All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அயனின் பொறாமை உணர்வை தேவகி அம்மா தூண்டிவிட ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு எதிர்வினை ஆற்றும் அயனின் ஒவ்வொரு உணர்வும் இரசிக்க வைத்ததுஇந்த உணர்வுகள் அனைத்தும் விரைவில் அவள் மீது அன்பெனும் அம்பு மழையை பொழிய செய்யும் என நம்புகிறேன். அதன் தொடக்கம் தான், மூன்று ஆண்டுகளாக தன் தோற்றத்தில் கவனம் செலுத்தாதவன் இப்போது அக்கறை செலுத்தியது. அயனை மீண்டும் காதல் மன்னனாக காணும் நாள் தொலைவில் இல்லை என்றே எண்ணுகிறேன்
எப்படி இருக்கீங்க சிவா? மாற்றம் ஒன்றே மாற்றமில்லாத து என்பது போல் அயனின் முதல் மாற்றத்தில் மகிழ்ந்த பதிவு... அருமை சிவா!
தேவகியின் சதுரங்க ஆட்டத்தின் முதற் கட்டமாக வேறு ஆடவனின் புகைப்படம் சாருவின் மாப்பிள்ளையாக.. அயன் வருவதை பார்த்து அவன் முன் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது அழும்பு என்றால் அப்படத்தை அவனிடமே கொடுத்து பார்க்க சொன்னது அழும்பின் உச்சக்கட்டம்... ஹா! ஹா! பாவம் சிவா.. அயனை இந்த பாடு படுத்த வேண்டாம்..
உமைக்கான மாப்பிள்ளைக்கான தகுதிகளை அவள் முன்பு வெறுப்பில் பேசியதை வைத்து வெளுத்து வாங்கி விட்டான் அவன் உள்ளத்து குமறல் சிறிய அளவாவது குறைந்து இருக்குமோ?? அவன் பேச்சில் அவனுக்கும் வலி அவளுக்கும் வலி இத்தகைய புரிதலே அழகான வாழ்க்கை... அற்புதம் சிவா!!
தேவகி அயனை பெற்றவள் ஆயிற்றே ஹா! ஹா! அழைக்க வந்த தேவகி எதிர் பதமாய் சொல்லி அவனை சாப்பிட வரவழைப்பது.. அவன் பார்க்கணும் என்றே மாப்பிள்ளை புகைப்படத்தை அவன் கண் பார்வையில் வைப்பது.. அயன் அதை பார்த்து பொறாமை தலைக்கு ஏறி கசக்கியது.. தாய் பார்க்கும் முன் மறைப்பது.. பார்க்கவில்லை என்று பொய் சொல்லுவது.. இதற்கே இப்படி என்றால் அந்த வருணை எதிரில் பார்த்தால்???? அயனின் கோபம் விஸ்வரூபம் தான்... அருமை சிவா...
வருணின் அழகை அயன் தன்னோடு ஒப்பீடு செய்து அவனை மாற்றி கொள்வது தான் அழகு.. அவன் அழகை அவன் மாற்றத்தை அத்தாய் கண் கலங்க பார்த்தது பாவம் எத்தனை நாள் ஏக்கமோ? அற்புதம் சிவா!!
உமையும் அயனும் சேரும் காலம் நம் கைக்கு எட்டும் தொலைவிலா? காத்திருக்கிறோம்...
மிக மிக மிக நன்றி ஷாந்தி. எப்படி இருக்கிறீர்கள். எப்போதும் போல உங்கள் கருத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மிக கச்சிதமாக கதையின் சாராம்சத்தை பிடித்துக்கொள்கிறீர்கள். உண்மையாக வாழ்த்தப்பட்டிருக்கிறேன்.
தாயறியாத சூலா? தன் மகனைப்பற்றி தேவகி தவிர வேறு யாரும் அறிந்திருக்க முடியாதே. வைத்து செய்வார்கள் காத்திருங்கள்.
அயனின் பொறாமை உணர்வை தேவகி அம்மா தூண்டிவிட ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு எதிர்வினை ஆற்றும் அயனின் ஒவ்வொரு உணர்வும் இரசிக்க வைத்ததுஇந்த உணர்வுகள் அனைத்தும் விரைவில் அவள் மீது அன்பெனும் அம்பு மழையை பொழிய செய்யும் என நம்புகிறேன். அதன் தொடக்கம் தான், மூன்று ஆண்டுகளாக தன் தோற்றத்தில் கவனம் செலுத்தாதவன் இப்போது அக்கறை செலுத்தியது. அயனை மீண்டும் காதல் மன்னனாக காணும் நாள் தொலைவில் இல்லை என்றே எண்ணுகிறேன்
இன்னுமா என்னை நம்பிட்டியிருக்கீங்க. அட பாவமே. டே அயன்... உன்ன காதல் மன்னனா நெனைக்கிறாங்களே. அதுக்கு கொஞ்சமாச்சும் மதிப்பு கொடுடா. and thank you sooooooooooooooooooooooo much ma.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.