All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பதில் சொல்லவிருக்கும்
காலத்தின் மாற்றத்திற்காக
காத்துக்கொண்டிருக்கிறோம்
நீயும் நானும்.. "என்னை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமானு கேட்டா என்ன சொல்லுவ அம்ஸ்??" என இளாக் கேட்க,
"கண்டிப்பா இதை நீயா கேட்கலைனு தெரியுது. நீ என்னை தோழியா தவிற வேற மாதிரி பார்த்ததுக் கூடக் கிடையாது. எனக்கு உன்னை பத்தி தெரியும் இளா" என வேணிக் கூற,
மனதின் இறுக்கங்கள் இருந்த இடம் காணாமல் போக,
கண்ணில் ஒளிர்ந்த நிம்மதி பாவனையில், "அவ்ளோ நம்பிக்கையா அம்ஸ் என் மேல" என ஆவலாய் அவளை பார்த்துக் கேட்க,
அவனை இளகுவாக்கும் எண்ணத்தில், "எனக்கு தெரியும்டா நீ அதுக்குலாம் சரிப்பட்டு வர மாட்டேனு. லவ் பண்றதுகுலாம் ஒரு தைரியம் வேணும். அதெல்லாம் உனக்கு கிடையாது" என அவள் பழிப்பம் காட்ட,
தன் இருக்கையில் இருந்து எழுந்து அவள் மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தவன்," சீரியஸா பேசிட்டு இருக்கேன். நக்கல் பண்ணிட்டு திரியுற நீ" எனக் கூற,
அவன் குட்டியதில் ஆ வென அலறியவள், தன் தலையை தடவிக் கொண்டே "போடா கோவக்காய்... உண்மைய சொன்னா கசக்குதோ பாவக்காய்" என முகத்தை சுளித்தாளவள்.
அவளின் முகச் சுளித்தலில் வாய் விட்டு சிரித்தவன், "என்னோட மூட் ஸ்விங் ஈஸியா ஹேண்டில் செய்ற டெக்னிக் உனக்கு மட்டும் தான்டா தெரியுது அம்ஸ்" என மனதாரக் கூற,
மென்னகை புரிந்தவள்," சரி இப்ப சொல்லு. யாரு உன்னை அப்படி என் கிட்ட கேட்க சொன்னா?? யாராவது பெட் கட்டினாங்களா??" எனக் கேட்க,
"நான் நிஜமா தான் கேட்டேன் அம்ஸ். அதுக்கான காரணத்தை நான் சொல்றேன். அதுக்கு முன்னாடி நானா வந்து உன்கிட்ட அப்படி கேட்டா என்ன சொல்லுவ??" என வேணியைப் பார்த்துக் கேட்க,
குழப்பமாய் அவனைப் பார்த்த வேணி,"அதான் சொன்னேன்லடா. என்னிக்கும் நீ என்கிட்ட அப்படி கேட்க மாட்டனு எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு"
மனதில் படர்ந்த நிம்மதியின் சாரலில் அவளின் இருகைகளையும் பற்றியவன்,"இது தான் வேணி இந்த ஒரு வாரமா என் மனதை அழுத்திய பிரச்சனை. எங்கே நம்ம ப்ரண்ட்ஷிப்பை நீ தப்பா நினைச்சிடுவியோ... வாழ்க்கைல என்னிக்காவது ப்ரண்டா இருக்கும் போதே நீ என்னை அப்படி நினைச்சவன் தானேனு நீ நினைச்சா என்னால தாங்க முடியாதுடா. அது நம்ம ப்ரண்ட்ஷிப்பை களங்கப்படுத்துற மாதிரி." என இளா தன் பேச்சை நிறுத்த,
"என்னடா உளர்ற?? ப்ரண்டா இருக்கும் போதே அப்படி நினைச்சவன் தானேனு நான் நினைப்பேனா?? அப்ப நாம லைப் லாங் ப்ரண்டா இருக்க மாட்டோமா?? என்னமோ நாம கல்யாணம் செய்துக்கப் போற மாதிரி பேசுற??" என அவள் குழம்பிப் போய் கேட்டாள் வேணி.
----
அங்கு வாணியிடம் தன் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான் ஆஷிக்.
"வீட்டில எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க கேபி" என ஆஷிக் கூற,
"நல்ல விஷயம் தான?? அதுல என்ன குழப்பம்" என்று வாணி வினவ,
"என் வயசு என்ன?? வாழ்க்கைல செட்டில் ஆகணும் கேபி. அப்புறம் தான் மேரேஜ்னு முடிவு செஞ்சி வச்சிருந்தேன்" என்றவன் கூற,
தன் இரு கைகளைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தவள்,"செட்டில் ஆகுறதுனா எப்படி?? காரு பங்களா பீச் ஹவுஸ் சொந்த லேண்ட்... இப்படியா?? அப்ப மாத வருமானம் மட்டுமே வச்சிக்கிறவன்லாம் கல்யாணம் செய்துக்கவே தகுதியில்லாதவங்களா??"
நான் சொல்றத நல்லாக் கேளு ஆஷிக்,"உன் பொண்டாட்டிய காப்பாத்துற அளவுக்கு தான் நீ சம்பாத்திக்கிற. அந்தந்த வயசுல நடக்க வேண்டியது அப்பப்ப நடந்திடனும். இப்ப நீ மட்டும் தனியா வாழ்க்கைக்காக சேர்த்து வைக்குறதை கல்யாணம் முடிச்சி காதலோட கூடிய வாழ்க்கையோட இரண்டு பேருமா ஒருத்தருக்கொருதர் சப்போர்ட் செஞ்சி சம்பாதிக்கும் போது இன்னும் உற்சாகமா நீ செயல்படுவ. உன் வொய்ப் சம்பாதிக்கலனாலும் அவ உனக்கு கொடுக்குற மனப்பலம் அவ காதல் உனக்கு கொடுக்குற புத்துணர்ச்சி இது எல்லாமுமா சேர்ந்து கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறமும் நீ நினைச்சதை உன்னை அடைய வைக்கும்" எனத் தன் நீண்ட உரையை அவள் முடிக்க,
ஆச்சரியமாய் அவளை பார்தவன்,"உன்னை இவ்ளோ நாளா குட்டிப் பொண்ணாவே பார்த்துட்டேன் கேபி. எவ்ளோ மெச்சூர்டு திங்கிங் உனக்குள்ள" என வியந்தான்.
"எனக்கு அந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு கேபி. ஆனாலும் ஒரு ஆறு மாசமாவது கல்யாணத்தை தள்ளிப்போடனும் கேபி. ஆனா அம்மாகிட்ட சொன்னா ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. அந்த பொண்ணு வீட்டுல அவங்களா ஆறு மாசம் கழிச்சி மேரேஜ்னு சொல்லனும். அதுக்கு உன் உதவி வேணும். அதுக்கு தான் உன்னை கூப்பிட்டேன்" - ஆஷிக்
"அதென்ன ஆறு மாசம் கேப்??" - வாணி
"என் மேரேஜ் செலவுக்கு நான் சேர்த்து வைக்க தான் கேபி. அதுவுமில்லாம அவ இப்ப தான் எம்ஏ மேக்ஸ் படிக்கிறா... படிக்கிற பொண்ணை டிஸ்டர்ப் செய்ய மனசில்ல. நான் இப்ப வேண்டாம்னு சொல்லிட்டா அவங்க அப்பா அவளை வேற யாருக்காவது கட்டிக் கொடுத்திடுவாரு. அவளை விட்டுக் கொடுக்கவும் மனசில்ல. அந்த பொண்ணு போட்டோ பார்த்து இவ்ளோ டீடெயில் கலக்ட் செஞ்சி வச்சிருக்கேன் கேபி" என்றவன் கூற,
"ஹ்ம்ம் இதுல நான் என்ன செய்யனும்." என வாணிக் கேட்க,
"எனக்காக அந்தப் பொண்ணுக்கிட்ட பேசனும்." - ஆஷிக்
"அடப்பாவி ஒரு பேச்சுக்காக, உனக்காக பொண்ணுக்கிட்டயும் பேசுவேனு சொன்னா... அதேப்போல கேட்டு வந்து நிக்கிறியேடா" என வாணி மைண்ட்வாய்ஸில் பேச,
"என்ன எதுவும் பேசாம அமைதியா இருக்க?" என ஆஷிக் வாணியை உலுக்க,
"சரி. அந்த பொண்ணு பேரு என்ன?? என்னனு அந்தப் பொண்ணுக் கிட்ட பேசனும்" என்றவள் கேட்க,
"அவ பேரு ரஹானா. அந்தப் ப்ளானை நான் சொல்றேன்" என்றான் ஆஷிக்.
--
"போன வாரம் உன் வீட்டிலருந்து உங்க அப்பா என்னை எங்க ஊருக்கு கூட்டிட்டு போனாங்கல. அப்ப உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்தாங்க. உன்னை எனக்கு கல்யாண்ம் செய்து வைக்குறதுப் பத்தி எங்கப்பாகிட்ட பேசினாங்க. எங்க அப்பாக்கும் உங்க அப்பாக்கும் இதுல ரொம்ப சந்தோசம்னு அவங்க பேச்சுலயே தெரிஞ்சுது. என்னை கேட்டாங்க... எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. உன்னோட விருப்பம் முதல்ல கேட்க சொல்லிட்டேன். நீ சொன்னதுப் போல தான்... உங்க அப்பாக்கு உடம்புக்கு எதுவும் வரதுக்கு முன்னாடி உனக்கு மேரேஜ் செய்து வைக்கனும்னு நினைக்கிறாங்க. அதை உன் கிட்ட சொல்ல உங்க அப்பாக்கு தைரியமில்லை. எப்படிப்பா உங்களால இப்படி கேட்க முடிஞ்சிதுனு நீ ஒரு வார்த்தைச் சொன்னாலும் அவர் மனசு நொந்து போய்டுவாரு அம்ஸ். அதனால அவர் என்னையவே நேரடியா உன்கிட்ட கேட்கச் சொல்லிட்டார். இன்னொன்னு இது உங்கப்பாவும் எங்கப்பாவும் சடண்ணா எடுத்த முடிவு மாதிரி தெரியலை. கிட்டதட்ட ஒரு வருஷமா அவங்க இதைப்பத்தி பேசிட்டு இருக்கிறதா தான் அவங்க பேச்சுல எனக்கு தோணுச்சு அம்ஸ்" என அனைத்தையும் விளக்கி முடித்து வேணியின் முகத்தை அவன் பார்க்க,
சிறு அதிர்ச்சி படர்நத் முகத்துடன் அமர்ந்திருந்தாள் வேணி.
"என்ன அம்ஸ் ஷாக் ஆயிட்ட?? வாழ்க்கையில இப்படி ஒரு சிட்டுவேஷன் வரும்னு நினைச்சிக் கூட பார்த்தது இல்லைல. எனக்கும் எப்படி ஹேண்டில் செய்றதுனு தெரியலை அம்ஸ். ஒரு வாரமா மனசை அரிச்சிட்டு இருக்குற விஷயம். நம்மளை நினைச்சி நான் கறஞ்சிட்டு இருக்குற விஷயம் இது தான்" என இளா கூறி முடித்த வேளை,
ஸ்பீக்கரில் அதைப் போட்டவள்,
"அப்பா, இளா ஒரு வாரமா என்கிட்ட சரியாவே பேசலை. இளாவை இன்னிக்கு தான் நேர்ல பாத்தேன். நீங்க பேசினதுலாம் சொன்னான்பா" என இவள் கூறிக்கொண்டிருக்கும் போதே,
"அம்மும்மா அது வந்து" என அவளின் தந்தை இடையில் புக,
"இருங்கப்பா நான் முழுசா பேசி முடிச்சிடுறேன்" என்றுரைத்தவள்,
"என்கிட்டயே நேரடியா கேட்டிருக்கலாமேப்பா?? சின்ன வயசுலருந்து எனக்கு எது நல்லதுனு பார்த்து பார்த்து செஞ்சவர்ப்பா நீங்க. அப்பா கைகாமிக்கிற பையனைத் தான் கட்டிப்பேனு மனசுல வைராக்கியத்தோட வாழுறவப்பா நான். அப்படி இருக்கும் போது வாழ்க்கைல முதல் முதறையா ஒருத்தனை காமிச்சி கட்டிக்கிறியானு நீங்க கேட்டா நான் எப்படிப்பா வேண்டாம்னு சொல்லுவேன்"
இவளின் இவ்வார்த்தையில் இளாவிற்கு புரையேறி கண்களில் நீர் வர, தன்னருகே இருந்த நீரை அவன் பக்கம் நகர்த்தியவள், "நீங்க இந்த முடிவு எடுக்க எவ்ளோ யோசிச்சிருப்பீங்கனு தெரியும்ப்பா. என்னிக்குமே வாழ்க்கைல உங்க முடிவுக்கு நான் நோ சொன்னதில்லைப்பா. இதுக்கு மட்டும் எப்படி நான் நோ சொல்லிருப்பேன் நினைச்சீங்க. நட்பை களங்கப்படுத்திட்டீங்கனு சொல்லிடுவேனோனு பயந்தீங்களாப்பா. அந்த நட்பே நீங்க அங்கீகரிச்சதால தான் தொடர்ந்தேன்ப்பா. எனக்கு இந்த கல்யாணத்துல இளாவ திருமணம் செய்றதுல முழு சம்மதம். நீங்க இளாக்கிட்ட ஒரு தடவைக் கேட்டுக்கோங்க" என இளாவை நோக்கி இவள் கண் சிமிட்டிக்கூற,
"அடிப்பாவி என்னை ஏன் கோர்த்து விடுற" என இவன் வாய் அசைக்க,
"அப்பா, இளா பக்கத்துல தான் இருக்கான். கேட்டுக்கோங்க" என வேணி உரைக்க,அது வரை வேணியின் பேச்சில் அவள் தன் மீதுக் கொண்ட பாசத்தில் நம்பிக்கையில் மெய் மறந்து அதிர்ந்து நின்றவர், இளாவின் ஒப்புதல் கேட்கக் கூறிய கடைசி வார்த்தையில் தான் தன்னுணர்வு பெற்ற வேணியின் தந்தை,
"அதெல்லாம் இளா தம்பி அன்னிக்கே பெரியவங்க பார்த்து எது செஞ்சாலும் சரினு சொல்லிடுச்சுமா" எனக் கூறினார்.
"மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மும்மா. அப்பா மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்க நீ. அந்த நம்பிக்கைனால தான்டா இளாவ தேர்ந்தெடுத்தேன். இப்ப நண்பர்களா இருந்தாலும், திருமணம் உங்களை கண்டிப்பா ஆதர்ச தம்பதிகளா மாத்துங்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்குடா. இப்பவே இந்த சந்தோஷமான விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லி சீக்கிரமே நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்றேன்மா" எனக் குதூகலமாய் உரைத்து போனை வைத்தாரவர்.
வேணியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் இளா.
"என்ன இளா இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையா??" என அவன் முகம் நோக்கி இயல்பாய் வேணிக் கேட்க,
"எப்படி அம்ஸ் உன்னால இவ்ளோ இயல்பா இருக்க முடியுது. இது லைப் லாங் கமிட்மெண்ட் அம்ஸ். நம்ம ப்ரண்ட்ஷிப்ங்கிற பாண்டை உடைச்சு காதலை உள்ள கொண்டு வரனும். முடியுமா??" என இளாக் கேட்க,
"ஏன் ப்ரண்ட்ஷிப் பாண்டை உடைக்கனும் இளா?? ஹஸ்பண்ட் அண்ட் வைப் முதல்ல நல்ல ப்ரண்ட்ஸ்ஸா தான் இருக்கனும். அவங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கனும். அதெல்லாம் நமக்குள்ள ஏற்கனவே இருக்கே இளா. நமக்குள்ள இருக்க பாசம் அன்பு அதெல்லாம் காதலா மாறனும். காதல் அதெல்லாம் வாண்டட்டா வர வைக்க முடியாது இளா. அது தானா வாழ்க்கையின் போக்குல மனசுல மலரனும். அது கல்யாணம் செய்யும்ங்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு இளா." என வேணி கூறி முடிக்க,
சற்று முகம் தெளிந்திருந்த இளா,
"உனக்கு ஓகேனா எனக்கு எந்த ப்ரச்சனையும் இல்ல அம்ஸ். வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு வாழ்வோம்." எனக் கூறி அவன் சிரிக்க,
"ஹப்பா இந்த ஒரு வாரத்துல இப்ப தான் சிரிச்சிருக்கப் போல" என அவனைப் பார்த்துக் கேட்க,
"ஹ்ம்ம் ஆமா. உன்னால தான் எல்லாமே" என மனதார நன்றியுரைத்தான் அவளுக்கு.
--
மதி தன் காதலை உரைத்ததும் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டருந்த மஹா,
"என்னுடைய முடிவை இப்ப சொல்ல முடியாது மதி. சொல்ல முடியாத சூழ்நிலைக்கு என்னை தள்ளினது நீ தான் மதி" என்று மஹா உரைக்க,
குழப்பமாய் மதி அவளை நோக்க,
"அன்னிக்கு உன்னால அம்மாக்கிட்ட ப்ராமிஸ் பண்ணி கொடுத்தேன். எந்த ப்ரோபசல் வந்தாலும் அம்மாகிட்ட சொல்லுட்டு தான் டிசைட் செய்வேனு. அதை இன்னி வரை காப்பாத்திட்டு இருக்கேன் மதி" என மனதிலுள்ளதை அவனிடம் கூறியமுடியா தன்னிலையை எண்ணி வருத்தம் கொண்டு அவள் கூற,
"தப்பில்லை மஹா. இதெல்லாம் தனியா ஹேண்டில் செய்யக் கூடிய விஷயங்கள் கிடையாது. இந்த மாதிரி விஷயங்கள் முதல்ல நம்ம பேரண்ட்ஸ் கிட்ட தான் சொல்லனும்" என அவன் அறிவுரைக் கூற,
தன் தலையில் அடித்துக் கொண்ட மஹா,"ஏன்டா இப்படி லெக்சர் கொடுத்தே என்னைக் கொல்ற" என வாய் விட்டே புலம்ப,
"நான் வெயிட் செய்றேன் மஹா. நீ ஆன்டிக்கிட்ட பேசிட்டே எனக்கு பதில் சொல்லு" என்றவன் உரைக்க,
"நீ வெய்ட் செய்வ. என்னால வெய்ட் செய்ய முடியலையே" என மனதுக்குள் புலம்பிக் கொண்டாள் மஹா.
அவளின் பேச்சிலேயே தன்னை அவளுக்கு பிடித்திருப்பதை அறிந்துக் கொண்ட மதி, அவளின் பெற்றோரின் சம்மதத்துடன் அவள் தன் காதலை கூறுவது நல்லது என அமைதிக் காத்தானவன்.
அனைவரும் மேல் மாடியிலுள்ள ஃபுட் கோர்ட்டில் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்டப்பின் விடைப்பெற்றனர் ஃபோரம் மாலிலிருந்து.
ஃபோரம் மால் சந்திப்பிற்குப் பிறகு ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில், அந்த வாரயிறுதி நாளில் தங்களின் பெங்களூர் வீட்டில் அமர்ந்திருந்தனர் வேணி, வாணி மற்றும் மஹா.
அங்கிருந்த தன் மெத்தையில் அமர்ந்து எவ்வாறு ரஹானாவிடம் போனில் பேசவென மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள் வாணி.
"ஆபிஸ்ல ப்ராஜக்ட் வேலைக்கு கூட இப்டி நான் பயந்ததில்லைடா. என்னை இப்படி புலம்ப விட்டுட்டியேடா ஆஷிக்கு பையா. அந்தப் பொண்ணு மட்டும் என்னை ஏதாவது சொல்லி திட்டட்டும் உன்னை நேர்ல வந்து அதே சொல்லி திட்றேனா இல்லையா பாரு" என மனதிற்குள் ஆஷிக்குடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள் வாணி.
முகப்பறையில் அமர்ந்திருந்த வேணி சுவற்றை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள். அவளின் மனதில் எண்ணங்கள் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. அன்று இளாவின் நிம்மதியற்ற முகத்தை காண சகிக்காது அவனை எவ்வாறேனும் மகிழ்ச்சியாக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவனின் சுகத்தை மட்டுமே மனதில் கொண்டு அவன் கேட்ட அத்தனை கேள்விக்கும் சமாதானமாய் வாழ்க்கையை எதிர்நோக்கும்படி பதிலுரைத்த வேணிக்கு திருமணத்தை எண்ணி சிறு அச்சம் தொற்றிக் கொள்ளத்தான் செய்தது. கடைசி வரை காதல் வராமலே போய்விட்டால் என்ன செய்ய என்கின்ற எண்ணம் அவளை இந்த வாரமாய் அலைகழிக்கச் செய்திருந்தது.
முகப்பறையிலிருந்து தொலைகாட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மஹாவின் மனதோ எவ்வாறு தன் பெற்றோரிடம் இக்காதலினைக் கூறப் போகிறோம் என்ற எண்ணச்சூழலில் சிக்கிக்கொண்டிருந்தது.
தன் மெத்தையிலிருந்து முகப்பறைக்கு வந்த வாணி," என்னங்கடி ஆளுக்கு ஒரு பக்கமா உட்கார்ந்து கனா கண்டுட்டு இருக்கீங்க? நானும் ஒரு வாரமா பார்த்துட்டு தான் இருக்கேன்... ஒரு மார்க்கமாவே சுத்திட்டு இருக்கீங்க இரண்டு பேரும். என்ன தான் ப்ரச்சனைடி உங்களுக்கு. உங்க முகத்துல சந்தோஷத்தைப் பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு பொண்ணுகளா" என பாசமாய் அவர்களை நோக்கி வாணிக் கேட்க,
"அதெல்லாம் ஒன்னுமில்லை வாணி. ப்ராஜக்ட் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தோம்" என இருவரும் ஒரே பதிலை கூறினார்.
அப்பொழுது அறிந்திருக்கவில்லை இரு பெண்களும் தாங்கள் மறைக்கும் தங்களின் பிரச்சனை பின்னாளில் வாணிக்கு தெரிய வரும் போது, தங்களை வெறுக்குமளவு அவள் செல்வாளென.
"மனசுல பிரச்சனை இருந்தா அதை மத்தவங்க கிட்ட சொல்லும் போது சம் டைம்ஸ் ஏதாவது சொல்யூஸன் கூட கிடைக்கலாம். அதுக்காக தான் சொல்றேன் அம்மு மஹா. அப்புறம் உங்க விருப்பம்" என்றுவிட்டு சென்றுவிட்டாள் வாணி.
வாணியின் பேச்சு எதுவும் அவர்களின் மூளையை எட்டக்கூடயில்லை. அவர்களின் எண்ணம் தான் இளா மற்றும் மதியைச் சுற்றிக்கொண்டிருந்ததே.
மறுநாள் ஞாயிறன்று மதியம் வாணி தனியே தன்னறையில் அமர்ந்திருந்தாள்.
வேணி மற்றும் மஹா, இளா மற்றும் மதியைக் காணச் சென்றிருந்தனர்.
"ஆண்டவா நீ தான் காப்பாத்தணும்" என வேண்டிக் கொண்டே ஆஷிக் அளித்த ரஹானாவின் கைபேசி எண்ணிற்கு அழைத்தாள் வாணி.
"ஹலோ" என அங்கு ரஹானா உரைத்ததும்,
ஹலோ என கூறிய வாணியின் குரலில் காற்று மட்டுமே வர, "அய்யோ வாய்ல காத்து தான் வருதே" என மைண்ட் வாய்ஸில் பேசியவள் தொண்டையைச் செருமி,
"ஹலோ, கேன் ஐ டாக் டூ ரஹானா??" என மனதின் நடுக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து ஒரு வழியாய் கேட்டு வைக்க,
"யெஸ் ஸ்பீக்கீங்... மே ஐ நோ ஹு இஸ் திஸ்??" எனக் காட்டமாக ரஹானா மறுகேள்விக் கேட்க,
"நம்ம தேத்தி வச்சிருக்க தைரியத்தையும் இந்தப் பொண்ணுக் குரல் மொத்தமா கவுத்திடும் போலயே" என மீண்டும் மைண்ட் வாய்ஸில் பேசிய வாணி,
"ஹை திஸ் இஸ் மதுரவாணி" எனக் கூறிய மறுநிமிடம்,
"ஹை கேபிக்கா. வாட் எ சப்ரைஸ்??" என குதூகலமாய் மறுபக்கம் ரஹானாக் கேட்க,
"என்னது கேபிக்ககாவாஆஆஆஆ??" என வாயை பிளந்த வாணி,
"இந்தப் பொண்ணுக்கு எப்படி நம்மள தெரியும்?? அய்யோ மாட்டிக்கிட்டோமே" என கைகள் நடுங்க மனம் பதற எண்ணியவள், "போனை வச்சிடுவோமா??" என்றெண்ணிய நேரம்,
"அறிவாளிப் பொண்ணே அவ உன் பேரத் தானே சொன்னா?? அதுக்கு ஏன் இப்படி பதறுற" என வாணியின் மனம் இடித்துரைக்க,
இந்த இடைப்பட்ட நேரத்தில் மறுப்பக்கம் பல முறை ஹலோ ஹலோ வெனக் கூறிக் கொண்டிருந்தாள் ரஹானா.
"சாரி" எனக் கூறி வாணித் தன் பேச்சைத் தொடர,
"எப்படி இருக்கீங்க கேபிக்கா??" எனப் பல நாள் பழகியதுப் போல் ரஹானா இயல்பாய் இவளிடம் பேச,
வாணியின் வாய் தானாய் தன் நலத்தையும் கூறி அவளின் நலத்தையும் விசாரித்தது.
"புதன் கிழமை அவங்க வந்தாங்க கேபிக்கா. என்னை நிச்சயம் செஞ்சிட்டு போய்டாங்க. சிம்பிளான நிச்சயம் தான். ஆனா கல்யாணம் என் படிப்பு முடிஞ்சு தான்னு ஸ்டிர்க்டா சொல்லிட்டாங்க. எங்க அப்பாவாலயும் மறுக்க முடியலை. சரினு ஒத்துக்கிட்டாங்க" என ரஹானா நடந்ததைக் கூற,
"அடப்பாவி, ஒரு வாரம் கூட பொறுக்க முடியலையாடா உனக்கு. அதுக்குள்ளவா அந்தப் பொண்ணை யாருக்காவதுக் கட்டிக் கொடுத்துடப் போறாங்க. இருந்தாலும் உன் அலப்பறைக்கு ஒரு அளவில்லாம போச்சேடா." என மனதிற்குள் ஆஷிக்கை வறுத்தெடுத்தவள்,
"ரொம்ப சந்தோஷம் ரஹானா. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரஹானா. உன்னை லைப்ல மிஸ் செஞ்சிடக் கூடாதுனு நினைச்சான். அதான் உடனே இப்படி நிச்சயம் வச்சிக்க வந்திருக்கான்." என நண்பனுக்காக வாணிப் பேச,
"பேச ஆரம்பிச்சிட்டீங்களா?? போன் நம்பர் ஷேர் செஞ்சிக்கீட்டீங்களா??
ஹே ஆமா என்னைய எப்படி தெரியும்" நண்பனின் நிச்சயத்தை எண்ணி அவனின் ஆசை நிறைவேறியதை எண்ணி பூரித்துப் போய் மற்றதை மறந்து பேசிக்கொண்டிருந்தவள் தன்னிலை உணர்ந்ததும் தன் அறிமுகம் எவ்வாறென்ற கேள்வியை எழுப்பினாள்.
"ஹ்ம்ம் வியாழக்கிழமைல இருந்து பேசிட்டு இருக்கோம் கேபிக்கா. அவங்க முதல் நாள்ல அவங்க பேமிலி பத்திலாம் பேசினதுக்கப்புறம் முழுக்க முழுக்க உங்களைப் பத்தி தான்க்கா பேசினாங்க. அவங்க உங்களை அவங்களோட குட்டி லிட்டில் சிஸ்டர்னு தான் சொன்னாங்க. அவங்க சொல்ல சொல்ல உங்களை பார்க்கனும்னே ஆசை வந்துட்டுனா பாருங்களேன். உங்ககிட்ட இந்த நிச்சயம் பத்தி எதுவும் சொல்லலை. அவங்களுக்காக என் கிட்டப் பேச எப்படியும் போன் பண்ணுவீங்கனும் சொன்னாங்க. அப்ப உங்களை வம்பிழுக்கக் கூட சொன்னாங்க. எனக்கு தான் மனசு வரலை." என ரஹானா வியப்பாய் அவன் கூறியதைச் சொல்ல,
இங்கு வாணியின் கண்களில் ஒரு துளி நீர் கண்ணை விட்டு வெளி வந்தது ஆனந்தத்தில் பூரிப்பில் அவன் அவள் மீது வைத்திருந்த அன்பின் நெகிழ்ச்சியில், அதை சரியாய் புரிந்து தன்னை உயர்வாய் மதித்துப் பேசும் இந்தப் பெண்ணின் பேச்சில்.
"ஐ ஃபீல் ப்ளஸ்டு ரஹானா. அவன் சொன்னதுக்காக இல்லை. அவன் சொன்னதை சரியாய் புரிஞ்சு என்னை இவ்ளோ உயர்வாய் ஃபீல் செய்ய வைக்குற ஓர் உறவை கடவுள் கொடுத்ததுக்காக. ஐ ஃபீல் ப்ளஸ்டு ரஹானா" என மனதார உரைத்தாள் வாணி.
"என்னக்கா... இதுல என்னக்கா இருக்கு. இப்படி ப்ரண்ட்ஸ் அமையறது தான் கடவுள் புண்ணியம். அது என்னால என்னிக்கும் கெட்டுப்போச்சுனு வராதுக்கா" என ரஹானாக் கூற,
"நீங்க இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா மனமொத்த தம்பதியா வாழனும்டா" எனக் கூறி போனை வைத்தவள், அழைத்தாள் மறுநிமிடம் ஆஷிக்கின் அலைபேசிக்கு.
"ஏன்டா என் கிட்ட சொல்லலை?" என வாணிக் கேட்க,
அவளின் கேள்வியிலேயே அவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்தவன், வேண்டுமென்றே,
"என்ன சொல்லலை??" எனக் கேட்டான் ஆஷிக்.
"நிச்சயமே செஞ்சிட்டு வந்திருக்க. சொல்லவேயில்ல" என மீண்டும் வாணிக் கேட்க,
ஏனோ அவளை வம்பிழுக்கும் மனநிலையில் இருந்தவன்,
"நான் ஏன் உன்கிட்ட சொல்லனும். யார் நீ எனக்கு??" எனச் சிரிப்பை வாயினுள் அடக்கிக் கொண்டுப் பேச,
"டேய் நேர்ல பார்த்தேனா மண்டைலயே போடுவேன். ஒழுங்கா பேசுடா" என வாணி அவனை மிரட்ட,
"யாரு நீ என் மண்டைல போடுவியா. அரை அடி இருந்துக்கிட்டு, சேர்ல ஏறுனாக் கூட என் மண்டைய டச் பண்ண முடியாது நீ. பேசுற பேச்சைப் பாரு." என ஆஷிக் கூற,
"எனக்கு வேணும்னா நான் ஏணிப் போட்டு ஏறிக்கூட உன் மண்டைல அடிப்பேன். உனக்கென்ன வந்துச்சு. அது என் ப்ரண்ட் மண்டை. நான் என்ன வேணும்னாலும் செய்வேன்" என வாணி சிரித்துக் கொண்டேக் கூற,
"அடிப்பாவி... அது என் மண்டை. என் பர்மிஷம் இல்லாம அதை டச் பண்ணிடுவியா நீ??... பாக்கலாமா??" - ஆஷிக்
"பாக்கலாமா??" - என மீண்டும் வாணிக் கேட்க,
இருவரும் வாய் விட்டு சிரித்துக் கொண்டனர்.
"சார் என்ன செம்ம குஷி மூட்ல இருக்கீங்கப் போல??" என வாணிக் கேட்க,
"ஹ்ம்ம் ரொம்ப ரொம்ப" எனக் கூறினான் ஆஷிக்.
"ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆஷிக். ரஹானாக்கிட்ட பேசினேன். மனசு நிறஞ்சி இருக்குடா. உனக்கேத்த ரொம்ப நல்ல பொண்ணுடா" என வாணி மனதாரக் கூற,
"சார் டிரைனிங் அப்படி. இரண்டு நாள்ல எப்படி டிரைன் பண்ணி வச்சிருக்கேன் பார்த்தியா??" என ஆஷிக் கேட்க,
"நீ தான் அவக்கிட்ட டிரைனிங் எடுக்கனும். நான் அவளுக்கு தான் சப்போர்ட்ப்பா" என வாணி நக்கலாய் கூற,
"பார்றா. ப்ரண்ட் பொண்டாட்டி வந்ததும் ப்ரண்டை கழட்டி விட்டுற நீ" என அவன் கேட்க,
"ஆமா உன்னை பத்தி தப்பா தப்பா போட்டுக் கொடுக்க போறேன் அவக்கிட்ட" என வாணி சிரித்துக் கொண்டேக் கூற,
"பார்க்கலாம் பார்க்கலாம். நான் அதுக்குள்ள அவளை என் காதல்ல மூழ்கடிச்சி யாரு எது சொன்னாலும் நம்பாத மாதிரி என்னை மட்டுமே நினைச்சிட்டு இருக்க மாதிரி மாத்திருவேனே." என அவன் கூற,
வாய் விட்டு சிரித்தனர் இருவரும்.
"நீ அவ காதல்ல மூழ்குவியோ... இல்ல அவ உன் காதல்ல மூழ்குவாளோ... எப்படியோ இரண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அது போதும்டா எனக்கு" எனக் கூறி போனை வைத்தாள் வாணி.
அங்கு கோரமங்களா கே எஃப் சியில் அமர்ந்திருந்தனர் இளாவும் வேணியும்.
"பயமாயிருக்குடா" - வேணி
"என்ன பயம். அன்னிக்கு என்னமோ அபியும் நானும் பட ரேஞ்சுக்கு என் அப்பா என் உரிமைனு அவர் சொல்றதுக்குலாம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு எனக்கு வேற விக்ரமன் பட ரேஞ்சுக்கு அட்வைஸ் கொடுத்துட்டு என்ன பயம் இப்ப உனக்கு. நம்மளே நினைச்சாலும் இனி மாத்த முடியாது. நம்மூருல அவ்ளோ ஸ்பீடா வேலை நடந்துட்டு இருக்கு" என ஆத்திரம் பொங்க கூறியவன் வேறெங்கோ வெறித்து நோக்க,
"என்னடா என் மேல கோபமா?? அன்னிக்கு உன்னோட கவலை படிஞ்ச முகத்தை பார்க்க முடியலைடா. உன் மனசை தேத்தி சந்தோஷமாக்கனும்னு தோணுச்சு. அதுவும் அவரோட பாரத்தை உன் கிட்ட ஏத்தி வச்சி உன்னை வருத்துறாரோனு வேற தோணுடுச்சு. அதான் உடனே அப்பா கிட்ட பேசினேன். உன்னையும் ரிலாக்ஸா ஃபீல் பண்ண வச்சேன்" என கூறிக்கொண்டே வேணி இளாவைப் பார்க்க,
இளா வேறெங்கோ வெறித்து நோக்கிக் கொண்டிருக்க,
"நான் இங்க சீரியஸா பேசிட்டு இருக்கேன். அங்க என்னடா பார்வை??" என எதிரிலிருந்தவனின் கைகளை இவள் தட்ட,
"அங்க பாரேன் அம்ஸ். அந்த பொண்ணு நம்மரூ பொண்ணு மாதிரி இருக்குல. நீளமான பின்னல் முடி, மூக்குத்தி, களையான கருப்பு முகம். அப்படியே தமிழ் பொண்ணு மாதிரி இருக்குல" என அங்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தப் பெண்ணைக் காட்டி இவன் கேட்க,
அவனை சற்று முறைத்தவள் அவன் கண்களில் பாதையை நோக்கி தானும் பார்த்தவள்,"ஆமாடா அழகு அந்தப் பொண்ணு." என்று கூற,
"எனக்கு இந்த மாதிரி பொண்ணுங்க மூக்குத்தி போடுறது, நீளமான கூந்தல் வச்சுகிறதுலாம் பிடிக்கும்" என தன்னிலை மறந்து அந்த பெண்ணை நோக்கி கொண்டு இளாக் கூற,
முதுகுக்கு சற்று கீழ் வரை நீண்டிருந்த தன் கூந்தலை முன்னே போடீட பார்த்தவள், "என்ன பண்றது இளா?? உனக்கு விதிக்கப்பட்டது இந்த குட்டை முடி பொண்ணு தான். வாட் டு டூ" எனப் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவள் கேட்க,
"குட்ட முடிப் பொண்ணா?? அது யாரு??" என முகத்தைச் சுருக்கி வேணியை நோக்கி இளாக் கேட்க,
"நானே... அது நானே" என கண் சிமிட்டினாள் வேணி.
"சே சே உனக்கு குட்ட முடிலாம் இல்லை அம்ஸ். குட்டியா இருந்தாலும் நல்ல அடர்த்தி தான் உன் முடி. நீ தான் மாசமாசம் வெட்டிடுறல. நீளமா வளர்த்தீனா இன்னும் நல்லாயிருக்கும்" என அவளின் கூந்தலுக்கு அவளிடமே அவன் வக்காலத்து வாங்க,
"ரொம்ப நல்லவன்டா நீ" என மனதிற்குள் இளாவை கொஞ்சிக் கொண்டவள்,
"உனக்காகவாவது நீளமா முடியை வளர்க்கிறேன்டா. நம்ம கல்யாணத்தன்னக்கு சவுரி இல்லாம என் முடியிலேயே சடை போடுற அளவுக்கு வளர்க்கிறேன்டா" என சபதம் எடுத்தாள் வேணி.
அவன் மீதான நேசம் காதலெனும் விதையாய் மனதில் பரவ ஆரம்பித்திருப்பதை உணரவில்லை பெண்ணவள் அப்பொழுது.
திருமணம் எனும் வார்த்தையின் சக்தியிலிருக்கும் மாயை அது தானே. யாரோ ஒருவரை தனக்கு நிச்சயித்த நாளிலிருந்து தன்னவராய் உருவளித்து நெகிழும் மனம்.
"என்ன கனவு கண்டுட்டு இருக்க?? என்ன பெரிய திங்கிங்ல இருக்க??" என இளா அவளின் சிந்தனையைக் கலைக்க,
"ஹ்ம்ம் நம்ம பிரச்சனைக்கு வாடா. ஊருல நம்ம இரண்டு குடும்பத்துலயும் ஒரு மாசத்துல நிச்சயதார்த்தம் கிராண்ட்டா செய்யலாம்னு தீவிரமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. நான் இன்னும் மூனு மாசத்துல ரொட்டேஷன் ஷிப்ட்ல வர்க் பண்ண ஸ்டார்ட் செய்யனும். எல்லாம் சேர்ந்து மண்டைய குழப்புதுடா. சுத்தி பிரச்சனையா இருக்க மாதிரி ஃபீல்டா" என வேணி கூற,
"நான் தான் ஒரு பிரச்சனையவே கல்யாணம் பண்ணிக்கப் போறேனே. அதை கம்பேர் செய்யும் போது உன்னோடதுலாம் பெரிய பிரச்சனையே இல்ல அம்ஸ்" என அவன் கவலையாய் முகத்தை வைத்துக் கொண்டுப் போலியாய் கூற,
முதலில் புரியாது நெற்றிச் சுருக்கியவள், புரிந்தப் பின் "நான் பிரச்சனையாடா உனக்கு??" என எழுந்து நின்று அவன் முதுகில் நாலு அடி அவள் அடிக்க,
அவளின் கையை பற்றியவன்," நீ நம்ம நிச்சயதார்தத்துக்கு என்னலாம் அரேஞ்சமெண்ட்ஸ் செய்யனுமோ அதை செய். இனி உன் பிரச்சனை என் பிரச்சனைனு தனி தனியா கிடையாது. இரண்டு பேருக்கும் எந்த பிரச்சனை இருந்தாலும் அது நம்ம பிரச்சனை அதை இரண்டு பேருமே சேர்ந்து ஹேண்டில் செய்வோம். நான் எப்பவும் உனக்கு சப்போர்ட்டா தான் இருப்பேன். அதை மட்டும் மனசுல வச்சிக்கோ" என தன் கைகளுக்குள் பொதிந்திருந்த அவளின் கைகளில் தட்டிக்கொடுத்து இளாக் கூற,
மெல்லமாய் சரியென தலையசைத்தாள் வேணி.
அவளின் பிரச்சனையை இவனும் இவளின் பிரச்சனையை அவனும் சேர்ந்து சமாளிக்கலாமென முடிவெடுத்தவர்கள், கணவன் மனைவியாய் சேர்ந்து சமாளிக்க வேண்டியிருக்கும் பிரச்சனையை எண்ணிப்பார்க்கவில்லை இருவரும்.
பெங்களூர் இஸ்கான் டெம்பிள் சென்றிருந்த மஹாவும் மதியும் ராதா கிருஷ்ணரை தரிசித்து விட்டு அங்கு ஓர் இடத்தில் அமர்ந்திருந்தனர்.
இருவரும் வந்ததிலிருந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாது மனதிற்குள் கடவுளிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
"மஹாவுடனான என் காதல் கல்யாணத்தில் முடியனும் கடவுளே. நாங்க ஆயுசுக்கும் இதே அன்போட வாழனும்" என வேண்டிக் கொண்ட மதி, கண் விழித்துப் பார்க்க,
கண் மூடி தீவிர வேண்டுதலில் இருந்த மஹாவே அவன் கண்ணுக்குத் தென்பட்டாள்.
"மதிய ரொம்ப பிடிச்சிருக்கு கண்ணா. அவன் கூட இருக்கும் போது நான் என்னையே மறந்துப் போற அளவுக்கு சந்தோஷமா இருக்கேன். அவன் அன்பால நிறைய நேரம் என் அப்பாவை நினைவுப்படுத்திருக்கான். அவன் இல்லாம வாழ முடியும்னு தோணலை கண்ணா. யெஸ் ஐம் இன் லவ் வித் ஹிம். எங்க அப்பா அம்மா மனசார சந்தோஷமா என்னை மதிக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும் கண்ணா" என இவள் வேண்டிக் கொண்டயிருந்த நேரம்,
"இந்நேரம் கடவுள் கிட்ட நீ என்ன வேண்டிக்கிட்டியோ அது கண்டிப்பா நடக்கும். உன் வேண்டுதல் நிறைவேறனும்னு நானும் மனசார வேண்டிக்கிறேன்" என மஹாவின் காதருகில் மதிக் கூற,
பட்டென கண்ணைத் திறந்த மஹாவின் கண்களில் ஆனந்த நீர்த்துளி, ஏனோ அந்தக் கண்ணனே தன் வேண்டுதலுக்கு அருள்புரிந்ததாய் தோன்றியது அவளுக்கு.
தன்னருகில் இருந்தவனின் கையைப் பற்றியவள்,"ரொம்ப தேங்க்ஸ் மதி" என மஹா மனம் நெகிழ்ந்துக் கூற,
"ஹே லூசு!! இதுக்குப் போய் கண்ணுல தண்ணி வச்சிக்கிட்டு" என அவளின் தோளோடு கைப்போட்டு தன் தோளில் அவளை சாய்த்துக் கொண்டான்.
அங்கிருந்து கிளம்பி மதிய உணவு உண்ணவென உணவு விடுதிக்கு சென்றனர் இருவரும்.
அங்கே உணவை ஆர்டர் செய்தப்பின் இருவரும் அமைதியாய் அமர்ந்திருக்க,
அவ்வமைதியைக் கலைத்தான் மதி.
"ஆன்டிக்கிட்ட பேசினியா மஹா?? என்னோட ப்ரபோசல் பத்தி சொன்னியா??" எனக் கேட்டான் மதி
"என்னாச்சு உனக்கு? உன்கிட்ட இருந்த அந்த துள்ளல் எதுவுமே இல்லையே இப்ப... ஏன் இவ்ளோ சோகமா இருக்க?? என் ப்ரபோசல் பிடிக்கலையா இல்ல என்னைப் பிடிக்கலையா?" என மதிக் கேட்ட நொடி,
மனதின் வலியை கண்ணில் தேக்கி அவனைப் பார்த்தவள், "உன்னை எப்படி எனக்கு பிடிக்காம போகும் மதி" என மனதிற்குள் எண்ணியவள்,
"வாழ்க்கையில ஒருதருக்கு ஒரு ப்ராமிஸ் செய்யும் போது, அது மத்தவங்களை ஹர்ட் செய்யாத அளவுக்கு இருக்கனுமா?? அந்த ப்ராமிஸ என்னால காப்பாத்த முடியுமா??? இப்படிலாம் பல வகையிலும் யோசிச்சி தான் செய்யனும். இது லைப் லாங் கமிட்மெண்ட் மதி. என் வாழ்க்கைல என் வாய்ல இருந்து உங்களை விரும்புறேனு நான் சொல்ற வார்த்தை ஒருத்தருக்கு தான் போகனும். அந்த ஒருத்தர் என் கணவனாய் வரப் போகிறவரா தான் இருக்கனும்." என்று தன் மன எண்ணத்தை அவள் கூற,
"ஹ்ம்ம் உங்க அப்பா அம்மா சம்மதம் இல்லாம என்னை பிடிச்சிருக்குங்கிற வார்த்தைக் கூட உன் வாய்ல இருந்து வராதுனு சொல்ற. தட்ஸ் பைன். ஆனா உங்க வீட்டில பேச ஏன் இவ்ளோ தயக்கம்?" என மதி வினவ,
"அம்மாவோட டிரஸ்ட்டை உடச்சுட்டேனு நினைச்சிடுவாங்களோனு பயமாயிருக்கு மதி. அப்பா கண்டிப்பா ஓகே தான் சொல்லுவாங்க. ஆனா அம்மா, உன்னை நம்பி வெளியூர் அனுப்பினதுக்கு இப்படி பண்ணிட்டியேனு கேட்டா நான் என்ன செய்வேன்?? நினைக்கவே மனசு பதறுது மதி. அம்மா இதுக்கு எப்படி ரியாக்ட் செய்வாங்கனு புரியலை மதி" எனத் தன் கவலையை அவள் கூற,
பெருமூச்சொன்றை விட்டவன்,"சரி சாப்பாடு வந்துடுச்சு... சாப்பிடு" என அவளிடம் கூறியவன், அடுத்து தான் என்ன செய்ய வேண்டுமென மனதிற்குள் திட்டம் தீட்டலானான்.
---- அம்மாதக் கடைசித் தேதியில் நிச்சயத்தார்த்த விழா ஏற்பாடு செய்திருந்தனர் வேணி மற்றும் இளாவின் வீட்டினர்.
ஏனோ தங்களின் நிச்சயத்தைப் பற்றித் தங்களின் நட்பு வட்டத்தில் கூறப் பெரிதும் தயங்கினாள் வேணி.
இளா மற்றும் வேணியை அறிந்த அனைவரும் கண்டிப்பாக இதை காதல் திருமணமென்றே எண்ணுவர்.
அவ்வார்த்தையைக் கேட்க மனமில்லை அவளுக்கு. ஆகையால் நட்புகளுடன் தங்களின் நிச்சயத்தைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள நாட்களை நகர்த்திக் கொண்டேச் சென்றாள்.
மஹா மதியிடமே இன்னும் தன் காதலை தெரிவிக்காத நிலையில், எதுவும் முழுமையாய் இன்னும் முடிவாகாத நிலையில் எவரிடமும் இவ்விஷயத்தைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள மனமில்லை அவளுக்கு.
நிச்சயத் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்த அந்த வாரயிறுதி நாளில் வாணி மற்றும் மஹாவிடம் உரைத்துவிடலாமென வேணி முடிவெடுத்திருக்க, ஆனால் விதி வாணிக்கு இவ்விஷயத்தை தாமதமாகவே தெரிய வைத்தது. தன் தோழி தன்னிடம் பெரும் விஷயத்தை மறைத்து விட்டாளென வேணி மீது பெரும் கோபம் கொள்ளச் செய்த்தது வாணியை. ---- ஜீன் 2012
அந்த மாதக் கடைசி நாளிற்கு முந்திய வாரயிறுதி நாளில்...
அந்த ஃபோரம் மால் மீட்டிங்கிற்குப் பிறகு தங்களுக்கிருந்த வேலைப் பளுவாலும் மனக்குழப்பத்தாலும் எவருமே தங்களின் ஊருக்கு செல்லாது வாரயிறுதி நாட்கள் பெங்களுரிலேயே இருந்தனர்.
அத்தகைய வாரயிறுதி நாளில் மஹா மற்றும் வேணி சமையலறையில் இரவுணவு சமைத்துக் கொண்டிருக்க, தரையில் போட்டிருந்த மெத்தையில் வைத்திருந்த தன் கைபேசியை எடுக்கவென வாணி குனிந்தச் சமயம் அவளின் இடுப்பில் சற்றாய் கிர்க் என ஓர் சத்தம் கேட்க, அம்மாஆஆஆஆ என வலியில் முணங்கியவள் நிமிர முற்பட, நிமிர்ந்து நேராய் நிற்க முடியவில்லை அவளால். இடுப்பில் தொடங்கி வலதுக்கால் கட்டை விரல் நரம்பு வரை விண்ணென வலிக்க, அப்படியே இருக்கையில் அமர்ந்துவிட்டாளவள். வலியில் அவளறியாது ஒரு துளி நீர் அவள் கண்ணில் வந்து விட, அச்சமயம் தாங்கள் சமைத்ததை ருசிப் பார்க்கக் கூறி வாணியிடம் வந்த வேணி, கண்ணீர் துளியுடன் அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்து பதறிப்போய் அவளருகில் வந்தவள், "என்னடி ஆச்சு?? எதுக்கு அழுற?? இவ்ளோ நேரம் நல்லாதான பேசிட்டு இருந்த??" என வேணிக் கேட்க,
"குனியும் போது என்னமோ ஆயிடுச்சுடி" என நடந்ததைக் கூறிய வாணி, "நேரா நிமிர முடியலைடி. வலதுக்கால் நரம்பு வேற வலிக்கிது. தாங்கி தாங்கித் தான் நடக்கனும் போல" என முகத்தில் வேதனைப் படற அவள் கூற,
அதைக் காணப் பொறுக்காமல், "முதல்ல நாம ஹாஸ்ப்பிட்டல் போகலாம். எந்திரி" என வேணி அவளைக் கிளப்ப முயற்ச்சிக்க,
இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு அங்கே வந்த மஹாவிடன் வேணி நடந்ததைக் கூற,
இருவருமாய் சேர்ந்து வாணி உடை மாற்ற உதவி செய்து அந்த இரவு ஒன்பது மணி வேளையிலும் அவளை மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.
அது இருபத்து நான்கு மணி நேர மருத்துவமனையாதலால் அந்நேரம் இருந்த டியூட்டி டாக்டர் அவளுக்கு சிகிச்சையளித்து, சுளுக்குப் போல் தான் தெரிகிறதெனக் கூறி இடுப்பில் வெந்நீர் ஒத்துடம் கொடுத்து களிம்பை தடவச் சொன்னாரவர். வலிக் குறைய மாத்திரையும் எழுதித் தந்தாரவர்.
மருத்துவமனைச் செலவு மருந்து வாங்குவதற்கானச் செலவு என அனைத்தையும் அவ்விருப் பெண்களே பார்த்துக் கொண்டனர்.
வீட்டிற்குச் சென்றதும் அவளை மெத்தையில் அமர வைத்து வேணி உணவு வழங்க, மஹா அவளுக்கு ஒத்தடம் கொடுக்க சுடுநீர் தயார் செய்தாள்.
வாணி சாப்பிட்டு முடிக்கவும் அவளின் வீட்டிலிருந்து அழைப்பு வர, தன் வலியை தாய் தந்தையிடம் கூறி அவர்களையும் வேதனைக் கொள்ளச் செய்யக் கூடாதென மனதில் எண்ணிக்கொண்டே கைபேசி அழைப்பை ஏற்ற மறு நொடி,
"என்னமா சாப்பிட்டியா மதும்மா" என அவள் தாய் நீலாமதிக் கேட்க,
"ஹ்ம்ம் சாப்பிட்டேன்ம்மா" எனக் குரலை சமன் செய்து அவள் கூற,
"என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு?? உடம்பு சரியில்லையா??" என வாணியின் தாய் கேட்ட மறு நொடி அவளின் மனத்திடம் தூள் தூளாய் நொறுங்க தாய் மடி தேடி ஏங்கும் கன்றாய் மனம் தாயை நாட கண்களில் நீர் ஆறாய் பெருகியது.
தன்னைக் கட்டுப்படுத்த இயலாது நடந்தவற்றை வாணிக் கூற, மகளின் தழுதழுத்தக் குரலில் வாணியின் தாயும் அங்கே கண்ணீர் வடிக்க, அவரருகில் இருந்த வாணியின் தந்தை செல்வம் என்னமோ ஏதோவெனப் பதறி அலைப்பேசி வாங்கிப் பேச, மகளின் வலி நிறைந்தக் குரல் தந்தையின் மனதைக் கனக்கச் செய்ய,
"நாளைக்குக் காலைல அப்பா பெங்களூர்ல இருப்பேன். நீ நம்ம வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடு மதும்மா" எனக் கூறி வாணிப் பேச வாய்ப்பளிக்காது கைபேசியை வைத்துவிட்டாரவர்.
இதற்கு மேல் தான் என்னக் கூறினாலும் தந்தை கேட்க மாட்டாரென அறிந்த வாணி போனை வைத்து விட்டாள்.
தூரதேசத்தில் இருக்கும் மகளின் வலி நிறைந்தக் குரல் தாய் தந்தையர் இருவர் மனதிலும் வலியை நிறைத்திருந்தது.
தன் தாய் தந்தையிடம் பேசியதைத் தன் தோழிகளிடம் கூறி,"நான் அவங்க கிட்ட சொல்லக்கூடாதுனு எவ்ளவோ ட்ரை பண்ணேன்டி. என்னம்மானு அம்மாவோட பாசமான ஒத்த வார்த்தை கேட்டதுக்குப் பிறகு கண்ட்ரோல் செய்ய முடியலை" எனத் தன்னிலையை வாணிக் கூற,
"சரி விடுடி. அவங்களுக்கும் உன்னைப் பார்த்த தான் திருப்தியாகும். வலில நீ துடிச்சதை நாங்களும் தான் பார்த்தோமே. நீ கொஞ்ச நாள் வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு வரது தான் நல்லது" என அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மஹா.
வாணிக்கு வலி நிறைந்த இடத்தில் வெந்நீரால் ஒத்தடம் கொடுத்து மருத்துவர் கொடுத்த களிம்பை நன்றாய் சூடு பறக்கத் தேய்த்துவிட்டாள் மஹா. வலி நன்றாகவே குறைந்தது மஹாவின் கைவண்ணத்தில். அப்படியே உறங்கிப்போனாள் வாணி.
மறுநாள் காலை வாணி விழிக்கும் போது அவளருகே அமர்ந்திருந்தனர் வாணியின் தந்தை செல்வமும் தாய் நீலாமதியும்.
அவளை ஒரு வாரம் ஓய்வு விடுப்பு எடுக்கக் கூறி தங்களுடன் வருமாறு பணித்தனர். வாணி தன் டீம் லீட்டிடம் தன் நிலைமையை எடுத்துக் கூறியும் விடுப்பு வழங்க அவர் மறுக்க, தனக்கு பதிலாய் தன் வேலையை வேணி கவனித்துக் கொள்வாளென அவள் கூறியதும் தான் விடுப்பெடுக்க ஒப்புக்கொண்டாரவர்.
வேணி தன் மனதில் நல்லவேளை தன் நிச்சயம் விடுமுறை நாளான ஞாயிறென்று நடக்கிறது என எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டாள். வாணி உடல்நிலை சரியில்லாத இவ்வேளையில் நிச்சயம் பற்றி கூற வேண்டாமென நினைத்தவள், அவளுக்கு கைபேசியில் அழைத்துக் கூறிக் கொள்ளலாமென எண்ணிக்கொண்டாளவள்.
ஒரு வழியாய் தன் தாய் தந்தையருடன் அவர்கள் வந்த காரிலேயே அவர்களுடன் சென்னைக்கு பயணப்பட்டாள் வாணி. சென்னை வந்திறங்கிய வாணி காரிலிருந்து இறங்கும் சமயம் அவளின் கைபேசி தவறி விழ, அது தரையில் விழுந்து சிதறி நொறுங்கியது.
"மதும்மாஆஆஆ... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லமா உனக்கு" எனக் கூறிக் கொண்டே சிதறிய கைபேசியின் அங்க அவயங்களைத் தேடி எடுத்துக் கொண்டிருந்தார் நீலாமதி.
கைபேசியின் உட்பொருட்களை இணைத்து அதனை உயிர்ப்பிக்க அவர் முயற்சி செய்ய, அது செயலிழந்துப் போனது.
"போன் வேலை செய்யலை. வேற போன் தான் வாங்கனும் போல" என்றுரைத்தவர், "ஒரு வாரம் இங்க தானே இருக்கப் போற அதுக்குள்ள போன் ரிப்பேர் செய்ய முடியுதானு பார்ப்போம்" எனக் கூறி அக்கைபேசியை ஓரமாய் வைத்தாரவர்.
ஆக வேணி கைபேசியில் வாணியிடம் தன் நிச்சயத்தைப் பற்றி உரைத்து விடலாமென எண்ணியிருந்தது நிறைவேறாமலே போனது.
இரு நாட்கள் கழித்து அன்றிரவு மஹாவின் மெத்தையில் அமர்ந்திருந்தாள் வேணி.
"என்ன அம்மு என்னமோ பேசனும்னு சொன்ன??" - மஹா
மஹாவின் எதிர்வினை எவ்வாறாய் இருக்கும் என்கின்ற பயத்தினூடே உரைத்தாள் வேணி,"மஹா, கம்மிங் சண்டே எனக்கும் இளாக்கும் நிச்சயதார்த்தம்டி. கண்டிப்பா இது லவ் மேரேஜ் இல்லடி" என்றவள், அன்றைய ஃபோரம் மால் உரையாடலிலிருந்து நடந்த அனைத்தையும் உரைத்து முடித்தவள்,
மஹாவின் உணர்வுகளை உணர முடியாது பயத்துடனே அவள் முகத்தைப் பார்க்க, "ஐம் வெரி மச் ஹேப்பி ஃபார் யூ அம்மு. இளா இஸ் த பெஸ்ட் பேர் ஃபார் யூ" எனக் கூறி அவளை அணைத்து மனதார வாழ்த்து தெரிவித்தாள் மஹா.
"அப்படி என்னடி பயம் என் மேல?? என்னை பார்த்து பயப்படவும் ஒரு ஆளு இருக்கேனு சிரிப்பா தான்டி வருது" எனக் கூறி மஹா சிரிக்க,
"லாஸ்ட் மினிட்ல வந்து சொல்றியேனு கடிச்சி குதறிடுவியோனு தான் பயந்தேன்டி. ஆனா உன்னை விட வாணிய நினைச்சி தான் இன்னும் பயமாயிருக்கு. ஃபோன்ல சொல்லலாம்னு நினைச்சது இப்ப பெரும் தப்பா தோணுது. அவ ஃபோன் எப்ப பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அவ வீட்டுல உள்ளவங்க வேற யாரு நம்பரும் நம்ம கிட்ட இல்ல. ரொம்ப பாசகாரப் புள்ள வேற. நிச்சயம் முடிஞ்சப்புறம் தெரிஞ்சுதுனா கண்டிப்பா சண்டைக்கு நிப்பா" எனத் தன் கவலையை வேணிக் கூற,
"ஹ்ம்ம் முடிஞ்ச வரைக்கும் உன் நிச்சயம் முன்னாடி அவக்கிட்ட சொல்ல டிரை பண்ணலாம். முடியலைனாலும் அவளை சமாதானம் செய்வோம். கல்யாணப் பொண்ணு கண்டதையும் நினைச்சு கவலைப்படாம நிச்சயத்தார்த்த சந்தோஷத்துல இருடி. இதெல்லாம் லைப்ல ஒரு தடவை நடக்கிற விஷயம். அந்த நாளை சந்தோஷமா மறக்க முடியா நாளாய் கொண்டாட நீ சந்தோஷமா அதை வரவேற்கனும்" என அறிவுரை வழங்கினாள் மஹா.
கடைசி வரை வாணியிடம் கூற முடியாமல் போக, அவர்களின் நிச்சய நாளும் வந்தது.
வழமைப் போல் வெள்ளிக்கிழமை இரவு இருவரும் ஒன்றாக பெங்களுர் டூ சேலம் பேருந்தில் பயணித்தனர்.
"டேய் கோவக்காய், இப்படியாடா வருவ எங்கேஜ்மண்டுக்கு. ஆளும் மண்டையும் பாரு. புதருக்குள்ள மூஞ்சி இருக்குற மாதிரி" என அவனைப் பார்த்து அவள் பழிப்பம் காட்ட,
அதில் கோபம் கொண்டவன்,"போடி கொத்தவரங்கா. உன்னை மாதிரி பேஷியல் பண்ணிட்டு வழ வழனு மூஞ்சை வச்சிக்க சொல்றியா" என அவளிடம் எகிற,
"டி சொன்னா எனக்கு பிடிக்காதுனு தெரியும்லடா" என கோபமாய் வேக மூஞ்செடுத்தவள் அவன் தோளில் சரமாரியாய் தாக்க,
"அடியேய் வலிக்குதுடி" என அவன் அலற, "திரும்பவும் டி சொல்ற" என வேகமாய் அவன் பக்கம் திரும்பி அமர்ந்தவள், அவன் கையை பிடித்துக் கடித்து வைத்தாள்.
அவன் வலியில் ஆ வென அலற பயணிகள் அனைவரும் திடுமென அவர்களின் இருக்கையைப் பார்க்க, "ஒன்னுமில்லைங்க பூச்சி கடிச்சிடுச்சு. அதான் கத்திட்டேன். வேற ஒன்னுமில்லை. நீங்கலாம் உங்க வேலையை பாருங்க" என மற்றவர்களிடம் கூறியவன், முறைத்தான் வேணியை. அவனின் முறைப்பில் தலையை சிலுப்பிக் கொண்டு முகத்தை மறுப்பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அதன் பிறகு கோபம் கொண்டவனாய் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு தனது தூங்கும் வேலையை தொடங்கினானவன்.
சிறிது நேரம் சென்றதும் அவனை அடித்தது இவளின் மனதை வலிக்கச் செய்ய, இவள் கடித்த பல் தடம் தெரிய இருந்த இடதுகை மணிகட்டில் மென்மையாய் தடவிக் கொடுத்தாள்.
மறுநாள் காலை வேணியின் வீட்டில் அவளை விட்டுச் செல்ல இளா அவளுடன் செல்ல, அங்கே வேணியின் அக்கா கயல்விழி அவர்களைப் பார்த்து முகம் கொள்ளா புன்னகையுடன் வாசல் வரை வந்து இளாவை பார்த்து "வாங்க மாப்பிள்ளை" எனக் கூற,
அவ்வார்த்தையில் சங்கோஜப்பட்டவனாய் "ஏன்க்கா??" என அவரை பார்த்துக் கேட்க,
"பார்ரா இந்த கோவக்காய்க்கு வந்த வாழ்வ!!" என தாடையில் கை வந்து வியந்தவளாய் வேணிக் கூற,
"அடிங்க" என அவளை தூரத்திக் கொண்டு அவள் பின்னே ஓடினான் இளா.
அவள் வீட்டின் முற்றத்தில் துளசியை சுத்தி சுத்தி ஓடிய நேரம்," அங்க என்னமா சத்தம்??" என வீட்டினுளிருந்து வேணியின் தந்தை அன்பரசு குரல் கொடுக்க,
"சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா" என இளா அந்நேரம் சட்டென வாயில் வந்ததைக் கூறி தன் நாக்கை கடிக்க, கயல்விழியும் வேணியும் கல கலவென வாய் விட்டு குலுங்கி சிரித்துக் கொண்டிருக்க, அப்போது அன்பரசு வெளி வரவும் அனைவரும் வாயை மூடி அமைதிக் காத்தனர்.
"என்னடா அம்மு?? மாப்பிள்ளைகிட்ட இன்னும் சின்ன பிள்ளையாட்டம் விளையாடிட்டு இருக்க" என அன்பரசு கேட்க,
"அவ இப்படியே இருக்கட்டும் மாமா. அது தான் எனக்கு பிடிச்சிருக்கு" எனக் கூறிய இளா,
"நான் வீட்டுக்குக் கிளம்புறேன் மாமா. அங்க எனக்காக எல்லாரும் காத்துக்கிட்டு இருப்பாங்க" என்றவன் வேணியின் அருகில் வர,
"என்னது மாமாவாஆஆஆஆ!! இது எப்பலருந்து?? அங்கிள்னு தானே கூப்டுட்டு இருந்தான்" என எண்ணிக் கொண்டிருந்த வேணியின் அருகில் வந்தவன்,
" அடியேய் முட்டைக்கண்ணி ஏன் இப்படி ஆளை முழுங்குற மாதிரி முழிச்சி வைக்குற. நாளைக்கு மண்டபத்துக்கு வருவல அப்ப கவனிச்சிக்கிறேன் உன்னை" என கிசுகிசுப்பாய் கூறி விடைப்பெற்றுச் சென்றானவன்.
---
சேலத்திலிருந்த அப்பெரிய மண்டபத்தில் அம்சவேணி மற்றும் இளங்கோவனின் குடும்பங்கள் வீற்றிருக்க, நெருங்கிய சொந்தங்கள் மற்றும் மிக நெருங்கிய கல்லூரி தோழமைகள் அமர்ந்திருக்க,
பட்டு வேஷ்டி சட்டையில் சவரம் செய்த முகத்துடன் முறுக்கிய மீசையுடன் நெற்றியில் சிறு கீற்றாய் சந்தனம் வைத்து மங்களகரமாய் மேடையில் அமர்ந்திருந்தான் இளா.
வேணியை அலங்கரித்து மண்டப மேடைக்கு அழைத்து வந்தனர்.
பச்சை நிற பட்டுப்புடவையில் பாரம்பரிய அலங்காரத்தில் நீளமாய் குஞ்சம் வைத்த கூந்தலுடன் அன்னமாய் அவள் நடந்து வர, முதன் முறையாய் வேணியை தன்னவளாய் எண்ணி ரசனையாய் பார்த்தானவன்.
அவளும் அவனை கண் சிமிட்டாது வைத்தக் கண் வாங்காது பார்த்துக் கொண்டே நடந்து வந்தாள்.
இளாவினருகில் அவளை அமர வைக்க அவன் காதருகே குனிந்தவள் "இளா வேஷ்டி சட்டைல செம்மயா இருக்கடா. மீசை செம்மயோ செம்ம."
அவள் கூறிய நொடி சட்டென அவள் புறம் தன் பார்வையை திருப்ப, அவள் கேலிப் பார்வையை பார்த்து வைத்தாள்.
"அம்ஸ் என்கிட்ட கும் கும்னு அடி வாங்காம போக மாட்ட போல. ஓவரா தான் என்னைய சீண்டிட்டு இருக்க" என சீறியவனாய் கூற,
நிஜமாய் கோபம் கொண்டுவிட்டானோ என பயந்தவள் அவன் கரம் பற்றி ,"சும்மா சொன்னேன்டா. இது நம்ம லைப்ல முக்கிய நாள்... இரண்டு பேருமே சந்தோஷமா சிரிச்ச முகமா இருக்கனும். எங்க சிரி பார்ப்போம்..." ஈ ஈ ஈ என அவள் தன் பற்களைக் காட்ட, அங்கிருந்த மொத்த கூட்டத்தினரும் அவளின் ஈ என்ற முகத்தைப் பார்த்து சிரித்தனர் இப்பொழுது.
அவர்களின் சிரிப்புச் சத்தத்தில் நிஜவுலகிற்கு வந்தவர்களாய் இருவரும் அசடு வழிந்து தள்ளி அமர்ந்துக் கொண்டனர்.
ஐயர் நிச்சய பத்திரிக்கையை வாசித்தப்பின் மோதிரம் மாற்றிக் கொள்ளக் கூறினர் இருவரையும்.
அவளின் விழி நோக்கி தன் விழிகளைக் கலக்க விட்டவன் தன் இமை சிமிட்டி சம்மதம் கேட்க, தன் தலை அசைத்து சம்மதம் தெரிவித்தவள் கைகளை மென்மையாய் அவன் பற்ற, இதுவரை எத்தனையோ முறை அவனின் கைகளை அவள் விளையாட்டாய் ஆறுதலாய் பற்றியிருந்தாலும் இப்பொழுது அவன் அவளின் விரல்களை வருடி பிடித்த இச்சமயம் பெண்ணவளின் அடிவயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதைப் போன்ற பயம் கலந்த சிலிர்ப்பை உணர்ந்தாள். அதை அவளின் விரலில் அவன் உணர ஆணவனின் உள்ளம் சிலிர்த்தது.
அவள் விழிகளை நோக்கி கைகளைப் பற்றிக் கொண்டு சிலிர்ப்புடன் நிற்கும் இந்த நிமிடம் இருவரும் ஒருவருள் ஒருவர் தன்னையறியாது மற்றவரைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தனர் தங்களது விழியின் ஆளுமைக்குள்.
"இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே தொடராதா.... இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா"
கோரஸாய் பாடிச் சிரித்தனர் இளா மற்றும் வேணியின் நெருங்கிய கல்லூரி தோழமைகள்.
அவர்களின் கிண்டலில் தங்களின் மோன நிலையிலிருந்து கலைந்தனர் இருவரும். இளாவினருகில் வந்த தோழன் ஒருவன்,"ரொம்ப நேரமா அந்த பொண்ணு கைய பிடிச்சிட்டு இருக்கடா. மோதிரம் போடாம அப்படியே கையோட கல்யாணம் செஞ்சி கூட்டிட்டு போலாம்னு ப்ளானா" என கிண்டல் செய்தான் அவனை.
அசட்டு சிரிப்பு சிரித்தவன் வேணியின் கையில் மோதிரத்தை அணித்துவிட்டு அவள் அணிவிக்க தன் கையை நீட்டினான்.
"எவ்ளோ முரட்டுக் கை இவனோடது" எண்றெண்ணிக் கொண்டே இளாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தாளவள்.
அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் என முடிவு செய்திருந்தனர் இரு குடும்பமும்.
வேணியின் தந்தை இளாவிற்கு பிரேஸ்லெட்டும் தங்க செயினும் அணிவித்தார். இளாவின் வீட்டினர் வேணிக்கு தங்கச் சங்கிலி அணிவித்தனர்.
நிச்சயம் முடிந்து இருவரும் உண்ணுவதற்கு அமர்ந்திருக்க, நீ என் கைல மோதிரம் போடும் போது என்னமோ நினைச்ச... என்ன நினைச்ச?? என ஆசையாய் இளா வேணியிடம் கேட்க,
"ஹோ அதுவா... அது வந்து.... அது வந்து" என சுவாரஸ்மாய் ஏதோ கூறுவதுப் போல் நீட்டி முழங்கியவள் "சுரைக்காய்க்கு உப்பில்லைனு நினைச்சேன்" எனக் கூறி தன் நாக்கை துறுத்த, அவள் மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தான் இளா.
"போடா கோவக்காய்" என அவனின் கையில் கிள்ளியவள், முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,
அதைக் காணப் பொறுக்காது அவளின் காதருகில் குனிந்தவன்,"இன்னிக்கு புடவைல ரொம்ப அழகாயிருக்க அம்ஸ்" என கண் சிமிட்டிக் கூற,
சட்டென அவன் முகத்தை அவள் காண, அதிலிருந்த ரசனை பாவனை அவளை ஏதோ செய்ய, "நீயும் அழகா இருக்க இளா. இந்த மீசை ரொம்ப பிடிச்சிருக்கு. இதே மாதிரி மீசை ஏன் தினமும் வைக்க மாட்டேங்கிற" என அவனின் முறுக்கிய மீசையில் பார்வை பதித்தவள் கேட்க,
அழகாய் சிரித்தவன் முகத்தை பார்த்துக் கொண்டே அவள் இருக்க,"ஆபிஸ்ல எப்படி அம்ஸ் இப்படிலாம் மீசை வைக்க முடியும். நீ சொன்ன மாதிரி இன்னிக்கு ஸ்பெஷல் டே இல்லயா அதான் இப்படி" என புன்னகைத்து கூறினான்.
அவனின் சிரிப்பைக் கண்டு அவளின் மனம் பூரிப்பதேனென அறியாது அவன் முகத்தில் பார்வையை பதித்து அவள் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்க,
கண்ணும் கண்ணும் நோக்கியா
என அவர்களின் தோழமைகள் பட்டாளம் மீண்டும் பாட ஆரம்பிக்க, "அய்யோ இதுங்க வேற" என தன் தலையில் அடித்துக் கொண்டு சாப்பிட தொடங்கினர் இருவரும்.
அந்த நிச்சயதார்த்த விழாவில் இருவரும் மற்றவரை தன்னவளாய் தன்னவனாய் உணர துவங்கியிருந்தனர். ஆனால் அது அவர்களின் கருத்தில் தான் பதியாமல் போனது. -- இங்கே நிச்சயம் நிகழ்ந்த அதே நேரம் மதி அமர்ந்திருந்தான் சென்னையில் மஹாவின் இல்ல முகப்பறையில்.
அவனுடன் அமர்நதிருந்த மஹாவின் பெற்றோர் தரணிதரன் மற்றும் கலைச்செல்வி அவனது பெங்களுர் வேலையைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தனர்.
மஹா அங்கிருந்த அனைவருக்காக சமையலறையில் காபி கலக்கிக் கொண்டிருந்தாள்.
அவர்களின் அளவளாவளினிடையில் மதி, "ஆன்டி நம்ம மஹாக்கு ஒரு பையன் ப்ரபோஸ் பண்ணிருக்கான். சொன்னாளா உங்ககிட்ட??" என்றவன் கேட்க,
உள்ளிருந்த மஹாவிற்கு புரையேறியது."அச்சச்சோ என்ன ஆகப் போகுதோ தெரியலையே" என்று அவள் இதயம் இரயில் பெட்டியாய் தடதடத்தது.
"அப்படியா மதி. இன்னும் அவ சொல்லலை. ஆனா அன்னிக்கு ப்ராமிஸ் செஞ்சதுக்குப் பிறகு அவ என்கிட்ட சொல்லாம இருந்ததில்லை" என இயல்பாய் அவளின் தாய் கலைச்செல்வி உரைக்க,
"எவ்ளவோ நல்ல பசங்கலாம் ப்ரபோஸ் பண்ணாங்க ஆன்டி அவளுக்கு. ஆனா போயும் போயும் இந்த மொக்க பையனை பிடிச்சிருக்கு அவளுக்கு. ஆனாலும் உங்க கிட்ட ப்ராமிஸ் பண்ணிட்டதால எப்படி அவன் கிட்ட ஓகே சொல்றதுனு முழிச்சிட்டு இருக்கா. உங்க ப்ராமிஸ் தான் அவளை காப்பாத்திட்டு இருக்கு" என முகத்தில் குறும்பு நகையுடன் அவன் கூற,
அதிர்ச்சியில் விழிகளை பெரிதாய் விரித்தவர், "மஹா இங்க வா" என கலைச்செல்வி போட்ட அதட்டலில் மஹா கையிலிருந்த காபி கிண்ணம் கை நழுவி தரையில் விழுந்தது.
"அய்யய்யோ ஏழுரைய கூட்டிட்டானே" என மனதில் எண்ணிக்கொண்டவள் முகம் வெளிற கைகள் நடுக்க முகப்பறைக்கு வந்து நிற்க, கலை கோபமாய் அவளை பார்த்து முறைத்தார்.
மஹா உடனே தன் தாயின் இருக்கை அருகில் சென்றவள் அவரின் மடியில் முகம் புதைத்து "போம்மா நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா" என அழவாரம்பித்தாள்.
"நீ எவ்ளோ கோபப்பட்டு நான் பார்த்ததேயில்ல. என் மேல உனக்கு நம்பிக்கையில்லையானு என்னன்னமோ தோணுடுச்சு தெரியுமா" எனக் கூறி மேலும் அவள் விசும்ப,
"நீ அவனுக்கு உடம்பு சரியில்லைனு என்னிக்கு பதறிக்கிட்டு ஹைத்ராபாத் போனியோ அன்னிக்கே நான் கண்டுபிடிச்சிட்டேன். நீ உன்னுடைய காதலை கண்டுப்பிடிக்க தான் இத்தனை நாள் ஆயிருக்கு" என்றுரைத்தவர்.
"மதி யாரோ ப்ரபோஸ் செஞ்சா இவன் இவ்ளோ கூலா வந்து சொல்ல மாட்டானே... ஏன்னா அவன் காதலும் தான் எங்களுக்கு தெரியுமே... அதான் சும்மா கலாட்டா பண்ணலாம்னு பார்த்தா அதுக்குள்ள பயப்புள்ள நடுல புகுந்து கெடுத்திருச்சு" என உரைத்து மஹா ஆறுதல் படுத்தினாரவர்.
மதியின் அருகில் வந்த தரணி," என் பொண்ண சந்தோஷமா வச்சி பார்த்துப்பங்கிற நம்பிக்கை எனக்கு என்னிக்குமே உண்டுப்பா. உன்னை விட நல்ல மாப்பிள்ளை என் பொண்ணுக்கு கிடைக்காது. சீக்கிரம் அம்மா அப்பாவ கூட்டிட்டு வந்து பேசுப்பா. கல்யாணம் நிச்சயம் செய்யலாம்" என்றுரைத்து அவனின் தோளில் தட்டிக்கொடுத்தாரவர்.
அன்றே மதி தன்னுடைய வீட்டினருடன் பேசி தன் காதலை தெரிவித்து அவர்களின் சம்மத்ததை பெற்றுக் கொண்டான்.
வரும் வாரயிறுதி நாளிலேயே வீட்டிலேயே பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்ளலாமென முடிவு செய்தனர் இருவரின் பெற்றோரும்.
அன்றிரவு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சென்னையிலிருந்து பெங்களுருக்கு பயணித்தனர் மஹாவும் மதியும்.
தன் உடல்நிலை ஓரளவு சீரான நிலையில் சென்னையிலிருந்து தனது தந்தையுடன் காரில் பெங்களுருக்கு பயணித்தாள் வாணி.
அங்கு சேலத்தில் இளாவும் வேணியின் பேருந்து இருக்கையில் அமர்ந்திருக்க, "அம்ஸ்" என அழைத்தானவன்.
"ம்" என ஜன்னல் வழியே வெளியே நோக்கிக் கொண்டே ஒற்றை வார்த்தை உரைத்தாளவள்.
"அம்ஸ்" மீண்டும் அழைத்தான்
"ம்" மீண்டும் அதே ஒற்றை வார்த்தையோடு அவள்.
"அம்ஸ்" மீண்டும் அழைத்தான்.
கடுப்பானவள்,"என்னடா வேணும் உனக்கு. அம்ஸ் அம்ஸ் னு ஏலம் விட்டுட்டு இருக்க" என்றவள் அவனை நோக்கி திரும்ப,
அழகாய் சிரித்தானவன்.
அதில் முகம் கனிந்தவள், "நிச்சயத்துல இருந்து உன் சிரிப்பு ஸ்பெஷலா என்னை கவருதே... என்னவா இருக்கும்??" எனத் தன் தாடையை தட்டி யோசித்தவள்,
"ஹை கண்டுபிடிச்சிட்டேன். இந்த மீசைனால தான்டா" எனக் கூறி அவனின் மீசையை அவளிழுக்க,
"ஸ்ஸ்ஸ் அடியேய் வலிக்குதுடி" என மெல்லமாய் எனினும் காட்டமாய் அவள் காதிற்குள் உரைத்தானவன்.
வலித்தாலும் அவளின் செயல் இந்த உரிமையான தொடுகை அவனின் மனதை சாரலாய் தீண்டிச் சென்றது.
"ரொம்ப சந்தோஷமாயிருக்கு அம்ஸ். ஏன்னு தெரியலை. நிச்சயம் முடிஞ்சதுல இருந்து மனசுல பட்டாம்பூச்சு பறக்குற மாதிரி லைட் வெயிட் ஃபீல்" என அவளின் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டு அவன் கூற,
"ஏன் கரப்பான்பூச்சி ஊறுன மாதிரி இல்லையா??" என நக்கல் செய்தாளவள்.
"ம்ப்ச். உனக்கு ஓவர் நக்கலாகி போச்சு" என வருடிய அவள் விரலில் கிள்ளி வைத்தானவன்.
"ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ... விடுடா கைய" என உருவிக் கொண்டாளவள்.
"உனக்கு இப்டிலாம் தோணலையா அம்ஸ்" - இளா
"நீ சொல்றது போல சொல்லத் தெரியலை இளா. ஆனா சந்தோஷமா இருக்கு. நான் இன்னிக்கு மேக் அப்ல செம்ம அழகா இருந்தேன்டா. அந்த அலங்காரம் அதெல்லாம் செம்மயா இருந்தது. நான் எக்ஸ்பெட் செஞ்சதோட நல்லாவே வந்துது. சோ ஐம் வெரி ஹேப்பி. ஆனா போட்டோ தான் எப்படி வந்துச்சுனு தெரியலை. ஆல்பம் வந்ததும் பார்க்கனும்" என படு சீரியஸாய் அவளுரைத்துக் கொண்டிருக்க,
"ஙே" என விழித்துக் கொண்டிருந்தான் இளா.
"நான் என்னக் கேட்டா இவ என்னத்த சொல்றா பாரு. இந்த பொண்ணுங்களே இப்படி தானா??" எனத் தலையில் அடித்துக் கொண்டானவன்.
"ஹ்ம்ம் உன் கூட கொஞ்சம் நேரம் பேசலாம்னு பார்த்தேன். ஆனா பேசின நேரமே வேஸ்டுனு இப்ப தானே புரியுது" எனக் கூறிக் கொண்டே ஹெட்செட்டை மாட்டிக் கொண்டானவன்.
"போடா புடலங்காய்" என அவனை வசைபாடியவள் ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
---
அங்கு சென்னையில் பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த மதியும் மஹாவும் மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர்.
அவனின் முழங்கையை பற்றிக் கொண்டு தோள் சாய்ந்தவள்,"இதே போல எப்பவும் அவனோட கை வளைக்குள்ள நான் இருக்கனும் இறைவா" எனக் கண் மூடி அவசரமாய் ஓர் வேண்டுதல் வைக்க,
"நீ இந்த நேரம் என்ன நினைச்சியோ அது கண்டிப்பா நிறைவேறனும்னு நானும் கடவுள்கிட்ட பிரார்திக்கிறேன்" என்று மதி உரைத்த நொடி,
அவனின் வார்த்தையில் மின்னலாய் மின்னியப் விழிகளோடு அவனின் முகத்தை அவள் நோக்க, கண் சிமிட்டி சிரித்தானவன்.
"எப்படி...எப்படி மதி?? நான் வேண்டும் போதெல்லாம் தேவர்கள் மேலேருந்து ததாஸ்து சொல்றதுப் போல நீ கரக்ட்டா சொல்ற" என வியப்பாயவள் கேட்க,
"அது அப்படி தான். ஒருத்தரோட ஆழ் மனசுல நாம இருக்கும் போது, அவங்களோட நுண்ணிய சிந்தனைக் கூட நம்மை தீண்டும்" என்றவனுரைக்க,
"அந்தளவுக்கா நான் உன்னை காதலிக்கிறேன்... அந்தளவுக்கு வெளில தெரியுற மாதிரியா நடந்துக்கிட்டேன்" என மேலும் வியந்தவள் வினவ,
"என் குட்டிம்மாவை விட என்னை யார் அதிகமா காதலிக்க முடியும்" என அவளின் தாடையைப் பிடித்துக் கொஞ்சியவன், "வெளில தெரியலை. ஆனா நான் தான் உன் மனசுக்குள்ள இருக்கேனே. அதனால எனக்கு தெரியும்" என மதி அழகாய் சிரித்துக் கூற,
அவனின் முழங்கையை பற்றியிருந்தவள் அவனின் தோளில் தன் தலையை சாய்த்து கண் மூடிக் கொண்டாள்.
அவன் மீண்டும் ஏதோ பேச வர,
"எதுவும் பேசாத மதி. எனக்கு உன்னை ஃபீல் செய்யனும். உன்னோட இந்த நொடி வாழ்க்கையோட இன்பமான நொடியா மனசுக்குள்ள புதைச்சுக்கனும்"
ஏனோ இதற்கு மேல் பேச பிடிக்கவில்லை அவளுக்கு. அவனுடனான இந்நொடியௌ ரசித்துக் கொண்டிருந்தாளவள்.
--
சேலத்திலிருந்து மூன்று மணி நேரம் பயணித்திருந்த பேருந்தில் ஜன்னலினருகே அமர்ந்திருந்த வேணிக்கு குளிரத் தொடங்கியது.
அந்த ஜன்னல் கதவை சாற்ற முடியாமல் போனதாலும், எப்பொழுதும் தன்னுடன் பையில் எடுத்து வரும் போர்வை நிச்சய வேலைப்பளுவினாலும் கிளம்பிய அவசரத்தினாலும் எடுத்து வைக்க மறந்ததாலும் வெளிக் குளிர் ஊதக் காற்றாய் அவளை நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
அதிக நேரம் பொறுத்துப் பார்த்தவள், பேருந்து கிருஷ்ணகிரி வந்த நேரம் பற்கள் குளிரில் தடதடக்கவாரம்பிக்க எழுப்பினாள் இளாவை.
இளாவிற்கு எப்பொழுதும் குளிர் தாங்குபவன். அதனால் அவனை இக்குளிர் பாதிக்கவில்லை. அதோடு தன்னுடன் எப்போதும் போர்வை எடுத்து வர மாட்டானவன்.
அவளின் நிலையை பார்த்தவன்,"என்னடா என்னை முன்னமே எழுப்பிருக்கலாம்ல. எப்படி நடுங்குற பாரு." எனக் கூறிக் கொண்டே தன் பையிலிருந்த சிறிது குளிர் தாங்கும் தடிமனான தனது சட்டையை அவளுக்கு கொடுத்து அணிவிக்க வைத்தவன், அவளின் தோளில் தன் கைகளை வளைத்துப் போட்டு தன் தோளோடு அவளை இருக்கிக் கொண்டான்.
சற்று நேரத்தில் அவளின் குளிர் சிறிது மட்டுப்பட,தன் முகத்தை அவனின் தோளிலிருந்து நிமிர்த்தி அவன் முகம் பார்க்க, "என்னடா??" என அவன் கேட்க,
"தூக்கம் வர மாட்டேங்குது இளா" என சிறுப்பிள்ளையாய் அவள் கூற,
தன் காதலிருந்த ஒரு ஹெட்செட்டை அவளின் காதிற்கு வைத்து, "பாட்டு கேளு அம்ஸ். தூக்கம் வந்திடும்" என்றுரைத்து கைபேசியில் பாட்டை இயக்கினான்
அவனுடலின் கதகதப்பில் இதுவரை குளிரில் தெரியாத அவன் அருகாமையின் சிலிர்ப்பு பெண்ணவளுக்கு இப்போது தோன்ற சிறு படபடப்பு பெண்ணின் இதயத்தில்.
அவன் தோளில் தாடையைப் பதித்து அவன் விழியை அவள் நோக்க, அவனுமே அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
சித்ராவின் செந்தேன் குரலில் செவிவழி அப்பாடல் ஒலிக்க, அதன் வரிகளின் தாக்கத்தில் தன்னவனின் விழிச்சிறைக்குள் கட்டுண்டவள் மனதில் இதமான வருடலாய் ஸ்பரிசித்திருந்த அவனின் பார்வை அவளை இம்சித்துமிருக்க கண் மூடி சுகமாய் உறங்கிப் போனாளவள்.
கைவளைக்குள் தன்னவள்.... அவளின் ஸ்பரிசம், அது தந்த இதமான மனநிலை, செவி தீண்டும் மென்மையான பாடல், சுகமான குளிர் காற்று... அந்நொடி உலகிலேயே தான் மட்டுமே இன்பமான மனிதனென தோன்றியது இளாவிற்கு. வெகுவாய் ரசித்தான் சுகித்தான் அந்நொடியை.
---
திங்கட்கிழமை விடியற்காலைப் பொழுதில் மூன்றுப் பெண்களும் தங்களின் அறையை வந்தடைந்தனர்.
மஹா அறையை வந்தடைந்த நேரம் வேணி வீட்டு வாசற் கதவை திறந்துக் கொண்டிருந்தாள்.
வேணியை பார்த்த நொடி,"ஹே புதுப்பொண்ணு" என்றவளருகில் வந்து அவளின் முகத்தை ஆராய்ந்தாள் மஹா.
"முகத்துல ஏதோ புதுசா பல்ப் எரியுதே... என்ன மாயமோ என்ன மந்திரமோ??" என மஹா கண் சிமிட்டி வேணியைக் கேட்க,
"சீ போடி" என உரைத்து வீட்டிற்குள் ஓடினாள் வேணி.
"வெட்கம் தாளாமல் சீ போ என்றாள் மாது" என மஹா ராகமாய் பாடிக் கொண்டே அவளின் பின்னோடுச் செல்ல,
"மஹாஆஆஆ" எனக் கூறி பல்லைக் கடித்தாள் வேணி இப்பொழுது.
"சரி கூல் கூல் பேபி" என சிரித்தவள்,"நிச்சயதார்த்தம் லாம் எப்படி போச்சு" என்று வினவினாள் மஹா.
"ஹ்ம்ம் செம்மயா போச்சுடி. போட்டோஸ் மொபைல்ல இருக்கு மொபைல் சார்ஜ் இல்லாம இருக்கு. சார்ஜ் போட்டுட்டு அப்புறம் காமிக்கிறேன்" என்றுரைத்துக் கொண்டிருந்த சமயம் உள் நுழைந்தனர் வாணியும் அவளின் தந்தை செல்வமும்.
"ஹே வாணி... உடம்பு எப்படி இருக்கு??" என ஒரு சேரக் கேட்டனர் மஹாவும் வேணியும்.
பின் வாணியின் தந்தையிடம் நலம் விசாரித்தனர் வேணியும் மஹாவும்.
வாணியை அறையை விட்டு அவளை பத்திரமாய் இருக்கும்படி கூறி விட்டு அவளின் தந்தை கிளம்பிச் செல்ல வாணியின் கண்கள் கலங்கியது.
ஆச்சரியத்தில் பெரும் அதிர்ச்சியில் சிக்குண்டவள் போல் சிலையாய் அமர்ந்திருந்தாள் வாணி. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வதென தெரியவில்லை அவளுக்கு.
"அப்ப இளாவும் நீயும் லவ் பண்ணீங்களாடி. ஏன்டி எங்க கிட்ட இத்தனை நாளாய் சொல்லலை" என கோபமாய் வாணிக் கேட்க,
இந்த வார்த்தையை தான் தன்னை எவரும் கேட்டுவிடக் கூடாதென்று எவருக்கும் கூற மனசில்லாது சென்றாள் வேணி. ஆனால் அவ்வார்த்தையே தன்னை நன்கு அறிந்த தன் நெருங்கிய தோழியின் வாயிலிருந்து வரவும் ரௌத்திரமானாள் வேணி.
நம்ம உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் கதைக்கு ஒரு குட்டி டீசர் போடலாம்னு தோணுச்சு. அதான் ஓடோடி வந்துட்டேன்.
"இளா வேஷ்டி சட்டைல செம்மயா இருக்கடா. மீசை செம்மயோ செம்ம." அவள் கூறிய நொடி சட்டென அவள் புறம் தன் பார்வையை திருப்ப, அவள் கேலிப் பார்வையை பார்த்து வைத்தாள்.
"அம்ஸ் என்கிட்ட கும் கும்னு அடி வாங்காம போக மாட்ட போல. ஓவரா தான் என்னைய சீண்டிட்டு இருக்க" என சீறியவனாய் கூறனான் அவன்
---
"நமக்கு தான் அவங்க பேசுற இங்கிலீஷே புரியாதே.... அப்புறம் படம் புரியலைனா என்னப் பண்றது. அதான் படத்தோட கதைய ஒரு தடவை படிச்சி வச்சிக்கலாம்னு கூகுள் பண்றேன்" என்றுரைத்தாள் வேணி.
"ஹே சூப்பர்டி. நான் கூட இப்படி இங்கிலீஷ் படத்துல வந்து உட்கார வச்சிட்டியே. புரியாம அதுல என்னத்த பார்க்கிறதுனு நினைச்சேன். நல்ல ஐடியாடி" என்ற வாணி, வேணியுடன் சேர்ந்து அவளின் கைபேசியில் கதை படித்தாள்.
"அடப்பக்கிகளா.... படம் பாக்க முன்னாடியே கதை தெரிஞ்சா அதுல என்ன சுவாரசியம் இருக்கு இதுக்கு எதுக்கு தியேட்டருக்கு வரணும்" எனக் கேட்டான் இளா.
"நீயெல்லாம் அடிக்கடி இங்கிலீஷ் படம் பார்க்குற ஆளு. அதனால உனக்கு எங்க கஷ்டம் புரியாது" என இளாவிற்கு பதிலுரைத்தாள் வேணி.
படம் திரையில் போடத் தொடங்கியதும் திரையை கவனிக்கத் தொடங்கினர் மூவரும்.
"நீங்களாம் சாப்ட்வேர் இன்ஜினியர்னு வெளில சொல்லிடாதீங்க" என மெல்லமாய் இவர்களுக்கு கேட்குமாறு இளாக் கூற,
"டேய் இவங்க நம்ம பேசுற மாதிரியாடா இங்கிலீஷ் பேசுறாங்க. நம்ம நாட்டு இங்கிலீஷ் எங்களுக்கு நல்லா புரியும். அவங்க தான் நம்மளுக்கு புரியாத மாதிரி பேசுறாங்க. சோ ஃபால்ட் எங்க மேல இல்ல. அவங்க மேல தான்." என நாட்டு இங்கிலீஷ்க்கு வக்காளத்து வாங்கினாள் வேணி.
----
"உன்னைலாம் ஒரு அடியோட விட்டது தப்புடா" எனக் கூறிக்கொண்டே அவனின் தலை கைக்காலென அவள் அடித்து நொறுக்க,
அடிக்கும் அவளின் கையை அவன் தடுத்து நிறுத்தி பற்றப் போக, அவன் மேலேயே அவள் சரிய, அதையும் பொருட்படுத்தாது அவனை அடிப்பதைத் தொடர்ந்து அவள் செய்துக் கொண்டிருக்க,
அவளை சீண்டும் எண்ணம் மனதிலெழ கடித்தான் அவளின் கன்னத்தை.
அவள் அலறி அவன் முகம் பார்க்க, அடுத்ததாய் மறுகன்னத்திலும் அவன் கடிக்க செல்வதுப் போல் சென்று இதழ் பதிக்க, சட்டென்று அவன் மேலிருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டவள் அவன் மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள்.
"எதுக்குடி இப்ப என்னை கொட்டின??" என கொட்டுவதற்காய் அவள் மேல் பாயந்தான், "வேண்டாம் கோவக்காய் இதோட நிறுத்துக்கோ. அப்புறம் புடலங்காய் ஆக்கிடுவேன்" என அவன் கை தன் தலைக்கு வருவதைக் கண்டதும் கண்களை இறுகமூடி வேணிக் கூற,
அவளின் மூடியக் கண்களை ஒரு நொடி பார்த்தவன் பதித்திருந்தான் தன் இதழை அவளின் நெற்றியில்.
அடிப்பான் அல்லது கடிப்பானென நினைத்தவள், அவன் முத்தத்தில் அதிர்ந்து கண்களை திறக்க,
"இனி என்னை நீ அடிச்சீனா இது தான் பனிஷ்மெண்ட். ஒவ்வொரு அடிக்கும் ஒரு கிஸ்" என கண் சிமிட்டி இளா உரைக்க, எவ்வாறு இதற்கு எதிர்வினை ஆற்றுவதெனத் தெரியாது முழித்தாள் வேணி.
------
இன்னிக்கு எப்பி இனி மேல் தான் போடுவேன் ப்ரண்ட்ஸ். இதுவரை 13 யுடி போட்டிருக்கிறேன். இன்னும் 7 டூ 8 யுடில கதை நிறைவு பெறும் மக்களே....
படிக்காதவங்க கண்டிப்பா படிக்க ஆரம்பிக்கலாம். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கலாம்.
அன்புடன், நர்மதா சுப்ரமணியம்.
நம்பிக்கை தோற்குமிடம்
தோழமை மரணிக்குமோ??
அல்லது
நட்பு மரணிக்குமோ??
மீட்டெடுக்க யார் வருவார்??
நண்பனா??தோழியா??
நட்பின் உண்மைநிலையில்
தன்னைத் தானே
மீட்டெடுக்குமா
அந்நட்பு??
"என்னடி சொன்ன?? அப்ப அவ்ளோ தானாடி என் மேல உனக்கு நம்பிக்கை?? என்னடி ஃப்ரண்டு நீ??" எனக் கோபமாய் வேணி கத்த,
"நான் தான்டி உன்னை திட்டனும். இத்தனை நாளா ப்ரண்டுனு சொல்லிட்டு திடீர்னு சொல்லாம கொள்ளாம நிச்சயம் பண்ணிட்டு வந்தா நான் என்னனு நினைப்பேன்டி" என அவளும் எகிற,
"ஜஸ்ட் ஸ்டாப் இட் வாணி. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா என்ன செய்வேனே எனக்கு தெரியாது" எனக் கண்ணில் நீர் தேங்கி நிற்க கர்ஜித்தவள் தன்னறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள் வேணி.
"என்னடி வாணி உனக்கு பிரச்சனை. அவ ப்ரண்ட்டை கல்யாணம் செஞ்சது பிரச்சனையா?? இல்ல உன் கிட்ட சொல்லாம செஞ்சது பிரச்சனையா?? நிச்சயம் முடிஞ்சு சந்தோஷமா வந்தவளை அழ வச்சிட்டு இருக்க நீ" என மஹாக் கூற,
"ஆமாடி நான் தான் இங்க எல்லாரையும் அழ வச்சிட்டு இருக்கேன்" எனக் கோபமாய் கூறிய வாணி தன் மெத்தையில் அமர்ந்துக் கொண்டாள்.
இவர்கள் இருவருக்குமிடையில் திண்டாடிய மஹா, "ஹைய்யோ இதுக்கே இப்படி... இன்னும் என் விஷயம் வேற தெரிஞ்சா என்ன செய்வாளோ தெரியலையே" என்றெண்ணிக் கொண்டாளவள்.
ஏனோ மனதில் பெருத்த ஏமாற்றத்தை உணர்த்தாள் வாணி. இதுவரை தான் ஏதும் தன் தோழியுடன் மறைக்காது தன் இன்ப துன்பங்கள் அனத்தையும் பகிர்ந்துக்கும் நிலையில் அவள் தன்னிடம் மறைத்து விட்டாளே என பெரும் ஏமாற்றமாய் உணர்ந்தாள் வாணி. அம்மு காதலித்தாளென எண்ணவில்லை அவள். எனினும் ஒரு வாரம் முன்பே அவளின் நிச்சயம் பற்றி தெரிந்திருக்கும் தானே, அதை பற்றிக் கூட தன்னிடம் பகிர்த்துக்கொள்ளாமல் இருந்திட்டாளே... தான் அவளை எண்ணும் அளவுக்கு அவள் தன்னை நெருங்கிய தோழியாய் எண்ணவில்லையென்ற நினைப்பு வந்த நொடி மனதில் வலி ஏற்பட கண்ணில் நீர்க்கட்டியது வாணிக்கு.
தன்னை நன்கறிந்த தோழியே தன்னை புரியாது காதலென்றெண்ணி விட்டாளே என கரைந்துக் கொண்டிருந்தாள் வேணி.
இருவரும் மனம் விட்டு பேசினால் தீரும் விஷயம், அவர்களின் மௌனப் போராடத்தால் நீண்டு கொண்டுபோனது.
மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாது காலை உணவும் உண்ணாது பணிக்கு சென்றனர் அன்று.
வேணி இளா மற்றும் வாணி ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதால், அதுவும் வாணியும் வேணியும் ஒரே ப்ராஜக்ட் என்பதால் கேட்கும் கேள்விக்கு பதில் என்கின்ற அளவிற்கு பேசிக் கொண்டனர் இருவரும். மதிய உணவுக்கு இளாவும் இவர்கள் இருவருடன் சேர்ந்துக் கொள்ள இவர்களின் மௌனமே இவர்களுக்குள் ஊடலெனக் காண்பிக்க, எனினும் அவற்றைப் பற்றி அவனிடம் கூற மறுத்து விட்டனர் இருவரும்.
பேருந்துலிருந்து வந்த சுகமான மனநிலையுடன் இனி தினமும் வேணியிடம் கைப்பேசியில் பேச வேண்டுமென முடிவுச் செய்துக் கொண்டான் இளா.
தோழனாய் இருக்கும் போது வாரத்திற்கு ஒரு முறை என பேசிக் கொள்வர் இருவரும். இனி அவ்வாறல்லாது தினமும் பேசிக்கொள்ள வேண்டும் அவளின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துக் கொள்ள வேண்டுமென எண்ணினான் இளா. காரணம் அவன் வேணியை தன்னவளாய் உணர்ந்ததை அந்த பேருந்தின் இனிய தருணத்தில் நன்றாகவே உணர்ந்துக் கொண்டான்.
இனி வரும் நாட்களில் ஒரு நாள் கூட அவளில்லாது அவளின் நினைவில்லாது அவளிடம் பேசாது இருக்க முடியாதென நன்கு உணர்ந்துக் கொண்டானவன். அத்தகைய ஓர் பரவச நிலையில் அவனின் மனம் பறந்துக் கொண்டிருந்தது. இப்போது இச்சிறு பிரச்சனையையும் அவள் கூற மறுக்க, அவள் இன்னும் தன்னை உணரவில்லையே என சிறிது மனம் சுணங்கினான் இளா.
இவ்வாறாய் இவர்களின் பனிப் போர் இரண்டு நாட்கள் தொடர்ந்த நிலையில், எந்த பிரச்சனையும் நீண்ட நாட்கள் நீடிக்கச் செய்யாது உடனே பேசி முடித்துவிடும் பழக்கமுடைய வேணி, அன்றிரவு தானே சென்று வாணியிடம் பேச அமர்ந்தாள்.
சரியாய் அச்சமயம் கைபேசியில் அழைத்து அவர்கள் வீட்டின் கீழ் கேட்டின் வாசலுக்கு வருமாறு அழைத்தாள் மஹா.
வாணியும் வேணியும் என்னவோ ஏதோவென எண்ணிக் கொண்டு வாசலுக்கு சென்றுப் பார்க்க, அங்கே மதியுடன் நின்றிருந்தாள் மஹா.
மதி இருப் பெண்களிடம் நலம் விசாரித்து விட்டு வரும் ஞாயிறு தனக்கும் மஹாக்கும் நிச்சயம் எனவும் அதற்கு பெண்கள் இருவரும் கண்டிப்பாக வர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தான்.
அவன் கூறியதன் அர்த்தம் மூளைக்கு புரிந்த சமயம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர் இருப்பெண்களும்.
எனினும் மதியின் முன் எதுவும் காண்பிக்கும் எண்ணமில்லாது நல்லவிதமாய் பேசி வாழ்த்துக்கள் கூறி தங்களினறைக்கு வந்து விட்டனர் இருவரும்.
வேணி மஹா இருவரும் தன்னை நெருங்கிய தோழியாய் எண்ணவேயில்லை என்ற எண்ணம் வலுவாய் வாணியின் மனதில் உரைக்க கண்ணில் விடாது நீர் வழிந்தது.
அச்சமயம் உள் நுழைந்தாள் மஹா.
இவ்விஷயத்தை இருவரும் எவ்வாறு எடுத்துக் கொள்வார்களென பயந்துக் கொண்டு உள்ளே வந்த மஹா, வாணியின் இந்த அழுகைப் பார்த்து மனம் கலங்கிப் போனாள்.
இருவரும் வாணியிடம் பேச முயல,
"நான் இது வரைக்கும் உங்ககிட்ட எதாவது மறைச்சிருக்கேனாடி??... எனக்கு நடக்குற சின்ன சின்ன விஷயத்தையும் உங்க கிட்ட ஷேர் செஞ்சிருக்கேனேடி. ஆனா இவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்லனும்னு உங்களுக்கு தோணலைல. நான் தான் உங்களை பெஸ்ட் ப்ரண்டா நினைச்சிட்டிருக்கேன். நீங்க என்னை அப்படி நினைக்கலை தானே" துடைக்க துடைக்க வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே நா தழுதழுக்க வாணிக் கூற,
இருப் பெண்களின் நெஞ்சமுமே கனத்தது அவளின் அழுகையில்.
"அப்படிலாம் இல்ல வாணி" என வேணிக் கூற,
"யாரும் என்கிட்ட எதுவும் பேச வேண்டாம். நான் தனியா அழுகனும்" எனக் கூறிக் கொண்டே தன் மெத்தைக்குச் சென்று படுத்துக்கொண்டாள் வாணி.
வேணி மற்றும் மஹா அவளை தேற்றும் வழித் தெரியாது கலங்கிப் போய் அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரம் கழித்து அவளை சமாதானம் செய்யவென அவளின் மெத்தைக்கு செல்ல அழுகையால் வெளி வந்த தேம்பலுடனே உறங்கிக் கொண்டருந்தாள் வாணி.
அவளின் தலையை மென்மையாய் வருடிய வேணி, இன்னும் சின்னப்பிள்ளத்தனமாவே யோசிச்சிட்டு அவளும் கஷ்டப்பட்டுக்கிட்டு நம்மளையும் கஷ்டபடுத்துறாளே என வேணி மஹாவிடம் கூற,
வேணியை அமைதியாய் இருக்கும்படி செய்கை செய்த மஹா, "வெளியே சென்று பேசலாம்... அவளின் தூக்கம் கலைந்துவிடப் போகிறதெனக்" கூறி முகப்பறைக்கு அழைத்து வந்தாள் வேணியை.
"அவ ப்ரண்ட்ஸ்னு லைப்ல யாரையும் வச்சிக்கிட்டது இல்லடி. அதனால அவங்கவங்களுக்குனு பர்சனல் ஸ்பேஸ் இருக்கும்னு அவளுக்கு புரியலை. அவ ஓவர் இமோஷனல் அண்ட் சென்சிட்டிவ். க்ளோஸா இருக்கிறவங்க கிட்ட எல்லாத்தையும் ஷேர் செய்யாம அவளால இருக்க முடியாது. அது மாதிரி மத்தவங்களும் இருக்க மாட்டாங்கல." என மஹா தன் எண்ணங்களைக் கூற,
"ஆனா எங்கேஜ்மெண்ட் விஷயத்துல அவ நினைக்கிறது கரக்ட் தான்டி. நேத்து என் கிட்ட ஆபிஸ்ல சொன்னா... நீ லவ் பண்ணிருப்பேனு நான் சந்தேகப்படல, ஆனா இப்படி இளாவை எனக்கு கட்டி வைக்க எங்க வீட்டுல நினைக்கிறாங்கிற மாதிரி ஒரு வார்த்தையாவது நீ சொல்லிருந்தா எனக்கு இவ்ளோ ஏமாற்றமா இருந்திருக்காதுனு சொல்லிட்டுப் போய்டா. எனக்கு ரொம்ப குற்றயுணர்ச்சியா போச்சுடி" என தன் மன வருத்தத்தை மஹாவிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தாள் வேணி.
திடீரென்று நியாபகம் வந்தவளாய்," ஆமா நீ ஏன்டி சொல்லலை. மதி சொல்லும் போது சீரியஸா செம்ம ஷாக். வாணியோட நிலைமைய அப்ப என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது" என வேணி மஹாவைக் கேட்க,
"போன சண்டே தான்டி கன்பர்ம் ஆச்சு" என அன்று நடந்தவற்றை வேணியிடம் விளக்கினாள் மஹா.
"சரி வாணியை எப்படிடி சமாதானம் செய்றது" எனக் கவலையாய் வேணிக் கேட்க,
"அதெல்லாம் செஞ்சிடலாம். டோண்ட் வொர்ரி புதுப்பொண்ணு. நீ உன் கல்யாண கனவுல வலம் வரத விட்டுட்டு இப்படி ஃபீல் செஞ்சிட்டு இருக்க" - மஹா
"மேடம் நீங்களும் ஒரு வாரத்துல புதுப்பொண்ணு ஆயிடுவீங்க. அப்புறம் ஒன்லி மதி ட்ரீம்ஸ் தான். எங்க நியாபகமெல்லாம் வருமா என்ன??" என கண் சிமிட்டி வேணிக் கேட்க,
"போடி போடி போய் தூங்குற வழியப் பாரு" என அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள் மஹா.
மெத்தையில் படுத்து போர்வையால் தன்னை போர்த்திக் கொண்ட மஹா,
"குட் நைட் அம்மு. இளா ட்ரீம்ஸ்" என சிரித்துக் கொண்டேக் கூற,
கலகலவெனச் சிரித்த வேணி,"உனக்கும்டி. ஹேவ் எ ஸ்வீட் மதி ட்ரீம்ஸ்" என வாழ்த்தினாளவள்.
மறுநாள் எவரும் பெரியதாய் எதுவும் பேசாது அமைதியாய் கிளம்பிச் சென்றனர் அலுவலகத்திற்கு.
அலுவலகத்தில் காலை பதினொரு மணியளவில் ஆஷிக்கிற்கு கைபேசி அழைப்பு விடுத்தாள் வாணி.
அவன் அழைப்பை எடுத்ததும் "எனக்கு உன் கிட்ட கொஞ்சம் பேசனும் ஆஷிக். ஃபோரம் மால் வரியா இன்னிக்கு ஈவ்னிங்??" எனக் கேட்டாள் வாணி.
"ஹே என்ன விளையாடுறியா கேபி? எனக்கு நிறைய வேலை இருக்கு. ஆபிஸ்ல இருந்து எப்பக் கிளம்புவேனு எனக்கே தெரியாது" என ஆஷிக் கூற,
இங்கே முகம் தொங்கிப் போனது வாணிக்கு.
"எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் யார்க்கிட்டயாவது பேசினா ரிலாக்ஸ் ஆகும்னு தான் உன்னை வர சொல்றேன்" என்றாள் வாணி.
"வேணும்னா நைட் டென் க்ளாக் மேல ஃபோன் பண்றேன். அப்ப பேசலாம். நேர்ல லாம் சான்ஸே இல்ல" என ஆஷிக் கூற,
"அப்ப நான் உனக்கு முக்கியமான பெர்ஸன் இல்ல. உன் வேலை தான் முக்கியம். அப்படி தானே" என்றாள் வாணி.
"நான் ஆபிஸ்ல இருக்கும் போது ரஹா ஃபோன் பண்ணாலே வேலை இருக்குனு எடுத்து பேச மாட்டேன். நீ என்ன ஜீஜீப்பி" என நக்கலாய் சிரித்துக் கொண்டே ஆஷிக் கூற,
வாணியின் கண்ணில் நீர் தேங்க,
"சரி நீ ஒன்னும் என் கிட்ட பேச வேண்டாம்" என ஃபோனை வைத்து விட்டாளவள்.
ஆஷிக் பேசியது நிதர்சனமும் கூட... எனினும் அவன் விளையாட்டாய் தான் கூறினான். ஆனால் இவளிருக்கும் மனநிலையில் அனைத்துமே இவளுக்கு தவறாய் பட்டது.
கண்களை துடைத்துக் கொண்டே வாணி ரெஸ்ட் ரூம் செல்ல, அதை பார்த்த வேணி அவளின் பின்னோடுச் சென்றாள்.
அங்கே வாணி கண்ணீரில் கரைவதைப் பார்த்தவள்,"என்னடா வாணி. என்னாச்சு?? எதுக்கு இந்த அழுகை??" என வேணிக் கேட்ட நொடி,
அவளை அணைத்து கதறவாரம்பித்தாளவள்.
"ஆஷிக் கூட என்னை க்ளோஸ் ப்ரண்டா நினைக்கல." என தேம்பிக் கொண்டே அவள் கூற,
ஆஷிக் கூட என்ற வார்த்தையில் கோபம் கொண்ட வேணி, " நாங்க உன்னை க்ளோஸ் ப்ரண்டா நினைக்கலைனு சொன்னோமா?? நீயா கற்பனை பண்ணிக்கிட்டா" என வேணி பேசிக் கொண்டிருந்த நேரம் வாணியின் கைபேசி அலறியது. ஆஷிக் தான் அழைத்திருந்தான் அவளுக்கு.
"லூசா நீ?? எதுக்கு இப்ப அழுத?? நான் வர மாட்டேனு சொன்னதுக்கா?? ஈவ்னிங் வா உன்னை கவனிச்சிக்கிறேன்" எனக் கோபத்துடேனே மொழிந்து கைபேசியை வைத்துவிட்டானவன்.
வேணியிடம் தனியாய் பேச வேண்டுமென ஆபிஸ் உணவு விடுதிக்கு வரச் சொன்னான் இளா.
தற்போழுது அவனிடம் பேச நேரமில்லை எனவும் சாயங்காலம் ஃபோரம் மாலில் பேசலாமெனக் கூறினாள் வேணி.
மாலை ஃபோரம் மாலில் கேபி ஆஷிக் கீழ்தளத்திலுள்ள காபி ஷாப்பில் பேசிக்கொண்டிருக்க, இளா வேணி மேல் தளத்திலுள்ள ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்தனர்.
"எதுக்கு அழுத கேபி?" அவனின் இக்கேள்வியிலேயே கண்களில் நீர் கட்டிக்கொள்ள,
திங்கட்கிழமை முதல் இன்று அவனுடன் கைபேசியில் பேசியது வரை கூறி முடித்தாள் வாணி.
"அறிவிருக்கா உனக்கு?? உன்னை ஃபரண்டா நினைக்காம தான் இப்படி இருக்கிற வேலைய விட்டுட்டு என் லீட் கிட்ட கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கிட்டு வந்திருக்கேனா??" என கோபமாய் ஆஷிக் கேட்க,
"அப்படி இல்ல ஆஷிக்" என வாணி ஏதோ கூற வர,
"பேசாத நீ" என அடிக்குரலில் சீறினானவன்.
"உன்னை கேபினு கூப்பிட்டா அதுப்போலவே சின்னப்பிள்ளதனமா நடந்துக்கிற நீ. உன் ஃப்ரண்ட்ஸ் சைட் என்ன நடந்துச்சுனு முதல்ல காது குடுத்து கேட்டியா நீ?? எதனால அவங்க உன் கிட்ட சொல்லலைனு தெரியுமா உனக்கு??" என அவன் கேட்க,
இல்லையென வலப்புறமாய் தலையை ஆட்டினாளவள்.
"அப்பறம் நீயா நீங்க என்னை ப்ரண்டா நினைக்கலைனு சொல்லி அழுதீனா அது உன்னுடைய முட்டாள்தனம் தானே" என்றவன்,
"எனக்கு அம்மு அண்ட் மஹா சைட் என்ன நடந்துச்சுனு தெரியாது. ஸ்டில் அவங்க சைட் நியாயத்தைக் கேட்காமல் நீ முடிவு செஞ்சது தப்பு. முதல்ல இப்படி முகத்தை தூக்கி வச்சிக்காம அவங்க கிட்டப் போய் மனசு விட்டு பேசு." என்றதும்
சரியென தலையாட்டினாள் வாணி.
"என்ன அமைதியாயிட்ட?? மனசுல என்ன இருக்கோ அதை சொல்லு" என ஆஷிக் அவளை பேச சொல்லி உந்த,
"நிஜமாவே உங்க எல்லாருக்கும் என்னைய பிடிக்குமாடா??" எனக் கேட்டாள் வாணி.
அவள் மனதிலிருந்த தாழ்வு மனப்பான்மை எவ்வாறு இம்மூவரின் அன்பால் வெளியேறி இயல்பாய் அவளை இருக்க வைத்ததோ, அதுவே இவர்களின் இச்செயலால் மீண்டும் அவளின் மனதினில் உட்புகுந்து அவளை கரையச் செய்திருந்தது.
அவளின் கேள்வியில் தன்னருகே இருந்த பையை எடுத்து அவளை அடிப்பதுப் போல் கொண்டுச் சென்றவன்,
"யாரும் யாருக்கும் குறைஞ்சவங்களும் இல்ல. மேலானவங்களும் இல்ல கேபி. கடவுளின் பார்வைல எல்லாரும் ஒன்னு தான். அப்படி யாராவது உன்னை குறச்சி பேசினாங்கனா அவங்க தான் குறைவானங்கனு அர்த்தம். அதுக்கு நீ கூனிக் குறுகிப் போகத் தேவையில்லை. அப்படி ஒரு எண்ணம் உன் மனசுல வரும் போதெல்லாம் இது வரை நீ வாழ்க்கைல அச்சீவ் பண்ணதை யோசிச்சுப் பாரு. உனக்கு உன் மேலேயே கான்பிடன்ட் வரும்" என்றவன்,
"அப்புறம் எங்களுக்கு உன்னை பிடிக்குமாவா?? பிடிக்காம தான் உன்னை இப்படி உட்கார வச்சி பேசிட்டு இருக்கேனா... இல்ல அம்முவும் மஹாவும் பிடிக்காம தான் இரண்டுநாளா உன்னை சமாதானம் செய்ய முயற்சி செய்றாங்களா?? புரிஞ்சிக்கோடா கேபி"
"ரஹா வேற ஏதோ அர்ஜண்டா பேசனும்னு சொன்னா. உன்னை மீட் பண்ண போறேன் அப்பறம் வந்து பேசறேனு சொல்லிட்டேன்" என்றான் ஆஷிக்.
"அதெல்லாம் அவ ஒன்னும் தப்பா நினைச்சிக்க மாட்டா. வயசுல சின்ன பொண்ணா இருந்தாலும் செம்ம மெச்சூரிட்டி அவளுக்கு. என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட என் தேவதை அவ" என முகம் பூரிப்பில் மின்ன ஆஷிக் கூற,
"ஹ்ம்ம ரஹாவ பத்தி பேசினாலே மூஞ்சில பல்ப் எறியுதே. அவளை உன் காதல்ல விழவைகிறேனு சொல்லி, நீ அவ காதல்ல இப்படி தொப்புகடீர்னு விழுந்துட்டியே ஆஷிக்கு" என வராதக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வாணி கூற, வாய் விட்டு சிரித்தனர் இருவரும்.
அங்கே அதே ஃபோரம் மாலில் மேல் தளத்திலுள்ள உணவிடத்தில் இளாவும் வேணியும் பேசிக் கொண்டிருந்தனர்.
"உனக்கும் வாணிக்கும் என்னப் பிரச்சனை அம்ஸ்?" என இளா கேட்க,
"அது ஒன்னுமில்ல இளா. சின்னப் பிரச்சனை தான் நாங்க பேசி சால்வ் பண்ணிடுவோம்" என்றாள் வேணி.
"உன் பிரச்சனைய என்கிட்ட ஷேர் செஞ்சிக்கிற அளவுக்கூட உன் மனசுல நான் இல்லையா அம்ஸ்" என வேதனைக் குரலில் இளா கேட்க,
"லூசு மாதிரி பேசாதடா. என் பிரச்சனைய உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட நான் சொல்ல போறேன்" எனக் கோபமாய் கூறியவள், "இதை சொன்னா நீ வருத்தப்படுவியேனு தான்டா சொல்லலை." என்றாள் வேணி.
"அப்படி என்ன பிரச்சனை??" அவன் மீண்டும் கேட்க, இன்று வரை நடந்ததைக் கூறினாள் வேணி.
"ஓ இது தான் பிரச்சனையா... நம்ம எங்கேஜ்மெண்ட் வச்சி இவ்ளோ பிரச்சனை ஆயிடுச்சா" என அவன் கவலையாய் கேட்க,
"பாத்தியா...இதுக்கு தான் நான் சொல்லல" என்றாள் வேணி.
"சரி இப்ப வாணி எங்க" என்று கேட்டவன், அவள் கூறியதும் ஆஷிக் வாணி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
அங்கே வாணி ரஹானாவுடன் போனை ஸ்பீக்கரில் போட்டு ஆஷிக்கை வம்பிழுத்து ரஹானாவிடம் போட்டுக் கொடுத்து என கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளை அவ்வாறு கண்டதும் சற்று நிம்மதியடைந்தனர் இளாவும் வேணியும். பார்வையாலேயே ஆஷிக்கிற்கு நன்றி உரைத்தனர்.
பின்பு அவர்களுடன் அமர்ந்து இவர்களின் நிச்சயம் நிகழ்ந்த கதையை உரைத்தான் இளா. வேணி தான் வாணியிடம் கூறாததற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.
பின் மஹா மதியுடனான நிச்சயம் எவ்வாறு முடிவு செய்யப்பட்டதென உரைத்தாள் வேணி.
வாணி இப்பொழுது மிகவும் தெளிந்திருந்தாள். அவளின் கவலைகள் மன சஞ்சலங்கள் அனைத்தும் இருந்த இடம் காணாமல் போயிற்று.
"இவ்வளவு அலப்பறை பண்ணி எங்களையெல்லாம் கதி கலங்க வச்ச வாணிக்கு பனிஷ்மெண்ட் தர வேண்டாமா??" என இளா வினவ,
"அய்யோ அண்ணா.... ஏன் இப்படி??" என அலறினாள் வாணி.
அது வரை இளா என பெயர் சொல்லி அழைத்தவள், தோழியின் கணவராகப் போகிறவரென்றதும் தன் சகோதரனாய் எண்ணி விளிக்கவாரம்பித்தாள் வாணி.
"சின்ன பனிஷ்மெண்ட் தான் வாணி. எங்க எல்லாருக்கும் ட்ரீட் கொடுத்துடு" என இளா கூறியதும், "ஹே சூப்பர் சூப்பர்... செம்ம இளா" எனக் கூறி இளாவுடன் கைகுலுக்கினாள் வேணி.
"சரி எங்கே எப்போ சொல்லுங்க" என வாணி கேட்க,
"வாணி காஞ்சுரிங்க் படம் போகலாம்டி. சூப்பரா இருக்காம். அதுவும் நைட் டைம்ல தியேட்டர்ல பேய் படம் பார்க்கனும்னு எனக்கு ரொம்ப ஆசைடி" என வேணிக் கூற,
"நைட் டைம்மாஆஆ... நோஓஓ... சேப் கிடையாது. பசங்களே கூட இருந்தாலும் நைட் டைம் மூவிஸ் நாட் அலௌடு." என வாணி கறாறாய் கூற,
"நைட் 9.30குள்ள வீட்டுக்கு வந்துட்டா ஓகேவா வாணி" என கேட்டான் இளா.
"ஹ்ம்ம் ஓகே தான் அண்ணா"
"இங்க ஃபோரம் மால்லயே கமிங் வீக்கெண்ட் சண்டே ஈவனிங் 7 க்ளாக் ஷோ இருக்கு. ஒன்பது மணிக்கு முடியும் ஒன்பதரைக்கு நீங்க வீட்டுக்குப் போய்டலாம்" என இளா தன் கைபேசியை பார்த்து ஐடியா கொடுக்க,
"மச்சி இன்னிக்கு உன் காட்டுல மழை தான் போ" என எவருக்கும் கேட்காத வண்ணம் இளா பக்கமாய் சாய்ந்து மென்குரலில் கேலி செய்தான் ஆஷிக்.
"டேய் அவளே இப்ப தான் ஒரு ஃபார்ம்க்கு வந்திருக்கா. இடையில புகுந்து கெடுத்துடாதடா" என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு இளாக் கூற,
வாய்விட்டு சிரித்தான் ஆஷிக்.
"அங்கே நீங்க இரண்டு பேரு மட்டும் என்ன பேசிட்டு இருக்கீங்க??" எனக் கேட்டாள் வாணி.
"என்னால வர முடியாது கேபி. அததான் இளாக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். நான் ஊருக்குப் போறேன்" என்றான் ஆஷிக்.
"உண்மையா நீங்க எல்லாரும் தான் எனக்கு ட்ரீட் வைக்கனும். உங்க எல்லாருக்கும் தான் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்கு" என வாணிக் கூற,
"அதெல்லாம் கொடுக்க வேண்டிய நேரத்துல நாங்க கொடுப்போம்" என்றான் ஆஷிக்.
"ஹே ஆஷிக் உனக்குமா?? சொல்லவேயில்ல" - வேணி
"டேய் மச்சி சொல்லவேயில்ல??" - இளா
இருவரும் ஒரு சேரக் கேட்க, தன் நிச்சயதார்த்த கதையை கூறினான் ஆஷிக்.
ஒருவாராய் வரும் ஞாயிறு அனைவரும் படம் பார்க்க செல்லலாமென முடிவு செய்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு கிளம்பினர் அனைவரும்.
வீட்டை அடைந்ததும் வாணி, மஹா மற்றும் வேணியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.
அடுத்து வந்த நாட்கள் இயல்பாய் சென்றாலும் தினமும் தன்னிடம் அவள் பேச வேண்டுமென்ற இளாவின் ஆசையை நிறைவேற்றத் தொடங்கியிருந்தாள் வேணி.
காலை வணக்கம் குறுஞ்செய்தி அனுப்புவது தொடங்கி இரவுணவு உண்டுவிட்டானா என்பது வரை அவனுடன் தொடர்பிலேயே இருப்பதுப் போல் பார்த்துக் கொண்டாள் வேணி.
ஆனால் இவையெல்லாம் இளாவை தன்னவனாய் தான் உணர்ந்ததால் தான் செய்கிறோமென புரியவில்லை வேணிக்கு.
ஞாயிறு இரவு 7 மணிக்கு ஃபோரம் மாலிலுள்ள பிவிஆர் சினிமாஸ்க்குள் நுழைந்தனர் இளா,வேணி மற்றும் வாணி.
மதியும் மஹாவும் அந்த வாரயிறுதி நாளில் தங்களின் நிச்சயத்திற்காக சென்னைக்கு செல்ல, வாணி வேணி மற்றும் இளா கான்சூரிங்க் படம் பார்க்கவென வந்திருந்தனர் வேணியின் பேய் படம் பார்க்கும் ஆசையினால்.
வேணி நடுவே உட்கார, அவளின் இரு பக்கமும் வாணி மற்றும் இளா அமர்ந்திருந்தனர்.
"நமக்கு தான் அவங்க பேசுற இங்கிலீஷே புரியாதே.... அப்புறம் படம் புரியலைனா என்னப் பண்றது. அதான் படத்தோட கதைய ஒரு தடவை படிச்சி வச்சிக்கலாம்னு கூகுள் பண்றேன்" என்றுரைத்தாள் வேணி.
"ஹே சூப்பர்டி. நான் கூட இப்படி இங்கிலீஷ் படத்துல வந்து உட்கார வச்சிட்டியே. புரியாம அதுல என்னத்த பார்க்கிறதுனு நினைச்சேன். நல்ல ஐடியாடி" என்ற வாணி, வேணியுடன் சேர்ந்து அவளின் கைபேசியில் கதை படித்தாள்.
"அடப்பக்கிகளா.... படம் பாக்க முன்னாடியே கதை தெரிஞ்சா அதுல என்ன சுவாரசியம் இருக்கு இதுக்கு எதுக்கு தியேட்டருக்கு வரணும்" எனக் கேட்டான் இளா.
"நீயெல்லாம் அடிக்கடி இங்கிலீஷ் படம் பார்க்குற ஆளு. அதனால உனக்கு எங்க கஷ்டம் புரியாது" என இளாவிற்கு பதிலுரைத்தாள் வேணி.
படம் திரையில் போடத் தொடங்கியதும் திரையை கவனிக்கத் தொடங்கினர் மூவரும்.
"நீங்களாம் சாப்ட்வேர் இன்ஜினியர்னு வெளில சொல்லிடாதீங்க" என மெல்லமாய் இவர்களுக்கு கேட்குமாறு இளாக் கூற,
"டேய் இவங்க நம்ம பேசுற மாதிரியாடா இங்கிலீஷ் பேசுறாங்க. நம்ம நாட்டு இங்கிலீஷ் எங்களுக்கு நல்லா புரியும். அவங்க தான் நம்மளுக்கு புரியாத மாதிரி பேசுறாங்க. சோ ஃபால்ட் எங்க மேல இல்ல. அவங்க மேல தான்." என நாட்டு இங்கிலீஷ்க்கு வக்காளத்து வாங்கினாள் வேணி.
"சரி சரி படம் போட்டாச்சு பாரு. அப்புறம் வக்காளத்து வாங்கலாம் உன் நாட்டு இங்கிலீஷ்க்கு" என்றான் இளா.
குண்டூசி போட்டாலும் சத்தம் வரும் அமைதியான சூழலில் படம் ஆரம்பித்த சில நொடியிலேயே வாணி மற்றும் வேணிக்கு பயம் கவ்விக் கொள்ள, பயம் தெரியாதிருக்க இவரும் படத்தில் வரும் திகில் காட்சிகளையும் கிண்டலடித்துச் சிரித்துப் இவர்கள் பார்த்துக் கொண்டிருந்த சில நிமடங்களில் கேட்டது அந்தக் குரல்.
"எக்ஸ்க்யூஸ் மீ. கேன் யூ பிளீஸ் பீ சைலண்ட்" எனக் கோபமாய் காட்டமாய் இவர்களின் முன் இருக்கையிலிருந்த ஒருவன் வாணியையும் வேணியையும் பார்த்துக் கூற,
"எவ அவ??" என்பதைப் போல் அவனை நோக்கியவர்கள்,
"சாரி" எனக்கூறி கப் சிப் என வாயை மூடிக் கொண்டனர் இருவரும்.
இவர்களை பார்த்து வாய் மூடி சிரித்தான் இளா.
அவனை முறைத்த வேணி அவனின் திருகிய மீசையை இவள் லேசாய் திருகி இழுக்க, ஆ வென மெலிதாய் அலறியவன் பட்டென அவள் கைகளில் ஒன்று வைத்தான்.
கோபம் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாளவள். தன்னவளின் முகத் திருப்பலை காணத் தாளவில்லை அவனுக்கு. அவளின் தாடையை பிடித்து அவன் திருப்ப, மீண்டும் திரும்பிக் கொண்டாளவள்.
ரசனையான அவள் செயலில் கோபம் கொண்ட அவனின் மீதே கோபம் வந்தது அவனுக்கு.
அவளின் வலக்கையை பிடித்தவன் தானே தன் மீசையினருகே அவளின் கையைக் கொண்டுச் செல்ல, சட்டென அவன் பக்கம் திரும்பியவள் முகம் மலர சிரித்து தானே மென்மையாய் அவனின் மீசையை முறுக்கி விட்டாள்.
"என்ன நடக்குது இங்க??" என வேணியின் கையை சுரண்டினாள் வாணி.
"ஹ்ம்ம் பேய் நடக்குது" என்ற வேணி, சைலட்டா இருடி திரும்பவும் பேட்ட ராப் மாதிரி ஸ்டாப் இட்னு கூவப்போறான் அவன்.
அதன்பின் அமைதியாய் படம் பார்த்தனர் மூவரும்.
இப்பொழுது பயத்தை போக்கிக் கொள்ளவென இருவரும் பேசிக்கொள்ளவும் முடியாத நிலை.
திரையில் திகில்காட்சிக்கான ஒலி வரும் போதெல்லாம் வாணி வேணியின் தோளில் முகம் புதைக்க, வேணி இளாவின் கைகளைப் பற்றி தோளில் முகம் புதைத்தாள்.
இளா அவளின் பயத்தை, அப்பயத்தால் விளைந்த அவள் முகப்பாவங்களை ரசித்துக் கொண்டிருந்தான்.
ஒருவழியாய் பயந்து பயந்து இதய துடிப்பு தாறுமாறாய் எகிறித் துடித்து பார்த்திருந்த அப்பேய் படம் நிறைவடைய, இரவுணவை அங்கேயே முடித்து விட்டு கிளம்பினர் மூவரும்.
"அங்க நைட் ஷிப்ட்லாம் ஒன்னும் பயமில்லை. நிறைய பேரு ஷிப்ட்ல இருக்காங்க. சோ பயப்படாம போங்க" என்றுரைத்தானவன்.
வேணிக்கு இந்த சுழற்சி முறை ஷிப்ட் தன் உடலை பாதிப்படைய செய்திடுமோ என்கின்ற ஐயத்தை ஏற்படுத்த, வாணிக்கோ அனைத்து ஷிப்ட்டிலும் எவ்வாறு தன் பணியை சரிவர செய்ய போகிறோமென்ற எண்ணமே முதன்மையாய் இருக்க, உடல்நலம் பற்றிய ஐயம் இரண்டாம் பட்சமாகியது.
இளா வேணியிடம் பேசவென வாசலிலேய நிற்க, அவர்களுக்கு தனிமை கொடுத்து வீட்டிற்குள் சென்றாள் வாணி.
"அப்ப நாளைக்கு மதியம் என் கூட சாப்பிட வரமாட்டியா அம்ஸ்" என அவன் கவலையாய் கேட்க,
அவனின் குரலிலுள்ள வருத்தத்தை உணர்ந்தவள்,"இல்ல நான் அங்க வந்து தான் சாப்பிடுவேன். கேப் ஆபிஸ் வந்ததும் உனக்கு ஃபோன் பண்றேன். கேபிடேரியா வந்துடு. ஒண்ணா சேர்ந்தே சாப்பிடலாம்" என்றாள் வேணி.
அவனின் வருத்தம் தன்னை ஏன் வருந்த செய்கிறது?? உணரவில்லை பெண்ணவள்.
"தேங்க்ஸ் அம்ஸ். சரி நான் கிளம்புறேன்" என அவளை விட்டு போக மனமில்லாது அவன் போக,
"இளா இளா" என அவன் பின்னே சென்றாள் வேணி,
"என்ன அம்ஸ்??" என்றவாறு அவன் திரும்பவும் இவள் அவனின் மீசையை இழுத்துவிட்டு ஒரே ஓட்டமாய் வீட்டிற்குள் சென்று கதவை தாழ் போட்டாள் வேணி.
வலியில் சுகம் உணர்ந்தான் அவன். உணர்த்திட்டாள் அவள். சுகவேதனை அவனுக்கு. அவனை ஸ்பரிசித்த சுகம் மட்டுமே அவளுக்கு.
"நாளைக்கு ஆபிஸ் வரவல. அப்ப கவனிச்சிக்கிறேன் உன்னை" என இளா கூறியது காற்றோடு கலந்து அவள் காதில் கேட்க,
"போடா நாளைக்கு நீ இப்படி ஆபிஸ்க்கு வச்சிட்டு வர மாட்ட... அதான் என் ஆசை தீர இன்னிக்கே இழுத்துட்டேன்" என கதவினிடுக்கில் முகத்தை மட்டும் வெளியில் நீட்டி கண் சிமிட்டி அவள் கூற,
அவளையும் அவளின் வார்த்தையையும் வெகுவாய் ரசித்தவன், இனி இவ்வாறு தான் மீசை வைத்துக் கொள்ள வேண்டுமென முடிவு செய்துக் கொண்டான்.
"பை அம்ஸ். குட் நைட்" என்றுரைத்து அவ்விடத்தை விட்டு அகன்றான்.
இளா அவளை தன் மனதில் உணரத் தொடங்கியிருந்த நிலையில், காதலாய் அவளை தனக்குள் அவன் பதிந்துவிட்ட நிலையில், அவளின் அருகாமையை வெகுவாய் ரசித்தானவன். ஆனால் வேணியோ இவை எதுவும் அறியாது... தான் அவனை தன்னவனாய் உணர்வதையும் அறியாது அவனிடம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
காதலுற்றவர்களாய் அவனையும் அவளையும் அவளின் அடிமனம் உணர்வதை அறியாத பெண்ணுள்ளமோ அவளையும் மீறி அவனை ரசித்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தது அவளின் நேசத்தை.
எப்பொழுது தான் உணர்வாளோ பேதையவளும்??
மைவிழி மானே
கிறங்கிப்போனேன்
உன் மின்னும் முகஅழகிலே!!!
முறுக்கு மீசைக்காரா
சிதறிப்போனேன்
உன் அழகுச் சிரிப்பினிலே!!! மறுநாள் விடியற்காலை நான்கு மணியளவில் நிச்சயம் முடித்து பெங்களுர் வந்த மஹா தன்னிடமிருந்த சாவியால் பூட்டை திறந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.
வாணியும் வேணியும் தங்களின் ஃபுளோர் பெட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, வாணியின் காலருகே இருந்த தனது படுக்கையில் படுத்த மஹாவின் கைபட்டு வாணியின் மீதிருந்த போர்வை சற்றாய் கீழே இழுக்கப்பட ஆஆஆஆ வென்ற வீறலுடன் அலறியடித்து எழுந்தாள் வாணி.
வாணியின் அலறலில் முழித்த வேணி தன் எதிரிலிருந்த மஹாவின் பெரிய டெட்டி பியரை பார்த்து காஞ்சுரிங்கில் வந்த பேய் பொம்மை என நினைத்து வீல்ல்ல்ல்ல் எனக் கத்தினாள்.
இவர்கள் இருவரின் அலறலில் பயந்த மஹா தன் பங்கிற்கு கத்த, அவ்வீடே இம்மூவரின் அலறலில் நிரம்பியது.
அலறலை விட்டு மஹாவிடம் வந்த வேணியும் வாணியும் மஹாவை அணைத்துக் கொண்டனர்.
இவர்களின் வீடு கடைசி போர்ஷன் என்பதாலும் வீட்டை நன்றாய் தாழ்பாள் போட்டு பூட்டயிருந்ததாலும் இவர்களின் அலறல் வெளியில் எவருக்கும் கேட்கவில்லை.
பேய் படம் பார்த்ததால் இருவரும் பேய் கனவு கண்டிருக்க அச்சமயம் படத்தில் வந்த பேய் தான் இவர்கள் இல்லத்திற்கு வந்துவிட்டதென எண்ணி அலறிவிட்டனர் இருவரும்.
நைட் பேய் படம் பார்க்காதீங்கனா கேட்குறீங்களா என இருவரையும் நன்றாய் வறுத்தெடுத்தாள் மஹா.
அன்று மதிய ஷிப்டிற்கு ஆபிஸ் சென்ற வேணி, உணவு உண்பதற்காய் கேபிடேரியாவிற்கு இளாவை அழைத்தாளவள்.
அங்கிருந்த மேஜையிலமர்ந்து உணவினை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளின் முன் வந்து இளா அமர, அவனை பார்த்த நொடி
"வாவ் இளா" எனத் துள்ளிக்குதித்தாள் வேணி.
"என்ன திடீர்னு ஆபிஸ்க்கும் இப்டி மீசைய வச்சிட்டு வந்துட்ட??" என அவன் மீசைய இழுக்க பரபரத்த தன் கையை கட்டுக்குள் கொண்டு வந்து அவள் வினவ,
அழகாய் சிரித்து,"இனி எல்லாம் அப்படி தான்" என்றானவன்.
அவனிடம் பேசிக் கொண்டே அவனுக்கு உணவு பரிமாறியவள் திடீரென்று,"இல்ல இளா. மேரேஜ் முன்னாடி இப்டி ஒன்னும் நீ ஆபிஸ்க்கு வச்சிட்டு வர வேண்டாம்" என்றாளவள்.
"ஏன் என்னாச்சு??" என நெற்றிச் சுருங்க கேள்வியாய் அவன் நோக்க,
"அது அப்படி தான்" என்றாள் அவளும்.
"நீ ரீசன் சொல்லாம நீ சொல்றதை நான் செய்ய மாட்டேன்" என்றான் அவனும் பிடிவாதமாய்.
அந்நேரம் இளாவின் டீமிலிருக்கும் அவனின் டீம் மெட் ஷில்பா அறை நாள் விடுப்பெடுத்து அப்பொழுது தான் ஆபிஸ் வந்தவள் இளாவை கேபிடேரியாவில் பார்த்து அவனருகே வந்தவள், "வாவ் இளா யூ ஆர் லுக்கிங் டிபெரண்ட் அண்ட் யூ ஆர் லுக்கிங் சோ மேன்லி டுடே. என்ன வித்தியாசமா தெரியுது??" எனக் கூறிக் கொண்டே அவன் முகத்தை ஆராய்ந்தவள்,
"ஹே காட் இட்..மீசை.. சூப்பரா இருக்கு இளா. இந்த லுக் நல்லா இருக்கு" என்றுரைத்தவள் வேணியிடம் சில வினாடி பேசி விட்டே சென்றாள்.
அதுவரை வேணியை காணாது ஷில்பாவிடம் பார்வையை வைத்துப் பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை தற்போது வேணியின் மீது பாய கடுகு போட்டால் பொறியுமளவிற்கு சூடாகியிருந்தது அவளின் முகம் கோபத்தில்.
எதற்காக இந்த கோபம் எனப் புரியாது முதலில் நெற்றியை தேய்த்தவன் புரிந்தப் பின், "ஓ மேடம்னு பொறாமையா?? நம்ம மேல பொசசிவ்னஸ் வந்துடுச்சு போலயே" என மனதில் எண்ணிக் கொண்டு சிரித்தான்.
"எதுக்கு இப்படி சிரிக்கிற??" என கோபமாய் அவள் வினவ,
"நீ எதுக்கு இப்படி கோபமா என்னை முறைச்சிட்டு இருக்க??" என இளாக் கேட்க,
"நாளையிலிருந்து ஆபிஸ்க்கு இந்த மாதிரி மீசைய வச்சிட்டு வந்த உன்னை ஒரு வழிப் பண்ணிடுவேன் சொல்லிட்டேன்." என ஆத்தரமாய் உரைத்தவள்,
"இதோ பாரு இளா... ஆயுசுக்கு இந்த மீசைக்கு சொந்தக்காரி நான் மட்டும் தான்.அதை பத்தி பேச கூட யாருக்கும் உரிமை கிடையாது. அதுக்கு பங்கு போட்டு யாரவது வந்தா வெட்டிடுவேன் சொல்லிட்டேன்" எனக் கோபத்தில் அவன் மீதுள்ள பாசத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க உரைத்தவள்,
"ஹே கூல் டௌன் அம்ஸ்" என்ற இளாவின் பேச்சையும் காதில் வாங்காது அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
"ஹப்பாஆஆஆஆ... மேடம் நம்ம மேல செம்ம லவ்ஸ்ல இருக்காங்க போலயே... அது அந்த மரமண்டைக்கு புரிய மாட்டேங்குதே??" என வாய் விட்டு புலம்பியவன்,
"கல்யாணம் முடியட்டும் உனக்கு இந்த அத்தானோட லவ்ஸயும் சேர்த்து புரிய வைக்கிறேன்டி என் செல்லக்குட்டி" என சூளுரைத்து தன் பணியைத் தொடர சென்றானவன்.
அவனின் மனதில் பூத்திருந்த காதலை திருமணத்திற்கு முன் கூற மனமில்லை அவனுக்கு. இவனின் காதலை கூறி அவளை காதலிக்க செய்யவும் விருப்பமில்லை அவனுக்கு. அவள் மனதில் இயல்பாய் அவனின் மீது காதல் பூக்க வேண்டும். அதை அவள் உணரவேண்டுமென காத்திருந்தான் இளா.
இவனின் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா??
பூத்த காதலை உணர்வாளா அவள்?
உணர வைப்பானா அவன்??
---
அடுத்து வந்த நாட்களில் வாரம் தோறும் மாறும் ஷிப்டில் வாணியும் வேணியும் போய்க் கொண்டிருந்த சமயம், வாணி இரவு ஷிப்டிலும் வேணி காலை ஷிப்டிலும் இருந்த அந்த வாரத்தில் ஒரு நாள்...
மதியம் இரவு ஷிப்ட் முடிந்து உறங்கிக் கொண்டிருந்த வாணியிடமிருந்து போன் வந்தது வேணிக்கும் மஹாக்கும்.
அவர்களை கான்ஃபரன்ஸ் காலில் அழைத்தவள்,"இரண்டு பேருமே ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டு உடனே ரூம் வந்து சேருறீங்க. இல்லனா இரண்டு பேரையும் என்ன செய்வேனு எனக்கேதெரியாது" என உட்சபச்ச கோபத்தில் கூறி அவர்கள் பேச இடமளிக்காது அழைப்பை துண்டித்தாள் வாணி. அவளின் கைபேசி தன் இயக்கத்தை நிறுத்தியுமிருந்தது.
இருவரும் வெவ்வேறு அலுவலகத்தில் இருந்தவர்கள், எதற்காக அவள் அழைத்தாளென புரியாது எனினும் அவளின் பேச்சிற்கு கட்டுப்பட்டு மேனேஜரிடம் எமர்சென்ஸி எனக் கூறி கிளம்பினர் தங்களின் வீட்டிற்கு.
எனினும் இரண்டு மணி நேரம் ஆனது இருவரும் அவர்கள் இல்லத்தை அடைவதற்கு.
வீட்டை அடைந்தவர்கள் வீட்டின் கோலம் கண்டு திகைத்து நின்றனர்.
வீடு முழுவதும் அனைத்து ரூம்களிலும் கனுக்கால் வரை தண்ணீர் தேங்கி நின்றது. அவர்கள் தரையில் வைத்திருந்த மெத்தை அவர்களின் பை போன்ற பொருட்கள் நீரில் மிதந்துக் கொண்டிருந்தது.
வாணி வீட்டிலிருந்த ஒற்றை நாற்காலியில் தனது கால்களை மடக்கிக் கொண்டு தலையில் கை வைத்துக் தூங்கிக் கொண்டிருந்தாள்.
"இதுக்கு தான் மேரேஜ் ஃபிக்ஸ் ஆன பொண்ணுங்ககிட்ட சேரக்கூடாதுனு சொல்றது. எப்பவும் கனவு உலகத்துலயே சுத்திட்டு கூட இருக்கிறவங்களை மறந்துடுவாங்க. எங்க இந்த மரமண்டைக்கு புரிஞ்சுது. இனி உங்க கூட என்னால குப்ப கொட்ட முடியாதுடி" என ஆத்திரமாய் வாணி கூற,
அவள் கூறிய தினுசில் வாய் விட்டு சிரித்தனர் மஹாவும் வேணியும்.
சிரிக்கிறீங்களா கழுதைங்களா எனக் கூறி அந்த தரையிலிருந்த நீரில் அவர்களை தள்ளியவள் தானும் அவர்களுடன் சேர்ந்து அத்தண்ணீரில் உருண்டு புரண்டாள்.
"என்னனு சொல்லிட்டு அடிடி" என இருவரும் ஒரு சேரக் கத்த, எதையும் காதில் வாங்காது அவர்களுடன் மல்லுக்கு நின்றாள் வாணி.
ஒரு வழியாய் அனைவரும் சோர்வாகி அந்நீர் நிறைந்த தரையிலேயே எழுந்து அமர்ந்தனர்.
"எப்படி இப்படி ஆச்சு??" என வேணி கேட்க,
"எல்லாம் உங்களால தான்" என மீண்டும் வாணி கூற,
"அடியேய் திரும்பவுமா... வேண்டாம் அழுதிறுவேன்" என வேணி பாவமாய் கூற,
நிகழ்ந்ததை உரைத்தாள் வாணி.
வாணி இரவு ஷிப்ட் முடித்து காலை வந்தவள் மஹாவுடன் சேர்ந்து காலை உணவை உண்டுவிட்டு மஹா தன் அலுவலகத்திற்கு கிளம்பியதும் படுக்கச் சென்றாள். வேணி காலை ஷிப்ட் என்பதால் காலையே சென்றுவிட்டாள் அலுவலகத்திற்கு.
தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த வாணி தன் மீது நீரின் ஸ்பரிசத்தை உணர்த்து முழித்துப் பார்க்க, அவளை அவளிருந்த அந்த ரூமை சூழ்ந்திருந்தது தண்ணீர். அவள் படுத்திருந்த மெத்தை நனைந்து அவளும் முழுவதுமாய் நனைந்திருந்தாள்.
எவ்வாறு தண்ணீர் வந்ததென அவள் சென்று பார்க்க, சமையலறை சிங்கில் பாத்திரங்கள் நிறைந்திருக்க, குழாய் மூடாத நிலையில் தண்ணீர் அந்த சிங்கை நிறைத்து அதிலிருந்து வழிந்து அனைத்து ரூமிற்கு நீர் பரவியிருக்கிறது.
இதைக் கேட்டதும் மஹாவை முறைத்த வேணி, "ஏண்டி உனக்கு காலைல மெசேஜ் செஞ்சேனே பாத்தியா இல்லையா??" என வேணிக் கேட்க,
திருதிருவென முழித்தாள் மஹா.
காலை மதியின் குறுஞ்செய்தியை பார்த்து பூரித்திருந்த மஹா, வேணியின் குறுஞ்செய்தியைப் பார்க்க மறந்துவிட்டாள்.
காலை ஐந்து மணிக்கு வேணி அலுவலக வண்டி வருவதற்குள் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டுமென அவசர அவசரமாய் கிளம்பியவள், மஹாவிடம் கூற வேண்டிய விஷயங்களை குறுஞ்செய்தியாய் அனுப்புவித்திருந்தாள்.
அன்று காலையே மின்சாரம் இல்லாததால் டேங்கில் தண்ணீரும் ஏற்ற முடியாத நிலையில் கீழிருந்த கிணற்றிலிருந்து மேலே தண்ணீர் எடுத்து வந்து உபயோகித்துக் கொள்ளுமாறு வீட்டின் உரிமையாளர் கூறியதையும், தான் ஓரளவிற்கு தண்ணீர் எடுத்து வந்து வைத்து விட்டதாகவும், காலை கிளம்பும் முன் வீட்டிலுள்ள அனைத்து ஸ்விட்ச் மற்றும் தண்ணீர் குழாய்களை மூடிவிட்டு செல்ல வேண்டுமெனவும் மஹாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் வேணி.
காலை ஷிப்டிற்கு வேணி அலுவலகத்தில் நுழையும் நேரம் தவறாது அவளுக்கு அழைப்பு விடுத்து பேசுவான் இளா. அது வழக்கமாய் அவன் எழுந்திருக்கும் நேரம். சரியாய் அந்நேரம் தன் இடத்திலிருந்து மீதமிருக்கும் அன்றைய ப்ராஜக்ட் வேலைகளை அடுத்து ஷிப்ட் ஆளான வேணிக்கு உரைத்துவிட்டு கிளம்புவாள் வாணி.
இளாவிடம் போனில் காத்திருக்கச் சொல்லிவிட்டே வாணியிடம் தன் ஷிப்ட் வேலைகளை பேசி முடிப்பாள் வேணி. ஆக இத்தகைய நெருக்கடியால் வேணியால் வாணியிடம் நேரம் செலவிட முடியவில்லை. அதுவுமில்லாது இளாவிடம் பேசும் சுவாரஸ்சியத்தில் வாணியிடம் அந்த மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சனைய கூற மறந்துவிட்டாள் வேணி.
ஆக இவர்கள் சிங்க் குழாயை திறந்து வைத்திருக்க, மின்சாரம் வந்ததும் டேங்கை நிரப்ப, மூடாத சிங்க் குழாயிலிருந்து தண்ணீர் வரவாரம்பித்திருக்கிறது. அத்தண்ணீர் செல்ல வழியில்லாத அளவு பாத்திரங்கள் நிரம்பியிருக்க, தண்ணீர் வெளியே வழிய ஆரம்பித்துள்ளது.
பின் மூவருமாய் சேர்த்து வீட்டை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர்.
அன்று தாங்கள் செய்த வேலையை நினைத்து பின் வந்த நாட்களில் நிறையவே சிரித்துக் கொண்டனர் மூவரும்.
மதியும் இளாவும் இதையறிந்து மஹா மற்றும் வேணியை கிண்டலடித்து ஒரு வழியாக்கினர்.
--
செப்டம்பர் 2012
இளா வேணி திருமண நாளன்று...
இரு குடும்பத்தாரும் திருமண வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருக்க, பட்டு வேஷ்டி சட்டையில் முறுக்கிய மீசையுமாய் நெற்றியில் கீற்றாய் சந்தனமும் குங்குமுமாய் மாப்பிள்ளைக்குறிய அனைத்து அம்சங்களுடன் மணமேடையில் அமர்ந்து ஐயர் ஓதிய மந்திரங்களைக் கூறிக் கொண்டு வேணியின் வரவிற்காக ஆவலாய் காத்துக் கொண்டிருந்தான் இளா.
இளா பெங்களுரிலிருந்து வந்த நாளிலிருந்து அவனுக்கு காட்சி அளிக்காது போக்கு காட்டிக் கொண்டிருந்தாள் வேணி.
திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே சில அழகு நிலையம் வேலை இருப்பதாய் கூறி பெங்களூரிலிருந்து கிளம்பி வந்துவிட்டாள் வேணி.
இளா இரு நாட்கள் முன்பு தான் பெங்களுரிலிருந்து வந்தான். அவன் வந்த நாளிலிருந்து திருமணத்தின் முந்தைய நாள் இரவு வரை அவளைக் காண எண்ணிலடங்கா முயற்சி செய்தும் அதற்கு இடமளிக்காது அவனை காண விடாது இருந்து விட்டாள் வேணி.திருமணத்திற்கு பின் வரவேற்பென முடிவு செய்திருந்தமையால் முந்தைய நாள் மாப்பிள்ளை பெண்சேர்ந்து செய்வதுப் போல் ஏதும் நிகழ்ச்சி இல்லாததாலும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் இனியதாய் நடந்தேறியது.
காதல் கொண்ட இளாவின் மனமோ அவளின் குரலைக் கேட்டாலும் காண வேண்டுமென கூக்குரலிட்டது. இந்த இரண்டு நாள் பாராமுகமே அவன் மனதை மிகவும் சோர்வுறச் செய்தது.
ஆகையால் கல்யாண பூரிப்புமாய் அவளை காணப் போகிறோமென்ற ஆர்வமுமாய் அவள் வரவிற்காய் காத்துக் கொண்டிருந்தான் இளா.
ஐயர் பெண்ணை அழைத்து வரச் சொன்ன நிமிடம், வந்தாள் அவள்.
அவனின் பார்வை அவளின் மூக்குத்தியில்..அவளின் பார்வை அவனின் மீசையில்.
"உன்னை அப்படியே கடிச்சி திங்கனும் போல இருக்குடி. அம்புட்டு அழகா இருக்க அம்முகுட்டி" மையலாய் அவளின் காதில் மென்மையாய் அவன் கூற,
"ஹான் கடிச்சி திங்க நான் என்ன கேரட்டா ஆப்பிள்ளா?? போடா புடலங்காய்" என அவள் முகத்தை திருப்ப, வாய் விட்டு சிரித்தான் இளா.
இவர்களின் பேச்சில் கடுப்படைந்த ஐயர், "நான் இங்க என்ன பிரசங்கமா பண்ணிட்டு இருக்கேன். மந்திரத்தை கவனியுங்கோ" என காட்டமாய் கூறி அவர்களை கனவுலக்திலிருந்து திருமண நிகழ்வுக்கு கொண்டு வந்தாரவர்.
மங்கல இசை முழங்க மேள தாள நாதஸ்வர ஒலி இசைக்க, கையில் தாலியை எடுத்தவன் அவளின் கண்ணோடு கண் நோக்கி சம்மதமா என தலை அசைக்க இமைக்காது அவனை பார்த்துக் கொண்டிருந்தவளும் இசைந்தாள் அவனின் காதல் பார்வைக்கு. வேணியின் கழுத்தில் பொன் தாலி பூட்டினான் இளா.
அவளைச் சுற்றி தன் கையை கொண்டு வந்து அவளின் நெற்றியில் அவன் குங்குமம் வைக்க, அவன் ஸ்பரிசத்தின் விளைவால் சிறு அதிர்வு பெண்ணின் மனதில் சிறு நடுக்கம் அவளின் உடலில். அவளின் கன்னச் சிவப்பை கண்டவன் அவன் கைகளில் ஒட்டியிருந்த குங்குமத்தை சற்றாய் தேய்த்துவிட்டான் அவளின் கன்னத்திலும்.
"ம்ப்ச் என்ன விளையாட்டு இளா இது." என கன்னத்தை தேய்த்துக் கொண்டே அவனை அவள் முறைக்க,
"நீ வெட்கபடுறதை யாரும் கண்டுபிடிச்சிட கூடாதுல அம்ஸ்... அதான் உனக்கு ஹெல்ப் பண்ணேன்" என கண் சிமிட்டி அவன் கூற,
அய்யோ என தலையிலடித்துக் கொண்டாளவள்.
பின் மெட்டி அணிய குனிந்து அவளின் பாதத்தைப் பற்றிக் கொண்டு அவன் சிறு அடி எடுத்து வைக்க, நடக்க தடுமாறியவள் அவனின் தோளைப் பற்றிக்கொண்டு பின் பதறி கைகளை எடுக்க, நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன்,"இப்ப எதுக்கு பதறி கைய எடுத்த?? ஒழுக்கா தோளை பிடிச்சிட்டு விழாம வா" எனக் கூறி அவளின் கையை தன் தோளில் வைத்தான்.
அம்மியில் அவள் கால் வைத்து அவன் மெட்டி அணிவித்த சமயம், ஒலிர்ந்தது அப்பாட்டு வாணியின் கைபேசியில்,
உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்...
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்....
மாலை சூடி....
தோளில் ஆடி...
கைதொட்டு...
மெய்தொட்டு...
உன்னில் என்னைக் கரைப்பேன்....
அப்பாடலை கேட்ட நொடி சிலையென சமைந்தனர் இருவரும்.
மெட்டி அணிவித்து அவளருகே வந்தவன்,
"என் வாழ்நாள் முழுசுக்கும் உன்னை கண்ல வச்சி என் உசுரா பார்த்துப்பேன் அம்ஸ். ஐ லவ் யூ மை பொண்டாட்டி" என கண்ணில் காதல் மின்ன பூரிப்பாய் அவன் உரைத்த நொடி, சட்டென தன் தலையை உயர்த்தி அவன் முகம் அவள் பார்க்க அழகாய் சிரித்து கண் சிமிட்டினானவன்.
"அய்யோ இப்படி சிரிச்சே கொல்றானே" என்றெண்ணியவள், அவனின் இந்த நேரடி காதல் தாக்குதலில் என்ன கூறவென அறியாது தடுமாறினாள்.
இந்த நிமிடம் அவளிடம் காதல் கூற வேண்டுமென எந்த முடிவும் செய்துவிட்டிருக்கவில்லை அவன்.
அவளை பார்த்த நொடியிலிருந்து மனதில் பொங்கி வந்த காதலை அடக்கப் பெரும்பாடு பட்டவனை இப்பாடல் உசுப்பிவிட தன்னையும் மீறி உரைத்து விட்டான் தன்னவள் மீதான தன் காதலை.
ஆனால் இத்தனை நாள் பேசும்போது சொல்லாத காதலை இப்பொழுதேன் கூறனான்.திடீரென்று எப்படி அவனுக்கு காதல் வந்தது என அவன் கூறிய காதலை இவள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, இதற்குமேல் யோசிக்க விடாது திருமண வேலைகள் அவர்களை இழுத்துக் கொண்டது.
வாணி மற்றும் ஆஷிக் மட்டுமே இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தனர். வாணி தன் தாய் தந்தையுடன் குடும்பமாய் அவளின் திருமணத்திற்கு வந்திருந்தாள்.
மஹா மற்றும் மதிக்கு அடுத்து வரும் வாரம் திருமணம் என்பதால் அவர்களால் இத்திருமணத்தில் கலந்துக்கொள்ள இயலவில்லை.
ஆஷிக் மற்றும் வாணி தங்களது பிற பேட்ஜ் மக்களுடன் சேர்ந்து நன்றாய் கிண்டலடித்து கேக் வெட்ட செய்து அவர்கள் இருவரையும் ஊட்ட வைத்தென ஆரவாரமாய் கொண்டாடச் செய்தனர் அவர்களின் திருமணத்தை.
திருமணம் முடிந்து கோவிலில் சாமியை தரிசித்து விட்டு இளாவின் வீட்டிற்கு வேணியை அழைத்துச் சென்று விளக்கேத்த வைத்து ஓய்வெடுக்கச் செய்தனர்.
அன்றிரவு அவர்களினறையில், ஏதோ ஓர் அசௌகரிய உணர்வுடன் மனம் நிறைத்த பயத்துடன் கையை பிசைந்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் வேணி.
இளா பால்கனியில் நின்று தன் கைபேசியில் தன்னுடைய வேலை சம்பந்தமாய் தன் சகப்பணியாளரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
பேசி முடித்துவிட்டு உள் நுழைந்தவன், அவளின் முகத்தை நோக்கியவன், அவளருகில் அமர்ந்தான்.
அவளின் கையை தன் விரல்களுடன் கோர்த்துக் கொண்டு, "என்ன என் அம்முகுட்டி முகம் கோவக்காய் போல சிவந்து போயிருக்கு... கையெல்லாம் சில்லுனு இருக்கு... என்னை பார்த்து பயமா??" என்றவன் கேட்க,
அவனின் பயமா என்ற வார்த்தையில் கொதித்தெழுந்தவள்,"இவ்ளோ நேரம் இருந்த டென்ஷன் கூட தாங்கிப்பேன்டா. ஆனா உன்னை பார்த்து பயமானு கேட்ட பார்த்தியா... அத தான்டா என்னால தாங்கிக்கவே முடியலே" என அவனின் புஜத்தில் நாலு அடி இவள் போட,
அவளின் அடியை வாங்கிக் கொண்டு சிரித்தவன் அவளை அருகிழுத்து தோளில் கை போட்டு தன் கை வளைக்குள் கொண்டு வந்தானவன்.
"நிஜமா சொல்லு அம்ஸ்... என் அம்ஸ்ஸ பத்தி எனக்கு தெரியும்... உன் கண்ணுல தெரிஞ்ச அந்த பயம்.... உன் பாடி லேங்குவேஷ்ல தெரிஞ்ச அந்த அன்கம்ஃபர்ட்... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?? என்னை நீ நம்பலை. நான் உன் ஃபரண்ட்ங்கிறதை நீ மறந்துட்டனு தானே அம்ஸ்" என முகம் நிறைத்த வேதனையுடன் கவலையாய் அவன் உரைத்த நொடி,
அவனின் துக்கத்தை காணப்பொறுக்காது அவனின் வாயில் பட்டென்று ஒரு அடி வைத்தாள்.
"என்ன பேச்சு பேசுற நீ. அடி பின்னிடுவேன் ராஸ்கல்." என்றவள் கூற,
"அடிப்பாவி ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு புருஷனை அடிப்பேனு சொல்ற. அபச்சாரம் அபச்சாரம்" என அவன் தன் காதுகளை மூடிக் கொள்ள,
வாய்விட்டு சிரித்தவள், "பின்னே உன்னை நான் மறந்துட்டேனு சொன்னா கொஞ்சுவாங்களா??... இனி ஒரு தரம் இப்படி பேசுன நிஜமாவே உதை வாங்குவ. நீ எனக்கு முதல்ல ஃபரண்டுடா அதுக்கப்பறம் மத்ததெல்லாம். என் இளாக்கிட்ட எனக்கென்ன பயம்??.. அது பொண்ணுங்களுக்கு நேசுரலா வர்ற பயம். உன்னை பார்தது வந்த பயம் இல்ல. அது சொன்னாலும் உனக்கு புரியாது. இவர் பெரிய பூச்சாண்டி இவரை பார்த்து பயப்படுறாங்களாம்" என முகத்தை சுளித்துக் கொண்டாளவள்.
அவளின் முகச்சுளிப்பில் மின்னிய மூக்குத்தியை கண்டவன், அவளின முகமருகே சென்று "அம்முகுட்டி வித் யுவர் பர்மிஷன்" என்றவன்,
அழுந்த பதித்திருந்தான் தன் இதழை அவளின் மூக்குத்தியில்.
சிலீரென உடல் முழுதும் ஏதோ பரவ வேணியின் மூச்சு சீரற்று ஏறி இறங்க அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டிருந்தாளவள்.
கட்டிலின் மறுபுறம் விழுந்த நொடி தன் தவறை உணர்ந்தவன் அவளை இலகுவாக்கும் பொருட்டு, "ஒன்னுமில்லை அம்முகுட்டி ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட். இப்ப பயம் எல்லாம் காணாம போய்ருக்குமே" எனக் கூற,
"பயம் போச்சாஆஆஆஆ.... இப்ப தான்டா கை கால்லாம் உதறுது கோவக்காய்" என அவனின் தலையை பிடித்து உலுக்கவாரம்பித்தாள்.
"அடியேய் விடுடி வலிக்குது." என்றவன் கதற,
அவனின் மீசையில் அவளின் பார்வையை பதிக்க, அய்யய்யோ மீசைய இழுக்கப் போறா என அவன் மனம் கூக்குரலிட அவளை கீழே தள்ளி அவளின் இரு கைகளையும் தனக்குள் வைத்துக் கொண்டானவன்.
"விடுடா கோவக்காய். என் மூக்குத்தி மேலேயே கண்ணு உனக்கு." என்றவள் மூச்சிறைக்க கூற,
"உனக்கு மட்டுமென்ன... என் மீசை மேலேயே தான் கண்ணு... இந்த மீசைக்கு இன்சுரன்ஸ் போட்டு வச்சிருக்க மாதிரி என்னமோ நான் தான் பாத்தியப்பட்டவனு டயலாக் வேற" என்றவன் கூற,
"கைய விடுடா. வலிக்குது" என வலியில் அவள் முகத்தை சுருக்க, கையை விட்டவன் வலி போக தடவிக் கொடுத்தான்.
பின் அவளருகில் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தவன்,
"தாம்பத்தியம்ங்கிறது காதலால் கசிந்துருகி உன்னை தவிற வேறெவரும் இந்த உலகத்தில் தேவையேயில்லைங்கிற அந்த நூறு சதவீத அர்பணிப்புல இயல்பாய் நடக்கனும் அம்முகுட்டி. அந்த அளவுக்கு காதல் நம்ம இரண்டுபேர் மனசுலயும் வரனும்டா. நீ இல்லாம என்னால இருக்கவே முடியாதுனு தோணணும். அந்த உணர்வை தாங்கிக்க முடியாம உனக்கு நானும் எனக்கு நீயும் தஞ்சம்னு நம்ம ஃபீல் பண்ற அந்த தருணம் அப்ப ஆரம்பிக்கனும்டா நம்ம வாழ்க்கைய." என இளா தன் மனதிலுள்ளதை விவரித்துக் கூற,
"சோ ஸ்வீட் இளா. எவ்ளோ அழகா வாழ்க்கை காதல் தாம்பத்தியம்னு எல்லாத்தையும் சொல்லிட்ட. ஐம் புரவ்டு டு பீ யவர் வைப் இளா" என அவனருகே படுத்திருந்தவள் தன் முகத்தை திருப்பி அவன் முகத்தை பார்த்துக் கொண்டே உரைத்தப்படி அவனை நெருங்கி வந்தவள் அவனின் மீசையை இழுத்திருந்தாள்.
சத்தம் போடாது கண்மூடி இந்நொடியை அவளின் இந்த அருகாமையை ரசித்திருந்தான் அவன்.
அவன் அலறுவான் என்றிவள் எண்ண, அவனின் இச்செயலில் அவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாளவள்.
அவ்வாறு கண் மூடிய நிலையிலேயே, "நான் உனக்கு ப்ரபோஸ் பண்ணேன் இன்னிக்கு. அதுக்கு எதுவுமே சொல்லலையே அம்ஸ்" என முகத்தை திருப்பி அவள் விழி நோக்கி அவன் கேட்க,
அவளிடம் சிறு பதற்றம் தொற்றிக் கொள்ள, "ஹே ரிலாக்ஸ் அம்முகுட்டி. உன் மனசுல என்ன தோணுதோ அதை சொல்லு. ஏன் டென்ஷன் ஆகுற" என தன் தலையை ஒற்ற கையால் தாங்கி அவளை நோக்கி திரும்பிக் கொண்டு இவன் கூற,
"தெரியலை இளா. உன்னை லவ் பண்றேனானு தெரியலை. உன்னை ரசிக்குது மனசு. நீ பக்கத்துல வந்த மனசு குழையுது.நீ சங்கடப்பட்டா மனசு வலிக்குது. ஆனா இதெல்லாம் காதலானு தெரியலை. உன்னை எனக்கு ரொம்ப வருஷமா தெரியுமே. அதனால என்னால கண்டுபிடிக்க முடியலை. உன்னை ஃப்ரண்டாவே எனக்கு ரொம்ப பிடிக்குமே. அதனால இப்ப இருக்கற பிடித்தத்திற்கும் ஃப்ரண்டா இருந்தப்போ பிடிச்சதுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியலை. மே பி அந்த வித்தியாசத்தை நான் உணரும் போது அது காதல்னு தோணுமோ என்னமோ" என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு வேணிக் கூற,
அவள் விரல்களை தன் விரல்களோடு கோர்த்தவன், "போக போக தெரிய வரும் அம்ஸ். நீ உன் காதலை உணரும் போது என் கிட்ட சொன்னாபோதும். இப்ப நிம்மதியா தூங்கு" என்றுரைத்துவிட்டு விளக்கை அணைத்தானவன்.
திருமண களைப்பில் உடனே உறங்கிப் போயினர்.
இருவரும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ முடிவு செய்தனர்.
என்றுமே எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாழ முடியுமா??
எதிர்பார்ப்பு தானே மனச்சங்கடத்தை ஏற்படுத்தும்.
எதிர்பார்ப்பு இவர்களுக்குள் ஊடலை விளைவித்ததா?? ஊடலின் பயன் கூடலானதா???
அழகியே!! வாழ்வின் பயனடைந்ததாய் உணர்ந்தேன் உன்னை மணம்புரிகையிலே...
என்னவனே!! வாழ்வின் எல்லை வரை நீ என்னுடன் வேண்டுமென உணர்ந்தேன் உன் கைவளைக்குள்ளே...
காதலால் காதலை காதலித்து வாழ்வோம் காதலுடன்...
மறுநாள் காலை நான் எங்கிருக்கிறேன் என்ற நினைவில் தான் முழித்தாள் வேணி. அத்தனை சோர்வு அவள் உடலில்.
கண்களை கசக்கி கசக்கி திறக்க முடியாது திறந்துப் பார்க்க, இளா கண்ணாடியின் முன் நின்று தலை சீவிக் கொண்டிருக்க மெதுவாய் எழுந்தமர்ந்தவள், "என்னடா விடியகாலைலயே குளிச்சி ரெடியாயிட்ட?? இன்னிக்கு எங்கயாவது போறோமா" என அவள் கேட்க,
"என்னது விடியகாலைலயா?? மணி ஒன்பது ஆகுதுடி என் தூங்குமூஞ்சு பொண்டாட்டி" என இளா கூறவும்,
"அய்யோ எங்க அம்மா என்னை ஒரு வழி பண்ணிடுவாங்களே... கல்யாணம் முடிஞ்சும் பொறுப்பு வரலைனு ஏகத்துக்கும் திட்ட ஆரம்பிச்சிடுவாங்களே" என அடித்து பிடித்து அவள் எழ முற்பட,
அவள் கை பற்றி அமரச் செய்தவன், "அடியேய் என் அறிவாளி பொண்டாட்டி நீ இருக்கிறது நம்ம வீட்டில" என அவள் தலையில் தட்டியவன், ஆனாலும் இன்னிக்கு மதியம் உங்க வீட்டுக்கு மறு வீட்டு க்கு அழைச்சிட்டுப் போக காலைலயே வந்துட்டாங்க உன் மொத்த குடும்பமும்.
"டேய் உங்க வீடுனாலும் என்னைய என்னடா நினைப்பாங்க??" என்றவள் குளிக்கச் செல்ல ஆயத்தமாக,
"என் வீடில்ல நம்ம வீடுனு சொல்லி பழகு" என்றான் இளா. "நீயும் எங்க வீட்டு ஆளுங்கனு சொல்லாம நம்ம வீட்டு ஆளுங்கனு சொல்லி பழகு. நான் மட்டும் உங்க வீடு என் வீடுனு சொல்லனும். நீ சொல்லமாட்டியா??" என வேணி அவன் முன் கைகளை ஆட்டி ஆட்டி பேச,
குட்டீஸ் மாதிரியே பண்றடா அம்முகுட்டி என மனதில் அவளைக் கொஞ்சிக் கொண்டவன்,
அவளின் இரு கைகளையும் பிடித்து,"எல்லாரும் நம்ம ஆளுங்க தான். இரண்டுமே நம்ம வீடு தான். போதுமா... போய் குளிச்சிட்டு வா" எனக் கூறி அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அவனை தள்ளிவிட்டவள், "போடா... காலைலயே ஷாக் அடிக்க வைக்கிற நீ" என புலம்பியவாறே அவள் குளியளறையின் கதவை திறந்து உள் செல்ல, அக்கதவை தள்ளி பிடித்து நிறுத்தியவன், "ஆமா அதென்ன ஷாக் அடிக்க வைக்கிறது??" என தன் சந்தேகத்தை கேட்க, "ம்ச் இப்ப இது ரொம்ப முக்கியம்?" என அவனை தள்ளிக்கொண்டே அவள் கேட்க,
"இப்ப இது தான் முக்கியம்" என அவளை தள்ளிக்கொண்டு அவன் கதவை திறந்து நிற்க, இவன் சொல்லாமல் விடமாட்டான் என்பதை அறிந்தவள், தரையை பார்த்துக் கொண்டே உள்ளே போன குரலுடன் மெலிதாய்,"நீ என்னை கிஸ் செய்றப்போலாம் ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கு. அதான் சொன்னேன்" என தலை கவிழ்ந்தவாறே அவள் கூற,
"எப்படி?? இப்படியா ஷாக்கடிச்சிது??" என்றுரைத்துக் கொண்டே மீண்டும் அவளின் நெற்றியில் அவசரமாய் அவன் முத்தமிட,
அவள் அவனை அடிக்க கை ஓங்க சடாரென கதவை சாத்தியவன், "சீக்கிரம் குளிசீசிட்டு வா அம்ஸ். நீ இல்லாம நான் கீழே போக முடியாது. இரண்டு பேரும் சேர்ந்து தான் போகனும்" எனக் கூறிக் கொண்டே கட்டிலில் அமர்ந்துக் கொண்டான்.
இருவரும் கிளம்பிச் சென்று காலை உணவை உண்டதும் வேணியின் வீட்டிற்கு மதிய உணவிற்காய் செல்ல, எத்தனையோ முறை நண்பனாய் அவளின் வீட்டிற்கு சென்றவன் ஆயினும் மாப்பிள்ளையாய் அவ்வீட்டிற்கு செல்வது சங்கடமாய் உணர்ந்தானவன். அவனின் அசௌகரியத்தை கண்டவள் தனது அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள். "என்னடா ஆச்சு?? இங்க வர பிடிக்கலையா?? ஏன் ஒரு மாதிரி இருக்கே??" என அவன் முகம் பார்த்து அவள் கேட்க,
"சரி நீ இங்கயே ரெஸ்ட் எடு. வெளில ஒன்னும் வர வேண்டாம். சாப்பாடு ரெடியானதும் நான் வந்து எழுப்புறேன்" எனக் கூறி கட்டிலை அவள் தயார் செய்ய,
அவளின் இக்கனிவில், தன் முகம் வைத்தே தன் நிலையை உணரும் அவளின் இப்பாசத்தில் மனம் நெகிழ்ந்தவன், "உனக்கு என்னை பிடிக்குமா அம்ஸ்??" எனக் கேட்டான்.
"என்னடா லூசு மாதிரி கேட்கிற?? பிடிக்காம தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டேனா??" என்றவள் கேட்க,
"ம்ச் எனக்கு நேரடியா பதில் தெரியனும்" என இளா கேட்க, அவனருகில் சென்று அவன் மீசையை மென்மையாய் வருடியவள், "உன்னைய விட உன் மீசைய ரொம்ப பிடிக்கும்டா" எனக் கூறி அவ்விடத்தை விட்டு ஓடினாள்.
"ஹ்ம்ம் என்னய விட நீ ரொம்ப கொடுத்து வச்சவன்டா" என தன் மீசையை தடவிக் கொண்டானவன்.
மதிய கறி விருந்து தயாரானப் பின் இளாவை வந்து எழுப்பிவிட்டு ஃப்ரஷ் அப் ஆகி வரச் சொல்லி விட்டு உணவறையில் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் வேணி.
"மாப்பிள்ளை இன்னும் என்னமா பண்ணிட்டு இருக்காங்க?? சாப்பாடு ஆறுது பாரு... சீக்கிரம் வரச்சொல்லுமா" என வேணியின் அம்மா கூற,
பழக்க தோஷத்தில் இருந்த இடத்திலிருந்தே, " இளா என்னடா பண்ற?? சீக்கிரம் வா... சாப்பாடு ஆறுது பாரு" என்றிவள் கூறிய நொடி, மண்டையில் நங்கென்று குட்டு வைத்திருந்தார் அவளின் அன்னை.
அந்நேரம் சரியாய் அங்கு வந்த இளா, "அய்யோ எதுக்கு அத்தை அவளை அடிச்சீங்க" எனக் கூறிக் கொண்டே அவளின் தலையை தடவினான்.
"பாருங்க தம்பி. இன்னும் உங்களை வாடா போடானு பேசிட்டு இருக்கா... புருஷன்கிற மரியாதை இல்லை" என அவள் அன்னை அவளை முறைத்துக் கொண்டே கூற,
வேணியும் அவளின் அன்னையை தான் முறைத்துக் கொண்டிருந்தாள் அப்போது. "விடுங்க அத்தை. நான் அவகிட்ட சொல்றேன்" எனக் கூறியவன் வேணியை தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
"இப்படி உன்னலாம் நான் மரியாதையா பேசனும்னு சொல்லிருந்தா நான் கல்யாணத்துக்கே ஒத்துட்டு இருக்க மாட்டேன்டா" என ஆத்திரமாய் அடிக்குரலில் இளாவிடம் அவள் உரைக்க,
"ஹா ஹா ஹா" என வாய் விட்டு சிரித்தவன்,"அப்படி என்னடி கஷ்டம் என்னை மரியாதையா பேசுறதுல" என அவன் கேட்க,
"என் கஷ்டம் எனக்கு தானே தெரியும்" என முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"சரி சரி இதெல்லாம் பத்தி யோசிக்காம ஒழுங்கா சாப்பிடு. உனக்கு பிடிச்ச நடக்கிறது பறக்கிறது எல்லாம் உங்கம்மா செஞ்சி வச்சிருக்காங்க. வயிறு நிறைய சாப்பிடு" என்றுக் கூறி சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.
அவர்கள் உண்டு முடித்து முகப்பறையில் அமர,அவர்களிடம் ஒரு கவரை நீட்டினார் வேணியின் அக்கா கணவர்.
"என்ன மாமா இது??" என கவரை பிரித்துக் கொண்டு வேணிக் கேட்க,
"உங்க கல்யாணத்துக்கு எங்களோட கிப்ட்" என்றாரவர். அக்கவரில் அடுத்த வாரம் அவர்கள் மூணாருக்கு செல்வதற்கான ஹனிமூன் டிக்கெட் இருந்தது.
ஹனிமூனுக்காஆஆஆஆ என வாயைப் பிளந்தாள் வேணி. அவளின் முக பாவனையைப் பார்த்து சிரித்த இளா, "எதுக்கு அக்கா இப்ப இதெல்லாம்??" என வேணியின் அக்காவிடம் கேட்க,
"வேலை வேலைனு நீங்க கண்டிப்பா எங்கயும் போக மாட்டீங்கனு தெரியும். அதான் இந்த ஏற்பாடு. சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு வாங்க" என்று கூற,
வேணி இளாவிடம் கண் ஜாடைக் காட்டி ஏதோக் கேட்க, "உங்க பொண்டாட்டி உங்க கிட்ட ஏதோ ஜாடையா கேட்குறாக. என்னனு பேசுங்க மாப்பிள்ளை சார்" என கிண்டலாய் கூறி அவ்விடத்தை விட்டு அகன்றனர் அவர்கள்.
அவர்கள் சென்றதும் இளாவை தன் அறைக்கு அழைத்துச் சென்றவள், "என்ன இளா செய்றது??" என குழப்பமாய் அவள் கேட்க,
"எதுக்கு உனக்கு இந்த குழப்பம். உனக்குதான் ஊர் சுத்தி பார்க்கிறது ரொம்ப பிடிக்குமே. அந்த மாதிரி போய்டு வருவோம்" என்றவன் கூறியதும் அவள் மனது சமன்பட சரியென ஒத்துக் கொண்டாளவள்.
இதே நேரம் அங்கே அலுவலகத்தில் இருந்த வாணி பெரிய எஸ்கலேஷனில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நின்றாள். -- ஐடியில் எஸ்கலேஷன் எனப்படுவது யாதெனில் தன்னாலோ அல்லது தன்னுடைய டீமின் வேலையாலோ க்ளைன்டிற்கு அல்லது ப்ராஜக்டிற்கு ஏதேனும் பிரச்சனை அல்லது சிக்கல் வரும்போது தவறு செய்தவறை எஸ்கலேட் செய்வான் அந்த க்ளைன்ட். அதாவது தவறு செய்தவரைப் பற்றி டீம் லீட் அல்லது மேனேஜரிடம் முறையீடு செய்வான். போட்டு கொடுப்பானு கூட சொல்லலாம். க்ளைன்ட்டின் எஸ்கலேஷனுக்கு ஏற்றார் போல் தவறு செய்தவருக்கு மீட்டிங் வைத்து நன்றாக வறுத்தெடுப்பார் அந்த மேனேஜர்.
அந்த தவறை சரி செய்து க்ளைண்ட்டை சமாதானம் செய்வதும் மேனேஜரின் பொறுப்பே. மீண்டும் இவ்வாறு நடவாதவாறு வேலை செய்ய சொல்வார் தன் டீம் மக்களிடம்.
அவ்வாறான ஒரு எஸ்கலேஷனில் மாட்டிக் கொண்டாள் வேணி. எனினும் இந்த ப்ராஜக்ட் புதிது என்பதால் இவளுக்கு ஆதரவாய் க்ளைண்டிடம் பேசி சமாதானம் செய்த அவளின் மேனேஜர். அவளை தனியாய் மீட்டிங்கிற்கு அழைத்து நன்றாக அறிவுரைக் கூறி திருத்தமாய் வேலைப் பார்க்குமாறு கூறி அனுப்பினார்.
ஆயினும் தன் மீது தவறு இருந்தமையால் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது வாணிக்கு.
புதிய டீம் என்பதால் எவருடனும் பரிச்சயமாகாத நிலையில், வேணியும் மஹாவும் தங்களின் திருமண விடுப்பில் இருக்கின்ற நிலையில், தன் கவலையை பகிர்ந்துக்கொள்ள ஆளின்றி துக்கம் தொண்டையை அடைக்க அலுவலகத்தில் அரை நாள் விடுபெடுத்து தன் பிஜிக்கு கிளம்பினாளவள்.
ஆம் வாணி பிஜிக்கு மாறியிருந்தாள். அவர்களிருந்த வீட்டில் வேணி மஹா இருவருக்கும் திருமணமான பின் இவள் தனியே இருக்க எதற்கு ஒரு வீடென எண்ணியவள், இளா வேணி திருமணத்திற்கு பின் இவ்வீட்டில் தங்கிக்கொள்ளட்டுமென முடிவெடுத்து இவள் பிஜி வந்துவிட்டாள். மஹா மதியும் ஒரு வீடு பார்த்து வைத்திருந்தனர் தாங்கள் தங்கிக் கொள்ளவென. அன்று காலை ஷிப்டிற்கு வேலை சென்றவள் மதியமே தன்னுடைய பிஜியை வந்தடைந்தவள் , தன்னை தானே தேற்றிக கொண்டு கட்டிலில் படுத்திருக்க வந்தது அழைப்பொலி அவளின் கைபேசியில்.
திரையில் ஆஷிக்கென பார்த்ததும் முகத்திலோர் மலர்ச்சி.
"ஹலோ ஆஷிக்" என அவள் அழைத்ததும்,
"என்ன கேபி, உடம்பு சரியில்லையா?? குரல் ஒரு மாதிரி இருக்கு" எனறவன் கேட்க,
"எப்படிடா எனக்கு மனசு கஷ்டமா இருக்கும்போதெல்லாம் கரெக்ட்டா போன் செய்ற" என ஆனந்த அதிர்ச்சியாய் வாணி வினவ,
"ஹோ அப்படியா!!! தெரியலையே. சரி உனக்கு ஏன் மனசு சரியில்ல??" என்றவன் கேட்க, அன்று அலுவலகத்தில் நிகழ்ந்ததைக் கூறினாளவள்.
"யாருமே இல்ல என் கஷ்டத்தை ஷேர் செஞ்சிக்கனு ஃபீலிங்க்ஸ்ல இருந்தேன்டா. கரக்ட்டா கால் பண்ணிட்ட. ஐம் சோ ஹேப்பி" என நெகிழ்ச்சியாய் அவளுரைக்க,
"அட நீ வேற... நான் உன்னைய ஒரு வேலை செய்ய சொல்லலாம்னு கால் பண்ணேன். அது எதார்த்தமா இப்படி அமைஞ்சு போச்சு" - ஆஷிக்
"அட போடா... எக்ஸைட்மெண்ட்னா என்னனு கேட்குற ஆளு நீ. எல்லாத்துக்கும் சைலண்ட்டா ஒரு லுக்கு இல்ல ஒரு வரில பதில் சொல்றது. உன்கிட்ட போய் பூரிச்சி பொங்கிட்டு இருக்கேன்ல என்னைய சொல்லனும்" என தலையிலடித்துக் கொண்டாள் வாணி.
"ஹா ஹா ஹா" என வாய்விட்டு சிரித்தவன், "சரி சொல்றதை கேளு. நீதான் ஃபோட்டோ கொலேஜ்(collage) நல்லா செய்வியே... எனக்கு ஒரு கொலேஜ் செஞ்சித்தா. அப்பா அம்மா 25th ஆனிவர்சரி வருது.இதை கிப்ட் பண்ணலாம்னு இருக்கேன்." என்றானவன்.
"ஹே சூப்பர்டா. சரி ஃபோட்டோஸ் அனுப்பு. நான் செஞ்சி அனுப்புறேன்" என்றாளவள்.
பின் சிறிது நேரம் அவனுடன் பேசி விட்டு அழைப்பை வைத்தவள் மனம் பாரமற்று இளகுவாய் தெரிய நிம்மதியாய் உறங்கிப்போனாளவள்.
மறுவாரம் மதி மஹாவின் வரவேற்பு நிகழ்ந்த இடமான சென்னையில்.
இரு வீட்டினரும் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, மேடையில் நின்றிருந்தனர் மஹாவும் மதியும். மெல்லிசை பாடல் கச்சேரியும் களைக்கட்டிக் கொண்டிருந்தது.
மதி ஷெர்வானி உடையில் குறுந்தாடியுடன் இருக்க மஹா பாவாடை சட்டை போன்ற சோலி மாடல் உடையில் அழகு தேவதையாய் அந்த அலங்கார மேடையில் நின்றிருந்தனர்.
இவர்களின் காலேஜ் நண்பர்கள் தோழிகள் குழாம் வந்திருக்க அனைவரும் இவர்களை கேக் வெட்ட செய்து ஊட்டி விட வைத்து கிண்டல் கேலியாய் பேசி இருவரையும் வெட்கப்பட வைத்தென கலவரப்படுத்தியிருந்தனர் அவ்விடத்தை.
ஆஷிக்கும் வாணியும் சென்னை என்பதால் வரவேற்பு நேரம் வந்து வாழ்த்துக் கூறிவிட்டு சென்றனர்.
இளா வேணி புதுமண தம்பதியானதால் இவ்வரவேற்பிற்கு வர இயலவில்லை.
வரவேற்பு முடியும் தருவாயில் நண்பர்கள் ஃபாஸ்ட் பீட் பாடல்களை டிஜேவில் போட வைத்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்க, மேடையிலிருந்த மணமக்களை கீழே வரவழைத்து அவர்களையும் ஆட்டம் போட உந்தினர். நண்பர்களின் ஆட்டத்திற்கு ஏற்றார்போல் இவர்களும் சற்றாய் குதியாட்டம் போட்டனர்.
பின் அனைவரும் உண்ணச் சென்றனர்.
மறுநாள் காலை திருமணமாகையால் மஹாவை மணமகள் அறைக்கு செல்ல சொல்லி அவளின்தாய் கூற, அவளிடன் சிறிது நேரம் பேசிவிட்டு அனுப்பி வைப்பதாய் கூறினான் மதி.
மண்டபத்திலிருந்த மாடிக்கு அவளை அழைத்து சென்றவன், அங்கிருந்த திண்டில் கைகளை வைத்துக் கொண்டு வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை இமைக்காது பார்த்தவள், "இந்த நிமிஷம் நீங்க என்ன நினைச்சீங்களோ அது கண்டிப்பா நடக்கும் மதிப்பா" என்றாள் அவனின் கைகளைப் பற்றிக்கொண்டு.
சட்டென அவளை நோக்கி திரும்பியவன் கலகலவென சிரித்தான்.
"நான் நினைச்சது நடக்கனும்னா அது உன் கைல தான் இருக்குது குட்டிம்மா" என்றவன் விஷமமாய் கூற,
அதையறியாத பெண்ணவளோ, "என்னால முடியும்னா கண்டிப்பா எதுனாலும் உனக்காக செய்வேன் மதி" எனப் படு தீவிரமாய் உரைத்தாளிவள். "அப்படியா?? அப்புறம் பேச்சு மாறமாட்டியே" என விஷம புன்னகையுடன் இவன் கேட்க, இல்லையென வேகமாய் மண்டை ஆட்டினாள் அவள்.
அவளின் கன்னங்களை இரு கைகளிலும் தாங்கியவன், "எனக்கு என் குட்டிம்மாக்கிட்ட இருந்து கிஸ் வேணுமே" என்றவன் கூறிய நொடி திராட்சை பழமென விரிந்தது அவளின் கண்கள்.
இந்த கண்ணுக்குள் தான் விழுந்து விட கூடாதா என தோன்றியது அவனுக்கு.
விரிந்த இமைகளை மென்மையாய் மூடிக்கொண்டாளவள்.
"ஓபன் யுவர் ஐஸ் மஹா. உன் ஐஸ் பேசுறத நான் பார்க்கனும்" என்ற நொடி அவள் விழி திறக்க, அழுத்தமாய் தன் இதழை பதித்திருந்தான் அவளின் கன்னத்தில்.
உடலெங்கும் பரவிய சிலீர் சுகத்தில் தன் கை கொண்டு தன் கன்னத்தை பற்றியிருந்த அவன் கைகளை பற்றிக் கொண்டாளவள்.
"இது போதும் இன்னிக்கு. மீதியெல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம்" என அவன் கண்ணடித்துக் கூற வெட்கத்தால் தலை கவிழ்ந்தாளவள்.
"வா பாக்கத்தானே போற" என்றவளை அழைத்துசென்று ஒரு ப்ளாட்டின் முன் நிறுத்தி சாவியைக் கொடுத்து கதவைத் திறக்கக் கூறினான்.
கேள்வியாய் புருவத்தை சுருக்கியவள் கதவை திறந்த நொடி தன் கைகளில் அள்ளியிருந்தான் அவளை.
"வெல்கம் மை டார்லிங் டு அவர் நியூ ஹோம்" எனக் கூறிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவன் அவளை இறக்கி விட்டான்.
வியப்பில் விழி விரிய அவ்வீட்டை சுற்றி சுற்றி பார்த்தவள் பால்கனியில் போய் நிற்க கதவை தாழ் போட்டு அவள் பின்னோடு போய் நின்றானிவன்.
பின்னிருந்து அவளை அணைத்தவன்,"இது நம்ம வீடு மஹா. கொஞ்சம் சேவிங்க்ஸ் கொஞ்சம் லோன் போட்டிருக்கேன்" என்றவன் உரைத்ததும்,
அதிர்ச்சியாய் அவனை நோக்கியவள் "எப்ப இதெல்லாம் நடந்துச்சு??... அதுக்கு தான் பெங்களூருல என் ப்ராஜக்ட்ல சென்னை டிரான்ஸ்பர் கேட்க சொன்னீங்களா??" என்று முன் திரும்பி அவன் முகம் நோக்கி வினவினாள் மஹா.
"இது நான் வேலைக்கு சேர்ந்தப்பிறகு ப்ளான் செஞ்சது. நம்ம ஆபிஸ்க்கு பக்கத்துல ஃப்ளாட் வாங்கினா உனக்கும் எனக்கும் ஈசியா இருக்குமேனு. அப்பறம் கிரகபிரவேஷம்லாம் நம்ம எங்கேஜ்மெண்ட் முன்னாடியே முடிஞ்சிட்டு. அப்பா அம்மாக்கு அங்க வேலை ரிட்டயர் ஆகுற வரை அந்த வீட்டுல இருப்பாங்க. அதுக்கப்புறம் நம்ம கூட வந்து தங்கிப்பாங்க. வீடு அம்மா பேருல தான் வாங்கினேன்டா குட்டிம்மா" என்றவன் கூறிய நொடி,
"எங்கேஜ்மெண்ட் முன்னாடியே கிரகபிரவேசம்னாஆஆஆஆ... வேலைக்கு சேர்ந்தப்பவே எனக்கும் சேர்த்து வீடு ப்ளானிங்க்ஆஆஆஆ" என அவள் வாயை பிளக்க,
கலகலவென சிரித்தவன்,"அப்ப எப்ப நான் உன்னை லவ் பண்ணேனு யோசிக்கிறியா??" என்றவன் கேட்க,
ஆமென அவள் தலையை ஆட்ட,
"அதை இங்க வச்சி சொல்ல கூடாது. வா நம்ம ரூமுக்கு போவோம்" என்றவளை அவர்களின் அறைக்கு அழைத்து சென்றான்.
அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் தன் காதல் கதையை மிகத் தீவிரமாய் அவன் சொல்லிக் கொண்டிருக்க, "அப்ப நீங்க நேத்துக் கொடுத்த கிஸ் ஃபர்ஸ்ட் கிஸ் இல்லயா??? அச்சோ அது தான் ஃபர்ஸ்ட் கிஸ்னு நான் என் டைரில எழுதி வச்சிருக்கேன். அதெப்படி நான் அன்கான்ஸியஸ்ல இருக்கும்போது கிஸ் செய்யலாம். இப்ப பாருங்க டைரில தப்பா எழுதிருக்கேன்" என அவனிடம் அவள் சண்டைக்குப் போக,
"ஏன்டி ஒருத்தன் இரண்டு வருஷமா மாஞ்சி மாஞ்சி லவ் பண்ண கதைய சொன்னா உனக்கு ஃபர்ஸ்ட் கிஸ் டைரில தப்பா எழுதிட்டேன்றது தான் முக்கியமா போச்சு" என்று அவளை முறைத்தான்.
"ஹி ஹி ஹி" என அசடு வழிந்தவள்,
"உங்க லவ் டூ இயர்ஸ்னா. என் லவ் ஒன் இயர்யாக்கும்" என இல்லாத சட்டை காலரை தூக்கிவிட்டு அவள் கூற, "ஆமா ஆமா ஒன் இயர் லவ் பண்ணவ தான் இன்னும் என் கிட்ட ஐ லவ் யூ சொல்லாம இருக்க??" என தன் மன ஆதங்கத்தை அவன் கூற,
"ஃபீலிங்க்ஸ் தானே பொங்க வச்சிருவோம்." என்ற விஷமமாய் கூறியவன், பதித்திருந்தான் தன் முத்திரையை அவளிதழில். அழகிய இல்லறம் தொடங்கியது அங்கே. -- அதே நேரம் அங்கே மூணாரில் ஓர் அறையில் தங்கியிருந்தனர் இளாவும் வேணியும்.
வாணிக்கு ஜோடி யாருனு நீங்க இவ்ளோ ஆர்வமா எதிர்பார்ப்பீங்கனு நினைக்கலை மக்களே.
வாணி ஆஷிக் நட்பு மற்றும் வாணி வேணி மஹா நட்பு இதை தான் இந்த கதைக்கு அடிதளமா வச்சி ஆரம்பிச்சேன்.
என் கதையின் போக்கு படி வாணியின் ஜோடி க்ளைமேக்ஸ்ல தான் வருவாங்க. அண்ட் வாணியின் காதல் கதை தனிக் கதையா வரும் மக்களே. இந்த கதையோட அடுத்த பார்ட் 2னு கூட செல்லலாம். முழுக்க முழுக்க வாணியின் காதல் திருமணம் னு நிறைஞ்ச கதையா வரும் அது.
இப்ப இளா வேணி ஜோடியின் காதல் பத்தி தான் அடுத்தடுத்த அத்தியாயங்கள் வர இருக்குது. இன்னும் ஐந்து அத்தியாயத்துல கதை முடியப் போகுது மக்களே.
உங்களை ரொம்ப சோதிக்க விரும்பலை... அதனால் தினமும் ஒரு அத்தியாயம்னு போட்டு இந்த வாரத்தில் கதைக்கு எண்ட் கார்டு போட்டுடலாம்.
இதுவரை இந்த கதைக்கு ஆதரவு அளித்து ஊக்குவித்த அனைவருக்கும் எனது பேரன்பும் மரியாதையும் நன்றியும் உரித்தாக்குகிறேன்.
என் நண்பனே
என் நட்பானவனே
என் அன்பனே
என் கண்ணானவனே
எப்படி சொல்வேன்
என் உளக்களிப்பை??
உனை நினைக்கையில்
ஊற்றாய் பொங்கி வரும்
உவகையை
எப்படி சொல்வேன்
என்னவனே??
மாலை ஆறு மணியளவில் மூணாரிலுள்ள அந்த ஹோட்டல் அறையை அடைந்திருந்தனர் இளாவும் வேணியும்.
வந்ததும் கட்டிலில் படுத்துக் கொண்டாள் வேணி. களைப்பில் உறங்குகிறாள் என இவன் எண்ணியிருக்க, ஒரு மணி நேரம் கழித்து அவளிடம் சிறு அசைவு தென்பட அவளை எழுப்பலாமென அருகே சென்றவன் விழித்து சிவந்திருந்த அவளின் கண்களை தான் பார்த்தான்.
"என்னடா ஆச்சு அம்மு??" என இளா கேட்டதும் அவனை நிமிர்ந்து நோக்கியவள்,
காலை சுருங்க மடித்து வைத்து வயிறை இறுக்கி பிடித்துக் கொண்டு முகத்தில் வலியைத் தேக்கி, "வயிறு வலிக்கிது இளா" என்றாளவள்.
சட்டென மெத்தையிலமர்ந்து அவளை தன் மடியில் தாங்கியவன்,
"எதனாலடா வலிக்குது. மதியம் சாப்பிட்டது எதுவும் செட் ஆகலையா??" என்றவன் கேட்க,
அவனின் கரிசனத்தில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
அவன் மடியில் தலை சாய்த்து அவன் இடையை கட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்தாளவள்.
இது மாதந்தோறும் பெண்களுக்கு வரும் பிரச்சனையே. திருமண அலைக்கழிப்பில் மூன்று நாட்கள் முன்பே வந்திருக்க அதுவும் அறைக்கு வந்ததும் தான் உணர்ந்தாளவள்.
இதைப் பற்றி தன் வீட்டின் ஆண்களிடம் கூட பேசி வளர்ந்திடாத நிலையில் இவனிடம் கூற சங்கடமாயிருந்தது அவளுக்கு.
"ஒன்னுமில்லை இளா. இது எப்பவும் வர வலி தான் சரியாயிடும்" என்றவள் கூற,
"என்னது எப்பவும் வர வலியா?? ஹாஸ்பிட்டல் போய் பார்க்காம வச்சிருக்கீங்க... வா ஹாஸ்பிட்டல் போகலாம்" என்றவன் அவளை கிளப்ப,
தன் துணியில் ஈரத்தை உணர்ந்தவள் சட்டென அவன் மடியிலிருந்து எழுந்து பாத்ரூம் செல்ல, "என்னடா ஆச்சு?? வாமிட் வருதா??" என அவள் பின்னோடேயே அவன் செல்ல, குளியலறைக் கதவை அடித்து சாத்தியிருந்தாள்.
மெத்தையில் அமர்ந்தவன் இதுவரை அவள் உடல் நலத்தில் குறைப்பாடு ஏதும் தாம் கண்டதில்லையே. எவ்வாறு இந்த வயிறு வலி அதுவும் வெகுநாளாய் இருப்பதாய் கூறுகிறாளே என தன் மூளையை குடைந்தவனுக்கு பதிலேதும் கிடைக்காமல் போக, அழைத்திருந்தான் வாணியை. அவள் நைட் ஷிப்டில் அலுவலகத்தில் இருந்தாள்.
இவன் கூறியதை கேட்டு முதலில் குழம்பிய வாணி பின் தெளிந்து எதனால் இவ்வயிற்று வலியென விளக்கமாய் கூறி தெளிய வைத்தாள் அவனை.
"அய்யோ அண்ணா. இதுக்கா இந்த அலப்பறை. அது அவளுக்கு மாசா மாசம் முதல் நாள் இப்படி தான் வலிக்கும். நீங்க நான் சொன்னா மாதிரி செய்யுங்க. சரியாயிடும்" என்றுரைத்து விட்டு போனை வைத்திருந்தாளவள்.
வாணியின் வீட்டில் ஆண்களிடம் இதைப் பற்றி சகஜமாய் பேசிக் கொள்வார்கள். அத்தகைய நேரத்தில் ஆண்கள் பெண்களுக்கு உதவிப் புரிவார்கள் அவளின் இல்லத்தில். ஆகையால் இயல்பாய் பேச முடிந்தது இளாவிடத்தில்.
அவள் வந்ததும், "ஏன் அம்ஸ். என்னை உன் மனசுல இருந்து அவ்ளோ தள்ளி தான் வச்சிருக்கியா??" என இளா கேட்க,
அவன் கூறியது விளங்காது விழித்தவள்,"ஏற்கனவே வலில இருக்கேன். நீயும் ஏன்டா புரியாத மாதிரி பேசி படுத்துற" என்றவள் கேட்க,
அவளின் வலியை சரி செய்வதே இப்பொழுது பிரதானமாய் தோன்ற அப்பேச்சை நிறுத்தினானவன்.
மீண்டும் அவனின் கேள்வியை தனக்குள்ளே அசைப்போட்டவள், இளா எனப் பதறி எழுந்தாள்.
வயிறு வலியை விட அவன் கேள்வியின் வலி மனதை வதைத்தது அவளுக்கு.
"என்னாச்சு அம்மு?? ரொம்ப வயிறு வலிக்குதா?? கொஞ்சம் பொறுத்துக்கோ. நான் ரூம் சர்வீஸ் பையன் கிட்ட ஓம தண்ணீர், வெந்தயம் லாம் கொண்டு வர சொல்லிருக்கேன். கொஞ்சம் வெதுவெதுனு குடிச்சா வலி குறையும்னு வாணி சொன்னா" இளா உரைக்க,
"ஹோ வாணி எல்லாத்தயும் சொல்லிட்டாளா?? அதான் என் கிட்ட அப்படி கேட்டானா??" என மனதில் எண்ணிக் கொண்டவள்,
"உன் கிட்ட சொல்ல கூடாதுனு இல்ல இளா. எங்க வீட்ல இதை பத்தி வெளிபடையா பேசி பழக்கமில்லடா. அதுவும் ஜென்ட்ஸ் கிட்ட இதை பத்தி பேசி சுத்தமா பழக்கமில்லடா." என்றவள் கூறியதும்,
தான் பேசியதை எண்ணி நொந்துக் கொண்டவன், "சாரி அம்ஸ். கோவத்துல பேசிட்டேன். இது எவ்ளோ புனிதமான விஷயம் தெரியுமா. ஒரு உயிர் உருவாக நிகழ்கின்ற இந்த மாற்றத்துல பெண்களை தூக்கி வச்சி கொண்டாடுலனாலும் அவங்களுக்கு அனுசரணையா இருக்கனும்டா இந்த நேரத்துல. எங்கம்மா இதை எனக்கு சொல்லி கொடுத்தாங்க அம்ஸ். எனக்கு டீன்ஏஜ் வந்ததும் இந்த நேரத்துல உடல்ல நடக்க கூடிய மாற்றங்கள், அப்ப பொண்ணுங்ககிட்ட எப்படி நடந்துக்கிடனும். எவ்ளோ அனுசரணையா பாத்துக்கனும்னு அம்மா தான் சொல்லி கொடுத்தாங்க" என்றவனுரைக்க,
வேணியின் மனதில் சொல்லொண்ணா நிம்மதி படர்ந்தது. இது எப்பொழுதுமே அவள் மனதை அழுத்தும் விஷயம். ஆனால் அவளின் தந்தையிடம் இதை பற்றி பேசும் தைரியம் இல்லாத காரணத்தால், தன்னை கட்டிக்கொள்பவனிடமாவது இதை பற்றி இவ்வலியைப் பற்றி மனம் விட்டு பேச வேண்டும் என்றெண்ணிக் கொள்வாள்.
அவ்வாறாக இளா இருப்பதில் பூரித்தது அவளின் மனம். அதன் காரணம் சிந்தியது துளி நீர்.
அவளின் கண்ணீரை கண்டவன்,"என்னடா ரொம்ப வலிக்குதா??" என்று தன் தோளில் சாய்த்துக் கொண்டான் அவளை.
ரூம் சரிவீஸ் பையன் கதவை தட்ட, அவனளித்த நீரை பருக வைத்தான் வேணியை.
சற்று மட்டுப்பட்டிருந்தது அவளின் வலி.
இரவுணவு அறைக்கே வரவழைத்து அவளை உண்ண வைத்தானவன்.
அவள் மெத்தையில் படுத்ததும் அவளருகில் வந்தவன், அவள் தலையை தூக்கி தன் மடியில் வைக்க "இல்ல இளா, இப்படி வயித்த கொஞ்சம் இறுகி பிடிச்சிட்டு படுத்தா வலி தெரியாது. நான் அப்படியே அந்த பொசிஷன்லயே தூங்கிடுவேன் இந்த மாதிரி நேரத்துல" என்றுரைத்து தலையனையில் தலை வைத்து முழங்கால் வயிற்றுக்கு வருவது போல் இறுக்கி அவள் படுக்க, அவளருகில் நெருங்கி அவள் முகத்தை தன் நெஞ்சில் புதைத்து தன்னுடன் அவளை இறுக்கிக் கொண்டானவன். குழந்தையின் வலியைப் போக்கும் தந்தையின் செயலே தெரிந்தது அவனின் இவ்வணைப்பில்.
தன் முகத்தை நிமிர்த்தி அவனின் முகம் இவள் பார்க்க, அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,"தூங்குடா அம்முகுட்டி" என்றவள் தலையை வருடினான்.
அவனின் அந்த வருடல் தந்த இதத்தில் சுகமாய் உறங்கிப்போனாளவள்.
மறுநாள் காலை கண் விழிக்கையில் அவள் கண்டது குழந்தைப்போல் உறங்கிக் கொண்டிருந்த அவளவனின் முகத்தை தான். இன்னும் அவனின் அணைப்பிலேயே இருந்தாள். அவளின் வயிறு வலி இருந்த இடம் காணாமல் போயிருந்தது.
நேற்றைய நிகழ்வுகளை மனதில் அசைப்போட்டவளின் மனம் அவளவனின்பால் பாகாய் உருகி கரைந்தது.
தன் தந்தை தாயை இத்தகைய நேரத்திலும் தனியறையில் படுக்க செய்து பார்த்திருந்து வளர்ந்தவளவள்.
ஆகையால் அவனின் இச்செயல் அவளின் மனதில் அவனை காதலனாய் தன்னவனாய் தன் கணவனாய் மனச்சிம்மாசனத்தில் இருத்தியது.
அது ஏற்படுத்திய பூரிப்பில் மனம் சிலிர்க்க, "என் அழகு புருஷன்டா நீ" என மனதில் கொஞ்சிக் கொண்டவள், அவள் முகம் புதைத்திருந்த அவன் நெஞ்சிலேயே கொடுத்திருந்தாள் தன் முதல் முத்தத்தை.
இவை ஏதும் அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் இளா.
பின் சிறிது நேரம் கழித்து ரிஃப்ரெஷ் ஆகிவந்தவள், ரூம் சர்வீசிடம் டீ ஆர்டர் செய்துவிட்டு அவனை எழுப்பினாள்.
"டேய் இளா!! எழுந்திரிடா"
"ம்ப்ச் போ அம்ஸ். சீக்கிரம் எழுந்திரிச்சி என்ன பண்ண போறோம்" என்றுரைத்து மீண்டும் அவன் உறக்கத்திற்கு செல்ல,
அவனை சீண்ட எண்ணியவள், கையில் சிறிது நீர் எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள்.
பதறியடித்து எழுந்தவன்,
"அறிவிருக்காடி உனக்கு" எனக் கத்தியவன்,
"மனுஷன தூங்கவிடாம செய்ற நீ. உன்னை என்ன பண்றேன் பாரு" என்றுரைத்து ஒரு பாட்டில் நீரை எடுத்தவன் அவள் மீது ஊற்றப் போக,
"வேண்டாம் இளா..." என கட்டிலை சுற்றியபடி ஓடினாளவள். இவனும் அவளை பின் தொடர்ந்து ஓடியவன் ஒரு கட்டத்தில் அவளை பிடித்து சுவற்றோடு சாய்த்து அவளின் இரு கைகளையும் தன் ஒரு கைக்குள் வைத்துக் கொண்டு மறுகையிலிருந்த பாட்டிலை அவள் மீது ஊற்றப் போக,
"இளா இளாஆஆஆ... என் செல்ல புருஷன்ல. என் அழகு புருஷன்ல. என் செல்லம்டா நீ. என் பட்டுடா நீ. உன் அம்முகுட்டி பாவம்ல" என முகத்தை சுருக்கிக் கொண்டு கெஞ்சலாய் வேணி பேச, அவளின் புருஷன் என்ற விளிப்பில் மெய் மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், அம்முகுட்டி பாவம் என்ற வார்த்தையில் சிரித்து,"சரி அப்ப என் மேல தண்ணீர் ஊத்தினதுக்கு நான் சொல்றதை நீ செஞ்சீனா நான் விட்டுறேன்" என ஒப்பந்தம் போட்டான் அவளிடம்.
"என்ன சொல்லு?? செஞ்சிடலாம்" என அசால்டாய் அவள் உரைக்க,
"உன் அழகு புருஷனுக்கு கன்னத்துல ஒரு உம்மா குடுப்பியாம்" என கண் சிமிட்டி உரைத்தானவன்,
"ஹான்ன்ன்அஅஅஅ... அதெல்லாம் முடியாது" என அவன் கைகளிலிருந்து தன் கைகளை அவள் உறுவ முயல, சரியாய் அந்நேரம் கதை தட்டி டீ என ரூம் சர்வீஸ் பாய் கூற,
தன் கையிலிருந்த பாட்டில் நீரை அவள் தலையில் ஊற்றியிருந்தான் இளா.
ஊற்றிய மறுநொடி "கம் இன்" என கூற, அந்த பையனின் முன் ஏதும் கூற முடியாது அமைதியாய் நின்றவள்,
அவன் சென்ற மறுநொடி இளாவை நீரால் நனைத்திருந்தாள்.
மீண்டும் இளா அவளை முறைக்க,
"இளா போதும் விளையாட்டு. நீ செஞ்சதுக்கு நான் செஞ்சது சரியா போச்சு. இதோட நிறுத்திப்போம். வா டீ குடிப்போம்" என்றுரைத்து கப்பில் இருவருக்குமாக அவள் டீ ஊற்ற,
துண்டை எடுத்து வந்து அவள் தலையை துடைத்துவிட்டானவன்.
"ஏற்கனவே வயிறு வலி. இதுல இன்னும் ஈரத்துல இருந்தா ஏதாவது ஆகிடப்போகுதுடா. தலையை நல்லா துடைச்சிக்கோ" என்று துண்டை அவளிடம் நீட்டி, டீ கப்பை கையில் எடுத்தவன், "இன்னிக்கு எங்கயும் போக வேண்டாம். நீ நல்லா ரெஸ்ட் எடு. அது போதும்" என்று கூறி விட்டு குளிக்க சென்றுவிட்டான்.
அன்றைய நாள் அறையிலேயே கழிய மறுநாள் மதியம் வெளியே சுற்றிப் பார்க்க சென்று இரவு வந்தனர்.
---
மதி மஹா மற்றும் இளா வேணி அனைவரும் திருமண விடுப்பு முடிந்து தங்களது பெங்களுர் அலுவலகத்தில் வேலைக்கு வந்திருந்தனர்.
நால்வரும் அலுவலகத்தில் அனைவரும் அளித்த பெரும் கல்யாண வாழ்த்துடன் கூடிய உபசரிப்பில் மகிழ்ச்சியுடன் உலா வந்தனர்.
வேணியும் இளாவும் ஒரே அலுவலகமாகையால் அனைவரும் கிண்டல் கேலியில் அவர்களை அசடு வழியச் செய்தனர்.
வேணி இளா தங்கியிருந்த வீட்டில் முதல் ஒரு வாரம் இவர்களுடன் அவனின் குடும்பத்தினர் தங்கியிருந்து அனைத்தையும் சீரமைத்துக் கொடுத்துவிட்டுக் கிளம்பினர்.
மதியும் மஹாவும் அவர்கள் பார்த்திருந்த வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.
வரும் ஜனவரி மாதத்தில் ஆஷிக் ரஹானா திருமணம் என முடிவு செய்திருந்தனர் அவர்கள் வீட்டு பெரியோர்கள்.
வேணிக்கு ஓரளவே சமைக்கத் தெரியும். மஹாவும் வாணியும் நன்றாக சமைப்பார்கள். அதனால் வேணி காய் நறுக்கி தருவது போன்ற இன்ன பிற வேலையுடன் நிறுத்திக் கொள்வாள். ஆக வேணியின் சமையல் டெஸ்டிற்கு எலியாகி இருந்தது இளா தான்.
வேணி சுழற்சி முறை ஷிப்டில் தான் திருமணத்திற்கு பின்னும் வேலை செய்துக் கொண்டிருந்தாள்.
அவள் செகண்ட் ஷிப்டில் நெடுநேரம் கழித்து வீடு வரும் வேளையில் அவனே இரவுணவு சமைத்துவிடுவான்.
காலை அவள் நேரமாய் கிளம்பும் வேளைகளில் இருவரும் ஆபிஸில் மதிய உணவு உண்டுக் கொள்வர்.
எனவே இருவரும் முடிந்தவரை தங்களின் வேலைக்கேற்றார் போல் வீட்டு வேலையை பகிர்ந்துச் செய்தனர்.
வேணி வாணி இருவரும் ஒரே ப்ராஜக்ட் என்பதால் வேணிக்காக இரண்டு மாதம் வேணியின் இரவு ஷிப்ட்டையும் தானே பார்த்துக் கொள்வதாய் உரைத்துவிட்டாள் வாணி.
ஆக வாணி மாதத்திற்கு இரு வாரம் இரவு ஷிப்ட் பார்க்க வேண்டியதாயிற்று. அதனால் தான் அடைய போகும் உபாதைகளை அப்பொழுதறியவில்லை வாணி.
---
வாணியை கைபேசியில் அழைத்திருந்தனர் வேணியும் மஹாவும். இரவு ஷிப்ட் முடித்து வந்திருந்தவள் நன்றாக உறங்கி மாலை எழுந்து பார்க்க இவர்களின் மிஸ்ட் கால் இருந்தது அவளின் கைபேசியில்.
அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர் இருவரும். குறுஞ்செய்தியின் சுருக்கம் இதுவே. தங்களின் வீட்டிற்கு வாரயிறுதி நாளில் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர் வாணிக்கு இருவரும்.
இருவரையும் கான்ஃபரன்ஸ் காலில் அழைத்தவள்,"என்னடி சாப்பாடு போட்டு என்னை கொல்ல பார்க்குறீங்களா??" என்றவள் கேட்ட நொடி பொங்கி எழுந்த வேணி,
"அடியேய் ஃப்ரண்ட் தனியா இருக்காளே... அவளை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைப்போம். வீக்கெண்ட் நம்ம கூட ஸ்பெண்ட் பண்ண மாதிரி இருக்கும் அவளுக்குனு ஆசை ஆசையா கூப்பிட்டா என்ன பேச்சு பேசுற நீ" என சீறினாள் வேணி.
"நான் மஹா பொங்கி போட்டதைக் கூட சாப்பிட்டுடுவேன்டி. உன் சமையலை சாப்பிடனும்னு நினைச்சாலே வயிறு என்னமோ பண்ணுதுடி" என்று வராத கண்ணீரைத் துடைத்தபடி அவள் கூற,
"உன்னலாம் சாப்பிட கூப்டேன் பார். என்னை சொல்லனும்" என பல்லைக் கடித்துக் கொண்டே கூறிய வேணி தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
கலகலவென சிரித்தனர் வாணியும் மஹாவும்.
"போதும் நிறுத்துங்கடி உங்க சண்டைய. சரி இப்ப அட் எ டைம் இரண்டு பேர் வீட்டுக்கும் நீ வர முடியாதனால ஒன்னு பண்ணலாம். வர்ற சனிக்கிழமை நம்ம எல்லாரும் சேர்ந்து ஒன்னா ஒரு ஹோட்டல் போகலாம் லஞ்சுக்கு. நான் மதிக்கு ஏதும் ப்ளான் இருக்கானு பேசி கண்ஃபர்ம் பண்றேன். நீயும் இளா அண்ணா கிட்ட பேசிட்டு சொல்லு அம்மு" என்று அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தாள் மஹா.
பின் மூவரும் கிண்டல் கேலியாய் அரட்டை அடித்து அரை மணி நேரம் பேசிய பின்பே ஃபோனை வைத்தனர்.
அந்த சனிக்கிழமை மதியம் ஹோட்டல் எம்பயரில்(Empire) அமர்ந்திருந்தனர் இளா வேணி, மஹா மதி மற்றும் வாணி. ஆஷிக் ஊருக்கு சென்றிருந்ததால் இவர்களுடன் கலந்துக் கொள்ளவில்லை.
உணவை ஆர்டர் செய்திருந்தவர்கள் அவை வரும் வரை அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
"எங்களுக்கு சென்னை டிரான்ஸ்பர் கிடைச்சிடுச்சுடி" என்று ஆனந்தமாய் கூறினாள் மஹா.
"வாவ் செம்ம சூப்பர்டி. கங்கிராட்ஸ் மதி அண்ணா" என்று வாழ்த்துரைத்தாள் வாணி.
இளா வேணியுமே வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
"அங்க எங்க ஸ்டேயிங் மதி அண்ணா. உங்க வீடு ஆபிஸ்க்கு ரொம்ப தூரம்ல" என்று வாணி கேட்க,
"ஆமா வாணி. அதான் ஆபிஸ் பக்கத்துலேயே ஒரு ப்ளாட் வாங்கி வச்சிட்டேன்" என்று மதி கூறியதும்,
"சொல்லவேயில்லை மஹா" என அவளை பிடித்துக் கொண்டனர் வாணியும் வேணியும்.
"அது நான் மஹா லவ் பண்ணும் போதே ப்ளான் செஞ்சி வாங்கினது. மஹாக்கு இதை பத்தி எதுவும் தெரியாது" என்றுரைத்தான் மதி.
"ஹோ" என வாணியும் வேணியும் அமைதியாக, வேணியின் முகமாறுதலை கண்டுகொண்டான் இளா.
"லோன்ல தான்டி வாங்கிருக்காங்க. நாங்க இரண்டு பேரும் சேர்ந்து வேலை செஞ்சி அடைப்போம். எல்லாரும் சென்னை வரும் போது கண்டிப்பா வீட்டுக்கு வரனும்" என்றாள் மஹா.
"அது சரி. நீ எப்ப மதி அண்ணா இவ்ளோ மரியாதையா வாங்க போங்கனு பேச ஆரம்பிச்ச??" என்று புருவத்தை உயர்த்தி வாணிக் கேட்க,
"அது மேரேஜ் ஆனதும் தானா வந்துடுச்சு." என மஹா கூற, நம்பாத பாவனை பார்த்த வாணி,
"அண்ணா எங்க கிட்ட மட்டும் ஆக்டிங் கொடுக்கிறாளா உங்களுக்கு மரியாதை தரமாதிரி" என நேரடியாய் மதியிடம் அவள் கேட்க,
வாய் விட்டு சிரித்தவன்,"அதை உன் ஃப்ரண்டையே கேளுமா" என்றான் மதி.
"அய்யோ அவ உண்மைய சொல்ல மாட்டானு தானே உங்களைக் கேட்கிறேன்".
"அதுசரி எந்த பொண்ணுங்க கல்யாணதுக்கு அப்புறம் கணவனை விட்டுக் கொடுத்து பேசியிருக்காங்க. அவங்களுக்கு பஞ்சாயத்து பண்றவங்களைல கிறுக்காக்கி விட்டுறுவாங்க" என வாணி கண்ணை உருட்டி பேச, அனைவரும் கலகலவென சிரித்தனர்.
"நீ எப்ப மேரேஜ் செஞ்சிக்க போற வாணி" என்று இளா கேட்க,
"இப்போதைக்கு இல்லணா. இன்னும் இரண்டு வருஷம் போகட்டும்னு சொல்லி வச்சிருக்கேன்." என்றாள் வாணி.
உணவு வரவும் அனைவரும் உண்டுவிட்டு சிறிது நேரம் அளவளாவி விட்டு அவரவர் இல்லம் சென்றனர்.
அன்றிரவு இளா வேணி இல்லத்தில்,
இரவுணவு உண்டுவிட்டு கட்டில் மெத்தையில் அமர்ந்திருந்த வேணி தன் கைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க, உள் நுழைந்த இளா, "நைட் பெட்ரூம்குள்ள போன் வரக்கூடாது சொல்லியிருக்கேன்ல. ஹால்ல வச்சிட்டு வா அம்ஸ்" என்றானவன்.
அமைதியாய் போய் வைத்துவிட்டு வந்தவள் படுத்துக் கொண்டாள்.
இது இளாவின் ஐடியா. இரவு போன் முகப்பறையில் வைத்துவிட்டு அவர்கள் அறையில் இருவரும் அன்றைய நாள் முழுவதும் நடந்ததை பகிர்ந்துக் கொள்ள வேண்டும். சோகம் துக்கம் இன்பம் துன்பம் மகிழ்ச்சி எதுவாயினும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.அதை இருவரும் கடைபிடிக்க வேண்டும். இதனால் தங்களுக்குள் புரிதலும் அன்யோன்யமும் பெருகும் என நம்பினான் இளா.
அவளருகில் படுத்தவன்,"என்னாச்சு என் அம்முகுட்டிக்கு?? இந்நேரம் நான் சொன்னதுக்கு உன் பேச்சை நான் ஏன்டா கேட்கனும்னு சண்டைக்குல நின்னுருக்கனும் என் அம்ஸ்" என்று அவள் தாடைப் பற்றி தன் பக்கமாக அவள் முகத்தை திருப்ப, வேதனை நிறைந்திருந்தது அவளின் முகத்தில்.
உன் நினைவு மட்டுமே என்னுள் உலாவிட
நீ மட்டுமே வேண்டுமென
ஏங்குகிறது மனது...
நீ எனக்கு மட்டுமே
உரிமையானவனென
துடிக்கிறது இதயம்....
உன் காதலில் உழன்று
தவிக்கிறேன் நான்...
என்னை என்ன செய்தாயடா??
"என்னடா கவலை உனக்கு ?? சொன்னா தானே தெரியும்" என்றவன் கேட்க,
"நான் உனக்கு ஏத்தவ தானா இளா??" என வேணி மனதின் வலியை முகத்தில் தேக்கி அவனை நோக்கி கேட்க,
அவளின் கேள்வியின் திகைத்தவன்,
"உன்னை தவிர எனக்கு வேற யாரும் பெஸ்ட் பேர்ரா இருக்க முடியாதுடா இந்த ஜென்மத்துல" என்றான் இளா அவள் விழிகளில் தன் பார்வையை ஊடுருவச் செய்து.
"நான் ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்கேன்ல இளா. பாரு மஹா மதிய மரியாதையா பேசுறா.... வீடு வாங்கிட்டாங்க. அவங்க பிள்ளைகள் வரைக்கும் பியூசர் ப்ளான் வச்சிருக்காங்க. ஆனா நான் இன்னும் உன் கூட சண்டை போட்டுகிட்டு சமையல் கூட ஒழுங்கா செய்ய தெரியாம உன்னை படுத்திஎடுத்திட்டு இருக்கேன்ல" என்று பாவமாய் வேணிக் கேட்க,
அவளை அருகிலழைத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன், "அவங்கவங்க அவங்கவங்களா இருந்தா தான்டா நல்லாயிருக்கும். மஹா வேற வேணி வேற தானே. நீ நீயா இரு... எனக்கு நீ இப்படி இருந்தா தான் பிடிக்கும். என்ன கொஞ்சம் பொறுப்பு வரணும். அது வரவேண்டிய நேரத்துல வரும்" என்றவள் தலையை வருடி அவன் கூற, சற்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாளவள்.
தற்பொழுதெல்லாம் அவனுக்கு முத்தம் கொடுப்பது இயல்பான விஷயமாய் மாறிப்போயிருந்தது வேணிக்கு. அவ்வாறு இயல்பாக்கியிருந்தான் இளா அவளை.
அவளின் முத்தத்தில் முகம் மலர்ந்தவன், "சரி மேடம் பொறுப்பு வந்து என்ன ஃப்யூசர் ப்ளான்லாம் யோசிச்சீங்க" என்றவன் கேட்க,
"முதல்ல உன்னை பப்ளிக் ப்ளேசுல மரியாதையா பேசனும்" என்றவள் தீவிரமாய் கூறியதும் அதிர்ந்து விழித்தவன்,
"எப்போதுலருந்து இந்த ஞானோதயம். உங்கம்மா சொல்லும் போதே கேட்காத ஆளு தானே நீ" என்றவன் கேட்க,
"மப்ச் நான் உன்னை எப்படி வேணாலும் பேசுவேன். அது எனக்குள்ள உரிமை. அதை வச்சி வெளி ஆளுங்க யாரும் அவன் பொண்டாட்டியே அவனை மதிக்கிறதிலனு சொன்னா என் மனசு ரொம்ப கஷ்டப்படும். அதான்"
"சூப்பர். ட்ரையலுக்கு ஒரு நாள் நம்ம வாணிய வீட்டிக்கு வர வச்சி நீ எப்படி என்னை மரியாதையா பேசுறனு பார்க்கலாம்" என சிரித்தானவன்.
"அய்யோ அவளா. வேற வினையே வேண்டாம். அவளே என்னை குழப்பி விட்டுருவா" என்று கூறியவள் தன் ப்யூசர் ப்ளானை தொடர்ந்து கூற,
"சரி அம்முகுட்டி. நம்ம சம்பாதிச்சி வீடு கட்டி பணம் லாம் சேர்த்து வச்சி யாருக்குமா கொடுக்கப் போறோம். அனாதை ஆசிரமத்துக்கா" என கிண்டலாய் அவன் கேட்க,
"ஹோ சரி. பிள்ளை எப்படி தானா மரத்திலயிருந்து குதிக்குமா??" என நமட்டு சிரிப்புடன் அவன் கூற,
அதன்பின்பே அவன் கூற வருவதன் பொருள் உணர்ந்தாளவள்.
அதன் அர்த்தம் விளங்கியதும் அவள் உடல் விரைத்துக் கொள்ள,"எனக்கு தூக்கம் வருது" எனத் தள்ளி படுத்துக் கொண்டாள்.
"என்னடா அம்ஸ். உனக்கு இதுல என்ன பிரச்சனைனு சொன்னா தானே எனக்கு தெரியும்" என்றவளருகில் சென்று அவன் கேட்க,
"என்னனு சொல்ல தெரியலை இளா. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அன்னிக்கு நீ சொன்னியே தாம்பத்தியம் நீயில்லாம நானில்லை அந்த ஃபீல் உன்னை உன் உயிரை நான் தாங்கனும்ங்கிற அந்த ஆவல் எனக்கு வரனும் இளா."
"நான் உன்னை கஷ்டப்படுத்துறேனு தெரியுது." என துக்கமாய் அவளுரைக்க,
"அதெல்லாம் ஒன்னுமில்லை அம்முகுட்டி. உன் ஃபீலிங்க்ஸை தெரிஞ்சிக்க தான் கேட்டேன்.
இதெல்லாம் தெரிஞ்சி பேசி தானே மேரேஜ் செஞ்சோம். அதனால இது என்னிக்குமே எனக்கு டிஸ்அப்பாய்ன்மெண்ட்டா இருந்ததில்லை." என்றுரைத்தவன்,
"அதுக்காக தள்ளிதான் படுக்கனும்னு அவசியமில்லை" என்றவன், அவளை தன் கைவளைக்குள் வைத்து உறங்கச் செய்தான்.
அவளுறங்கியதும் அவளின் நெற்றியில் முத்தமிட்டவன், "என் செல்ல அம்முகுட்டி. நீ இப்படி என் கைக்குள்ள இருந்தாலே போதும்டி. தள்ளியிருந்தவ இப்படி என்னை ஒட்டிக்கிட்டு தூங்கிற அளவுக்கு வந்திருக்கியே. அதைப்போல அதுக்கும் உன் மனம் மாறும். அதுவரை நான் காத்திட்டு இருப்பேன்டி தங்கம்" என தன் மனதிற்குள் பேசிக் கொண்டானவன்.
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்ன ஆனாள் பக்கத்து வீட்டிலிருந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்த பாடல் ஜன்னலின் வழியாக இவனின் செவியை தீண்ட தன்னவளை எண்ணிய ஏகாந்த மனநிலையில் உறங்கிப்போனானவன்.
--------
நாட்கள் அதன் போக்கில் செல்ல, சென்னையில் தங்களின் புதிய ஃப்ளாட்டில் செட்டிலாகி இருந்தனர் மஹாவும் மதியும்.
ஓர் நாள் மாலை மஹா வீட்டை அடைந்த நேரம், தான் வர சிறிது நேரமாகுமென கைபேசியில் அழைத்து கூறினான் மதி.
எட்டு மணி வரை இரவுணவு தயாரித்துவிட்டு மெத்தையில் மஹா அமர்ந்த நேரம், ஒலித்தது வீட்டு அழைப்பு மணி.
சென்று கதவை திறந்தாள் மஹா.
வேலையால் ஏற்பட்ட சோர்வு முகத்தில் இருந்தாலும் அவளை கண்டதும் உண்டாகிய பளீர் புன்னகையுடன், "ஹாய் டார்லிங்" என்றபடி உள் நுழைந்தான் மதி.
"நான் ரிஃப்ரஸ் ஆயிட்டு வரேன். டின்னர் எடுத்து வைக்கிறியா??.. செம்ம பசில இருக்கேன்" என்றவன் உரைக்க,
"ஹ்ம்ம் டின்னர் ரெடி தான் மதிப்பா. நீங்க டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க சாப்பிடலாம்" என்றவள் முகப்பறையில் இருந்த மெத்தையில் அமர்ந்தாள்.
மதி குளியலறை சென்று ரிஃப்ரஷாகி முகப்பறை வந்துப் பார்க்க, மெத்தையின் நீளத்திற்கு ஏற்றவாறு தன் உடலை சுருக்கி படுத்திருந்தாள் மஹா.
மென்னகையுடன் அவளைப் பார்த்திருந்தவன், அவளருகே இருந்த சிறு இடைவெளியில் அவளை அணைத்துக்கொண்டு அவள் முகத்தை தன் மார்பில் தாங்கிக் கொண்டு இவன் படுக்க,
அந்த அசைவினில் சிறிது கண் விழித்தவள், "பசிக்குதுனு சொன்னீங்களே. வாங்க சாப்பிடலாம்" என அவள் எழப் போக,
"இல்லடா. இப்படியே கொஞ்சம் நேரம் இருக்கலாம்" எனக் கூறி அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டான்.
அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவள் முகத்தை நிமிர்த்தி அவன் முகம் நோக்கி,"ஆமா மதிப்பா... இடுப்பு ரொம்ப வலிக்குதுப்பா" என இடுப்பில் கை வைத்து வலியில் முகத்தைச் சுருக்கி அவள் கூறிய நொடி, அவளை தன் கையில் ஏந்தியவன் படுக்க வந்திருந்தான் அவளை தங்களின் கட்டிலில்.
"இரு நான் மூவ் தடவி விடுறேன்" எனச் சொல்லி அதை எடுக்க அவன் விலக, அவன் கைகளை பற்றியவள்,
"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல சாப்பிடுவோம்" என அவன் கைகளை பற்றிக்கொண்டு சாப்பிடும் அறைக்கு அழைத்துச் சென்றாள் அவனை.
இருவரும் மற்றவருக்கு ஊட்டிவிட்டு உணவினை உண்டு முடித்ததும், அவளை கட்டிலில் படுக்கச்செய்து முதுகுலிருந்து இடுப்பு வரை மூவ் தடவி நன்றாக நீவி விட்டானவன்.
அவனின் அழுத்தமான மசாஜில் வலி குறைந்து தூக்கத்தில் அவள் கண்கள் சொருக, அவனை இழுத்து தன்னருகில் படுக்கச் செய்தவள் வலி நிவாரணியாய் மாறிய அவன் கைகளுக்கு முத்தமிட்டு அவன் மார்பில் சாய்ந்து உறங்கிப்போனாள்.
மறுநாள் காலை அவளை எழுப்பியவன், "முதல்ல ஆபிசுக்கு லீவ் சொல்லு. மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் ஹோட்டல்ல சாப்டுக்கலாம். அப்புறம் டாக்டர் பார்க்க போறோம். நான் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிட்டேன்" எனக் கூறி மஹாவை கிளம்பச்சொன்னான்.
"நான் சொல்றதை இப்ப கேட்கப்போறியா இல்லையா" என்றவன் சற்று அதட்டலாய் கூற,
அவனுக்கு ஒழுங்கு காட்டியவள் குளிக்கச் சென்றாள்.
பின் இருவரும் கிளம்பி உணவகத்தில் காலை உணவை உண்டுவிட்டு பிசியோதெரபிஸ்ட்டை காணச் சென்றார்கள்.
அந்த டாக்டர் மதியின் பள்ளித் தோழர் என்பதால் சிநேகமாகவும் கிண்டலும் கேலியுமாகவே இருவரிடமும் பேசினார். பின் தன் பணியின் காரணமே இவ்வலி வந்ததாய் மஹா கூறவும் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் மக்கள் ஃபாலோ செய்ய வேண்டிய வழிமுறைகளை உரைத்தாரவர்.
"பொதுவாகவே ஐடில வேலை செய்றவங்களுக்கு இந்த முதுகு வலி இடுப்பு வலி காமென் ஹெல்த் இஸ்யூவாகிப் போச்சி. அதுக்கு காரணம் அவங்க சேர்ல உட்காருர பொசிஸன் தான். நாங்க ஐடி கம்பெனிகளுக்கு போகும் போது அவங்களுக்கு கொடுக்கக் கூடிய கவுண்சிலிங்கை உங்களுக்கு நான் சொல்றேன். அதை நீங்க ஃபாலோ செஞ்சீங்கனா, இந்த வலிலாம் இருக்கவே இருக்காது" என்றவர்,
தன் கையில் ஒரு வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு விளக்கவாரம்பித்தார்.
1. உங்க கண் பார்வை மானிட்டருக்கு நேரா இருக்கனும். அப்படி இருக்குற மாதிரி சேர் அட்ஜஸ்ட் செஞ்சி உட்காருங்க. மேலயோ கீழயோ பார்வை இருக்க மாதிரி உட்கார்ந்தா நீங்க கழுத்தை அதற்கேற்றார்ப்போல் அசைக்கும் போது கழுத்து வலி ஏற்படும்.
2. உங்க முதுகு மற்றும் இடுப்பு நிமிர்ந்து நேரா இருப்பது போல் அமரனும். அப்படி அமரும் போது உங்கள் முதுகையும் இடுப்பையும் சேர் பேக்சைட் சப்போர்ட் செய்யனும். ஒரு சில சேர்ல இடுப்புப்பக்கம் இடைவெளி இருக்குற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த கேப்ல சின்ன பில்லோ வச்சி உட்காரலாம். மொத்தத்தில் இடுப்பு முதுகு இரண்டு பின்னாடி ரெஸ்ட் ஆகிறது போல உட்காரனும்.
3. கீபோர்டு அண்ட் மௌஸ் உங்க கைக்கு நேரா இருக்குறது போல வையுங்க. கையை தூக்கியோ இல்ல இறக்கியோ நீங்க டைப் செய்றது போல சேர் பொஸிஷன் இருக்கக்கூடாது. ஹேண்ட் அண்ட் கீப்போர்டு ஷுட் பி இன் ஈவன் பொஸிஷன்.
4. Arm rest and foot rest கண்டிப்பா தேவை.
இதில்லாம நாங்க சொல்ற அடிஷ்னல் அட்வைஸ், "ப்ளீஸ் பிளிங்க் யுவர் ஐஸ். வேலை செய்ற ஆர்வத்துல கண்ணை சிமிட்ட மறந்திடுவோம். வேலை செய்யும் போது கண் சிமிட்ட மறக்காதீங்க. அப்புறம் ஒன்ஸ் இன் எவ்ரி ஒன் ஹவர் ஆர் டூ அவர் சேரை சாச்சு கண்மூடி கண்ணை ரிலாக்ஸ் பண்ணுங்க. டிரிங்க் மோர் வாட்டர். அடிக்கடி எழுந்திருச்சி கொஞ்சம் வாக் பண்ணுங்க. அப்படியே உட்கார்ந்துட்டே இருக்காதீங்க. இதெல்லாம் பின்பற்றினாலே உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுக்காக்க முடியும்." என்று தன் உரையை முடித்தவர் வலி நிவாரணியாய் சில மாத்திரைகளையும் வலி அதிகம் இருக்கும் சமயத்தில் உபயோகிக்குமாறு வழங்கினர்.
இவற்றை நன்றாய் கேட்டுக்கொண்டனர் மஹாவும் மதியும்.
பின் சிறிது நேரம் டாக்டர் நண்பனுடன் பேசிவிட்டே கிளம்பிச்சென்றனர் மதி தம்பதியர்.
வீட்டிற்கு வந்ததும் டாக்டர் கூறிய அனைத்தும் அவள் பின்பற்ற வேண்டுமென்ற கண்டிப்பான உத்தரவையும் அவன் போட தவறவில்லை.
ஜனவரி 2013
ஆஷிக் ரஹானா திருமணம் ரஹானாவின் ஊரான ஆரணியில் நடந்து முடிந்திருந்தது. அதற்கான வரவேற்பு மறுநாள் சென்னையில் வைத்திருந்தனர்.
ஆஷிக்கிற்கு நண்பர்கள் அதிகம் என்பதால் அவனுடைய பள்ளி கல்லூரி தோழமைகள் பெரும் படையாய் வந்திருந்து கேக் வெட்ட செய்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.
அந்நேரத்தில் வந்தனர் வாணி மற்றும் ப்ரண்ட்ஸ் குழாம். வாணி தன் தந்தையுடன் வந்திருக்க, வேணி இளாவுடனும், மஹா மதியுடனும் தம்பதியராய் கலந்துக்கொண்டனர்.
வாணியைப் பார்த்ததும் கேபிக்கா என அணைத்துக் கொண்டாள் ரஹா.
"ஹே எப்படி கண்டுப்பிடிச்ச??" என ஆச்சரியமாய் வாணி வினவ,
"ஆமா இது கண்டுபிடிக்கிறது பெரிய விஷயம் பாரு. நான் கேபினு கூப்பிடறதுக்கு ஏத்த சைஸ்ல தானே நீயும் இருக்க. என்ன இப்ப கொஞ்சம் அகலமாகிட்ட" என ஆஷிக் கூற,
"டேய் நல்லநாள் அதுவுமா அடிக்க கூடாதேனு பார்க்கிறேன்" என அடிக்குரலில் சீறினாள்.
"எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை அடுத்து பார்க்கும் போது வச்சி செய்றேனா இல்லயா பாரு" என வாணி உரைக்க,
"ஆஆஆ அம்மாஆஆஆ பயந்துட்டேன்" என அவளுக்கு ஒழுங்கு காட்டியவன்,
"இங்க ஒருத்தி புருஷனை அடிக்கிறேனு சொல்றா. நீ கெக்கபெக்கேனு சிரிச்சிட்டு இருக்க. அவளை இந்நேரம் ஒரு வழிப் பண்ணி உன் புருஷன் பக்திய காமிச்சிருக்க வேண்டாமா" என ரஹானாவிடம் வீரமாய் அவன் வசனம் பேச,
"ரஹாப் பொண்ணு, உன் புருஷனை நான் அடிச்சா தானே தப்பு. எனக்கு பதிலா நீ அடிச்சிடுடா" என கண்சிமிட்டி வாணிக் கூற,
"கேபிக்கா சொன்னா சரி தான்" என சிரித்துக் கொண்டே வழிமொழிந்தாள் ரஹானா.
"நல்லா கூட்டு சேர்ந்திருக்கீங்க எனக்குனு. அவ அடிய எப்படி சமாளிக்கனும்னு எனக்கு தெரியும். அதுக்கெல்லாம் பயிற்சி எடுக்காமலா மேரேஜ் கிணத்துல குதிப்போம் நாங்க" என கேலியாய் அவன் கூற,
வாய் விட்டு சிரித்தனர் அனைவரும்.
"இதே போல இரண்டு பேரும் எப்போதும் சந்தோஷமா நிம்மதியா இணைப்பிரியாம விட்டுக்கொடுத்து வாழனும். விஷ் யூ போத் எ ஹேப்பி ஹேப்பி மேரீட் லைஃப்" என வாழ்த்தினாள் வாணி.
"தேங்க்ஸ் எ லாட் கேபி" என மனநிறைவாய் கூறினான் ஆஷிக்.
இவர்களின் இச்சம்பாஷணையை அருகிலிருந்து கண்டிருந்திருந்தார் வாணியின் தந்தை. அவரும் அவர்களின் நட்பில் பூரித்து தான் போனார்.
------
மே 2013
வேணி இளா திருமணம் முடிந்து நான்கு மாதமாகிய நிலையில்,
வேணி செகண்ட் ஷிப்ட் சென்ற அந்த நாளில், இளாவுடன் கேஃபிடேரியாவில் அமர்ந்து, தான் சமைத்து எடுத்து வந்த உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தாள் அவனுக்கு.
தட்டில் சாப்பாடு வைத்தும் உண்ணாமல் இளா எங்கோ வெறித்து நோக்க, எங்கிவன் பார்க்கிறானென அவன் பார்வையின் திசையைப் பின்பற்றி இவளும் பார்க்க, அங்கே ஓர் பெண் புடவை அணிந்து நீளமான தலைமுடியை பின்னலிட்டு பூச்சூடி அழகாய் சிரித்துக் கொண்டே தன் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
"அங்கென்ன பார்வை?? கண்ணை நோண்டிடுவேன்" என்றுரைத்துக் கொண்டே இளாவின் கையை நறுக்கென அவள் கிள்ளி வைக்க,
ஆஆஆவென அலறியவன்,
"ஸ்ஸ்ஸ் லூசாடி நீ... இப்படி கிள்ளி வைக்குற" எனக் கையை தடவிக்கொண்டே கூறினான்.
"உனக்கே தெரியும் நான் மாசாமாசம் முடி கட் பண்ற ஆளு. உனக்காக தான் நான் முடியை வெட்டாம நீளமா வளர்த்துட்டு இருக்கேன். இந்த மூக்குத்திக் கூட உனக்காக தான் உனக்கு பிடிக்குமேனு தான் குத்தினேன். நீ என்னடானா என் முன்னாடியே இன்னொரு பொண்ணை சைட் அடிச்சிட்டு இருக்க" என உக்கிரமாய் உரைத்து முகத்தை திருப்பிக் கொள்ள,
அவளின் பொஸஸிவ்னஸ் நிறைந்த இக்கோபத்தில் அவன் மனம் குத்தாட்டம் போட, மெலியதாய் சிரித்தவன் அவளை மேலும் சீண்டும் பொருட்டு பேசலானான்.
"டேய் அம்முக்குட்டி, என்னடா நீ இதுக்கு போய் கோவிச்சிக்கிற. எத்தனை தடவை உன் கிட்ட இந்த பொண்ணு அழகா இருக்கு. அந்த பொண்ணு அழகா இருக்குனு காமிச்சிருக்கேன். நீயும் என் கூட சேர்ந்து ஆமா சொல்லி பார்ப்பியே" என்றவன் கூற,
"அது அப்போ இது இப்போ" என்று முறைத்தாள் அவனை,
வாய்குள்ளே சிரித்துக் கொண்டவன்,"ஏன் என்ன வித்தியாசம் வந்துச்சாம் அப்போக்கும் இப்போக்கும்" என்றவளை வம்பிழுக்க,
"அதெல்லாம் அப்படி தான். இப்போ என்னை தவிற அழகுனு யாரயாவது பார்த்தே கொன்றுவேன்" என ஆங்காரமாய் கூறியவள்,
பின் மெல்ல அவள் கண்களில் நீர் திரையிட அவனை நோக்கியவள், "ஏன் இளா நான் அழகா இல்லையா??" என்று கேட்ட நொடி,
எதிர் இருக்கையில் இருந்தவன் அவளருகில் இருந்த இருக்கைக்கு மாறி அமர்ந்து அவள் கைகளை தன்னுடன் கோர்த்தவன், "என்ன பேச்சு பேசுற நீ?? என்னை பத்தி உனக்கு தெரியாதா?? உன்னை வம்பிழுக்க தான் அந்த பொண்ணையே நான் பார்த்தேன். நம்ம மேரேஜ்க்கு பிறகு நான் எந்த பொண்ணை பத்தியாவது உன் கிட்ட பேசிருக்கேனா இல்ல பார்த்திருக்கேனா??" என அவள் விழி நோக்கி அவன் வினவ,
"சாரி இளா" என்றாள் தன் தலையை குனிந்தவாறே,
"தட்ஸ் ஓகே. சாரி நானும் உன்னை ஹர்ட் பண்ணிட்டேன் வம்பிழுக்கிறேனு" என மனம் வருந்தி அவன் கூற,
"அதெல்லாம் பரவாயில்லை இளா. உனக்கு பிடிச்ச கத்திரிக்காய் காரக்குழம்பு வச்சிருக்கேன் இன்னிக்கு" என்றுக் கூறி அந்த தட்டை அவனிடத்திற்கு வைக்க,
"என் வைஃப்க்கு நான் ஊட்டுறதுக்கு எவன் என்ன சொல்லுவான்" என்று அவளுக்கு ஊட்டிவிட்டே சாப்பிட்டானவன்.
அந்நேரம் அங்கு வந்த இளாவின் டீம்மெட் ஷில்பாவிற்கு இளாவை வம்பிழுக்கத் தோன்ற, அவர்களின் அருகே சென்றவள், "இளா யூ ஆர் லுக்கிங் சோ ஸ்மார்ட் டுடே" என்றுக் கூற,
"அச்சச்சோ இப்ப தான் என் பொண்டாட்டிய மலையிறக்கி சாப்பிட வச்சிட்டிருக்கேன். இவ திரும்பவும் அவளை மலையேத்திடுவா போலயே" என மைண்ட்வாய்ஸில் பேசிக்கொண்டவன்,
அவளின் புகழுரைக்கு நன்றிக் கூறி சிரித்துக் கொண்டிருக்க, இங்கே இளாவை முறைத்துக் கொண்டிருந்தாள் வேணி.
சற்று நேரம் பேசிவிட்டு ஷில்பா செல்ல, "இங்க பாரு இளா... உன் மீசை மட்டுமில்ல... நீ மொத்தமா எனக்கு மட்டும் தான் பாத்தியப்பட்டவன். எனக்கு மட்டும் தான் உன்னை ரசிக்கிற உன்னை வர்ணிக்கிற உரிமை இருக்கு. சொல்லிட்டேன். இனி எவளாவது இப்படி சொல்லும் போது ஈஈனு இளிச்சிட்டு இருந்தேனு வை... பல்லதட்டி கையில கொடுத்திடுவேன்." என்று கோபமாய் உரைத்துவிட்டு அவள் அங்கிருந்து எழப்போக,
அதுவரை அவளின் பேச்சை ரசனைப் பாவத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவன், அவன் எழப்போகவும் கோபம் உச்சமேற,"நான் இப்ப சாப்பிடவா வேண்டாமா அம்ஸ்" என்றான்.
உடனே தன் இருக்கையில் அவள் அமர, அவளுக்கு ஊட்ட அவன் கைகள் நீண்டதும் வேண்டாமென அவள் தலையசைக்க,"சரி எனக்கும் வேண்டாம்" எனக் கூறி அவன் எழ முற்பட, அவன் கைகளைப் பற்றி அமர வைத்தவள் தானே அவனுக்கு ஊட்டிவிட்டாள்.
பின் இருவரும் உண்டு முடித்து கைகழுவியதும் வேணியிடம் சிறிது பேச வேண்டுமெனக் கூறி அவர்களின் அலுவலகத்தில் பூங்கா போன்ற அமைப்பிலிருந்த ஒதுக்குப்புறமான இடத்தில் பெரிய ஆலமரத்தின் கீழிருந்த அமர்வு இருக்கையில் அமரச் செய்தான் அவளை.
அவளருகில் அமர்ந்து அவள் கைகளை தன் கைக்குள் வைத்து மிருதுவாய் தடவிக்கொண்டே பேசவாரம்பித்தானவன்.
"அம்முகுட்டி ஆர் யூ ஃபீலிங் இன்செக்யூர்டு??" என்று கேள்வியாய் அவன் அவளைப் பார்க்க,
"தெரியலை இளா. ஆனா ரொம்ப கெட்டப்பொண்ணாக்கிட்டேன்டா. இப்பல்லாம் ரொம்ப பொறாமைபடுறேன். உன்கிட்ட எந்த பொண்ணாவது ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து பேசினா ரொம்ப கோவம் வருது" என்றவள் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டுக் கூற,
"ஹாஹாஹாஹா" என வாய்விட்டு சிரித்தவன்,
"அப்புறம்" என்றான்
"உன் கூடவே இருக்கனும் போல தோணுது. ஒரு நாள் உன்னை பார்க்கலைனாலும் மனசு வலிக்குது. என்னென்னமோ தோணுதுடா. மொத்தத்துல எப்பவும் உன்னையே தான்டா நினைச்சிட்டு இருக்கேன். என்னை விட்டு போய்ட மாட்டல இளா. என் அளவுக்கு உனக்கும் என்னை பிடிக்குமா இளா??" என அவன் தோளில் சாய்ந்து தன் மனவுணர்வுகளை அவள் கூற,
அதுவரை சிரிப்பாய் கேட்டிருந்தவன், என்னை விட்டு போய்ட மாட்டல என்ற கேள்வியில் விக்கித்துப் போனான். அந்தளவிற்கா அவள் தன்னை நேசிக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு மயிற்கூச்செறியச் செய்தது.
"உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும் கூடிய சீக்கிரத்துல காமிக்கிறேன்" என கண்ணடித்து அவன் கூற,
"என்னமோ வில்லங்கமா பேசுறனு தெரியுது. இதுக்கு மேல இங்கிருந்தா சரிக்கிடையாது" என்று இருக்கை விட்டு எழுந்தவள், வா போய் ஒழுங்கா வேலைய பார்ப்போம். சம்பளம் கொடுக்கிற எஜமானுக்கு கொஞ்சமாவது உழச்சி போடனும்ல என்றவாறு பேசிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர் இருவரும்.
வேணிக்கு ஏனோ இன்று சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டுமென மனம் பரபரக்க,இரண்டாம் ஷிப்டில் இரவு 11 மணிக்கு கிளம்பிச்செல்பவள், இன்று 8 மணிக்கே கிளம்புவதாய் உரைத்து பெர்மிஷன் வாங்கிச்சென்றாள்.
இளாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க எண்ணி இவள் அவனிடம் கூறாது வீட்டிற்குச் சென்றுப் பார்க்க அவன் வேலைப்பளுவால் அலுவலகத்தை விட்டு கிளம்பாது இருந்தான்.
அவன் கைபேசிக்கு அழைத்து வீட்டிற்கு வந்துவிட்டதை உரைத்தவள், அவனுக்காக அவனுக்கு பிடித்தமான இரவுணவு தயாரிக்கலானாள்.
மணி பத்தை தாண்டியும் அவன் வீட்டிற்கு வராமலிருக்க, அவன் கைபேசிக்கு அழைத்தாளவள்.
அங்கு இளா அவனின் மேனேஜர் மற்றும் டீம் லீட் அவனையும் அவனின் கணிணியையும் புடைச்சூழ அமர்ந்திருக்க, ஒரு இஷ்யூவை இன்றே சரிசெய்யவேண்டுமென்ற முனைப்புடன் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்நேரம் சரியாய் அவனின் கைபேசி அலற, எல்லோரிடமும் எக்ஸ்க்யூஸ் சொல்லி அழைப்பையேற்றான்.
"என்னடா அம்மு... சாப்பிட்டியா?? எனக்கு வேலை இருக்குடா... எப்ப வருவேனே தெரியாது. எனக்காக வெயிட் செய்யாத... சாப்ட்டு தூங்கு" என்றுரைத்து விட்டு கைபேசியை வைத்தான்.
"ந்யூலி மேரீட்ல. கொஞ்சம் நாளைக்கு அப்படி தான். நேரத்துக்கு சாப்பிடீங்களா இல்லையானு தவறாம ஃபோன் வரும். அப்புறம் இப்டி ஒரு ஆளு இருக்கோம்ன்றதே மறந்துடுவாங்க" எனக் கேலியாய் அவனின் லீட்கூற,
அவரின் நியூலி மேரிட் என்ற விளிப்பில் அவன் முகத்தில் சிறு வெட்கம் படற அமைதியாய் அமர்ந்துக்கொண்டு வேலை பார்க்கலானான்.
மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து அவள் அழைக்க, இங்கே இஷ்யூ சால்வ் செய்ய முடியாமல் நீண்டுக்கொண்டே போவதின் எரிச்சலில் இருந்தவன்
"எக்ஸ்க்யூஸ் மீ" என தன் இடத்தைவிட்டு நகர்ந்து வந்து அழைப்பை ஏற்றவன்,
"அறிவிருக்காடி உனக்கு. இங்க மனுஷன் என்ன வேலைல இருக்கேன். சாப்டாச்சானு போன் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருக்க" என்று அடிக்குரலில் கத்த,
மறுப்பக்கம் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் ஒரு துளி நீர் விழ,"போடா கோவக்காய்" என்றுரைத்து போனை வைத்துவிட்டாள்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.