All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தோஷியின் "நினைவில் தத்தளிக்கும் நேசமது" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Thoshi

You are more powerful than you know😊❤
ஹாய் ஹாய் சகோஸ் நான் தோஷி...இந்த தளத்துல வாசகியா இருந்தவ கதை எழுதணும்ன்ற ஆசையால் இப்போ உங்க முன்னாடி எழுத்தாளரா வந்துருக்கேன் .


" READING IS DREAMING WITH OPEN EYES"



நானும் உங்களுக்கு ஒரு கனவுலோகத்த காமிக்கலாம்னு நினைக்கிறேன் ( ரொம்ப ஓவரா பண்றளோனுு நீங்க நினைக்கிிறது புரியுது ஹீஹீ)ஏதோ ஆர்வத்துல வந்துட்டேன் என் தொல்லையை பொறுத்துக்கோங்க சகோஸ் ..


இது என்னுடைய முதல் முயற்சி தவறுகள் என்னையுமறியாமல் நேரலாம் அதை சுட்டிக்காட்டுங்கள் ." தன்னுடைய தவறுகளை திருத்திக்கொள்பவரே வாழ்வில் வெற்றிபெறுவர் " என்பது எனது எண்ணம் .எனது தவறுகளை சுட்டிக்காட்டி எனது இப்பயணத்தில் கரை சேர உதவுவீர்கள் என எதிர்பார்க்கீறேன் மக்காஸ் ...


இந்த தளத்தில் என்னையும் ஒருத்தியாய் சேர்த்து கதை எழுத திரி அமைத்துக்கொடுத்த ஸ்ரீமா விற்கு எனது உள்ளார்ந்த நன்றிகள் பல ...


என்னோட சின்ன சின்ன சந்தேகங்களையும் தீர்த்து எனக்கு உதவிய ராஜிஅன்பு அக்கா , தர்ஷி ஸ்ரீ அக்கா இருவருக்கும் நன்றி .


கதைக்கான சிறு முன்னோட்டம் :


கதாநாயகன் : ஜித்தேந்தர்



அனைவரையும் ஒற்றை பார்வையில் அடக்குபவன் தன்னவளின் ஓரப்பார்வையிலே அடங்குவான் .


கதாநாயகி : மித்ராளிணி


தன் நினைவை இழந்த நிலையிலும் தன்னவனை மனதால் தேடிக் களைப்பவள்.


கதையின்கரு :


நினைவில் விலகியவனை நிஜத்தில் கண்டு மீண்டும் காதலில் கறைவாளா ?? இல்லை கரை உடைத்து வேறு பாதையில் செல்வாளா ??



என்னோட இப்பயணத்தில் என்னுடன் சேர்ந்து பங்குபெற சம்மதமா மக்காஸ் ..



..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

என்னுடைய முதல் கதையின் முதல் அத்தியாயம் இதோ உங்கள் பார்வைக்கு ...படிச்சிட்டு உங்களுக்கு தோன்றத சொல்லுங்க சகோஸ் ...குறைகளையும் சொல்லுங்க அப்டியே எதாவது நல்லா இருந்தாலும் சொல்லுங்க அப்படி அப்படியேய் இந்த சின்ன பிள்ளைக்கு லைக்ஸ் யும் போட்ருங்க சகோஸ்....




நினைவில் தத்தளிக்கும் நேசமது 1 :


சென்னை

பிப்.5. :


பார்ப்பவர்களை மதிமயங்க செய்யும் இளவரசனை போல் வானில் உதித்தான் ஆதவன் ......

அவனின் செங்கதிர்கள் பட்டதால் சொர்கலோகமாய் காட்சி அளிக்கிறது அம்மாளிகை ....

அதனால்தான் அம்மாளிகைக்கு யாஹ்வி(yahvi) என பெயரிட்டனரோ ???

(அட அட உள்ள வரும்போதே ஏதோ செம்மையான வாசனை வருதே ,வாங்க நம்ப போய் எதுனா சாப்பிலாம், அயய்யயோ யாரோ வரமாதிரி இருக்கு வாங்க ஒழிஞ்சிப்போம் )


"சின்னா ....!கண்ணப்பா கீழே வந்தாச்சா ??"கேட்டுக்கொண்டு வருபவர் நாச்சியார் , அந்த மாளிகைக்கே மகாராணி ...குணம் , பணம் ரெண்டுலையும் ராணிதான் .

"பெரிய தம்பி காலைலயே சீக்கீரமா போய்ட்டாருமா " என்று பணிவாய் பதிலளித்தான் அவ்வீட்டில் வேலை செய்துவரும் சின்னா.


அவனின் பதிலில் நாச்சியார் முகம் வாடி நிற்க , "என்ன ஆச்சி நாச்சி..! ஏன் இப்படி நிக்கிற ?"கேட்டது அவரின் கணவர் , தொழில் சாம்ராஜ்யத்தின் சாம்ராட் 'ரவி சக்கரவர்த்தி'.


கணவரின் கேள்விக்கு,"இன்னிக்கு நம்ப கண்ணப்பாக்கு பிறந்தாள்னு அவனுக்கு பிடிச்சது எல்லாம் சமைக்க சொல்லிருந்தேங்க ... ஆனா அத சாப்பிட கூட இல்லாம வெளிய போய்ட்டான்" சொல்லும்போதே அவர் கண்கள் கலங்கியது..

"நாச்சி ...! என்னமா இது சின்ன புள்ளைமாதிரி , இந்தர் என்ன குழந்தையா?? எவ்வளவு பெரிய தொழிலதிபரா இருந்தாலும் நம்ப இந்தர் ஒரு ப்ராஜெக்ட் ￰எடுக்க நினைக்கிறான்னு தெரிஞ்சாலே அந்த ப்ராஜெக்ட் எடுக்கணும்னு நினைக்க கூடமாட்டாங்க.அவன் வெறும் இந்திய அளவுல இருந்த நம்ப RC GROUP OF COMPANIES -அ உலக அளவுக்கு கொண்டுபோனவன்டி , நீ் என்னனா இன்னும் அவன சின்னப்பிள்ளைன்னு நினைச்சி கவலைப்பட்ற"

என மனைவியிடம் மகனின் பெருமையை மீசையை நீவியபடி சொல்லியவர் தொடர்ந்து அவரின் மனநிலையை மாற்ற , "போ நாச்சி...! வரவர நீ பசங்கள பத்தியே யோசிச்சி மாமன கண்டு்க்கமாட்ற ...."(ஆ ஆ)என குழைந்தார் .


கணவரின் பேச்சில் இயல்புக்கு வந்த நாச்சியார் , "ஆமா ஆமா கண்டுக்றாங்க...!இத்தனை வயசுல பேச்சை பாரு.. இதைத்தான் பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாடுறானு சொல்லுவாங்க போல.போங்க ..! போய் எதுனா உருப்படியான வேலைய பாருங்க " என்றார்.

அதற்கும் சளைக்காமல் "அதைத்தானே பன்னிட்டுஇருக்கேன் நாச்சி" என்றார் ரவி.

"ஆகா...! காலைலயே ரொமான்ஸ் சீன் போகுது போலையே" என கத்திக் கொண்டே அங்கு ஓடி வந்தது அவ்வீட்டின் இளவரசி , இரண்டு அண்ணன்களின் செல்ல தங்கை "சித்ராங்கதா"..(22 வயது அழகிய புயல் )


"அடிங்....! வயசுக்கு தகுந்த மாதிரி பேசுடி கழுதை" என திட்டிய அம்மாவிடம் இருந்து தப்பி அப்பாவின் தோள் சாய்ந்தாள் சித்ராங்கதா.

"சும்மா சொல்லாம மண்டைலையே கொட்டி சொல்லுங்கமா " என்று சொல்லியபடியே அங்கு ஆஜர் ஆகுறது நம்ப ரெண்டாவது ஹீரோ "விஷ்வேந்தர்" ,நம்ப ரவி சக்கரவர்த்தி- நாச்சியாரின் இரண்டாம் மகன்.


நம்ப ரவி சார் தன்னோட புள்ளைங்க பேர்ல கூட அரசர்களா இருக்கணும்னு ரொம்ப தேடி தேடி மூணு பேருக்கும் பேர் வைச்சாருங்க.


மூத்த மகன் :
ஜித்தேந்தர் - பெயர் மட்டும் இல்ல ஆளும் ஜித்தன் தான் , பேரழகனும் கூட .

இரண்டாம் மகன் :
விஷ்வேந்தர் - பார்க்கறதுக்கு ரொம்ம்ம்பவே அமைதியானவன்.. பாக்கறதுக்கு மட்டும் தாங்க.


மகள் :
சித்ராங்கதா - பணத்திலே பிறந்து வளர்ந்தாலும் பணத்தின் மீது மோகமற்றவள் .


இவங்க குடும்பத்துல நடக்கிறதுதாங்க நம்ப கதை ..பார்க்கிறதுக்கு ரெடி ஆஹ் ????
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 2

பிப் 5

ARSHAD MULTISPECIALITY HOSPITAL

(Arshad - best guided r carefully treated )


அவள் மட்டும் அந்த அறையில் தனித்திருந்தாள் .சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியாமல் போக, '' என்ன இது?? எதுவும் தெளிவா தெரியமாட்டிகிது '' என புலம்பியவளுக்கு யாரோ அவளை நோக்கி வருவது போல் தோன்றியது.

"யார் ...யாரது ???"

அவ்வுருவம் அவளிடம் நெருங்கி வந்தது ,மிக மிக நெருக்கமாக.
அதை கண்டு் அவள் பின் நகர முயல ,

அவளை நெருங்கிய அவ்வுருவம் ''ராணிமா'' என்றழைத்தது , அதை கேட்ட பின் அவளால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.அக்குரலில் அத்தனை அத்தனை காதல் ,ஏக்கம் .அவளிற்கு மிகஅருகில் தெரியும் அவ்வுருத்தின் கண்கள் அவளை காந்தமாய் ஈர்த்தது... அக்கண்கள் அவளுடன் பல ஜென்மமாய் உறவாடியது போல் ஓர் எண்ணம்.

இப்பொழுது நூலிலை மட்டுமே இடைவெளி... அவ்வுருவத்தின் காந்த பார்வையில் கட்டுண்டு கண் இமைக்காமல் அப்பார்வையிலே மூழ்குவதை போல் அவள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவ்வுருவம் சிறிது சிறிதாக விலகி இறுதியில் மறைந்தே விடுகிறது.

அவ்விலகலை தாங்கமுடியாமல் ''பாவாவாவாவா'' என்று அலறியபடியேகண் திறக்கிறாள் .இதுவரை தான் கண்டது அனைத்தும் கனவு என்பதை அறிந்தவள் நிஜத்தில் தான் எங்கிருக்கிறோம் என பார்த்தாள்.

அது ஓர் மருத்துவமனை என புரிய ," எனக்கு என்னாச்சி ? நான் ஏன் இங்கிருக்கேன்? இவ்வளவு நேரம் எனக்கு தோணுனது எல்லாம் கனவா ?? ஆனா அது நிஜம் போல தான இருந்துச்சி . அது அந்த உருவம் அவங்க யாரு? ஆனா அந்த உருவம் சரியா தெரியலையே? '' என இடைவிடாமல் யோசித்தவளுக்கு தலைவலிப்பதுபோல் இருந்தது . {இவ்ளோ யோசிக்குறா ,ஆனா தன்னோட வாயில வந்த வார்த்தை பத்தி யோசிக்கலையே இத தான் விதினு சொல்வாங்களோ??}

அப்பொழுது அங்குவந்த அவளை கவனித்துக்கொள்ளும் செவிலிய பெண்மணி இவள் அமர்ந்திருப்பதை கண்டு ," உங்களுக்கு நினைவு வந்துடிச்சா?தைங்க் காட்... நான் இப்போவே டாக்டர கூட்டிட்டு வரேன்..! " என பரபரப்பாய் வெளியே செல்ல போக,


அவரை தடுத்தவள் ," ஒரு நிமிஷம் ...! எனக்கு என்னாச்சி? எப்படி இங்க வந்தேன்?? "எனக் கேட்டாள்.

அவளிடம் என்ன சொல்வதென்று சற்று யோசித்த செவிலியர், "ஒரு பெரிய விபத்துல சிக்கி உடல் முழுக்க காயத்தோட இருந்த உங்களை டாக்டர் விஷ்வேந்தர் தான் இங்க அட்மிட் பண்ணாரு. உங்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் அவர் தான் டிரீட்மெண்ட் குடுக்குறாரு" என தனக்கு தெரிந்த தகவலை கூறினார் .

அவர் சொல்லியதை கேட்டு யோசனையாய் புருவங்களை சுருக்கியவளுக்கு தனது நினைவடுக்குகள் வெறுமையாய் இருக்க, "விபத்தா எனக்கு எதுவுமே நியாபகம் இல்லையே ...அது எப்படி இத்தனை நாள் நடந்தது எதுவும் என் நினைவுல இல்லாம போகும்...நாள்...நாள்....நான் எத்தனை நாளா இங்க இருக்கேன்?? " என பதட்டத்துடன் கேட்டவளிற்கு தன் நினைவடுக்குகளின் வெறுமை பயத்தை அளித்தது.

"விஷ்வேந்தர் சார் உங்களை இங்க கூட்டிட்டு வந்து ஆறு மாசம் ஆகுது. சரி உங்க பெயர் என்னமா" என்று அவளின் கேள்விக்கு பதிலளித்த செவிலியர் அவளின் பெயரை அறிந்துகொள்ள கேட்க,

"என் பெயர்......" என தன் நினைவினில் ஏதேனும் அறியஇயலுமா யோசிக்கும் அவள் பொழுதே கனவில் வந்த அக்குரல் அவளின் காதோரமாய்"ராணிமா" என்றது.

அதையே தன் பெயராய் எண்ணியவள் அதை சொல்ல நினைக்கும் பொழுது மனம் தடுத்து , அது அக்குரலுக்கான உருவத்திற்கு மட்டுமே சொந்தமானது என கூக்குரல் இட்டது.

தன் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத குழப்பத்தில் அவள் அமைதியாக அமர்ந்திருக்க அவளின் மௌனத்தில் அங்கிருந்த செவிலியர் மருத்துவரை அழைக்கச் சென்றார்.

--------------------------------------------------------------------------------

அதே நேரம் யாஹ்வி-ல் [ yahvi ]:

டைனிங்டேபிளை ஒரு வழி செய்துக்கொண்டு இருந்தனர், விஷ்வாவும், சித்ராங்கதாவும்.{ நம்ப ரவி சார் ஜித்தேந்தர இந்தர் கூப்புட்றதுனால விஷ்வேந்தர் விஷ்வா ஆகிட்டான் ஓகே வா} .


"அம்மாமாமா...!" என இருவரும் சேர்ந்து கத்திக்கொண்டிருக்க,

"டேய் டேய் ...!அவ என் பொண்டாட்டிடா ...என் பொண்டாட்டிய நீங்க ஏன்டா ஏலம் போட்டுட்டிருக்கிங்க " என முறுக்கிக்கொண்ட ரவிசக்கரவர்த்தி, வாயெல்லாம் பல்லாய் "நாச்சிசிசிசி " என ராகமாய் தன் மனையாளை அழைத்தார் .


அவரின் செயலில் சிறியவர்கள் சிரிக்க,"ஹாஹா ...! அப்பா ரொம்ப வழியுது துடைச்சிக்கோங்க " என தந்தையை கிண்டலடித்த விஷ்வாவை முறைத்த சித்ராங்கதா,

" இவன் கிடக்கிறான் சரியான பொறாமை பிடிச்சவன் யூ கண்டினு டாடி " என தந்தையை உற்சாகப்படுத்தினாள். (அப்பாக்கு support ஆம் நம்ப சித்ராங்கதா மேடம் ...அது என்னவோ இந்த பொண்ணுங்களுக்கு அம்மா என்ன தான் செஞ்சாலும் அப்பாக்கு தான் குடை தூக்குவாங்க )

இவர்களின் அமர்க்களத்தில் அங்கு வந்த நாச்சியார் "என்ன ஆளாளுக்கு சத்தம் போட்டுட்டிருக்கிங்க ..ஏங்க நீங்களும் இவங்க ரெண்டு பேர்கூட சேர்ந்து ஆரம்பிச்சிட்டீங்களா"

விஷ்வா , "பின்ன என்னமா எப்பவும் நாங்க வேணாம் வேணாம்னு சொன்னாலும் சாப்பிட வாங்கனு கூப்டுட்டே இருப்ப ,இன்னிக்கு நாங்க வந்து எவ்வளவு நேரம் ஆகுது கண்டுக்கவேயில்ல " என புகார் பத்திரிக்கை வாசித்தவன் , "சீக்கிரமா அந்த பாயசத்தை கொஞ்சம் ஊத்து " என தட்டை விளையாட்டை ஏந்த,

"டேய் டேய் ...! இன்னிக்கு கண்ணப்பாக்கு பிறந்தநாள்டா... அவனுக்காக ஆசைஆசையா சமைச்சிருக்கேன், அவன் சாப்பிட்டதுக்கப்றம் தான் உங்களுக்கு" என தடுத்தார் நாச்சியார் .

"ஆமா அம்மா...! அண்ணா எங்க போய்டாங்க ? நான் அவருக்கு முதல்ல வாழ்த்து சொல்லலாம்னு நினைச்சி இன்னிக்கு சீக்கிரமா எழுந்தேன் ஆனா அண்ணாவ தான் காணோம்"- என்ற சித்ராங்கதாவிடம் ,

"எது சீக்கிரம் எழுந்தியா அப்ப எட்டுமணி வரைக்கும் குறைட்டை சத்தம் வந்திச்சே அது உன் ரூம் இல்லையா??" கேட்ட விஷ்வா அடுத்து அவள் அடிப்பதற்குள் அவ்விடத்தை விட்டுஓடினான்.

அவனை தொடர்ந்து ஓடியவள்,"அத நீ சொல்லாதடா எரும! என்னிகாவது சூரியன் உதிக்கிறத பார்த்திருக்கியா நீ....அண்ணன் கூட சேர்ந்து எக்ஸர்ஸைஸ் பண்ணுனு சொன்ன கேட்க்காம தொப்பைய வளர்த்துட்டு என்னைய சொல்றியாடா ...ஹாஃ...இவன துரத்திகிட்டே பேசுறதுல மூச்சு வேற வாங்குதே".


இப்படி அந்த வீடே அல்லல்கோலபட்டுக் கொண்டிருக்க அதை நிறுத்துவது போல் சர்ர்ர்ர்ர்ர்ரென்று தனது சக்கரங்களை தேய்த்துக்கொண்டு வந்து நின்றது ரெட் கலர் FERRARI 599GTB FIORANA [ 3.57 CRORES ] .


அதன் சத்தத்தில் "அண்ணா வந்தாச்சி" என சித்ராங்கதா குரல் கொடுக்க அவன் வீட்டினுள் வரும்வரை கூட பொறுக்க முடியாமல் வாசலுக்கே வந்துவிட்டார் நாச்சியார் .


ரெட் கலர் பெர்ராரியின் கதவுகள் திறந்ததில் , அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் இறங்கியவன் நமது கதையின் நாயகன் ஜித்தேந்தர்..

27 வயதில் தன் உயரத்திற்கேற்ற கட்டுகோப்பான உடலமைப்பில்..காற்றில் அலைஅலையாய் புரளும் கேசத்தை இடது கைவிரல்களால் கோதியவாறு இறங்கியவனின் கண்கள் இரண்டும் என்னிடம் விலகியே இரு என சொல்லாமல் சொல்லியது.. கூர்மையான மூக்கின் கீழ் அடர்ந்த மீசை இருபுறமும் ஓரத்தில் நறுக்கி விடபட்டிருந்தன ...மீசையின் கீழ் நான் திறப்பது கடினம் என்றும் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றும் சொல்வது போல் அழுத்தமான சிவந்த உதடுகள் ,மொத்தத்தில் ஆணழகன் . (ஆனா இந்த ஒரு வார தாடி தான் எதுக்குனு தெரியல இவனுக்கு அதுவும் அழகாதான்யா இருக்கு ) .


"இந்த எருமை சொல்றமாதிரி அண்ணண் தினமும் எக்ஸ்ஸர்ஸைஸ் பண்றதுனால தான் இம்புட்டு அழகா இருக்கோ ? பேசாம நாமளும் இனிமே பண்ணலாமா??" என ஜித்தேந்தர் இறங்கிய தோரணையில் விஷ்வேந்தர் யோசிக்க,

காரை விட்டு இறங்கியவன் அனைவரையும் ஓர்முறை ஆழ்ந்து பார்த்து வழக்கம்போல் முகத்தினில் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் மீண்டுமாய் ரெட் பெராரியின் கதவை திறந்தான்.

அதை பார்த்த விஷ்வா," என்னடா இது !!அண்ணண் யாரையாவது லவ் கிவ் பண்ணாறா என்ன?? ஒருவேளை அந்த பொண்ணை கூட்டிட்டு வந்துட்டாரோ ??"- என யோசித்தது அவனின் மானம் கெட்ட மின்ட் வாய்ஸ்.

ஜித்தேந்தர் கூட்டிட்டு வந்தது யாருனு பார்த்தபின் மற்றவர்களுக்கு மயக்கம் வந்தது என்றால்... அடுத்து அவன் சொல்லியதில் விஷ்வாவிற்க்கு ஹார்ட் அட்டாகே வரும் போல ஆனது.


ஹாஹாஹா பெருசா ஒன்னுமில்லங்க, நம்ப ஜித்தன் சொன்னது , "இவன் மித்ரேந்தர்... என்னோட மகன்" என்று அனைவருக்கும் பொதுவாய் சொல்லியவன் கைகளில் ஆறு மாத குழந்தையை ஏந்தியபடி நின்றான்..



-கரைவாள்
 

Attachments

Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
Ntn 2

நினைவில் தத்தளிக்கும் நேசமது 3 ;


அசால்ட்டாய் அணுகுண்டை அனைவரின் தலையிலும் போட்டுவிட்டு விறுவிறு என்று வீட்டினுள் முதல் மாடில இருக்கும் தன் ரூமிற்க்கு சென்றான் ஜித்தேந்தர்.

நாச்சியார் வாசலிலே இடிந்து போய் அமர, "நாச்சி...! என்னம்மா" என அவரை தாங்கிய ரவி சக்கரவர்த்தி அவரை வீட்டினுள் அழைத்துவர அவரை தொடர்ந்து பிள்ளைகள் இருவரும் வந்தனர்.

"ஏங்க ...கண்ணப்பா ...குழந்தை..."என வார்த்தை வராமல் நாச்சியார் தடுமாறினார்.

"நாச்சி...! எனக்கு இந்தர் மேல முழு நம்பிக்கை இருக்குமா . அவன் என்ன செஞ்சாலும் அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். என்னனு கேக்கலாம் நாச்சி...நீ உன் மனச போட்டு குழப்பிக்காத "

"ஆமா மா! அண்ணண் கீழ வரட்டும் என்னனு கேட்போம்" என சித்ரங்கதாவும் தந்தையின் பேச்சை ஆமோதித்தாள் .

"ஆமாஆமா.. இந்தம்மா {சித்ரங்கதா} கேட்டவுடனையே அண்ணண் சொல்லிட்டு தான் மறு வேலை பார்க்கும் பாரு" என்று விஷ்வா முனங்கையில் அவனின் கைபேசி தன் இருப்பை சத்தமிட்டு வெளிப்படுத்தியது.

அதை எடுத்து பேசியவன் ," மா..! கவலைபடாதிங்க அப்பா சொன்னது போல அண்ணன்கிட்ட ஏதாவது காரணம் இருக்கலாம் .அப்பா..! பாத்துக்கோங்க ,ஒரு எமெர்ஜென்சி நான் ஹாஸ்பிடல் போயாகனும்" என தாயிடம் ஆரம்பித்தவன் தந்தையிடம் முடித்தான் .

"சரிடா நீ கிளம்பு"- ரவி சக்கரவர்த்தி .

அவருக்கு தலையசைத்தவன் சித்ரங்கதாவிடம், "ஓய் வாலு..! வரியா? உன்ன ட்ராப் பண்ணிட்டு போறேன்".

அவனின் கேள்வியில் திருட்டுமுழி முழித்தவள் ," நீ கூட வந்தா நான் எப்படி என் ஆள பாக்கிறது " என மனதில் முனங்கிக்கொண்டே.." இல்ல அண்ணா..! எதோ எமெர்ஜெண்சி சொன்னியே நீ போ நான் போய்கிறேன் " என்றாள்.

"என்னடா இது அதிசயமா அண்ணாணுலாம் சொல்றா!!! சரியில்லையே " என விஷ்வாவின் மூளை எச்சரிக்கை விடுக்க அதை ஆராய நேரமில்லாததால் ," ம்ம்ம்ம்... சரி எனக்கு டைம் ஆகுது உன்ன ஈவினிங் வந்து பார்த்துக்கிறேன்" என கிளம்பிவிட்டான்.

"ஒருவேளை கண்டுபிடிச்சிடுவானோ ?? சேசே அப்டிலாம் யோசிக்கக்கூட கூடாது ...நம்ப விஷ்வாக்கு ஏது அவ்வளவு மூளைலாம்" தனக்குள்ளயே சொல்லிக்கிறாங்க நம்ப காதுமா { 'ஹாஹாஹா' யார்பா அது சிரிக்கிறது?? ஆத்தி.. இது விதியாச்சே !! எதுக்கு இப்ப இது பல்ல காட்டுது ??}


_______________________________________

மேல் ரூமில் ;


ஒரு நடுத்தரவர்க்க வீட்டின் அளவில் இருந்த அறையில் உள்நுழைந்தவுடன் பார்ப்பதுபோல் ஆளுயரத்தில் சுவற்றினில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தின் முன் நின்றிருந்தான் ஜித்தேந்தர். கால்களை அழுத்தமாய் ஊன்றி நின்றிருந்தவனின் உதடுகள் ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை மாறாய் அவனின் கண்கள் அப்படத்திடம் ஆயிரமாயிரயம் கதை பேசியது .

அவனின் அம்மோனநிலையை கலைத்தது அவனின் கையில் இருந்த அவனது மகனின் சினுங்கல் ஒலி.

"என்னடா தங்கம் ...!!அம்மாடா குட்டி... பாரு அம்மா பாரு ... " என புகைப்படத்தை காட்டி குழைந்தையிடம் பேச அக்குழந்தைக்கு என்ன புரிந்ததோ கிளுக்கி சிரித்தது .

அதில் வெகுநாள் களித்து தன் அழுத்தமான உதடுகள் மறைந்திருந்த வெண்பற்கள் பளிச்சிட இந்தரும் மகிழ்ந்து சிரித்தான் . அவனின் சிரிப்பில் அப்புகைபட உருவமும் சேர்ந்து சிரித்ததோ இல்லை அதை கண்ட ஜித்தேந்தர்க்கு அவ்வாறு தோன்றியதோ ...அவன் உதடுகள் '' ராணிமா எங்கடி இருக்க?? சீக்கிரம் உன் பாவாகிட்ட வந்துருடி'' என ஏக்கத்துடன் வார்த்தைகளை உதிர்த்தது.



அதே நேரம் மருத்துவமனையில் { ARSHAD MULTISPECIALITY HOSPITAL} :


மருத்துவமனைக்கென்றே உரிய அமைதியுடன் இருந்த அறையில் குழம்பிய மனதுடன் தனக்கு என்ன நேர்ந்தது என்ற யோசனையுடன் அமர்ந்திருந்த அவளுக்கு கனவில் கேட்ட அக்குரல் மீண்டும் கேட்டது.

இந்த முறை எந்த உருவமும் அவளின் கண்களுக்கு தெரியவில்லை . ஆனால் அந்த குரல் ...அதில் இருந்த உயிரை உருக்கும் ஏக்கம் ....அதை உணர்ந்து கொண்டவளிற்கு உடனே சென்று அக்குரலின் ஏக்கங்களை தீர்க்க வேண்டும் போல் தோன்றியது .

தனக்கு தோன்றும் எண்ணங்களை பற்றி அவள் யோசிக்கும்பொழுது அதை தடைசெய்வதுபோல் ,

"ஹாய் ஏஞ்சல்..!! ஹொவ் டூ யூ பீல் நொவ்??" கேட்டுகிட்டே வந்தது டாக்டர் விஷ்வேந்தர் { என்னது இவன் டாக்டராஆஆஆ} .

அவனின் கேள்விற்கு " இந்த குரல் ...இது.. இது.. எனக்கு கேட்ட குரல் மாதிரியே இருக்கே ? யார் இவர்?..இவர் என்ன ஏன்ஜெல்ன்னு கூப்பிட்டாரா?? அப்போ இவருக்கு என்ன தெரியுமா?? ஆனா.. இந்த குரல்தான என்னை ராணிமானு கூப்பிட்ட மாதிரி இருக்கு??" என பலதையும் எண்ணியதில் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.


அவள் அமைதியாக இருந்ததில் விஷ்வா ,"என்னாச்சி ஏஞ்சல் ?" என,

"உங்களுக்கு என்னை தெரியுமா ???அப்படினா எனனோடபெயர் ஏஞ்சல் தானா?? அது...அ..து...எனக்கு எதுவும் நியாபகத்துக்கு வரமாட்டீங்குது..ப்ளீஸ்சொல்லுங்களேன் எனக்கு என்னாச்சி ? நீங்க எனக்கு என்ன வேணும்??என்னை உங்களுக்கு எப்படி தெரியும்னு சொல்லுங்க??"

"ஹாஹா...! நீங்க என் முன்னாடி தான இருக்கீங்க எனக்கு தெரியாம இருக்குமா" என சிரித்தவன் {கருமம்..! ஏன்டா டேய் இதுக்கு நாங்க சிரிக்க வேற செய்யனுமாடா } ,

நீங்க பாக்கறதுக்கு ஏஞ்சல் மாதிரியே இருக்கீங்கள அதான் அப்டி கூப்பிட்டேன் ஆனாலும் ரொம்ப தாங்க்ஸ்ங்க " என சொல்லி வெட்கப்படுவது போல் விரல்நகத்தை கடிக்க, அவள் எதுக்கு என்பதுபோல பார்த்தாள் .{ என்ன இது நம்ப அண்ணண மாதிரி கண்ணுலே பேசுறாங்க விஷ்வா mindvoice karo }


மைண்ட் வாய்ஸ்ஐ அடக்கியவன் அவளிடம், "அழகுல மயங்குவாங்கனு கேள்விபட்ருக்கேன் ஆனா நீங்க என் அழகுல உங்களையே மறக்குற அளவுக்கு இருக்கேங்கற அர்த்ததுல தான சொன்னிங்க" என்றவன் இன்னும் நகம் கடிப்பதை நிறுத்தவில்லை . {ஷொப்ப்பா...! கொல்றானே ..அவசரபட்டு இவன செகண்ட் ஹீரோனு சொல்லிட்டோமோ }


அவனின் பேச்சில் பாவம் அவள் என்ன சொல்வது என தெரியாமல் முழித்தாள் . அவனின் உடையை கவனித்து அவன் அணிந்திருந்த வெள்ளை நிற கோட்டில்" ஓஓஓ..! இவர் டாக்டரா இருப்பாரோ ??" { அதுவே இப்ப தான் தெரிஞ்சிதாஆஆ . சுத்தம் அம்புட்டு அழகா பேசிற்கடா விஷ்வா நீ..!! }என சரியாய் யோசித்தவள்,

"டாக்டர் ...! எனக்கு என்னாச்சி ? ஏன் எதுவும் எனக்கு நினைவில்லை?" என பதட்டமாய் கேட்டவள் உள்ளுக்குள் அந்த குரலை தவிர என சொல்லிக்க்கொண்டாள் .

அவளின் பதட்டத்தில் மருத்துவனாய் ,"நத்திங் டு ஒர்ரி ஏஞ்சல்..!! ஒரு சின்ன ஆக்சிடேன்ட் காயங்கள் சரியானாலும் உங்களுக்கு நினைவு வர இத்தனை நாள் ஆனதுல பழைய விஷயங்கள உங்க மூளை திரும்பவும் நினைவுபடுத்திக்க கொஞ்சம் டயம் தேவைப்படும் . சீக்கீரமே உங்களுக்கு எல்லாம் நியாபகம் வந்துரும் சோ டோன்ட் ஒர்ரி"

அவளுக்கு புரியும்படி நிதானமாய் அவளின் நிலையை எடுத்து சொல்லியவன் , செவிலியரிடம் "நர்ஸ்..! இவங்க ஆல்மோஸ்ட் குணமாகிட்டாங்க பட் ரெகுலர் செக்அப் எப்பவும்போல பண்ணிடுங்க ..நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்" என கிளம்பினான்.{அப்பாடி ..! இப்பதான்யா இவன் டாக்டர் மாதிரி பேசிற்கான்}

அவன் அனைத்து நோயாளிகளையும் பார்த்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவத்தை செய்து செவிலியரிடம் மேற்படி தொடரவேண்டியவற்றை அனைத்தும் தெரிவித்து அவனின் அறை திரும்புகையில் நேரம் மதியம் ஒன்றாகிவிட்டது .

தனது அறையில் ஓய்வாய் அமர்ந்தவன் கைபேசியில் நேரம் பார்த்து ," அய்யயோ ..!!மணி ஒண்ணா???? சிக்குனடா சில்வண்டு" என புலம்பியபடியே அவசரஅவசரமாய் வெளியில் வந்து, அந்த ஹாஸ்பிடலில் அவனுக்கென்று தனியாய் இருக்கும் பார்க்கிங் லாட்டில் நிறுத்திருந்த போய் அவனின் டுகாட்டி பைக்யை எடுத்தவன் அடுத்த நொடி அதை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.


- கரைவாள்
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 4 :

அவசரஅவசரமாய் பறந்து வந்தவன் அந்த பதினோரு மாடி கட்டிடத்தின் முன் தன் டுகாட்டிய கொண்டு வந்து நிறுத்திய பொழுது மணி ஒன்னு நாற்பத்தைந்து.

"ஐய்யயோ ..! லேட் ￰ஆகிடிச்சே... குட்டச்சி கத்த போறா " என முனங்கியபடியே சுற்றும் முற்றும் தேடினான். "எங்க ஆள காணோம்??? வேற எங்கையும் நிக்குறாளா ??ம்ம்ம்.. இல்லையே ஆள காணோமே !! அப்போ இன்னும் வரலையோ?? ஷொப்பா ￰தப்பிச்சிட்டா விஷ்வா"

பெருமூச்சுவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டவனின் மூளை சும்மா இல்லாமல் அவனை உசுப்பேத்த , "ம்ம்ம்ம் ..! என்ன செய்யலாம் ?? இப்போ எதாவது செய்யணுமே ... விஷ்வா எதாவது யோசிடா ...எத்தனை தடவை அவ உன்னை கும்மியெடுத்துருக்கா.. இன்னிக்கு அவள வச்சி செய்யணும்டா"

"இப்போ நம்பளே கால் ￰பண்ணி நான் வந்து ரெண்டு மணி நேரம் ஆகுதுன்னு சொல்லி பில்டப் ￰பண்ணலாமா ??" என ரொம்ப பலமான யோசனையில் ஆழ்ந்தான்.( பாவம் யார் பெத்த புள்ளையோ இப்படி அவனே பேசிக்கிறானே .. ஹாஹா..! ஆனாலும் அவன் நடுவுல சொன்ன அந்த கும்மியெடுக்குற ￰மேட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அந்த புண்ணிய காரியத்தை செஞ்சது யாரா இருக்கும் ??.....)


நம்ப விஷ்வாவே எப்பாவாவது தான் யோசிப்பான் அதில் யாரோட கண்ணுபட்டுச்சோ அவன் கைபேசியில் எழுந்த அழைப்பின் ஓசை அவனின் யோசனையை கலைத்தது .

யார் என்று எடுத்து பார்த்தவனின் கைப்பேசி திரையில் "குட்டி குரங்கு" என்ற வார்த்தை மின்னியது. (யாருனு பார்க்குறீங்களா மக்காஸ்... எல்லாம் அவனோட பாசமலரதான் அந்த லட்சணத்துல சேவ் பண்ணிருக்கு இந்த பக்கி. ஆனாலும்நம்ப விஷ்வா யோசிக்கிறானு அந்த புள்ளைக்கு எப்படி தெரிஞ்சிருக்கும் கரெக்டா கால் பண்ணிருக்கா பாருங்களேன்!!)

"இந்த குரங்கு ஏன் இப்போ கால் பண்றா ?" என நினைத்தபடியே கால் அட்டென்ட் செய்தவன்,
"ஹலோ " என சொல்ல,

அந்த பக்கம் ," டேய் விச்சு ...!! ( எடுத்தவுடனே சூப்பர் மரியாதைடா விஷ்வா உனக்கு ) எங்கடா போன ?? எவ்வளவு நேரம் என் செல்லம் உனக்காக வைட் பண்றது ? பாரு என் செல்ல குட்டி வெயில்ல நின்னு நின்னு கருத்து போய்ட்டா . நான் மட்டும் அந்த பக்கம் போகாம இருந்திருந்தா என் செல்லம் என்னாகிருக்கும் ??( ப்ப்பாஆ மூச்சிவிடமா பேசுவாங்க போல நம்ப காதுமா ஆனா நம்மளுக்கு தான் தலையும் புரியல காலும் புரியல)

"அடியே குரங்கு ..! ஏண்டி ஸ்ப்பீக்கரை முழுங்குன மாதிரி கத்தி தொலைக்கிற?? உன்னை யாரு இப்போ அவளை கூட்டிட்டு போக சொன்னது ?" என பதிலுக்கு இவன் எகிறினான் .

"அடேய் உனக்கு கொழுப்பு அதிகமாகிடிச்சி போல!! எதுக்கு கூட்டிட்டு போனனு கேக்குற" என்று அவனிடம் கத்தியவள்,

"செல்லம் ..! உனக்கு இவன் சரிப்பட்டு வரமாட்டன்டா பேசாம இவன கழட்டிவிட்றலாம்" என அருகினில் இருந்தவருக்கு பிரீ அட்வைஸ் ￰தராங்க நம்ப விஷ்வாவோட பாசமலர் .( ஆனா யாருக்கு இவ advice பண்றா???)

"என்னதுதுது.......!!!!அவ பக்கத்துல இருக்காளா???குரங்கு ..குரங்கு...ஏண்டி இப்படி என் வாழ்க்கையில் குட்டையை குழப்புற ??" விஷ்வா காட்டுகாத்தலாய் கத்திக் கொண்டிருக்க பாவம் அதை கிஞ்சித்தும் சட்டைசெய்யாமல் அந்த குட்டி குரங்கு காலை கட் செய்துவிட்டாள்.


போனை தலையிலே அடித்துக்கொண்டவன் "ஐய்யோ .. ஐய்யோ..! ஏற்கனவேஅந்த குட்டச்சி சாமி ஆடுவா.... இப்போ கூட இந்த குரங்கு வேற இருக்கு என்ன பண்ண போறாளோ தெரியலையே!! "

பாவம் நம்ப விஷ்வாநடுரோட்டில் தனியா புலம்ப ஆரம்பிச்சுட்டான்.(சரி சரி இவன் இப்படியே புலம்பட்டும் , நம்ப இப்போ வேற இடத்துக்கு போகணும் சீக்கீரம் கிளம்புங்க எல்லாரும் . கூடவே எனக்கும் சாப்பிட எதுனா எடுத்துக்கோங்க செல்லம்ஸ் )



ராயபுரம் :

"சீக்கீரம் டா.. சீக்கீரமா எல்லாத்தையும் பேக் பண்ணுங்க, பொருள கரிக்டா கொண்டுபோணும் " தன் காண்டாமிருக குரலில் தன்னுடன் வந்தவர்களிடம் சொன்னவனுக்கு மண்டைல ஒற்றை முடிகூட இல்லை .

"என்ன தல..!! எதுக்கு டென்ஷனா கீற?? அதல்லாம் கரிக்டா சேத்துல்லாம்..நீ டென்ஷன் ஆவாத!!" மொட்ட மண்டையனிடம் பேசுபவனுக்கு மூகதில் மீசை இருக்கா அல்லது மீசைல மூகம் இருக்கானு தெரியலை. (எம்மாம் பெரியயய......மீசை!! )


"அது ஒன்னுமில்லடா ..! இப்ப வந்திருக்க புது ASP ரொம்ப குடைச்சல் குடுக்குறானு அண்ணாத்த சொன்னாப்ல அதான் கொஞ்சம் உதறலா கீது ". {டேய் மொட்ட எனக்கு உங்கள பார்த்தான்டா உதறலா இருக்கு ...ம்ம்ம்ம்ம் ஒவ்வொருத்தனும் காண்டாமிருகம் மாதிரில இருக்கானுங்க }


"என்ன தல நீ எப்பால இருந்து போலிஸ்கு பயபடஆரம்பிச்ச ...நாலு துண்ட போட்டா கவ்விட்டு வழிவிடபோறானுங்க அவனுங்களுக்காகலாம் டென்ஷன் ஆவுற "மீசை அசால்டா சொன்னத கேட்ட மொட்டை ,

"டேய்..! இப்ப வந்துருக்கவன் அப்டிலாம் போறவன் இல்லடா எல்லா மேட்டரையும் நோண்றானாம் ..இதுவரைக்கும் ஏழு ஊருக்கு மாத்தியும் அடங்க மாட்றானாம்டா" சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுதே அவன் கைப்பேசி சத்தமிட்டது.

"ஹலோ...!!'

"டேய், அங்க என்னத்தடா கீச்சினு இருக்கீங்க" இவர்களுக்கு தலைமை போல் ஓர் குரல் அதட்ட,


"அண்ணாத்த..!"

"சீக்கிரம் அங்க இருந்து கிளம்பித் தொலைங்கடா"

"என்னாச்சி அண்ணாத்த ?"

"அந்த ASP க்கு நம்ப பொருள மாத்தபோறது தெரிஞ்சிடுச்சாம்டா... வந்து தொலைக்க போறான் , சீக்கிரம் பொருள எடுத்துட்டு கிளம்புங்கடா"

அவர் அப்பக்கத்திலிருந்து அவசரஅவசரமாக பேசிகொண்டிருக்கும் பொழுதே டிஷும் என பலத்த சத்தம். { என்ன மொட்டைய காணோம் ?? இந்த மொட்டையன் எங்க போய்ட்டான் ..வாங்கமக்காஸ் தேடுவோம் ...ஆங் ..!அது என்னஅங்கிட்டு எதோ மின்னுது ...இது அந்த மொட்ட மண்டையோட போன் மாதிரில இருக்கு. இது போன் ஏன் இப்படி நாய் கொதறுன தேங்கா மாதிரி கிடக்கு .. போன் க்கே இந்த நிலைமைனா அதுல பேசிட்டு இருந்த மொட்டயன் கதி ?? }

அவ்விடத்தில் புதிதாய் கருப்பு நிற wrangler { jeep } சிபேரியன் டைகராய் சீறியபடி நின்றிருந்தது . அதன் மேல் பிடறிமுடியை சிலுப்பிக்கொண்டமர்ந்திருக்கும் சிங்கமாய் கம்பீரத்துடன் அமர்ந்திருந்தான் அவன் , அவன் ஜிஷ்ணு ...சென்னை மாநகரத்தின் ASP (அஸ்ஸிஸ்டண்ட் சுப்ரீனண்ட் ஒப் போலீஸ்).

காவல்துறைக்கே உரிய மிடுக்கு அவனிற்கு இயல்பாய் அமைந்திருக்க தலைமுடியை ஒட்ட வெட்டிருந்தவன் , வான் நீலநிற ஜீன் பேண்டில் வெள்ளை நிற முழு நீளசட்டையை முழங்கைவரை மடித்து விட்டிருந்தான் .
தொடர் உடற்பயிற்சியின் பயனாய் தோள்கள் இரண்டும் உருண்டு திரண்டு இருக்க , ஓர் காலை நீட்டி மற்றொரு காலை மடக்கி சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவன் ,வலது கையில் லத்தியை ஏந்தியபடி கண்களில் கூலர்ஸுடன் ஆண்களே பொறாமை படும் வண்ணம் இருந்தான்.{நம்ப ஹீரோ ஜித்தனுக்கே இம்புட்டு பில்டப் தரலையோ …ஹீஹீ ...!!சரி சரி , மொட்ட போனா என்ன அதான் மீசை இருக்கே சவுண்டு விட ஆரம்பிச்சிட்டான் வாங்க என்னனு பாப்போம்!!!).


"டேய் ...!என்னடா பார்த்துட்டு நிக்குறீங்க ??/போங்கடா ...போய் அவன போட்டுத்தள்ளுங்கடா" தன் பெரிய மீசை துடிக்க தொண்டை கிழியும்வண்ணம் தன் ஆட்களிடம் கத்தினான்.

அதை கேட்டு அவர்கள் ஜிஷ்ணுவை நோக்கி நகர அதில் பான்பராக்போட்டு துப்பியது போன்ற தலையுடன் ஒருவன் அருகில் நெருங்கியதும் "ஏய்ய்! என கத்தியபடியே உருட்டுக்கட்டையில் அடிக்கவர , அதுவரை அமைதியாய் இருந்த ஜிஷ்ணு மடக்கி வைத்திருந்த காலை சட்டென்று நிமிர்த்தி வந்தவனின் அடிவயிற்றில் எட்டுவிட்டான்(அம்புட்டுத்தான் பான்பராக் மண்டையன் பஞ்சர் ஆகிட்டான் .

கூலர்ஸை கழட்டி சட்டையின் முன்புறத்தில் மாட்டியவன் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் தனது ஸ்டைலில் பரிசளித்தான். இறுதியாய் மீசையின் முகத்தை அடையாளம் தெரியாவண்ணம் மாற்றியபின் வலதுகையை உதறியவாறே இடது கையால் கூலர்ஸை மாட்டியபடி நடந்தவனின் வேகநடையில் நிலம் அதிர்ந்தது .(அம்மாடியோ என்னா ஸ்டைலு அதுலையும் அந்த மீசைய பீஸ்பீஸாக்கிட்டு இடது கையால கூலர்ஸ்அ மாட்டிகிட்டு நடந்து வர அந்த mass இருக்கே பின்னாடி ஜில்லா மீயுசிக்க ஓட விட்டு பாருங்க சும்மா பட்டைய கிளப்பும் ...


ஜில்லா ஜில்லா ஜில்லா

அட எங்கையும் செல்வான் தில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா

எதயும் வெல்வான் தில்லா


வெப்பம் நீண்டும் தெப்பம்

என விழிகள் கொண்டவன் ஜில்லா

வேங்கை போல பாயும்

புது வேகம் கொண்வன் ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா

விழி பார்வை பாயும் முள்ளா

பகை சிதரும் சில்லு சில்லா


அஞ்சா நெஞ்ச நெஞ்சம்

அதன் பெயர் தான் இங்கே ஜில்லா

தொட்டா பூமி அதிரும்

ஒரு தூய வீரன் ஜில்லா


இரு விழி அருகினில்

எரிமலை வெடிக்கும்

நினைத்ததை முடித்திட

நிழலும் துடிக்கும்


ஜில்லா ஜில்லா ஜில்லா

ரத்தம் எங்கும் சத்தம்

ஜில்லா ஜில்லா ஜில்லா

உன் சித்தம் எல்லாம் யுத்தம்


ஜில்லா ஜில்லா ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா }.



வழக்கம்போல் இறுதியாய் வந்த அந்த பகுதி காவல்நிலைய அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தவன் கோர்டில் ஹான்டோவேர் செய்யசொல்லி கிளம்பினான்.

அவனின் ஜீப்பை ஓட்டும் கந்தனிடம் கமிஷ்னர் ஆபிஸ்ற்க்கு ஜீப்பை ஓட்ட சொல்லியவன் அவருக்கருகே சீட்டில் அமர்ந்தபடி ஏதோ ஒன்றை தீவிரமாய் யோசித்தபடி வந்தான் . அலுவலகத்தை நெருங்கும் வேளையில் யோசனையிலிருந்து வெளிவந்தவன் கண்களில் விழுந்தாள் மங்கை ஒருவள்.

அவளை பார்த்து ஒரேஒரு நொடி கண்களை சுருகியவன் பின் அவள் ஒருத்தி அங்கிருப்பதே பார்க்காதது போல் அமைதியாய் இருக்க , அப்பெண் இவனின் ஜீப்பை பார்த்து ஓடிவந்தவள் வண்டியின் முன் நின்றாள்.

அலுவலக வளாகத்தினுள் வந்துவிட்டதால் நிறுத்துவதற்காக மெதுவாக ஓட்டிவந்த கந்தன் , எதிர்பாராமல் இவள் வந்தபோதும் மோதாமல் ஜீப்பை நிறுத்தியவன் "யார்மா அது ?? எதுக்கு வண்டிய நிறுத்துனிங்க " என குரல் உயர்த்த,

அவனின் கேள்விக்கு பதிலாக ,"நானா ...?? நான் பார்த்தனின் காதல் மனைவி "என ஜிஷ்ணுவின் கண்களை பார்த்தபடி சொன்னவளிடம் ,

"பார்த்தனா!!! அது யாருமா??" { இவர் என்ன அவள உக்காரவச்சி கதை கேப்பாரு போல }


"கந்தன்...!!!யாரா இருந்தாலும் ஸ்டேஷன் வரட்டும் நீங்க வண்டிய இன்னும் உள்ள கொண்டுபோய்ங்க" என விறைப்பாய் சொல்லிய ஜிஷ்ணுவின் குரலுக்கு கட்டுப்பட்டார் அவர்.


"சொப்பாபா...?!!!! இவர எப்படி வழிக்கு கொண்டுவரதுனே தெரியலையே??!!! ஆஞ்சனேயா ..!! நீதான்பா இவர கரெக்ட் பண்ண எதாவது வழிய காட்டணும் ...ப்ளீஸ்பா ...!நான் இனிமே உனக்காக எங்க அம்மா போட்ற வடைமாலையில இருந்து வடைய திருடவே மாட்டேன் ...ப்ளீஸ் ப்ளீஸ்"{ அட பக்கி அவரோட வடைலையேவா கைய வைக்குற ...இவ என்னையவிட தீனிபண்டாரமா இருப்பா போலயே ??!!! இப்படியிருந்தா நீ கடைசி வரைக்கும் சிங்கிள் தான்டி என் இஜுக்கு }


இவள் இங்கு அவனுக்காய் ஆஞ்சநேயரிடம் மனு போட... அங்கு ஜிஷ்ணுவோ அமர்ந்தவாரே சீட்டில் தலை சாய்க்க, மனம் "மித்து பேபி ..! ஐ மிஸ் யூ டி '' என புலம்ப கண்களின் ஓரம் முத்தாய் ஓர் துளி பளபளத்தது .



நேசம் என்பது காதல்தானா
காதல் மட்டும் தானா ??
ஓர் இதயம்
நேசம் கொண்டு தத்தளிக்க...
ஓர் இதயம்
நேசமதை நினைவில் கொண்டு தத்தளிக்க...
ஓர் இதயம்
நேசம் அறியா நினைவில் தத்தளித்தது …!!!

-தோஷி { யமுனா }



--கரைவாள் .
 

Attachments

Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 5:


￰யாஹ்வி:


மித்ரேந்தர் பசியில் அழ தொடங்க அவனை தூக்கிக்கொண்டு கீழே வந்தான் ஜித்தேந்தர்.


படியில் இறங்கும்பொழுது கீழே வரவேற்பறையை அடுத்து இருக்கும் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த நாச்சியாரை பார்த்துக்கொண்டே இறங்கினான்.


பிள்ளையின் மூச்சுக்காற்றை கூட சுலபமாய் கண்டுகொள்வது தாயின் மனம் அல்லவா !!! ஜித்தேந்தரின் காலடி ஓசையிலே அவன் வருவதை தெரிந்துகொண்டவர் அவன் முகத்தை பார்க்காமலே அவன் வரும் திசை பார்த்து தாடையை வலது தோள்பட்டையில் இடித்துக்கொண்டார். ( கோவமா இருக்காங்களாம் )


நாச்சியார் அவன் அருகில் வந்தபின்பும் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருக்க , மித்ரேந்தரை அவரின் மடியில படுக்கவைத்தவன் அவர் கோபத்திலும் குழந்தையை சரியாய் தாங்கிக்கொண்டதை பார்த்தப்படியே "அப்ப்ப்ப்பா!!!" என்று கத்தி தந்தையை அழைத்தான் .


இவனின் சத்தத்தில் உள் அறையில் இருந்தவர்," ஆத்தி ...!! என்னைய எதுக்கு கூப்புட்றான்??? இப்போ என்ன குண்டை போடப்போறான் தெரியலையே" என ஜெர்கான ரவி சார் அடிச்சி பிடிச்சி ஹால்க்கு வந்தார்.


"அப்பா...!! உங்க புள்ளைக்கும் அவனோட புள்ளைக்கும் பயங்கரமா பசிக்குதுபா. உங்க வைய்ப்ப எங்களுக்கு சாப்பாடு போட சொல்லுங்க" என ஜித்தேந்தர் பாவமாய் முகத்தை வைத்தான் .


என்னமோ ஏதோனு வந்த ரவி சார் இவன் சொன்னதைக்கேட்டு முழித்த முழியில் அம்புட்டு நேரமாய் கோவமாய் இருந்த நாச்சியார் வாய்விட்டு சிரித்தார்.(ஹாஹா !! அது ஒன்னும் இல்லைங்க நம்ப ஜித்து பாவா ஒரு வார்த்தை போசுறதே கஷ்டம் .... இப்படி தொடர்ந்து இவ்வளோ பெருசா பேசுனா மனுஷனுக்கு ஷாக்கா இருக்காதா ) .


தாய்தந்தையை பார்த்த இந்தர் நானும் புன்னகைக்கிறேன் எனும் பெயரில் மெல்லியதாய் இதழை விரித்தபடியே டைனிங் டேபிளில் அமர்ந்தான் .


அதில் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த ரவி சார், " நாச்சி..!! என்னமா ??போ ....! அவனுக்காக ஆசை ஆசையா சமைச்ச, இப்போ புள்ள பசிக்குதுனு சொல்றான்ல ..போய் பறிமாறு"


நாச்சியாரோ தன் கையில் இருந்த மித்ரேந்தர் தன்னோட கண்ண உருட்டி உருட்டி சின்ன உதடை சுழிச்சி சிரிச்ச அழகை ரசிக்க ஆரம்பித்திருந்தார் .


தான் சொன்னபிறகும் போகாமல் இருந்த மனைவியிடம் , "நாச்சி..!!! " என அவரை அசைக்க,


" ஆங்!!" என நிமிர்ந்தவர் இந்தர் டைனிங் டேபிளில் இருப்பதை பார்த்து,"என்ன இங்க நிக்குறீங்க ?? போங்க போய் உங்க புள்ளைக்கு நீங்களே பறிமாறுங்க ...நான் இந்த குட்டிக்கு பால காய்ச்சி குடுக்கணும்" என்று குழந்தையை தூக்கிக்கொண்டு கிச்சன்க்கு சென்றுவிட்டார் நாச்சியார் .


டைனிங்டேபிளில் இருந்து இங்கு நடந்ததை பார்த்தும் பார்காததுபோல் இருந்த ஜித்தேந்தர் இதில் வாய்விட்டு சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்.


அதை சந்தோஷத்துடன் ,ஆச்சரியமாய் பார்த்த .. கிட்சனில் இருந்த நாச்சியாரும் ,ஹாலில் இருந்த ரவிசாரும் , "இந்த குழந்தை யார் ,என்னனு?? தெரியாது .....அவனும் சொல்ல மாட்டான் .ஆனா , இத்தனை மாசமா எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தவன் இந்த குழந்தை வந்த பிறகு தான் வாய்விட்டு சிரிச்சிருக்கன் . கடவுளே !! இது இப்படியே தொடரனும் ..என் புள்ள சந்தோசம் தான் எனக்கு முக்கியம் , இனிமே இந்த குழந்தை இந்த வீட்டு பேரன் தான் ...நீ தான் எங்களுக்கு துணையா இருக்கணும் " என ஒன்றுபோல் வேண்டினர் .


￰பிசினெஸ் உலகை ஆட்டிப்படைக்கும் ரவிசக்கரவர்த்தி தன் மனைவியின் சொல்படி மகனுக்கு பரிமாறப்போக,


"அப்பா!!! நீங்களும் உட்காருங்க சேர்ந்தே சாப்பிடுவோம்" என சொல்லி அடுத்த ஷாக் கொடுத்தான் கொடுத்தான்.


"ஒரு மனுஷனுக்கு ஒரேநாள்ல எத்தனை அதிர்ச்சிடா குடுப்ப " என மைண்ட் வாய்சில் பேசிய ரவி சார் அமைதியாய் இருக்காமல் மகன் தான் நன்றாக பேசுகிறானே என்று," இந்தர்..!! இன்னிக்கு வெளிய எங்கையாவது போறியாபா" எனக் கேட்டார் .


(அவருக்கு மேலும் மேலும் அதிர்ச்சி கொடுத்து அவருக்கு ஹார்ட் அட்டாக் வரவைக்கவேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில்) அவனின் வழக்கமான பாணியாய்,"ஏன் கேக்குறீங்க" என கேள்வியை தோய்த்த பார்வை பார்த்தான் .


"ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சுட்டான் ...!!! இப்ப தான் இவன் பேசுறானேன்னு சந்தோஷப்பட்டேன்...நீங்க எப்படி அப்படி எல்லாம் சந்தோஷப்படலாம்னு திரும்ப இப்போ கண்ணாலையே கேள்வி கேக்குறான் பாரு"என்று முனங்கியவர்,


அவன் இவரையே பார்ப்பதை உணர்ந்து, "இல்லப்பா... மார்னிங்கே உனக்கு முதல்ல வாழ்த்தை சொல்லலைனு நம்ப குட்டிமா ( சித்ரங்கதா ) பீல் பண்ணா. அதான் ஈவினிங் அவ வர நேரத்துக்கு நீ வீட்ல இருந்தா நல்லா இருக்கும்ல"


அவரின் இத்தனை பேச்சிற்கு ஜித்தேந்தர், " ம்ம்ம்ம்" என்று பதிலளித்தவன்....குழந்தையை தன் அன்னை பார்த்துக்கொள்வார் என நினைத்தபடி தன் அறைக்கு சென்றான்.


"இப்போ இவன் எதுக்கு ம்ம்ம்ம் சொன்னான் ?? வெளில போலன்னு அர்த்தமா இல்ல நான் பேசினத்துக்கு ம்ம்ம் சொன்னானா ???? நம்ப குடும்பத்துல எல்லோருக்கும் எட்டூருக்கு வாய் அப்றம் இவன் மட்டும் எப்படி இப்படி இருக்கான்" இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என கைவிரல்களை இங்கும் அங்கும் அசைத்து தீவிரமாய் யோசிக்க,


கிச்சனில் இருந்து பாப்பாவிற்க்கு பீடிங் பாட்டிலில் பால் கொடுத்தபடி வந்த நாச்சியார் இவரை பார்த்துவிட்டு, "டேய் குட்டி கண்ணா!! உன் தாத்தா என்னடா லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்காரு " என்றதில் குழந்தைக்கு என்ன புரிந்ததோ கை இரண்டையும் தட்டி சிரித்தது .


"அடேய் குட்டி...! உன் பாட்டியோட சேர்ந்துட்டு உன் தாத்தாவ வம்பு பண்றியா படவா!!" என்றவருக்கு கைப்பேசி அழைப்பு வர அவர் உள்ளே சென்றதை கண்டுகொள்ளாமல் நாச்சியார் மித்ரேந்தருடன் ஐக்கியம் ஆகிட்டாங்க .


மேலே நின்று இதை பார்த்த ஜித்தேந்தர் , "ப்பா,ம்மா..!!! சாரி, என்னால உங்க கிட்ட இப்போ எதையுமே சொல்லமுடியாது . நீங்க என் புள்ளைய ஏத்துப்பீங்கனு எனக்கு தெரியும் . லவ் யூ சோ மச் டாட் அண்ட் மாம் ... சீக்கிரமே நான் உங்ககிட்ட எல்லாமே சொல்வேன்" என்று மனதுடன் பேசிக்கொண்டான் .


அப்பொழுது அங்கு ," அத்தம்மாமா!!!" என கத்திக்கொண்டு ஓடி வந்தது இருபத்திமூன்று வயது அழகிய தென்றல், பெயர் ஷாலினிவர்தன்.


ஷாலினிவர்தன் ..... நயன மொழி பேசும் நீள் விழிகளுக்கு சொந்தகாரி...அவள் இதழ்களின் மென்மை ரோஜாபூவின் இதழ்களின் மென்மையை ஒத்ததாய் எப்பொழுதும் அழகிய சிரிப்புடன் விரிந்திருக்கும் . (இந்த ஷாலினி தாங்க நம்ம விஷ்வாக்கு ஜோடியா வருவான்னு நினைக்கிறேன்.ஆனா அவங்க எல்லோரும் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியலையே !!)


ஜித்தேந்தரின் தாத்தா பொன்சக்கரவர்த்திக்கு இரு மாவுகள் .ஒரு ஆண் : ரவி சக்கரவர்த்தி , ஓர் பெண்: சாவித்திரி , இவர்கள் இருவரும் சிவாஜி சாவித்திரி போல் பாசமழை பொழியலனாலும் ...நம்ப கில்லி விஜய் ஜெனிபர் மாதிரி என்ன தான் அடிச்சுக்கிட்டாலும் உள்ளுக்குள்ள பாசம் அள்ளும் .


ரவி சாருக்கும்- நாச்சியாருக்கும் கல்யாணம் நடந்த இரண்டு வருடத்திற்கு பிறகு சாவித்திரியை விரும்பி , பெண் கேட்டு வந்த ருத்திரவர்தனுக்கு நிச்சயம் செய்து... இப்படி ஒரு கல்யாணத்தை பார்த்தது இல்லை என்று ஊரே வியக்கும் அளவிற்க்கு பொன்சக்கரவர்த்தி நடத்தினார் .


ருத்திரவர்தனும் சாதாரண ஆள் இல்லை, பொன்சக்கரவர்த்தி போல் இந்திய அளவில் இல்லை என்றாலும் தமிழ்நாட்டுல பெரிய மரியாதையான பரம்பரை பணக்காரர்கள் தான்.



ருத்திரவர்தன்- சாவித்திரி வீடு இல்லை இல்லை ..மாளிகை சென்னை அண்ணா நகரில் உள்ளது, அவர்களின் ஒரே செல்வ(ல) புதல்வி தான் ஷாலினிவர்தன். சென்னையின் புகழ்பெற்ற கம்பெனியில் வேலை பார்க்கிறாள் .அவ ஏன் அங்க வேலை பாக்குறா?? என்ன பண்றா ??என்ன பண்ண போறான்னு?? யாருக்குமே தெரியாது ஒரே ஒருத்தன தவிர .


"அத்தம்மா!!!" கத்திக்கொண்டே வந்த ஷாலினி, அவர் கையில் இருந்த குழந்தையை பார்த்தவள் ..அதன் அழகில் ,"அத்தம்மா..! யார் இந்த பாப்பா??? க்யூட் இருக்கான்....அச்சோ இவன் தூக்கத்திலே சிரிக்கிறான் பாருங்களேன்...செம்மையா இருக்கு... கால் ,கை எல்லாம் எம்புட்டு குட்டியா ரெட்டா இருக்கு ...அச்சோ சோ ஸ்வீட் அத்தம்மா!!" என பால் குடித்தபடி உறங்கிவிட்ட குழந்தையை கொஞ்சினாள் . (விஷ்வாவுக்கு வாய்க்குறதுலாம் இப்படி தான் அமையுமோ கேப்பே விடாம பேசுது பாரு)


"ஹேய் போதும்டி ..!!!! சின்ன குழந்தைங்கண்ணா அப்படி தான் இருக்கும்.தூங்குற குழந்தையை கொஞ்ச கூடாது " என அவளை அதட்டிய நாச்சியார் ," ஆமா நீ என்ன தனியாவா வந்த??" என விசாரித்தார் .


ஷாலினி," பின்ன ??!! நீங்க பெத்த இரண்டு கழுதைல, ஒரு கழுதை கூட்டிட்டு போக வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லை இன்னொரு கழுதை பாசமா கூட்டிட்டு வந்து பாதியில கழட்டி விட்டுட்டு போயிடிச்சி " என கோபம் பாதியாய் சலிப்பு பாதியாய் சொல்லும் போழுதே ஒரு குரல் தேனாய் அவளின் காதில் பாய்ந்தது .

"டார்லிங் ...!!! எப்படா வந்த??? வந்த உடனே அத்தான பார்க்க வராம இந்த கிழவி கூட எதுக்குடா செல்லம் மொக்க போட்ற???" என கேட்டது வேற யாரும் இல்லைங்க நம்ம லவ் பாய் ரவி சார் தான். (நாச்சியார் கிட்ட மாமா, ஷாலினி கிட்ட அத்தானா உங்க பசங்கள விட உங்களோட லவ்ஸ் எங்கேயோ போகுது பின்றீங்க போங்க )


"ஹாய் டார்லோமா!!!!!! (டார்லிங் மாமா) வந்த உடனே என்னோட கண்ணு உங்களதான் தேடுச்சி ,ஆனா இந்த கிழவி என்னைய தடுத்து மொக்க போடுறாங்க டார்லோமா" ஷாலினியும் அவருடன் கூட்டு சேர்ந்ததில் , இவங்க கொஞ்சுறத பார்த்துட்டு நம்ப நாச்சியார் காளி அவதாரம் எடுப்பார் என்று எதிர்பார்த்தா சோ சாரி அவங்க மித்ரேந்தர் கூட பிஸி .


தன் அத்தம்மாவின் கவனம் தங்களின்மேல்இல்லை என்பதை பார்த்த பிறகு தான் ஷாலினிக்கு பாப்பா ஞாபகம் வந்தது. .


"அத்தம்மா ...!! நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்ல , யார் இந்த பாப்பா ?" கேட்டுக்கொண்டே குழந்தையை தூக்கினாள் .


கை மாறியதில் உறக்கம் கலைந்த குழந்தை அழத் தொடங்கினான். நாச்சியாருத், ரவியும் மாத்தி மாத்தி சமாதானம் செய்தனர்,இந்த ஷாலினி புள்ளயும் என்ன என்னமோ வித்தை காட்டினாள்.. ஆனாலும் மித்ரேந்தர் அழுகை நின்ன பாடில்லை .


குழந்தையின் அழுகை அதிகரித்ததில் ஜித்தேந்தர் அவசர அவசரமாக கீழே வர,


"மாமா ஏன் இவ்ளோ வேகமாவராங்க?? வெளியில் எங்கனா போறாங்களா ??ஆனா கேஷுவல் டிரஸில் இருக்காங்களே " ஷாலினி தனக்குள்ளே கேள்விகேட்டுக்கொண்டாள் .

நாச்சியாரிடம் இருந்து குழந்தையை வாங்கிய ஜித்தேந்தர், " நா பங்காரம்..!!! ஏமிரா ???எந்தா செய்யிலி???( என் தங்கமே என்னடா? என்ன செய்யுது )... லேதுரா லேது ...சூடு நாணா ஒச்சண்டிரா சூடுரா ( இல்ல டா இல்ல..பாரு அப்பா வந்துட்டேன் பாரு )" .


"என்னடி !!! திடிர்னு இவன் ஏதோ பேசுறான் ...ஆனா ஒண்ணுமே புரியலை!!" ரவி சார் நாச்சியார் காதில் மெதுவாய் முனங்க,


"அதான என் புள்ள அறிவெல்லாம் இருந்து இருந்தா நீங்க இப்படி வீட்டில் உட்கார்ந்து மொக்கை போட்டுட்டு இருப்பீங்களா" என அசால்டாக சொன்னவர் ,"குழந்தைக்கு என்ன ஆச்சு தெரியலையே" என பதறினார் .


"மாமா இப்ப நாணா-னா சொன்னாங்க ??? இந்த தெலுங்கு படத்துலலாம் அப்பாவை தான் அப்படி சொல்லி பார்த்திருக்குறோம். இவங்க ஏன் அந்த பாப்பா கிட்ட இப்படி சொல்றாங்க, இந்த பாப்பா யாரு ?? ஐயோ ஈஸ்வரா மண்டைய காய விடுறாங்களே" . (பாவம் ஷாலினி இருக்கற கொஞ்சூண்டு மூளையை வைத்து யோசிக்கிறாள்)


இன்று நான் வரிசையாய் அதிர்ச்சிகளை கொடுப்பேன் என ஜித்தேந்தர் சபதம் ஏதேனும் செய்தானா தெரியவில்லை , அங்கிருந்தவர்களுக்கு அடுத்த ஷாக்கை கொடுத்தான்.


ஜித்தேந்தர் சின்ன வயதில் இருந்தே நன்றாக பாடுவான் . ஆனால் கடந்த ஆறு மாதமாக பாடவும் இல்லை , பாடல் ஏதேனும் காதில் விழுந்தால் அந்த இடத்தில் இருப்பதும் இல்லை .இப்பொழுது அவனே தன்னுடைய குழந்தைக்காய் பாடியதை கேட்டு தான் அனைவரும் அதிர்ச்சி ஆகினர் .


மித்ரேந்தரை தூக்கி தன் நெஞ்சோடு பொத்திவைத்த ஜித்தேந்தர் நீண்ட நாட்களுக்கு பின் பாடினான்,


"ஆராரோ ஆரிரரோ
அம்புலிக்கு நேர் இவரோ ....
தாயான தாய் இவரோ
தங்க ரத தேர் இவரோ ....
மூச்சிப்பட்டா நோகுமுன்னு
மூச்சடக்கி முத்தமிட்டேன் ...
நிழலுப்பட்டா நோகுமுன்னு
நிலவடங்க முத்தமிட்டேன் ...
தூங்காம நீ விளக்கி
தூங்காமத் தூங்குக் கண்ணே...
ஆராரோ ஆரிராரோ ...
ஆரிரோ ஆரிரரோ ...
ஆராரோ ஆரிரரோ ...
ஆரிரோ ஆரிரரோ ..."



இவன் பாட்டை கேட்டபடியே சிறுது சிறிதாய் அழுகையை நிறுத்திய குழந்தை உறங்க தொடங்கினான் .


இவன் பாடியதை வீட்டினுள் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் , அப்பொழுது தான் வீட்டிற்க்குள் நுழைந்த விஷ்வாவும் சித்ரங்கதாவும் கூட சந்தோஷமாய் பார்த்தார்கள் .

-கரைவாள்
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 6:


மித்ரேந்தர் அழுகையை நிறுத்தி தூங்க ஆரம்பித்த பிறகுதான் ஜித்தேந்தர்க்கு சுற்றி இருந்தவர்களின் நினைவு வந்தது .


ஆனால் ஏதாவது பேசினால் அது ஜித்தேந்தர் இல்லயே !!! குழந்தையை தூக்கியபடியே அவன் அறைக்கு செல்ல, அங்கு யாருமே இல்லை என்பது போல் இருந்தது அவனது செய்கை .இது வழக்கம்தான் என்பதுபோல் நாச்சியார் பெருமூச்செய்தினார் .


அம்புட்டு நேரம் தன் கொஞ்சூண்டு மூளையை கசக்கி யோசிச்சிட்டு இருந்த ஷாலினி , வாசலில் வாயில் ஈ போறதுகூட தெரியாமல் பேனு பார்த்தபடி இருந்த சித்ராங்கதா, மற்றும் விஷ்வாவை பார்த்துட்டு ஆங்கிரி மோட்க்கு மாறி "சித்துதுது" என்று தொண்டை கிழிய கத்தினாள்.


சித்ரங்கதா ," அய்யயோ...! இவ காளி அவதாரம் எடுத்துட்டாளே !!!!எப்படி சமாளிக்கிறது "என முனங்கிகிட்டே , "ஹேய் ஷாலு செல்லம்...!!! எப்படாமா வந்த .??? ஆமா!! ஏன் செல்லம் மூஞ்செல்லாம் தக்காளிய பூசின மாதிரி சிவப்பா இருக்கு ?? ஈவினிங் பார்ட்டிக்கு இப்பவே பேசியல் எதுனா பண்ணியா தங்கம் " என வார்த்தைக்கு வார்த்தை கொஞ்ச,


"ஆமா!!! இவ எதுக்கு இப்போ அவளுக்கு சோப் போட்றா ?? அப்போ இந்த குரங்கும் இப்போதான் வருதுபோலயே!!! அப்புறம் எதுக்கு போன்ல அப்படி சொன்னா ....சரி எதுக்கும் நம்பளும் ஒரு பிட்ட போடுவோம் " என விஷ்வா வழக்கம் போல தனக்குள்ளே பேசியவன்,


தொடர்ந்து ஷாலினியிடம் , "ஹாய் டி குள்ள.....ம்க்கும் ... ஷாலினி எப்போ வந்த ?? மாமா அத்தை வரலையா ? ஏன் நின்னுட்டே இருக்க ...மாம் உங்க மருமகளுக்கு உட்கார கூட உரிமை இல்லையா என்ன??!!! ஓகே மாம் நான் போய் பிரெஷ் ￰ஆகிட்டு வந்துர்றேன்" என ஷாலினிகிட்ட ஆரம்பிச்சு நாச்சியார் கிட்ட முடிச்சி எப்படியோ நைசா எஸ் ஆகிட்டான் .


அவனை வெற்று பார்வை பார்த்தவள் ,சித்ராங்கதாவிடம் ,"அடியே! என்ன பாதியில் விட்டுட்டு எங்கடி போன ??" என சந்தேகமாய் கேட்டாள்.


இவளின் வெற்று பார்வையில் யோசனையுடன் படிகளில் ஏறிய விஷ்வா ..அவள் பேசியதை கேட்டு "நம்ப குரங்கு குட்டி அப்படி எல்லாம்லாம் பாதில விட்டு போகமாட்டாளே"னு அவனும் தன் பங்கிற்கு சித்ராங்கதாவை சந்தேகமாய் பார்த்து வைத்தான் .


"அய்யயோ!!! சித்துகுட்டி இது என்னடி உனக்கு வந்த சோதனை??!!! இன்னிக்கு இந்த விஷ்வா பக்கி கிட்ட மாட்டிகிட்டே இருக்கியே.... சரி சரி ...நம்ப பார்க்காததா சமாளிடி செல்லம்" உள்ளுகுள் பீதியானவள் வெளியில் முகத்தை பச்சபுள்ள மாதிரி வைத்துக்கொண்டு ,


" ஷாலு செல்லம்!!!அது ஒன்னும் இல்லடி ..வழியில டாமினோஸ் பார்த்தனா" என அவள் ஆரம்பித்தபொழுதே ..விஷ்வா,மற்றும் ஷாலினி இருவரும் ஒரு மார்க்கமாய் அவளை பார்த்ததில் ,


"அது ...அந்த டாமினோஸ் பக்கத்துல இருந்த கிப்ட் ஷாப்ல அண்ணாக்கு எதாவது வாங்கலாம்னு ஆர்வத்துல உன்னை விட்டுட்டு போய்ட்டேன் செல்லம் "என சமாளித்தாள் ( ஷொப்ப்ப்பா எப்படியோ சமாளிச்சிட்டோம் ). இவர்களை கண்டு சிரிப்புடன் ரவி சாரும் நாச்சியாரும் உள்ளே சென்றுவிட்டனர் .


"போடி லூசு!!!என்கிட்ட சொல்லி இருந்தா நானும் வந்து பெரியத்தான்க்கு எதுனா வாங்கிருப்பேன்ல " ஷாலினி காதுமாயிடம் சண்டையிடுவதை பார்த்தவாறே விஷ்வா தன் அறைக்கு சென்றான்.


சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து ஷாலினியுடன் பேசிக்கொண்டிருந்த சித்ரங்கதா," சரி டி ..!! நீ போய் என் ரூம்ல பிரஷ் ஆகிட்டு வா ...நான் அண்ணாவ பார்த்து விஷ் பண்ணிட்டு வரேன்".


அம்மாளிகையின் முதல் மாடியில் வலதுபுறம் விஷ்வாவினுடையது, இடதுபுறம் சித்ராங்கதாவினுடையது . இரண்டாம் மாடி முழுவதும் ஜித்தேந்தர் உடையது . அவனது ஒரு அறை மட்டுமே வலதுபுறத்தை முழுதாய் ஆக்கிரமித்திருந்தது , அதனுள் ஒரு குட்டி வீடே அடங்கும் . இடதுபுறத்தில் அலுவல் அறை மற்றும் உடற்பயிற்சி அறை . அவன் அறைக்கு முன் நான்கு சோபாக்கள் ...அமர்ந்து பேசுவதற்கு வாகாக போடப்பட்டிருந்தன .


ஜித்தேந்தர் தன் அறைக்குள் எவரையும் அனுமதிப்பதில்லை . அதுவும் கடந்த ஆறு மாதமாக அறையை சுத்தம் செய்ய கூட எவரையும் அனுமதிக்காமல் தானே செய்கிறான் .


மேலே வந்த சித்ராங்கதா அறை மூடியிருப்பதை கண்டு கதவை தட்டிவிட்டு அறைமுன் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தாள் .


"இந்த அண்ணன் ஏன் இப்படி புதையலை காக்குற மாதிரி இந்த அறையை மூடியே வச்சிருக்கு??"னு யோசிச்சிகிட்டே அமர்ந்திருந்தாள் .


அவள் யோசனையை கலைப்பது போல் வெளியே வந்த ஜித்தேந்தர், தங்கை அமர்ந்திருப்பதை கண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான் .


கேஷ்வல் டிரஸ்லயும் அழகாய் இருந்த அண்ணனை கண்டு சிரிப்புடன்,"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா"என்றாள் .


தன் தங்கையின் வாழ்த்தில் இதழ்களை விரித்து அழகாய் புன்னகைத்தான் .


அவ்வளவுதான் அவ்வளவேதான் அவனது பதில் .


"அண்ணா!!!! இந்த விஷ்வா பக்கிலாம் பேசவே தெரியாம பேசி எல்லோர் காதுலையும் ரத்தம் வரவைக்குறான்... நீங்க என்னனா பேசவேமாட்றிங்க" என சிறு விஷயத்திலும் விஷ்வாவை அவள் வம்பிழுப்பதை பார்த்து ,


"குட்டிமா !! உண்மைய சொல்லனும்னா விஷ்வா தான் உன்கிட்ட படாதபாடு படறான்.ஆனா அவன் உன்ன விட பெரியவன்... இப்படி நீ அவன" னு ஜித்தன் ஆரம்பிக்கும் பொழுதே,


"அண்ணா.. ப்ளீஸ்!!! எனக்கு நிறைய வேளை இருக்கு.... ஈவினிங் பட்டைய கிளப்பனும் , சோ நீங்க அப்புறமா உங்க கச்சேரிய வச்சிக்கோங்க ப்ளீஸ் ...!!"" னு சொல்லியவள் வேகமாய் அவ்விடத்தை விட்டு எழ, அடுத்து ஜித்தேந்தர் கேட்ட கேள்வியில் திகைத்து நின்றுவிட்டாள் .


"குட்டிமா !!! எதுக்காகடா போலீஸ் ஜீப்ப வழிமறிச்சு நின்ன???"என்று அவளை கூர்மையாய் பார்க்க,


"அண்ண்ண்ணா ..!!!!அதுவந்து ..அது.... போலீஸ் ஜீப் மாதிரியே இல்லையேணா நான் அது வேற எதோ வண்டினு நினைச்சி ..."அவள் சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுதே, "போதும் " என்பதுபோல் சைகை செய்தவன்,


" வேண்டாம்டா குட்டிமா...!!!நீ பொய் சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டியோ" என்றவன், பின் என்ன நினைத்தானோ ,"சரிடா !!! உனக்கு எப்போ சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்லு ...எப்பவும் அண்ணண் உனக்காக இருப்பேன் "என , அவள் "சரி "என்பது போல் தலையாட்டினாள் .


"குட்டிமா!!! இன்னொரு விஷயம் ...நான் எங்க இருந்தாலும் என் பார்வை நம்ப குடும்பத்துல இருக்கவங்க மேல இருக்கும்
... அது சந்தேகத்தினால் இல்லை உங்க பாதுகாப்புக்காக தான்" அதிசயமா நிறைய பேசியவன் போதும் என திரும்ப அவன் அறையினுள் நுழைந்துவிட்டான்.


அவன் பேசியதை பற்றியே யோசித்துக் கொண்டு வந்த சித்ராங்கதா தன்மேல் மோதிய ஷாலினியை கண்டு சிந்தனை கலைந்தாள் .இவ எதுக்கு இப்போ இப்படி வந்து மோதுறா"ஏய் ...!!என்னடி??? என்ன ஆச்சி ?? ஏன் இப்படி ஓடி வர??" .


"அது ...அது ஒன்னும் இல்லடி ...நான்.... நான் போயிட்டு பிரெஷாகிட்டு வரேன்னு சொல்லி "என்று ஷாலினி அவள் அடுத்த கேள்வி கேட்பதறக்குள் ஓடினாள்.


தனது யோசனையில் இருந்து முழுவதும் வெளியே வராத சித்ரங்கதாவும் அவளை சரியாய் ஆராயாமல் ..அவளது தடுமாற்றத்தை பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டாள். இங்கு சித்ராங்கதாவின் அறைக்கு வந்த ஷாலினியின் முகமோ சிவந்தது சற்று முன் நடந்ததை எண்ணிப்பார்த்து ....


சில நிமிடங்களுக்கு முன்பு :


சித்ராங்கதா , தன்னுடைய அறைக்கு செல்ல சொல்லிவிட்டு சென்றபின் மேலே வந்தவள் அறையினுள் நுழையும் முன் ஒரு கரம் அவளைப் பற்றி இழுத்து அறையினுள் அடைத்தது .


அக்கரத்தின் ஸ்பரிசத்தில் அதன் உரிமையாளனை உணர்ந்தவள் அக்கரத்தின் பிடியிலிருந்து திமிறினாள். அவள் திமிறல்களை தனது வன்மையான கரங்களால் மென்மையாய் அடக்கி, "ஏய் குள்ளச்சி!!! என்னடி என்னாச்சு ?? ஏய் இங்க பாருடி ....ஆஸ்பிட்டலில் ஒரு எமர்ஜென்சிஅதான் வர லேட் ஆகிடுச்சு ...அதுக்குள்ள இந்த குரங்கு உன்னை கூட்டிட்டு வந்து நடுவுல விட்டுட்டு போயிட்டா .ஆமா உன்னை யாருடி அவகூட கிளம்ப சொன்னது ?? அத்தான் வரவரைக்கும் இருந்திருக்கலாம்ல " என பேசியது வேற யாருமில்லை நம்ப விஷ்வாதான்.


"ஹலோ !!! நீங்க யாரு ?? நீங்க எதுக்காக இப்படியெல்லாம் பேசுறீங்க??முதல்ல தள்ளிப் போங்க நான் போகணும்"


"எங்க... எங்க போகணும் ???அதும் என்னை விட்டுட்டு " விஷ்வாவின் குரல் கொஞ்சியது .


"ஹலோ !!!யாருங்க நீங்க மொதல்ல ?பக்கத்துல வர வேலைலாம் வேண்டாம் ".


"ஏய்ய்!!!நான் உன் அத்தான்டி ,உன்கிட்ட நான் வராம வேற யாரு வருவா ?"


"அத நான் முடிவு பண்ணனும் ... நீங்க முடிவு பண்ணக்கூடாது ,நீங்க யாரு அதை முடிவு பண்ண??"


அவளின் பேச்சில் விஷ்வாவிற்கு மண்டை காய்ந்தது ."அடக்கடவுளே ஒரு மனுஷன் அஞ்சு நிமிஷம் லேட்டா வந்ததுக்குக்கா இவ இம்புட்டு அலும்பு பண்ணுறா "என மனதில் புலம்பியவன் தன்னுடைய பாணியில் அவளை சமாளிக்க தொடங்கினான்.


"என் செல்லக்குட்டி!!! எந்தப் பூ நம்ப கிட்ட வந்து நீ என்ன பறிச்சிக்கோன்னு சொல்லிருக்கு???" என மெல்லியக்குரலில் கேட்டுக் கொண்டே அவளை நெருங்கியவன், தனது விரல்கள் கொண்டு அவள் காதோர கூந்தலை ஒதுக்கி ...அவளின் காதோரம் தனது உதடுகளை ஒட்டியும் ஒட்டாமல்...கழுத்தோரம் அவனது தலையின் சிறு முடிகள் உரச மென்மையாய் பாடினான் ,


"பூ பறிக்கச் சொல்லி
பூவாய் கேட்டுக் கொள்ளும்..
நான் பறித்துக் கொண்டாள் கூடாதென்றா சொல்லும் ..
பூ பறிக்க சொல்லி பூவாய் கேட்டுக்கொள்ளும்..
நான் பறித்துக் கொண்டால் கூடாதென்றா சொல்லும் ..
மைவிழி வீசுகின்ற மார்கழி
உன் விழி சங்கீத செம்மொழி
கயல்விழி வராதோ பைங்கிளி
கொஞ்சம் நெஞ்சோடு
கொஞ்சம் நாழி..."



அவன் செய்கையிலும் பாடலிலும் கிறங்கியவள் அவனின் பாடலுக்கு தோதாய் இவளும் பாடினாள் .


"அன்பான சினேகிதா சின்னதாய் ஒரு சேட்டை செய்வேன்டா
அச்சாரம் என்பதை இப்போதே போட்டு வையேன்டா.."



அவளின் பதிலில் சொக்கியவன் மிக நெருக்கத்தில் தெரிந்த தனது இதழ்களின் இணையை கண்டு அதனுடன் தனது இதழ்களை சேர்க்க எண்ணி அவள் முகம் நோக்கி குனிந்தவன் சட்டென்று தெளிந்து அவளிடமிருந்து விலகினான் .


விலகினாலும் அவளால் தோன்றிய உணர்வுகள் சட்டென்று அடங்காமல் போக கரங்களால் தன் சிகையை அழுந்த கோதிக்கொண்டான்.


இவனின் செயலில் தன் மயக்கம் களைந்த ஷாலினி அவனை காண வெட்கம் கொண்டு அறையை விட்டு வெளியே ஓடி வரும்பொழுதுதான் சித்ராங்கதாவின் மேல் மோதியது .அதை நினைத்தே இப்பொழுது அறையினுள் செங்கொழுந்தாகி நிற்கிறாள்.



- கரைவாள்
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 7 :



ARSHAD MULTISPECIALITY HOSPITAL


அந்த அறையின் கட்டிலில் அமர்ந்து அவள் யோசித்து கொண்டிருந்தாள் ."தன்னை பற்றி தானே அறியாமல் இருப்பதை விட கொடுமை வேறெதுவும் இருக்குமா??",அவளின் இச்சிந்தனைக்கு காரணம் அவளின் இடதுகை மோதிர விரலில் இருந்த அந்த அழகான ரூபி மோதிரம்.


அந்த மோதிரம் "ஜே" என்னும் எழுத்தை வைரங்கள் கொண்டு வடிவமைத்து, சிவப்பு நிற இதயத்தினுள் வைத்தது போல் இருந்தது .அந்த மோதிரத்தை கண்டே அவளது யோசனை...அதாவது ," அந்த மோதிரம் எவர் அளித்தது ? அந்த ஜே என்பது எவரைக் குறிக்கும் ? அல்லது அது அவளின் பெயரின் தொடக்கமா ?? "என கேள்விகள் அவளின் யோசனையில் படையெடுத்தன .


அந்த மோதிரத்தை காணும் பொழுது அவள் அறியாமலே உடல் சிலிர்த்தது ,என்னென்றே அறியாமல் மனம் மகிழ்ச்சியாய் இருந்தது .அவளுக்கு தற்பொழுது எதுவுமே நினைவில்லை, ஆயினும் அவளது சிலிர்ப்புக்கு காரணம் என்ன? என்னும் யோசனையுடன் கண்களை மூடிய பொழுது மீண்டுமாய் காதோரத்தில் அக்குரல் கேட்டது ,


"மித்துமா!! இந்த மோதிரம் உனக்கு பிடிச்சிருக்காடா" ,சட்டென்று கண் விழித்துப் பார்த்தாள் . அறையில் அவள் மட்டுமே இருந்தாள்.....


"இது என்ன !!! முதலில் ஒரு குரல் ராணிம்மா என்றது , தற்போது ஒரு குரல் மித்துமா என்கிறது.... இருக்குரல்களும் யாருடையது?? இரண்டு குரல்களும் ஏன் எனக்கு நெருக்கமாய் தோன்றுகிறது ?? அப்போ இந்த ஜே என்பது இரண்டாம் குரலுக்கு உரியவன் உடையதா அல்லது எனது பெயரின் தொடக்கமா இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னை இந்த குழப்பங்கள் தொடரப் போகிறது என தெரியலையே ???" ( ஷொப்ப்பா எம்புட்டு கேள்வி கேக்குறா இந்த பொண்ணு .அதும் தனக்கு தானே வேற பேசுறா ,ஒருவேளை இவளும் விஷ்வாக்கு ஜோடியா இருப்பாளோ??? )


"முதலில் எப்படியாவது இந்த ஆஸ்பிட்டலை விட்டு வெளிய போய் நான் யாருனு தெரிஞ்சுக்கணும் "அவள் தனக்குள்ளே முடிவெடுக்கும் பொழுது வெளியே ஒரு பெண்ணின் குரல் "அம்மா"என வலியில் கதறியது .
அதில் அறையை விட்டு வெளியே வந்தவள் கண்டது , ஒரு பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்ததை தான் . செவிலியர்கள் அனைவரும் அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருந்தனர் .


ஒருவர் மற்றொருவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார், "மாலதி டாக்டர் இன்னும் வரலையா ?"


அதற்க்கு அந்த மற்றொருவர் ,"மாலதி டாக்டர் எப்பவும் இந்த டைம்க்கு வந்துடுவாங்க. ஆனா இன்னிக்கு இன்னும் வரலையே இந்த பொண்ணுக்கு வேற வலி வந்துருச்சு என்ன பண்றது ".


அந்தப் பெண் வலியில் கதறிக் கொண்டிருந்தார்.. அருகில் இருந்த அவரது கணவர்அவரது கைகளைப் பற்றிக்கொண்டு ,"ப்ளீஸ்மா..!!! பயப்படாத , இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பாப்பா வந்துருவா "...அந்த இளம் வயது கணவன் மனைவியின் வலியில் தனது கண்களில் தோன்றும் கண்ணீரை உள்ளிழித்து , தனது பயங்கள் அனைத்தையும் மறைத்து தான் அறிந்த வகையில் மனைவியை ஆறுதல்படுத்திக் கொண்டு இருந்தான்.


அடுத்த பத்து நிமிடங்களில் விஷ்வா ருத்ரமூர்த்தியாய் கண்கள் சிவக்க அந்த ஹாஸ்பிடலின் ஒரு அறையில் நின்றிருந்தான் . அவனை சுற்றி இருந்த அனைவரும் பயத்தில் அந்த ஏசி அறையிலும் வேர்வையில் குளித்திருந்தனர் .


விஷ்வா அனைவரையும் கண்டு, "எல்லோரும் என்ன பன்னிட்டு இருக்கீங்க?? டாக்டர் மாலதி இன்னுமா வரல ?? "என்று கர்ஜித்தான் .அவனை என்றுமே இவ்வளவு கோபத்துடன் கண்டது இல்லாததால் அனைவரும் செய்வது அறியாமல் நடுங்கினர் .


"புல்ஷிட் !!!இன்னும் என்ன வேடிக்கை பாக்குறீங்க கோ அண்ட் டூ எனிதிங் ...அந்த பேஷன்ட்க்கும் குழந்தைக்கும் எதுனா ஆச்சி உங்க எல்லோரையும் வேலைய விட்டு தூக்கிடுவேன் "...அவன் சொல்லிட்டு இருக்கும் பொழுது தான் கண்டான் .￰அவனுடைய அந்த ஏஞ்சல் பெண் அவசர அவசரமாக அவனிருந்த அறைக்கு வந்திருந்ததை.


பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணை கண்டவளின் ,கால்கள் தானாய் அப்பெண்ணின் அருகில் சென்றன... சென்று அப்பெண்ணை ஆராய்ந்தவள் விஷ்வா ஹாஸ்பிடலினுள் நுழைவதை கண்டே அவன் பின் வந்தாள் .அவனின் கோபத்தை கண்டு தயங்கி நின்றவள் ,வெளியே அப்பெண் வலியில் துடிப்பதை கண்டு தன் தயக்கம் துறந்து அவசரமாய் விஷ்வா இருந்த அறை கதவை திறந்திருந்தாள் .


வந்தவள் அவனிடம், "டாக்டர்!!! நான் இப்பொழுது அந்த பெண்ணை பார்த்தேன் ... எனக்கு என்னமோ இன்னும் அறை மணி நேரத்தில் குழந்தையின் தலை திரும்பிவிடும்னு தோணுது ... அதுவும் எந்த சிக்கலும் இல்லாம.ஆனா !!அந்த பொண்ணு ரொம்ப பலவீனமா இருக்கா "என கடகட என்று ஒரு தேர்ந்த கைனகாலஜிஸ்ட் (gynacologist) போல கூறியவளை கண்டு அவ்வறையில் இருந்த அனைவரும் வியந்தனர் .


முதலில் நடப்பிற்கு வந்த விஷ்வா அவளின் இச்செயலுக்கான காரணத்தை அறிந்து தன் இதழ்களில் தோன்றிய புன்னகையை சில நொடிகளில் அழகாய் மறைத்துக்கொண்டான் .


"நர்ஸ்!!! போங்க போய் இவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க " என செவிலியரிடம் சொல்லியவன் தொடர்ந்து,


"ஹலோ ஏஞ்சல் !!! என்ன அமைதி ஆகிட்டீங்க....போங்க போய் அந்த பொண்ண பாருங்க , அப்றம் உங்கள மாறியே ஒரு குட்டி ஏஞ்சலையும் இந்த உலகுக்கு பாதுகாப்பா கொண்டுவாங்க ஆல் தி பெஸ்ட்" அழகாய் புன்னகைத்துக்கொண்டே அவளிடம் சொன்னான் .


இவ்வளவு நேரமாய் அவனிடம் இருந்த கோபம் அவளை கண்டதும் விடை பெற்று சென்றதை அறிந்து சுற்றியிருந்த அனைவரும் ஆச்சரியம் கொண்டனர் .அவள் யார் என்று அவர்களில் எவருக்கும் தெரியாது . அவளை மருத்துவமணையில் சேர்த்து மருத்துவமும் அவனே பார்த்துக் கொண்டான்.


மேலும் அதை பற்றி சிந்திக்க நேரம் இன்றி வெளியே கதறும் பெண்ணின் குரலில் செய்யவேண்டியதை உணர்ந்து அனைவரும் விரைந்தனர் .


அவள் கூறியதை போல் அரை மணி நேரத்தில் குழந்தையின் தலை திரும்பியது . பின் அத்தனை சிரமம் இன்றி சுகப்பிரசவமாய் குழந்தை பிறந்தது . அக்குழந்தையை தனது கைகளில் ஏந்திய நொடி அவளுக்கு இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டது போல் தோன்றியது .


அவள் கண் விழித்தே இரு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது .அதுவும் அவள் யார் என்று கூட அவள் இன்னும் அறியவில்லை .இந்நிலையில் தான் எவ்வாறு இன்று விரைந்து இவ்வாறு செய்தோம் என அவள் யோசித்து தனக்குள் உழன்றாள் . அவளது யோசனையை கலைத்தது அவளது கைகளில் இருந்த குழந்தையின் அழுகைக் குரல் . அதைக் கேட்ட பின்பே வெளியில் இருந்த அப்பெண்ணின் கணவன் நிம்மதிப்பெருமூச்செய்தினான் .


இருவருக்கும் பெற்றவர்கள் இல்லா நிலையில் ஆறுதல் கூற எவருமில்லாமல் தவித்திருந்தவனின் கைகளில் அவனது குழந்தையை கொடுத்து "உங்கள் மனைவி நன்றாக இருக்கிறார் "என்று சொல்லி அவன் தவிப்பை போக்கி விட்டு தன் அறைக்கு வந்தவளின் சிந்தை அனைத்தும் தான் இத்தனை நேரம் செய்ததை பற்றியே இருந்தது . யோசித்ததில் தலை சுற்றுவது போல் தோன்ற அப்படியே மயங்கி விட்டாள்.


குழந்தை பிறந்து விட்ட விஷயம் அறிந்த விஷ்வா குழந்தையை சென்று பார்த்துவிட்டு பின்பு இவள் அறைக்கு வந்தவன் , அங்கு அவள் மயங்கி கிடப்பதை கண்டு விரைந்து அவளுக்கு சிகிச்சை செய்தான் .


சரியாக அந்த நொடி ஒரு உருவம் கதவைத் திறந்து மிக வேகமாக உள்ளே வந்தது . கட்டிலில் இருந்தவளை கண்ட அவ்வுருவம் விரைந்து வந்து அவளது கட்டிலுக்கருகில் கீழே மண்டியிட்டு.... அவளது வலது கையை எடுத்து தனது இரு கரங்களுக்குள் வைத்துக்கொண்டது.


கண்கள் இரண்டும் அவளை உச்சி முதல் பாதம் வரை ஏதேனும் ஆபத்தா என வேகவேகமாக அலசி ஆராய்ந்தது . அவ்வாறு எதுவும் இல்லை என்று அறிந்தபின் நிம்மதியுடன் விழி மூடியது.


அந்த மூடிய விழிகளில் இருந்து முத்தாய் கண்ணீர் துளிகள் ஜனிக்க, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விஷ்வா இதை கண்டு கண்மூடி இருந்த உருவத்தின் தோள்களின் மீது தனது கரங்களை வைத்து அழுத்தி "ஜிஷ்ணு"என அழைத்தான் .


அதில் , தன் வேதனையை மறைத்தவன், 'என்னாச்சு விஷ்வா ?? கண் விழிச்சிட்டானு தான சொன்ன . ஆனா இப்போ என்ன திரும்பவும் இப்படி இருக்கா...என்னடா ஆச்ச?? சொல்லுடா..." என கேட்டவனின் குரலில் அவன் முகத்தில் மறைத்த வேதனை அனைத்தும் இருந்தது.


மயக்கத்தில் இருந்த அவளுக்கு இவனது இவ்வேதனை குரல் கேட்டது . கேட்ட நொடி அவளது இதயம் வேகமாக துடித்தது ,கண்களை விரித்து அவனை கண்டுவிட எண்ணி....கண்களை திறக்க போராடினாள் ..இயலாமையில் அவளது உதடுகள் அழுகையோடு முனுமுனுத்தது "ஜி்ணு பாவா" என்று!!!!


நினைவுகள் தொலைத்த ...
சுயம் அறியா நிலையிலும்
அவனது வார்த்தைகள்
அவளது இதயத்தை
தீண்டுமானால் ..
அவனது நேசம் எத்தைகையது ??
அந்நேசம் அவளை
கரை சேர்க்குமா..
அல்லது ...
நினைவறியா சுழலில்
சிக்கி தவிப்பவளை
அதில் மூழ்க செய்யுமா ??



- கரைவாள்
 

Attachments

Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
ஹாய் செல்லம்ஸ் ...யுகாதி ஸ்பெஷலோட வந்துருக்கேன் ...படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க ...ஆன இது கதையில எப்ப வரும்னுலாம் கேக்கப்படாது ஏன்னா அது எனக்கே தெரியாது ...இந்த சீன் வருமான்னு கூட தெரியாது ....ஹீஹீ நீங்க கட்டைய தூக்குறதுக்குள்ள மீ எஸ்கேப் ......
 
Status
Not open for further replies.
Top