sivanayani
விஜயமலர்
மிகவும் அருமையான பதிவு நயனி.இந்தியாவுக்கு போனாலும் அவனை அங்கேயும் நிம்மதியா இருக்கவிடாம ஆர்யன் போன போட்டு கத்தறான் பாவம் விசு.வெந்தயத்தை மோர்ல போட்டு குடிச்சா வயித்தெரிச்சல் குறைஞ்சிடுமா.ஹாஹா அப்படி எல்லாம்
குறையக் கூடிய எரிச்சலா இது.
விசு சரியா தான் சொல்றான் சாருத்தமைய இவனே கல்யாணம் பண்ணனும் ,இல்லைனா யாரையாவது கட்டிக்கிட்டு வீட்டை விட்டு போன
போதும்னு இருக்கனும் ,இது ரெண்டும் பண்ணாம பொண்ணு பார்க்க வந்துட்டாங்கன்னு இந்த குதிகுதிக்கிறான்.
கீழே விழப்போன சாருத்தமையை இடுப்புல கைய வச்சு வருண் நிறுத்தினான்னு, அவன் கையைபிடிச்சு அழுத்தி எடுத்துட்டானே ,எலும்பு
எதுவும் உடையாம இருக்கனும்.
உமைன்னு அவளை அழைக்க கூடாதா, இது என்ன வம்பா இருக்கு அவன் கட்டிக்க போற பொண்ண அவன் எப்படியும் கூப்பிடுவான்,
உமை இது என்னோட அழைப்பு அதை எப்படி அவன் கூப்பிடலாம்னு பொருமுறான்.விட்டுருந்தா உமைன்னு சொன்ன வருண் வாயை உடைச்சிருப்பான் அத்தனை கோபம்.
ஆர்யனோட பொறாமைய தூண்டிவிட்டு,அவன் வாயாலே சாருவை பிடிச்சிருக்கறதை சொல்ல வைப்பாங்களா தேவகி.ஆர்யன் பொறாமையிலே பொங்கதான் செய்யறான்,ஆனா உண்மையை ஒத்துப்பானா.
அயன்னு கூப்பிடவும் சாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிய பார்த்து, அமந்திய வச்சு ஆர்யன் சாருவை வீட்டவிட்டு தொறத்த திட்டம் போடுவான்னு நினைச்சா,அயன்னு இன்னொரு முறை சொன்னா பல்லை உடைச்சு கையிலே கொடுத்துருவேன்னு சொல்லிட்டானே.
Thank you thank you thank you sooooooooooooooooooooooooooooooooooo much. I am blessed.
பின்னே என்ன சொன்னாலும் அவனோட உத்தமை அவனை அழைக்கும் அழைப்பு அது. எப்படி அவ சொல்ற அழைப்பை அந்த அமந்தி சொல்லலாம். ஏற்கனவே வருண் உண்மைன்னு சொன்ன காண்டில இருக்கான். அதில இருந்தே பயபுள்ள இன்னும் வெளில வரல. அதுக்குள்ளே இன்னொருத்தின்னா எப்படி தங்குவான்.
பின்னே என்னன்னாலும் நண்பனாச்சே. இவனோட அலம்பலை விசு கேட்டுத்தான் ஆகணும். வேறு வழி இல்ல.... என்ன இவனுக்கு நண்பனா போய் விசு படுற அவஸ்தை இருக்கே. அய்யய்யய்யோ