்டிருந்தன.



இடப்பக்க சுவற்றில் தந்தையினதும் தாயினதும் ஆளுயரப் படம்.



கை வளைவுக்குள் அடங்கியிருந்த மனைவி "சத்யநந்தினியை" சேர்த்தணைத்தவாறு நின்றிருந்தார் "அமைச்சர் ஷக்திவேல் கிருஷ்ணா."



விறைப்பாய் நின்றிருந்தவரின் முகத்தை கைகளால் வருடியவனுக்கு கண்களில் அருவியாய் கண்ணீர்.



தாயை பார்த்தான்.



அமைதியான முகத்தில் அவனுள்ளத்திலும் அமைதி ஏற்படுவதாய்....



"ப்பா....ஏன் பா என்ன அனாதையாக்கிட்டீங்க..... எவ்வளவு தான் மறக்க நெனச்சாலும் முடிலயேபா.... என்கிட்ட இத பத்தி ஏற்கனவே சொல்லி இருந்தா இப்போ என் கூட இருந்திருப்பீங்களே... வலிக்குதுபா.... என்னால யார் கூடவும் பேச கூட பிடிக்கல.... என்னால சகஜமா இருக்க முடிலபா.... ஏன்பா...." பார்வை தாயிடம் திரும்ப நடுங்கும் கை கொண்டு அவர் முகத்தை தடவினான்.



"ஐ மிஸ் யூ மா.... உங்க சாவுக்கு நியாயம் செய்யாத பாவிமா நான்.... என்ன மன்னிச்சிடுமா" அப்படியே கீழே அமர்ந்து விட்டவனின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தது அவன் காக்கி!!!



"எனக்கு நீ போலிஸ் ஆகணும்னு ஆச....நீ அதுல தான் கம்பீரமா இருப்ப" தந்தை குரல் காதில் ரீங்காரமிட இலக்கில்லாமல் அதையே வெறித்தான் கதிர்.



"எனக்கு அதை போட தகுதியே இல்ல" மனம் அரற்ற எழுந்து கொண்டு வெளியே செல்லப் போனவனை தடுத்தது அர்ஜுன் குரல்.



"டேய் கிருஷ் ஏன்டா என் உயிர வாங்குற.... தள்ளி படுடா எரும...." நாளா புறமும் பட்டுத் தெறித்த அண்ணன் குரலில் கண்களை இறுக்க மூடிக் கொண்டான்.



"டேய் அம்மா பாவம்டா பேசுடா" முகத்தை திருப்பி விட்ட கரத்தை தான் தட்டி விட்டது இன்று நெஞ்சில் நீங்கா நினைவலையாய்....



"போடா அந்த பக்கம் ஏன் தான் தம்பியா பிறந்தியோ.... அம்மா மடில நான் தான் படுத்துப்பேன்"



"நீ போய் அந்த எமன் கிட்ட படு போ" தான் தள்ளி விட தன்னை பார்த்து சிரித்த முகம் மின்னலாய்....



குரல்கள் அந்த அறையை நிறைக்க மனம் கனக்க வெளியே வந்து விட்டான் அவன்.



"அண்ணா" அடியாள் ஒருவனின் குரலில் படக்கென விழிகளை திறந்தவன் முகம் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது.



"என்ன?"



"இல்லணா ரித்விக் அண்ணா கால் பண்ணியிருந்தாங்க"



"நீ போ நா பாத்துக்குறேன்"



அவன் செல்லவே அத்தை வீட்டை சுற்றி பாதுகாக்க அனுப்பி வைத்தவர்களின் தலைவனுக்கு அழைத்தான்.



"அண்ணா"



"அஷோக்.... என்ன நடந்துது?"



"அண்ணா அவங்க வீட்டுக்கு சில பேரு வந்தானுங்க.... கேட்டதுக்கு ராம் ஐயா தான்னு சொன்னாங்கய்யா... அவர கொல்றதுக்கு அவரே எதுக்கு ஆள அனுப்புறாருன்னு எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம்ணா" மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில் தன் வலக்கை ஆள்காட்டி விரலையும் நடு விரலையும் சேர்த்து அழுத்தத் தேய்த்தவன் பெரும் யோசனையானான்.



அடித்து ஓய்ந்து மீண்டும் கேட்ட மொபைல் சிணுங்கலில் சட்டென அதை எடுத்தவனுக்கு அதில் ஒளிர்ந்த "குட்டிமா" எனும் பெயரில் இருந்த டென்ஷனெல்லாம் மாயமாய் மறைந்து போக அழகாய் விரிந்தன அவன் உதடுகள்!!!



போனை அடண்ட் செய்து காதில் வைத்தவன்



"குட்டிமா" என்றான் குரல் தழுதழுக்க....



"அண்ணா...." உற்சாகமாய் வந்து விழுந்த குரல் சட்டென தன்னை மீட்டுக் கொண்டான்.



"எப்பிடிடா இருக்க?"



"நா நல்லா ஹேப்பியா இருக்கேன்ணா நீ?"



"ம்....இருக்கேன்டா"



"அண்ணா என்னால இங்க இருக்க முடில....நா இன்டியா வர போறேன்" தங்கை சிணுங்க புன்னகைத்தான்.



"ஏன்ணா இத பத்தி பேசுனா மட்டும் அமைதியாகிட்ற?"



"...."



"அண்ணா ப்ளீஸ்...."



"வேண்டாம்"



"...."



"குட்டிமா அண்ணன் உங்க நல்லதுக்கு தானே சொல்லிட்டு இருக்கேன்"



"...."



"யாழ்"



"நா வெச்சிட்றேன்"



"ஹே இருடா இப்போ என்ன உனக்கு வரனும் அவ்வளவு தானே.... நாளை காலை ப்ளைட்டுக்கு டிக்கட் போட்றேன் வந்துடு"



"நிஜமாவா???"



"ஆமாடா"



"ஹே..." அவள் துள்ளிக் குதிக்க மீண்டும் புன்னகை அவனுள்...



"சரிணா அப்போ நா ரெடியாகுறேன்.... அப்பறமா பேசுறேன்ணா...பய்...உம்மா...."



"பய்டா..." கட் பண்ணியவன் ரக்ஷனுக்கு அழைத்தான்.



***



"இத சாப்புடு மா" வர்ஷினிக்கு கொடுத்து விட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.



"இத சாப்புடு" வேறெங்கோ பார்த்த படி நீட்டிய நண்பனை பார்த்து அவன் முகம் சோர்ந்தது.



"ப்ச்...." எரிச்சலாக திரும்பியவன் அவன் முக வேதனை கண்டு அவனையே பார்த்தான்.



"ஏன் மச்சி உனக்கு கூட என் மேல நம்பிக்க இல்லாம போச்சு... நா என்னடா பண்ணேன்?"



"...."



"விடு....எனக்கு பசியில்ல" அவன் கண்களை மூடவும் சேரை இழுத்துப் போட்டு அவன் அருகில் அமர்ந்தவனின் போன் அலறவும் சரியாக இருந்தது.



"சொல்லு கிரு....ஐ மீன் கதிர்"



"...."



"சாரிடா நா ஏதோ ஞாபகத்துல சொல்லிட்டேன் சாரி"



"நாளைக்கு காலைல யாழினி வர்றா"



"வாட்....என்னடா சொல்ற?"



"அதுக்கான வேலைய பாரு"



"ஷூர் மச்சான்....பட் இந்த நேரத்துல...."



"பாத்துக்கலாம் டா"



"ஓகே டா"



"அவன் எப்பிடி இருக்கான்?" திரும்பி அபியை பார்க்க அவன் குழப்பத்துடன் இவன் முகத்தை பார்த்திருந்தான்.



"இப்போ பரவால்லடா" அவன் சொன்ன பதிலில் தான் மறுமுனையில் என்ன கேட்கப்பட்டிருக்கும் என யூகித்தவனின் உதடு சிரித்தது.



"ம்....பத்தரமா பாத்துக்கோ"



"ஏன் நீயே வர வேண்டியது"



"நா வெச்சுட்றேன்" பட்டென துண்டித்து விட பல்லை கடித்தான் ரக்ஷன்.



"சாப்புடு"



"எனக்கு வேண்டாம்"



"ப்ச்....ஏன் அடம் புடிக்கிற?" ஒரு வாய் தொட்டு அவன் வாயருகே கொண்டு செல்ல அவன் கண்கள் சட்டென கலங்கிற்று.



"வாங்கிக்கோடா" இம்முறை மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.



ஊட்டி விட்டு எழுந்து சென்று கை கழுவி விட்டு வந்தவன்



"நாளைக்கு யாழினி வர்றாளாம்" என்றான் அறிவிப்பாய்....



விலுக்கென நிமிர்ந்தவனின் கண்களில் அத்தனை ஒளி!!!



"நிஜமாவாடா?"



"நா எதுக்கு பொய் சொல்லணும்... சரி நா அப்பறமா வர்றேன்... அத்தை வந்துட்டாங்கன்னு நெனக்கிறேன் பை"



"சாரி மச்சான்" கதவருகே நின்றவனின் நடை ஒரு நிமிடம் நின்று திரும்பவும் தொடர்ந்தது.



"அத்....ஐ மீன் நா சின்ன வேலையா பொய்ட்டு வந்துட்றேன்"



"ரொம்ப நன்றிபா" கையெடுத்து கும்பிடப் போனவரின் செயலை சட்டென நிறுத்தினான்.



"என்ன பண்றீங்க அத்த....?"



"...."



"சரி நா வர்றேன்" அவருடன் பேச தயங்கி நகரப் போனவரை நிறுத்தியவர்



"அம்முவையும் வீட்ல விட்டுடு பா" என்றார் இறைஞ்சுதலாய்....



"அம்மா நா...."



"இல்ல அம்மு நீ போ நா பாத்துக்குறேன்"



"சரி மா" தலையசைத்தவள் அவனுடன் இணைந்து நடந்தாள்.



***



அந்த பழைய தொழிற்சாலையின் நடுவே காலுக்கு மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தான் கதிர்.



அவனுக்கு பக்கபலமாக சிலரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அடியாட்களும் நின்றிருக்க அவன் முன்னே இரு கைகையும் உயர்த்தி கயிற்றில் கட்டப்பட்டிருக்க தொங்கியவாறு வரிசையாக கட்டி வைக்கப்பட்டிருந்தனர் ராஜா ராமையும் ஆதர்ஷையும் தாக்க வந்தவர்கள்!!!



இரு முழங்காலிலும் கை குற்றி எழுந்தவன் போட்டிருந்த சன் க்ளாஸை கலற்றி ஸ்டைலாக பின்னால் சொறுகினான்.



மெதுவாக அவர்கள் முன் வந்து நின்று மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டவன் அவர்களை கூர்ந்து பார்த்தான்.



"வர்மா..."



"பையா..."



"தண்ணி எடுத்துட்டு வந்து இவனுங்க மூஞ்சில ஊத்து" அவன் வார்த்தை உடனே நிறைவேற்றப்பட அப்பொழுது தான் கண்களை மெதுமெதுவாக திறந்து கொண்டனர் ஒவ்வொருவரும்....



தம் முன்னால் சற்றே கால்களை அகற்றி மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தவனை பார்க்க மரண பயம் கண்களில் அப்பட்டமாய்....



"அண்ணா நாங்க பண்ணலண்ணா" அவன் வாய் திறக்க மாட்டான் என தெரிந்து பயத்தில் உளறினான் ஒருவன்.



"...."



"அண்ணா அய்யா தான்...." அவன் பார்த்த பார்வையில்



"வந்து ராம் அய்யா தான்" திருத்தி சொல்லி விட்டு எச்சில் கூட்டி விழுங்கினான் இன்னொருவன்.



"சத்தியமா ராம் ஐயா தான்ணா ப்ளீஸ் எங்கள விட்டுடு" கதிரிடம் ஏற்கனவே வாங்கி கட்டிக் கொண்ட ஒருவன் இப்பொழுது....



"ராமோட முழு பெயர் என்ன?" அனல் தெரித்தது அவன் குரலில்.



அவர் எக்காரணம் கொண்டும் இது பற்றி வாயை திறக்கக் கூடாது என்றிருந்ததால் சட்டென வாயை மூடியிருந்தனர் அனைவரும்....



உதட்டை ஏளமாக வளைத்தவன் வர்மனுக்கு கண் காட்ட எங்கோ சென்று விட்டு மீண்டு வந்தவனின் கைகளில் ட்ரில்லர் மெஷின் இருந்தது.



***



ஹாஸ்பிடல்....



ரிசப்ஷனில் பதற்றமாய் வார்ட் இலக்கத்தை கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு பெண்....



பாவாடை தாவணி; அதை அவள் மெனக்கெடுத்து அணிந்ததாகவே தெரியவில்லை....



கூந்தலும் ஏனோ தானோவென்றிருக்க அவள் முகத்தில் வேதனையின் சாயல்....



"ஓகே தேங்க்ஸ்" பதற்றமாகவே பதிலளித்தவள் இலக்கத்தை சரி பார்த்துக் கொண்டே ஓடி வர முன்னால் வந்து கொண்டிருந்த ரக்ஷன் மீது மோதி நின்றாள்.



தன் மேல் மோதி விழப்போனவளை பிடித்து நிறுத்தினான் ரக்ஷன்.



"ச....சா...ரி சார்..." அவள் முகத்தில் அதீத பதற்றம்.



"ஹே ரிலாக்ஸ்.... இட்ஸ் ஓகேங்க" சொன்னவன் வர்ஷினியுடன் கிளம்ப மறுபடியும் வேகமாக நடக்கத் துவங்கினாள் அந்தப் பெண்.



"அண்ணா...."



"என்னமா....?" நடந்து கொண்டே கேட்டான்.



"இல்ல....மாமா வீட்ல இருப்பாங்களா?"



"ம்...ஆமான்னு தான் நெனக்கிறேன்"



"அப்போ நாம கொஞ்ச நேரம் கழிச்சு போலாமா?" அவள் கேள்வியில் அப்படியே நின்று விட தானுமே நின்று விட்டாள்.



"ஏன்?"



"எனக்கு பயமா இருக்கு... அவங்களுக்கு என்ன பிடிக்கலணா" கண்ணின் ஓரம் ஈரம் அவளுக்கு....



"ப்ச்...அப்பிடில்லாம் எதுவுமில்ல வர்ஷினி...."



"இல்லணா எனக்கு தெரியும் அவங்களுக்கு ஏனோ என்ன பிடிக்கல... என் குடும்பத்தயும் பிடிக்கல.... ஆனா.... அம்மாப்பா அண்ணா எல்லோரும் ஏன் அவங்க மேல கோபம் காட்ட கூடாதுன்னு சொல்றாங்கன்னு தான் புரில"



"அத விடுமா"



"அவங்கள நான் மாமான்னு கூப்புட கூடாதுன்னு சொல்றாங்க" அவனுக்கு புரிந்தது நண்பன் மனம்....



"பட்...அம்மா தான் அவங்க எனக்கு மாமான்னு சொல்லி இருக்காங்க" இவளுக்கு என்னவென்று சொல்ல???



மலைப்பாக இருந்தது அவனுக்கு....



"இத அப்பறமா பேசிக்கலாம் மா.... இப்போ கெளம்பு" அவன் நடக்க தயக்கத்துடனேயே பின்னால் சென்றாள் அமிர்தவர்ஷினி.



......



"நீ போ மா....எனக்கு வேலை இருக்கு" கிளம்ப முற்பட்டவனை பார்த்து பரிதாபமாக விழித்தாள் மாது.



"இல்லணா நீங்களும் வாங்க ப்ளீஸ்"



"எனக்கு அர்ஜன்ட் வேல இருக்குமா... நீ போ அவன் இருக்க மாட்டான்"



"நிஜமா?"



'பாவி....பொண்டாட்டி உள்ள போக பயப்பட்ற அளவுக்கு நடந்துகிட்ருக்கான்... குட்டிமா வந்தா தான்டா நீ திருந்துவ'



"ஆமா மா....அவன் இருக்க மாட்டான் நீ போ"



"ம்..." பயந்த படியே சென்றவளை பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டான்.



***



"அதான் பையா (Bhaee_ Hindi- அண்ணன்) கேக்குறாங்கல்ல சொல்லுடா" கதிர் அமர்ந்திருக்க அவனுக்கு பதிலாக கேட்டுக் கொண்டிருந்தான் வர்மன்.



"இப்போ சொல்ல போறியா இல்ல இந்த புல்லட்ட உன் வாய்க்குள்ள இறக்கட்டுமா?" அதீத கோபத்தில் எகிறியவனை கையமர்த்தி தடுத்தவன்



"விடு வர்மா..." சட்டென எழுந்து கொண்டான்.



"ஆனா பையா...."



"விடு பாத்துக்கலாம்.... இன்னைல இருந்து மூணு நாளைக்கு பச்ச தண்ணி கூட கொடுக்காத" கூறி விட்டு நடந்தவனின் முகம் இறுகி இருந்தது.



தாய் தந்தை தமையன் என யாருக்குமே நியாயம் செய்ய வில்லையே என்றதிலிருந்து வந்த இறுக்கம் அது.



"வர்மா வண்டிய எடு" ஜீப்பின் மறு பக்கத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.



***



வீட்டுக்குள் நுழைந்தவள் கண்களை நாளா புறமும் சுழற்றி அவன் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு ஆசுவாச பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.



அது ஏனோ அவனை பார்த்தாலே உதற ஆரம்பிக்கும் உடல் அவனருகில் இருந்தாள் பாதுகாப்பையும் உணர்ந்து கொள்கிறது.



சோபாவில் அமர்ந்து கொண்டவளுக்கு உறக்கம் கண்ணை கட்டியது.



ஆனாலும் அப்படியே படுத்து விட முடியாதே....அவளிருப்பது நடு ஹால்....



யாராவது வந்து விட்டால்???



கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டவளுக்கு எங்கே சென்று உறங்குவது என்று கூட தெரியவில்லை....



மூடிய விழிகளுக்குள் அவன் தன் முன் செய்த கொலை படமாய் விரிய தூக்கி வாரிப் போட எழுந்தமர்ந்தவளுக்கு தூக்கம் பறந்து விட்டிருந்தது.



அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தவள் அரவம் கேட்டு நிமிர அவன் தான் நின்றிருந்தான் வாசலில்....



சட்டென எழுந்து கொண்டவள் எச்சிலை கூட்டி விழுங்கினாள்.



"மேல போயி படு" தன்னிடம் தான் பேசினானா....???



ஆச்சரியம் தாளவில்லை அவளுக்கு...



"உன்ன மேல போய் படுன்னேன்..." என்றான் சற்றே அழுத்தி....



"மே....மே...லன்னா எ...ங்க மாமா" அவள் விழிப்பில் அவன் முறைக்க



"சா...சாரி மாமா" என்றாள் அவசரமாக....



அதற்கும் முறைத்தான்.



"சாரி..." குனிந்து கொண்டாள்.



"மேல என் ரூம்ல"



"உ...உங்க ரூம்லயா?" உண்மையிலேயே அவளுக்கு பயமாகத் தான் இருந்தது.



"வேற யாரோட ரூம்ல படுக்குறதா இருக்க?"



"அ...அது...."



"ப்ச்...வா" என்றவன் மேலேறிச் செல்ல இவளுக்குத் தான் கால்கள் பிண்ணிக் கொண்டது.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த நாள் காலை.....



ஏர்போர்ட்.....



ஜீன்ஸ் பேண்ட் குதிரை வால் கொண்டை குழந்தை தனமான முக லக்ஷனத்துடன் வெளியே வந்து கொண்டிருந்தாள் பாவை....



"அவள் யாழினி!!!"



"யாழினி கிருஷ்ணா!!!"



.......



தங்கையை கண்டதும் இறுகி இருந்த அவன் முகம் கனிந்தது.



இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவன் வேட்டி நுனியை இடது கையால் பிடித்துக் கொண்டே அவளை நோக்கி நடந்தான்.



"அண்ணா" அவளை கண்டு கொண்டவள் முகம் விகசிக்க கத்தவும் மெலிதாய் சிரித்தவன் தூரத்திலிருந்த காரை கண் காட்டி விட்டு நகர முகம் அப்படியே கூம்பிப் போனது அவளுக்கு...



அவளை வருந்த வைக்க அவனொன்றும் வேண்டுமென்று செய்யவில்லையே...



அவன் சூழ்நிலை அப்படி....



யாழினி உயிரோடு இருக்கும் விடயம் யாருக்கும் தெரியாமல் இருக்க அவளுக்கு அவன் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருந்தது.



இழந்த மூன்று உயிர்களால் அனுபவிக்கும் வலி போதாதா???



ட்ரைவரை தவிர்த்து தானே வண்டியை எடுத்துக் கொண்டு வந்திருந்தவன் எதுவும் காட்டிக் கொள்ளாமல் சென்று ஏற மறுபக்கத்தில் வந்து ஏறினாள் யாழினி.



முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வருபவளை திரும்பி பார்த்து புன்னகைத்தவன் சாலை ஓரமாக காரை நிறுத்தினான்.



இவ்வளவு வருடம் கழித்து வந்திருக்கிறாள்....



அப்போதும் கூட தன்னை கண்டு கொள்ளாது இருக்கும் அண்ணன் மீது அப்படி ஒரு கோபம் அவளுக்கு....



அவனுக்கு தெரியும் அவன் ஒரு வார்த்தையே அவளை சமாதானப்படுத்த போதுமென்று....



கைகள் கட்டப்பட்ட நிலையில் அல்லவா இருக்கிறான் அவன்....



"குட்டிமா.... யாழ்...ஐ அம் சாரிடா"



"...."



"அண்ணனுக்கு உன்னையும் இழக்குறதுக்கு மனசுல தெம்பு இல்ல குட்டிமா" அவன் குரல் கரகரக்க கண்களில் கண்ணீருடன் அண்ணனை அணைத்திருந்தாள் தங்கை...



"சாரிணா...."



"உன் மேல தப்பு இல்லடா" கூந்தலை வருடியவன் வெளிவரத் துடித்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.



"ஷ்...அழ கூடாது... அதான் அண்ணன் இருக்கேன்ல" தன் கரம் கொண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டவன் பாசமாய் நெற்றியில் இதழ் பதித்தான்.



"ணா....அத்தை வீட்டுக்கு போலாம்" அவள் வார்த்தைகளில் அவன் முகம் சிரிப்பை தொலைத்தது.



"நாளைக்கு போலாம்டா"



"ம்...சரிணா" கஷ்டப்பட்டு சிரித்தவன் வண்டியை எடுத்தான்.



***



கொட்டாவி விட்டபடியே எழுந்தமர்ந்தாள் காரிகை.....



மணியை பார்க்க எட்டு என காட்டவும் படக்கென எழுந்தமர்ந்து கொண்டாள்.



'இவ்வளவு நேரமா தூங்கிட்டேனா.... மரமண்ட... இப்பிடியா நேரம் காலம் தெரியாம தூங்குவ' தனக்கே கொட்டிக் கொண்டவள் அப்போது தான் கட்டிலில் படுத்திருப்பதையே உணர்ந்தாள்.



........



அவள் குளித்து முடித்து கீழே வரவும் வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.



'அய்யய்யோ வந்துட்டாங்களா.... பசிக்குதே....இப்போ என்ன பண்றது' வாசலை பார்த்துக் கொண்டே மனதிற்குள் நினைத்தவள் அப்படியே நின்றாள்.



தங்கையுடன் உள்ளே நுழைந்தவனுக்கு அப்போது தான் தன் மனையாள் ஞாபகமே வந்தது.



அவன் தான் தனக்கு திருமணம் ஆனதையே மறந்து விட்டு திரிந்து கொண்டிருக்கிறானே



இதில் எப்படி தங்கையிடம் கூறி இருப்பான்???



அதிர்ந்து தங்கையை நோக்க அவளோ குழப்பத்துடன் தன் வீட்டில் இருந்த பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தாள்.



"யாருணா இவங்க?"



"அ....அ....அது வ...வந்து குட்டிமா...."



"அவன் பொண்டாட்டி குட்டிமா" முடித்து வைத்த ரக்ஷனை முறைத்தான் கதிர்.



அவளுக்கோ அவனுக்கு தங்கையா என்ற அதிர்ச்சி ஒரு புறமென்றால் அவன் தங்கையிடம் பயந்தது வேறு....



"வாட்.... என்ன ரக்ஷன் அண்ணா சொல்றீங்க நா நம்ப மாட்டேன்"



"அப்போ இவங்க யாரா இருக்கும்னு நினைக்குற?"



"அது...." என்றவளுக்கும் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருக்க அண்ணனை கேள்வியாய் பார்த்தாள்.



கண்களை இறுக்க மூடித் திறந்தவன்



"ஆமாடா ரக்ஷன் சொல்றது உண்மை தான்" என்றான் தயக்கத்துடன்....



வருடங்கள் கழித்து அவன் அழைப்பில் ரக்ஷனுக்கு கண்கள் சட்டென கலங்கியது.



"ஏன்ணா என்கிட்ட மறைச்சீங்க.... என்ன மறந்துட்டீங்களா?"



"ஹே குட்டிமா அப்பிடி இல்லடா நா...."



"எதுவும் பேசாதீங்க" அவனை கை நீட்டி தடுத்தவள் உள்ளே சென்று மறைய தலையை அழுத்தக் கோதிக் கொண்டவன் நண்பனை முறைத்தான்.



"என்ன எதுக்குடா முறைக்குற?"



"உன்ன...." பல்லை கடித்தவன் கையை ஓங்க மிரண்டு விழித்தாள் மாது.



மெதுவாக கைகளை கீழே இறக்கியவன் தங்கையை தேடிச் செல்ல ரக்ஷனுக்கு முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு....



'மவனே எங்களயா படுத்துற.... இப்போ ரெண்டு பொண்ணுங்க கிட்டவும் மாட்டிகிட்டல்ல.... நல்லா அனுபவி'



ஹாஸ்பிடல் கிளம்பிச் செல்ல இவள் தான் நடுவில் குழப்பமாய் நின்றிருந்தாள்....



இருப்பதே ஒரே ஒரு சொந்தம்....



அந்த சந்தோஷமான தருணத்தில் கூட தான் இல்லையே தனக்கு தெரியப்படுத்தி இருக்கலாமே....



பலவாறான சிந்தனை ஓட்டத்தில் தொண்டை அடைக்க அழுது தீர்த்து விட்டாள்.



அருகில் கை கட்டி நின்று கொண்டிருந்தவனுக்கும் எப்படி சமாதானப்படுத்தவென்றே தெரியவில்லை....



அவனென்ன ஆசை பட்டா முடித்தான்...



பழிவாங்கவல்லவா முடித்துத் தொலைத்தான்....



ஆம் அவன் பழிவாங்கத் தான் முடித்தான்!!!



அதை விட அவளை சித்திரவதை செய்து அவர்கள் குடும்பத்திற்கு வலியை கொடுக்க வேண்டுமென்று முடித்தான்.



ஆனால் இதுவரையில் அதற்காக யோசிக்க கூட முடியாமல் இருந்தது தான் விந்தை!!!



"நான் உங்களுக்கு தேவயில்லாம பொய்ட்டேனாணா?" அவள் கண்ணீரில் துடிதுடித்துப் போனவன் சட்டென மண்டியிட்டு அமர்ந்தான்.



"ஏன் குட்டிமா இப்பிடில்லாம் பேசுற?.. எனக்கு என் உயிர விட நீதானேடா முக்கியம்... நா வேணும்னு அப்பிடி பண்ணி இருப்பன்னு நீ நெனக்கிறியா?"



"...."



"நம்புடா....சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்துடுச்சு... இப்பிடில்லாம் பேசாதடா....அண்ணனுக்கு ரொம்ப வலிக்குது" அவள் கழுத்தை கட்டிக் கொண்டு மீண்டும் அழுதாள்.



அவள் முதுகை ஆதரவாய் வருடியவனுக்கு ஏன் தான் இந்த விடயத்தை மறைத்தோம் என்றாகிவிட்டது.



"குட்டிமா அழாதடா... நீ அழுதா அண்ணன் தாங்குவேனா சொல்லு"



"...."



"சாரிடா...தப்பு தான்... நா என்ன பண்ணா இப்போ அழறத நிறுத்துவ?" கெஞ்சினான் அவளிடம்.



அவன் அவனாக இருப்பது அவளிடம் மட்டுமே!!!



"குட்டிமா ப்ளீஸ்..."



அவன் அமைதியாகி விட கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவள் வாசலில் அதிர்ந்து போய் நின்றிருந்த அண்ணியை பார்த்து புன்னகைத்தாள்.



அவளுக்கு அது கூட கருத்தில் பதியவே இல்லை....



கணவன் முற்றிலும் மர்மமாக தெரிந்தான் பேதையின் கண்களுக்கு!!!



'இது தான் இவங்க சுபாவமா.... அப்போ ஏன் வெளியில அப்பிடி இருக்காங்க' என்ன முயன்றும் பதில் தான் கிடைக்கவே இல்லை....



"வாங்க அண்ணி" கைபிடித்து இழுக்க பொம்மை போல் வந்தமர்ந்தவளை பார்த்து தன் ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் சேர்த்து வைத்து நெற்றியில் தேய்த்தவன் விறுட்டென வெளியேறி விட்டான்.



"அண்ணி.....அண்ணி....என்னாச்சு?" பிடித்து உலுக்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பெண்.



"என்னாச்சு?"



"ஒ....ஒ...ஒன்னில்ல"



"அப்போ ஏன் பயந்தா மாதிரி இருக்கீங்க?"



"அ...அ...அது...அது...."



"என்னண்ணி...?"



"இல்ல ஒன்னில்லமா...." கொஞ்சம் தெளிவாக பேசவும் தான் கேள்வி கேட்பதை நிறுத்தினாள் அவன் தங்கை....



"உன் பேரு?" தயக்கம் தான்.... இருந்தாலும் கேட்டே விட்டாள்.



"அண்ணா என் பேரு கூட சொல்லலியா உங்களுக்கு?"



'ம்கும்.... அவங்க பாத்தாலே உடம்பே உதறுது....இதுல எங்க இருந்து பேசறது'



"இ...இல்ல..."



"சரியாப்போச்சு.... என் பேரு யாழினி... யாழினி கிருஷ்ணா"



"ம்...."



"எதுவுமே பேச மாட்டிங்களாண்ணி... அண்ணா கிட்டவும் இப்பிடி தான் இருப்பீங்களா.... அது சரி அவன் தான் உங்களுக்கும் சேத்து வெச்சி பேசுவானே"



'என்னாஆஆஆஆதூஊஊஊஊ' அலறியே விட்டாள் பெண்.



((அட மனசுக்குள தாங்க))



"அத்தை மாமா அப்பறம் அபி மாமால்லாம் எப்பிடி இருக்காங்க?"



"ம்...நல்லா இருக்காங்க" ஏனோ அண்ணன் நிலையை அந்த சிறு பெண்ணிடம் சொல்ல மனம் இடம் கொடுக்காததால் மறைத்து விட்டாள்.



"நாம அத்த வீட்டுக்கு போலாமாண்ணி.... அண்ணா கிட்ட கேட்டா நாளக்கு போய்க்கலாம்னு சொல்லிட்டாங்க"



'அப்போ இவங்களுக்கு யாழினி அங்க போறதும் பிடிக்கல... ஆனா ஏன்?' மண்டை காய்ந்தது.



"அண்ணி...."



"ஹாங்...."



"திடிர் திடீர்னு கனவுக்கு டூயட் பாட போயிட்றீங்களா?"



'ஆத்தி....டூயட் ஆஆஆ???' மனதிற்குள் அலறியவள் வெளியே சமாளிப்பாய் சிரித்து வைத்தாள்.



"பேசவே மாட்டேங்குறீங்க"



"அ...அது..."



"சரி அண்ணா உங்க கிட்ட கோபப்படுவாறா?"



'நீ என் கிட்ட உங்கண்ணா அன்பா பேசுவாரான்னு கேட்டிருக்கணும்'



"இல்ல...ஏன் கேக்குறேன்னா.... அண்ணா கோபப்பட்டு நா பாத்ததே இல்ல அதான்" அவள் வார்த்தைகளில் அவள் ஏனோ தன்னிடமும் அப்படியே நடந்து கொண்டால் என்னவென நினைக்கத் தோன்றியது பேதைக்கு!!!



"இ...இல்ல கோபப்படமாட்டாரு" தங்கையாகவே இருந்தாலும் அவனை விட்டுக் கொடுக்க முடியவில்லை அவளால்....



அவள் பதிலில் நிம்மதியாய் புன்னகைத்தவள்



"அப்போ நா ப்ரஷப்பாகிட்டு வந்தட்றேன்.... அப்பறமா பேசலாம்" எழுந்து குளியலறை செல்ல தானும் வெளியேற திரும்பியவள் அறை வாசலில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தவனை பார்த்து மிரண்டு விழித்தாள்.



"எதுக்கு பொய் சொன்ன?" கேட்டுக் கொண்டே அழுத்தமான காலடிகளுடன் முன்னே வர பயத்தில் பின்னால் நகர்ந்து கொண்டே போனாள் பெண்.



"அ...அது...அது... மாமா..."



"ம் சொல்லு.... எதுக்காக பொய் சொன்ன?" மேலும் நகர முடியாமல் சுவர் தடுக்க பல்லி போல் ஒட்டி விட்டாள்.



"சொல்லு"



"இ...இல்ல மாமா நா..."



"ப்ச் அப்பிடி கூப்புடாதடி" உறுத்து விழித்தான்.



"சா....ரி மா...மா"



"ப்ச்...." ஆத்திரமாய் அவள் இரு பக்கமும் கைகளால் சிறை செய்ய கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.



"சொல்லுன்னு சொல்றேன்ல"



"...."



"இப்போ நீ சொல்லல...."



"அ...அது...அது...யா... யாழினி உ...உங்கள த...த... தப்பா...."



"அவ தப்பா நெனச்சா உனக்கென்ன?" இதற்கு என்னவென்று விளக்கம் கூற???



"சொல்லு அவ தப்பா நெனச்சா.... உனக்கு..... என்ன?" நிறுத்தி நிதானமாக கேட்டான்.



"சா...ரி மாமா"



"நா கேட்டதுக்கு இது பதில் இல்லயே... ஓஹ் உன்ன இப்பிடியெல்லாம் நடிக்க சொல்லி உன் அப்பன் சொல்லி கொடுத்தானா இல்ல உன் நொண்ணன் சொல்லி கொடுத்தானா?" தேளாய் கொட்டிய வார்த்தைகளில் அவள் கண்கள் சட்டென கலங்கிற்று....



"ப்ச் அழாதன்னு சொல்லி இருக்கேன்ல" அதட்டலாய் கேட்டதில் பொங்கி வந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு உதடு துடிக்க அவனை பாவமாய் ஏறிட்டாள்.



அவள் உதடுகளில் நிலைத்த வினாடி நேரப் பார்வையை சட்டென விலக்கியவன் அவளை விட்டு விலகி நின்றான்.



"சாரி மாமா...." அவள் அழைப்பில் அவள் மீண்டும் முறைக்க பயந்து போனாள் பாவை...



"சாரிங்க..." அழுகையை அடக்க இதழ் கடித்தவளின் அதரங்கள் மறு நிமிடம் அவன் அதரங்களுக்குள் பொருந்தி இருக்க அவள் கண்கள் சாஸர் போல் விரிந்து கொண்டன.



***



"டேய்......" கத்திக் கொண்டே தன் முன்னால் இருந்த மேசையை காலால் உதைத்தார் அவர்.



" ராம்!!!"



"ராமலிங்கம்!!!"



"அ...அய்யா நாங்களும் எவ்வளவோ போறாடினோம்யா"



"என் ஆளுங்க அவன் கிட்ட இருக்க வர ஆபத்து.. அவன் குடும்பத்த அழிக்குறேன்" வேட்டை நாயின் பளபளப்பு அவர் கண்களில்....



"நாளைக்கு அவன் பொண்டாட்டியயும் அவன் கூடவே ஒட்டிகிட்டு சுத்திட்ருக்கவனையும் தூக்குங்கடா..... எவன முதல்ல காப்பாத்துறான்னு நானும் பாக்குறேன்"



"தெரு தெருவா அலையணும் அவன்.... பயந்து பயந்து சாகணும்" வெடிச் சிரிப்பு சிரித்தவரின் முகத்தில் அப்படி ஒரு குரூரம்!!!



***

" இதுக்கு தானே ஆசைப்பட்டு தாலி வாங்கிகிட்ட?" விஷமாய் வந்த வார்த்தைகளில் துடித்தது பேதை மனம்....



தன் பலத்தையெல்லாம் திரட்டி அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டவளின் கண்களில் கழிவிரக்கத்தால் தாரை தாரையாக கண்ணீர் வழிய தலை குனிந்தாள் பெண்...



அவளை கொஞ்ச நேரம் வெறித்தவன் தலை அழுத்தக் கோதி தன் ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் சேர்த்து வைத்து நெற்றியில் தேய்த்தான்.



அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியேற சாய்ந்தவாறே கிழே அமர்ந்தவள் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.



என்ன வார்த்தை சொல்லி விட்டான்!!!



......



தன்னறைக்கு வந்து குழாயை திறந்து விட்டு உடுத்த உடையுடன் ஷவருக்கடியில் நின்றவன் தன்னை தானே கட்டுக்குள் கொண்டு வர போராடினான்.



என்ன தான் திட்டினாலும் சமாதானமடைய மறுத்து மன்னிப்பு வேண்ட விழைந்தது உள்ளம்.



'எதுக்கு அழணும்.... அவ்வளவு அருவருப்பா இருக்கா' மீண்டும் சினம் துளிர்த்தது.



ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் சேர்த்து வைத்து நெற்றியில் தேய்த்தவன் வெளியே உடை மாற்றி விட்டு தொப்பென கட்டிலில் அமர்ந்தான்.



.....



குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்க கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவள் அவசரமாக எழுந்து வெளியே வந்தாள்.



அடியாட்கள் வேறு அங்குமிங்கும் இருக்க வேறு வழியே இல்லாமல் அவனறைக்கே நுழைய கட்டிலில் அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்து கொண்டான்.



அவனை தவிர்த்து குளியலறை நுழையப் போனவளிடம்



"வ....வ...வர்ஷினி...." என்க தயங்கி நின்றது அவள் நடை....



"ஐ...ஐ...அம் சாரி"



"...."



"ரியலி சாரி நா ஏதோ....ப்ச்...சாரி" நெற்றியில் தட்டிக் கொண்டு அவளை நிமிர்ந்து பார்க்க அப்படியே நின்றிருந்தவள் அவன் பேசுவது நிறுத்த விறுட்டென உள்ளே புகுந்து கொண்டாள்.



கண்களை இறுக்க மூடித் திறந்து அமர்ந்தவனுக்கும் அதற்கு மேல் என்ன செய்யவென்றே புரியவில்லை....



அவள் குளியலறையிலிருந்து வெளியே வந்து பார்த்த போது அவன் அறையில் இல்லை....



நிம்மதியாக மூச்சு விட்டவள் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்த யாழினியை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தாள்.



"என்னண்ணி ஆச்சு?" திக்கென அதிர்ந்தது உள்ளம்.



"இல்ல ரூம்ல இருந்து வந்துட்டீங்களா.... அதான் கேட்டேன்"



"ஓஹ்....அ...அது சும்மா தான்"



"நாம அத்தை வீட்டுக்கு பொய்ட்டு வர்லாமா?"



"இ...இல்ல... இல்ல... அவங்க கிட்ட கேட்டுட்டு...."



"அட அண்ணா தான் வர்றேன்னு சொல்றாங்க வாங்க"



"இ...இல்ல வந்து"



"அட வாங்கண்ணி" கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வர ஹால் சோபாவில் காலுக்கு மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தான் கதிர்.



"ணா ரெடி கெளம்பலாம்" சரி என்று எழுந்தவன் முன்னே நடக்க பின்னால் நடந்தனர் இருவரும்....



***



ஹாஸ்பிடல்....



"பேப்...ஐ மீன் குட்டிமா வந்துட்டாளாடா?"



"ம்...."



"எப்போ வந்தா?"



"மார்னிங்"



"எப்பிடி இருக்கா?"



"ம்...."



"என் கிட்ட பேச அவ்வளவு கஷ்டமா இருக்கா?"



"...."



"நீ என்ன ப்ரண்டாவே பாக்கலல?" தொண்டை அடைத்தது அவனுக்கு.



"நா வர்றேன்" சட்டென எழுந்து வெளியே சென்றவனின் முதுகை வெறித்தன அவன் கண்கள்....



சோர்வாக கண்களை மூடிக் கொண்டவனின் கடைவிழியோரம் கண்ணீர் கசிந்தது.



.....



வர்ஷினியுடன் வளவளத்துக் கொண்டு வந்தவள் அண்ணன் புறம் திரும்பினாள்.



"ணா...."



"சொல்லுடா" அவன் கனிவான குரல் ஏக்கமாய் பதிந்தது பாவை நெஞ்சில்....



"அபி மாமா இப்போ எங்க இருப்பாங்க?" அவன் முகம் இறுக அதிர்ந்தது பேதை மனம்.



கோபப்பட்டு விட்டால்???



"சொல்லுங்கண்ணா"



"...."



"ஓஹ் தெரியாதா? அவங்களுக்கு கால் பண்ணி எங்கே இருக்காங்கண்ணு கேக்குறீங்களா?"



"ஏன்?" அவன் குரல் வித்தியாசம் பெண்ணவளை சுட்டது.



தங்கைக்கு அதுவெல்லாம் புரியவே இல்லை போலும்....



"என்னணா ஏன்னு கேக்குறீங்க..... எவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கேன்.... அவங்களுக்கு சந்தோஷமா இருக்காதா?" அவன் கண்களில் ஏறிய சிவப்பை கண்டு சட்டென யாழினியின் கையை இறுக்கிப் பிடித்தாள் மாது.



"என்னண்ணி என்னாச்சு....ஏன் கை சில்லுன்னு இருக்கு?"



"அ....அ....அது அது த...தல...தல வலிக்கிறா மாதிரி இருக்கு.... ப்ளீஸ்.... வீட்டுக்கு போலாமா....?"



"அச்சச்சோ ரொம்ப வலிக்குதாண்ணி.... அண்ணா நாம வீட்டுக்கு போலாம் அத்தை வீட்டுக்கு அப்பறமா போலாம்" அதற்காகவே காத்திருந்தவன் போல் வளைத்து திருப்பினான் தன் வண்டியை....



.....



"நீங்க உள்ள போங்க நா வந்தட்றேன்" ஸ்டீரின் வீலை அழுத்தப் பற்றிய விதத்திலிருந்தே அவன் கோபம் புரிந்தது அவளுக்கு...



கோபத்தில் சென்று ஏதாவது செய்து விட்டால்....



நெஞ்சாங்கூடு அதிர உடம்பெங்கும் அந்த நடுக்கம் பரவியது.



"சரிணா....அண்ணி வாங்க...."



"இ....இல்ல நீ...நீங்க போங்க நா வர்றேன்" அவளும் சிரித்துக் கொண்டே செல்ல மிரட்சியாய் அவனை ஏறிட்டவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினாள்.



"மா...மா....மாமா...."



"ப்ச் என்னடி?" அவளிடம் பாய்ந்தான்.



"வீ...வீட்டுக்குள்ள வாங்க மாமா"



"திரும்ப திரும்ப என்ன கோபப்படுத்தாம கிளம்பு மரியாதயா.... எப்போ வர்ணும்னு எனக்கு தெரியும்"



"ப்ளீஸ் மாமா...."



"ஏய்....உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாது.... அப்பிடி கூப்புடாதன்னு எத்தன தடவ சொல்றது...." திடீரென அவன் கத்தியதில் சீட்டுடன் ஒன்றினாள் பெண்.



"போ இங்க இருந்து" உள்ளடக்கிய கோபத்தில் அவன் கத்தினாலும் அவள் அப்படியே அமர்ந்திருந்தது தான் அதிசயமே...



"என்னதான்டி வேணும் உனக்கு?"



"உ...உள்ள வாங்க மா..." பாதியிலேயே நிறுத்தி விட்டாள்.



"வர முடியாது போ"



"ப்ளீஸ் மாமா...." மீண்டும் தொடங்க



"உயிர வாங்காத.... போ வர்றேன்" என்றான் கடித்த பற்களுக்கிடையே...



அவன் பதிலில் நிம்மதி அடைந்தவள் கதவை திறந்து கொண்டு வெளியேற அவன் காரை உறும விட்டு கிளம்பவும் விக்கித்து நின்று விட்டாள் காரிகை....



((நானும் என்னமோ நெனச்சிட்டேன்டா....இவன் திருந்த மாட்டான்...என்ன நண்பா???))



***



காலை பதினொரு மணியளவில் வீட்டை விட்டு சென்றவன் இரவு பத்தரை மணி தாண்டியும் வீட்டுக்கு வராதிருக்க மனது திக் திக்கென அடிக்கத் துவங்கிற்று அவளுக்கு!!!



"அண்ணா வந்துடுவாங்க அண்ணி.... பயப்படாதிங்க...." சொல்லி கலைத்தவளும் அசதியில் உறங்கச் சென்றிருக்க கடிகாரத்தை பார்ப்பதும் பிறகு வாசலை பார்ப்பதுமாக ஹாலிலே அமர்ந்திருந்தாள் பெண்....



இரவு ஒரு மணி....



தள்ளாடியபடியே வந்தவனை பார்க்க கண்ணை கரித்தது அவளுக்கு....



தட்டுத்தடுமாறி மாடிப் படியை அடைந்தவன் அப்போது தான் அவளை திரும்பிப் பார்த்தான்.



"ஹே....நீ இன்னும் தூங்கழ....?"



"...."



"அதுத்து எவன கொழ பண்ணனும்னு உன் அப்பன் சொல்லி தந்தானா....அதான் யொசிச்சிட்டு இழுக்கியா....?" போதையில் குழரலாக வெளிப்பட்டது அவன் குரல்....



'கடவுளே.... இவங்க என்ன சொல்றாங்க ...... அப்பா கொலையா' கை தானாய் நெஞ்சை பிடித்தது.



"ம்....நழ்ழா தான் ஆக்த் (ஆக்ட்) பண்ழ....நாட் பேட்"



"இல்ல மாமா...."



"யாருக்கு யாருடி மாமா.... நா உனக்கு மாமா இல்லலலல..."



"இல்ல அம்மா தான்...."



"நீ அப்பிதி கூப்பழ்றது எனக்கு பிதிக்கல...."



"....."



"நீ கூப்புடும் போது எ....எ....எனக்கு எனக்கு....என் பொ... பொம்ம ப...பேசுறா மாதிரி இருக்கு.... வலிக்குதுடீ.... ரொம்ப ஆழமா வலிக்குது.... என் அம்...மா...ப்பா.... அண்....ணா.... யாருமே இல்லாம த...த...தனிய... பயமா... பயமா.... இருக்கு....என் குட்டிமாக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இரு...க்கு... " கரகரவென கண்ணீர் வழிய ஓடிப் போய் தன் நெஞ்சில் தாங்கிக் கொண்டாள் தன்னவனை.....



அவன் படும் வேதனையை பொறுக்கவே முடியவில்லை அந்த பூ மனம் கொண்டவளால்....



"துரோகி....துரோகி... உன் குடும்பமே எங்கள துரோகத்தால கொண்ணுட்டீங்கல்ல..... விட மாட்டேன்.... ஒருத்தனயும் விட மாட்டேன்...."



"ப்ளீஸ் மாமா அழாதிங்க எல்லாம் சரியாகிடும்" அவளும் மௌனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டே தேற்றினாள்.



"பொ....பொம்ம.... மாமான்னு...." அப்படியே அவன் பேச்சு தடைபட அவன் அழைப்பில் அவள் இதயம் தாறுமாறாக துடிக்கத் துவங்கியது.



தலை வேறு விண்விண்னென்று தெறிக்க கஷ்டப்பட்டு அவனை கூட்டிக் கொண்டு மாடியேறினாள் பாவை....



***



காலை.....



தலையை பிடித்துக் கொண்டே எழுந்தமர்ந்தான் கதிர்.



தான் எப்படி கட்டிலில் என்ற வினா எழுந்தாலும் எதுவும் யோசிக்காமல் எழுந்தவன் குளியலறை சென்று ஷவருக்கடியில் நின்று யோசிக்கலானான்.



யோசிக்க மட்டுமே முடிந்தது அவனால்.... அதன் பின் நடந்தது எதுவும் மங்கலாக கூட தெரியவே இல்லை....



கணவனுக்கு காபி போடுவதற்காக உள்ளே சென்றவளின் பின்னாலிருந்து மூக்கையும் வாயையும் அழுத்தப் பொத்தி அவளை மயங்கமடைய செய்த ஒருவன் யாருக்கும் சந்தேகம் எழாதபடி அவளை பின் பக்க வழியாக தூக்கிச் சென்று விட



இங்கே அதே நேரம் நண்பனை பார்க்க ஹாஸ்பிடல் சென்று கொண்டிருந்த ரித்விக்கின் கார் திடீரென கடத்தப்பட்டது.



தொடரும்.....



16-07-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27030
27031

அத்தியாயம் 05 [ B ]

"அண்ணா.... அண்ணிய பாத்தீங்களா?" வேட்டி நுனியை வலது கையால் பிடித்தவாறு இடக்கையை உயர்த்தி வாட்ச்சில் மணி பார்த்துக் கொண்டே வந்தவன் தங்கை கேள்வியில் இல்லையென தலையாட்ட

"எல்லா இடத்துலயும் பாத்துட்டேன்ணா... அவங்க எங்கேயும் இல்ல" என்றாள் தகவல் போலும்.....

நெற்றி சுருக்கியவன் தன் வலக்கை ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் சேர்த்து அழுத்த தேய்த்து யோசிக்கலானான்.

"ரூம்ல பாத்தியாடா?"

"இல்லணா... ஆமா நீங்க ரூம்ல இருந்து தானே வர்றீங்க.... அண்ணி இல்லயா? "

"அ... அ... அது ஆமா... வந்து.... இல்ல..."

"என்னணா சொல்றீங்க.... இருந்தாங்களா இல்லயா?"

"க்கும்.... இல்ல நா கவனிக்கல "

"சரியா போச்சு போங்க.... நானே பாத்துட்டு வர்றேன்... " அவள் மாடியேற தலையை உலுக்கியவன் வீட்டிலிருந்து வெளியேறினான்.

***

"ஹாஹ்ஹா.... " திரையில் தெரிந்த ரித்விக்கை பார்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார் ராமலிங்கம்....

பொதுவாகவே அவர் முகம் காட்டுவது குறைவு தான்...

அதிலும் கிருஷ்ணன் குடும்பத்தினரிடம் அப்படி ஒரு ஜாக்கிரதை அவருக்கு....

"அந்த பொண்ணு எங்கடா?" அவர் கேட்கவே வேறொரு திரையில் மயங்கிய நிலையில் காட்டப்பட்டாள் வர்ஷினி....

அதற்கும் அவரிடம் வெடிச்சிரிப்பு....

"முதல்ல யார அந்த நாயி காப்பாத்துதுன்னு பாக்கலாம்... இவள காப்பாத்துனா அவன் போய் சேந்துருவான்... இவன காப்பாத்துனா அவ போயிடுவா.... ஹாஹ்ஹஹ்ஹா.... " கண்கள் வெறியில் பளபளத்தன அவருக்கு....

***

"கால அடண்ட் பண்ணுடா...." நண்பன் அழைப்பை எடுக்காததில் கடுப்பானான் கதிர்.

'இடியட்.... ச்சே... எங்கடா போன... ஹாஸ்பிடல் போயிருப்பானோ... பட் சொல்லாம கெளம்பற அளவுக்கு அப்பிடி என்ன அவசரம்.... ஒரு வேல யாருக்காவது.... ' மனம் அதிர வேகமெடுத்தது அவன் ராயல் என்பீல்டு....

.......

வண்டியை பார்க் பண்ணி விட்டு இறங்க எத்தனித்தவனின் மொபைல் தன் இருப்பை உணர்த்த காலை ஊன்றி நின்றவன் காதிற்கு கொடுத்தான்.

"என்னையா... வேலு.... நண்பனையும் பொண்டாட்டியையும் காணலன்னு இன்னுமே தெரில போலயே...." திடுமென மனம் அதிர்ந்தாலும் ஒரு வார்த்தை திருப்பி பேசினானில்லை எ.ஸி.பி....

"என்ன ரொம்ப அமைதியா இருக்க?"

"....."

"சரி சரி உனக்கு ரெண்டு மணி நேரம் டைம் தர்றேன்.... அதுக்கிடையில தேடி கண்டு பிடி.... அப்போ வெச்சிடட்டுங்களா வேலு? " அழைப்பு துண்டிக்கப்பட தலையை அழுத்தக் கோதியவன் இறங்கி குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் துவங்கினான்.

'அந்த துரோகி கடைசி வர திருந்தவே போறதில்ல.... குடும்பத்துல எல்லோரையும் கொன்னது போதாதுன்னு இப்போ பொண்ணயே கொல பண்ண துணிஞ்சுட்டான்.... ச்சேஹ்....' மனதிற்குள் குமுறியவன் ஹாஸ்பிடல் வாசலையே பார்த்திருந்து விட்டு உள்ளே நுழைந்தான் பெரும் சீற்றத்துடன்....

......

திடீரென கதவு திறக்கப்பட மெதுவாய் கண்களை திறந்தவன் உண்மையில் உயிர் நண்பனை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தான் என்று தான் கூற வேண்டுமோ!!!

"ம... மச்சான்..."

"சும்மா நல்லவன் மாறி நடிக்காத.... ச்சேஹ் உங்க குடும்பத்த நெனச்சாலே எனக்கு அருவறுப்பா இருக்கு...."

"ஏன்டா இப்படில்லாம் பேசுற?"

"வேற எப்பிடி பேசணும்... உன்னை மாதிரி நடிச்சு கிட்டா?" நண்பனை அடிபட்டப் பார்வை பார்த்தான் அபி.

"நா நடிக்கிறன்னு நீ நம்புறியா? "

"..... "

"அவ்வளவு தான்லடா.... தேங்க்ஸ்... " குரல் அடைக்க அவன் திரும்பி விட அவனையே வெறித்துப் பார்த்தவன் விறுட்டென வெளியேறி விட்டான்.

***

"குமரா... ரக்ஷனோட மொபைல் எங்க இருக்குன்னு ட்ரேஸ் பண்ணு.... " தன் நண்பனுக்கு அழைத்து விட்டு பதிலுக்காய் காத்திருக்க துவங்கினான்.

"ஈ. சி. ஆர்... பக்கமா இருக்க பழைய பில்டிங்ல காட்டுது கதிர்... எனி ப்ராப்ளம்?"

"நோ நோ... தேங்க்ஸ் பை...." அழைப்பை துண்டித்தவன் வண்டியை உதைத்து கிளப்பினான்.

.....

"ஐயா... அவன் அந்த இடத்துக்கு தான் போய் கிட்டு இருக்கான்.... அந்த பொண்ண என்ன பண்ணட்டும்?"

அவனை பின் தொடர்ந்து கண்காணித்து வந்த ஒருவன் தகவல் சொல்ல மறுமுனை அமைதியாய் கேட்டுக் கொண்டது.

......

அவன் அந்த கிளைச்சாலையை நெருங்கிய சமயம் மீண்டும் அலறியது மொபைல்....

"ஹலோ"

"அப்போ பொண்டாட்டி வேணாம்னு முடிவே பண்ணிட்ட அப்பிடி தானே வேலா? "

"....."

"அப்போ சரி... உன் பொண்டாட்டிய நா வெச்சுகிட்டு நிம்மதியா தூங்க வெச்சிட்றேன்..... நீ போயி நண்பன காப்பாத்து போ.... நம்ம பசங்க வேற ரொம்ப நாளா பொண்ணு கிடைக்காம ஏங்கி கிட்டு இருக்கானுங்க"

"ஏய்.... " கழுத்து நரம்பு புடைத்தெழ சீறினான் கணவன்....

"அச்சச்சோ பயமா இருக்கே.... என்ன பண்றது" சட்டென அழைப்பு துண்டிக்கப்பட

"ஷிட்.... ஷிட்.... ஷிட்... " வண்டியை நிறுத்தி இருந்தவன் பைக் பெட்ரோல் டேங்குக்கு ஓங்கி குத்தினான்.

அவ்வளவு பாசமாக இருந்த, இருக்கும் தந்தை தன் பிள்ளைகளையே கொலை செய்ய துணிவாரா என யோசிக்கவே இல்லை அவன்....

யோசிக்க விடாமல் கோபம் மறைத்துக் கொண்டிருப்பது ஒரு காரணமென்றால் தந்தையினதும் சகோதரனதும் கடைசி வார்த்தை ராமாக இருந்ததில் இன்னுமின்னும் பிடிவாதமாய் யோசிக்க மறுத்தான் எ.ஸி.பி...

"கண்ணா.... கோபப்படறதுல என்னடா இருக்கு.... நிதானமா இருந்தா தானே யோசிக்கலாம்" தாயின் அறிவுரை மனதில் அலைமோத தன்னை நிதானப்படுத்த விழைந்தான் கதிர்...

ஊஹூம்... முடியாமல் சோர்ந்தது மனம்...

'மா.... ரொம்ப நாளா போராட்றேன்மா... நீ இல்லாம கஷ்டமா இருக்கு.... ஏன் மா என்ன அனாதையாக்கிட்ட.... இப்போ ரக்ஷன வேற காணும்மா.... என்னால தனியா சமாளிக்க முடிலமா..... ப்ளீஸ் கூடவே இரு...' கதறித் துடித்தது மனசாட்சி....

முகத்தை அழுத்த தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.....

"குமரா..."

"சொல்லு கதிர்"

"வர்மாவ கூட்டிட்டு நா நிக்கிற இடத்துக்கு சீக்கிரமா வா..."

"ஒகேடா... தோ கெளம்பிட்டேன்" அழைப்பை துண்டித்தவன் மீண்டும் யோசிக்கலானான்.

***

"ந்தா பாப்பா.... எந்திரி செல்லம்...." தன் கண்ணம் தட்டப்பட விழி திறந்தவள் தன் முன்னே ஆஜானுபாகுவாய் நின்றிருந்தவனை பார்த்து மிரண்டு விழித்தாள்.


"டேய் இங்கப் பாருடா.... பாப்பா பயப்புடுது" அவன் சிரிக்கவே மற்றவர்களுக்கும் சிரிப்பு....

"உன் புருஷனே உன்ன வேணான்னு தூக்கி கொடுத்துட்டான்" தேங்கியிருந்த கண்ணீர் மழுக்கென கண்ணத்தை தொட மனம் வலித்தது.

"ந்... நா... நா நம்ப மாட்டேன்.... மாமா வருவாங்க"

"ஹஹ்ஹா... மாமா வருவாங்களா.... அவன் வர மாட்டான் செல்லம்... அவனுக்கு ப்ரெண்டு தான் முக்கியமாம்.... நீ தேவயில்லன்னு சொல்லாம சொல்லிட்டான்"

".... "

"சரி சரி எங்களுக்கு காப்ரேட் பண்ணு" இளித்துக் கொண்டே அவன் அவள் தாவனியை உருவ கை நீட்டினான்.

.......

தன் கண்களை கஷ்டப்பட்டு திறந்தான் ரக்ஷன்.

ஆ‌ங்கா‌ங்கே சில அடியாட்கள் தன்னை விட்டும் தூரமாய் நின்றிருக்க தான் இருந்த இடத்தை அலசினான்.

ஏதோ புதிய கட்டிடம் அரை வாசி கட்டி முடித்து அப்படியே விட்டது போல் இருந்தது.

தான் கடத்தப்பட்டிருப்பதை தெளிவாய் உணர்ந்தாலும் ஏனென்று தான் தெரியவே இல்லை அவனுக்கு....

'யாரு கடத்தி இருப்பானுங்க....' மனதில் கேட்டுக் கொண்டவன் அடியாட்களை கூர்ந்து பார்த்தான்.

ஊஹூம்.... யாருமே அவனுக்கு தெரிந்த வரையிலுள்ள பெரிய ரவுடிகளின் அடியாட்கள் இல்லவே இல்லை....

அவனை நோக்கி இருவர் வர மீண்டும் படுத்துக் கொண்டான் மயக்கம் போலும்....

"டேய் இவன் இந்த நேரம் முழிச்சிருக்கணுமே....?"

"ஆமால்ல... ராத்திரி குடிச்சிட்டு மட்டையாகி இருப்பான்.... அதான் இன்னும் தெளியல போல...."

"பாத்தா அப்பிடி தெர்லயே?"

"விடு பாத்துக்கலாம்.... எங்கே போயிட போறான் "

"சரி விடு பாத்துக்கலாம்.... சாப்புட்டு வந்து பாக்கலாம் வா.... " தன் சகாவை இழுத்துக் கொண்டு அவன் செல்ல ஒரு கண்ணை திறந்து பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டவன் நிமிர்ந்து அமர்ந்தான்.

***

தன் பைக்கில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் பின்னால் வண்டி சத்தம் கேட்கவும் சலேரென திரும்பினான்.

வர்மனும் குமரனும் தான் நின்றிருந்தனர்.

"பையா....(bhaee_ அண்ணா) என்ன ஆச்சு....?" வர்மன் பதற்றமாய் அருகில் வந்து கேட்க குமரனின் கண்களிலும் அக்கேள்வியே தொக்கி நின்றது.

"ரக்ஷனையும் வர்ஷினியையும் கடத்திட்டாங்க"

"வாட்.... என்ன சொல்ற கதிர்.... பட் யாரு?"

"ராம்"

"பையா... சொந்த பொண்ணையே யாராவது கடத்துவாங்களா?"

"அவன் கடத்துவான்"

"சரி விடு... என்ன பண்ணலாம்?"

"நீங்க ரெண்டு பேரும் போயி ரக்ஷன காப்பாத்துங்க.... நான் வர்ஷினிய தேட்றேன்"

"ஓகேடா..... சரி பையா"

"ட்ரேஸ் பண்ண இடத்துல வெச்சிருக்க வாய்ப்பில்ல குமரா.... பட் இந்த ஏரியால தான் இருப்பானுங்க... இப்போ நான் உங்க ரெண்டு பேர் கூடவும் பேசிட்ருக்கத சொல்லி இருப்பானுங்க.... ஸோ.... கொஞ்ச தூரம் போயிட்டு ட்ரஸ்ஸ மாத்திட்டு திரும்ப வாங்க... பட் சேந்து வராதிங்க நா கெளம்பறேன்.... "

"சூப்பர் ஐடியா பையா" அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியை நோக்கி கதிர் நடக்கவும்

"உனக்கு வாய வெச்சு கிட்டு சும்மாவே இருக்க முடியாதாடா.... தேவையா உனக்கிது? " வர்மாவை பார்த்து வாய் பொத்தி சிரித்தான் குமரன்.

***

"ப்ளீஸ் விட்டுடுங்க...." கைகள் கட்டப்பட்ட நிலையில் தன் மானத்தை காக்க போராடி கதறி அழுதாள் மாது.


அவள் தாவனியை உருவி கையில் எடுத்திருந்தவன் அவளை நோக்கி குனிந்த நேரம் பின்னாலிருந்து பறந்து வந்த கட்டை மண்டையை பதம் பார்க்க "ஆஆஆ.... அம்மா...." கத்திக் கொண்டே முகம் குப்புற விழுந்தான் அவன்....

இரு கையையும் இடுப்பில் குற்றி ருத்ரமூர்த்தியாய் வாசலில் அவன் நின்றிருந்த கோலம் அந்த ஐயனாரை நினைவுபடுத்த பயந்து போய் தன் கையிலுள்ள ஆயுதங்களை இறுக்கி பிடித்தனர் அனைவரும்....

"மா... மா" அவள் உதடுகள் உச்சரிக்க அவளை முழுதாக அலசியவன் தன்னை நோக்கி வந்தவனின் நெஞ்சில் ஓங்கி மிதித்தான்.

ஒன்றன் பின் ஒன்றாக வந்தவர்களை அனாயசமாக அடித்து வீழ்த்தியவன் மனைவியிடம் நெருங்கியவனின் கையை வெட்ட அதிர்ச்சி தாங்காமல் மயங்கியே போனாள் பெண்.....

வலியில் துடித்துக் கொண்டிருந்தவனை அவன் பார்த்த பார்வை....

அப்பப்பா..... அந்த கண்களை எதிரிலிருப்பவன் சாகும் வினாடி வரை மறக்கவே மாட்டான்!!!

"உன்ன உயிரோட விட்றன்னு தப்பு கணக்கு போட்டுடாத... நா வந்து என் பொண்டாட்டிய காப்பாத்திட்டு போயிட்டன்னு போய் சொல்ற.... அதுக்காக தான் இந்த உசுரு..." ஓங்கி உதைந்தவன் அவன் அதிர்ச்சியையும் பொருட்படுத்தாது மனையாளிடம் வந்து அவள் தாலியை தூக்கிப் பார்த்து மர்மமாய் சிரித்தான்.

ஆம்.... அதில் இடத்தை குறிக்கும் சென்சார் கருவியும் மினி சிப்பும் பொருத்தப்பட்டிருந்தது.

((டேய்... டேய்.... தாலிடா அது...))

தன்னை சார்ந்த எல்லோருக்குமே அவர்களுக்கே தெரியாமல் பொருத்தி இருந்தவன் ரக்ஷன் மறுக்க விட்டு விட்டான்.

அப்போதும் கூட அவளை தன்னை சார்ந்தவள் என தான் நினைத்துக் கொண்டிருப்பதை உணரவே இல்லை அந்த ஆறடி ஆண் மகன்.

***

இரவு.....

நன்றாக அசந்து தூங்கி இருந்தவளுக்கு அப்போது தான் விழிப்பு தட்டியது போலும்....

மெதுவாக கண்களை திறக்க அருகில் அமர்ந்திருந்தாள் யாழினி கிருஷ்ணா.

"அண்ணி....இப்போ பரவால்லயா" சோர்வாய் தலையாட்டியவளுக்கு தாயை பார்க்க மனம் ஏங்கியது.

"அண்ணி.... ஏதாவது சாப்புட்றீங்களா?"

"ப... பசிக்கல"

"பயந்து போய் இருக்கீங்க.... இருங்க அண்ணாவ வர சொல்றேன்" எழப்போனவளின் கை பற்றி தடுத்தாள் பெண்....

"என்னண்ணி? "

"எ... எ... எனக்கு அம்மாவ பா... க்... பாக்கணும்" தேங்கி நின்றது கண்ணீர்....

"ராத்திரி லேட் ஆகிடுச்சு அண்ணி... காலைல போலாமா?" வேறு வழியின்றி தலையாட்டினாள் பெண்....

"சரி... இருங்க நா வந்தட்றேன்" அவள் வெளியேற கண்களை மூடி சாய்ந்தவள் காலடி ஓசையில் படக்கென விழி திறக்க அருகில் நின்றிருந்த கணவனை பார்த்து நடுங்கத் துவங்கியது பெண்ணவள் தேகம்...

"எப்பிடி இருக்கு? "

"ப்...ப....ப...பரவால்ல"

"குட்.... ஏதாவது பண்ணானுங்களா?" இல்லையென தலையாட்டியவளுக்கு தான் இருந்த கோலத்தை நினைக்க மனம் கூசவும் கதறி அழ அதிர்ந்து போய் சட்டென அருகில் அமர்ந்தான் கதிர்.

"ஹே.... என்னாச்சு... ஏன் அழற?"

"...."

"கஷ்டப்பட்றா மாறி ஏதாவது? "

"இல்ல மாமா"

"அ... அ... அப்போ ஏன் அழற? "

"ஒ... ஒ... ஒருத்தன் எ... எ... என் தா... தாவனிய பிடிச்சு இழுத்துட்டான் மாமா... ஏன் மாமா என்ன தூக்கி அவங்க கிட்ட கொடுத்தீங்க?" கேவலை அடக்கவே முடியவில்லை அவளால்....

"வாட் ரப்பிஷ்....?"

"அ...அவங்க சொன்னாங்க மாமா... நா என்ன மாமா தப்பு பண்ணேன்.... ஏன் உங்களுக்கு என்ன பிடிக்கல... நா இது வர உங்கள பாத்தது கூட இல்லயே.... அப்பறம் எப்பிடி உங்க வெறுப்புக்கு ஆளானேன்?"

".... "

"சொல்லுங்க மாமா... என்ன பிடிக்காம தூக்கி கொடுத்துட்டு எதுக்கு காப்பாத்துனீங்க?"

"நா அப்பிடி எதுவும் சொல்லல வர்ஷினி... அழறத நிறுத்து முதல்ல" ஏற்கவே பயந்து போயிருப்பவளிடம் கோபத்தை காட்ட முடியவில்லை அவனால்....

"தோ பார்.... அவனுங்க சொன்ன எதுவும் உண்மை இல்ல.... "

"...."

"ஓ காட்...."

"நா கேட்ட எந்த கேள்விக்கும் ஏன் மாமா பதில் சொல்ல மாட்டேங்குறீங்க? " நிமிர்ந்து அவனை பார்க்க சட்டென எழுந்து கொண்டவன் முகம் இறுக வெளியேறி நண்பனை காணச் சென்றான்.

***

"வேலனோட தங்கச்சி உயிரோட தான் இருக்கா லிங்கம்" மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியில்

"என்னடா சொல்ற?" இப்பக்கம் உறுமினார் அவர்...

"உண்ம தான்.... உயிரோட தான் இருக்கா"

"நா பாத்துக்குறேன்" கொஞ்ச நேர அதிர்ச்சிக்கு பின் திடீரென வெடிச்சிரிப்பு எழுந்தது அவரிடம்!!!!

..........

ரக்ஷனை குமரன் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்க ஏதோ யோசனையில் இருந்த நண்பனருகே வந்தான் கதிர்.

"ரித்விக்"

"....."

"டேய்...." அவன் தோள் தொட திடுக்கிட்டு கலைந்தான் நண்பன்.

"ஹாங்.... வாடா...."

"தூங்கல?"

"தூக்கம் வர்ல கதிர்"

"ஏன்.... என்னாச்சு?"

"ஒன்னில்ல சும்மா தான்டா"

"சரி..... இன்னிக்கு கடத்துனவனுங்கள பாத்தியா?"

"எஸ் டா.... பட் இதுவர நா அவனுங்க யாரையும் பாத்ததே இல்ல"

"என்ன சொல்ற?" புருவம் இடுங்கியது கதிருக்கு....

"நா கன்பார்மா பாத்தேன் மச்சி... எனக்கு தெரிஞ்ச வரைல யாரோட அடியாட்களும் இல்லடா அவனுங்க"

"....."

"எனக்கென்னவோ நடுவுல நமக்கு தெரியாம ஏதோ நடக்குறா மாதிரி ஃபீலா இருக்குடா" அவனும் அதை ஒரு தடவை உணர்ந்திருந்ததால் அமைதியாகவே கேட்டுக் கொண்டான்.

"அவரு ஏன்டா வர்ஷினிய கொல பண்ணனும்? அது கூட விடு.... அபிக்கு நடந்த மர்டர் அடம்ப்ட்.... ஐ அம் ஷூர்.... அதுல மாமா இன்வால்வ் ஆகி இருக்க மாட்டாரு... அதனால தான் சொல்றேன் மச்சான்.... நமக்கு தெரியாம நடுவுல எவனோ கண்ணாம்மூச்சு ஆட்றான்"

"....."

"ஒரு தடவ அவங்க சொல்ல வர்றத கேக்கலாம்லடா? " நண்பனை இன்னெதென வர்ணிக்க முடியாத ஓர் உணர்வில் பார்த்து வைத்தான் கதிர்.

"நீயும் நானும் ஒரு வேல தப்பா புரிஞ்சிக்கிட்டு இருந்தோம்னா.... நம்மளாலயே நம்மள மன்னிக்க முடியாம போயிடும் மச்சான்" அதிர்ந்து நண்பனை பார்த்தான் எ.ஸி.பி....

அப்படி மட்டும் இருந்து விட்டால்!!!

"அவ்வளவு தான்லடா?" உயிர் நண்பன் கேட்டதும் ஞாபகம் வர திக்கென்றது உள்ளுக்குள்...

"ஒரே ஒரு தடவ சான்ஸ் கொடுக்லாமே டா?"
அவனையே பார்த்திருந்தவனுக்கு என்ன பதில் கூறவென்றே தெரியவில்லை...

"மச்சான்...."

"ஹாங்...."

"என்ன சொல்ற?"

"வ... வ... வந்து.... யோ... யோசிக்லாம் ரித்விக்" எதிலிருந்தோ தப்பித்து செல்பவனை போல் செல்பவனை பார்த்து இதயம் கனத்தது நண்பனுக்கு....

காலை....

இரவு நடந்த சம்பாஷனையிலேயே உழன்று கொண்டிருந்தது ஆண் மனம்....

அதை அவ்வளவு சீக்கிரத்தில் புறம் தள்ள முடியாமற் போக விரும்பியே நுழைந்து கொண்டான்.

தான் குளித்து முடித்து வெளியே வந்தவள் தூக்கம் விழித்த கணவன் அப்படியே தலையை பிடித்தவாறு அமர்ந்திருப்பது கண்டு பயத்தில் தயங்கி நின்றாள் பாவை....

நேற்றிரவு தானா அப்படி அவனிடம் தைரியமாக பேசினோம் என்பதை இப்போதும் கூட நம்பவே முடியவில்லை அவளால்.....

அவன் அப்போதும் சிந்தை கலையாமல் அமர்ந்திருக்கவே அருகில் செல்லவும் அவன் திடீரென எழுந்து கொள்ளவும் சரியாக இருக்க எதிர்பாரா விதமாய் தன் மேல் மோதி நிலை தடுமாறி விழப்போனவளின் இடையை அழுத்தப் பற்றி தன்னோடு சேர்த்தனைக்க கணவன் ஷர்ட்டை இறுக்கப் பற்றிக் கொண்டு கண் மூடி நின்றிருந்தாள் காரிகை.....

கூந்தலிலிருந்து வடிந்த நீர்த் திவலைகள் ஆங்காங்கே சிதற பெண்ணவளின் கட் முடி முகத்தை மறைத்தவாறு விழுந்திருக்க அவள் மதி முகத்தை காண ஏக்கம் கொண்டோ என்னவோ இடையை பற்றி இருந்த இடக்கையை விடுத்து தன் வலக்கரத்தால் மனைவியின் கற்றை முடியினை காதோரம் ஒதுக்கி விட்டான் கதிர்வேல்....

வில்லாய் வளைந்த புருவங்களுக்கு கீழே மூடியிருந்த சிப்பி இமைகள் மெதுவாய் திறக்கப்பட்டதில் அவனவள் இமை அழகில் முதன் முறை விரும்பியே தொலையத் துணிந்தான் அவ்வான்மகன்....

இதுவரை ஏறிட்டுக் கூட பார்த்திடாத அவள் முகம்.... அதிலும் பெண்ணவளின் கயல்விழிக் கண்கள் பார்த்த நொடியே மனதிற்குள் ஆழமாய் பதித்து போனதை அறிந்தானில்லை அவள் கணவன்.....

இதுவரை தன்னை வெறுப்புடன் மட்டுமே பார்த்திருந்த கண்கள் இன்று தன்னை ரசனையாய் பார்த்திருப்பது கண்டு பெண் தேகம் ஒரு முறை சிலிர்த்து அடங்க மனம் அதிர இமை கொட்டி விழித்தாள் பெண்....

அதை விட அவன் தன் இடையை அழுத்தியிருந்த விதத்தில் செவ்வானமாய் சிவந்தது அவள் கதுப்பு கண்ணங்கள்....

தான் ரசித்திருந்த விழிகள் திடீரென சிமிட்டப்பட்டதில் தன்னை இழுத்துப் பிடித்தவன் அவளை நேராக நிறுத்தி விட்டு அவசரமாக குளியலறைக்குள் புகுந்து கொள்ள தன் படபடப்பை அடக்கப் போராடினாள் மாது.


"அண்ணி...." கீழிருந்து கேட்ட யாழினியின் சத்தத்தில் நிலைக்கு வந்தவள் அவசரமாக இறங்கி ஓடினாள்.

"மெதுவா வாங்கண்ணி.... எதுக்கு இவ்வளவு அவசரம்?" தன் முன் நின்றவளிடம் கேட்டாள் பெண்....

"வந்து... சு... சும்மா தான் யாழ்"

"சரி சரி எதுக்கு கூப்டேன்னு சொல்லுங்க பாக்கலாம்?"

"எதுக்கு.... நீயே சொல்லேன்"

"என் ட்ரஸ் பாருங்க... மொத மொத பாவாட தாவணி கட்டி இருக்கேன்.... எப்பிடி இருக்கு?" ஒரு சுற்று சுற்றினாள் பெண்....

"சூப்பர்"

"ஹை.... தேங்க்ஸ்" குதூகலித்தவள் அவளுக்கு ஒன்றை நீட்ட புரியாமல் விழித்தாள் மாது.

"யாருக்கு யாழினி?"

"உங்களுக்கு தான்.... வேற யாருக்கு"

" எனக்கா... எனக்கு வேண்டாம்"

"ப்ளீஸ் அண்ணி எனக்காக உடுத்துக்கோங்க"

"இல்ல யாழ்..."

"அண்ணி ப்ளீஸ்... பிறந்த நாள் அதுவுமா என்ன அழ வெச்சுடாதிங்க"

"வாட்.... உனக்கு இன்னிக்கு பிறந்த நாளா.... ஏன் என்கிட்ட முதல்லயே சொல்லல?" உண்மையாய் முகம் வாடிப் போனது அவன் மனையாளுக்கு....

"ஐயோ சாரி அண்ணி... உங்களுக்கு தெரியும்னு நெனச்சிட்டேன்" கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்ச அப்படியே உறுகிற்று பெரியவளுக்கு....

"சரி விடு.... ஏதாவது பண்ணலாமா?"

"ஓகே அண்ணி.... பட் இந்த ட்ரஸ்ஸ போடணும்" அன்புக் கட்டளைக்கு சிரித்துக் கொண்டே தலையாட்டினாள் அவள்...

"அப்போ ஓகே.... ஈவ்னிங் அண்ணா வந்ததும் வெளில போலாம்"

"இ... இ... இல்ல... நா.. நா... வர்ல ... நீங்க போங்க"

"ஏன் அண்ணி இவ்வளவு பயப்பட்றீங்க.... அண்ணா ஒன்னும் பண்ண மாட்டான்... "

"இல்ல.... வந்து..."

"வந்தும் இல்ல போயும் இல்ல.... வர்றீங்க டாட்."

"ப்ளீஸ்...."

"நோ வே மிஸஸ் கதிர்.... நான் புல் ஸ்டாப் வெச்சிட்டேன்" அவள் அழைப்பில் பெண் மனம் மீண்டும் படபடக்க தலை குனியவும்

"அழறீங்களா அண்ணி.... " பயந்து போய் நாடி பிடித்து நிமிர்த்தியவள் அவள் கண்ணங்கள் நேரம் காலம் தெரியாமல் சிவந்திருப்பது கண்டு கலாய்க்கத் துவங்கி விட்டாள்.

"ஓஓஓ.... அண்ணா பேரு சொன்னதுக்காக தான் இந்த வெக்கமா?"

"...."

"அய்யோ ரொம்ப க்யூட்டா இருக்கீங்கண்ணி..... அண்ணா எங்க?" அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே சரியாக அவன் கீழிறங்கி வர

"அண்ணா....." அவள் கத்தியதில் தூக்கிவாரிப் போட்டது அவள் தேகம்....

"என்ன குட்டிமா?"

"அண்ணி உங்க பேரு சொன்னதுக்கே எப்பிடி வெக்கப்பட்றாங்க தெரியுமா.... க்யூட்டா இருக்காங்க... " மனைவியிடம் நிலைத்த வினாடிப் பார்வையை சட்டென விலக்கியவன்

"வெளில எங்கேயும் போயிடாத குட்டிமா... யாரையும் போக விடாத.... நா ஈவ்வினிங் வந்தட்றேன்" தலையை பாசமாய் தடவியவன் அவளை வலுக்கட்டாயமாக தவிர்த்து விட்டு வாசலை நோக்கி நடந்தான்.

***

ஹாஸ்பிடல்.....


"மா.... டாக்டர், வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க.... பெட் ரேஸ்ட் எடுக்க சொல்லி இருக்கு... நீங்க இருங்க நான் பார்மாலிடீஸ முடிச்சிட்டு வந்தட்றேன்" அவர் தலையாட்ட எழுந்து சென்றவன் அரை மணி நேரத்தில் திரும்ப அவரும் ஆயத்தமாகி இருந்தார்.

"போலாம்மா..."

"அபி...."

"அபி செத்து போய் வருஷங்களாச்சுமா ஆதர்ஷ்னே கூப்புடுங்க" அதிர்ந்து போய் மகனை பார்த்தார் லக்ஷ்மி....

அவன் வேறெங்கோ வெறித்துக் கொண்டு நின்றிருக்க

"ஏன்டா இப்பிடில்லாம் பேசுற...?" நிமிர்ந்து கேட்டார்.

"அது தானேமா உண்மையும்.... நீயும் லக்ஷ்மியா இல்லாம தேவியாக தானே இருக்க? அவ்வளவு வருஷத்துல அவனுக்கு நம்ம மேல வானமளவு இருந்த நம்பிக்க ஒரே நாள்ல எப்பிடிமா தரைமட்டமாச்சு?"

"....."

"என்ன ப்ரண்டா இருந்தாலும் அடுத்தவங்க தான் அவனுக்கு முக்கியம்னு உணர்த்திட்டான்மா"

"அப்பிடி சொல்லாதடா... கண்ணன் ஏதாவது தப்பா புரிஞ்சிக்கிட்டு இருப்பான்.... தெரிய வர்றப்ப ரொம்ப உடஞ்சி போவான்னு தெரியாதாடா உனக்கு?"

"எனக்கு தெரியும்மா அவன பத்தி.... பட் அவனுக்கு என்ன பத்தி தெரியலயேங்குறப்போ தான் வலிக்குது... இனிமே இத பத்தி நாம பேச வேண்டாம்மா.... நாம அவனுக்கு துரோகிங்களாவே இருந்துட்டு போய்டுவோம்.... ஆனா அம்முவ நெனச்சா தான் பயமா இருக்கு.... நம்ம மேல இருக்க கோபத்த அவ மேல காட்டிட்டான்னா தாங்க மாட்டா... "

"அப்பிடி நடந்துக்க மாட்டான்டா.... அவன் என் வளர்ப்பு... அவன நா நம்புறேன்...."

***

காதிலிருந்த ப்ளூடூத்தை எடுத்து ஓங்கி தரையிலடித்தான் கதிர்...

அவர்கள் பேசியதை தான் கேட்டுக் கொண்டிருந்தான்.

இருவரின் ஒவ்வொரு வார்த்தையும் சுருக் சுருக்கென தைக்க நெஞ்சு சளீரென வலித்தது.

அப்படித்தானோ???

ரக்ஷனும் அவர்களிருவரும் சொல்வது போல் தவறாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறானோ!!!

அவ்வளவு நாள் இருந்த நம்பிக்கை எங்கே போய் தொலைந்தது???

'உங்க வளர்ப்பு தான் அத்தை.... பட் உங்க அண்ணாவோட ரத்தமில்ல ஓடுது.... நா என்ன பண்ணட்டும்???

எனக்கு எதுவுமே புரியலியே அபி... பயமா இருக்குடா...பயந்து பயந்து வாழ்ந்துகிட்ருக்கேன்டா... என் நிலமைல இருந்து யோசிச்சு பாரு மச்சான்...உன் மேல இருக்க நம்பிக்க அப்பிடியே இருக்கறதனால தான் என்னால எதுவுமே பண்ண முடியலடா....சாரி மச்சான்.... ரியலி சாரிடா.... ' மனம் வீரிட தொப்பென இருக்கையில் அமர்ந்தவனை ஆபிஸ் லேன் போன் அழைத்தது.

தந்தை இறந்த பின் அவர்கள் கம்பெனியை ரக்ஷனிடமே ஒப்படைத்தவன் ஊருக்கு ஒதுக்குப் புறமாக தன் முயற்சியில் பதினைந்து தளங்கள் கொண்ட மிகப்பெரிய ஹைபர் மார்கெட் (தேவையான அனைத்தும் கிடைக்கும் இடம்) ஒன்றை உருவாக்கி இருந்தான்.

"சொல்லு வர்மா..."

"ஓஹ்... ஓகே நா டூ மினிட்ஸ்ல வந்தட்றேன்..." மேலே ஐந்தாம் தளத்தில் இருக்கும் ஆடையகத்தில் ஏதோ பிரச்சனை என வர்மன் கூற மூன்றாம் தளத்தில் இருந்த ஆபிஸ் அறையை விட்டு வெளியேறியவன் லிப்டை நோக்கி நடந்தான்.

***

"அண்ணி... சுடிதார்ல செமயா இருக்கீங்க..." நீளக்கை கை வைத்த சுடிதாரில் தேவதையாய் மிளிர்ந்தவளை பாராட்டினாள் அபியின் காதலி....

"வர மாட்டேன்னு சொல்லிட்டு ரெடியாகி நிக்கிறீங்க"

"இல்ல..."

"ஷப்பா.... அண்ணி... இந்த இல்ல வந்து இதுங்கள விடவே மாட்டீங்களா நீங்க?" ஒரு அழகான புன்னகை அவளிடம்...

"சரி வாங்க... ரக்ஷன் அண்ணா ஹால்ல வெயிட்டிங்.... அண்ணா கிட்ட இவங்களே விட்டுடுவாங்க...." அழைத்துக் கொண்டு கீழே வர எழுந்தவன் இருவரையும் பார்த்து புன்னகைத்தான்.

.....

"யாழினி"

தங்கத்தால் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பலகையுடன் மிளிர்ந்தது அந்த பதினைந்து தள அடுக்குமாடி ஹைபர் மார்கெட்....

காரிலிருந்து இறங்கி நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதன் தோற்றமே மிரட்டி வைக்க சட்டென யாழினியின் கைகளை பற்றினாள் பாவை....

"தைரியம்னா என்ன விலைன்னு கேப்பீங்க போல இருக்கே அண்ணி.... பயப்படாதீங்க கடை நம்மளோடது தான்.... அண்ணா உள்ள தான் இருப்பாங்க... வாங்க" வாசலுக்குள் நுழையவே கிட்டத்தட்ட ஐந்து நிமிடமாவது எடுக்கும் போலும்...

அவ்வளவு நீளமாக இருக்க இரு மருங்கிலும் அழகாக பூக்கள் நடப்பட்டிருந்தது.

அவர்கள் வாசலில் காலடி எடுத்து வைக்க திடீரென அதி வேகத்தில் பாய்ந்து வந்தது ஒரு தோட்டா!!!

தொடரும்.....

22-07-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 06 [ A ]



தரை தளத்தில் தங்கைக்காக காத்துக் கொண்டிருந்தவனின் பார்வை திடீரென அவளை நோக்கி வந்த புள்ளட்டில் பதிய இதயம் தடை பட்டு நின்றதில் எப்படித்தான் தன்னை சமாளித்தானோ அருகிலிருந்த பூச்சாடியை எடுத்து சரியாக குறி பார்த்து வீச அது பட்டதில் அதன் திசை மாறி கண்ணாடி உடைந்து சிதற அமைதியாய் இருந்த இடம் அடுத்த நிமிடம் அமர்க்கலமாகிப் போனது....



"ரக்ஷன்..... வெளிய ஒருத்தன் போக கூடாது..... கமான்" நண்பனின் காட்டுக் கத்தலில் நடப்புக்கு வந்தவன் வேகமாய் வெளியே ஓட தங்கையை நோக்கி ஓடி வந்தான் கதிர்.



"கு.... குட்டிமா" அதிர்ந்து நின்றிருந்தவளை இழுத்து அணைத்தவன் அவளை எவ்வளவு இறுக்க முடியுமோ அவ்வளவு இறுக்கினான் தனக்குள்.....



"அ.... அ.... அண்ணா.... அ... அ... அண்ணி" திக்கித் தினறி அவள் சொல்லவும் சட்டென மனைவியின் புறம் திரும்பியவன் அவள் இன்னுமே அதிர்ந்திருப்பது கண்டு வலது கை வளைவில் தங்கையை பிடித்திருந்தவன் இடக்கையை நீட்டி அவளை தன் புறம் இழுத்தணைக்க சுமர்ணை வரப்பெற்றவளாய் உடல் நடுங்க கணவனுக்குள் ஒன்றினாள் பாவை....



அதற்குள் ரித்விக்கும் பதற்றமாய் உள்ளே நுழைய பேசாதே என கண்ணை காட்டி விட்டு இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு லிப்டினுள் செல்ல நண்பனுக்காக காத்திருக்க துவங்கினான் ரித்விக் ரக்ஷன்.



.......



"குட்டிமா.... ஒன்னில்லடா...." தங்கையை அமர வைத்து விட்டு மனைவியையும் அமர வைத்து நிமிர்ந்தவன் தைரியமளிக்க முயன்றான்.



"ப.... பயமா இருக்குணா"



"ஷ்.... ஒன்னில்ல டா... அதான் அண்ணன் இருக்கேன்ல?"



"....."



"நீங்க இங்கேயே இருங்க.... தோ வந்தட்றேன்" அவள் தலையாட்ட எழப்போனவனை இறுக்கப் பற்றியிருந்தாள் மனைவி....



"பயப்பட எதுவுமில்ல வர்ஷினி.... நா இப்போ வந்துடு...."



"ப்ளீஸ் போகாதிங்க மாமா.... "நீர் திரையிட நிமிர்ந்து சொன்னவளை அப்படியே விட முடியாமல் தயங்கித் தயங்கி அவள் கூந்தலை வருடியவன்



"இப்போ வந்தட்றேன்... யாழினி கூட இருப்பா.... பயப்படாத" அவள் கண்கள் யாசித்த மறுப்பையும் பொருட்படுத்தாது வெளியேற உடனே தன்னை நெருங்கி அமர்ந்த அண்ணியை பார்க்கவே பாவமாக இருந்தது யாழினிக்கு....



......



பெரும் சீற்றத்துடன் தடதடவென கீழிறங்கி வந்தவன் நண்பனிடம் விரைந்தான்.



"ஒருத்தனும் வெளிய போயிடல மச்சான்...." தான் கேட்கு முன்பே சொன்னவனை பார்த்து தலையசைத்தவன்



"வர்மா...." கத்தி அழைத்தான்.



"பையா...."



"சி. சி. டிவி பூட்டேஜ் எல்லாம் என் கைக்கு வந்தாகனும்"



"எடுத்துட்டு வர்றேன் பையா...." அவன் செல்லவே மீண்டும் நண்பனிடம் திரும்பினான்.



"ரக்ஷன்.... நீ கடைல இருக்கறவங்க சேபான்னு பாத்துட்டு வா.... நா வந்தவனுங்கள கவனிக்கிறேன்"



"ஓகே மச்சி.... பட் நீ தனியா போறது சேபா படல எனக்கு.... "



"நா முன்னாடி போறேன்.... நீ வேலைய முடிச்சிட்டு வந்துடு" அவன் விறுட்டென வெளியேறி விட நண்பன் சொன்ன வேலையை பார்க்கச் சென்றான் ரித்விக்.



......



வெளியே கூட்டமாய் நின்றிருந்தவர்களை எடை போட்டுக் கொண்டிருந்தவன் வர்மன் லேப்டாப்புடன் வரவும் சட்டென அதை வாங்கி அலசியவனின் கண்கள் கூட்டத்தை மீண்டுமொருமுறை அலச இப்போது கூட்டத்துடன் கலந்து விட்டிருந்தவர்களை தனியாக அடையாளம் காண முடிந்தாலும் மக்கள் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காமல் எப்படி பிரித்தெடுக்கவென யோசித்துக் கொண்டிருந்தவன் திடீரென வர்மனின் காதிற்குள் ஏதோ குசுகுசுக்க



"ஓகே பையா...." உள்ளே ஓடினான் அவன்....



கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு நின்றவன் அசையாது அப்படியே நின்று விட கூட்டத்தில் இருந்த ரவுடிகளுக்கு தான் மண்டை குழம்பிற்று....





சுற்றியிருந்த கூட்டம் திடீரென கலையத் துவங்க ஒருவர் முகத்தை ஒருவர் பாத்துக் கொண்டவர்களுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை....



கூட்டம் அடித்துப் பிடித்துக் கொண்டு உள்ளே செல்வதில் மும்முரமாக இருக்க அவர்கள் கிளம்ப யத்தனிப்பதற்குள் அனைவரும் சென்றிருக்கவே மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் வெளிவர மர்மமாய் சிரித்தான் கதிர்...



அவனுக்கு தெரியாத மக்கள் மனமா....



என்னதான் உயிருக்கு பிரச்சனையாக இருந்தாலும் பொருள் தேடுவதில் மனிதர்களை மனிதர்களே மிஞ்ச முடியாதல்லவா???



((அய்யய்யோ கத எழுத போனா தத்துவமா வருது நண்பா 😂))



அந்த வழியை தான் அவனும் பின்பற்றியிருந்தான்.



வர்மனிடம் கூட்டத்திலிருக்கும் ஒருவருக்கு உள்ளே இலவசமாக பொருட்கள் விற்பதாக சொல்லச் சொல்லி அனுப்பியவனுக்கு ஒரு நல்லதா தங்களோட புருஷங்கள கையோடவே கூட்டி கிட்டு போய்ட்டாங்க...



அப்படி வர்மன் செய்ததில் தான் கூட்டம் உயிர் பயம் நீங்கி உள்ளே செல்ல முண்டியடிக்க தனியா மாட்டி கிட்டாங்க ரவுடிங்க....



"சோ.... என் கோட்டைக்குள்ள வந்து என் தங்கச்சி மேல கை வெக்கிற அளவுக்கு உங்க நொய்யாக்கு தைரியம் ஜாஸ்தியாகிடுச்சுல்ல?" கையிலிருந்த ஆயுதங்கள் இறுகின.



"வெல்.... அவனுக்கு தைரியம் அதிகம்னு ஒத்துகுறேன்.... பட் உங்களோட தைரியத்தையும் நா தெரிஞ்சிக்கனும்ல... அது சரி... யாருடா உங்க.. " அவன் பேசி முடிக்கும் முன்னே ஒருவன் பாய தான் அணிந்திருந்த ஷர்ட்டுக்கு மறைந்திருந்த பெல்ட்டை திடீரென உருவியவன் கையோட வந்த வாளால் அவனை வெட்ட கண்ணிமைக்கும் நொடிக்குள்ளான அவன் தாக்குதலில் மிரண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தனர் மற்றவர்கள்.....



அவன் கண்களில் தெரிந்த ஆக்ரோஷத்தை விட அவன் பார்த்த பார்வை தான் அவர்களை உறைய வைத்ததுவோ!!!



அப்படியும் அடங்கி விடாமல் தன்னை தாக்க வந்தவர்களை பாரபட்சம் பார்க்காமல் கொன்று குவித்துக் கொண்டிருந்தான் அவன்....



கதிர்வேல் கிருஷ்ணா....



......



தனக்கு இடப்பட்ட வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன் நண்பனை கண்டு அதிர்ந்து தான் போனான்.



இருவர் ரத்த வெள்ளத்தில் ஒருவருக்கு மேல் ஒருவர் விழுந்திருக்க அவர்களை சிம்மாசனமாக்கி அமர்ந்திருந்தவனின் வலக்கை தன் வாளை இறுக்கப் பிடித்திருக்க இடக்கால் ஒருவனின் கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்தது.



அதை விட அவன் வெள்ளை வேஷ்டி சட்டையில் ஆங்காங்கே வெட்டுக்களும் இரத்தம் கசிந்தும்...



இரத்தத்தை உறைய வைக்கும் அவன் தோற்றம்!!!



பயந்தே போனான் நண்பன்...



அம்மாவை இழந்திருந்தவன் தன்னையும் தன் மனசாட்சியையுமே அனுப்பி வைத்து விட்டானா???



பெண்கள் பார்த்தால்???



பதற்றமாய் நண்பனை நெருங்க அப்போதுதான் அவன் கேட்டுக் கொண்டிருந்தது தெளிவாக விழுந்தது.



"சொல்லுடா.... யாரு சொல்லி செஞ்ச... சொல்லு" ஒவ்வொரு வார்த்தைக்கும் கால் கழுத்தை அழுத்த உயிருக்கு போராடினாலும் வாயை மட்டும் திறந்தானில்லை அவன்....



"இப்போ சொல்ல போறியா இல்லயா...." கண்களை அவன் மீதே நிலைக்க விட்டிருந்தவன் அவன் பதில் சொல்லாமலிருக்கவும் தன் காலை இன்னுமின்னும் அழுத்த திடீரென நின்று போனது அவன் போராட்டமெல்லாம்....



"ஆஆஆஆஆ" பெருங் குரலெடுத்து கத்தியவன் தன் வாளை தூக்கி தூர எரிந்து விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் துவங்க நண்பனிடம் பேசவே பயமாக இருந்தது ரக்ஷனுக்கு....



......





"யாழ்.... எ... எ... என்கு பயமா இருக்கு.... மாமாவ பாத்துட்டு வந்துடலாமே ப்ளீஸ்...."



"இல்ல அண்ணி.... அண்ணா வெளில வர கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.... வேண்டாம்"



"இல்ல யாழ்.... எனக்கு அவங்கள இப்போவே பாக்கணும்...."



"சொன்னா கேளுங்க அண்ணி.... வெளியில ரவுடிங்க இருக்காங்க...."



"இல்ல பரவால்ல எ... எ... எனக்கு மாமாவ பாக்....." அவள் கூறிக் கொண்டிருக்கும் போது அவன் கத்தவும் பயந்து போன பெண்கள் இருவரும் கீழ் தளம் நோக்கி வரவும் அவர்களை கண்டு அதிர்ந்து ரக்ஷன் திரும்பவும் சரியாக இருக்க ஆண்களேயே உறைய வைக்கும் அவன் தோற்றத்தில் பெண்கள் எம்மாத்திரம்.....



தன் அண்ணனா???

தன் கணவன் தானா???



இருவரும் சிலையாய் சமைய அவர்கள் புறம் எதேச்சையாய் திரும்பியவனின் கண்கள் மனையாளை கண்டதும் சிவப்பேற தன்னை நோக்கி அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நொடியும் நெஞ்சாங்கூடு திடும் திடுமென அதிர உடல் மீண்டும் மீண்டும் தூக்கிப் போட்டது காரிகைக்கு!!!



ஆக்ரோஷமாய் வந்து மனையாளை அடிக்க கையோங்கியவனின் கையை ஆவேசமாய் பற்றித் தடுத்திருந்தான் அபினவ் ஆதர்ஷ்....



தகவல் தெரிந்த அடுத்த நொடி நண்பனுக்காக வந்திருந்தாலும் அவன் தங்கையை திரும்பிப் பார்த்த பார்வையிலேயே தெரிந்து போனது அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வு....



"விடுடா கைய" கடித்த பற்களுக்கிடையே வெளிவந்தது வார்த்தைகள்....



"என்ன மீறி அவள நீ தொட முடியாது"



"அத சொல்ல நீ யாருடா?"



"அவளோட அண்ணன்...."



"அது நீ தான் சொல்லிக்கனும்....அவ ஒரு அனாதை"



"ஏய்...." நண்பனென்றும் பாராமல் கதிரின் ஷர்ட் காலரை இறுக்கப் பற்றி இருந்தான் அபி.



"யாருடா அனாதை.... அவளா... அவ இல்ல நீ....நீ தான் அனாதை..." நண்பன் வார்த்தை கூராக சென்று தாக்க அவனை பிடித்து இழுத்தவன் விட்டான் பளாரென்றொன்று...



"ஆமா... நா அனாதை தான்... அனாதை தான்டா..... அம்மாப்பா அண்ணா யாருமே இல்லாத அனாதை தான்.... ஆனா அதுக்கு காரணம் யாரு.... நீயும் உன் குடும்பமும் தானே..."



"ஆமாடா நாங்க தான் காரணம்.... அதுக்கான தண்டனைய எங்களுக்கு கொடுக்காம ஏன் அவள கஷ்டப்படுத்துற... சொல்லுடா" நண்பனின் ஷர்ட் காலரை பிடித்து ஆக்ரோஷமாய் உலுக்கினான் அபி.



"சொல்லு இடியட்.... அவக்கு ஏன் தண்டன கொடுக்குற?"



"ஏன்னா... அவ துரோகி... என் பொம்மேக்கு வாக்க கொடுத்துட்டு அத நிறைவேத்தாம போன துரோகி அவ" உச்சாஸ்தியில் கத்த ஏற்கனவே இருவர் சம்பாஷனையிலும் உறைந்து போயிருந்தவர்களுக்கு அவன் வார்த்தைகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியதென்று வார்த்தைகளால் மட்டும் வடித்து விட முடியாது ஆதர்ஷ் உட்பட....



"எ... எ... என்னடா சொல்ற? " குரல் உடைய கேட்ட நண்பனை உறுத்து விழித்தவன் வேறு பக்கம் வெறிக்க



"சொல்லு கிருஷ்.... சொல்டா...." மீண்டும் மீண்டும் உலுக்கினான் நண்பன்.



"எடுடா கைய"



"நீ சொல்லு"



"எடுங்குறேன்ல... எடு" கோபமாய் அவனை பிடித்து தள்ள நிலை தடுமாறி விழப்போனவனை சட்டென தாங்கினான் ரக்ஷன்....



"என்ன தொட்ட.... கொன்னுடுவேன்"



"நா தொடுவேன்... எனக்கு அந்த உரிம இருக்கு"



"என்ன உரிம இடியட்... உனக்கும் எனக்குமான உறவு இன்னியோட முடிஞ்சுடுச்சு.... ஒரு அனாதை கூட உறவு கொண்டாடிட்டு வர வேண்டிய அவசியம் உங்களுக்கு தேவயில்லன்னு நெனக்கிறேன் சார்" வார்த்தைகளில் எள்ளல் வழிந்தாலும் அவன் கண்களில் அப்படி ஒரு வலி....



அப்போதுதான் தான் சொன்ன வார்த்தைகளின் வீர்யம் உறைத்தது அபிக்கு....



"மச்சான் நா.... " அவன் பேச துவங்கு முன்னே அவன் நடக்கத் துவங்கிட



"அ... அ... அண்ணா... " கையை நீட்டியவாறு மயங்கிய யாழினியை சட்டென தாங்கிப் பிடித்தான் அபி....



"பேபி மா....ஏய்... எந்திரி... ப்ளீஸ்..." அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே திடீரென கைகளிலிருந்து பறிக்கப்பட தனக்கு சொந்தமான பொருளை பிடுங்கி எடுத்த பின் விழிக்கும் குழந்தையை போல் விழித்தான் ஆதர்ஷ்...



"இப்போ தானே தொடாதன்னு சொன்னேன்" அபியிடம் காய்ந்தவன் தங்கையை பிடித்தவாறே கத்தினான்.



"வர்மா....தண்ணி எடுத்துட்டு வா..."



"தோ ணா...."



......



"குட்டிமா.... குட்டிமா...." தங்கை கண்ணத்தை தட்ட விழி திறந்தவளின் கண்கள் அவசரமாக அண்ணியை அலச இருந்த இடத்தில் அவள் இல்லை....



" அ.... அ.... அண்ணா.... அண்ணி... அண்ணி" அவள் சொல்லவும் தான் அப்படி ஒருத்தி இருந்ததே அனைவருக்கும் ஞாபகம் வந்தது போலும்....



சடாரென தன் மனையாள் இருந்த இடத்தை திரும்பிப் பார்த்தவன் அபியின் முகத்தை மீண்டுமொருமுறை முறைத்து விட்டு திரும்பி விட சோர்ந்து போய் தங்கையை தேடி ஓடினான் அபினவ் ஆதர்ஷ்.



"ரித்விக்...." தான் பேசியும் மௌனம் சாதித்த நண்பனின் கோபம் புரிந்தாலும் அவனை சமாதானப்படுத்தும் நோக்கம் இப்போதைக்கு இல்லவே இல்லை அவனுக்கு....



"ரித்விக்...." சற்றே அழுத்தமாக வெளிவந்ததுவோ....



நண்பனை என்னவென்பது போல் பார்த்தானே தவிர எதுவுமே பேசாமல் நின்று கொள்ள



"என் மேல அவ்வளவு கோபமா இருந்தா அவன் கூடவே போய் இருந்துக்க வேண்டியது?" அவனிடமும் எகிற அவனை ஒரு பார்வை பார்த்தவன் பேசாமல் வெளியேற பல்லை கடித்து விட்டு தங்கையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டான் கதிர்வேல்....



......



இரவு....



நள்ளிரவை தாண்டியும் அவள் கிடைக்காமல் போக தங்கையின் நச்சரிப்பு தாங்காமல் அவளை தேட வெளியே வரவும் ரக்ஷனுடன் அவள் உள்ளே வரவும் சரியாக இருக்க கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு இருவரையும் கூர்ந்து பார்த்தான் அவன்....



"வழி விடு...." எங்கோ பார்த்துக் கொண்டு சொன்ன நண்பனை பார்த்து பொங்கி வந்த சிரிப்பை மெல்லிய கீற்றில் அடக்கியவன் சட்டென விலக அவர்கள் உள்ளே நுழையவும் அவர்களையே சில நிமிடங்கள் பார்த்தவன் இறங்கி நடந்தான் தோட்டத்திற்கு.....



......



அவன் கொடுத்த தான் ஒரு அனாதை எனும் அதிர்ச்சியில் எப்படித்தான் அவர்களை விட்டு விலகி நடந்திருந்தாளோ....



கால்கள் நடை பயின்று கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க தொப்பென அமர்ந்து விட்டிருந்தாள் மாது.



வெகு நேரமாய் அதிர்ச்சியிலேயே அமர்ந்திருந்தவளை அந்தக் கார்மேகமும் பார்த்துக் கொண்டிருந்தோ என்னவோ சடசடவென தன் நீர்திவளைகளை தெளித்து விட்டது அக்காரிகையின் மேல்.....



மின்சாரம் தாக்கியது போல் திடுக்கிட்டு விழித்தவள் அழுத அழுகையில் அந்தக் கல்லும் கரைந்து போகும்....



'ஏன் என்ன படச்ச.... எல்லோருக்கும் பாரமா இருந்திருக்கேன்னு தெரியாமலே வாழ்ந்திருக்கேனே.... நா அப்படி என்ன பண்ணிட்டேன்னு என்ன இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்ருக்க.... சொந்த அப்பாம்மாக்கு வேண்டாம தூக்கி எரிஞ்சிட்டு போயிருக்க என்ன அப்பிடியே உன் கிட்டவே எடுத்துகிட்ருக்க வேண்டியது தானே.... ஏன் இவங்க கிட்ட கொண்டு வந்து விட்ட.... ஏன் என்ன பிடிக்கல அவங்களுக்கு.... ஏதோ துரோகம்னு எல்லாம் சொன்னாங்களே.... நா இது வர ஒரு எறும்புக்கு கூட கெட்டது நெனச்சதில்லங்குறப்போ அவங்க லைப்ல நுழஞ்சு நா எப்பிடி துரோகம் பண்ணியிருக்க முடியும்.... அவங்கள நா இதுக்கு முன்னாடி பாத்தது கூட இல்லயே.... அப்பறம் எப்பிடி அவங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு சொல்றாங்க" ஏங்கி ஏங்கி கதறி அழுதவள் கடவுளிடமே மண்யிட்டாள்.



அப்படியே அமர்ந்திருந்தவளை தான் அபியும் ரக்ஷனும் வந்து அழைத்து வர வந்து விட்டாலும் மனம் ரணமாய் வலித்தது பேதைக்கு....



நேரே அறைக்கு வந்து உடைமாற்றி பால்கனிக்கு வந்து நின்றவள் தோட்டத்தில் நின்ற கணவனையே பார்க்க அதே நேரம் கீழே தோட்டத்திலுருந்தவனின் கண்களும் தன் மனையாளையே தான் துளைத்துக் கொண்டிருந்தது.



🎼ஒரு நொடியும் ஒரு பொழுதும் உன் நெனப்ப ஒழிச்சதில்ல



ஒரு யுகமா பல யுகமா உறவ அத்து தவிச்சதில்ல



இதில் யாரோட கண்ணுபட்டு பிரிஞ்சது நம்ம வழி



இது விதியோட விளையாட்டா விழுந்தது பெரிய பழி



என் வேதனய எடுத்து சொன்னா வெயிலும் அழுகுமடி(டா)



அந்த சாமி இத கேட்டுச்சுன்னா உனக்கே புரியுமடி(டா)🎼



அவள் பார்வையை விலக்கிய போதும் அவன் விலக்கினானில்லை....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மௌனமாய் வடிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தவள் உள்ளே சென்று விட தன் வலக்கை சுட்டு விரலையும் நடு விரலையும் சேர்த்து நெற்றியில் அழுத்தத் தேய்த்து விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் துவங்கியவனின் நடை நண்பண் வரவும் அப்படியே நின்று போனது.



"நா பேசுனது உன் மரமண்டைக்கு ஏறவே இல்லல்ல?" திடுமென கேட்டவனின் கேள்வியில் எதுவுமே புரியவில்லை கதிருக்கு.....



"பதில் சொல்லுங்க மிஸ்டர். கதிர்வேல் கிருஷ்ணா"



"ப்ச்... புரில"



"அவங்க பண்ணி இருக்க மாட்டாங்க... அது பத்தி யோசிச்சு பாருன்னு சொன்னது மறந்து போச்சா?"



"....."



"அப்போ நீ அத பத்தி ஐ மீன் என்ன கண்டுக்கவே இல்ல அப்படிதானே?"



"ஹே இல்லடா..."



"என்ன இல்லடா... அதான் நீ இன்னிக்கு நடந்து கிட்டதுலயே தெரிஞ்சு போச்சே... படிச்சு படுச்சு சொன்னேனேடா உன்கிட்ட... அவளுக்கு தண்டன கொடுக்காதன்னு.... ஏன் இப்பிடி நடந்துக்குற மச்சான்?" அதற்கு மேல் போராட முடியாமல் சட்டென உடைந்தது அவன் குரல்....



"நீ அனாதையே இல்லங்குறப்போ நீ ஒரு அனாதைன்னு சொல்லும் போது உனக்கு வர்ற வலிய விட தான் உண்மையிலேயே அனாதைன்னு தெரியுறப்போ எப்பிடி வலிச்சிருக்கும் யோசிக்க மாட்டியா மச்சான் நீ?"



"....."



"உனக்கு மட்டுமாடா வாழ்க்கைல வலிகள் இருக்கு.... உனக்கு யாரோ கொடுத்த வலிக்கு ஒரு அப்பாவி பொண்ண தண்டிக்கிறது என்ன நியாயம் மச்சி? நா திரும்பவும் சொல்றேன் கதிர்.... கண்டிப்பா ஏதோ தப்பு நடக்குதுடா"



"அப்போ அவன் பேசுனதுல எந்த தப்புமே இல்லல்ல மச்சான்?"



'கடவுளே... நா இவ்வளவு நேரம் கேட்ட கேள்வி இவன் மண்டைக்கு ஏறவே இல்லயா....' மனதிற்குள் புலம்பியவன் நண்பனை முறைத்தான்.



"சொல்லு ரித்விக்.... "



"தப்பு தான்.... அவன் பேசுனது தப்பு தான்.... பட் நீ பண்ணது பெரிய தப்பு"



"நா வந்து...."



"மன்னிப்பு கேக்க வேண்டியது என் கிட்ட இல்ல.... உன் பொண்டாட்டி கிட்ட.... ப்ளீஸ் அவ கிட்ட போய் பேசுடா... பேச பிடிக்கலயா விலகிடு.... ஹேர்ட் பண்ணாத" அவன் சென்று வெகு நேரமாய் அப்படியே அசையாது நின்றவன் அன்று ராஜாராம் வீட்டுக்கு பாதுகாப்புக்காய் அனுப்பி வைத்தவர்களின் தலைவன் ஷங்கருக்கு அழைத்தான்.



.......



காலை.....



யாழினி ஹைபர் மார்கெட்.....



கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவனின் அறை கதவு தட்டப்பட அனுமதி வழங்கவும் உள்ளே நுழைந்தாள் ஒரு நவநாகரிக மங்கை!!!



அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவளை பார்த்து அதிர்ந்து தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்....



அவள் ஷாலினி!!!



அவனுக்கே அவளைப் பற்றி கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் தான் தெரிந்திருந்தது.



என்ன தான் நடந்தாலும் அவனால் உலகில் வெறுக்க முடியாத ஓர் ஜீவன்....



"ஹாய் மாமா......" அவள் அழைப்பு ஏனோ மனையாளை ஞாபகப்படுத்த மனது பிசைந்தது.



"வா ஷாலு.... உட்காரு...." இருக்கையை காட்ட அமர்ந்து கொண்டாள் பெண்....



"எப்பிடி இருக்க?"



"நல்லா இருக்கேன் மாமா.... நீங்க?"



"ம்.... இருக்கேன்"



"யாழினி...?"



"இருக்கா மா"



((நண்பா இவன் பொண்டாட்டிய தவிர எல்லோர் கூடவும் நல்லா தான் பேசுறான்))



"எனி ப்ராப்ளம்?"



"நத்திங்.... சும்மா தான்"



"நீ தனியா ஹாஸ்டல்ல தங்குறதுக்கு வீட்டுக்கே வந்து தங்கலாமே?"



"அது..... "



"எந்த கூச்சமுமில்ல வா"



"ஓகே மாமா.... அப்போ நா ஈவ்னிங் வர்றேன்" அவள் செல்லவே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் கதிர்.



***



"அண்ணி...." அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவள் அவள் நடுங்கிக் கொண்டிருப்பது கண்டு பதற்றமாய் அருகில் ஓடினாள்.



"அண்ணி.... என்னாச்சு.... அச்சோ ரொம்ப ஜுரமா இருக்கே...." தலையை தொட்டுப் பார்த்தவள் உடனே அண்ணனுக்கு அழைத்தாள்.



"சொல்லுடா"



"அ... அண்ணா அண்ணிக்கு ரொம்ப ஜுரமா இருக்கு"



"வாட்.... எப்போதுல இருந்து?"



"தெரிலணா...."



"சரி இரு நா ரக்ஷன அனுப்பி விட்றேன்"



"என்னண்ணா பேசுறீங்க..... அண்ணி உங்களுக்கு தான் பொண்டாட்டி.... ரக்ஷன் அண்ணாக்கு இல்ல.... மைன்ட் இட்" உண்மையில் கோபம் வந்தது பேதைக்கு....



((ஷ்ஷப்பா.... இவனுக்கு ஒவ்வொரு தடவையும் அவ உன் பொண்டாட்டிடான்னு ஞாபகப்படுத்தனும் போல நண்பா))



"அண்ணா...."



"வர்றேன்" சட்டென அழைப்பு துண்டிக்கப்பட வெந்நீரை எடுத்து வந்தவள் ஒரு சிறிய துணி கொண்டு நெற்றியில் ஒத்தி எடுத்தாள்.



.....



டாக்டரையும் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவன் அவர் அவளை பரிசோதிக்க துவங்கவும் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு ஓரமாக நின்று கொண்டான்.



"மிஸ்டர். கதிர்.... இது அவங்களுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரை...." அவனிடம் மருந்து ஸ்க்ரிப்டை நீட்ட வாங்கிக் கொண்டவன்



"என்னாச்சு.... ஏன் திடீர்னு?" கேட்க வேண்டிய கட்டாயத்தில் கேட்பவனை போல் கேட்டு வைத்தான்.



"அவங்க ரொம்ப அதிர்ந்து போயிருக்காங்க.....இது நடந்துட கூடாதேன்னு நாம நெக்கிறப்போ நமக்கு பயத்துல சில நேரங்கள்ல ஜுரம் வர்றா மாதிரி இவங்களுக்கு தான் கேட்ட ஆர் பார்த்த விஷயங்கள ஜீரணிக்க முடியாம இருந்திருக்கு.... அதனால தான் ஜுரம் வந்திருக்கு கதிர்.... அண்ட் ரொம்ப வீக்கா இருக்கா.... சாப்ட் நேச்சர் கேர்ளா இருக்கணும்.... ஐ கெஸ்.... இல்ல ஏன் சொல்றேன்னா ஊசி போட போனதுக்கே மிரள்றா.... டேக் கேர் பை...." அவர் செல்ல பின்னால் தானும் கிளம்பப் போன அண்ணனின் பின் வந்து நிறுத்தினாள் பெண்....



"அண்ணா... "



"சொல்லு குட்டிமா"



"போ....அண்ணி கூட இரு"



"....."



"என்னை இன்னுமே சின்ன குழந்தைன்னு நெனச்சு கிட்டு இருக்கியா?"



"அ... நா.... "



"பொய் சொல்ல நினைக்காத கிருஷ் அண்ணா.... நானும் எல்லாத்தையும் பாத்து கிட்டு தான் இருக்கேன்... ஆர்த்தி அண்ணி சாகறதுக்கு அண்ணிதான் காரணம்குறா மாறி இவங்கள ட்ரீட் பண்ற நீ"



"குட்டிமா நா..... "



"பேசாதணா.... கோபத்த தூக்கி போடு முதல்ல....இது என்ன ட்ரஸ் பண்ணி இருக்க... கழுத்துல சங்கிலி... கைக்கு காப்பு....நீ ஒரு போலிஸ் ஆபிஸர் ணா....அப்பா இப்பிடி இருடான்னு சொல்லிட்டு போனாங்களா???நேத்து எப்பிடி உட்கார்ந்திருந்த??? ஒரு வேல அம்மா உயிரோட இருந்திருந்தாங்கன்னா எவ்வளவு துடிச்சு போயிருப்பாங்க தெரியுமா???ஏன் நாங்க சொல்றத புரிஞ்சிக்க மாட்டேங்குற.... அப்பாம்மா அண்ணா ஆர்த்தி அண்ணி சாவுக்கு தண்டன வாங்கி கொடுக்க நெனச்சீன்னா அப்பாவுக்கு புடிச்சா மாதிரி மாறு.... அப்பறமா தேடு....இந்த ரவுடி அண்ணன எனக்கு பிடிக்கலண்ணா.... உன்ன பாத்தாலே பயமா இருக்கு... அண்ணி பாவம்ணா... ப்ளீஸ் எனக்காக இந்த கத்தி வாள் எல்லாம் தூக்கி போட்டுடு....ஒரு ரவுடியா இருந்து பாதுகாக்க முடிஞ்ச உன்னால போலிஸா முடியாதா???ரெண்டு பேருமே நீ தானேண்ணா.... ப்ளீஸ் ணா... இ... இ... இத தூக்கி போட்டுடு" கரகரவென கண்ணீர் வழிய அதிர்ந்து தங்கையையே பார்த்திருந்தவன் அவளை சட்டென இழுத்து அணைத்துக் கொள்ள அவன் கண்களுமே கலங்கிப் போய் தான் இருந்தது.



***



கிருஷ்ணன் க்ரூப்ஸ் ஆப் கம்பனீஸ் தலைமையகம்.....



((அதாவது நண்பா.... அதான் அர்ஜுன் பாத்து கிட்ட ஆபிஸ நம்ம கதிர் ரக்ஷனுக்கு பாத்துக்க சொன்னான்னு சொல்லி இருந்தேன்ல???

அதே அதே...

அந்த கம்பெனியோட எம். டியா தான் இப்போ ரக்ஷன் இருக்காப்ல....



இதான் மேட்டர்))



பீ. ஏ போஸ்டுக்கு ஆள் தேவை என விளம்பரம் கொடுத்திருந்ததற்கான நேர்முகத்தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்க வரிசையில் அமர்ந்திருந்தவர்களுக்கு சற்றும் பொருந்தாமல் ஓரமாய் அமர்ந்திருந்தாள் ஓர் மாது!!!



அழகுக்கு இலக்கணமாய் இருந்தவளின் முகம் முழுதும் வேதனையின் சாயல்....



நாட்டுப்புற பெண் போலும்....அவள் தோற்றம் அப்படித்தான் இருந்தது.



மஞ்சள் நிற பாவாடைக்கு சிகப்பு நிற தாவணி அணிந்திருந்தவளுக்கு ஒரு முறையாவது திரும்பி பார்க்க வைக்கும் அழகு நிச்சயமாய் இருந்தது என்று தான் கூற வேண்டும்.....



அவள் பெயர் அர்ச்சனா!!!



தனக்கு முன்னிருந்தவர்கள் ஒவ்வொருவராய் சென்று விட கடைசியாய் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தவளை பார்த்த ரித்விக்கின் புருவங்கள் ஆச்சரியத்தில் மேலுயர அதற்குள் அவன் முன் வந்து விட்டிருந்தாள் பாவை....



((எஸ் எஸ்.... அன்னிக்கு ஹாஸ்பிடல்ல அவன் மேல மோதி விழப்போனாளே...அவளே தான் நண்பா))



"ஹெவ் அ ஸீட்...."



"தே...தே... தேங்க்ஸ் சார்"



"ஹே ரிலாக்ஸ்டா இருங்க...."



"சா... சாரி சார்"



"இட்ஸ் ஓகே.... தென்... என்ன படிச்சிருக்கீங்க?"



"எம்.பி.ஏ" [[ MBA - Master of Business Administration ]]



"ஓகே.... ஏன் இந்த ஜாப்புக்கு அப்ளை பண்ணீங்க?"



"தெ... தெரில சார்"



"வாட்.... ஆர் யூ ஜோக்கிங் மிஸ். அர்ச்சனா?"



"நோ சார்..."



"சரி இந்த வேல கிடக்கலன்னா என்ன பண்ணுவீங்க?"



"வேற வேலைக்கு அப்ளை பண்ணுவாங்க"



"யாரு பண்ணுவாங்க?"



"சித்தி"



"வேல செய்ய போறது நீங்களா இல்ல சித்தியா?"



"நான் தான் சார்"



"ஏன் உங்களுக்கு வேலை செய்றதுல இன்ட்ரெஸ்ட் இல்லயா... கட்டாயத்துல தான் வேலைக்கு வர போறீங்களா?"



"நா... நா... சாரி சார் என்னால பதில் சொல்ல முடியாது" அவளை கூர்ந்து பார்த்தவன் பேசாமல் அவள் பைலை புரட்டத் துவங்கினான் உதட்டோரச் சிரிப்புடன்....



எல்லாவற்றிலும் நன்றாகவே மார்க் வாங்கி தேறி இருந்தாள்...



வேலைக்கு நூறு வீதம் தகுதி உடையவள் தான்....



இருந்தாலும்.....ஏதோ இடித்தது ரக்ஷனுக்கு....



"ரிசப்ஷன்ல அப்பாயின்மென்ட் லெட்டர் பில் பண்ணி கொடுத்துடுங்க"



"சா... ர்"



"யூ ஆர் ஸிலெக்டட்"



"ரொம்ப நன்றி சார்" அவளது நன்றி அவளுக்கு வேலை கிடைத்ததற்காக மட்டும் இல்லை என நிச்சயமாய் புரிந்தது அவனுக்கு....



"யூ மே கோ"

புன்னகைத்தான்



***



"ஷங்கர்.... நம்ம இடத்துக்கு வா.... பேசனும்" அழைப்பை துண்டித்தவன் வர்மனுடன் கிளம்பினான்.



((அப்போ நீ இன்னும் திருந்தல.... அப்படித்தானே???))



.....



அவனுக்கு முன்பாகவே ஷங்கர் வந்து காத்திருக்க உள்ளே நுழைந்தவன் அவன் முன்னே சென்று அமர்ந்து கொண்டான்.



"உட்கார்"



"இல்ல பரவால்லணா"



"உட்காருடா" அவன் அமர நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.



"அன்னிக்கு ராஜா வீட்டுக்கு போனப்போ தாக்க வந்தவனுங்கள நீ இது வர பார்த்திருக்கியா?"



"இல்லணா" பட்டென பதில் வரவும் அதிர்ந்து போனான் கதிர்.



'ரக்ஷனும் இப்படித் தானே சொன்னான்....அப்போ யாரு அவங்க?' மனதிற்குள் எழுந்த கேள்வியை அப்படியே தனக்குள் விழுங்கிக் கொண்டான்.



"யாருனு நினைக்குற?"



"நா இது வர எவனுங்க கிட்டவும் அவனுங்கள பாதத்தே இல்லணா...."



"உனக்கு தெரியாதவனுங்களோட அடியாட்களா இருந்தா?"



"என்னணா பேசுற நீ.... எனக்கு தெரியாத பெரிய தலைங்களா.... அதுக்கு சான்ஸே இல்ல.... இவனுங்கள வெளில இருந்து வரவெச்சிருக்கணும்னு தோனுது"



"வெளிலனா?"



"நமக்கு இங்க தான்ணா அத்துபடி... இத தாண்டி நிறைய பேரு இருக்கானுங்க.... அவனுங்கல்ல இருந்து வரவெச்சிருக்கலாம்... ஆனா அவன கொல்ல அவனே ஆள அனுப்புவானான்னு தான் எங்களுக்கெல்லாம் ஒரே ஷாக்" அவனுக்கும் அன்று அப்படித்தானே இருந்தது.



அப்போது தான் அவனுக்கு ஒன்று உறைத்தது.



அது.... அன்று ஹாஸ்பிட்டலில் தனியாக மாட்டியிருந்தவனின் மொபைல் வழியாக பேசியவனின் குரல் நிச்சயமாய் ராஜாராமின் குரல் அல்ல....



ரக்ஷன் சொல்வது போல் நடுவில் யாரோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.



((ஹப்பாடா.... யோசிக்க ஆரம்பிக்கிறான்))



அது மட்டும் உண்மையாக இருந்தால்???



கடவுளே!!!



"ணா...." "பையா..."



"ஹாங்...." இருவர் குரலிலும் திடுக்கிட்டு கலைந்தான் கதிர்.



"சரி நீ கெளம்பு.... வர்மா... குமரனுக்கு போன போடு...." சொல்லிக் கொண்டே நடந்தவனை தொடர்ந்தான் வர்மன்.



......



"ஹலோ சொல்லு கதிர்"



"குமரா.... ராஜாராமை பத்தின டீடெயில்ஸ் எனக்கு ராத்திரிக்குள்ள வந்தாகணும்... முக்கியமா அவங்க பிறப்பு, வம்சம் பத்தி இருக்கனும்.... புள்ளங்களோட டீடெயில்ஸ் தேவயில்ல"



"ஓகே ஓகேடா"



"ம்..." அழைப்பை துண்டித்தவன்



"வீட்டுக்கு போ" சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொள்ள விரைந்தது அந்த டார்க் னைட்.... (DARK KNIGHT JEEP)



......



"அண்ணி.... இது மட்டும் சாப்புடுங்க"



"என்னால முடில யாழ்.... ப்ளீஸ் போதுமே"



"நோ... நோ இது மட்டும்" வாய்க்குள் திணித்ததை கஷ்டப்பட்டு விழுங்கினாள் பாவை....



"அண்ணா வந்துட்டாங்க போல.... இருங்க வந்தட்றேன்" மிரண்ட அண்ணியின் கைகளை ஆதரவாக பிடித்து விட்டு கீழிறங்கிச் செல்ல அவன் உள்ளே நுழையவும் வீட்டு வாசலில் டாக்ஸி ஒன்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது.



இருவரும் ஒரு சேர திரும்ப ஒயிலாக உள்ளே நடந்து வந்தாள் அவள்...



ஷாலினி!!!



"ஹாய் மாமா"



"வா"



"யாருணா இது?"



"வேண்டியவங்கடா.... இங்க தான் இனிமே தங்க போறாங்க.... பேரு ஷாலினி"



"ஓஹ்.... ஓகே ணா...."



"வாங்க ஷாலு அக்கா"



"வாட் நா அக்காவா.... மாமா.... இவளுக்கு நா அண்ணின்னு சொல்லுங்க" அதிர்ந்தது யாழினி மட்டுமல்ல கதிரும் கூடவே....



"ஷாலினி என்ன பேசுற?"



"ஏன் மாமா.... நா பேசுனது தப்பா?"



'இவ தெரிஞ்சு தான் இதெல்லாம் பண்றாளா'



அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை அவனால்....



"அது வந்து... இத பத்தி அப்பறமா டிஸ்கஸ் பண்ணலாம் ஷாலு..... நீ போயி ரெஸ்ட் எடுத்துக்கோ...."



"எந்த ரூம் மாமா?"



"இங்க கீ.. "



"எனக்கு உங்க ரூமுக்கு பக்கத்துல தான் ரூம் வேணும்"



"ஓ... ஓ... ஓகே... போ... குட்டிமா இவளுக்கு என் பக்கத்து ரூம ரெடி பண்ணி கொடு"



ஆமோதிப்பாய் தலையசைத்தவளுக்கு ஏனோ அந்த ஷாலினியை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனது.



அவர்கள் செல்லவே தானும் மாடி ஏறி அறைக்குள் நுழைந்தவனின் கண்கள் மனையாளில் படிந்து மீள தானாய் அவளிடம் அழைத்துச் சென்றன கால்கள்.



அவள் அசதியில் தூங்கிக் கொண்டிருக்கவே கொஞ்ச நேரம் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இலேசாக அசையவும் விலகி நடந்த கால்கள் அவள் வார்த்தைகளில் வேரோடியது போல் நின்று விட்டன.



"மன்னிச்சிடுங்க மாமா.... ப்ளீஸ் கோபப்படாதிங்க... எனக்கு உங்கள பாத்தாலே பயமா இருக்கு.... அப்பறம் எப்பிடி துரோகம் பண்ணி இருப்பேன்... எனக்கு ஒன்னுமே புரில மாமா....." சலேரென திரும்பியவன் அவளை கூர்ந்து பார்த்தான்.



உண்மையில் சுயநினைவின்றி தான் பேசிக் கொண்டிருந்தாள்.



'தப்பு பண்ற கிருஷ்' மனம் இடித்துரைக்க மீண்டும் அவளிடம் செல்லத் திரும்பியவன் ஏனோ வெளியே வந்து அந்த பூட்டிய அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.



"மா.... என்னால முடிலமா.... ப்ளீஸ் திரும்ப வந்துடு.... எந்த பக்கம் போனாலும் எல்லோரும் என்னயே இறுக்குறா மாறி இருக்குமா.... வர்ஷினி கிட்ட ஏன் என்னால சாதாரணமா பேச முடில.... சொல்லுமா.... ஏன் என்னால பேச முடில.... அவ யாருன்னு தெரியுமாம்மா உனக்கு???



" அ.... அ.... அ... அவ அவ என் உயிர்மா.... என்னோட காதல்.... என் நம்பிக்க..."



எனக்கு எல்லாமே அவதான் மா.... ஆர்த்தி மேல காதல் ஏன் வரலன்னு தெரியுமா....ஏன்னா.... ஏன்னா என் மனசுல என் வரு தான் இருக்கா....



அவளயே கஷ்டப்படுத்துறா மாறி ஆக்கிடுச்சே இந்த விதி.... ஏன்மா எனக்கு மட்டும் இப்பிடி நடக்குது.... அவ என்ன பாத்து பயப்படும் போது எனக்குள வர்ற வலிய யாரும் அனுபவிக்க மாட்டாங்கமா.... எனக்கு என் வரு வேணும்மா.... அவள என் கிட்ட இருந்து பிரிச்சிடாத ப்ளீஸ்.... " கையிலிருந்த போட்டோவில் இரண்டு நீர்மணிகள் விழ சிரித்துக் கொண்டிருந்த தாயை தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் கதிர்வேல் கிருஷ்ணா!!!



தொடரும்......



23-07-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 06 [ B ]



இரவு....



எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ அழைப்பேசி தன் இருப்பை உணர்த்தியதில் தன்னை இழுத்திப் பிடித்தவன் அடண்ட் செய்து காதில் வைக்க மறுபக்கம் குமரன் தான் அழைத்திருந்தான்.



"சொல்லு குமரா"



"ஏன் உன் வாய்ஸ் டல்லா இருக்கு..... எங்க இருக்க?"



"வீட்ல தான்"



"குடிச்சிருக்கியாடா?"



"இல்லடா.... என்ன விஷயம்?"



"நா பதில் சொல்ல முன்னாடி நா கேட்டதுக்கு பதில்"



"....."



"அப்பா ரூமுக்கு போனியா?"



"ம்...."



"ஏன்டா.... வலிய நீயே தேடி போவியா? முதல்ல எந்திரிச்சு வெளிய வா"



"விஷயத்த சொல்லு"



"வெளிய வர்றியா இல்லயா?"



"வர்றேன்.... சொல்லு"



"நீ கேட்ட டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன்.... என் பெண்ட்ரைவ்ல தான் இருக்கு"



"ம்... ஓகே.... ரக்ஷன் ஆபிஸ் முடிஞ்சு வர்ற டைம் தான்.... அவன் கிட்ட கொடுத்து விடு"



"ஓகேடா.... நான் அவன் ஆபிஸ் முன்னால இருக்க செக் பாயிண்ல தான் இருக்கேன்.... நா கொடுத்துட்றேன்... நீ செக் பண்ணு"



"ஓகே... டேக் கேர் பை... " அழைப்பை துண்டித்து விட்டு முகத்தை அழுத்த துடைத்தவன் எழுந்து வெளியே வர அதே நேர‌ம் தன்னறையிலிருந்து வெளியே வந்தாள் ஷாலினி.



அவளை தாண்டி அறைக்குள் செல்ல தன்னை கண்டு கொள்ளாதது சிறு கோபத்தை ஏற்படுத்தியதோ என்னவோ அவனுடனேயே பின்னால் நுழைய கதவை அடைக்கத் திரும்பியவன் அவள் நின்றிருப்பது கண்டு திடுக்கிட்டுப் போனான்.



"என்னமா... ஏதாவது வேணுமா?"



"இல்ல மாமா... ஏன் தேவைன்னா மட்டும் தான் வர்னுமா?"



"இல்ல மா... வா..." புன்னகைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவளின் பார்வை வட்டத்தில் விழுந்தாள் அவனவள்.....



"யா... யா... யாரு மாமா இது?" அவள் அதிர்ந்து போயிருந்தது நன்றாகவே தெரிந்தாலும் இதற்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சி என்று தான் புரியவே இல்லை அவனுக்கு....



"என் பொண்டாட்டி"



"உ... உ... உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"



"எஸ்"



"எப்போ?"



"இரண்டு வாரமாச்சு?"



"வாட்? ஏன் என்கிட்ட சொல்லல மாமா.... ஆமா யாரு இவ பேரு என்ன?"



"அத்த பொண்ணு.... பேரு வ... ஐ மீன் அமிர்தவர்ஷினி"



"ஓஹ்.... புடிக்குமா இவள?"



"எஸ்.... "



"எவ்வளவு புடிக்கும்.... என்ன விடவுமா?" இதென்ன கேள்வி என்பது போல் பார்த்து வைத்தான் கதிர்.



"சொல்லுங்க மா... " அவள் முடிக்கும் முன் அவன் பார்வை அவள் அசைந்து கொண்டிருந்ததில் நிலைக்க பல்லை கடித்தாள் பெண்....



"மாமா...." அழுத்தம் கூடி இருந்ததோ



"ஹாங்.... சாரி ஷாலுமா... நாம அப்பறமா பேசலாம்... அவள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே"



"ஓகே மாமா" போலிப் புன்னகையை முகத்தில் தவழ விட்டவள் விறுட்டென வெளியேறி விட தன்னவள் அருகில் சென்று அமர்ந்தான் கதிர்வேல்....



"எப்பிடிடி இருக்க.... என்ன யாருன்னே உனக்கு தெரியாதுல... பட் என்னோடது எத்தன வருஷ லவ்னு தெரியுமா உனக்கு.... ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல கண்ணம்மா.... ஐ அம் ரியலி சாரிடா.... நானும் விலகி இருக்க தான் ட்ரை பண்றேன்.... பட் முடிலடி.... அதனால தான் என்னையும் அறியாம காயப்படுத்திட்றேன்...நா அப்பிடி பேசி இருக்க கூடாது தான்டா.... ஐ ஆம் சாரி அகைன்.... உன்ன விட்டு விலகி இருந்தா காயப்படுத்தாம என் கோபத்தை குறைச்சுக்லாம்னு பாத்தா மறுபடி நீ என் முன்னாடி வந்து நிக்கும் போது கோபம் வந்துடுதுடா.... " தலையை வருடிக் கொடுத்து கொண்டிருந்தவன் கதவு தட்டப்படவே எழுந்து சென்று திறக்க நின்றிருந்தான் நண்பன்.



"வர்ஷினிக்கு எப்பிடி இருக்கு?"



"பரவால்ல" தன்னையும் மீறி அவன் பதிலளிக்க ஆச்சரியமாய் நண்பனை பார்த்தான் ரித்விக்.



"டேப்ளட் போட்டாளா?"



"எனக்கு தெரில"



'வேதாளம் திரும்ப முருங்க மரம் ஏறிடுச்சு போல.... இவன....'



"அப்போ யாருக்கு தெரியும்? ஆமா யாரு அந்த பொண்ணு?"



"எந்த பொண்ணு?"



"தோட்டத்துல பேய் மாறி அங்கே இங்கேன்னு சுத்திகிட்ருக்காளே.... அவதான்"



"ஓ... அது... ஷாலுவா இருக்கும்"



"என்னது ஷாலுவா.... சொந்த பொண்டாட்டியோட பேரு சொல்ல கூட துப்பில்ல.... இதுல ஷார்ட் நேம் வேற.... ஆமா யாரு அவ.... அவ எதுக்கு இங்க இருக்கா?"



"எனக்கு வேண்டப்பட்டவ.... ஹாஸ்டல்ல தங்கி இருந்தா நான் தான் அழைச்சிட்டு வந்தேன்"



"வேண்டப்பட்டவளா?" சந்தேகமாய் நண்பனை பார்க்க அவனோ இவன் பார்வையை கவனமாக தவிர்த்திருந்தான்.



"தெரியாமலா போயிடும்... எத்தன நாள்னு பாக்கலாம் கதிர்வேல்" நக்கலடித்த நண்பனை முறைத்தான் கதிர்.



"குமரன் கொடுக்க சொன்னான்" அவன் பெண்ட்ரைவ்வை நீட்ட வாங்கிக் கொண்டவன்



"நாளைக்கு அபி... க்கும்... அதாவது அஸிஸ்டன் கமிஷ்னர் மிஸ்டர். அபினவ் ஆதர்ஷ மீட் பண்ணனும்"



"பண்ணு யாரு வேணான்னா?" குதூகலித்த மனசாட்சியை அடக்குவதற்குள் பெரும் பாடுபட்டுப் போனான் ரித்விக்.



"நீ தான் மீட் பண்ணனும்"



"நோ எனக்கு அர்ஜன்ட் மீட்டிங் இருக்கு"



"கேன்ஸல் பண்ணிடு"



"நோ வே மிஸ்டர். கதிர்.... எனக்கு கொஞ்சம் பர்ஸனல் வேல இருக்கு"



"அப்பிடி என்ன சார் பர்ஸனல்?"



"அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது"



"போடாங்..... மரியாதயா போயிடு"



"முடியாது"



"நானும் வந்து தொலையுறேன்டா.... வா என் கூட" அவன் பல்லை கடிக்கவும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன்



"அப்போ டபுள் ஓகே கதிர்... " சிரித்துக் கொண்டே திரும்பி நடக்க நண்பனையே பார்த்திருந்தவனின் உதடுகளும் சிரித்தன.



.....



ஹாலில் அமர்ந்து நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருந்த யாழினியிடம் சிரித்துக் கொண்டே வந்தமர்ந்தான் ரித்விக்.



"என்ன குட்டிமா எதுக்கு டென்ஷன்?"



"எனக்கு அந்த ஷாலினி அக்காவ பிடிக்கல ரக்ஷன் அண்ணா" அவனுக்கும் முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய் தானே நண்பனிடம் கடுப்படித்து விட்டு வந்திருக்கிறான்.



"ஏன்... என்னாச்சு?"



"அவள... சாரி அவங்கள அக்கான்னு கூப்புட வேணாமாம்.... அண்ணின்னு அழைக்கணுமாம்... அது கூட பரவால்ல.... அண்ணாவ மாமா மாமான்னு கொஞ்சுறா.... அண்ணி மாமான்னு சொன்னா எரிஞ்சு விழற கிருஷ் அண்ணா அவ மாமான்னு சொன்னா இளிச்சிகிட்டு நிக்கிறாங்க.... பாவம் என் அண்ணி..... "



"வாட்... மாமான்னு சொல்றாளா.... "



"ம்... " அவள் சோகமாய் தலையாட்ட வாய் விட்டுச் சிரித்தவன்



"கிருஷ்ஷுக்கும் வர்ஷினிக்கும் இடைல ஏதாவது ப்ராப்ளம் வரவழைச்சானா அப்பறமா அவள பாத்துக்கலாம் குட்டிமா.... அது வர பொறுமை... பொறுமை... " சற்றே குனிந்து காதில் குசுகுசுக்க ஹைபை போட்டாள் பெண்....



......



குமரன் சேகரித்திருந்த டீடெயில்ஸை படித்துக் கொண்டிருந்தவனுக்கு அதில் எந்த விதமான சந்தேகங்களுமே ஏற்படாமல் போகவே சலித்துப் போனது.



"ச்சேஹ்.... எதுவும் உறுப்படியா இல்ல... " வாய் விட்டே புலம்பியவன் மீண்டும் குமரனுக்கு அழைத்தான்.



"சொல்லுடா"



"என்னத்த சொல்ல சொல்ற.... நீ அனுப்புனது எல்லாமே எனக்கு தெரிஞ்ச டீடெயில்ஸ் தான்"



"வாட்... ஆர் யூ ஜோக்கிங் கதிர்.... நா அத விட்டு விட்டு படிச்சேன் மச்சி.... சில புதிய பேரு கூட இருந்துது..... நானே நேர்ல போய் விசாரிச்சு பக்காவா ரெடி பண்ணது டா"



"வாட்.... " அவன் கத்திய கத்தில் திடுக்கிட்டு விழித்தாள் வர்ஷினி....



"என்னடா சொல்ற?" மனைவியில் பார்வை பதிந்து தாழ்ந்தது குரல்....



"எஸ்டா.... நானே தான் போனேன்.... "



"பட் இதுல ராமோட பர்சனல் டீடெயில்ஸ் மட்டும் தான் இருக்கு.... ஐ மீன் இப்போ அவரோட தொழில்.... அப்பறம் மனைவி... குழந்தைகள பத்தி"



"ஓ ஷிட்... நோடா.... இந்த டீடெயில்ஸ நா உனக்கு அனுப்பவே இல்லயே"



"வாட்...." அதிர்ந்து போனவனுக்கு இப்போது நிச்சயமே ஆகிவிட்டது நடுவில் கண்ணாமூச்சி ஆட்டம் மிக அழகாக நிகழ்ந்து கொண்டிருக்கிறதென்று....



"வரட்டுமாடா?"



"ஹாங்....நோ நோ இட்ஸ் நாட் சேப் மச்சி... காலைல சீக்ரெட்டா சந்திக்கலாம்"



"ஓகேடா" அழைப்பை துண்டித்தவன் தலையை அழுத்தக் கோதி குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் துவங்க கணவனையே மிரண்டு போய் பார்த்திருந்தாள் காரிகை....



.......



காலை.....



"ஹாஹா..... என்ன பத்தியே தேட ஆரம்பிச்சுட்டியா.... நான் யாருன்னு நெனச்ச.... ராம்... ராமலிங்கம்டா பொடிப் பயலே... எல்லோரையுமே என் கிட்ட இருந்து காப்பாத்திட்ட.... ம்... அதுக்கு உன்ன பாராட்டியே ஆகணும்.... பட் இந்த தடவ என் குறி தப்பாது.... நீ எப்பிடி அந்த போலிஸ் நாய சந்திக்கிறன்னு நானும் பாக்குறேன்டா" அவர் கர்ச்சித்ததில் அந்த இடமே நடுநடுங்கிப் போனது.



.....



மெதுவாய் விழிகளை மலர்த்தியவள் கணவன் இரவு போலவே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பது கண்டு அதிர்ந்து போனாள்.



'எவ்வளவு நேரமா இப்பிடியே இருக்காங்க.... ராத்திரி தூங்கலயா?' அவன் நடக்கும் திசைக்கேற்ப பெண்ணவளின் கண்களும் உள்ளுக்குள் நீந்த அவன் சலேரென திரும்பிப் பார்த்ததில் படபடவென அடிக்கத் துவங்கி விட்டன அவள் சிப்பி இமைகள்.....



அவளையே இமை கொட்டாமல் பார்த்திருந்தவனின் கால்கள் அவளை நோக்கி அடியெடுத்து வைக்க திக்கென அதிர்ந்தது பெண் நெஞ்சம்....



"எதுக்கு என்னையே பாத்துட்ருக்க?" கோபம் இல்லையாயினும் கோபம் போலவே நடிக்கக் கற்றுக் கொண்டிருந்தான் அந்த நடிகன்....



"இல்ல மா... வந்து... நீ... நீங்க ராத்திரி தூங்கலயான்னு...."



"தூங்கலன்னா என்ன பண்ண போற?"



"அ.... அ... அது அது.... இல்ல நா..."



"நீ நீதான்.... ராத்திரி தூங்கலன்னா என்ன பண்ண போற சொல்லு" அவள் கட்டிலில் அமர்ந்திருக்க அவளுக்கு முன்னே நின்றிருந்தவன் அவள் இரு பக்கமும் சிறை செய்து அவள் முகம் நோக்கி குனிந்தவாறு கேட்டதில் அதிவேகமாக தாளம் தப்பியது அவள் இதயம்!!!



" மாமா.... "



"ம்....." அவள் விழியழகில் சொக்கிப் போய் கண்களை இறுக்க மூடியவன் அவள் அழைப்புக்குக் கூட கோபப்படாமல் அவளிதழ்களை நோக்கி குனிய பயந்து போனாள் பேதை....



'அன்னிக்கு போல இதுக்குத் தானே ஆசப்பட்டன்னு கேட்டுடுவாங்க' மழுக்கென கண்ணத்தை தொட்டது கண்ணீர்....



"மா... மா... சா... சாரி மாமா"



"ப்ச் எதுக்குடி?" மோகம் இலேசாக தடைப்பட்ட எரிச்சலில் கேட்டாலும் கண்களை மட்டும் திறந்தானில்லை அந்த ஆறடி ஆண்மகன்....



"இ... ல்ல... ராத்திரி நா ப... பாக்கும் போது இந்த நி... நிலைலயே தான் இருந்தீங்க... இப்போ கா... காலையாகிடுச்சு.... இப்போ கூட அப்பிடியே இருந்தீங்க.... அ...அதான்.... நீங்க தூங்கலயோன்னு யோசிச்சு கிட்டு...."



"அப்போ நா தூங்கலன்னாலும் உனக்கு கவலயே இல்ல?"



"அ... அ... அப்பிடி இ... ல்... ல மாமா.... " அவ்வளவு அருகில் அவன் முகம் இருக்க வாயிலிருந்து வெறும் காற்றுத் தான் வரும் போல் இருந்தது பேதைக்கு....



நல்ல வேளை கண்களை மூடியிருக்கிறான்...



அப்படித்தான் நினைத்தது பெண் மனம்....



"அப்பிடி இல்லனா எப்பிடி?"



"....."



"எப்படின்னு கேட்டேன்"



"ஏன் இப்பிடி ப... பண்றீங்க மாமா? "



"உனக்கு என்ன பத்தி ஐ மீன் நா எப்பிடி போனாலும் பரவாயில்ல.... இல்லயா?"



"அய்யோ இல்ல மாமா...."



"இல்லன்னா... என் மேல அக்கறை இருக்குன்னு எடுத்துக்கட்டுமா?" படக்கென விழி திறந்தவனினன் கூர் விழிகளும் பெண்ணவளின் கயல்விழிகளும் கவ்விக் கொள்ள அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற நினைவே இல்லாமல் அவனையே பார்த்திருந்தாள் காரிகை....



"அக்கறை இருக்குள்ளடி?" அவள் தலை வேகவேகமாக ஆட இதழ் கடையோரச் சிரிப்புடன் அவன் அவளை நோக்கி குனியவும் கதவு படபடவென தட்டப்படவும் சரியாக இருக்க திடுக்கிட்டு விலகி இருந்தனர் இருவரும்....



"மாமா...." தன்னை தாண்டி வேறு யாரோ அந்த அழைப்பை அழைத்ததில் இலேசாக பொறாமை துளிர்த்ததோ பேதைக்கு....



கணவனை மீண்டும் ஏறிட அதற்குள் அவன் கதவை திறந்திருக்க நல்ல பிள்ளையாய் அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ஷாலினி.



"காபி குடிக்கலயா மாமா.... நா வேணும்னா எடுத்துட்டு வரட்டுமா?" அவனவளை கடைக்கண்ணால் பார்த்தவாறே கேட்க அவசரமாக எழுந்து நின்றாள் பெண்....



"இல்ல ஷாலு.... நா காபி குடிக்கிறதில்ல எனக்கு வேண்டாம்மா.... நீ போய் குடி" கணவன் தன்னை தவிர அனைவரிடமும் காட்டும் முகம் பெண்வளுக்கு மனதின் மூலையில் வலித்ததில் அது முகத்திலும் பிரதிபளிக்கவே கணவன் செய்கையில் அவளையும் அறியாமல் சிவந்திருந்த அவள் முகம் சோர்ந்து போனது.



"என்ன மாமா நீங்க.... உங்களுக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன் தெரியுமா?" தான் அந்த அழைப்பை அழைத்தால் கணவன் காட்டும் பராமுகமும் இந்தப் பெண் அழைத்தால் கணவன் காட்டும் நெருக்கமும் பெண்ணவளை சுட கண்கள் சட்டென கலங்கி விடவே குளியலறைக்குள் புகுந்து கொண்டவளின் நடை தளர்ந்திருந்தது.



"எனக்காக வாங்க மாமா ப்ளீஸ்...." அதற்கு மேல் மறுக்க முடியவில்லை அவனால்....



இலேசாக புன்னகைத்தவன் அவளுடன் வெளியேற அவள் குளியலறையிலிருந்து வெளியே வரும் போது அவன் இல்லை....



.......



ரக்ஷனுடன் காபி குடித்துக் கொண்டிருந்த யாழினி அண்ணனும் அவளும் இணைந்து வருவது கண்டு ரக்ஷனுக்கு ஓங்கி உதைய



"ஆஆஆஆ...." கத்திக் கொண்டே தன்னை பார்த்தவனுக்கு கண்ணை காட்ட பின்னால் திரும்பிப் பார்த்தவனும் பல்லை கடித்தான்.



"இவனுக்கு முதல்ல ஏதாவது பண்ணனும் குட்டிமா"



"ஆமாண்ணா.... பாருங்க எப்பிடி நெருங்கி கிட்டு வர்றாங்கன்னு"



"குட்டிமா.... கிருஷ் காபி குடிக்க மாட்டான்... இவ மட்டும் தான் குடிப்பா போல.... அவ காபி கப்புல மிளகா பொடி கலந்துடலாம்"



"ஐ.... சூப்பர்.... சூப்பர்.... இருங்க நா எடுத்துட்டு வர்றேன்"



"நோ யாழ்.... அவங்க வர்றதுக்குள்ள காபி கப்ப உள்ள கொண்டு போயி போட்டு எடுத்துட்டு வா.... நா இங்க சமாளிக்கிறேன்.... "



"ஓகே ணா.... " அவள் செல்ல காலை ஆட்டிக் கொண்டே குடித்தவன் தாண்டப் போன ஷாலினிக்கு முன் திடீரென கால்களை நீட்ட தடுமாறி விழப்போனவளை இடைபற்றி கதிர் நிறுத்தவும் ரக்ஷன், அப்போது தான் டேபிளில் கப்பை வைத்து விட்டு நிமிர்ந்த யாழினி, மற்றும் படியிறங்கி ஹாலில் காலெடுத்து வைத்த வர்ஷினி என மூவருமே ப்ரீஸாகி நிற்க அவளை நேராக நிறுத்தி விட்டு ரக்ஷனுக்கு சொடக்கு போடவும் தான் கலைந்தனர் மூவரும்....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காபி குடிக்காதவங்க டைனிங் டேபிளுக்கு வந்திருக்காங்க குட்டிமா...." ரக்ஷன் நக்கலடிக்க



"மாமா எனக்காக தான் வந்திருக்காங்க ரக்ஷன்" இடை புகுந்தாள் ஷாலினி.



"அக்கா காபி ஆறிட போகுது"



"மாமா..... என்ன அண்ணின்னு சொல்ல சொல்லுங்க" சமயலறைக்குள் நுழையப் போனவள் அதிர்ந்து நின்று விட



"அண்ணி.... " யாழினி அழைக்கவே



"ரொம்ப தேங்க்ஸ் யாழி குட்டி"



"நா ஒன்னும் குட்டி இல்ல.... எண்ட் நா என் அண்ணிய தான் கூப்டேன்" அவள் வர்ஷனியிடம் செல்லவும் ஷாலினி பல்லை கடிக்க வாய் பொத்தி சிரித்தான் அதுவரை புரியாமல் யாழினியை பார்த்துக் கொண்டிருந்த ரக்ஷன்.



"மாமா.... "



"அது பாத்துக்கலாம் நீ குடிமா" அவளை அமர வைத்தவன் தானும் அமர்ந்து கொள்ள அவளையே ஆர்வமாய் பார்க்கத் துவங்கினான் ரித்விக் ரக்ஷன்.



((அதாவது நண்பா அவ காபி குடிப்பாளா மாட்டாளான்னு..... பின்ன யாரும் அர்ச்சனா கிட்ட போட்டு குடுத்துட கூடாது சொல்லிட்டேன்....))



.....



"யாழ்.... இது ஏன் மிளகா பொடி வெளில இருக்கு" அவள் அதை கைகளில் எடுக்க



"ஷ்... கத்தாதிங்க அண்ணி... அந்த ஷாலினியோட காபில மிளகா பொடி கலந்து விட்டுட்டேன்" சிரித்துக் கொண்டே சொன்னவளை பார்த்து அதிர்ந்து போனாள் பெண்....



"அய்யய்யோ ஏன் அப்பிடி பண்ண யாழ்.... இப்போ அவங்களுக்கு.... " அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே வாந்தி எடுக்கும் சத்தம் வர "யெஸ்... யெஸ்.... " குதூகலித்த யாழினியை கண்டிப்பு பார்வை பார்த்தவள் கையிலிருந்த மிளகா பொடி டப்பாவுடனேயே வெளியே வர



"மாமா.... எரியுது.... தண்ணி.... " கேட்டுக் கொண்டே நிமிர்ந்தவள் வர்ஷினியின் கையிலிருந்ததை பார்த்து கோபமாய் கதிரை தட்டி காட்ட மனைவியின் கையிலுள்ளதை பார்த்து அதிர்ந்தது கதிர் மட்டுமல்ல யாழினியும் ரக்ஷனும் தான்....



"இந்த பொண்ணு தான் பண்ணி இருக்கா மாமா...." அவள் அதிர்ந்து கணவனை பார்க்க



"ஏன் இப்பிடி பண்ண?"



"அண்ணா அண்ணி இல்ல.... நா..."



"அது வந்து மாமா.... எ... எனக்கு அ.... அவங்கள பிடிக்கல அதான்" யாழினியை இடைமறித்து அவளே ஒத்துக் கொள்ள மீண்டும் அதிர்ந்து போயினர் ரக்ஷனும் யாழினியும்...



"அண்ணா அண்ணி பொய் சொல்றாங்க.... நான் தான் பண்ணேன்"



"இல்ல மாமா.... நான் தான் பண்ணேன்"



"அண்ணி.... "



"நான் தான் பண்ணேன் மாமா.... " உறுதியாக மறுத்தவள் கோபப்பட்டு கத்திய யாழினியை கண்டு கொள்ளவே இல்லை....



"மாமா.... எரியுது...." ஷாலினி இடைபுக அவளை அமர வைத்து தண்ணீரை கொடுத்தவன் மீண்டும் மனைவியை பார்க்க



"மாமா.... " அவனை பார்க்கக் கூட அனுமதிக்காமல் தன் புறம் திருப்பினாள் அவள்....



"எரியுற அளவு போடல.... ரொம்ப பண்றா" அதற்குள் வர்ஷினி அருகே வந்து விட்டிருந்த ரக்ஷன் காதில் யாழினு முணுமுணுக்க பெண்ணவளின் உதடுகளிலும் புன்னகை....



"செய்யுறதயும் செஞ்சிட்டு எப்பிடி சிரிக்கிறா பாருங்க மாமா....." அவள் காட்டிக் கொடுத்ததில் சட்டென மறைந்தது சிரிப்பு....



"வர்ஷினி...." அவன் உறுத்து விழிக்க



"சா.... சா... சாரி மாமா" பயந்தே போனாள் பாவை....



"ரூமுக்கு வா" அவன் முன்னே செல்ல கால்கள் பின்ன நடந்தாள் அவனவள்....



......



கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தவளை திடீரென இழுத்து சுவற்றில் சாய்த்து சிறை செய்ய கண்களை இறுக்க மூடிக் கொண்டு நடுங்கினாள் பாவை...



"ஏன் பொய் சொல்ற?" படக்கென விழி திறந்தவள் அதிர்ந்து கணவனை பார்க்க



"யாழினி மேல நா கோபப்படுவேன்னு பயப்பட்றியா?" மீண்டும் கேட்டான்.



"அப்போ உன் மேல கோபப்பட்டா பரவால்லயா?"



"நா.... நா...."



"என் கோபம் உன்ன பாதிக்கவே இல்லல்ல?"



"மாமா.... நா... நான் தான் ப...." அடுத்த வார்த்தை அவன் இதழ்களுக்குள் தான் இருந்தது.



"திரும்ப பொய் சொன்னின்னா இப்பிடி தான் தண்டன கொடுப்பேன்.... பரவால்லன்னா சொல்லு" அவன் வெளியேறி விட அதிர்ந்து நின்றாள் பெண்.....



.......



தடதடவென படிகளில் இறங்கி வந்த அண்ணனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி....



'கடவுளே அண்ணிய ஹேர்ட் பண்ணி இருக்க கூடாது' அவசரமாக வேண்டுதல் வைத்தவள் ரக்ஷனை பாவமாய் பார்த்து வைக்க அதற்குள் அருகில் வந்து விட்டிருந்தான் கதிர்....



"கிளம்பலாம் ரித்விக்" அவன் வாசலை நோக்கி நடக்க பெருமூச்சுடன் அவன் பின்னே செல்ல அண்ணியை தேடி ஓடினாள் யாழினி.



***



"மச்சான்.... ரொம்ப நேரமா அந்த லாரி நம்மல பாலோ பண்றா மாறி இருக்குடா" ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்த ரக்ஷன் பக்கவாட்டாக பார்த்துக் கொண்டே சொல்ல தானும் திரும்பிப் பார்த்தவன் யோசனையுடன் திரும்பவும் முன்னால் இன்னொரு லாரி அதிவேகமாக அவர்களை நோக்கி வரவும் சரியாக இருந்தது!!!



தங்கள் காரை முன்னாலும் பின்னாலும் இரண்டு லாரிகள் திடீரென நெருங்கி வரும் என இருவருமே எதிர்பாராமலிருக்க அதிர்ந்து போய் செயலற்று நின்றிருந்த ரக்ஷனை பின்னோக்கி தள்ளி விட்டு வண்டியை ஒடித்து இடப்பக்கம் திருப்பியதில் முன்னாலிருந்த மதில் சுவற்றின் மீது மோதி நின்றது அந்த டார்க் நைட் ஜீப்.....



அவர்கள் திடீரென திருப்புவார்கள் என எதிர்பார்த்திராத இரு லாரிகளும் ஒன்றோடொன்று மோத நண்பனின் தலைக்கு ஏதும் ஆகி விடாமல் தன் கையால் மறைத்தவனின் கை முன்னால் நீண்டிருந்த கம்பியில் குத்த பீரிட்டுக் கிளம்பியது இரத்தம்.....



"மச்சான்...." அதிர்ந்து கத்திய ரக்ஷன் அவசரமாக தன் கைக்குட்டையை எடுத்துக் கட்ட அதனையும் மீறி இரத்தம் கசிந்ததில் கோபமாய் வந்தது நண்பன் மேல்....



"இடியட்..... உன்ன நீ காப்பாத்திகாம என்ன காப்பாத்துறாராம்..... ஏன்டா இப்பிடி பண்ண?" திட்டிக் கொண்டே தன் ஷர்ட்டை கழட்டியவன் அதற்கு மேல் மீண்டும் கட்ட நண்பனையே பார்த்திருந்தவன்



"நீ என் ப்ரண்டுக்கும் மேல ரக்ஷன்" கண்கள் தானாய் மூடிக் கொள்ள நண்பன் கூற்றில் கலங்கிய கண்களை மறைத்தவன் அவசரமாக வர்மனுக்கு அழைத்து விடயத்தை சொன்னான்.



.......



ஹாஸ்பிடல்.....



டாக்டர்கள் மறுத்தும் கேளாமல் அடம்பிடித்து வார்டை விட்டு வெளியே வந்து விட்டான் கதிர்.



"மச்சான்.... கொஞ்சம் நேரம் இருடா...."



"நோடா.... நிலம ரொம்ப ஸீரியஸாகி கிட்டு இருக்கு... என் நெக்ஸ்ட் மூவ் என்னன்னு கூட அந்த பரதேசிக்கு தெரியற அளவுக்கு நம்ம பக்கம் வீக்கா இருக்கு.... எனக்கு டைம் ரொம்ப முக்கியம் மச்சான்.... என்னால டைம வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்.... " இடை நடுவில் நின்று போயின அவன் வார்த்தைகள்....



"கண்ணா.... " லக்ஷ்மி தேவியின் அழைப்பில் அவன் உடல் இளக முகம் விறைத்தது.



ஆம், முழுக்குடும்பமும் தான் வந்திருந்தது...



"மச்சி.... என்னடா ஆச்சு?" பதற்மாய் நண்பன் குரல்....



"பையா...." வர்மனின் குரலும்....



"கதிர்.... என்னடா இது?" கூடவே குமரனும்....



"மாமா" ஷாலினியின் குரல் வேறு....



"அண்ணா...." அனைத்தையும் தாண்டிய அழுகையில் துடித்த தங்கையின் குரலில் திடுக்கிட்டவன் அப்போது தான் கலைந்தான்.



"குட்டிமா ஒன்னில்ல டா.... அழாதிங்க.... இங்க பாருங்க அண்ணாக்கு ஒன்னில்ல....." வலக்கையில் கட்டு போட்டிருக்க இடக்கையால் தன்னிடம் அழைத்தவன் தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டு மனைவியை ஒரு முறை கண்களால் துலாவி விட்டு அப்போது தான் மற்றவர்களை ஏறிட்டான்.



அவள் தான் வரவே இல்லையே.....



தலைவலியென மேலே இருந்தவளுக்கு மாத்திரை எடுக்க கீழே வந்த யாழினி வர்மன் சொல்லவே அடித்துப் பிடித்துக் கொண்டு கிளம்பியிருக்க அவளுக்கு விடயமே தெரியாது.



"எங்க பதட்டம் கூட இவனுக்கு நடிப்பா தான் மா தெரியும்.... வாங்க போலாம்"



"கண்ணா என்னபா ஆச்சு?"



"ஆக்ஸிடெண்ட் அத்தை" பதிலளித்தவனை உறைந்து போய் பார்த்தனர் அனைவரும்....



"பாத்து வண்டி ஓட்ட கூடாதா?" ஆனந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டே கேட்டவருக்கும் அதிர்ச்சி இருக்கத்தான் செய்தது.



பின்னே எத்தனை வருடங்களாகி விட்டன அவன் அவரிடம் ஒரு வார்த்தை பேசி....



"கவனிக்கல அத்தை... பயப்பட எதுவுமில்ல.... சின்ன அடி தான்" அப்போதும் அவர் முகம் பார்ப்பதில் அவனுக்கு தயக்கம் இருக்க வேறெங்கோ பார்த்துக் கொண்டு பேசியவனை பார்த்து அவருக்குத் தான் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.



ஆனந்தத்தில்!!!



"மச்சான்.... நீ ஏதாவது இப்போ பேசின?" அதிர்ச்சி மீளாமலேயே கேட்டான் ரக்ஷன்....



"மன பிரம்மையா இருக்கும் போலடா.... அத்தை கூட பேசுனா மாதிரி கூடவா இந்த பிரம்ம வந்து பயமுறுத்தும்?" அவன் சீரியஸாய் கேட்க நண்பனை முறைத்தான் கதிர்.



"அதானே பாத்தேன்.... என்னடா வேற உலகத்துக்கு வந்துட்டோமா.... இல்லன்னா செத்து கித்து போயிட்டோமான்னு... நீ முறைச்ச உடனே நிஜ உலகம்னு புரிஞ்சிடுச்சு மச்சான்"

ரக்ஷனின் கூற்றில் வர்மனும் குமரனும் பக்கென சிரித்து விட இருவரையும் முறைத்தவன் ரக்ஷனை நன்றாகவே முறைத்து வைத்தான்.



"வர்மா.... குட்டிமாவ வீட்டுக்கு கூட்டிட்டு போ.... ரித்விக் நீயும் அவங்க கூட கிளம்பு.... எனக்கு கொஞ்சம் வேல இருக்கு"



"லூசாடா நீ.... எதுவா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம்... நீயும் கிளம்பு...." கோபப்பட்டான் குமரன்.



"குமரா.... அர்ஜன்ட்.... நீயும் கூட இரு.... அஸிஸ்டன் கமிஷனர் ஆதர்ஷ் கூட மீட்டிங் இருக்கு.... " தன் பெயரை வேற்றாள் போல் சொல்லி வைத்ததில் நண்பனை முறைத்துப் பார்த்தான் அபி.



"மீட்டிங் கேன்ஸல் ஆகிடுச்சுன்னு சொல்லு குமரன்"



"வலீட் ரீஸன் இல்லாம அது எப்பிடி கேன்ஸல் ஆகும்னு கேளுடா" கதிர் தன்னை பார்த்து எகிறியதில் அபியை பாவமாய் பார்த்தான் குமரன்.



"அதெல்லாம் சொல்ல முடியாது...."



"ப்ச்"



"உனக்காக தானேடா பாக்குறேன்.... புரிஞ்சிக்கோ மச்சான்"



"எனக்காக யாரும் பாக்க வேண்டிய அவசியம் இல்லை" முகம் பாறை போல் இறுகி இருந்ததில் அவன் நடவடிக்கைகளில் குழப்பம் தான் மிஞ்சியது அனைவருக்கும்....



"அபி மாமா சொல்றத கேளுங்க அண்ணா"



"ரித்விக்.... உன்ன வர்மன் கூட கிளம்புன்னு சொன்னேன்" அவன் கத்தியதில் நடுங்கிப் போனாள் தங்கை....



'வேதாளம் திரும்ப முருங்க மரம் ஏறிடுச்சுஉஉஉ' மனதிற்குள் சொல்லிக் கொண்டான் ரித்விக்.



"வர்மா...."



"சா... சா.. சாரி பையா.... ரக்ஷன் பையா... குட்டிமா... கெளம்பலாம்"



"ஷாலு நீயும் கிளம்புமா" அவன் வார்த்தைகளில் திடீரென தோன்றிய கனிவில் ரக்ஷன் யாழினி தவிர அனைவருமே அதிர்ந்து போயினர்.



"குமரா... வா... அவனையும் வர சொல்லு"



"கண்ணா... நில்லுபா..." யாரையும் கண்டு கொள்ளாமல் அவன் நடக்க ஷாலினியை ஆராய்ச்சி பார்வை பார்த்தனர் அனைவரும்....



"குட்டிமா.... யாருடா இது?" லக்ஷ்மி தான் கேட்டார்.



"இது.... ஷாலினி அக்கா.... அண்ணாக்கு தெரிஞ்சவங்க.... வீட்ல தான் தங்கி இருக்கா"



"ஓஹோ.... எப்பிடிடா இருக்க?" அருகில் வந்து அவள் கூந்தலை வருட



"மிஸ் யூ அத்தை" சட்டென கட்டிக் கொண்டு அழுது விட்டாள் பெண்.....



"என்னடா இது....?"



"ராம் மாமா எப்பிடி இருக்காங்க?"



"நல்லா இருங்காங்கடா...."



"ஏன் அத்த வீட்டுக்கு வர்றதில்ல நீங்க.... நீங்களும் தனியா விட்டுட்டு பொயிட்டீங்கல்ல?" அங்கே பலத்த மௌனம் நிலவ



"குட்டிமா.... போலாம்மா" ரக்ஷன் தான் சூழ்நிலையை இளகுவாக்கினான்.



"அத்த.... நீங்களும் வாங்க...."



"இ...இல்லமா.... நான் உன் ராம் மாமா கூட வர்றேன்.... நீ போ... "



"ப்ளீஸ்.... "



"காட்.... இர்ரிடேட்டிங் மோமென்ட்.... " ஷாலினி இடைபுக அவளை முறைத்தான் ரக்ஷன்....



"உங்களுக்கு இர்ரிடேட்டிங்னா வெளில போயிடுங்க" அடக்க முடியாமல் யாழினி கத்த அதிர்ந்தான் ரக்ஷன்....



'வேற மாதிரி கிருஷ் கிட்ட போட்டு குடுத்துடுவா.... அரக்கி....'



"குட்டிமா..... காம் டவுன்"



"யூ இடியட்.... " வர்மனை முந்திக் கொண்டு அவள் கையோங்க அவள் கையை வளைத்து இறுக்கினான் ரித்விக்.



"ஆ.... உச்..... வலிக்குது.... ரக்ஷன்"



"யாருடி இடியட்.... அவ மேல கை ஓங்கிடுவியா நீ?"



"மாமா கிட்ட சொன்னா என்ன ஆகும் தெரியுமா?"



"சொல்லுடி...." அப்படி ஒரு கோபம் அவனுக்கு....



"ரக்ஷன் விடுப்பா...."



"ரொம்ப பண்றா அத்த.... இவள கொன்னாலும் என் கோபம் குறையாது போல.... சரியான அரக்கி" கையை உதறி விட்டு அவன் திட்ட



"நீ என்ன கொல்ல முன்னாடி நா கொன்னுடுவேன்" மீண்டும் எகிறினாள் பெண்....



"ஷப்பாஹ்.... இது திருந்தாது.... வர்மா லெட்ஸ் கோ..... அத்தை நாங்க வர்றோம்.... ஏய் வாரதுன்னா வா இல்லன்னா எங்கயாவது அடிபட்டு சாவு" அவன் நடக்க சிரித்த யாழினியை முறைத்துப் பார்த்தாள் ஷாலினி.



***



"கதிர்...."



"....."



"டேய் உன் கிட்ட தான் கேக்குறேன் யாரு அந்த பொண்ணு?" கத்தினான் ஓட்டிக் கொண்டிருந்த குமரன்.....



'ஒன்னு பேசியே கொல்லுவான் இல்லன்னா பேசாம கொன்னுகிட்ருப்பான்..... இவன....' பின் சீட்டில் பதிளுக்காய் காத்திருந்த அபியும் மனதிற்குள் பல்லை கடித்தான்.



"டேய்.... இவ்வளவு தூரம் கேக்குறோம்ல... வாய தொறடா"



"எனக்கு வேண்டப்பட்டவ"



"அது யாரு எங்களுக்கே தெரியாம?" மீண்டும் வாயை மூடி விட்டது கண்டு பற்றிக் கொண்டு வந்தது இருவருக்கும்....



"ஓஹோ.... சாரு பர்ஸனல்னு சொல்லாம சொல்றீங்க? சரி இவ்வளவு நாளா எங்க இருந்தா?"



"ஹாஸ்டல்"



" பேரு?"



" ஷாலினி"



"நா என்ன எக்ஸாமாடா நடத்துறேன்" கடுப்பில் கத்தினான்.



"உன் கிட்ட போயி கேட்டேன் பாரு.... என்ன சொல்லணும்" புலம்பிக் கொண்டே வண்டி ஓட்ட அவன் ஷாலினியை பற்றி கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பன் முகத்தில் வந்த கோபத்தை ஆராய்ச்சியாய் தொடர்ந்தன அபியின் கண்கள்....



நிச்சயமாய் அது ஷாலினியை நினைத்து அல்ல....அவளை பற்றி பேசும் போது வேறு யாரோ அவன் நினைவுகளில் வந்து கோபப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிய யோசனையானான் அபினவ் ஆதர்ஷ்.....



......



"ஸ்டேஷன் போலாம்"



"கதிர்.... இட்ஸ் நாட் சேப்டா"



"எஸ் கிருஷ்" இருவருமே மறுக்க



"பழைய ரெக்காட்ஸ் வேணும்" தன் நிலையிலிருந்து இறங்குவேனா என்றது அவன் கூற்று....



"பழைய ரெக்காட்ஸா?"



"எஸ்....ப... பொ... பொம்மயோட ரெக்காட்ஸ்" புரியாமல் கேட்ட அபி அமைதியாகி வெளியில் வெறிக்க



"எதுக்குடா.... முடிஞ்சு போனது திரும்ப எதுக்கு?" குமரன் தன்னை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்க அவன் எதுவுமே பேசவில்லை....



"இரு நா எடுத்துட்டு வர்றேன்" குமரன் சொல்ல



"குமரன்.... போலிஸ் டிபார்ட்மென்ட்டுக்குள்ள டிடெக்டிவ் போறது சந்தேகத்த கிளப்பும்.... நானே போய் எடுத்து கிட்டு வர்றேன்" அபி இறங்க ஓரமாய் வண்டியை நிறுத்தினான் குமரன்.



"ராத்திரி வர உன் கூட யாரு இருந்தாங்க குமரா?"



"புரிலடா"



"நீ இன்பர்மேஷன் தேடும் போது உன் கண்ணுக்கு சந்தேகம் வர்றா மாறி யாராவது?"



"ம்.... நோடா.... ஹே இரு இரு.... மச்சான்... செக் பாயின்ல ரக்ஷன் கிட்ட நா பெண்ட்ரைவ கொடுக்கும் போது ஒருத்தன் திடீர்னு ரக்ஷன இடிச்சான்டா... அப்போ பெண்ட்ரைவ் கீழ விழுந்துது.... அவன் தான் எடுத்து கொடுத்துட்டு போனான்.... ஓ ஷிட்..."



"நோ.... பெண்ட்ரைவ் அங்க மாறி இருக்காது.... " உறுதியாக மறுத்தான் கதிர்.



"என்னடா சொல்ற?"



"எஸ் குமரா.... பெண்ட்ரைவ் மாறி இருக்கறது உன் ஆபிஸ்ல வெச்சு தான்"



"எப்பிடி சொல்ற?"



"நீ சொன்ன ஆளு தான் நாம தேட்ற ஆளா இருந்தா கீழ குனிஞ்சு எழும்ப அவன் மினிமம் டூ செக்கன்ஸாச்சும் எடுத்திருக்கனும்.... நீ சொல்றத வெச்சு பாத்தா அவன் கீழ விழுந்த உடனே எடுத்து கிட்டு எழும்பி இருக்கான் ரைட்?"



"ஆமா.... "



"ஸோ.... நம்ம ஆளு அவன் இல்ல.... ஆபிஸ்ல தான் இது நடந்திருக்கு"



"நான் தான் கடைசியா வந்தேன்டா.... யாருமே இருக்கலியே? "



"யாருமே இல்லன்னு உனக்கு எப்பிடி தெரியும்... நீ செக் பண்ணியா?"



"நோடா.... சாரி"



"இட்ஸ் ஓகே.... பட் நம்மள்ல ஒவ்வொருத்தர் கிட்டவும் ஆபிஸ் ஆர் வீடு.... ஒரு துரோகி இருக்கான்.... நம்ம நெக்ஸ்ட் மூவ்வ அவன் தான் சொல்லி இருந்திருக்கணும்"



"சிசிடிவி பூட்டேஜ் பாக்கலாமே?"



"இட்ஸ் டூ லேட்.... அவன் அழிச்சிருப்பான்"



"பின்ன எப்பிடி தான்டா கண்டு பிடிக்கிறது?"



"பொம்மையோட ரெக்காட்ஸ்ல க்ளூ இருக்கும்னு மனசுக்கு தோனுது"



"சான்ஸ் இல்லடா" தான் வந்து ஏறியது கூட தெரியாமல் பேசிக் கொண்டிருந்தவர்களை கலைத்தான் அபி.



"லெட்ஸ் ஸீ.... இருந்தா எடுத்துக்கலாம்.... இல்லன்னா தூக்கி போடலாம்.... எம்.எல்.ஏ மிஸ்டர். ராஜாராம் சந்திக்கணும்.... பட்... அபாய்ன்மென்ட் கால் மூலமா வாங்க முடியாது.... பிகாஸ் நம்ம கால்ஸ ட்ராக் பண்றானுங்கன்னு நெனக்கிறேன்.... ஸோ.... அவரு வீட்டுக்கு அபாய்ன்மென்ட் வாங்காம போலாம்..... இனி என்ன பு***குறான்னு நானும் பாக்குறேன்" அவன் கண்களில் தெரிந்த அக்னியில் இருவருக்கும் உள்ளுக்குள் குளிரெடுத்தாலும் நண்பனை நினைத்து பெருமையில் நிறைந்தன இருவர் உள்ளங்களும்!!!



தொடரும்......



23-07-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27180

அத்தியாயம் 07 [ A ]



"என்னங்க.... இன்னிக்கு நம்ம கண்ணன் என் கிட்ட பேசினான் தெரியுமா?" கண்கலங்க கணவரிடம் விடயத்தை சொன்னார் மனைவி லக்ஷ்மி தேவி.



"என்னமா சொல்ற.... உண்மையிலேயே பேசினானா?"



"ஆமாங்க...."



"ரொம்ப சந்தோஷமா இருக்குமா..... எதுக்காக இத்தன நாள் பேசாம இருந்தான்னு தெரில.... இனி தெரியவும் வேண்டாம்.... மன்னிச்சுட்டேன்னு சொன்னா போதும்" அவருக்கே சற்று கண்கள் கலங்கியதோ!!!



"நிச்சயமா காரணமில்லாம இருக்காது.... நீங்க சொல்றா மாதிரி அந்த காரணத்த கேட்டு பிள்ளைய கஷ்டப்படுத்த வேணாம்.... அவன் பேசுறதே போதும்.... " அவர் சொல்லி முடிக்கவும் கதிரின் கார் வெளியில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.



.....



கண்களை வீட்டை சுற்றிப் அலசினான் கதிர்.



அவன் கடைசியாக பார்த்த போது எப்படி இருந்ததோ அப்படியே இருந்ததில் நெஞ்சில் சுருக்கென தைக்க கண்களை இறுக்க மூடித் திறந்தவனின் தோள் மேல் கை வைத்தான் குமரன்.



வெளியே கட்சிக்காரர்கள் சிலரும் காவலாளிகள் சிலரும் இருக்க மீண்டுமொருமுறை அலசியவன் நிமிர்ந்து அமர்ந்தான்.



"குமரா வெளில இருக்க கட்சிக் காரங்கள்ல நிச்சயமா அவன் ஆளுங்க இருப்பானுங்க.... நாம இந்த வழியா உள்ள போறது அவனுங்களுக்கு தெரிஞ்சா பேச விடாம பண்ண ட்ரை பண்ணுவானுங்க.... முதல்ல நீயும் அபி... ஐ மீன் ஆதர்ஷும் போங்க.... நா உள்ளேயே இருக்கேன்.... உள்ள போயி கேட்டுக்கு வெளியில இருக்க ஒருத்தன் கிட்ட கவனத்த அவன் பக்கம் திருப்புறா மாதிரி செய்ய சொல்லிட்டு எனக்கு மேஸேஜ் கொடு.... அவனுங்க திரும்புற கேப்புல நா உள்ள நுழஞ்சிட்றேன்.... பட் ரொம்ப கவனமா பண்ணு மச்சான்... சந்தேகம் வந்துது.... கண்டு பிடிச்சுடுவானுங்க.... நம்ம மூவ் நிதானமா தெளிவா இருக்கனும்... போ" அவன் முதலில் பேசும் போது உண்மையில் இருவருக்கும் எதுவுமே புரியவில்லை என்பது தான் நிஜம்....



அவன் கூறி முடிக்கவும் தான் அவன் ஒரு விடயத்தை கூட இந்தளவுக்கு யோசித்து செயல்படுகிறான் என்பதே புரிந்தது.



"என்ன எதுக்குடா பாத்துட்ருக்கீங்க.... கெளம்புங்க"



" மச்சான் நீ வேற லெவல்டா"



"என்கிட்ட அடிவாங்காம மரியாதையா கிளம்பு" குமரனை முறைக்க



"ஆதர்ஷ்.... வா போலாம்...." வாயை கப்பென மூடிக் கொண்டவன் அவனுடன் இறங்க முற்பட



"குமரா" நிறுத்தினான் கதிர்.



"இன்னும் என்னடா?"



"கேப்பை போட்டுகிட்டு போ இடியட்... ஒவ்வொன்னா சொல்லனுமா நான்?" அவனுடைய ஜெர்ஸி தொப்பியை கண்களால் காட்டினான்.



"சொன்னா என்ன?"



"டேய் டேய்.... சண்ட போட்ற நேரமாடா இது.... குமரன் இறங்குடா" அப்போதுதான் வாயை திறந்தான் அபி.



"மகாராஜா சொல்லிட்டாரு இறங்குடா...." கதிர் நக்கலடிக்க



"என் மேல எதுக்குடா கோபம் காட்கிட்ருக்க... அம்மா கூட பேசுற.... ஏன் என்கிட்ட பேசமாட்டேங்குற?" நேரடியாகவே நண்பனை கேட்டான் அபி.



"என்ன சொல்லிட்டு இதுங்க ரெண்டும் சண்ட போட்டு கிட்டு இருக்குதுங்க.... டேய் ஆதி.... வாடா"



((டேய் முதல்ல கார்ல இருந்து இறங்கித் தொலைங்கடா.... நா அடுத்த ஸீன் எப்போ எழுதுறது))



"கிருஷ்.... "



"என்ன அப்பிடி கூப்புட வேணான்னு சொல்லு குமரன்"



"டெய் அவன அந்த மாதிரியெல்லாம் கூப்புட வேணாமாம்டா" திரும்பி அபியிடம் சொன்ன குமரனை இருவரும் முறைக்க



"என்ன எதுக்குடா முறைக்குறீங்க.... இவன் தான் சொல்லுன்னான்... சொன்னேன்... அதுக்காகவாடா முறைக்குறீங்க?" விட்டால் அழுது விடுவான் போலும்.



"குமரா.... நாம வந்து நின்னே பத்து நிமிஷமாச்சு.... இடியட் அவனுங்களுக்கு சந்தேகம் வராம பண்ணுன்னா ஆரம்பத்துலயே சொதப்புற?" அபியை விட்டு விட்டு குமரனிடம் எகிற



"அவன் முடிஞ்சு இப்போ நானா?" தானும் எகிறினான் குமரன்.



"டேய் போதும் வாங்கடா" அபி சமாதானமாக



"அதான் சொல்... " திரும்பவும் துவங்கிய கதிரை கை நீட்டி விட்டு அபியுடன் இறங்கினான் குமரன்.



((ஹப்பாடா.... போயிட்டானுங்க.... நண்பா இவனுங்கள என்ன பண்ணலாம்???))



.....



தாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வெளியே திடீரென டப் என வெடித்ததில் அனைவர் கவனமும் அவசரமாக அப்பக்கம் திரும்பிய இடை வேளையில் காரை விட்டு இறங்கியவன் விறுட்டென உள்ளே நுழைந்து விட வெளியே குமரன் செய்து வைத்த அட்டகாசத்தில் பெரும் பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.



கதிர் சிறு சத்தம் கேட்குமாறு செய்து கவனத்தை திசை திருப்ப சொல்லி இருக்க அவன் ஷட்டர் பாமை [[ Shutter bomb ]] வெடிக்க சொல்லி ஏற்பாடு செய்து வைத்ததில் எதிர் கட்சிக்காரர்கள் தான் இவ்வாறு செய்திருக்க வேண்டுமென அவர்கள் குழம்ப பேச்சு முற்றி அடிதடி வரை போய் விட்டது.



.....



தன்னை விட்டு தள்ளி நின்றிருந்த நண்பனை கொலைவெறியுடன் முறைத்தான் கதிர்.



"இடியட் ஸடுப்பிட் லூசு... என்னடா பண்ணி வெச்சிருக்க?" அவன் பல்லை கடித்துக் கொண்டு கத்த வெளியே சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்த ராஜாராம் கிருஷ்ணாவை அவர்கள் வீட்டில் கண்டு உண்மையில் சந்தோஷத்தின் எல்லையை கடந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.



"கண்ணா.... " லக்ஷ்மி க்கு அதற்கு மேல் வார்த்தைகளே வரவில்லை....



"கண்ணா.... வாடா" மனைவியின் அழைப்பில் கலைந்தவர் தானும் அழைக்க நண்பனிடமிருந்த பார்வை சட்டென மாமாவிடம் தாவியதில் அவரை ஒரு முறை முழுதாக அலசிய பின்னரே ஏறிட்டான்.



"எப்படிடா இருக்க... எங்கள பாக்கணும்னு இப்போ தான் தோனி இருக்கா?" அவர் குரல் கரகரக்க என்ன தான் பேசி விட்டாலும் அவனால் அதற்கு மேல் அவர் கண்களை சந்திக்க முடியாமற் போய்விட வேறு பக்கம் பார்த்தான் கதிர்வேல் கிருஷ்ணா.....



"கிரு...." அவர் ஏதோ பேசப் போகவும் வெளியே குரல்கள் ஓங்கி ஒலிக்கவும் சரியாக இருக்க மீண்டும் குமரனை முறைத்தான் கதிர்.



"குமரா இங்க வாடா"



"நா வரமாட்டேன்.... வந்தா அடிப்ப"



"இங்க வாடா"



"டேய் நா அவனுங்களுக்கு சின்னதா தான் பண்ண சொன்னேன் அவனுங்க கலர் கலரா ஷட்டர் பாம போடுவானுங்கன்னு நானும் எதிர்பாக்கவே இல்ல மச்சி.... நம்புடா"



"உன்ன... தனியா மாட்டுவல்ல.... இரு" அவன் முணுமுணுக்கவும் வாய் விட்டுச் சிரித்த அபியை முறைத்தான் குமரன்.



......



அத்தையின் தலை கோதலுக்கும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்துவிட அவர் தான் அழுது தீர்த்து விட்டார்.



சுமார் இரண்டு மணி நேரம் கழித்தே ராஜாராம் பிரச்சனையை சுமுகமாக்கி விட்டு நுழைய அவரையே பார்த்திருந்தவனின் கண்களில் குற்றவுணர்வே அதிகமாய்....



"அப்பா...."



"சொல்லு ஆதி?" அவர் அழைப்பில் கதிருக்கு புரிந்தது அந்த சம்பவத்திற்கு பின் அபி எனும் பெயர் தான், ரக்ஷன், யாழினி தவிர அவன் வேறு யாருக்கும் சொல்ல விட்டதில்லை என...



சட்டென நண்பன் மீது பாசமாய் தாவிய பார்வை அடுத்த நிமிடம் கோபமாய் மாறியதை அபியும் குமரனும் துல்லியமாய் கணக்கிட்டுக் கொண்டனர்.



"மிஸ்டர். கதிர்வேல் உங்க கிட்ட பேசணுமாம் பா" அவனை வெறுப்பேற்றவென்றே அவன் பெயரை அழைக்க அவனைத் தவிர அனைவருமே முறைத்துப் பார்த்தனர் அவனை....



"எதுக்குப்பா முறைக்குறீங்க?"



"ம்...." தாயிடமிருந்து தான் பதில் வந்தது.



"ரா... மா... மா" எத்தனை வருடங்களாகி விட்டன அந்த அழைப்பு வாயிலிருந்து வந்து....



ஏனோ இயல்பாய் வர மறுத்தது வாயிலிருந்து....



"கண்ணா" உணர்ச்சி வசப்பட்டு கட்டியணைத்தவரை திரும்ப அணைக்கக் கூட முடியாமல் குற்ற உணர்ச்சி நெஞ்சை சுட்ட அதே நேரம் அந்த கண்ணாமூச்சி ஆடுபவன் மீது வெட்டிப் போடும் ஆத்திரம் வந்தது.



அவனால் அல்லவா இத்தனை வருடங்கள் தன்னையும் கஷ்டப்படுத்தி இவர்களையும் வார்த்தைகளால் குத்தி கிழித்திருந்தான்.



"நாங்க என்ன தப்பு பண்ணி நீ எங்க கூட பேசாம இருந்தேன்னு தெரிலடா.... ஆனா நிச்சயமா எங்க மேல தான் தப்பு இருக்கும்... மன்னிச்சுடுடா... எங்கள மன்னிச்சுட்டா மட்டும் போதும்பா" அவர் குரல் சட்டென உடைய தன் கண்களும் கலங்கியதில் அடுத்த நிமிடம் தாவி அணைத்திருந்தான் ராஜாராமை....



"சாரி மாமா.... ரியலி சாரி... சாரி மாமா... ப்ளீஸ் மன்னிச்சுடுங்க.... ரெண்டு அடி வேணா அடிச்சுடுங்க மாமா.... சாரி மாமா" அடக்க முடியாமல் அவன் அழவும் அவன் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டதில் அவருக்குமே அவன் குற்ற உணர்ச்சி புரிவதாய்!!!



"என்னடா இது.... இப்போ எதுக்கு அழற? " லஷ்மி அருகில் வந்து தலையை வருட இன்னுமின்னும் உடைந்து போன அந்த ஆறடி ஆண்மகனின் கண்ணீரில் அனைவருமே அழுது விட்டனர்....



"கண்ணா என்னடா இது?"



"சாரி அத்தை... என்னை மன்னிச்சிடுங்க... நான் அப்பிடி பண்ணி இருக்க கூடாது.... நான் பாவி அத்த.... என் மேல தான் தப்பு "



"என்ன பேசுற கிருஷ்" அவன் வார்த்தைகள் அபியை கோபப்படுத்தின.



"கண்ணா ஏன்பா இப்பிடில்லாம் பேசுற....முதல்ல அழறத நிறுத்து... இங்க வா.... " அவனை கூட்டிக் கொண்டு போனவர், தான் அமர்ந்து தன் மடி மீது சாய்க்கவே முகத்தில் அறைந்தன அவன் அவர்களுக்கு கொடுத்த வார்த்தைகள்.



"சாரி அத்தை"



"ஷ்.... கொஞ்ச நேரம் பேசாம இரு" அங்கே பலத்த மௌனம் நிலவ தன்னை இயல்புக்கு திருப்பிக் கொண்டிருந்தான் கதிர்.



........................................



"அப்பா...." அவன் தலை லக்ஷ்மியின் மடியிலிருக்க அவன் காலை தன் மடியில் வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டு உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தவருக்கு மகன் பேசியது காதில் விழவே இல்லை....



"அப்பாஆஆஆஆ"



"ப்ச்.... எதுக்குடா கத்தற?"



"கதிர் ஏதோ கேக்கனும்னு சொன்னான்" மௌனத்தை கலைக்க விரும்பியவனாய் அவன் விடயத்தை நினைவூட்ட கதிரை பார்த்தார் ராம்.



"என்னபா கேக்கணும்?"



"அது அது வந்து மாமா..."



"தயங்காம கேளுடா"



"இல்ல.... " அவன் எழும்ப முயற்சிக்க இருவருமே விடாமலிருக்கவும் அப்படியே படுத்து விட்டான்.



"மாமா.... உங்களுக்கு ஐ மீன் தாத்தா பாட்டிக்கு நீங்க மட்டும் தான் குழந்தையா?"



"இல்ல கண்ணா.... நான் இரட்டையர்ல ஒருத்தன்...."



"வாஆஆட்???" இதயம் அதிவேகமாக துடித்ததில் சடாரென எழுந்து நின்று கத்தினான் கதிர்வேல்.....



"என்னபா என்ன ஆச்சு?" பயந்து போயினர் அனைவரும்....



"மா... மா மேல சொ... சொல்லுங்க" வார்த்தைகள் வர மறுத்தது.



"கதிர் என்னாச்சுடா?"



" நத்திங் குமரா.... மாமா சொல்லுங்க"



"உட்காரு"



"இல்ல அத்தை.... மாமாஆஆ சொல்லுங்க" அவன் பதற்றம் ஏனென்றே புரியவில்லை ஒருவருக்கும்....



" அவன் சின்ன வயசுலயே இறந்து பொய்ட்டான்" அடுத்த அதிர்ச்சி!!!



இல்லவே இல்லையென வாதிட்டது மனசாட்சி!!!



"அப்பறம் நா மட்டும் தான்"



'உங்க தம்பி தான் மாமா என் குடும்பத்த அழிச்சவன்.... உங்கள போயி தப்பா நெனச்சிட்டேனே.... இதுக்கு நா என்ன தண்டன அனுபவிக்க போறேன்.... அந்த பரதேசி உயிரோட தான் இருக்கான்னு சொன்னா தாங்குவீங்களா மாமா.... ' ஊமையாக அழுதது மனசாட்சி



இரண்டு தடவை ஹார்ட் அட்டாக் வந்தவர் இவ்விடயம் கேள்விப்பட்டால் தாங்குவாரா????



"எதுக்குபா திடீர்னு?"



"சு... சு... சும்மா தான் மாமா... நா வந்தது... கேட்டது... யாருக்கும் தெரிய வேண்டாம் மாமா.... இது நமக்குள்ளேயே இருக்கட்டும்" அவர் அரசியல்வாதியல்லவா....



ஏதோ பிரச்சனை என சட்டென ஊகித்து புரிந்து கொண்டவர் சம்மதமாய் தலையசைத்தார்.



"நாங்க கெளம்புறோம்"



"இங்கேயே இரு கண்ணா" லக்ஷ்மி தான் வேதனைப்பட்டார்.



"திரும்ப நிச்சயமா வருவேன் அத்தை.... அதுக்கிடைல முக்கியமா முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கு.... அத முடிச்சிட்டு கண்டிப்பா உங்க முன்னாடி வர்றேன்.... அது வர நாம சந்திக்க வேணாம்.... குட்டிமா வேணும்னா இங்க தங்கட்டும்.... பட் அவ வர மாட்டா.... பாக்கணும்னு தோனிச்சுனா சொல்லுங்க நானே கூட்டிட்டு வர்றேன்.... யாரும் அநாவசியமா வெளில போகாதிங்க... மாமா அபி... அத்த.... உங்க பாடி கார்ட்ஸ் இருந்தாலும் என் பாடி கார்ட்ஸயும் வீட்ட சுத்தி நிறுத்தறேன்.... பயப்பட எதுவுமில்ல... ஒரு சேபுக்கு தான்.... வர்றேன்.... குமரா.... வா" பின் வழியால் அவன் செல்ல வண்டி ஏற்பாடாகி இருக்க அவன் சொல்லிச் சென்று நிமிடங்கள் கழித்தே கலைந்தனர் அனைவரும்....



........................................



இரவு......



"மாமாக்கு ஒன்னில்லல்ல யாழ்?" ஆயிரமாவது தடவையாக தன்னிடம் அண்ணனை பற்றி விசாரித்துக் கொண்டிருந்த அண்ணியை இரக்கத்துடன் பார்த்தாள் யாழினி.



"அட புருஷன் மேல அவ்வளவு லவ்ஸா தங்கச்சி உனக்கு?" ரக்ஷன் கிண்டலடிக்க



"சும்மா இருங்க அண்ணா" சிணுங்கினாள் பேதை...



"என் மாமாக்கு ஒன்னில்ல" அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க இடைபுகுந்த ஷாலினியை கொலை வெறியுடன் முறைத்தனர் ரக்ஷனும் யாழினியும்....



அவள் வார்த்தைகள் பெண்ணவள் இதயத்தை சுருக்கென தைக்க கலங்கிய கண்களை மறைக்க அவள் எழவும் வீட்டின் முன் டார்க் நைட் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.



"எனக்கு காபி வேணும்.... எடுத்துட்டு வா" வர்ஷினி அவன் கண்களுக்கு பட்டு விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது ஷாலினியின் மூளை....



"உங்களுக்கு வேணும்னா நீங்க போட்டு குடிங்க.... அண்ணி நீங்க போகா" அவள் முடிப்பதற்குள் அவள் சென்றிருக்க தன்னை நக்கலாய் பார்த்த ஷாலினியை முறைத்தாள் யாழினி கிருஷ்ணா.....



"மாமா....." வராத கண்ணீரை துடைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவனிடம் விரைந்தவளை பார்த்து ஒருவர் முகத்தை ஒருவர் பாத்துக் கொண்டனர் ரக்ஷனும் யாழினியும்....



"என்னா நடிப்புடா சாமி"



"ஆமாண்ணா.... இவள ஏதாவது பண்ணனும்" இருவருமே மீண்டும் பல்லை கடித்தனர்.



உள்ளே வந்தவன் மீண்டும் மனைவியை அலச அவள் இல்லாது போகவும் தன் முன் நின்றிருந்த ஷாலினியை பார்த்தவனின் நினைவடுக்குகளில் வந்த காட்சிகளில் மனைவியை கொன்று போடும் வெறி கனன்று கொண்டிருந்தது.



"நா தனிய இருக்க விரும்புறேன்" யாரின் பதிலையும் எதிர்பாராமல் அவன் மேலேற அவனையே பார்த்துக் கொண்டிருந்த ரக்ஷனுக்கே உள்ளுக்குள் தடதடத்தது.



"காபி...." கணவன் வந்தது தெரியாமல் அவள் நீட்ட



"எனக்கு வேணாம்.... எடுத்திட்டுப் போ" வாயை நக்கலாக வளைத்தாள் ஷாலினி.



"அவ மூஞ்சியிலேயே ஊத்திடுங்க அண்ணி" யாழினி எகிற வாய் விட்டிச் சிரித்த ரக்ஷனை முறைத்து விட்டு தட்தட்டென படிகளில் ஏறிச் சென்று விட்டாள் ஷாலினி.



"சனியன் ஒழிஞ்சுது.... நீங்க ஏன் அண்ணி இதெல்லாம் பண்றீங்க?"



"இல்ல பாவம்ல?"



"அப்பிடியே ஒன்னு விட்றுவேன் பாத்துக்கங்க.... அண்ணியா பொய்ட்டீங்க" அவள் கோபப்பட எதிர்த்து பேசாமல் புன்னகைத்தவளை பார்த்து அவள் தான் இறங்கி வந்தாள்.



"அண்ணா வந்துட்டாங்க.... போய் பாருங்க"



"எப்போ வந்தாங்க... நல்லாதானே இருக்காங்க?"



"ஆமாமா.... போ" ரக்ஷனும் சொல்லவே தான் அவசரமாக தங்களறைக்கு விரைந்தாள் அமிர்தவர்ஷினி.



..........



"மா.. மா...." அவன் இல்லாது போக அழைத்தவள் முன்னால் ருத்ரமூர்த்தியாய் வந்து நின்றவனை பார்த்தி உடல் தூக்கிப் போட இரண்டடி பின்னால் நகர்ந்தாள் பாவை....



"எ... ன்ன்ன்... ன?" அவன் கொடுத்த அழுத்தத்திலேயே தெரிந்தது அவன் குடித்திருக்கிறானென....



"க... கை... கை... எப்பிடி இருக்கு மா.. மா?"



"அப்பிடி கூப்புடாதடி" உறுத்து விழித்தவனின் கண்களில் கண்ட சிவப்பில் நடுங்கிப் போனாள் மனைவி....



"ஏன் மா... மா?" அரித்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்டே விட்டாள்!!!



ஆனால் எதிர்வினை???



அவள் கழுத்தை பிடித்து இறுக்கி சுவற்றோடு சாற்றியவன்



" செய்யுறதயும் செஞ்சுட்டு எதுக்குன்னா கேக்குற இடியட்.... எல்லாத்துக்கும் நீதான்டி காரணம்... துரோகி...." அவள் இறுமவே உதறித் தள்ளியவன் தள்ளாடியவாறே பால்கனிக்கு சென்று விட தாங்கமாட்டாது அழுதாள் பெண்....



.......



இரவு ஒரு மணி....



கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவள் மீண்டும் அவனைத் தேடிச் செல்ல கால்களை நீட்டி வாசல் பார்த்து இடது கையில் மது பாட்டிலுடன் அமர்ந்திருந்தவன் அவளை கண்டு அருகில் வருமாறு அழைக்க பயந்து போனாள் பெண்....



"உ... உ... உள்ள வாங்க மா.... சாரி"



"இ.. ங்க ப.. க்கதுல வாடி"



"...."



"வா..." கத்தவும் திடுக்கிட்டவள் அவசர அவசரமாக அவன் பக்கத்தில் சென்று அமர சட்டென தோள் சாய்ந்தவனை பார்த்து அதிர்ந்து போனாள் காரிகை.....



"ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல உன்ன....ஐ அம் சாரி கண்ணம்மா... ஐ நீட் யூ... பட் ஐ ஹேட் யூ டி... என்ன எதுக்கு பைத்தியக்காரனாக்குற.... ஐ அம் இன் லவ்..." அவன் அசந்து தூங்கி விட இடைநடுவில் நின்று போன வார்த்தைகளில் விக்கித்து அமர்ந்திருந்தாள் மனைவி....



அந்த வார்த்தைகள் தனக்கானது என புரிந்து கொள்ள முடியாமற் போக கணவன் மனதில் வேறொரு பெண்ணுக்குத் தான் முதலிடம் என்றதில் மீண்டும் பீரிட்டுக் கிளம்பியது அழுகை!!!
 
Last edited:

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலை.....



மனதிலிருப்பதை மனைவியிடம் கூறிவிட்டதாலோ என்னவோ மனம் மிக இலேசாக இருக்க கண்களை திறந்தவன் மனைவியியின் தோள் மீது இரவு முழுவதும் தான் உறங்கியிருப்பது உணர்ந்து அதிர்ந்து போனான்.



((நண்பா மிக முக்கியமான விஷயம் என்னன்னா இவன் நம்ம தேவ் (உயிரோடு கலந்தவள்) மாதிரி கிடையாது...



அவன் ராத்திரி குடிச்சான்னா ஓரளவாவது ஞாபகம் வெச்சிருப்பான்... பட் இந்த ரவுடி சாரு அப்பிடி கிடையாது.... இவனுக்கு சுத்தமா தான் என்ன பண்ணோம்குறதே மறந்து போயிடும்.... யார் கூட பேசினோம்குறது கூட....



காலைல போதை தெளியாம தல வலிச்சுதுன்னா தான் நாம ராத்திரி குடிச்சிருக்கோம்குறதே இவனுக்கு தெரிய வரும்.... அதுவும் யூகம் தான்... அவன் சாரி கேக்குறது கூட ஏதாவது ஹேர்ட் பண்றா மாதிரி பேசி இல்லன்னா அடிச்சு இருப்பேனோங்குற சந்தேகத்துல... இல்லன்னா அவ அழுதது வெச்சு கண்டு பிடிச்சு மன்னிப்பு கேட்டாலும் அவனுக்கு கடைசி வர எதுவுமே ஞாபகத்துல வராது.....



இது அவனுக்கு வரமா? சாபமான்னு? தெரில..... பாக்கலாம்))



'இவ எப்பிடி என் பக்கத்துல... ஆமா நான் எப்போ பால்கனிக்கு வந்தேன்?' மனதில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே நிமிர்ந்து மனைவியை ஏறிட அழுதழுது வீங்கியிருந்த முகமும் காய்ந்து போன கண்ணீர் ரேகைகளும் தான் ஏதோ பண்ணியிருக்கிறோம் என உணர்ந்தியதில் அவளிடமிருந்து விலகக் கூட நினைவின்றி கண்களை இறுக்க மூடித் திறந்தவன் வேறெங்கோ வெறித்தான்.



அவனும் ஒதுங்கி இருக்கத்தானே முயல்கிறான்.... ஆனால் முடியவில்லையே!!!



ஏதேதோ எண்ணங்கள் மனதை அலைகழிக்க தலை விண்ணென தெரித்ததில் தான் சற்றே யூகித்தான் தான் குடித்திருப்போமா என....



'ராத்திரி கண்டிப்பா இவள ஹேர்ட் பண்ணி இருக்கேன்..... அதான் அழுதிருக்கா போல' கண்கள் மீண்டுமொருமுறை மனைவியிடம் தாவியதில் முன்னால் விழுந்திருந்த முடிக்கற்றைகளை ஒதுக்க ஓங்கப்பட்ட கை அவள் இலேசாக அசையவும் அந்தரத்தில் நின்றுபோக அவசரமாக கண்களை மூடிக் கொண்டவன் தூங்குவது போல் நடிக்க துவங்க தன் விழிகளை கஷ்டப்பட்டு மலர்த்தினாள் பாவை....



' ஐயய்யோ.... எழுந்தா திட்டுவாங்களே... இப்போ என்ன பண்றது கடவுளே....' மனம் பதறியதில் இரவு நடந்தது தற்காலிகமாக மறந்து போயிருக்க இப்போது கணவனை பார்ப்பது இவள் முறையாயிற்று...



அவன் முகத்தை பார்த்ததும் தான் அவன் வார்த்தைகள் ஞாபகம் வந்ததோ பேதைக்கு???



கலங்கிய கண்களை இமை சிமிட்டி அடக்கியவள் முதுகை தாங்கியிருந்த கிரில்லின் மீதே மீண்டும் கண்களை மூடி சாய இதற்கு மேல் முடியாதென தோன்றி விடவே கண்களை திறந்தவன் படக்கென எழ எத்தனிக்க அவனை மீண்டும் அதே நிலையில் இழுத்து விட்டது அவள் தாலிக்கொடியுடன் மாட்டியிருந்த அவன் கழுத்துச் சங்கிலி....



கணவன் தலை மீண்டும் தோள் சாய்ந்ததில் அதிர்ந்து விழி திறந்தவளின் கண்களும் அண்ணார்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த காளையின் கண்களும் ஒரே நேர் கோட்டில் சந்திக்க இமை மூட மறந்தன இரு ஜோடிக் கண்களும்!!!



அருகே.... மிக அருகே கணவன் முகம் கண்டதில் மனம் மீண்டுமொருமுறை தடம்புரள மனைவியின் மதிமுகத்தில் திளைத்துத் தான் போயிருந்தான் கணவன்....



"ஏன்டி அப்பிடி பண்ண?" அவன் கேள்வியில் மலங்க விழித்தவள்



"எ... எ... என்ன மா... வந்து... நா என்ன ப... பண்ணேங்க?" அவ்வளவு தான்.... தன் மோகம் திடீரென அறுபட அவளை முறைத்தவன் வேண்டுமென்றே எழ "ஆஆ..." கத்தி விட்டாள் பெண்....



இழுத்த இழுப்பில் அவன் நெஞ்சில் மோதியவள் "சா... சா... சாரி... சாரி" பதற்றத்துடனேயே எழ முற்பட மீண்டும் சண்டித்தனம் செய்து வைத்தது அவன் சங்கிலி.....



"என்னால முடிலங்க....." அவளும் எவ்வளவு தான் முயல்வது???



"இரு...." பாவமென தோன்றி விட்டதோ!!!



அவளுடன் இணைந்து தன் சங்கிலியை மெதுவாக விடுவித்தவன் கையை தட்டிக் கொண்டே எழவும் தானும் எழுந்து நின்றாள் காரிகை....



கதவை தாண்டி அறையினுள் நுழையப் போனவனின் நடை ஒரு நிமிடம் தயங்கி பின் தொடர்து விட்டதில் அவனையே விழியெடுக்காமல் பார்த்திருந்தவளுக்கு மனம் பாரமாக அழுத்தியது.



நேற்றைய அவன் வார்த்தைகளுக்குப் பிறகு ஏனோ "மாமா" எனும் அழைப்பு கூட வாயிலிருந்து வருவதற்கு தடைபடுவதாய்....



அவளால் நிச்சயமாக அவனை அப்படி அழைக்காமல் இருக்க முடியாதென்பது அவளுக்கு போலவே அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது.



இருந்தும் முயல்கிறாள்.... அவன் கோபத்தை அப்படியாவது போக்கி விட மாட்டோமா எனும் தவிப்பில்....



நினைக்க நினைக்க பெருமூச்சு தான் வெளியேறியது பேதைக்கு....



இதில் அவன் வார்த்தைகள் வேறு காதிற்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்ததில் சோர்ந்து போன முகத்துடன் தானும் அறையினுள் நுழைந்தாள் பெண்.....



..............



"குட் மார்னிங் அண்ணா" கொட்டாவி விட்டபடியே எழுந்து வந்து அவன் அமர்ந்திருந்த டைனிங் டேபிள் மீது மீண்டும் தன் தூக்கத்தை தொடர்ந்த யாழினியை பார்த்து தலையாட்டி சிரித்தான் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ரக்ஷன்.....



"குட்டிமா.... தூக்கம்னா போய் தூங்குடா"



"க்ருஷ் அண்ணா திட்டுவாங்க.... அவங்க போனதுக்கப்பறமா தான் தூங்கணும்" அவள் முடிக்கவில்லை



"எத்தன நாளா குட்டிமா இப்பிடி நடக்குது?" தலையை தடவி விட்டு கதிர் அமரவே படக்கென எழுந்தமர்ந்தாள் யாழினி கிருஷ்ணா....



"அது.... சும்மா சொன்னேன்னா" அவள் அசடு வழிய



" அடிப்பாவி" வாயைப் பிளந்தான் ரக்ஷன்....



" ஆமா.... அண்ணி எங்... தோ அவங்களே வர்றாங்க" யோசனையில் வந்து கொண்டிருந்தவளுக்கு யாழினியின் வார்த்தைகள் காதில் விழவே இல்லை....



நேரே சமையலறைக்குள் அவள் நுழைய ஒரு முறை திரும்பி மனைவியை பார்த்தவன் பேசாமல் திரும்பி விட



"அண்ணிக்கு என்னாச்சு?" புலம்பினாள் அவன் தங்கை....



" மச்சான் நான் கிளம்புறேன்டா.... அன்னக்கி இன்டர்வியூ வெச்சதுல ஸிலெக்ட் ஆனவங்கள இன்னிக்கு வர சொல்லி இருக்கேன்.... கொஞ்சம் வேல இருக்கு.... இப்போவே போனா தான் கரெக்டா இருக்கும்டா" ரக்ஷன் சொல்லி விட்டு கிளம்பவும்

"குட் மார்னிங் மாமா" என்றவாறு ஷாலினியும், அவள் அழைப்பில் தான் கலைந்தவள் வலியுடன் கணவனை பார்க்கவும் சரியாக இருக்க ஷாலியினின் அழைப்பில் அண்ணியின் கண்களில் தெரிந்த வலியை கண்டு கொண்டு அண்ணன் அருகில் வந்தமர்ந்தவளை முறைத்தாள் யாழினி.



"குட் மார்னிங் ஷாலினி" இறுகி இருந்த முகம் சட்டென கனிவாக அண்ணனை ஆராய்ச்சியாய் பார்த்து வைத்தாள் தங்கை.....



"காபி" கதிர் அமர்ந்திருப்பதை மறந்து வர்ஷினியிடம் ஷாலினி கத்தவே சலேரென அவளை திரும்பி பார்த்தவனின் பார்வையில் நடுங்கிப் போனாள் பெண்.....



"இல்ல மாமா..... வந்து.... அவ உங்க மனைவிங்குறதே மறந்து போயிடுது.... ஏதோ வேலக்கா...."



"ஏய்....." இடது கையால் மேசையை தட்டி விட்டு அவன் எழுந்த வேகத்தில் தூக்கி வாரிப் போட்டது தங்கைக்கும் மனைவிக்கும்.....



தான் ஏதாவது சொல்லி விடக் கூடாதே என்றெண்ணியவன் விடுவிடுவென படிகளில் ஏறிச் செல்ல கண்களை இறுக்க மூடித் திறந்து தன் கோபத்தை கட்டுப் படுத்தியவளுக்கு அதையும் மீறி அவன் தனக்கு முதன்முறை கத்தி விட்டதில் அழுகை பொங்க விறுட்டென அவள் அகலவும் யாழினி உதட்டை வளைக்க ஷாலினியை நினைத்து பாவமாய் போனது பெண்ணவளிற்கு....



"அண்ணி.... அவ பேசுனத நீங்க மனசுல வெச்சுக்காதிங்க" அவளிடம் சென்றவள் சட்டென அவள் கையை பிடிக்க பொங்கி வந்த துக்கத்தை அப்படியே விழுங்கிக் கொண்டவள் யாழினியை பார்த்து அழகாய் புன்னகைக்க தானும் புன்னகைத்தவள் அவளை இறுக்க அணைத்துக் கொண்டாள்.



அவளுக்கு தெரியாதா அண்ணியின் புன்னகைக்கு பின்னிருக்கும் மனவேதனை!!!



இருந்தும் இன்று அண்ணன் அவள் அண்ணியை ஏதும் ஒரு வார்ந்தை சொல்லி விடக் கூடாது என்றதில் கவனமாக இருந்ததில் சந்தோஷம் பொங்கியது யாழினிக்கு....



***



கிருஷ்ணன் க்ரூப்ஸ் ஆப் கம்பெனீஸ் தலைமையகம்....



((நண்பா.... நாம நம்ம அர்ச்சுவ மறந்தே போயிட்டோம்ல.... அவங்களையும் பாத்துட்டு வந்துடுவோம் இருங்க))



"மே ஐ கம் இன் சார்" எதிர்பார்த்திருந்த குரலுக்கு சொந்தக்காரியே அனுமதி வேண்டி நிற்க விலுக்கென நிமிர்ந்தான் ரித்விக் ரக்ஷன்.



"கம் இன்..." வந்தமரும் வரை விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் நிமிர சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்.



"சார்....."



" பார்ம் எல்லாம் பில் பண்ணி கொடுத்துட்டீங்களா மிஸ் அர்ச்சனா?"



"எஸ் சார்" அன்றிருந்த பதட்டம் தற்போது சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது அவளிடம்....



"ஓகே தென்.... பத்து மணிக்கு தென்றல் கன்ஸ்ட்ரக்ஷன் கூட மீட்டிங் இருக்கு.... ப்ரிப்பேர் பண்ணிட்டு என்ன வந்து பாருங்க" நிமிர்ந்து அவளை பார்த்தவன் அதிர்ந்து போனான் என்று தான் கூற வேண்டுமோ!!!



வரும் போதிருந்த அந்த கொஞ்ச தைரியமும் வடிந்து போய் வியர்த்து விருவிருக்க அமர்ந்திருந்தவளின் தோற்றம் கண்டு சற்றே பயந்து தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்.....



" ஹே.... வாட் ஹபெண்ட்.... ரிலாக்ஸ்... ஆர் யூ ஓகே அர்ச்சனா?"



"எ... எ... எஸ் சார்.... சா... சாரி" தண்ணீர் கிளாஸை எடுத்து அவன் நீட்ட ஒரே மூச்சில் குடித்து முடித்தவள் தன்னை நிலைப்படுத்த முயன்று கொண்டிருக்க ரக்ஷனுக்கு தான் அவள் புதிராகவே தெரிந்தாள்.



"ஆர் யூ ஓகே? "



" எ.... ஸ் சார்"



"தென்றல் கன்ஸ்ட்ரக்ஷனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? " அவன் டிடக்டிவ் அல்லவா???



சட்டென காரணத்தை ஊகித்து கேட்டு விட மிரண்டு போனாள் பெண்....



"சொல்லுங்க... அவ்வளவு பெரிய லீடிங் கம்பெனிக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?" ஒருவேலை அவனால் அமர்த்தப்பட்ட ஆளாக இருக்குமோ என்றதில் அவள் மீதிருந்த ஈர்ப்பு போய் அங்கே சற்று கோபம் வந்து ஒட்டிக் கொள்ள இறுகியது அவன் முகம்....



"ச... சா... ர்"



"டோன்ட் ஆக்ட்... ஹூ ஆர் தெம்?" ஆத்திரத்தில் அவன் கத்த மழுக்கென கண்ணத்தை தொட்ட கண்ணீரை பார்த்தே தான் சற்று தன்னை இழுத்துப் பிடித்தான்.



"அ... அ... அது... அ... அப்... அப்பாவோட கம்பெனி தான்... நான் பிறக்கும் போதே அம்மா இ... இறந்து போயிட்டாங்க... அப்பறமா அப்பா வேதா சித்திய க... கல்யாணம் பண்ணிகிட்டாங்க... அன்னக்கி ஹாஸ்பிடல்ல உ... உ.. உங்க மேல மோதினப்போ அப்பா இறந்து போயிட்டாங்கங்குறத பா... க்.. பாக்கதான் ஓடினேன்... சொ... சொத்து எ... என் பேருல இருக்கறதனால அப்பா இறந்த உடனே சித்தி அவங்க பையனுக்கு என்ன க.. கல்யாணம் பண்ணி வைக்க பா... பாத்தாங்க... நான் சம்மதிக்கலன்னதும்.... அ... அ... அந்த... அந்த நிதின்... என்ன டாச்சர் பண்ணான்... அதுக்கப்பறமா... அ.. அவங்க.... அவங்க கண்ணு முன்னாடி இருக்க வேணாம்னு வேலைக்கு அ... அனுப்பிட்டாங்க... அவங்க பையன் நிதின் தான் இப்போ... இப்போ தென்றல் கன்ஸ்ட்ரக்ஷன்ல எம். டியா இருக்கான்.... ஆ... ஆனா அவன் ஆளுங்க எப்போவும் என்ன கண்காணிச்சு கிட்டே இருப்பாங்க...." ஏனோ அவனிடம் மறைக்கத் தோன்றாமல் கடகடவென அனைத்தையும் ஒப்பித்தவள் முகத்தை மூடிக் கொண்டு அழ மொத்த கோபமும் வடிந்து போனது அவனுக்கு....



" அப்போ நீங்க தான் அர்ச்சனா தென்றலா? " தென்றல் கன்ஸ்ட்ரக்ஷன் மிஸ்டர்.சரவணன் (அவ அப்பா நண்பா) தன் கம்பெனிக்கான அடுத்த எம். டியாக தன் மகள் இருக்கப் போவதாக பார்ட்டிக்கு அவனையும் வந்து அழைத்து விட்டுப் போனது அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது...



அவர் இறந்த செய்தி கூட தெரியாமல் இருந்திருக்கிறானே!!!



மனம் குற்றவுணர்வில் தத்தளிக்க அவள் அழுவதை பார்க்கவே முடியவில்லை அவனால்....



"சா... சாரி அர்ச்சனா... ஐ அம் ரியலி சாரி.... சரவணன் சார் இறந்து போனது எனக்கு தெரியாது...ப்ளீஸ் அழறத நிறுத்துங்க... ஐ அம் சாரி" மீண்டும் அவளிடம் தண்ணீரை நீட்ட வாங்கி குடித்தவளுக்கு தன்னை கட்டுப்படுத்திக் கொள்வதே பெரும் சவாலாய்....



"அர்ச்சனா ப்ளீஸ்.... "



" சாரி சார்"



" இட்ஸ் ஓகே... நீங்க உங்க கேபினுக்கு போங்க.... நான் அப்பறமா பேசறேன்" அவனை நன்றியாய் பார்த்து விட்டு அவள் சென்று விட அந்த நிதின் மீது ஏனென்றே தெரியாத ஆத்திரம் பொங்கியது காளைக்கு....



***



" அண்ணி.... அண்ணா ஆபிஸும் போல... சாப்புட கூட கீழ வர்ல"



" என்ன சொல்ற யாழ்? " யாழினி சொல்லவே பதறினாள் பெண்...



"ஆமா கா... அந்த ஷாலினி மட்டும் தான் வந்து சாப்ட்டுகிட்டு இருக்கா"



"நீ இரு நான் பாத்துட்டு வர்றேன்...."



"அ... அண்ணி இருங்க.... சாப்பாட்டை எடுத்துட்டே போங்க" தட்டை திணித்தவள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்...



அவனது வலது கையில் கட்டு போட்டிருக்க எப்படியும் இவள் தான் ஊட்ட வேண்டி வருமென்பது நன்றாகவே தெரிந்து தான் சாப்பாட்டு தட்டையும் சேர்த்தே அனுப்பி விட்டாள்.



((அடிப்பாவி....))
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கட்டிலில் அமர்ந்து இடது கையால் ஏதோ கஷ்டப்பட்டு டைப் செய்து கொண்டிருந்தவனின் அருகே தயங்கித் தயங்கி வந்து நின்றாள் மாது.



அவனையும் அவனது அடிபட்ட வலது கையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தவளை நிமிர்ந்து பார்த்தவன்



"என்ன?" என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்தி விட அவளுக்குத் தான் வழமை போல் வார்த்தை தந்தியடிக்கத் துவங்கியது.



"வ... வ... வந்து... சா... சாப்பாடு மா.. க்கும்... சாப்பாடுங்க"



"அப்பிடி வெச்சிட்டு கிளம்பு" அவன் மீண்டும் தலையை குனித்து விட அசையாது அப்படியே நின்றவள் அவன் நிமிரப் போவதில்லை என்பதை உணர்ந்து வைத்து விட்டு திரும்ப "கொஞ்சம் இரு" திடீரென அழைத்தான் கணவன்...



சட்டென திரும்பியவள் அவனை பயத்துடன் பார்த்து வைக்க

"அதான் கைல அடிபட்ருக்குன்னு தெரியுதுல்ல.... வந்து ஊட்டி விடு வா..." அவன் வார்த்தைகள் தூக்கிவாரிப் போட்டது பேதைக்கு....



"நா... நா... ன்... நானா?" அவள் விழிவிரிக்க பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன்



"ம்... ஆமா நீ தான்.... வா" என்றான் கோபம் போலும்....



"இ... இ... இல்ல... வ... வந்து.... வந்து நா.... "



" எதுவும் பேசாம வந்து ஊட்டு.... கமான் க்வீக்..." கைகளை பிசைந்து கொண்டு நின்றவள் அவன் முறைக்கவும் அவசர அவசரமாக வைத்த தட்டை எடுத்துக் கொண்டு அவனருகே செல்ல இதழ் கடையோரம் கீற்றாய் புன்னகை அரும்பியது அவள் கணவனுக்கு....



"ம்... ஊட்டு.... பசிக்குது... "அவனுக்கு பசி என்றால் சுத்தமாக இருக்கவே இல்லை தான்.... ஆனாலும் இரவு அவனால் நடந்தவற்றிற்காக அவள் முகம் சோர்ந்து போயிருப்பதை காண சகிக்காமலேயே இப்படி நடந்து கொண்டிருக்கிறான்.



அதிலும் இன்று அவன் முன்னே ஷாலினி அவனவளுக்கு பேசிய பேச்சில் அவனுக்கு அப்படி ஒரு கோபம்.... அவளிடம் கோபப்பட முடியாமல் மேலே வந்து விட்டாலும் மனைவியை தோள் சாய்க்கத் தான் ஏங்கியது மனம்...



எப்படி அழைப்பது என யோசித்துக் கொண்டிருந்தவனிடம் அவளை கடவுளாய் பார்த்து அனுப்பி வைத்திருக்க சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டான் அவன்....



"இப்போ ஊட்ட போறியா... இல்லயா?"



"....."



"சரி.... எனக்கு வேண்டாம்.... எடுத்துட்டுப்...."



"இ... இல்ல இல்ல ஊட்றேன்" பதற்றத்தில் கத்தியவள் சட்டென அவன் வாய்க்குள் ஒரு கவளத்தை திணித்து விட்ட அந்த நொடி..... இருவருக்குள்ளும் இனம்புரியாத ஓர் உணர்வு.....



அவனையே இமை விலகாமல் பார்த்திருந்தவள் தன்னையும் மீறி "மாமா... க... கை.... " அவனுக்கான அழைப்பை அழைத்து விட வேண்டுமென்றே கையை பிடித்துக் கொண்டவனை பார்த்து சில்லிட்டுப் போனது பேதையுடல்....



"சாரி...." தன் நிலையை இழுத்துப் பிடித்தவன் கையை எடுத்து விட்டு சட்டென விலக அவனை புரியாது பார்த்தாள் பெண்.....



"எ... எதுக்கு சாரி?"



"நேத்து ராத்திரி என்ன ஆச்சு?" அவன் வார்த்தைகள் மீண்டும் அவள் செவிப்பறைக்குள் அறைந்ததில் சட்டென கலங்கிய கண்களுடன் இல்லையென தலையாட்டிவிட்டு புன்னகைக்க அவனுக்குத் தான் என்னவோ போலாகி விட்டது.



"நான் ஏதாவது ஹேர்ட் பண்ணி இருந்தா சாரி வர்... வர்ஷினி" அவளை அவன் சொல்வது போல் ஹேர்ட் பண்ணியாவது இருக்கலாமோ???



இது அதை விட அல்லவா வலிக்கிறது....



"இ.. இல்லங்க நீ... நீங்க எ... எதுவும் ஹேர்ட் பண்ணல" மீண்டும் புன்னகையுடன் அவள் இன்னொரு கவளத்தே நீட்ட இமைக்காமல் தன்னவளையே ரசித்தன அவன் கண்கள்!!!



அப்போதும் சரி இப்போதும் சரி... அவள் முகத்திற்கு அந்த புன்னகை ஒன்றே போதுமென்றுதான் நினைத்தான்....



ஆனால்.... ஆனால்.... இடையில் அவளால் நடந்த சம்பவத்தில் அவன் புன்னகையும் சேர்ந்தே அல்லவா மறைந்து போனது!!!



***



இரவு.....



கையில் தன் உயர் ரக போனை வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் ராமலிங்கம்!!!



"ஏன் காலை அடண்ட் பண்ண மாட்டேங்குறறறறற???" தனக்குள்ளே பேசிக் கொண்டவர் மீண்டும் அழைக்க இம்முறை மறுமுனை எடுக்கப்பட்டதோ!!!



"சொல்லுங்க டாட்...."



"அவன் நெக்ஸ்ட் மூவ பத்தி ஒன்னுமே சொல்லல.... அவன் மேல பாசம் பொங்குதோ?" அவர் குரலிலிருந்த நக்கலில் மறுமுனையில் அமைதி....



" அவனோட நெக்ஸ்ட் மூவ் என்னன்னு எனக்கு இந்த முறை தெரில.... அவன் பக்காவா தப்பிச்சுட்டான்"



"ஏய்.... உன் அம்மா.... அதான் என் பொண்டாட்டி..... உயிரோட இருக்கனுமா இல்லயா....? "



".... "



" உயிரோட இருக்கனும்ல.... அப்போ போ.... போயி அவன் அடுத்து என்ன பண்ண போறாங்குறத கண்டு பிடிச்சு சொல்லு" அவன் பதிலை எதிர்பாராமலேயே துண்டித்தவர் மொபைலை தூக்கி தரையிலடிக்க உடைந்து சிதறியது அந்த உயர் ரக மாடல் கைப்பேசி!!!



.........



"அண்ணி... ஏன் சாப்புடாம இருக்கீங்க... வந்து முதல்ல சாப்புடுங்க" சமையலறையில் இருந்தவளை பிடித்துக் கொண்டாள் யாழினி.



"ஷாலினி ரூம விட்டு வரவே இல்ல... பாவம் அவ..."



"அண்ணி என்ன காண்டாக்காதீங்க... அவள பத்தி எதுக்கு பேச்சு?"



"இல்ல யாழ்... பாவமா இருந்துது..."



" அவ மத்தியானம் நல்லா கொட்டிகிட்டா.... நீங்க கவலப்படாம இருங்க"



"அவங்க அதுக்கப்பறம் வெளியில வரவே இல்லயே... நான் வேணும்னா பாத்துட்டு வரட்... " அவளை முடிக்க விடாது அவர்களருகே வந்து நின்றாள் ஷாலினி.



" மாமாக்கு சாப்பாடு எடுத்து கொடுங்க... " திமிராய் கேட்டவளை பார்த்து யாழினி பல்லை கடித்தாளென்றால் அவளை அதிர்ந்து போய் பார்த்தாள் பாவை....



"நீங்க ஒன்னும் கொண்டு போக தேவயில்ல.... அதான் அவருக்கு பொண்டாட்டி இருக்காங்கல்ல.... நீங்க தேவயில்லாம அவங்களுக்கு நடுவுல தலையிடாதிங்க"



" யாழ்.... " கண்டிப்புக் குரலுடன் கையை அழுத்திய அண்ணியின் குரலையும் தாண்டி



"யாழினி" கர்ச்சணையாய் வந்து விழுந்த அண்ணன் வார்த்தைகளில் திடுக்கிட்டு திரும்பினர் மனைவியும் தங்கையும்...



"உன்ன விட வயசுல பெரியவங்க கிட்ட மரியாதயா பேசு" அவன் குரலிலும் இலேசாக கோபம் எட்டிப் பார்த்ததோ!!!



"அவங்களுக்கும் மரியாதயா பேச..."



"இனப்.... எதிர்த்து வேற பேசற?"



"எதிர்த்து பேசலணா... அவங்க..."



"உன்ன வாய மூடுன்னேன்...."



மீண்டும் ஏதோ பேசப் போனவள் அண்ணியின் கெஞ்சல் பார்வையில் வாயை மூடிவிட்டு விறுட்டென சென்று விட பெண்கள் புறம் திரும்பினான் கதிர்...



" இங்க என்ன பிரச்சன?" கேள்வி ஷாலினியிடம் இருந்தாலும் பார்வை மனைவியிடம் நிலைக்க தலையை தாழ்த்திக் கொண்டாள் பெண்....



"இல்ல மாமா..." விலுக்கென நிமிர்ந்து கணவனை பார்த்தவளுக்கு அவள் அழைக்கும் போது மட்டும் அவன் எதுவுமே சொல்லாதது சுருக்கென தைக்க திரும்பி நகரப் போனவளை நிறுத்தினான் கணவன்...



"பேசிட்ருக்கும் போது எங்க போற?"



"இ... இ.. இல்ல வந்து... சாரி"



"ஷாலு... கோபப்பட்டதுக்கு ஐ அம் சாரி மா...." அப்படியென்றால் தனக்கு யார் என்ன சொன்னாலும் கணவனுக்கு பரவாயில்லை அப்படித்தானே!!!



அன்றைய நாள் முழுவதும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் எவ்வளவு முயன்றும் சட்டென கண்ணத்தை தொட



" பரவாயில்லை மாமா... நான் பேசினதும் தப்புதான்" அவளை கேலியாய் ஓர் நொடி பார்த்த பார்வை மறு நொடி பரிதாபமாக மாறியதை யாரும் கவனித்திருக்கவில்லை....



"எனக்கு பசியில்ல.... நீ போய் தூங்கு" அவன் சொல்லவே வேறு வழியின்றி அவள் மாடிப்படியேற மனைவியிடம் திரும்பியவன்



"ரொம்ப பசிக்குது.... சாப்பாட்ட எடுத்துட்டு போயி ரூம்ல வெயிட் பண்ணு நான் குட்டிமாவ பாத்துட்டு வந்தட்றேன்" இதழ் கடையோர சிரிப்பை அவளுக்கு தெரியாமல் மறைத்தவன் யாழினியின் அறைக்குச் செல்ல வாயை பிளந்தாள் மனைவி....



பின்னே.... இப்போது தானே ஷாலினியிடம் எனக்கு பசியில்லையென அனுப்பி வைத்தான்.



((அடேய்... அடேய்.... உன்ன புரிஞ்சிக்க ட்ரை பண்றதுக்குள்ள கதையே முடிஞ்சிடும் போல இருக்குடா... நீ என்ன கேட்டகிரின்னே புரிஞ்சிக்க முடிலடா டேய்... ))



.....



சோபாவில் அமர்ந்து தன் டெட்டியை கட்டிப்பிடித்து முகத்தை தூக்கி வைத்தவாறு அமர்ந்திருந்தவளின் அருகே சிரித்துக் கொண்டே வந்தமர்ந்தான் கதிர்வேல் கிருஷ்ணா....



"குட்டிமா" கூந்தலை வருடிய கையை படக்கென்று தட்டி விட்டவள் தள்ளி அமர சிரித்துக் கொண்டே மீண்டும் ஒட்டி அமர்ந்தான் அண்ணன்...



"இங்க பாருடா" முகவாயை பிடிக்கப் போகவும் மீண்டும் தட்டி விட்டு முகத்தை திருப்பினாள்.



"உங்கள விட வயசுல பெரியவங்க கிட்ட அப்பிடி பேசலாமாடா? "



" அவங்க மேல தான் தப்பு க்ருஷ் அண்ணா" கையிலிருந்த டெட்டியை தூக்கியெறிந்து விட்டு சட்டென அவன் கழுத்தை கட்டிக் கொண்டவளின் கண்ணீர் அவன் ஷர்ட்டை நனைக்க பதறிப் போனான் அண்ணன்....



"குட்டிமா... சாரிடா சாரி... இனிமே கோபப்பட மாட்டேன்"



" பொய் சொல்றீங்க.... எல்லோர் முன்னாடியும் எனக்கு திட்டிட்டு இப்போ சமாதானப்படுத்தறீங்க"



"ஐயோ சாரிடா தங்கம்... நீங்க பண்ணது தப்பா இல்லயா?"



"தப்பு தான் ஒத்துகுறேன்.... அவங்க என்ன பண்ணாங்க தெரியுமா?" சட்டென நிமிர்ந்தவள் அவனை ஏறிட அவள் முகத்தை தாங்கி கண்ணீரை துடைத்து விட்டவன்



"அவங்க தப்பு பண்ணா நீங்களும் பண்ணுவீங்களா? இனி இப்பிடி நடக்க கூடாது.... ஓகே? " மேலும் கீழும் தலையாட்டியவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவள் அண்ணன்...



அவளிடம் மட்டுமே அவனாக இருப்பவன்!!!
 
Status
Not open for further replies.
Top