All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கதை திரி

Status
Not open for further replies.

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4:
சிறியவளை
பெரியவளாய்
எண்ணச் செய்தது
உன் நட்பு....
அப்பெரியவளிலுள்ள
சிறியவளை
ரசிக்கச் செய்தது
உன் காதல்....


ஹெச் ஆரிடம் ரிப்போர்ட் செய்வதற்கான அந்த நாளில்...

"அடியேய் வாணி, எழுந்திருடி... இன்னிக்கு வேறொரு ஆபிஸ்க்கு போகனும். அந்த முகவரிய கண்டுபிடிச்சுப் போக எவ்ளோ நேரம் ஆகுமோ??" என வாணியை எழுப்பிக் கொண்டிருந்தாள் மஹா.

அப்பொழுது குளித்து முடித்து வெளியில் வந்த வேணி,"அவ கிளம்பியிருந்து நம்மள எழுப்பின காலம் போயி... இப்ப நாம கிளம்பி அவளை எழுப்புற காலமாகிப் போச்சே... எப்படி இருந்த பொண்ணு இப்படி மாறிப் போச்சே" என வராத கண்ணீராய் துடைத்துக் கொண்டு வாணியைக் கிண்டலடிக்க,
துள்ளிக்குதித்தெழுந்த வாணி,"நீங்க தானடி மாத்துனீங்க... என்ன நடந்தாலும் டானு 9 மணிக்கு தூங்குற பொண்ண படம் பாக்கலாம் கார்ட்ஸ் விளையாடலாம்னு ஒரு மணி வரை தூங்க விடாம செஞ்சிட்டு இப்ப என்னைய குறைய சொல்றீங்க பக்கீகளா... அவ்ளோ நேரம் முழிச்சிட்டு இப்ப எப்டிடி சீக்கிரம் எழுந்திரிக்க முடியும்"என சிலிர்த்துக் கொண்டு பேச...


வாய் விட்டு சிரித்த மஹா,"எங்க கஷ்டம் இப்ப புரியுதா உனக்கு. மூனு மாசமா காலைல எங்களை எழுப்பி கடுப்பேத்துவியே. இப்ப புரியுதா உனக்கு"என வில்லிப் போல் நடித்துப் பேச..

"என்னமோ போங்கடி. ஆனா உங்க கூட ரொம்ப சந்தோஸமா,நான் நானா இருக்கேன்டி" என நெகிழ்ச்சியாய் கூறிவிட்டு குளிக்கச் சென்றுவிட்டாள்.

எப்பவுமே உணர்வுபூர்வமா தான்டி நம்ம வாணி பேச்சை முடிப்பா என வேணிக் கூற மென்மையாய் சிரித்துக் கொண்டாள் மஹாவும்.

இவர்கள் கிளம்பிச் சென்று அவர்களின் புதுக் கிளை அலுவலகத்தை அடைந்து தங்களின் பேட்ஜ் மக்களுடன் இணைந்து ஹெச் ஆர் தேவேந்தர் சிங்கை காணச் சென்றனர்.

இவர்களின் பேட்ஜ் மக்களை ப்ராஜக்டில் பணியமர்த்த இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹெச் ஆர் தான் தேவ்.
ஐடியில் அனைவரையும் பேர் சொல்லியே அழைக்க வேண்டும். பெரியவர் சிறியவர் வயதானவர் என்கின்ற எந்த பாரபட்சமும் பாராமல் பெயர் சொல்லி தான் அழைக்க வேண்டும்.இது ஐடி யின் ஒரு விதி.


ஆகவே ஹெச் ஆர் தேவேந்தர் சிங்கை அனைவரும் தேவ் என்றே அழைப்பர்.

இவர்களுடைய பயிற்சிக்கேற்ற ப்ராஜக்டில் காலியிடங்கள் உள்ளதாயென அறிந்து அந்த ப்ராஜக்டில் இவர்களை பணியமர்த்துவதே ஹெச் ஆரின் வேலை.

எத்தனை காலியிடங்கள் உள்ளதோ அத்தனை மக்களை அந்த ப்ராஜக்டிற்கு பணியமர்த்த அந்த ப்ராஜக்ட் மேனஜரிடம் நேர்முகத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களே அந்த ப்ராஜக்டில் பணியமர்த்தப்படுவர்.
அனைவருக்கும் பணி இடம் பெங்களூர் தானெனவும் பணியிட மாற்றம் செய்யயிலாதெனவும் கூறிவிட்டார் தேவ். எனவே பெங்களூரிலிருந்து வரும் ப்ராஜக்ட் அழைப்புகளையேற்று நேர்முகத்தேர்வில் பங்கெடுத்துக் கொண்டு ப்ராஜக்ட் பெற்றுக்கொள்ள வேண்டுமென உரைத்து விட்டார் தேவ்...


பெரும் கவலையை விதைத்திருந்தது இச்செய்தி வாணிக்குள். சிறிது காலம் பெங்களூரில் வேலை பார்த்து விட்டு பணியிடமாற்றம் கேட்டால் தருவார்களெனக் கூறி வாணியைத் தேற்றினார்கள் மஹாவும் வேணியும்.

மூன்று மாதம் எவரும் தங்களின் ஊருக்குச் செல்லாமல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமையால் அனைவரும் இரண்டு நாட்கள் விடுபெடுத்துக் கொண்டுத் தங்களின் ஊருக்குச் சென்று வருவதாய் வேண்டுகோள் விடுத்தனர் ஹெச்ஆரிடத்தில்.

அவரும் ப்ராஜக்ட் கிடைக்கும் வரை வேலை ஏதுமில்லாததால் அவர்களின் விடுப்பிற்கு அனுமதி வழங்கினார்.

வாணி,ஆஷிக் மற்றும் மஹா உட்பட எட்டு நபர்கள் இருந்தனர் சென்னை செல்லவென அவர்களின் பயிற்சி வகுப்பு மக்களில்.

எனவே ஆஷிக்கும் மஹாவும் மதிய உணவு இடைவேளையில் சாந்தி நகர் பேருந்து நிலையம் சென்று கர்நாடக அரசுப் பேருந்தில் எட்டு பேருக்கு சென்னை செல்வதற்கான டிக்கெட் முன் பதிவு செய்தனர். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இல்லாத சமயமது.

வாணி தன் பெற்றோரிடம் அனைவருடன் சேர்ந்து வருவதாய்க் கூறி அனுமதிப் பெற்றிருந்தாள்.

வெகு நாட்களுக்குப் பிறகு தங்களின் ஊருக்கு செல்வதனால் உற்சாகமாய் கிளம்பினர் அனைவரும்.

வாணிக்கு, தாய் தந்தை அல்லாது முதல் முறை நண்பர்கள் தோழிகள் புடைசூழ பயணிக்கும் முதல் பயணம் அது.

அன்று இரவு அம்சவேணி அவர்களின் பிஜி அருகிலேயுள்ள தனியார் பேருந்தில் சேலத்திற்கு ஏறிச் சென்றிட,மஹா வாணி மற்றும் ஆஷிக் ஆட்டோவில் சாந்தி நகர் பேருந்து நிலையம் சென்றனர் சென்னை செல்வதற்காக.
அவர்கள் சாந்தி நகர் வந்தடைய, சென்னைக்கு செல்லும் மற்ற தோழமைகளும் வந்துச்சேர சரியாகயிருந்தது. அனைவரும் அங்கிருந்த ஓர் உணவகத்தில் ஒன்றாய் அமர்ந்து அரட்டையடித்து இரவு உணவு உண்டுவிட்டு,தங்களின் பேருந்து நின்றுக்கொண்டிருந்த நடைமேடைக்கு வந்தனர்.


ஆஷிக் மஹாவிடம் தான் கொடுத்து வைத்த எட்டு நபருக்குமான பயணச்சீட்டு கேட்க,மஹா தேடினாள் தேடினாள் தேடிக்கொண்டேயிருந்தாள்.
ஆனால் பயணச்சீட்டு தான் கிடைத்தப்பாடாயில்லை.


அரைமணி நேரத்தில் பேருந்து கிளம்பத் தயாராய் இருந்த நிலையில் பயணச்சீட்டு காணவில்லை என்பது அனைவருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது.
வாணி மஹாவின் பை முழுக்கத் தேடிப் பார்த்தும் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. தன்னால் மற்றவருககும் பிரச்சனையென எண்ணி கண்ணீர் வர ஆரமபித்தது மஹாவிற்கு.


தன்னுடைய ஜீன்ஸ் பாக்கெட்டில் தான் வைத்தேனென்று உரைத்தாளவள். ஆனால் பாக்கெட்டில் இல்லை. ஆட்டோவில் ஏறி இறங்கும் போது கீழே விழுந்திருக்குமென சமாதானம் செய்துக் கொண்டனர் வாணியும் ஆஷிக்கும்.

பின் அப்பேருந்து நிலையத்திலிருந்த கர்நாடக அரசுப் பேருந்து அலுவலகத்திற்குச் சென்று டிக்கெட் தொலைந்து விட்டதாய் கூறி அதே இருக்கை எண்ணிற்கு வேறு டிக்கெட் கேட்க,மீண்டும் முழுப்பணம் செலுத்தினால் மட்டுமே டிக்கெட் கிடைக்குமென கூறிவிட்டனர் அவர்கள்.

பேருந்து கிளம்புவதற்கு கால் மணி நேரமேயிருக்க,ஆஷிக் அவசரமாய் ஏடிஎம் சென்று அனைவருக்குமாக அவனே மீண்டும் முழுப்பணமும் செலுத்தி டிக்கெட் வாங்கினானவன்.

பிறகு ஆஷிக் அந்த அலுவலரிடம் தங்களின் நிலையை எடுத்துரைக்க, அவர் ஒரு கடிதமளித்து,ஒரு மாதத்திற்குள் கர்நாடக அரசு பேருந்தின் தலைமை நிலையத்திற்கு சென்று இக்கடிதத்தைக் காண்பித்தால் பாதிப் பணம் திருப்பிச்செலுத்திவிடுவர் என உரைத்தாரவர்.

ஒரு வழியாய் அவரவர் பேருந்து இருக்கையில் அமர, சென்னை பயணம் துவங்கியது.

வாணி மற்றும் மஹா இருக்கையின் பின் இருக்கையில் ஆஷிக் அமர்ந்துக் கொள்ள,பேருந்து கிளம்பிச் சென்ற சிறிது நேரத்திலேயே தன் கேலிப் பேச்சால் டிக்கெட் குளறுபடியால் சோர்ந்து போயிருந்த மஹாவை சிரிக்க வைத்திருந்தானவன்.

வாணி வெகுவாய் ரசித்தாள் இப்பயணத்தை.

நடுநிசி இரவில் பேருந்துத் திடீரென ப்ரேக் போட்டு நிறுத்தியது.

நன்றாக உறக்கத்திலிருந்த அனைவரும் முன் கம்பியில் மோதிக் கொள்ளுமளவு இருந்தது அந்த வேகம்.
______


அதே நேரம் சேலத்திற்கு தனியார் பேருந்தில் ஏறிய அம்சவேணியின் இருக்கையினருகில் அமர்ந்திருந்தான் இளா.

"எப்ப பாரு பஸ் ஏறுன அடுத்த செகண்ட் காதுல ஹெட்செட்டைப் போட்டு தூங்கிட வேண்டியது" என்றவள் அவனின் காதிலிருந்த ஹெட்செட்டை உருவி எடுத்து,

"எவ்ளோ நேரமா கேட்கிறேன் இளா?? சொல்ல மாட்டேங்கிற... நான் இன்னிக்கு ஊருக்கு கிளம்புவேனு எனக்கே தெரியாது. உனக்கெப்படி தெரியும் இளா??" என வினவினாள் வேணி.

"அதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம் அம்ஸ்... தூங்க விடு என்னை" இளா தூக்க கலக்கத்திலுரைக்க,

"டேய் கோவக்காய்" அவனின் மண்டையை உலுக்கியவள்,

"பாதி வழில பஸ்ல ஏறி என் பக்கத்துல உட்கார்ந்து ஹாய் சொன்னதோட தூங்க ஆரம்பிச்சவன் தான்... எனக்குல இங்க மண்டை காயுது. போனா போகுதேனு உன்னை கொஞ்ச நேரம் தூங்க விட்டுட்டேன். இதுக்கு மேலும் முடியாது. இப்ப நீ பதில் சொல்லியே ஆகனும்" என அவனின் தலையைப்பிடித்து உலுக்கி அவனுறக்கத்தைக் கலைத்துக் கொண்டிருந்தாள்.

"ஹ்ம்ம்... உன்னை கண்காணிக்க ஸ்பை வச்சிருக்கேன்.அவங்க சொன்னாங்க" - இளா

"ஆமா இன்னிக்கு நீயும் எங்களை மாதிரி ஹெச் ஆர் கிட்ட ரிபோட் பண்ணனும் தானே ஆஃடர் டிரைனிங். காலையில் சென்னையில ரிப்போட் பண்ணிருந்தாலும் ஈவ்னிங் என்னை பாக்க உடனே கிளம்பி வந்துட்டியா?? அம்புட்டு பாசமாடா என் மேல உனக்கு" என அவள் கண்ணை உருட்டிக் கேட்க,
வாய்விட்டு சிரித்தான் இளா.


இவனின் சிரிப்பில் முன் இருக்கையிலிருந்த ஆளின் தூக்கம் கலைய,இளாவை திரும்பிப் பார்த்து முறைத்தாரவர்.

அவரின் முறைப்பில் வேணியின் காதருகில் ரகசியமாய்,"எல்லாரோட தூக்கத்தையும் இப்படி பேசி டிஸ்டர்ப் பண்ணிட்டிருக்க நீ. நான் நாளைக்கு விலாவரியா சொல்றேன்" உரைத்தானவன்.

அவனின் பேச்சில் முகத்தை மறுப்பக்கம் திருப்பிக் கொண்டு வேணி அமைதியாய் இருக்க,அதை காண சகிக்காது அவளின் கையைப் பற்றி தன் பக்கம் இழுத்தவன்,

"இப்ப என்ன?? நான் எப்படி பெங்களூர் வந்தேன்?? நீ ஊருக்கு போறது எனக்கெப்படி தெரியும்னு தானே தெரிஞ்சிக்கனும்.
நான் பெங்களூர் ஆபிஸ்ல தான் ரிப்போட் பண்ணேன். எங்க பேட்ஜ் மக்களுக்கு பெங்களூர்ல தான் ப்ராஜக்ட் அலகேட் பண்ணுவாங்கனு சொல்லிட்டாங்க. சோ இனி எனக்கு பெங்களூர்ல தான் வேலை."


இதை அவன் கூறிய நொடி சட்டென திரும்பி அவன் முகம் பார்த்தவள் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

"ஹை நீயும் என் கூட பெங்களுர்ல தான் இருக்கப் போறியா... செம்ம.."
என பூரிப்பாயுரைத்தாள் வேணி


"ஆமா. இன்னிக்கு காலைல தான் வந்தேன் பெங்களுருக்கு. ஆபிஸ் ரிப்போட் பண்ணிட்டு உன்னை வந்து பார்க்கலாம்னு பார்த்தா நீயும் உன் பேட்ஜ் மக்களும் அங்க ஹெச் ஆர் கிட்ட பேசிட்டு இருந்தீங்க. அதை பார்த்தேன். அப்ப தான் நீங்க ஊருக்கு கிளம்புற ப்ளான் தெரிஞ்சுது. நீ தான் ஆஷிக் பத்தி ஏற்கனவே சொல்லிருக்கல. அங்கே ஆஷிக் மீட் பண்ணி அவன் நம்பர் வாங்கினேன். நீ எப்படி எந்த பஸ்ல வரேனு அவன் தான் சொன்னான். சும்மா சப்ரைஸ் கொடுக்கலாமேனு தான்."

"போடா உன் சப்ரைஸும் புடலங்காவும்.நீ பிஜிக்கே வந்திருந்தீனா ஒன்னாவே பஸ் ஏறியிருந்திருக்கலாம்." _ வேணி

"கோவக்காய் புடலங்காய் திட்றதுக்கு காய் பேருலாம் யூஸ் பண்ணு. எதையும் திண்ணுடாத." - இளா.

"ஹி ஹி ஹி... சரி சரி... நான் தூங்கனும் டிஸ்டர்ப் பண்ணாத"
என்றுரைத்து சீட்டை சாய்த்துக் கொண்டாள் வேணி.


"என் கிரகம் அம்ஸ் உன் கூடலாம் ப்ரண்ட்ஷிக் வச்சிக்கனும்னு" என்று புலம்பியவன்,தானும் உறங்கலானான்.
---


அங்கே பெங்களுர் டூ சென்னை பேருந்தில் ஓட்டுனர் போட்ட பிரேக்கில்
தூக்கம் கலைந்து அனைவரும் என்ன நிகழ்ந்ததென்று யூகிப்பதற்குள்ளேயே நடத்துனர் அனைவரையும் இறங்கச் சொல்லி அருகில் நின்றிருந்த மற்றொருப் பேருந்தில் ஏறச் சொன்னாரவர்.


அப்பேருந்திலிருந்து இறங்கும் போது தான் தெரிந்தது இவர்களின் பேருந்து ஒரு காரில் மோதி பின் பகுதியை சட்ணியாக்கிருக்கிறதென்று. அதனால் விளைந்த ப்ரேக் தான் அதுவென உணர்ந்தனர் அப்போது.

எவருக்கும் ஏதுமாகவில்லையென உரைத்தார் நடத்துனர்.
பின் வேறோர் பேருந்திலேறி ஒரு வழியாய் சென்னை வந்தடைந்தனர் அவர்கள்.


ஆஷிக் மற்றும் வாணி சென்னை பூந்தமல்லியில் இறங்க, வாணிக்காய் காத்துக்கொண்டிருந்த அவளின் தந்தையிடம் வந்து நலம் விசாரித்து விட்டு பொறுப்பாய் வாணியை விட்டுச் சென்றான் ஆஷிக்.

அன்றைய அந்தப் பயணம் வாணிக்கு ஆஷிக்கின் மீது பெரும் மதிப்பைக் கூட்டியது. வாழ்வில் மறக்க முடியாத ஓர் பயணமாய் அமைந்தது.

வேணியின் ஊருக்கருகில் இருக்கும் ஊர் தான் இளாவிற்கு. கல்லூரி படிக்கும் போது தான் இளா வேணிக்கு நண்பன் ஆனான்.

ஈரோடிலுள்ள மென்பொறியியல் கல்லூரியில் வெவ்வேறு டிபார்மெண்டில் பயின்றனர் இருவரும். எனவே கல்லூரி விடுதியிலேயே தங்கிப் பயின்றனர். ஈரோட்டிலிருந்து சேலத்திற்கு வாரயிறுதி நாட்களில் பயணம் செய்வர். அவ்வாறு ஓர் நாள் சேலம் செல்வதற்காக ஈரோட்டு பேருந்து நிறுத்தத்தில் வேணி பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தப் போது மயங்கி விழுந்து விட்டாள். அப்போது தானும் சேலம் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த இளா இவள் மயங்கியதும் வந்து பார்த்து தன்னுடைய கல்லூரிப் பெண் இவளென கூட்டத்தினரிடம் உரைத்து அவளுக்காக முதலுதவி செய்து விழிக்கச் செய்திருந்தான்.

காலையில் தேர்வு அவசரத்தில் உண்ணாமல் சென்றது... அப்படியே தேர்வு முடிந்ததும் கிளம்பி வந்தது தான் மயக்கத்திற்கு காரணம் ஆகியது.

பிறகு அவளை உணவகத்திற்கு அழைத்துச் சென்று உண்ண வைத்து,
எவ்வூர் செல்கிறாளெனக் கேட்டு தானும் அவ்வூருக்கு அருகில் தானெனக் கூறி அவளுடேனேயே பயணித்து அவளின் வீடு வரை சென்று நடந்ததை அவளின் தந்தையிடம் கூறி கவனித்துக் கொள்ளுமாறு உரைத்தானவன்.


அவனுக்கு நன்றயுரைத்த அவளின் பெற்றோர், கண்ணியமாய் அவன் நடந்துக் கொண்ட முறையிலும், தங்கள் பெண்ணிற்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாதென தானே அவளை அழைத்து வந்து நடந்ததைக் கூறிய அவனின் அக்கரையிலும் வெகுவாய் கவரப்பட்டனர். அவன் எவ்வூரென விசாரித்து அவனைப் பற்றிய அவனின் குடும்பத்தைப் பற்றிய தகவல்களை சேகரித்தவர்களுக்கு திருப்தியாக இருக்க,அவள் ஈரோட்டிற்கு திரும்பிச் செல்கையில் அவனுடனேயே அனுப்பி வைத்தனர்.

அன்றிலிருந்து எப்பொழுதும் சேர்ந்தே பயணித்தனர் இருவரும்.

இருவருக்கும் மற்றவரைப் பற்றி தெரியாத ரகசியம் இல்லை என்கின்ற அளவில் உற்ற நட்புக்களாயினர்.

ஆக அன்றைய பெங்களுர் டூ சேலம் பயணம் முடிவடைய இளாவும் வேணியும் போய் நின்றது வேணியின் வீட்டினில் தான்.

இளாவிற்கும் பெங்களூரில் பணி கிடைத்ததில் வேணியின் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
-------


ஐடியில் பென்ச் பீரியட் என்று ஒன்று உண்டு. பணியில் புதிதாய் சேர்ந்தவர்களையும், ஏற்கனவே செய்துக் கொண்டிருந்த ப்ராஜக்ட் முடிந்து விட்டதுப் போன்ற தருவாயிலுள்ள பணியாளர்களையும் பென்ச்க்கு நகர்த்தி விடுவார்கள். காலியிடம் உள்ள ப்ராஜக்ட்டின் நேர்முகத் தேர்வுக்கு தயாராகி அதில் வெற்றிப் பெற்று அடுத்த ப்ராஜக்ட்டிற்குள் செல்வதே பென்ச்சில் உள்ளோரின் பெரும் வேலையாய் இருக்கும்.

இத்தகைய நிலையில் தான் இருந்தனர் வாணி அண்ட் ப்ரண்ட்ஸ்.

அன்றைய சென்னை பயணத்திற்குப் பின் தினமும் அலுவலகத்திற்குச் சென்று தங்களுக்கென ப்ராஜக்ட் ஒதுக்குவதற்காய் காத்துக் கொண்டிருந்தனர்.

இவ்வாறாக ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், பேட்ஜ் மக்கள் அனைவருக்கும் பெங்களுரிலிருந்த வெவ்வேறு கிளையில் ப்ராஜக்ட் கிடைக்க, நம் கதை மாந்தர்களான மஹா,ஆஷிக்,ராஜேஷ்,வேணி மற்றும் வாணிக்கு மட்டும் ப்ராஜக்ட் ஒதுக்கப்படாமல் இருந்தது.

ஒரு வாரம் கழித்து மஹா மற்றும் வாணியை மட்டும் அழைத்த ஹெச் ஆர் தேவ் அவர்களுக்கு ஓர் ப்ராஜக்ட் மேனேஜருடன் இன்றொரு நேர்முகத் தேர்வு இருப்பதாகவும் அதில் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் ப்ராஜக்டில் பணியமர்த்தப்படுவர் எனவும் கூறினார்.

அப்ப்ராஜக்ட்டில் இரு காலி இடங்கள் மட்டுமே இருந்ததால் இவர்கள் இருவரையும் நேர்முகத் தேர்விற்கு அழைத்தார் தேவ்.

இருவரும் ப்ராஜக்ட் மேனஜரை சென்றுப் பார்க்க,இருவருக்கும் தனித்தனியாய் நேர்முகத்தேர்வை நடத்தியவர், ஹெச் ஆர் தேவ் தேர்வானவர்கள் பற்றி அறிவிப்பார் என்றுரைத்தார்.

வாணியும் மஹாவும் தேவ்வை சென்று பார்க்கும் போதே எதற்காக இவர்களை அழைத்தார்களென்ற பதட்டத்திலிருந்த ராஜேஷ்,அம்சவேணி மற்றும் ஆஷிக், இவர்கள் இடத்திற்கு வந்ததும் இருவரையும் சூழ்ந்துக் கொண்டனர்.

வாணி தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு சற்று தூர தள்ளி நின்று அழுதுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்.

மஹா நடந்த நேர்முகத் தேர்வை பற்றி மற்றவர்களிடம் எடுத்துரைக்க,வாணி அழுவதை பார்த்தவர்கள் அவளிடம் நகர்ந்தார்கள்.

அவர்கள் தன்னருகில் வந்ததும் தன் பேச்சை துண்டித்தவள், கண்களை துடைத்துக் கொண்டாள்.

வேணி அவளின் தோளை பற்றி "என்னடி ஆச்சு??ஏன்டி அழுற??யார் கிட்ட பேசின"எனக் கேட்க,
வேணியின் கனிவானப் பேச்சில் மீண்டும் வாணியின் கண்கள் நீர் சொரிந்தது.


"நான் ஒழுங்கா இன்டர்வ்யூ அடெண்ட் பண்ணலடி. கேட்குற கேள்வி எதுக்குமே பதில் தெரியலடி. என் லைப்ல இப்படி நான் எங்கேயுமே பதில் தெரியாம முழிச்சதில்லைடி. ரொம்ப அவமானமா இருக்குடி. பென்ச்ல நல்லா ஆட்டம் போட்டு ட்ரைனிங்ல படிச்சதெல்லாம் மறந்துப் போச்சுடி" என அழுதுக் கொண்டேயுரைக்க,

"ஷப்பாஆஆஆஆ... இதுக்கு தான்பா இந்த மாதிரி படிப்ஸ் கூடலாம் சேரக் கூடாதுங்கிறது.
இதில்லைனா இன்னொன்னு இதுலாம் சகஜம்னு தட்டிவிட்டுடு போறதை விட்டுட்டு... இதுக்குப் போய் தேம்பி தேம்பி அழுதுட்டு இருக்க..."என ஆஷிக் அவளை சமாதானம் செய்ய கிண்டலாய் ஆரம்பித்து சீரியஸாய் முடித்தான்.


வேணியும்,"இதெல்லாம் போய் பெரிசா எடுத்துக்கிட்டு அதுக்கு வேற அழுதுட்டு... அடுத்த இன்டர்வியூல பார்த்துகலாம் விடு"

"சரி யார்க்கிட்ட இப்ப நீ அழுதுக்கிட்டே பேசின?" என ஆஷிக் கேட்க,

"அப்பாக்கு போன் பண்ணேன். நான் வீட்ல எதையும் சொல்லாம இருக்க மாட்டேன். முக்கியமா சந்தோஷம் துக்கம் எதுனாலும் கண்டிப்பா அப்பா அம்மா கிட்ட சொல்லிடுவேன்" வாணி நிமிர்வாய் உரைக்க,

"அடிப்பாவி... நான் கே.பி னு கூப்பிட்டா.. நிஜமாவ கேபி மாதிரி நடந்துக்கிறியே நீ.. அம்மு அவ மண்டைலயே ஒன்னு போடேன்" என ஆஷிக் கூற

"அறிவிருக்கா உனக்கு??" என வாணியின் தலையில் குட்டு வைத்திருந்தாள் மஹா.

"ஏன்டி அடிச்ச??ஏன்டா ஆஷிக்??நான் என்ன பண்ணேன்??" என்றபடி இருவரையும் முறைத்துக் கொண்டே அவள் கேட்க,

"நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்ல. வேலைப் பார்க்குற பெரிய பொண்ணு. அங்க ஏற்கனவே உன் அம்மா அப்பா பொண்ணு தூர தேசத்துல இருக்கா??எப்படி இருக்காளோ என்னமோனு கவலைப்பட்டுடு தான் இருப்பாங்க... இதுல நீ வேற ஃபோன் பண்ணி உன் கஷ்டத்தைச் சொன்னா அவங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்?? இனி உன் ப்ரச்சனையை நீயே ஹேண்டில் செய்யக் கத்துக்கணும். முடியலையா ப்ரண்ட்ஸனு நாங்க எதுக்கு இருக்கோம் எங்க கிட்ட சொல்லு. அப்பவும் முடியலைனா பேரண்ட்ஸ் கிட்ட சொல்லலாம். இப்படி நீ சின்ன சின்ன விஷயத்தையும் அவங்க கிட்ட சொன்னா அவங்க என்ன செய்வாங்க?? இதை மாத்திக்கோ நீ முதல்ல" என நீட்டி முழங்கி நீண்ட உரையாற்றினாள் மஹா.

வாணிக்கு புரிந்ததும் தன் துன்பத்தைக் கூறி தாம் பெற்றோரை துயரத்தில் ஆழ்த்துகிறோமென. எனவே இந்த தன் செயலை மாற்றிக் கொள்வதாய் உரைத்தாள் வாணி.

மஹா அந்த ப்ராஜக்ட்டில் தேர்வாகி பணியமர்த்தப்பட்டாள். இரு காலி இடங்கள் இருப்பதாய் உரைத்த அந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஒருவர் போதுமெனக் கூறி மஹாவை தேர்வு செய்திருந்தாரவர்.

இந்த கலாட்டா கேலி கிண்டல் விளையாட்டு தோழமைகளுடன் அரட்டைப் பயணம் இவையெல்லாம் வாணி வெகுவாய் ரசித்து அதனுள் மூழ்கி வேறெதிலும் மனம் லயிக்காமல் போனதால் வந்த விளைவே இந்த நேர்முகத் தேர்வின் தோல்வி.

மகிழ்ச்சியுடன் வாழ்வை அனுபவித்துக் கொண்டே காரியத்தில் கண்ணாய் இருந்தால் போதும் வாழ்வின் இலக்கை இன்பமாய் அடையலாம் என்ற வாழ்வின் பெரும் தியரியை கற்றுக் கொண்டவள், அதை செயல்படுத்தும் போது தோழமைகளுடன் செலவழிக்கும் நேரங்களில் தன் மனதினைச் செலுத்தி தன் காரியத்தில் கோட்டைவிட்டாள்.

மஹாவிற்கு ப்ராஜக்ட் கிடைத்து விட, ராஜேஷ்,ஆஷிக்,வாணி,வேணி ப்ராஜக்ட் கிடைக்காமல் பென்ச்சில் இருந்தனர்.

பிறகு ஒரு வாரம் கழித்து ராஜேஷ் தேவிடம் ப்ராஜக்ட் காக விசாரிக்க, தற்போது எந்த காலிஇடமும் இல்லையென்றும் சிறிது நாட்கள் பென்ச்சில் இருக்குமாறும் கூறிவிட்டார் ஹெச் ஆர் அவர்களிடம்.

இந்த ஒரு மாத பென்ச் பீரியடில் காலை மாலை பேருந்து பயணம்,இரண்டு வேளை உணவு இடைவேளையென ஒன்றாக சுற்றிய ராஜேஷ்,ஆஷிக்குடன் அதிகமாய் பழக வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் இருவரையும் மஹா வேணிக்கு இணையாய் தன் நெருங்கிய தோழர்களாய் மனதிற்கு நெருக்கமானவர்களாய் எண்ணி நட்பின் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தாள் வாணி. என்றும் இவர்களை தன் நட்பு வட்டத்திற்குள் வைத்திருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாளவள். அதற்கு தாங்கள் தகுதியானவர்களா என ராஜேஷும் ஆஷிக்கும் நிரூப்பிக்கும் தருணம் வரும்போது வாழ்வின் பாடத்தை கற்றுக் கொடுத்தனர் அவளுக்கு.

மஹா தேர்வாகியிருந்த ப்ராஜக்ட்டில் தன் பணியை தொடர்ந்துக் கொண்டிருந்தாளவள்.

அந்த சென்னை பயணத்தின் பிறகு பெரும்பான வாரயிறுதி நாட்களில் ஆஷிக்,மஹா மற்றும் வாணி அனைவரும் இணைந்தே சென்னைக்கு பயணப்பட்டனர். சிரிப்பும் பேச்சுமாகவே அந்த பயணங்கள் இருக்கும். வாணி வீட்டிற்குச் செல்வதைக் காட்டிலும் இப்பயணத்தினால் மிகவும் குதூலகமாய் இருந்தாள்.
ராஜேஷின் சொந்த ஊர் மதுரை என்பதால் இவர்களுடன் பயணம் செய்ய மாட்டான் அவன்.
எவரும் தங்களின் ஊருக்குச் செல்லாமல் அறையில் தங்கிருந்த ஓர் வாரயிறுதி நாளில் தங்கள் அறையின் பால்கனியில் மஹா தன் துணிகளை காயப்போட்டுக்கொண்டிருந்தவள் திடீரென்று தெருவில் தங்கள் அறையின் எதிரிலிருந்த மரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தாளவள்.


சட்டென பால்கனியிலிருந்து முகப்பறைச் சென்று கதவைத் திறந்து படிகளில் ஓடினாள் அம்மரத்தை அடைய.

முகப்பறையிலிருந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த வாணியும் வேணியும் அவளின் ஓட்டத்தைப் பார்த்து என்னமோ ஏதோவென அவள் பின்னேயே ஓடினர்.

--நெகிழ்தல் தொடரும்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5
நண்பனாய் கிடைத்திட்ட
நெறியாளன் நீ!!
காதலனாய் கிடைத்திட்ட
காவலன் நீ!!


மதி என விளித்துக்கொண்டே முகத்தில் பூத்த பூரிப்புடன் மனம் நிறைத்த மகிழ்ச்சியுடன் அம்மரத்தினருகில் நின்றிருந்தவனின் கையை பற்றினாளவள்.

"மதி எப்படா வந்த? நீ எப்படிடா இங்க? உன்னோட கம்பெனில உனக்கு ஹைதராபாத் ஆபீஸ் போட்டுருக்காங்கனு தானே சொன்ன?" என வெகு நாட்கள் கழித்து அவனைக் கண்ட மகிழ்ச்சியில் மதியின் கைகளைப் பற்றியப் படியே துள்ளிக் குதிக்காத குறையாக கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தாள் மஹா.

அவளின் மகிழ்ச்சியில் உள்ளம் நிறைந்திருந்தவன் ஏதும் பேசாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"என்னடா நான் கேக்குறதுக்குப் பதில் சொல்லாம என்னையவே பாத்துட்டு இருக்க?" என மகா வினவ,

"என்னடா இவ்வளவு இளச்சிட்ட? சரியாய் சாப்பிடுறது இல்லையா? இப்ப தான உடம்பு தேறி வந்திருக்க... ஹெல்த் பார்த்துக்க மாட்டியா? என் கிட்ட டெய்லி போன்ல பேசும் போது சாப்பிட்டேன்னு சொன்னதுலாம் பொய்யா?? என அவளின் உடல் நலனில் அக்கறை வைத்து அவன் கேட்க,

"இல்ல மதி... பிஜி சாப்பாடு அவ்வளவா பிடிக்கலை... அதுக்காக சாப்பிடாமலாம் இல்லபா... வேளா வேளைக்கு டானு சாப்டிடுவேன்... நீ பேச்சை மாத்தாத... நீ எப்படி இங்க??அதை சொல்லு. உன்னை மரத்துக்கிட்ட பார்த்ததும் உன்ன மாதிரியே தெரியுதேன்னு யோசிச்சேன். அப்ப உன்ன பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேனா அதனால தான் அப்படி தெரியுதோனு பாத்த நிஜமா நிக்குற... அப்படியே போட்ட துணிய போட்டபடி வந்துட்டேன். அச்சச்சோ வா முதல்ல உள்ள போலாம்... ரிசெப்ஷன்ல உட்கார்ந்து பேசலாம்... உன்னை பார்த்ததுல நைட் டிரஸ் ஓடவே அப்படியே ஓடி வந்திருக்கேன்" என தன் தலையில் அடித்துக் கொண்டு அவனின் கை பிடித்து பிஜிக்குள் அழைத்துச் சென்றாள் அவள்.



மதியும் மஹாவும் பேசிய இந்த நேரத்தில் மஹாவின் பின்னேயே ஓடி வந்த வாணியும் வேணியும், மஹாவின் மதி என்ற அழைப்பில் பிஜியின் நுழைவாயிலிலேயே நின்றுவிட்டனர்.



"யாருடி இவன்?" வாணி வேணியிடம் கேட்க



"எனகென்னடி தெரியும்?" வேணி கூற



"இந்த பையன பார்க்க ஓவர் சீன் பார்ட்டியா தெரியுதுல?" வாணி வினவ



"ஆமாடீ, மஹாவோட காலேஜ் ப்ரண்ட்ஸ் எல்லாருமே கொஞ்சம் ஹைக்ளாஸா தெரியும். போட்டோஸ் பாத்திருக்கேன். மஹா மட்டும் தான் மாடர்னா இருந்தாலும் கேஸுவலா பழகுற டைப். இவங்களும் காலேஜ் பிரண்டா தான் இருக்கனும்." என உரைத்தாள் வேணி.



இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தச் சமயம் மதியும் மஹாவும் பிஜியின் நுழைவாயிலுக்குள் நுழைந்தனர். வாணியையும் வேணியையும் மதியிடன் அறிமுகம் செய்து வைத்தாள் மகா.



மரியாதை நிமித்தமாய் சிறிது நேரம் மதியிடன் பேசிவிட்டு வாணியும் வேணியும் தங்களின் அறைக்குச் செல்ல, "நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல??" என்றுரைத்தாள் மகா.



"உன்னை பார்த்து நாலு மாசம் ஆகுது மஹா. அதான் வீகெண்ட்ல ஊருக்கு போகாம உன்னை பார்க்க வந்திருக்கேன். போதுமா விளக்கம். சண்டே நைட் ஹைதராபாத் கிளம்பிடுவேன். இந்த டூ டேஸ் எதாவது பிளான் வெச்சிருகியா? ஐ வாண்ட் டு ஸ்பென்ட் மை டைம் வித் யு தீஸ் டூ டேஸ்." என மதிக் கூற



"ஹ்ம்ம் வாணி அம்மு கூட வெளில வரேன்னு சொல்லிருந்தேனே… சரி அவங்கள எப்படியாவது சமாதானம் பண்ணிட்டு வரேன். நீ ஈவினிங் வா வெளில எங்கயாவது போயிட்டு வரலாம். ஆமா நீ எங்க தங்கி இருக்க?" மஹாக் கேட்க



"இங்க என் ஸ்கூல் ப்ரண்ட் ஒருத்தன் இருக்கான். அவன் கூட தான் தங்கிருக்கேன். ஈவினிங் நானே இங்க வரேன். இங்கிருந்து ஒண்ணா பஸ்ல போலாம்" என்று அன்றைக்கான தன்னுடைய ப்ளானை உரைத்துக் கிளம்பிச் சென்றான் மதி.



மதியை வழி அனுப்பிவிட்டு அறைக்கு வந்த மஹாவை சூழ்ந்துக் கொண்டனர் வாணியும் வேணியும்.



"மஹா, இப்படி ப்ரண்ட்ஸ்லாம் என் லைப்ல நான் பார்த்ததே இல்லடீ. என் லைப்ல தான் ப்ரண்ட்ஸே இல்லையே... உன்னை பார்க்குறதுக்காகத் தான் இவளோ தூரம் வந்தாங்களா?" என இப்படியும் உலகில் நண்பர்கள் உள்ளார்களா என்கின்ற ஆச்சரியத்தில் கேட்டாள் வாணி. வாழ்வில் நண்பர்களே இல்லாமல் இத்தனை தூரம் பயணித்த வாணிக்கு, ஏனோ அச்சமயம் தமக்கு இப்படி ஓர் தோழன் இல்லையே என நினைக்க வைத்தது.



வாணியின் பேச்சை கேட்டுச் சிரித்த மஹா,"ஆமாடீ இப்படி ஒரு ப்ரண்ட் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும். அவன் எனக்கு எப்படி ப்ரண்ட் ஆனானு தெரியுமா? அதுவே பெரிய கதை” எனக் கூறி அக்கதையை கூறலானாள் மகா.



மஹா தனக்கும் மதிக்குமான நட்பை பற்றிய நினைவில் பின்னோக்கிச் செல்ல, தன் நண்பனின் அறையில் படுத்திருந்த மதியும் மஹாவைப் பார்த்த நொடியை நினைத்துக் கொண்டுதானிருந்தான்.



பிரபுவின் ப்ரபோசலையும் மதி தன்னை தன் தாயிடம் வசமாய் மாட்டி விட்டது வரையும் மஹா சொல்லிக் கொண்டிருந்த சமயம் ஒலித்தது மஹாவின் கைப்பேசி.



கைப்பேசியில் மதியின் எண்ணை கண்டதும் முகம் மலர்ந்த மஹா, "என்னடா ரூமுக்கு போய்டியா??" என மதியிடம் கைப்பேசியில் வினவ,



மறுப்பக்கம் மதி,"ஹ்ம்ம் நான் ரூமுக்கு வந்து ரொம்ப நேரம் ஆச்சு. உன் நியாபகமாவே இருக்கு மகா. தூக்கமே வரல... உன் கூட இருக்கப் போறது டூ டேஸ் தானே... இப்பவே வாயேன் எங்கேயாவது லன்ச் சாப்பிட்டு விட்டு அப்படியே வெளியே போய்ட்டு வரலாம்" என்றுரைக்க,



அவனிடம் சரி எனக் கூறி வேணி வாணியிடம் மதியுடன் வெளியே செல்வதாகயுரைத்துக் கிளம்ப ஆயத்தமானாள் மஹா.



"அப்பவே பேரண்ட்ஸ் கண்சல்ட் செய்யாம எப்டிலாம் ப்ரபோசல் ஹேண்டில் பண்ணிருக்க நீ... என் கிட்ட யாராவது இப்படி சொல்லிருந்தா நான் உடனே பதறியடிச்சு ஓடிருப்பேன். என் கை கால் லாம் நடுங்க ஆரம்பிச்சிருக்கும். நேரா அப்பாகிட்ட போய் தான் நின்றுப்பேன்" என மஹாவின் செயலை நினைத்து ஆச்சரியப் பாவனையில் வாணி உரைத்துக் கொண்டிருக்க,



"ஆயிரம் தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி மாதிரி உனக்கு பல ப்ரபோசல் கண்ட புடலங்காய் ப்ரின்சஸ்னு பேர் வைக்கலாம்னு நினைக்கிறேன் மஹா. நீ என்ன சொல்ற??" எனக் கண் சிமிட்டி சிரிப்பாய் வேணி வினவ,



"உன்னை வந்து கவனிச்சிகிறேன்டி அம்மு. சரிடி நான் கிளம்புறேன். நைட் தான் வருவேன். நீங்களும் எங்கேயாவது வெளில போய்ட்டு வாங்க. ரூம்லயே இருக்காதீங்க" என்றுரைத்துச் சென்றாள் மஹா.



"இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல வாணி. காலேஜ்ல ப்ரபோசல் வரதெல்லாம் சகஜம். இதுக்கூட தெரியாம உன்ன மாதிரி இருக்க பொண்ணுங்க தான் இப்ப கம்மி" என வேணி உரைக்க,



"அப்ப உனக்கும் ப்ரபோசல் வந்திருக்கா அம்மு??" என விழி விரியக் கேட்டாள் வாணி.



"சே சே... இல்ல இல்ல.. இளா இருக்கும் போது யாரு என்கிட்ட வந்து தைரியமா பேச முடியும். இளாவும் நானும் பெஸ்ட் ப்ரண்ட்னு மொத்த காலேஜ்குமே தெரியும். சோ இளாவை தாண்டி தான் என்கிட்ட யாருனாலும் வந்து பேசனும். அவன் அப்படி என்கிட்ட யாரையும் பேச விட்டதில்ல" என நீண்ட விளக்கமளித்தாள் வேணி.



"ஹ்ம்ம் நீயும் இளா இளானு சொல்ற... பெங்களூர்ல தானே அவங்க இப்ப வர்கிங்... வாரம் ஆனா அவங்க கூட சேர்ந்து ஊருக்கு போய்டுற.. இந்த வீக் எண்ட் தான் அத்தி பூத்தா மாதிரி இங்க இருக்கோம்..இன்னிக்காவது எனக்கு இளாவ இன்ட்ரோ கொடுக்கலாம்ல" என வாணிக் கேட்க,



"ஹ்ம்ம் கண்டிப்பாடி... இன்னிக்கு ஈவ்னிங் நாம இளா கூட தான் வெளில போகப் போறோம்" என்றுரைத்தாள் வேணி.





மாலை நேரம் இளா இவர்களின் பிஜிக்கு வந்ததும் அவனுடன் கிளம்பிச் சென்றார்கள் வேணியும் வாணியும்.



அவர்களை கெம்போர்ட் சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான் இளா.



அங்கே சிறப்பு வரிசையில் செல்ல நுழைவு சீட்டு வாங்கித் தருவதிலிருந்து ஒவ்வொரு இடத்திலும் புகைப்படம் எடுக்கும் வரையும் வேணியின் மீதான அவனின் அக்கறையைக் காண முடிந்தது.



அடுத்து அருகிலுள்ள டோட்டல் மாலிற்கு அழைத்துச் சென்றவன்,வேணிக்காக அங்குள்ள கே ஃஎப் சி யில் சிக்கன் ஆர்டர் செய்தானவன்.



வாணிக்கு ஃபாஸ்ட் புட் பிடிக்காதக் காரணத்தினால் ஒரு ஃபிங்கர் சிப்ஸ் மற்றும் கோன் ஐஸ் மட்டும் வாங்கிக்கொண்டாளவள்.



மூவரும் ஓர் இடத்தில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.



"டேய் கோவக்காய், ரொம்ப நல்லவன்டா நீ" என அச்சிக்கனை சின்னாபின்னமாக்கியப் படி உரைத்தாள் வேணி.



வாணி இவளின் கோவக்காய் என்கின்ற விளிப்பில் "ஙே" என முழித்துக் கொண்டிருந்தாள்.



"ஹே அம்மு எப்பவுமே புடலங்காய்னு தானே திட்டுவ... அதென்ன கோவக்காய்?? இளாக்கு ரொம்ப கோவம் வருமோ??" வாணி வினவ,



"ஏன் வாணி நீங்க வேற... என்னைய பார்த்த கோவப்படுற ஆளு மாதிரியா தெரியுது??... அவ நல்லா காய் பேரு வச்சு திட்டுவா ஆனா திங்கமாட்டா... மேடம்க்கு சிக்கன் தான் பேவரிட் " என வாணியைப் பார்த்துக் கூற,



என்ன கூறவென தெரியாத பாவனையில் திருதிருத்த வாணி,"அட ஆமாங்க... பிஜில ஒரு காயும் சாப்பிடுறதில்லை" என வேணியை போட்டுக் கொடுக்க,



வேணி வாணியின் காலை உதைக்க,

வாணியின் பாவனையில் வாய் விட்டு சிரித்த இளா,"அம்ஸ் பத்தி தெரியும்ங்க... நல்ல ருசியா இருந்தா தான் சாப்பிடுவா... இல்லனா சோறு இறங்காது. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்" என்று அவளைஅறிந்த நல்ல நண்பனாய் அவனுறைக்க,



"சரி அதென்ன கோவக்காய்??" - வாணி



"சொல்லவா இளா" என கண் சிமிட்டினாள் வேணி.



"நீ ஒன்னும் சொல்லத் தேவையில்ல. எதாவது எக்குத்தப்பா சொல்லுவ. நானே சொல்றேன்" - இளா



"இல்ல நான் தான் சொல்வேன்" - வேணி



"நானே சொல்றேன் அம்ஸ்" - இளா



"போடா பாவக்காய்... நான் தான் சொல்வேன்" - வேணி



இந்த பேச்சு சண்டையில் இளா வேணியின் சிக்கனை எடுத்து உண்டுக்கொண்டிருக்க,இதை சிறிது நேரம் கழித்து உணர்ந்த வேணி



"ஏன்டா என் சிக்கனை எடுத்த??என் சிக்கனை கொடுடா" என அவனை அடிக்க ஆரம்பித்திருந்தாளவள்.



"அடப்பாவிங்களா கோவிக்காய்க்கே விளக்கம் சொல்லலை அதுக்குள்ள பாவைக்காயா... நல்லா வருவீங்கடா நீங்க" என மைண்ட் வாய்ஸில் புலம்பினாள் வாணி.



"அய்யோ நிறுத்திறீங்களா?? நீங்க எனக்கு விளக்கமே சொல்ல வேண்டாம். ஒழுங்கா சாப்பிடுங்க போதும்" எனக் குரலை உயர்த்தி வாணி கூற,



இது இவர்களின் வழமையான சண்டை தான். வாணி முதன்முறை பார்ப்பதால் பொங்கி விட்டாள்.

இதை எண்ணி வாய்க்குள்ளே சிரித்துக்கொண்டனர் இளாவும் வேணியும்.



இவர்களின் சிக்கன் சண்டையில் இறுதிவரை கோவக்காய் பாவக்காய்கான விளக்கம் கூறவில்லை இருவரும்.



ஒருவழியாக அன்றைய நாள் முடிய வாணி மற்றும் வேணியை அவர்களின் பிஜியில் பத்திரமாய் சேர்த்துவிட்டுக் கிளம்பினான் இளா.



இவர்கள் பிஜி வந்த சமயம், ஏற்கனவே பிஜி வந்து சேர்ந்திருந்தாள் மஹா.



அன்றைய நாளின் முடிவில் இப்படியும் ஆண் தோழர்கள் இருக்கிறார்களா என்ற பெரிய வியப்பில் இளா மற்றும் மதி மீதான நன்மதிப்பின் எண்ணத்துடன் உறங்கிப்போனாள் வாணி.



வாயிறுதி நாட்கள் விரைவாய் செல்ல, அடுத்து வந்த திங்கட்கிழமையில் வாணி,வேணி,ராஜேஷ்,ஆஷிக் ஆகிய நால்வரும் ப்ராஜக்ட் கிடைக்காமல் பென்ச்சில் இருக்க, மஹா தனக்கு ஒதுக்கப்பட்ட ப்ராஜக்ட்டில் வேலை செய்யவாரம்பித்திருந்தாள்.



அன்று ஆஷிக்கையும் வாணியையும் தன்னைக் காண வருமாறு மின்னஞ்சல் அனுப்பிருந்தார் ஹெச் ஆர் தேவ்.



அவர்கள் இருவரையும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி கிளையிலுள்ள தங்களின் கிளை அலுவலகத்திற்கு மறுநாள் போகச் சொன்னவர்,அங்கு ஓர் ப்ராஜக்ட்டில் இடம் இருப்பதாகவும் அதற்காக அந்தப் ப்ராஜக்ட்டின் மேனஜர் அவர்களை நேர்முக தேர்வு செய்வாரெனவும் இவருவரில் ஒருவரை அப்பணிக்கு தேர்ந்தெடுப்பாரெனவும் உரைத்தாரவர்.



ஏற்கனவே மஹாவுடன் சேர்ந்து வாணி பங்கெடுத்துக் கொண்ட நேர்முகத்தேர்வில் மஹா அந்த ப்ராஜக்டடிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்,தேவ் கூறிய வாணிக்கும் ஆஷிக்குமான அடுத்த நேர்முகத் தேர்வு வாணிக்கு பீதியைக் கிளப்பியது.



எவ்வாறேனும் இதில் வென்றுவிட வேண்டுமென எண்ணிக்கொண்டாள் வாணி. ஆயினும் இந்நேர்முக தேர்வையும் தாண்டிய ஓர் பயம் அவளை பீடித்திருந்தது.



சென்னையிலிருந்த வரை அப்பாவுடன்,பெங்களுர் வந்ததிலிருந்து வேணி மஹாயென இவர்களுடேனேயே வெளியில் எங்கும் பயணித்த வாணி,நாளை தனியாய் தான் அவ்வலுவலகத்திற்கு மேற்க்கொள்ளவிருக்கும் பயணத்தை எண்ணி கலங்கவாரம்பித்தாள்.



இரவுணவுண்டபின் நேர்முகத் தேர்விற்காய் தயாராகப் படிக்க அமர்ந்த நிலையில் இவ்வெண்ணம் அவளின் சிந்தையை சிதறடிக்கச்செய்ய, தன் கலக்கத்தை தோழிகளிடம் உரைத்தாளவள்.



"ஆஷிக்கோட போடி. அவனும் அங்க தானே நாளைக்கு போகனும்... அவன்கிட்ட கால் செஞ்சி கேளு... அந்த இடம் அவனுக்குத் தெரியுமா... எப்படி போகப்போறானு கேளு" என அவளுக்கு வழி உரைத்தாள் மஹா.



அவனை வாணி கைப்பேசியில் அழைத்துப்பேச அவனுக்கும் அவ்விடத்திற்கு செல்வது இதுவே முதல்முறை எனவும், தன் நண்பர்களுடன் அவ்விடம் செல்வது எவ்வாறென கேட்டு வைத்திருப்பதாகவும் உரைத்தவன்,

"நீயும் தனியா தானே போவ... என்னுடனேயே வாயென" அவன் உரைக்க... எவ்வாறு அவனிடம் கேட்பதென தயங்கியிருந்த வாணிக்கு அவனே தன்னுடன் வருமாறு உரைத்தது பெரும் நிம்மதியாய் இருந்தது.



அவனின் இடத்திலிருத்து அவளின் பேருந்து நிறுத்தத்திற்கு அவன் ஒரு பேருந்தில் வந்திறங்கி,அங்கிருந்து அவளுடன் அவ்வலுவகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்தில் இருவரும் இணைந்து செல்லலாமென முடிவு செய்தனர் இருவரும்.



ஒருவாறாக மறுநாளைய பயணத்தை முடிவு செய்தவள் இப்பொழுது வேறோர் சிந்தையில் ஆழ்ந்தாள்.



"என்னடி இன்னும் என்ன யோசனை??" மஹா வாணியிடம் கேட்க,



"இல்லடி ஒரு மாதிரி அன்கன்பர்ட்டா ஃபீல் ஆகுதுடி. இதுவரை அப்பா கசின் அண்ணா தவிர வேற பசங்க கூட இப்படி தனியா போனதில்லை.அதான் ஒரு மாதிரி கவலையா பயமாவே இருக்கு" என தன் மனதிலுள்ளதை மறைக்காது வாணி உரைக்க,



"ஆஷிக் பத்தி தான் உனக்கு தெரியும்ல அப்பறம் என்ன பயம்... எத்தனை தடவை அவன் கூட நாம சென்னைக்கு ட்ராவல் பண்ணிருக்கோம்... அப்பறம் என்னடி?? நான் வேணா ஆஷிக்கிட்ட பேசவா??" என வாணியிடம் ஆறுதலாய் மஹா பேச,



"அய்யய்யோ வேணாம்டி. நான் அவனை நம்பலைனு நினைச்சிக்கப் போறான். நம்ம ஊருக்கு போகும் போதெல்லாம் நீ கூட இருப்படி. எது வேணும்னாலும் நான் உன் கிட்ட சொல்லுவேன். அவன் இருக்கிறதைய நான் பெரிசா எடுத்துக்கிட்டது இல்ல. அதான் இப்ப வித்தியாசமா தெரியுது. நாளைக்கு ஒரு நாள் தானே நான் மேனேஜ் செஞ்சிக்குவேன்டி" என வாணி உரைக்க



"அடியேய் அந்த ப்ராஜக்ட்ல செலக்ட் ஆயிட்டீனா நீ டெய்லி அந்த ஆபிஸ்க்கு தான் போகனும். அதனால எப்படிபோகனும் வரனும்னு நாளைக்கு அவன் கூடப் போய் பார்த்து வச்சிக்கோ" என வேணி கூற



"சரிடி தெரிஞ்சிக்கிறேன்" என வாணி தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு உரைக்க,



"நீ பயப்படாத வாணி. நாளைக்கு நான் உனக்கு மெசேஜ் பண்ணிட்டே தான் இருப்பேன். உனக்கு தனியா இருக்கிற மாதிரி ஃபீல் ஆகாது. சரியா... இப்ப பயப்படாம இன்டர்வ்யூக்கு படி" என மஹா பாசமாய் பேச,



மஹாவின் பேச்சில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது வாணிக்கு. ஆனால் இதற்கு மேல் படிக்க மனம் ஒரு நிலையில்லாமல் போக அமைதியாய் போய் படுத்துக் கொண்டாள் வாணி.



மறுநாள் காலை தன்னுடைய பேருந்து நிறுத்தத்தில் வாணி ஆஷிக்கிற்காக காத்துக் கொண்டிருக்க, அவன் ஏரியாவிலிருந்து ஒரு பேருந்தில் வந்திறங்கினான் ஆஷிக்.



பின்பு அங்கிருந்து வாணியும் ஆஷிக்கும் தங்களின் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துக்காய் காத்துக் கொண்டு நின்றனர்.



நடத்துனரிடம் விசாரித்து இருவரும் கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு பேருந்தில் ஏற, கர்நாடக அரசுப் பேருந்தில் பெண்கள் முன் பாதியும் ஆண்கள் பின் பாதி இருக்கையிலும் அமர வேண்டும் என்பது விதி ஆகையால் வாணி முன் பாதி இருக்கையினருகில் நின்றுக்கொள்ள,ஆஷிக் பின் இருக்கையில் நின்றுக் கொண்டிருந்தவன், "உனக்கும் சேர்த்து நானே டிக்கெட் எடுத்துட்டேன்... நீ எடுக்க வேண்டாம்" என குறுஞ்செய்தி அனுப்பினான் வாணிக்கு.



அக்குறுஞ்செய்தியைக் கண்டதும் வாணியின் கண்கள் கூட்டத்தில் ஆஷிக்கை தேட, அவள் தன்னை தேடுவதைப் பார்த்தவன் சிறிது கூட்டத்தை விட்டு விலகி அவளிடம் இமை மூடி தலை சாய்த்தான்.

ஆம் ஆஷிக் வாணியை தன் பார்வை வளையத்திற்குள் தான் வைத்திருந்தான். ஏற்கனவே சென்னை செல்லும் போதெல்லாம் அவளைப் பற்றி அறிந்து வைத்ததினால் அவள் முகத்தில் அவன் கண்ட அந்த அசௌகரியம் அவளை அவனின் கண் வளைக்குள் இருக்க வைத்தது.



பேருந்து இரண்டு நிறுத்தத்தைக் கடந்தப் பிறகு கூட்டம் சற்றாய் குறைந்திருக்க," சீட் கிடைக்குற மாதிரி இடத்தில நின்னு உடனே உட்கார்ந்திடு... ரொம்ப நேரம் நிக்காதே" வாணிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தானவன்.



இருவரும் தவறுதலாய் முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடக்கவாரம்பிக்க, நடக்கத் தொடங்கியப் பின் தான் தவறுதலாய் இறங்கியது தெரிந்தது இருவருக்கும்.

பின் இருவரும் பேசிக்கொண்டே நடக்க ஒரு வழியாய் அலுவலகம் வந்தடைந்து அந்த ப்ராஜக்ட் மேனேஜரை சந்தித்தனர் இருவரும்.



அவர்கள் இருவருக்கும் இரண்டு கணிணியை வழங்கி அவர்களை அதில் அமரச்சொன்ன அவர்,தங்களின் க்ளைண்ட் ஒரு புது ஆளை ப்ராஜக்ட்டிற்குள் எடுக்க இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும்,அனுமதி வழங்கியப்பின் நேர்முகத் தேர்வு நடைபெறுமென உரைத்துவிட்டாரவர்.



"ஹப்பா கொஞ்சம் இன்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்ணலாம்" என ஆசுவாசமானான் ஆஷிக்.



"அப்ப அவர் இன்டர்வ்யூ எடுக்குற வரைக்கும் நாம இந்த ஆபிசுக்கு தான் வரணுமா ஆஷிக்கு" - வாணி



"ஆமா கேபி. அதான் நான் இருக்கேன்ல. நீ ஏன் கவலைபடுற. ஒழுங்கா இன்டர்வ்யூக்கு படிப்பா" என ஆஷிக் உரைக்க



அவனின் ஆறுதல் மொழியும் பார்வையும் அவள் மனதின் பாரத்தை வெகுவாய் குறைத்திருக்க,ஆஷிக்கின் மீதிருந்த மரியாதை நண்பனாய் அவனின் மீதான பாசத்தை வளர்த்திருந்தது அவளின் மனதில் அவளறியாமலே...



அன்று முழுவதும் அலுவலகத்தில் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர் இருவரும். அவள் ரெஸ்ட் ரூம் செல்லும் போதும் வெளியில் அவளுக்காய் காத்திருந்து அவளை பாதுகாத்து அவளின் பயத்தை வெகுவாய் குறைத்தானவன்.



அன்று மாலை இருவரும் அலுவலகத்திலிருந்து வாணி ஏரியாவிற்கு செல்லும் பேருந்தில் ஏறி அவளின் இடத்தை அடைய, அங்கிருந்து தன் இடம் செல்ல பேருந்தில் ஏறாமல், இருட்டுற நேரமாகையால் அவளுடன் அவளின் பிஜிக்கு நடந்து சென்றானவன்.



பிஜி நோக்கி நடந்துக் கொண்டிருந்த சமயம், "ஆஷிக், மஹா எதுவும் உனக்கு மெசேஜ் செஞ்சாளா??" எனக் கேட்டாள் வாணி.



"இல்லையே... ஏன் கேட்குற??" - ஆஷிக்.



"அப்பறம் எப்படி என் பயம் உனக்கு தெரிஞ்சுது. நான் இருக்கேன் நீ கவலைப்படாதனு எப்படி சொன்ன??" என ஆச்சரியமாய் வாணி வினவ,



"அதான் உன் மூஞ்ச பாத்தாலே தெரியுதே... இதை வேற யாராவது வந்து சொல்லனுமா என்ன??.. உன் பயத்தைப் போக்கி நான் உன்னை பாத்துக்க இருக்கேனு சொன்னப்புறம் தான் உன் கண்ணு கொஞ்சம் சிரிச்சுது... உன் முகம் கொஞ்சம் தெளிவாச்சு... ஆஸ் எ ஃபரண்டா இது கூட நான் செய்யலைனா எப்படி??" என பதிலுரைத்தவன் அவளை பிஜி வாசலில் விட்டு மறுநாள் பார்க்கலாமெனக் கூறி விடைப்பெற்று மீண்டும் பேருந்து நிலையம் சென்று தன் ஏரியாவின் பேருந்திலேறித் தன் இடத்தை அடைந்தானவன்.



வாணி அவனின் கரிசனமான பேச்சில் உண்டான பூரிப்பான சிரிப்புடனேயே தன் அறைக்குச் செல்ல,இவளுக்கு முன்பே அலுவலகத்திலிருந்து வந்திருந்த வேணியும் மஹாவும் மெத்தையில் அமர்ந்திருக்க, "அட என்னப்பா அதிசயமா இருக்கு... காலையில முதல் நாள் ஸ்கூல்க்கு போற பொண்ணு போல யாரோ கண்ணை கசக்கிட்டு போனாங்க... இப்ப என்னடானா முகம் கொள்ளா சிரிப்போட வராங்க... அவங்க சிரிப்பின் ரகசியம் என்னவோ??அதன் மாயம் என்னவோ??" என மஹா வாணியைக் கிண்டலடித்தாள்.



மஹா நேற்றுக் கூறியதுப் போல், வாணிக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவளுடன் தொடர்பிலேயே இருந்தாள். அதன் பயனாய் ஆஷிக் தன்னை கவனத்திக் கொண்ட விதம் பற்றி சிலாகித்து மெசேஜாய் தள்ளியிருந்தாள் வாணி மஹாவிற்கு. அதன் பொருட்டு வந்த கிண்டல் வாசகமே இது.



இதையறியா வேணி,"என்னடி ப்ராஜக்ட்ல செலக்ட் ஆகிட்டியா??" என்று சந்தோஷத்தில் வாணியின் கையைப் பிடித்து வினவ,



"அட நீ வேற போடி..." என்று நடந்த அத்தனை நிகழ்வுகளையும் பூரிப்புடன் கூறிய வாணி,"ஆஷிக் ரொம்ப நல்லவன்டி" என்ற வாரத்தையுடன் முடித்தாளவள்.



கிண்டல் செய்ய ஒரு விஷயம் கிடைக்கும் போது சும்மா விடுவார்களா தோழிகள்,"பார்ரா ஆஷிக் பத்தி பேசும் போது பொண்ணு முகம் செவ்வானமா சிவக்குதே... ஓவரா வெட்கப்படுற மாதிரி தெரியுதே" என வேணி உரைக்க,



"ஆமாடி அம்மு... ஒரு நாள்லயே இப்படி கவுத்துப்புட்டானே நம்ம வாணிய இந்த ஆஷிக்கு பையன்" என சோக பாவனையில் நக்கலாய் மஹா உரைக்க,



"அடிங்க மங்கிகளா" என தன் தோழிகளை அடிக்கத் துரத்தினால் வாணி.



பயத்தில் ஆரம்பித்த அந்நாள் ஆஷிக்கின் அன்பால் கரிசனமான பாதுகாப்பால் இன்பமாய் நிறைவடைந்தது வாணிக்கு.



அடுத்து வந்த இரண்டு நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறாமல் இருக்க, செவ்வாய் கிழமை முதல் எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள அலுவலகத்திற்கு வந்தவர்களை,

தன் க்ளைண்ட் அடுத்த வாரம் தான் ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்புவார் என்றும், அதன் பிறகு கண்டிப்பாக அடுத்த வாரத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறுமென உரைத்து அடுத்த வாரமும் அவ்வலுவகத்திற்கு தான் இருவரும் வரவேண்டுமென வெள்ளிக் கிழமையன்று அவர்களிடம் கூறினார் அந்த ப்ராஜக்ட் மேனேஜர்.



வழமையாய் வெள்ளிக்கிழமை அன்று சென்னைப் பயணத்திற்கு தேவையான தோள்பையுடன் தான் அலுவலகத்திற்கே வருவர் வெளியூர்வாசிகள். மாலை அல்லது இரவு வேலை முடிந்ததும் அலுவலகத்திலிருந்து நேரடியாய் சாந்தி பேருந்து நிலையம் சென்றிடுவர் தங்களின் சொந்த ஊர் பயணத்திற்காக. அவ்வாறு தான் வாணியும் ஆஷிக்கும் தங்களின் பைகளுடன் அன்று அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.



அன்று மாலை இருவரும் தங்களின் பிஜிக்கு செல்லாமல் சாந்தி பேருந்து நிலையம் செல்வதாய் ப்ளான். மஹா தன் அலுவலகத்திலிருந்து அங்கு வந்துவிடுவதாய் கூறிவிட்டாள்.



மாலை ஆறு மணியளவில் ஆஷிக் வாணி இருவரும் அலுவலகத்திலிருந்துக் கிளம்பி எலக்ட்ரானிக் சிட்டி பேருந்து நிறுத்தம் வந்தவர்கள் சாந்தி பேருந்து நிலையம் செல்லும் பேருந்திற்காக காக்கத் தொடங்கினர்.



நெடு நேரம் தாண்டியும் அரசு பேருந்து ஏதும் வராமலிருக்க தனியார் பேருந்து நிறைய வந்ததால் அதில் செல்லலாமென முடிவு செய்து ஓர் தனியார் பேருந்தில் ஏறினர் இருவரும்.





தனியார் பேருந்தில் ஆண் பெண் தனி தனியாய் அமர வேண்டுமென்ற விதி இல்லாததால் கிடைக்கின்ற இடத்தில் அமர்ந்திருந்தனர் மக்கள்.



இவர்கள் ஏறியப்பின் காலி இருக்கையைத்தேட, ஓட்டுனர் இருக்கேயினருகிலிருக்கும் மூன்று நபர் அமரக்கூடிய இருக்கையில் ஏற்கனவே இரு ஆண்கள் அமர்ந்திருக்க, ஓர் ஆள் அமரக்கூடிய இடம் இருந்த நிலையில் வாணியை அங்கே அமர வைத்துவிட்டு, சிறிது தள்ளி அப்பேருந்திலுள்ள தொலைக்காட்சி தெரியும்படி நின்றுக்கொண்டான் ஆஷிக்.



சிறிது நேரம் அங்கமர்ந்திருந்த வாணிக்கு தன்னருகில் அமர்ந்திருந்த ஆண்களிடம் வந்த சிகரெட் வாடை அவளுக்கு அருவறுப்பை உண்டாக்க,

நேரம் சென்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆஷிக்கும் அவளின் கண் பார்வையில் இல்லாமல் காணாமல் போக,எழுந்து நிற்கவும் முடியாமல் அமரவும் முடியாமல் ஏது செய்யலாமென அவள் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் குறுஞ்செய்தி வந்ததற்கான் ஒலி வந்தது வாணியின் கைப்பேசிக்கு.



"என்னடி உன் ஆளோட மெய்மறந்து பயணம் செஞ்சிட்டு இருக்கியோ?? ரொம்ப கனவுல மிதக்காம சீக்கிரம் இரண்டு பேரும் வந்து சேருங்க... எனக்கு இங்க பஸ் ஸ்டாண்ட்ல தனியா ரொம்ப போர் அடிக்குது" என்று குறுஞ்செய்தி அனுப்பிருந்தாள் மஹா.



சென்னை செல்வதற்காக சாந்தி நகர் பேருந்து நிலையம் சென்றடைந்திருந்தாள் மஹா.



"அடியேய் நானே இங்கே கடுப்புல உட்கார்ந்துட்டு இருக்கேன். இதுல இந்த கிண்டல் தான் ரொம்ப முக்கியம்" என கடுப்பாய் வாணி குறுஞ்செய்தி அனுப்புவிக்க,



"அச்சோ என்னடி ஆச்சு??எதுவும் ப்ரச்னையா??" என குறும்பைக் கைவிட்டு பொறுப்பாய் மஹா கேட்க,



தன் இருதலைக் கொள்ளி நிலைமையைக் குறுஞ்செய்தி அனுப்பினாள் வாணி.



இவளனுப்பிய சிறிது நேரம் ஏதும் குறுஞ்செய்தி மஹா அனுப்பாதிருக்க,

என்ன செய்வதென வாணி யோசித்துக் கொண்டிருக்க, அச்சமயம் வாணியின் முன் வந்து நின்றான் ஆஷிக்.



"எழுந்திரு வாணி. அங்க சீட் இருக்கு" என சிறிது தூரம் தள்ளி இடதுப்பக்கம் ஒரு பெண்ணின் அருகில் ஒரு சிறுமி அமர்ந்திருப்பதை காண்பித்தவன், "அந்த பாப்பாவை மடில வச்சிட்டு உட்கார்நதுக்கோ... அந்த அம்மாகிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன்" என உரைத்தவன் அக்கூட்ட நெரிசலில் அவள் ஒழுங்காய் சென்று அமர்ந்தாளாவென பார்த்துக் கொண்டு நின்றான். அவளை தன் பார்வை வளையத்தில் வைத்துக் கொண்டு அங்கேயே நின்றுக்கொண்டானவன்.



வாணியின் இருக்கையினருகில் இருந்தவர்கள் இறங்கவென எழுந்திரிக்க, மீண்டும் தன்னருகில் ஏதேனும் ஆடவன் அமர்ந்துவிட்டால் என்ன செய்யவென பயந்தவள், சைகையால் ஆஷிக்கை அழைத்து தன்னருகில் அவனை அமருமாறு கூறினாள் வாணி.



அவளருகில் அமர்ந்தவன்,"ஏன் கேபி உனக்கு பிடிக்கலனா எனக்கு மெஸேஜ் செய்ய வேண்டி தானே. மஹா சொல்லலைனா எனக்கு தெரிஞ்சிருக்காது. நீயும் உனக்கு பிடிக்காமனாலும் அங்கேயே உட்கார்ந்திருப்ப என்ன?? நானும் டிவில படம் பார்க்கிற இன்ட்ரஸ்ட்ல உன்னை கவனிக்கலை. சாரி வாணி" என முதலில் ஆதங்கப்பட்டு பின் செய்யாத தவறுக்கு மன்னிப்பும் வேண்டினான் அவன்.



வாணியின் மனதில் பெரும் பாரமாய் இவனின் மீதான நல்லெண்ணம் ஏறிக்கொண்டது அந்த நிமிடம். அது இவன் தன் வாழ்வில், தான் இழக்கக்கூடாத நட்பாய் அவன் தன்னுடன் பயணிக்க வேண்டுமென்ற ஆசையை தூண்டியது. தானும் அவனின் வாழ்வில் ஓர் முக்கிய நபராய் அவனுக்கு இருக்க வேண்டுமென்றும், அவனும் தன் வாழ்வில் அவ்வாறு இறுதி காலம் வரை வரவேண்டுமெனவும் அந்நேரம் அவளின் மனது கனவு மாளிகை கட்டியது அவளறியாமலே அவள் சிந்திக்காமலே.



"கேபி என்ன முழிச்சிட்டே கனவு காண்றியா??" என அவளை உலுக்கினான் ஆஷிக்.



"நீ என்னை இப்படி பார்த்துக்கிற அளவுக்கு நான் உனக்கு என்னடா செஞ்சேன்" என தன் மன உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ள இயலாது நா தழுதழுக்க வாணிக் கேட்க,



"அட கேபி... இதை போய் இவ்ளோ சீரியஸா எடுத்துக்கிட்டு இவ்ளோ இமோஷனல் ஆகுறியே நீ"



"ஒரு பையனை நம்பி அவன் கூட ஒரு பொண்ணை அனுப்பும் போது அந்த பொண்ணை பத்திரமா பாதுக்காக்க வேண்டியது அந்த பையனின் கடமை. அதுக்கு அந்த பொண்ணு அந்த பையனுக்கு தெரிஞ்ச பொண்ணாவோ ப்ரண்டாவோ தான் இருக்கனும்னு அவசியமில்லை. உன் இடத்துல எந்த பொண்ணு இருந்தாலும் இப்படி தான் நான் பார்த்துப்பேன்."



"இன்னொன்னும் சொல்றேன்... இதுவே உன் கூட அம்முவோ இல்ல மஹாவோ இருந்தாங்கனா இப்படி நான் உன்னை கவனிச்சிக்கிட்டு இருக்க மாட்டேன். அதான் கூட ஆளு இருக்குலனு போய்டே இருப்பேன். அதான் என் நேச்சர். சோ நீ நினைக்கிற மாதிரி ரொம்ப நல்ல நல்லவன்லாம் இல்ல நான்" என்றுரைத்தவன்



"அப்பறம் என்னை நம்பி நீ வந்திருக்கும் போது உனக்கு ஏதாவது ஆச்சனா உங்கப்பா என்னை விட்டு வைப்பாரா என்ன??அந்த பயமும் தான்" என கண்சிமிட்டி கிண்டலாய் அவனுரைக்க,



"நீ ரொம்ப நல்லவன்டா ஆஷிக். எனக்கு தெரியும்.என் அப்பா அண்ணாக்கு பிறகு உன் கிட்ட அந்த பாதுக்காப்பை உணர்றேன் ஆஷிக்" என தன் மனதிலுள்ளதை நெகிழ்ச்சியாய் உரைத்தாள் வாணி.



"என்ன கொடுமை சார் இது. நம்ம நல்லவன் இல்லைனு உண்மைய சொன்னாலும் இந்த ஊரு நம்மளை நம்ப மாட்டேங்குதே ஆண்டவா!!!" என அவ்வசனத்திற்கேற்ற ஏற்ற இறக்கங்களுடன் அச்சூழலை இலகுவாக்க அவன் பேச,வாய்விட்டு சிரித்தாள் வாணி.



ஒருவழியாய் சாந்தி நிலையம் வந்தடைந்தவர்கள் மஹாவை கண்டுப்பிடித்து அவளுடன் சென்னைக்கு செல்வதற்காய் அவர்கள் டிக்கெட் முன் பதிவு செய்திருந்த பேருந்திலேறி தங்களின் இருக்கையில் அமர,அன்றைய நிகழ்வுகளை,ஆஷிக் மீதான தன் எண்ணங்களை மஹாவிடம் வாணி கூறிக்கொண்டே வர அவர்களின் பயணம் தொடங்கியது.



ஆனால் ஏனோ வாணியின் மனம் குழம்பிய குட்டையாய் ஆஷிக் பற்றிய பல எண்ணங்களை அசைப்போட்டவாறே இருந்தது அன்றைய நாளின் முடிவில்.



அத்தகைய குழம்பிய மனநிலையுடேனேயே சென்னை வந்துச் சேர்ந்தாளவள்.

வழக்கம் போல் வாணியும் ஆஷிக்கும் பூந்தமல்லியிலிறங்க,வாணியின் தந்தையிடம் சிறிது நேரம் பேசிவிட்டே சென்றான் ஆஷிக்.


--நெகிழ்தல் தொடரும்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே,

கதை எப்படி போயிடு இருக்குனு ஓரிரு வார்த்தை கமெண்ட் பண்ணீங்கன்னா ரொம்ப சந்தோஷபடுவேன். கண்டிப்பா இந்த கதையில் காதல் ரொமான்ஸ் லாம் உண்டு. கதையின் பயணத்தில் போக போக வரும்.இதையும் தாண்டி நிறைய ITவிஷயங்கள் அறிவுரைகள் னு கதைல வரும்.

கருத்துக்களை கீழுள்ள திரியில் பகிர்ந்துக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6

நேசிக்கப்படுவதின்
இதம் உணர்ந்தேன்
உன் நட்பில்..


சுவாசிக்கப்படுவதின்
சுகம் உணர்ந்தேன்

உன் காதலில்..


வெளியூரில் படிப்பதற்காகவோ,வேலை செய்வதற்கோவென செல்லும் பிள்ளைகள் மாதத்தில் இரண்டு மூன்று வாரயிறுதி நாட்கள் ஊர் வரும் போது அப்பிள்ளைகளுக்கு அக்குடும்பத்தினர் அளிக்கும் சிறப்பு கவனிப்பிற்காகவே இவ்வாறு அடிக்கடி வெளியூர் சென்று வரலாமென தோன்ற வைக்கும் அப்பிள்ளைகளுக்கு.



அவ்வாறான கவனிப்பைத்தான் வாணி பெற்றுக்கொண்டிருந்தாள் அவளின் இல்லத்தில்.



அவளுக்கு பிடித்த வகை வகையான உணவும் தன்னறையில் தன் கட்டிலில் அனைத்தும் மறந்த நிம்மதியான உறக்கம் என அந்த இரு நாட்கள் அத்தனை நிம்மதி மன அமைதியை உணர்வாளவள்.



ஆனால் இம்முறை அவளின் மனம் அவளின் கட்டிலில் அவளின் தலையனையை அவள் கட்டிக்கொண்டு படுத்தப்போதும் அலைப்பாய்ந்து எங்கெங்கோ சுற்றித்திரிந்து தன் கட்டுக்குள் வர மறுத்தது. அதன் காரணம் ஆஷிக். அவனை தான் எண்ணிக்கொண்டிருந்தது அவளின் மனம்.



அவளின் தந்தை செல்வமும் அவளை கவனித்துக்கொண்டு தான் இருந்தார். அவளின் தாய் தந்தையிடம் அவள் இயல்பாய் பேசினாலும் அவள் கண்களில் தோன்றிய ஓர் அலைபுறுதல் அவள் எதையோ நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறாளென அவருக்குப் பறைச்சாற்றியது.



அன்றைய வாரயிறுதி நாட்கள் நிறைவடைய இருந்த நிலையில் ஞாயிறு இரவு பெங்களுருக்கு திரும்பிச் செல்வதற்காய் அவளை கோயம்பேடு அழைத்துச் சென்றார் அவளின் தந்தை செல்வம்.



கோயம்பேடு பேருந்துநிலையம்
சென்றடைந்த நிலையில்,அங்கு ஆஷிக் ஏற்கனவே வந்து காத்திருக்க,



"ஹேய் ஆஷிக்... சீக்கிரம் வந்துட்டியா??... இரண்டு நாளா ப்ரண்ட்ஸோட நல்லா ஊரு சுத்துனியா??.." என முகத்தில் பூரிப்பால் பூத்த புன்னகையுடன் அவனருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள் வாணி.



ஆஷிக்கை கண்டதும் வாணியின் கண்களிலிருந்த அலைப்புறுதல் நீங்கி பூரிப்பால் பளப்பளப்பதைக் கண்ட வாணி தந்தையின் முகம் யோசனையில் சுருங்கியது.



ஆயினும் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவர்.



மஹாலட்சுமி ஏதோ அவசர வேலையால் திங்கட்கிழமை விடுப்பு எடுப்பதாகவும் ஆகையால் அன்றிரவுப் பேருந்தில் அவள் வரப்போவதில்லையென்றும் வாணிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.



ஆக ஆஷிக் மற்றும் வாணி மட்டுமே அன்று பயணிப்பதாய் ஆயிற்று.



ஆஷிக் வாணியின் தந்தையிடம் வழமைப் போல் வாணியை தான் பார்த்துக் கொள்வதாய் உரைத்து பேருந்திலேற,எப்போதும் அவனின் இச்சொல்லில் நிம்மதிக் கொள்ளும் வாணியின் தந்தை இப்பொழுது இச்சொல்லில் கலக்கம் அடைந்தார்.





மறுநாள் பெங்களுரை அடைந்த இருவரும் வழமை போல் சேர்ந்தே எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகத்திற்கு சென்றனர்.





திங்கட்கிழமை விடுப்பெடுப்பதாய் கூறியிருந்த மஹா செவ்வாய் கிழமையும் சேர்த்தே விடுப்பெடுத்து அன்றிரவு பெங்களூர் வந்துச் சேர்ந்தாளவள்.



"என்னடி திடீர்னு இரண்டு நாள் லீவ்?? போன் கூட ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது... அப்படி இல்லனா நாட்ரீச்சபிள்னே வந்தது" வாணி மஹாவிடம் வினவ



"மதிய பார்க்க போயிருந்தேன்டி" மஹாக் கூற



"என்னது மதியவா??அப்ப ஹைத்ராபத்தா போயிருந்த??" வேணிக் கேட்க



"ஆமாடி... அவனுக்கு அக்சிடெண்ட்டி" என மஹா முடிக்கும் முன்



"என்னது ஆக்சிடெண்ட்டா??" என வாணி வேணி ஒருசேர கேட்க



"அடியேய் சும்மா இருங்கடி.வடிவேலு மாதிரி ஏ ஏ னு கூவிக்கிட்டு... என்னைய பேச விடுங்கடி" என மஹா அதட்ட



வாணி வேணி இருவரும் குரங்கு பொம்மை போல் வாயில் கை வைத்து நிற்க,



பக்கென்று சிரித்துவிட்டாள் மஹா.



"ஹப்பா சிரிச்சிட்டியா... வந்ததுலருந்து ரொம்ப மூடியாவே இருந்தியே... ரொம்ப அடியா மதிக்கு" என வாணி வினவ



"சே சே இல்லடி... அவன் போன்ல சின்ன ஆக்சிடண்ட் தானு சொன்னான். நான் தான் நம்பாம பெரிய சீனாக்கி.. பாவம் அப்பாவ வேற அலையவிட்டுடேன்... ஆமா அப்பாவும் நானும் தான் ஹைத்ரபாத் போனோம்... அப்பா அங்கிருந்து சென்னை போய்டாங்க... நான் இங்க வந்துட்டேன்" என மஹா கூறிக் கொண்டிருக்க



"மதி அவ்ளோ க்ளோஸா உங்க பேமிலிக்கு" என வாணி கேட்க



"ஆமாடி மதிக்கு பெரிய நன்றிக்கடன் பட்டுருக்கேன் நான்... ஆனா இந்த நன்றிகடன்ங்கிற வார்த்தையைச் சொன்னாலே கோவம் வரும் அவனுக்கு" என மதியின் நினைவில் மஹாவின் முகம் மென்மையாய் மின்ன,



தன் வாழ்வில் மறக்கமுடியா அந்த நாளை, அந்நாளின் பற்றிய நினைவுகளில் மூழ்கியவள் அவற்றை கூறலானாள்.



அதே நேரம் ஹைதராபாத்தில் தன்னறையின் கட்டிலில் படுத்திருந்த மதியின் மனமும், தனக்கும் மஹாக்கும் மறக்கமுடியா நாளாய் மாறிப்போன அந்நாளை தான் எண்ணிக்கொண்டிருந்திருந்தது.

-----

எட்டு மாதங்களுக்கு முன்பு



அன்றைய மஹா மதி சந்திப்பிற்குப் பின் மதி மஹாவின் நெருங்கிய தோழன் ஆனான்.



மதி மஹாவின் இல்லத்தில் ஒருவனாய் அவளின் குடும்ப நண்பனாய் பாவிக்கப்பட்டான்.



நான்கு வருட பொறியியல் படிப்பை மே மாதம் முடித்து விட்டதும் எம்பிஏ படிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் மஹா.



மதி கடைசி தேர்வு முடிந்த மறுநாளே தனக்கு பணி நியமனக் கடிதமளித்த அந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிசேர்ந்துவிட்டான்.



அன்று காலை மதி தன் அலுவலகத்தின் நுழைவாயிலருகே சென்றுக் கொண்டிருக்க, அந்நேரம் அவன் அலுவலகமிருக்கும் அந்த நெடுஞ்சாலையை இருபெண்கள் அந்த பக்கம் வந்த இருசக்கர வாகனத்தின் வேகத்தை மதிப்பிடத் தெரியாது சட்டென்று கடந்து விடலாமென எண்ணிக் கடக்க முயல அவ்வாகனம் வந்த வேகத்தில் அப்பெண்களை இடித்துத் தள்ளியது.



இதைக் கண்ட மதி பதறியடித்து நெடுஞ்சாலைக்கு ஓடினான்.

இடித்த வேகத்தில் கீழே விழுந்த இருவரும் கை கால்களில் ரத்தம் கொண்டவர்களாக மூர்ச்சையாகி இருந்தனர்.



அதற்குள் மக்கள் கூட்டம் அவர்களைச் சுற்றிக் கூடிவிட மக்களை விலக்கிவிட்டு அப்பெண்களுக்கு உதவி செய்யவென குனிந்து அவர்களைப் பார்க்க, இதயத்துடிப்பு எகிறியது அவனுக்கு.



மஹா எழுந்திருடி..மஹா மஹாவென அவளை தன் மடியில் கிடத்தி கண்ணில் நீர்வழிய அவளின் கன்னத்தில் தட்டிக்கொண்டே இருந்தானவன்.



ஆம் அங்கே அடிப்பட்டுக் கிடந்தது மஹாவும் அவளின் கல்லூரித் தோழி சுமதியும்.



அவனின் மூளை மறுத்துப்போனது அந்நிலையில். அவளை அள்ளித் தன் மடியில் கிடத்தியவன் உடல் ஆவி அனைத்துமே மஹா மஹாவென கூக்குரலிட தலையில் அடுத்திக் கொண்டு பிதற்றியவன்,அடுத்து என்ன செய்யவென அறியா நிலையில் அவளை தன்னோடு இறக்கி அணைத்து கதறிக்கொண்டிருந்தான்.



கண்களில் நீர் ஆராய் வழிய "என்னாச்சுடி மஹா உனக்கு..அய்யோ ரத்தமா வழியுதே.. என்னை விட்டு போய்டாதடி." என அவளை அணைத்தவாறு அரற்றினான்.



அவர்களை சூழ்ந்த மக்களில் யாரோ ஆம்புலன்ஸிற்கு அழைத்திருக்க,

ஊர்தி வந்து நின்றது.



மஹாவை வண்டியில் ஏற்றவென அவனிடமிருந்து அவளை விலக்க முயல,அவளை யாரிடமும் தரமாட்டேன் என்பது போல் வந்தவர்களை உதறி தள்ளி அவளை தன் கை வளைக்குள் வைத்து நெஞ்சில் பொதிந்து வைத்துக்கொண்டானவன்.



கூட்டத்தில் ஒருவர் அவனிடம் நிலைமையைக் கூறி அவளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கூற அப்போது தான் தன்நிலை வந்தவனாய் அவளை வண்டியில் ஏற்ற அனுமதித்தவன், அப்பொழுது தான் நினைவு வந்தவனாய் அவளுடன் சேர்ந்து அடிப்பட்ட பெண்ணை யாரென்று பார்க்க,அவளும் இவனுடன் கல்லூரியில் படித்தப் பெண் சுமதி என்பதை அறிந்தான்.



மருத்துவமனையில் இருவரையும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க,

மஹாவின் அறை வாசலில் அவளின் நிலை ஏற்படுத்திய மன வலியை தாங்க இயலாது கண்ணீருடன் நின்றிருந்தான்.



தன் சட்டையிலிருந்த அவளின் ரத்தத்தைக் கண்டவன்,"சின்ன ஊசி குத்தவும் பயப்படுவியேடா குட்டிம்மா... இவ்ளோ வலியை எப்படிடா தாங்குவ??" எனக் கதறி அழுதான்.



இரத்த கறையெல்லாம் நீக்கி உள்காயம் ஏதேனும் உள்ளதாயென பார்த்து தேவையான இடத்தில் கட்டுப்போட்டுயென டிரெஸ்ஸிங் முடித்தப்பின்னர் அவசரப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றினர் இருவரையும். மயக்க நிலையில் தான் இருந்தனர் இருவரும்.



இருவருக்கும் உயிர் பிரச்சனையில்லையென அறிந்த பின்னரே அவனால் சீராக மூச்சுவிட முடிந்தது.



இருவருக்கும் கை கால்களில் சிறு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும்,அடிபட்ட பயத்தில் தான் இருவரும் மயங்கிப் போயினர் என்றும் இரண்டு நாட்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என்றும் பெரும் பிரச்சனை ஏதுமில்லை இருவருக்கும் என கூறிவிட்டார் மருத்துவர்.



இருவரின் குடும்பத்தினரும் வந்துக் கொண்டிருந்தனர் மருத்துவமனைக்கு..



மஹாவின் அறையின் வெளியுள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தவனின்
மனம் மஹாவின் அடிப்பட்ட முகத்தை, தன் கண் முன் அவளுக்கு நிகழ்ந்த அந்த விபத்தை எண்ணியே பெரும் வலியில் சிக்குண்டிருந்தது.




ஒருவாறாய் மஹாவிற்காய் இத்தனை நேரம் கதறி கத்திக் கூப்பாடு போட்ட அவனின் மனம் சமன்பட தன் கண்ணீரைத் துடைத்தவன்,

கண் மூடி தலை சாய்த்தான் அந்த நாற்காலியில்.



அவனின் மூடிய விழிகளில்

சில மாதங்களாய் குழம்பிக் கொண்டிருந்த அவனின் மனக்குழப்பத்தின் தீர்வை கண் முன் நிறுத்தியது அவனுக்கு.



கல்லூரிப் படிப்பு முடிந்தப் பிறகு.... இனி அவளை தினமும் காண இயலாது என்கின்ற நிதர்சனத்தை அவனின் மூளை உரைக்க,அவனின் மனம் அவளை விட்டுப் பிரிய இயலாதென உரைத்தது அவனுக்கு... அவள் தன்னுடனேயே இருக்க வேண்டுமெனவும் அவனின் மனம் விரும்புவது அவனுக்கு உரைக்க, அவள் மீது தான் கொண்ட அன்பிற்கு பெயர் என்ன?? அது வெறும் நட்பு தானா என்கின்ற குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தவனின் மனம் அக்கேள்விக்கான விடையை இன்று உணர்த்தியது... இத்தகைய நிலையிலா தன் காதலை தான் உணர வேண்டுமென துடிதுடித்தது அவனின் மனம்.



உடனே மஹாவைப் பார்க்கவென மனம் பரபரக்க,மஹா இருந்த அறைக்குச் சென்ற மதி,



கை கால்களில் கட்டுப்போடப்பட்ட நிலையில் மருந்தின் உபயத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் அருகில் சென்றவன்,



அவளருகில் அமர்ந்து அவளின் முடியைக் கோதி நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.

"கொஞ்ச நேரத்துல என் உயிர் போற வலியை காமிச்சிட்டியேடி குட்டிம்மா... இன்னும் உன் ரத்தம் தொட்ட இந்த கை நடுங்கிட்டு தான்டி இருக்கு... உன்னை அந்த நிலைமையில் பார்க்க முடியாம நான் துடிச்சது தவிச்சதுலாம் நீ என் மனசுல என்னவா இருக்கனு எனக்கே காமிச்சிடுச்சு மஹா... ஐ லவ் யூ மஹா... என் அடி மனசுல இருக்கும் அந்த வலியோட உனக்காக இன்னும் படபடப்பாய் துடிச்சிட்டு இருக்க அந்த இதயத்துடிப்போட சொல்றேன் ஐ லவ் யூ மஹா... இனி நீ இல்லாத வாழ்வு இல்லைனு அந்த நிமிஷத்துல உணர்ந்தேன்டி... உன்னை என்னிக்கும் யாருக்காகவும் விட்டுதர மாட்டேன்டி... ஐ லவ் யூ டி கண்ணம்மா" கண்ணில் நீர் வழிய ஒரு கை அவளின் நெற்றியிலிருக்க மறு கை அவளின் டிரிப்ஸ் ஏறிய கையை பிடித்திருக்க உறக்கத்திலிருந்தவளிடம் தன் அன்பை நேசத்தை கண்ணீருடன் கூடிய மொழியால் உரைத்துக் கொண்டிருந்தான் மதி.



மனதின் வலி இறுக்கம் அனைத்தும் அவன் உரைத்த இந்த காதலினால் மாயமாய் மறைந்துப் போனதை எண்ணி மெல்லியதாய் சிரித்துக் கொண்டானவன்.



"காதல் செய்யும் மாயம் இதுதானோ"

அவன் இதழ் விரிந்தது இப்பொழுது அவன் மனம் கூறிய இவ்வரிகளில்.



மஹாவிடம் மெல்லியதாய் அசைவு தெரியவும் அவளின் குடும்பத்தினர் வரவும் சரியாக இருந்தது.



அவள் காலில் தசை விலகியுள்ளதாகவும் கைகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கூறியதை உரைத்தவன், மருத்துவரைக் கண்டு முழு விபரம் கேட்டு வரலாமென அவளின் தந்தையை அழைத்து வெளியே வந்துவிட்டான்.



விழித்ததும் வலியால் அவள் படும் வேதனை காண சகிக்கயிலாதெனவே வெளி வந்துவிட்டானவன்.



மனதில் காதலை வைத்துவிட்டு நண்பனாய் பழக மனமில்லை அவனுக்கு. இச்சூழலில் காதலை உரைப்பதும் சரியில்லை என்பதை உணர்ந்தவன் அவள் நலமாகி வந்ததும் கூறலாமென முடிவெடுத்தான். ஆனால் அதன் பிறகும் அவளிடம் காதலை கூறும் நிலை வராது போனது அவனுக்கு.



மஹா மற்றும் சுமதி,மதியின் அலுவலகத்தினருகிலிருக்கும் கல்லூரிக்கு எம்பிஏ விண்ணப்ப படிவம் வாங்கவெனவே அன்று வந்திருந்திருந்தனர் என்று மஹாவின் தந்தை மூலம் அறிந்துக் கொண்டான் மதி.



மஹா மற்றும் சுமதி இருவரும் அவர்களின் தாய்மார்களின் கவனிப்பிலேயே மூன்று மாதத்தில் ஓரளவு எழுந்து நடந்து தங்களின் வேலையைத் தானே செய்யுமளவு உடல்நிலை தேறினர்.



அந்த மூன்று மாதமும் தினமும் மாலை அவளுக்குப் பிடித்த ஐஸ்க்ரீம் அல்லது பாசுந்தியுடன் தான் அவளைச் சந்தித்தான் அவளின் இல்லத்தில்.



நான்கு சுவருக்குள்ளேயே வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது மஹாவை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தது. மாலை மதி அவளைக் காண வரும் நேரமே பொன்னான நேரமாய் தோன்றியது அவளுக்கு.



அவளின் இம்மன உளைச்சலை அறிந்தவன் அவளை மென்பொருள் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்துக் கொள்ளச் சொன்னான்.



அடுத்து வந்த மாதத்தில் நிகழ்ந்த அந்த மென்பொருள் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு அவளின் பெற்றோரிடம் நிறைய பேசி சம்மதம் பெற்று தன்னுடன் அவளை அழைத்துச் சென்றான்.



அப்பொழுது கிடைத்தது தான் அவள் செய்யும் இந்த மென்பொருள் வேலை.



மஹாவிற்கு பெங்களுரில் பணி நியமன ஆணை வழங்க,அதே சமயம் மதியின் அலுவலகத்தில் அவனுக்கு ஹைதரபாத் ப்ராஜக்ட் அளித்து அவனை அங்கே செல்லுமாறு ஆணையிட்டனர்.



மஹாவின் உடல் தேறி வரும் இந்நிலையில் மஹாவை தனியாய் பெங்களுர் அனுப்ப அவளின் பெற்றோர் முற்று முதலாய் மறுக்க,மதி அவளுக்காய் அவளின் பெற்றோரிடம் பேசி அனுமதி வாங்க பெரும் முயற்சி செய்தான்.



இதற்கு மேல் தனக்கு எம்பிஏ படிக்க விருப்பமில்லை என்றும் வேலைக்கு செல்வது தனக்கு பெரும் மாற்றத்தை தருமென மஹா எடுத்துக் கூறியும்,அவளின் பெற்றோர் எதற்கும் மசியாமல் போக, உண்ணாவிரதம் இருந்து அவளின் பெற்றோரை சம்மதிக்க வைத்திருந்தாள் மஹா.



-----



மஹா கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த வாணி மற்றும் வேணியின் கண்களில் நீர் தேங்கியிருந்தது.



"அதனால தான் ரோடு க்ராஸ் செய்யும் போது அப்படி பயப்படுவியாடி?? எங்க கைய இறுக்கமா பிடிச்சிக்குவியே... அது இதனால தானாடி??" என கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வாணி வினவ,



"ஆமாம்டி... அந்த ஆக்சிண்ட் என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு... கிட்டதிட்ட மூனு மாசம் நடக்க முடியாம,என் கையால நானே எதுவுமே செய்ய முடியாமனு எல்லாத்துக்குமே அம்மா தான் உதவி செஞ்சாங்க... அப்பா எனக்காக என் வேதனையை பாத்து அழுத அழுகைலாம் என் வாழ்நாள்ல மறக்கவே முடியாதது... இப்படி அப்பா அம்மா கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்டி... வீ ஆர் ஆல் பிளஸ்டு டூ ஹேவ் அவர் பேரண்ட்ஸ்... மதி என்னை அந்த வெறுமையான சூழலிலிருந்து மீட்டுக்கொண்டு வந்தவன்... அதனால அவன் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல் ப்ரண்ட்"



"கண்டிப்பா இதை ஒத்துக்கிட்டு தான் ஆகனும்டி... இது எல்லாத்துக்கும் காரணம் என்னோட கேர்லெஸ்னஸ்(carelessness)... ஹைவேல எப்பவுமே நம்ம கணிக்குற தூரத்தை விட வாகனம் சீக்கிரமா கிராஸ் ஆயிடும்... அதனால ரொம்பவே கேர்புல்லா இருக்கனும் ரோடு க்ராஸ் செய்யும் போது... முக்கியமா வாகனம் வேகமா பறந்து வர ஹைவேல ரொம்பவே கவனமா இருக்கனும்."

என்று தன் அனுபவத்தை உரைத்துக்கொண்டிருந்தாள் மஹா.



"இப்ப எல்லாம் சரியாயிடுச்சுல மஹா. எங்கயும் வலி இருக்கா இன்னும். ஏன்டி நீ எங்ககிட்ட முன்னாடியே சொல்லலை" என மஹாவின் கைகளை வருடியபடி வேணி கேட்க,



"அப்டிலாம் எதுவுமில்லை அம்மு... ஐம் பர்பெட்லி(perfectly) ஆல்ரைட் நௌ... நீங்க ஏன் இப்டி சோக கீதம் வாசிக்கிறீங்க.. நானே அதை ஈஸியா கடந்து வந்துட்டேன்... இப்டி அனுதாப பார்வைலாம் பார்க்காம ஒழுங்கா படுத்து தூங்குங்கடி"



"அப்பறம் வாணி,இரண்டு நாளா உன் ஆளு கூட தான் ரவுண்ட்ஸா." என மஹா கண்ணடித்துக் கேட்க,



"அடிங்க யாரு பாத்து ஆளு சொல்ற... உன் வாய் அடங்காதாடி" என மஹாவை அடிக்கத் துரத்தினாள் வாணி.



அனைவரும் ஒரு வழியாக இரவுணவு உண்டு உறங்கத்திற்குச் செல்ல, மஹாவிற்கு அவளின் நினைவு முன் தினம் மதியுடன் ஹைதராபாத்தில் நிகழ்ந்த அந்த உரையாடலை அசைப்போட்டுக் கொண்டிருந்தது.



----
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி ஹைத்ராபாத்தில் ஓர் நண்பனின் இல்லத்தில் மேல் மாடி வீட்டில் தங்கிருந்தான். மஹா அவனை காண வருவதாய் கூறியிருக்கவில்லை.



ஹைதராபாத்தில் காலை இறங்கியதும் தான் கைப்பேசியில் மதியை அழைத்து முகவரி வாங்கினாளவள். ஆனால் அவள் அங்கு வந்ததற்காக வெகுவாய் அவளை திட்டிவிட்டே முகவரியை கொடுத்தானவன்.



அவனுடைய வீட்டை அடைந்ததும் அவனது வலதுக்கையிலிருந்த கட்டை பார்த்தும் அவளுக்கே அவ்வலியிருப்பது போல் அவளின் மனது வலித்தது.



அவளையும் அவளின் தந்தையையும் உபசரித்து அமர்ந்தவன்,அவர்கள் வரும்போதே வாங்கி வந்திருந்த காலை உணவை அனைவருமாய் உண்டு முடிக்க தன் விபத்து நிகழ்வை கூறினானவன்.



ஹைதராபாத்தில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் தான் பயணம் செய்வதாகவும்,ஓர் திருப்பத்தில் எதிர் வந்த வண்டியை கவனிக்காது அவன் திரும்ப,அவன் சட்டென அழுத்திய ப்ரேக்கின் வேகத்தில் வண்டி ஸ்கிட்டாகி கீழே விழுந்து விட்டதாய் உரைத்தவன்... விரலில் சிறு முறிவு எனவும் அதை நேர் செய்ய முழங்கை முழுவதும் கட்டு போட்டிருக்கிறார்கள் என நீண்ட நெடிய விளக்கம் கொடுத்தான்.

"சின்ன விபத்து தான் அங்கிள்... மஹா பயந்துப் போய் உங்களை கூட்டிட்டு வந்துட்டா... உங்களுக்கு தேவையில்லாத சிரமம் தானே அங்கிள்" என மஹாவை முறைத்துக் கொண்டே மதி உரைக்க,



"அன்னிக்கு என் பொண்ணை நீ சிரமம்னு பார்த்திருந்தா இவ இப்படி இங்க நிக்க மாட்டாளேப்பா. உனக்கு ஒன்னுனா உன்னை பார்க்காம எப்படிப்பா நாங்க இருக்க முடியும். மஹா ரொம்பவே பீதியடைய வச்சிடா. உன்னை இப்ப பார்த்தப் பிறகு தான் மனசு நிம்மதியா இருக்கு" என மஹாவின் தந்தை தன் மனதிலுள்ளதை உரைக்க,



"வந்ததுல இருந்து நம்ம கிட்ட ஒரு வார்த்தைக் கூட பேசாம இருக்கானே?? பயப்புள்ள நம்ம மேல செம்ம கோவத்துல இருக்கான் போலயே. எப்படி இவனை சமாளிக்கப் போறோம்" என மனதில் மஹா எண்ணிக் கொண்டிருக்க,



"அங்கிள் டிராவல் டயர்டு இருக்கும். நீங்க போய் அந்த ரூம்ல ரெஸ்ட் எடுங்க" என மதிக் கூற



"மஹா நீயும் வாம்மா. ரெஸ்ட் எடுக்கலாம்" அவளின் தந்தை அழைக்க,



"நீங்க போங்கப்பா. நான் மதிக்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்" எனக் கூறி அவரை அனுப்பி வைத்தாளவள்.



"எப்படிடா இருக்கு கை வலி??. ரொம்ப வலிச்சிச்சா??? வலிச்சிருக்கும் தான்.. எனக்கு தான் அந்த வலி தெரியுமே" எனக் கண்ணில் வலியுடன்,வலி நிறைந்த மொழியுடன் அவன் கையை வருடிக் கொண்டே அவள் கேட்க,



இத்தனை நேரம் அவள் மேல் கொண்ட கோபமெல்லாம் அவள் கண்ணில் கண்ட வலியில் மாயமாய் போக,"சே சே ரொம்ப வலியில்லடா குட்டிம்மா... நீ ஃபீல் செய்யாத" என அவளைத் தேற்ற,



ஏனோ அவளின் மனம் சமாதானம் ஆகாமல் சோக முகத்துடனேயே அவள் அவனின் கையைப் பார்த்திருக்க,



இவளிடம் கொஞ்சினால் வேலைக்காகாது என்பதை உணர்ந்தவன், "உன்னை தான் இங்க வர வேண்டாம்னு சொன்னேன்ல.

எதுக்கு இப்ப வந்த நீ?? இப்டி சோக கீதம் வாசிக்கவா??போதாக்குறைக்கு அங்கிள்ல வர கூட்டிட்டு வந்திருக்க" என அவன் பொரிந்துத் தள்ள,



"என்னடா நீ உனக்கு வலினு சொல்லும் போது நான் அங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும் மதி. உனக்கு ஆக்சிடெண்ட்னு சொன்னதும் அப்பாவும் பதறிட்டுக் கூட வரேனு சொல்லிட்டாங்க" என முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு அவள் உரைக்க,



"அவரா பதறலை... நீ பதற வெச்சிருக்க" என அவன் கோபத்தில் பல்லைக் கடிக்க,



"என்ன மதி நீ... எனக்கு விபத்துப்போ என்னை எப்படிலாம் பார்த்துக்கிட்ட... உனக்குன்னு போது நான் சும்மா இருக்க முடியும்... நன்றிக்கடன்னு ஒன்னு இருக்குல" மஹா கூறிய மறுநொடி,



"மஹா.... டோண்ட் யூஸ் தட் வர்டு மஹா... அப்ப நீ என்னை நன்றிக்கடனுக்கு தான் பார்க்க வந்திருக்க. என் மேல பாசம் வச்சி வரலை" கோபத்தில் கர்சித்தானவன்



"என்னப்பா,அப்டி இல்லடா மதி" - மஹா



"பின்ன என்ன... நீயும் அப்படி தான் பேசுற... உங்க வீட்டுலயும் எனக்கு எது செஞ்சாலும் உன்னை காப்பாத்தினதுக்கு கைம்மாறு மாதிரி செய்றாங்க... அந்த ஆக்சிடெண்ட் முன்னாடியுமே நான் உங்க வீட்டு பேமிலி ப்ரண்ட்டா தானே இருந்தேன். இப்ப மட்டும் எதுக்கெடுத்தாலும் ஏன் அதையே சொல்றீங்க??"



"இப்ப சொல்றது தான் ஃபைனல் மஹா,இந்த நன்றிக்கடன் கைம்மாறு இதெல்லாம் மனசுலருந்து அழிச்சுட்டு என் கூட பேசுறதா இருந்தா பேசு... இல்லனா என் கூட பேசாத" என தன் கோபத்தை வார்த்தையில் கொட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு போய்விட்டான் அவன்.



அவனின் இந்த கோப முகத்தில் அவன் கூறிய வார்த்தையில் அதிர்ந்து நின்றிருந்தாள் மஹா.



அதன் பிறகு அவள் ஹைதராபாத்திலிருந்து கிளம்பு வரை அவன் அவளிடம் பேசவேயில்லை.



"Go safely... message me once you reached bangalore" அவள் வீட்டிலிருந்து கிளம்பும் நேரம் அவளின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தானவன்.



"பக்கத்திலேயே நிக்கிறேன் பேச மாட்டானாமா??ஆனா மெசேஜ் மட்டும் பண்ணுவானாமா... இருடா உன்னை... நீயா வந்து பேசுற மாதிரி செய்றேன்" என மனதிற்குள் அவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தவள், அவனின் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பாமல் இருந்தாள். இவளின் பாதுகாப்பு விஷயத்தில் இவளிடம் பேசாமல் அவனால் இருக்க முடியதென அவளுக்குத் தெரியும்.



அவளின் தந்தையை சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டு, இவளை பெங்களூர் செல்லும் இரயிலில் ஏற்றிவிடும் வரையிலுமே அவள் அக்குறுஞ்செய்திக்கு பதிலனுப்பாமலிருக்க,



"மஹா பத்திரமா போய்டு வா... கண்டிப்பா பெங்களூர் ரீச் ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணு.. கேர்லெஸ்ஸா இருக்காத... உடம்பை பார்த்துக்கோடா குட்டிம்மா" என அவள் இருக்கையின் ஜன்னலருகே நின்று இவன் பேச,



மஹா ஏதும் பேசாது வெளியே வெறித்துக் கொண்டிருக்க,



"இருடி உன்னை எப்படி பேச வைக்கனும்னு எனக்குத் தெரியும்" என மனதில் நினைத்துக் கொண்டிருந்தவன்,



அந்த ஜன்னல் கம்பியில் தன் அடிப்பட்ட கை இடிப்பட்டதுப் போல் கொண்டு வந்து,"ஸ்ஸ் ஆஆஆ" என வலியில் முகம் சுருங்க அவன் தன் கைகளை பிடிக்க,



"அச்சோ என்னாச்சுப்பா என்னாச்சு.. கைல இடிச்சிக்கிட்டியா??கைல ஏற்கனவே வலி... பாத்து இருக்க மாட்டியாடா நீ... இதுல என்னை கேர்புல்லா இருக்கச் சொல்லி டயலாக் வேற" என தன் முகத்தில் வலியைத் தேக்கி அவன் கையை அவள் வருடி விட,



"பேசிட்டியா... பேசிட்டியா" என கண்சிமிட்டி சிரித்தானவன்.



"சீ போடா... உனக்கு வலிக்குதுனு நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா"



"தெரியுமே... அதுக்கு தானே இப்டி ப்ளே பண்ணேன்" என அவன் சிரிக்க,



ரயில் கிளம்புவதாய் அறிவிப்பு வர,மீண்டும் இருவரும் டேக் கேர் டேக் கேர் என பாசமழை பொழிந்துக் கொண்டிருக்கும் போது இரயில் நகர்ந்தது.



----



மெல்லிய சிரிப்புடன் இதை எண்ணிக் கொண்டிருந்தவளின் மனது இதமான உணர்வில் தன்னை மறந்து உறங்கிப்போனாளவள்.



நட்பைத் தாண்டிய உறவைப் பற்றி அவள் எண்ணிப் பார்த்திராத நிலையில் அவளின் இவ்வுணர்வை நட்பென்றே எண்ணினாள் மஹா.



மதி அவளின் இந்த உணர்வை காதல் என்றே எண்ணினான். அவளதை உணரும் தருணத்திற்காக காத்துக் கொண்டருந்தானவன்.



மறுநாள் புதன்கிழமை வழமைப்போல் அவரவர் அலுவலகம் செல்ல,ஒரு வழியாய் அன்று நேர்முகத் தேர்வு நடைப்பெற்றது வாணி மற்றும் ஆஷிக்கிற்கு.



மாலை கிளம்பும் வேளையில் அந்த மேனேஜர் ஆஷிக் மட்டுமே அந்த ப்ராஜக்டிற்கு தேர்வாகியுள்ளானென்றும், வாணி நாளை அவளின் பழைய அலுவலகத்திற்கு பென்ஞ்சில் இருக்கச் சென்றுவிடலாமெனக் கூறிவிட்டாரவர்.



வாணிக்கு அடி மேல் அடி விழுவதாய் ஓர் உணர்வு. மிகவும் இறுக்கமாகவே இருந்தாளவள். அழவும் இல்லை சிரிக்கவும் இல்லை. வெறுமையான மனநிலை பிரதிபலித்தது அவளின் முகத்தில்.


--நெகிழ்தல் தொடரும்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே,

தங்களின் கருத்துக்களை கீழுள்ள திரியில் பகிர்ந்துக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Status
Not open for further replies.
Top