All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தோஷியின் "நினைவில் தத்தளிக்கும் நேசமது" - கதை திரி

Status
Not open for further replies.

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 14 :


காலை முதல் வேலை செய்த களைப்பில் ஆதவன் ஓய்வெடுக்க செல்ல , பூமி அழகிய பார்க்கும் ஆவலுடன் எட்டிப்பார்த்தது வான்மதி.


ஜிஷ்ணு அனைவரிடமும் விடைபெற்று கிளம்பிய சிறிது நேரத்தில் அங்கு வந்தார்கள் ரவி சக்ரவர்த்தியும் , ருத்திர வர்த்தனும் .


"டார்லிங் ......"என சத்தமாக கத்திக்கொண்டே வந்த ரவி சக்கரவர்த்தியை கண்ட ஷாலினி அவரிடம் செல்ல , அதற்குள் அவர்களை நெருங்கி வந்திருந்தவர் நாச்சியாரின் தோள்களில் கைபோட்டு , "என்ன நாச்சி...!??? மாமா வெளியூர் போயிட்டு வரேன் பல நாள் நம்பள பார்க்காம தவிச்சி போய்ற்பாரேனு நினைச்சி வரும்போது வாசல் நிக்கணும்னுலாம் இல்லையா "என முகம் சுருக்கியவர் தொடர்ந்து,"ஆனாலும் மாமன பார்க்காம கொஞ்சம் இளச்சிட்ட போல "என சிரிப்புடன் அவரின் கன்னத்தை நிமிண்டினார்..


அனைவரின் முன்பு அவர் செய்ததில் கன்னங்களில் செம்மை பூச பொய் கோபத்துடன் அவரை தள்ளிய நாச்சியார் , "ம்ம்க்கும்.... !!!! இவர் போர்க்கு போயிட்டு வராரு நான் ஆரத்தி எடுத்து வரவேற்க்குறன்... பேரன் வந்தும் கொஞ்சமாச்சி அடங்குறார பாரு " என பக்கத்தில் இருந்த மித்ராளினியிடம் பொய்யாய் சலித்தார்.


இத்தனை நேரம் ரவிசக்கரவர்த்தியின் பேச்சை முகம் மலர கேட்டுக் கொண்டிருந்தவள் நாச்சியாரின் சலிப்பில் வாய்விட்டு சிரித்து ,"ஆனா ஆண்ட்டி.. நீங்களும் அதை ரசிக்கிறீங்க தான் போலயே" என கண்சிமிட்டியபடி அவரின் சிவந்த முகத்தை தொட்டவளின் காதை செல்லமாய் திருகியவாறு,"நீயும் சரியான வாலு தான் போலயே" என்றார் நாச்சியார்.


அவளை கண்ட சக்கரவர்த்தி , "யார் இந்த ஏஞ்சல் ??"என்றும்.... ருத்ரவர்த்தன் ," யார் இந்த பெண்??" என்றும் ஒரே நேரத்தில் கேட்டனர் .


இத்தனை நேரம் அமைதியாய் இருந்த விஷ்வா ," அவங்க யாருன்றது இருக்கட்டும்.. நீங்க ரெண்டுபேரும் கொஞ்சம் திரும்பிப் பாருங்க ஒரு புயல் உங்களைத் தாக்க வருது..அதுல சிக்கி மீண்டு வந்திங்கனா இவங்க யாருனு பாப்போம் "என மித்ரேந்தரை தூக்கியவன், நாச்சியாரையும் மித்ராளினியையும் அழைத்துக்கொண்டு சென்றான்.


அவனின் பேச்சில் திரும்பி பார்த்த இருவரும் அங்கு இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருந்த ஷாலினி கண்டு திருட்டு முழி முழிக்க... முதலில் சமாளித்த ரவி சக்கரவர்த்தி , "டார்லிங் எப்படா வந்த ??? நான் வரது தெரிஞ்சு என்னை பார்க்கறதுக்காக ஓடிவந்தியா டார்லிங்" என கேட்டவர், "ம்ம்ம்..... நல்லவேளை டார்லிங் நீ வந்துட்ட நான் உன்ன பார்க்காம உருகி போய்ட்டேன் தெரியுமா" என அப்பாவியாய் சொல்ல , அவரின் பேச்சில் வாயடைத்த ருத்ரவர்தன் சொல்லவந்ததை மறந்து முழித்தபடி நின்றதில், ஷாலினி சிரித்துவிட்டாள் .


"ஹாஹா , டார்லோமா ...நீங்க சரியான மாஸ்டர் பீஸ் போங்க"என சொல்லி சொல்லி சிரித்தாள் .


பின் ரவி சக்கரவர்த்தி சாப்பிட அமர ...விஷ்வாவோ ," அப்பாடா புயல் கரைய கடந்துடுச்சி போலேயே" என சொல்லிகொண்டே அங்கு வந்தவன் ருத்ரவர்தனுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தான் .


"அத்தம்மா ..!! நான் போய் சித்து ரூம்ல பிரெஷ் ஆகிட்டு வந்துட்றேன்" என சற்று தள்ளி ருத்ரவர்தனுடன் பேசிக்கொண்டிருந்த விஷ்வாவின் காதில் கேட்பதை போல் கத்தி சொல்லிய ஷாலினியின் முகம் கடந்த முறை நடந்ததை எண்ணி சிவந்தாலும் மனம் அவனின் அருகாமைக்காய் ஏங்கியது .


விஷ்வாவிற்கும் அந்நினைவில் கால்கள் அவள் பின் செல்ல தூண்ட ருத்ரவர்தனிடம் ," மாமா ...! டைம் ஆகிடிச்சி நீங்க சாப்பிடுங்க "என அவ்விடம் விட்டு நகர்ந்தான்.


அப்பொழுது மித்ராளினி, "பசி இல்லை" என குழந்தையை மடியில் வைத்து கொண்டு நாச்சியாரிடம் மறுத்துகொண்டிருக்க.. அதை கண்டு அவளிடம் வந்தவன் மித்ரேந்தரை தூக்கி கொண்டு , "ஏஞ்சல் !!!! உங்களுக்கு இன்னும் முழுசா குணமாகல மெடிசின்ஸ் எடுக்கிறதுக்காகவாது சாப்பிடணும் .. வாங்க " என அவனே அவளை டைனிங்டேபிள் வரை கூட்டிச்சென்று பரிமாறினான்.


அவனின் செயலை நாச்சியாரும், ரவி சக்கரவர்த்தியும் சிரிப்புடன் பார்க்க ருத்ரவர்த்தன் மட்டும் யோசனையுடன் பார்த்தார் .மித்ராளினியை சாப்பிட வைப்பதில் ஷாலினியை மறந்து விஷ்வா அங்கயே அமர்ந்திருக்க.....ஷாலினியோ விஷ்வா வருவானென்று சித்ராங்கதாவின் அறைக்கு செல்லாமல் கதவின் முன் நின்று படிகளையே பார்த்திருந்தாள்.


சாப்பிட்டு முடித்த மித்ராளினியிடம் அவளை ரூமிற்கு சென்று ரெஸ்ட் எடுக்க சொல்லிய விஷ்வா மித்ரேந்தரை அமர்ந்திருந்த ரவி சக்கரவர்த்தியிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு தேவையான மருந்துகளை கொடுப்பதற்கு அவளுடன் சென்றான்.


சரியாய் அவள் ரூமினுள் சென்ற நேரத்தில் வீட்டினுள் நுழைந்தார்கள் ஜித்தேந்தரும் ,சித்ராங்கதாவும்.


அங்கு அமர்ந்திருந்த ருத்திரவர்தனை கண்ட ஜித்தேந்தர் , "எப்படி இருக்கீங்க மாமா ??? சாப்டிங்களா ???" என விசாரித்தான்.


"இல்லப்பா....பாப்பா பிரெஷ் ஆகிட்டு வரேன் சொன்னா அதான் சேர்ந்து சாப்பிடலாம்னு இருக்கேன் ..போ பா நீ போய் சாப்பிடு ரொம்ப டயர்ட் ஆஹ் தெரியுற " என்ற ருத்ரவர்தனிடம் ஒற்றை தலையசைப்புடன் விலகி மித்ரேந்தரை தேடிச் சென்றான்.


பின்னால் வந்த சித்ராங்கதா அமைதியாய் படியேறுவதை அறை விட்டு வெளி வந்த விஷ்வா பார்த்து விட்டு ," என்னாச்சி இவளுக்கு ??? எப்பவும் இவ வீட்டுக்கு வந்துட்டான்னு ஊருக்கே தெரியுரமாதிரி கத்திக்கிட்டே வருவா இப்போ இவ்ளோ அமைதியாய் போறா???" என தனக்குள் கேட்டவன் அனைவரும் இருந்ததில் பிறகு தனியாய் அவளிடம் பேச வேண்டுமென மனதில் குறித்துக்கொண்டான் .


மேலே விஷ்வாவிற்காக காத்திருந்த ஷாலினி அவன் வராததால் காத்திருப்பு கோபமாக மாற வேகமாய் கீழ் இறங்கினாள்.


படியில் ஏதோ யோசனையுடன் வந்த சித்ராங்கதாவை பார்த்து ,"இவளுக்கும் இவ அண்ணனுக்கும் தான் மூளையே இல்லயே அப்றம் எதுக்கு யோசிக்கறா ??"என," சித்து...ஏ சித்து "என்று அவளை உலுக்கினாள் .


இவளது உலுக்கலில் நினைவு வந்த சித்ராங்கதா , "ஆங்... என்னடி ???எதுக்கு இப்போ என்ன குலுக்கி விளையாட்ற ??"என கேட்க,


அவளின் கேள்வியில் வெறியானவள் ,"அடியே பாவம் புள்ள பேய் அடிச்ச மாதிரி வருதேன்னு விசாரிக்க வந்தா ...குளுக்கி விளையாட்றேன்னா சொல்ற.!!!! என்னடி ஆச்சு உனக்கு??"


சித்ராங்கதா , "ஆங் ... ஒண்ணுமில்லடி . தலை வலிக்குது நான் போய் தூங்குறேன் ...நீ அம்மா கிட்ட எனக்கு சாப்பாடு வேணாம்னு சொல்லிடு ப்ளீஸ்" என வேகமாய் சொல்லியவள் தன் அறைக்கு சென்று விட்டாள்.


........................................................................................................................................................................................................................


டைனிங்ஹாலில் தன் தந்தையின் மடியில் இருந்த மித்ரேந்தரை தூக்கினான் ஜித்தேந்தர் . தனது நாணாவின் ஸ்பரிசத்தை கண்டுக்கொண்டு தூக்கத்திலே சிரித்த குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு குழந்தையின் துயில் கலையாவண்ணம் நெஞ்சோடு அணைத்தான்.


நாச்சியாரிடம் பசியில்லை என்றவன் அனைவரிடமும் ஒற்றை தலையசைப்புடன் விடைபெற்று தன் அறை சென்றான்.
இரவுஉணவு அமைதியாய் முடிய அனைவரும் உறங்குவதற்காக அவரவர் அறை சென்றனர் .


நடுஇரவு :


மாலையில் தூங்கியதால் தூக்கம் வராமல் விழித்திருந்தாள் மித்ராளினி . விஷ்வாவோ பக்கத்தில் இருந்தும் ஷாலினியிடம் பேசாததில் நித்ராதேவியை அணைக்க முடியாமல் அறையில் நடந்துகொண்டிருந்தான்.
ஜித்தேந்தரோ வழக்கம்போல் தன்னவளின் புகைப்படத்திடம் லயித்திருந்தான் .


மூன்று இதயங்களும் தூங்காமல் தவித்திருக்க அந்த விதியும் ஜித்தனிடம் விளையாட ஆசை கொண்டது போல் , சரியாய் மித்ரேந்தர் விழித்து அழ ஆரம்பித்தான் .


குழந்தை பசியில் அழுவதை கண்டுகொண்ட ஜித்தேந்தர் அவனை தூக்கியவாறு அறைவிட்டு வெளிவந்து படிகளில் இறங்க, அவனின் இதழ்களோ மகனின் அழுகையை குறைப்பதற்காக பாடலை இசைத்தன .


ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு....
பூமியே புதிதானதே இவன்
மழலையின் மொழி கேட்டு....
ஓ ....தாயாக தந்தை மாறும்
புதுக் காவியம்....
ஓ .....இவன்
வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிரோவியம்...
இரு உயிா் ஒன்று
சோ்ந்து இங்கு
ஓா் உயிா்
ஆகுதே ....
கருவறை இல்லை
என்ற போதும் சுமந்திடத்
தோணுதே ...விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே.....
ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு....
பூமியே புதிதானதே இவன்
மழலையின் மொழி கேட்டு....



இவனின் குரலை கேட்டு ஒரு நொடி அதிர்ந்த மித்ராளினி வேகவேகமாய் அறை விட்டு வெளி வர, அதே நேரம் தூக்கம் வராமல் இருந்த விஷ்வாவும் ஜித்தேந்தர் படிகளில் இறங்குவதை கண்டு தானும் இறங்கியவன் ,


"அண்ணா மித்துகுட்டிய குடுங்க ... நான் வச்சிக்கிறேன் "என்றான்.


"இந்த நேரத்தில் என்ன செய்ற!!"என்பது போல் பார்த்த ஜித்தேந்தர் ஒன்றும் பேசாமல் மித்ரேந்தரை குடுத்துவிட்டு கிட்சனுள் நுழைந்தான்.


அப்பொழுது அங்கு வந்த மித்ராளினி , குழந்தை விஷ்வாவின் கைகளில் இருப்பதை பார்த்து ,"இவரா இப்போ பாடினாரு ...ஆமா இவர் குழந்தை தான அப்போ இவர் தான் பாடிற்ப்பாரு...ஆனா அந்த குரல்" என குழம்பிய மனதுடன் அவனிடம் பேசாமலே தன் அறை சென்றாள்.


விதியதற்க்கு
விளையாட ஏதுமில்லையோ ??
கைகளில் இருக்கும் பொம்மலாட்டத்தின்
கயிறுகளை
அருகிலிழுத்தும்...
பிரித்தும் ...
விளையாடுகிறது !!




பூமி அழகியை ரசித்தது போதும் இனி அவள் என்பொறுப்பு என்று வான்மதிக்கு விடைக்கொடுத்து உதயமானன் கதிரவன்.


வழக்கம்போல் அதிகாலையிலயே எழுந்து பூஜை செய்து கொண்டிருந்த நாச்சியார் காலடிச்சத்தத்தில் திரும்பி பார்த்தார்.


மித்ரேந்தரை தூக்கி கொண்டு வந்துகொண்டிருந்தான் ஜித்தேந்தர் . வெளியே செல்வது போல் உடை அணிந்திருப்பவனை கண்டவர் கேள்வியாய் அவனை நோக்க ,


"மாம் ....!!! நான் மும்பை கிளம்பறேன் வர டூ டேய்ஸ் ஆகும் ...மித்துக்குட்டி ஆஹ் பார்த்துக்கோங்க அவன் எழுந்தப்பரும் எனக்கு வீடியோ கால் பண்ணுங்க, பாய் !!" என அவசரஅவசரமாக பேசிய ஜித்தேந்தர் அவர் கேள்விகேட்பதற்கு இடமளிக்காமலே சென்றுவிட்டான் .


நாச்சியாரோ , "ம்ம்க்கும்.....!!! ஒன்னு பேசவே மாட்டான்...தப்பித்தவறி பேசுனா மத்தவங்கள பேசவிடாம அவன் மட்டுமே பேசிட்டு போவான் " என புலம்ப ஆரம்பித்துவிட்டார் .


அந்த நேரத்தில் தடதட என மீண்டும் காலடி சத்தம் கேட்க , "அட என்ன இது?? இந்த வீட்ல என்னையும் கண்ணப்பாவையும் தவிர இந்நேரத்துக்கு வேற யாரும் எழுந்துக்க மாட்டார்களே !!!யாரு வரது" என்று ஆச்சரியமாய் திரும்பியவர் அங்கு சித்ராங்கதா வேகமாய் இறங்கி வருவதை கண்டு...


"ஏய் ...என்னடி அதிசயமா இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட.??"


தன் அன்னையின் கேள்வியில் முதலில் முழித்தவள் பின் , "மாம் ட்ரைனிங்க்கு மார்னிங் வர சொல்லிர்ந்தாங்க 'என்றாள்.


நாச்சியார் , "அதுக்குன்னு இவ்ளோ காலையிலயா டி ? மணி 5.30 தான் ஆகுது ".


சித்ராங்கதா , "மாம் ...!! ப்ளீஸ் டைம் ஆகுது. நான் வந்து உங்களுக்கு பதில் சொல்றேன் "என நகர்ந்தவள் பின் நின்று," மாம் ....!!!அப்பா வந்துட்டாரா ??" என கேட்க அதில் நாச்சியார் அவளை முறைக்க ,


"அடடா எதுக்கு இப்போ மாம் காளி மாதா மோட்க்கு மாறுறாங்க .. ஏதோ தப்பா கேட்டுட்டோம் போலயே....சித்து குட்டி எஸ் ஆகிடுடி செல்லம்" என மனதில் பேசியவள்,


"ஹீஹீ மாம்..!!! நான் அப்றம் அப்பாக்கு போன் பண்ணி பேசுறேன் . பாய் பாய் மாம் "என அவரின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிவிட்டாள் .


அவளின் செயலில் சிரித்தவர் மித்ரேந்தரை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு , விட்ட பூஜையை தொடர சென்றார் .


சிறிது நேரத்தில் அனைவரும் எழுந்து கொள்ள ஹாலிற்கு வந்த மித்ராளினி தொட்டிலில் இருந்த மித்ரேந்தரை தூக்கி மடியில் கிடத்தியவாறு சோபாவில் அமர்ந்துக்கொண்டாள் .அவளை பார்த்து புன்னகை சிந்திய ஷாலினி விஷ்வாவின் வரவை எதிர்பார்த்திருந்தாள்.


ருத்ரவர்தனோ மித்ராளினியை பார்த்து புன்னகைத்தவர் ஷாலினியிடம் , "பாப்பா அம்மா நம்பள சீக்கிரம் வர சொன்னாடா ..கிளம்பலாமா "என கேட்டார்.


அங்கு வந்த ரவி சக்கரவர்த்தி , "என்ன மாப்பிள்ளை!!! இப்போ தான எழுந்திங்க கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிட்டு போங்க "என சொல்ல...


ருத்ரவர்தானோ , "இல்ல மச்சான்...!!! உங்க தங்கச்சி காலையில இருந்து பத்து தடவைக்கு மேல போன் பண்ணிட்டா.நேத்தும் வீட்டுக்கு போலல ,பாப்பாவும் இங்கயே இருந்துட்டா அதான் ".


நாச்சியார் , "ஏங்க.. அண்ணா சொல்றது சரிதான்.... அண்ணியும் அங்க தனியா இருப்பாங்கள , நீங்க கிளம்புங்க அண்ணா சாயந்திரம் அண்ணியை கூட்டிட்டு வாங்க" என,


"சரிமா ...!!!நாங்க கிளம்பறோம்.. வரோம் மச்சான் " என்றவர் மித்ராளினியிடமும் ,"போயிட்டு வரோம்மா " என விடைபெற்றார் .


ஷாலினி விஷ்வாவிடம் பேசுவதற்காக வந்தவள் கடைசி வரை பேசாததில் வருத்தத்துடன் கிளம்பினாள்.



சிறிது நேரம் கழித்து ஹால்லிற்கு வந்த விஷ்வா அங்கிருந்த மித்ராளினியிடம் பேசிகொண்டே குழந்தையுடன் விளையாடினான். வேறு யாரும் தென்படாததில் "அம்மா.... " என்றழைத்தவன் ,' மா !!!! என்ன யாரையுமே காணோம் " என கேட்டான்.


நாச்சியார் ," சித்து குட்டியும் , கண்ணப்பாவும் ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சீக்கிரம் கிளம்பிட்டாங்க டா .உங்க மாமாவும் ,ஷாலினியும் இப்போ தான் அண்ணி போன் பண்ணாங்கன்னு போனாங்க" என பதிலளித்ததில்,


'அட இவளுக்கு என்கூட பேசணும்னு தோணவே இல்லையா , அதுக்குள்ள கிளம்பிட்டா " என்று யோசித்தபடி விஷ்வா அமைதியாய் இருக்க,


அவனை கண்டுகொள்ளாத நாச்சியார் ,தங்களின் பேச்சில் முழித்துக் கொண்டிருந்த மித்ராளினியிடம் , "நீ இன்னும் என் பெரிய பையனையும் , பொண்ணையும் பார்க்கலைலமா . அவங்க நேத்து நீ தூங்க போனப்பறம் தான் வந்தாங்க ...தோ இப்பவும் அவசர அவசரமா கிளம்பி போய்ட்டாங்க ".


இப்பொழுது இடையில் குறுக்கிட்ட விஷ்வா , "மா ....!!அந்த குரங்கு எதுக்கு இவ்ளோ சீக்கிரம் போயிருக்கு??" என கேட்க,


அவனின் மண்டையில் கொட்டி, "எப்பப்பாரு அவளை எதாவது சொல்லிட்டே இருப்பியாடா "என்றவர், மித்ராளினியிடம் "சித்து குட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாமா...கண்ணப்பா தான் வர ரெண்டு நாள் ஆகும் "என்றார்.


...........................................................................................................................................................


திருவல்லிக்கேணி போலீஸ் குவார்ட்டஸ் :


இன்று காலையில் மித்ராளினியை பார்க்க போகவேண்டுமென்று நினைத்து வெளியே செல்லாமல் குவார்ட்டஸை சுற்றி ஓடிக்கொண்டிருந்தான் ஜிஷ்ணு.


சிறிது நேரம் ஓடியவன் ,உடலில் வழியும் வியர்வையை தோளில் இருந்த துண்டினால் துடைத்தவாறு தன் வீட்டை நோக்கி நடந்தான்.


வீட்டீன் கதவு திறந்திருந்ததில் விழியில் ஆராய்ச்சியுடன் சுற்றி பார்த்தவன் ...கதவின் பின் வீட்டினுள் நடக்கும் ஓசை கேட்டு எப்பொழுதும் தன் பேண்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து கையில் வைத்துகொண்டு கதவை தட்டினான் .


காலடி சத்தம் கதவை நெருங்க துப்பாக்கியை இறுக்கி பிடித்தவன் கதவு திறந்த நொடி அதை எதிரிலிருப்பவரின் நெற்றியில் வைத்திருந்தான் .


"அய்யயோ ....!!! உன்ன லவ் பண்றது ஒரு குத்தமாய்யா. என்னை இப்படி போட்டு தள்ள பார்க்குற" என கத்தியது சாட்சாத் நம்ப சித்ராங்கதா தான்.


அவளை தன் வீட்டினுள் எதிர்பார்க்காத ஜிஷ்ணுவின் நினைவுகளோ இரண்டாம் முறையாய் அவளை கண்ட நொடிகளுக்கு பயணப்பட்டது.அவனின் உறைநிலையில் அவளின் மனமும் அவனுடன் ஜோடி சேர்ந்து அந்த நொடிகளுக்கு பயணபட்டது.


உணர்வலை:


அன்றொருநாள் கல்லூரிக்கு நேரமானதால் வழக்கமாய் போகும் வழியில் அல்லாமல் குறுக்கு வழியில் வேகமாய் சென்று கொண்டிருந்தவள் எதிரே ஒருவன் மற்றவனை அடிவெலுப்பதை பார்த்து தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வேகமாய் அங்கு சென்றாள் .


இவள் அருகில் சென்ற நேரம் அடித்துக்கொண்டிருந்தவன் சட்டென்று துப்பாக்கியை எடுத்து நீட்ட நடுவில் சென்ற இவளின் நெற்றியை உரசியது துப்பாக்கியின் முனை .


ஒரு நிமிடம் அதிர்ந்த சித்ராங்கதா எதிரே இருப்பவனை கண்டு விழிவிரித்தவள் , அதிர்ச்சி போய் அவனை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள் .( சைட் அடிக்க உனக்கு நேரம் காலமே இல்லையாமா).


அவள் முன் இத்தனை நேரம் சண்டையிட்டதில் வியர்வை வழிய நின்றிருந்தான் ஜிஷ்ணு ...தன்முன் நிற்பவளை ஒரே பார்வையிலே கண்டுகொண்டவன் கண்கள் மின்ன அவளின் கை பிடித்து தன் புறம் இழுத்து, அவளின் கண்களை பார்த்தவாரே எதிரே இருந்தவனின் நெஞ்சில் தோட்டாவை பாய்ச்சினான் .


தோட்டாவின் சத்தத்தில் கலைந்தவள் அவனின் முகத்தையே விழியெடுக்காமல் பார்க்க அவளின் அப்பார்வையில் அவனின் நெஞ்சில் மகிழ்ச்சி ரகசியமாய் ஊற்றெடுத்தது .


அதை கண்களில் காட்டா வண்ணம் அதற்க்கு கருப்பு நிற கண்ணாடியை அணிந்தவன் , கைகளால் பின்னந்தலையை கோதியவாறு அங்கிருந்து செல்ல அவனின் உதடுகளோ ரகசிய சிரிப்பில் வளைந்திருந்தன.


செல்லும் அவனை கண்ட சித்ராங்கதாவோ , "நம்ப ஆள் பார்க்க தான் பெசஞ்ச மாவு மாதிரி இருக்கான் ஆனா சரியான அதிரடி பார்ட்டி போல....ப்ப்ப்பா எப்படி அடிக்கிறான் !!!! போலீஸ்னா இப்படியா அடிப்பாங்க??? சரியான ரவுடி பேபி "என முணுமுணுத்தவாறு தன் ஸ்கூட்டியின் அருகில் சென்றாள்.


அதன் பின் அவனை அவளது கல்லூரியின் வாயிலில் அடிக்கடி பார்க்க நேரிட , "நம்ப ஆள சைட் அடிக்க நம்ப பிரண்ட் ஆஞ்சநேயர் உதவி பன்றாரு போலயே "என விளையாட்டாய் எண்ணியவளின் எண்ணத்தை தவிடு பொடியாக்க விதி காத்திருந்தது.


-கரைவாள்
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 15 :



அவர்களின் உணர்வலையில் மூழ்கியிருந்த ஜிஷ்ணுவும் , சித்ராங்கதாவும் குக்கரின் விசில் சத்தத்தில் கலைந்தனர் .


தன் உணர்வு தவிர்த்துமுகம் இறுகிய ஜிஷ்ணு , "இங்க என்ன பண்ற" என உருமினான்.


அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தவள் ,"டோஸ் பத்தலயே நைட் நீயும் சாப்பிடலயா ? சரி போ ...போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா, உடம்பெல்லாம் வியர்வையா இருக்கு பாரு" என சொல்லி அவனின் முறைப்பை கிடப்பில் போட்டவள் , தனது துப்பட்டாவினால் வியர்வையை துடைக்க அவனது கண்கள் பளிச்சிட்டன .


போலீஸ்காரனாய் அதை நொடியில் மறைத்தவன் ,"இங்க என்ன பண்ணறன்னு கேட்டேன் "என மீண்டுமாய் கடின குரலில்.


"ஷொப்ப்ப்பா .....!! போலீஸ்னா இப்டி தான் எதுபன்னாலும் விசாரணை கமிஷனை ஆரம்பிச்சிடுவாய்ங்க போல " என முனகியவள்...பேச்சில் மரியாதையை கொண்டு வந்து," ப்ளீஸ் போங்களேன் ....எனக்கு செம்மயா பசிக்குது நேத்தும் சாப்பிடல வேற" என சொல்லியவாரே அவனின் தோள் பற்றி அறை நோக்கி தள்ளினாள் .


அவனின் பயிற்சியில் உரமேரிய திண்ணிய தோள்களை அவளின் பூக்கரத்தினால் அசைக்கமுடியாதாயினும் தன்னவளுக்காக அவளின் கைகளுக்கு வாகாய் வளைந்து கொடுத்தவன் வெளியே அவளை முறைத்தவாறு அறையினுள் நுழைந்தான்.


குளித்து கிளம்பி வெளியே வந்தவனின் நாசியை தீண்டியது குருமாவின் மணம் . "அப்பாடி வாசனை நல்லா தான் இருக்கு.. டேய் ஜிஷ்ணு உன் தலையெழுத்து பரவால்ல போலேயேடா" என நினைத்துக்கொண்டவன் , சித்ராங்கதாவின் அரவம் உணர்ந்து இயல்பாய் இருந்த முகத்தை இறுக்கமாக்கினான் .


அவன் இறுகிய முகத்தை கண்டு முறைத்தவள் ," அது என்ன எப்பப்பாரு மூஞ்ச உர்ருனு வச்சிக்கிறது கொஞ்சம் சிரிச்சா சொத்தா போய்டும் மச்சான் "என கேட்க ,


"மச்சான்" என்னும் தன்னவளின் தனக்கான அழைப்பில் வழக்கம்போல் முகம் மலர அவளிடம் அதை மறைக்கும் பொருட்டு வேகமாக நகர்ந்து சென்றவன் அவள் சமைத்திருந்ததை தானே பரிமாறி உண்ண ஆரம்பித்திருந்தான் .


"ஐயோ மச்சான் !!!! அது எனக்கு வச்சது .உங்களுக்கு இதுல இருக்கு
...நீங்க காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்கள, அதான் காரம் அதிகமா போட்றதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சமா எடுத்து வச்சிட்டேன் " என்றவள் அதை நகர்த்திவிட்டு அவனுக்கு வேறொரு தட்டில் பரிமாறினாள் .


அவளின் இச்செயலில் , அவனின் வீட்டில் இயல்பாய் அவள் பொருந்திருந்ததில் அவன் தனக்குதானே போட்டிருந்த இறுக்க முகமூடி அவிழ, சிறிது சிறிதாய் அவளுடன் இயல்பாய் பேசியவன் ஒருகட்டத்தில் ,அவளது பேச்சில் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான் .


அவனின் சிரிப்பை பார்த்தவள் ஏதோ ஓர் நினைவில் , "நீங்க முன்னாடிலாம் இப்படி தான் வாய்விட்டு சிரிப்பீங்க....அதும் உங்களை பிடிச்சிருந்தும் உங்க அதிரடினால நெருங்காம இருந்த என்னை இந்த சிரிப்பு தான் மயக்கி தைரியமா காதலை சொல்லி உங்க பின்னாடியே சுத்தவச்சிது " என அந்நினைவுகளின் தாக்கத்தில் கண்களில் காதலுடன் சொன்னவள் அத்துடன் நிறுத்தி இருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ அடுத்து அவள் சொன்னதில் அவன் முகம் மீண்டும் இறுக்கத்தை தத்தெடுத்தது .


அவளின் நினைவு , காதலை சொல்லி அவனை பின்தொடர்ந்த தருணத்தில் மட்டும் நிக்காமல் அவனை பார்க்கமுடியாமல் போன கடந்த ஐந்து மாத தவிப்பில் ....


"ஆனா இந்த அஞ்சு மாசமா எங்க போனீங்கன்னு தவிச்சு , இப்போ இங்க நீங்க asp ஆஹ் ஜாய்ன் பண்ணது தெரிஞ்சு ஓடி வந்தா யாரோ ஒருத்தர பாக்குறமாதிரி போயிட்டு.... நேத்து முழுக்க என் கண்ணுல படாமா வேற இருந்திருக்கிங்க" என இந்த ஆறு மாத தவிப்பில் தன் மனதில் இருந்ததை அவனிடம் கொட்டி தீர்த்தாள்.


அவனோ ,அவள் பேச ஆரம்பிக்கும் பொழுது அமைதியாய் இருந்தாலும் மனதில் ரகசியமாய் அவளின் பேச்சை சேகரித்தான். அவள் சொன்ன ஆறுமாத கணக்கில் கலைந்து ...தான் தொலைத்த தன் உயிரை தேடி, பெற்றோரிடமும் , உறவினரிடமும் பொய்யுரைத்து சென்றதையும் ...,இயலாமையில் ஐந்து மாதங்களின் ஒவ்வொருநாளும் வெறுப்பாய் கழித்து, தன் உயிர் இங்கிருப்பதை அறிந்து மீண்டும் வந்ததையும் நினைத்து ஜிஷ்ணுவின் உடல் தானாய் இறுகியது .


அவனின் இறுக்கத்தை கண்டு , "அடியே !!! இந்த விஷ்வா சொல்றமாதிரி உனக்கு அறிவே இல்ல ...இப்படியா சொதப்புவ , எதாவது சொல்லி அவனை மாத்துடி " என சித்ராங்கதாவின் மனசாட்சி காறி துப்பியதில் , அதை "ஹீஹீ "என சிரித்து பயமுறுத்தி அனுப்பினாள்.


பின் ஏதோ யோசித்து கண்கள் பளிச்சிட ..".ம்ம்க்கும் "என கனைத்தவள் அவன் தன்னை கவனிப்பதை உணர்ந்து ...


சாப்பிட்ட தட்டுகளை எடுத்து சென்று கழுவினாள்.


அங்கிருந்து ,



" உன் சமையல் அறையில் நான் உப்பா ? சக்கரையா ? "


என பாட , ஜிஷ்ணுவோ சிறி்தும் யோசிக்காமல் ..."ஹான் சட்டி பானை" என்றிருந்தான் .


அவனின் பதிலில் ஒருநொடி அதிர்ந்தவள் அவனை திரும்பிப்பார்க்க , அவனின் முகமோ வெறுமையாய் இருந்தது .


குழப்பத்துடன் மீண்டும் பார்த்தவள் பார்வையில் சிக்கியது அவனின் கண்களில் இருந்த குறும்பு .


அதில் தடுமாறியவள் விரைவாக அங்கிருந்து கிளம்ப இப்பொழுது பாடுவது அவன் முறையாகியபோது அவள் நினைவு பின் நோக்கி சென்றது.


ஒருநாள் வழக்கம் போல் ஜிஷ்ணுவை கல்லூரியின் வாயிலில் பார்த்து ரசித்து கொண்டிருக்க , அருகில் இருந்த பெண் தன் போனில் இப்பாடலை ஒலிக்கவிட்டு அதனுடன் தானும் பாடியவாறு ஜிஷ்ணுவை பார்த்துக்கொண்டிருந்ததை கண்டவள் , "ஹான் சட்டி பானை" என கோபத்துடன் சொல்லி அப்பெண்ணுடன் ஒரு யுத்தமே புரிந்திருந்தாள்.


ஆனால் அன்று ஜிஷ்ணு தொலைவில் இருந்திருக்க எவ்வாறு அவனுக்கு தெரிந்தது என்ற குழப்பத்தில் இன்று இருக்க அவனின் பாடலில் முறைத்தவள் , இத்தனை நேரம் கடைப்பிடித்து வந்த மரியாதையை காற்றில் பறக்க , "போடா என் மைதாமாவு மச்சான்" என கத்தி கொண்டே ஓடி விட்டாள்.


அந்நாள் நினைவில் புன்னகைத்த ஜிஷ்ணுவின் உதடுகள் நாள் முழுக்க அதை தக்கவைத்திருந்தது .


------------------------------------------


சித்ராங்கதா ஜிஷ்ணுவை பார்த்த சந்தோஷத்துடன் மீண்டும் வீட்டிற்கு செல்ல , விஷ்வேந்தரோ ஷாலினியை பார்ப்பதற்காய் அவளின் வீட்டிற்கு தனது டுகாட்டியில் பறந்து வந்திருந்தான் .



"நம்ப ஆள பார்க்கனும்ன்னு அவசரபட்டு மண்டையில இருக்குற கொண்டையை மறந்த மாதிரி வந்துட்டோம் ....இப்போ மாமா அத்தை கேட்டா என்ன சொல்றது ??" என யோசித்துகொண்டே வந்தவனை சோதிப்பது போலவே,.


"அட ,என்ன மாப்பிள்ளை காலைல தான அங்க இருந்து வந்தோம் "என கேட்டவாறு வந்தார் ருத்ரவர்தன் .


"என்ன சொல்வது??" என முழித்தவன் அங்கு வந்த சாவித்திரியை பார்த்து , "ஆங் ...அது ...மாமா... அத்தைக்கு இந்த மாசம் பிபி செக் பண்ணவே இல்லயே அதான் வந்தேன் "என சமாளித்தவன் தப்பிச்சோம் என்பது போல் மனதில் பெருமூச்சு விட்டான்.


விட்ட மூச்சை திரும்ப உள்ளிழுக்கவைப்பதுபோல் சாவித்திரி , "சின்ன மருமகனே.. எனக்கு எப்போ பிபி வந்திச்சி??!!" என கேட்டார் .


"இந்த அத்த வேற தப்பான நேரத்துல சரியா கேள்விகேட்ருவாங்க " என மனதில் புலம்பியவன் வெளியே,"ஹீஹீ ...அப்பா தான் அத்த எல்லோருக்கும் செக் பண்ணிட சொன்னாரு" என ரவிச்சக்கரவர்தியை ஊடே இழுத்து விட்டான்.


தனது அண்ணன் சொன்னார் என்பதில் அவர் அமைதியாகிவிட , அவர்கள் இருவரையும் பரிசோதித்தவன் ஷாலினியை கேட்க .


அவனின் கள்ளத்தனத்தை அறிந்த சாவித்திரி, "இப்போதான என் சின்ன மருமகனோட பாசம் புரியுது .போப்பா போ ...மேல ரூம்ல தான் பாப்பா இருக்குறா "என்று சிரித்தார்.


அவரின் சிரிப்பிலே அவர் கண்டுகொண்டார் என அறிந்தவன் அசடுவழிய மேலே செல்ல , ருத்ரவர்தனோ யோசனையாய் அவனை பார்த்தார் .


ஷாலினி அறை கதவை தாழிடாததில் சுலபமாய் உள்நுழைந்த விஷ்வா அறைக்கதைவை தாழிட்டிருந்தான் .


சத்தத்தில் கண்ணாடி முன்பிருந்து திரும்பிய ஷாலினி அங்கு விஷ்வாவை எதிர்பார்க்காததில் உறைந்து நிற்க , அவனோ அவளை கண்களில் காதல் வழிய பார்த்திருந்தான் .


சிகப்பு வண்ண அனார்கலி சுடிதாரில் தேவதையாய் இருந்தவளை கண்ட விஷ்வாவின் பார்வை மாறத்துவங்க அதில் உணர்வு வந்தவளோ அவனை கண்டதில் அணைக்க துடிக்கும் மனதை தடுக்க திரும்பி நின்றாள்.


அவளின் அச்செயலில் தன் தலையை உலுக்கிகொண்டவன் மனதில் நினைப்பதாய் எண்ணி வெளியில் , "டேய் விஷ்வா !!! ஏற்கனவே சும்மா கிட்டப்போனதுக்காக பேசாம சாவடிச்சா .திரும்ப எதுனா பண்ணிவைக்கத்தடா "என புலம்பினான் .


அவனுடன் பேசாமல் வந்திருந்தாலும் அதில் கோபம் கொள்ளாமல் தன்னை தேடி அவன் தன் அறை வந்ததில் நெகிழ்ந்திருந்தவள் அவனின் இப்பேச்சில் கோபத்துடன் பற்களை கடித்து ,


"சரியான மாங்கா...நான் எதுக்கு கோபப்பட்டேனு கூட கேட்க்காம இவனா எனக்கு அது பிடிக்கலைனு நினைக்கறான் ...மாங்கா மாங்கா...!!" என பதிலுக்கு புலம்பினாள் .


உண்மையில் ஒரு வருடத்தின் பின்பான அவனது அன்றைய நெருக்கத்தில் அவளின் மனம் துள்ளியதை எப்படி அவனிடம் சொல்வாள்.


அவளின் புலம்பலில் , அவள் தன்மேல் இன்னும் கோபத்துடன் இருப்பதாய் எண்ணி ஒருஅடி பின்வைத்தவன் ...பின் அவள் சொல்லியதை உணர்ந்து வியந்து பார்த்தான் .


அவளின் குரல் திட்டுவது போல் இருந்தாலும் அதில் இழையோடிய ஏக்கத்தை அறிந்தவனின் கண்களில் அவளின் ஏக்கம் போக்கும் வேட்க்கை தென்பட மெல்ல மெல்ல அவளை நோக்கி சென்றான் .


கண்ணாடி முன்பு நின்றிருந்தவள் அவன் வருவதை கண்டு வளையல்களை பார்ப்பதுபோல் தலைகுனிந்து வளையலை எடுக்க , அவளின் பின் மிக நெருக்கமாய் நின்றவன் அவளின் கைகளை அழுத்தமாய் பற்றி வளையல்களை தன் கரங்களில் வாங்கினான் .


பின்பு ஒவ்வொரு வளையலாய் அவளின் பின் நின்றவாறு கைகளை முன்கொண்டுவந்து அணிவித்ததில், அவளின் பின் உடல் மொத்தமும் அவன் உடலுடன் உரச அவளின் மேனியோ உணர்வின் பிடியில் நடுங்க ஆரம்பித்தது .


வளையல்களை நிதானமாய் அணிவித்தவன் அடுத்திருந்த சிவப்பு ஜிமிக்கியை எடுத்தான்.


அவளோ வேண்டாம் என்று அவன் கை பிடித்து தடுக்க அது அவனின் ஒற்றை "ப்ளீஸ் " என்னும் வார்த்தையில் அவளின் உதட்டோடு கரைந்து போனது .


ஜிமிக்கியை எடுத்தவன் முதலில் அதை இதழில் அழுத்தி முத்தமிட்டு, அவளின் காதுகளில் அணிவித்து மீண்டும் அழுத்தமாய் அவளின் காதுமடல்களையும் சேர்த்தவாறு முத்தமிட்டான் . அதில் அவனின் மீசை முடிகள் அவளின் கழுத்தோரம் உரச அவளோ வேறொருவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள் .


கரடியாய் விஷ்வாவின் போன் அடிக்க ,திரையில் " ஏஞ்சல் "என்று ஒளிர்ந்தது.


அதில் உணர்வின் பிடியில் இருந்து வெளிவந்த இருவரும் ஒருவர் முகம் பார்க்க மற்றவர் இயலாமல் முகமம் சிவக்க நின்றனர் .


அறைக்கு வந்து நீண்ட நேரம் ஆகியதில் விஷ்வா , "இதுக்குமேல இருந்தா தாங்காது " என்றெண்ணியவன்.."யே குட்டச்சி...!!! என்னடி அமைதியா நிக்குற....!!!??? நான் நம்ப எப்பவும் சந்திக்கிற அந்த காபி ஷாப்ல நிக்குறேன் வந்துரு " என்றவாறு வேகமாய் அறை விட்டு சென்றிருந்தான் .


பிரிவின் பின் கிடைத்த தனிமையின் சுகத்தில் இருவரும் தத்தளித்திருந்ததில் , அவளின் கோபத்திற்கான காரணம் மறக்க பட்டிருந்தது . ஒருவேளை அவள் இன்றே அவனிடம் இதை பற்றி பேசியிருந்தால் ,பின் நேர போகும் பிரிவை தடுத்திருந்திருக்கலாமோ ???


*******************************


மும்பை வந்திறங்கிய ஜித்தேந்தர் முன்பொருமுறை தனது ராணிமாவுடன் வந்தபொழுது சென்ற இடங்களுக்கெல்லாம் சென்றவன் அன்று தன்னவளுடன் இருந்த பொழுதுகளை பற்றி எண்ணியவாரு சுற்றிக்கொண்டிருந்தான் .


இங்கிருக்கும் நாட்களில் உபயோகிப்பதற்க்காக எடுத்திருந்த காரில் சுற்றி வந்தவன் , அங்கிருந்த ஒரு காட்டினை பார்த்து வண்டியை நிறுத்தி, அதை பார்த்தவாரே அமர்ந்திருக்க அவனின் நினைவுகளோ வழக்கம்போல் தன்னவளை நோக்கி ஓடி அவளுடன் அன்று இங்கு வந்திருந்ததை பற்றி நினைத்தது .


நினைவலை :


அன்று புதிதாய் பார்த்த படத்தின் தாக்கத்தில் அமைதியாய் இவ்வழியில் வந்துகொண்டிருந்தனர் ஜித்தேந்தரும் , அவனின் ராணிமாவும் .


அவளின் முகம் சோகத்தில் மூழ்கிருப்பதை பார்த்த ஜித்தேந்தர் , அவளின் கைகளை அழுத்தி அவளின் நடையை நிறுத்தியவன் குரலில் காதல் இழையோட ," என்னோட ராணிமா முகம் ஏன் வாடி இருக்கு "என அவளின் கன்னத்தை பற்றியவாறு கேட்க ,


அவனது காதலில் கண்களில் கண்ணீர் துளிர்க்க , "பாவா ....வா.....நம்ப இன்னிக்கு பார்த்த படத்துல அந்த பொண்ணு அவளை காதலிச்சவனயே மறந்து போன மாதிரி நானும் மறந்துட்டா என்ன விட்டுட்டு போய்டுவீங்களா "என உதடுகள் அழுகையில் வெடிக்க கேட்டிருந்தாள் .


அவள் கேட்ட அடுத்த நொடி அவளை விட்டு விலகி, அவளின் கண்ணீரை பார்க்க முடியாமல் தன் கரம் கொண்டு துடைத்தவன் வேகவேகமாய் அக்காட்டினுள் சென்று அங்கு மேடாய் இருந்த பகுதியில் இருந்து கீழே குதித்திருந்தான் .


அவனின் செயலில் பதறியவள் ,"பாவாஆஆ" என தானும் கத்தியவாறு குதிக்க.. அவளின் அச்செயலை அறிந்தவன் போல் அங்கிருந்த கிளையை பற்றியவாறு இருந்தவன் அவளை தன்னுடன் அனைத்து பிடித்தவாறு இறங்கினான் .


அவன் அணைப்பில் சிறிது சிறிதாக அதிர்ச்சியில் இருந்து விலகியவள் "பாவா !!" என விம்மலாய் அழைக்க ..அவளின் கண்ணீரில் தன் நெஞ்சம் கனப்பதை உணர்ந்தவன் ," இன்னும் ஒரு துளி கண்ணீர் உன் கண்ணுல இருந்து வெளிய வந்தாலும் நான் செத்துட்டேன்னு அர்த்தம் ராணிமா" என்றபதி பத்திரமாய் அவளை இறக்கி தானும் சரியாய் நின்றான் .


அவனின் குரலில் தெரிந்த அழுத்தத்தில் வாயை கைகளால் இறுக்கி மூடியவள் , கண்களை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்தாள் .


அவளின் முயற்சியை புரிந்து அவளை இழுத்து இறுக்கமாய் அனைத்து கொண்டவனின் உதடுகளோ , "நீ எப்படி டி அப்படி கேக்கலாம் ..நீ என்னை மறப்பியா??? அப்படி ஒரு நிலை வந்தா நான் நிச்சயம் உன் முன்னாடி வர மாட்டேண்டி " என,


அவளின் தலையை தன் மார்பிலிருந்து தூக்கி அவளின் கண்களை பார்த்தவன் , "இந்த கண்கள் என்ன காதலா ,ஆசையா பார்க்குறத தான் டி நான் பார்த்திருக்கேன். இந்த கண்கள் என்னை யாருனு தெரியாம அறிமுகமில்லாத பார்வையை பார்க்குறத பார்த்தா நான் செத்துருவேன் டி...நீ இப்படி கேட்டதே உயிர் போகிற மாதிரி வலிக்குது மா" என புலம்பியவன் அவளின் இமைகளின் மேல் அழுத்தமாய் முத்தமிட்டான் .


அவனிற்கு இசைந்து நின்றவளின் மனமோ," நீங்க இல்லாத உலகத்துல நான் மட்டும் எப்படி இருப்பேன் பாவா ...ஆனா என் உள்மனசு , ஏதோ ஆகப்போகுது நான் உங்கள விட்டு பிரியப்போறேன்னு ஓயாம எச்சரிக்குதே " என தவிக்க, அவனிடம் எதையும்சொல்லி அவனையும் தவிப்பில் ஆழ்த்தவிரும்பாமல் அமைதியாய் இருந்ததால் அவளின் மனம் நினைத்தது அவனுக்கு தெரியாமலே போனது .


ஒருவேளை அன்று அவள் சொல்லிருந்தால் தன் கண்ணின் இமை போல் ஜித்தேந்தர் அவளை காத்திருந்திருப்பானோ .


காரில் அமர்ந்தவாறு தங்களின் நினைவில் முழ்கிருந்தவன் , காரில் இருந்த எப்எம்யை ஒட விட...


அதே நேரம் , யாஹ்வியில்...


மித்ராளினி மற்றும் மித்ரேந்தருடன் இருந்த நாச்சியார் தனது வழக்கமாய் ரேடியோவைபோட்டு விட ...


ஒரே நேரத்தில் ஜித்தேந்தர் , மித்ராளினியின் காதில் நுழைந்த பாட்டு ஜித்தேந்தரின் மனநிலையை எடுத்துரைப்பது போல் அமைந்ததில் அவனின் கண்கள் கண்ணீரை சுரக்க ,


என்ன காரணம் என்றே அறியாமல் அப்பாடலில் கரைந்த மித்ராளினியின் மனமோ கனத்து கண்கள் கலங்கியது .


பூங்காற்றிலே உன்
சுவாசத்தை தனியாக தேடி
பார்த்தேன் .....
கடல் மேல் ஒரு
துளி வீழ்ந்ததே அதைத் தேடி
தேடி பார்த்தேன்..... உயிரின் துளி
காயும் முன்னே.....
என் விழி உனை
காணும் கண்ணே ...
என் ஜீவன் ஓயும்
முன்னே ஓடோடி வா.....
கண்ணில் ஒரு
வலி இருந்தால் கனவுகள்
வருவதில்லை...
காற்றின் அலை
வரிசை கேட்கின்றதா...
கேட்கும் பாட்டில் ஒரு
உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு
நனைகின்றதா ....இதயம்
கருகும் ஒரு வாசம்
வருகிறதா... காற்றில்
கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை
ஊற்றி
வானம் எங்கும்
உன் பிம்பம் ஆனால்
கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன்
வாசம் வெறும் வாசம்
வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு
கிள்ளி என்னைச் செந்தீயில்
தள்ளி எங்கே சென்றாயோ
கள்ளி ஓயும் ஜீவன் ஓடும்
முன்னே ஓடோடி வா





-கரைவாள்
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
ஹாய் டியர்ஸ் , சில தனிப்பட்ட காரணங்களால் " நினைவில் தத்தளிக்கும் நேசமது " நாவலின் அத்தியாயங்கள் தர இயலவில்லை . கூடிய சீக்கிரமே பாவா- ராணிமா வ கூட்டிட்டு வர முயற்சி செய்றேன் டியர்ஸ் . தாமதிக்கிறதிற்கு மன்னிச்சு 🙏🙏
 

Thoshi

You are more powerful than you know😊❤
ஹாய் ஹாய் டியர்ஸ் ...ரொம்ப ரொம்ப லேட்டா வந்துட்டேன் எல்லா அக்கா தங்கச்சிங்க அண்ட் அம்மாஸ் எல்லோரும் மன்னிச்சுடுங்க . சிலபல தொடர்வேலை கொடுக்கணும்னு நினைச்சிருந்தா குடுத்துருக்கலாம் ஆனா இது என்னோட முதல் படைப்பு ரொம்பவே ஆசைஆசையா எழுத தொடங்கியது . அத ஏனோதானோனு எழுத எனக்கு பிடிக்கல அதான் இந்த கேப் . நிச்சயம் இனிமே இப்படி தாமதம் ஆகாதுன்னு தான் நினைக்குறேன் .
ரொம்ப லேட்டா வந்துருக்கேன் உங்க ஆதரவுலாம் எனக்கு திரும்ப கிடைக்குமான்னு தெரியலயே . இந்த பச்சபிள்ளையை மன்னிச்சு லைக் அண்ட் கமண்ட்ஸ் போட்டு எனக்கு பூஸ்ட் ஏத்துங்க டியர்ஸ்....😍😍😍😍
 

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 16 :



விஷ்வேந்தர் ஏற்படுத்திச் சென்ற மாயத்திலிருந்து விடுபட விரும்பாத ஷாலினி , அவன் காத்திருப்பதாய் சொன்னதில் சற்று தெளிந்து பரபரப்புடன் கிளம்பினாள் .


கீழே ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ருத்திரவர்தனும் , சாவித்திரியும் ஷாலினியின் வருகையில் களைந்து ... தன்னவனின் மாயலோகத்தில் லயித்திருந்த தாக்கத்தில் முகம் மலர்ந்து விகசிக்க, துள்ளிக்கொண்டு வந்த மகளின் அழகை வழக்கம்போல் ரசித்து பார்த்தனர் .


சிரித்துக் கொண்டே வந்த ஷாலினி , ருத்ரவர்தன் அமர்ந்திருந்ததில் அவரின் முதுகுப்புறமாய் சென்று கழுத்தில் கைகள் கோர்த்து தொங்கிகொண்டே அருகில் அமர்ந்திருந்த அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டாள் .


குழந்தையின் சிரிப்பில் சந்தோஷிக்கும் பெற்றோராய் இருவரின் முகமும் பிரகாசித்தது .


மகளின் கன்னத்தை ஆதுரமாய் தடவியபடி ,"என்ன இன்னிக்கு பட்டுகுட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க ...."என கேட்டார் சாவித்திரி.


"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா" என அன்னையை பார்த்து சொன்னவள் , "டாடி வர வர மம்மியோட அழகு கூடிட்டே போகுதே அதோட ரகசியம் என்னவா இருக்கும்?" என தந்தையை கூட்டுசேர்த்து யோசிப்பது போல் நடித்தாள்.


"ஆஹான் ...ஏங்க நம்ப பொண்ணோட முகம் கூட இன்னிக்கு அழகாஇருக்குல்ல !!!அந்த மாயத்தை செஞ்சது யாரா இருக்கும்!!???" என அப்பாவியாய் கேட்டவரின் கண்கள் குறும்பாய் சிரிக்க நான் உனக்கு அம்மா டி என சொல்லாமல் சொன்னார் சாவித்திரி .


"அடடா நம்ப இவங்கள ஓட்டலாம் பார்த்தா இவங்க நம்ப கதைய கிழிச்சி தொங்கவிட்ருவாங்க போலயே ...எஸ் ஆகிட்றி ஷாலினி" என்ற மனசாட்சியை பார்த்து ," இந்த விஷ்வாவ நினைச்சிட்டே இருக்கறதுனால நீ கூட அவனை மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சிட்ட செல்லம்" என புகழ்ந்தவள் வெளியே ,


"ஹீஹீ...!!! டாட் அது எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் போய்ட்டு வந்துர்றேன்"என வெற்றிகரமாய் பின்வாங்கியவள் ,


மீண்டும் ஒரு முத்தத்தை அன்னையின் கன்னத்தில் கொடுத்துவிட்டு தந்தையை பார்த்து "டாட் இப்போ உங்க டர்ன் ...நான் இப்போ கிளப்பிடுவேன் யூ என்ஜாய் "என கண்ணடித்துவிட்டு சென்றாள்.


"அடிங்...!!!இவ யாரை பார்க்க இப்படி குதிச்சிட்டு போறான்னு எனக்கு தெரியாதாக்கும் . இதுல நம்பள கிண்டல் பண்ணிட்டு போறதை பாருங்க" என சிரிப்பாய் அலுத்துக்கொண்டார் சாவித்திரி .


மனைவியின் சிரிப்பை கண்டவர் , அவர் பேசியதில் யோசனையுடன் "சாவித்திரி ....."என இழுத்தார் .


"ஏங்க ...!! விச்சு கண்ணா நம்ம வீட்டுக்கு மருமகனா இல்ல மகனாகவே இருப்பாங்க. அவனோட சின்ன வயசுல இருந்து அவனை பார்க்கிறேன் ...அண்ணிகிட்ட அவன் இருந்தத விட அத்த அத்தனு என் முந்தானைய பிடிச்சிட்டு திரிஞ்சது தான் அதிகம்.காலையில அவன் கீழ வந்தப்போ அவன பார்த்திங்களா .புள்ளையோட கண்ணுலயே அம்புட்டு காதல் இருந்திச்சி. நம்ப பொண்ணு மட்டும் என்ன ? மூணு நாளா ஏதோ பறிகொடுத்த மாதிரியே திரிஞ்சவ அவனை பார்த்ததும் எப்படி சந்தோஷமா போறா பார்த்தீங்களா??!!!!" என நீளமாய் தன் அண்ணன் மகனின் காதலிற்க்காய் பேசினார் சாவித்திரி.


( டேய் விஷ்வா , இன்னுமாடா இந்த உலகம் உன்னைய நம்புது . ஐயகோ !!!! ) .


ருத்திரவர்த்தன் எதுவும் சொல்லாமல் எழுந்து செல்ல , "நான் இவ்வளவு நேரமா மூச்சுப்பிடிக்க பேசிற்க்கேன் . நீங்க என்னனா அமைதியா எழுந்துபோறீங்க .ஏங்க நம்ப புள்ளைங்க மனச நம்மளே புரிஞ்சிக்கலனா எப்படிங்க . அவனுக்கு என்னங்க குறை .நம்ப விஷ்வாவ , ஷாலினிக்காக அண்ணன்கிட்ட பேசலாம்ங்க "என தொடர,


திரும்பி மனைவியை பார்த்தவர் , "சாவித்ரி இனிமே இப்படிலாம் பேசாத" என கடுமையாய் சொல்லியதில்,


முகம் சோர்ந்து நினற மனைவியை கண்டு ," ம்க்கும் " என செறுமிய ருத்திரவர்த்தன் , "ஏண்டி !!! வீட்டு மாப்பிள்ளைய யாரவது அவன் இவனு சொல்வாங்களா ??"" என்றவரின் உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தது .


கணவரின் மறைமுக சம்மதத்தில் மகிழ்ந்தவர் அதை மறைத்து , "ஆங்!!!! முதல்ல அவன் என் அண்ணன் புள்ள அப்புறம் தான் இந்த வீட்டு மாப்பிள்ளை , ஞாபகம் இருக்கட்டும்" என்று நொடித்தவரின் முகம் சந்தோஷத்தில் குளித்திருந்தது.


(அதான ...என்னிக்கு இந்த பொண்டாட்டிங்க புருஷன் பேச்சை கேட்டு இருக்காங்க ...
அட எந்த அக்கா அங்க விளக்கமாத்த தூக்குது தெரிலயே. ஐய்யயோ நான் எதுவும் ஜொல்லலைங்கோ அக்காவ்வ்வ் ).




****************************************************


யாஹ்வி :


ஜிஷ்ணுவை பார்த்த சந்தோஷத்துடன் அதுவும் அவனின் அந்த மயக்கும் சிரிப்பை பார்த்த பின்பு அவளின் சோகம் போய் விழிகளில் பழைய குறும்புத்தனம் மின்ன வீட்டினுள் நுழைந்தாள் சித்ராங்கதா.


"அம்ம்ம்ம்மாமாமா!!!" என கத்தி கொண்டே வந்த சித்ராங்கதா , ஹாலில் மித்ரேந்தருடன் அமர்ந்திருந்த மித்ராளினியை பார்த்து அமைதியாகி விழித்துக்கொண்டு நின்றாள்.


துறுதுறுவென நிற்க்கமால் ஓடியாடி தனது கேள்விகளால் மற்றவரை விழிப்பிதுங்க வைக்கும் குழந்தை வெளியாளை பார்த்து வாயை இறுக்க மூடி திருதிருவென விழிப்பதை போல் நின்றிருந்தவளை கண்ட மித்ராளினியின் இதழ்களில் புன்னகை அழையா விருந்தாளியாய் வந்தமர்ந்தது .


மகளின் குரலில் ஹாலிற்கு வந்த நாச்சியார் , அவள் மித்ராளினியை பார்த்து விழிப்பதை கண்டு ,


"என்னடி முழிச்சிகிட்டு நிக்கிற ??? வீட்டுக்கு ஒருத்தங்க வராங்கன்னு சொன்னா அவங்கள வந்து பார்த்து ,எப்படி இருக்காங்க... என்ன ஏதுன்னு விசாரிக்கிற பழக்கம்லா இல்லையோ . இந்த லட்சணத்துல நீ எல்லாம் என்னத்த காலேஜ் போய் படிக்கிற" என நேற்று அவள் மித்ராளினியை பார்க்காமல் , சாப்பிடக்கூட வராமல் இருந்ததில் கோபமாய் இருந்தவர் தற்போது பொறிந்து தள்ளிவிட்டார்.


( ஏன்னுங்கம்மா ...நேத்து சித்து குட்டி மட்டுமா பார்க்கவரல. முக்கியமா பார்க்க வேண்டியவனே முக்காட போட்டுக்கிட்டு வேற ஊர்ல தேடிட்டு திரியுறான் . நீங்க இந்த புள்ளைய திட்டிட்டு இருக்கீங்க ).


"மா ...அது வந்து ...!!" என்ன சொல்வதென்று தெரியாமல் இழுத்தாள் சித்த்ரங்கதா .


அவளுக்கும் முந்தைய தினம் விஷ்வா , என் ஏஞ்சலை கூட்டிகொண்டுவரப்போவதாய் சொல்லி இருந்தான் . ஜிஷ்ணுவை பற்றிய நினைவில் இதை மறந்ததை நினைத்து அவளுக்கு சிறிது குற்றவுணர்வாகியது .


நாச்சியாரோ , "என்னடி இழுத்துட்டு இருக்க?!? காலையில இப்படித்தான் என்ன,ஏதுனு ஒழுங்கா சொல்லாம ஓடிட்ட. ஆமா ஏதோ ட்ரைனிங்ன்னு போன இப்போ வந்து நிக்குற ??"/என்று தொடர்ந்து கேள்வியாய் கேட்க, சித்ராங்கதா பதில் சொல்ல முடியாமல் திருதிருத்தாள்.


( எம்மா.... நாச்சியாரம்மா... ஒவ்வொரு பாலா போடுங்கம்மா . ஒருபாஐ் அடிக்கறதுக்கு முன்னாடி அடுத்தது போட்டா எப்படி??. குழந்தை தினறுதுல...).


இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மித்ராளினிக்கு தன் அம்மா எப்படிஇருப்பார்களோ என்ற ஏக்கம் தோன்ற , அப்பொழுதுதான் தான் விழித்த இத்தனை நாட்களில் தன் குடும்பத்தை பற்றி எண்ணாதது நினைவிற்கு வந்தது.


"ச்சே...!!!என்ன இது நம்ப குடும்பத்த பத்தி கூட யோசிக்காம இருந்துருக்கோம் . ஆனா அந்த குரலை பத்தி ஒரு நிமிஷம் கூட நினைக்காம இருந்ததில்லையே. அந்த குரல் அந்த அளவிற்க்கா என்னை ஆட்டிப்படைக்குது " என தனக்குள் திட்டிகொண்டவள் அடுத்தமுறை ஜிஷ்ணுவிடம் குடும்பத்த பத்தி கேட்க வேண்டும் என மனதில் குறித்துக்கொண்டாள்.



சித்ராங்கதாவோ மனதினுள், "ஆத்தாடி !!! என்ன இன்னிக்கு நம்ப அம்மா இந்த வாங்கு வாங்குறாங்க .இந்த விச்சு எரும இருந்தாவாச்சி அவனை உள்ளே இழுத்துவிட்டுட்டு நம்ப எஸ் ஆகிற்கிலாம் இப்போ என்ன பண்றது ??!!! ஆஞ்சநேயா எங்க அம்மா கிட்ட இருந்து என்னை காப்பாத்துப்பா , உனக்கு வெண்ணை வாங்கி தரேன் . உனக்கு பாதி எனக்கு பாதி சரியா!!" என மனதில் டீல் பேசிக் கொண்டிருந்தாள்.


இன்னும் விட்டா இவ நம்பளுக்கு வர எல்லாத்தையும் ஆட்டைய போட்டாலும் போட்றுவா என யோசித்த ஆஞ்சநேயரும் அவளிடமிருந்து தப்பிக்க, ரவிச்சக்ரவர்த்தியை அங்கு அனுப்பி வைத்தார்.


ஹாலிற்கு வந்த ரவிசக்கரவர்த்தி , "என்ன நாச்சி...??!! இவ்வளவு நேரம் மூச்சை பிடிச்சிட்டு புள்ளையை திட்டுறதுக்கு நீயே ஏஞ்சல அறிமுகபடுத்தி இருக்கலாம்ல" என மடக்கியவர் , மகளிடம் திரும்பி "ஆனாலும் உங்க அம்மாக்கு கொஞ்சமே கொஞ்சம் மூளை கம்மிதான் குட்டி "என கண்ணடித்தார் .


நாச்சியார் ஏதோ சொல்லவர அதற்குள் குறுக்கிட்ட சித்ராங்கதா ,"உங்களுக்கும் ஏஞ்சலா ???"என கேட்டு பேச்சை மாற்றினாள்.


"ஹாஹா "என சிரித்த ரவிச்சக்கரவர்த்தி , சித்ராங்கதாவை மித்ராளினியின் முன் நிறுத்தி..."நீயே பார்த்து சொல்லு இந்த பொண்ணு ஏஞ்சல் மாதிரி தான இருக்கா??" என கேட்டவர் , மித்ராளினியிடம் , "இவ தான்மா இந்த வீட்டோட செல்ல குட்டிஇளவரசி "என அறிமுகப்படுத்தினார் .


தன்னை பார்த்து புன்னகைத்த மித்ராளினியிடம், "உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே??" என யோசனையாய் கேட்டாள்.


அவளின் கேள்வியில் ,"இவளிற்கு மித்ராளினியை தெரியுமோ ??"என ஆவலாய் பார்த்த நாச்சியார் , இவளின் கேள்விக்கு தன் வில்போன்ற புருவங்களை சுருக்கி விரல்களால் நெற்றியை தடவியவாறு யோசிக்கும் மித்ராளினியை கண்டு பதறினார் .


"ஏண்டி !!! வந்தவுடனே உன் விசாரணையை ஆரம்பிக்கனுமா??" என்று சித்ராங்கதாவை அதட்டியவர் , மித்ராளினியின் கவனம் தன் புறம் திரும்பியதில் "நல்லவேளை இவ ரொம்ப யோசிக்க கூடாதுனு விஷ்வா சொல்லிர்க்கானே "என நிம்மதி பெருமூச்செய்தினார்.


ரவிச்சக்கரவர்த்தி,"ஆமா குட்டி!!! நீ என்ன இன்னிக்கு காலேஜ் போகலையா ?? அப்போ நம்ப எல்லோரும் எங்கனா வெளிய போலாமா ?? நானும் வேலைலாம் இல்லாம உங்க கூட கொஞ்ச நேரம் இருக்கலாம் நினைக்கிறேன் .


"இல்லனா மட்டும் நீங்க அப்படியே வேலை செய்யுற மாதிரி தான். என்னிக்கு கண்ணப்பா எல்லாம் பார்க்க ஆரம்பிச்சானோ அப்போல இருந்து சும்மாதானே இருக்கீங்க "என கணவரின் மூக்குடைத்தார் நாச்சியார்.


"உங்க அத்தைக்கு மூளை கம்மினு நான் சொன்னதை நியாபகம் வச்சிட்டு என்னை வெட்டியா இருக்கேன்னு கலாய்க்குறா பார்த்தியா. நம்ப அத அப்டியே கண்டுக்காத மாதிரியே போய்டணும்" என மித்ராளினியிடம் முனங்கினார் ரவிசக்கரவர்த்தி.


அவர் பேச்சில் தன்னையும் இணைக்க நினைப்பதை உணர்ந்து , அவரின் மறைமுக பாசத்தில் புன்னகைத்தாள் மித்ராளினி.


சித்ராங்கதாவோ இன்றைய மனநிலையில் வெளியில் செல்ல மகிழ்ச்சையாய் ஒத்துக்கொண்டவள் , "அப்பா நான் விஷ்வாக்கு கால் பண்றேன் . அந்த பக்கியும் வந்தா நல்லா இருக்கும் "என விஷ்வாவிற்கு கால் செய்தாள்.


****************************************************


ஷாலினியின் வருகைக்காய் அந்த "காப்பி ஹட்டின் " வாசலை பார்த்தவாரு அமர்ந்திருந்த விஷ்வாவை கலைத்தது மொபைலின் ஓசை.


"இந்த குட்டி பிசாசுக்கு எப்படித்தான் தெரியுதுன்னு தெரியல , எப்ப நான் என் குட்டச்சிக்காக காத்திருந்தாலும் இவளுக்கு மூக்கு வேர்த்து எனக்கு கால் பண்ணிட்றா "என சத்தமாய் புலம்பியவன் ,"இப்போ என்ன குண்ட போட போறாளோ "என நினைத்தவாறே காதில் வைக்க ,


"எரும எரும பன்னி...! போன எடுக்க எவ்வளவு நேரம்டா??? கொஞ்சமாவது உனக்கு மூளைன்னு எதுனா இருக்கா???அறிவுகெட்டவனே!!!" என வசமழை பொழிந்தாள் சித்ராங்கதா .


"ஏய் குட்டிபிசாசு, குரங்கு !!!! என்னை என்ன உன்ன மாதிரி வெட்டியாவே இருக்குறதா நினைப்பா . போனை எடுக்க முன்னபின்ன தான்ஆகும் , போன் பண்ணா என்னனு சொல்லணும் அத விட்டுட்டு லூசு மாதிரி பேசிகிட்டு ,சரியான லூசு லூசு!!".


"டேய் யாருடா லூசு...??!!! நீ தான் மெண்டல், பக்கி , பரதேசி "என மாத்தி மாத்தி சண்டையிட கடுப்பான நாச்சியார், "ஏண்டி அவன்கூட சண்டை போடுறதற்க்கா கால் பண்ண???? இப்போ ஒழுங்கா பேசுறியா இல்ல கரண்டியால வாயில சூடு போடவா!!!??" என மிரட்டினார் .


"ச்ச்சு ச்ச்சு!!!!! எதுக்கு நாச்சி கோபப்படற??!!! நம்ம பொண்ணு வாயிலிருந்து உன் புறந்தவீட்டு மனுஷங்க பேர் வர்றத பார்த்து நானே பூரிச்சு போய் இருக்கேன் . நீ எதுக்கு குறுக்கபோற அப்புறம் பிள்ளைக்கு மறந்துரும்ல "என வழியவந்து சிக்கினார் ரவிச்சக்கரவர்த்தி .


"எது எது?????!!! என் புறந்த வீட்டு ஆளுங்க உங்களுக்கு பரதேசிங்களா?!! இன்னிக்கு உங்களுக்கு காலை டிபன் வெறும் கஞ்சி தான் "என்றார் முறைத்தவாறே .


"நீ செய்ற குழம்புக்கு அந்த பழைய கஞ்சே தேவலாம் "என ரவிச்சக்கரவர்த்தி முனங்க, அது சரியாய் நாச்சியாரின் காதை சென்றடைந்ததில் அவர் அங்கு தன் பிள்ளைகளுக்கு சமமாய் ஒரு யுத்தத்தை ஆரம்பித்தார் .


இவர்களை கண்டு கொள்ளாமல் சித்ராங்கதா இன்னும் விஷ்வாவுடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள்.


சிறுபிள்ளைகளாய் முறைத்துக் கொண்டிருக்கும் நாச்சியார் , ரவிசக்கரவர்த்தியையும் ....எதற்கு போன் பண்ணிணாளோ அதைவிட்டு விஷ்வாவுடன் சண்டையிட்டு கொண்டிருந்த சித்ராங்கதாவையும் , மடியில் மித்ரேந்தரை வைத்தவாறு சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் மித்ராளினி .


இதேபோல் அவளும் ஜிஷ்ணுவும் சண்டையிட்டுக் கொள்ள ... பச்சை நிறப் பட்டுடுத்தி அதே கலரில் கல்வைத்த மூக்குத்தி அணிந்து , முகத்தில் சாந்தம் தவழ ஒரு பெண்மணி தங்களை சமாதானப் படுத்துவது போல் நினைவு எழுந்து அவளின் மனதை வியாபித்தது .


****************************************************


விஷ்வாவை பார்க்கப்போகும் ஆசையில் வேகவேகமாய் சென்ற ஷாலினியின் மனமோ அதை விட வேகமாய் பயணித்து , விஷ்வா தன் காதலை சொல்லிய மறுநிமிடமே தன்னுயிருடன் அவனின் உயிரை சங்கமித்து ஓருயிராய் மாறிய அத்தருணத்தை நோக்கி ஓடியது .


"உடல்கள் இணைவது மட்டும் சங்கமமல்ல ...இருஉயிர்கள் தங்கள் காதலை உணர்ந்து ஓருயிராய் மனதால் இணைவதும் சங்கமம் தான்."


ஷாலினியும் அத்தகைய சங்கமமாகிய அவர்கள் இருவரின் உயிர் அலையில் தத்தளிக்க ஆரம்பித்தாள் .


உயிர் அலை :


தான் எப்பொழுதும் பொறுமையாய் நின்று ரசிக்கும் , சிறு குழந்தையென துள்ளி விளையாட தூண்டும் , ஆசை காதலியை அணைப்பது போல் அவளை தழுவும் மழை... இன்றும் திறந்திருந்த ஜன்னலின் வழியே அவளை தீண்டும் பேராவலில் தடையென இருக்கும் கம்பிகளையும் தாண்டி அவள் மேல் பட்டு, அடுத்த நொடியே மோட்சம் பெற்றதாய் எண்ணி தெரித்தது.


இம்முறை அச்சுகத்தை அனுபவிக்க முடியாமல் கண்களை இறுக்க மூடி கொண்டு தான் அமர்ந்திருந்த சோபாவில் சாய்ந்தவளின் கால்களில் இரு துளிகள் விழுந்தது .


அத்துளிகளை ஆராய விடாமல் அவளின் மனமோ வேகமாய் துடிக்க , இதற்க்கு முன் பலமுறை இவ்விதயவேகத்திற்கு காரணமாய் இருந்தவனின் நினைவில் மேலும் கண்களை இறுக்கமாய் மூடினாள்.


அவனின் நினைவிலே உழன்றதாலோ என்னவோ அவனின் வாசம் தன்னை சூழ்வது போல் உணர்ந்தவள் இன்னும் இது தொடர்ந்தால் தன்னால் தாங்க இயலாது என கண்களை திறந்தவளின் முன்னும் அவளின் உயிரானவனே தெரிந்தான் .


அது மாயை என எண்ணி விலக்க நினைத்தவளிற்கு நிஜமென உணர்த்த அவளின் கால்களில் அழுத்தமாய் முத்தமிட்டு முத்திரை பதித்தான் விஷ்வா ....விஷ்வேந்தர்....ஷாலினியின் உயிரான விஷ்வேந்தர் .


முத்தமிட்டு நிமிர்ந்தவன் கண்களில் நீர் துளிர்க்க இரு கைகளையும் விரித்த விஷ்வா "வா "என்பதை போல் தலையசைத்ததில் அடுத்தநொடி கதறியவாறு அவனின் அணைப்புக்குள் புகுந்திருந்தாள்.


"அ...அத்தான் ....நீ ...நீங்க எங்க போனீங்க ..??"


"குட்டச்சி !!!இப்பாவது என்னை பேச விடுடி.... இத்தனை நாளா உன்கிட்ட பேசாம செத்துபோய்ட்ட மாதிரி இருந்திச்சி. சத்தியமா சொல்றேன் டி அன்னிக்கு உன்கிட்ட என் காதலை சொல்ல தான் வந்தேன் , ஆனா என்னன்னவோ நடந்துடிச்சி . என்னை மன்னிச்சிடுடி "என அவளை இறுக்கி அணைத்தவாறு புலம்பினான் .


அவன் காதலை சொல்ல வந்தேன் என்னும் வார்த்தையில் அதிர்ந்து அவனின் முகத்தை பார்க்க முயற்சிக்க அவனோ இன்னும் இன்னும் இறுக்கமாய் அவளை அணைத்தான் .


அவனின் பிடியிலிருந்து விலக முடியாமல் போக அவனின் இறுக்கத்திலிருந்தே அவனின் காதலை உணர்ந்தவள் கண்களோரமாய் கண்ணீர் துளிகள் பளபளக்க மகிழ்ச்சியில் அவனின் முதுகில் தன் விரல்நகம் பதிய தானும் அவனை தன்னுடன் இறுக்கினாள் .


சிறிது நேரம் சென்று அவளை விடுவித்தவன் அவளை தன்கைகளில் ஏந்தியவாறு அருகிலிருந்த கதவை திறந்து படிகளில் ஏற..அவன் தூக்கும்போதே அவன் செய்ய போவதை உணர்ந்தவள் , அவனை காதல் பொங்க பார்த்து தன்கைகளை அவனின் கழுத்தில் கோர்த்து வாகாய் அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் .


படிகளில் ஏறி மேலே செல்ல செல்ல மழைத்துளிகள் ஆவேசமாய் அவர்களை முத்தமிட்டு அம்முத்ததில் தன் மோகம் தீராமல் மீண்டும் மீண்டுமாய் அவர்களை முத்தமிட வந்தது.


மொட்டைமாடியில் மழையின் வன்மை காதலின் நடுவில் நின்ற விஷ்வா , ஷாலினியை பார்த்தவாரே அவளை கைகளிலிருந்து இருந்தவன் ,தன் கால்களின் மேலே அவளை நிற்கவைத்து தன் கைவளைவிற்க்குள்ளாகவே அவளை இருத்தினான் .


அவ்வேளையில் அவனின் முகத்திலிருந்து வழிந்து அவளின் உதட்டில் பொட்டாய் வீற்றிருந்த மழைத்துளியை கண்டு அதை பருக குனிந்தான்.


அந்த மழையிலும் அவனின் மூச்சுக்காற்று அவளின் முகத்தை சுட்டதில் அத்ற்க்குமேல் தாங்க இயலாமல் அவள் கண்களை மூட , அவளை நெருங்கியவனோ அவளின் இந்நிலையில் மயங்கி கிறங்கினான்.


இந்தநொடிவரை தன் காதலை சொல்லவில்லை ....இவளின் அத்தனை துன்பத்திற்கும் நான் மட்டுமே காரணமாய் இருக்க இவளோ அதை அனைத்தும் ஒன்றுமில்லை என்பதை போல் தன் நெருக்கத்தில் மயங்கும் அளவிற்கு காதல் கொண்டுள்ளளா ?? என தனக்குள் கேட்டுக்கொண்ட விஷ்வா "இதற்க்கு மேல் உன்னை தவிக்க விடமாட்டேன் டி "என மெதுவாய் முணுமுணுத்தான் .


அவளின் இதழை தீண்ட நெருங்கியவன் சற்றே சாய்ந்து அவளின் காதோரமாய் குனிந்து அவள் இத்தனை நாளாய் ஏங்கிய அவ்வார்த்தையை உதிர்த்தான் .


"ஏய் குட்டச்சி .....!!! ஐ லவ் யு டி என் செல்ல காத்தாயி ,இந்த நிமிஷத்துல இருந்து நீ தான் என் வாழ்க்கை நீ மட்டும் தான் டி" என்றான் வார்த்தை குழைய.


அவனின் முத்ததிற்க்காய் காத்திருந்த ஷாலினி, அவனிடமிருந்து இதை எதிர்பார்க்காததில் ஒருநொடி திகைத்து மறுநொடி ஆவேசமாய் அவனை அணைத்து சந்தோஷமாய் கதற , அவளை தன் மேல் ஏந்தியவாறு நின்றிருந்த விஷ்வா தடுமாறி கீழே சாய அந்நிலையிலும் அவனவளிற்கும் எதுவும் நேரமாலிருக்க அவளை அரவணைத்தவாரே விழுந்தான் .


அதை எதையும் கவனிக்க முடியாமல் அவன் காதல் சொல்லியதிலே கசிந்துருகியவள் தன் காதலை ஆவேசமாய் அவனின் முகத்தினில் முத்தமிட்டு தெரிவிக்க அந்த மழையும் அவர்கள் மேல் கொண்ட காதலில் ஆவேசமாய் அவர்களை தீண்டி சென்றது.




-கரைவாள்
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 17 :


தங்களது உயிர்அலையில் தத்தளித்த சுகத்துடன் முகம் மலர அந்த காபி ஹட்டினுள் நுழைந்தாள் ஷாலினிவர்தன்.


அவ்வளவு நேரம் சிறுபிள்ளையாய் சித்ராங்கதாவுடன் சண்டையிட்டு கொண்டிருந்த விஷ்வேந்தர் ஷாலினியை கண்டபின், "ஏய் குட்டிச்சாத்தான் போன வை டி ....இப்போ உன்கூட சண்டை போட்ற மூட் இல்ல "என்றவன் போனை கட் பண்ணிவிட்டான் .


அவன் பேசியத்திலிருந்தே யாரிடம் என தெரிந்துகொண்ட ஷாலினி , "ஹாஹா...!!! என்ன அத்தான் நம்ப சித்துவா போன்ல ??? ஆனாலும் உங்க ரெண்டு பேருக்குமே இந்த சூடு சொரணைலாம் கம்மி தான் போல" என கண்சிமிட்ட ,


"ஆமா டி ஆமா...!!ஒருவேளை அதுலாம் கம்மியா இருக்கறதுனால தான் உன்னை லவ் பண்ணிருப்பனோ என்னவோ ?"


"டேய் எரும ..."


"என்னடி இது ...ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி தான் அத்தான்னு கூப்பிட்ட அதுக்குள்ள மரியாதையை பறக்கவிடற !!".


"நீ அப்டி பேசுனாடா நானும் இப்படி தான்டா பேசுவேன்டா" என வரிசையாய் பலத்த மரியாதையுடன்.


"யம்மா தாயே!!!!! இனிமே வாயே திறக்கலைமா " என வாயை பொத்தியவனை பார்த்து "அஃது!!' என்பதுபோல் தலையசைத்து கண்ணடித்தாள்.


பேரரிடம் தங்களுக்கு வேண்டியதை சொல்லியவர்கள் , அவை வந்தபின்பு சாப்பிட்டவாரே பேசிக்கொண்டிருந்தனர்.


சிறு ஊடலின் பின் நேர்ந்த நெருக்கத்தின் விளைவால் காதல் அதிகரித்திருக்க பேச பேச முடிவில்லாமல் இந்நேரம் தொடரக்கூடாதா என்னும் எண்ணம் இருவரின் மனதிலும் எழாமல் இல்லை.


"அப்றம் அத்தான் , நான் இன்னிக்கு சாயந்திரம் டெல்லி கிளம்பறேன்.ஆனா அத்தான் ப்ளீஸ் ஏன்னு மட்டும் கேட்டுறாதீங்க , என்னால உங்க கிட்ட பொய் சொல்ல முடியாது ".


"ஹாஹா! என் குட்டச்சி அம்புட்டு நல்லவளாடி நீ ??!!!" என கலாய்த்த விஷ்வா தொடர்ந்து ," நான் உன்ன எதுவும் கேக்க மாட்டேன் ஓகேவா . பட் பத்திரமாய் இரு "என ஆரம்பித்து சில பல அறிவுரைகளை சொல்ல ஆரம்பித்தான் .


"ஆரம்பிச்சிட்டான்ய்யா .."என மனதில் சொல்லிக்கொண்ட ஷாலினி ...வழக்கமாய் தான் ஒவ்வொரு முறை இப்படி எங்காவது செல்லும்பொழுதும் விஷ்வாவின் இந்த அறிவுரை(றுவை)கள் சகஜம் தான் என இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டவாறு தங்களை சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .


அவர்கள் அந்த ஹட்டின் நடுவில் இருந்த மேஜையில் அமர்ந்திருக்க , அங்கு இருக்கும் பெண்களும் சரி அங்கு வருபவர்களும் சரி ....ஒருமுறையாவது தங்களின் புறம் திரும்பிபார்ப்பதை அறிந்தவள் , எதுக்கு எல்லோரும் நம்மளையே குறுகுறுனு பாக்குறாங்க என புருவத்தை சுருக்கினாள். ( யோசிக்கிறாங்களாம்பா ) .


"ஏய் குட்டச்சி...!! என்னடி நான் சொன்னதுலாம் கேட்டியா இல்லையா ??.என்னடி நீயா இவ்ளோ அமைதியா இருக்கிறது சரியில்லயே???" .


"டேய் அத்தான் ! பேண்ட்டு கீண்ட்டு போட மறந்துட்டியாடா" என பட்டென்று
கேட்க,


"யே...என்னடி லூசாகிட்டியா.???அய்யயோ ஆஞ்சநேயா தெரியாத்தனமா ஒரு லூச லவ் பண்ணிட்டேன் போலயே .கடைசில நானும் உன் பிரெண்ட் பிள்ளையார் மாதிரி ஆகிடுவேன் போல" என சம்பந்தம் இல்லாமல் விஷ்வா பேசியதில்,


"டேய் லூசு அத்தான்...!!!!கொஞ்சம் சுத்தி எல்லோரையும் பாரு உன்ன தான் பாக்குறாங்க அதுக்குதான் கேட்டேன் "என அவனின் தலையில் எக்கி கொட்டினாள்.


"ஹாஹா குட்டச்சி ஹாஹா !!!!!ஆனாலும் உனக்கு இந்த காமெடிலாம் சுட்டு போட்டாலும் வராதுன்னு தெரியும்ல .... அப்றம் ஏன் செல்லம் ட்ரை பண்ணற??" என்றவன் மீண்டும் பலமாய் சிரிக்க ஆரம்பிக்க , அவளோ கைகளில் கிடைப்பதை எல்லாம் தூக்கி எறிய , விஷ்வாவோ வேகவேகமாய் அவர்கள் உண்டதற்கான பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து ஓடினான் .


அவனை துரத்தி கொண்டே ஓடியவள் ,அவன் அங்கிருந்த மரத்தின் ஓரம் சட்டென்று நிற்க அவளும் தடுமாறி அவனின் மேலேயே மோதி நின்றாள்.


அவளின் புறம் திரும்பிய விஷ்வா , "ஆமா குட்டச்சி ...!!!பொண்ணுங்களுக்கு பொதுவா பொசசிவ் பொசசிவ் னு ஒன்னு அதிகமா இருக்குமாமே உனக்கு அதுலாம் இல்லையாடி?" என்றான் சந்தேகமாய்.


"அத்தான் அத்தான் இதுக்கு பதில் , நான் ஏற்கனவே ஒருதடவை கவிதையா எழுதியிருக்கேன் அத இப்போ சொல்லட்டுமா ப்ளீஸ் ப்ளீஸ் ".


"வேணாம்னா விடவா போற "என முனங்கியவன் தலையை "சரி" என ஆட்ட , ஷாலினி தனது கவிதையை சொல்ல ஆரம்பித்தாள் .


( இது ஏற்கனவே நான் எழுதி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சதுதான் டியர்ஸ் ...என்னோட எழுத்தில் எனக்கு ரொம்பவே பிடிச்சதும் கூட ).


"செல்லும் இடமெல்லாம் என்னவனை ரசிக்கும் பெண்களின் கண்கள் ...
கண்டும்காணா சிரிக்கும்
இதழ்களுடன் நான்...
அதை கண்டு சிணுங்கும்
சிறுவனாய் என்னவன் ...
அவனின் அச்சிணுங்களில் மயங்கி பெருமையுடன் கூறினேன் ,
எவர் கண்கள் உன்னை ரசித்தாலும் உனது கண்கள் என்மேல் மட்டுமே என்று !!!!!

உன்னவள் உன்னை அறிவாளடா !!!!"



சொல்லி முடித்து ,அத்தான் எப்படி இருக்கு என் கவிதை ?? என்று ஷாலினி அழகாய் புருவத்தை ஏற்றி இறக்கினாள்.


அவளின் புருவத்தை விரல் கொண்டு வருடிய விஷ்வா , "அந்த சித்து குரங்கு சொல்றதுல இத மட்டும் நான் ஒத்துப்பேன் , உன்னோட புருவங்கள் ரொம்பவே அழகு டி, அதுவும் நீ அதை இப்படி ஏத்தி இறக்குறப்ப ப்பாபா மனுஷன கொல்ற"என்றான் காதலாய்.


அவனின் பேச்சில் முகம் செம்மையுற நின்றவளை கண்டவன் அவளை சகஜமாக்கும் பொருட்டு , "ஆமாடி குட்டச்சி...! ஏதோ கவிதை சொல்றன்னு சொன்ன எப்போ சொல்வ ???சீக்கிரம் சொல்லு அத்தானுக்கு நேரம் ஆகுதுல"


வெட்கத்தால் சிவந்திருந்த ஷாலினியின் முகம் தற்பொழுது கோபத்தால் சிவக்க , "யூ ....யூ..!!!!!"என திட்டுவதற்கு வார்த்தை வரமால் கோபத்தில் தடுமாறினாள் .


"ஹாஹா !!!" என சிரித்து பின் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவன் , "சரிடி நான் கிளம்பறேன் ....ஹாஸ்பிடல்ல எமெர்ஜென்சி எதுவும் இல்லனா ஈவினிங் நீ கிளம்பறத்துக்குள்ள வர பார்க்குறேன் சரியா "என கிளம்பியவன் மீண்டும் திரும்பி வந்தான் .


ஷாலினி ,"என்ன?" என்பது போல் பார்த்து , "திரும்ப உன் அறிவு(றுவைஉ)ரையை ஆரம்பிக்க போறியா என்ன???" என்று அலறினாள் .


பதிலு க்கு அவன் சிரிக்காமல் இருக்க அவனின் முகமோ மிக மிக அழுத்தமாய் இருந்தது .


"குட்டச்சி நீ சொன்ன கவிதைல ஒரு சின்ன மாற்றம் , நான் சிணுங்குவேன்னு சொன்னல நிச்சயமா இல்லை . உன்ன தவிர வேறொருத்தரோட பார்வை என்மேல பட்றத கூட என்னால ஏத்துக்க முடியாதுடி. நான் உனக்கு மட்டும் தான் . இதுல உனக்கு சின்னதா எதுனா சந்தேகம் வந்தா கூட அதுதான் ...அந்த நொடி தான் நம்ப சேர்ந்து இருக்குற கடைசி நொடியா இருக்கும் "என்றவன் அவளின் நெற்றில் முத்தம் பதித்துவிட்டு தன் வண்டியில் ஏறி கிளம்பி சென்றான் .


விஷ்வா மற்றபொழுதுகளில் விளையாட்டாய் இருந்தாலும் , ஷாலினியுடனான காதலில் சிறு விளையாட்டையும் சேர்க்காமல் மிக மிக அழுத்தமான, இத்தகைய பிடிவாதத்துடனான காதலுடனே இருப்பான் . ஒருவேளை அவனின் இந்த அழுத்தமும் பிடிவாதமுமே இவர்களின் காதலில் பிளவை ஏற்படுத்துமோ ???



**************************************************


பேசிக்கொண்டிருக்கும்போதே (ஹீஹீ அதாவது திட்டிக்கொண்டிருக்கும் போதே) விஷ்வா போனை வைத்துவிட்டதால் சித்ராங்கதா ,"அம்மாஆஆஆ" என கத்தினாள் .


மும்முரமாய் ரவிச்சக்கரவர்த்தியை முறைத்துக்கொண்டிருந்த நாச்சியாரோ , "ஏய் ஏண்டி கத்துற ???போ சாப்பாட டைனிங்டேபிள் ல வச்சிருக்கேன் பாரு அதுக்கு தான கத்திட்டு கிடைக்க ".


அவ்வளவு நேரம் தன் நினைவுகளில் முழ்கிருந்த மித்ராளினி நாச்சியாரின் பேச்சில் வாய்விட்டு சிரித்தாள் .


நாச்சியாரிடம் பதிலுக்கு பேச போன சித்ராங்கதா மித்ராளினியின் சிரிப்பில் அவளை பார்க்க மூளை பலமாய் சத்தமிட்டது இவர்களை எங்கோ பார்த்திருப்பதாய் .


இதற்க்கு நடுவே ரவிச்சக்கரவர்த்தி எங்கே நாச்சியார் மீண்டும் முறைக்க ஆரம்பித்திடுவாரோ என்றெண்ணி பேச்சை மாற்றுவதற்க்காய் ," குட்டிமா!!! விஷ்வா என்னடா சொன்னான்?? வரனா???" என கேட்டார் சித்ராங்கதாவிடம் .


"அப்பா!!!!! அவனை பத்தி பேசாதீங்க , அவனும் வந்தா நல்லா இருக்கும் எனக்குன்னு தான அவனுக்கு கால் பண்ணேன் . அந்த எரும பேசவே விடாம திட்டிட்டு போன கட் பண்ணிட்டான் பா"


( யாரு யார பேச விடாம பண்ணுனது .இங்கிட்டு எப்படி போட்டு குடுக்குது பாத்திங்களா ...பாவம்பா இந்த அண்ணனுங்களாம் ) .



"இல்லையேமா!!!! விஷ்வா என்னை மாதிரிதான !!! அவனுக்கு திட்டலாம் வராதே ...வேணும்னா திட்டு வாங்குவான்னு சொல்லு நம்புறேன்" என சிரிக்காமல் அவர் சொல்லிமுடிக்க ,


நாச்சியார்," மேய்க்குறது எரும இதுல என்ன பெரும ?"என நொடித்தார் .


"ஹாஹா ஏஞ்சல் ...!! உங்க அத்த டைமிங் காமடி பன்றாளாம் சிரிச்சிடுமா" என விடாமல் ரவிச்சக்ரவர்த்தி கவுண்டர் அடிக்க , மித்ராளினி எங்கு தன் சிரிப்பில் மித்ரேந்தர் எழுந்துவிடுவானோ என அவனை ஒருகையால் ஆதுரமாய் தட்டிகொண்டே சிரித்துக்கொண்டிருந்தவள் நாச்சியார் ஏதோ சொல்ல ஆரம்பிக்க , ரவிச்சக்கரவர்த்தியை காக்கும் பொருட்டு சித்ராங்கதாவிடம் ,


"டாக்டர் வரலைனா என்ன?? நம்ப மட்டும் போயிட்டு வருவோமா? "என கேட்டாள்.


"ஐய் !!!எனக்கு அடுத்த கம்பெனி கிடைச்சாச்சு , ம்ம்ம் எங்க போலாம்.. ம்ம்ம் ...ஹான் ஈஏ (ea mall ) போலாமா??"


"சுப்பரே !!!!வாங்க போலாம் வாங்க "- வேற யாரு ரவிச்சக்கரவர்த்தியே தான்.


அவரை தன் முறைப்பில் கிடப்பில் போட்ட நாச்சியார் ," ஏண்டி அதுக்குலாம் நாங்க வரமுடியாது வேற எதுனா உருப்படியா சொல்லு"


"மாம் !!! அது ரொம்ப நல்லா இருக்கும் மோரெவர் நம்பள அங்க யாருக்கும் தெரியாது . வேற எந்த பெரிய மால் போனாலும் அண்ணனை யாருக்காவது தெரிஞ்சிற்கும் மாம் . நம்பளால ஜாலி ஆஹ் இருக்க முடியாது" .


"ஆண்ட்டி !!!"என அழைத்த மித்ராளினி , "அதான் அவங்க ஆசைப்படறாங்களா அங்கயே போலாமே " என அவளும் சொல்ல,.


"ஆமா நாச்சி அங்கயே போலாம் ...வேணும்னா நாங்க மூணு பேரும் மட்டும் போய்ட்டு வரோம் " என அவர் தன்னை கிடப்பில் போட்டதை தூசியாய் தட்டிவிட்டு மீண்டும் ஆஜர் ஆனார் ரவிச்சக்கரவர்த்தி .


"ஏதேது ....???இவருக்கு இப்போ தான் இருபது வயசு பாரு. அங்க போயிட்டு வந்தப்பறம் நாச்சி இந்த கால் ரொம்ப வலிக்குதுன்னு சொல்லிட்டு வருவீங்கல அப்போ வச்சிக்கிறேன்" என்றவர் தொடர்ந்து ,


"சரி எல்லோரும் போய் கிளம்புங்க , இப்போ போனா தான் சாயந்திரம் சீக்கிரம் வரலாம் ...மித்துமா !!! நீ வாடா நம்ப பாப்பாக்கு தேவையானதுலாம் எடுத்து வைப்போம் "என எல்லோரையும் ஏவினார் .


எக்ஸ்பிரஸ் அவென்யு (Ea mall ) :


வந்தநொடி முதல் அவ்விடத்தை ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தனர் சித்ராங்கதாவும் , ரவிச்சக்ரவர்த்தியும்.


மித்ராளினி மித்ரேந்தரை தன் தோளில் சாய்த்தவாறு சுற்றியவள் , இங்கு ஏதேனும் தனக்கு பரிட்சியமாய் இருக்குமா என தன் நினைவடுக்குகளில் தேடிக்கொண்டிருந்தாள்.


மித்ரேந்தரை மித்ராளினி வைத்து கொள்வதாய் சொல்ல அவளிடம் கொடுத்துவிட்ட நாச்சியார்.... சித்ராங்கதாவும் , ரவிச்சக்கரவர்த்தியும் செய்யும் அலும்புகளை கண்டு புலம்பிக் கொண்டேவந்தார் .


"அம்மாடி மித்து!!! இந்த மனுஷர பார்த்தியாடா இன்னும் எப்படி சேட்டை பண்ணிட்டு இருக்காருனு ??""என அலுத்துக்கொண்டவரின் குரலிலோ காதலே விஞ்சியிருந்தது .


அனைத்தையும் ஒரு சிறு சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த மித்ராளினி , "இத்தனை வயதிலும் குரலில் கூட இத்தனை காதலை காட்ட முடியுமா , அதுவும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் வாரி கொண்டிருந்தாலும் இருவரின் கண்களிலும் குறும்பையும் மிஞ்சும் காதலையே கொண்டிருந்ததில் நாமும் இப்படி வாழ்வோமா?" என ஏங்கவே ஆரம்பித்திருந்தாள் .


அந்த எண்ணம் தோன்றும் பொழுதெல்லாம் காதோரம் கேட்க்கும் "ராணிமா " என்னும் குரலோ அந்த ஏக்கத்திற்கு மேலும் தூபம் போட்டவாறு இருந்தது .


ரொம்ப டயர்டாகி வந்த சக்கரவர்த்தியும் சித்திரங்கதாவும் ஒரு இடத்தில் அமர , நாச்சியார் தனது கச்சேரியை ஆரம்பித்தார்.


அதை காதில் வாங்காமல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த சித்திராங்கதாவின் கண்களில் பட்டான் , கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் அதே கருப்பு நிற சட்டை அணிந்த சென்றுகொண்டிருந்த ஜிஷ்ணு.


"ஐ நம்ம ஆளு!!" என மனதினுள் குதித்தவள் ,"ரவுடி பேபிக்கு இன்னிக்கு டூட்டி இல்லையா???அடடா நல்ல சான்ஸ் ஆஹ் மிஸ் பண்ணிட்டியே " என வெளிவந்த மனசாட்சியின் தலையில் குட்டி உள்ளே அனுப்பியவள்," முட்டாப்பசங்க தான் சான்ஸ்க்கு காத்திருப்பாங்க ...புத்திசாலிங்க சான்ஸ் அ தான உருவாகிப்பாங்க ...சித்து குட்டி சீக்கிரம் போய் உன் மைதாமாவை பிடி" என சொல்லிக்கொண்டவள் வேகமாய் அவனின் பின் சென்றாள்.


மித்ராளிணி," எங்க போறீங்க"என்று கேட்க ...


"இங்க தான் இவங்க சண்டை முடிறதுக்குள்ள வந்துருவேன்"என சிட்டாய் பறந்தாள்.


வேகமாய் வந்தவள் ஜிஷ்ணுவை காணாமல் "அதற்குள் எங்க போய்ட்டாரு ??"என சுற்றுமுற்றும் தேடியதில், ஜிஷ்ணு ட்ரையல் ரூமிற்க்குள் செல்வது கண்ணில் பட அவசரமாய் அவனருகில் வந்தவள்,
அதற்குள் அவன் உள்நுழைந்திருக்க ஏதோ ஒரு நினைவில் அவளும் உடன் நுழைந்துவிட்டாள்.


எவரோ தன் பின்னால் நுழைந்ததை உணர்ந்த ஜிஷ்ணுவின் கைகள் தானாய் பாக்கெட்டில் இருக்கும் துப்பாக்கியைத் தொட அதில் சித்ராங்கதா , "சொப்பாஆ " என்று முறைத்தவாறு அவனின் கைகளின் மேல் தன் கைகளை வைத்து தடுத்தவள்,"எப்ப பார்த்தாலும் கை துப்பாக்கி கிட்டையே போகுதே உங்களை வச்சிக்கிட்டு நான் என்னத்த பண்ண போறேனோ" சலித்தாள்.


சித்ராங்கதாவின் குரலில் இயல்பாய் உதட்டினில் புன்முறுவல் வந்தமர,அவளின் பழைய ஜிஷ்ணுவாய் குரலில் குறும்பு கொப்பளித்தபடி," வச்சிக்க கஷ்ட்டமா இருந்தா கட்டிக்கோ பேபி" என்றான்.


நீண்டநாட்களுக்கு பின்னான அவளவனின் பேச்சில் வாயில் கொசு போனால் கூட தெரியாதவாறு திறந்து வைத்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ராங்கதா .


"ஆமா பேபி ...!!! நீங்க எதுக்கு ட்ரையல் ரூம் வந்திங்க ?" என கேட்டவாறே அவளிடம் நெருங்கியவனின் கை விரல்கள் தன் சட்டைப் பொத்தான்களை ஒவ்வொன்றாய் விடுவித்தது.


அவனின் இந்தத் தொடர் தாக்குதலில் திகைத்து விழித்தவள் , "அச்சோ....!!! அறிவுகெட்டவளே போயும் போயும் இப்படியா அவர் பின்னடியே வந்து மாட்டுவ" என மானசீகமாய் கொட்டிக்கொன்டவள் என்ன செய்வது என தெரியாமல் திருதிருவென்று முழித்தாள்.


அவன் இன்னும் அருகில் நெருங்கிருக்க இருவருக்குமான நெருக்கத்தில் மேனி நடுங்கபடி கண்களை இறுக்கமாய் மூடி கொண்டவளின் காதோரம் நெருங்கியவன் , "பேபி கண்ண திறந்து பாரு" என்றான் காற்றாகிப்போன குரலில்.


அவள் இடம்வலமாய் தலையசைத்ததில் "சரி எனக்கு ஓகே எவ்வளவு நேரமானாலும் உன்ன இப்படி பார்த்துட்டே இருப்பேன் ...பட் வெளிய இருந்து யாராவது கதவை தட்டுனா என்ன பண்றது பேபி" என்று அறியா சிறுவனாய் கேள்வி கேட்டான் .


அவனின் பேச்சில் மயக்கம் களைந்து கண் திறந்தவளின் முன் மயக்கும் சிரிப்புடன் நின்றிருந்தான் ஜிஷ்ணு வேறொரு சட்டையில்.


இதுதான் இந்த விளையாட்டுத்தனத்தை தான் ஜிஷ்ணுவிடம் காணாமல் இத்தனைநாள் வாடியிருந்தாள் சித்ராங்கதா .


ஜிஷ்ணு என்பவன் மற்றவர்களை பொருத்தவரை அழுத்தக்காரனாய் அவனின் செயல்கள் அதிரடியாய் இருந்தாலும் , சித்ராங்கதாவிடம் மட்டும் தன் விளையாட்டுதனத்தை மொத்தமாய் கட்டவிழுத்துவிட்டிருந்தான் . அவனின் துறையில் அனைவரும் அவனை கண்டு பதற இவளோ அவனை விளையாட்டு பொம்மையாக்கி தன் உணர்வுகளால் அவனை ஆட்கொண்டிருந்தாள்.


ஜிஷ்ணுவிற்கே அது ஆச்சர்யம் தான் , தான் ஒருமுறை கூட தன் காதலை இவளிடம் சொல்லியதில்லை ஆனாலும் எப்படி இவகிட்ட மட்டும் இவ்வளவு உரிமையா பழகுறோம் " என ஒவ்வொருமுறையும் தன்னைத்தானே கேட்க்கிறான் அன்றும் , இன்றும் .



இந்தக் காதல்தான் விந்தையிலும் விந்தையோ !!!
துள்ளித்திரிபவன் காதலில்
அழுத்தமாய் மாற,
அழுத்தகாரனவன் காதலில்
விளையாட்டாய் கரைய...
முரண்பாடுகள் தான் காதலா?
இல்லை

காதலே முரண்பாடுகளால் கட்டமைக்கபட்டது தானா????


பின்னாளில் இத்தகைய முரண்பாடே இவர்களின் காதலுக்கு எதிரியாய் மாறுமோ ....



-கரைவாள்
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤

நினைவில் தத்தளிக்கும் நேசமது 18 :



மும்பை
:


"ஏய் ...!!! என்னையா இது!!??? ஹாஸ்ப்பிட்டல ஒருத்தரையும் காணோம் ,இங்க இருந்த பேஷண்ட்ஸ் எல்லாம் எங்க போனாங்க ??"என தன் முன் நின்றிருப்பவர்களிடம் கத்திக்கொண்டிருந்தான் முகுந்தன் , chairman of MV MULTISPECIALITY HOSPITALS .


அவனிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அனைவரும் திணறினர் .திடீரென நேற்று இரவு இரண்டு கார்களில் வந்த ஆட்கள் வேகவேகமாய் தடுப்பதற்கான நேரம் கூட கொடுக்காமல் , இங்கிருந்த அனைவரையும் அவரவர் உடல்நிலைற்கேற்ப பாதுகாப்பாய் கொண்டு சென்றுவிட்டனர் .


இதே போல் சில முறை நடந்ததில் அமைதியா இருந்த பணியாளர்கள் மனதில், வழக்கமாய் ஐந்து முதல் பத்து என கணக்கிலே கொண்டுசெல்பவர்கள் இன்று மொத்த பேரையும் கொண்டுசெல்கிறார்களே என்ற யோசனை மட்டுமே .


கத்திக்கொண்டிருந்தவனை நிறுத்தியது கைபேசியின் ஓசை .


"ஹலோ முகுந்தன் ஹியர்".


"......."


"வாட் ???? அதுவரைக்கும் நீங்க என்னத்த ****** இருந்திங்க??".


"......."


"சே!!!!" என போனை கட் பண்ணியவன் மீண்டும் அது ஒலிக்க எடுத்து பேசியவன் வேகவேகமாய் தனது லேப்டாப்பை எடுத்து எதையோ தேடினான் .


அதில் என்ன இருந்ததோ "ஷிட்!!!" என கத்தியவன் அதை தூக்கி வீசியதில் அது அங்கிருந்த சுவற்றில் மோதி விழுந்தது .


அவனது இந்த கோபத்தில் ஏற்கனவே நடுங்கிக்கொண்டிருந்த அந்த ஹாஸ்பிட்டலின் பணியாளர்களுக்கு தூக்கிவாரி போட்டது .


அந்த நேரம் ஹாஸ்ப்பிட்டலின் வாயிலில் தட் தட் என கேட்ட ஒலியில் நிமிர்ந்தான் .


கருப்பு நிற ரேபோக் ஷூ தட் தட் என ஓசை எழுப்ப கருப்பு வண்ண சட்டையை கருப்பு நிற பேண்டில் டக் செய்து அதில் கருப்பு வண்ண ப்ரேடா பெல்ட் அணிந்திருந்தவன் , சட்டையின் மேல் கருப்பு வண்ண பிளேசர் அணிந்திருந்த வண்ணம் தன் கம்பீர நடையுடன்... ஆண்மையின் இலக்கணமான திண்ணிய தோள்களுடன் ...அந்த ஹாஸ்பிட்டலினுள் நுழைந்தான் ஜித்தேந்தர் .


எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாய் வந்தவன் அங்கிருந்த முகுந்தனிடம் , "பேசலாமா??" என்றான்.


"யார் " என்று தெரியவில்லை என்றாலும் அவனின் தோரணையில் முகுந்தனின் தலை தானாய் சரி என அசைந்தது .


"ம்ம்ம் ....சொல்லுங்க யார் நீங்க ???".


"சரியாய் ஆறுமாதம் முன், ஒரு அரசாங்க ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்ல இருந்து ஒரு பொண்ணை கடத்திருக்கீங்க. இப்போ அந்த பொண்ணு எங்க ??" எனக் கேட்டவனின் குரல் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாய் வெளிபட்டது.


""ஏய்.....யார் நீ ??? உனக்கு எப்படி இது தெரியும்??" பதறிய முகுந்தனின் நெற்றியில் வியர்வை பூத்தது.


"ஹாஹா.....எதுக்கு இப்போ கத்துறீங்க மிஸ்டர் .முகுந்தன் ....ம்ம்ம்... ஷால் வி ஹவ் எ கப் ஒப் காஃபீ "சிரித்தபடி தொடர்ந்த ஜித்தேந்தர்,


"என்ன பாக்குறீங்க மிஸ்டர் .முகுந்தன்?? காபீ சொல்லுங்க குடிச்சிகிட்டே பேசுவோம் " என்றான்.


வேறுவழியில்லாமல் அவனும் சொல்ல சற்றுநேரத்தில் அங்கு இரண்டு கப்புகள் மணமிக்க காபியுடன் வந்தது.


அதில் ஒன்றை எடுத்த ஜித்தன் மீண்டும் கேட்டான் ," சொல்லுங்க மிஸ்டர்.முகுந்தன் " என்று.


அவனோ என்ன சொல்வதென்று முழிக்க, ஜித்தனோ காபியை ரசித்து ஒரு மிடறு விழுங்க முகுந்தனின் கைப்பேசி சத்தமிட்டது .


காபியை குடித்தபடியே," எடுத்து பேசுங்க ம்ம்ம் பேசுங்க முகுந்தன் " என்றான்.


அந்தபுறம் என்னசொல்லப்பட்டதோ இவனின் முகம் பேயறைந்ததுபோல் ஆனது .


" சுசுசு....!!!என்ன மிஸ்டர்.முகுந்தன் உங்களோட **** பங்களா இருந்த இடம் தெரியாம தரைமட்டமாகிற்குமே???" என சிரித்துக்கொண்டே கேட்ட ஜித்தேந்தரின் விழிகளோ கோபாக்னியால் ஜொலித்தது .


முகுந்தன் அவ்வறை விட்டு ஓட பார்க்க தன் கைகளில் இருந்த கப்பை வீசிஎறிந்த ஜித்தேந்தர் , ஒரே எட்டில் அவனை பிடித்தான் .


அங்கிருந்த சோபாவில் அவனை தள்ளியவன் இடது காலை அவனின் வலதுபுறத்தில் வைத்து வலது கையால் அவனின் சட்டையை இறுக்கினான் .


"உன்னோட ஒட்டு மொத்த ஹாஸ்ப்பிட்டலையும் ஒரே ராத்திரில தூக்கி , உன் வீடு , உன் தொழில் , உன்னோட எச்சசொச்ச மொத்தத்தையும் விரல் சொடுக்குற நேரத்துல தரைமட்டமாக்குன எனக்கு உன்னை உன் அம்மாக்கே அடையாளம் தெரியாத மாதிரி மாத்த எவ்ளோ நேரம் ஆகும்???".


"எப்படி எப்படி யாருக்கும் தெரியாம மத்த ஹாஸ்ப்பிட்டல் நோயாளிங்கள கடத்தியும் , உன் ஹாஸ்ப்பிட்டல் நோயாளிகள கொன்னும் நீ அவங்க உறுப்பை திருடுவ ஆன உன் *** எதுனா ஆனா மட்டும் துடிக்குதோ,
இங்க பாரு நானே என் ராணிமா இல்லாம பைத்தியம் பிடிச்சவன் மாதிரி சுத்திட்டு இருக்கேன் .எப்ப என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரில"


சொல்லியபடி அங்கிருந்த கத்தியை எடுத்தவன் ," இதோ இப்படி இந்த கத்திய எடுத்து சட்டுனு குத்துனேனு வை நீ பொட்டுனுலாம் போகமாட்ட...கொஞ்சகொஞ்சமா துடிச்சு போய் சாவ என்ன குத்தட்டுமா ??? "என அவனின் தொண்டையில் நூலளவு இடைவெளியில் கத்தியை வைக்க ,


கண்கள் தெரித்துவிடுவதை போல் விரித்தவன் பயத்தில் , "சொல்லிடறேன் சொல்லிடறேன் "என அலறியவன்,


"நாங்க அந்த பொண்ணை கடத்திட்டு வரும்போது வழில எங்க வண்டி நின்னுடுச்சி . அதுமட்டுமில்லாம அந்த சமயத்துல அங்க நிறைய போலீசை வேற இருந்தாங்க.அந்த பொண்ணு அப்போ ரொம்ப சீரியஸ் ஆஹ் இருந்ததுனால அங்க இருந்த எல்லோரும் உதவி பன்றேன்னு அங்க பக்கத்துல இருந்த வேறொரு ஹாஸ்ப்பிட்டல்ல அந்த பொண்ணை சேர்த்துட்டாங்க, அது அப்புறம் எங்களால அந்த பொண்ணை இங்க கொண்டுவரமுடியல" என்று ஒப்பித்தவனை


ஜித்தேந்தர் நம்பாமல் கத்தியை அழுத்த , "ஆஆஆ ...!!!! சத்தியமா சொல்றேன் சார் , இதான் நடந்துச்சு .உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் அந்த சமயத்துல ஊர் எப்படி இருந்ததுன்னு .ஆனா நாங்க மறுபடியும் அந்த ஹாஸ்பிடல் போனும் ஆனா அந்த பொண்ணு அங்க இல்ல . விசாரிச்சப்போ அப்படி யாரையும் அங்க சேர்க்கலைனு சொல்லிட்டாங்க . ஆனா ....ஆனா எனக்கு தெரியும் அந்த பொண்ணு அங்க தான் இருக்கும் "என பேசமுடியாமல் நிறுத்தி நிறுத்தி சொன்னான் .


"அந்த ஹாஸ்ப்பிட்டல் பேர் என்ன ??"


".........."


"ம்ம்ம்ம் குட் !!!" என அவனை விட்ட ஜித்தேந்தர் தனது வேகநடையுடன், தன்னவளை பற்றிய நினைவுகளுடன் அங்கிருந்து சென்றான் .


முகுந்தனுக்கு பெரும் சூழலில் சிக்கி தப்பியது போல் தோன்ற சிறிதுநேரம் தன்னை ஆசுவாசப்படுத்தியவன் வேகமாய் வெளியில் வந்தான்.


அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவனை பார்ப்பதை பற்றி எல்லாம் கவலைபடாமல் தனது காரை எடுத்தவன் அதை அதிவேகத்தில் செலுத்தினான்.


அடுத்தநொடி அவனின் காரை விட அதிக வேகத்தில் ஒரு லாரி அவனின் காரை நோக்கி வந்தது.



**************************************************


"ஏய் சித்து....!! இங்க என்னடி பண்ற??" என சித்ராங்கதாவை கேட்டுகொண்டே வந்தாள் கீர்த்தி அவளின் கல்லூரி தோழி .


"லூசு கீர்த்தி !!! மால்க்கு எதுக்கு வருவாங்க ?? கேக்குறா பாரு கேள்வி .ஆமா நீ யார் கூட வந்த? வசந்த் கூடவா ??!!" என கண்சிமிட்டினாள் .


"ப்ச்சே..!!!நீ வேற ஏன்டி வெந்த புண்ணுல வேலை பாய்ச்சிற??"


சித்ராங்கதா புரியாமல் , "என்னடி என்ன ஆச்சி???" எனக் கேட்டாள்.


கீர்த்தியும் ,சித்ராங்கதாவும் ஒரே கல்லூரியில் தான் முதல் இரண்டு வருடம் ஒன்றாய் படித்தனர் . நெருங்கிய நட்பு இல்லை எனினும் விளையாட்டாய் கலாய்த்துக்கொள்ளும் அளவிற்கு பழக்கம் .வசந்த் இவர்கள் இருவரின் சீனியர் மாணவன் .


முதல்வருடம் முழுக்க கீர்த்தி இருக்கும் இடங்கள் எல்லாம் வசந்தின் இருப்பிடமாக அவனிடம் ஒற்றை வார்த்தை கூட பேசாமலே அவன்மேல் காதல் வசப்பட்டாள். அவனுமே இவள் செல்லும் இடங்களில் எல்லாம் கண்களில் காதல் வழிய சுற்றத்தான் செய்தான்.


அதன்பின் இவர்கள் இரண்டாம் வருடம் செல்ல வசந்த் தனது படிப்பை முடித்து சென்றிருக்க ,அதன் பிறகு கீர்த்தியும் பாதியில் தன் படிப்பை நிறுத்திவிட்டாள்.


"ஏய் சொல்லுடி ???என்ன ஆச்சி ??"என சித்ராங்கதா கேட்க,


"என்னத்தடி சொல்ல சொல்ற ???அவன் என்னை லவ் பண்ணவே இல்லடி ".


"ஆஆ.... ஏய் !!!!என்ன உளருற , அவன் எப்பவும் நீ இருக்க இடத்துல தான சுத்தி சுத்தி வருவான்".


"அடபோடி...!! அவன் சுத்திவந்ததுலாம் சரிதான், ஆனா அவன் என்னை சுத்திவரலை எப்பவும் என்கூட அமைதியா ஒருத்தி சுத்துவா தெரியும்ல சுருதி ...அவளை தான் டி சுத்திவந்துருக்கான் .
அவளும் என் பின்னாடி தான் சுத்துறான்னு நினைச்சி சும்மாயிருந்துற்க்கா அப்றம் ஒருநாள் அவன் ப்ரொபோஸ் பண்ணும்போதுதான் அவளுக்கே தெரிஞ்சிருக்கு . இத அவ அன்னிக்கு அழுதுட்டே வந்து சொல்லும்போதுதான் எனக்கே தெரிஞ்சிது ".


"ஓ அப்போ நீ இதுனால தான் காலேஜ் விட்டு போனியா" என சித்ராங்கதா சோகமாய் கேட்டாள் .


"ஹாஹா நீ வேற...உண்மை தெரிஞ்சி கொஞ்சம் பீல் ஆச்சிதான் அப்றம் சரிதான் நம்பளுக்குனு ஒருத்தன் வராமையா போவான்னு அந்த பீல அப்டியே பரோட்டாவை உள்ள தள்ளி அடக்கிட்டேனே" என சிரித்தவள் ,


"எங்க அப்பாக்கு வேலை மாற்றல் ஆகிடிச்சிடி லீவ்லயே எல்லாம் நடந்ததுல யாருக்கும் சொல்ல முடியாம போய்டிச்சி "என்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள் .


அவளோ பேசிவிட்டு சென்றதில் இப்பொழுது சித்ராங்கதாவின் மனத்தில் புயல் வீசியது .


"நம்ப அதிரடி பார்ட்டி இப்டி எதாவது சொல்லிடுமோ ??? சே சே...!!அவன் நம்பள பார்க்க தான் காலேஜ்க்கு வந்திருப்பான் .இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி கூட எப்பவும் போல விளையாட்ட தான பேசினான் " என யோசிக்க,


அவளின் மனமோ , "விளையாட்டாய்!!! ஆமா அவன் எப்பவும் உன்கிட்ட விளையாட்டாதான பேசீர்க்கான்".


"என்ன நீ ! தேவையில்லாம பேசாத அன்னிக்கு அவன் வீட்டுக்கு போனப்போ அவனோட கண்ணுல காதல் தெரிஞ்சிதே ??" என அவள் மனதை கொட்டி உள்ளே அனுப்ப ,


அதுவோ மீண்டும் திமிறிக்கொண்டு வந்து ," காதல் தெரிஞ்சிதா!!??? அது எப்படிமா அந்த மைதாமாவு மூஞ்சில எனக்கு எப்பவும் உணர்ச்சி எதுவும் தெரில இதுல உனக்கு கண்ணுல காதல் தெறித்து காதுல பாசம் வழியுது???" என கவுண்ட்டர் கொடுத்தது .


மனதுடன் சண்டை போட்டுகொண்டு வந்த சித்ராங்கதாவை ஓர் கரம் பிடித்து இழுத்தது . யார் என்று நிமிர்ந்து பார்த்தாள் அங்கு மித்ராளினி நின்றிருந்தாள்.


"இல்ல..!!! அது நீங்க ஏதோ யோசனையில் கவனிக்காம போனீங்க ,அதான் கை புடிச்சி இழுத்தேன் "என சிரித்தவாரே சொன்னாள்.


"ஓ...!!!அது ஒண்ணுமில்லை சும்மா தான் . ஆமா நீங்க என்ன இங்க நிக்குறீங்க ??" என கேட்க,


"அது எனக்கு தெரிஞ்சவங்கள பார்த்தேன் அதான்".


"அப்படியா ஆனா இந்த விஷ்வாவும் ,அம்மாவும் உங்களுக்கு எதுவும் நியாபகம் இல்லனு சொன்னாங்க "என சித்ராங்கதா யோசனையாய் கேட்க,


"ம்ம்ம் ஆமா..!!! எதுவும் நியாபகம் இல்லை தான் ஆனா இவங்களோட இருந்த நினைவுகள் மட்டும் ஒன்னு ரெண்டு இருக்கு" என சிரித்துகொண்டே சொன்னாள்.


"இவங்களால எப்படி இப்படி எப்பவும் முகத்துல சிரிப்போடவே இருக்க முடியுது "என எண்ணிய சித்ராங்கதா அதை வாய்விட்டு சொன்னாள்.


"நீங்க எப்படி இப்படி எப்பவும் முகத்துல சிரிப்போடு இருக்கீங்க .உண்மையா சொல்லனும்னா உங்க சிரிப்பே எதிர்ல இருக்கவங்கள சுலபமா கவர்ந்துடும் போல " என வியந்தவள் , "சரி சரி ...வாங்க போலாம் ,இல்ல மிஸ்ஸஸ்.ரவி நம்பள வறுத்தெடுத்துடுவாங்க " என அவளை அழைத்து சென்றாள்.


அவள் சொல்லியவுடன் மித்ராளினிக்கு மீண்டுமாய் அக்குரல் காதில் ஒலித்தது .


"ஏய் ராணிமா !!! உன்னோட ஒத்த சிரிப்பு போதும்டி என்னோட மொத்த கஷ்டமும் ப்புனு பறந்துபோயிடும் . சத்தியமா சொல்றேன் நீ சிரிக்கும்போதுலாம் அப்டியே அது என்னை மொத்தமா சுருட்டுதுடி "


என கேட்ட குரலில் வழிந்த தாபத்தில் இவளிற்கு இப்பொழுதே அதை தீர்க்க தோன்றியது . தனது எண்ணங்களில் அதிர்ந்தவள் அந்த அதிர்வுடனே சித்ராங்கதாவுடன் சென்றாள்.


***************************************************


இரவு 7 மணி :


"ஏய் நீ இங்க என்ன பண்ற ?"என கேட்ட குரலில் திரும்பிய விஷ்வேந்தர் அங்கிருந்த ஜிஷ்ணுவை கண்டு, "அட போலீஸ்காரருக்கு லவ் கார்ட்ஸ் கிட்ட என்ன வேலை ??"என கேட்டான்.


"ஏன் டாக்டர் லவ் பண்ணும்போது போலீஸ்காரன் லவ் பண்ணகூடாதா ??" என பதிழுக்கு நக்கலாய் இவன் கேட்க...


"ஓ "என கிண்டலாய் உதட்டை குவித்த விஷ்வா ," பண்லாமே பண்லாமே!!" என சொல்லி சென்றான் .


இருவரும் தத்தம் மனதிற்கு பிடித்த பொருட்களை தங்கள் காதலிக்கு வாங்கினர் .


இதற்க்குபின் வரிசையாய் வேலை இருக்க ஷாலினி திரும்ப வரும்பொழுது அவளை ஆச்சர்யப்படுத்துவதற்க்காய் விஷ்வா வாங்கினால் ,


நாளை எப்படியாவது தனது காதலை சித்ராங்கதாவிடம் சொல்லிவிட வேண்டும் "பாவம் என் செல்லம் ரொம்ப நாள் வெயிட் பண்றா" என ஜிஷ்ணு அவனவளிடம் காதலை சொல்லி பரிசளிப்பதற்க்காய் சிலவற்றை வாங்கினான்.


நாளை இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என தெரியாமல் இருவரும் தங்களது மனதில் வீற்றிருப்பவர்களுக்காய் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கினர்.



****************************************************


"பெரியத்தான் ! நான் மும்பை வந்துட்டேன் இப்போ எங்க வரட்டும்??" என ஷாலினியின் குரல் உற்சாகமாய் போனின் வழியாய் ஜித்தேந்தரின் காதில் கேட்டது .


"ஷாலினி நான் இப்போ .......ஹாஸ்ப்பிட்டல்க்கு போய்ட்டு இருக்கேன். நீ நேரா அங்க வந்துடு" என சொல்லியவன் அவ்வளவு தான் என்பதுபோல் போனை கட்செய்தான் .


"ஆங் !!! அதுக்குள்ள கட் பண்ணிட்டாரா?? ம்ம்ம்ம் இவர் இவ்ளோ பேசுனதே அதிகம் .ஆமா ஏதோ பேர் சொன்னரே ம்ம்ம் ..............ஹாஸ்ப்பிட்டலா இந்த பேர எங்கேயோ கேட்ருக்கனே??" என யோசித்தவாரே டாக்சி பிடித்தாள்.


"கிதர் ஜானா ஐ(எங்க போனும்)?"



" இந்தர் ஹார்ட்ஸ்பேஷாலிட்டி இஸ் தவாகனா ஜானா ஹை " (இந்தர் இதயமருத்துவமனை போங்க ) ணா.



-கரைவாள்...
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 19 :


"அத்தான் !!!! அப்போ நான் வந்ததே வேஸ்டா??!!!"என்று ஷாலினி கத்திக்கொண்டிருக்க ,ஜித்தேந்தர் அதை கண்டுகொள்ளாமல் தனது வழக்கமான வேகநடையுடன் முன்சென்று அந்த அறையின் கதவை திறந்தான் .


திறந்தவன் அமைதியாய் அவளை திரும்பி பார்க்க ,அவனின் கண்களில் "உள்ளே செல்" என்னும் செய்தி இருந்தது .


இனி அவனிடம் பதில் கிடைக்காது என தெரிந்துகொண்டவள், உள்ளே நுழைந்து கதவை தாழிடும்வரை அங்கு நின்ற ஜித்தேந்தர் எதிரிலிருக்கும் அவன் அறைக்கு சென்றான் .


உள்ளே சென்ற ஷாலினியோ , "தனியா கஷ்டபடுறாரே நம்பளும் இந்த பொறுப்புல இருக்கோமேன்னு ஓடிவந்தா..... ஹாஸ்பிட்டல் எம்டி இல்லை நாளைக்கு அவரை பார்த்துட்டு உடனே கிளம்ப வேண்டியதா இருக்கும்ன்றாரு. சரி ஏதோ கண்டுபிடிச்சிட்டாருபோல நம்பளுக்கும் சொல்வாருன்னு பார்த்தா , எந்த கம்மை போட்டாரோ வாய தொறக்கவே இல்லை.


இவர் கிட்ட கேள்விகேக்குறதுக்கு நானே சுவத்துல என் தலையை முட்டிகலாம் , சே அண்ணனும் தம்பியும் இந்த வார்த்தையை எத்தனை வாட்டி தான் நம்பளை சொல்ல வைப்பாங்களோ ??


தம்பிகிட்ட கேள்விகேட்டா ஒரு கேள்விக்கு ஆயிரம் பதில் சொல்லி நம்ப உசுர வாங்குவார். அண்ணன் கிட்ட கேள்விகேட்டா பதிலே சொல்லாம உசுர வாங்குவார் , என்ன டிசைனோ இவங்க எல்லாம் !!!!!!" என புலம்பிகொண்டே விஷ்வாவிற்கு அழைத்தாள்.


"ஏய் குட்டச்சி...!என்ன அதிசயமா நீயே கால் பண்ணிருக்க ? பார்த்து ஒருநாள் கூட ஆகல அதுக்குள்ள இம்புட்டு ரெஸ்பான்ஸ் ஆஹ் ? இது தெரிஞ்சிருந்தா முன்னாடியே எங்கனா உன்ன துரத்திவிட்ருப்பனே , என்னடி காத்தாயி..!!! உன் செல்ல அத்தானை மிஸ் பண்றியோ???" என்று ஷாலினி நினைத்ததுபோலவே ஆயிரம் கேள்வி கேட்டான் .


"ஷொப்பா ....! எத்தனை கேள்வி ....கொஞ்சம் மூச்சுவிட்டு பேசு அத்தான், எப்பப்பாரு லொடலொடன்னு பேசிகிட்டு .பேசாம அவர்ட்ட அது என்ன கம்முனு கேட்டு உனக்கு ஒட்டிவிட்டுலாம் போல!!".


"அடியே காத்தாயி ! அத்தான் கிட்ட ஆசையா பேச கூப்பிட்டிருக்கன்னு பார்த்தா என்னடி நீ !!! சும்மா கும்முனு பேசுவனு பார்த்தா ஏதோ கம்முனு சின்னபுள்ளத்தனமா பேசிட்டிருக்க.?? டேய் விஷ்வா! இந்த ஜென்மத்துல உனக்கு வாய்ச்சது இது தான்போல டா "என சத்தமாய் புலம்ப ,


"அச்சோ ....அத்தான் ! நீங்க இப்படியே மொக்கபோட்டுட்டு் இருந்தா நான் சொல்லவந்ததயே மறந்துருவேன் .நான் நாளைக்கு காலையில கிளம்பி மதியமே சென்னை வந்துருவேன் .என்னை கூட்டிட்டு போக வந்துருங்க அதை சொல்ல தான் கூப்பிட்டேன் , வழக்கம் போல லேட்டா வராதீங்க அத்தான்".


"அதான பார்த்தேன் , என்னடா நம்ப அத்த மக ஆசையா கூப்புடுறாளேன்னு , உனக்கு டிரைவர் வேலை பார்க்க ஆள் வேணும் அதான" என நக்கலடித்தான் .


"ச்சு ...அத்தான்!!!?காதலிக்கிற பொண்ணுகிட்ட பேசுறமாதிரியா பேசுறீங்க எப்பப்பாரு லூசு மாதிரி உலறிக்கிட்டு .அவனவன் எப்போடா லவ்வர் கூட சுத்தலாம்னு இருப்பான் ஆனா நீங்க??!!!!" என பல்லைகடிக்க ,


"ஏய் ...!என்னடி லூசு , பைத்தியம்ன்னுட்டு இருக்க .....என்னடி சொன்ன என்னை ? காதலிக்கிற பொண்ணுகிட்ட பேசுறது என்ன செயலயே காட்டுரேன் . நாளைக்கு வாடி என் குட்டச்சி ,உன் அத்தானோட காதலுல முழுசா உன்னை மூழ்க வைக்குறேன் ,அப்போ தெரியும் இந்த விஷ்வா யாருனு!!!".


"ம்ம்ம்கூம் ...!போ அத்தான் சரியான வாய்ச்சவடால் தான் நீ".


"ஓ...! அம்மணிக்கு நேத்து காலைல உங்க ரூம்ல நடந்தது மறந்துடுச்சோ ??? சரி அதனால என்ன ?? நாளைக்கு திரும்ப கத்துக்குடுத்துட்டா போச்சி . ஏய் காத்தாயி..!! வேணும்னா இப்போ ஒரு சாம்பிள் குடுக்கட்டுமா??" என்றவனின் குரல் ஆரம்பத்தில் இயல்பாய் ஒலித்தாலும் முடிவில் தாபத்தில் மூழ்கி தத்தளித்தது .


அந்த தத்தளிப்பு ஷாலினியையும் அலைபேசியின் மூலம் அலை அலையாய் சென்று தாக்கியதில் அவளும் அவனின் தாப கடலில் தத்தளிக்க ஆரம்பித்தாள்.


அவர்களின் அந்நிலையில் அபஸ்வரமாய் நுழைந்தாள் மித்ராளினி.


"டாக்டர் " என கூப்பிட்டுகொண்டே மித்ராளினி வர கலைந்த விஷ்வேந்தர் ,"ஹே ஏஞ்சல்!!! நீ எதுக்கு படியேறி வந்த? கூப்பிட்டிருந்தா நான் வந்துருப்பேன்ல "என இயல்பாய் கேட்டவன் , "வா ...வந்து இங்க உட்காரு" என்றான் .


"அது.. வந்து.. நாளைக்கு என்னை வெளிய கூட்டிட்டு போறீங்களா?" என்று தயங்கி தயங்கி கேட்க,


"இதை ஏன் இவ்ளோ தயக்கமா கேக்குற நீ ...??கூட்டிட்டு போனு சொன்னா கூட்டிட்டு போகப்போறேன்".


விஷ்வா போனை கட் பண்ணாமலே பேசிக்கொண்டிருக்க , அந்தப்பக்கம் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஷாலினி , "அடப்பாவி அத்தான்...!!!நான் சொல்லும்போது மட்டும் டிரைவர் வேலை பார்க்கணுமான்னு கேட்டியே ??"என கத்த, பாவம் அது விஷ்வாவின் காதிற்கு கேட்கவில்லை .


"டாக்டர் , அது ...நாளைக்கு கோவிலுக்கு போகணும் . ஆன்ட்டி வேற நாளைக்கு சாவித்திரி ஆன்ட்டியை பார்க்க போகணும்னு சொன்னாங்க அதான் அவங்களை தொல்லை பண்ண வேணாம்னு ...நீங்க... வருவீங்களா ...??"என மீண்டும் தயங்க,


"என்கிட்ட உனக்கு எந்த தயக்கமும் வேணாம் ஏஞ்சல்...!! நிச்சயம் நம்ப நாளைக்கு போகலாம். அப்படி எனக்கு ஹாஸ்பிட்டல்ல வேலை இருந்தாலும் எப்படியாவது உன்னை அங்க கூட்டிட்டு போய்டுறேன் ஓகேவா" என்றான்.


அவன் பேசும்வரை அங்கு இருந்த மித்ராளினி அவன் பேசிய அடுத்த நொடி "சரி" என தலையசைத்து சென்றுவிட்டாள் .


தன் அறையின் உள்ளே கூட வராமல் , அந்நியனுடன் பேசுவதுபோல் அவள் தயங்கி பேசி சென்றதில் ஒரு நொடி அவனின் முகம் சுருங்கியது . ஒரு நொடி ஒரேயொரு நொடி தான் பின் மீண்டும் இயல்பாய் புன்னகைத்தவன் , "மை ஸ்வீட் ஏஞ்சல் !!சீக்கிரம் சரியாகிடு , ஐ மிஸ் யூ " என முணுமுணுத்தவனின் குரலில் நேசம் வழிந்தது .


இவனின் முணுமுணுப்பு சரியாய் கேட்காததால்,"டேய் அத்தான் !!!! நான் இன்னும் லைன்ல தான் இருக்கேன்.. பேசு" என ஷாலினி கத்தினாள் .


ஒருவழியாய் அது விஷ்வாவின் காதில் விழ ,"அய்யயோ...!! குட்டச்சி லைன்ல இருக்குறதை மறந்துட்டோமே!!!! அடிவாங்க ரெடி ஆகிக்கோ விஷ்வா" என தனக்குத்தானே தைரியமூட்டிக்கொண்டவன் "ரெடி ஸ்டார்ட் மியூசிக் " என மனதினுள் சொல்லிகொண்டே போனை காதில் வைத்து "ஹலோ!!!" என சொல்ல,


"..............."


"ஹீஹீ !!!! ஹாஹா !!!!அப்டியாமா .... ஆ... ஏய் ...வேணாம் வேணாம் குட்டச்சி ...நான் உன் ஒரே ஒரு காதலன் டி ..இப்படிலாம் பேச கூடாது".


"டேய் அத்தான்....!இம்புட்டு பச்சபச்சயா திட்டுறேன் அப்பவும் எப்படிடா சிரிக்குற ??".


'ஹாஹா , கம்பெனி சீக்ரெட்லாம் வெளிய சொல்லமுடியாது குட்டச்சி".


" போடாங்...!என்னை திரும்பவும் திட்ட ஆரம்பிக்க வைக்காதத்தான் . நான் இப்போ தான என்னை கூப்பிட வரணும்னு சொன்னேன் , அவங்ககிட்ட அவங்கக்கூட போறதா சொல்ற??" என கேள்விகேட்க ,


"அடடா ..!!இந்த விஷயத்தை யோசிக்காம போய்ட்டனே , ஏற்கனவே வண்டி வண்டியா கழுவி ஊத்துறா . நாளைக்கு போகலனா நம்பள பொடிமாஸ் போட்டாலும் போடுவா . அதுமில்லாம சர்ப்பரைசை வேற அவ வரதுக்குள்ள பண்ணனும்" என யோசித்துக்கொண்டு அமைதியா இருக்க ,


இவனின் அமைதியில் கடுப்பாகிய ஷாலினி, " அப்போ அவங்க தான் உனக்கு முக்கியமா அத்தான் . எப்பவும் நான் தான் உன் வாழ்க்கைனு சொல்லுவ ,இப்போ அவங்க வந்தப்பறம் நான் முக்கியமில்லாம போய்ட்டேன்ல" என வார்த்தையை விட ,


அவளின் வார்த்தை சந்தேகமாய் அல்லாமல் காதலுக்குரிய பொறாமையுடன் வந்தது என சரியாய் புரிந்துகொண்ட விஷ்வா , "இதுக்கு தான் அந்த குரங்குக்குட்டி கூட சேராதனு சொன்னேன் . மூளை எப்படி ஏடாகூடமா வேலை செய்யுது பாரு" என செல்லமாய் தன்னவளை வம்பிழுத்தான் .


"அத்தாதாதான்....!!!"


"ஹாஹா வுட்றா வுட்றா ...?! நான் தான் நாளைக்கு உன்னை கூட்டிட்டு வர வருவேன் ஓகே வா . அதுக்கு சம்பளத்தை இப்போவே குடுத்தீங்கனா நல்லாயிருக்கும் குடுக்குறியாடி காத்தாயி"என அவன் மீண்டும் காதல் மோடிற்க்கு பட்டனை அழுத்திட்டான் மக்காஸ் வாங்க நம்ப அங்கிட்டு போய்டலாம்.



இன்று அவளின் பேச்சின் உட்பொருளை சரியாய் புரிந்துகொண்ட இந்த காதலன் நாளை தன்னுர்வில் மூழ்கிஅவளின் உணர்வுகளை வார்த்தையால் கொல்லபோகிறான் என்பதை அறிந்த விதி எக்காளமிட்டது.


-------------------------------------------------------------------------------


" மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது...
முரடா உனை ரசித்தேன்...
தொட்டதும் விழுந்துவிடும்
ஆடவன் பிடிக்காது ...
கர்வம் அதை மதித்தேன்...
முடி குத்தும் உந்தன் மார்பு ,
என் பஞ்சு மெத்தையோ....
என் உயிர் திறக்கும் முத்தம் ,
அது என்ன வித்தையோ...
உன்னைப் போலே ஆண்ணில்லையே...
நீயும் போனால்
நான்னில்லையே... "



தன்னவனுக்காக ப்ரத்யேகமாய் அவனின் எண்ணில் சேமித்து வைத்திருந்த பாடல் , அலைபேசியில் ஒலித்ததில் ஆச்சரியத்தின் எல்லைவரை செல்வதுபோல் கண்களை விரித்து பார்த்தாள் சித்ராங்கதா .


"ச்சே !!!தேவைப்படும்பொழுதுலாம் இந்த விஷ்வா எரும கண்ணுல சிக்கமாட்டான். அவன் இருந்திருந்தா இது நிஜமானு அவனை கிள்ளி பார்த்துருக்கலாம் " என்று உச்சுக்கொட்ட ,


இடையில் குறுக்கிட்ட மனசாட்சி," நீ கிள்ளி இருப்ப பதிலுக்கு அவன் போன்ல யாருனு ஆராய்ச்சி பண்ணி அவரோட வீட்டுவாசல்ல போய் நின்னாலும் நிப்பான் "என சொல்லியது.


"ஆமா ஆமா இவன் செஞ்சாலும் செய்வான்"என அவள் மனசாட்சியுடன் பேசிக்கொண்டிருக்க , போனில் பாட்டு ஒலித்து நின்றது.


"அச்சோ..! போன் கட்டாகிடிச்சே "என நகத்தை கடித்தவள் , எல்லாம் இந்த விஷ்வாவால என அதற்கும் அவனையே வறுத்தவள்,
மீண்டும் அலைபேசி ஒலிக்க வேகமாய் பாய்ந்து எடுத்து "ஹலோ!!" என்றாள்.


"ஏய் !!! என்ன இவ்ளோ வேகமா ஹலோ சொல்ற பாய்ந்து வந்து எடுத்தியோ ? அப்போ முதல் தடவை பண்ணும்போது வேணும்னே தான் எடுக்கலை போல ,அவ்ளோ ஆகிடுச்சா ??" என்று அந்தபக்கத்திலிருந்து ஜிஷ்ணு அனல் அடிக்க கேட்டதில்,


"டேய் மைதாமாவு ...!!!என்னடா என்ன ?? அதிசயமா பண்ணிருக்கியேன்னு ஷாக்ல எடுக்காம விட்டேன் அதுக்கு ஓவரா பேசுற!!! ஏய் ரவுடி பேபி.. பிச்சிடுவேன் பாத்துக்கோ " என பதிழுக்கு அதிகாரமாய் மிரட்டினாள்


"சரி சரி பேபி ...!நான் சும்மா தான் கேட்டேன் ...ம்ம்ம் என்ன பண்ற ?"( அட பக்கிப்பயலே உனக்கு நான் எம்புட்டு பில்டப் குடுத்துருந்தேன் நீ என்னனா இந்த புள்ளபூச்சிக்கலாம் பயந்து மானத்த வாங்குற ...கேட்டா காதல்ல சகஜம் சொல்லுவ எரும எரும ) .


"ரவுடி பேபி ..!!!உண்மையாவே நீதான் பேசுறியா இல்ல வழக்கம் போல நான் கனவு எதுனா காணுறனா என்ன ?" என நம்பமுடியாமல் சித்ராங்கதா ஆச்சரியமாய் கேட்டதை கண்டுகொள்ளாதவன்,


"அப்போ தினமும் நான் உன் கனவுல வரனா பேபி !!!"என குரலில் காதலை குழைத்துக் கேட்டான்.


அதில் தான் உளறியது புரிந்து நாக்கை கடித்தவள் ,"ம்ம்ம்ம்ம் ... ஆமா ஏன் இப்போல்லாம் எங்க காலேஜ் பக்கம் வர்றதில்ல நீங்க ?"என பதிலுக்கு வேறு கேள்வி கேட்டு திசைதிருப்ப ,


அவனும்,"அதான் பாப்பாக்கு காலேஜ் முடிஞ்சிடிச்சே பேபி!!" என ஏதோவொரு நியாபகத்தில் சொல்லியவன் சொல்லியபிறகே , தான் சொன்னதை உணர்ந்து, "அது பெரிய கதை பேபி உன்கிட்ட நான் எதுவுமே சொன்னதில்லைல .... அது பாப்பா - னு "சொல்ல ஆரம்பித்தவனை தடுத்தது அவனின் தொலைபேசிக்கு வந்த மற்றொரு அழைப்பு .


அதை பார்த்தவன் ," பேபி ! கமிஷ்னர் கூப்புட்றாருடா . நாளைக்கு *** வந்துரு...உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும் .உனக்கு இல்லை இல்லை நம்மளுக்கு முக்கியமான ஒரு விஷயமும் இருக்கு.... பை டா ..சாப்பிட்டு தூங்கு " கடகடவென சொல்லி வைத்துவிட்டான்.


"ஹலோ...ஹலோ...!!!!சரியான அதிரடி பார்ட்டி நம்ப ரவுடி பேபி , பேசுறத பார்த்தா லவ் சொல்ல கூப்புட்றா மாதிரி தான் இருக்கு ஆனாலும் பாரு ஏதோ கணக்கு வாத்தியார் கிட்ட வாய்ப்பாட்டு ஒப்பிக்குற மாதிரி ஒப்பிச்சிட்டு போறத" என அவள் பாட்டிற்கு மனதிற்குள் பேசிக்கொண்டு அந்த பால்கனியில் நின்று கொண்டிருக்க பின்னாடி ஒரு ஜீவன் அவள் கவனிக்குறாளா இல்லையா என்று கூட தெரியாமல் அவளிடம் பேசிக்கொண்டிருந்தது .


நாளை ஷாலினியை கூப்பிடுவதற்கு மட்டுமின்றி சர்ப்ரைஸை அவளின் அறையில் வைக்கவேண்டி இருப்பதால் , மித்ராளினியை எப்படி கூட்டி செல்வது என்ற யோசனையுடன் இருந்த விஷ்வேந்தர் , "ஐடியா ! அதான் நம்ப குட்டிகுரங்கு எப்பவும் வெட்டியாவே சுத்துமே . ஒரு சாக்லேட் வாங்கிக்குடுத்து போயிட்டுவானு சொன்னா போப்போறா "என்று சித்ராங்கதாவை தேடி அவளின் அறைக்கு வந்தான் விஷ்வேந்தர் .


அவள் பால்கணி புறம் திரும்பி இருக்க இவன் பாட்டிற்கு ,"சித்து...!! நாளைக்கு ஏஞ்சல் கோவில் போகணுமாம் நீ கூட்டிட்டு போடி . எனக்கு முக்கியமான வேலை இருக்கு.. கிளம்பும்போது சொல்லுங்க நான் வந்துறேன் சரியா??" என்றவன்_ "குட்டிகுரங்கே ..!!என்ன அமைதியா இருக்க???" என அவளை பிடித்து திருப்பினான் .


திடீரென திருப்பியதில் ஒரு நிமிடம் பயந்தவள்," ச்சே...!! நீதானா ???நான் பயந்தே போய்ட்டேன்" என்ற சித்ராங்கதா, எங்கே அவன் போனில் பேசியதை கேட்டிருப்பானோ என முழித்துக்கொண்டிருந்தாள்.


"என்ன திருட்டுத்தனம் பண்ண இப்டி முழிக்குற ? நேத்தே உன் முகம் சரிஇல்லையே ஒருவேளை ரொம்ப நேரம் உன்முகத்தை கண்ணாடில பார்த்துடியோ ??"என கலாய்த்தவன் ,


"சித்து குட்டி...!எதாவது பிரச்சனையாடா??? எதுவா இருந்தாலும் அண்ணா கிட்ட சொல்லுடா"என பாசமான அண்ணனாய் அவளின் தலைகோதி விசாரித்தான் .


அவனின் பாசம் அறிந்ததுதான் என வழக்கம்போல் மனதில் பூரித்தவள்... எங்க அவன் எதுனா கண்டுபிடிச்சிடப்போறானோ என்று "என்ன அதிசயமா இங்க வந்திருக்க??" என பேச்சை திசைமாற்றினாள்.


அவளை விசித்திரமாய் பார்த்தவன் , "அப்போ இவ்ளோ நேரம் நான் சொன்னதை கவனிக்கலையா??" என சந்தேகமாய் கேட்க ,


"ஆத்தி..!! இவன் என்ன சொன்னான்னு தெரிலையே!!???", எப்படியும் வழக்கம்போல மொக்கதான் போட்ருப்பான் என நினைத்து , "அது ... கேட்டுச்சு இதை நான் கீழ வரும்போதே சொல்லிற்கலாமேனு கேட்டேன் ".


"ஓகே டா ! அப்போ உனக்கு ஓகேல... நான் போறேன் தூக்கம் வருது நீயும் தூங்கு "என சொல்லி சென்றான் .


ஒருவேளை சித்ராங்கதா அவன் என்ன சொன்னான் என்பதை திரும்பவும் கேட்டிருக்கலாமோ ? என நாளை வருந்தப்போவதை அறியாமல் தன்னவனை கனவில் சந்திக்க தயாரானாள் .( தூங்க போறாங்க ).


*******************************************************


தூங்கலாம் என சென்ற விஷ்வாவிற்கு ஜித்தேந்தர் , தன் மகன் தூங்குவதற்காக தான் பாடும் பாட்டை அனுப்பியிருக்க ,


அதை கொடுப்பதற்காகவும் , சித்ராங்கதாவுடன் செல்ல சொல்வதற்கும் மித்ராளினியை தேடி சென்றான் .


"ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நேர் இவரோ...
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ...
மூச்சிப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுப்பட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காம நீ விளக்கி தூங்காமத் தூங்கு கண்ணே
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிராரோ... ஆரிரோ ஆரிரரோ...
ஆராரோ ஆரிராரோ... ஆரிரோ ஆரிரரோ... "




அவன் வரும்பொழுது மித்ராளினியே அந்த பாடலை பாடி மித்ரேந்தரை தட்டி தூங்க வைத்துக்கொண்டிருந்தாள் .


அதை பார்த்த விஷ்வேந்தர் , "பாருடா!!!! ஏஞ்சலும் அதே பாட்டு பாடுறாங்க . ஆமா ஏன் எல்லோரும் ஒரே பாட்டே பாடுறாங்க ??? கமான் விஷ்வா.. நீ புதுசா எதுனா யோசிடா, ம்ம்ம்ம் ஹான் திருப்பி போட்டா என்ன ?? ஆரிராரோ ஆராரோ ...ஆரிராரோ ஆராரோ "என தனக்கு தானே பாடிகொண்டே அவன் அறை சென்றான் .


இங்கு மித்ரேந்தரை தட்டிக்கொடுத்த மித்ராளினி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள் .


"ஏன் இந்த குட்டிய பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் , இவனோட இந்த பிஞ்சு கை , கால்கள் மேல படும்பொழுது பரவசமாவும் இருக்கு . சத்தியமா இது என்ன உணர்வுன்னு எனக்கு சொல்ல தெரியலைடா செல்லம், ஆனாலும் உனக்கும் எனக்கும் நடுவுல ஏதோ ஒன்னு இருக்குனு தோணுது !!"என மீண்டும் அவனை முத்தமிட்டவளின் மூளைக்குள் ஏதேதோ நிகழ்வுகள் சிறிதுசிறிதாக தெளிவில்லாமல் வந்தது .



அதே சமயம் அங்கு மும்பையின் மிகசிறந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் அறையில் பால்கனியில் வானை பார்த்தவாறு நின்றிருந்த ஜித்தேந்தர் , விஷ்வாவிற்கு பாடலை அனுப்பியபின் தனது மொபைலில் இருந்த புகைப்படத்தை பார்த்தவாறு சுவற்றில் சாய்ந்திருந்தான் .


அவனது நினைவுகளும் சற்று பின்னோக்கி காட்சிகளுடன் நகர , அதே நிகழ்வுகள் மித்ராளினிக்கு தெளிவில்லாமல் வந்தது .


" பாவா...! இங்க வாங்களேன் .. குட்டி ரொம்ப சேட்டை பண்ணுவான் போல இப்பவே இந்த உதை உதைக்கிறான் . பாவா.... எனக்கு இப்பவே இந்த குட்டிய பாக்கனும்போல இருக்கு , பாப்பாக்கு அந்த கார்த்தி பாடுவான்ல பாவா அந்த பாட்ட தான் தாலாட்டா பாடணும் சரியா??!!" என மித்ராளினி பேசிக்கொண்டிருக்க, அவளின் பாதத்தின் அருகில் அமர்ந்திருந்த ஜித்தேந்தர் தன்னவளின் மதிமுகத்தையே பார்த்திருந்தான்.


சிறிது நேரம் கழித்து , "பாவா..!! எதுக்கு இப்டி பாக்குறீங்க??" என இத்தனை நேரம் வாய்மூடாமல் பேசிக்கொண்டிருந்தவள் வெட்கத்துடன் கேட்க ,


தன் பார்வையில் சிவக்கும் காதலியை கண்டால் எந்த ஆணுக்கு தான் கர்வம் தோன்றாது . ஜித்தேந்தரும் தன்னவளின் வெட்கத்தில் கர்வமாய் உணர்ந்தவன் , "ராணிமாக்கு பாப்பா வரப்போறதுல சந்தோஷம் தான??" என கேட்டான் .


"என்ன பாவா கேள்வி இது ? பாப்பா வரப்போறதுல நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? பெயர் கூட முடிவு பண்டேன் . நம்ப ரெண்டு பேரோட பெயரையும் சேர்த்து " மித்ரேந்தர் " னு தான் குட்டிக்கு வைக்கப்போறேன் என குதுகலித்தாள் .


"பாருடா...! ராணிமா அவங்க பாவாக்கு தெரியாம பேருலாம் முடிவுபண்ணிற்க்காங்க? ஆமாடாமா , உனக்கு இந்தர் - ன்ற பேர் பிடிக்காது தான அப்றம் ஏன் குட்டிக்கு இந்த பேரு??".


" நான் எப்போ அப்படி சொன்னேன் பாவா??" என கேட்க,


"......."


"அச்சோ என் மக்கு பாவா ! நான் அப்படி சொல்லலை ...எனக்கு எல்லோரும் ரசிக்குற நீ நானு போட்டிபோட்டுக்க வைக்குற இந்திரனை விட , வெளிய இருக்க எல்லோரையும் ஒரே பார்வையில அடக்கினாலும் , என்னோட ஓரப்பார்வையிலயே அடங்கிப்போய் என்னை மயக்குற ஜித்தனத்தான் ரொம்ப பிடிக்கும் . நான் இந்தரோட ராணி இல்ல இந்த ஜித்தனோட ஜித்ராணி என அவனின் நெஞ்சை சுட்டுவிரலால் தொட்டு சொன்னாள் ."



அன்றைய நினைவுகள் தெளிவில்லாமல் தற்பொழுது மித்ராளினிக்கு தெரிய குழப்பத்தில் சுழன்றவள்,மயக்கமா தூக்கமா என அறியமுடியாத அளவிற்கு கட்டிலில் கண்கள் மூடி சாய, இதழ்கள் " பாவா...! எனக்கு உங்கள பார்க்கணும் " என்றது .


அதே நிகழ்வுகளை நினைத்துக்கொண்டிருந்த ஜித்தேந்தர், "ராணிமா...! நீ என் பக்கத்துலையே இருக்க ஆனா நான்தான் உன்னை கண்டுபிடிக்காம இருக்கனோனு தோணுது . அதுவும் இன்னிக்கு மனசெல்லாம் ஒருமாதிரி இருக்குடி . ஏற்கனவே ஒருதடவை இப்டி இருந்தப்போ தான் நீ என்ன தவிக்கவிட்டு போன ...." என்று மருகியவன்,


"எங்கடாமா இருக்க நீ ?? உன் பாவாக்கு பயமா இருக்குடாமா , ஏதோ தப்பா நடக்கபோகுதுன்னு தோணுட்டே இருக்கு "என புலம்பிக்கொண்டே பல கோடிகளுக்கு வாரிசானவன் அந்த தரையிலே படுத்துவிட்டான் .


இவர்களின் காதலின் துயரில் இறைவனும் ஒரு நொடி வருத்தத்துடன் தாமதித்ததில், அவர் தடுப்பதற்கு முன் தேவதை "ததாஸ்து" என்றிருந்தது .


நாளை விடியல் இந்த மூன்று ஜோடிகளுக்கும் எதை வைத்துக்கொண்டு காத்திருக்கிறதோ ???



- கரைவாள் ...
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 20


பிப்ரவரி 16 :



ஒவ்வொருமுறை பூமிஅழகி தன் காதலை நிராகரிக்கும்போதும் வலியுடன் மரித்துபோகும் ஆதவன் , தான் கொண்ட காதலில் தளராமல் மீண்டுமாய் தன்னவளை தேடி ஆர்பாட்டமாய் வெளிவரும் காலை பொழுது .


பலபல காதல்களையும் , சந்தேகங்களையும் , வலிகளையும் , அழுகைகளையும் தாங்கியவாறு இந்த நாள் முடிய விருப்பது அறியாமல் அறுவரும் ( நினைவு + உணர்வு +உயிர் அலையில் தத்தளிப்பவர்கள் ) அந்த விடியலை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் .


விஷ்வேந்தரும் , ஜிஷ்ணுவும் தத்தம் காதலியின் வருகைக்காக தயாராக ,
ஷாலினியும் , சித்ராங்கதாவும் அவரவர் காதலரை பார்க்க கிளம்பினர் .


அழகிய பொம்மையாய் ரோஜா வண்ண சுடிதாரில் சித்ராங்கதா இறங்கி வர , அவளை பார்த்த விஷ்வேந்தர் , "பாருடா...!! அதிசயமாய் குளிச்சியா என்ன கொஞ்சம் அழகா இருக்குற ??".


"டேய் ...!! ஒருவாரமா ஒரே பேண்ட்டை துவைக்காம போட்ற அழுக்குமூட்டை நீ என்னை சொல்றியா ?"


"ஹீஹீ ...!!இப்படி கம்பெனி சீக்ரெட்லாம் வெளிய சொல்லகூடாது " என அவன் அசடுவழிய ,அவனை காரித்துப்புவது போல் பார்த்தாள் சித்ராங்கதா .


"விடு..விடு... !!!மொதல்ல கிளம்புங்க. இதோ ஏஞ்சலும் வந்தாச்சு" என சித்ராங்கதாவிடம் சொல்லியவன் , "இது என்ன எப்பவும் நீ மித்ரேந்தர் குட்டிய தூக்கிட்டே திரியுறீங்க ஏஞ்சல்" என மித்ராளினியிடம் கேட்டான் .


தூயவெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிகப்பு வண்ண பூக்கள் பதித்த சுடிதாரில் , மித்ரேந்தரை வாகாய் அணைத்தார்ப்போல் தூக்கிவந்தவளை பார்க்க அத்தனை பாந்தமாய் இருந்தது .


விஷ்வாவின் கேள்விக்கு , "என் கை நான் தூக்குறன் உனக்கென்ன ??"என இயல்பாய் கேட்டவள், கேட்டபின்பே என்ன நினைப்பார்களோ என திருதிருவென முழித்தாள்.


விஷ்வா ," ஹாஹா...!! நம்ப உண்மையான ஏஞ்சல் வெளிய வராங்க டோய் " என சிரிக்க ,


"அது... ஆண்ட்டி சாவித்ரி ஆன்டியை பார்க்க போயிருக்காங்க , ரவி அங்கிளும் சீக்கிரமே கிளம்பிட்டாங்க , நான் தான் குட்டி என்கிட்டவே இருக்கட்டும்னு சொல்லிட்டேன்" என்றாள் .


"சரி சரி ...நீங்க இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும் கிளம்புங்க , ஏய் குரங்குக்குட்டி !!! என்ன அமைதியா நிக்குற ? நான் சொன்னது நியாபகம் இருக்குல்ல வீட்டுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணு நான் வந்து கூட்டிட்டு வரேன் , இப்போ முருகன் அண்ணா வண்டிஓட்டுவாரு".


" கொஞ்சம் வாய மூடு விச்சு!!! இந்த ஷாலினி எரும சரியா தான் சொல்லிருக்கா . உன் அண்ணன் வாய திறந்தா மூட மாட்டான்னு . சரி இப்போ நாம எங்க போறோம் அதுவும் நீ வரல போல" என அவனிடம் வாய் கேட்டாலும் , மனமோ "என் ரவுடி பேபியே ஏதோ அதிசயமா பார்க்கனுன்னு சொல்லிருக்கான் ...அதுலயும் இந்த பக்கி மண்ணை போட பாக்குறானே" என புலம்பியது .


"என்னடி! நேத்து நைட் தான ஏஞ்சல் கூட கோவிலுக்கு போய்ட்டு வா னு சொன்னேன், நீயும் மண்டைய மண்டைய ஆட்னியே??".


"அச்சச்சோ ....!! இதைத்தான் இவன் சொன்னானா இப்போ வரமுடியாது சொன்னாலும் கேள்வி கேட்டு கொல்லுவானே .இவங்க வேற அம்சமா கிளம்பிருக்காங்க, என்ன பண்ணலாம்? "என யோசிக்க ," பேசாம இப்போ போயிட்டு பாதில கிளம்பிடலாம் , இவங்களுக்கு வழி தெரிஞ்சிருக்காதுனு தான் நம்பள அனுப்புறான் "என மனசாட்சி ஐடியா குடுக்க அதற்க்கு கை கொடுத்து பாராட்டி உள்ளே அனுப்பியவள் ,


"ஹான் !!! ஆமா..ஆமா ..ஹீஹீ ...காது தவறி கேட்டுட்டேன் போல ""என சமாளிப்பதாய் நினைத்து உளறினாள் .


"என்னது ! அது வாய் தவறி சொல்லிட்டேன்னு தான வரும்!!???" என்றான் விஷ்வா சந்தேகமாய் .


அவனிடமிருந்து தப்பிக்க ,"எப்பப்பாரு கேள்விக்கேட்குறதே வேலையா வச்சிக்கிட்டு , நீங்க வாங்க நம்ப போவோம் நேரம் ஆகுது" என மித்ராளினி வருகிறாளா என்றுகூட பார்க்காமல் வேகமாய் வெளியே சென்றாள் .


***************************************************************************


காலை 8மணி :


"அத்தான் ....இது விஷ்வா தான????" என ஷாலினி கத்த , ஜித்தேந்தர் எதுவும் சொல்லாமல் அமைதியாய் பார்த்தான் .


அவனின் பார்வையில் ," இது நம்ப விஷ்வா அத்தானே தான் ..லூசு மாதிரி கேள்வி கேக்குறானு பாக்குறாரோ ?? "என எண்ணியவள் வெளியே , "ஹீஹீ ...!!!சின்னத்தான் போட்டோ இங்க எப்படி ??"என கேட்டு அசடு வழிந்தாள்.


அதற்கு அவன் பதில் சொல்வதற்குள் ,


"அண்ணா!!!! நீங்களா ...???வாட் எ சப்ரைஸ் ..."என வேகமாய் வந்து ஜித்தேந்தரை அணைத்துக்கொண்டான் சஞ்சீவ் .


"இது யாரு புது என்ட்ரி???" என ஷாலினி புருவம் சுருக்க ,


"ஹலோ சஞ்சீவ் , எப்படி இருக்க ? பிரகாஷ் எப்படி இருக்கான் ?"என்று


"எங்களுக்கு என்னன்ணா எல்லோரும் நல்லா இருக்கோம் .நீங்க வீட்டுக்கு வந்திருக்கலாமேணா" .


"அது சஞ்சீவ் ! நாங்க ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி தெரிஞ்சிக்க தான் இங்க வந்திருக்கோம் ,அத இங்க பேசினா தான் சரியாஇருக்கும் ...அப்றம் இவங்க ஷாலினி "என்று அவனிடம் சொல்லியவன் ஷாலினியிடம் ,


"ஷாலினி....! இவர் சஞ்சீவ் இந்த ஹாஸ்பிடலோட சேர்மன், இவர் தம்பி பிரகாஷும் நம்ப விஷ்வாவும் ப்ரெண்ட்ஸ் "என்று அறிமுகப்படுத்தினான்.


"ஷாலினியா ....!!" என அவளை அதிர்ச்சியாய் பார்த்த சஞ்சீவ்," நம்ப விஷ்வா ..."என ஆரம்பிக்க, ஜித்தேந்தரின் பார்வையில் பாதியில் நிறுத்திவிட்டான்.


"இந்த பம்பரவாயன் என்ன சொல்ல வந்தான் ?? அத்தானை பார்த்து வேற திருட்டுமுழி முழிக்கிறான் !!" என ஷாலினி யோசிக்க ,


அதை கவனித்த ஜித்தேந்தர்,"நம்ப வந்த விஷயத்தை பேச ஆரம்பிக்கலாமா ??"எனக் கேட்டான்.


"ஹான் !!!!சொல்லுங்கணா , அதுக்குமுன்னாடி நம்ப வெளிய போய் எதாவது சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்" என சஞ்சீவ் சொல்ல,


"அப்பாடி ! இப்பவாவது வந்தவங்களுக்கு சாப்பிட எதாவது கொடுப்போம்னு தோணுச்சே .டேய் பம்பர வாயா இதுக்காகவே இந்த ஷாலினி உன்னை பொழச்சிப்போன்னு விடுறேன்டா "என அவனுக்கு பதிலை மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தாள் .


ஜித்தேந்திர் , " இல்ல சஞ்சீவ்...!! அதற்கெல்லாம் இப்போ டைம் இல்ல .இது ரொம்ப முக்கியமான விஷயம்" என அவளின் பசியில் மண்ணை போட,


இதற்கும் ஷாலினி , "சோறு போச்சா " என மனதிற்குள் கவுண்டர் கொடுத்தாலும் , இது ஜித்தேந்தரின் வாழ்க்கை சம்பந்தபட்டது என அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தாள் .


"சஞ்சீவ் ! போன ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் ஆன பேஷண்ட்ஸோட லிஸ்ட் எனக்கு வேணும்" என ஜித்தேந்தர் கேட்டடற்க்கு,


"ஆகஸ்ட் 18 ஆ ??? அண்ணா நான் நினைக்கிறது சரினா நீங்க "ராணி" என்றவங்களை பத்தியா கேக்குறீங்க ?"என வியந்தான்.


அவனின் கேள்வியில் , இவர் அத்தானோட " ராணிமா "வையா சொல்றாரு என ஷாலினி ஜித்தேந்தரை பார்க்க,அவனோ வழக்கம்போல் உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தான்.


அவனது முகம் உணர்வுகளை தொலைத்திருந்தாலும் , மனமது அவனின் ராணிமாவை சுற்றி சுழல சஞ்சீவின் கேள்விக்கு "ஆம் " என தலையசைத்தான் .


"ஓஹ் ! விஷ்வாவும் பிரகாஷும் தான் அவங்கள இங்க கொண்டுவந்து சேர்த்தாங்கணா . எவ்வளவு ட்ரீட்மெண்ட் கொடுத்தும் அவங்களோட நிலைமை ரொம்ப கிரிடிக்கல்லா இருந்ததுனால கிட்டத்தட்ட ரெண்டு மாசம் இங்க கோமா ஸ்டேஜ்ல தான் இருந்தாங்க.."..


அவன்சொல்ல சொல்ல , ஜித்தேந்தரின் மனம் குற்றவுணர்வில் " என்னை மன்னிச்சுடுடாமா.... நான் இருந்தும் உன்னை இப்டி தனியா கஷ்டபடவிட்டுடனே " என கதறி துடித்தது .


தான் சொல்லி முடித்த பின்பே ஜித்தேந்தரை கவனித்த சஞ்சீவ் , "அண்ணாவோட முகம் ஏன் இவ்ளோ கசங்கி போயிருக்கு ? அப்போ ....ராணி அக்காவ அண்ணனுக்கு தெரியுமா ...அப்போ அந்த விஷயமும் அண்ணாக்கு தெரியுமா??" என சஞ்சீவ் யோசிக்க ,(அது என்னனு அப்றம் பார்ப்போம் டியர்ஸ் ).


ஷாலினியோ , இதுவரை கம்பீரமாகவே பார்த்து வந்த அத்தானை இரண்டாம் முறையாய் கலங்கி போய் பார்த்ததில் அவளின் கண்களும் கலங்கியது .


இவர்களின் நிலையை கவனிக்காமல் கண்களை மூடி கொண்டிருந்த ஜித்தேந்தர் ," இப்போ ராணிமா எங்க ?? "என கேட்டான் . உள்ளுக்குள் அத்தனை கலங்கியிருந்தாலும் அவனின் குரலில் கலக்கமோ தடுமாற்றமோ எதுவும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது .


"அண்ணா !அப்போ அந்த விஷயமா தான் வந்திங்களா ?? அப்படினா நீங்க இங்க வந்திருக்க வேண்டிய அவசியமே இல்ல . ஏன்னா விடை அங்க தான் இருக்கு" என்றான்.


இப்பொழுதும் ஜித்தேந்தர் கண்களை திறக்கவில்லை ,


ஷாலினிக்கு அவன் சொல்வது புரியாமல் , "நீங்க என்ன சொல்ல வரீங்க மிஸ்டர் .சஞ்சீவ் ??" என கேட்க ,


அவன் பதில் சொல்வதற்கு முன்பே ஜித்தேந்தர் , " விஷ்வா " என்றிருந்தான் .


"விஷ்வா - வா "என ஷாலினி இவர் என்ன சொல்கிறார் குழப்பத்துடன் என சஞ்சீவை பார்க்க அவன் "ஆம்" என தலையசைத்தவன் ,


"ரெண்டு மாசமா அவங்ககிட்ட எந்தவித முன்னேற்றமும் இல்லாம இருக்க அப்போ அவங்கள பார்க்க வந்த விஷ்வா, அவங்கள தன்னோட ஹாஸ்ப்பிட்டல்க்கு கூட்டிட்டு போய் பாத்துக்க போறதா சொன்னான் . இதே வேற யாராவது கேட்டிருந்தா நிச்சயம் ஒத்துக்கிட்டிருந்திருக்க மாட்டேன் . அவன் என்கிறதுனால ஒத்துக்கிட்டேன் ...அதுவும் அவனுக்கு "ராணி " அக்கா எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரிஞ்சதுனாலதான் ஒத்துகிட்டேன்".


அவன் இறுதியாய் சொன்னது பாதி தான் என ஷாலினியின் துப்பறியும் மூளை சொன்னாலும் , இப்பொழுது ஜித்தேந்தரின் அருகில் எதுவும் கேட்கமுடியாமல் இருந்தாள் .


இத்தனை நேரம் கண்களை மூடி இருந்த ஜித்தேந்தர் எழுந்து தனது கண்ணாடியை அணிந்தபடி,"ஓகே சஞ்சீவ்...! அப்போ நாங்க கிளம்புறோம் & உன் நேரத்தை வீணாக்கியதற்க்கு சாரி "என்றான் .


"அச்சோ அண்ணா....!! என்ன நீங்க???? ஓகே அண்ணா இப்போ நீங்க உடனே கிளம்பனும்னு புரியுது , நாங்க ஒருநாள் வீட்டுக்கு வரோம்ணா " என்று விடைகொடுக்க,


"சரி" என தலையசைத்த ஜித்தேந்தரை தொடர்ந்து ஷாலினியும் விடைபெற்றுக் கிளம்பினாள்.


***************************************************************************


காலை 9 மணி :


"மித்து.....!!! அது ..என் பிரிண்ட் வர சொல்லிருந்தா . நான் உங்களையும், குட்டியையும் கோவில்ல விட்டுட்டு போயிட்டு வந்துர்றேன் . நான் வரவரைக்கும் அங்கையே இருங்க நான் வந்தப்பரும் விஷ்வாக்கு கூப்டுக்கலாம் ..சரியா ???" என சித்ராங்கதா , மித்ராளினியை தான் வெளியில் செல்வதற்காக சமாளித்து பேச,


"சரி "என்று பதிலுக்கு மித்ராளினி தலையசைத்து விட்டு மித்ரேந்தரை கவனிக்க ஆரம்பித்தாள்


"ஏன் மித்து ...! நீங்க ரொம்ப அமைதியோ ??? எப்பவும் ஒன்று ரெண்டு வார்த்தை தான் பேசுறீங்க.. இல்லனா தலையசைக்குறிங்க ...ஆனா காலையில விஷ்வா கிட்ட பேசுனத பார்த்தா அப்டி அமைதி போலவும் தெரியலையே" இயல்பாய் கேட்க,


அவளின் கேள்விக்கு புன்னைகைத்த மித்ராளினி , ம்ம்ம் எனக்குமே இப்டி அமைதியா இருக்கிறது ஏதோ மாதிரி தான் இருக்கு . ஜிணு கூட சொன்னான் "நீ சரியான வாயாடி " னு .இப்போ மறந்ததுனால இப்படி இருக்கன்னு நினைக்குறேன் .


ஜிணு - வா ? அது யாரு மித்து ? நேத்து கூட அந்த மால்ல யாரையோ பார்த்தீங்கன்னு சொன்னிங்களே அவங்களா ?


ம்ம்ம் ஆமா ..அவங்கள தான் எனக்கு நியாபகம் இருக்கு ஒருவேளை சின்ன வயசுல இருந்தே எனக்கு அவன் அவனுக்கு நான்- னு கூடவே வளர்ந்ததுனால இருக்குமோ என அவளுக்கு தோன்றிய கேள்வியையே சித்ராங்கதாவிற்கு பதிலாய் சொன்னாள்.


அவள் சொல்லியதோ சிறுவயது முதல் தங்கள் இவருக்கான நட்பில் எவரையும் இடையில் கொண்டுவராமல் இருவர் மட்டுமாய் இருந்ததை ,


சித்ராங்கதா புரிந்துகொண்டதோ , அவர்கள் இருவரும் காதலர்கள் போல் என்று .


***************************************************************************


காலை 11.00மணி


"என்ன சின்னமருமகனே!!! வெளிய எதாவது பூகம்பம் வருதா என்ன.. அதிசயமா பாப்பா இல்லாதப்ப வந்திருக்கீங்க ??" என கேலியாய் விஷ்வாவிடம் கேட்டுக்கொண்டே வந்தார் சாவித்திரி .


"அத்தை நீங்களா ?? அம்மா உங்கள பார்க்கவரதா சொல்லியிருந்தாங்க , ரெண்டு பேரும் வெளிய எங்கையும் போலையா??".


"இல்லடா !!! நாங்க போகவேண்டிய இடத்துல 11.30 மணிக்கு வாங்க சொல்லிட்டாங்க அதான் இங்கையே இருந்துட்டோம் " என சொல்லிக்கொண்டு அங்கு வந்தார் நாச்சியார்.


"ஓஒ ...!!! மணி இப்பவே 11.00ஆகுதே கிளம்புங்களேன் ...அப்போ தான சரியா இருக்கும் ".


"யாருக்குடா சரியா இருக்கும்னு சொல்ற??? ஆமா இந்த நேரத்துக்கு நீ ஹாஸ்ப்பிட்டல்ல தான இருந்துருக்கணும் " என நாச்சியார் சந்தேகமாய் பார்த்ததில்,


"ஆமா சின்னமருமகனே!!!! இங்க என்ன பண்றீங்க? அதுவும் எப்பவும் வர உங்க அந்த எருமமாடு வண்டில வராம கார்ல வந்தமாதிரி சத்தம் கேட்டுச்சு " என்று சாவித்திரியும் நக்கல் செய்ய ,


"ஹீஹீ !!! அது ஒண்ணுமில்லை அத்த ...பைக் பஞ்சர் "என ஆரம்பிக்க நாச்சியார் கண்களை உருட்ட ஆரம்பித்ததில் , பட்டென்று இருவரின் கால்களிலும் விழுந்தவன் ,


"எனக்கு சோறுபோட்டு வளர்த்த என் ஆத்தா ,சோறு மட்டுமில்லாம பலகாரமா செஞ்சுபோட்ட என் பாச அத்தை ரெண்டு பேரும் இந்த பச்சை பிள்ளைமேல கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா ... பிளான் சக்ஸஸ் ஆனா ரெண்டு பேருக்கும் 50 லட்சத்துல புடவை வாங்கி குடுத்துறேன் இந்த அடியேனை இப்போ விட்டுடுங்களேன் " என அவன் பாட்டிற்கு கெஞ்சிக்கொண்டிருக்க ,


நாச்சியாருக்கு கண்ணை காட்டிவிட்டு மெதுவாய் வெளியே கூட்டி சென்ற சாவித்திரி ,


"சின்னமருமகனே !!! அங்க என்ன சோபாவோட காலை பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க ??!!! நாங்க கிளம்புறோம் , நீங்களும் சீக்கிரம் கிளம்பிடுங்க "என கத்திவிட்டு சென்றார் .


"சோபா காலா ??!!!" என நிமிர்ந்தவன் அத்தையின் விளையாட்டில் சிரித்துகொண்டே , ஷாலினியின் அறைநோக்கி சென்றான் .


"பாருடா!!!! நம்ப குட்டச்சி ரூம்மை இவ்ளோ அழகா வச்சிருக்கா ...இங்க பாருடா, இவ கூட போட்டோவுல அழகா இருக்கா ..ஒருவேளை க்ராபிக்ஸ் ஆஹ் இருக்குமோ" என கிண்டலாய் நினைக்க ,


"ஓஒ !அவ அழகா இல்லாம தான் சார் பல வருஷமா அவங்க மேல பைத்தியமா திரிஞ்சி்ங்களோ"ஓர் குரல் எகத்தாளமாய் கேட்க,


"சே சே ...!!!இந்த மனசாட்சி கூட அந்த காத்தாயிக்கு தான் சப்போர்ட் பண்ணுது " என்றவன் தான் வாங்கி வந்தவற்றை காரிலிருந்து எடுத்துவந்து, தான் நினைத்தது போல் அவ்வறையை மாற்றினான் .


கடைசியாய் ஒருமுறை அனைத்தும் சரியாய் இருக்கிறதா என பார்த்துகொண்டே வந்தவனின் காலில் ஏதோ இடர , விழுந்தவனின் கையில் கிடைத்தது அப்பொருள் .


அது ஒரு போட்டோ ...மித்ராளினியை அணைத்தார்போல் விஷ்வேந்தர் தூக்கிகொண்டிருப்பது போல் இருந்த புகைபடம் அது .அன்று அதை ஷாலினி சரியாய் வைக்காமல் போக கீழே விழுந்திருந்ததே இப்பொழுது விஷ்வாவின் கையில் கிடைத்திருந்தது .


***************************************************************************


"இந்த விஷ்வா சரியான லூசு அத்தான் ...எப்பப்பாரு ஏஞ்சல் ஏஞ்சல் னு சொன்னாரே பேர சொன்னாரா ??" என விஷ்வாவை அந்த ஹாஸ்ப்பிட்டலிருந்து வெளிவந்ததில் இருந்து திட்டஆரம்பித்தவள் இப்பொழுது சென்னை செல்வதற்க்காய் ஏர்போர்ட்ல் இருக்கும் நொடி வரை திட்டிக்கொண்டிருந்தாள்.


இத்தனை நாள் இவர்கள் அருகிலே இருந்திருக்க எங்கெங்கோ தேடிக்கொண்டிருந்த எரிச்சலில் இருந்தாள் அவள் .


இத்தனை நேரம் அவளின் பேச்சை கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்த ஜித்தேந்தர் , "விஷ்வா ஏஞ்சல் னு சொன்னானா ? "என கேட்டான்.


"ஆமா அத்தான் !!! அந்த பக்கி எப்பவும் அப்படி தான் சொல்லும், இப்போ போன வேற எடுக்க மாட்டிக்கிறான் " என்றவள் சொல்லியபின்பே விஷ்வாவை மரியாதையின்றி சொல்லியதை எண்ணி நாக்கை கடித்தாள் .


"ம்ம்ம்ம் !!! என்கிட்ட மட்டும் பேர சொல்லிருந்தான்னா எப்பவோ உங்கள சேர்த்துவச்சிருப்பேன். அத்தான் உங்களுக்கு விஷ்வா மேல கோபம் இல்லையா ? இத்தனை நாளா நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பிங்க ... ஆனா அவங்க உங்க பக்கத்துலையே இருந்துக்காங்களே , எல்லாம் இவனால" என மீண்டும் விஷ்வாவை வறுக்க ஆரம்பித்தாள் சிறிது நேரத்தில் தான் உடையப்போவதை அறியாமல் .( ஏங்க அந்த குறும்படம் இருந்தா கொஞ்சம் போடுங்க .இந்த பொண்ணுகிட்ட ஜிஷ்ணு மித்ராளினிய அறிமுகப்படுத்திவச்சான்ங்க .இது பயபுள்ள மறந்துட்டு பேசுற பேச்சை பாரு ).


"இத்தனை நாள் நீ என் பக்கத்துலையே தான் இருந்தியாடாமா ? நான்தான் உன்னை கண்டுபிடிக்கலையா ? அப்போ நான் கிளம்புறதுக்கு முன்னாடி நாள் உன்னதான் கூட்டிட்டுவரபோறாதா சொன்னனா ? அப்போ அன்னிக்கு நீ நம்ப வீட்லையே இருந்துருக்க ஆனா எனக்கு எதுவும் தெரியலை ஏன்டாமா ? உன்ன தனியா கஷ்டப்பட விட்டுட்டேன்னு இந்த பாவா மேல கோபமா "என ஜித்தேந்தர் தனக்குள்ளே கேள்விகேட்டுக்கொண்டிருந்தான் .


அவனை கலைத்த ஷாலினி , "அத்தான் நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலயே ? விஷ்வாமேல கோபமா ?"


"நான் எதுக்கு அவன் மேல கோபப்படணும் ? உண்மைய சொல்லனும்னா நான் அவனுக்கு நன்றி கூட சொல்ல கூடாது அவன் அவனோட கடமையை தான் செஞ்சிருக்கான் "என்றவன் தொடர்ந்து ,


"ம்ம்ம்!!! ஒருவேளை அவன் என்கிட்டயும் ஏஞ்சல்னு சொல்லிருந்தாவது நான் கண்டுபிடிச்சிர்ப்பேன் " என்று இதழ்களில் முதல்முறையாக சிரிப்பை நெளியவிட்டவன் " என் ராணிமாவை தவிர வேற யாரு அவனுக்கு ஏஞ்சலா இருக்க முடியும்" என்றான் .


*******************************************************************************************


இங்கு விஷ்வாவோ அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துவிட்டான் . சற்று தள்ளி ஒரு கவரும் கிடைக்க அதில் இருந்த பெயரை கண்டவன்," இது குட்டச்சியோட நண்பனோட பெயராச்சே ...அப்போ குட்டச்சி என்னை சந்தேகப்பட்டாளா ??" என ஒரு மூளை கேள்வி எழுப்ப ,


"இல்ல விஷ்வா ! அவ உன்னோட செல்ல குட்டச்சி , அவ உன்னை எப்பவும் சந்தேகப்படமாட்டா"என அவனின் மனம் சொல்லியது .


"சந்தேகபடாமையா இப்டி உன்னை போலோவ் பண்ணி படம் எடுக்க வைப்பா??" என மூளை தன் வாதத்தை முன்வைக்க ,


"அதில உன்னோட நிறைய படம் இருக்கு விஷ்வா .உன் குட்டச்சி உன்ன பார்க்கணும்ன்றதுக்காக கூட அத எடுக்க சொல்லி இருக்கலாம்ல "என அவளின் மேல் காதல் கொண்ட மனம் சரியாய் கணிக்க ,


"அந்த பொய்யான மனம் சொல்றத நம்பாத , யோசி நேத்துகூட உனக்கு நா முக்கியமில்லை அவங்க தான் முக்கியம்னு உன்னை சந்தேகமாய் கேட்டா தான?? நீ தான் முட்டாள் சரியா புரிஞ்சிக்கல " என மூளை விடாமல் உசுப்பேற்ற ,


"விஷ்வா உன் மனசால யோசி , உன் குட்டச்சி அப்படி பண்றவளா ? நேத்து அவ கேட்டது காதலுக்கே உரிய பொறாமைல தான் "என மனமும் சத்தமிட ,


இரண்டும் மாறி மாறி பேசியதில் பைத்தியம் பிடிப்பதை போல் உணர்ந்தவன் ," ஆஆஆ "என தலையை பிடித்து கத்தினான் .


ஆயினும் தன் உணர்வுக்கு திரும்பமுடியாமல் தலைவலிப்பதை போல் இருக்க , மூளையில் "அப்போ நடுவுல என்கிட்டே பேசாம போனதும் இந்த விஷயத்துனால தான,??" என தோன்ற தாங்கமுடியாமல் அங்கிருந்த அனைத்தையும் உடைக்க ஆரம்பித்தான் .


ஒருகட்டத்தில் உடைப்பதற்கு ஒன்றுமில்லாம போக , இன்னும் தன் மனம் அமைதியாகததில் எங்கே மீண்டும் தான் ஒருவருடம் முன்பான நிலைக்கு சென்றுவிடுவோமோ என பயந்தவன் , அங்கிருந்து வேகமாய் கிளம்பினான் .


இத்தனை நேரம் ஷாலினி, விஷ்வாவிற்கு செய்த கால்கள் அனைத்தும் இணைக்கப்படாமல் இப்பொழுது இணைக்கப்பட்டது தான் விதியோ ??


சரியாய் அவன் வெளியே செல்லும் நொடியில் அவனின் மொபைல் அழைத்தது .


"குட்டச்சி " என திரையில் ஒளிர மீண்டும் அவனின் மூளையும் மனமும் இரண்டாய் பிரிந்து வாதிட ஆரம்பிக்க , அதை தடுப்பதற்காய் போனை எடுத்தான் .


அவன் எடுத்தவுடன் அந்தப்பக்கம் அவள் "ஏஞ்சல்" என ஆரம்பிக்க ,


அவளின் பேச்சில் குறுக்கிட்டவன் , "நீ என்கிட்ட பேசாம இருந்ததுக்கு ஒரு போட்டோ தான் காரணமா??" என கேட்டான் .


அவனின் கேள்வியில் அதிர்ந்தவள் , ஏதோ சொல்ல வர மீண்டும் இடையிட்டவன் ,


"என்மேல் சத்தியமா கேக்குறேன் , நீ என்கிட்ட பேசாம இருந்ததும் இந்த போட்டோ தான காரணம் ?"


அவன் தன்மேல் சத்தியமிட்டதில் மனம் அதிர , "போட்டோவும் ஒரு காரணம் தான் அத்தான் ..ஆனா," என்றவளை தடுத்தவன் ,


"அப்போ என்னோட காதலை சந்தேக பட உனக்கு ஒரு போட்டோ போதும்ல??" என்றவனின் குரலின் பேதத்தை உணர்ந்தவள் பேசுவதற்க்குள்ளாகவே ,


"எத்தனையோ தடவ உங்ககிட்ட சொல்லிருக்கேன் மிஸ்,ஷாலினி வர்தன் , " நான் விளையாட்டா இருக்கலாம் என் காதல் எப்பவும் விளையாட்டு இல்லைனு " . ஆனா ஒரேஒரு போட்டோ.... எப்படிஎப்படி... ஒரேஒரு போட்டோல மொத்தமும் முடிஞ்சிடிச்சி .ம்ம்ம் ரைட் மிஸ்.ஷாலினிவர்தன் , நான் இன்னொரு விஷயமும் சொல்லிருப்பேன் 'என்னிக்கு நம்ப காதல்ல சந்தேகம்னு அது தான் நம்ப காதலுக்கு கடைசி நாள்னு' இனிமே என் வாழ்க்கைலையே நீங்க வரக்கூடாது " என அவளை சிறிதும் பேசவிடாமல் போனை அணைத்தான்.


கண்ணீர் சிந்தும் கண்களை துடைத்துக்கொண்டே அவனின் எண்ணிற்கு மீண்டும் மீண்டுமாய் ஷாலினி முயற்சிக்க , அது எடுக்கப்படாமலே ஒலித்து நின்றது .


"ப்ளீஸ் எடுடா விஷ்வா , எனக்கு உன்கிட்ட பேசணும்டா .நான் எப்படிடா உன்னை சந்தேகப்படுவேன் "என புலம்பிகொண்டே அவள், அவனின் எண்ணிற்கு முயற்சித்துகொண்டே இருந்தாள் .


இங்கோ விஷ்வாவிற்கு தலைவெடிப்பது போல் இருந்தது , சிறுவயதுமுதல் மனதில் அவளை மட்டுமே வைத்து , பலப்பல இன்னல்களுக்கு பின் அவளிடம் காதலை சொல்லியிருக்க .... இன்று அனைத்தும் பொய்த்துப்போனதாய் நினைத்து தன்னிலையில்லாமல் , தன் உயிர் அலை இன்று உயிரற்று போனதில் உணர்வற்று படிகளில் உருள அவனின் தலையின் ஓரம் துளியாய் ஆரம்பித்து வெளிவர ஆரம்பித்தது குருதி .


"எவன் ஒருவன் மற்றவர்களை சிரிக்க வைத்து ரசிக்க வைக்கிறானோ...
அவனிற்கு வலியை மட்டுமே விடையாய் கொடுக்கும் காலம் ...
அது அவனிற்கு

சொந்தமில்லை எனினும்..."


இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு சந்தேகம்
தாங்கிட முடியாது

கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன் காதல்
என்றும் பிரியாதே

காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு
சந்தேகம்
தாங்கிட முடியாது
மேடும் பள்ளம்

இல்லாமல் ஒரு பாதை
இங்கு கிடையாது
பிரிவும்
துயரம் இல்லாமல்
ஒருகாதலின்
ஆழம் புரியாதே
ஓஹோ ஓஓ ஓஓ



- கரைவாள்...
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
ஹாய் டியர்ஸ் ரொம்ப ரொம்ப சாரி💐...இந்த சின்ன பிள்ளைக்கு பரிட்சையை வச்சி பிழிஞ்சி 😰எடுத்துட்டாங்கபா அதான் வரமுடியல. இனிமே எபிஸ் சரியா வந்துரும். இதுவரை பொறுத்திருந்தவங்க இன்னிக்கு இரவு வரை பொறுத்துக்கோங்க இன்னும் சில மணி நேரங்களில் எபியோட 😘😘வரேன் . இப்போ சின்னதா ஒரு டீசர்😍. நம்ப பாவாவை ராணிமாவையும் எப்போ பார்க்க வைப்பிங்கனு என் இன்பாக்ஸ் கதவை உடைத்தவர்களுக்கு 💙 இதோ ஒரு சின்ன லட்டு .சீக்கிரமே பெரிய ஸ்வீட் ஸ்டாலோட வரேன் 😘😘😘😘😘😘


நம்ப ஜித்ராணியின் காதல் அலை :

...............ஏனோ அவளின் மனம் படபடப்பாகியது, அவளின் வாழ்வின் முக்கிய அங்கம் அவளிடம் சேரப்போவதுபோல் ஓர் எண்ணம் அவளுள் ப்ரவாகமெடுத்தது. அதன் தாக்கத்தில் மித்ரேந்தரை தன்னோடு இறுக்கி அணைத்தவளின் கண்கள் வேகவேகமாய் சுற்றுப்புறத்தை ஆராய ஆரம்பித்தது .

அதேநேரம் காரில் அமர்ந்திருந்த ஜித்தேந்தரின் மனதில் இனம்புரியா உணர்வு கட்டவிழ , அது தன்னவளிர்க்கானது என அறிந்திருந்தவன் அவள் அருகிலிருப்பதை உணர்ந்துகொண்டான். சாலையின் ஓரமாய் காரை நிறுத்தியவன், தன் ராணிமாவிற்க்கான தேடலை கண்களில் கொண்டு அவ்விடத்தை ஆராய ஆரம்பித்தான் .

அவனின் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் தன்னவளை காணப்போகும் ஆவலில் குதுகலித்து ஆட்டம் போட இதழ் மட்டுமில்லாமல் கண்களும் சேர்ந்து சிரித்தவாறிருந்தது.

இங்கு மித்ராளினியோ தன்னுுள் ஏற்படும் உணர்வுகளுக்கு அர்த்தம் புரியாமல்போக அதை ஆராயமுற்படாமல் அறியமுற்பட்டாள். ஏதோ ஒரு சக்தி தன்னை தன்னுள் ஆழிப்்பேரலையாய் சுருட்டிக்கொள்ள முற்படுவதை அறிந்தவள் தானும் அதில் சுருண்டுபோக ஆசைகொண்டாள் .

அவ்வுணர்வின் ஈர்ப்பில் மெதுவாய் அப்பூங்காவை விட்டு வெளிவந்தவளின் கண்கள் தன் தேடலை இன்னும் நிிறுத்தவில்லை. தற்பொழுது யாரவது அவளிடம் எதை தேடுகிறாய் என கேட்டாலும் அவளிற்கு விடை அளிக்க தெரியாது. ஆயினும் அவளின் மனம் தன் இணை அங்கிருப்பதை உணர்ந்து அவளை அங்கு சேர்க்க எண்ணி உசுப்பியது.

முன்பைவிட வேகமாய் ஜித்தேந்தரின் இதயம் துடிக்கஆரம்பிக்க எங்கு தன் இதயம் வெளியேவந்துவிடுமோ என அச்சம் கொண்டானோ அது தன்னவளிற்கு சொந்தமானது என தன் கரம் கொண்டு அதனை பொத்திக்கொண்டான் .

வெளியே வந்த மித்ராளினியின் கண்கள் தன் இலக்கை அடைந்ததோ இல்லையோ அவளின் கரங்களில் இருந்த மித்ரேந்தர் தன் தந்தையை கண்டுகொண்டான்.

இவர்கள் நின்றுகொண்டிருந்த அந்த முக்கியசாலையின்( மெயின் ரோட்) மறுப்பக்கம் அவன் நின்றிருந்தாலும் தன் தந்தையை மிக சரியாக கண்டுகொண்டான் புத்திரன்.

ம்நா......நா...ம்ங்க..னா...என குதூகலித்தவன் அவளின் கைகளில் துள்ள , தடுமாறிய மித்ராளினி அவனை சரியாய் பிடித்தவாறு எதிரே கண்டாள்.

பார்த்தவள் பார்வையை விலக்கமுடியாதவாாறு அவனின் முகம் அவளுள் பதிந்து தன் உரிமையை உணர்த்தி அவளின் நினைவை அசைக்க, காதோரமாய் " ராணிமா நான் எவ்வளவு தூரத்துல இருந்தாலும் சரி, எவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல இருந்தாலும் சரி, உன்னோட இந்த பார்வை ஒன்னு போதும் டி எனக்கு, நீ இருக்க இடத்தை கண்டுபிடிக்க...இந்த ரெண்டு கண்ணுலையும் என்னை பார்குறப்போலாம் தெரியுற அந்த காதல் இருக்கே ப்ப்பாஆ ..... சும்மா காந்தம்் மாதிரி என்னை கட்டி இழுக்குதுடி" என காதலில் பிதற்றும் குரல் அட்சரம் பிசகாமல் கேட்டது.

அதன் பிரதிபலிிப்பாய் அவளின் கண்களிலும் அந்த குரலுக்கு குறைவில்லா காதல் வெளிப்பட எதிரிலிருந்தவனையே இமை கூட அசைக்காமல் பார்த்திருந்தாள்.

அந்த குரலின் சொற்கள் உண்மைதானோ ? இவள் தன்னையுமறியாமல் காதல் பொங்க அவனை பார்த்ததில் அவளின் அக்காந்தபார்வை அவன் சொன்னது போலவே அவனின் காதல் மனதை ஈர்த்ததோ என்னவோ அடுத்தநொடி அவன் இவளின்புறம் திரும்பிருந்தான் .

ஏழு கடல் ஏழு மலை தாண்டி என இதை தான் சொல்வனரோ என ஓர் சந்தேகம் ஜித்தேந்தருக்கு எழுந்தது . அவளை கண்ட நொடி சத்தியமாய் அவனின் இதயம் ஒருமுறை துடிப்பதை நிறுத்தி பின் தன் இணையை கண்ட ஆனந்தத்தில் முன்பே விட வேகமாய் மீண்டும் துடித்தது .

அவளை கண்டவனோ தன் உயிர் தன்னுடல் சேர்ந்ததாய் உணர்ந்தான் . அவளை நிதானமாய் உச்சி முதல் பாதம் வரை பார்த்தவாறு தன்னவளை மெதுமெதுவாய் தன்னுள் வாங்கினான்.

இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி அதிகமாயினும், அருகில் செல்லும் நொடியில் கூட அவளை காணாமல் போக கூடாது என அங்கிருந்தே சிறிது சிறிதாய் ரசித்தவனின் உயிர் பூ இப்பொழுதுதான் பூத்ததாய் கொண்டாட்டமிட , கண்களோ அவளின் கைகளில் இருந்த தங்களின் மகவை கண்டு மின்னின .

ஏனோ அவள் தங்கள் மகவை ஏந்தியவாறு தன் வருகைக்காக காத்திருப்பதை தோன்ற அந்த உணர்வை ஆழ்ந்து அனுபவித்தவன் " உன்னோட பாவா வந்துட்டேன் டா ராணிமா " என முனங்கியவாறு ,அது நகரின் முக்கிய சாலை என்பதையும் உணராமல் அதை கடக்க ஆரம்பித்தான்.

அவனை கண்டுகொண்ட அவளின் இதயமும் அவனுடன் இணைய அவளை தூண்ட அவளின் மூளையோ அவன் யாரென அறிய பிரயாதனப்பட்டது. மூளையின் முயற்சியை இதயத்தின் மகிழ்வு தடுக்க உறவறியா உணர்வுடன் அவளும் அவனை நோக்கி தன் எட்டுக்களை எடுத்து வைத்தாள்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top