All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கதை திரி

Status
Not open for further replies.

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 19:

கனவிலும் எண்ணியதில்லையே
உன் பிரிவை

நீயில்லாது வாழ்வில்லையென
உணர்ந்தப் பொழுதில்

உன் காதலை உணர்ந்து
மருகிக்கொண்டிருக்கும்
நிலையில்

பிரிவை நிகழ்த்திய
விதியை என்சொல்வேன் நான்??


மறுப்பக்கம் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் ஒரு துளி நீர் விழ,"போடா கோவக்காய்" என்றுரைத்து போனை வைத்துவிட்டாள்.

அவளின் கோவக்காய் என்ற விளிப்பில் அவனின் எரிச்சலையும் மீறி சிரிப்பு வந்தது அவனுக்கு.

"என் செல்ல ராட்சசிடி நீ" எனமனதில் அவளை சீராட்டிக் கொண்டவன்,

" இரு வீட்டுக்கு வந்து உன்னை கவனிச்சிக்கிறேன்" என்று மனதில் எண்ணிக்கொண்டே தன் வேலையை கவனிக்கச் செய்தான்.

அங்கே கட்டிலில் படுத்திருந்தவள், "போடா கோவக்காய் பாவக்காய். நீ எக்கேடு கெட்டுப்போ. எனக்கு வந்த வந்துச்சு. போடா புடலங்காய்" என அவனை வசைபாடியவள்,

"ச்சே திட்டுறதுக்கு நாலு வார்த்தை கத்து வச்சிக்கனும். அவனை நல்லா திட்டினதும் என் கோபம் குறைச்சி போற அளவுக்கு அந்த வார்த்தை இருக்கனும்" என அவனை திட்டியோ இல்லை வசைப்பாடியோ ஏதோவொரு வகையில் மனதில் அவனை எண்ணிக்கொண்டே உறங்கிப்போனாளவள்.

காலை மூன்று மணிக்கு தன்னிடமிருந்த வீட்டு சாவியை வைத்து உள் நுழைந்தவன் மற்றொரு அறைக்கு சென்று தன்னை ரிப்ரெஷ் செய்துக் கொண்டு தங்களினறைக்குச் சென்றுப்பார்க்க, அங்கே கண்ணில் காய்ந்த கண்ணீர் கோடுடன் உறங்கியிருந்தாள் வேணி.
அவளின் கண்ணீரை கண்டதும் இவன் மனம் வலியைக் கொடுக்க,"சாரிடா அம்முக்குட்டி" என்றுரைத்து அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன், அவளை தன் கைவளைக்குள் கொண்டு வந்து தன்னுடன் சேர்த்தணைத்து உறங்கிப் போனான்.

காலை எட்டு மணியளவில் கதிரவன் ஜன்னலைத் தாண்டி முகத்தில் அறைந்த நேரம் விழியை மெல்ல திறந்துப் பார்த்த வேணி, தன்னை ஏதோ கயிறு கொண்டு கட்டிப்போட்டதைப் போல் உணர்ந்தாள்.

இளாவின் இரும்பு பிடிக்குள் இருந்தாளவள்.

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என மனதில் அவனை வைதவள், தட்டு தடுமாறி அவனின் பிடியிலிருந்து வெளிவந்தாள்.

"ம்ப்ச் அம்ஸ் எங்கப் போற??" என தன் கைகளை துழாவி அவன் அவளை தேட, தள்ளி அமர்ந்து சிரித்துக் கொண்டே அதைப் பார்த்திருந்தவள், இன்னமும் அவளைத்தேடி அவன் கைகள் துழாவிக்கொண்டே இருக்க, அவனருகில் வந்தவள் தானாய் அவன் கையை தூக்கி தன் இடையைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள்.

முந்தைய நாளின் வேலைப்பளுவால் சோர்ந்திருந்தவனுக்கு தானாய் கண்கள் மீண்டும் தூக்கத்திற்கு இழுத்துச்செல்ல ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றானவன்.
அவனின் தூங்கும் முகத்தையே இமை சிமிட்டாது பார்த்திருந்தவள் இதற்கு மேல் அமைதியாய் படுக்கவியலாதென எண்ணிக்கொண்டு எழும்ப முயற்ச்சித்தாள்.

அவனின் நித்திரை கலைக்காது எழுந்தவள் பதித்தாள் அவனின் நெற்றியில் தன் இதழை.

இது இளாவின் ஆணை.

படுக்கையறைக்கு கைபேசி எடுத்துவரக்கூடாதென்ற ஆணைப் போல் காலை முதலில் விழிப்பவர் மற்றவருக்கு முத்தம் கொடுத்துவிட்டே எழவேண்டும். இருவரும் நன்றாகவே பழகியிருந்தனர் இந்த நடைமுறைக்கு.

காலை கடன்களை முடித்து முகம் கழுவிவிட்டு வந்தவள் சமையலறைக்குச் சென்றாள் காபி போடுவதற்காக பாலை அடுப்பில் வைத்து நின்றிருந்த சமயம் அவள் எழுந்ததும் இளா அவளை தேடிய நிகழ்வு மனதிலாட அவளுக்கான அவனின் செயல்கள் அனைத்தும் அவளின் மனக்கண்ணில் படமாய் ஓட "என் மேல எவ்ளோ அன்புடா உனக்கு" எனக் கூறிக்கொண்டவளின் மனம் அவனின் அன்பில் பூரித்தது.

அவளின் வாய் தன்னால் அப்பாடலை பாடியது.

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை

புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு

சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு

தன்நன் நானான...
தன்நன் நானான...
தன்நன் நானான...

தன்நன் நானான என இடையை ஆட்டி ஆடிக்கொண்டிருந்தவள் பால் பொங்கப்போவதைப் பார்த்து அவசரமாய் அதை அணைக்க, அவளை பின்னிருந்து அணைத்திருந்தான் இளா.
அவன் இதழ் அழுத்தமாய் பதிந்தது அவளின் கன்னத்தில்.

அவள் உடல் சிலிர்த்து மின்சாரம் பாய்ந்தது போன்றதொரு உணர்வில் தூக்கிப்போட்டது.

இந்த அணைப்பும் முத்தமும் இன்று முற்றிலும் மாறுபட்டதாய் தோன்றியது வேணிக்கு. இளாவின் அன்பு செய் முறையாகத் தான் எப்பொழுதும் இருக்கும் அவனின் முத்தமும் அணைப்பும். தந்தையோ தமையனோ பாசமாய் தரும் அணைப்பும் முத்தமாய் தான் இதுவரை இருந்திருக்கிறது.
ஆனால் இன்று அவள் திருமணமான புதிதில் அவன் தந்த முத்தத்தில் அவள் உடல் ஷாக் அடித்ததுப்போல் உணர்ந்ததன் தாக்கம் இருந்தது.

இடையில் தவழ்ந்த அவன் கரங்களின் இறுக்கம் அதிகரித்து அவளை இன்னும் தன்னோடு இறுக்க அவனிதழ் அவள் பின்னங்கழுத்தில் பதிய அவளின் மொத்த உடலில் நடுங்கவாரம்பித்தது.

"இளா" மென்மையாய் வந்து விழுந்தது அவளின் வார்த்தை.

"ஹ்ம்ம்" என்றானே ஒழிய, விலகவில்லை அவளை விட்டு.

முழு மயக்கத்தில் இருந்தானவன்.

அவன் மீதிருந்த கோபம் மறைந்திருந்தது. அவனிடம் சண்டையிட வேண்டுமென்ற எண்ணம் மறந்திருந்தது. அவளும் ரசித்தாள் சுகித்தாள் இந்நொடியை.

சற்று நேரம் கழித்து தட்டு தடுமாறி வார்த்தைகள் தந்தியடிக்க,"இளா காபி போடனும்" அவனை கலைத்தாள்.

மயக்கத்திலிருந்து சற்றுத் தெளிந்தவன் அவளை முன்புறம் திருப்பினான்.

தன்னை விழுங்கும் பார்வை பார்க்கும் அவளிமைகளில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

அவள் சமையல் மேடையை ஒட்டி நிற்க, தன் இரு கைகளையும் அவளிருப்பக்கமும் மேடையில் வைத்து அவளை சிறை செய்திருந்தவன் கூறினான் அவள் காதில், "லவ் யூ அம்ஸ். கண்டிப்பா நீ இல்லாம வாழ முடியாதுடி என்னாலயும்" கண்களில் காதல் பொங்க கூறினான் அவளிடம்.

அவள் இதயத்தில் படபடப்புடன் கூடிய மெல்லிய வருடலை செய்வித்தது அவனின் இவ்வரிகள்.

பின் நகர்ந்து தன் தலையை அழுந்த கோதியவன்,"எப்படிடி உன்னை விட்டு நான் இருப்பேன்??" என்றான் வேதனைக் குரலில்.

அத்தனை தவிப்பு அவன் முகத்தில்.
அவனின் இவ்வார்த்தையில் பதறியது அவளுள்ளம்.

அவன் கன்னங்களை தன் இரு கரங்களால் தாங்கியவள்,"ஏன் ஏன்டா என்னைய விட்டு நீ இருக்கனும். நான் உன் கூடத் தான் இருப்பேன். நீயே போகச் சொன்னாலும் உன்னைய விட்டு போக மாட்டேன்." சாய்ந்திருந்தாள் அவன் தோளில். அணைத்திருந்தாள் அவனை.

அவன் கூறிய பிரிவின் சொல்லிலேயே நடுங்கி கொண்டிருந்தது அவளின் உள்ளம்.
அவள் தலை கோதியவன், "நேத்து என் மேனேஜர் சொல்லும் போது எனக்கும் உன்னை போல் இப்படி உடம்பு பதற செஞ்சிதே தவிற,சந்தோஷப்படலை" என்றான்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்,"என்ன சொன்னார் உன் மேனேஜர். இந்த பொண்ணு உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணுது. அதனால டிவோர்ஸ் பண்ணுனு சொன்னாரா. நீ அந்த மேனேஜர டிவோர்ஸ் பண்ணு முதல்ல. உன்னைய உட்கார வச்சி நான் சோறு போடுறேன்" என வீர ஆவேசமாய் அவள் பேச,

இதுவரை இருந்த மனதின் இறுக்கம் தளர்ந்து மனம் குளிர சிரித்தானவன்.

"என் செல்ல அம்முகுட்டி" என அவளின் கன்னம் பிடித்து செல்லம் கொஞ்சியவன்,

"என்னைய ஆன்சைட் போக சொல்றாங்கடி. சிங்கப்பூர் போக சொல்லிட்டாங்க. அதுவும் நாளைக்கே" என்றான் சோகமாய்.

"ஹே வாவ் வாட் எ ஆப்பர்சூனிட்டி." அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு துள்ளிக்குதித்தாளவள்.

"அடியேய் கழுதை. கழுத்து வலிக்குதுடி" எனக்கூறி அவளை விலக்கி நிறுத்தினான்.

"இதுக்கு தான் சோக கீதம் வாசிச்சியா நீ. நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன். ஆமா உடனே விசா கிடைக்காதே. உனக்கு முன்னாடியே விசா அப்ளை பண்ணிட்டாங்களா?? ஏன் என்கிட்ட சொல்லவேயில்ல" என்று அவனின் சட்டை காலரை அவள் பிடிக்க,

"அம்முகுட்டி பசிக்குதுடா. சாப்பிட்டுட்டே பேசலாமா??" என்றவன் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு கேட்க,

"சரி சரி நீ ஹால்ல உட்காரு. நான் ரெடி பண்ணி எடுத்து வரேன்." என்று அவளை அனுப்பி வைத்தவளின் மனம் அவனின் பிரிவை எண்ணி வருந்தத்தான் செய்தது. ஆனால் அதை அவனிடம் காண்பித்து அவனின் உத்யோக வளர்ச்சிக்கு தடையாய் இருக்க அவளுக்கு மனமில்லை.

சமையல் செய்துக்கொண்டே பலவித எண்ணிங்களில் சுழன்றுக் கொண்டிருந்தவள்,"அம்மு ஸ்டெடி ஸ்டெடி அவனுக்கு முன்னாடி சோக கீதம் வாசிச்சுடாத" என மனதை தேற்றிக்கொண்டாள்.

பின் தயாரித்த உணவை இருவரும் சேர்ந்து உண்டப்பின்,"அம்மு ஆபிஸ்க்கு லீவ் போடு. இன்னிக்கு பர்சேஸிங்கு போறோம்" என்றுரைத்து குளிக்கச் சென்றான் இளா.

"டேய் நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல" என்று அவனருகில் சென்று இவள் கேட்க,

"டைம் ரொம்ப கம்மியா இருக்கு அம்ஸ்.நாளைக்கு விடியற்காலை மூனு மணிக்கு ஃப்ளைட். டிக்கெட் கூட ரெடி. ஷாப்பிங்க் பண்ணிக்கிட்டே பேசலாம்.இரண்டு பேரும் கிளம்பலாம் முதல்ல" எனக் கூறி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டானவன்.

"பயப்புள்ள எதுவும் மறைக்கிறானா நம்மகிட்ட.எப்ப விசாவுக்கு அப்ளை செஞ்சிருப்பான்?? ஏன் சொல்லல என்கிட்ட?" என எண்ணிக்கொண்டே மதிய சமையலை செய்தவள், பின் தானும் குளித்து கிளம்பினாள் அவனுடன்.

அன்று முழுவதும் அவளை தன் கைவளைக்குள்ளே வைத்துக்கொண்டான். நிமிடமும் அவளை விட்டு பிரியவில்லை அவன்.

மதியத்திற்கு செய்து வைத்த உணவை இரவு வீடு வந்து உண்டனர்.

மணி பத்தை தாண்டிய வேளையில் தன் பேக்கிங் எல்லாம் முடித்து மெத்தையில் அவன் அமர, அவனுக்கு பால் எடுத்து வந்து கொடுத்தவள் தானும் அமர்ந்துக்கொண்டாள் அவனருகில்.

"ஏன் இளாப்பா இவ்ளோ சீக்கிரமா உடனே போக சொல்றாங்க??"
அவளின் அடிமனதில் அவனை கணவனாய் மட்டும் உணரும் வேளையில் அவளறியாது வரும் அழைப்பு இந்த இளாப்பா. அந்நேரம் கூடுதலாய் மரியாதையாகவே பேசுவாள் அவனிடம். அதை அவனும் அவதானித்திருந்தான் அவளுடன் பேசும் சமயங்களில். ஆனால் இப்பொழுது அவளின் இந்த விளிப்பில் அவளின் பரிதவிப்பை உணர்ந்தவன், அவளை தெளிய வைக்க எண்ணினான்.

"நேத்து இஸ்யூனு சொன்னேன்ல அது நானும் சிங்கப்பூருல இருக்க திலீப்பும் தான் பார்த்துட்டு இருந்தோம்.நேத்து நைட் அவரோட அம்மா ஹாஸ்ப்பிட்டலைஸ்டுனு தகவல் வந்துச்சு. அவர் உடனே கிளம்பனும்னு சொன்னாரு.ஆனா க்ளைண்ட் ஒத்துக்கலை. சோ மேனேஜர் எனக்கு விசா இருக்கவும் உடனே கிளம்ப சொன்னாரு. ஐ மீன் இன்னிக்கே போக சொன்னார். நான் தான் கெஞ்சி பேசி ஒரு நாள் தள்ளிப்போட்டேன். நான் அங்க போனா தான் திலீப் இங்க வந்து அவங்க அம்மாவ பார்க்க முடியும்" என தன்னிலை விளக்கம் அவனளிக்க,

"எப்ப விசா எடுத்த இளா?? ஏன் அதை பத்தி எதுவும் சொல்ல மாட்டேங்கிற" என்றவள் கேட்க,

ஆழபெருமூச்செரிந்தவன்,"நம்ம மேரேஜ் பத்தி உங்க அப்பா பேசின அந்த வாரம். நான் குழப்பத்துல உன் கிட்ட சரியா பேசாம சுத்தினேனே அந்த வாரம் விசா என் கைக்கு வந்துடுச்சு. எனக்கும் திலீப்புக்கும் ஒன்னா தான் விசா அப்ளை செய்ய சொன்னாங்க. யாருக்கு முதல்ல வருதோ அவங்களை அனுப்பலாம்னு. எனக்கு தான் வந்துச்சு. ஆனா எப்ப நீயே என்னை மேரேஜ் செய்ய சம்மதம் சொன்னியோ உன்னை விட்டு உன்னையோ இல்ல உங்க அப்பவையோ கஷ்டப்படுத்திட்டு போக மனசில்ல அம்ஸ். அந்த சூழ்நிலைல நம்ம மேரேஜ் நடந்தேயாகனும்னு தோணுச்சு. நீ தான் முக்கியம்னு தோணுச்சு. அதனால இப்ப எனக்கு ஆன்சைட் போக விருப்பமில்லைனு சொல்லிட்டேன். அடுத்து விசா கிடைச்ச திலீப்பை அனுப்பிட்டாங்க" என்றவன் கூறிய வார்ததைகளில், திகைப்பின் விளிம்பில் இருந்தாள் வேணி.

"ஆன்சைட் எவ்ளோ பெரிய விஷயம்டா. என்னை கல்யாணம் செய்துக்க அதை வேண்டாம் சொன்னியா??" இன்னும் திகைப்பு மாறாமல் அந்த தொணியிலேயே அவள் கேட்க,

"எப்பவுமே உன்னை கஷ்டபடுத்திட்டு ஒரு விஷயம் என்னால செய்ய முடியாது அம்ஸ். நீ ப்ரண்டா இருக்கும் போதே அப்படி தான். இப்ப நீ என் உயிர்டி. எப்படிடி உன்னை பிரிஞ்சி இந்த மூனு மாசம் இருக்கப்போறேன்" என அவள் தோள் சாய்ந்து வேதனைக்குரலில் இவன் கூற,

"அதெல்லாம் இருக்கலாம். தினமும் ஸ்கைப்ல பேசிக்கலாம்.சட்டுனு மூனு மாசம் முடிஞ்சிடும்" என அவனுக்கு தேறுதல் கூறவதுப்போல் தனக்கும் கூறிக்கொண்டாள்.

இரவு பன்னிரெண்டு மணியளவில் விமான நிலையத்திற்கு கிளம்பினர் இருவரும்.

"வாணிய உன் கூட தங்க சொல்லிட்டேன். வீக்கெண்ட்ஸ் வாணி இல்லனா ஊருக்குப் போய்டு. உங்க வீட்டுல இல்ல நம்ம வீட்டுல எங்கனாலும் இரு. ஒன்னும் பிரச்சனையில்ல. நான் அம்மாகிட்ட பேசிட்டேன். கரெக்ட்டா டைம்க்கு சாப்பிடனும். அப்பப்போ இந்த அத்தானையும் நினைச்சிக்கோடா அம்முக்குட்டி" எனக் கூறி இறுக அணைத்திருந்தான் அவளை.

அவள் தோளில் பதிந்திருந்த இவன் விழிகளில் சிறு நீர்த்துளி எட்டிப்பார்க்க அவளறியாது அந்நீரை துடைத்தவன் அழுந்த முத்தமிட்டான் அவள் கன்னத்தில். முகம் முழுவதும் முத்தமிட்டவன் பிரிவின் வலியை ஆற்றிக்கொண்டிருந்தான் அவன் செயலில்.

"நான் வரவரைக்கும் இது போதும்" எனக் கண்ணடித்து அவன் கூற, மென்மையாய் சிரித்துக் கொண்டாளவள்.

கால் டாக்சி வரவழைத்து அதில் பயணித்தனர் இருவரும். அவன் தோளில் இவள் சாயந்திருக்க இருவரும் மற்றவரின் இருத்தலை சுகித்துக் கொண்டிருந்தனர்.

நேரம் செல்ல செல்ல அவள் மனம் ரணமாய் வலிக்கவாரம்பித்தது அவனின் பிரிவையெண்ணி.

முதல் நாள் பள்ளி செல்லும் குழந்தை வீட்டிலிருந்து கிளம்பி பள்ளி வாசலை அடையும் வரை குதூகலமாய் இருந்துவிட்டு பெற்றோர் விட்டுச் செல்லும் நொடி அழுது ஆர்ப்பாட்டம் செய்யுமே, அத்தகைய மனநிலையில் தான் இருந்தாள் வேணி.

அவன் உள் செல்ல சில நிமிடங்களே இருந்த நேரம், "பத்திரமா வீட்டுக்குப் போ. எனக்கு மெசேஜ் பண்ணு. நான் ஃப்ளைட்ல இருந்து இறங்கினதும் உனக்கு கால் பண்றேன்" எனக்கூறி அவன் விடைப்பெற்ற தருணம் , இவளின் மனம் தவித்து துடித்துக்கொண்டிருக்க, இளா என்றழைத்தவள் அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்திருந்தாள்.

விழிகளில் நீர் அருவியாய் கொட்டிக்கொண்டிருக்க,"லவ் யூ இளா. லவ் யூ இளா" என விடாது பிதற்றிக்கொண்டிருந்தாள்.

இது விமான நிலையத்தில் வழமையாய் நிகழும் காட்சி என்பதால் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

எவர் முன்னும் அழாமல் தன்னை கட்டுப்படுத்தும் தன் மனைவி இன்று சுற்றத்தை மறந்து அவனை மட்டுமே மனதில் சுமந்து தன் காதலை உயிர்துடிப்பாய் உரைத்துக் கொண்டிருந்த இந்த வேளையில் மெய் சிலிர்த்து போனான் இளா.

அவன் கன்னம் தாங்கி தன் விழியின் உவர்நீர் அவன் கன்னம் தீண்ட முத்தமிட்டவள் மீண்டும் அவன் மார்பில் தலைசாய்த்துக் கொண்டாள்.

அவளால் அவன் விழிகளும் நீர் குளத்தில் மிதக்க தன்னை ஆசுவாசப்படுத்தியவன், அவளை தேற்ற கிண்டலில் இறங்கினான்.

"அடியேய் பொண்டாட்டி இந்த லவ் யூ வ முன்னாடியே சொல்லிருந்தா இந்நேரத்துக்கு உன் வயத்துக்குள்ள நம்ம பிள்ளைய டான்ஸ் ஆட விட்டிருக்கலாமேடி. எப்ப வந்து சொல்றா பாரு. நல்ல நேரம் பார்த்தடி உன் காதலை சொல்ல" என கிண்டலாய் கூறி அவளை சீண்ட, எதையும் காதில் வாங்காது அவனை அணைத்த கைகளையும் விலக்காது அமைதிக்காத்தாள்.

"என்னடா அம்ஸ்... இப்படி நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா நான் எப்படி நிம்மதியா போக முடியும்?? சீக்கிரமா உனக்கு டிபெண்டன்ட் விசாக்கு அரேண்ஜ் செய்றேன். மூனு மாசத்துக்குள்ளே உனக்கு எப்ப கிடைச்சாலும் என் கூட வந்து இருந்திடு" எனக் கொஞ்சலாய் ஆரம்பித்து தன்னுடன் அவளிருக்கும் வழிவகை கூறி அவன் முடிக்க,

கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அவள் அவன் முகம் நோக்க,"யாருடா இது அழு மூஞ்சு பொண்ணுனு எல்லாரும் உன்னையே தான் பார்க்கிறாங்க" என சிரித்துக்கொண்டே கூற,

"பார்க்கட்டும். என் புருஷனை பிரிச்சியிருக்கிற கஷ்டம் எனக்கு தானே தெரியும்." என மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க அவள் கூற,

அவள் கன்னம் தாங்கி தன் பெருவிரலால் அவள் விழி நீர் துடைத்தவன், "என் செல்ல பொண்டாட்டி எப்பவும் யாருக்காகவும் யாரு முன்னாடியும் அழக்கூடாது. யாருக்காகவும் உன் பாலிஸிய நீ தளர்த்திக்க கூடாது. இப்ப சந்தோஷமா சிரிச்சி அத்தானை வழி அனுப்புவியாம். அத்தான் வேலைலாம் முடிச்சிட்டு வந்ததும் உன் வயித்துல நம்ம பிள்ளைய டான்ஸ் ஆட வைக்கிற வேலைய இரண்டு பேரும் சேர்ந்து பார்ப்போமாம்" என இதழ் விரிந்த சிரிப்புடன் கண் சிமிட்டி அவன் கூற,

எப்பொழுதும் அவன் சிரிப்பில் மயங்கும் தன் உள்ளத்தை அதன் போக்கில் விட்டவள்,"அழகன்டா நீ" என வாய்விட்டு கூறியவள் இழுத்திருந்தாள் அவன் மீசையை.

"ஆஆஆஆ" என அலறியவன் கடித்திருந்தான் அவள் மூக்கை.

இதழ் பதித்தான் அவள் மூக்குத்தியில்.

"நல்லா சாப்பிடு இளா. ரொம்ப ஸ்டெரஸ் எடுத்துக்காத. நேரத்துக்கு சாப்பிட்டு தூங்கனும் சரியா. தினமும் என்கிட்ட மறக்காம பேசனும். இப்போதைக்கு அவ்ளோ தான். மீதி எதுவும் நியாபகம் வந்தா மெசெஜ் பண்றேன்." என்றவள் கூறியதும் இருவரும் மற்றவரை இதமாய் அணைத்து விலகினர்.

மனம் நிறைத்த வேதனையுடன் பாரமான மனதுடன் இதயம் முழுக்க நிரம்பிய காதலுடன் அவன் சிங்கப்பூர் விமானத்தில் பயணிக்க இங்கு தன் வீட்டிற்கு கால் டாக்சியில் பயணித்துக் கொண்டிருந்தாள் இவள்.

--உருகல் தொடரும்
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20:

தனிமை சிறை வாசத்தில் அவள்...

மனம் எங்கிலும் அவன் வாசமே அவளுக்கு...

அவனின் வாசம் தன் வசம்
இழக்க செய்ய
கண்களில் கண்ணீர் கோடுகள்...


எட்டு மாத மண வாழ்வில்
அவனின்றி அவள் தனிமையில்
கழிக்கும் இரவிது...


எண்ணங்கள் யாவிலும் திண்ணமாய் அவளவனே....

ஓரிரவே தீரா நாளாய் பயணிக்கையில்
எங்ஙனம் தாங்குவாள் பெண்ணவள்
வருடக்கணக்கான பிரிவை....


அவனை கண்ட நொடி..

இனிக்க இனிக்க பேசிப்பழகி
தேன் மிட்டாயாய் அவளுள்
காதலாய் அவன் ஊடுருவிய நாட்கள்
விரிகிறது மனத்திரையில்....


வரமாய் தோன்றிய நாட்கள்
நினைவுகளாய் மனதின் இடுக்குகளில்...


அந்நினைவே மனதை
கொல்லும் ரணமாய்
விடியா இரவும் முடியா இரவானது..


இனி நிமிடமும் நகருமே நரகமாய்
அவனின்றி...


அவளை பிடித்தமில்லை எனக்கூறி
விலகவில்லை அவன்..


வார்த்தை சண்டையில்
சச்சரவாகி் பிரியவுமில்லை அவன்..


தலைகண யுத்தமும் நிகழவில்லை
அவர்களுக்கிடையில்..


உன் புன்னகை போதும் பெண்ணே
பொன் நகை வேண்டாமென
மணந்தவனாதலால்
வரதட்சனை பிரிவுமில்லை இது...


தம்பதிகள் தனித்து வாழும்
ஆடி மாத பிரிவுமில்லை இது...



மேலான துயரத்தில்
உழன்றிருந்தான் அவளனவனும்
அவளின் நினைவில் தூரதேசத்தில்...


நன்மையிலும் தீமை இதுதானோ??

சுகத்தில் மறைந்திருக்கும் சோகமும் இதுதானோ??

லட்சங்கள் மேல் கொண்ட லட்சியத்திற்காய்

குடும்ப பொறுப்பையேற்ற
கணவனாய்..


கிடைத்த வாய்ப்பை
பயன்படுத்துபவனாய்
அதில் பயன்பெறுபவனாய்...


சென்றுவிட்டான் அந்நியதேசத்திற்கு
பணிநிமித்தமாய்.....


அணுவிலும் அவளவன் நினைவாய்

திசுக்களிலும் அவன் நினைவை
சுவாசமாக்கி


காத்திருக்கிறாள் காரிகையும்
நுழைவிசைவிற்காய்
அவனுடன் பயணிக்க.....


நேரம் காலை மூன்று மணியாகியிருந்தது. பெங்களுர் விமான நிலையத்திலிருந்து கிளம்பி வீட்டை வந்தடைந்தாள் வேணி.
முகப்பறையில் சோஃபாவில் அமர்ந்து தலையை பின்னே சாய்த்து கண் மூடினாளவள்.


மனம் முழுதும் அவனின் நினைவுகள். பாரமாய் நெஞ்சை அழுத்தியது அவனின் பிரிவு. அவனைக் கண்ட நாள் முதல் இன்றைய நொடி வரை அனைத்து நிகழ்வுகளும் ஓடியது அவளின் மனக்கண்ணில். கண்ணை திறந்தவள் தன்னருகிருந்த மெத்தையை தடவிக்கொடுத்தாள். அவன் அமரும் இடம். அங்கமர்ந்து அவன் கூறிய வார்த்தைகள் அன்றைய நிகழ்வுகள் அவள் நினைவிலாடின.

திருமணம் முடிந்து பெங்களூர் வந்திருந்த சமயமது.

இவர்களை செட்டில் செய்துவிட்டு இவர்கள் வீட்டு பெரியவர்கள் ஊருக்கு செல்ல இவர்கள் வழியனுப்பிவித்து வந்த சமயமது.

அது மதிய நேரம்... இது வரை உடன் இருந்த உறவினர்களை வழியனுப்பி விட்டு, வெளியில் உணவு உண்டுவிட்டு தங்களின் பெங்களூர் வீட்டிற்கு வந்தனர் இளாவும் வேணியும்.

என்ன தான் இளா நண்பனாய் நன்கு பரிச்சயமானவனாய் இருந்தாலும், இவ்வாறு ஒரு வீட்டில் ஒரு ஆணுடன் தனித்து இருப்பது அம்சவேணிக்கு பெரும் தயக்கத்தை விளைவிக்க, அவளுடையப் பொறுப்புச்சுமை பற்றி அவளின் தாய் கூறிச்சென்றது வேறு அவளை வெகுவாய் வாட்ட, அதிலும் பெற்றோர்கள் ஊருக்குச் சென்றது புது மணப்பெண்ணாய் அவளின் மனதை வருந்தச் செய்ய, அனைத்துமாய் அவளின் மனதை அழுத்த, மனதில் கவலைக் குடிக்கொண்டது.

உடை மாற்றி விட்டு வந்த இளா, முகப்பறையில் அமர்ந்திருந்த வேணியின் வேதனை முகம் கண்டதும், அவளின் அருகில் அமர்ந்தவன், அவளின் கைகளைப் பிடித்து, "என்னாச்சி அம்ஸ்??" எனக் கேட்டு அவளின் தலையை வருட,

அவளின் தலை தானாய் சாய்ந்து இளப்பாறியது அவனின் தோளில்.
அவனின் முழங்கையை தன்னிரு கைகளால் பற்றியவள், தன் முகத்தை அவனின் தோளில் புதைத்தாள்.


எவர் முன்னும் தன் கண்ணீரை காண்பிக்காது கட்டுப்படுத்துபவள், இளாவிடம் மட்டுமே அவள் அவளாய் இருப்பாள். பெற்றோரின் பிரிவும் அவளை வருத்தியிருக்க கண்ணில் வழிந்த நீரை அவள் தோளில் புதைத்திருந்தாள்.

"அம்மா அப்பா ஊருக்கு போனதால கஷ்டமாயிருக்கா அம்ஸ்??" என இளா கேட்க, தோளிலிருந்து முகத்தை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தவள்,

"எனக்கு பயமாயிருக்கு இளா. லைப் எப்படி போகும்?? என்னமோ மனசு சங்கடமா இருக்கு.நீ என் ஃப்ரண்ட் ஆனதுல இருந்து இது வரை உன் கூட இருக்கும் போது நான் என்னிக்குமே என்னைய பத்தி கவலைப்பட்டது இல்லடா. ஏன் உன்னை பத்திக்கூட நான் யோசிச்சது இல்ல. ஆனா அம்மா போகும் போது என்னுடைய பொறுப்புகளைச் சொல்லும் போது தான் உனக்காக நான் இதுவரை யோசிக்கவே இல்லையேனு கில்டியா ஃபீல் ஆகுது இளா. நாம கல்யாணம் செய்ய டிசைட் செஞ்சதும், நான் எதை பத்தியும் யோசிக்காம ஃப்ரண்டாவே உன்னை நினைக்கனும்னு நீ சொன்னதுல நிஜமாவே எதையும் யோசிக்காம இருந்துட்டேனேடா. இப்ப அம்மா சொல்ல சொல்ல அடி வயித்துல அப்படியே ஒரு பயப்பந்து உருண்டுச்சு பாரு. ஆனா நீ பக்கத்துல இருந்தா இப்படி பயம் எதுவும் எனக்கு வரமாட்டேங்குது இளா" என அழுகையில் ஆரம்பித்து பயம் கலந்த தெளிவில் அவள் தன் பேச்சை நிறுத்த,

அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டவன், "அப்படி அத்தை என்ன தான் சொன்னாங்க??? நீ இவ்ளோ பயப்படுற அளவுக்கு??" என இளா வினவ,

"நான் டெய்லி உனக்கு சமைச்சு தரனுமாம். வீட்டைலாம் கூட்டிப்பெருக்கி சுத்தமா வச்சிக்கனுமாம். உன்னை நல்லா சாப்பிட வச்சி உன் உடம்பை ஏத்துனுமாம். உன் துணி துவைக்கனுமாம்" இதெல்லாம் கூறும் போதே அவளின் கண்கள் மிரள அவனைப் பார்க்க,

"அடிப்பாவி இதுக்கு தான் இந்தப் பயம் கலந்த அழுகையா?? நான் என்னென்னமோலாம் நினைச்சு உன் கூட கனவுல டூயட் பாட ஆரம்பிச்சிட்டேனே" என சிரித்துக் கொண்டே அவன் கூற,
பட்டென்று அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள்.


"புருஷனை அடிக்கிற நீ... நீயெல்லாம் என்ன பொண்டாட்டி??" என மேலும் அவளை அவன் வம்பிழுக்க,

"உன்னைலாம் ஒரு அடியோட விட்டது தப்புடா" எனக் கூறிக்கொண்டே அவனின் தலை கைக்காலென அவள் அடித்து நொறுக்க,

அடிக்கும் அவளின் கையை அவன் தடுத்து நிறுத்தி பற்றப் போக, அவன் மேலேயே அவள் சரிய, அதையும் பொருட்படுத்தாது அவனை அடிப்பதைத் தொடர்ந்து அவள் செய்துக் கொண்டிருக்க,

அவளை சீண்டும் எண்ணம் மனதிலெழ கடித்தான் அவளின் கன்னத்தை.

அவள் அலறி அவன் முகம் பார்க்க, அடுத்ததாய் மறுகன்னத்திலும் அவன் கடிக்க செல்வதுப் போல் சென்று இதழ் பதிக்க, சட்டென்று அவன் மேலிருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டவள் அவன் மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள்.

"எதுக்குடி இப்ப என்னை கொட்டின??" என கொட்டுவதற்காய் அவள் மேல் பாயந்தான்.

"வேண்டாம் கோவக்காய் இதோட நிறுத்துக்கோ. அப்புறம் புடலங்காய் ஆக்கிடுவேன்" என அவன் கை தன் தலைக்கு வருவதைக் கண்டதும் கண்களை இறுக மூடி வேணிக் கூற,

அவளின் மூடிய கண்களை ஒரு நொடி பார்த்தவன் பதித்திருந்தான் தன் இதழை அவளின் நெற்றியில்.

அடிப்பான் அல்லது கடிப்பானென நினைத்தவள், அவன் முத்தத்தில் அதிர்ந்து கண்களை திறக்க, "இனி என்னை நீ அடிச்சீனா இது தான் பனிஷ்மெண்ட். ஒவ்வொரு அடிக்கும் ஒரு கிஸ்" என கண் சிமிட்டி இளா உரைக்க, எவ்வாறு இதற்கு எதிர்வினை ஆற்றுவதெனத் தெரியாது முழித்தாள் வேணி.

அவளின் முழிக்கும் பாவனையைக் கண்டவன், "ஏன்டி திருடனைப் பார்க்கிற மாதிரி என்னைப் பார்க்கிற??" எனக் கேலியாய் உரைத்துக்கொண்டே அவளை எழும்பச் செய்து தன் தோள் வளைக்குள் அமர்த்திக் கொண்டவன்,

"நீ சொன்னதெல்லாம் ஒரு ப்ரச்சனையே இல்லைடா. சமையல், வீட்டு வேலை, பராமரிப்பு, சம்பள பட்ஜெட், கணக்கு வழக்கு இதெல்லாமே நம்ம டிஸ்கஸ் செஞ்சி ஷேர் செய்து ஒருதருக்கு தெரியாததை இன்னொருதருக்கு சொல்லிக் கொடுத்துனு செஞ்சிடலாம் அம்ஸ். ஏன்னா அதற்கான விட்டுக்கொடுத்தல் நம்ம இரண்டு பேர் கிட்டயுமே இருக்கு. ஆனால் இதெல்லாம் விட ஒரு பெரிய பிரச்சனை இருக்குடா. அதுக்கு உன் முழுமையான காதல் எனக்கு வேணும்"

தன் கைப்பேசியிலிருந்து ஒரு புகைப்படத்தை அவளிடம் காண்பித்து அதிலுள்ள வரியைப் படிக்கச் சொன்னான்.

அதில் கணவன் மனைவியின் நெற்றியில் இதழ் பதித்திருக்க கீழே இவ்வரிகள் இருந்தது.

One kiss on the forehead is much sweeter than the thousand kiss on the lips. No lust but full of love and respect.
(நெற்றியிலிடப்படும் ஒரு முத்தம் ஆயிரம் இதழ் முத்தத்தை விட இனிமையானது. அதில் காமமில்லை முழுக்க முழுக்க காதலும் மரியாதையும் மட்டுமே)


அதை அவள் படித்துவிட்டு அவனை நோக்க,"எனக்கு எப்பவுமே ஒரு தாட் உண்டு அம்ஸ். நம்மள பார்த்து தானே நம்ம பிள்ளைங்க வளருறாங்க. உண்மையா நேர்மையா வாழுறதுலாம் நம்மளை பார்த்து கத்துக்கிட்டு வளர்ற பிள்ளைங்க. காமம் இல்லாத உண்மையான காதலையும் அப்பா அம்மாகிட்ட பார்த்து அந்த அன்பை உணர்ந்து வளரனும்னு நினைப்பேன். அன்பாய் பாசமாய் கொடுக்கும் முத்தம் என்னிக்குமே காமத்தில் சேர்ந்தது இல்லை அம்ஸ். அன்பாய் எனக்கு நீயோ இல்ல உனக்கு நானோ முத்தமிடுவது, ஊட்டிவிடுறது, ஒருதருக்கருக் கொருத்தவர் உதவி செய்றது, விட்டுக்கொடுத்து வாழுறது, சண்டைப்போட்ட உடனே சேர்ந்துக்கிறது.... இதெல்லாம் டே டு டே ஃலைப்ல பார்த்து வளர்ற நம்ம பிள்ளைகளுக்கு உண்மையான காதலுக்கு உதாரணமா நாம தான் தெரிவோம். எந்த காதல் படமும் காதல் கதையும் பெரிசா தெரியாது. அதனால இனி தினமும் காலையும் இரவும் அன்றைய நாளை முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடிப்போம். அப்படியே நம்ம காதலை டெவலப் செய்வோம். சரியா அம்முகுட்டி" என அவள் நெற்றியில் அவன் முட்ட, காமமில்லாத அன்பு முத்தமா?? என்ன சொல்றான் இவன்?? என அவள் தன் மூளையை கசக்கி யோசிக்க,

"சரி விடுடா அம்ஸ். நீ ரொம்ப யோசிச்சு மண்டைய கொழப்பிக்காத.நான் முன்னாடி சொன்ன மாதிரி எல்லாம் தானா மாறும். நாம் வாழ போற வாழ்க்கைல அதுவா இயல்பா மாறும். மனசு முழுதும் காதலால் நிரப்பிக்கிட்டு நான் சொன்ன மாதிரியே வாழ்வோம். அப்ப உனக்கு புரியும்" எனக் கூறி தன் வேலையை பார்க்க சென்றானவன்.

அதன் அர்த்தம் இப்பொழுது புரிந்தது அவளுக்கு.

இத்தனை நாள் தான் வாழ்ந்த வாழ்க்கை காதல் மட்டுமே நிரம்பிய வாழ்க்கையென புரிந்தது அவளுக்கு.

அவனை நினைத்து மனதில் பெருமிதம் பொங்கியது. என் இளா என மனதில் கூறி பெருமைப்பட்டுக் கொண்டாள்.

அவளருகிலிருந்த மெத்தை எப்பொழுதும் அவன் அமரும் இடமதில் அவனிருப்பதாய் எண்ணிக்கொண்டாள். அவன் மடி சாய்வதாய் எண்ணி தலை சாய்த்துக் கொண்டாள். இரவு தூக்கமின்மை மற்றும் மனதின் சோர்வு அவளை ஆழ்ந்த நித்திரைக்கு தள்ளியது.
ஆழ்ந்த நித்திரையிலிருந்த வேணிக்கு யாரோ தூரமாய் கதவை தட்டுவதுப் போல் ஓசை கேட்க, தூக்கத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாய் நடப்புக்கு அவள் மூளை வந்திருக்க, அவள் வீட்டின் கதவை யாரோ பலமாய் தட்டும் சத்தம் கேட்டது.


அடித்துபிடித்து எழுந்தவள் ஓடிச்சென்று கதவை திறக்க, அங்கே கோப முகத்துடன் நின்றிருந்தாள் வாணி.

"ஏன்டி இப்படி காலைலயே வந்து என் தூக்கத்தை கெடுத்த??" எனத் தூக்கக் கலக்கத்தில் வேணிக் கேட்க,

"அடியேய் கண் முழிச்சி மணி என்னனு பாரு??" எனக் கத்தினாள் வாணி.

மணி மாலை நான்கு மணியை காண்பிக்க,"அச்சோ இவ்ளோ நேரமாவா தூங்கினேன். அய்யோ இளா கால் பண்ணிருப்பானே" என தன் மொபைலை தேடிச் சென்றாள் வேணி.

அப்பொழுது ஒரு மணி நேரம் முன்பு தான் ஒரு சிங்கப்பூர் நம்பரிலிருந்து கால் வந்திருந்தது. அவன் அங்குப் போய் சேர்ந்ததும் வந்து சேர்ந்துவிட்டதாய் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் அவளுக்கு.
பின் இளாவிற்கு நடந்தவைகளை வேணி மெசேஜ் செய்து அனுப்ப,ஸ்கைப்க்கு வருமாறு கூறினானவன்.


அவளறை சென்று லேப்டாப் உயிர்பித்துக் கொண்டிருந்த சமயம், அங்கு வந்த வாணி,"நீ இன்னிக்கு ஆபிசிக்கு லீவ் சொல்லல. நியாபகம் இருக்கா உனக்கு??" என்றவள் முறைத்துக் கொண்டு கேட்க,

"அச்சோ நீ இங்க தான் இருக்கியாடி. சாரிடி உன்னை மறந்தே போய்டேன்" என மன்னிப்பு கேட்டவள், "அய்யோ இளாவ தவிற எதுவுமே கண்ணுக்கும் தெரிய மாட்டேங்குது கருத்திலும் நிக்க மாட்டேங்குதே" என மனதில் கூறிக் கொண்டே தன் தலையில் அடித்துக் கொண்டாள் வேணி.

அவளின் செயல்களை கண்கள் இடுங்கப் பார்த்துக் கொண்டிருந்த வாணி, "என்னடி ஆச்சு உனக்கு?? இளா அண்ணாவ பிரிஞ்சதுல பைத்தியம் கீத்தியம் பிடிச்சுப்போச்சா" எனக் கேட்க,

"ச்சீ போடி. ஓவரா தான் கிண்டல் பண்ற என்னை" என்ற வேணி, "ஆமா என்னமோ கேட்டியே முன்னாடி என்ன கேட்ட??" என்று வேணி வாணிக் கேட்க,

"ஹ்ம்ம் சொன்னேன் சுரக்காய்க்கு உப்பு இல்லனு" என நொடித்துக் கொண்ட வாணி, "இன்னிக்கு நீ ஆபிசுக்கு லீவ் சொல்லலனு நியாபகம் இருக்கானு கேட்டேன்" என வாணி கூறிய நொடி,

"அய்யய்யோ" என பதறி எழுந்தாள் வேணி.

"சுத்தமா ஆபிஸ மறந்துட்டேன்டி. அந்த லீட் வேற இப்ப என்னை வகை வகையா திட்டிட்டு இருப்பாறே. ஏற்கனவே நிறைய லீவ் போடுறேனு கம்ப்ளைண்ட் பண்ணிட்டாரு" என வேணி புலம்ப,

"நிஜமாவே உனக்கு இளாண்ணா பைத்தியம் முத்திப்போச்சுடி. அவரை தவிற யாரும் உன் மைண்ட்ல இப்ப இல்லைல" என கேலியாய் வாணி கேட்க,

"ம்ப்ச் அதை விடுடி. இந்த லீடை எப்படி சமாளிக்கிறது. ஃபோன் செஞ்சி என்னனு அவர் கிட்ட சொல்றது. இரண்டு மணி ஷிப்ட்க்கு அஞ்சு மணிக்கு போன் பண்ணி வரலனு சொன்னா மனுஷன் கடுப்பாக மாட்டாரு" என கவலையாய் வேணிக் கேட்க,

"செய்றதெல்லாம் செஞ்சிட்டு இப்ப புலம்பினா என்ன செய்ய??" என வாணிக் கூற,

"என் செல்ல வாணில. என் குட்டு ப்ரண்டுல. அந்த லீடை சமாளிக்க ஒரு ஐடியா கொடுடி" என வாணியை கொஞ்சினாள் வேணி.

அவளின் கொஞ்சலில் வாய் விட்டு சிரித்தவள்,"அதெல்லாம் நான் சமாளிச்சிட்டேன். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்" என்றாள் வாணி.

"எப்படிடி?? எப்படி சமாளிச்ச??" என்றவள் கேட்க,

"நான் மார்னிங் ஷிப்ட் தானே. இரண்டு மணிக்கு நீ வரலனதும் ஃபோன் பண்ணேன் எடுக்கலை. இளா அண்ணா மேல உள்ள லவ்ஸ்ல இப்படி லூசுத்தனமா எதுவும் செஞ்சிருப்பனு தோணுச்சு. அதான் நானே உனக்கு லீவ்னு சொல்லிட்டேன். அடிக்கடி லீவ் எடுக்குறனு கத்ததான் செஞ்சார்" என வாணி சொல்லி முடிக்க, ஸ்கைப்பில் வந்தான் இளா.

"சரி நீ அண்ணாக் கூட பேசிக்கிட்டு இரு, நான் ஹால்ல இருக்கேன். பேசி முடிச்சதும் என்னைய கூப்டு" எனக் கூறி முகப்பறைக்கு சென்று விட்டாள் வாணி.

அன்றைய நிகழ்வுகளை இளாவிடம் வேணிக் கூற,"ஹா ஹா ஹா. வாணி சொன்னது போல என் மேல அவ்ளோ லவ்ஸ் வந்துடுச்சா அம்ஸ் உனக்கு" என அவன் சிரிப்பாய் கேட்க,

"சீ போடா" என வெட்கப்பட்டாளவள்.

"நான் பக்கத்துல இருக்கும் போது என்னிக்காவது இப்படி வெட்கப்பட்டிருக்கியாடி. ஹ்ம்ம் புருஷன் பக்கத்துல இருக்கும் போது அவங்க அருமை எந்த பொண்டாட்டிக்கும் தெரியறதேயில்லை" என கேலியாய் அவன் பேச,

"போடா குரங்கு. அதெல்லாம் உன் அருமை எனக்கு எப்பவும் தெரியும். நான் யார் கிட்டேயும் உன் விட்டுக்கொடுத்ததில்ல தெரியுமா"

இவ்வாறாக இவர்களின் பேச்சு ஒரு மணி நேரம் கடந்துச் சென்றுக் கொண்டிருக்க, "எக்ஸ்க்யூஸ் மீ. நான் கொஞ்சம் வரலாமா??" என்று நுழைந்தாள் வாணி.

சிறிது நேரம் வாணியிடம் அளவளாவிய இளா,"வாணிம்மா இந்த அம்மு பொண்ணுக்கு பொறுப்பே இல்லம்மா. கொஞ்சம் நாள் அவக்கூடவே இருக்கியா ப்ளீஸ். இரண்டு பேரும் ஒரே ஷிப்ட் வாங்கிட்டு ஒன்னா போய்ட்டு வாங்களேன். அது தான் சேஃப்னு எனக்கு தோணுது. இல்லனா இவ இப்படி தான் வீட்டுல தனியா இருந்து மருகிட்டு இருப்பா" என இளா வேண்டுகோள் வைக்க,

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்ணா. நீங்க கவலைப்படாதீங்க. இதுக்கு எதுக்கு ப்ளீல்லாம் சொல்லிக்கிட்டு" என்றாள் வாணி.

அதன்பின் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றான் இளா.

அதன் பின் வந்த நாட்களில் மேனேஜரிடம் பேசி வாணி வேணி இருவரும் மூன்று மாதத்திற்கு ஒரே ஷிப்ட் வாங்கியிருந்தனர்.

நாட்கள் அதன் போக்கில் வேகமாய் செல்ல ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், ஆஷிக் அழைத்திருந்தான் வாணியின் கைபேசிக்கு.

ஆஷிக் ரஹானா திருமணம் முடிந்தும் ஆஷிக் பெங்களுரில் தனியே தான் தங்கியிருந்தான். ரஹானாவின் முதுகலைப் படிப்பு முடிவடைந்திடாத நிலையில் திருமணம் நிகழ்ந்ததால் அங்கேயே தங்கயிருந்து அவள் பரீட்சை முடிந்ததும் பெங்களுரில் வீடெடுத்து தங்கிக் கொள்ளலாமென கூறுயிருந்தான் ஆஷிக்.

அதுவரை வாரயிறுதி நாட்கள் இவன் ரஹாவின் ஊர் சென்று அவளை பார்த்துவிட்டு வருவான்.
இந்த வாரம் வாரயிறுதி நாளில் பெங்களுரில் இருப்பதால் வாணியை சந்திக்கலாமென எண்ணி அழைத்திருந்தான் அவளை.


"என்னங்க மேடம் எங்களைலாம் நியாபகம் இருக்கா??" என்றான் ஆஷிக் அவள் அழைப்பை ஏற்றதும்.

"டேய் அதை நான் கேட்கனும். கல்யாண ரிசப்ஷன்ல பார்த்தோட சரி. சார் ரொம்ப பிசி ஆயிட்டீங்க. இப்ப எதுவும் வேலை ஆகனும்னு தானே ஃபோன் பண்ண. எதுவும் டிக்கெட் புக் பண்ணி தரனுமா??" என வாணி கேட்க, சுர்ரென அவனுக்கு கோபமேற,

"மண்டையிலேயே நாலு போட்டிறுப்பேன் இப்ப நீ நேர்ல இருந்திருந்தீனா. என்ன நினைச்சிட்டு இப்படி பேசுற நீ?? என்னைய பத்தி உனக்கு தெரியாது. தேவைக்கு மட்டும் ஃபோன் பண்ற ஆளா நானு" என்றவன் கேட்க,

"சாரிடா. ஏதோ ஃபுளோல அப்படி வந்துடுச்சி. எக்ஸ்ட்ரீம்லி சாரி" என அவள் மன்னிப்பு கேட்க,

"சரி லோன்லியா ஃபீல் பண்றியா நீ. பிஜில தனியா இருக்கிறது கடுப்பா இருக்கா. அங்க யாரும் ஃப்ரண்ட் கிடைச்சாங்களா??" என ஆஷிக் கேட்க,

"இல்லடா இப்ப த்ரீ மன்த்ஸ் வேணி கூட தான் ஸ்டே" என இளாவின் ஆன்சைட் பற்றி கூறினாள் வாணி.

"அந்த பொண்ணுங்க உன்னை யூஸ் பண்ணிக்கிறாங்களா கேபி??" என சந்தேகமாய் அவன் கேட்க,

"ச்சே ச்சே. அப்படிலாம் இல்லடா. அவங்களுக்கு எப்பவுமே என் மேல அக்கறை அதிகம். இளா அண்ணா என்னை கேட்டிருக்கலனா கூட நான் வேணிக்கூட வந்து ஸ்டே பண்ணிருப்பேன். இதுக்கு கூட ஹெல்ப் பண்ணலைனா அப்புறம் என்னடா ப்ரண்டுனு இருந்துட்டு" என்றுரைத்தாள் வாணி.

"சரி நீ எதுக்கு ஃபோன் பண்ண?? அதை சொல்லு முதல்ல" என்றாளவள்.

"நாளைக்கு நம்ம மீட் பண்ணலாமானு கேட்க தான் பண்ணேன்." - ஆஷிக்.

"என்னடா அதிசயமா இருக்கு. என்கேஜ்மெண்ட் ஆன நாள்லருந்து வீக்கெண்ட் ஆச்சினா கால்ல சக்கரம் கட்டின மாதிரி சென்னைக்கு பறந்துப்போவ. இப்ப அதிசயமா சனிக்கிழமை மீட் பண்ணலாமானு கேட்குற" என்றவள் வியப்பாய் கேட்க,

"அது அப்படி தான். நாளைக்கு நீ வரியா இல்லையா?? ஈவ்னிங் சிக்ஸ் ஃபோரம் மால்ல மீட் பண்ணலாம்" என்றானவன்.

சரியெனக் கூறி அழைப்பை வைத்தாளவள்.

மறுநாள் ஃபோரம் மாலுக்குள் நுழைந்து அவர்கள் வழமையாய் சந்தித்துக்கொள்ளும் இடத்திற்கு அவள் செல்ல,கேபிக்கா என வாணியை அணைத்துக் கொண்டாள் ரஹானா.

ஆஷிக் ரஹானா நிச்சயத்திற்குப்பின் ரஹாவிடம் பேசிய நாளிலிருந்து இன்று வரை ஆஷிக்கை விட ரஹானாவுடன் அதிக பேச்சு மற்றும் குறுஞ்செய்தி தொடர்பில் தான் இருந்தாள் வாணி. அவர்களுக்குள் ஓர் ஆழ்ந்த நட்பு உருவாகியிருந்தது.

"ஹே வாட் எ சர்ப்பரைஸ். ஏன்டா நேத்தே சொல்லல" என்றுக் கேட்டாள் வாணி.

"ஹ்ம்ம் சப்ரைஸ்ல இந்த முட்டைக்கண்ணு எவ்ளோ பெரிசா விரியுதுனு பார்க்கனும்னு ஆசையா இருந்துச்சி. அதான் சொல்லலை" என்றான் இளநகை முகத்தில் கூத்தாட,

"போடா டாங்கி" என அவனை கடிந்துக்கொண்டவள் ரஹா புறம் திரும்பி,"இந்த பையன் உன்னை நல்லா பார்த்துக்கிறானா ரஹாப்பொண்ணு?? இல்லனா சொல்லு நாலு காட்டு காட்டிடலாம்" என்று வாணி கேலி பேச,

"ச்சே ச்சே அதெல்லாம் வேண்டாம்க்கா. அவர் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிறார். ரொம்ப கேரிங்க்கா" என்றாள் முகத்தில் நாணம் பூக்க,

"பார்ற புருஷனைப் பத்தி பேசினாலே இந்தப் பொண்ணு வெட்கப்படுது" என கன்னத்தில் கை வைத்து வியப்பாய் வாணிக் கூற,

"கத்துக்கோ என் பொண்டாட்டி கிட்ட இருந்து. பின்னாடி உனக்கு யூஸ் ஆகும்" என்றான் ஆஷிக்.

"ஆமா நீ தனியாவா வந்த??" - ஆஷிக்
ஆமென அவள் தலையசைக்க,


"வாட் எ மெடிக்கல் மிராக்கல். கேபி கொஞ்சம் கொஞ்சமா பெரிய பொண்ணா மாறிட்டு வர போலையே" என்றான் ஆஷிக்.

"அவ்ளோலாம் இல்ல. ரெகுலரா போற இடத்துக்கு மட்டும் தனியா போக தெரியும். புது இடத்துக்குலாம் இப்பவும் நோ தான். எல்லாரும் எல்லா டைம்லயும் டிபண்ட் பண்ணிக்கிட்டு இருக்க முடியாதுல. அதனால கொஞ்சம் தனியா இருக்க ஹேண்டில் செய்ய பழகிட்டேன்"என்றாள் வாணி.

"வேணி எங்கே??" - ஆஷிக்

"அவ இளா அண்ணா ஊருக்கு போயிருக்கா. பாவம் அவ ஒரு வாரம் இந்த வீடு ஒரு வாரம் அவ அம்மா வீடுனு அல்லாடிட்டு இருக்கா. அண்ணா வரவரைக்கும் அவளுக்கு அப்படி தான் போகும்" - வாணி.

"அக்கா கேட்கனும் நினைச்சேன். என்ன இது முகத்துல ஒரே பிம்பிள்ஸ் ஹீட் பாயில்ஸா இருக்கு.ரிசப்ஷன் வரும்போது உங்களுக்கு இப்படி இல்லையே. எதுவும் அலர்ஜி ஆயிடுச்சா உங்களுக்கு??" - ரஹானா.

"ஆமா ரஹா. ஒரு மாசமா தான் இப்படி இருக்கு" - வாணி.

"டாக்டர் போய் பாத்தியா கேபி" - ஆஷிக்.

"அப்பாய்ண்மெண்ட் வாங்கினேன்டா. அப்புறம் தனியா போக மனசில்லாம விட்டுட்டேன். சென்னைக்கு போய்ட்டு அம்மா அப்பா கூட போய்க்கலாம்னு விட்டுட்டேன்." என்றாள் வாணி.
"நீ நாளைக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கு. நாளைக்கு நைட் தான் ரஹா கிளம்புவா. அவளும் நீயுமா போய் டாக்டரை பார்த்துட்டு வாங்க" - ஆஷிக்


"எதுக்குடா உங்களுக்கு வீண் சிரமம். நீங்க நல்லா சுத்தி பாத்து என்ஜாய் பண்ணுங்க. எனக்காக எதுக்கு உங்க டைம வேஸ்ட் பண்றீங்க??" என்றவள் கேட்க,

"இந்த ஹெல்ப் கூட பண்ணலைனா அப்புறம் நான்லாம் எதுக்கு ப்ரண்டுனு இருந்துட்டு??" என அவள் கூறிய டயலாக்கை அவளுக்கே அவன் கூற,வாய்விட்டு சிரித்தாள் வாணி.

"சரி ஓகே. நாளைக்கு ஹாஸ்பிட்டல்ல மீட் பண்ணலாம். அட்ரெஸ்லாம் உனக்கு நான் மெசேஜ் செய்றேன்" எனக் கூறி கிளம்பினாள் வாணி.

"கேபி இரு தனியா தானே போகனும். நைட் ஆயிடுச்சுல. நாங்களும் கூட வர்றோம்" என்றவன்,
வாணியையும் ரஹானாவையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு, தன் பைக்கில் அந்த ஆட்டோவை தொடர்ந்து சென்றான்.


வாணியின் இருப்பிடம் வந்ததும், அவளிடம் விடைபெற்று ரஹாவை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு அவ்விடத்தை விட்டு கிளம்பினான்.
--
மறுநாள் வாணி அப்பாய்ண்மெண்ட் வாங்கிய மருத்துவமனையின் அருகிலிருந்த ஐஸ்க்ரீம் பார்லரில் அமர்ந்திருந்தனர் ஆஷிக்கும் ரஹானாவும். வாணியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
ரஹானாவிற்கு வெண்ணிலா ஐஸ்க்ரீம் பிடிக்குமென ஆர்டர் செய்தவன், அவனுக்காக பட்டர் ஸ்காட்ச் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருக்க,


"ம்ப்ச் எவ்ளோ நாள்ங்க இப்படி இருக்கிறது. உங்களை விட்டு பிரியுற வீக்கெண்ட்லாம் அந்த நைட் அழாம நான் தூங்கினதில்லை. நீங்க கூட இருந்தாக் கூட ஒழுங்க படிப்பேன் போல. இப்படி தள்ளியிருந்தா உங்க நினைப்பாவே இருக்கு." என ரஹானா தன் மனவருத்தத்தை புலம்பலாய் கூற,
"நீ இப்படி வருத்தப்பட்டு பேசுறதைக் கேட்க எனக்கு சந்தோஷமா இருக்கே" என்றுரைத்துவிட்டு கண்சிமிட்டி அவன் ஈயென இளிக்க,


"நான் துக்கப்படுறது உங்களுக்கு சந்தஷமா இருக்கா?? நீங்க ஒன்னும் என்கிட்ட பேச வேண்டாம்" என முகத்தை திருப்பிக் கொண்டாள்.

கோபத்தால் கோவப்பழமாய் சிவந்திருந்த அவளின் சிவந்த முகத்தை ரசித்துக்கொண்டிருந்தானவன்.
இவன் அவள் கையை பிடிக்க, தட்டிவிட்டாளவள்.


"நீங்க ஒன்னும் என்னை சமாதானம் செய்ய தேவையில்ல" எனக்கூறி மேஜையிலிருந்த நாளிதழை படிப்பதுப்போல் பிடித்து முகத்தை மூடிக் கொண்டாள்.

"எப்ப பார்த்தாலும் விளையாட்டு கிண்டல் கேலி தான். சீரியஸாவே எதையும் காது கொடுத்து கேட்கிறது கிடையாது" என வாய்க்குள் முனகி கொண்டாளவள்.

அவள் முனங்கினாலும் தெளிவாய் அவன் காதில் விழ, "ரஹா செல்லத்துக்கு என் மேல என்ன கோவமாம்" என அந்த நாளிதழை அவன் பிடித்து இழுக்க,அவள் பேசாது மௌனமாய் அவனை முறைக்க,

"உன்னோட எல்லா ரியாக்சனுமே அழகுடி செல்லகுட்டி. ஆனா இப்படிலாம் நம்ம தனியா இருக்கும் போது ரியாக்ஷன் கொடுத்திருந்தீனா உன்னை ஸ்பெஷலா கவனிச்சிருப்பேன். இப்ப பப்ளிக்ல என்னை வச்சக்கண் வாங்காம பார்த்தா நான் என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்??" என அவன் அவளை வம்பிழுக்க,

"சீ பப்ளிக்ல பேசுற பேச்சை பாரு. நான் சொல்ல வந்தையே மறந்துட்டேன்" என தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஹா ஹா ஹா... எனக்கு மட்டும் உன்னை பிரிஞ்சிருக்கிறது சந்தோஷம்னு நினைக்கிறியாடா. அடுத்து வர்ற சனி ஞாயிறுக்காக மனசு ஏங்கிட்டு கிடக்கும். கொஞ்ச நாளுக்கு தானே. நீ நல்லா எழுதி ஸ்கோர் பண்றது தான் எனக்கு சந்தோஷம். இல்லைனா நல்லா படிச்சிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் செஞ்சி மனசை கலச்சிட்டேனு எனக்கு கில்டி ஃபீல் ஆகும்டா. என் நினைப்பு வரும் போதெல்லாம், இந்த வார்த்தையும் நியாபகம் வச்சிக்கோடா... ஆட்டோமேடிக்கா படிச்சிடுவ. உன் ஆசைப்படி உன்னை கண்டிப்பா ஒரு கவர்ண்மெண்ட் ஜாப்ல இல்ல ஒரு காலெஜ் லெக்ச்ர்னு ஒரு பொசிஷன்ல உன்னை பார்க்கிறது தான் என்னோட சந்தோஷம். அதுக்கு என்னாலான ஹெல்ப் நான் கண்டிப்பா செய்வேன்."

"அங்கே பிஜி முடிச்சதும் இங்க எங்கயாவது லெக்சரா சேர்ந்திடு. அப்படியே பி எச்டி செய்டா இல்லனா பேங்க எக்ஸாம் பிரிபேர் பண்ணு. உனக்கு எது விருப்பமோ அதை செய்மா. நடு நடுல ரொமேன்ஸ் செஞ்சிட்டு இரண்டு க்யூட் பாப்பாஸையும் பெத்துக்கலாம்" என சிரித்து அவன் கூற,
தனக்கான அவனின் திட்டமிடலில் விக்கித்து பார்த்தாளவள்.


"உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்குதே. லவ் யூ டியர்" என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் ஸ்ருதியில்.

"ஹா ஹா ஹா. பப்ளிக்கா இப்படி உசுப்பேத்தினா நான் என்ன செய்யட்டும்" என அவள் கையை இவன் பிடிக்கப் போகவும், அவர்கள் ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம் வரவும் சரியாக இருந்தது.

தன் ஐஸ்க்ரீம் கப்பிலிருந்து ஒரு வாய் எடுத்து அவளுக்கு ஊட்ட, "ம்ப்ச் ஆளுங்க இருக்காங்க. என்ன பண்றீங்க??" என்றவள் வாங்க மறுக்க,

மீண்டும் அவன் அவளுக்கு ஊட்ட, அவள் மறுக்க, தன் ஐஸ்க்ரீமை பாதி சாப்பிட்டவன் அவளிடத்திற்கு நகர்த்தி விட்டு அவளின் ஐஸ்க்ரீமை தன் இடத்திற்கு மாற்றினான். "இப்ப என்ன செய்வ??" என்பதைப் போன்றதொரு பாவனை அவனின் முகத்தில்.

நாணங்கொண்டு சிரித்தவளின் வயிற்றினுள் தித்திப்பாய் இறங்கியது கணவன் தந்த ஐஸ்க்ரீம்.

பின் வாணி அந்த மருந்துவமனையை நெருங்கிவிட்டதாய் உரைத்ததும், அங்கிருந்து கிளம்பியவர்கள் மருத்துவமனையை அடைந்தனர்.

அங்கு சென்று சரும பிரச்சனைக்களுக்கான சிறப்பு மருந்துவரைக் காண உள் சென்றனர் வாணியும் ரஹானாவும்.

தன் சருமப் பிரச்சனையை வாணிக்கூற, அதை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தார் மருத்துவர்.

"உங்களுக்கு இதுக்கு முன்னாடி இந்தப் பிரச்சனை இருந்திருக்காமா??"

"இல்ல டாக்டர். இப்ப ஒரு மாசமா தான் நிறைய கட்டி பிம்பிள்ஸ் வருது" என்றாள் வாணி.
பின் வேலை அலுவல்கள் அவளின் பயணக்குறிப்புகள் பற்றிக் கேட்டறிந்துக் கொண்ட மருத்துவர், அவளின் இந்த பிரச்சனைக்கான காரணத்தை விவரிக்கலானார்.


"பொதுவாகவே சிஸ்டம் முன்னாடி ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் போது மானிட்டர்ல இருந்து வர்ற அந்த லைட் அண்ட் ரேஸ்(Rays) ரொம்ப ஹீட் ப்ரோடியூஸ் செய்யும். அது ஒரு சில பேருக்கு செட் ஆகாது.அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். அதுல இருந்து ஸ்கின்னை பாதுகாக்க சன்ஸ்க்ரீன் லோஷன் யூஸ் செய்யலாம்.
இன்னொன்னு நீங்க நைட் ஷிப்ட் பார்க்க ஆரம்பிச்ச பிறகு தான் இந்த பிரச்சனை வந்ததுனு சொல்றனால இது உடம்பு ஓவர் ஹீட் ஆகுறனால வந்திருக்குனு தெரியுது.
பொதுவா ரொம்ப நேரம் சிஸ்டம்ல உட்கார்ந்து வேலை செய்றவங்களுக்கு பாடி ஹீட் ஆகும். அதுக்கேத்த ஃபுட் தான் சாப்பிடனும். அதிலும் நைட் ஷிப்ட் பார்க்கிறவங்களுக்கு ஓவர் ஹீட் ஆகும். அதுக்கு ஃபர்ஸட் சொல்யூஷன் காலைல எத்தனை மணிக்கு வீட்டுக்கு போனாலும் எவ்ளோ தூக்க கலக்கத்துல இருந்தாலும் குளிச்சிட்டு தூங்குங்க. பாடி ஹீட் நல்லா குறையும். அடுத்தது கண்டிப்பா தினமும் இளநீர்,மோர்னு உடலை குளுமையாக்குற இயற்கையான டிரிங்க்ஸ் குடிங்க. நாள்பட நாள்பட உங்க பாடி நார்மல் கண்டிஷனுக்கு வந்திடும். நான் உங்களுக்கு ஒரு சில க்ரீம்ஸ் எழுதி தரேன். அதை அப்ளை செஞ்சீங்கனா இப்ப இருக்கிற பிம்பிள்ஸ் தடயமில்லாம மறஞ்சிடும்" என நீண்ட உரையை முடித்து சில களிம்புகளை எழுதிக் கொடுத்தாரவர்.


மருந்துவரிடம் நன்றி கூறி வெளியே வந்த வாணி ரஹானாவிடம் உள்ளே மருத்துவர் கூறியவற்றை கேட்டுக்கொண்டான் ஆஷிக்.

பின் மூவரும் பேசிக்கொண்டே நடந்து வந்து பைக் நிறுத்தத்தில் நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

"என்னடா கேபி, எப்ப மேரேஜ் செய்றதா ஐடியா உனக்கு??... உங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்கிறாங்களா இல்லையா?? என்னமோ எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல கரக்டா நடக்கனும்னு பெரிசா எனக்கு அட்வைஸ் செஞ்ச" என ஆஷிக் கேட்க,

"இப்போதைக்கு மேரேஜ் இல்லடா. என்னை யுகே ஆன்சைட் அனுப்ப பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு என் டீம்ல. அதுக்காக வைய்டிங்" என்று இயல்பாய் வாணிக் கூற,

"வாவ் கங்கிராட்ஸ் கேபி. எவ்ளோ பெரிய விஷயம்... அசால்ட்டா சொல்ற" என அவள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து ஆஷிக் கூற,

"வாவ் செம்மக்கா" எனக்கூறி வாணியை அணைத்துக் கொண்டாள் ரஹானா.

"உனக்கு தான் தெரியுமேடா. ஐடில எதுவுமே நிலையில்லனு. ஃபிளைட் ஏறி பறக்கும் வரை நாம போறோமா இல்லையானு நம்மளே கன்ஃபியூசன்ல தானே சுத்திட்டு இருக்கனும். கடவுள் அருள்ல எல்லாம் கண்பார்ம்மா செட் ஆனதும் சொல்லலாம்னு நினைச்சேன்" என்றாள் வாணி.

"உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும் கேபி. இங்கே தனியா வெளியப் போகவே பயப்படுவியே. அங்க எப்படி தனியா சமாளிப்ப??" என்றவன் வருத்தமாய் கேட்க,

"ஹ்ம்ம் அங்க பக்கத்து டீம் பொண்ணு ஒன்னு இருக்கு. சோ சமாளச்சிடலாம். போய்செட்டில் ஆகுற வரை கண்டிப்பா பயம் இருக்கும். கிணத்துல குதிஞ்ச பிறகு நீச்சலடிச்சி தானே ஆகனும். பயந்தா முடியாதே... அப்படி தான் பெங்களுர்க்கே வந்தேன். இப்ப பழகிக்கலையா. அதுவும் அப்படி பழகிடும். ஆனா நிஜமா ரொம்ப பயமாயிருக்கு ஆஷிக். வெளில தைரியமா பேசிட்டு திரியுறேன். உள்ளுக்குள்ள உதறுதுடா" என்றவள் தைரியமாய் ஆரம்பித்து நடுக்கமாய் கூற,

"அங்க தான் ஆளு இருக்குனு சொல்றல. சோ ஒன்னும் பிரச்சனை இருக்காது. உனக்கு ஏத்தா மாதிரி எல்லாம் செட் ஆயிடும். டோண்ட் வர்ரி" என்றானவன்.

"கேபிக்கா ட்ரீட் எப்ப?? ஆன்சைட்லாம் போறீங்க" என ரஹானா கேட்க,

"ஹ்ம்ம் கண்டிப்பா. அடுத்த தடவை நீ பெங்களுர் வரும்போது பெரிசா வச்சிடலாம்" என்றவள் உரைத்ததும் அவ்விடத்தை விட்டு கிளம்பினர் மூவரும்.

"நீ ஒன்னும் தனியா போக வேண்டாம் " என வாணியிடம் ஆஷிக் உரைத்ததும்,

"டேய் நான் வரும்போது தனியா தான்டா வந்தேன்" என்றாள் வாணி.

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் உன் கூட இருக்கும் போது நீ தனியா போக கூடாது" என்றுரைத்தவன் ரஹானாவையும் வாணியையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு, அவ்வாட்டோவினை பின் தொடர்ந்து பைக்கில் சென்றானிவன்.

அன்று வாணியை அவள் இடத்தில் சேர்பித்துவிட்டு ரஹானாவை அவள் இல்லம் செல்வதற்கான பேருந்தில் ஏற்றிவிட்டான்.

ஆகஸ்ட் 2013

இளா சிங்கப்பூர் சென்றிருந்த மூன்றாம் மாதத்தின் தொடக்கத்தில்.

"ஹாய் அம்ஸ்" என வேணியின் கைப்பேசியில் அழைத்திருந்த இளாவின் குரலில் அத்தனை சோகம்.

"என்னாச்சு இளா. காலைலயே மூட் அவுட்டா?? குரலே சரியில்ல" என வேணி கேட்க,

"ம்ப்ச் ஆமா அம்ஸ். மனசே சரியில்ல" என்றானவன்.

"ஏன் சரியில்ல. க்ளைண்ட் எதுவும் திட்டினாரா??" என்றவள் கேட்க,

"ம்ப்ச் அதில்லை அம்ஸ். இன்னும் ஒன் மன்த் என்னை எக்ஸ்டெண்ட் பண்ண சொல்லிட்டாங்க ஆன்சைட்ல" என்றவன் வேதனையுடன் கூற,

"ஓ அப்படியா" என்றவளின் மனவலி கண்ணீராய் கண்ணில் வர,

"அம்ஸ் அம்ஸ்" என்றழைத்தவன், மறுமுனையில் பதில் வராது போக,

"லைன்ல இருக்கியா அம்முகுட்டி?" என்றவன் கேட்க,

அவன் இல்லாம இன்னும் ஒரு மாசம் எப்படி இருப்பேன் என மனதில் எண்ணிக்கொண்டு மருகியவள், தன்னை சமன் செய்து மீண்டும் பேச,

"அழறியா அம்ஸ்??"என்று கேட்டானவன்.


-- உருகல் தொடரும்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21:

மனம் வெறுமையாய்
உணரும் பொழுதில்
இசையில் மனம்
ஆழ் நிம்மதி அடையும்!!!


மனம் வெறுப்பாய்
உணரும் பொழுதில்
ஆழ் நித்திரை
மனதை அமைதிக்
கொள்ளச்செய்யும்!!!


மனம் வேதனையில்
துவளும் பொழுதும்
வலியில் துடிக்கும் போதும்
இறையருள்
ஆழ் தியானம்
மனதை ஒருநிலைப்படுத்தும்!!!


எவ்வகை இடராயினும்
மனதை என் வசம் வைக்கும்
வித்தையை
அறிந்திருந்தேன் நான்...


இவை அனைத்தும்
சாத்தியமானது
நான் நானாய் இருந்தப்பொழுது.


நான் நீயாய் மாறிய நிலையில்
உன் காதல் என்னை
தின்றுக்கொண்டிருக்கும் வகையில்


இவ்வித்தை அனைத்தும் செயலற்றுப்போனது...

என் இயல்பை மீட்டெடுக்க முடியாமல்
உன் பிரிவின் வலியில்
குமுறிக்கொண்டிருக்கிறேன் நான்!!!


"அழறியா அம்ஸ்??" என்றவன் கேட்க,

"இல்ல இல்ல இளா" என்றவள் கூறினாலும் அவளின் குரல் அவனுக்கு காட்டிக்கொடுக்க,

அவளை சரி செய்ய எண்ணியவன்,

"பொய் சொல்லாத. அழுதுட்டு தானே இருக்க. உன் குரலே காட்டிக்கொடுக்குதே. எப்படி உன் புருஷன் இங்கிருந்தே அங்க நீ என்ன செய்றேனு சொன்னேன் பாரு. அதுக்கெல்லாம் தனி திறமை வேணும். அது என் மக்கு பொண்டாட்டிக்கிட்ட கொஞ்சம் கூட இல்லையே" என்று அவளை அவன் சீண்ட,

கண்களை துடைத்துக் கொண்டவள், அவனின் மக்கு என்ற வார்த்தையில் சிலிர்த்துக் கொண்டு, "யார்டா யாரடா மக்கு சொன்ன. நீ தான்டா மக்கு கோவக்காய்" என்றவள் கூறியதும் தன்னை மறந்து சிரித்தானவன்.

அவனின் சிரிப்பில் இணைந்துக் கொண்டு இவளும் சிரிக்க, "ஃபீல் செய்யாத அம்ஸ். ஒரு மாசம் தான். சட்டுனு போய்டும்" என்றான் இளா.

"உன்னை எப்படா நேர்ல பார்ப்போம்னு இருக்குடா இளா. இங்க ஒவ்வொரு நிமிஷமும் உன்னை மிஸ் செய்றேன்டா" என கவலைக்குரலில் அவள் கூறும் போதே விழிகளில் மீண்டும் நீர்க் கோர்க்க,

"இதுவரை நீ எனக்கு எத்தனை மிஸ் யூ அனுப்பிருக்க தெரியுமா அம்முகுட்டி??" என இளா கேட்க,

தன்னை சிறிது தேற்றிக்கொண்டு குரலை சீர்செய்தவள், "தெரியலை இளா" என்றாள்

"எழுபத்தி இரண்டு" என்றான் இளா.

"ஹே இதுக்கெல்லாம் கவுண்ட் வச்சிருக்கியா இளா" என ஆச்சரியமாய் அவள் கேட்க,

"எப்பலாம் நீ எனக்கு மிஸ் யூ அனுப்புவ சொல்லு??" என்றவன் கேட்க,

"மோஸ்ட்லி என் மனசு நீ பக்கத்துல இல்லையேனு ஃபீல் செய்ற நேரம். உன் நினைவு என்னை வலிக்க செய்யும் ரசிக்கசெய்யும் நேரம் எல்லாம் அனுப்பிருக்கேன்டா" என்றவள் கூற,

"அது தான் எனக்கு பொக்கிஷ நிமிடங்கள் அம்முகுட்டி. லவ் யூவை விட உன்னோட ஒவ்வொரு மிஸ் யூலையும் உன் காதலை உணர்ந்தேன் அம்ஸ். அதான் சேவ் செஞ்சி வச்சேன்" என்றவன் மனம் நெகிழப் பேச,

"லவ் யூ இளா" என்றாளவள்.

"லவ் யூடி செல்லம்" என்றானவன்.

மீண்டும் கண்ணீர் அவள் விழிகளை நிறைக்க, "போடா உன்னால வர வர ரொம்ப அழுமூஞ்சி ஆயிட்டேன். உன்னை நினைச்சாலே கண்ல தண்ணீர் வருது. இடம் பொருள் பார்க்காம அழுதுடுறேன். என்னை என்னடா செஞ்ச" என்றவள் கவலையுடன் புலம்ப,

"என் அம்முகுட்டி கண்ணீர் கடல்ல நீந்தி காதல் கரையை அடைய போராடிட்டு இருக்கா" என்றவன் கூறி முடித்ததும்,

"ஹே அம்மு இது தான் லவ் பண்ணா கவிதையா கொட்டும்னு சொல்றதா??" என ஆச்சரியமாய் தான் கூறிய கவி வரிகளை எண்ணிக் கொண்டே பேசியவன்,

"அச்சோ அம்ஸ் அந்த வரியை மறந்துட்டேனே, என்ன சொன்னேன்?? என்ன சொன்னேன்?? காதல் கடல் கண்ணீர் கரையாஆஆஆஆ... அய்யோ வரமாட்டேங்குதே வரமாட்டேங்குதே" என்றவன் தான் கூறிய கவிதையை திரும்ப கூற எண்ணி நினைவில் மீட்க முடியாமல் போராடிக்கொண்டிருக்க,

அங்கு அவன் செய்யும் அசைவுகளை எண்ணி இங்கே சிரித்துக் கொண்டிருந்தவள்,

"அச்சோ வரமாட்டேங்குதே வரமாட்டேங்குதேனு சொல்லி குழந்தை மாதிரி காலை உதச்சிட்டு தானே இருக்க அங்க??" என்றவள் சிரிப்பாய் கேட்க,

அங்கு சட்டென தன் காலை உதைப்பதை நிறுத்தியவன், " என் பொண்டாட்டி மக்கில்லை. அறிவாளினு நிரூப்பிக்கிறடா" என்றான் மெச்சுதலுடன்.

"சொல்ல மறந்துட்டேன் இளா. நாளைக்கு டீம் அவுட்டீங்காக எல்லாரும் குதிரைமுக் போகலாம்னு ப்ளான் பண்ணிருக்காங்க. நானும் வாணியும் போகலாம்னு இருக்கோம். நீ என்ன சொல்ற??" என்றவள் கேட்டதும்,

"ஹ்ம்ம் கண்டிப்பா போய்ட்டு வாடா. இப்ப உனக்கு இருக்க மனநிலைக்கு இது ரொம்ப தேவை தான். நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா" என்றானவன்.

பின் சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தனர் இருவரும்.
காலை ஷிப்டிற்கு அலுவலகம் சென்று மாலை வீடு வந்த வேணியும் வாணியும் மறுநாள் தாங்கள் செல்லவிருக்கும் சுற்றுலா பயணத்திற்கு தேவையான உடைமைகளை அவரவர் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தனர்.


வேணியின் மனதில் இளாவை பற்றிய நினைவு சிறிது ஒதுங்கியிருந்தது இந்த சுற்றுலா பயணம் பற்றிய எண்ணங்களில்.

அன்றிரவு முகப்பறையிலேயே வாணியும் வேணியும் அன்றைய நிகழ்வுகளை பேசிக் கொண்டே தரையில் படுத்திருந்தினர்.

பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்துலேயே வாணி உறங்கிவிட, வேணி இளாவை பற்றிய நினைவில் மூழ்கிப் போனாள்.

அவன் வெளிநாடு சென்ற நாளிலிருந்து இரவு தூக்கம் வராமல் புரளும் சமயம் இளாவுடனான இத்தனை மாத வாழ்வின் நிகழ்வுகளை எண்ணிக்கொண்டே அவனின் நினைவிலேயே உறங்கிப்போவாளவள்.

இன்றும் அவ்வாறு அவளின் மூளையின் இடுக்கில் பதிந்திருந்த அந்நிகழ்வு அவள் மனதில் உலாவரத் தொடங்கியது.

அவர்கள் திருமணம் முடிந்து இரண்டு மாதகாலம் முடிந்திருந்த நாட்களது.

அன்று வந்த வாரயிறுதி நாளில் இளாவின் ஊருக்கு சென்றிருந்தனர் இளாவும் வேணியும்.

இவ்வாறு வரும் நாட்களில் தன் மாமியாரிடம் சமையல் கற்றுக்கொள்வாள் வேணி.

இளாவின் தாய் தந்தைக்கு, திருமணத்திற்கு முன்பே வேணி நன்கு பரிச்சயம் என்பதால் அவளுடன் நல்ல உறவு நிலையில் பழகினர் இருவரும்.

அன்று அந்த வாரயிறுதி நாளில் வேணி மிளகு சிக்கன் செய்கிறேனென சமயலறையை ரணக்களப்படுத்தி ஒரு கை பார்த்து அவள் மதிய உணவை செய்து முடித்த சமயம் வந்திருந்தார் அவளின் மாமனாரின் தூரத்து உறவுமுறையில் உள்ள தங்கை(அதாவது இளாவின் அத்தை) அவர்களின் வீட்டிற்கு.

இளா வேணி திருமணத்தின் போது அவர் தன் மகனுடன் ஆஸ்திரேலியாவில் இருந்ததாலும் திடீரென்று இளாவின் திருமணம் நிச்சயமானதால் அவரால் அத்திருமணத்தில் கலந்துக்கொள்ள இயலவில்லை. ஆகையால் அங்கிருந்து வந்ததும் இளா வேணியை காண அவ்வாரயிறுதி நாளில் வந்திருந்தாரவர்.

ஆனால் அவர் ஏன் வந்தாரென தான் எண்ணினர் அனைவரும் வேணியை தவிற. ஏனெனறால் வேணியை தவிர மற்றைய அனைவருக்கும் குத்தி காயப்படுத்தி பேசும் அவரின் பேச்சின் வன்மை நன்றாக தெரியுமே. ஆக விருப்பமின்றியே வரவேற்றனர் அவரை.

மதிய உணவு வேளையில் அனைவரும் ஒன்றாய் உண்ணுவதற்கு அமர, வேணியும் இளாவின் அம்மாவும் பரிமாறினர் அனைவருக்கும்.

வேணி தற்சமயம் ஒரு மாதமாக தான் சமையல் செய்ய பழகுவதால் உணவு மிகவும் ருசியாக இல்லாவிட்டாலும் உண்ணுவது போல் தான் சமைப்பாளவள்.

ஆனால் அதை குறையாக எண்ணியதில்லை இளாவின் வீட்டில்.

உணவை ஒரு வாய் எடுத்து வைத்த அந்த அத்தை,"என்னண்ணா இப்படி சமச்சி போட தான் இந்த பொண்ணை அவசர அவசரமா நம்ம இளங்கோக்கு கட்டி வச்சியா??" எனக் காட்டமாய் கேட்க,

வேணியின் முகம் வாடிப்போனது.
"சாப்பாட்டுக்கு என்னம்மா?? நல்லா தானே இருக்கு" என்றார் இளாவின் தந்தை முத்து.


"என்ன நல்லா இருக்கு. உப்பு இல்லை உரப்பு இல்ல. நம்ம இளா அதான் கல்யாணம் ஆகியும் இப்படி தேஞ்சிக்கிட்டே போறானா?? இந்த மருமகளுக்காக தான் நீ சொந்தம் வரலனாலும் பரவாயில்லைனு எல்லாரையும் பகைச்சிக்கிட்டு கல்யாணம் செஞ்சி வச்சியா??" என்று எகத்தாளாமாய் அவர் பேச,

வேணி தன் இதழை கடித்து அழுகையை அடக்கிக்கொண்டிருந்தாள்.

கோபம் தலைக்கு ஏற இளா ஏதோ சொல்ல வாயைத் திறக்க, இளாவின் தந்தை முத்து அருகிலிருந்த இளாவை கையமர்த்தி கண்கள் காண்பித்து அமைதியாய் இருக்கக் கூறினாரவர்.

வேணியின் முக வாடலில் இளாவின் மனம் சுணங்கிப் போனது.

"என் மருமகளை குறை சொல்றதா இருந்தா இங்கயாரும் வர வேண்டாமென" உரைத்துவிட்டாரவர்.
அதில் கோபம் கொண்ட அந்த அத்தை,"உங்களுக்கு எங்களை விட நேத்து வந்தவ பெரிசா போய்ட்டாளா?? மருமகளா வந்த உடனே குடும்பத்தை பிரிச்சிட்டல. நல்லாயிருடியம்மா நல்லாயிரு" என்றுரைத்துவிட்டு பாதி உணவிலேயே கிளம்பிச் சென்றுவிட்டாரவர்.


அனைவரும் பாதி உணவிலேயே எழுந்து விட்டனர். போனவரை எவரும் தடுக்கவும் இல்லை.
வேணி வீட்டின் பின்கட்டிலுள்ள தோட்டத்திற்கு சென்று அங்குள்ள திட்டில் அமர்ந்தவள் தன் அழுகையை வெளிவராமல் கட்டுக்குள் கொண்டுவர பெருமுயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.


இளாவிடம் வேணியை சமாதானம் செய்யக் கூறிவிட்டு அங்கிருந்து தங்களின் வேலையைப் பார்க்கச் சென்றனர் இளாவின் அன்னையும் தந்தையும்.

தோட்டத்திற்கு சென்ற இளா வேணியின் கலங்கிய முகத்தை பார்த்தவன் மனம் வலிக்க,"அம்முகுட்டி"என்றழைத்து அவளருகில் அவன் அமரவும்,
இதுவரை கட்டுக்குள் வைத்திருந்த அழுகையை மடை திறந்த வெள்ளமாய் கொட்டினாள் அவன் தோளில்.


"என்னடா அம்முக்குட்டி, அதான் அப்பா அவங்க பேசினதுக்கு திருப்பி பேசி அனுப்பிட்டாங்கல. அப்புறம் எதுக்கு இந்த அழுகை. அவங்க எப்பவுமே அப்படி தான். அவங்களைலாம் கேட்காம அப்பாவே மேரேஜை ஃபிக்ஸ் பண்ணிட்டாங்கனு அவங்களுக்கு கோபம். அதை எதாவது ஒரு விதத்தில காமிக்கணும்னு இப்படி காமிக்க வந்திருக்காங்க. நீ அதை யோசிச்சி கஷ்டப்படாத" என்று கவலையாய் இளா கூற,

பின் அவனை நோக்கி, "அவ்ளோ மோசமாவா இளா என் சமையல் இருந்துச்சு" என்று பாவமாய் அவள் கேட்க,

"இதுவரை வயித்துல எந்த பிரச்சனையும் வரல. எதுக்கும் நைட் வரைக்கும் வெயிட் பண்ணி பார்த்துட்டு சொல்றேன்" என்றவன் கிண்டலாய் கூற,

முதலில் அவன் கூற வருவதன் அர்த்தம் புரியாது விழித்தவள், புரிந்தப்பின் அவன் முதுகில் நாலு அடி வைத்தாள்.

"பெரியவங்க முன்ன பின்ன அப்படி தான் இருப்பாங்க இளா. நம்ம தான் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போகனும். ஆனாலும் மனசு கஷ்டமா போச்சுடா. மாமா அப்படி பேசினது ரொம்ப கஷ்டமா போச்சு. பாவம் வயசானவங்க அப்படி பாதி சாப்பாடுல அனுப்பிருக்க வேண்டாம்" என்றவள் அந்த அத்தைக்கு பரிந்துப்பேச,

"எனக்கு உன்னை கஷ்டபடுத்துற யாரும் என் ஃலைப்ல வேண்டாம் அம்ஸ். என் அம்மா, அப்பா என்னிக்கும் உன்னை கஷ்டப்படுத்த மாட்டாங்க. உன்னை வேதனை படுத்துற எந்த உறவும் எனக்கு தேவையில்லை. நீ கஷ்டப்பட்டா என் மனசு தாங்காது அம்ஸ்" என்றவன் கூறிய நொடி,

அவன் தோள் சாய்ந்து அவனின் இடையை பற்றியிருந்தவள் முகம் நிமிர்த்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"என்னை அவ்ளோ பிடிக்குமா இளா??" என்று ஆவலுடன் அவன் முகம் பார்த்து அவள் கேட்க,

"இப்ப உனக்கு அவங்க உன்னை திட்டினது பிரச்சனை இல்ல. எனக்கு உன்னை எவ்ளோ பிடிக்கும்ன்றது தான் பிரச்சனை??" என்றவன் சிரித்துக் கொண்டே கேட்க,

"ம்ப்ச் அதெல்லாம் விடு. அவங்கலாம் பாஸிங் க்ளௌட்ஸ்(passing clouds). நீ மட்டும் தான் என் வாழ்க்கையின் நிஜம். சொல்லு சொல்லு உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்??" என்றவள் அவனின் சட்டை பொத்தானை திருக,

"இவ்ளோ பேசிறியே. உனக்கு என் மேல இன்னும் லவ் வரலையா அம்ஸ்" என்றவன் கேட்க,
சட்டென ஒதுங்கி அமர்ந்தவள், "அதெல்லாம் ஒன்னும் வரலை" என்றாள்.


அவளின் விலகலில் கோபமுற்றவன்,
"என் மேல லவ் இல்லாதவங்க கிட்ட நான் ஏன்டி லவ் சொல்லனும். அதெல்லாம் சொல்ல முடியாது போடி" என்றுரைத்து விட்டு அங்கிருந்து அவன் நகர முற்பட,


அவன் கையை பற்றியவள்,"ப்ளீஸ்டா இப்படி மூஞ்சை திருப்பிட்டு மட்டும் போகாதடா. அவங்க திட்டும் போது வலிச்சதை விட, இப்ப தான் ரொம்ப மனசு வலிக்குது" எனக் கண்ணில் வேதனையுடன் அவன் கையை தன் கைகளுக்குள் பொதிந்துக் கொண்டு அவள் கூற,

தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சட்டென அமர்ந்துவிட்டானவன்.

அவன் முகத்தை தன் கைகளில் தாங்கியவள்,"உன்னை ரொம்ப பிடிக்கும் இளா. எனக்கு கொஞ்சம் டைம் கொடேன் ப்ளீஸ். என்னமோ என்னை தடுக்குதுடா. அந்த லவ் நான் உணரலைனு தோணுது" என்றவள் ஏதேதோ பேசிக்கொண்டே போக,

அவளை தன் இறுகிய அணைப்பிற்குள் கொண்டு வந்தானவன்.

"நீ இப்படி என் கைகுள்ள இருந்தா மட்டும் போதும் அம்ஸ். வேற எதுவும் வேணாம். உன்னை எவ்ளோ பிடிக்கும்னு கேட்டல. நீ மட்டுமே உலகம்னு வாழுற அளவுக்கு உன்னை பிடிக்கும் அம்முக்குட்டி. உன்னை மட்டும் தான் அவ்ளோ பிடிக்கும்" என்றவளை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

இங்கே அந்நிகழ்வுகளை அசைப்போட்டவளின் மனம் தானாய் குமுறியது. "ஐ லவ் யூ இளா. உன் காதலை உணர்ந்துட்டேன்டா. உன்னை மட்டும் தான்டா எனக்கும் பிடிக்கும். உன் கிஸ் வேணும். நீ காலைல பாசமா குடுக்குற அந்த கிஸ் வேணும். அம்முகுட்டினு என்னை நீ இறுகி அணைச்சுக்கிற அந்த அணைப்பு வேணும். இப்ப எல்லாத்துக்கும் ஏங்கி தவிச்சிட்டு இருக்கேன்டா" என முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டு கண்ணீர் வழிய முனகிக் கொண்டவள், "மிஸ் யூ இளாப்பா" என்றொரு குறுஞ்செய்தி அனுப்பிருந்தாள் அவனுக்கு.

பின் தன்னை தேற்றிக்கொண்டு அன்று பேருந்தில் குளிருக்காக அவன் அணிவித்த அவனின் சட்டையை வைத்திருந்தவள் அதை அணிந்துக்கொண்டு அவனின் ஸ்பரிசத்தின் உணர்வுடனேயே உறங்கிப்போனாள்.
--
மறுநாள் விடியற்காலை நான்கு மணியளவில் சுற்றுலா செல்வதெற்கென பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தனர் வாணியும் வேணியும்.


பயணத்திற்கு ஏதுவாய் ஜீன்ஸ் குர்தி அணிந்துக் கொண்டனர் இருவரும்.
ஒரு பேருந்து ஏற்பாடு செய்திருந்தனர். ஆகவே அனைவரையும் அவரவர் இல்லத்தினருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வந்து அழைத்து செல்வதாய் உரைத்திருந்தனர் அச்சுற்றுலா ஏற்பாட்டாளர்களான சகப்பணியாளர்கள்.


விடியற்காலைப் பொழுதில் அனைவரையும் அவரவர் நிறுத்தத்திற்கு சென்று அழைத்துக் கொண்டு செல்வதே அவர்களின் திட்டம். வாணியின் கைபேசிக்கு அழைத்து நிறுத்தத்திற்கு வந்துவிடுமாறும் பத்து நிமிடத்தில் அவர்கள் அவ்விடத்தை அடைந்து விடுவர் என்றும் உரைத்தனர் அப்பணியாளர்கள்.

எனவே வாணியும் வேணியும் துரிதமாய் தங்களின் பைக்களை எடுத்துக் கொண்டு கிளம்பி கதவைத் திறந்த நேரம், திகைத்து விழித்தனர் இருவரும் அக்கதவினருகில் நின்றிருந்தவனைக் கண்டு.

"ஹே நிஜமாவே எனக்கு பைத்தியம் முத்திப்போச்சிடி. எங்கே பார்த்தாலும் அவனாவே தெரியுறான்டி" என வாணியின் காதில் கிசுகிசுத்தாள் வேணி.

"அடியேய் நிஜமாவே இளாண்ணா வந்திருக்காங்கடி." என்றாள் வாணி, அதிர்ச்சியின் விளிம்பில் இருந்தாள் வேணி.

"இளாண்ணா, வாட் எ சப்ரைஸ்!! எப்பண்ணா வந்தீங்க?? ஏன் இங்கயே நின்னுட்டீங்க??" என்றிவள் கேட்ட நொடி மீண்டும் வாணியின் கைபேசி அப்பணியாளர்களின் வருகை தெரிவித்து அதிர,

"அய்யோ அண்ணா அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. உடனே போகனும்" என்றுரைத்துவிட்டு வேணியைப் பார்த்தவள்,

"அண்ணா வேணி இருக்கட்டும். நான் கிளம்புறேன்... இரண்டு நாள் டிரிப்ண்ணா சோ இரண்டு நாள் கழிச்சி தான் வருவேன்" என அவசர அவசமாய் அவள் நகர்ந்து செல்ல,

"ஹே வாணிம்மா தனியா இருந்திப்பியா?? உனக்கு கூட கம்பெனிக்கு ஆளு இருக்கா??" எனக் கேட்டான் இளா.

"அதெல்லாம் டீம்ல பொண்ணுங்க இருங்காங்கண்ணா. நான் சமாளிச்சிப்பேன். நோ ப்ராப்ளம்" என்றாள் வாணி.

"பாத்து பத்திரம் வாணி. எந்த டைம்ல என்ன பிரச்சனைனாலாம் எனக்கோ இல்ல அம்ஸ்க்கோ கண்டிப்பா கால் பண்ணு. ஹேவ் எ சேப் ஜர்னி" என்றான் இளா.

"தேங்க்ஸ்ண்ணா பை" என்றுரைத்து விட்டு பறந்தோடிப் போனாள் வாணி.
அவளிடம் பேசிவிட்டு வேணியின் பக்கம் திரும்பிய இளா, சுவற்றோடு ஒட்டி நின்று திகைப்பில் தன்னையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த வேணியையே கண்டான்.


"அம்முக்குட்டி" என விளித்து அவளருகில் இவன் போக,
சுவற்றோடு ஒட்டி தன் முட்டியை மடக்கி அமர்ந்தவள் விம்மி அழவாரம்பித்தாள்.


நேற்று அவன் தனதருகில்லை என்ற ஏக்கம் அவளின் மனதை அழுத்தியிருக்க இன்றைய இந்த எதிர்பாரா அதிர்ச்சி அவ்வலியை போக்கியிருக்க அவை அழுகையாய் வெளிப்பட்டு கரைந்துக் கொண்டிருந்தது.

"என்னடா அம்முகுட்டி, நான் சப்ரைஸா வந்தா நீ சந்தோஷப்படுவேனு பார்த்தா... இப்படி அழுதிட்டு இருக்க" என்றவளருகில் மண்டியிட்டமர்ந்து அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவன் கேட்க,
அவள் அழுகையின் விம்மிலனுடே அவனைத் தாவி அணைத்தாள்.


அவளின் அதிரடியில் மண்டியிட்டவன் பின்னால் சாய அவளும் அவனோடு சேர்ந்து சாய்ந்தாள். சாய்ந்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதிக்க, அவள் கன்னத்தில் இறங்கிய கண்ணீரின் உவர் நீர் அவனுள்ளும் இறங்க, கலங்கிப் போனான் இளா.

அவன் அணைப்பை விடாது அவன் மார்பில் சாய்ந்தவள், அழுகையினூடே "இனி என்னை விட்டு எங்கேயும் போகாத இளா... என்னால நீ இல்லாம இருக்க முடியாதுடா" என்றவள் கூற,

"என்ன அம்முகுட்டி சின்னபிள்ளை மாதிரி பேசுற. நான் திரும்ப போய் தான் ஆகனும். ஒரு மாசம் பொறுத்துக்க முடியாத அம்ஸ்" என்றவன் கூறிய நொடி அவன் மீதிருந்து எழுந்தவள் படிக்கையறைச் சென்று அவர்களின் கட்டிலில் முகம் புதைத்து அழவாரம்பித்தாள்.

தங்கள் வீட்டின் கதவை பூட்டி விட்டு படுக்கையறைச் சென்று அவளை எழுப்பியவன் அவளருகில் அமர்ந்து கைகளைப் பற்றிக்கொள்ளப் போக, அவன் கையை தட்டிவிட்டு கண்ணில் நீருடன் கோபமாய் அவனை பார்த்தவள்,"நீ ஒன்னும் என் கிட்ட பேச வேண்டாம். இன்னிக்கே கூட கிளம்பு. நான் உன்னை மிஸ் செஞ்ச அளவுக்கு நீ என்னை மிஸ் செய்யலைல... இல்லனா இப்படி அசால்டா பேசுவியா?? நான் இளா இளானு இங்க மருகிட்டு இருந்திருக்கேன். நீ அங்க என் நினைப்பே இல்லாம ஜாலியா இருந்திருக்க... நீ என்கிட்ட ஐ லவ் யூ சொன்னதெல்லாம் சும்மா தான்" என்றவள் கோபத்தில் பேசிக்கொண்டே போக,

அதுவரை அவளின் மனக்குமுறலை பொறுமையாய் கேட்டவன், ஐ லவ் யூனு சும்மா தான் சொன்ன என்ற வார்த்தையில் கோபம் தலைக்கேற "வேணி" எனக் கத்தினான் இளா.

அவனின் கத்தலில் அமைதியானவள், கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள்.

"நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தவளை லவ் பண்ண வச்சிட்டு இப்ப போறானாம். போகட்டும். எனக்கென்ன வந்துச்சு??.. எங்க வேணா போ... எப்படி வேணா போ... எனக்கென்ன வந்துச்சு?? நான் தான் இளானு பைத்தியமா அலைறேன்" என மனதிற்குள் புலம்பிக் கொண்டே அவள் விம்மிக் கொண்டிருந்தாள்.

கட்டிலில் அமர்ந்திருந்தவன் எழுந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டு படுத்திருந்த அவளின் முதுகையே வெறித்து நோக்கினான்.

அவளின் ஒரு மனமோ அவனிடம் போவென்று அவளை உந்த, மறு மனமோ அவனே வரட்டும் என முரண்டுப் பிடிக்க, இந்த மனதின் அலைப்புறுதலை தாங்கவியலாது, சிறிது நேரம் கூட அவனை காணாமல் இருக்க இயலாது என உணர்ந்தவள், கட்டிலை விட்டு எழுந்து ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அழுகையின் விசும்பலில் "ப்ளீஸ் என்னை விட்டு எங்கேயும் போகாதடா.... ஐ லவ் யூ சோ மச் இளா" என்ற நொடி அவளிதழில் தன்னிதழை பதித்திருந்தான்.
எந்த வார்த்தைக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தானோ அவ்வார்த்தை அவள் வாயிலிருந்து வந்த நொடி தன் இத்தனை நாள் தவிப்பு, ஏக்கம் அவள் மீதான தன் காதல் என அனைத்தையும் அந்த இதழொற்றலில் அவளை உணரச்செய்தானவன்.


அவற்றை அவள் உணர்ந்தப் போதும், அவனின் முகத்தை தன்னிதழிலிருந்து தட்டிவிட்டவள்,"எனக்கு இதெல்லாம் வேணாம். நீ தான் வேணும். நீ என் கூடவே இருக்கனும்" என அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு கண்ணீருடன் கூற,

அவள் நெற்றியில் இதழ் பதித்து சிரித்தவன்,"உன்னையும் என் கூட கூட்டிட்டு தான் போகப் போறேன். உனக்கு டிபண்டென்ட் விசா அல்மோஸ்ட் கிடைச்சிடுச்சி" என்றவன் கூறிய நொடி வியப்பில் விழி விரித்தவள், மறுநொடி அவனை அடிக்கத் தொடங்கினாள்.

"பொய் சொன்னியா நீ?? பொய் சொன்னியா??" என அவன் புஜங்களில் தலையில் என அவள் அடிக்க, அவளை அலேக்காக தன் கைகளில் அவன் தூக்க, "ஹே விழுந்திடப் போறேன்டா" எனக் கூறி அவன் கழுத்தினை மாலையாய் அவள் வளைத்துக் கொள்ள,

அவளை கட்டிலில் சாய்த்தவன்,"புருஷனை அடிச்சதுக்கு கண்டிப்பா பனிஷ்மெண்ட் உண்டு அம்முக்குட்டி" எனக் கூறி அவளின் ஒவ்வொரு அடியையும் கூறி ஒவ்வொரு முத்தம் அவன் பதிக்க அவனுள் உறைந்துக் கரைந்துக் கொண்டிருந்தாள் வேணி.

காதலால் கசிந்துருகி நீயெல்லாமல் நானில்லை என்கின்ற தங்களின் காதலின் நிலையில் இருவரும் ஒன்றாய் கலந்து தங்களின் வாழ்க்கை பயணத்தை தொடங்கினர்.
---
"இந்த நிமிஷம் நீங்க என்ன வேண்டிக்கீட்டீங்களோ. அது கண்டிப்பா நடக்கும் மதிப்பா" ஹோசூரிலுள்ள சாய் பாபா கோவிலில் மதி கண் மூடி அமர்ந்திருக்க, அவனருகிலிருந்த மஹா இவ்வாறு கூற, மனம் விட்டு சிரித்தானவன்.


"இப்ப நான் வேண்டிக்கிட்டது நிறைவேறனும்னா என் குட்டிம்மா அதுக்கு ஒத்துழைக்கனுமே" என்றவன் கூறியதும்,

"அய்யய்யோ ஏதோ வில்லங்கமா வேண்டிக்கிட்டு இருந்திருப்பீங்க போலயே. நான் தான் வாண்டட்டா வந்து சிக்கிக் கிட்டேன் போலயே" என முழித்துக் கொண்டே அவள் கூற,
"பெரிசா ஒன்னும் இல்லடா... எனக்கு குட்டியா ஒரு குட்டி குட்டிமா பெத்துக் கொடு குட்டிம்மா" என கண் சிமிட்டி அவன் கூற,


"இல்ல இல்ல குட்டி மதி தான். நோ குட்டிம்மா" என்றாளவள்.

"ஏன் ஏன் அப்படி" என்றவன் கேட்க,

"போங்க... பொண்ணு பிறந்துட்டா என்னை இப்படி கொஞ்சுற மாதிரிலாம் கொஞ்ச மாட்டீங்க... எல்லாம் உங்க பொண்ணுக்கு தான் போகும். சோ நோ பொண்ணு ஒன்லி பையன் மட்டும் தான்" எனத் தீவிரமாய் மஹா கூற,

"அடிப்பாவி இப்படி ஒரு நினைப்பிருக்கா உனக்கு" என சிரித்தானவன்.

பின் அவள் ஆணோ பெண்ணோ எதுவாயினும் தனக்கு சம்மதம் என்றும் ஆனால் இன்னும் ஒரு வருடம் வீட்டுக் கடன் எல்லாம் தீரட்டுமெனக் கூற ஆமோதிப்பாய் தலையசைத்தானவன்.

இளா வேணியை சிங்கப்பூருக்கும் வாணியை லண்டனுக்கும் பெங்களுர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்க வந்தனர் மதியும் மஹாவும்.

முந்தைய இரவு அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு மறுநாள் தங்களின் திருமணத்திற்காக தாங்கள்வேண்டுதல் வைத்த அனைத்து கோவில்களுக்கும் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, வேணி தன் ப்ராஜக்டில் நீண்ட விடுப்பு சொல்லி விட்டு சென்றவள், இளாவிற்கு சிங்கப்பூரிலேயே ஒரு வருடம் அவன் ப்ராஜக்ட் மேனேஜர் வேலையை நீட்டிக்க, தன் வேலையை ராஜினாமா செய்தாள் வேணி.

ஒரு வருடம் லண்டனிலிருந்து தன் பணியை தொடர்ந்த வாணி தனியாய் வாழ்வை எதிர்கொள்ளும் தைரியமும் துணிவும் பெற்று தன்னை தன்னை கவனித்துக்கொள்ளும் அளவு தெளிவும் பெற்றிருந்தாள்.

அனைவரும் ஒன்றாய் சேர்ந்து தொடங்கிய அவர்களின் அலுவல் பயணம் வருடங்கள் கடக்க கடக்க வாழ்வின் பல நிதர்சனங்களைப் புரிய செய்து அனுபவப்பாடத்தினை வழங்கி மனம் முதிர்ச்சியை அளித்தது.

-- அடுத்தது இறுதி அத்தியாயம் மக்களே.
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

நாளை இறுதி அத்தியாயத்தில் வாணியின் ஜோடி வருவாரென தெரிவித்துக் கொள்கிறேன்.

நிறைய நன்றி தெரிவிக்க வேண்டி இருக்கு. அதுக்கு தனி போஸ்ட்டாவே போடுறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22

ஐந்து வருடங்களுக்குப் பிறகு

அந்த மென்பொருள் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஒரு அறையிலுள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில் வாணி போர்டின் முன் நின்றுக்கொண்டு எதையோ விளக்கிக் கொண்டிருக்க, அவளின் மற்றைய சகப் பணியாளர்கள் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.

"And that's how I solved the issue for which I got appreciation from the clients" எனக் கூறி அவள் தன் உரையை முடிக்க,

அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து அவளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

கான்ஃபரன்ஸ் ஹாலிலிருந்து கலைந்து அனைவரும் வெளியே வர, அந்நேரம் பணிக்கு வந்த அவளின் சகப்பணியாளினி,

"ஹேய் வாணி... வந்துட்டியா... வெல்கம் பேக் டூ இந்தியா" எனக்கூறி அவளின் கையைக் குலுக்கி பேசிக்கொண்டிருக்க,

அவர்களின் அருகினில் நின்று வாணியைப் பார்த்தவாறே பேசிக்கொண்டிருந்தனர் இருப் பெண்கள். அந்த ப்ராஜக்டிற்கு புதிதாய் சேர்ந்தப் பெண்கள் அவர்கள்.

"ஆளுக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லைனு சொல்றது உண்மை தான் போல" என ஒருவள் மற்றவளிடம் கூற,

"ஏன்டி அப்படி சொல்ற??"

"மதுவைப் பாரேன் எவ்ளோ சின்னவங்க மாதிரி இருங்காங்க... தனியா சிங்கப்பூர் போய் த்ரீ மன்த்ஸ் தங்கி இருந்து ப்ராஜக்டுல வந்த க்ரிட்டிக்கல் இஸ்யூவை சால்வ் செஞ்சி க்ளைண்ட் அப்பிரிசியேஷனோட தன்னோட ஆன்சைட்ட முடிச்சுட்டும் வந்துட்டாங்க... நம்மளும் இப்படிலாம் முன்னேற முடியுமாடி" என ஆச்சரியமாய் வாணியைப் பார்த்து கேள்வியாய் தன் தோழியை அந்தப் பெண் கேட்க,

இவர்களின் பேச்சு வாணிக்கும் கேட்க, தன் சகப்பணியாளரிடம் பேச்சை முடித்துக் கொண்டு இவர்களிடம் வந்த வாணி,

"என்ன பொண்ணுங்களா... ஃப்ரீயா இருங்கீங்களா?? எனக்கு காபிக்கு கம்பெனி கொடுக்க முடியுமா??" எனக் கேட்க,

அவளே தானாய் தங்களிடம் வந்துப் பேசியதில் சற்று அதிர்ந்துப் பின் சுதாரித்து தலையை ஆட்டிவிட்டு அவளுடன் கேபிடேரியா சென்றனர்.

மூவரும் கையில் காபியுடன் ஒரு மேஜையில் அமர்ந்தனர்.

"நான் ஆன்சைட்ல இருக்கும் போது நீங்க இந்த ப்ராஜக்ட்ல ஜாய்ன் செய்தனால உங்ககிட்ட போன்ல தான் பேசிருக்கேன். இப்ப தான் உங்களை மீட் பண்றேன். க்ளாட் டூ மீட் யூ" எனக் கூறி மென்னகை புரிந்தாள் வாணி.

பின் இது தான் அவர்களின் முதல் ப்ராஜக்ட் என அறிந்துக் கொண்டாள்.

"நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் பெரிய சாதனை செய்யலை பொண்ணுங்களா... ஆனா எனக்கு இது சாதனை தான். நானும் புதுசா ப்ராஜக்ட் சேர்ந்தப்போ இரண்டு வருஷம் கூட ஐடில இருக்க மாட்டேனு நினைச்சேன். ரொம்ப ரிசர்வ்ட் டைப் வேற. அதுவும் சப்போட் ப்ராஜக்ட் என் கரியரே போச்சு அழுதுகிட்டு வந்து ஜாய்ன் பண்ணேன் இந்த ப்ராஜக்ட்ல. ஆனா இப்ப செவன் இயர்ஸ் ஆகுது. டூ டைம்ஸ் ஆன்சைட் போய்டு வந்துட்டேன். என்கூட்டை விட்டு வெளிலே வந்து என்னால எதெல்லாம் முடியாதுனு நினைச்சேனோ அதெல்லாம் இப்ப செஞ்சிட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் நம்மளோட உழைப்பும், முடியாதுனு நினைக்கிறதை விட முயற்சி செஞ்சி பார்ப்போமேனு நினைச்சி செஞ்சா போதும். அதோட அவ்ட்கம்(outcome) தானா கடவுள்கொடுத்ததுடுவாரு. அதனால உங்களாலயும் இப்படிலாம் அச்சீவ் செய்ய முடியும் முயற்சி செஞ்சீங்கனா போதும்"

"கண்டிப்பா மது. உங்க அட்வைஸ கண்டிப்பா எடுத்துப்போம் மது" என இருவரும் அதே ஆச்சரியப்பார்வை பார்த்துக் கூற,

"முதல்ல என்னை இப்படி ஏழாம் அதிசயம் போல பார்கிறதை நிறுத்துங்க... எனக்கு உங்களைப் பார்க்கும் போது முதன் முதலா இந்த ப்ராஜக்ட்ல அழுகையும் விசும்பலுமா நானும் அம்முவும் வந்து சேர்ந்தது தான் நியாபகத்துக்கு வருது" எனக் கண்கள் மின்ன வாணிக் கூற,

அவளின் கைபேசி அலறியது.
அந்தப் பெண்கள் பணிக்கு செல்கிறோமெனக் கூறி விட்டு நகர,

தன் கைபேசியில் யார் அழைத்ததெனப் பார்த்தவளின் கண்களில் சிறு மின்னல். உடனே அழைப்பை எடுத்தவள்,

"ஹே அம்மு உனக்கு நூறு ஆயுசுடி. இப்ப தான் உன்னை நினைச்சேன் உடனே ஃபோன் பண்ற" என உற்சாகமாய் வாணிப் பேச,

"நான் உன் மேல கோபமா இருக்கேன். பேசாத என்கிட்ட" எனக் கடுப்பாய் வேணிக் கூற,

"ஹோ பேசாதனு சொல்றவத் தான் போன் பண்ணி பேசுறியா அம்மு" எனக் சிரித்துக் கொண்டே வாணிக் கேட்க,

"உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சாமே. ஏன்டி என்கிட்ட சொல்லலை. மஹா சொல்லி தான் தெரிஞ்சுது." என கோபமாய் வேணி உரைக்க,

"அதான் நான் சொல்றதுக்குள்ள உனக்கே தெரிஞ்சிடுஞ்சே... அப்புறம் நான் என்னத்த சொல்ல... அவகிட்ட சொல்லி ஒன் ஹவர் கூட ஆகலை. அதுக்குள்ள உன் கிட்ட சொல்லிருக்கா... அவ முந்திட்டா... அதுக்கு நான் என்ன செய்ய" எனப் பரிதாமாய் கேட்க,

"சரி அதை விடு. உனக்கு மேரேஜ்னு சொன்னதும் எவ்ளோ ஹேப்பி தெரியுமா... எவ்ளோ வருஷமா ஆன்சைட் வர்க் ஜாதகப் பிராபளம் அது இதுனு மேரேஜ் செய்யாம டிமிக்கி கொடுத்துட்ட... கடைசியா எப்படியோ ஒரு பையன் சிக்கிட்டானே... மீ செம்ம ஹேப்பி... சரி பையன் எப்படி?? உனக்கு பிடிச்சிருக்கா??" எனத் தோழியாய் அவளின் கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போக, அதற்கு பொறுமையாய பதிலளித்துக் கொண்டிருந்தாள் வாணி.
---
சென்னையிலுள்ள மிகப்பெரிய திருமண மண்டபம் அது.

மதுரவாணி வெட்ஸ் வெற்றிமாறன் என்ற வரவேற்பு பலகை வைக்கப்பட்டிருக்க,
செல்வமும் நீலாமதியும் வரவேற்பில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

மேடையில் வாணியும் மாறனும் புன்சிரிப்புடன் மேடையேறி வாழ்த்தியவர்களுக்கு நன்றியுரைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

மேடை எதிரே கீழே அமர்ந்திருந்தனர் மஹா மற்றும் வேணியின் குடும்பத்தினர். குடும்பம் என்றால் மஹா மதி மற்றும் அவர்களின் செல்ல மகள் யாழினியுடனும். ஆமாங்க மதியோட குட்டி குட்டிம்மா. நம்ம எது வேண்டாம்னு சொல்றோமோ அது தானேங்க நமக்கு வாலெண்டியராக் கிடைக்கும். அப்படி மஹா பொண்ணு வேண்டாம் வேண்டாம்னு சொல்ல கடவுளா தேடிப் போய் கொடுத்த பொக்கிஷம் யாழினி.(குட்டி மதிக்கு மஹாப் பொண்ணு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கு. கடவுள் தான் கருணை காண்பிக்கலை இன்னும்)
வேணி இளா அவர்களின் அன்பு மகன் இளவேந்தனுடன் வந்திருந்தனர்.

வேணி ஆசையாய் ஆசையாய் தன் கணவனின் பெயர் மற்றும் தன் பெயர் இணைத்து தான் பெயர் வைக்க வேண்டுமென தன் மூளையை குடைந்து தேடிக் கண்டுபிடித்தப் பெயர் இது.

வேணியும் மஹாவும் அருகருகே அமர்ந்து தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருக்க, இரு கணவன்மார்களும், "எதுக்கு சிரிக்கிறீங்கனு சொல்லிட்டு சிரிச்சா நாங்களும் சிரிப்போம்ல" எனக் கோரஸாய் கேட்க,

"இரண்டு பேரையும் பார்த்தீங்களா... கண்ணாலயே பேசிக்கிறாங்க... இவ வேற அநியாயத்துக்கு வெட்கப்படுறா?? என்னமோ இது அரேஜ்டு மேரேஜ் போலவே தெரியலையேனு தான் பேசிட்டு இருந்தோம்" என மஹாக் கூற,

"எதுக்கு அதைக் கேள்வியாய் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு... அவங்களையே கேட்டுவிடுவோம்" என்றான் மதி.

"ஆமா ஆஷிக் எங்க இருக்கான்?? போன் பண்ணுங்க இளா. அவன் வந்துட்டா போய் கிப்ட் கொடுத்துட்டு சாப்பிடப் போகலாம்" என வேணி கூறியதும் இளா கையில் போனை எடுக்க,

"ஹலோ ப்ரண்ட்ஸ்" எனக் கூறிக் கொண்டே வந்தான் ஆஷிக் அவன் மனைவி ரஹானா மற்றும் அவனின் மகன் ரிஸ்வான் உடன்.

"ஏன்டா இவ்ளோ லேட்?? எவ்ளோ நேரமா வெய்ட் பண்றது" என வேணி அவனை கடிந்துக் கொள்ள,

"ஆபிஸ்ல இருந்து வீட்டுக்குப் போய்டு இவங்களைலாம் கிளப்பி கூட்டிட்டு வர வேண்டாமா" என ஆஷிக் சொல்ல,

"இதுக்கு தான் ஆபிஸ் லீவ் போடுனு வாணி சொன்னா... கேட்குறியா நீ?? நீ தான் ப்ராஜக்டைய தலைல தூக்கி வச்சிருக்கிற மாதிரி சீன் போடுறது" என அவனை மேலும் வறுத்தெடுத்தே விட்டாள் வேணி.

அவளின் பேச்சில் சிரித்துக்கொண்டிருந்த ரஹானாவைப் பார்த்து,

"உன்னால முடியாததை நான் செய்றேனு தானமா இந்த சிரிப்பு" என வேணி சிரிப்பாய் கேட்க,

"என்னது முடியாதது அக்கா" என ரஹானா கேட்க,

"அதான் உன் புருஷனை திட்டுறது" என்றதும் அனைவரும் கொல்லெனச் சிரிக்க,

"அம்முஉஉஉஉஉஉ" என கூவினான் ஆஷிக்.

சிரித்தப்படியே அனைவரும் மேடையேறி வாணியை வாழ்த்த,

வெற்றிமாறனிடம் தங்களை அறிமுகம் செய்யவென தோழமைகள் குழு எத்தனிக்க,

"இருங்க இருங்க நானே உங்க பேருலாம் சொல்றேன்" எனக் கூறிய மாறன்,

மதி,இளா,வேணி,மஹா,ஆஷிக், ரஹானா இவர்களின் பிள்ளைகள் பெயர் வரை சரியாய் கூறி கைகுலுக்க,

அனைவரும் இன்ப அதிர்ச்சியில் அவனை ஆச்சரியமாய் பார்க்க,

"என்ன எல்லாரும் ஷாக் அடிச்ச மாதிரி பாக்குறீங்க... உங்களைப் பத்தி மது பேசாத நாளில்லை.... அவளோட அம்மா அப்பாக்கு அப்புறம் அவ அதிகமாக பேசியது உங்களை பத்தி தான். அவளோட பெங்களூர் வாழ்க்கை தான்" என மாறன் கூறியதும் அனைவரின் பார்வையும் வாணியை ஆதுரமாய் தழுவியது.

"எங்க கேபியை சந்தோஷமா வச்சிக்கோங்க... பத்திரமா பார்த்துக்கோங்க வெற்றி.... அவ எப்பவும் சந்தோஷமா இருக்கனும்" என மாறனைத் தழுவிக் கொண்டு ஆஷிக் உரைக்க, அனைவரும் அதை ஆமோதித்தனர்.

"ஆமா கேபி நீ வெற்றியை லவ் பண்றதை சொல்லவே இல்ல" என ஆஷிக் கேட்க,

"என்னடா உளர்ற??" என வாணி வினவ

"ஆமா லவ் பண்ணாம தான் இப்படி ஸ்டேஜ்ல ரொமேன்ஸ் செஞ்சிட்டு இருக்கீங்களா??" என வியப்பாய் ஆஷிக் கேட்க,

"டேய் நல்ல நாள் அதுவுமா என்கிட்ட அடி வாங்காமா போய்டு" என வாணி ஆஷிக்கை முறைக்க,

"வாணி, நாங்களே கேட்கணும் நினைச்சோம். லவ் மேரேஜ் இல்லனாலும் மூனு மாச கேப்ல மாறன் அண்ணா எப்படியோ உன்னை கவுத்துட்டார் போலயே... அதான் டன் டன்னா காதல் உன் கண்ணுல வழியுதே" என வேணிக் கூற,

"மூனு மாசத்துல இல்லடி... அண்ணாவ பார்த்த முதல் நாளே மேடம் ஃபளாட் போலயே" எனக் கண்ணடித்து மஹாக் கூற,

"அடியேய் பக்கிகளா என் மானத்தை வாங்காம போறீங்களா" என வெட்க முகத்துடன் வாணிக் கூற,

மாறன் அவளின் வெட்கத்தை ரசித்து சிரித்துக் கொண்டிருக்க,

"சரி சரி இப்ப நேரம் இல்லனு போறோம்... கண்டிப்பா உன் லவ் ஸ்டோரி எங்களுக்கு தெரிஞ்சே ஆகனும் சொல்லிட்டேன். அண்ணா உங்களுக்கும் தான்" எனக் கூறி மீண்டுமொரு முறை வாழ்த்துக் கூறி அனைவரும் மேடையிலிருந்து இறங்க,

மஹா மற்றும் வேணியின் கூற்றில், வாணியும் மாறனும் ஒருவரை ஒருவர் கண் சிமிட்டாது பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் எண்ணங்கள் அவர்களின் முதல் சந்திப்பை நோக்கி பயணித்தது.
பெண் பார்க்கும் படலம் வாணியின் வீட்டில்.

மாப்பிள்ளையும் பெண்ணும் தனியே பேசவென அறையில் தனித்து விடப்பட்டிருந்தனர்.

வந்த நொடியிலிருந்து வைத்த கண் வாங்காது வெற்றிமாறன் வாணியைப் பார்த்துக் கொண்டிருக்க,கையை பிசைந்துக் கொண்டிருந்த வாணி தன் தொண்டையை செருமி பேசவாரம்பித்தாள்.

"உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்க??" - வாணி

அவன் புருவங்கள் இடுங்க கேள்வியாய் வாணியை நோக்க,

"இல்ல நீங்க நல்லா வாட்ட சாட்டமா நெடு நெடுனு இவ்ளோ உசரமா இருக்கீங்களே?? நான் உங்க இடுப்புக்கு தான் இருப்பேன். அதான் உங்களுக்கு என்னைப் பிடிச்சி தான் பார்க்க வந்தீங்களானு கேட்க வந்தேன்" எனத் தயங்கி தயங்கி அவனின் முகம் பார்த்து அவள் கூற,

அவளின் வாட்ட சாட்டம் என்ற கூற்றில் சற்றாய் சிரித்தவன்,"உங்களுக்கு இந்த வெட்கம் அதெல்லாம் வருமா??" என சம்பந்தமில்லாமல் அவன் கேட்க,

"அதெல்லாம் கணவனானதுக்கு அப்புறம் நீங்க நடந்துக்கிற முறைல நடந்துக்கிட்டீங்கனா தானா வரும்" எனக்கூறி தன் நாக்கை கடித்து கண்ணை சுருக்கி தன் தலையில் அடித்துக் கொண்டவள்,

"நான் கடைசியா சொன்னதை மறந்துடுங்க" என அவசர அவசரமாய் உரைக்க,
அவளின் கணவனாய் என்கின்ற பதத்திலேயே அவளின் பிடித்தத்தை அறிந்தவன், மறந்துடுங்க என்ற கூற்றில் வாய் விட்டு சிரித்து,

"மறந்திடச் சொன்னாய் சொன்ன வார்த்தையை
மறக்க முடியவில்லை கண்மணி
உன்னையும் அவ்வார்த்தை உரைத்த பொருளையும்"

என அவளைப் பார்த்து அவன் கவிப்பாட,

"ஹான்.." என வாயைப் பிளந்தவள்,

"முதல் முறையா பார்க்கிற பொண்ணுக்கிட்ட இப்படியா பேசுவீங்க" என அவள் கேட்க,

"நான் உன்னை இப்ப தான் முதல் முறையா பார்க்கிறேனு சொல்லலையே" என அவன் கூற,

"அப்ப என்னை முன்னாடியே பார்த்திருக்கீங்களா?? எங்க?? எப்போ??" என வாணிக் கேட்க,
அவளின் முகத்திலேயே தன் பார்வையைத் தேக்கி பார்வையால் அவளை அவன் விழுங்கிக் கொண்டிருக்க,

இத்தனை நேரம் அவன் முகத்தைப் பார்த்துப் பேசியவளின் முகம் தானாய் வெட்கத்தில் தலைக்குனிய,

"ஏன்டா என்னை இப்படி பார்த்து வைக்குற" என மனதிற்குள் அவனை செல்லமாய் அவள் திட்டிக்கொண்டிருக்க,

"ஹ்ம்ம் கணவனின் செயலில் மனைவி நாணம் கொண்டு முகம் ரத்தமாய் சிவக்க தரையை நோக்கினாள்" என வாணியைப் பார்த்து மீண்டும் அவன் கவிப்பாட,

"நான் கேட்டக் கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை" என அவள் அவன் கவனத்தை திருப்ப,

"பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே

உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்"

என அவன் மொபைல் அலற,

"காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே"
என மாறன் வாய் விட்டு பாடியவன்,

உன் கேள்விக்கான பதிலை என் மொபைலே சொல்லிடுச்சு என உரைத்தவன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அவன் சென்றதும்,"உஃப்ஸ்" என பெருமூச்சு விட்டப்படி சோபாவில் தொம்மென அமர்ந்தவள் தன் கண்களை மூட, கண்ணுக்குள் மாறனின் பிம்பமே வந்துப் போக,

"நம்ம விரதத்தை கலைக்கிறதுக்குனே வந்திருக்காங்க போலயே" என அவள் எண்ணிக்கொண்டிருந்த நேரம்,

"எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்த-நீ
எனைப்பாடு படுத்த

எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க-நான்
எனைத்தேடி எடுக்க"

என அவளின் மொபைல் இப்பொழுது அலற,

"இன்னிக்கு மொபைல் ரிங்டோன்லாம் சேர்ந்து எனக்கு சதிப் பண்ணுதே" எனக் கூறி வெட்கமாய் சிரித்தவள்,

அவ்வழைப்பை ஏற்றுப் பேச,மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்புறாங்க கீழே வா மதும்மா" என்றுரைத்தார் செல்வம்.

"இதோ வரேன்ப்பா" எனக் கூறி தன் அலங்காரத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து தன்னை சரி செய்துக் கொண்டவள் கீழே செல்லவும் அவர்கள் காரில் ஏறவும் சரியாக இருக்க,

அவளின் விழிகளை நோக்கி ஒரு சிறு தலை அசைப்புடன் அவளிடம் விடைப்பெற்றுச் சென்றான் மாறன்.

மதுரவாணி வெற்றிமாறன் திருமணம் விமர்சையாய் நடந்து முடிக்க, திருமணம் முடிந்து இரண்டு மாதமான நிலையில் கல்யாண ட்ரீட் என அனைத்து நெருங்கிய தோழமைகளையும் அழைந்திருந்தினர் அந்த ஹோட்டலுக்கு.

"வாணி இப்பவாவது சொல்லுடி உங்கள் காதல் கதையை" என மஹாக் கூற,

தங்களின் பெண் பார்க்கும் படலத்தில் கூற வேண்டியவற்றை மட்டும் தோழமைகளிடம் வாணிக் கூற,

"ஆஹா அப்ப நான் சொன்னதுப் போல அண்ணாவ பார்த்ததும் கவுந்துட்டியாடி" என ஆச்சரியமாய் மஹாக் கேட்க,

"அதான் கேபி மூஞ்சிலயே எழுதி ஒட்டிருக்கே. நம்ம கேபிக்கும் வெட்கப்படத் தெரியும்னு நம்ம வெற்றி தான் கண்டுபிடிச்சிருக்காரு. என்னமா வெட்கப்படுறா பாரேன்" என ஆஷிக் வாணியை வார,

நிஜமாகவே மேலும் வெட்கம் கொண்டவள், வெட்கம் தாளாமல் வெற்றியின் தோளில் தன் முகத்தை மறைத்துக்கொள்ள,

"இனிமே நீ கேபி இல்ல... நீ விபி" என ஆஷிக் கூற,

"ஆமா அதென்ன கேபி?? மதுவக் கேட்ட நீங்களே கண்டுபிடிங்கனு சொல்லிட்டா... இதுல நீங்க புதுசா விபினு வேற சொல்றீங்க" என மாறன் கேட்க,

"அது பெரிசா ஒன்னுமில்ல வெற்றி. நான் அவளை முதன் முதல பார்க்கும் போது அவ எனக்கு ஸ்கூல் படிக்கிற குட்டிப்பொண்ணா தெரிஞ்சா... அதான் அந்த கேபி... குட்டிப்பொண்ணு... மேடம் இப்ப வெட்கப்படுற அளவுக்கு வளர்ந்தப் பொண்ணு ஆயிட்டாங்களே அதான் வளர்ந்தப் பொண்ணு விபினு சொன்னேன்" என அவன் விளக்கம் கூற, வெற்றி மென்னகை புரிந்தான்.

"சரி நீங்க சொல்லுங்க வெற்றி. எங்களைப் பத்தி உங்ககிட்ட என்னலாம் சொல்லி வச்சா இந்த கேபி" என ஆஷிக் கேட்க,
அதை நான் சொல்றதை விட கேபியே சொன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் எனக்கூறி வெற்றி கேபியை உந்த,

"என் லைப்ல நான் மகிழச்சியா இருந்த நாட்கள் என்னுடைய பெங்களூர் நாட்கள். டைம் மெஷின் மூலமா நீ பாஸ்ட்க்கு போக போறனு சொல்லி எங்க போகனும்னு என்னையக் கேட்டா... நான் என்னுடைய பெங்களூர் நாட்களுக்கு அழைச்சிட்டு போங்கனு தான் சொல்லுவேன். எத்தகைய துன்பம் சுத்தி இருந்தாலும் இன்பத்தை மட்டுமே என்னை சுகிக்க வைத்த என் நட்புகள். என்னிக்குமே என்னை தாழ்வாகவோ தரைகுறைவாகவோ நடத்தாம என்னை தோழியாய் தோள் கொடுத்து தாங்கிய தேவதைகள் என் இரு தோழிகள். தேவையான நேரத்துல தந்தையா அறிவுரைச் சொல்லி உடம்பு சரியில்லாதப்போ தாயாய் கூடவே இருந்து பார்த்துக்கிட்டு தோழியாய் வாழ்க்கைய ரசிக்கக் கத்துக் கொடுத்தவங்க இவங்க தான்.
அப்பா அப்புறம் சொந்தகார அண்ணாங்களுக்குப் பிறகு நான் பாதுக்காப்பாய் உணர்ந்தது இவனுடன் இருக்கும் போது தான். கண்ணுக்குள்ள வச்சு என்னைப் பார்த்துக்கிட்டான். என் மனம் வெறுமையாய் ஃபீல் செய்யும் போது லோன்லியா ஃபீலாகும் போது கண்டிப்பா இவன் கிட்ட இருந்து எனக்கு கால் வரும். என் மனநிலையை அப்படியே வேற லெவலுக்கு கொண்டு போய்டுவான். கொஞ்சம் கூட என் கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துக்காம அன்பை மட்டுமே பொழிச்ச பாசக்கார நண்பன். அம்மு மஹா ஆஷிக் என் வாழ்வின் வசந்தமாய் வந்தவர்கள். என் வசந்தகாலத்தை பகிர்ந்துக் கொண்டவர்கள். எங்க வாழ்நாள் வரைக்கும் தொடரும் தோழமையிது." என வாணி நெகிழ்வாய் பேசி முடிக்க,

மூவரும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

"உன்னை ப்ரண்டா அடையறதுக்கு நாங்க தான் கொடுத்து வச்சிருக்கோம்" என மூவரும் கோரஸாய் உரைத்தனர்.

நாங்க செஞ்ச சின்ன சின்ன விஷயத்துக்கு உன் மனசுல எவ்ளோ பெரிய இடத்தை எங்களுக்கு கொடுத்து வச்சிருக்க நீ. நாங்க தான் ப்ளஸ்ட் டு ஹேவ் யூ இன் அவர் லைப் எனக் கூறி நெகிழ்ந்தனர் மூவரும்.

அவர்களின் துணைவர்களுக்கும் பெருமிதமே இவர்களின் நட்பின் ஆழத்தைப பார்த்து.

இவர்கள் இவ்வாறு நெகிழ்ச்சியாய் பேசிக் கொண்டிருந்த சமயம், இளவேந்தன் அழ ஆரம்பிக்க,

"ஏங்க கோவக்காய் அவனை கொஞ்சம் சமாதானம் செய்யுங்களேன்" என வேணிக் கூற,

அனைவரும் சிரித்துக் கொண்டே தங்களின் உணவை உண்ண, "அதென்னடி திடீர்னு மரியாதையா பேசுற... ஏகதுக்கும் இளா அண்ணாவ டா போட்டு பேசுவ... சரி அதை விடு... இந்த கோவக்காய் பாவைக்காய் க்கு இப்பவாவது விளக்கம் சொல்றியா நீ??" என வாணிக் கேட்க,

"ஹி ஹி ஹி" என அசடு வழிந்தவள்,

"என் புருஷனை நான் எப்படி மத்தவங்க முன்னாடி விட்டுக்கொடுக்க முடியும். ப்ரண்டா இருக்கும் போது டா போட்டு பேசினா வேற... இப்பவும் அப்படியே கூப்பிட முடியுமா?? அதான் மரியாதையா பேசப் பழகிட்டேன்" என வேணிக் கூற,

"அப்ப தனியா இருக்கும் போது மரியாதை தேயும் போலயே" என மதி கூற,

"அங்கயும் அப்படி தான் போல" என இளா மதியைப் பார்த்து கிண்டலாய் கூற,

"இதை நான் என் வாயால வேற சொல்லனுமா?" என மதி பாவமாய் முகத்தை வைத்துக் கூற,

"வீட்டுக்கு வாங்க உங்களை கவனிச்சிக்கிறேன்" என மஹா மதியிடம் அடிக்குரலில் கூற,

அனைவரும் சத்தமாய் சிரித்திருந்தனர்.

"சரி சரி டாபிக் சேஞ்ச் பண்ணாம உன் கோவக்காய் கதைக்கு வா" என மீண்டும் வாணி விட்ட இடத்துலேயே வந்து நிற்க,

"இளங்கோவன் பேரை தான் சுருக்கி கோவக்காய் ஆக்கினேன். இளா என்னை கடுப்பேத்தும் போது பாவக்காய் போல கசப்பு ஃபீல் ஆகும். சோ பாவக்காய்" என சிரித்துக் கொண்டேக் கூற,

"ஹோ இது தான் அந்த மொக்க கதையா" என வாரினாள் வாணி.

"சரி மேடம் உங்க காதல் கதைய சொல்லுங்க" என மஹாக் கேட்க,

"அது சொல்ல வேண்டிய நேரத்துல சொல்றேன். உங்களைப் போல ஒரு பிள்ளைய பெத்துக்கிட்டு அவர் காதலில் முங்கி நனைஞ்சி திண்டாடிட்டு இருக்கும் போது கண்டிப்பா சொல்றேன்... அவர் என்னை முதன் முதலில் எங்க பார்த்தாருன்னும் சொல்றேன்" என வாணி மாறனின் முகம் பார்த்துக் கூற, ஆமென கண் சிமிட்டி ஆமோதித்தான் அவனும்.

அனைவரும் இதுபோல் நட்பும் சுற்றமும் அன்பும் சூழ இன்பமாய் வாழ வாழ்த்துவோம்.
----
மாறன் வாணியை முதலில் எங்கு பார்த்தான்?? இது காதல் திருமணமா?? பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணமா?? அனைத்தும் அடுத்த கதையில் தெரியவரும்.

மது'ஸ் மாறன் - கதையின் தலைப்பு

நாயகன் - வெற்றி மாறன்
நாயகி - மதுரவாணி

மற்றும் தோழமைகள் அனைவரும் இதர கதாபாத்திரங்கள்.

ஆனா அடுத்த வருஷம் தான் வரும் மக்களே.

நன்றி பட்டியலுடன் நாளை வருகிறேன்.


அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

எப்படி ஆரம்பிக்க என்ன சொல்லி ஆரம்பிக்கனு தெரியலை.

முதல்ல என் மேல் நம்பிக்கை வைத்து தளம் அமைத்துக் கொடுத்த sri ma ku நன்றி.

என்னுடைய முதல் கதைக்கு ஆதரவு தந்து தொடர்ந்து படித்து லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் எனது பேரன்பும் நன்றியும் உரித்தாக்குகிறேன்.

என்னுடைய கருத்து திரியில் தொடர்ந்து அனைத்து பதிவுக்கும் கருத்தளித்த @Nagalaxmi @கவிதாசுப்பரமணி @Indhukarthik @megala உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

நாகலஷ்மி சகோ ரொம்ப ரொம்ப நன்றி உங்களின் கருத்துக்கு நான் விசிறினு சொல்லலாம். அவ்ளோ அழகா தமிழ்ல குட்டி ரிவ்யூ போல சொல்லிடுவீங்க. நான் நிறைய கமெண்ட்ஸ் ரசிச்சி ரசிச்சி படிச்சேன். நீங்க பெரிய பூஸ்ட் எனக்கு இந்த கதையின் பயணத்தில்.
மிக்க நன்றி டியர் சகோ 💕💞💓💗💖🌹🌹🌹🌹🌹

அடுத்து கவிதா, இந்து,மேகலா உங்களின் நேரத்தை ஒதுக்கி கருத்து திரியில் வந்து கருத்து தெரிவித்து என்னை ஊக்குவித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. 😍😍💖🌹🌹🌹💗💓💞💕

லைக்ஸ் போட்டுக் கொண்டிருக்கிற இன்னும் போட போகிற மக்கள் அனைவருக்கும் பெரிய நன்றி.
ஒரு வரியில் உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டால் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்.

என்னுடைய முதல் கதை என்பதால் நிறைய பிழை இருந்திருக்கலாம். அதனால் என்னுடைய கதையில் நிறை குறை எதுவென்றாலும் என்னுடன் பகிர்ந்துக்கலாம்.

முக்கியமான வாணி மாறன் கதைல மத்தவங்களுக்கு முக்கியத்துவம் குறஞ்சிடும்னு பயப்பட வேண்டாம். இதே போல் காதலும் நட்பும் இருக்கும். ஆனால் காதல் அதிகமா இருக்கும். அந்த ஸ்டேஜ்ல நட்பு எப்படி இருக்குனு பார்ப்பீங்க.

இடையில் முடிந்தால் ஒரு குறுநாவலுடன் வருகிறேன்.

உங்களின் ஆதரவிற்க்கும் பேரன்பிற்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Status
Not open for further replies.
Top