அந்த ஹோட்டலின் அருகிலேயே இவர்களின் வீடு இருக்க, மஹா மற்றும் வாணியுடன் தன் பைக்கை தள்ளிக்கொண்டே நடந்து வந்தான் மதி.
வீடு வந்ததும் தங்களின் அறைக்கு வாணி செல்ல, பேசிக்கொள்ளவென ஒதுங்கி நின்றனர் மதியும் மஹாவும்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வாணி கிப்ட் ராப் செய்யப்பட்ட பெரிய பெட்டியை எடுத்து வந்து மதியிடம் வழங்க,
"ஹே வாணி என்னதிது??" என ஆச்சரியமாய் மஹா கேட்க,
வாணியின் மனது அக்கேள்விக்கு,"அதை உன் ஆளுக்கிட்டேயே கேட்டுக்கோ" என பதிலளிக்க,
"இந்த மூளையும் ஆஷிக்கோட ப்ர்ண்ட் ஆகி அவனை மாதிரியே பேசுது" என மனதில் எண்ணிக்கொண்டே தன் மண்டையிலேயே தட்டிக்கொண்டவள்,
"மதி கிட்டயே கேளுடி. நேத்து நைட் என்கிட்ட கொடுத்துட்டு போனாங்க. உனக்கு தெரியாம வச்சிக்க சொன்னாங்க." வாணி உரைக்க,
"ஹோ அதான் என்னை நீ அந்த ஸ்டோர் ரூம்குள்ள போக விடலையா??" என மஹா கேட்க,
ஆமென கூறிவிட்டு சென்றாள் வாணி.
மதி அப்பரிசுப் பொருளை மஹாவிடம் வழங்க, ஆர்வமாய் பிரித்துப் பார்த்தாளவள்.
அதனுள் அவளின் பாதி உயரமுள்ள பிங்க் நிற அழகிய டெட்டி பேர் இருந்தது.
அதைக் கண்டதும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாளவள்.
"இனி இந்த டெட்டி பியர் பார்க்கும் போதெல்லாம் உனக்கு என் நியாபகம் தான் வரணும்" என கண் சிமிட்டி
அவனுரைக்க,
"வாவ் செம்மடா... எவ்ளோ அழகாயிருக்கு... போடா இனி நீ எனக்கு பெஸ்ட் பிரண்ட் இல்ல... என் பட்டுக்குட்டி தான் பெஸ்ட் ப்ரண்ட்" என அவள் அந்த டெட்டி பியரை கொஞ்ச,
"அடிப்பாவி, டெட்டி பியரை பார்த்ததும் பிரண்டை கழட்டி விட்டுட்ட நீ" என பாவமாய் முகத்தை வைத்து கேட்க,
அவள் வாய்விட்டு சிரித்தாள்.
"என் லைப்ல மறக்க முடியாத பர்த்டே இது. பெஸ்ட் பர்த்டே இன் மை லைப். இன்னிக்கு உன் கூட செலவழிச்ச ஒவ்வொரு நிமிஷமும் மறக்க முடியாது மதி" எனக் கண்கள் மின்ன முகம் நிறைந்த சந்தோஷத்தில் மஹாக் கூற,
அமைதியாய் புன்னகைத்தானவன்.
"சரி நீ எப்ப ஹைத்ராபாத் போற... நாளைக்கு ப்ரைடேவும் சேர்த்து லீவ் எடுத்திட்டியா??" என மஹாக் கேட்க,
"அண்ட் தட்ஸ் தி ஃபைனல் சப்ரைஸ்" என்றான் மதி.
"என்னது சப்ரைஸா??" - மஹா
"ஆமா இனி இந்த மதி மஹாக் கூட தான் இருப்பான்" என்றானவன்
"டேய் புரியுற மாதிரி சொல்லுடா... டென்ஷன் படுத்திக்கிட்டு" என மஹாக் கேட்க,
"ஐ காட் டிரான்ஸ்பர்ட் டூ பெங்களூர் டியர்... நீ பெங்களுர் வந்ததும் நான் கேட்க ஆரம்பிச்ச டிரான்ஸ்பர் நியர்லி ஒன் இயர் ஆகப்போகுது இப்ப தான் கொடுத்தாங்க" என மதி உரைக்க,
அவனின் பணியிடமாற்ற சந்தோஷத்தில் அந்த டியரை இப்பொழுதும் கவனிக்கவில்லை அவள்.
"வாவ் சூப்பர்டா மதி... நாளைக்கு ரிப்போட் செய்றியா இந்த ஆபிஸ்ல" - மஹா
ஆமென தலையை அவனசைக்க,
"உன்னை பிரியனுமேனு கொஞ்ச கஷ்டமா இருந்துச்சுடா. இப்ப ஐம் வெரி மச் ஹேப்பி. சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு... நீ கிளம்பு... நம்ம வீக்கெண்ட் மீட் செய்வோம்" என்றவனை அனுப்பி வைத்தாளவள்.
அவளின் அறைக்கு சென்று ரிபெரெஷ் ஆனவள்,அந்த டெட்டி பியரை அணைத்துக் கொண்டு
அன்றைய நாளின் இனிமையான தருணங்களை எண்ணிக் கொண்டே உறங்கிப்போனாள்.
---
ஞாயிறு இரவு சேலத்திலிருந்து பெங்களுர் செல்லும் பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர் வேணியும் இளாவும்.
பேருந்து ஏறியதிலிருந்து இளா அமைதியாகவே அமர்ந்திருக்க,
"என்னடா இளா, அன்னிக்கு என்னமோ என்னைய வச்சி செய்றேன் பெரிசா கதை விட்டே... இப்ப என்னடானா சிட்டிங்ல சோக கீதம் வாசிச்சுட்டு இருக்க" என வேணி அவனை வம்பிழுக்க,
"என்ன ப்ரச்ச்னை உனக்கு இப்ப?? நான் பேசினாலும் சண்டை போடுற... அமைதியா வந்தாலும் வம்பிழுத்து கடுப்பேத்துற... என்ன தான் வேணும் உனக்கு... கொஞ்சம் நேரம் அமைதியா வர முடியாதா?? இனி தனியா ட்ராவல் செய்யுனு உன்னை விட்டுறனும்... கூட வந்தா.. மனுஷனை பாடாய் படுத்துறது" என இளா கடுமையாய் பேசி அவளை பொறித்தெடுக்க,
"என்னாச்சுடா இளா?? ஏன் இவ்ளோ கோபம்?? நீ இப்படி என் கிட்ட பேச மாட்டியே?? இது நம்ம எப்பவுமே வம்பிழுத்து விளையாட்டுக்கு பேசுறது தானடா... உனக்கு எதுவும் உடம்புக்கு முடியலையா??" என அவன் திட்டியதையும் பொருட்படுத்தாது அவனின் நலனை எண்ணி வருந்தி அவள் கேட்க,
"நான் தூங்க போறான் அம்ஸ்... என்னை டிஸ்டர்ப் செய்யாதே" என்றுரைத்து சீட்டை பின் சாய்த்து கண் மூடி தலை சாய்த்துக்கொண்டானவன்.
அதன் பிறகு திங்கள் காலை வேணியின் ரூமினில் அவளை விட்டு
தன் ரூமிற்கு செல்லவென திரும்ப,
"என் மேல எதும் கோபமா கோவக்கா?? நீ என் கிட்ட பேசவே இல்ல இளா?? இத்தனை வருஷத்துல நீ இப்படி என் கிட்ட நடந்துக்கிட்டதே இல்லையே?? சரி உனக்கு மூட் அவுட்னு தெரியுது... சரியானதும் என் கிட்ட கண்டிப்பா பேசனும் சரியா" என மஹா கூற
அவளிடம் ஏதும் பேசாது தலையசைத்து விடைபெற்றானவன்.
--நெகிழ்தல் தொடரும்