All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தோஷியின் "நினைவில் தத்தளிக்கும் நேசமது" - கதை திரி

Status
Not open for further replies.

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது :

வத்தலக்குண்டு :

பாண்டியர்கள், சோழர்கள் ,நாயக்கர்கள் என பெறும் அரசர்கள் வம்சம் ஆண்ட பெரிய பெரிய குன்றுகளை தன்னுள் அடக்கி அருமையாக காட்சி தந்த வெற்றிலைக் குன்றே தற்போது பெயர் நழுவி வெத்தலக் குண்டு என்று அழைக்கப்படுகிறது. வத்தலகுண்டு பசுமைக்கு பெயர் போன ஊர், வாழைப்பழம் மற்றும் தேங்காய்காகவே அவ்வூரில் கூட்டம் கூடும்.கொடைக்கானல் போகும் மக்கள் நிச்சயம் இதை தாண்டி தான் போவார்கள்.

வத்தலகுண்டு திருநகரில் அமைந்துள்ளது அந்த வீடு .காலையிலே அந்த வீடு ரொம்ப பரபரப்பா இருக்கு, என்னவாயிருக்கும் சரி வாங்க போய் பாப்போம்.

என்னடா இது கேட்டே (gate) இம்மாம் பெருசா இருக்கு ?? Gate னா நம்ப ஊர்ல இருக்க மாதிரி இல்ல ...அழகா தேக்குமரத்திலயே செஞ்சிருக்காங்க . கேட்டிலேயே ஒருபுறம் அழகா ராமரும் சீதையும் இணைந்து இருப்பது போலவும் மற்றொரு பக்கம் கிருஷ்ணரின் குழலிசையில் ராதை மயங்கி ஆடுவது போலவும் வடிவமைத்திருந்தனர் . வீட்டிற்கு வருபவர் அனைவரும் இறைவனின் அழகைக் கண்டு ,அவனின் ஆசீர்வாதத்துடன் உள்ளே நுழைவது போல் அமைந்திருந்தது. கேட்டை திறந்து உள்ளே போனாள் இரண்டு புறமும் அழகழகாய் பூக்களுடன் மரங்களும் அமைந்திருந்தன. உள்ளே நுழையும் பொழுதே பூக்களின் வாசம் நாசியை தாக்கியது . நிச்சயம் வீட்டிற்கு வருபவர்களின் மனம் மகிழ்ச்சியை தத்தெடுக்கும் . அந்த பூக்களை எல்லாம் ரசித்துக் கொண்டே உள்ளே நடந்தால் , போர்டிகோவுடன் கூடிய மாளிகைதான் வெள்ளை நிறத்தில் அழகான இளவரசி போல் கண்களுக்கு விருந்தானது . சரி உள்ள போய் பார்ப்போம் .. நில்லுங்க நில்லுங்க உள்ள போற அவசரத்துல வாசல்ல இருக்க கோலத்தை பாக்காம போறோம் . எவ்ளோ அருமையா இருக்கு , பக்கத்திலேயே அழகான ஒரு சின்ன தொட்டியில் நீர் நிரப்பி அதில் பூக்கள் அமைந்திருந்தது மனதைக் கொள்ளை கொண்டது .

IMG_20190406_145208.jpg

இவ்வளவு பெரிய கோலம் போட்டு இருக்கிறார்கள் ஏதேனும் விசேஷமாக இருக்குமோ யோசித்துக் கொண்டே உள்ளே சென்றால் , அம்மாளிகையின் ஹாலில் அனைவரும் பரபரப்பாக இருந்தனர்.வேலையாட்கள் அனைவரும் சிரத்தையுடனும் முகத்தில் மகிழ்ச்சியுடனும் வேலை செய்கையில் நெற்றியில் அழகான பெரிய பொட்டுடன் நீல நிற பட்டுப்புடவை உடுத்தி பார்ப்பதற்கே அழகாய் அமைதியுடன் இருந்தார் அந்த அம்மாள் . அவர் அங்கு வந்த அப்பெரியவரை கண்டு... " யுகாதி சுபகன்க்ஷாலு " என்று கூறி காலில் விழுந்தார். அவரும் தீர்க்க சுமங்கலியாக இரு என்று ஆசீர்வதித்து " யுகாதி பண்டுகா" என்றார் . மாமா காரு மித்து இன்னும் எழ வில்லையா ?? என தன் மாமனார் கோதண்டராமனிடம் கேட்டார் ருக்குமணி . மித்து குட்டி காலையிலயே சீக்கிரமா எழுந்துட்டாமா ருக்குமணி நான் தான் தூங்குடானு அனுப்பி வைச்சேன் .பாவம் குழந்தை நேத்து வீட்டுக்கு வரத்துக்கே மணி ஒன்று ஆகிடுச்சுல, அதான் தூங்கட்டும் என்று அனுப்பினேன் என மருமகள் தன் கணவனிடம் கேட்டதற்கு பதிலளித்தவாரே அங்கு வந்தார் ஜானகியம்மாள் . அவரைக்கண்டு அத்தகாரு நீங்களும் ஆசிர்வாதம் பண்ணுங்க " யுகாதி பண்டுகா ".

பின்பு நான் போய் அவருக்கு காபி கொடுத்துட்டு வரேன் என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றார் ருக்மணி அம்மாள்.

அம்மாளிகையின் மூத்த தம்பதி, கோதண்டராமன் மற்றும் ஜானகியம்மாள். அவர்களின் புத்திரன் கோகுலக்கண்ணன் மனைவியே ருக்குமணி. இருவரும் தற்பொழுதும் மிகுந்த காதலுடன் மனமொத்த தம்பதியாய் உள்ளனர் . இவர்களின் காதலுக்கு பரிசாக பிறந்தவளே மித்ராளிணி .
காப்பி எடுத்துக்கொண்டு அறைக்கு சென்ற ருக்மணியை கண்டு கோகுலக்கண்ணன் விழி விழி விரித்து நின்றார் . எப்படியடி நீ மட்டும் இந்த வயதிலும் அப்பொழுது பார்த்தது போல அழகாகவே இருக்க எனக்கேட்ட அவரின் கண்களில் காதல் வழிந்தது . அதைக் கண்டு உள்ளுக்குள் காதல் பெருகினாலும், காலையிலே ஆரம்பிச்சிட்டீங்களா இந்த காப்பிய முதல்ல குடிங்க பூஜை வேற இருக்கு சீக்கிரம், சீக்கிரம் கிளம்பி வாங்க. நான் போய் அத்தைக்கு
உதவி செய்யணும் சொல்லி விட்டு வெளியேறினார் . இந்த வயதிலும் வெட்கம் கொண்டு செல்லும் தன் மனைவியைக் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ரசனையுடன் கண்டார் கோகுலக்கண்ணன் .


அம்மாளிகையின் ஓர் அறையில் அழகை மொத்தமாக குத்தகை எடுத்ததுபோல இருந்தாள் அப்பெண் . இவளை படைத்த பொழுது பிரம்மனும் மயங்கித்தான் போயிருப்பானோ என்று எண்ணழகுடன் அவ்வழகை பற்றிய கர்வம் சிறிதுமின்றி மெல்லிய புன்னைகையை இதழ்களில் தவழவிட்டவாறு அமர்ந்திருந்தவள் தனது கால்விரல் நகங்களுக்கு வண்ணம் பூசி கொண்டிருந்தாள் மித்ராளினி .( ரொம்ப buildup ￰பண்றோமோ சரி பண்ணுவோம் காசா பணமா ...)

திடீரென அவள் இதயம் வேகமாக துடித்தது . அதன் காரணம் அறிந்தவளின் முகம் வெட்டகத்தை பூசியது தன்னவனின் வரவை அறிந்து .நிமிர்ந்து அவ்வறை முழுவதும் தன் கண்களால் அலசினாள் . எவருமே இல்லை ஆயினும் அவளின் உள்ளுணர்வு கட்டியம் கூறியது அவளவன் அங்கிருப்பதை . தேடியவள் ஒன்றும் அறியாததை போல் திரும்பவும் தனது விரல் நகங்களுக்கு வண்ணம் பூச செல்கையில் அவள் முன் அமர்ந்து அவளின் கையில் இருந்து அதை வாங்கி தானே வண்ணம் பூசினான் அவன் ...அவன் ஜித்தேந்தர் ......மித்ராளிணியின் பாவா ....

IMG_20190406_100211.jpg
பாவா நுவ்வு எந்தா செய்யிலி ??( பாவா நீங்க என்ன செய்யிறீங்க )...னுசொல்லிகிட்டே கால்களை பின்னுக்கிழுத்தால் .அவள் கால் பாதத்தை விடாமல் பற்றிகொண்டே..
நான் என் பொண்டாட்டிய அழகு பண்றேன் நீ என்னடி தடுக்கிறது ...
பொண்டாட்டியா ? பாவா நம்மளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல நினைவிருக்குதா ..


ஆஹான் ....அப்படியா என்று தன்னவளை பாவாடை தாவணியில் முதல் முறையாக காண்பதால் அவளின் அவ்வழகில் மயங்கி ...பற்றிய அவள் பாதங்களில் தன் இதழ்கள் கொண்டு முத்திரை பதித்தான் . அவனுடன் வாயடித்துக்கொண்டிருந்தவள் அவனின் இச்செயலில் பேச்சற்று போனாள்....அம்மோனைநிலையை சிறிது நேரம் தொடர்ந்த பின் ஜித்தேந்தர் தான் முதலில் வெளிவந்து .... " happy yugathi da " என்று கூறி தன் பின் இருந்த கவரை எடுத்து அவளிடம் கொடுத்து ராணிமா உன் பாவா உனக்காக கொண்டுவந்தது இன்னிக்கு நீ இதுல இருக்கறதுதான் போடணும் .....
ஆனா பாவா ஜினுவும் டிரஸ் எடுத்து குடுத்துருக்கானே எப்பவும் அவன் குடுக்கரததான் போடுவேன் .
அவள் பதிலை கேட்டு முகம் வாடினாலும் அதை நொடியில் மறைத்து சரிடாமா நீ அதே போட்டுக்கோ என சிரிப்புடன் கூறினான் .
அவன் சிரிச்சிக்கிட்டே சொன்னாலும் ,ஒரு நொடிதான்னாலும் அவனோட முகம் வாடியதை தெரிஞ்சிக்கலைனா எப்படி ஜித்தேந்தரோட இத்தனை காதலுக்கு அவ சொந்தக்காரி ஆகிருப்பா.
எழுந்து உள்ளே சென்றவளை கண்டு ஜித்தேந்தர், அமைதியாய் அமர்ந்திருந்து அங்கு இருந்த தன்னவளின் புகைப்படங்களை ரசித்து கொண்டிருந்தான் . அப்புகைப்படங்களை கண்டவன் அவளுக்காக வாங்கிய புடவையில் அவளை கற்பனை செய்துகொண்டிருந்தான் . அவனது கற்பனையின் எதிரொலியாய் அவன்முன் வந்து நின்ற தன்னவளை கண்டு அவன் சுற்றுப்புறம் மறந்தான் .


IMG_20190406_145101.jpg
ஜித்தேந்தர் அவளுக்காக பாத்து பாத்து அவளுக்கு ஏத்த மாதிரி வாங்கியிருந்த அந்த சிகப்பு நிற பட்டுப்புடவையில் அதற்க்கு ஏற்ப நகைகள் அணிந்து நின்றிருந்தளை கண்டு அவன் பார்வை மாறியது .
அதை கண்டு வெட்கத்தில் முகம் சிவக்க திரும்பி நின்றாள்.அவளின் பின் நெருங்கி நின்றவன் விரிந்திருந்த அவளின் கூந்தலை ஒதுக்கி அவளின் தோள் வளைவில் முத்தமிட்டான் .அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது . தனது தொடுகையில் சிலிர்க்கும் தன்னவளிடம் கிறங்கி மேலும் அவளிடம் அச்சிலிர்ப்பை ஏற்படுத்தினான் . அவனின் செயலில் பெண்ணவள் உணர்வின் பிடியில் தவித்தாள் ...தன்னவளின் தவிப்பரிந்து விலகியவன் ..பின்பு மென்மையாய் அவளை அனைத்து சகஜநிலைக்கு கொண்டுவர ,ராணிமா என்னடா நீங்க உங்க யுகாதி க்கு வந்த பாவா க்கு எதுவும் சாப்பிடலாம் தர மாட்டிங்களா என கேட்டான் .
அவ்வளவு நேரம் உணர்வின் பிடியில் சிக்கி தவித்தவள் அக்கேள்வியில் அச்சோ பாவா மறந்தேபோய்ட்டேன் பாருங்க ....இந்நேரம் பூஜை முடிஞ்சிருக்கும் நான் போய் உங்களுக்கு கொண்டுவரேன்னு சொல்லிட்டு கீழ போனவளை பார்த்துட்டேய் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தான் .
பூஜை முடிந்தபின் வந்த மகளை கண்டு திட்டுவதற்கு வாயை திறந்த ருக்குமணி பட்டுப்புடைவையில் மணப்பெண் பெண் போல் அழகாய் வந்த மகளைக்கண்டு திருப்தியாய் புன்னைகைத்தார் .
மித்துகுட்டி நம்ப ஜிஷ்ணு எடுத்துக்குடுத்த புடைவையா இது பரவாலையே பயல் நல்லா தான் எடுத்துருக்கான் - ஜானகியம்மாள் வழக்கம்போல் அங்கு இல்லைனாலும் அவங்க செல்ல பேரன வம்பிழுக்குறாங்க .
அவர் சொன்னதை கேட்டு பேச்சை மாற்றி அம்மா எனக்கு பசிக்குது என்றாள் மித்ராளினி .
முதல்ல போய் சாமி கும்பிட்டுவிட்டு வா ...வந்து உனக்கு வேணும்ன்றதா எடுத்துட்டு போ...அவ அவங்க அம்மா சொன்னதுபோல பூஜை அறை சென்று கும்பிட்டவள் பின்பு ஒரு தட்டில் வேண்டியது அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு செல்வதை கண்ட கோகுலக்கண்ணன் இங்கயே சாப்புடுமா னு சொன்னதுக்கு இல்ல நானா நான் மேலே போய் சாப்ட்டுக்குறேன் னு சொல்லிட்டு வந்துட்டாள் .

IMG_20190406_100330.jpg
(யாரும் ஏன் தெலுங்கு பேசலானுலாம் கேக்கப்படாது........ஏன்னா அவங்க ரொம்ப வருஷமா இங்க இருக்கறதுனால தமிழ் தான் பேசுவாங்க ஹீஹீ எனக்கு தெலுங்கு தெரியாதுன்னு நான் சொல்லவே இல்ல சரியா )
அவ எடுத்துட்டு வந்ததலாம் பார்த்துட்டு நம்ப ஜித்தேந்தர் .. அடியே என்னடி இதுலாம் தின்ன வச்சே ஆள close பண்ணிடுவாங்க போலனு கண்ணுமுழி பிதுங்குற மாதிரி முழிச்சதை பார்த்து பாவா என சிணுங்கியவள் அவன் அருகில் கட்டிலில் அமர்ந்து தான் கொண்டுவந்ததை பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டா .
பாவா இதுக்கு பெயர் போபட்டு ....உங்க ஊர்ல போலி சொல்லுவிங்கள அதே தான் மைதா மாவுல செய்வாங்க ....இது பச்சடி இந்த இடத்துல ஜித்தேந்தர் ராணிமா பாவா கிட்சேன் பக்கம் தான்டா போகல ஆனா நல்லா சாப்புடுவேன் ...இத பச்சடினு சொன்னா பச்சப்புள்ள கூட நம்பாது ....அவன் சொன்னதை கேட்டவள் , பாவா என்றவாறு இடையில் கை வைத்து அவனை முறைத்தாள் . அதில் அவனது பார்வை அவளின் புடைவையின் இடைவெளியில் மேய்ந்தது. அதை கண்டவள்
பாவா என கத்தி இப்போ என்ன சொல்லவிடுங்கனு சொல்லிட்டு ....இது ஒன்னும் நீங்க பிரியாணிக்கு சாப்புட்ற பச்சடி இல்ல ...இதுல இனிப்பு , உவர்ப்பு ,கசப்பு , துவர்ப்பு னு நாலு சுவையும் இருக்கும் ....நம்ப வாழ்க்கையும் இப்படி எல்லா சுவையும் கலந்து தான் இருக்கும்னு சொல்றதுக்குத்தான் இங்கலாம் புத்தாண்டன்னைக்கு இத செய்வாங்க ... போபட்டுவ பச்சடில தொட்டு சாப்பிட்ட செம்மையா இருக்கும் .அப்றம் இது பாயசம் ...இது புளியோதரை னு அவ ஒன்னு ஒன்னா சொல்றத கவனிச்சானோ இல்ல பேசும்போது அவ கண்ணு
உருளரத்தையும் தலை ஆட்டும்பொழுது கம்பலும் சேர்ந்தாடுவதை கண்டானோ ....கட்டிலில் அமர்ந்து அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு அவனும் அவனை தவிர வேறுலகு இல்லை என்பதை போல அவளும் அந்நேரத்தை அனுபவித்தனர் ...


IMG_20190406_145141.jpg
போபட்டு

IMG_20190406_100320.jpg
பச்சடி


.............................................
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 8 :


கட்டிலில் கண் மூடி படித்திருப்பவளை கண்டு விஷ்வாவிடம் புலம்பிக்கொண்டிருந்தவன் அவளின் முனங்களில் அவள் புறம் வேகமாக திரும்பினான்.

அவளின் அருகில் சென்று, "மித்துமா..!!! என்னடி ஆச்சு உனக்கு ?? கண்ண திறந்து பாருடி !!! என்னாலதான் எல்லாம் நான் மட்டும் அன்னிக்கு உன்ன தனியா விடாம இருந்திருந்தா இப்போ உனக்கு இப்படி ஆகிர்க்காது...என்னை மன்னிச்சுடுடி..."

அவனின் இடைவிடாத புலம்பலை கேட்ட பின்பு அவளின் முனங்கல் நின்றது ஆயினும் அவளது இதழ்கள் அழுகையில் வெதும்பியது .

இதை கண்ட விஷ்வா, "ஜீ !!! என்ன இது ??நான் தான் சொன்னனே அவங்களுக்கு எதுவும் நியாபகம் இல்லைனு. அவங்க இன்னிக்கு நடந்த விஷயத்துல அதிகமா யோசிச்சிருப்பாங்க அதான் மயங்கிட்டாங்க ".

விஷ்வா பேசியதை அமைதியாக கேட்ட ஜிஷ்ணு அவனிடம் சொன்னான் , "நான் மித்துவ கூட்டிட்டு போறேன்".

"அய்யோ பைத்தியமாயா இவன்"னு விஷ்வா ஒரு பார்வை பார்த்தவன், "ஜீ !! இப்போ தான சொன்னேன் அவங்களுக்கு எதுவும் நியாபகம் இல்லைனு ஆனாலும் அவங்கள இன்னும் ஹாஸ்பிடல்லயே இருக்க வைக்க முடியாது நம்ப போர்ஸ் பண்ணி எதையும் நியாபகப்படுத்தவும் கூடாது ஆனா அவங்க வெளில இருந்தா தானாவே நினைவு வர சான்செஸ் இருக்கு. அதனால நான் ஏஞ்சல என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு இருக்கேன் ".

"சொப்ப்ப்பா...!!!! எம்மாம் பெருசா பேசிட்டோம் இப்போ மூச்சுவாங்குதே" (வேற யாரு இம்புட்டு கேவலமா பேசுவா எல்லாம் விஷ்வாவோட மானம் கெட்ட மனசாட்சி தான் ).

பேசிமுடித்து நிமிர்ந்தவன் கண்ணு முழி இரண்டும் வெளியவருவது போல் முழித்தான் , தன் முன் துப்பாக்கியை நீட்டியப்படி நின்றிருந்த ஜிஷ்ணுவை கண்டு .


"என்ன சொன்ன ஏஞ்சலா????மவனே எதாவது மனசுல இருந்தா இப்பவே அத அழிச்சிடு ..அவ என்னோட மித்து ....எதாவது ஏடாகூடமா பண்ண சுட்டுதள்ளிட்டு போய்ட்டே இருப்பேன்" .சொல்லியவன் துப்பாக்கியை இறக்கினான் .

சிறிது நேரம் அங்குமிங்கும் நடந்து யோசித்தவன் பின் விஷ்வாவிடம் ,"சரி உன் வீட்டுக்கே கூட்டிட்டு போ...ஆனா ஜாக்கிரதை !!! அவ என் உசுரு ... இப்பவும் அவளுக்காக மட்டும் தான் அவள உங்க வீட்டுக்கு அனுப்ப ஒதுக்குறேன் . அங்க அவளுக்கு எதுனா ஆச்சி !!!! மவனே உன் உயிர் என் துப்பாக்கிலதாண்டா " மிரட்டியவன் திரும்பி கட்டிலின் அருகில் சிறிது நேரம் இருந்துவிட்டு போகும் பொழுது ,

விஷ்வாவிடம் "உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனதுகப்றம் சொல்லு" என்று சொல்லி விட்டு சென்றுவிட்டான் .


அவ்வளவு நேரம் மூச்சை இழுத்து பிடித்திருந்த விஷ்வா ,"அப்பாடா!!! டேய் விஷ்வா...அது எப்படிடா உனக்கு வரதுலாம் இப்படியே இருக்கு ???? என்னமா மிரட்டறான் !!!! ஹாஹா.... நான்லாம் என் அண்ணன் ஜித்தனுக்கே பயபடமாட்டேன் இவன் என்ன ஜுஜுபி....ஏஞ்சல்னு கூப்பிடகூடாதாமே , நான் அப்படித்தான் கூப்புடுவேன் பாத்துடலாம் இவன் என்ன பண்ரான்னு " வழக்கம் போல தனக்கு தானே பேசியவன் அப்பொழுதுதான்

கட்டிலில் இருந்தவளை கண்டான் . இன்னமும் அவள் உதடுகள் அழுகையில் துடிப்பதை கண்டு செய்வதறியாமல் நின்றவனுக்கு ஜித்தேந்தரிடமிருந்து கைபேசியில் அழைப்பு வந்தது .

"என்னடா இவர் 'திங்க் ஒப் தி டேவில'் ன்ற மாதிரி எப்போ இவரை பத்தி நினைச்சாலும் சரியா ஆஜர் ஆகிர்றாரு???!!!! நம்பள சுத்தி கேமரா எதுனா வச்சிருக்காரோ" யோசிச்சிகிட்டே அழைப்பை ஏற்று பேசியவனுக்கு அதிர்ச்சியை அளித்தான் ஜித்தேந்தர் .




Yahvi (யாஹ்வி) :


ஏனோ ஜித்தேந்தர்க்கு இதயம் படபடத்தது . ஹாஸ்பிடலில் இருந்து கால் வந்த பொழுது எப்பவும் போல் அதை கண்டவன் மனம் ..சிறிது நேரத்தில்லெல்லாம் படபடப்பாகியது . அதை போக்க தனது தாயுடன் இருந்த மித்ரேந்தரிடம் சிறிது நேரம் விளையாடினான் .

ஆயினும் படபடப்பு குறையாததால் தன் அறை வந்தவன் அவ்வறையில் இருந்த புகைப்படத்தின் முன் வந்து அதை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் .எத்தனை நிமிடங்கள் கடந்தனவோ ஏதோ தோன்ற விஷ்வாவிற்க்கு அழைத்தான் .


அழைப்பை ஏற்ற விஷ்வா,"ஹலோ அண்ணா..!! சொல்லுங்க அண்ணா..என்ன விஷயம் எப்பவும் ஹாஸ்பிடல்ல இருக்கும் போது கால் பண்ண மாட்டீங்களே ???"

"அது....ம்ம்க்கும் ...இல்லை ரொம்ப டென்ஷனா போனியே அதான் என்னனு கேட்கலாம்னு கால் பண்ணேன் " .

"ஆத்தி இவர்க்கு பேய்கீய் எதாவது பிடிச்சிருக்குமா ??இவர் இப்டிலாம் நம்மகிட்ட கேக்கமாட்டாரே !!! அதும் உடனே கால் பண்ணிருக்காரு என்னவாகிர்க்கும் அண்ணனுக்கு " என வழக்கம்போலவே தனக்குள்ளவே இவன் பேச ,

அப்பக்கம் ஜித்தேந்தர்" ஹலோ ஹலோ!!" என இருமுறை சொல்லியவன் ..இவன் குணமறிந்து இவனின் பதிலுக்காக காத்திருந்தான் .

இவனின் அமைதியில்,"அது ஒண்ணுமில்லைனா"னு விஷ்வா பேச ஆரம்பிக்க ,

அந்தநேரம் சரியாய் ஒரு நர்ஸ் வந்து கதவை திறந்ததில் அதன் பக்கத்துல நின்றிருந்த விஷ்வா தடுமாறி கீழே விழ சென்று பின் சரியாக நின்றான் .

அவன் தடுமாற்றத்தில் கையில் இருந்த கைபேசி எகிறி சென்று கட்டிலில் விழுந்தது .

அப்பக்கம் ஜித்தேந்தர் , "சரி விஷ்வா..!! நீ சாப்பிடாம போய்ட்டன்னு அம்மா சொன்னாங்க போய் சாப்பிட்டுட்டு வேலையை பாரு "என்று பேசிக்கொண்டிருந்தான் .

இத்தனை நேரம் கட்டிலில் கண்களை மூடி ...அழுகையில் உதடு துடிக்க இருந்தவள் , இவனது குரலில் எதை உணர்ந்தாலோ அவளின் இதழ்களின் துடிப்பு நின்று சிறிது சிறிதாக புன்னகையில் விரிந்தது .

தெளிவில்லாமல் பலகாட்சிகள் கன்முன்தோன்ற ..ஏதேதோ எண்ணங்கள் அவளை சூழ்ந்து மாயவலையில் அவளை சிறைகொண்டது .

தன்னை சமாளித்து நின்ற விஷ்வா மொபைல் எடுக்க கட்டிலின் அருகே வந்தவன் , இவளின் புன்னைகையை கண்டு யோசனையுடன் அவளை கண்டான் .

அவளோ அதை அறியும் நிலையில் இல்லாததால் தன்னை சூழ்ந்த மாயவலையில் விரும்பியே கலந்தாள்.
அதில் அவளும் அவளவனும் மட்டுமே இருந்தனர் .


நினைவறியா நிலையில்
மாயசுழலில்
விரும்பி சுழல்பவள்....
நினைவறிந்த பின்பு
மாயத்தின்
நிஜத்தை அறிவாளா ??
வெறும் மாயமென்று
கடந்து செல்வாளா ??





உன்னால் உன்னால்
உன் நினைவால் ..
உலகில் இல்லை
நான்தானே ...
உள்ளே கேட்க்கும்
ஓசையிலே...
உன்னை உன்னை கேட்டேனே...

உன்னோடு சேர்ந்து
நெடுந்தூரங்கள் ...
காலார ￰நடந்து
மிதந்தேனே...
உன்னிடம் தந்த
இதயத்தை தேடி
உன்னில் என்னை
தொலைத்தேனே ....

ஹாஆஆ ....ஹாஆஆ..

எந்தன் விழி
ஓரங்கள் ...
உன்இமையில் சாயுதே ..
என் கண்களை மூடினால்..
உந்தன் முகம் தெரியுதே ..
என் பகல் உன் கண்ணில் ...
நீ இல்லை என்றாலே
நான் ஏதும் இல்லை
இரவு தான் ...

நான் உன்னை உனக்கே
தெரியாமல்
கொஞ்சம் கொஞ்சமாக படித்தேனே...
பூமியில் உள்ள காதலையெல்லாம்
முன்னாள் வாழ்ந்தாய்
ரசித்தேனே...

ஹாஆஆ ....ஹாஆஆ..

இன்னும் இன்னும் கனவுகள்
உன்னை பற்றி வேண்டுமே ...
என்னென்னமோ ஆசைகள் உன் நினைவை தூண்டுமே...

என் மழை காலங்கள்
என் வெயில் நேரங்கள்
எல்லாமே உன்னில்
தொடங்குதே....

ஒரேஒரு புன்னகை
போதும் அன்பே..
உனக்கென காத்து
கெடப்பேனே...
ஆயிரம்கோடி ஆண்டுகள் தாண்டி
உன்னில் வாழ துடிப்பேனே ...




-கரைவாள்
 

Attachments

Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 9 :


யாஹ்வி (yahvi) :


மாலையில் வீட்டிற்கு வந்த விஷ்வேந்தர் ஷாலினி வீட்டில் இல்லாததை கண்டு கண்களில் கேள்வியுடன் தன் அன்னையை தேடிச் சென்றான். செல்லும் பொழுதே நேற்று அவ்வவறையின் நிகழ்விற்குப் பின் அவள் அவன் முன்னால் வருவதை தவிர்த்ததையும் , அவ்வாறு நிகழும்பொழுது சட்டென்று விலகி சென்றதையும் நேற்று இயல்பாய் பெண்களின் வெட்கம் என்று எண்ணியவன் தற்பொழுது அவ்வாறில்லையோ வேறேதும் உள்ளதோ என மிக சரியாக கணித்தான் . (என்ன கணிச்சி என்ன பிரயோஜனம் இப்பவே அவள்கிட்ட பேசியிருந்தா பின்னாடி அனுபவிக்கப்போற வலிகளுக்கு அவசியம் இல்லாம போயிருக்கும் ) .


நாச்சியாரிடம் சென்றவன் சிறிது நேரம் பேச்சுக்கொடுத்து ஷாலினியை பற்றி பேச்செடுத்தான் . சரியாக அப்பொழுது களைத்துப் போய் வீட்டினுள் நுழைந்த சித்ரங்கதா, நாச்சியாரிடம் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்த விஷ்வேந்தரை கண்டு, "இந்தப் பக்கி எதுக்கு இப்போ அம்மா காத கடிச்சுட்டு இருக்கான் "என யோசித்துக் கொண்டே வந்தவள் அவன் எதிர்பாரா நேரத்தில் அவன் முதுகில் பட் என்று அடித்தாள் .


" ஆஆ...அம்ம்மா!!! எருமை எருமை எதுக்குடி இப்ப என்ன அடிச்ச" முதுகை தடவியபடியே அவளை முறைக்க,


"பின்ன என்னடா நேத்து பார்ட்டில நீ என்ன பண்ணி வச்ச ??உன்னால தான் ஷாலு டார்லிங் இன்னிக்கு வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டா" என கத்தியவளிடம்,


"அடியே குரங்கு!!! நான் என்னடி செஞ்சேன்"என்று அவனிற்க்கே அவள் ஏன் சென்றாள் என தெரியாததில் பேச்சில் எரிச்சல் வெளிப்பட்டது.


"அதைத்தான்டா நானும் கேட்கிறேன்...நீ என்ன பண்ணி தொலச்ச ?? நேத்தே அவ அவசர அவசரமாக வீட்டுக்கு கிளம்பி போயிட்டா... இன்னிக்கும் கால் பண்ணா அட்டென்ட் பண்ணவே மாட்டேங்குற "என அவனிடம் புலம்பியவள் , நாச்சியாரிடம் திரும்பி,


"அம்மா !!!! கேளுங்க இவன்கிட்ட.. என்ன பண்ணானு ...சின்ன வயசுல இருந்தே அவ இங்க வந்தா இவன் அவள அடிச்சுகிட்டு திட்டிக்கிட்டு இருப்பான்... இப்போவும் இவன் தான் ஏதாவது பண்ணி இருக்கனும்" என்றாள்.


இவள் சொல்லியதைக் கேட்ட நாச்சியார், விஷ்வாவிடம் "டேய்!!! என்னடா பண்ண அவள ???இப்போ பம்மிக்கிட்டே என்கிட்ட ஒன்னும் தெரியாத மாதிரி அவள பத்தி விசாரிச்சுட்டு இருந்துருக்க "என விசாரணையை தொடங்கியதில்,


நம்ம விஷ்வா மனசுக்குள்ள பேச ஆரம்பிச்சிட்டான் "ஆளாளுக்கு என்ன பண்ணுன என்ன பண்ணுனேன்னு கேட்கிறாங்களே!!! இவங்க தெரிஞ்சு கேட்க்குறாங்களா தெரியாம கேட்க்குறாங்களானே தெரியலையே??!!! அங்க தான் ஒண்ணுமே நடக்கலையே நான் தான் ஒன்னுமே பண்ணலையே...."


"எக்ஸ்கியூஸ் மீ !!நேத்து நீங்க ஒண்ணுமே பண்ணல இல்லையா?? நீங்க அவங்க கிட்டயே போகல இல்லையா ??நீங்க சும்மாதான் வாசம் புடிச்சிங்க அப்படித்தானே "என அவனின் மனசாட்சியும் கூட சேர்ந்து கலாய்த்தது."


" உன்னை யாரு இப்ப கூப்பிட்டது "என முறைத்தவன் அதை பாய் பாய் சொல்லி அனுப்பினான்.


ஒன்றும் புரியாமல் அவன் முழித்துக் கொண்டு நிற்பதை பார்த்த நாச்சியார் , "பாக்குறத பாரு வாயில விரல் வச்சா கூட கடிக்க தெரியாத மாதிரி .ஏன்டா இப்படி இருக்க?? அப்படி உனக்கு என்னதான்டா பிரச்சனை?? சின்னத்திலிருந்து அவ கூட சண்டை போட்டுட்டே இருக்க ...நானும் சின்ன பசங்க இப்போ திருந்துவீங்க அப்போ திருந்துவீங்கன்னு பார்த்துகிட்டே இருக்கேன் , நீ இன்னும் அவகிட்ட வம்பு வளர்த்துக்கிட்டே இருக்க . என் அண்ணன் கிட்ட சொல்லி உன் கால ஒடச்சாதான் நீ சரிப்பட்டு வருவனு நினைக்கிறேன் "என புலம்பிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார் நாச்சியார் .


"அம்மா ...அம்மா !!!! நான் உன்கிட்ட பேச வந்த விஷயமே வேற நில்லும்மா" என தாயின் சேலையை பிடித்தபடியே அவர் பின் சென்றான் விஷ்வேந்தர்.


இவன் செல்வதைப் பார்த்த சித்ரங்கதா ,"என்னடா இது , ஷாலினியையும் இந்த குரங்கையும் கோர்த்துவிடலாம்னு பார்த்தா செட்டாகாது போலயே ...ஆனா ரெண்டும் லவ் லுக்குலாம் விட்டுச்சிங்களே ....ஷொப்ப்ப்பா!!!! இப்பவே கண்ணை கட்டுதே ... இவங்க எப்ப செட் ஆகுறது அடுத்து நாம எப்ப நம்ப ஆள் கூட சேர்றது "என புலம்பிகொண்டே தன் அறைக்கு சென்றாள். (இவ ஆளுகூட சேர்றதுக்கும் விஷ்வா ஷாலினி சேர்றதுக்கும் என்ன சம்பந்தமா இருக்கும்!!???.


நாச்சியாரின் பின்சென்ற விஷ்வா, அவரிடம் ஏஞ்சலை பற்றி பேச தொடங்கினான்," அம்மா !!! அவங்க என்னோட ஹாஸ்பிடல்ல ஒரு பேஷன்ட்டா தான் இப்போ இருக்காங்க , ஆனா ...அவங்க எனக்கு ரொம்ப முக்கியம் ....அது உங்களுக்கும் தெரியும் தான ??"என்று ஆரம்பித்தவன் ,


தொடர்ந்து, "அம்மா!!! நான் அவங்கள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேன் , நீங்க தான் அப்பா கிட்டயும் அண்ணன்கிட்டயும் பேசணும் " என்றான்.


இத்தனை நேரம் அவன் சொன்னதை அமைதியாய் கேட்ட நாச்சியார் அவன் கடைசியாய் சொன்னதற்கு ,"உங்க அப்பாவ சமாளிச்சிடலாம் டா ஆனா உங்க அண்ணன் தான் என்ன சொல்லுவான்னு தெரியலையே " என யோசிக்க,

"மா!!! அதுலாம் நீங்க அசால்ட்டா சமாளிப்பிங்க ..சரி சரி ,நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன் " என்று சொல்லி அவரின் பிபிய ஏத்திவிட்டு சென்றவன் ,சொன்னது போலவே சிறிது நேரத்தில் பிரெஷ் ஆகியபின் தன் அண்ணனின் அறை தேடிச் சென்றான் .


செல்லும் வழியில் ( ஒரு பத்து படி தாங்கோ இருக்கும் ) இந்த இரண்டு நாட்களாக வேலைக்கு கூட செல்லாமல் மித்ரேந்தருடனே இருக்கும் தன் அண்ணனை பற்றி சிந்தித்துக் கொண்டே சென்றான் .


என்னவோ தெரியவில்லை அவனுக்குமே மித்ரேந்தரை மிகவும் பிடித்திருந்தது . சிறுவயதிலிருந்தே அவன் தன் அண்ணன் ஜித்தேந்தரை பின்பற்றியே நடந்து வந்தான் . எந்த விஷயம் என்றாலும் அதில் தனது ரோல் மாடலாக தன் அண்ணணையே கொண்டுள்ளான் . அதனால் தான் எத்தனை விளையாட்டுத்தனமாக இருந்தாலும் தொழில் என்று வரும் பொழுது அவன் காட்டும் சிரத்தையை வேறு எவரும் காட்ட இயலாது.


அதைப்போல் தங்கையிடம் வம்பிழுத்தாலும் அவளின் மேல் தன் சகோதரனை போல் தானும் ஒரு கண் வைத்திருந்தான் .அவன் அவளிடம் கேட்பதற்கு நிறைய இருந்தும் தன் தமையனின் அமைதியை கண்டு தானும் அமைதியாய் இருக்கிறான் .


அக்குடும்பத்தில் விஷ்வாவிற்க்கு மட்டுமல்ல யாருக்கு என்ன வேண்டும் என்றாலும் அடுத்த சில மணி நேரங்களில் அது அவர்களிடம் இருக்கும். அதன் காரணம் நிச்சயம் ஜித்தேந்தராகவே இருப்பான் .ஏன் முதலில் விஷ்வேந்தர் டாக்டருக்கு படிக்க போகிறேன் என்றபொழுது, "தனது குடும்ப தொழிலில் அவன் இல்லாமையா ??"என யோசித்த தந்தையையும் ஜித்தேந்தரே சமாளித்தான் .


வீட்டில் உள்ள அனைவரிடமும் அவன் நெருங்கி பழகியதில்லை ஆனால் அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் அவனது பார்வை தொடர்ந்து கொண்டே இருக்கும் .இவை அனைத்தை பற்றியும் யோசித்துக்கொண்டே ஜித்தேந்தரின் அறைக்கதவை தட்டிவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் .



அறைவிட்டு வெளிவந்த ஜித்தேந்தர், அங்கு தன் தம்பி இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்து ,"என்ன விஷ்வா!! இப்போ தான பேசுனோம் ".


"அண்ணா!!! நான் உங்களை பார்க்க வரவில்லை... என் பையனை பார்க்க வந்தேன் "அவனது பதிலில் என்னவென்று விழித்த ஜித்தேந்தர்.. அவன் பார்வை தன் கையில் இருந்த மித்ரேந்தரை பார்ப்பதைக் கண்டு, அவன் சொன்னதன் பொருள் உணர்ந்து சிரித்துக்கொண்டே தனது மகனை அவனது கைகளில் கொடுத்தான்.


"அண்ணா !!! நீ என்னவேனா நினைச்சிக்கோ .ஏனோ தெரியல இந்த குட்டிய எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு"என குழந்தையை கொஞ்சியபடியே சொன்ன விஷ்வேந்தரிடம் ,


"அவன் என் மகன் டா!! "என உதடுகளுடன் சேர்ந்து கண்களும் சிரிக்க பெருமிதமாக சொன்ன ஜித்தேந்தர், மித்ரேந்தரிடம்..." ஏண்ட பங்காரம் !! நாணா செப்பு " என தன் இயல்புக்கு மாறாய் குழந்தையிடம் விளையாடினான் .


தன் அண்ணனின் இத்தோற்றத்தில் விஷ்வேந்தரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே "அண்ணா !!நீ இவனுக்கு நாணா -னா ...நான் இவனுக்கு அப்பா , ஓகே வா " என ஆர்வமாய் கேட்டான்.


[விஷ்வா எந்த எண்ணத்தில் இவ்வாறு கூறினானோ பின்னாளில் அவனது இந்த வார்தைகளாலே பிரச்சனை வரப் போகிறது என தெரிந்திருந்தால் அவன் இவ்வாறு கூறியிருக்க மாட்டானோ இவ்வார்த்தையால் தங்கள் வாழ்க்கை மட்டுமன்றி தங்கள் தங்கையின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என்று அவன் எவ்வாறு அறிவான் ?? இதுதான் விதியின் சதியோ ??? }



வாழ்க்கையது
வார்த்தைகளால்
ஆனது....
வார்த்தையது
பொருள் மாறி
போனால்...
வாழ்க்கையதுவும்
மாறித்தான்
போகுமோ....??



"அண்ணா..! ஆகிட்சுயலி நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்... அது ...அது ஏஞ்சல் ...ம்க்கும் ...எனக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தங்கள கொஞ்ச நாளைக்கு நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு " என்று சொல்லிக்கொண்டே ஜித்தனை பார்த்தவன் , அவன் பார்வை கொண்டே கேக்கவருவதை புரிந்து,


"அண்ணா ...இப்போதைக்கு அவங்க ஒரு பேஷண்ட்.... தான் யாருன்றதயே நினைவில்லாம இருக்காங்க அப்படபி இருக்கும்போது அவங்க பாதுகாப்புக்கு என்ன பண்றது?? அதான் அண்ணா, அவங்கள நம்ப வீட்ல கொஞ்ச நாள் இருக்கவைக்கலாம்"என்றவனிடம்,..


"அவங்க உனக்கு ரொம்ப வேண்டியவங்கனா அவங்க யாருன்றது உனக்கு தெரிஞ்சிருக்குமே விஷ்வா.... அப்போ அவங்க குடும்பம் பத்தியும் உனக்கு தெரிஞ்சிருக்கனுமே??!!!" என சந்தேகமாக கேக்க,


"ஆஞ்சநேயா....! இதுயென்ன எனக்கு வந்த சோதனை ??? எப்பவும் வாய திறக்க யோசிக்கும் இவரே இன்னிக்கு இம்புட்டு கேள்வி கேக்குறாரே.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா பிரிப்பேர் பண்ணிட்டு வந்துர்ப்பேனே, இப்போ என்னத்த சொல்றது ?? எதுனா சமாளிடா சூனாபானா"வழக்கம் போலே தனக்குள்ளியே பேசிட்டு இருந்தவன பார்த்த ஜித்தேந்தர் என்ன நினைச்சானோ,


" டேய் டேய் "என கத்தி விஷ்வாவின் கவனத்தை திருப்பியவன் தொடர்ந்து,


"சரி நீ அவங்கள கூட்டிட்டு வா .....வர்ரதுக்கு முன்னாடி அம்மா அப்பா கிட்ட சொல்லிடு "என சொன்னவன் தன் அறை திரும்பிவிட்டான் . அவன் சொல்லியதை கேட்ட விஷ்வா மித்ரேந்தரை தூக்கிகொண்டு மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தான் .


........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................


திருவல்லிக்கேணி போலீஸ் குவார்ட்டஸ் :


தன் வீட்டிற்கு வந்த ஜிஷ்ணு அங்கிருந்த வெறுமையை கண்டு சோர்ந்து அமர்ந்தான் . அவன் நினைவில்... எப்பொழுது அவன் வீட்டிற்கு வந்தாலும் புன்னைகை முகத்துடன் வரவேற்கும் அம்மாவும் , எங்கிருந்தாலும் தன்னை வம்பிழுக்க வந்துவிடும் அப்பத்தாவும் வந்தனர் .


கண்களை அழுத்தி மூடி தன் நினைவுகளை விரட்டியவன் தனது கைபேசியை எடுத்து அதிலிருந்த புகைப்படத்தை பார்வையால் வருடத் தொடங்கியவனின் வருத்தங்கள் மறைந்து உதட்டில் சிறு புன்னகை வந்து ஒட்டியது.


அப்புகைப்படத்தில் இருந்தது இரு மங்கையர்கள். இருவரின் முகமும் மலர்ந்து மொத்த அழகிற்கும் , மகிழ்விற்கும் சொந்தக்காரர்கள் தாங்கள் என சொல்லாமல் சொல்லிகொண்டிருந்தது .


அதில் ஒருவள் அவன் மனதிற்கு சொந்தமானவள்...மற்றோருவளோ அவனது உயிருக்கும் மேலானவள் ......




கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா...
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா...


அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன்வாசம்...
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம்....
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி ....
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி....!


நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே ....
உனைபார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே....


தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக....
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
என் ஜீவன் வாழுதடி...
நீ ஆதரவாக தோள் சாய்ந்தாள் என் ஆயுள் நீளுமடி ...!


மழை மேகமாய் உருமாறவா....
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மணம் வீசும் மலராகவா...
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா ....


கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக ...
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே .....
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே ...!




-கரைவாள்
 

Attachments

Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 10 :

புகைப்படத்தை பார்த்து தனக்குள் ஆழ்ந்து போய் இருந்த ஜிஷ்ணுவை கலைப்பது போல் இருந்தது கைப்பேசியின் ஓசை.


"ஹலோ "


"ஹலோ ஜீ !!! நான்தான் டாக்டர் விஷ்வேந்தர்.. நாளைக்கு நான் என் ஏஞ்சலை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறேன் .நீங்க சொல்ல சொன்னதுனால இப்போ கால் பண்ணேன். பாய் பாய் ஜீ!!! குட் நைட் ...ஸ்வீட் ட்ரீம்ஸ்.."


"டேய் !!! நான் அவ்வளவு சொல்லியும் என் ஏஞ்சல்னா சொல்ற உன்ன" என கத்தியவன், மறுபக்கம் வந்த பீப் ஓசையில் விஷ்வேந்தர் கால் கட் செய்ததை உணர்ந்து கோபத்துடன் கைபேசியை தூக்கி எறிந்தான் .


அந்தப்பக்கம் விஷ்வேந்தர் , "யாரு கிட்ட??!!! நாங்க எல்லாம் சிங்கத்து கூடவே வாழுறவங்க ஜுஜுபி சிறுத்தைக்கு பயப்படுவோமா...ஹா ஹாஹாஹா ! நீங்க திட்றதுக்கு முன்னாடியே கால கட் பண்ணிடுவோம்ல...ஹாஹா! டேய் விஷ்வா, கில்லாடி டா நீ ..என் கண்ணே பட்றும் போல"


-கண்ணாடியை பார்த்து தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் அவன் டீஷர்டில் இல்லாத காலர தூக்கிவிட்டுக்கொண்டான். ( எரும திட்டுவாங்க பயந்து போன கட் பண்ணிட்டு என்னம்மா சீன போடுது பாருங்க.. இவனலாம் வச்சு ஒரு பூரிகூட செய்ய முடியாது )



மறுநாள் :


ARSHAD MULTISPECIALITY HOSPITAL



தனது அறை பரபரப்பாக இருப்பதைக் கண்டவள் நேற்று விஷ்வா சொன்னதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் . அவளின் மயக்கம் தெளியும் வேளையில் அவள் அருகில் இருந்தவன் அவளை தன் வீட்டிற்கு அழைத்துச்செல்வதை பற்றி சொல்ல, முதலில் மறுத்தவளை அவனின் தொடர் பேச்சினில் ஒத்துக்கொள்ள செய்தான் .


அதற்க்கு அவளிடம் இரண்டு காரணங்கள் இருந்தன ...ஒன்று அவளுக்கு கேட்ட குரலானது அவனின் குரலுடன் ஒத்துப்போனதால். அக்குரலுக்கானவனையும் அக்குரல் தனக்கு கேட்பதர்பதர்க்கான காரணத்தையும் கண்டுகொள்ள அவன் வீட்டிற்கு செல் என அவள் மூளை சொல்லியதால்.


மற்றொரு காரணம் ஏன்னென்று அறியாமலே அவள் மனம் கூக்குரலிட்டது ,அதுவே அவள் இருக்கவேண்டிய இடம் என.


யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது நேற்று மயக்கத்தில் இருந்தபொழுது தனக்கு கேட்ட குரல்கள் , அவள் அதை கனவு என்றே எண்ணினாள்..அதில் ஒரு குரலை விஷ்வாவினுடையது என சரியாய் கணித்துவிட்டவள் மற்றொன்றை பற்றி யோசித்தாள்.


அப்பொழுது கதவை திறந்து கொண்டு வந்த ஜிஷ்ணு , இவள் முழித்திருப்பதை கண்டு வேகமாக அருகில் வந்தவன் ..." மித்துமா !! எபப்டிடா இருக்க ...நேத்து நீ திரும்பவும் மயங்கி இருந்தத பார்த்தவுடனே நான் ஒரு நிமிஷம் செத்துட்டேன்டா " என உணர்ச்சிகரமாக பேசியவன் தன் கை கொண்டு அவள் தலை கோதினான் .


அவனை சொந்தமறியா பார்வை பார்த்தவள் ,அவனின் குரலில் இருந்த நேசத்தை கண்டுகொண்டாள் . தான் மயக்கத்தில் இருந்த பொழுது வேதனையுடன் ஒலித்த குரலை அடையாளம் கண்டதால் தயக்கம் நீங்கி ,


"இல்லை... எனக்கு இப்போ ஒன்னும் இல்லை"என்று சிறு குரலில் சொன்னாள் .


அதே நேரம் ஜிஷ்ணுவுடன் அறைக்குள் வந்த விஷ்வா ,முதலில் அவன் பேசியதை கேட்டு,


" ச்சுச்சுச்சு !!! என்னா பாசம் என்னா பாசம் ..!!!! டேய் மைதாமாவு என்ன சொன்ன ஒரு நிமிஷம் செத்து போய்ட்டியா அப்போ இப்போ பேயாவா வந்து பேசிட்டு இருக்க ..?? இவன்சரியான லூசா இருப்பான் போல" என ஜிஷ்ணு பேசுவதற்கு தனக்குள் கவுண்ட்டர் கொடுத்தவன் ... அடுத்து அவள் பேசியதை கேட்டு புசுபுசு என்று மூச்சிவிட்டான் ( கோபமா இருக்காராம்)


"அடேய் ...!! ம்க்கும்..!!.அட என்ன ஜீ?? இப்போ எதுக்கு இம்புட்டு சோகம் ?? பாருங்க ...என் ஏஞ்சல் உங்க மூஞ்ச பார்த்து எப்படி பயப்புடறாங்கனு " என காலையில அவன் வரும்பொழுதே விஷ்வாவின் அறையில் இருந்த ஜிஷ்ணு முதல் நாள் இரவு அவனிடம் பேசியதற்கு விஷ்வாவை காய்ச்சி எடுத்ததில் ஏற்பட்டிருந்த கோபத்தை இப்பொழுது காண்பித்தான் .


அவன் சொன்னதை கேட்டு கோபத்துடன் அவன் மேல பாயபோன ஜிஷ்ணுவை தடுத்தவள் ," இல்லை ..அவர் ..அவர ஒன்னும் பண்ணாதீங்க ... அவர் எப்பவும் இப்படித்தான் " என விஷ்வாவிற்கு பரிந்து பேசினாள் .


அவள் சொல்லியதை கேட்ட விஷ்வா ஜிஷ்ணுவை பார்த்து கண்ணடித்துவிட்டு , "தேங்க் யு சோ மச் மை ஏஞ்சல் !!! " என திரும்பவும் அவனை வெறுப்பேற்றியவன் , நேரமாகியதால் அவளிடம்..


" நான் உன்னோட டிஸ்சார்ஜ் போர்மாலிட்டீஸ் ஆஹ் பார்க்குறேன் " என்றபடி , ஜிஷ்ணுவிடம் திரும்பி் "ஜீ...!!! ரொம்ப நேரம் உங்க மொக்கைய கேக்கனுன்னு எனக்கும் ஆச தான் ஆனா பாருங்க கடமை என்னை வா வானு அழைக்குது ...சோ நான் அப்றம் உங்க மொக்கையை கேட்டுக்கிறேன்" என வேகவேகமாக கூறியவன் அவன் கையில் அகப்படுவதற்கு முன் அறையை விட்டு ஓடிவிட்டான் .


விஷ்வா அறை விட்டு சென்ற பின் ,அவன் யாரென்று அறியாமல் எவ்வாறு பேசுவது என்று அவளும் .... "என்னை நினைவில்லாதபொழுது எதை பேச ?? நான் ஏதேனும் பேசி அதில் என் மித்துமாவிற்க்கு எதவாது ஆகிவிட்டால்??? இந்த விஷ்வா வேற அவளிற்க்காய் நினைவு வரும்வரை நாம் எதையும் நியாபகப்படுத்த கூடாதுனு சொல்லிற்கான்" என சிந்தனையுடன் அவனும் (ஜிஷ்ணு) இருந்ததால் அவ்வறையில் அமைதி தவழ்ந்தது .


அமைதியாய் தன் விரல்களை பார்த்திருந்தவள் அதில் இருந்த மோதிரத்தை கண்டு ,"இது...இந்த மோதிரம் நீங்கதான் குடுத்தீங்களா ??..." என எதுவும் யோசிக்காமல் சட்டென்று கேட்டுவிட்டாள் .


திடுமென அவள் குரல் கேட்டதில் திகைத்தவன் பின்பு அவளை கண்டு யோசனையுடன் இல்லை என தலையசைத்தான் .


அதில் குழம்பியவள் , அது இவரோட குரல் மாதிரி தான இருந்தது என யோசித்துக் கொண்டே ,"அ...அது...இந்த மோதிரம் எங்கிட்ட எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?? என கேட்டுகொண்டே அவனை பார்த்தவள்... அவன் கண்களில் தெரிந்த கோபத்தில் "இ...இல்லை எ.. எனக்கு உங்கள பா...பார்க்கும்போது பல வருடங்களா பழகுனது போல் இருந்தது... அ...அதான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாமோனு கேட்டேன்" என்று பயத்தில் திக்கித் தடுமாறினாள்.


எப்பொழுதும் தன்னுடன் சண்டையிட்டு வம்பாய் வாயடிப்பவள்.... தன்னிடம் பேசுவதற்க்கே இன்று பயப்படுவதை கண்டு அவன் இதயம் வலித்தது .


"ஆமாடா !!! ரொம்ப வருஷம் தான் ...நீ பொறக்கும் போதே எனக்கு சொந்தமானவளா தான் பொறந்த, எப்பவும் எந்த நிலைமையிலும் நான் உன் கூட இருந்திருக்கேன் ...இனியும் இருப்பேன் ......நீ இப்போ எதையும் யோசிக்காம கிளம்பு .... நான் அங்க அடிக்கடி வருவேன் , எப்ப வேணும்னாலும் எனக்கு கால் பண்ணுடாமா" என்றவன் அதற்க்கு மேல் அங்கிருக்க முடியாமல் , அவளை நெருங்கி தன் விசிட்டிங் கார்டை அவளின் கட்டிலில் வைத்தபடி,


" நான் கிளம்பறேன் டா!!! ஜாக்கிரத்தை..."அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவ்வறை விட்டு வெளியேறினான் .


அவன் செல்வதை பார்த்தவள் அவன் இட்ட முத்தத்தின் ஈரத்தில் தூய நேசமிருந்ததை கண்டு," இவர் எனக்கு என்னவுறவு " என யோசனையுடன் கண்களை மூடினாள் .( அவ மோதிரத்தை பத்திதான கேட்டா அதுக்கு பதில சொன்னானா பாரு ...அதைவிட்டு கதை பேசிட்டு போய்ட்டான்.ஆமா நடுவுல இவன் எதுக்கு கோபப்பட்டான்னு வேற தெரியலையே????)


நேசம் என்பது
உறவில் வளர்வதா !!
இல்லை...
உணர்வில் உயிர்ப்பதா!!
நினைவறியாமலே
அவன் நேசம் உணர்ந்தவள் ....
அவன் உறவறிவது
எப்போது ???



அனைத்து போர்மாலிட்டீஸும் முடித்து தன்னறைக்கு வந்த விஷ்வா அங்கு இருந்த சித்ரங்கதாவை கண்டு மண்டையில் கொட்டியவன்," ஏய் வாலு!!!!! காலேஜ் போற ஐடியாவே இல்லையா உனக்கு ???எப்ப பார்த்தாலும் வெளியவே சுத்திட்டு இருக்க" .


"ஆஆ ..எரும எரும !!! எதுக்குடா கொட்டுன ...இன்னிக்கு ட்ரைனிங் தான் அதான் நம்ப ஹாஸ்பிடலயே கத்துக்கலாம்னு வந்தேன் " என வலித்த மண்டையை தேய்த்துகொண்டே சொல்ல,


"யாரு??? நீ !!??? கத்துகிறதுக்கு வந்த !!!!..இத நான் நம்பனும் " என சொல்லி அவளை மேல் இருந்து கீழ் வரை" நீ அதுக்கலாம் சரிபட்டு வரமாட்டியே " என்பது போல் பார்த்தவன் , "உண்மைய சொல்லு எதுக்கு வந்த??" என கேட்டான்


"யாரை சந்தேகப்படற !!??? போடா அண்ணணாசேன்னு உன் ஹாஸ்பிடல்க்கு வந்தேன் பாரு என்ன சொல்லணும் , போ நான் கோபமா கிளம்பறேன்"என்று எஸ் ஆகிவிட்டாள்.(ஆமா எஸ்ஸு தான் ..மேடம் இங்க வந்த காரணமே வேற )


" இவன் என்ன இப்போல்லாம் ரொம்ப கேள்வி கேக்குறான் மூளை கீழை வளர்ந்துடிச்சா என்ன??" விஷ்வாவை பற்றி பெருமையாய் யோசித்திப்படி வெளியே வந்தவள், அங்கு ஜிஷ்ணு லிப்டினுல் (lift) நுழைவதை கண்டு வேகவேகமா தானும் சென்று நுழைந்தாள் .


அவனோ அப்படி ஒருவள் நுழைந்ததை சிறிதும் கண்டுகொள்ளாமல் தன் கைபேசியை பார்த்து கொண்டிருந்தான் .


"அட கடவுளே !!! இவனலாம் கட்டிக்கிட்டு நான் என்ன பாடுபட போறேன்னு தெரியலயே...!!?? இங்க அம்சமா அழகா ஒருத்தி நிக்குறேன்.. கொஞ்சம் கூட கண்டுக்காம அந்த போன்ல அப்டி என்ன இருக்குனு அதுக்குள்ள தலையை விட்ருக்கான்....எதுக்கு ஹாஸ்பிடல்க்கு வந்தான்னு தெரிஞ்சிக்க இவன் பின்னாடியே வந்ததுக்கு அந்த விஷ்வா எருமைக்கிட்ட கொட்டு வாங்குனது தான் மிச்சம் ..பின்னாடி வந்தது தெரிஞ்சும் கண்டுக்குறானானு பாரு" என மனதிற்குள் புலம்பியவள் ,


அவனை பார்த்தபடி," ஆனாலும் நீ இப்படி இருக்கிறது கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா என் அழகா" என முனகிகொண்டே அவனை ரசித்து கொண்டிருந்தாள் .


.............................................................................................................................................................................................................................


மனதை மயக்கும் மாலை பொழுது ...


யாஹ்வி (yahvi)


"ங்னா...ங்னா " என தன் பாஷையில் பேசி கொண்டு தன் விரல்களை பிடித்து விளையாடி கொண்டிருந்த மகனை கண்டவன் ஜித்தேந்தர் , " நா பங்காரம் !!! ஏமி ரா ...இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல" என கேட்டுகொண்டே தன் கைகளில் அள்ளிக்கொண்டான் .


"ங்னா..க்னா " என தன் சிறுவிரலை வாயில் வைத்து சப்பி சிரித்துகொண்டே தன் தகப்பன் சொன்னதை ஆமோதித்தான் அந்த சின்ன கண்ணன் .


"ஹாஹா!!!சிரிப்ப பாரு பங்காரத்துக்கு .... ஆமாடா குட்டி என்னவோ தெரியலை இன்னிக்கு உன் நாணாகூட ரொம்ப சந்தோஷமா இருக்கேன் " என்றவாறு மகனுடன் பேசியவன் ...தன் அறையில் இருந்த புகைப்படத்தினிடம் ,


"ராணிமா என்னடி எனக்கு இன்னிக்கு இவ்ளோ சந்தோஷமா இருக்கு!!! ராணிமா அவங்க பாவா கிட்ட வர போறாங்களோ ??!! சீக்கிரம் வந்துருடாமா !! பாவா காத்துகிட்டு இருக்கேன்... சீக்கிரம் வாங்க "என்றான்.


சரியாக அதே நேரம் அம்மாளிகையின் வாயிலில் வந்து நின்ற காரினுள் இருந்து இறங்கிய விஷ்வா ,மறுபக்கம் வந்து கார் கதவை திறந்து விட... தேவதை பூமியில் இறங்கி வந்ததோ என்று எண்ணும்படி பேரழகுடன் இறங்கினாள் அவள்.


அவளே தான் , ஜித்தனின் ராணிமா...விஷ்வாவின் ஏஞ்சல்....ஜிஷ்ணுவின் மித்துமா.....நம்மளுடைய மித்ராளினி.



- கரைவாள்



அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை
ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும்
அவள் மூச்சழகு
தத்தி நடக்கும்
அவள் நடையழகு
பத்தி எரியும்
அவள் உடையழகு
அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ
அழகோ அழகு...
அழகோ அழகு...

எந்த பூவிலிருந்து
வந்ததிந்த தேனோ
என்று எண்ணி
வியக்கும் இதழ் அழகு!!
அந்தியிலே வானம்
சிவந்ததை போலே
கன்னம் எங்கும்
தோன்றும் வெட்கம் அழகு

மெல்லிடையை பற்றி
சொல்ல இல்லாத அழகு
கீழே கொஞ்சம்
பார்க்க சொல்ல
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை
படைத்தது என்ன சொல்லவோ…


காட்டருவி போலே
அலை அலையாக
கண்டபடி ஓடும்
குழல் அழகு...


கண்ணிரண்டில் வலையை
பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும்
செயல் அழகு


தெற்றுப் பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு !!
கண்ணிரண்டு யோசிக்கையில்
வேரேதோ அழகு !!
 

Attachments

Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤

நினைவில் தத்தளிக்கும் நேசமது 11
:


தேவலோக மங்கை போல் இறங்கியவளை கண்ட நாச்சியார் மகிழ்ச்சியாய் புன்னகைத்தபடி வேலையாளிடம் இருந்து ஆரத்தி தட்டை வாங்கியவர் , தன் கையால் மித்ராளினிக்கு ஆரத்தி சுற்றினார் .

"மகாலட்சுமி மாதிரி இருக்கமா!!!!என் கண்ணே பட்ரும் போல "என கூறி நெட்டிமுறித்தவர் , அனைத்தையும் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த விஷ்வாவை கண்டு ,"டேய்...!!! எப்பப்பாரு கெக்கபக்கன்னுட்டு.. போடா ...போ உள்ள..." என மகனை விளையாட்டாய் அதட்டியவர் , அவளிடம்," நீ வா மா உள்ள போகலாம் " என்றழைத்தார்.


கடவுளின் செயலோ இல்லை இயல்பாகவோ இடது காலை எடுத்து வைக்கும் பொழுது ... முன் சென்ற விஷ்வா தடுமாறுவது போல் தோன்றியதில் ...ஒரு நொடி நின்றவள் பின் வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள் . அவ்வீட்டினுள் கால் பதித்த நொடி உலகில் உள்ள ஒட்டுமொத்த பேறும் கிடைத்ததை போல் அவள் இதயம் மகிழ்ச்சியில் குதித்தது அதை பிரதிபலிப்பதுப முகமும் பளபளத்தது .

அதில் விஷ்வா , "அட என்ன இது ...நம்ப வீட்டை பார்த்தவுடனே ஏஞ்சலோட முகம் டாலடிக்குது !!!"


மித்ராளினிக்கு அவ்வீட்டினை இதற்கு முன் பார்த்தது போல் ஓர் எண்ணம் ....ஏதோ ஏதோ நினைவுகள் கலங்களாய் தோன்றியதில் எவரோ ஒருவரின் கையணைப்பில் புகைப்படங்களை பார்ப்பது போல் ஓர் காட்சி தோன்றி மறைந்தது .அதை பற்றி யோசித்து உணர்ச்சிவசப்பட்டதில் மயங்கி சரிந்தாள் .

அவளின் நிலை கண்டு பதறிய நாச்சியார்," விஷ்வா " என கத்தியதில் திரும்பிய விஷ்வா அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டான் .

"என்னடா ஆச்சி இந்த புள்ளைக்கு!!! டேய் நான் போய் டாக்டர்க்கு போன் பண்ணட்டுமாடா ....அச்சோ முதல் முறையா வீட்டுக்கு வந்த புள்ளைக்கு இப்டி ஆகிடிச்சே "


அவரது புலம்பலில் பல்லை கடித்த விஷ்வா, "மாம் !!!!! உங்க பையன நீங்களே அசிங்கபடுத்தக்கூடாது ....நானும் டாக்டர் தான் மா...இவங்க என்னோட பேஷன்ட் "என அவரை முறைத்தபடியே அவளை அங்கிருந்த அறைக்கு தூக்கிச்சென்றான் .

"அச்சிச்சோ சாரிடா அம்மாக்கு பதட்டத்துல மறந்துடிச்சி "என சமாளித்த நாச்சியார் அவன் முறைத்ததில் ," உன் முட்டக்கண்ண ரொம்ப வெளியதல்லாம அந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு முதல்ல சொல்லு " என்று வெறுப்பேற்றினார் .


அவளை சிறிது சோதித்து பார்த்தவன்,"ஒன்னும் இல்ல மாம் சாதாரண மயக்கம் தான், மே பி ..அவங்களுக்கு எதாவது பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்து அதோட தாக்கத்துல மயங்கிட்டாங்கனு நினைக்கிறேன்...கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவாங்க ".

"என்னடா சொல்ற ?? அப்போ அவளுக்கு நினைவு வரவே கூடாதா .??!!!"

"அப்படியில்ல மாம் !!!" என அவன் விளக்கும் பொழுது வெளியே , "அம்ம்மா " என்று ஜித்தேந்தரின் குரல் கேட்டது .


போர்மல் உடையில் மித்ரேந்தரை கைகளில் ஏந்திக்கொண்டு படியில் இறங்கிக்கொண்டிருந்தவன் அவரிடம்,"அம்மா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு , உடனே கிளம்பி ஆகணும் ... மித்து குட்டிய பார்த்துக்கோங்க "என்று அவசரஅவசரமாக சொல்லியவன் ..சற்று தாமதித்து ,"மாம் ...!!!ஆர் யு ஆல்ரைட் ?"எனக் கேட்டான்.

"எனக்கு என்ன கண்ணா ?? நான் நல்லா தான் இருக்கேன் "என்றவர், அவனின் பதட்டத்தை கண்டு அதைப்பற்றி கேட்க நினைத்தார் . நினைக்க மட்டுமே முடிந்தது

அவன்தான் அவர் பதிலை கேட்டபின் ஒருநொடியும் நிற்காமால் சென்றுவிட்டானே .

குழந்தையுடன் மித்ராளினி இருந்த அறைக்குள் நுழைந்தவர் அவள் இன்னும் விழிக்காததை கண்டு வருத்தத்துடன் அவள் பக்கத்தில் அமர்ந்துவிட்டார் .

"டேய் குட்டி !!!அப்பாவ பார்க்க வந்திங்களா வாங்க வாங்க "என மித்ரேந்தரை தூக்கி கொஞ்சிய விஷ்வா நாச்சியாரின் வருத்தம் உணர்ந்து," மாம் !! நான் தான் சொன்னேன்ல கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவாங்கனு போங்க போய் சாப்பிடறது ரெடி பண்ணுங்க மாம்" என அவரின் கவனத்தை திருப்பினான்.


"ம்ம்ம் சரிடா... நீ குட்டிபயல பார்த்துக்கோ , நான் போய் சமைக்கிறேன் . இந்த புள்ளைய இனிமே நல்லபடியா கவனிச்சிக்கணும்" என்று படுத்திருந்த மித்ராளினியின் தலை கோதி சென்றார் .


----------------------------------------------------------------------------------------------------------------


அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் நுழைவாயிலில் சீறிக்கொண்டு வந்து நின்றது ரெட் கலர் FERRARI 599 GTB FIORANA ( 3.57 CRORES ).

அதிலிருந்து அடர் கருப்புநிற பேண்ட் , வெள்ளை சட்டை, அதன்மேல் கருப்பு நிற பிளேசர் அணிந்து ஆண்மையின் கம்பீரத்துடன் இறங்கிய ஜித்தேந்தர், பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் தன்னை வியந்து பார்ப்பதை வழக்கம்போல் கண்டுகொள்ளாமல் தன் வேகநடையுடன் கடந்து சென்றான் .

இரண்டாம் மாடியின் ஒரு அறைக்குள் நுழைந்தவன் முன்,"பெரியத்தான் "என்று அழைத்தபடி ஷாலினி நின்றாள்.

ஷாலினி ....ஷாலினிவர்தன் , ஜித்தேந்தரின் மாமன் மகள்.(போன எபில வந்த அவளே தான் ...இது மேடமோட வேறொரு அவதாரம் ).

சிறுவயதிலிருந்தே துப்பறியும் துறையில் ஆர்வமாய் இருந்தவளிற்கு லட்சியமே அத்துறையில் தானும் சாதிக்கவேண்டுமென்பதே . அவளின் தாயும் தந்தையும் தங்களின் செல்லமகளை தன் கைக்குள் வைத்து வளர்ந்திருந்தாலும் அவளின் இத்துறையின் மேலான தாகம் அவர்களின் கைவிட்டு வெளிவர அவளை தூண்டியது.

அந்நேரத்தில் அவளுக்கு துணையாய் இருந்தது ஜித்தேந்தர் தான் .அவன் அனைவரிடம் இருப்பதுபோல் அவளிடமும் தள்ளி தான் இருந்தான் ஆயினும் அவளும் அவனின் குடும்ப கூட்டுக்குள் ஒரு கிளி தானே , அவனின் தம்பி தங்கையின் ஆசையை நிறைவேற்றியதை போல் இவளின் ஆசைக்கும் உறுதுணையாய் இருந்து வருகிறான்...i...இனியும் இருப்பான் .

அவளின் இந்த வேலையை பற்றி அவர்களின் குடும்பத்தில் எவருக்கும் தெரியாது அவர்களை பொறுத்தவரை அவள் மைக்ரோ ஆர்டிஸ்ட் .

தனது ராணிமாவை கண்டுபிடிப்பதற்கு தன்னாலான முயற்சிகளை செய்த ஜித்தேந்தர் அவள் காணாமல் போனதன் சூசமத்தை அறிய இவளின் உதவியை நாடினான் .

அவளிடமும் முழுவதையும் சொல்லவில்லை , அவன் ஒரு பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறான் என்றவரை மட்டுமே அவள் அறிவாள் .

"என்னாச்சு ?? ஏதாவது தெரிந்ததா?? எதுக்காக அவசரமா வர சொன்ன ??" என தொடர் கேள்விகளால் அவளை தாக்க, தன் அத்தானின் இந்த பதட்டம் புதிது என்பதால் யோசித்தபடியே,

"அத்தான் ..!!நீங்க சொன்ன மாதிரி நாங்க அந்த பகுதியில் எல்லா இடத்திலும் விசாரிச்சுட்டோம் .ஆக்ட்சுயலி, அந்த விபத்தில் சிக்கிய எல்லோரையும் அங்கிருக்குற அரசாங்க ஹாஸ்பிடல்லதான் முதலில் சேர்த்திருக்காங்க. அண்ட் அவங்க எல்லோருமே சில நாளில் குணமாகியும் , சில பேர் வேற ஹாஸ்பிடல்க்கு மாறியும் போயிருக்காங்க. யார் யார் அந்த ஹாஸ்பிடல்ல இருந்தாங்கனும் , எந்தவிதத்துல வெளிய போயிருக்காங்கனும் டீடெயில்ஸ் அண்ட் அவங்க நேம் லிஸ்ட் இது "என ஒரு பைலையை காட்டினாள்.

எதுவும் சொல்லாமல் அந்த பைலை பார்த்த ஜித்தேந்தர், "மேலே சொல்" என்பது போல் அவளை பார்க்க,

"அட எனக்குன்னு மாமன் பசங்க வச்சிருக்காங்க பாரு...ஒருத்தன் பேசியே கொல்லுவான் .. இன்னொருத்தர் பேச காசு கேக்குறாரு ..நல்லா வருவீங்கடா அண்ணனும் தம்பியும் "என முனங்கியவள் ,

"ஒப்கோர்ஸ் அத்தான்!!! இதுல இருக்க முதல் லிஸ்ட் நீங்க குடுத்ததுதான், ரெண்டாவது லிஸ்ட் தான் இந்த இரண்டு நாட்கள்ல நாங்க கண்டுபிடிச்சது. நீங்க குடுத்த லிஸ்டில் இருந்த ஒரு பெயர் இப்போ நான் குடுத்த லிஸ்ட்ல இல்ல அவங்க என்ன ஆனாங்கன்னு யாருக்குமே தெரியல....அத பத்தி தெரிஞ்சிக்க நம்ப மும்பை போகணும் பெரியத்தான் "என தான் அறிந்தவற்றை சொல்லிமுடித்தாள்.

அடுத்து வரப்போவதை மனம் முன்பே கணக்கிட்டதில் ஒருவித அமைதியுடன் அவன் பார்வையை அகற்றாமல் இருக்க,

ஷாலினியே தொடர்ந்து,"மிஸ் ஆகுற அந்த ஒருத்தரோட பெயர் மித்ராளினினு போட்டிருக்கு பெரியத்தான்.." என்று சொல்லியவள் அவனின் முகத்தில் தோன்ற போகும் உணர்வுகளை காண அவனையே உற்றுப்பார்த்தாள்.

அப்பெயரை கேட்டதும் தன் கண்களை இறுக்கமாய் மூடி கொண்டவனின் காதிற்குள் " பாவா இன்னும் எவ்வளவு நேரம் காத்துகிட்டு இருக்கிறது ..எப்பவும் என் ராணிமாவ எதுக்காகவும் காத்திருக்க வைக்கமாட்டேன்னு சொல்வீங்க ....எப்போ வருவீங்க பாவா " என அவளின் குரல் சிணுங்கியது .

அவனின் நிலையை கண்ட ஷாலினி , "பெரியத்தான் ...!!நான் ஒன்னு கேட்கட்டுமா?"

அவளின் கேள்வியில் தன் நினைவில் இருந்து கலைந்தவன் "என்ன??" என்பது போல் பார்த்தான் .

"அது ....நீங்கள் தேட சொன்னது நம்ப மித்ரேந்தருடைய அம்மாவையா ?" பயந்துகொண்டே தான் கேட்டாள் . என்னதான் அவன் அவளின் கனவிற்கு உயிர்கொடுத்து உறுதுணையாக இருந்தாலும் , அவனின் பார்வையே எட்டி நிற்க வைக்கும் .... அந்த பயத்திலே இப்பொழுதும் இருந்தாள்.

அவளின் கேள்வியில் இத்தனை நேரம் இறுக்கமாய் இருந்த ஜித்தேந்தரின் இதழில் அழகாய் ஓர் புன்னகை உதயமாகியது, "ஆம்... என் பங்காரத்தின் அம்மா அவ தான்...அவ என்னோட ராணிமா ..என்னோட ஒட்டுமொத்த வாழ்க்கையும் அவ தான்" என்று கூறியவனின் கண்களில் காதல் மின்னியது.

அவனின் புன்னகையிலே வியந்திருந்தவள் ...நிச்சயம் இப்படி ஒரு பதிலை அவனிடம் எதிர்பாக்கவில்லை ...ஆம் என்ற பதிலை எதிர்பாத்திருந்தாலும் அவனின் இந்த நீண்ட பேச்சை எதிர்பார்க்கவில்லை ...அதிலும் அவன் கண்களில் வழிந்த காதலில் அவளிற்க்கே அப்பெண்ணை உடனே கூட்டிவந்து அவனிடம் சேர்க்க வேண்டும்போல் தோன்றியது .

"பெரியத்தான்...!! எனக்கு என்ன சொல்றதுனே தெரியல, ரொம்ப சந்தோஷமா இருக்கு . நான் நிச்சயம் அவங்களை கண்டுபிடித்து உங்ககிட்ட சேர்ப்பேன் " .

மீண்டும் புன்னகை செய்தவன் , "எனக்கு நம்பிக்கை இருக்கு ஷாலினி ...அதனாலதான் இந்த பொறுப்பை நான் உன்கிட்ட கொடுத்தேன் , என் ராணிமா சீக்கிரம் என்கிட்ட வந்துருவா ...வரணும்...நான் இல்லாம அவள் நிச்சயம் நார்மலா இருக்க மாட்டா ஐ க்நொவ் அவளுக்கு எதோ
ஒரு பிரச்சனை இல்லனா இந்நேரம் என் ராணிமா என்னிடம் வந்திருப்பா".

அவனின் விளக்கத்தில் அவளை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் ,"பெரியத்தான்;!!அவங்க எப்படி இருப்பாங்க??" எனக் கேட்டாள்.

அக்கேள்வியில் தன்னவளின் மதிமுகத்தை நினைத்தவன் ,"அவள் பூவை போன்றவள் ,பிறந்த குழந்தையின் மென்மையாய் ...வன்மை என்பதே அறியாமல் ... குறும்பும் அமைதியும் கலந்த கலவை என் ராணிமா " என்றவனின் குரல் காதலில் குலைந்து வந்தது.

இதுவரை இவன் இப்படிப் பேசி கண்டிராத ஷாலினி வாயை பிளந்தவாரு பார்த்து கொண்டிருந்தாள் .

"தனது அத்தானா இவ்வாறு பேசியது!!!?? இவருக்குள்ளையும் இப்படி ஒரு காதல் மன்னன் இருக்கானு எனக்கு தெரியாம போச்சே" என மனதிற்குள் வியந்துகொண்டிருந்தவள் , வெளியே அவனைக் கண்டு புன்னகை பூத்தாள் .
அவளது புன்னகையிலே அவள் எண்ணுவதை கண்டு கொண்ட ஜித்தேந்தர் ,"நான் விஷ்வேந்தருக்கு அண்ணன்மா "என்றான் .

அவன் சொல்லில் ஒரு நொடி அதிர்ந்தவள் பின்பு எதையோ நினைத்து வருத்தத்துடன் புன்னகைத்தாள் .

அதில் யோசனையான ஜித்தேந்தர் , "ஷாலினி ..!!! எப்பவும் எதையும் ஆழமாய் யோசிக்கணும் ஏன்னா நம்ம கேக்குறதும் பாக்குறதும் எப்பவும் உண்மையா இருக்கணும்னு அவசியம் இல்லை..ஒப்கோர்ஸ் நீ இருக்குற தொழில்ல இது உனக்கே தெரிஞ்சிக்கணும் ... உன் மனச மட்டுமே கேள் அதுவே உனக்கு பதில்சொல்லும் "என்றவனின் பேச்சில்
இடையில் "பெரியத்தான் " என குறுக்கிட்டவளிடம் ,

"பைன்!!!! நானேமும்பை கிளம்பறேன் என் ராணிமாவ தேடி ...." அவ்வளவு தான் என்பதுபோல் பேச்சை மாற்றியவன் தொடர்ந்து, "நீ வீட்டுக்கு போ... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் , நம்ப ஊருக்கு புதுசா வந்திருக்கிற asp யாருன்னு பாரு.... அவரை எப்படி நம்ப சித்துகுட்டிக்கு தெரியும்னு விசாரி ..அண்ட் மோர்வோவர் அவர் நேத்து நம்ப ஹாஸ்பிடல்க்கும் போயிருக்காரு அது என்னனு விசாரி " என வரிசையாய் கூறினான்.


அனைத்திற்கும் "சரி சரி" என தலையாட்டியவள் அவன் சென்றபின் ,"அம்மாடியோவ்...!!!பேசாம இவரே நம்ப ஹெட்ஆபீஸ்ல இருக்கலாம் போல..எப்படித்தான் எல்லாம் இவருக்கு தெரியுதோ??!!! இவருக்கு தெரியாம எதுவும் பண்ணமுடியாதுபோல" என எண்ணியவள் , அவன் விஷ்வாவின் பெயரை இழுத்ததை வைத்து ..."நம்ப விஷயம் எதுவரைக்கும் தெரியும்னு தெரியலயே "என யோசித்தாள் .


தன்னவளுக்காக
பல கரை கடக்கவும்
தயங்காதவனிடம் ...
எவர் கூறுவது ??
அவனவள்
தன்கரை உடைத்து
அவனின் கையருகில்

இருப்பதை ....!!!

----------------------------------------------------------------------------------------------------------------
யாஹ்வி :


"என்ன இது ?!!!நம்ப திரும்ப மயங்கிட்டோமா??" என சிந்தனையுடன் விழித்த மித்ராளினியை கவர்ந்தது அங்கு விஷ்வாவின் கைகளில் அமர்ந்து தன் பிஞ்சு விரல்களால் அவனின் தலை முடியை பற்றி விளையாடி கொண்டிருந்த மித்ரேந்தரின் சிரிப்பு .

"ஆஆ!!!!!! என்னடா கண்ணா பண்றீங்க.... அப்பாக்கு வலிக்குதுடா" என விஷ்வாவும் மகனின் விளையாட்டில் பொய்யாய் வலியில் சிணுங்க, அதில் மித்ரேந்தரின் சிரிப்பு மேலும் அதிகரித்து இன்னும் வேகமாய் அவனின் முடியை பற்றி இழுத்து விளையாடியனை கண்டு அவளும் வாய்விட்டு சிரித்தாள் .


அச்சிரிப்பில் அவள் புறம் திரும்பிய விஷ்வேந்தர்," அப்பாடி எழுந்தாச்சா !!! இம்புட்டு நேரம் எங்க அம்மாவே நான் உண்மையா டாக்டர் தானான்னு சந்தேகமா பார்த்துட்டு இருந்தாங்க .. இப்பவாவது கண்ணு முழிச்சிங்களே" என பெருமூச்சிவிட்டவனை கண்டு சிரிப்புடன் ," இந்த குட்டி உங்க பையனா" என கேட்டாள் .


அவளின் கேள்வியில் சந்தோஷத்துடன் குழந்தையை முத்தமிட்ட விஷ்வேந்தரும்,"ஆமா நான் தான் இவனோட அப்பா" என்றான் .


இவன் சொல்வதை கேட்டுக்கொண்டே வந்த நாச்சியார் , "டேய் !!! அவ முழிச்சா வந்து சொல்லுன்னு சொல்லிருந்தேன்ல , உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்க "என்று அவனை அதட்டியவர், அவளிடம் பாசமாய் .."இப்போ எப்படிமா இருக்கு??? இந்தா இந்த ஜூஸ குடி " என கொடுத்தார் .

திடீரென நினைவுவந்து,"அடடா!!!! மறந்தே போய்ட்டேன் பாரு "என சொல்லிகொண்டே கதவின் அருகில் சென்றவர் ," என்ன தம்பி அங்கயே நின்னுட்டிங்க வாங்க " என எவரையோ அழைத்தார்.

வரும்பொழுதே விஷ்வேந்தரையும் அவன் கையில் இருந்த குழந்தையையும் பார்த்துகொண்டே உள்நுழைந்தான் ஜிஷ்ணு .

காலையில் மித்ராளினியை கண்டபின்பு முக்கிய விஷயமாய் வெளியே சென்றவனை அவ்வேலை முழுதாய் தன்னுள் இழுத்துக் கொண்டது .சிறிது நேரம் கிடைத்தவுடன் உடனே அவளை காண விஷ்வா தனக்கு அனுப்பியிருந்த அவனது வீட்டு விலாசத்திற்கு வந்திருந்தான் .

இவனை யாரென்று விசாரித்த நாச்சியாரிடம் தன்னை பற்றி கூறியவனை அவ்வறைக்கு அவர் அழைத்து வந்திருந்தார் . மித்ராளினி பேசியதும் விஷ்வேந்தர் பேசியதும் மிக தெளிவாகவே அவனிற்கு கேட்டது .அதனாலே இவன் ஒரு குழந்தைக்கு தகப்பனா என ஜிஷ்ணுவின் போலீஸ் மூளை விஷ்வேந்தரை ஆராய்ந்து பார்க்க சொன்னது .


கண்ணன்
வசுதேவரின் புத்திரன்
மட்டுமல்லவே...
நந்தனின்
மைந்தனும் அவனே !!
இங்கோ
இவன் வாசுதேவனா என கேள்வியுடன் ஒருவர் ...
நந்தன் என்னும்
பதிலுடன் ஒருவர்..
உண்மை அறிவர் எவரோ ??
நந்தனின் நிழலை

கண்டுகொள்பவர் எவரோ ???



-கரைவாள்


சின்ன சின்ன வெண்ணிலவே...
சிரித்து பேசும் வெண்ணிலவே...
பிஞ்சு பிஞ்சு கைகளினால்
என்னை வரைந்த ஓவியமே...
ஆயிரம் ஜென்மம் வாங்கி வந்து
உன் தாயென வாழ்ந்திட வேண்டுமென்று தாய்மை கேட்டவனின் தாயுமானவனே .....
வாழும் காலமெல்லாம் என் சுவாசமானவனே ...
சின்ன சின்ன வெண்ணிலவே ...
சிரித்து பேசும் வெண்ணிலவே ...
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 12 :


￰குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த விஷ்வேந்தரை ஜிஷ்ணு யோசனையுடன் பார்க்க ....விஷ்வேந்தரின் கையில் இருந்த குழந்தை மித்ராளினியை பார்த்து குதூகலமாய் கை தட்டி சிரித்தது .

அவனின் கைகளில் இருந்து துள்ளி கொண்டு அவளிடம் வர பார்க்க, அக்குழந்தையை தன் கைகளில் எடுத்து பட்டு போன்ற கன்னத்தில் முத்தமிட்டவள் அதன் மென்மையில் மயங்கி , "ஜி்ண்ணு..!!! இங்க பாரேன் இந்த பாப்பா எவ்ளோ சாப்ட் அ இருக்கு" என்றாள்.

தன்னுடைய மித்துமா அவளாக தன்னை "ஜிண்ணு" என அழைத்து கண்களை உருட்டியவாறு பழையபடி பேசியதை கண்டு கண்கள் கலங்கியவன் விஷ்வாவின் கண்ணசைவில் நொடியில் சமாளித்து,"நீ கூட குழந்தைல இப்படி தாண்டா இருப்ப" என்றான் மகளிடம் பேசும் தந்தையின் வாஞ்சையுடன்.

அவனின் பதிலில்,"ம்ம்ம்ம்....ஆனா, எனக்கு தான் எதுவும் நினைவில்லையே "என்று ஒரு நொடி அமைதியானவள் அவனின் முகம் அதில் வாடுவது பொறுக்காமல்,"ஜிண்ணு ?!!எனக்கு மறந்தா என்ன??? நீ தான் என் கூட இருக்கல அது போதும் எனக்கு ...சீக்கிரம் எல்லாம் நியாபகம் வந்துரும்னு தோணுது" என்று இயல்பாய் உரைத்தாள்.

அவளின் சொந்தமாய் அவனை ஏற்றுக்கொண்டதை உணர்த்தும் அவளின் இயல்பான பேச்சில் அவளிடம் சிலதை கேட்க நினைத்தவன் அங்கிருந்த விஷ்வாவை பார்த்தான் .

அவன் பார்வையின் பொருளை உணர்ந்த விஷ்வா , "ஓகே !!! நீங்க பேசிட்டு இருங்க ... எனக்கு கொஞ்சம் வேல இருக்கு முடிச்சிட்டு வரேன் என மித்ரேந்தரருக்காக கைகளை நீட்ட , மித்ராளினியை இறுக பற்றிகொண்ட அந்த சிட்டு அவளின் மார்பில் முகத்தை மறைத்து கொண்டது .


விஷ்வா , "அடேய் ...!! அப்பா தூக்கிட்டுப் போயிடுவோனோனு முகத்தை மறைச்சிகிட்டியா....சரியான கேடிடா நீ " என்று மகனை சீண்ட,


இடையில் குறுக்கிட்டு ,"அவன் அவங்க அப்பாவ போலனு நினைக்கிறேன"் என மனதில் விஷ்வேந்தரை நினைத்து சொன்னான் ஜிஷ்ணு.


அவனின் பார்வையிலே தன்னை தான் சொல்கிறான் என புரிந்துகொண்ட விஷ்வா அவனை வெறுப்பேற்ற ,"ஏஞ்சல்ல்ல்ல்.....!கொஞ்ச நேரம் பாப்பாவை வச்சிக்கிறீங்களா ??"என கேட்டான்.


மித்ராளினி , "கண்டிப்பா ..!!! நீங்க கேக்கவேவேணாம் என்னமோ இந்த குட்டி பையன் என்னோட நல்லா ஒட்டிகிட்டான் . எனக்கும் இவனை பார்த்தா மனசெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு ".

"ஹாஹா!!!!! அது தான் எங்க வீட்டு கண்ணனோட ஸ்பெஷல் ஏஞ்சல்ல்ல்ல்!!!!" என விஷ்வா வரிக்கு வரி ஏஞ்சல்னு சொல்லி ஜிஷ்ணுவின் பிபியை ஏற்றிவிட்டு ஓடிவிட்டான் .


அவன் சென்ற பின்பு கட்டிலில் மித்ராளினியின் அருகில் அமர்ந்த ஜிஷ்ணு ,அவளின் ஒரு கையை எடுத்து தன் கையினுள் வைத்து..." மித்துக்குட்டி..!!! உனக்கு என்னை பத்தின நினைவு வந்துடுச்சாடா" என கேட்க ,

"இல்லை" என தலையசைத்தவள்.."ஆனா ஜிண்ணு !! நான் இப்போ மயங்குறப்போ எனக்கு சில நினைவுகள் புகைப்படம் படம் போல தெரிஞ்சிது . போலீஸ் தொப்பியை போட்டுக்கிட்டு நானும் ஸ்டெதெஸ்கோப கழுத்துல மாட்டிகிட்டு நீயும் தோள்மேல கைய போட்டுக்கிட்டு நின்னமாதிரிலாம் தெரிஞ்சிது . அதுல இருந்து என் மனசு நீ எனக்கு ரொம்பவே முக்கியம்னு கத்திக்கிட்டே இருக்குது. என்ன நடந்திருக்கும்னு யோசிச்சி யோசிச்சி குழம்புனது தான் மிச்சம் அதான் நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். இனிமே என் மனசு சொல்ற வழில தான் நான் போகப்போறேன் ....ஏன்னா எனக்குதான் மூளை இருந்தும் அத சரியா யூஸ் பண்ண முடியலயே "என முகத்தை சுருக்கி கொண்டு கூறியவளின் மூக்கை பிடித்து திருகியவன் ,

"உன் வாய் இருக்கே வாய்அது மட்டும் எப்பவும் மாறாது"!!!!...


ஜிஷ்ணு மித்ராளினியின் மூக்கை திருகியதை பார்த்த மித்ரேந்திரனுக்கு என்ன தோன்றியதோ தன் கால்களால் அவனை எட்டி உதைத்தான் .

"ஹாஹா!!! என் மேல கை வைக்க முன்னாடி நல்லா யோசிச்சிக்கோ பார்த்தல என் பாடிகார்ட??!! "
என பழைய குறும்புக்காரி மித்ராளினியாய் ஜிஷ்ணுவிடம் சொல்லியவள் , மித்ரேந்தரை தூக்கி போட்டு பிடித்து அவன் வயிற்றில் வாய் வைத்து ஊதினாள்.


"டேய் படவா ..!!! நீ உன் அப்பனுக்கு மேல இருப்ப போல" என பிடிக்க வந்த ஜிஷ்ணுவிடம் இருந்து குழந்தையை தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்தவள் எதிரே வந்தவர் மேல் மோதி நின்றாள் .



அதே வேளை சென்னை கமிஷ்னர் அலுவலகம் முன்பு நீண்ட நேரமாக காத்திருந்த சித்ராங்கதா அந்நாளில் ஆயிரமாவது தடவையாக தனது கை கடிகாரத்தை பார்த்துவிட்டாள்.

"நம்ப ஆளு உள்ள இருக்காரானே தெரியலயே ..ஒரே ஒரு நாள் கிளாஸ கவனிக்கலாம்னு போனா இப்படி ஆகிடிச்சே ...இன்னிக்கு இவரை பார்க்காம போனா இந்த மனசு வேற தூங்க மாட்டேன்னு அடம்புடிக்கும் என்ன பண்றது " என யோசித்து உள்ளே இல்லாத தன்னவனுக்காக எதிர்புறம் இருந்த மரத்தின் கீழ் தன்னந்தனியாக காத்திருந்தாள் அந்த செல்வ சீமாட்டி .


பாவையவள் தன்னுயரம்
கருதாமல் தன்னவனுக்காய்
பழகிஅறியா வெயிலில்
தவம் இருக்க ...
அவனோ அங்கு தன்
உயிரானவளின் சந்தோஷ
சிரிப்பில் வரம்
பெற்றதாய் உணர்ந்து ...
தன்
மனதிற்கினியவளை
மறந்திருந்தான்.


........................................................................................................................................


யாஹ்வி :


தன் அறைக்கு வந்தவுடன் தன்னை சூழ்ந்த தன்னவளின் நினைவுகளின் தாக்கத்தை தாள முடியாமல் அவளின் எண்ணை தனது மொபைலில் அழுத்தியிருந்தான் விஷ்வேந்தர்.

முழுதாய் போன அழைப்பு கடந்த நாளை போலவே இம்முறையும் எடுக்கப்படாமலே நின்றுவிட்டதில் அதை தூக்கி எறிய... அவன் தூக்கி போட்டது ஆளை தன்னுள் புதைத்துக்கொள்ளும் மெத்தையின் மேலாதலால் அந்த போனையும் அது அழகாய் தன்னுள் புதைத்துக்கொண்டது .

தன் எதிரில் இருந்த சுவற்றில் கை முஷ்டியால் ஓங்கி குத்தியவன் அதிலே தலை சாய்த்தபடி புலம்ப ஆரம்பித்தான்," ஏன்டி இப்படி பண்ற??? என்னால உன் கூட பேசாம இருக்க முடியலடி ...நீ சொன்னாதான என்ன பிரச்சனைன்னு புரியும்...ஒருவேள நான் உன்கிட்ட அன்னிக்கு அப்படி நடந்துக்கிட்டது பிடிகலைனு தான் இப்டி பண்றனா ...சத்தியமா நான் இனி உன் பக்கத்துலையே வர மாட்டேன்டி ...ஆனா நீ எப்பவும் என்கிட்ட பேசாம இருக்காதடி என்னால தாங்க முடியலடி" என தன்னவள் தன் முன் இருப்பது போல் புலம்பி தீர்த்தான் .

........................................................................................................................................


ஷாலினியிடம் தனது ராணிமாவை பற்றி பேசியதிலிருந்து இதழில் புன்னகையுடன் தன்னவளை பற்றியே யோசித்துக்கொண்டிருந்த ஜித்தேந்தர், வழியில் ஒரு குழந்தை தன் முன் இருந்த சிறுபள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை பார்த்துவிட்டு சுற்றும் முற்றும் பார்ப்பதை கண்டு அதன் அழகிய செயலில் மயங்கி தனது காரை நிறுத்தியவன் அச்சிறுமியின் செயலை கவனிக்க ஆரம்பித்தான் .

சுற்றும் முற்றும் பார்த்த அச்சிறுமி யாரும் இல்லாததில் டொம்மென்று தன் முன் இருந்த தண்ணீரில் குதிக்க சரியாய் அங்கு வந்த ஒருவரின் மேல் அது சிதறியதில் கோபமாய் முறைத்தவர் கால்களை விரித்தவாறு நின்றிருக்க அவரின் கால்களுக்கு இடையில் புகுந்து ஓடிவிட்டாள் .

அந்த சிறுமியின் செயலில் தன்னவளின் குறும்பை கண்டு வாய்விட்டு சிரித்தவன் தன்னவளை இரண்டாம் முறையாய் கண்ட நொடிகளை நினைத்துப்பார்த்தான் .


நினைவுகளில்
மட்டுமே வாசம் செய்பவளின்
நிஜமே கை அருகிலிருப்பதை
உணராமல்
தன் நினைவுகளிலே
சுகம் கண்டான் அவன் ...
தன்னவனின் நிஜத்தை
பார்க்காவிடினும்
அவனின் நிழல் சேர்ந்ததிலே
தன் உயிர்ப்புற்றாள்

அவனவள் .....



நினைவலை 1 :


வருடம் வருடம் தன் தங்கை பிறந்தநாளுக்கென்று ஆடை எடுத்து தருவதை வழக்கமாய் கொண்டிருந்தான் ஜித்தேந்தர் . அவன் எடுத்துக் கொடுக்கும் ஆடையையே எப்பொழுதும் பிறந்தநாளன்று உடுத்துவது சித்ராங்கதாவின் பழக்கம் .

மறுநாள் அவளின் பிறந்தநாள் என்ற நிலையில் இன்று கடைக்கு வந்தவன் அங்கிருந்த ஆடைகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சட்டென்று ஏதோ தோன்ற திரும்பியவனின் கண்கள் ஒரே நொடியில் தன்னவளை கண்டுகொண்டது . அவளின் அழகில் இரண்டாம் முறையாய் வியந்து நின்றவன் அவளின் செய்கையில் களைந்தான் .

கண்ணாடி முன்பு நின்று ஒரு புடவையை தன் மேல் போட்டுக்கொண்டு இருந்தவள் தன் மற்றோரு கையால் போனை தன் முன் நீட்டிக்கொண்டு ," இது எப்படி இருக்கு??இந்த டிஸைன் ஓகே வா???"என கேட்டுக் கொண்டிருந்தாள் .

அவள் கேட்டது போனில் இருந்தவரிடம்தான் என்ற போதிலும்.. இவனுக்கு அவள் தன்னிடம் கேட்பது போல தோன்ற , அவ்வுடையை பார்த்தவன் அது அவளுக்கு பொருந்தாதது என்பதால் இடவலமாய் தலை அசைத்தான்.

அவனின் நல்ல நேரமோ போனில் அப்பக்கம் இருந்தவருக்கும் அவ்வுடை பிடிக்காததால் அதை திருப்பி வைத்தவள் , வேறு உடையை எடுத்து சென்று அதே போல் நின்றாள் .

இதே போல் செய்து ஐந்து புடவைகளை எடுத்துக்கொண்டு வந்தவள் அங்கிருந்த சேல்ஸ்மேனிடம் சென்று,"அண்ணா ...!!! இங்க பாருங்க, இந்த அஞ்சு புடவையில் இந்த போன்ல இருக்கவங்க எதை எடுக்க சொல்லுராங்களோ அத பில் போட்டுகுடுங்க...நான்வேற சில திங்ஸ் பார்க்கணும் ஓகேவா "என கேட்டாள்.

அவர் அவளின் சிறு வயதில் இருந்தே அவளை அறிவார் .இக்கடையில் தான் வழக்கமாய் அவள்குடும்பத்தார் உடை எடுப்பார்கள். அதேபோல அவளது பழக்கமும் அறிந்தவர் என்பதால், "தெரியும்மா ...நீ போ நான் வழக்கம்போல போட்டுறேன் "என்றார்.


ஜித்தேந்தர் மிக ஆர்வமாய் அந்த ஐந்து புடைவைகளில் எந்த புடைவையை அவர் எடுக்க போகிறார் என பார்த்திருந்தான் .அவனின் மனதிற்கு அந்த ரோஜாநிற புடவையில் ஆரஞ்சு வண்ண பார்டர் போட்டிருந்த புடவை தான் அவளுக்கு ஏற்றது என்று தோன்றிக்கொண்டே இருக்க அவர் அதையே தேர்ந்தெடுக்கவேண்டுமென வேண்டிகொண்டிருந்தான் .

ஆனால் அவனது துரதிருஷ்டம் அந்த போனிலிருந்தவர் என்ன சொன்னாரோ ஊதா நிற புடைவையை எடுத்து கவரில் போட்டு பில் போட சென்றார் .

அவசர அவசரமாக யோசித்த ஜித்தேந்தர் தனக்கு பிடித்த புடவையை எடுத்தவன் அவர் முன் சென்று," அண்ணா...!!! கொஞ்சம் குடிக்க தண்ணி கிடைக்குமா "என கேட்க, அவனின் உயரம் அறிந்தவர் அவன் தன்னிடம் பேசியதில் வியந்து போய் அக்கவரை அங்குவைத்து விட்டு அவனுக்கு தண்ணீர் எடுக்க ஓடினார் .

சட்டென்று தனக்கு பிடித்த புடவையை அந்த கவரில் வைத்தவன் அதில் இருந்ததை தனது கவரில் வைத்துக் கொண்டான். பின் அவளுக்காக தான் முதல் முதலாக தேர்ந்தெடுத்த உடையில் அவளை நினைத்து பார்த்து ரசித்தவன், தன் வீட்டுக்கு சென்று தனது கையில் இருந்த புடவையை தன் தங்கையிடம் கொடுத்தான் .

மறுநாள் மித்ராளினியை வேறொரு புடவையில் கண்ட ஜிஷ்ணு, "தான் கொடுத்த புடவையை அணியவில்லை" என்றும் ..பதிலுக்கு மித்ராளினி," இதுதான் நீ தேர்ந்தெடுத்தது " என்றும் சண்டையிட்டு கொண்டது தனிக்கதை .

அந்நாள் வரை தங்கள் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் ஜிஷ்ணு தேர்ந்தெடுப்பதையே அணிய வேண்டுமென அவளின் வீட்டில் இருந்த எழுதபடாத சட்டத்தினை முதல் முறையிலயே உடைத்தெறிந்திருந்தான் ஜித்தேந்தர் .

இங்கோ வருடாவருடம் தன் அண்ணன் தேர்ந்தெடுத்து தருவதையே பிறந்தநாள் அன்று போட்டு பழகியவள் , முதல் முறையாக தன் அண்ணன் அல்லாமல் வேறு ஒருவர் எடுத்துக் கொடுத்த புடவையை அணிந்திருந்தாள் அவனே அவளின் மனம் கொய்வான் என அறியாமலே .....ஆம் ஜித்தேந்திர் எடுத்து வந்தது நம்ப ஜிஷ்ணு தேர்ந்தெடுத்த புடவையே.

விதியின் வழியை எவர் அறிவர்??? அன்றே இவர்கள் நால்வர்களுக்குமான முடிச்சு விதியால் போடப்பட்டுவிட்டதோ என்னவோ!!???

-கரைவாள்
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 13 :


ஜித்தேந்தர் சென்றபின் ஷாலினி,கடந்த முறை விஷ்வாவுடன் கழித்த நிமிடங்களை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தாள் . அன்று அவ்வறையில் அவன் அருகாமையில் ஏற்பட்ட உணர்வுகளின் தாக்கத்தால் அவன் முன் வர வெட்கம் கொண்டு போக்கு காட்டியவள் பார்ட்டி முடிந்தபின் விரைவாகவே தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள் .

தன் அறைக்குள் நுழைந்து உடை மாற்றுவதற்காக அலமாரியைத் திறந்தவளின் மனம் அவனைப் பற்றியே சிந்திக்க.... கைகள் ஒவ்வொரு ஆடையாக எடுத்து வெளியே போட்டது .

கைப்பேசியின் ஓசையில் கலந்தவள் செய்துவைத்த வேலையை கண்டு தலையில் அடித்துக்கொண்டு , "டேய் விஷ்வா !!! ஆனாலும் நீ என்ன ரொம்ப மயக்கி வைச்சிருக்கடா" என அதற்கும் அவனையே பழி சொல்லி , திரும்ப அனைத்து ஆடைகளையும் எடுத்து வைக்கையில் அடியிலிருந்த கவரை கண்டு புன்னகையுடன் அதைப் பிரித்தாள் .

ஆறுமாதம் முன்பு தனது வேலை காரணமாக ஹரியானா வரை சென்றவள் , விஷ்வாவை பார்த்துக்கொண்டே இருப்பதற்காக அவனை பின்தொடர்ந்து புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என தனது உதவியாளருக்கு கட்டளை இட்டு விட்டே சென்றிருந்தாள் . அவரும் தனது வேலையைச் சரியாய் செய்ய அவளது வேலையில் கடைசி இரண்டு நாட்கள் மிகவும் கடுமையானதாக இருந்ததில் இறுதியாக வந்த புகைப்பட கவர் பிரிக்கப்படாமலே பையிலிருந்து அலமாரியை சென்று சேர்ந்திருந்தது .

பிறகு ஒருநாள் அதை பிரிக்க நினைக்கையில் ஜித்தேந்தர் ஒரு உதவி வேண்டும் என கேட்டு வர அந்த வேலையில் கவனமானவள் போட்டோ கவரை மறந்தே போனாள்.

இப்பொழுது அதிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்து தன்னவனின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவள் , கடைசியாய் இருந்த புகைப்படத்தை பார்த்து யோசனையானாள். சிறிது சிறிதாக அவளது யோசனை பார்வை கோபப் பார்வையாய் மாறியது . அப்புகைப்படம்.. விஷ்வா ஒரு பெண்ணை தன் கைகளில் ஏந்தியவாறு தன் காரின் அருகில் செல்வது போல் இருந்தது .

முதலில் "எவ அவ" என யோசனையாய் பார்த்தவள்... அப்பெண்ணின் முகத்தைக் கண்டு," இவங்க அவனோட ஹாஸ்பிடலில் இருந்தவங்க தான!!!" என முணுமுணுக்கும் போதே ...அந்த பெண்ணிற்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவமும் , சில மாதங்களுக்கு முன் இந்த பெண்ணிற்காகவே இரவு நேரங்களில் கூட ஹாஸ்பிட்டலே கதி என அவன் இருந்ததையும் நினைத்தவள் , "யார் அப்பெண் ??"என கேட்டதற்கு ஒரு முறை கூட அப்பெண்ணை பற்றி தன்னிடம் அவன் சொல்லவில்லை என்பதில்,

"இவன் எப்பவும் இப்படிதான்... அப்ப நான் கேட்டும் ஒன்னுமே சொல்லல ..எப்பவுமே என்கிட்ட எதையுமே சொல்ல மாட்டிக்கிறான் "என யோசனை கோபமாய் மாறியது. நிச்சயம் அவளது கோபம் அவன் தன்னிடம் எதையும் பகிரவில்லை என்பதில் தானன்றி அவன் மேல் சந்தேகம் கொண்டல்ல .( எப்பவோ சொல்லதாதுக்கா இப்போ கோபம் அட என்னமா நீ இப்படி பண்றியேமா ).

அந்த கோபத்திலே நாட்களைக் கழித்தவள் ..அவனின் தொடர் அழைப்பில் தன் கோபம் மறந்து அவனை பார்க்க வேண்டும் போல் தோன்ற உடனே அவளின் அத்தை வீட்டிற்கு கிளம்பி சென்றாள் .


யாஹ்வி :
தனது அத்தையின் வீட்டிற்கு வந்த ஷாலினி அங்கு முன்னறையில் எவரும் இல்லாததால் "அப்படியே அத்தானோட ரூமுக்கு போய்டலாமா" என யோசிக்க ....அவளது மனசாட்சி , "வர வர உனக்கு கொழுப்பு அதிகமா போச்சு உன்னை பெத்தவ அங்க பாக்குறவங்க கிட்டலாம் உன்ன குழந்தைனு சொல்லிக்கிட்டு திரிஞ்சா நீ இங்க என்ன வேலை பார்க்க நினைக்கிற "என காரித்துப்ப அதில் முகத்தை துடைத்துக் கொண்டவள் ....

"சரி சரி !!! நாம முதல்ல அத்தையை பார்ப்போம் அப்புறம் நம்ம ஆள நல்லா கவனிச்சிக்கலாம் "என அத்தையின் அறையை நோக்கி செல்ல, உள்ளிருந்து குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடி வந்த மித்ராளிணியின் மேல் மோதி நின்றாள் .

"உப்ப்....ஸாரி நான் கவனிக்கல" என்று மித்ராளினியும்,

"நானும் ஸாரி...நானுமே கவனிக்கல "என ஷாலினியும் ஒரே நேரத்தில் சொல்ல , ஷாலினி யோசனையுடன்" நீங்க??" என மித்ராளினியை யாரென தெரியாமல் இழுத்தவளிடம்,

அங்கு வந்த நாச்சியார், "வாடாமா மருமகளே இப்போ தான் இந்த அத்தை வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா?" என கேட்டார்.


"அச்சோ அத்தை ...!! நீங்களுமா??? வேலை அதிகம் அத்தை அதான் வர முடியல "என்றவள் அங்கு அமைதியாய் தங்களை கவனித்துக் கொண்டிருந்த மித்ராளினியை காட்டி "இவங்க யார் அத்தை?" என கேட்டாள் .


நாச்சியார் , "அட!! உன்னை பார்த்ததுல இந்த பொண்ண அறிமுகப்படுத்தவே இல்ல பாரு ....இவ மித்ராளினி , நம்ப விஷ்வாக்கு வேண்டிய பொண்ணு ..கொஞ்ச நாள் நம்ம வீட்டில் தான் தங்க போறா " ஷாலினியிடம் சொல்லியவர்... மித்ராளினியிடம் , "அம்மாடி ....!! இவ அவரோடு தங்கச்சி பொண்ணுமா பெயர் ஷாலினி " என்றார்.


அவ்வளவு நேரம் மித்ராளிணியை எங்கோ பார்த்தது போல இருக்கே என யோசித்துக்கொண்டிருந்த ஷாலினி, நாச்சியாரின் பேச்சில் விஷ்வா உடன் போட்டோவில் இருந்த பெண் எனக் கண்டு கொண்டவள் அவளிடம்," இப்போ எப்படி இருக்கீங்க ?? " என கேட்டவள் அவள் முழித்ததில் ," என்ன பாக்குறீங்க ?? நான் ஒரு தடவை ஹாஸ்பிடல் வந்தப்போ உங்கள பார்த்து இருக்கேன். அப்போ நீங்க மயக்கத்தில் இருந்திங்க அதனால உங்களுக்கு என்னை தெரியாது " என சரளமாய் சொல்ல,


அதற்க்கு" ஓஒ ... இப்ப பரவாயில்ல" என சிரிப்புடன் சொல்லியவளின் சிரிப்பை ரசனையாய் பார்த்த ஷாலினி , அப்போதுதான் அங்கே தங்களைத் தவிர வேறொருவர் நின்றிருந்ததை அறிந்து நிமிர, மித்ராளிணியின் பின் நின்றிருந்த ஜிஷ்ணுவைக் கண்டு.." சார் நீங்களா!!!!!" என கண்களை விரித்தாள்.


அவளின் வியப்பில் மித்ராளிணி, "உங்களுக்கு முன்னாடியே ஜிண்ணுவை தெரியுமா??" என கேட்க ,


ஷாலினி , "தெரியுமா வா.... நான் அவரோட பெரிய பேன் ( fan )"என குதுகலித்தாள்.


அவளின் பதிலில் ஜிஷ்ணு புன்னகைக்க ....மித்ராளினியோ ஆச்சர்யமாய் பார்த்து ," நீங்க பேன் ஆஹ் இருக்க அளவுக்கு இவன் அப்படி என்ன பண்ணான் ??"என கேட்டாள்.


அவளின் கேள்விக்கு ஷாலினியோ," என்னங்க இப்டி கேட்டுட்டீங்க அவரை நாங்க முதல் முதலா பார்க்கும்போதே சும்மா படத்துல வர ஹீரோ மாதிரி ஒரே பஞ்ச்ல எதிர்ல இருந்தவன் மூஞ்ச பஞ்சர் ஆகிட்டாரு " என அவனை முதன் முதலாக பார்த்ததை விவரிக்க ஆரம்பிக்க ....அவளுடன் ஜிஷ்ணுவும் தன்னவளை முதல்முதலாக கண்ட நொடிகளுக்கு பயணப்பட்டான்.


இங்கு மரத்தடியில் அமர்ந்திருந்த சித்ராங்கதாவும் ... கண்ட முதல் நாளிலே தன்னவனின் மேல் காதல் கொண்டு அவனை ரசித்து பார்த்த நினைவுகளில் சுழன்றாள்.



உணர்வலை :

அன்று ஷாலினியுடன் அவளது கல்லூரியின் விழாவிற்காக சென்றிருந்த போதுதான் ஜிஷ்ணுவை முதல்முதலாக பார்த்தாள் சித்ராங்கதா.

அன்று விழா நாளில் வம்பு வளர்ப்பதற்கென்றே இருக்கும் சில கும்பல் ,பெண்களிடம் வம்பு இழுப்பதாக தகவல் வர அங்கு விரைந்தான் ஜிஷ்ணு .

கல்லூரி மாணவர்கள் போல் அல்லாது ரௌடிகளை போல இருந்தவர்கள் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருக்க ஒருவனின் முகத்தில் கை முஷ்டியால் அடித்தவன் மற்றவர்களை போட்டு துவைக்க ஆரம்பித்தான் .

ஜாலியாக ஷாலினியுடன் பேசிக் கொண்டே வந்த சித்ராங்கதா தன் கால் அருகில் வந்து விழுந்தவனைக் கண்டு திகைத்துப் போய் பார்க்க, எதிரே ருத்ர மூர்த்தியாய் கண்கள் சிவக்க வந்துகொண்டிருந்தவனை கண்டாள்.

அருகிலிருந்த ஷாலினி அவனது கோப முகத்தைக் கண்டு நடுங்க, இவளோ அவனின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

காக்கி பேண்ட் வெள்ளை நிற டீசர்ட் அணிந்து இருக்க அந்த டிஷர்ட் கைகளை இறுக்கி பிடித்து அவனின் முறுக்கேறிய தோளை வடிவாய் காட்டியது . தலைமுடியை ஒட்ட நறுக்கி இருந்தாலும் அவனது முகத்திற்கு அது அழகாய் இருப்பதாய் தோன்ற அவனின் தலை முதல் கால் வரை ரசித்து பார்த்த சித்ராங்கதாவின் மனதில் அன்று காலையில் கேட்ட பாட்டு பின்னணியில் ஓடிக் கொண்டிருந்தது.


" மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்குப் பிடிக்காது ...முரடா... உனை ரசித்தேன்."


அவளின் பாடலை உணர்ந்தோ என்னவோ... திரும்பியவன் இந்த கலவரத்தின் நடுவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு," இங்க என்ன வேடிக்கை?? எல்லோரும் போனது தெரியல ???போ !!" என கர்ஜித்தான் .

இப்பொழுது அவளது மனதில் ...

"தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன் "

- என வரிகளோட அவனின் பேச்சை காதில் வாங்காமல் அவனின் இதழ்களையே ரசித்து,"பொண்ணுங்க உதடு மாதிரி ரோசா இருக்கு நம்ப ஆள்க்கு தம் அடிக்கற பழக்கம்லா இல்ல போலயே....என் செல்லம் !!" என மனதில் அவனை கொஞ்ச....

இவளை பார்த்துக் கொண்டிருந்தவனோ ,இவளின் பாவனையில் குழம்பி பேச வரும் முன்பு ஒருவன் தாக்க வர எங்கு அவள் மேல் அடி விழப்போகிறதோ என அவளின் கைகளை பிடித்து இழுத்தவன் பின் இவளை மறந்து சண்டையில் மூழ்கிவிட்டான்.

அவன் அவளது கைகளை பிடித்து இழுத்ததில் அவனது மார்பில் முட்டி நின்றவளின் முகம் சரியாய் அவனின் நெஞ்சில் பதிந்திருந்தது . ஜிஷ்ணு அடிக்க வந்தவனுடன் கோபமாய் சண்டையிட்டுக் கொண்டிருக்க இவளோ அவனது மார்பில் சாய்ந்து அவன் கைகளுக்குள் இருப்பதை ரசித்துக்கொண்டிருந்தாள்.


" முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ "

-என மனதில் பாட ...சண்டையிட்டு கொண்டிருந்தாலும் அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன் ," எதுக்கு இந்த பொண்ணு நம்பளையே பாக்குது ?? ஏற்கனவே நம்பள தெரியுமா ??"என யோசனையுடன் சற்று குனிந்து தன் கை வளைவினுள் இருந்தவளை பார்த்தவன் அவளின் கண்களில் வழிந்த காதலில் திகைத்து விட்டான் .


"உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான்
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது"




அங்கு தமையனவனோ..
தனது காதலவளின்
நினைவலையில் தத்தளிக்க.....!!
இங்கு தங்கையவளோ..
தனது சொல்லா காதலின்...

உணர்வலையில் தத்தளித்தாள்...!!!
.........................................................................................................................................................................................................................................................


யாஹ்வி :


அவனின் மார்பில் சாய்ந்தவாறு கண்களில் காதல் வழிய பார்த்துக்கொண்டிருந்தவளை பற்றி எண்ணி கொண்டிருந்த ஜிஷ்ணு, அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஷாலினியின் குரலில் தன் உணர்வலையில் இருந்து கலைந்தான் .


அவளோ மற்ற இருவரிடமும் ....அவன் அன்று அடித்த ஒவ்வொரு அடியையும் பாவனையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள் .

நாச்சியார் அதை ஆர்வமுடன் கேட்க மித்ராளினி அவளின் பேச்சிற்கு ஏற்ப தனக்கு சிறியதாய் நினைவு வந்ததில் அதை பற்றி யோசித்தாள்.

அதில் ....

ஒருநாள் ஜிஷ்ணு இவளிடம் , "மித்துமா!! இன்னிக்கு நான் காலேஜ்க்கு போய்ர்ந்தப்ப அங்க ஒரு பொண்ணு என்னையே பார்த்துட்டு இருந்திச்சி நானும் எதுக்கு இப்டி பார்க்குறானு அவள உத்து பார்த்தனா ...அப்போ ...அப்போ அவ கண்ண பார்க்கும் போது எனக்கு ப்ப்ப்பா என்னா கண்ணுடா இது அப்படி தான் தோணுச்சு ....ஏன் டா எனக்கு அப்படி தோணிச்சி "என அப்பாவியாய் முகத்தை வைத்து கேட்க அதற்க்கு இவள் ,

'டேய் ஜிண்ணு உண்மைய சொல்லு ...யார் அந்த பொண்ணு அவளை பார்க்க தான காலேஜ்க்கு போன ? என அன்று அவனை படுத்தி எடுத்தது போல் தோன்றியது.


அந்த நினைவுகளில் ,"ஒருவேளை ஜிண்ணு சொன்ன பொண்ணு இவங்களா இருப்பாங்களா "என ஷாலினியை பார்த்தவள் பின் ஜிஷ்ணுவின் முகத்தில் எதையாவது கண்டுப்பிடிக்க முடியுமா என பார்த்தாள்.


அப்பொழுது படிகளில் இறங்கி வந்த விஷ்வா, ஷாலினியை அங்கு கண்டு பிரம்மையோ என கண்களை கசக்கி கொண்டுபார்க்க அவளின் பாவனைகளில் நிஜமென உணர்ந்து மயங்கி நின்றவன்," டேய் டேய்...!! ஏற்கனவே நீ பண்ண ஏதோ ஒரு விஷயத்துனால தான் பேசாம இருந்தா திரும்ப இப்டிலாம் பார்த்துவைக்காதடா " என்ற அவனின் மனசாட்சி கூற்றில் தன் பார்வையை விளக்கி கொண்டு இறங்கி வந்தான்.


அவன் வந்ததில் அமைதியானவள் தன்னை பார்ப்பான் என ஆவலுடன் பார்க்க அவனோ அங்கு யோசனையுடன் இருந்த மித்ராளினியை கண்டு , "ஏஞ்சல் ...என்னாச்சி ஆர் யு ஆல்ரைட்" என கேட்டான் .


மித்ராளிணி , "ஆங் ஒண்ணுமில்லை... சிலது நினைவு வந்த மாதிரி இருந்திச்சி அதான் யோசிச்சேன்" இன்னும் முழுதாய் வெளிவராமல் பதில் சொல்லியதில்,


விஷ்வா "நினைவு வந்தா அத பத்தி யோசிக்கணும்னு இல்ல ஏஞ்சல்...எப்பவும்போல இருங்க எல்லாமே பொறுமையா நினைவு வந்துரும் " என்று மருத்துவராய் பேச,


அவன் பேச்சில் நாச்சியார் , ஷாலினி , ஜிஷ்ணு என அனைவரும் ...."ஆமாம் மித்து !!! எதையும் யோசிக்காத " என்று அவரவர் பாணியில் சொன்னா் .


அவர்களின் பாசத்தில் புன்னகைத்த மித்ராளிணி ,"சரி சரி!!! நான் எதையும் யோசிக்கமாட்டேன் ....ஷாலினி நீங்க இவனோட பேன்னு (fan ) சொல்லிட்டு இருந்திங்கல அத பத்தி இன்னும் சொல்லுங்க" என்றாள் .


அவள் சொன்னதில் , "என்ன்ன்னானானாதுது !!!!!!....இந்த குட்டச்சி என் வில்லனோட பேன்னா...அடியே.. !!! குத்துக்கல்லு மாதிரி இங்க இருக்கவன் கிட்ட பேசாம அந்த மைதா மாவு மூஞ்சிகாரனுக்கு பேன்னுனா சொல்லிட்டு திரியுறவ, மவளே உன்னை "என மனதிற்குள் அவளை வறுத்தெடுத்தவன் வெளியே அவர்களை முறைத்தவாறு புசுபுசு என மூச்சுவிட்டான்.


அவனை கண்டுகொள்ளாமல் ஜிஷ்ணு கிளம்புவதை பார்த்து நேரம் ஆனதை உணர்ந்தவள், "அச்சோ மணி ஆகிடிச்சே!!! அப்பா வேற ஊர்ல இல்லனு அம்மா சீக்கிரம் வர சொன்னாங்க நாம இன்னும் அத்தான் கிட்ட பேசவே இல்லையே" என திருத்திருத்தவள் , " சரி நாளைக்கு அத்தான் ஹாஸ்பிட்டல்க்கு கிளம்பறத்துக்கு முன்னாடியே வந்து பேசிடுவோம் " என முடிவெடுத்து வரும்பொழுது ஆட்டோவில் வந்ததால் இப்பொழுது ஜிஷ்ணுவிடம் ," சார் ..என்னை கொஞ்சம் ட்ராப் பண்ண முடியுமா ??"எனக் கேட்டாள்.


ஜிஷ்ணு ," கண்டிப்பா ஆனா இனிமே சார்னு கூப்பிடாம ஜிஷ்ணுனு கூப்பிடனும் ஓகே வா ??" என தன்னவளுடன் அன்று இவளை கண்டிருந்ததில் தன்னவளின் தோழியை தனது சகோதரியாய் கருதி இவ்வாறு சொன்னான் .


அவனது பதிலில் ஷாலினி மகிழ, விஷ்வாவோ காதில் புகை வராத குறையாய் அமர்ந்திருந்தான் .


தான் ஒருவன் அங்கிருப்பதையையே கண்டுகொள்ளாமல் ஜிஷ்ணுவுடன் கிளம்பியவளை கண்டு கோபத்துடன் பற்களை கடித்தவன் , சட்டென்று காலை தன் அண்ணன் சொன்னது நினைவு வர," மாம் !!! அப்பாவும் மாமாவும் ஊருக்கு வந்துட்டாங்களாம் இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் நம்ப வீட்டுக்கு வந்துருவாங்க நினைக்கிறேன்" என்றான்.


நாச்சியார் , "என்னடா சொல்ற ...ஷாலினிமா அப்போ நீ அப்பா வரவரைக்கும் இங்கயே இருடா" என விஷ்வாவிடம் தொடங்கி ஷாலினியிடம் சொன்னார்.


அவள் அங்கிருப்பதாய் முடிவாக அனைவரிடமும் விடைபெற்ற ஜிஷ்ணு வழக்கம்போல் மித்ராளினியின் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டவன் அவளின் கைகளில் சுகமாய் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கும் முத்தமிட்டு சென்றான்.


.......................................................................................................................................................................................................................


நேரம் ஆனதில் இதற்க்கு மேல் காத்திருக்க முடியாமல் அங்கிருந்து கிளம்பினாள் சித்ராங்கதா . ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்தவள் வழியில் வண்டி நின்று விட ஏற்கனவே ஜிஷ்ணுவை பார்க்கமுடியாத கடுப்பில் இருந்தவள் அதை எட்டிஉதைக்க ....அவ்வழியில் வந்த ஜித்தேந்தர் அவளை கண்டு தனது காரை அவளது ஸ்கூட்டியின் முன் சென்று நிறுத்தினான் .

தனது அண்ணனின் காரை கண்டு அருகில் வந்தவள் ," நல்லவேளைணா ...நீ இந்த பக்கம் வந்த... என் ஸ்கூட்டி மக்கர் பண்ணிடிச்சிண்ணா".


ஜித்தேந்தர் ,"குட்டிமா!!! நீ உன் வண்டிய ஓரமா விட்டுட்டு என் கூட வாடா ....இங்கதான நம்ப ட்ரைவர் வீடு இருக்கு அவர்கிட்ட சொல்லி காலையில வரும்போது சரி பண்ணி எடுத்துட்டு வர சொல்லலாம் "என்றான்.


"ஓகே ஓகே அண்ணா....!!" என்றபடி மறுபக்க கதவை திறந்தவளுக்கு ," அய்யய்யோ!!!! இப்போ அண்ணா ஏன் இவ்ளோ நேரம் கேட்டா என்ன சொல்றது "என யோசிக்க, அவனோ அவனின் ராணிமாவை பற்றிய நினைவில் மூழ்கி அமைதியாய் இருந்தான் .

அவனிடம் கேள்வியை எதிர்பார்த்திருந்தவள் அவனின் அமைதியில் நிம்மதி பெருமூச்சுவிட்டு ஜிஷ்ணுவை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள் .



தங்களின் இதயம் நுழைந்து ...
உயிரில் கலந்து ...
உணர்வானவர்களை
காணா தவிப்பில்
தத்தளிப்பவர்களிடம்
எவர் சொல்வது ???
அவர்களின் தவிப்பிற்கான விடை
அவர்களின் உறைவிடத்திலே

உயிர்த்திருப்பதை ...!!!



-கரைவாள்
 
Last edited:
Status
Not open for further replies.
Top