Teaser 2:
ஓர்நாள் மாலை இளாவின் கைபேசிக்கு அழைத்திருந்தாள் வேணி. இரவு எட்டு மணி அளவில் அவள் அழைத்திருக்க,அவன் இன்னும் அலுவலகத்தை விட்டுக் கிளம்பாது ஆர்வமாய் வேலைப் பார்த்திருந்தான். அலைப்பேசியில் வேணியின் அழைப்பு என்றதும் அதை ஏற்று காதில் வைக்க,இளாவிற்கு கேட்டது வேணியின் அழுகைக்குரல்.
மறுப்பக்கத்தில் கேட்ட அவளின் அழுகைக்குரலில் பதட்டமடைந்த இளா,"என்னாச்சு அம்ஸ்... எதுக்கு அழுற??" எனக் கேட்க,
"நீ உடனே மடிவாலா போலீஸ் ஸ்டேஷன் வா" என அவள் அழுதுக்கொண்டே உரைக்க,
தன் இருக்கையை விட்டே எழுந்து விட்டானவன்,"போலீஸ் ஸ்டேஷன்கா??இந்த நேரத்துல அங்க எதுக்கு போன நீ??அங்கே என்ன பிரச்சனை??தனியாவா போய்ருகே நீ??லூசா நீ??" எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போக,
அங்கே இன்ஸ்பெக்டர் அவளை அழைத்ததாய் கான்ஸ்டபிள் கூற,
"நேர்ல வா...நான் எல்லாத்தையும் சொல்றேன்" என கைபேசியை வைத்து விட்டாளவள்.
கான்ஸ்டபிளின் வார்த்தை இளாவிற்கும் அவளின் கைபேசி வழியாய் கேட்க,மீண்டும் மீண்டும் அவளின் எண்ணிற்கு அவன் முயற்சி செய்ய,அவனின் அழைப்பை ஏற்கவில்லை அவள்.
----
எவர் முன்னும் அழும் சுபாவம் இல்லாத வேணி,தன் அழுகையை கட்டுக்குள் கொண்டுவர பெரும்பாடுபடுவதைப் பார்த்தவன்,"நான் தானே இருக்கேன் கன்ட்ரோல் செய்யாம அழுதிடு அம்ஸ். நெஞ்சடைக்கப் போகுது" என இளாக் கூற,
"நீ எனக்கு யாரோ தான் போடா" என நா தழுதழுக்கச் சொன்னவள் அந்த இடத்தைவிட்டு நகரப் போக, இவன் அவளைத் தடுத்து நிறுத்த விழைந்த நேரம்,வாணி மஹா மற்றும் ஆஷிக் அவ்விடத்திற்கு வந்தனர்.
----
"என்ன ப்ளான் மதி... எங்கே போறோம்" - மஹா
"அது சப்ரைஸ் மஹா... போனப்பிறகு நீயே தெரிஞ்சிப்ப" - மதி
வண்டியில் அமர்ந்துக் கொண்டவளை அவன் முதலில் அழைத்துச் சென்றது ஹோசூரில் புதிதாய் கட்டப்பட்டிருந்த சாய் பாபா கோவிலிற்கு.
கோவிலைக் கண்டவளின் விழி வியப்பில் விரிய,
"ஹே மதி... வாட் எ மிராக்கில்... எதை நினைச்சுடா என்னை இங்க கூட்டிட்டு வந்த??" என கேட்டுக்கொண்டே மஹா வண்டியிலிருந்து இறங்க,
"நீ என்ன நினைச்ச? அதை சொல்லு" - மதி
"சென்னை பஸ் இந்த வழியா தாண்டா போகும். எவ்ரி வீக்கெண்ட் இந்த வழயா போகும்போதெல்லாம இந்த கோயிலுக்கு ஒரு நேரம் வரணும்னு நினைச்சிருக்கேன்... இப்ப அங்கேயே என்னை கொண்டு வந்து நிறுத்திருக்கியே.. எப்படிடா உனக்கு தெரிஞ்சுது??" - மஹா
----
அவன் கூறியதைச் சொல்லி பாபாவிடம் பேசிக் கொண்டவளின் மனம், "இதேப் போல நானும் மதியும் ஒன்னா சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே லைபை என்ஜாய் செஞ்சி வாழனும்" என அவளையறியாமல் அவளின் மனம் சாய் பாபாவிடம் பேசிக்கொண்டிருக்க, தன் எண்ணம் போக்கும் போக்கை எண்ணி திடுக்கிட்டு விழித்தவள், திரும்பி மதி அமர்ந்திருந்த இடத்தைப் பார்க்க, அவன் கண் மூடி பெரும் வேண்டுதலை வைத்துக் கொண்டிருந்தான் கடவுளிடம்.