All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் வானின் துருவ(வ்) நக்ஷத்தி(ரா)ரம் - கதைத் திரி

Status
Not open for further replies.

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 11



எரியும் நெருப்பில் அவனையும் தூக்கி போட்டால் என்ன என்ற ஆத்திரம் அவளுக்கு வரத் தான் செய்தது. செய்யத்தான் முடியுமா ? அவன் பலம் என்ன , இவள் பலம் என்ன ?


ஆங்கிலத்தில் ஒரு கதை உண்டு. 'பியூட்டி அண்ட் தி பீஸ்ட்' என்று, அதில் ஒரு பிரம்ம ராட்சசன் ஒருவனுக்கு அழகான பெண் தோழி. அவர்களுக்குள் வரும் காதல், அது நிறைவேறியதா என்பது தான் கதை. இங்கே காதலா ? அந்த கருமாந்திரம் எல்லாம் இவன் மீதா?


ஆண்களிடம் அவளுக்கு முதலில் நம்பிக்கை கிடையாது. அவள் மிகவும் நம்பிய ஆண்கள் யாரும் நம்பிக்கைக்குப் பாத்திரம் ஆகவில்லை. அந்த வரிசையில் ரஞ்சனும் உண்டு. ரஞ்சன் மீது அவளுக்கு ஒரு வித நல்ல உணர்வு இருந்தது. அதையும் அவன் கெடுத்து குட்டி சுவராக்கினான். ஆனால் இவன் ? அவன் மீதான வெறுப்பில் முக்கியமான விஷயம் ஒன்றை அவள் யோசிக்கவில்லை. அவள் இன்னும் அவளாக தான் இங்கே இருக்கிறாள் என்ற விஷயம் அவளுக்கு அந்நேரம் உதிக்கவில்லை.


அவன் மீதான ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது, வீட்டுக்குள் சென்று, உடற்பயிற்சி செய்யும் இடத்தில் அவன் இருப்பதை அறிந்து கொண்டு, அங்கே


"தட்ஸ் இட் ! இனி நான் இங்க இருக்க மாட்டேன் . போறேன் இப்போவே. உன்னோட அராஜகத்தை இனியும் நான் பொறுத்துக்க மாட்டேன். குட் பை" என்று கைகளை கட்டிக் கொண்டு அவனை உஷ்ணப் பார்வை பார்த்தபடி அவள் கூற, பளுவைத்த தூக்கிக் கொண்டு இருந்தவன்


"வாவ் ! நல்ல விஷயம் தான் ! பட் இங்கிருந்து நீ கிளம்பும் முன், 50 லாக்ஸ்க்கு ஒரு செக் இல்ல காஷ் கொடுத்திட்டு போ" என்று பளுவைத் தூக்கிவிட்டு, அதை 'பொத்' என்று தரையில் போட்டுவிட்டு அவன் அவளை நெருங்கினான். உடற்பயிற்சி செய்ய கையில்லா பனியன், ஷாட்ஸ் என்று அவன் வியர்வை ஒழுக அவளை நெருங்க, அவளுக்கு ஒருவித அசௌகரிய உணர்வில் வியர்க்க ஆரம்பித்தது.



அதுவும் அவனது பலத்தை இப்போது நேரில் கண்டு இருக்கிறாள். எளிதாக 100 கிலோ பளுவை அசால்டாக தூக்கி கீழே போட்டு இருக்கிறான், பஞ்சை தூக்குவது போல. பலசாலிகள் தரவரிசையில் இவன் கண்டிப்பாக இடம் பிடிப்பான், அதில் மட்டுமா, வில்லசாலிகள் தரவரிசையில் அவன் முதல் இடத்தை பிடிப்பான், அவளைப் பொறுத்தவரை.

கையில் ஒரு டவலை எடுத்துக் கொண்டவன், அவள் நெற்றியில் வழிந்த வேர்வை துளிகளை, மென்மையாக துடைத்துவிட எத்தனிக்க, அவள் அவனது கையைத் தட்டிவிட்டான்.


"சீ ! கையை எடு " என்று கிறீச்சிட, அவளது கைகள் அடுத்த நொடி அவன் பிடியில். ஒல்லியாக இருப்பதாய் பற்றி அவளென்றுமே கவலை கொண்டதில்லை. ஒல்லியாக இருப்பது வரம் என்று எண்ணி இருக்கிறாள்.


ஆனால் இன்று அதற்கு வருத்தப்படுகிறாள். பின்ன,எளிதாக அவனது கைவிலங்கில் அவள் மெல்லிய கைகள். அதுவும் அவன் அழுந்தப் பிடித்த விதம், அவளுக்கு மணிக்கட்டில் வலி உயிர் போனது. அவனோ புன்னகைத்து கொண்டு அவள் கையைப் பிடித்து கொண்டு இருக்க, அவள் வலியுடன் அவனிடம் இருந்து திமிறப் பார்த்தாள்.


நிதானமாக அவளது நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தவன்,


"யாராச்சும் நல்லது செய்ய வந்தா, இப்படி தான் பிஹேவ் பண்ணுவியா ! பேட் மென்னேர்ஸ் ஹனி பன்ச் ! உனக்கு பல விஷயங்கள் நான் சொல்லி கொடுக்க வேண்டிருக்கே" என்று கேலியாக, இருபொருள் படிந்து அவன் கூறியவை அவள் காதில் நாராசமாக ஒலிக்க, தன் காதுகளை மூட முடியாதபடி அவள் கைகள் அவன் பிடியில்.




"என்னை ஹனி பன்ச்ன்னு கூப்பிடாதே ! இட்ஸ் இரிடேட்டிங் " என்று அவள் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து அவன் கைப்பிடியில் இருந்து கொண்டே, சண்டையிட்டாள்.


கையில் இருந்த டவலை தூர எறிந்தவன், அவள் இதழ்களைக் கட்டை விரலால் மென்மையாக வருடி,

"அஸ் சுவீட் அஸ் ஹனி ! " என்று தேன் இதழ் மென்மையை இதழ் தீண்டி உணர விரும்பினான். அவன் விருப்பம், அவன் செய்கை.


அவனுள் அவள் இதழ் அடங்க, அவளை தன்னுடன் இறுக்கி கொண்டான். அவனும் அவளும் வேறில்லை போல் அந்த அணைப்பு இருக்க, அவள் இதழ்களை அவன் அமுதசுரபியாக அவன் பாவிக்க, அந்த க்ஷ்ண நேர இதழ் அணைப்பு, நொடிகள் தாண்டி, நிமிடங்களை தாண்ட, அவளை பிரிய விரும்பாது, தன் சுவாசத்தை அவளுக்கு கொடுத்து, அவளைப் பிரியவே கூடாது என்று இருக்க அவன் முயல, அவள் கண்ணில் இருந்து கோபம், ஆத்திரம், இயலாமை என்ற மூன்று வெவ்வேறு உணர்வுகள் கண்ணீராய் அவனுள் கலக்க, அவளை விடுத்தான்.



விடுத்தான் என்று சொல்வதை விட, அவளை தன்னிடம் இருந்து வேகமாக, கோபமாகப் பிரித்து, கிட்டத்தட்ட தள்ளிவிட்டான்.


அவள் நிலைதடுமாறி தன்னை சீர் செய்து கொண்ட அதே நேரம் அவளுக்கு முதுகு காட்டிக்கொண்டு இருந்தவன், தன் அறைக்குச் சென்று சில காகிதங்களை எடுத்து அவள் மீது விட்டெறிந்தான்.



"நீயே சைன் பண்ணின டாகுமெண்ட்ஸ்! " என்று கூறிவிட்டு அவளது தாடையை இறுக்கப் பிடித்தவன்


"அவ்வளவு சீக்கிரம் உன்னை இங்கிருந்து போக விடுவேன்னு நினைக்காதே. அந்த ஷிம்லா இன்சிடெண்ட் உன் வாழ்க்கையை இப்படி எல்லாம் மாத்திருக்குன்னு ஒவ்வோர் நாளும் நீ கதறி கதறி அழணும், வைப்பேன்" என்று கர்ஜித்துவிட்டு, வெளிய சென்றவன், கதவுக்கு அருகில் இருந்து கொண்டு,



"அப்பறம் உன்னால ரஞ்சன் கிட்ட ஹெல்ப் கூட கேக்க முடியாது! அந்த பப்பி லவ்வரை, நக்ஷத்திரா ஹேட்டரா ஆக்கியது நான் தான்" என்று சொல்ல, அவள் இருந்த நிலையில் அவனை குழப்பத்துடன் நிமிர்ந்து பார்க்க



"என்ன முழிக்கறே!மோதிரம்..கவிதை..யார் அனுப்பிச்சாங்கன்னு நினைக்கறே?" என்று ஏகத்தாளமாக வினவ, அவளுக்கு அது யார் வேலை என்று புரிய, அவள் வெறுப்பாக



"நீ இவ்வளவு கீழ்தரமானவனா!ஐ ஹேட் யூ! பணம் இருக்கறனால தானே இப்படி எல்லாம் செய்யறே! ஒருநாள் எல்லாம் உன்னை விட்டு போகும். நீ அனாதையா ஆகிடுவே!


உனக்கு பிடிச்சதை இழந்து நீ, இன்னிக்கி நான் இருக்கற நிலையில் இருப்பே" என்று பின்னாளில் நடக்க கூடிய ஒன்றை அவள் சாபமாக உரைக்க அவன் பெரிய சிரிப்பு ஒன்றை சிரித்து



"உன் சாபம் பலிக்க வாழ்த்துக்கள் ஹனி பன்ச். அப்பறம் புத்திசாலியா போலீஸ் கிட்ட போனாலும் ஒன்னும் செய்ய முடியாது. வருங்கால வக்கீலுக்கு ஸ்டாம்ப் பேப்பர் கையெழுத்து பத்தின வெயிட்டேஜ் தெரிஞ்சு இருக்கும்ன்னு நம்பறேன். " என்று அவன் கூறிய போது அவள் அந்த பத்திரக் காகிதங்களை வெறித்து நோக்கினாள்.


சொடக்கிட்டு அவளை அழைத்தவன்



"சட்ட ரீதியா நீ எனக்கு கட்டுப்பட்டவள். நானா உன்னை இங்கிருந்து போக சொல்லற வரை, நீ இங்க தான் அண்ட் எனக்கு அந்த ஐடியாவே இல்ல. போ, போ போய் குளிச்சிட்டி நான் உனக்கு ஆசையா வாங்கி வச்சு இருக்கற ட்ரெஸ் போட்டுக்கிட்டு வா! டோன்ட் மெஸ் வித் மி!" என்று இது தான் உன் விதி என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.


அவன் சென்றதை அவள் உணரவே இல்லை. அவள் பார்வை அந்த பத்திரக் காகிதங்களை மீது தான் இருந்தது. அவளது இந்த இழிநிலைக்கு அவன் தானே காரணம்.


அன்று ஷிம்லாவில், அவனை அறைந்த அன்று, படப்பிடிப்பு குழு முழுவதும் ஸ்தம்பித்து இருக்க, அவன் அவளை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு தன் கேராவானுக்குள் சென்று விட்டான். அவன் பின் சூர்யாவும் ஆனந்தும்.



பார்வதி பதைப்பதைத்து கொண்டு ஓடிவர, நக்ஷத்திரா இன்னும் கோபமாக தான் நின்று கொண்டிருந்தாள். என்ன காரியம் அவன் செய்ய போனான், இத்தனை பேர் நடுவில். கிறுக்கனா அவன்? எல்லாம் திமிர், படத்தின் நாயகன் என்ன செய்தாலும் நியாயம், அதே ஒரு நாயகி செய்தால் அவள் திமிர் பிடித்தவள்.



திமிர் பிடித்தவளாகவே இருந்து விட்டு போகிறேன் ஆனால் நான் செய்ததற்கு வருந்த மாட்டேன் என்று அவள் தன் பிடியில் நின்றாள். பார்வதி எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை.


"அவன் என்ன செய்ய போனான்னு பார்த்தீங்க தானே! நீங்களே இப்படி சொல்லறீங்களே! ரொம்ப வருத்தமா இருக்கு. உங்க பொண்ணோட மானம் போகற மாறி செய்ய போனான், அது சரியா அப்போ!" என்று அவள் சீற, பார்வதி வேறு வழி இல்லாது அவனது காராவனுக்குள் சென்றார் தயங்கித் தயங்கி.


அவரைத் துச்சமாக ஆனந்த் பார்க்க, அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை, அவர்.


"தம்பி! அவ சின்ன பொண்ணு, தெரியாம செஞ்சிட்டா. அவளுக்காக . …" என்று அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்னே, துருவ்



"நீங்களே இந்த வேனை விட்டு போயிட்டா பெட்டர்" என்று இறுக்கமாகக் கூற, பார்வதி



"சாரி தம்பி. நீங்க இப்போ இருக்கற.." என்று மீண்டும் ஆரம்பிக்க, சூர்யா



"கொஞ்சம் வெளியே வாங்க, என் கூட" என்று அவரை அழைத்துக் கொண்டு சென்று,



"சார் அவ்வளவு ஈஸியா மன்னிக்க மாட்டார். நீங்க இங்கிருந்து கிளம்புங்க" என்று சொல்ல, பார்வதிக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றியதோ


"அவர் செஞ்சது அப்போ சரியா?" என்று கேட்க, சூர்யா


"உங்களை இங்கிருந்து கிளம்புங்கன்னு சொன்னேன்" என்று அவனும் அதிகாரமாக பேசுவிட்டு சென்று விட்டான்.


பார்வதிக்கும் கோபம் வந்தது. தன்னை விட சிறியவன் இவன், அந்த துருவ். கொஞ்சம் கூட மரியாதை இல்லாது அவரிடம் நடக்க, அவரும்



"செருப்பாலே அவ அடிச்சு இருக்கணும்" என்று சத்தம் போட, சென்று கொண்டிருந்த சூர்யா திரும்பினான்.



"என்ன ரொம்ப சவுண்ட் வுடரே?" என்று அவனும் தன் பங்கிற்கு ஆரம்பிக்க, அங்கே பார்வதிக்கும், சூர்யாவிற்கும் வாய்ச் சண்டை துவங்க, அவர்களைச் சுற்றி கூட்டம் கூட, துருவ் இந்த கூச்சலை கேட்டவன் ஆனந்தை அனுப்பி என்ன ஆயிற்று என்று பார்க்கச் சொன்னான்.



ஆனந்த், யார் என்ன பிரச்சனையை ஆரம்பித்தது என்று தெரியாது, அவனும் இந்த பிரச்சினையில் குதித்தான். ஒரு கட்டத்தில் வாய்ச் சண்டை கைச் சண்டை ஆகி, ஆனந்த் பார்வதியைத் தள்ளி விடப் பார்க்க, அவன் அவரிடம் இருந்து அறை வாங்கினான்.


இத்தனைக்கும் நக்ஷத்திரா அங்கே இருந்தாள், இவர்கள் சவகாசமே வேண்டாம், இங்கிருந்து போகலாம் என்று பார்வதியிடம் எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் கேட்காது சண்டை போட்டார்.


அடி வாங்கிய ஆனந்த்,


"இந்த பொம்பளைய இங்கிருந்து அடிச்சு துரத்துங்கடா" என்று கத்த, அவனது உதவி இயக்குனர்கள் பார்வதி மற்றும் நக்ஷத்திராவை சூழ, பார்வதி அவர்களிடமும் சண்டை இட தயாராக தான் இருந்தார். ஆனால் நக்ஷத்திரா இடையே புகுந்து



"நாங்க கிளம்பிக்கிட்டு தான் இருக்கோம். யாராச்சும் என் அம்மா மேலே கைய வச்சீங்கன்னா பாருங்க!" என்று ஒற்றை விரலைக் காட்டி எச்சரித்து, பார்வதியிடம்


"வாங்க, போகலாம்" என்று அந்த இடத்தை அப்போதே விட்டாள்.


அந்த ஷிம்லா படப்பிடிப்பு ரத்தானது. அந்த படப்பிடிப்பு தான், அந்த படத்தில் நக்ஷத்திராவின் கடைசி படப்பிடிப்பு. அந்தப் பாடலில் ஒரு சரணத்தை மட்டும் வைத்து கொண்டு, மற்ற சரணம் இல்லாது படத்தில் சேர்த்தனர். ஏனென்றால் அவளுக்கு பதிலாக அவளை போல் நகல் கிடைக்கவில்லை. நக்ஷத்திராவிற்குக் கொடுக்கப்படவேண்டிய மீதி பணமும் கொடுக்கப்படவில்லை.



அதை கேட்டு, தயாரிப்பாளர் ராவ்வின் அலுவலகம் செல்ல அவளுக்கு நேரிட்டது. ஆனால் ராவ் அவளை சந்திக்கவில்லை.



"மீதி பணமெல்லாம் கொடுக்க முடியாது. உன் நடிப்புக்கு கொடுத்ததே அதிகம்" என்று ராவ்வின் ஒரு அல்லக்கை அவளிடம் கூற, அவள் காண்டானாள்.



"என்ன! திமிரா! ஒழுங்கா மீதி பணம் கொடுக்காம, ஏமாத்தலாம்ன்னு பார்க்கறியா! அக்ரீமெண்ட்டில் இருக்கு. போய் உங்க பாஸ் கிட்ட சொல்லு" என்று அவளும் விடவில்லை. அவளது இந்த சூடான பேச்சில் ராவ் தன் அறையில் இருந்து வெளியே வந்து,



"என்னடி திமிரா? உன்னால எனக்கு வந்த நஷ்ட கணக்கு காட்டவா? அதுக்கு நான் போலீசுக்கு போனா, நீ ஜென்மம் முழுக்க ஜெயில் தான்" என்று அவரும் சீற, நக்ஷத்திரா


"என்ன நஷ்டம்? உங்க கிட்ட போட்ட அக்ரீமெண்ட் படி என் கால் ஷீட் இருந்தது. என்னோட ஷூட்டிங் டேய்ஸ் இல் நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருந்தேன், ஷூட் பண்ணினேன். சும்மா வுடாதீங்க, அப்பறம் டி போட்டு பேசினா, மரியாதை கெட்டிரும்" என்று அவளும் எகிறினாள்.



ராவ் அதில் காண்டாகி,


"ஷிம்லாலே நீ பண்ணின குளறுபடி, உன்னால அந்த பாட்டு முழுசா ஷூட் பண்ண முடியல. அந்த ட்ரிபிக்கான காசு, பாட்டு ரிகார்டிங், இப்போ எடிட்டிங்..அதுக்கெல்லாம் யாரு உங்கப்பனா பணம் தருவான்? உன் கழுத்தை பிடிச்சு வெளிய தள்ள முன்ன, நீயே போயிடு." என்று ஒரே போடாக போட, நக்ஷத்திரா வாயடைந்து போனாள்.


அவளுக்கு இவ்வளவு தூரம் எல்லாம் பட சம்பந்தப்பட்ட பண விஷயங்கள் தெரியாது.


"எல்லாம் அந்த துருவ் கடங்காரனால் வந்தது" என்று அவனைத் திட்டி தீர்த்தபடி வீடு வந்தாள். பார்வதியின் முதல் கட்ட சிகிச்சைக்கு, அந்தப் பணத்தை அவள் மிகவும் நம்பிருந்தாள். அவருடைய அறுவை சிகிச்சைக்கு 2 நாட்கள் இருக்க, அதற்குண்டான பண ஏற்பாட்டைக் கவனிக்க பெரும் பாடு பட்டாள்.



முன்பு வீட்டு செலவுக்கு வாங்கிய கடனை கொஞ்சம் இப்போது தான் அடைத்து இருந்தாள். இதில் அறுவை சிகிச்சை செலவெல்லாம்...வீட்டுச் செலவை விட அதிகம். ஏற்கனவே யாரிடம் முன்பு கடன் வாங்கிய வரதராஜன் என்பவரிடம், மீண்டும் கடன் கேட்க செல்ல, அவரோ


"இன்னும் பாக்கி வச்சு இருக்கே, என்ன புது படம் ரிலீஸ் ஆகலியா?" என்று விசாரிக்க, அவள்



"இப்போ வேற ஒரு அர்ஜெண்ட் செலவுங்க, உங்க பணத்தை சீக்கிரம் அடைக்கறேன்" என்று உறுதிமொழி கொடுத்து பணம் பெற்று கொண்டாள்.


அறுவை சிகிச்சை ஆயிற்று. அவளிடம் இருந்த கொஞ்ச பணம், கடன் வாங்கிய பணத்தை வைத்து ஒருவாறு செலவுகளைச் சமாளித்தாள். அறுவை சிகிச்சை முடிந்து தேறிய பின், கீமோ என்ற கதிரியக்க சிகிச்சை பார்வதிக்கு.


அதற்கு அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. பார்வதி


"போதும் தாரா! இப்படியே காலத்தை ஒட்டறேன். நீ ஏன் வளர்த்த பாசத்துக்கு கஷ்டப்படறே" என்று கண்ணீர் உகுக்க, நக்ஷத்திரா விளையாட்டாக


"என்ன ஆச்சு பார்வதி அம்மையாருக்கு! இப்ப எல்லாம் ரொம்ப சாஃப்ட்டா பேசறீங்க! அடியே நக்ஷத்திரா தான் உங்களுக்கு பொருந்தும், இந்த தாரா வேணாம்" என்று சமாளிக்கப் பார்க்க அவளது கைகளில் முகம் புதைத்தார்.



"வேணாம் தங்கம். எனக்காக நீ நிறைய கஷ்டபற. பாரு உன் கை எல்லாம் சொர சொரனு. உன் வயசு பொண்ணுங்க மாறி ஏண்டி உன் வாழ்க்கை இல்லே. காலேஜ் போய், படிச்சு, கொஞ்சம் ஊரு சுத்தினு இல்லாம..ஏன் இப்படி உன்னை நான் படுத்தி எடுக்கறேன். நான் சீக்கிரம் செத்து போகணும் தாரா! உனக்கு அது தான் விடுதலை. " என்று பெரிதாக அழ, நக்ஷத்திராவின் கண்களிலும் நீர்.



தன்னை சீர் செய்து, பேச மிகவும் கஷ்டப்பட்டு முடிவில்


"என்னை பெத்த அம்மா நான் வேணாம், நீயே உன்னை பார்த்துக்கே. எனக்கு என் பிரச்சினை தான் முக்கியம்னு தற்கொலை பண்ணிக்கிட்டு போயிட்டாங்க. அப்போ ஏன் பண்ணினாங்க, ஏன் என் மேலே அவங்களுக்கு இவ்வளவு வெறுப்புன்னு தெரியல.


அப்போ நான் அனாதை ஆசிரமத்தில் போய் சேரலை. பார்வதி அம்மா, எனக்கு அம்மாவானாங்க. உனக்கு நான், எனக்கு நீ ன்னு சொல்லி என்னை அவங்க கூட வச்சு கிட்டாங்க. ஒரு நாள் கூட பசியில் வாட விடலே. அவங்க சாப்பிடாட்டியும், எனக்கு கடனை உடனை வாங்கி சாப்பாடு போட்டு, படிக்க வச்சு இப்ப இவ்வளவு தூரம் என்னை வளர்த்து விட்டாங்க. அப்போ அவங்களுக்கு கான்சர் வரும்ன்னு தெரியாது.


அவங்க கோபகாரங்க, தைரியமானவங்க, பாசத்தை வெளிப்படையாக காட்ட தெரியாது. அவங்க எப்படி இருந்தாலும் என்னோட அம்மா பார்வதி அம்மா தான்.


சுகத்துக்கு புள்ளைய பெத்திட்டு, அம்போன்னு விட்டிட்டு போறவ அம்மா இல்ல. அந்த குழந்தையோட சுக துக்கத்தில் கூட இருந்து வளர்க்கறவ தான் அம்மா. உங்க வயத்தில் நான் பொறக்கலே, அவ்வளவு தான்.


இது கடமைக்காக இல்ல, அம்மான்னு நான் உங்களை மனசார கூப்பிடறேன். எனக்கு உங்களை விட்டா யாருமா? இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் உங்க சொந்த பொண்ணா இருந்தா, இப்படி சொல்வீங்களா?" என்று தழுதழுக்க கேட்டு முடிக்க, அவர் உடைந்து போய் விட்டார். தன் தங்கை செய்த முட்டாள்தனம், இவளை எவ்வளவு தூரம் பாதித்து இருக்கிறது என்று எண்ணி மனம் புழுங்கினார். இம்மாதிரி ஒரு நல்ல பெண்ணுடன் வாழாது போய் விட்டாளே என்று மனம் வருந்தினார்.



அழும் பார்வதியை தேற்ற முடியாது நக்ஷத்திரா திணறி போனாள். அவர் படுத்து கொண்டு இருக்கும் உயரத்திற்கு முட்டி போட்டு கொண்டவள்


"உங்களுக்கு நான், எனக்கு நீங்க இன்னும் மாறலே அம்மா, ப்ளீஸ் என்னை யாரையும் தெரியாது. என்னை நீங்க விட்டு போனா..எப்பவும் நான் அனாதை தான்" என்று அவள் கூறவும், அவர் சற்று அடங்கினார்.


அவரைத் தானும் அழ வைத்து விட்டோமோ என்று அவள் ஒரு நிமிடம் திகைத்து வருந்த, பார்வதி கண்களைத் துடைத்துக் கொண்டு



"இருந்தாலும் நீ ரொம்ப கஷ்டப்படறே" என்று சொல்லாது இல்ல. அவர் வாயில் கையை வைத்து பொத்தியவள்,


"என் அம்மாக்காக என்ன வேணாலும்" என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டாள். அவளுக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை. துருவ்வை அடித்தது, அவளது திரைப்பட வாழ்விற்கு முழு ஆப்பு வைத்து விட்டது. திரைப்பட வாழ்விற்கு அவள் எப்போதடா முழுக்கு போடுவோம் என்று தான் இருந்தாள். அது நிகழ்ந்தது ஆனால் அவளுக்கு பணம் மிகவும் தேவைப்படும் நேரத்தில்.


ரஞ்சனுடனான படம், இப்போதைக்கு ஆரம்பிக்காது என்று சொல்லி விட்டனர். அவனுடனான விளம்பர படத்தில் இருந்து அவள் தூக்கப்பட்டாள். அது துருவ்வின் கைங்கரியம் தான். எந்த தயாரிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றாலும் அவளை முதலில் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அவளுக்கு அப்படி ஒரு பெயர்.



மனம் வெறுத்தவள், வீட்டுச் செலவுக்கு ஏதேனும் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு ஒரு வயதான எழுத்தாளரிடம் வேலைக்கு சேர்ந்தாள். அவரது ஆங்கிலக் கதைகளைக் கணிணியில் தட்டச்சு செய்து சேமிக்கும் வேலை.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருநாளில் 4 மணி நேரம் செய்ய கூடிய பகுதி நேர வேலை. அதில் கொஞ்சம் வருமானம். ஆனால் அவள் இருக்கும் நிலையில், அது யானை பசிக்குச் சோளப் பொரி தான்.



பணம், பணம் என்று அலைந்தாள். கதிரியக்கச் சிகிச்சைக்கு அந்த எழுத்தாளரிடம் கொஞ்சம் கடன் கேட்டு விட்டு வீடு வருகையில் அவளுக்கு ஏற்கனவே கடன் கொடுத்த வரதராஜன் அவள் வீட்டில்.



"என்னமா? வட்டி கட்டாம எங்க சுத்திக்கிட்டு இருக்கே?" என்று எடுத்த உடனே கேவலமாக கேட்க, அவள் வெகுண்டு எழ,



"சார்! கடன் வாங்கிருக்கேன். இல்லன்னு சொல்லலே. அதுக்காக கேவலமா பேசாதீங்க. வேலைக்கு போயிட்டு இப்போ தான் வரேன். உங்க வட்டி நாளைக்கு வந்து கட்டறேன். " என்று பதிலடி கொடுக்க, வரதராஜன்



"வேலைக்கு தான் போறியே! அப்போ முழுசா கடனை அடைக்க பாரு! " என்று அவளது நலுங்கிய தோற்றத்தை ஒரு மாதிரி பார்க்க, நக்ஷத்திராவிற்குச் சக்தி இருந்தால், வரதராஜன் மீது வால் நட்சத்திரமாக வீழ்ந்து எரித்து இருந்திருப்பாள்.


"வட்டி கேட்டு நீங்க இங்க வர வேண்டாம். நான் வந்து ஒவ்வொரு மாசமும் கட்டறேன். இப்போ கிளம்பறீங்களா?" என்று அவனை வெற்றிகரமாக வெளியேற்றினாள். அவனை வெளியேற்றிவிட்டு ஓய்ந்து போய் நாற்காலியில் அமர்ந்து விட்டாள். திரைப்படத் துறையில் பெண் ஒருத்தி வேலை செய்தால் என்னவெல்லாம் மக்கள் கற்பனை செய்கிறார்கள். அதுவும் ஒரு வேலை தானே. அதுவும் சமீபமாக, பட வாய்ப்பு இல்லாத நாயகிகள் வேறு மாதிரி செய்திகளில் அடி பட, அந்த நினைப்பில் எல்லோரும் அதே போல் என்று நினைப்பது எவ்வளவு கேவலம்.



நல்ல விதமாக உலகைச் சிந்திக்க வைக்க ஒருவன் எவ்வளவு பாடு பட வேண்டி இருக்கிறது, அதே நேரம் கெட்ட விதமாக ஒருவனைச் சிந்திக்க வைக்க எவ்வித முயற்சியும் எடுக்க வைக்க வேண்டாம். வேலைக்குச் சென்று விட்டு களைத்து வீடு திரும்பி இருக்கிறாள், ஆனால் வரதராஜன் பார்வையில் அவள்?


'என்ன மனிதன் இவன், முதல் வேலையாக இவன் கடனை அடைத்து ஒழிக்க வேண்டும்' என்று கருவிக் கொள்ள, அடுத்த நாள் வேறு விதமாய் அவளுக்கு விடிந்தது. அந்த எழுத்தாளர் திடீரென இயற்கை எய்தினார். அது அவரது வீட்டினரை போல் அவளுக்கும் பெருத்த அடி. அவரை நம்பி, பார்வதியை மருத்துவமனையில் வேறு சேர்த்து விட்டாள்.



வரதராஜனுக்குக் கொடுக்க வேண்டிய வட்டியை அவள் கொடுக்கத் தவற, அது பெரிய ரகளையில் கொண்டு போய் முடிந்தது. அவன் ஆட்கள் வீட்டுக்குள் நுழைந்து அவர்கள் சாமான்களை எடுத்து வெளியே போட்டு துவசம் செய்ய, நக்ஷத்திரா எவ்வளவு அவர்களிடம் கெஞ்சியும் எடுபடவில்லை.


வேறு வழி இல்லாது வரதராஜனிடம் சென்று தனக்கு இன்னும் சமயம் கொடுக்கும் படி வேண்ட, அவன் அவளை வக்கிரமாக பார்த்து



"சின்ன வயசு. உன்ன பார்த்தாலும் பாவமா இருக்கு. ஆமா கிழவி திடீர்ன்னு புட்டுகிட்டா என்ன செய்வே? யாரும் இல்லாம தனியா...நினைக்கவே கஷ்டமா இருக்கு. அதுவும் நீ அழகான பொண்ணு, செல்லம். உலகம் மோசம் கண்ணு. ஆம்பள துணை இல்லாம இருந்தா, வேற மாறி பேசும்.


எனக்கு 46 வயசு தான் ஆகுது. வீட்டுல பொண்டாட்டி, பிள்ளைங்க இருக்காங்க, இருந்தாலும் என்னவோ ஒன்னு இல்லாத பீலிங்.. " என்று சொல்லி அவள் தோள் மீது கை வைக்க, நக்ஷத்திரா வெகுண்டு எழுந்து அவனை அறைந்தாள்.


"சீ! உன் பொண்ணு என்னை விட 2 வயசு சின்னவ. அவ கிட்ட யாராவது இந்த மாறி பேசினா என்னடா செய்வே. உன் கடனை நாளைக்கே அடைக்கறேன்" என்று சீறி விட்டு செல்லும் போது அவன்



"நாளைக்கே அடைக்க, ஒன்னு நீ பேங்கை கொள்ளை அடிக்கணும். இல்ல, உன்னை மாறி நடிகைங்க செய்யற ஒன்னு...பழைய தொழில்" என்று அவளை பார்த்து ஆங்காரத்துடன் கூற, அவள் அவனை விடாது



"அது தப்புனா, அங்க போற உன்னை மாறி ஆம்பளைங்க? உத்தம புருஷர்களோ. நீங்களும் அதே தொழில் தான் செய்யறீங்க" என்று தகுந்த பதிலடி கொடுத்துவிட்டு தான் வந்தாள்.


பணம் சுத்தமாக தீர்ந்து போனது, வேலையும் இல்லை. பார்வதிக்கு சிகிச்சை செய்தே தீர வேண்டும் என்ற நிலை. என்ன செய்வது என்று அறியாது இருந்தவளுக்கு தனது முதல் படத்தின் தயாரிப்பாளர் ஞாபகம் வந்தது. அவர், ராவ் போல அல்ல, நல்லவர் அப்படி தான் நம்பி அவரைப் பார்க்க சென்றாள்.


அவர் பணத்தை நேரிடையாக கொடுக்காது, அவளிடம் ஒன்று கேட்டார். அந்நேரம் அது அவளுக்கு அது தவறாகத் தோன்றவில்லை. ஆகையால் அவரை காண சென்றாள். அதற்குள் துருவ் வந்தான். படத்தில் நாயகன், நாயகியை காப்பாற்ற வருவது போல்.


காப்பாற்றினானா என்று கேட்டால், ஒரு விதத்தில் காப்பாற்றி, இன்னொரு சிறையில் அடைத்து வைத்திருக்கிறான். உரிமையாக அவளிடம் வம்பு வளர்க்கிறான், தீண்டுகிறான். அதெல்லாம் அவளுக்கு அறவே பிடிக்கவில்லை. அவனிடம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் ஏதேனும் ஒரு விதத்தில் அவளைப் பாதிக்கிறான். அவனையே நினைக்க வைக்கிறான்.


ஆனால் அதே நேரம் அவனருகில் அவள் பாதுகாப்பாக உணர்கிறாள். அதை ஒத்துக்கொள்ள தான் அவளுக்கு மனமில்லை. கடந்த வாரம் வெளியே சென்று தனக்கு வேண்டுகின்ற மாதாந்திர சாதனம் ஒன்று வாங்க அவள் முற்பட, அவன் அவளைக் கூட்டிக் கொண்டு சென்றான். முதலில் அவன்


"ஆர்டர் செஞ்சா வர போகுது" என்று நல்லவிதமாக கூறினான். மழை வேறு இப்போதோ, அப்போதோ வர இருக்க இவளோ


"எனக்கு நானே வெளிய போய் தான் வாங்கணும்" என்று பிடிவாதம் பிடித்தாள். அவளுக்காக அவளைக் காரில் கூட்டிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் சற்றே பெரிய பல் பொருள் அங்காடிக்கு அழைத்து சென்றான்.


வெளியே காரில் அவன் காத்திருக்க, இவள் மருத்துவ உபகரண முகமூடியை அணிந்து கொண்டு சென்றாள். ஏன் என்று அவன் வினவிய போது



"நான் இன்னும் நிறைய பேருக்கு நடிகை நக்ஷத்திரா தான்" என்று கூறி விட்டாள். கடைக்குள், சற்று மேலே வைத்திருந்த அவளுக்கு வேண்டபட்டச் சாதனத்தை இவள் எடுக்க முற்பட, இவளது உயர குறைவினால் மேலே வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருட்கள் கீழே விழுந்தன. அதில் அவள் தடுமாறி கீழே விழ, அவளது முகமூடி முகத்தில் இருந்து கீழே இறங்கி அவள் யாரென்று உலகிற்கு அடையாளம் காட்ட, மக்கள் அவளைச் சூழ துவங்கினர்.



அதில் ஆண்மக்களும் உண்டு. ஒரு சிலர், ரசிகர்கள் என்ற பேரில் அவளை சூழ்ந்து அவளை இம்சித்து, அவளை தீண்ட அந்த கூட்டத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாது அவள் தடுமாறிப் போனாள்.



அப்போது அவனே இவள் ஏன் இவ்வளவு நேரமாகியும் வரவில்லை என்று உள்ளே நுழைந்தான். தன்னை மறைத்து கொள்ளவே இல்லை. உள்ளே நுழைந்து, அவளைச் சுற்றிய கூட்டத்தைக் கடந்து, அவள் கையைப் பிடித்து தைரியமாக இவள் என்னவள் என்பது போல் எல்லோர் முன்னிலும் கூட்டிக் கொண்டு சென்றான். அதை படம் பிடித்த ஒருசிலர், இணையத்தில் போட, அன்றைய தலைப்பு செய்தி அது தான்.


'நடிகர் துருவ் மற்றும் நடிகை நக்ஷத்திரா சேர்த்து வாழ்கின்றனரா ?' என்ற ரீதியில் பல செய்திகள். அந்த கேள்விகள் அவன் தன் பட விழாவில் கலந்து கொள்ள சென்ற போதும் தொடர்ந்தது.



"சார் ! நீங்களும் நக்ஷத்திராவும் சேர்த்து ஐ மீன் லிவ் இன் ரிலீஷேனில் இருக்கீங்களா ?" என்று பத்திரிகையாளர் ஒருவர் அவனிடம் கேட்க, அவன் நிதானமாக


"உங்களுக்கு கல்யாணம் ஆயாச்சா ?" என்று வினவினான். இது ஏதாடா சம்பந்தம் இல்லா கேள்வி என்று அவன் நினைத்தாலும் அவன்,


"ஆயாச்சு" என்று பதில் உரைக்க, துருவ்


"அப்போ உங்க மனைவி கூட நீங்க எத்தனை முறை….." என்று ஒரு தனிப்பட்டக் கேள்வி கேட்க, அவன்


"இது அக்கிரமம் ! எப்படி என் பெர்சனல் லைஃப் பத்தி நீங்க கேக்கலாம் . நான் ஒரு கேஸ் போடுவேன் உங்க மேலே , இந்த மாறி பொதுவில் என்னை அசிங்கப்படுத்தற மாறி கேள்வி துருவ் கேட்டார்ன்னு" என்று படபடப் பட்டாசாக பொரிய, துருவ்


"அப்போ நான் என்ன கேஸ் உங்க மேலே போட ? லுக் இது என்னோட பட ப்ரோமோஷன் மீட். உங்களுக்கு உங்க பெர்சனல் லைஃப் எவ்வளவு முக்கியமோ, அது மாறி எனக்கு. எதுக்கு நக்ஷத்திராவை இதில் இழுக்கறீங்க ! இங்க என் படம் சம்பந்த பட்ட கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். நோ யூர் லிமிட்ஸ்.

இதே நான் கத்தி கூப்பாடு போட்டிருந்தா, நடிகர் துருவ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கார சாரம்னு நியூஸ் போட்டு என்னோட கோபமான போட்டோவை ப்ளோ அப் பண்ணி போட்டு உங்க பத்திரிகை வியாபாரத்துக்கு என்னை பலி ஆக்கி இருப்பீங்க ! உங்க போதைக்கு நான் ஊறுகாய் இல்ல. நெஸ்ட் கொஸ்டின் ஒன்லி அபோட் மை மூவி" என்று பேசி முடித்தான். அதை அவள் இணையத்தில் பார்த்தாள், வெறுப்புடன்.


இந்நாள் வரை அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நல்லபெயர் இவனால் போய் விட்டது என்று கோபம் கொண்டாள். யார் என்ன சொன்னாலும், இவள் இவனுடன் தான் சேர்ந்து இருக்கிறாள் என்று மக்கள் நினைப்பர், நம்புவர் என்பது அவளது தீர்மானமான நம்பிக்கை. அன்று அவளைப் பாதுகாத்தவன் அதை இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறான். அந்தக் கடைச் சம்பவம் கழிந்து, இவளை தன்னுடைய பண்ணை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்து விட்டான். சென்னையில் இருக்கும் அவன் வீட்டின் முன் ஏதேனும் கிசுகிசு கிடைக்குமா என்று அங்கே குழுமி இருந்த பத்திரிக்கையாளர்கள் காரணம் இதில்.


இந்த பண்ணை வீடு அதிகமாக யாருக்கும் தெரியாது. இங்கு வந்த பின் தான் அவனுடைய பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. தன்னை இழிவாக தனக்கு அக்கம் பக்கத்தில் தெரிந்தவர்கள் கூட நினைப்பர் என்ற கோபம் கனல்விட்டு எரிய, அவனது சட்டையில்லா ஒரு புகைப்படத்தை அவள் பத்திரிகையில் பார்த்தாள். அவனை நிஜ வாழ்வில் சுக்கு நூறாக கிழித்து எறிய முடியா கோபத்தில் அந்த பத்திரிகையைச் சுக்கு நூறாக கிழித்தாள்.


"கணவன் மட்டும் காணும் அழகைன்னு பாடுவாங்க இப்படி ஒரு பொண்ணு போஸ் கொடுத்தா , ஏன் பொண்டாட்டி மட்டும் காணும் அழகைன்னு இதுக்கு யாரும் பாட்டு எழுத மாட்டாங்களா ! ப்**** ஷாவின்ஸ்டிக் பி***" என்று அவன் முன்னே எல்லா ஆண்களை முக்கியமாக அவனையும் திட்டி தீர்த்தாள்.





அதை கேட்டவன் அவளை அப்படி ஒன்றும் சும்மா விட்டிருப்பானா என்ன ? அவள் கூறிய வார்த்தைகள் வரம்பு மீறிய வார்த்தைகள். அவனுக்கு அவள் யாராக இருந்தாலும் அது நல்ல வார்த்தைகள் கண்டிப்பாக அல்ல.


அவனது வீடு முழுவதும் அவனது சட்டையில்லா புகைப்படங்களை ஒட்டி வைத்து, அவளிடம் காண்பித்து,


"இப்போ கிழி ! நீ கிழிக்க கிழிக்க இன்னும் போட்டோஸ் ஒட்டுவேன்! ட்ரை இட் ஹனி பன்ச்" என்று சவால் விட்டான். அவன் அந்த வீட்டுக்குள் எங்கு திரும்பினாலும் அவனது புகைப்படம் தான். அவள் அவனை எதிர்த்து 1 அடி எடுத்து வைத்தால், அவனோ அவளுக்கு 100 அடிகளுக்கு சவால்கள் வைக்கிறான். அவனை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆயினும் அவள் தன் எதிர்ப்பை கொஞ்சம் கூட நிறுத்தவில்லை, கோபத்தையும் தான்.



இவ்வளவு எல்லாம் அவனை எப்படி எதிர்க்க வேண்டும் என்று யோசிப்பவள், அவள் இத்தனை செய்தும் அவளை ஏன் தன்னுடன் வைத்து இருக்கிறான் என்று ஒருமுறை கூட அவள் அவனிடம் சாதாரணமாக கேட்டது இல்லை. ஒருவேளை கேட்டு இருந்தால்...அவன் அதற்கு உண்மையான பதில் கூறி இருந்தால்...


இருவரின் வாழ்வு இனி வரும் காலங்களில் தடம் புரண்டு இருக்காது.


இருவருக்கும் தங்கள் அகத்தின் மீது தாங்க முடியா பற்று மற்றும் காதல்.



அது தான் அவர்கள் வீழ்ச்சிக்கு காரணம். இங்கே ஒருவர் வீழ்ந்தால், மற்றவரும் வீழ்வர். அவர்கள் வாழ்வு அவ்வாறு பிணைக்கப்பட்டது. அதை இருவரும் உணராது தங்கள் வழியில் தான் செல்வேன் என்று இருக்க ஒரு நாள் சூர்யன் இன்னும் எழும்பாது இருக்க,


நக்ஷத்திரா அவனது அறையில் ஒரு மூலையில் முட்டி இட்டு, அழுது கொண்டிருந்தாள். அவளது ஆடைகள் கலைந்து, கிழிந்து, அவள் மீது நகக் கீறல்கள் பட்டு, அவளுக்கு மிகவும் பிடிக்காத ஒன்று, விரும்பாத ஒன்று அவளுக்கு நடந்த துக்கத்தில் அவள் அழுது கொண்டிருக்க, அவனோ நிம்மதியான உறக்கத்தில்.


சூரியக் கதிர்கள் அவள் மீது பால்கனி வழியாக பாய, அவளுள் இருள் நீங்கி தெளிவு பிறக்க ஆரம்பிக்க, அவளது அழுகை மட்டுப்பட்டது. இதற்கு மேல் தான் எதையும் பொறுத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவை எடுத்தவள், அந்த அறையில் இருக்கும் ஒரு உலோக பூஞ்சாடியை எடுத்து கொண்டு அவனை நோக்கி வந்து அதை அவன் தலையின் மீது போட எத்தனித்தாள்.



அகத்தின் அழிவு தொடங்கியது !



 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 12



நக்ஷத்திரா துருவ்வைக் கொல்ல முயற்சி செய்ய முயன்ற நாள் முன்,



"நடிகர் துருவ் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இளக்காரம் ! விதண்டாவாத கேள்விகள்" என்று ஒரு தொலைக்காட்சி செய்தி, மற்றோன்றில்


"நெருப்பில்லாது புகையாது" என்று துருவ் மற்றும் நக்ஷத்திரா அன்று கடையில் இருந்து வெளியே செல்லும் புகைப்படத்தைப் போட்டு மற்றோர் செய்தி என அன்று முழுவதும் நாட்டில் இருக்கும் அத்யாவசிய செய்திகள் எல்லாம் பின்னால் சென்று, துருவ்- நக்ஷத்திரா என்ற இருவரின் வாழ்வு தான் முக்கியம் என்று செய்திகள் ஒலிக்க, துருவ் அதை எல்லாம் வெறித்து நோக்கிக் கொண்டிருக்கையில், நக்ஷத்திரா அவனை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள். கடந்த 2 நாட்களாக இவர்கள் இருவரும் தான் தலைப்பு செய்திகள்.


"சந்தோஷமா !" என்ற ஒற்றை கேள்வியில் அக்கினி பிழம்பாய்க் கோபம். அவனோ அலட்சியமாக


"எஸ்" என்று ஒரு பதில்.


"வாட் தி ஹெல் ! உன்னால என் பெயர் தான் கெட்டு இருக்கு. என் அம்மா கிட்ட நான் உன் கூட இருக்கேன்னு சொல்லே. ரத்னா அக்கா கிட்ட வெளியே ஓரிடத்தில் வேலை செய்யறேன்னு மட்டும் சொல்லிருக்கேன். இப்போ உன்னாலே என்னை பத்தி என்ன நினைப்பாங்க?" என்று கத்த ஆரம்பிக்க, அவனோ கூலாக


"பொய் சொல்ல கூடாதுனு உங்கம்மா சொல்லி கொடுக்கலியா" என்று இளக்காரம் ததும்ப கேட்டான். அதற்கு அவள் பதில் சொல்லும் முன், கை உயர்த்தி அவளை தடுத்து


"நான் என்னோட லைஃப் பத்தி யாருக்கும் பதில் சொன்னதில்லை, சொல்ல போறதுமில்லை. உன்னோட பொய்யை நீதான் சமாளிக்கணும்" என்று சொல்லிவிட்டு கிளம்பியும் விட்டான்.


அவளுக்கும், அவனுக்கும் எந்த வித சம்பந்தமும் யில்லை என்பது போல் தான் அவன் நடந்து கொண்டான். அவனுக்கு இந்த பெயரிட முடியா உறவில் என்ன கிடைக்கிறது என்று அவளுக்குப் புரியவில்லை. அன்று ஒருநாள் இரவு மட்டும் அவளை தன் அருகில் கிடத்தி உறங்கினான், ஆனால் அதன் பின் வந்த இரவுகள் எல்லாம் அவள் சோபாவில், அவன் தன் படுக்கையில்.



அவனைச் சீண்டினால் அவன் பாய்கிறான். இல்லையென்றால் அவன், அவளைத் தொந்தரவு செய்வதில்லை. அவனுக்கு கார் ஓட்டுனர்கள் இருந்தாலும் அவன் அன்று கடைக்கு எதற்கு தானே கார் ஒட்டிக்கொண்டு வர வேண்டும். எல்லாவற்றையும் விட தனக்கு ஏன் உதவ வேண்டும் ?


"ஹெல்ப் மட்டுமா பண்ணறான் . கூடவே இருந்துகிட்டு காட் ! அவன் பண்ணற அட்டகாசம் ! பொறுக்கி பொறுக்கி " என்று மனதில் பேசுவதாக எண்ணி வெளியே பேசிவிட,


"நான் என்ன பொறுக்கித்தனம் பண்ணி நீ பார்த்து இருக்கே !" என்றும் அவனிடம் இருந்து சூடாக வார்த்தைகள் வர, அவனைத் திடீரென எதிர்பார்க்காது அவள் நிலைதடுமாற, அவள் இடையை வளைத்து அவள் நிலைநிறுத்தியவன்,



"தெரியாம யாரையாவது இப்படி குத்தம் சொன்னா, நீ தான் விழுவே" என்று அதற்கும் ஒரு ஷொட்டு. பதிலடி கொடுக்கும்முன் அவளுக்கு பார்வதியிடம் இருந்து அழைப்பு.



"என்ன இது நக்ஷத்திரா? உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம். ஒருத்தர் வீட்டுல வேலை செய்யறேன்னு சொன்னியே, இதை தான் சொன்னியா?"


என்று அவர் பாய, நக்ஷத்திரா என்ன சொல்வது என்று தெரியாது தத்தளிக்க, துருவ் அவளது அலைபேசியைப் பிடுங்கி


"நான் துருவ் பேசறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களை பார்க்க வரேன்" என்று சொல்லிவிட்டு அவள் கையைப் பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு தான் சென்றான். பார்வதிக்கு இன்று தான் விஷயம் தெரியும்.


அவர் இருக்கும் மருத்துவமனையில் அவனுக்கு ராஜபோக மரியாதை. பின்ன, மருத்துவமனையின் இயக்குநர்களில் அவனும் ஒருவன்.


அவரது அறைக்குள் அவளுடன் செல்ல, நக்ஷத்திரா,


"என்னால என் அம்மாவை பார்க்க முடியாது. பொய் சொல்லிருக்கேன். இப்படி பொய் சொன்னது இல்ல, எல்லாம் உன்னால தான்" என்று அவன் மீது பாய, துருவ் தோள்களைக் குலுக்கி கொண்டு, உள்ளே சென்றான். பார்வதியைத் தனிமையில் சந்தித்தான்.



புற்று நோயின் தாக்கம் அவரில் நன்கு தெரிந்தது. அதில் அவனுக்குச் சம்பந்தம் இல்லாக் கடந்தகால ஞாபகங்கள்.



அவர் அவனிடம் அவளை பற்றிய முழு விவரங்கள் தெரிவிக்கும் முன், அவரைப் பார்த்துக்கொள்ளும் செவிலியர்


"சார் ! அவங்க ரெஸ்ட் எடுக்கணும் . இன்னிக்கி விசிட்டர்ஸ் டைம் ஓவர் . நாளைக்கு கீமோ இருக்கு" என்று அறிவிக்க, பார்வதி



"உங்க கிட்ட அவளை பத்தி சொல்லணும், நாளைக்கு முடியுமான்னு தெரியலே, அடுத்த நாள் வருவீங்களா?" என்று கேட்டுக் கொள்ள, துருபி அவர் கைகளை பிடித்துக் கொண்டு


"கண்டிப்பா வரேன், டேக் கேர். " என்று உறுதி அளித்துவிட்டு சென்று விட்டான்.


வெளியே வந்தவனிடம் நக்ஷத்திரா


"என்னை சொன்னே ?" என்று நச்சரிக்க, துருவ் அவளை சீண்டும் விதமாக


"நம்மள பத்தி முழுசா சொன்னேன்" என்று கூற, அவள்



"வாட் !இந்த நம்ம எங்கிருந்து வந்தது ? நீ, நான் அவ்வளவு தான். நான் என் அம்மாவை பார்க்கணும், நீ பொய் சொன்னேன்னு சொல்லணும்" என்று படபடக்க, துருவ்


"விசிட்டர்ஸ் டைம் முடிஞ்சாச்சு. நாளைக்கு பார்த்துக " என்று அவள் கையைப் பிடித்து கொண்டு அவ்விடம் செல்லப்பார்க்க, நக்ஷத்திரா அவன் கையை உதற பார்த்தாள்.


"ஏண்டி சீன் போடறே" என்று அவன் குரலில் கோபம், அதற்கு அவள் சளைக்காது,


"இப்படி கையை பிடிச்சு தான் என்னை பத்தி ஊர் முழுக்க தப்பா பேச வச்சு இருக்கே. நீ சரியான சைக்கோ-பொறுக்கி" என்று எப்போதும் போல் ஆரம்பிக்க, அவன் காண்டானான்.


"இதுவரை ப்ரஸுக்கு ஒரு கெஸ் தான் இருந்திச்சு. அண்ட் என்னால நாம் ரெண்டு பேரும் சேர்ந்து லிவ் இன் பண்ணறோம்னு இங்கேயே ப்ரூவ் பண்ண முடியும், டு யு வாண்ட் இட் ! உன் இஷ்டம் என்னோட பாக்கியம்" என்று நக்கல், கோபம் கலந்து அவன் பதிலடி கொடுக்க, அவன் எம்மாதிரி எல்லாம் செய்வான் என்று அவளுக்குச் சட்டென்று உதிக்க,


"நானே வரேன் , ஜஸ்ட் லீவ் மை ஹாண்ட்" என்று அப்போதும் அவள் குரலில் அதிகாரம் சற்று தொனிக்க, அவன் அப்போதும் அவள் கையை விடாது, அவளை கேள்வியாகப் பார்க்க, அவள் சகித்தபடி,



"ப்ளீஸ்" என்று இறைஞ்ச, அப்போது தான் அவள் கையை விட்டான்.


காரில் இருவரும் ஏறிய பின் அவளிடம்,



"ஒருத்தர் ஒருத்தரை பிடிச்சு இருந்தா, சேர்ந்து வாழறது தப்பில்ல. ஐ பிலீவ் இன் இட்" என்று அவன் கூற, அவளோ


"ஐ ஹேட் மென் அண்ட் ஐ ஹேட் யு டு தி கோர்" என்று அவள் மொழியை, அவனோ இறுகி போனான். பேசாது தன் பண்ணை வீட்டுற்கு செல்லும் வழியில் வண்டியைச் செலுத்தினான். அவளும் ஒன்றும் பேசவில்லை. இருவரும் வெவ்வேறு விதமான மனநிலையில் இருக்க, திடீரென அவர்களது வண்டியை நோக்கி ஒரு லாரி வேகமாக மோத வருவது போல் வர, துருவ் எச்சரிக்கை அடைந்து, வண்டியைச் சட்டென்று சாலையில் இருந்து அதன் பக்கவாட்டில் செலுத்தினான். அவன் செலுத்திய வேகத்தில், வண்டி சற்று தடுமாறி ஒரு மரத்தின் மீது மோத, காருக்குள் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருக்கும் ஏர் பேக் விரிந்து அவர்களுக்கு அடி படாது காப்பாற்றியது.


ஆனால் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. நடந்த சம்பவ அதிர்ச்சியில் நக்ஷத்திரா இருக்க, துருவ் அந்த விரிந்த ஏர் பேக்கை சற்று நீக்கி விட்டு, அவளைக் கண்டெடுத்தான்.


நல்லவேளை அவளுக்கு அடி பட்டிருக்கிவில்லை. என்ன தோன்றியதோ, அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டான். அவள் இருந்த அதிர்ச்சி நிலையில் அந்த அணைப்பு அவளுக்கு வேண்டிருந்தது. அவன் மார்பில் அவள் சாய்ந்திருந்த நிலையில் அவனது இதயத்தின் படபடப்பு அவள் காதுகளை அடைய, அதில் அவள் சொல்ல முடியா உணர்வுகளின் பிடியில் தள்ளப்பட்டாள்.



"ஏன் இப்படி துடிக்குது? ஆர் யூ ஒகே?" என்று முதன்முறையாக அவள் அவனிடம் உண்மையான அக்கறையுடன் கேட்டாள்.



அதில் அவளை மேலும் தன்னுடன் இறுக்கி கொண்டவன்,


"அம் ஒகே" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டவன், தன் கன்னத்தை அவள் தலை மீது வைத்துக்கொண்டான். அவளை விலக அவனுக்கு சத்தியமாக மனதில்லை. என்ன மாதிரியான விபரீதம் நடந்திருக்கும் என்று அவன் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை. அவளை இழக்க முடியுமா? எத்தனை காலமாக அவளை அறிவான் என்பது பொருட்டில்லை, ஆனால் அவனுக்கு அவள் எல்லாவற்றையும் விட முக்கியம்.



அவள் யாராக இருந்தாலும், அவளது தாய்-தந்தை யாராக இருந்தாலும், அவளது பூர்வீகம் என்னவாக இருந்தாலும் அவனுக்கு அதைப்பற்றி அக்கறையோ, கவலையோ இல்லை. ஏனென்றால் அவளுக்கு இப்பொது அவனுக்கு யார் என்பது தான் இனி பேச்சு. அவனது இறுகிய அணைப்பில் இருந்து எப்படி தன்னை விடுவிக்க என்று யோசித்தவள், அவனது அணைப்பில் சற்று நெளிய ஆரம்பித்தாள்.


"ஷுஷ் ! கொஞ்ச நேரம் , சும்மா இரு" என்று அவளை அடக்க, அவளும் வேறு வழியில்லாது பேசாது இருந்தாள்.

அவனது இதய துடிப்பு சீராக, அவளது படபடப்பும் தாழ்ந்தது. அது என்ன? எக்ஸ்பிரஸ் வேக இதய துடிப்பு அவனுக்கு என்று அவளுக்கு தோன்றாது இல்லை, அது அவளை பாதித்தது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆயினும் அதை ஒத்துக்கொள்ள மனமும் இல்லை. இப்படியாகப்பட்ட நல்ல மனநிலை அவளுக்கு.


அவளை விடுவித்தவன், காரின் வெளியே சென்று காரின் நிலையை ஆராய்ந்தபடியே ஒரு அலைபேசி அழைப்பை விடுத்தான். சற்று நேரத்தில் 2-3 கார்களில் அடியாட்கள் போன்று சிலர் அங்கே வர, நக்ஷத்திரா இவன் என்ன நடிகனா இல்லை, தாதாவா என்று புது யோசனையில் இறங்க, அவளது முகத்தைப் பார்த்து அவளது நினைவுகளைப் புரிந்து கொண்டவன்,


"என்னோட பாடி கார்ட்ஸ்! அடியாளுங்க இல்ல ! எனக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்கு, சோ இப்போதைக்கு ரவுடிசம் பண்ண டைம் இல்ல. நான் ஒரு பிசினஸ் மேன் அண்ட் அன் ஆக்டர்" என்று தெளிவாக எடுத்துக் கூற, அவளுக்குத் தான் லஜ்ஜை ஆகிவிட்டது. இருந்தாலும் அவளுக்குத் தன்னகம் மீதான காதலில்


"நான் ஒன்னும் கேக்கலியே" என்று எடுத்து எறிந்து பேச, துருவ் அவளை கேலியாக பார்த்து


"மேல் ஷாவனிஸ்டிக் பி**** மாறி பீமேல் ஷாவனிஸ்டிக் பி**** கூட உண்டு தெரியுமா" என்று அவள் வாயை அடைத்துவிட்டான். அதற்கு மேல் அவளால் ஒன்றும் கூறமுடியவில்லை. மனதில் அவனைத் திட்ட மட்டும் தான் முடிந்தது.


அவளது முகசிவப்பைப் பார்த்தவன் ஏளனமாக,



"இப்போ இதை கேக்கும் போது சும்மா ஜிவ்வ்ன்னு இருக்கா ? " என்று கூற , அவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.


சொடக்கிட்டு அவளை அழைத்தவன்,

"உனக்கு மட்டும் தான் கெட்ட வார்த்தைகள் தெரியுமா ! ஜஸ்ட் தட் , எங்க எப்போ யூஸ் பண்ணனும்னு தெரியணும், லைக் நவ். உன்னால ஒரு வார்த்தை என்னை பேச முடியுதா ! அது மாறி. கடைசி வார்த்தை என்னோடதா தான் இருக்கும் " என்று கூறியதில் அவளுக்கு ஆணவம் தான் தெரிந்தது.


அதற்குள் அவனது பாதுகாவலன் ஒருவன் அவனிடம் வந்து


"போலீஸ் வராங்க சார்" என்று அறிவிக்க, துருவ்


"கணேஷ் கிட்ட சொல்லி, மீடியாவில் இது வராம பார்த்துக்க சொல்லுங்க ! எஃப் ஐ ஆர் பைல் பண்ண போறேன் அண்ட் மேடத்தை வீட்டுக்கு கூட்டிகிட்டு போங்க" என்று அடுத்தடுத்து கட்டளைப் பிறப்பிக்க, நக்ஷத்திராவின் தலை மீது சற்று ஒளி வட்டம் அப்போது தான் மிளிர்ந்தது.


"இது திட்டமிட்டதா துருவ்?" என்று தீவிரமாக விசாரித்தாள். அவளை ஆராயும் பார்வை பார்த்தவன்


"நீ ஃபேமிலி வக்கீல் ஆக தான் லாயக்கு" என்று ஒரு கருத்தை கூற, அவளுக்குள் சுறுசுறுவென்று கோபம் ஏறியது, உச்சி வானில் ஏறும் வெயில் போல.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"வாட் தி ஹெக் ? கேட்டா கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல தெரியாதா ? எனக்கு உன்னோட பாடி கார்ட் செர்வீஸ் வேண்டாம். எனக்கு வீட்டுக்கு போக தெரியும்" என்று கத்த, அவனது பாதுகாவலர்கள் சற்று தள்ளி நின்று கொண்டனர், நமக்கு ஏதடா இந்த வம்பு என்று


"உனக்கு சிறு மூளை, பெரு மூளை ரெண்டும் ஒரே சைஸ் தான். நீ கண்டிப்பா இனி உயரமாக மாட்டே , அட்லீஸ்ட் கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணி பெரியாளா ஆகலாம்னா, யு ஹேவ் யூர் ப்ள*** **** ***** ஈகோ ." என்று அவளை திட்டித் தீர்த்தவன், அவள் எதிர்பாராத நேரத்தில் அவளைப் பிடித்து சற்று முன்னே தள்ளி


"பாரு ! இங்க கிட்டத்தட்ட அரை மணி நேரம் நின்னுகிட்டு இருக்கோம். ஏதாச்சும் பஸ் இல்ல ஆட்டோ பார்த்தியா? கால் நடையா போவேன்னா, ப்ளீஸ் கோ ! உடம்பில இருக்கற கொழுப்பு கொஞ்சம் குறையும்" என்று அவன், அவளை விடாது கடிய, இந்த அளவு அவன் திட்டி அவள் கேட்காத காரணத்தால் சற்று அதிர்ச்சியில் வாயடைந்து போனாள்.


என்றும் இல்லாது அவளுக்கு சற்று அழுகை வேறு எட்டிப்பார்க்க, அதை மறைக்க முயலும் தருணத்தில் அவன் அதை கண்டு கொண்டான்.


"ஹேய் ! " என்று மென்மையாக அவளை தன் புறம் இழுத்தவன்,


"உன்கிட்ட இருந்து எவ்வளோ திட்டு வாங்கி இருக்கேன், என்னிக்காச்சும் அழுதேனா, அதுவும் நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், கல்வெட்டில் பொறிக்கனும். அவ்வ்ளோ....." என்று அவன் கூறி முடிக்கும் முன், அவளை பிடித்திருந்த அவனது கையில் 2 சொட்டு நீர் துளிகள், அவள் கண்ணிலிருந்து.


அதில் அவனுக்குள் ஒன்று தடம் புரள, அவளை இறுக்க அணைத்து கொண்டான்.


அவனது அணைப்பில் அவள் தன்னை மறந்து, அவனுக்கும் அவளுக்கும் நடுவே உள்ள வெறுப்பு மறைந்து, அவன் மார்பை தன் கண்ணீரால் நனைக்க, அவனோ


"எனக்கு சாரி கேட்டு பழக்கமில்ல. பட் என்னோட சாரி உன்னோட அழுகை நிறுத்தும்னா கண்டிப்பா கேப்பேன். சாரி மை ஹனி பன்ச்" என்று அவன் உண்மையாக, நேர்மையாக அவனது உணர்வுகளை வார்த்தை படுத்தினான்.


அதில் அவள் இன்னும் உடைய, துருவ் அவளை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்து,


"ஆக்சிடென்ட் ஆனதில் உனக்கு, முக்கியமா உன்னோட பேர்ட் பிரைன்க்கு ஒன்னும் ஆகலியே !" என்று கேலி செய்ய, அந்த கேலி தான் அவளை மீண்டும் நக்ஷத்திராவாக ஆக்கியது.


அழுது சிவந்த கண்கள் இப்பொது கோபத்தில் சிவக்க, அதனுடன் அவளது கன்னங்களும் மூக்கும் பழுத்த கோவைப்பழ சிவப்பிற்கு மாற, அவனது முகத்தில் ஒரு நிறைவான புன்னகை


"ஹப்பா ! இப்போ தான் நிம்மதி " என்று முணுமுணுக்க, அவள்


"என்ன சொன்னே !" என்று சண்டைக்கு தயாராக,


"வீட்டுக்கு போ ! நிதானமா என்னை திட்ட வார்த்தை தேடி பிடிச்சு வை, பை தி வே எனக்கு பெங்காலி தெரியாது ! சோ யு கேன் ட்ரை" என்று கேலி செய்தவன், தனது பாதுகாவலர்களில் ஒருவனை அழைத்து


"வெற்றி ! இவங்களை பத்திரமா கூட்டிட்டு போ” என்று கூறிவிட்டு, அவளிடம்


"வீட்டுக்கு போ ! ஃபார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு வரேன்" என்று இயல்பாக அவளுக்கு விடைகொடுத்தான். அவளைப் பலகாலமாய் அறிந்தவன் போல அவனது இயல்பு இருக்க, அவளுக்கு அந்நேரம் அது தவறாகவே படவில்லை. காலையில் எப்படி இருந்தனர், ஒருசில மணி நேரத்தில் என்னென்ன மாற்றங்களை அவளுள் விதைத்து இருக்கிறான் இவன்.

கோபம், நேசம் என்று இரண்டும் அவனுள் இருக்கிறது. ஒருவேளை தான் நினைத்தது போல இவன் இல்லையோ என்று ஒரு எண்ணம் மெல்ல வியாபிக்க ஆரம்பிக்க, தலையை ஆட்டிவிட்டு வெற்றியுடன் செல்ல எத்தனிக்க, வெற்றியை உற்று பார்த்து,


"உங்களை லாஸ்ட் வீக், ஹாஸ்பிடலில் பார்த்து இருக்கேனே ! உங்க வீட்டுல யாருக்காச்சும் உடம்பு சரியில்லையா ?" என்று அவனிடமே கேட்க, வெற்றி துருவ்வைப் பார்க்க, இவர்கள் பார்வைப் பரிமாற்றத்தைக் கண்டுகொண்டவள்,


"வாஸ் ஹி...அவரை நீ ...என்னோட பாடிகார்ட்டா .." என்று கோர்வையாக பேசாது போனாலும் அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்று உணர்ந்தவன்,


"கண் கூசுது " என்று கேலியாக அவள் முகத்தை சுற்றி ஒரு வட்டம் போட்டு, அவளுக்கு இன்று அறிவு கொழுந்து விட்டு எரிக்கிறது என்று மறைமுகமாக சொன்னான். அதில் அவளுக்கு என்றும் இல்லாது சிரிப்பு.


"பை தி வே ! நீ அழுதா அசிங்கமா இருப்பே" என்று சொல்ல, அவனுக்கு முதலில் புரியவில்லை.


"நான் அழுது இருக்கேன்னானு கேட்டியே, அதுக்கு பதில்" என்று சொல்லிவிட்டு அவன் கைப்பிடியில் அகப்படும் முன் கிளம்பிவிட்டாள்.


"கிரேசி" என்று மகிழ்வுடன் செல்லும் அவளைப் பார்த்து கொண்டிருந்தவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வர, அவன் முகம் இறுகியது.




காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு வீடு வந்தவன் அவளை தேட, அவன் கண் முன் சுடசுட காபி கோப்பை நீட்டப்பட,


"தேங்க்ஸ் ! கொஞ்சம் பசியும் இருக்கு" என்று சொல்லவும், நக்ஷத்திரா


"அப்போ கிச்சனுக்கு வா ! தோசை கிடைக்கும்" என்று இயல்பாக அவனிடம் பேசினாள். அவனது பசியை உணர்ந்து அவள் செயல்பட, நெடுநாள் கழித்து அவன் மனதில் ஒருவித உவகை. இம்மாதிரி அவன் உணர்ந்து எத்தனையோ காலங்கள் இருக்கும். தனக்கென்று யாரும் இல்லை என்ற நிலை போய், தனக்கு யாருமே வேண்டாம் என்ற நிலைக்கு அவன் எப்போதோ வந்து விட்டான்.


அவனது இந்த நிலையை மாறவே இவள் வந்தாள் போலும். இனி இவளன்றி ...அதை நினைக்க கூட அவன் விரும்பவில்லை. அவளது கைவண்னத்தில் அவனது பசி ஆற, அவளது தோளில் இருக்கும் துண்டில் கையை துடைத்து கொண்டவன்,


"இன்னிக்கி ஈவ்னிங் ஒரு பார்ட்டி இருக்கு, நாம போறோம்" என்று அறிவிக்க, அவள்


"நான் வரலே " என்று முதலில் மறுத்தாள். அதில் அவனுக்கு சிறிது எரிச்சல்.


"போறோம்னு சொன்னேன், போறேன்னு சொல்லலே" என்று இது தான் முடிவு என்று அவன் கூறிவிட்டு சென்றும் விட்டான். அதில் அவளுக்குப் பழையபடி கோபம் தலைதூக்க,


"வரேன்னு நான் சொல்லலே" என்று கத்த, சமையல் அறைக்கு மீண்டும் வந்தவன்


"தூக்கிட்டு போவேன் அண்ட் உனக்கு என்னோட பலம் தெரியும்" என்று தீர்மானமாகக் கூறிவிட்டான்.



அவனுக்கு மட்டும் தான் பிடிவாதமா, எனக்கு இல்லையா என்று வேதாளத்திற்குப் பதிலாக, நக்ஷத்திரா பிடிவாத மரத்தின் உச்சியில் இருக்க, விக்ரமாதித்யனாக துருவ், அவள் மடியில் பீச் நிற டிசைனர் புடைவையைக் கொடுத்து,


"போ ! ரெடி ஆகு" என்று ஆரம்பிக்க, அவள் அதனை ஒன்றும் கூறாது, எடுத்து தன்னிடம் இருந்து அப்புறப்படுத்தினாள்.


அவனும் அவளுக்குக் குறைவில்லாத அழுத்தக்காரன்.


"புடவை கட்டிவிட எனக்கு தெரியும்" என்று அமைதியான குரலில் மிரட்ட, அதில் தோன்றிய கடுமையில்,


"என்ன மிரட்டறியா ! இதெல்லாம் அக்ரீமெண்ட்டில் இல்ல" என்று ஆரம்பிக்க, துருவ் கைகளைக் கட்டிக் கொண்டு அவளை பார்த்தவன்,


"என்னை நீ பொறுக்கினு சொன்னதா ஞாபகம்! அதுக்கு உன்கிட்ட என்ன ப்ரூவ் இருக்குனு இதுவரை எனக்கு தெரியாது, பட் இன்னும் கொஞ்ச நேரத்தில நீ என்னை அப்படி பார்க்க வேண்டிய நிலை ஏற்படலாம்" என்று இளக்காரம் தெறிக்க அவளை மடக்க, அவள் சற்று பயந்து தான் போனாள். இது அவளிடம் மென்மையாக பேசிய துருவ் இல்லை, அவளை எப்படி வேண்டுமென்றாலும் ஆட்டிப்படைக்க முடியும் என்று இருக்கும் துருவ்.


இந்த துருவ்வை அவளுக்குச் சுத்தமாக பிடிக்காது. அவள் வெறுக்கும் துருவ் இவன். மென்மையான துருவ்வை உருவாக்கியவளும் இவளே, இப்படி கடுமையாக அவளிடம் நடக்க வைப்பவளும் இவளே. அதை அவள் உணரவில்லை. மேலும் அவனிடம் வம்பு வளர்க்க கூடாது என்று அவள் தானாகவே அந்த புடவையை எடுத்துக் கொண்டு அவன் முன் அறைக்குச் செல்ல, அவளைப் பார்த்து


"குட் " என்று அவளை மெச்சிக் கொள்ள, அவளோ வெறுப்பாக அவனை பார்த்தாள்.



ஒருவாறு அவள் தயாராகி கொண்டிருக்க, அவன் அவளது அனுமதி இல்லாது அறைக்குள் தன்னிடம் இருக்கும் ரிமோட் மூலம் உள்ளே வந்தான்.


"மேனர்ஸ் இல்ல !" என்ற அவளுடைய சீற்றம் எல்லாம் அவன் காதில் விழவே இல்லை. அவன் தனது உடை மாற்ற ஆரம்பிக்க, அவள் தான் கண்களை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று.


"முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு முன்னாடி இப்படி தான் நடப்பியா ?" என்று அவள் விடாது கத்த, அவன் அவளை நோக்கி நடந்தான். அவனது காலடிகளின் அருகாமையில் அவனை உணர்ந்தவள், கண்களை திறக்க வேண்டுமா வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்தி, ஒருவழியாக காக்காய் கண் என்று சொல்வார்களே, அது போல், தனது ஒற்றைக் கண்ணை மட்டும் சிறிதளவு திறந்து அவனைத் தன் முன் இருக்கும் பெரிய ஆளுயர கண்ணாடியில் பார்க்க, அவனோ புன்னகை என் தாய்மொழி என்பது போல், அவளைப் பார்த்து அழகாய் புன்னகைத்தான்.


அதில் அவள் சற்று சொக்கி தான் போனாள். கருப்பு நிற கோட், சூட், வெள்ளை நிற ஷர்ட் என்று அவன் கம்பீரமாக இருக்க, அவளுள் ஒன்று மெல்ல மெல்ல "நம் தன நம் தன" என்று மத்தளம் இட, அவளது விலகாதப் பார்வை கண்டு அவன், கண்ணாடியில் தெரியும் நக்ஷத்திராவைப் பார்த்து கண்ணடித்தான்.


தன்னை கண்டு கொண்டானே என்று அவள் முகம் குப்பென்று சிவந்து, தலைகுனிய, அந்த அவகாசத்தில் அவன் அவளை நெருங்கி அந்த அறைக்கு அவன் வந்த க்ஷ்ணம் செய்து கொண்டிருந்த வேலையைச் செய்ய விழைந்தான்.


"இன்னும் ரெடி ஆகலே?" என்று அவளை துருவ் அவசரப்படுத்த, அவள்,



"நீ முதல வெளிய போ! வரேன்" என்று அவளது எரிச்சல், அவள் பேசிய ஒவ்வோர் வார்த்தையில் தெறிக்க, அவன் வெளியே செல்லாது அவள் அருகே வந்தான். அவன் அறைக்குள் நுழையும் போதே, அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்று பார்த்துவிட்டான்.



அழகான பீச் நிற புடவை, வட இந்தியர் பாணியில். அதற்கு எடுப்பாக ரோஸ் நிற ரவிக்கை வேலைப்பாடுகள் நிரம்பிய ஒன்று. இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்து கொடுத்த ஒன்று. விலைப் பற்றிய கவலை இல்லை அவனுக்கு. அதை பார்த்தவுடன் அவனுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. பீச் நிறம் அவளுக்கு மிகவும் எடுப்பாக இருக்கும் என்று வாங்கி விட்டான். தன் தேர்வு சோடை போகவில்லை என்று அவளைக் கண்டு, மகிழ்ச்சி அடைந்தான்.



இருவரின் உருவம் அந்த ஆள் உயர கண்ணாடியில் தெரிய, இருவரின் பார்வை அதில் ஒருவற்கொருவரைத் தாக்க, அவளைப் பார்த்து கொண்டே, அவளது முதுகில் படர்ந்த முடியை ஒதுக்கினான். மின்சாரம் தீண்டியது போல் அவள் ஸ்தம்பித்து நிற்க, அதில் அவன் புன்னகை அவன் வாயில் உதித்து மறைந்து, தான் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய ஆரம்பித்தான். ரவிக்கையில் தைக்கப்பட்டிருந்த அலங்கார கயிற்றைக் கட்டி விட ஆரம்பித்தான். அதற்கு தான் அவள் திணறி கொண்டிருந்தாள்.

அப்போது தான் அவள் கழுத்தும் தோளும் சேரும் இடத்தில் ஒரு அழகான மச்சம் இருப்பதை கவனித்தான். அவள் கைகள் தன்னை குத்த முடியாத படி, பின்னால் இருந்து இறுக்க அணைத்தவன் கழுத்து வளைவில், அந்த மச்சத்தில் மென் முத்தம் வைத்தவன், தன் நாடி பதித்து கிசுகிசுப்பாக அவளிடம் கூறிய வார்த்தைகளில் அவள் உறைந்து போனாள்...


அதிர்ச்சியில் அவள் விடுப்படாது இருக்க, அவள் முன், ஆடைக்கு ஏற்ப அவன் தேர்வு செய்திருந்த வைர நெக்லைசை அவள் கழுத்தில் அணிவிப்பது போல் அவள் முன் விரிக்க கண்ணாடி மீது தெரிந்த அவளது பிம்பத்தில் அவள் கண்கள் தெறித்து வெளியே வந்து விடும் போல் இருக்க, அவள் முன்னால் வந்தவன், அவள் கையில் நெக்லஸைத் திணித்து விட்டு,


"போட்டுக்கிட்டு வா " என்று உரைத்ததுடன் நிற்காது, அவள் முகம் ஏந்தி, அவள் கண்ணில் தீட்டப்பட்டு இருந்த மையினை தன் விரலால் தீண்டி, அவள் தலைமுடியில் தேய்த்து, வட இந்தியர்கள் வைக்கும் திருஷ்டி பொட்டினை போல் வைத்தான்.


"கொல்லறே" என்று மயக்கும் குரலில் கிசுகிசுத்துவிட்டு, அவள் இதழ் தீண்டினான். அதில் அவன் அவனாக, இருந்து அவளைத் தேடினான். அந்தத் தேடுதலில் புதைந்து தன்னை மறக்க அவனுக்கு ஆசைதான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு அளவு இருக்கிறதே. எல்லைகள் தாண்ட இது சமயமில்லை என்று உணர்ந்தவன், அவளை விடுத்து,


"சீக்கிரம் வா" என்று சொல்லிவிட்டு சென்றும் விட்டான். 10 நிமிடங்களில் தன்னை மறக்கடித்தவன் சென்ற பாதையைப் பார்த்தவளுக்கு தன் மீதான கோபத்தை விட அவன் சொன்ன விஷயம் தான் காதில் தீராது ஒலித்தது.


காரில் செல்லும் போது, ஓட்டுநர் தங்கள் பேச்சை கேட்க கூடாதென்று அவரது இருக்கைக்கு இவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கும் நடுவே இருக்கும் தடுப்பு ஜன்னலை சாற்றிவிட்டு


"நீ என்னை லவ் பண்ணறியா ?" என்று முடிவாக கேட்டே விட்டாள். ஏனென்றால் அவளிடம் அவன் அப்படித்தான் கூறி இருந்தான்.


"உன்னை முன்ன பின்ன ஒரு காதலனா தெரிஞ்சிக்க ஆசைப்படறேன், ஹனி பன்ச் வில் யு?" என்று அவளை அணைத்தபடி கேட்டான். இம்மாதிரியான பேச்சை அவ்னிடம் இருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் வந்த அதிர்ச்சி அது.



"இந்த ஹார்மோன்ஸ் நார்மலா வேலை செய்யாத போது வர பல உணர்வுகளில் இந்த காதலும் ஒன்னு. அண்ட் என் ஹார்மோன்ஸ் எப்போவும் நார்மல் தான்" என்று அவன் உணர்வற்ற ஒரு குரலில் கூற, அவள் தன் மூக்கை அறுப்பது போலான இந்த பதிலில் அவனைப் பார்க்க பிடிக்காது வேறு புறம் திரும்பி கொண்டாள். ஒருவேளை சட்டென்று அவனை திரும்பி பார்த்திருந்தால் ?



பார்ட்டி நடக்கும் இடம் வர, இறங்கும் முன் தான் அவனுடன் சூர்யா இல்லாததை அவள் கவனித்தாள். அவளுக்குப் புரிந்தவரை சூர்யா அவனது நிழல், நிஜத்தை பிரிந்து நிழல் எங்கே என்ற கேள்வி வர, அதை கேட்கவும் செய்தாள்.


"சூர்யா இப்போ என் கூட இல்ல" என்ற உப்பு சப்பற்ற பதில் தான் கிடைத்தது.


"அப்படின்னா ?" என்று அவள் விடவில்லை. பொறுமை பறந்து போகாது இருக்க அவன் பாடுபட்டான்.


"சூர்யாவை பத்தி பேச நாம இங்க வரலே, என்ஜாய் தி ஈவினிங் ! அண்ட் இங்க என்ன நடந்தாலும், பொறுமையா வீட்டுக்கு வந்து குதி. ஷாக் ஆகாதே" என்று அறிவுறுத்திவிட்டு பார்ட்டி ஜோதியில் அவன் ஐக்கியம் ஆனான்.




அங்கே வந்த பின் தான் அவளுக்கு அது யார் கொடுக்கும் பார்ட்டி என்று தெரிந்தது. அதிலேயே அவள் இறுகி போனாள். துருவ் என்ன சொல்லலிருந்தாலும் அங்கே வந்திருக்க கூடாதென்று அவள் தன்னை தானே நிந்தித்துக் கொண்டாள். அவள் வரவு பிடிக்காதோர் நிறைய பேர் அங்கே உண்டு. அவளது முதல் பட தயாரிப்பாளர், ராவ், ஆனந்த், ரஞ்சன், சுவாதி என்று பட்டியல் நீண்டு கொண்டே போக, ஒரு மூலையில் அவள் உட்கார்ந்து கொண்டாள்.



துருவ் இதை அறியாதவன், சராசரியாக எப்படி ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வானோ அப்படி இருக்க, துருவ் மீது விழும் பெண்கள் கூட்டம் வேறு என்று அவள் விரும்பாத பல நிகழ்வுகள் அங்கே அரங்கேறியது. எப்போதடா இங்கிருந்து செல்வோம் என்று நக்ஷத்திரா இருக்க, அவளிடம் சுவாதி வலிய வந்து


"என்ன நீதான் அவனோட புது …" என்று அத்துமீறிய வார்த்தைகளுடன் தான் பேச்சினை ஆரம்பித்தாள். அவளது பேச்சில் நக்ஷத்திரா அருவெறுத்து போனாள். சாதாரணமாக அவள் இருந்திருந்தால், எல்லை மீறிய வார்த்தைகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்திருந்திருப்பாள். ஆனால் மனம் முற்றும் வெறுத்த நிலையில் அவள். யார் வீட்டிற்குச் செல்லவே கூடாது என்று அவள் இருந்தாளோ, அங்கே அவள்.


அக்கினி மீது நிற்பது போல் உணர்கின்ற நேரத்தில் இம்மாதிரி வார்த்தைகள், கேட்கவே நாராசமாக இருக்க, நக்ஷத்திரா ஒன்றும் சொல்லாது அவ்விடம் நீங்க முற்பட, சுவாதி விடாது அவளைச் சீண்டினாள்.


"எல்லாத்துக்கும் ஒரு எக்ஸ்பைரி டேட் இருக்கு, அவனை பொறுத்தவரை உனக்கும் சீக்கிரம் வரும், போய் உன்னோட துருவ் என்ன செஞ்சுக்கிட்டு இருக்கான்னு பாரு" என்று சாபம் போலிட, அவள் வெறுத்து போன குரலில்,



"தேங்க்ஸ்" என்று உரைத்துவிட்டு, துருவ் இருக்கும் இடத்தைத் தேடினாள்.

அங்கே அவனோ ஒரு நடிகையுடன், கிட்டத்தட்ட அவளை அணைத்து கொண்டிருக்கும் நிலையில்.


நக்ஷத்திரா சற்று முன் அவனைக் கண்டு பிடித்து இருந்தால், என்ன நடந்தது என்று தெரிந்து இருக்கும். ஆனால் அவள் சென்றதோ, அவனை அவள் சரியாகத் தவறாகப் புரிந்து கொள்ள கூடிய நேரத்தில். அந்த நடிகை அவனை முத்தமிட முயன்று கொண்டிருக்க, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாது, நக்ஷத்திரா பார்ட்டி நடக்கும் இடத்தின் வாயில் பகுதியில் நின்று கொண்டாள்.


கடற்கரை ஓரம் அமைக்க பட்டிருக்கும் ஒரு சொகுசு பங்களாவில் பார்ட்டி நடந்து கொண்டிருக்கிறது. இது பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளே இருக்க, எப்படியாவது பிரதான சாலைக்கு சென்று விட்டால், அங்கிருந்து எங்கேனும் சென்று விடலாம். போதும் எல்லாம் என்ற மனம் வெறுத்த நிலை அவளுக்கு. இன்று அவன் மீதான ஓர் நல்லெண்ணம் சற்று அவளுள் முழுவதும் பரவும் முன்னே, அவன் மீதான வெறுப்பு அதிகமாயிற்று.


அவன் அவளை அழுத்தமாக பாதிக்க ஆரம்பித்திருந்தான். அவனை அவ்வாறு பார்த்தது அவளுள் ஏதோ ஒரு இனம் புரியா வலியை கொடுத்தது. கோபம், ஆத்திரம் கடந்து ஒரு வித அழுகை எட்டிப்பார்க்க, அதைத் தடுக்கும் நிலையில் அவள் இல்லாது போனாள். தனக்குப் பிடித்த பொம்மையை யாரேனும் தூக்கிப் போட்டு உடைத்தால், ஒரு குழந்தை எப்படி உணர்வாளோ, அப்படி தான் உணர்ந்தாள். அவளும் குழந்தை போல் தான்.


தனது குழந்தைப்பருவத்தை மனித சுயநலத்தால் இழந்துவிட்டு, இன்று எப்படியாவது அதை வாழ முடியுமோ என்று தவிக்கும் குழந்தை அவள். எல்லோர் போலும், தாய்-தந்தை வேண்டும் என்று ஆசைப்பட்ட குழந்தை அவள். இன்றும் அதற்கு ஏங்கும் மனம் அவளுக்கு உண்டு. ஆனால் அது கிடைக்காத போது, கடினமாகிப் போகிறாள். அப்போதும் அவள் உள்மனது ஆசைப்படுவதை நிறுத்தவில்லையே !


ஆசைப்படக் கூடாது என்று போதித்தாலும் கிடைக்காத ஒன்றுக்கு ஆசைப்பட்டு விட்டாளோ மறுபடியும் !


துருவ் மீது அவளுக்கு என்ன காதலா ? அன்பா ? நட்பா ? என்ன உணர்வு அது. அவன் என்ன அவளுக்கு சொந்தமான பொருளா ? ஆனால் அவன் அவள், அவனுக்கு மட்டுமே சொந்தமானவள் போல் தானே நடத்துகிறான். உரிமை எடுக்கிறான். முன் போல் அவனது அத்துமீறலுக்கு அவள் எதிர்பதில்லையே! அதை நினைக்கவே அவளுக்கு அவள் உடலை எரித்தால் என்ன என்று தோன்றியது !


சீ ! அவனிடம் மயங்கி கிடக்கிறோமா ! தன்னையே அவள் மிகவும் வெறுத்தாள் அந்நிமிடம். கண்ணில் இருந்து நீர், கங்கையாக பெருக, எந்த புனித நீரில் தான் முங்கி எழுந்தாலும் தன் பாவம் குறையாது என்று எண்ணி மருகினாள் .

நக்ஷத்திரா தன்னை எண்ணி மருகி கொண்டிருக்கையில், துருவ் இயக்குனர் ரவி வர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.



"என்னவோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னீங்களே துருவ் ? என்னது " என்று வினவ, துருவ்


"ஹான் ! இருங்க ! நீங்க ஒருத்தங்களை பார்க்கணும் " என்று அவரிடமிருந்து தற்காலிகமாக விலகி, நக்ஷத்திராவைத் தேடினான். முடிவில் அவளை கண்டெடுத்தான், ஆனால் அவளை கண்ட நிலை?


நக்ஷத்திரா, ரஞ்சனின் மார்பில் சாய்ந்து விசும்பிக் கொண்டிருக்க, துருவ் என்ற மனிதன் முழுவதும் மரித்தான். ஆங்காரமாக அவளை அவனிடமிருந்து பிரித்து எடுத்தவன், அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கே இருக்கவில்லை. அவனே காரைப் புயல் போல் செலுத்தினான்.


நேரே வீடு வந்தவன், அவளைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு அவனது அறைக்குள் சென்றான்.


"விடுடா என்னை" என்ற அவளது கத்தல், கெஞ்சல் எல்லாம் அவனிடம் எடுபடவில்லை.


அவளை விடுத்த வேகத்தில் அவள் படுக்கையில் சுருண்டு விழுந்தாள். ஆனால் எல்லாம் ஒரு க்ஷ்ண நேரம் தான். தன்னைச் சரிசெய்து கொண்டு அவள் நின்றாள்.


"ஹவ் டேர் யு ? " என்ற வாக்கியத்தை அவளால் முடிக்க கூட முடியவில்லை. அவளை முத்த வன்முறையால் அடக்கினான். அவனிடமிருந்து தன்னைப் பிரித்து எடுக்க, அவள் திண்டாட, அவனோ அவளை விடவேயில்லை.



ஒருகட்டத்தில் அவளை விடுவித்தவன்,


"வாழ்வோ சாவோ , இனி என்னோடு தான் நீ ! வேற யாரையாச்சும் பார்த்தே !" என்று ஒற்றை விரல் காட்டி அவளை மிரட்ட, அவள் ஆங்காரி ஆனாள். உதட்டில் அவன் ஏற்படுத்திய காயம் வேறு எரிய,


"நீ யாருடா அதை சொல்ல ! நான் என் வாழ்க்கையை எப்படி வேணும்னாலும் வாழ்வேன், என்னோட லைப் பார்ட்னரை சூஸ் பண்ணற ரைட்ஸ் எனக்கு மட்டும் தான் உனக்கு இல்ல ! யு ஆர் எ ***** ஆப் எ ****. ஆம்பளையா நீ ? பொறுக்கி, பிராட், சீட், 420..." என்று அத்துமீறிய வார்த்தைகள் அங்கே அவள் பிரயோகிக்க, அவன் அவனாக இல்லாது போனான்.



மனிதனுள் கடவுளும் உண்டு, மிருகமும் உண்டு. கடவுள் மனிதனிடமிருந்து வெளியே வரும் நேரங்களை விட இப்போதைய காலகட்டத்தில் மிருகம் தான் அதிகம் வெளியே வருகிறது. அதற்கு பலி, பெரும்பானமையாக சக்தியின் மனித படைப்பு.


"ப்ளீஸ்..என்னை விடு.." என்ற கெஞ்சலும் அவனிடத்தில் எடுபடவில்லை.


அவள் அவனை கூறும் பிரம்ம ராட்சனாக அவன் மாற, அவள் நிலை ? எந்த பெண்ணும் விரும்பாத நிலை அது. காலகாலமா பெண்கள் தங்கள் நிலை இப்படி ஆயிற்றே என்று மருகுவது போல், அவள் கொஞ்ச நேரம் துக்கப்பட்டாள், ஆனால் தவறு செய்தவன் தண்டனைக்கு உரியவன் என்று அவள் மனு தர்மத்தை கையில் எடுத்து கொண்டாள். சட்டம் தன் கடமையை ஆற்றும் நிலை அவளுக்கு வருமா என்று அவள் நினைக்கவில்லை.



இன்றே செய், நன்றே செய் என்பதை மனதில் கொண்டாள். அவள் அந்த உலோக பூஞ்சாடியை எடுத்து அவன் தலையில் போட போன நேரம், அவளது அலைபேசி ஒரு பிரத்யேக அழைப்பு மணியில் ஒலிக்க, அதன் பின் அவள் …...வாழ்வில் வெறுப்பின் உச்சிக்கே சென்றாள்.


இவை எல்லாம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில் துருவ் அலாஸ்காவில் படப்பிடிப்பிற்காக சென்று இருந்தான். பாடல் காட்சி இடைவெளியில் அவனுக்கு இந்தியாவில் இருந்து அழைப்பு வர, துருவ்வின் முகம் இருண்டது.


சுளீர் வெயில் அடிக்கும் பாலைவனத்தில், தண்ணீர் தேடும் பயணி அவன்.


நீர் நிலை பார்க்கையில், அங்கே ஓடிச் சென்ற போது அடிக்கும் மணல் புயலென அவனைத் திக்குத்தெரியா காட்டில் தள்ளி விட்டு விட்டாள் அவள்.


அவளும் உண்டு

அவனும் உண்டு

அவர்கள் என்பது ?


 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 13


"இந்த சீன் வேணுமா, ஏன் இந்த மாறி க்ளைமாக்ஸ்?" என்று திரைக்கதையை மீண்டும் ஒரு முறை டேப்லெட்டில் படித்துப் பார்த்தான்.


"ஏன் சார்? ஆன்டி-க்ளைமாக்ஸ் வச்சா மக்கள் எடுத்துக்க மாட்டாங்க!" என்று ஒரு புது இயக்குனர் அஜய் சிலோகிக்க,


"யோசிச்சு பாரு! கொடுமைக்கார ஹஸ்பண்ட், குடிக்கறான், அவள சைக்கோ மாறி படுத்தறான். கேட்டா, பொசசிவ்னெஸ்ன்னு எக்ஸ்க்யூஸ், திருந்தறான், அவள படுத்தினத்துக்கு வருந்தறான், ஹீரோயினும் தமிழ் கலாச்சார முறையில் அவனை மன்னிச்சு ஏத்துக்கறா. ப்ள** க்ரா**. அவள படுத்தி எடுத்ததுக்கு, அவன் ஆக்சுவல்லி திருந்தினாலும், அவள உண்மையா லவ் பண்ணிருந்தா, அவள டிஸ்டர்ப் பண்ணாம அவன் வழியில் போகணும். நீங்க கொடுக்கற க்ளைமாக்ஸ் மக்கள் ஏத்துக்கலாம் லைக் ஹேப்பிலி லிவ்ட் எவர் ஆஃப்டர்ன்னு. பட், அவன் மனசாட்சிக்கு அது ஒத்துக்க முடியுமா?


அது மாறி, அவளுக்கு பழைய ஞாபகங்கள் வராம இருக்குமா? சேர்ந்து வாழ்ந்தாலும் அவங்க முன்ன மாறி சந்தோஷமா இருப்பார்களா?" என்று பலக் கேள்விகளை வைத்தான் துருவ்.


இது ஒரு புதுப் படத் திரைக்கதை. இன்னும் இதை தயாரிக்க அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அவன் அடுத்து தயாரிப்பில் இறங்கப் போகிறான். அதற்கு முதற்படியாக புது இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறான். அப்படி வந்த கதையைத் தான் அலசி ஆராய்ந்து முடித்தான்.


அஜய் முடிவாக,


"அப்போ அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு தான் காட்டணுமா?" என்று சலித்துக் கொள்ள, துருவ் ஆழ்ந்து அவனைப் பார்த்து,



"அவ மேலே இருக்கற காதலினால் தான் பிரியறான். இட்ஸ் அ நியூட்ரல் க்ளைமாக்ஸ்" என்று கூறி முடிக்க, அஜய்


"சார்! ஹேப்பிலி லிவ்ட் எவர் ஆஃப்டர் பாஸிட்டிவ் எண்ட் மட்டுமில்லை, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கற முடிவு. வேணும்னா இப்படி பண்ணலாம், பிரிஞ்சு சேரற மாறி க்ளைமாக்ஸ் வைக்கலாம்" என்று வாதாட, துருவ்


"ரீல் முடிஞ்சு மக்கள் வீட்டுக்கு போக வேண்டாமா? 2.30 மணி நேரம் தான் படம்" என்று கேலியாகச் சொல்ல, அஜய்


"ம்ம்..இதை வேற மாறி கொண்டு போய் பார்க்கறேன், அந்த 2.30 மணி நேரத்துக்குள்ள. நீங்க அலாஸ்கா போயிட்டு வந்த பிறகு பார்க்கறேன். தேங்க யூ சார்." என்று விடை பெற எத்தனிக்க, அப்போது வீட்டில் வேலை செய்பவர் காபிக் கோப்பைகளுடன் வந்தார்.


"ப்ளீஸ்! காபி எடுத்துக்குங்க" என்று உபசரிக்க, அவனும் எடுத்துக்கொண்டான்.


வேலை செய்பவரிடம் துருவ்,


"அம்மா எழுந்தாச்சா?" என்று விசாரிக்க,


"இல்லை" என்ற பதில் கிடைக்க, அவன் முகம் சற்று இருண்டது.


"அஜய்! கொஞ்சம் .."என்று துருவ் முடிப்பதற்குள், அஜய்


"இட்ஸ் ஒகே சார்! அம் ஃபைன்" என்று துருவ் உள்ளே செல்வதற்கு ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை.



"தேங்க்ஸ்" என்று நன்றி உரைத்துவிட்டு துருவ் சென்றான்.


அவனிடம் பெருத்த மாற்றத்தை அவள் ஏற்படுத்தி விட்டாள். இம்மாதிரி எல்லாம் தழைந்து யாரிடமும் அவன் பேசியது இல்லை. எதையும் நினைத்து அவன் கவலை கொள்ளாது இருந்தான். அவனை பொறுத்தவரை யாரையும் தன் அருகில் நெருங்கவிட கூடாது. யார் மீதும் அன்பு செலுத்துதலோ, யாரிடம் இருந்தும் அன்பு பெறுதலோ இருக்கவே கூடாது என்று சிறுவயதில் அவன் முடிவு செய்துவிட்டான். ஆனால் இன்று? பொறுத்துப் போகிறான். எல்லோரிடமும் இயல்பாக, இறுக்கம் இல்லாது பேசுகிறான்.


ஒரு மரணத்தில் அவன் உணர்வுகள் எல்லாவற்றையும் மரணித்துப் புதைத்தவன், இன்று வேறோர் மரணத்தில் அவ்வுணர்வுகளை மீண்டும் எழச் செய்யப் பார்க்கிறான். அதன் மூல காரணம் என்றும் அவளே.




அன்று அவளுக்கு வந்த பிரத்யேக மணி அழைப்பு மருத்துவமனையில் இருந்து தான். பார்வதிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுவிட்டது என்றும், அவருக்கு அவசர பிரிவில் சிகிச்சை அளித்து கொண்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


உடனே அவள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றாள். துருவ்விற்கும் முழிப்பு வந்துவிட, அவனும் சென்றான்.


அவசரச் சிகிச்சைப் பிரிவு வாசலில் இருவரும் தவம் இருக்க, நக்ஷ்த்திரா தன் அழுகையை அடக்கப் பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள்.


அவள் விரும்பும், அவளை விரும்பும் ரத்த பந்தம், பார்வதி மட்டுமே! இன்று பார்வதியும் இல்லாது போய் விடுவாரோ என்று பயம் கொண்டாள். என்றும் இல்லாது கடவுளை நினைத்து கொண்டாள். அன்னையை இழந்தபின் எவ்வித நம்பிகைக்கும் அவள் இடம் கொடுக்கவில்லை. பார்வதி தான் அவளை வற்புறுத்திக் கோவிலுக்கு அழைத்துச் சென்று கடவுளை வணங்க வைப்பார்.


"இப்படி கைகூப்பி கும்பிட்டா கடவுள் வந்திருவாறா ? நான் எத்தனையோ நாள் என் பிறப்புக்கு காரணமானவர் , திரும்பி வரணும்னு வேண்டி இருக்கேன்!ஒருவேளை வந்திருந்தா, உங்க தங்கை உயிரோட இருந்திருப்பாங்க. ஆனா அது நடக்கலியே. கடவுள்ன்னா அதோ அங்க உள்ளே இருக்க கல்லு தான்" என்று வெறுப்புடன் பேசுவாள். பார்வதி சத்தம் போட்டு


"எப்போதும் எல்லா நேரத்திலும் கடவுளால் வர முடியாது. ஆனா உன்னை அந்த கடவுள் அநாதை ஆக்கலே. எனக்கு உன்னை கொடுத்து இருக்கார், நான் உனக்கு இருக்கேன். அங்க கோயில் வாசலை பாரு, எத்தனை குழந்தைங்க அம்மா-அப்பா இருந்தும் பிச்சை எடுக்கறாங்க. அவங்களை விட நீ நல்ல இருக்கே. அது கடவுளால் தான் தாரா" என்று கூறினாலும், அவள் அவளது பிடியில் தான் இருந்தாள்.


இன்று தான் கடவுளை அவள் அதிகம் நினைக்கிறாள். அவளை வளர்த்த அந்த நல்லுள்ளம் திரும்பி வரவேண்டும் என்று விடாது வேண்டிக்கொண்டாள். தன்னையும் இழந்து, தன் அன்னையையும் இழக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. தன்னைப் பற்றிய நினைவு வர, அவளுள் மீண்டும் கோபம் துளிர்விட துவங்கியது. காரணமானவன் அருகில் தான் இருக்கிறான் என்ற கோபம். அவனிடம்,



'எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன், உன்னை நான் பார்க்க விரும்பவில்லை ' என்று கூறப்போவதற்குள், மருத்துவர் வெளியே வந்தார்.


"சாரி நக்ஷத்திரா ! ஷி இஸ் ….." என்ற வாக்கியத்தை முடிப்பதற்குள் நக்ஷ்த்திரா வீழ்ந்தாள்.


மயக்கம் தெளிய, அவள் முதலில் கேட்டது


"இது கனவு தானே ! என் அம்மாக்கு ஒன்னும் ஆகலே" என்று தான் சொன்னாள் . துருவ் தான்


"எர்லி மார்னிங், அவங்களுக்கு மாஸ்ஸிவ் கார்டியாக் அரெஸ்ட், ஷி இஸ் நோ மோர்" என்று கூறவும், அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள்.


"பொய் ! பொய் ! என்னை நீ ஏமாத்தறே ! எனக்கு அவங்க, அவங்களுக்கு நான் ! இப்படி தான் எங்க வாழ்க்கை. நானும், அவங்களும் தான் எங்க வாழ்க்கையில். ! நீ வேணும்னு சொல்லறே " என்று அழுது கத்திக், கூப்பாடு போட, அவளைக் கட்டுக்குள் வர வைக்க, மருத்துவர் உதவியை நாட வேண்டிய நிலை. மயக்க ஊசி போட்டு அவளை அமைதியாக்கினர்.


விழித்தவள், நேரே பார்வதியின் பூத உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்து கண்ணில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டு


"நீங்களும் என்னை விட்டிட்டு போயிட்டிங்க இல்லே ! நான் வளர்ந்துட்டேன், என்னை நானே பார்த்துக்கலாம்னு என்னை விட்டிட்டு நீங்க நிம்மதியா...எனக்கு நீங்க, உங்களுக்கு நான் ..என்ன ஆச்சு ? அவ்வளவு தானா ! எல்லாம் முடிஞ்சு போச்சா ? அன்னிக்கி கோவிலில் வச்சு அம்மா-அப்பா இருந்தும் பிச்சை எடுக்கற பசங்களை காட்டி, நான் இருக்கற நிலை பரவாயில்லைனு சொன்னீங்க ! ஆனா அவங்க என்னை விட பெட்டர், அவங்களுக்கு அம்மா-அப்பா இருக்காங்க , எனக்கு …." என்று மீண்டும் பொங்கிய கண்ணீரைப் புறங்கையால் துடைத்து கொண்டவள், அதன் பின் ஒன்றுமே பேசவில்லை, அவரது அந்திம காரியங்களை அவளே செய்தாள், அவரது மகனாக.


துருவ் இவையேயெல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்தான். ஒன்றும் பேசாத, அமைதியான நக்ஷ்த்திரா அவனுக்கு முற்றிலும் புதிது. அமைதி சில சமயம் நல்லதிற்கில்லை, இவளது அமைதி எரிமலை வெடிக்கும் முன் இருக்கும் அமைதி என்று உணர்ந்து இருந்தான். அவளை எப்படி அணுக என்று புரியாது தவித்தான். அவன் நினைத்தபடி எல்லாம் அன்று பார்ட்டி நடந்த தினம் அன்று நடந்து இருந்தால்...இன்று இருவரும் வேறு மாறி இருந்திருப்பர், குறைந்தபட்சம் அவள், அவனுடன் தினம் சண்டையாவது போட்டுக்கொண்டிருந்திருப்பாள்.


அத்தி பூத்தாற்போல் இரண்டொரு வார்த்தைகள் பேசும் நக்ஷத்திரா அவனுக்குப் புதிது. தினம் ஒருவேளை மட்டும் தான் சாப்பிடுகிறாள், ம்ஹூம் கொறிக்கிறாள் என்பது சரி!




அவனுக்கு அவளது நிலை கண்டு இருப்பு கொள்வதில்லை. மனதில் பொங்கி வழியும் காதலைக் காட்ட இது சமயமும் இல்லை என்று தெரிந்தும் அவனால் அதைக் காட்டாது இருக்கவும் முடியவில்லை. அவன் நெருங்கினாலே, அவள் ஓட்டுக்குள் சுருங்கும் நத்தைப் போல் ஆகிறாள். அது வேறு அவனுக்கு மரண வலியைக் கொடுத்தது. அவன் செய்த செயல் அப்படி.


துருவ் 100% நல்லவன் இல்லை, இவ்வளவு ஏன் யாரும் 100% நல்லவர்கள் இல்லை, அந்த கடவுள் உட்பட. ஆனால் அதற்கு அவன் செய்தது சத்தியமாக சரியானதும் இல்லை, தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அந்த சூழ்நிலையில் அவன் அவனாக இல்லை. ஒருவேளை அவன் பொறுமையைக் கடைபிடித்து இருந்திருந்தால் ….பின்னாளில் அவர்கள் வாழ்வு வேறு மாதிரி இருந்திருக்கும். சில சமயம் சில நட்சத்திரங்கள் வானில் ஜொலிக்க விரும்புவதில்லையோ?


அவளைப் பற்றிய கவலையுடன் அவளது அறைக்கு அவன் செல்ல, அவள் எழுந்திருந்தாள். அவனைக் கண்ட அவளது முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. ஜடம் போல் அவள் இருக்க, அவனுக்கு அது தாங்க முடியவில்லை.


"ஹாய் ! தூங்கினியா ?" என்று பொதுவாக ஆரம்பித்தான்.


"ம்ம்ம்" என்ற பதில் மட்டுமே. அவளது வலி அவனுக்குப் புரிந்தாலும் என்ன செய்வது என்று புரியாத நிலை.


"போ ! ரெஃப்ரெஷ் பண்ணிக்கிட்டு வா " என்று அவளிடம் மொழிந்து விட்டு, அவளுக்குப் பிடித்த பால், கொஞ்சம் பிஸ்கெட் உடன் அவளை மீண்டும் நாடினான். அவன் எடுத்து கொண்டு வந்த பதார்த்தங்களை பார்த்தவள், அவற்றை பொறுப்படுத்தாது, தானே சமையல் அறைக்கு புகுந்து தனக்கு வேண்டியதைச் செய்து கொண்டாள். துருவ்விற்கு அது பெருத்த அடி தான்.


"பிடிக்கலையா ?" என்று கேட்டே விட்டான். அதற்கு ஒன்றும் கூறாது, தனதறைக்கு அவள் செல்ல முற்பட, அவள் கையை பிடித்து தடுக்கப் பார்த்தான். அவனது பிடியை அவள் தளர்த்தினாள். அவளுக்கு பலம் கூடி விட்டதா அல்ல அவன் பலவீனமாகிவிட்டானா?


"நட்சத்திரா ! பேசி கிட்டு இருக்கேன்" என்று செல்லும் அவளிடம் அழுத்தமாக அவன் கூற, அவளும் திரும்பி பார்த்தாள். தனது இரு கைகளை கட்டிக்கொண்டு அவளை ஆழ்ந்து கூர்மையாக பார்க்கும் அவனது பார்வையை அலட்சியம் செய்து,


"நான் செத்து போனா நிம்மதியா இருப்பியா ?" என்று உணர்வில்லாக் குரலில் கேட்க, அவனுக்கு வந்த ஆத்திரத்தில் அவளை ஒரே எட்டில் நெருங்கி கழுத்தைப் பிடித்து விட்டான்.


முதலில் மூச்சிற்கு திணற, ஒருசில நொடிகளில் 'என்னை கொன்று விடு' என்பது போல் எவ்வித போராட்டமும் செய்யாது இருக்க,அவனுக்கு அவள் எண்ணம் புரிந்து போக, கழுத்தில் இருந்து கையை எடுத்தான்.


சுவாசம் வேண்டி அவள் இரும, துருவ் சில நொடிகள் பொறுத்தவன்,


"நான் இருக்கும் வரை இல்ல நீ இருக்கும் வரை ...இப்படி தான் நாம" என்று அவளை இறுக்க அணைத்துக் கொண்டு அவள் முகத்தில் ஆவேசமாக முத்தமிட துவங்கினான். முத்த பித்து அல்ல அது, தன்னை அவள் உணர வேண்டும் என்ற பித்து அது. வார்த்தைகளில் வடிவமைக்கப்படாத காதல் அவன் காதல். ஏன் எப்போது என்றேயெல்லாம் அவன் தன் காதல் வந்த தருணத்தை ஆராயவில்லை. ஆனால் அந்த காதலை அவன் உறுதியாக நம்பினான்.


அவள் முகம் முழுவதும் அவனது இதழ் ரேகைகள் படிந்து விட, முடிவில் இதழ் ரேகைகள் மீது தன் உயிர் ரேகைகளை அவன் பதித்தான். முத்தங்களில் காம உணர்வுகளை தாண்டி, உயிரூட்டும் உணர்வுகளும் உண்டு, உயிர் தேடும் உணர்வுகளும் உண்டு. அவனது அந்த மூன்றாம் நிலை தாண்டி நான்காம் நிலையான தன் உயிர் உணர்விக்கும் இதழ் பரிமாற்றத்தை அவளுக்குக் கொடுத்து, அவள் தன்னுயிரை உணர வேண்டுமே என்று இதழ் தீண்டி இறைஞ்சினான். ஆனால் அவளோ எதையும் உணர விரும்பாத மனைநிலையில் இருக்க, ஓர் கட்டத்தில் அவன் சோர்ந்து போனான். அவளாக அவனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டு விட்டான். புரிந்து கொள்ளும் நாள் வந்தது, ஆனால் அவன் அப்போது அதை பிரதிபலிப்பானா என்று அவன் அறிய முற்படவில்லை.



இருந்தாலும் இது தான் அவர்கள் என்று அவளுக்குச் சொல்லவும் தவறவில்லை.


"திஸ் இஸ் அஸ்" என்று அவள் காதில், காதோர முடி கற்றினை நீக்கி சொல்லிவிட்டு தான் சென்றான். அவனது அணைப்பில் தீயை தீண்டிய உணர்வு அவளுக்குள். அவனது முத்தத்தில் தன்னை வெறுத்தவள், நேரே சென்றது ஷவரின் அடியில். எவ்வளவு நேரம் இருந்திருந்து இருப்பாள் என்று அறியாள்.



"நக்ஷ்த்திரா! கதவ உடைச்சு வர வேண்டி இருக்கும்" என்று துருவ் கிட்டத்தட்ட அவள் இருக்கும் குளியலறைக் கதவை உடைக்கப் போனான்.


அதில் தான் ஸ்மரனை அடைந்து வெளியே வந்தாள். அவள் அணிந்து இருந்த சல்வார் முழுவதும் தொப்பலாக நனைந்து, முகம் வெளிரி, உதடுகள் நடுநடுங்க அவள் இருக்க, துருவ் முதலில் ஒரு கம்பளி எடுத்து அவளை அணைத்து கொண்டான்.



"லூசாடி நீ! கிறுக்கச்சி. ஏற்கனவே நீ அன்னிக்கி 2 முறை மயங்கி, ட்ரிப்ஸ் ஏத்தி இன்னிக்கி தான், நீயா எழுந்து கொஞ்சம் வெளிய வந்திருக்கே! நீ பண்ணற வேலைக்கு, உன்னை ..அப்படியே…" என்று திட்டிக்கொண்டே அவள் தலைமுடியை ஹேர் ட்ரையர் கொண்டு காய வைத்தான். அவளோ ஜடப்பொருள் போல் இருக்க, துருவ் அவள் முன் வந்து அவளது உயரத்திற்கு குனிந்து



"நக்ஷத்திரா! உன்னோட இழப்பு பெருசு தான். இல்லன்னு சொல்லலே. பட் கொஞ்சம் வெளிய வர பாரு. இப்படி பண்ணிக்கிட்டு..நீ மட்டும் இல்ல, என்னையும் கஷ்டப்படுத்தறே. உனக்கு புரிய மாட்டேங்குது... நீ நல்லா இருந்தா தான்…" என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்,



"நான் நல்லா இருக்கு விரும்பலே" என்று குதர்க்கமாக ஒரு பதிலைக் கொடுக்க, துருவ்வின் பொறுமை என்ற ஒன்றை மறைந்தான். அவள் கையில் ஹேர் ட்ரையரைத் திணித்தவன்



"ஜஸ்ட் கெட் லாஸ்ட்" என்று திட்டிவிட்டு அந்த அறையின் பால்கனிக்குச் சென்று விட்டான், அவள் கூறியதை தாங்க முடியாது.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணாடியில் தெரியும் அவனது பிம்பத்தை அவள் பார்த்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அவன் திரும்பிய போது, இருவரின் பார்வை ஒரே நேர்கோட்டில் சந்தித்தது. அவள் பார்வையில் ஒரு கோபக் கனல், அவன் பார்வையில் வருத்தம் என்று இருவரும் அவர்கள் உணர்வுகளுக்கு உண்மையாக இருந்தனர்.



ஆயிற்று அடுத்த நாள் அவன் அலாஸ்காவிற்கு கிளம்ப வேண்டும். புதிய படம், அது ஆரம்பித்து அவனது காட்சிகள் முடிந்து இருக்க, அலாஸ்காவின்,

பொறுத்து கொள்ளக் கூடிய அழகானத் தட்பவெப்ப நிலைக்காகக் காத்து இருந்தனர். ஆகையால் துருவ் இத்தனை நாள் அவளுடன் இருந்தான். அவன் வருடத்தில் 3 படங்கள் தான் செய்கிறான். அவனுக்கு தன் தொழில் ஒருபுறம், படங்கள் மறுபுறம் என்று இப்படி தான் நேரத்தைச் சமாளிக்க முடிகிறது. இப்பொது இவளும் அவன் வாழ்வில்!


அவளைச் சத்தியமாக இங்கே விட்டு செல்ல அவனுக்கு மனமில்லை.


"என் கூட அலாஸ்கா வரியா?" என்று அவளிடம் பலமுறை கேட்டு இருப்பான். அவள் வெறுமையானப் பார்வையிலிருந்து முடிவாக


"வரலே" என்று ஒரு உறுதியானப் பதிலை கொடுத்தாள். அவன் ஓரளவு இதனை எதிர்பார்த்தான். பார்வதி இறந்து கிட்டத்தட்ட 1 வாரம் ஆன நிலையில் அவனது இந்தப் பயணம். அவள் மனநிலை, உடல்நிலை எல்லாம் வேறு விதமாக இருக்கிறது.

பார்வதியின் அந்திம காரியங்களைச் செய்து முடித்த பின், மயானத்தில் ஒருமுறை மயக்கம், அதன் பின் இரண்டு நாட்கள் அவள் மருத்துவமனையில் தான் இருந்தாள். உடலில் அதிகபட்ச பலகீனம். 2 நாட்கள் கழித்து அவன், அவளைப் பண்ணை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விட்டான். அவள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளும் சூழ்நிலையில் கண்டிப்பாக இருக்கவில்லை. பசியில்லை, உறக்கமில்லை, பழையதை நினைத்துக் கொண்டு உள்ளே மருக, அவன் தன் குழந்தையைப் பார்த்து கொள்வது போல் அவளைப் பார்த்து கொண்டான்.


அது அவளது மூளையில் பதியவுமில்லை. அவன் நெருங்கினாலே அவள் விலகிப் போனாள். சிறுவயதில் முக்கியனமானவர்களை இழந்து, அன்பெனும் சாரல் வீசாத வாழ்வில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகாதவனுக்கு இது வலித்தது. நெடு நாட்கள் கழித்து வருத்தங்கள் என்றால் என்ன என்று அவள் காட்டிக்கொடுத்தாள். ஆனால் இந்த நிலையில் தனது பொறுமையை காற்றில் பறக்க விடக்கூடாது என்று அவன் இருந்தாலும், அவள் அவ்வாறு அவனை இருக்கவிடவில்லை.


அவளிடம் கத்தியவன் மறுபடியும் மனது கேட்காது அவளை அணுகி அவள் தலைமுடியை காய வைக்க முயல, அவளோ


"எனக்கு யாரும் தேவையில்லை. ஐ வில் கெட் லாஸ்ட்" என்று அவனைப் பாட்டை அவனுக்கே உரைத்து விட்டு தன்னை கவனிக்க ஆரம்பிக்க, மனதில் அவள் பால் கோபம் வந்தாலும் அவளாக இப்போது பழைய நட்சத்திராவாக மாறி வருகிறாள் என்ற திருப்தியில் துருவ் அவளை நீங்கினான்.


விமானநிலையம் கிளம்பும் முன், மீண்டும் ஒருமுறை


"இப்ப ஒன்னும் குறையல , கம் வித் மி" என்று கேட்டான். அவள் முகத்தை திருப்பி கொண்டு தன் அறைக்குச் சென்று தாளிட்டு கொண்டாள். கணேஷ், வெற்றி என்று துருவ் அவர்களிடம் நக்ஷத்திராவைப் பாதுகாக்கும் படி அறிவுறுத்திவிட்டுச் சென்றான். காரில் ஏறும் முன், அவளை பால்கனியில் பார்த்தான் ஒருமுறை, அவ்வளவு தான்.



அதன் பின் அவன் அலாஸ்காவில் பாடல் காட்சி படப்பிடிப்பில் மும்மூரமாக, இங்கே இவள் எப்படி இங்கிருந்து செல்வது என்பதில் மும்மூரமானாள். ஏன் தான் பார்வதியின் இறப்பிற்கு பின் இங்கே இருக்கிறோம் என்று தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டாள். அவன் மீது காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும், அவனை அழிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஒருபுறம், மறுபுறம் இதெல்லாம் சாத்தியமாக்க அவளுக்குத் தேவை பணம்.


அது இருக்கிறதா முதலில். மருத்துவமனை செலவில் இருந்து, அவளது உணவு வரை அவன் தானே செய்கிறான். எல்லாவற்றையும் விட அவள் கையெழுத்திட்ட அந்த காகிதங்கள். அவை அவனிடம் இருக்கும்வரை, அவளால் ஒன்றும் செய்ய முடியாது. அதன் படி, அவளுக்கு இங்கே என்ன நேர்ந்தாலும் அவள் தன் சுய சிந்தனை உடன் அதற்கு உடன் பட்டு இருக்கிறாள் என்ற வாக்கியத்தை அங்கீகரித்து இருக்கிறாள்.


அதனால் அவளுக்கு நேர்ந்தது, அவளாக விரும்பி ஏற்றுக்கொண்டது என்ற ரீதியில் தான் வரும். மேலும் அது நடந்து ஒருவாரம் கழிந்த நிலையில், அவளால் சட்ட ரீதியாகவும் அந்தக் கொடுமையை நிரூபிக்க முடியாது. சட்டத்திற்கு சாட்சியங்கள் தான் முக்கியம். அதனை நன்கு அறிவாள். இவை எல்லாம் சேர்ந்து அவளை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது.


எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலுப்பெற்றது. இனி அவன் வேண்டாம் அவளுக்கு. அவளால் இதற்கு மேல் அவனை தாங்க முடியாது. அந்தக் கொடுமை மீண்டும் நடக்காது என்று என்ன உத்திரவாதம். அவளது சிந்தனைகள் தவறல்ல. ஒரு 18 வயதில், வாழ்வில் பெருத்த அடிகள் பெற்றவள், ஆகையால் அவள் அந்த வழியில் எண்ணுகிறாள்.


ஒளிந்து கொண்டிருக்கும் அவன் நேசம் அவள் கண்ணிற்கு தெரியவில்லை. அது அவளது தவறுமில்லை. ஆண்களை நம்பாதவளுக்கு அவன் அல்லோ, தன் மனதை எடுத்துக் கூறி இருக்கவேண்டும். வெளிப்படையாக அவன் சொல்லி இருந்தால், அவள் ஏற்றுக்கொண்டு இருந்து இருப்பாளா? சந்தேகம் தான்.



ஆகையால் தான் அவன் அவ்வாறு முடிவு செய்தானோ ?வாழ்க்கை என்ற பகடை இனி யார் வீச்சிற்குக் கட்டுப்படப்போகிறது என்பது தான் இனி!


இங்கே இருந்து தப்ப, கவனமாகத் தன் திட்டங்களை அவள் வகுத்தாள். அவன் அலாஸ்க்கா சென்றபின் அவள் 2 நாட்கள் தன் போக்கில் இருந்தாள். எப்போதும் போல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று. மூன்றாம் நாள், வங்கிக்குச் செல்ல வேண்டுமே என்று துருவ்வின் பாதுகாப்பு படையில் இருக்கும் வெற்றியிடம் கூறினாள் .


அவனும் அவளை அழைத்துக் கொண்டு சென்றான். எதற்கு அவளுக்கு இந்தப் பாதுகாப்பு என்று அவள் அந்நேரம் யோசிக்கவில்லை. அவளாக வருத்தி கொண்ட ஒன்று தான் இதற்கு காரணம் என்று அவளுக்குத் தெரிந்தும் இருக்கவில்லை.



அவள் மதியம் போல், வங்கிக்குச் சென்றாள். உள்ளே சென்று தன்னிடம் இருந்த மிச்சப் பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த சேமிப்பு கணக்கை முடித்துக் கொண்டு விட்டு, வெற்றியுடன் வெளியே செல்ல ஆரம்பித்தாள். வெற்றி அவளுடன் வங்கி உள்ளேயும் வந்திருந்தான். ஆனால் அவள் என்ன செய்தாள் என்றெல்லாம் அவன் கவனிக்கவில்லை. வங்கியின் வாயில் பகுதியில் அவன் நின்று கொண்டான். அவளது தனிப்பட்ட விஷயம் என்று விட்டு விட்டான்.


ஒருவேளை கவனித்து இருந்தால், அவளை தப்பி விட்டு இருந்திருக்க மாட்டான். வங்கி இருப்பது ஒரு அடுக்குமாடி வளாகத்தில். அவனுடன் வெளியே வந்தவளுக்கு எப்படி இவன் கண்ணில் மண்ணைத் தூவுவது என்ற யோசனையே. ஏனென்றால் வங்கியிலேயே அவளைக் காண, ரத்னாவின் மகள் வந்திருந்தாள். அவளிடம், வெற்றியைக் காட்டிச் சைகை செய்து,


'இங்கே ஒன்றும் சொல்லாதே,பேசாதே' என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டாள். அந்தப் பெண்ணும் அவர்களுக்கு சந்தேகம் வராத வாறு, அவர்களைப் பின்தொடர்ந்தாள். ஒரு கட்டத்தில் நக்ஷ்த்திரா பெண்கள் கழிப்பறையைப் பார்க்க, வெற்றியிடம்


"ஒரு 5 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க" என்று உள்ளே செல்ல, ரத்னாவின் மகளும் உள்ளே சென்றாள். வெளியே ரத்னாவின் மகள் சிறிது நேரத்தில் வர, அதன் பின் பர்தா அணிந்து கொண்டு ஒரு பெண்ணும் வெளியே வந்தாள். கிட்டதட்ட அரை மணிநேரமாக, வெற்றி இத்தனை நேரம் நக்ஷத்திரா என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்று மெல்ல அதிர ஆரம்பித்தான்.


அவனால் உள்ளே செல்லவும் முடியாது, என்ன ஆயிற்றோ என்ற பதட்டம் அவனைச் சூழ, நட்சத்திரா அதற்குள், கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தாள், பர்தா அணிந்து கொண்டு!



அலாஸ்காவின் காலைப் பொழுதில் துருவ் அந்த நாளின் படப்பிடிப்பில் இருக்க, அவனுக்குள் ஏதோ ஒன்று சரியில்லாத உணர்வு வியாபிக்க ஆரம்பிக்க, நட்சத்திராவின் எண்ணை அழைத்தான். ஆனால் அதுவோ


'ஸ்விஸ்ட் ஆப்' என்ற செய்தியை மாற்றி மாற்றி கொடுக்க, வெற்றியை அழைத்தான். வெற்றியின் எண் வேறு ஓர் அழைப்பில் இருப்பதாகச் செய்தி வர, அவனுக்கு உள்ளுக்குள் ஒன்று தடம் புரள ஆரம்பிக்க , இயக்குனர்


"ஷாட் ரெடி துருவ் !" என்று அழைத்தார். வெயில் இருந்தாலும் குளிரும் இருந்தது, அதில் நாயகிக்கு கொடுக்கப்பட்ட உடுப்பு, கையில்லா ரவிக்கையுடன், கண்ணாடி போல் அமைப்பை உடைய புடவை. நக்ஷத்திராவாக இருந்தால், இந்நேரம் உண்டு இல்லை என்று செய்து இருப்பாள் என்று நினைத்து படியே, மனதில் பொங்கும் கவலையை மறந்து, பாடல் காட்சியில் நடிக்கச் சென்றான்.


அவன் மனம் அவனது கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தால்,அவனால் அந்த காதல் காட்சியிலோ, பாட்டிலோ லயித்து நடிக்க முடியவில்லை.


"ஷாட் கட் !" என்று இயக்குனர் சலித்து கொள்ள ஆரம்பிக்க, துருவ்


"சாரி ! ஜஸ்ட் 5 மினிட்ஸ்" என்று மன்னிப்பு வேண்டி விட்டு, மீண்டும் வெற்றியைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்று, மீண்டும் பாடல் காட்சிக்கு தயாராக, வெற்றியே அவனை அழைத்தான்.


"சார் ! சாரி , இங்க நட்சத்திரா மேடம் மிஸ் ஆகிட்டாங்க" என்று வருந்தியபடி அவனிடம் கூற, துருவ்வின் காலடியில் இருந்து பூமி நழுவ ஆரம்பித்தது.


பொத்தென்று அருகில் இருந்த நாற்காலியில் அவன் விழ, இயக்குனர் பீதி அடைந்து


"என்ன ஆச்சு ?" என்று வினவ, துருவ் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாது, அவர் கேள்விக்கு பதில் ஏதும் உரைக்கவில்லை.


"வெற்றி ! என் கிட்ட விளையாடாதே !" என்று சீற ஆரம்பித்தான் துருவ்.


"இல்ல சார் ! பேங்க் போகணும்னு சொன்னாங்க ! கூட்டிட்டு போனேன். பேங்க் வேலை முடிச்சிட்டு, அவங்க என் கூட நடந்து வந்தாங்க. வாஷ் ரூம் போகணும்னு சொன்னாங்க ! அப்பறம் காணோம்" என்று கூறிமுடிக்க, துருவ்விற்கு அந்நேரம் எப்படி செயல்பட என்று புரியவில்லை.


சிறிது நேரம் மௌனமாக கழிய, வெற்றி

"சாரி சார் ! மேடம் ரொம்ப பிளான் பண்ணி தப்பிச்சிட்டங்க ! இப்போ தான் பேங்கில் என்கொயர் செஞ்சேன் . பேங்க் ஆகோண்ட் க்ளோஸ் பண்ணி இருக்காங்க. அவங்க சி சி டி வி யை வாங்கி பார்த்தேன். வேற சந்தேகப்படும்படியா யாரையும் அவங்க பார்த்த மாறி தெரியல. ஆனா கண்டிப்பா அவங்களுக்கு யாரோ ஹெல்ப் பண்ணிருக்காங்க. " என்று கூறி முடிக்க, துருவ்


"அம் கம்மிங் ஹோம்" என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.



துருவ்வின் சந்தேகம் முதலில் ரஞ்சன் மீது பாய்ந்தது. விமான நிலையம் வரும்முன் தனக்கு மிகவும் தெரிந்த துப்பறியும் நிறுவனத்திற்கு அழைத்து ரஞ்சனைப் பின்பற்றி ஏதேனும் துணுக்கு கிடைக்கிறதா என்று பார்க்கச் சொன்னான். அத்தோடு நிறுத்தவில்லை, அவளுக்கு உதவி செய்பவர்கள் யார் யார் என்று கண்டறியும் படியும் கூறினான். அந்த 24 மணிநேரத்தை வாழ்வில் மறக்க முடியாதபடி அவள் ஆக்கிவிட்டாள்.


அவன் அடுத்தடுத்து பிறப்பித்த ஆணைகள் அவனை ரத்னாவிடம் கொண்டு போய் நிறுத்தியது. ஆனால் அவருக்கோ ஒன்றுமே தெரியவில்லை. அவரது மகள் வெளியூரில் வேறு தங்கி படிக்கிறாள், அந்தப் பெண் இவர்கள் சந்தேக வட்டத்துள் விழவும் இல்லை.


"எல்லாம் சரி ! நீங்க ஏன் அவளை பத்தி விசாரிக்கறீங்க?" என்று ரத்னா கேட்க, துருவ்


"இனி நானும் அவளும் தான்" என்ற பதிலை கொடுத்தான். அவருக்கு அது சுத்தமாக புரியவும் இல்லை. ஆனால் நட்சத்திராவை அவன் நேசிக்கிறான் என்ற விஷயம் மட்டும் புரிந்தது.


"அந்த புள்ள வாய் அதிகம், ஆனா நல்ல பொண்ணு. மனசுல நிறைய பாரம், பொறுப்பு அவளுக்கு. பார்வதி அக்காவும் அப்படி தான். நல்ல தைரியமானவங்க. தன்னோட தங்கை பொண்ணை நல்ல வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க" என்று கூறிமுடிக்க, துருவ் அதிர்ந்தான்.


"வாட் ? நட்சத்திரா அவங்க சொந்த பொண்ணு இல்லியா ?" என்று கேட்க, ரத்னா அவனை வினோதமாக பார்த்தாள்.


"உங்களுக்கு தெரியாதா ? நட்சத்திரா அவங்க தங்கை சரஸ்வதி பொண்ணு. அதிகம் பேருக்கு தெரியாது. நக்ஷ்த்திரா அவங்களை அம்மானு தான் கூப்பிடும். சொந்த பொண்ணு மாறி தான் நடக்கும்" என்று கூறிவிட்டு,


நீங்க தப்பா எடுக்கலேன்னா, நட்சத்திரா பார்வதி அக்காவை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு, வீட்டை காலி செஞ்சிட்டு, கொஞ்சம் சாமானை எங்க வீட்டில போட்டிருக்கு. அது...." என்று இழுக்க, துருவ்


"இது தான் அவ வீடு. நான் ஆளை அனுப்பறேன்" என்று அந்த சாமான்களை அவன் பெற்றுக்கொண்டான்.


2/3 அட்டைப்பெட்டிகள், அதில் இருந்த விஷயங்கள் அவன் வாழ்வை தடம்புரள செய்தன.



எதைத் தேடி கிடைக்காது அவன் இருந்தானோ

அது கிடைத்தும் நிலைக்காது போக

துருவ், நட்சத்திரம் இல்லாத வானமானான்.


*******************

அவள் காணாமல் போய், கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து….சென்னை மாநகரத்தில் பெரும் புள்ளிகள் வாழும் பகுதியில் இருக்கும் துருவ்வின் பங்களாவில் மீண்டும் நக்ஷ்த்திரா.


விருப்பட்டு வரவில்லை. ஆனால் இன்று ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற முடிவில் அவள் இருக்க, அவளது அறைக்கத்தவு தட்டப்பட்டது.


திறந்தால், 2-3 பெண்கள் திபுதிபு என்று உள்ளே நுழைய,



"யார் நீங்க? என்ன நடக்குது?" என்று நக்ஷத்திரா க்ரீச்சிட, அவர்கள்


"மேம்! இன்னிக்கி ஈவினிங் சினி அவார்ட்ஸ்க்கு உங்களை ரெடி பண்ண சொல்லி சார் சொல்லிருக்கார்!" என்று கூறி முடிக்க, நக்ஷ்த்திரா



"கெட் அவுட்..எனக்கு எங்கேயும் போக வேண்டாம். சொல்லுங்க உங்க சார் கிட்ட" என்று கத்தத் துவங்க, அவர்கள் என்ன செய்வது என்று தெரியாது முழிக்க, அவளது முதற்பட இயக்குனர் மூர்த்தி அவளை அழைத்தார்.


"நக்ஷ்த்திரா! ஹவ் ஆர் யூ? இன்னிக்கி நிறைய பேர் உன்னை எதிர்பார்த்துகிட்டு இருக்கோம். நம்ம படம் நிறைய அவார்ட் வாங்கும்ன்னு சொல்லறாங்க? வரே தானே!" என்று கேட்க, அவர் மீது இருக்கும் மரியாதை பொருட்டு அவள், விழாவிற்குத் தயாரானாள், ஆனால் வேண்டாம் வெறுப்பாக தான்.


பிங்க் நிற புடவைக்கு தந்த நிற ரவிக்கை என்று அவளை மிகவும் கம்பீரமாக காட்டும் உடையில் அவள் அழகு மிளிர, அலங்காரம் செய்ய வந்த பெண்,



"மேம், ஒரு நிமிஷம், திருஷ்டி பொட்டு.." என்று வினவ, விரக்தியாக அவள் சிரித்தாள்.


வெற்றி மற்றும் ஒரு பெண்ணுடன் பாதுகாப்பாகக் கிளம்பினாள்.


"யார் இவங்க?" என்று அந்த பெண்ணைக் காட்டி கேட்க, அவன் ஜாக்கிரதையாக



"உங்க ப்ரோடெக்ஷனுக்கு" என்று கூற, கேலியாக


"இந்த முறை, நான் உங்க கிட்ட சொல்லிட்டு தான் போவேன், டோன்ட் வற்றி" என்று சொல்ல, வெற்றியின் முகம் இறுகியது.



"அபத்தமா பேசாதீங்க. வெளிய என்ன இருக்குன்னு புரியாம.." என்று படபடவென்று பொரிய,


நக்ஷத்திரா



"சிங்கம் புலியா? உங்க பாஸுக்கு அதுங்க தேவலாம்" என்று சொன்ன பின் தான் அவளுக்கு நிம்மதி. வெற்றி ஒன்றும் கூறவில்லை, அதன் பின்.


விழா நடக்கும் இடமும் வர, அவள் ஏனோ தானோ என்று கலந்து கொள்ள முற்பட, துருவ் இன்னும் அங்கே வரவேயில்லை.



அவனை வெற்றி அழைக்க, அழைப்பை எடுத்தது என்னவோ கணேஷ்.


"பாஸ் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திருவாரு" என்று சிக்கனமாகப் பேசிவிட்டு வைத்து விட்டான்.



துருவ் வரவில்லை என்பது எல்லாம் அவளுக்கு மனதில் பதியவேயில்லை.


அவனோ அவர்கள் இருவருக்காக, ஓரிடத்தில் மிகவும் தெளிவாக தன் எதிரில் இருப்பவனிடம்



"இதோட நீ விடு. நக்ஷத்திராவை என்னை தாண்டி தான் நீ நினைக்கவே முடியும்" என்று கர்ஜிக்க, எதிரில் இருப்பவனோ



"தாண்டினா?" என்று இளக்காரமாக வினவ, துருவ் எழுந்து


"ஒரு நிமிஷம், உன் வீட்டுக்கு போன் போட்டு, உன் பிள்ளைங்க வீட்டுக்கு வந்தாச்சானு கேளு, வரலேன்னா..ஊப்ஸ்.. சின்ன பிள்ளைங்க...ஐ ஃபீல் சேட்.." என்று அமர்த்தலாகக் கூறிவிட்டு செல்ல, எதிரில் இருப்பவன் அவனை ரௌத்திரத்துடன் பார்க்க, அதைக் கண்டு கொள்ளாது துருவ் அவ்விடம் நீங்கினான்.


இங்கே விழா ஆரம்பித்து விட, நக்ஷத்திரா தனக்கு தெரிந்தோருக்கு 'ஹாய் ஹலோ' சொல்லி கொண்டிருந்தாள். முகம் மட்டும் தான் சிரித்து வைத்தது, மனமோ உலைகளமாகக் கொதிக்க, அப்போது அந்த வருடத்தின் சிறந்த புதுமுக நடிகைக்கு விருது வழங்கும் நேரம் வந்தது.


"பெஸ்ட் புதுமுக நடிகை விருது..எனி கெஸஸ் கைஸ்?" என்று வர்ணனையாளர் ஆர்பரிக்க,


"ம்ஹூம்..நான் சொல்ல மாட்டேன்..பட் இதை சொல்ல, அம் இன்வைட்டிங் தி சென்சேஷனல், ராக்ஸ்டார் ஆக்டர் துருவ்" என்று கரகோஷமிட, துருவ் தன் அர்மானி சூட்டில் கம்பீரமாக மேடை ஏறினான். இன்று காலை முதல் அவனை காணாது நிம்மதியாக அவள் இருக்க, எங்கிருந்து இவன் உதித்தான் என்று நக்ஷத்திரா எண்ணமிட, அவன் மேடையில் தன்னிடம் கொடுக்கப்பட்ட கவரை பிரித்து


"பெஸ்ட் டேபியுடன்ட் ஆக்ட்ரெஸ்..எல்லோருக்கும் மிகவும் பிடிச்ச..மிகவும் திறமையான அண்ட் மை பியூடிப்பூல் ஹீரோயின், நக்ஷத்திரா" என்று ஆர்பரிக்க, அவளுக்கு சற்று தலையைச் சுற்ற ஆரம்பித்தது.


ஒன்று அவனது உரிமை கலந்த பாராட்டு என்றாலும் இரண்டாவது அவள் உடல் நிலை. எப்படியோ சமாளித்து மேடை ஏற, அவளது தடுமாற்றத்தை துருவ் கண்டு கொண்டான். அவளை அதிகம் நடக்க விடாது, அவள் அருகே வந்தவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவளை இறுக்கி கட்டிக்கொண்டான்.


அவளுக்கு மட்டும் கேட்குமாறு,


"ஹனி பன்ச்! ஆர் யு ஓகே?" என்று வினவ, அவள்


"முதலில் என்னை விடு நீ, பொறுக்கி" என்று சீற, அவன் முகத்தில் ஒரு நிறைவானப் புன்னகை.


"ம்ம்ம்..இப்போ தான் எனக்கு நிம்மதி" என்று கூறியதுடன் நிற்காது அவள் கன்னத்தில் ஊரறிய, உலகறிய முத்தமிட்டான்.


அவள் கண்கள் அதிர்ச்சியில் நிலைகுத்த, அவனோ


"நெஸ்ட் டைம், என்னை பொறுக்கினு சொன்னே, உன் கன்னத்துக்கு பக்கத்தில தான் உன்னோட எதிரி இருக்கு அண்ட் ஐ லவ் இட்" என்று கிசுகிசுத்தான், குறும்பும் காதலுமாக.


அவளோ தன் எரிச்சலை பொதுவில் காட்டாது இருக்க பெரும்பாடு பட்டாள்.



ஒருவழியாக விழா முற்றுப்பெற, அவளுக்கு உடலில் ஏதோ அசௌகரியம் போல இருக்க, வீட்டுக்கு சென்றால் போதும் என்று ஆக, துருவ் இன்றாவது தான் அன்று பார்ட்டி தினத்தன்று செய்ய நினைத்ததை செய்ய விழைந்தான்.



அவனைத் தேடிக் கொண்டு, அலைகையில், ரஞ்சன் அவள் வழி மறித்தான்.


"சோ, அன்னிக்கி சொன்னது எல்லாம் பொய். நீ அவன் கூட இருக்கே, லைக் யூ லிவ் வித் ஹிம். ஹவ் சீப்? உன்னை மாறி கேவலமான பொண்ணை நான் இது வரை பார்த்தது இல்லை." என்று கேவலமான முறையில் அவளைத் தாக்கி பேச, அவள் கண்ணில் நீர் சொரிய



"ரஞ்சன் நீ நினைக்கறே மாறி இல்ல, அவன் கூட நான் இருக்கறது இஸ் பிகாஸ்.. எப்படி உனக்கு சொல்ல..ஹி.." என்று அவள் தட்டு தடுமாற, ரஞ்சன் பின்னால் துருவ்வைக் காண, அவளது வார்த்தைகள் வராது, அவனை கண்டு முறைக்க, துருவ் ரஞ்சனின் தோளை தட்டி



"உனக்கு என்ன தெரியணும் ரஞ்சன்?" என்று நேரிடையாக கேட்டான்.


"அதை அவ சொல்லட்டும். ஷி கில்ட் மை லவ்..அவள போய் காதலிச்சேனே..என்னை சொல்லணும். இவளுக்கு படத்தில் சான்ஸ் வேணும்ன்னா நேத்து நான், இன்னிக்கி நீ, நாளைக்கு…" என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன், ரஞ்சனின் கன்னத்தில் துருவ்வின் கை இடி என இறங்கியது.



"யு ப்ள**** ******** ******! ஹவ் டேர் யு" என்று அவன் சட்டை காலரைப் பற்றி இழுத்தவன்,


"ஹவ் டேர் யு ஸ்பீக் அபோட் மை வைஃப் ! ராஸ்கல்" என்று கர்ஜிக்க, நக்ஷத்திரா அதிர்ச்சியில் மட்டுமா உறைந்தாள், அவளுள் ஏதோ ஒன்று அறுந்து விழுவது போன்ற உணர்வில் அவளுக்கு ஒரு வித தள்ளாட்டம் வர, கால்கள் இடையே குருதி பாய,


"சிக்கு.. ." என்ற துருவ்வின் கத்தல் அவள் காதில் எட்டாது, அவள் ஸ்மரனை இல்லாது, மயங்கி கீழே விழுந்தாள்.

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 14


பூமியில் அவள் வீழ்வதற்குள் அவன் அவளைத் தாங்கி விட்டான்.


அவனது முகம் பீதியடைய, அங்கிருந்தோரில் ஒருவர் ஆம்பியுலன்சுக்கு அழைக்க, தாமதம் அல்லாது அதுவும் வந்தது. ஆனால் அவளது உதிரப் போக்கு நிற்கவில்லை. அவளது பிங்க் நிற உடை, அவளை ஏந்திய அவன் கைகள், அவனது உடை என்று ஒரே ரத்தப் போக்கு தான்.



பின்பக்கம் அவளை கிடத்திவிட்டு, அவள் கன்னத்தைத் தட்டி பார்த்தான்.


"சிக்கு, நான் வந்தாச்சு..ப்ளீஸ் வேக் அப். உன்னோட சாம் வந்தாச்சு" என்று அவனது முயற்சி எல்லாம், அவள் மயக்கத்தின் முன் செல்லுபடி ஆகவில்லை.


அன்னை இறந்த போது, அவளது முடிவு அவளுக்குப் பெரிய ஆறுதல் என்று அந்த 15ஆம் வயதில் அவன் இறப்பைப் பார்த்தான். ஆனால் இவளுக்கு வெறும் மயக்கம் தான், முழித்து விடுவாள் என்று அறிந்தும், துடித்துத் தவித்தான். மார்பில் அவளை அணைத்துக் கொள்ள அவன் முயல, செவிலிப் பெண்,


"அவங்களுக்கு ஒன்னும் இல்ல சார் ! ஸ்ட்ரெச்சரில் இருக்கட்டும்" என்று அதட்ட, துருவ், இயலாது அவளை ஸ்ட்ரெச்சரில் வைத்து விட்டு, பிரிய மனமில்லாது அவளைக் கண்டான். விழா நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் மருத்துவமனையாக ஷாந்தனு மருத்துவமனைக்கு அவர்களது ஆம்புலன்ஸ் சென்றது.


அங்கே சத்யஜித் என்ற பாலகனுடன் அம்புஜாக்ஷி, தனது அறையில் கெஞ்சி கொண்டிருந்தாள்.


"அஜூ ! புரிஞ்சிக்க ட்ரை பண்ணுடா ! அம்மாக்கு இன்னிக்கி எமெர்ஜென்சி கேஸ் ! அதனால் தான் வரலே ! இல்லன்னா, அம்மா உனக்கு அவார்ட் கொடுக்கற பங்கஷனை மிஸ் பண்ணுவேனா" என்று தாஜா செய்து கொண்டிருக்க, அவனோ தந்தையின் பிடிவாதத்தை அந்த வயதில், அவனது உயரம் வரை கொண்டிருந்தான்.


"என்ன சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் ! யு சீட்டெட் மி" என்று கோபமாக அன்னையை , கைகளைக் கட்டிக்கொண்டு பார்க்க, அவனது உயரத்திற்கு அம்பா குனிந்து,


"அஜ்ஜு ! யாராச்சும் வேணும்னு செய்வாங்களா ?அம்மா லவ்ஸ் யு சோ மச்" என்று அணைத்துக் கொள்ள, அவனோ அவரது அணைப்பில் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக விடுவித்து கொண்டு


"நோ ! யு லவ் அப்பா மோர்" என்று முறுக்கி கொள்ள, அம்பாவின் முகத்தில் அவனது சிறு வயது பொறாமையில் கேலி சிரிப்பு,


"அப்பறம் ! இன்னும் என்னெல்லாம் சொல்லு ! அம்மா லவ்ஸ் லாவண்டர் மோர், அம்மா லவ்ஸ் ரதி மோர்" என்று தன்னுடைய செல்ல ஆட்டுக்குட்டி மற்றும் மகளின் பேரை சொல்ல, அவன் தனது கோபத்தின் உச்சிக்கு சென்றான். அவளது முகத்தை பார்க்காது வேறு புறம் திரும்பி கொள்ள, அம்பா அவனை பின்னாலில் இருந்து அணைத்தும் கொண்டாள்.


"இந்த அம்மாக்கு எல்லாரையும் பிடிக்கும், ஆனா அஜ்ஜு எனக்கு ஸ்பெஷல் ! அது ஏன்னு இப்போ தெரியாது, நான் சொன்னாலும் புரியாது! நீ பெரிய பையனா ஆகும் போது புரியும் அஜ்ஜு. சத்யாமாக்கு , அப்பா எப்படியோ, அது மாறி தான் நீ எனக்கு. "என்று சமாதானம் செய்ய, சத்யாவின் பெயரை கேட்டவனுக்கு மனம் சற்று அமைதி அடைந்தது.


"நிஜமாவா ? " என்று அவனது வயதிற்கு ஏற்ற மனநிலையில் கேட்க, அம்பா


"அப்பா இஸ் எ கிரேட் பெர்சன், குட் ஹ்யுமன், பாசமான மகன், எனக்கு அன்பான கணவர், உங்களுக்கு பெஸ்ட் அப்பா. இப்படி அவர் இருக்க காரணம், சத்யா மாவோட அன்பு. அதை நான் நம்பறேன். அதே மாறி தான் அன்பை தான் உனக்கும் ரதிக்கும் நான் கொடுக்கறேன். சோ இந்த அன்பு கண்டிப்பா என்னை ஏமாத்தாது. ஒருநாள் நீயும் உன் அப்பா மாறியே வருவே ! நல்ல மனுஷனா, பெஸ்ட் டாக்டரா, அதை நான் நம்பறேன் அஜ்ஜு" என்று அவளது உணர்வுபூர்வமான வார்த்தைகளில் அவன் சரியானான்.


அவனது முகத்தில் புன்னகை தவிழ, அம்பாவின் முகத்திலும் புன்னகை. அன்னையும், மகனும் ஒருவாறு தங்கள் பிரச்சனையைத் தீர்த்து கொள்ள, கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.


"எஸ் கம் இன்" என்று அவளும் வீடு செல்வதற்குத் தயாரானாள்.


உள்ளே வந்த தேவ்,

"ஆல் குட் ?" என்று விசாரிக்க, அம்பா பொய் கோபத்துடன்


"ஏன் கேக்க மாட்டீங்க ? உங்களோட ஸ்மால் சைஸ் க்ளோனை கொடுத்திட்டு, ஆல் குட்ன்னு எப்படித்ததன் கேக்க வருதோ?" என்று சொல்ல, தேவ் வசீகரமாகச் சிரித்தான். என்றும் அவனது புன்னகைக்கு வயதாகவில்லை, அன்று முதல் முறையாக அம்பாவை பார்த்த அதே புன்னகை தான் இன்றும்.


"ஒரு க்ளோன் கொடுக்காம, இரண்டா கொடுத்து இருக்கணும்" என்று மகனுக்குக் கேட்காதவாறு அவள் காதில் கிசுகிசுத்தான்.



அவனது பேச்சில் விளைந்த வெட்கச் சிவப்பை மறைக்க, பொய் கோப முக மூடி அணிந்தாலும், அவளது கன்னங்கள் அவளை ஏமாற்றத்தான் செய்தன. அதில் அவனது மந்தகாச சிரிப்பு இன்னும் விரிவடைந்தது. மூவரும் வீட்டிற்கு கிளம்ப எத்தனிக்க, வாயில் கடக்கும் நேரத்தில், நக்ஷத்திராவை எந்திக் கொண்ட ஆம்பியுலென்சும் வர சரியாக இருந்தது.


அவசர சிகிச்சை பிரிவில் அவளை கிடைத்தியவர்கள், உடனே அவளுக்கு என்ன ஆயிற்று என்று கண்டறிந்து,


"கால் டாக்டர்.அம்புஜாக்ஷி தேவிரதன் ! பாஸ்ட்" என்ற கூக்குரல் தெளிவாக துருவ்வின் காதில் விழுந்தது. வெளியே வந்த செவிலிப்பெண்ணிடம்


"என் வைப்புக்கு என்ன ?" என்று அவன் விசாரிக்க, அவளோ நடிகர் துருவ்விற்கு எப்போது திருமணம் ஆயிற்று என்ற அதிர்ச்சியில் இருக்க, அவன்


"என் வைப்புக்கு என்னனு கேட்டேன் ?" என்று மீண்டும் அழுத்தமாக வினவ,


"அவங்க ...அவங்க ப்ரெக்னெட் ..அபார்ட் ஆகற மாறி இருக்கு" என்று அவசரமாக மொழிந்துவிட்டு, அவசர பிரிவுக்குள் சென்று விட, அவன் கல்லாய்ச் சமைந்தான். குழந்தை ஒன்றை யார் தான் விரும்ப மாட்டார்கள், அதுவும் யாருமற்றவனுக்கு மனைவி மற்றும் குழந்தை என்பது சாகாவரம் போன்றது. ஆனால் ஒருசிலருக்கு சோதனை என்பது ஒரு கட்டத்தில் நின்றுவிடுவதில்லை.



என்ன நினைப்பது என்ன செய்வது என்று அறியாத மனநிலையில் அவன் இருக்க, இயக்குனர் ரவி வர்மா அவனைக் காண மருத்துவமனைக்கு வந்தார்.


"துருவ் !" என்ற ஒற்றை அழைப்பில் அவன் உருகியே விட்டான். கண்கள் நிரம்ப அவனை பார்த்த ரவி வர்மா, அவனை அணைத்து கொண்டார்.


"நான் கேள்விப்பட்டது எல்லாம் நிஜமா ?" என்று வினவ, அவன்


"அன்னிக்கி பார்ட்டியேலே உங்ககிட்ட அவளை என்னோட மனைவியா அறிமுகப்படுத்த நினைச்சேன். ஆனா அப்போ நேரம் சரியா இருக்கலே, இப்போ இந்த மாறி நேரத்துல சொல்ல வேண்டிய நிலை. நக்ஷத்திரா, என்னோட மனைவி. " என்று சொல்லி முடித்தான். துருவ், திரைப்படத் துறையில் யாரையாவது மிகவும் மதிக்கிறான் என்றால், அது ரவி வர்மாவைத் தான். அவரிடம் முதலில் இதை கூறிவிட்டு, பத்திரிக்கைக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, தன்னுடைய மனைவியாக நக்ஷத்திராவை அறிமுகப்படுத்த நினைத்து இருந்தான். ஆனால் இப்போது இந்த செய்தி வேறு விதமாக எல்லோரையும் போய்ச் சேரப்போகிறது.


அதைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. அவனுக்கு அவள் மனைவி தான். அவள் எண்ணங்கள் வேறு விதமாக ஆகும்வரை, அது மாறப்போவதில்லை. அவனது பேச்சில், ரவி வர்மா அவனை ஆராய்ச்சிப் பார்வை ஒன்றை பார்க்க, அவரது பார்வையின் பொருளை உணர்ந்தவன்


"என்னோட கடந்த காலம் வேற, அதை நினைச்சு எனக்கு சத்தியமா பெருமை இல்ல. உங்களை மாறி நான் ஒரு பொண்ணுக்கு மட்டும் நேர்மையா நான் இருக்கலேன்னு நான் வருந்தறேன். பட் நான் இனி நான் அப்படி இல்ல. அவளுக்கு சொந்தமானவன், அவளுக்கு மட்டுமே சொந்தமானவன்" என்று உறுதி அளிக்க, ரவி வர்மாவின் மனதில் ஆயிரம் சொல்ல முடியா உணர்வுகள்.



"தப்ப உணர்ந்து இருக்கே ! அது தான் முக்கியம், நல்ல இருப்பே ! மை பெஸ்ட் விஷஸ் " என்று வாழ்த்த,அவன் முகத்தில் விரக்தியான ஒரு சிரிப்பு.


"முன்னே கடவுள்ன்னு சொன்னா, ஏலியன் இன்னும் பார்க்கலியான்னு கேலி செஞ்சேன்.ஆனா கடவுள் இருக்காரோ இப்போ தோணுது. என் தப்புக்குறிய தண்டனையை கொடுக்க ஆரமிச்சுட்டாரு" என்று அவளது நிலையைக் கூற, ரவி வர்மா கோபத்தில்


"அவளுக்கு என்ன வயசுன்னு தெரியுமா?" என்று காட்டமாகக் கேட்க, துருவ் தலை குனிந்தான். 21 வயது பெண்ணின் திருமண வயது என்று அரசாங்கம் கூறுகிறது. உயிரியல் ரீதியாகவும், பெண்ணின் உடல் அந்த 21 வயதிற்கு பிறகு ஒரு கருவைச் சுமக்க தகுந்த பலத்தைக் கொள்கிறது. இதை அறியாவதவன் அல்ல அவன். ஒருநாள் இரவு அவன் அகத்தையைப் பெரிதாகக் கொண்டான். அது அவனை எவ்வாறெல்லாம் அவனை கொண்டு செல்லப் போகிறதோ...



ராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில் போர் வந்ததன் காரணம் 2 வெவ்வேறு பெண்கள் மட்டுமல்ல, 2 ஆண்மக்களின் அகம் மற்றும் பேராசை. இங்கு அவனுக்கு அவள் மீது அளவுக்கு அதிகமான ஆசை, காதல். அகம், அதை அவள் இல்லாத போதே அழித்து விட்டாளே!


ஆயினும் அவன் செய்ததற்கு, அவன் மனசாட்சி அவனை சும்மா விடுமா? இங்கே இவன் அழிந்தால், அவளும் தான் அவனுடன் அழிவில் இருப்பாள். 'அவர்கள்' என்பதை அவளால் மட்டுமே உருவாக்க முடியும்.


ரவி வர்மாவின் கேள்விக்கு அவன் ஒன்றும் சொல்லாது இருக்க, அம்பா அவசர பிரிவில் இருந்து வெளியே வந்தாள்.


"பேஷண்டோட ஹஸ்பண்ட்?" என்று விசாரிக்க, துருவ் எழுந்தான்.



"ஒருசில கையெழுத்து வேணும். அண்ட் பேஷண்ட் ஏஜ் என்ன?" என்று கூர்மையாக அவனைப் பார்த்தான்.



"18" என்று அவனது பதிலில் அம்பா காண்டாகிப் போனாள். மருத்துவர் உடுப்பில் தன் கோபத்தை வெளிக்காட்டக் கூடாதென்ற போதனையில், தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.


"டாக்டர்! அவளுக்கு.. " என்று அவன் கேட்டு முடிப்பதற்குள், அவளே



"அம் கோயிங் டு டூ மை பெஸ்ட்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள். அடுத்து வந்த 2 மணி நேரம் அவன் வாழ்வை இன்னும் தடம் புரளத்தான் செய்தது.




அடுத்த முறை அவள் வெளியே வர, அவன் முகத்தில் சுத்தமாக ஜீவனே இருக்கவில்லை. என்ன ஆயிற்று என்று கேட்கக் கூடத் தயங்கினான். அம்பா முகத்தில் கோபத்தைக் காட்டாது இருக்க மிகவும் ப்ரயத்னப்பட்டாள்.


"மிஸ்டர்.துருவ் ! அம் சாரி அபோட் யூர் லாஸ்" என்று மட்டும் தான் கூற முடிந்து அவளால். அதில் அவன் நக்ஷத்திராவிற்கு என்ன ஆயிற்றோ என்று பீதி அடைய, ரவி வர்மாவும் அதிர்ச்சியில் மூழ்கிப் போனார்.


"என்னால உங்க குழந்தையை காப்பாத்த முடியலே ! அவங்க இன்னும் மயக்கத்துல இருக்காங்க" என்று உபரி தகவல் அளிக்க, அவனுக்கு அது ஒருவிதமான நல்லதும் கெட்டதும் கலந்தச் செய்தியானது.


"அவ…" என்று இழுக்க, அம்பா,


"நாளைக்கு பார்க்கலாம்" என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, நக்ஷத்திராவை அறுவை சிகிச்சை அறையில் இருந்து தீவீர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றும் படி உத்தரவு பிறப்பிக்கலானாள் . ஒரு ஸ்ட்ரெச்சரில், உடல் முழுவதும் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டு, ஸ்மரனை இல்லாத அவன் மனைவியைக் கூட்டிக் கொண்டுச் செல்வதை அவன் பார்க்க, உயிரோட்டம் இல்லாத அவள் முகம் அவனை வதைத்தது.


மயக்கத்தில் உடல் வலி அல்லாது, மன வலி உணராது அவள் இருக்க, அவளுக்கும் சேர்த்து இங்கு அவன் எல்லா வித வேதனையும் சுமக்கலானான், நிரந்திரமாக.


அவன் மட்டுமா? அங்கே ரவி வர்மாவும் தான். சிறுபெண், எப்படி தாங்கினாளோ, அவளது உடல் வலியை யாரும் ஏற்க முடியாது. ஆனால் மன ரீதியாக அவள் பட்ட வேதனைகள் ? யாரால் அதனை போக்க முடியும். பெற்றோர்கள் என்பது அவளை பொறுத்தவரை கானல் கனவு. தந்தை இருக்கிறார், ஆனால் வருவாரா ? வந்தாலும் அவளைத் தன் மகள் என்று உரைப்பாரா ? அப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தால், அவள் தான் அவரைத் தந்தை என ஏற்றுக்கொள்ளவாளா?


கணவன் என்பவன் இப்போது நிஜம் ! அந்த நிஜத்தை வேண்டும் மனமில்லை அவளுக்கு. அவளாக விரும்பும் போது அந்த நிஜமும், ஒரு நிழலாகுமோ ! அனைத்தும் இனி அவள் கையில் தான்.


அவசரப் பிரிவுக்கு அவள் சென்று விட்டாள். இனி அவனால் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாது, இங்கே காத்துக் கிடப்பதைத் தவிர.


"வீட்டுக்கு போ ! நான் உன்னை டிராப் பண்ணறேன் !" என்று ரவி வர்மா கூறியும், அவன்


"இல்ல சார்! அவ முழிக்கும் போது நான் இங்க இருக்கணும்" என்று அவன் உரைக்க, அவனது காதல் புரிந்தாலும், அவன் செய்தது சரி என்று அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை சொல்ல உரிமையும் இல்லை.


"டேக் கேர் !" என்று மட்டும் தான் கூற முடிந்தது.


உறக்கமில்லா இரவுகளை அவன் அனுபவித்து இருக்கிறான். இதே போன்று ஓர் மருத்துவமனை தளத்தில், அவன் இதே போன்று காத்திருந்து இருக்கிறான். அன்று அவன் மனம் எப்படி இருந்தது என்று அவன் அறிவான். ஒரு காலத்தில் தன் கோபத்தை அடக்கி ஆள முடியாது இருந்திருக்கிறான். மருத்துவமனை என்பதை மறந்து, தன் தந்தையிடம் சண்டையிட்டு இருந்திருக்கிறான். தாத்தா நீலகண்டன் புண்யத்தில், அவன் அவன் கொலை முயற்சி குற்றத்தில் அன்று மாட்டிக் கொள்ள வில்லை.


அவர் தடுத்து நிறுத்திராவிட்டால், அவன் தன் தந்தையை அன்று என்ன வேண்டும் என்றாலும் செய்திருந்திருப்பான். அவ்வளவு வெறுப்பு ! இன்றும் தொடர்கிறது ! அதே போன்ற வெறுப்பு தானே அவளுக்கும் தன் மீது இருக்கும்.


என்ன ஆனாலும், அவள் என்ன சொன்னாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான், ஆனால் அவளோ அவனை வதைக்கத் தான் போகிறாள், வார்த்தைகளால் .. வார்த்தை என்பது சிலசமயம் எழுத்தைவிட கூர்மையான ஆயுதம் ! வார்த்தையின் வீரியத்தை அவன் மட்டுமா அனுபவிக்க போகிறான்? அவளும் தான்!!
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தான் செய்தவற்றை எழுத, ஜூனியர் மருத்துவரிடம் கூறிவிட்டு, வீட்டிற்கு வந்த அம்பா, நேரே சென்றது , ரதியைப் பார்க்கத்தான். குழந்தைகள் இருவருக்கும் ஒரே அறை, ஒரு கட்டில் மேல், மற்றொரு கட்டில் என்று ரயில்இல் இருப்பது அமைந்து இருக்கும். சத்யஜித் , எப்போதுமே மேல் கட்டிலில் தான் உறங்குவான். கீழே படுத்து கொண்டிருக்கும் ரதியை முகத்தில் இருக்கும் முடி கற்றை ஒதுக்கி விட்டு, அம்பா, தனது அச்சான மகளையே பார்த்துக் கொண்டிருக்க, தேவ்


"என் பொண்ணு, உன்னை விட அழகு, பொறாமை படாதே ! கண்ணு வைக்காதே !" என்று குறும்பும் கேலியுமாக சொல்ல, அம்பா ஒன்றும் சொல்லாது அவனைப் பார்க்க, அவளது முகத்தில் இருந்த அயர்வைத் தாண்டி வேதனை நிலவுவதை அவன் கண்டான். அவளை இழுத்து தனக்கு நெருக்கமாக நிறுத்தியவன்,


"என்ன ஆச்சு ?" என்று அவள் முகத்தில் மென்மையாக ஊத,


கணவன் என்பவன் அரணாக இருந்தாலும், அன்றும் அவள் மிகவும் தனிமையாக உணர்ந்தாள்.


"நத்திங் !" என்று அவள் கூற, அந்த உப்பு சப்பு இல்லா பதிலில்


"அப்போ, தேர் இஸ் சம்திங் !" என்று பிடித்துக் கொண்டான்.


"பொண்டாட்டியை நம்பனும் !" என்ற பதிலும் அவனிடத்தில் எடுபடவில்லை.


"இப்போ வந்த எமெர்ஜென்சி கேஸ் தானே !" என்று கேட்க, அவள் அவனிடத்தில் மறைக்க இஷ்டமில்லாது ஆமாம் என்பதற்கு தலையை ஆட்டி வைத்தாள்.


"அம்பு டார்லிங் ! நாம டாக்டர்ஸ், கடவுள் இல்ல ! அவர் கிட்ட இருந்து வர உயிர், அவர் கிட்ட போயி தீரும் ! அது எப்போன்னு அவர் தான் டிசைட் பண்ணுவார்" என்று தத்துவ சமாதானம் செய்ய, அவளோ


"நானும் ஒரு மனுஷி ! எனக்கு பொறுமை அளவு இருக்கு ! என்னால எப்போதும் உங்களை மாறி டாக்டரா மட்டுமே இருக்க முடியாது !" என்று ஒருவேகத்தில் பேசி விட்டாள்.



பேசியபின் தான், தான் அதிகம் பேசி விட்டோமோ என்று நாக்கைக் கடித்து கொண்டாள். ஆனால் அவனோ சாந்தமாக நின்றான்.


"யாரு சொன்னா நான் எப்போதும் டாக்டர்னு! ரைட் நவ், ஐ வாண்ட் டு பி யூர் லவ்விங் ஹஸ்பன்ட் !" என்று அவளை தன் கையில் ஏந்திக்கொண்டான், அவளது எதிர்ப்பைச் சட்டை செய்யாது.

காதலுக்கு உடல் சம்பந்தமும் உண்டு, ஆனால் மனச் சேர்க்கை ஆனபின் தான் கூடலில் இருவருக்கும் ஒருவித லயிப்புத் தன்மை இருக்கும். இந்த ஜோடி வேறு விதமாக ஆரம்பித்து, இன்று சந்தோஷமாக இருக்கக் காரணம், இவர்களின் புரிதல் அளவு! அந்தப் புரிதல் அளவு என்ற ஒன்று வரும் வயதை இருவரும் எட்டி இருந்தனர்.


ஆனால் துருவ் மற்றும் நக்ஷத்திராவின் ஆரம்பம், ஒரு கோணல் ஆரம்பம். முதற் கோணல் முற்றிலும் கோணல் என்றால், இவர்கள் ?



அவர்களுக்குள் இருக்கும் சாம்-சிக்கு என்போர் இங்கிட்டு தலையிட்டால், 2 விதமாக அவர்கள் உறவு முடியும். இருவரும் மனம் வைத்தால் தான் இங்கே நல்ல முடிவு .


*********

அதிகாலைப் பரபரப்பு குறையாத அன்பு இல்லம். சத்யா மற்றும் சுகந்தி ஊரில் இல்லை என்பது, பெற்றோர்களின் உடல் மொழியில் இருந்தே தெரிந்தது. வி சி தான் பெற்ற வாலு பிள்ளைகள் பின்னால், சுற்றிக் கொண்டு இருக்க, ஹரியின் பின்னால் ரதி


"டேய் ஹரி! நேத்து ஏண்டா என்னை விட்டிட்டு போனே!" என்று மரியாதையாக அவனை திட்டிக் கொண்டு இருக்க, தேவ்



"உன்னை விட வயசில் பெரியவன்! வாடா போடான்னு சொல்ல கூடாது" என்று கண்டித்துக் கொண்டு இருந்தான்.


அபர்ணா மற்றும் சத்யஜித் தத்தம் அன்னையருடன்.


அபர்ணா என்ற அப்புவை சத்யஜித்,


"அப்பு! இன்னிக்கு என்ன ஆனாலும் அந்த பசங்களுக்கு ஸ்லைட் இல் இடம் கொடுக்க கூடாது" என்று திட்டம் திட்டிக் கொண்டு இருக்க, அம்பிகா


"போதும்டா!ரெண்டு பேரும் முதலில் இட்லி சாப்பிடுங்கோ" என்று துரிதப்படுத்த, அம்பா ரதியிடம் மல்லு கட்டிக் கொண்டு இருக்கும் தேவ்வைப் பார்த்தாள்.


"அவன் என்னடி போட்டு கூப்பிட்டா, நானும் அவன டா போட்டு தான் கூப்பிடுவேன்" என்று பஞ்சாயத்து அங்கே முடியாது இருக்க, அம்பா தான் இடையிட்டு அவளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியதாக இருந்தது.


"உன் பொண்ணுக்கு உன்னை வாய் அதிகம் " என்று செல்லமாக தேவ், அம்பாவிடம் அலுத்துக்கொண்டான்.


அவன் பேச்சிற்கு பதில் பேச்சாக,

"இந்த வாயாடி பொண்ணு தான் வேணும்னு நீங்க வந்தீங்க" என்று பேச, தேவ் காதல் மன்னனாக,


"என்ன செய்ய, இந்த வாய் இருக்கே ….." என்று அந்தரங்கமாக பேச முயல, அம்பா அவனை முறைத்து தள்ளினாள்.


"ஐ லவ் திஸ் வாயாடி பொண்ணுனு சொல்ல வந்தது தப்பா, அம்பு டார்லிங் ! " என்று சாமர்த்தியமாகப் பேச்சை மாற்றிவிட்டான். அவன் காதலை அறிவாள் அவள், காதல் கொடுத்த நம்பிக்கையில் தான் அவர்கள் வாழ்வு. இப்படிப்பட்டவனை நேற்று ஏதோ ஆற்றாய்மையால் அதிகமாகப் பேசி விட்டோமோ என்ற குற்ற உணர்வு தோன்ற, அம்பா



"நேத்து..அந்த கேஸ்.." என்று ஆரம்பிக்க, தேவ் அவள் வாயில் விரலை வைத்து,


"ஷுஷ்! வீட்டில் நோ ஹாஸ்ப்பிடல் பேச்சு. அண்ட் எந்த ஒரு பேஷண்ட் பத்தி வெளிய டாக்டர் பேச கூடாது, மை டாக்டர் வைஃப்!" என்று அவளைத் தடுத்தான். இருவரும் சற்று நெருங்கி தான் நின்று கொண்டு இருந்தமையால், அவனையே கண் வைக்காது அம்பா பார்க்க, தேவ் கிசுகிசுப்பாக,


"இன்னிக்கி ஹாஸ்ப்பிடல் போக வேண்டாமா?" என்று வினவ,



அவர்கள் இடையே அவர்கள் திருமகன் சத்யஜித் புகுந்தான்.


"எக்ஸ்க்யூஸ் மி அப்பா! ஐ நீட் மை மாம்" என்றான் தேவ்வை முறைத்து கொண்டே. சத்யஜித்திற்கு, தன் அன்னை தனக்கு மட்டும் தான் என்ற எண்ணம் அதிகமாக உண்டு. அதுவும் இருவரும் நெருங்கி நிற்பதை கண்டால் போதும், விடுவிடுவென வந்து விடுவான்.


பெருமூச்செறிந்த தேவ், அம்பா காதில்


"எனக்கு வில்லன், உன் பையன் தான்" என்று குசுகுசுக்க, அம்பா கேலியாகச் சிரித்தபடி



"2 வில்லன்ஸ் இல்லாம போயிட்டங்களே" என்று கலாய்த்தாள்.


ஒருவழியாக பிள்ளைகளை அனுப்பிவிட்டு, மருத்துவமனை வர, அம்பா காலையில் தான் செய்ய வேண்டிய அறுவைசிகிச்சைகளைச் செய்து முடித்துவிட்டு, மதிய வாக்கில் தனது சுற்றுகளை ஆரம்பித்தாள்.


நக்ஷத்திராவின் அறையில்,

"மிஸஸ். நக்ஷத்திரா துருவ் ! ஹவ் ஆர் யு பீலிங்? ஏதாச்சும் வலி இருக்கா?" என்று அம்பா ஆரம்பிக்க, நக்ஷத்திரா எதையோ வெறித்து பார்த்து கொண்டிருக்க, அம்பா,



"மிஸஸ். நக்ஷத்திரா ஆர் யு ஓகே!" என்று அக்கறையாகக் கேட்க, அவள் அதற்கும் பதில் பேசவில்லை. செவிலிப் பெண்ணிடம், என்ன எது என்று அம்பா விசாரிக்க, அவரோ நக்ஷத்திராவிற்கு அவனது கரு கலைந்த விஷயம் தெரிவிக்க பட்டதில் இருந்து, இப்படித் தான் இருக்கிறாள் என்று சொல்ல, அம்பா புரிந்து கொண்டாள்.



உடல் வலியை விட மன வலி பெரியது ! அதுவும் இவளுக்கு 18 வயது தான், அந்த வயதில் ஏற்படும் சுரப்பிகள் கோளாறுகள் வேறு. 18 வயதில் தாய் என்ற ஸ்தானம் அதிகம், அதுவும் இந்தப்பெண் இதைத் தெரிந்து ஏற்றுக்கொண்டாளா இல்லை…. என்று அம்பா அறியாள்.


"மிஸஸ். நக்ஷத்திரா ! எனக்கு புரியுது ! பட் உங்க உடல் நிலை, ஒரு கருவை தாங்கற அளவு இப்போ பலமா இல்லை. இது முடிவு இல்ல, உங்களுக்கு வயசு இருக்கு !" என்று ஆதுரமாக பேச, நக்ஷத்திரா


"ஸ்டாப் காலிங் மி மிஸஸ். நக்ஷத்திரா ! அம் நாட்" என்று சீற, அம்பா குழப்பமானாள். இந்த பெண்ணிற்குச் சித்தம் கலங்கி விட்டதோ என்று எண்ணத் துவங்கினாலும், அவளது உடல் மொழி ஸ்திரமாக தான் இருந்தது. பேச்சில் ஓர் உறுதி, திண்ணம் இருக்க, அம்பா இது வேறு ஏதோ குடும்ப விஷயம் என்று முடிவு செய்தாள்.


"ஓகே ! இப்ப சொல்லுங்க ! வேற ஏதாச்சும் பாடி பெயின் இருக்கா ?" என்று மருத்துவராகப் பேச்சை ஆரம்பிக்க, நக்ஷத்திரா


"நோ ! நான் இங்கிருந்து போகணும் ! அதான் வேணும் !" என்று ஒரு பதிலை கொடுக்க, அம்பா,


"ம்ம், வெல் எங்களுக்கு ஒரு சில செக் அப்ஸ் பண்ணனும், அப்பறம் போகலாம்! இப்போ யு நீட் ரெஸ்ட்" என்று சொல்லிவிட்டு அவ்விடம் நீங்க முற்பட, நக்ஷத்திரா


"என்னை ஏன் காப்பாத்தினீங்க ! இவளும் போய் தொலையட்டும்னு விட வேண்டியது தானே டாக்டர் !" என்று பேச்சைத் தொடர விருப்பப்பட, அம்பா, நக்ஷத்திராவின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டாள்.


"உயிரை காப்பாத்த தான் நான் படிச்சு இருக்கேன் மா ! பட் எல்லா நேரமும் அது மாறி இருக்கறதில்லை. அம் சாரி அபோட் யூர் லாஸ்" என்று தான் குரல் தொனியில் எவ்வித வேறுபாடும் இல்லாது உரைத்தாள்.


"வெல் ஐ டோன்ட் வாண்ட் டு லிவ் ! ஐ நீட் மை கிட் பேக் ! எனக்குன்னு அந்த குழந்தை மட்டும் தான், வேற யாரும் இல்ல ! என்னை மறுபடியும் அநாதை ஆக்கி ... " என்றுகூறிவிட்டு, அவள் கண்கள் பனிக்க ஆரம்பிக்க, அந்த நேரத்தில் தான் துருவ், அவளது அறைக்குள் நுழைந்தான்.


அவளுக்கு முழிப்பு வந்தபின், அவளது அறைக்கதவின் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்தான். உள்ளே செல்ல அவனுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.


இப்பொது மருத்துவர் அங்கே இருக்கிறார், என்று கேள்விப்பட்டு அவன் வருகை தர, நக்ஷத்திரா என்ற மனுஷி, அந்நேரம், தன் சுற்றத்தை மறந்தாள், யார் யார் இருக்கிறார்கள் என்பதை மறந்தாள் .


"யு ப்ள*** கில்லர் ! யு கில்ட் மை சைல்ட் ! என்னை கொன்னு போட்டு இருந்திருக்கலாமேடா ! வை ? ஏண்டா ஏன் ? என்னை ஏன் இன்னும் உயிரோட வச்சு இருக்கே ! இன்னும் என்ன வேணும், அதான் நீ என்னை ...யு ரே**** மி, யு கில்ட் மை ஹானர் ! இன்னும் என்ன? என் உயிரை தவிர ஒன்னும் இல்ல! கில் மி யு **************! கில் மி ஐ சே !


என்னை கொன்னு போடு ! எனக்கு உன்னை பாக்க வேணாம் ! யாரையும் பாக்க வேணாம் ! என் குழந்தை இல்லாத உலகத்துல நான் இருக்க வேணாம் ! என்னை கொன்னு போடுடா !" என்று கத்த ஆரம்பிக்க, அம்பா அதிர்ந்து போனாள் என்றால், துருவ் கல்லாய்ச் சமைந்தான்.


அத்துடன் அவள் நிறுத்தவில்லை , அவள் இருந்த நிலைக்கு அவளால் எப்படி எழுந்து நிற்க முடிந்தது என்று அவள் மட்டுமே அறிவாள். எப்படியோ எழுந்தவள், அவனை அடைய முற்பட, அம்பா செவிலி பெண்ணிடம் ,


"சிஸ்டர் ! காச் ஹர்" என்று கூக்குரல் இட அதற்கெல்லாம் அடங்காது வெறி பிடித்தவள் போல் நக்ஷத்திரா இருந்தாள். முகம் சிவசிவக்க, கையில் கிடைத்த பொருளை எடுத்துக் கொண்டவள், அதை வைத்து செவிலிப் பெண்ணைத் தாக்க ஆரம்பித்தாள். அப்போது தான் துருவ் தன்னிலை அடைந்தான். அவளை எட்டிப்பிடித்தவன், அவள் கையில் இருந்த அந்த மருத்துவமனைப் பாத்திரத்தை அவளிடம் இருந்து பிடுங்க முற்பட்டான், அதில் வெற்றியும் அடைந்தான்.


"நக்ஷத்திரா ! பிஹேவ் " என்று அவன் அதட்ட, அவளோ இன்னும் பன்மடங்கு வெறி கொண்டு, கையில் கிடைத்த, அவளது ஆவணங்கள் அடங்கிய ரைட்டிங் பேட்டை கொண்டு அவனை தாக்க ஆரம்பிக்க, அந்த ரைட்டிங் பேட்டின் கிளிப் இருக்கும் பகுதி அவன் புருவத்தின் மேல் பலமாக பட்டு, அவன் நெற்றியில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. வலித்தாலும் அதை பொறுத்துக் கொண்டு, அவள் கையில் இருக்கும் ரைட்டிங் பேட்டை அவன் பிடுங்க , அம்பா அவசர அழைப்பை அழுத்தியதால், அதே நேரம் அவளது அறைக்குள் திபுதிபுவென்று ஆட்கள் புக, அந்த அறை, நட்சத்ராவின் வெறியால் ஓர் போர்க்களம் போல் காட்சி அளித்தது.


"காம் டவுன் ! நக்ஷத்திரா ! வீட்டுக்கு போய் நம்ம பிரச்சனையை பேசலாம் " என்று துருவ்வின் சமாதானம் எடுபடவில்லை. அவளோ


"என்னடா பேசணும் ! அதான் என்னை சீரழிச்சு என் புள்ளைய கொன்னு போட்டாச்சு ! இனி என்ன?" என்று அங்காரமாக அவள் கத்த, அம்பா துருவ்வின் வருகை அவளை இன்னும் வெறியாளாக ஆக்கியது என்று உணர்ந்து, அவனிடம்



"மிஸ்டர் . துருவ் ! ஸ்டேப் அசைட் !" என்று அவனிடம் கூற, அவனோ அதை ஏற்க மறுத்தான் .



"இல்ல, நான் இருக்கணும் ! " என்று அவனையும் பிடிவாதம் பிடிக்க, அம்பாவின் குரல் உயர்ந்தது.


"ஐ சேட் கோ அவுட் ஆப் திஸ் ரூம் " என்று அவளது குரல் வெளியே கேட்க, அந்தப்பக்கம் எதோ பிரச்னை என்று கேள்விப்பட்ட தேவ், நக்ஷத்திராவின் அறைக்குள் வந்தான்.


"என்ன நடக்குது டாக்டர்.அம்புஜாக்ஷி " என்று தலைமை மருத்துவனாக அவன் வினவ, அம்பா


"ப்ளீஸ் மிஸ்டர் துருவ் ! இப்போ போங்க ! அவங்க உங்களை பார்த்து தான் இன்னும் மோசமா ஆகறாங்க " என்று சொல்ல, தேவ்வும் அவனிடம்


"கம் வித் மி நவ் ! உங்களுக்கு ட்ரெஸ்ஸிங் வேணும்" என்று அவனது காயத்தைச் சுட்டிக் காட்டினான். ஆனால் இரண்டு பேர் பிடித்துக் கொண்டிருந்தாலும், அவர்கள் பிடியில் திமிறிக் கொண்டே, நக்ஷத்திரா


"யு ப்ள ****** ரே******! ஐ வில் கில் யு ஒன் டே" என்று கத்த, தேவ் அம்பாவை பார்த்து ஒரு கண்டனப் பார்வை வீச, அம்பா, தேவ்விடம்


"சாரி டாக்டர் தேவ் ! நான் அவங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கணும் . அவங்க, அவங்களா இல்ல" என்று சமாதானம் சொன்னாலும், தலைமை மருத்துவன் தேவ் தான் அங்கிருந்தான்.


"உங்க வேலைய ஒழுங்கா பண்ணுங்க" என்று அவளைக் கண்டிக்கவும் தவறவில்லை. வெள்ளை அங்கி அணியும் தேவ்விற்கும், அவளது கணவன் தேவ்விற்கும் அம்பாவிற்கு வித்யாசம் தெரியும் . ஆகையால் ஒன்றும் சொல்லாது, தன் வேலையைச் செய்ய எத்தனித்தாள்.


"கம் வித் மி" என்று தேவ் துருவ்விடம் கூறினான்.



தேவ்வின் குரலில் ஒருவித அழுத்தம் இருந்தது, முகம் சாதாரணமாக இருந்தாலும். என் பேச்சை கேட்டே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் அந்தக் குரலில் இருக்க, துருவ் அவனுக்குக் குறைவில்லாத பிடிவாதத்துடன்


"நோ ! அம் ஆல்ரைட் ! எனக்கு இங்க என் வைஃப் கூட இருக்கணும்" என்று சொல்ல, தேவ் ஒருநிமிடம் இருவரையும் பார்த்து,


"அவங்க சரியா ஆக நீங்க கோ ஆபரேட் பண்ணினா பெட்டர் ! ஷி ஐஸ் நாட் ஹர்செல்ப் ! சோ கம் அவுட்" என்று கிட்டத்தட்ட அவனை வற்புறுத்தி தான் வெளியே கூட்டிக் கொண்டு வந்தான்.


ஜூனியர் டாக்டர் ஒருவரிடம் அவனை ஒப்படைத்து விட்டு,



"ஹி ஐஸ் ஒன்லி எ பேஷண்ட் " என்று கண்டிப்பானக் குரலில் சொல்லி அவ்விடம் நீங்கினான். அதாவது அவன் இங்கே ஒரு நடிகன் அல்ல, ஒரு நோயாளி மட்டுமே என்ற பொருள் பொதிந்த வாக்கியம். யார், என்ன என்பதில் மருத்துவம் தவறக் கூடாது என்பதில் தேவ் தீர்மானமாக இருந்தான்.


அவனது காயத்திற்கு மருந்து போடப்பட்டது. அதன் பின் தேவ்வை எதேச்சையாக துருவ் சந்திக்க நேரிட,

"தேங்க யு டாக்டர் …" என்று அவன் பெயர் முழுமையாக தெரியாது இழுக்க,

"டாக்டர்.தேவிரதன்" என்று தேவ் அந்த வாக்கியத்தை முழுமையாக்கினான்.


"ஓ ! டாக்டர். அம்புஜாக்ஷி யோட ஹஸ்பண்ட் நீங்க ! ரைட் ?" என்று ஆச்சர்யமாக துருவ் வினவ, தேவ் இறுக்கமாக


"அவங்க இங்க ஒரு டாக்டர் ! என் வீட்டில் என்னோட மனைவி" என்று கத்தரித்தாற்போல் ஒரு பதிலைக் கொடுத்துவிட்டு சென்றும் விட்டான்.


'திமிர் பிடித்த மருத்துவன்' என்று துருவ் எண்ணிக்கொள்ள, தேவ்வின் அந்த இறுக்கமானப் பக்கத்தை அவன் பின் மாலையில் கண்டான். தேவ்வும், துருவ்வின் ஆதிக்கத்தனமானக் கர்வம் கொண்டப் பக்கத்தைக் காண, அதன் முடிவில், தேவ் துருவ்வின் சட்டையை இறுக்கப் பற்றி இருந்தான் .

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 15



தேவ்வை அதன் பின் துருவ் பார்க்கவில்லை, பார்க்கவும் விருப்பப்படவில்லை. அவனுக்குத் தன்னை ஏனோ பிடிக்கவில்லை, அதே போல் தான் தனக்கும் என்று துருவ் முடிவெடுத்துக்கொண்டான். ஆனால் சில மணி நேரம் கழித்து, மருத்துவமனையில் ஒரே கூட்டம், எல்லாம் பத்திரிக்கையாளர்களின் கழுகு மூக்கும், கண்களும் தான்.


துருவ்வின் மனைவி நக்ஷத்திரா, இப்பொது மருத்துவமனையில்! அரசல்புரசலாக அவளுக்கு கருக்கலைப்பு ஏற்பட்டு விட்டது, அவள் வயது 18 மட்டுமே என்றெல்லாம் வெறும் வாயில் மென்ன கிலோ கணக்கில் அவல்! விடுவார்களா அவர்கள்!


அவர்களுக்கு எப்போது கல்யாணம் ஆயிற்று, எங்கே ஆயிற்று, காதல் திருமணமா. அவளுக்கும் இவனுக்கும் எதோ மனக்கசப்பு ஏற்கனவே உண்டே என்ற ரீதியில் புலன் விசாரணை செய்ய, உளவுத்துறையில் பணியாற்றாது, துப்பு துலுக்க, மருத்துவமனையில் முகாம் இட, தேவ் கடுப்பானான்.


மருத்துவமனை உயிர் காக்கும் இடம், வலி வேதனை கொண்டு நோயாளிகள் வருமிடம், அங்கே இம்மாதிரியான விஷயங்களை அவன் கண்டிப்பாக ஏற்கமாட்டான். அவர்களை எப்படியாவது வெளியேற்ற அவன் தனது முயற்சிகளை மேற்கொள்ள, அதில் ஒன்றாக, துருவ்விற்கு அழைப்பு விடுத்தான். துருவ் அப்போது தான் வீடு வந்து சேர்ந்திருந்தான்.


உடல் சோர்வை விட, மனச் சோர்வு அவனை வாட்டி எடுத்தது. மனைவியின் வெறி அவதாரம், மூன்றாம் மனிதர்கள் முன் அவள் நடந்து கொண்ட விதம் வேறு. அவளுக்கு மட்டும் தான் குழந்தை பாசமா ! அவனுக்கு இல்லையா? எவ்வளவு கெட்டவனாக ஒருவன் இருந்தாலும், தனக்கு என்று வரும் சொந்தத்தின் மீது கொஞ்சமேனும் பாசம் வைத்து தான் இருப்பான்.


துருவ் கெட்டவனா என்று அவனிடத்தில் கேட்டால், முதலில் அது உந்தன் பார்வை பொறுத்து என்று சொல்வான். இன்னும் நோண்டினால், எந்த அளவுகோலை வைத்து ஒருவனை நல்லவன் என்றும் கெட்டவன் என்றும் வரையறுப்பீர்கள் என்று தான் முதலில் கேட்பான். இந்த உலகமே ஒரு ஒப்பீட்டில் தானே சென்று கொண்டு இருக்கிறது.



'அவன் அந்த விஷயத்தில் நல்லவன் பா, ஆனா இவன் அதுல ரொம்ப மோசம்' என்று தானே ஒரு ஒப்பீட்டினால் பட்டம் கொடுக்கப் படுகிறது. அப்படிப் பார்த்தால் அவனுள் நல்லவன்-கெட்டவன் என்ற இரண்டு பேரும் இருக்கிறார்கள். அவனுள் இருக்கும் நல்லவனால் தான் அவள் இந்நேரம் பத்திரமாக இருக்கிறாள், இல்லையென்றால் இன்று எங்கோ எப்படியோ அவள் இருந்திருப்பாள் அல்லது அவள் உயிர் பிரிந்து இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.


ஆனால் அவள் பார்வையில் அவன் கெட்டவனே ! அவன் என்ன செய்தாலும் அதில் இருக்கும் நல்லவையே பகுத்தறிய அவளுக்கு மன முதிர்ச்சியும், மன அமைதியும் வேண்டும். அவனுள் இருக்கும் நல்லவன் இன்று தனது துக்கத்தை போக்க வழி இல்லாது தவிக்கிறான். அவளை நன்கு அறிந்தவனுக்கு, தான் யார் என்று கூறும் சமயம் வரவில்லையே என்று வெறுத்து கொண்டான் .



அதுவும் இப்போது அதை தெரிவித்தால்? அவளால் தாங்க முடியுமா என்பதும் அவன் அறியான். மனதில் பெரிய மலையை சுமப்பது போல் ஓர் பாரம். சூர்யாவின் நியாபகம் வேறு.


"வேணாம் சார் ! இது தப்பு" என்று அவன் கூறியும், துருவ் அகந்தைக் கொண்டு அவன் கூறியதை நிராகரித்தான். ஒருவேளை அன்று அவன் பேச்சை காது கொடுத்து கேட்டிருந்தால், நக்ஷத்திரா இன்று இப்படி ஆகியிருக்க மாட்டாள்.

சூர்யாவை மிகவும் அவன் நாடினான். அவனுடன் தற்போது இருப்போர்கள் வேலையை பொறுத்தவரை நன்றாக செய்தாலும், சூர்யாவிடம் தோன்றும் அன்யோன்யம் அவர்கள் மீது அவனுக்கு தோன்றவில்லை. கடந்ததை எண்ணி அவன் இருக்கையில் அமர்ந்து, அவனது வீட்டுக் கூரையைப் பார்க்க, அவனது புது உதவியாளன் கணேஷ்


"சார் ! ஹாஸ்பிடல் இருந்து போன் " என்று அவனது நினைவோட்டத்தைக் கலைத்தான்.



துருவ் விஷயம் கேள்விப்பட்டு, உடனே அங்கே விரைந்தான். எரிச்சல் படர்ந்த தேவ்வின் முகம் தான் அவனுக்கு முதலில் கண்ணிற்குத் தென்பட்டது. அவனது எரிச்சல் நியாயம் தான். ஆகையால்,



"சாரி !" என்று கூறிவிட்டு, உடனே பத்திரிக்கையாளர்களைத் தனியே அழைத்துக் கொண்டு, வெளியே சென்றான்.


"லிசன் ! எனக்கு பிரைவசி வேணும் ! இதை பத்தி நீங்க அனாவசியமா ஏதேனும் எழுதினா , கோர்ட்டில் சந்திப்போம்" என்று முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டு,



அவர்களின்

"சார் ! சார் ! ஒரே ஒரு கொஸ்டின் மட்டும் தான்" என்பது எல்லாம் காதில் விழுந்தாலும், ஒன்றும் கேட்கவில்லை என்ற ரீதியில் சென்று விட்டான்.


அவன் அதன் பின், நேரே அவள் இருக்கும் தளத்திற்கு தான் சென்றான். தகுந்த பாதுகாப்பு அவளுக்குப் போட்டு இருக்கப்பட்டு இருந்தது கண்டு திருப்திக் கொண்டான்.


"சீஃப் டாக்டர் தான் எல்லாம் ஏற்பாடு செஞ்சாங்க ! " என்ற பதிலில், தேவ் மீது அவனுக்கு சற்று மதிப்பு வந்தது. கண்டிப்பாக நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.


நன்றி தெரிவிக்க அவனுக்கு சந்தர்ப்பம் இரவு நேரத்தில் தான் கிடைத்தது, அதுவுமா தேவ் வீட்டிற்கு செல்லும் முன். அவனை கார்கள் நிறுத்தும் இடத்தில் தான் துருவ்வால் பார்க்க முடிந்தது.


"டாக்டர்.தேவிரதன் !" என்ற குரல் தேவ்வை நிறுத்த, 'என்ன?' என்பது போல் அவனை தேவ் பார்க்க ,


"தேங்க யு ! நக்ஷத்திராவை பார்த்து கிட்டதுக்கு" என்று நன்றி தெரிவிக்க, தேவ்


"வெல்கம் !" என்று மட்டும் உரைத்தான். ஏதோ இறுக்கம் கலந்து அவன் குரல் இருப்பது போல் துருவ்விற்குத் தோன்றியது.


"ஏதாச்சும் சொல்லனுமா !" என்று துருவ் கேட்டே விட்டான். தேவ்


"அவங்களை கொஞ்சம் சீக்கிரமா காப்பாத்த முடியலன்னு ஒரு வருத்தம்!" என்று கூறிவிட்டான். தேவ் எதை குறிப்பிடுகிறான் என்று துருவ்விற்குப் புரியாது இல்லை. எல்லாம் நக்ஷத்திராவால் வந்தது! அவள் தானே எல்லோர் முன், அவனை 'ரே****' என்று கூப்பிட்டு வார்த்தைகளால் கொன்று புதைத்தாள்.


"லுக் டாக்டர் ! அவ என்னோட மனைவி !" என்று அவனும் தீர்க்கமாக பேச, அதில் ஆணவம் தான் தேவ்விற்குத் தெரிந்தது.


"சோ ! மாரிடல் ரே** க்ரைம் இல்ல ! அதானே ! அப்போ என்ன வேணாலும் செய்யலாம் ! யாரும் ஒன்னும் சொல்ல முடியாது அப்படித்தானே ! " என்று கனல் தெறிக்க தேவ்வின் பேச்சு இருக்க, துருவ் அதில் இருக்கும் உண்மை புரிந்தும், அந்நேரம் அதை எடுத்துக் கொள்ளாது,


"நீங்க உங்க லிமிட்டை தாண்டறீங்க ! மைண்ட் யூர் வேர்ட்ஸ் அண்ட் வர்க்" என்று முகத்தில் அடித்தாற்போல் சீற, தேவ்


"என்னால அவங்களுக்கு நடந்துக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாது நினைச்சுகிட்டு இருக்கியா ! யு டோன்ட் நோ மி" என்று சீற, துருவ் அசராது


"யு டோன்ட் நோ மி ஆல்சோ ! ஒன் டே, யு வில் நோ மி !அண்ட் ஆல் தி பெஸ்ட் உங்க ஆக்ஷனுக்கு ! முடிஞ்சா ...ட்ரை பண்ணுங்க! ஒன்னும் கிழிக்க முடியாது !" என்று இறுக்கமும், உறுதியும் கலந்த முதல் பாகப் பேச்சு, கடைசியில் நக்கல் தெறிக்க அவன் பேச்சு இருக்க, தேவ் அந்நேரம் வெள்ளை அங்கி அணியாத ஒரு சராசரி மனிதனாகக் கோபம் கொண்டான்.


ஒரு பெண் எப்போது தனக்கு இம்மாதிரி நடந்தது என்று கூறுகிறாளோ, அப்போது அதைச் செய்தவர்கள் யாராக இருந்தான் தண்டனைக்கு உரியவர்கள் தான், கட்டிய கணவன் உட்பட.


துருவ்விற்கும் தான் செய்தது தவறு என்று தெரியும் ! அதைத் தட்டிக் கேட்க, நக்ஷத்திராவிற்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று அவன் எண்ண, தேவ் தற்போது தனது நிழலின் கீழ் இருக்கும் ஒரு பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை ஒரு சக மனிதனாக தட்டிக் கேட்டான்.


இருவரும் அவர்கள் எண்ணப் போக்கில் சரிதான். துருவ்வின் ஆணவப்பேச்சு தேவ்வின் பொறுமையைச் சீண்ட, பழைய தேவ்வாக மாறினான். துருவ்வின் சட்டையைப் பிடிக்க, இருவரின் அக்கினி பார்வைகள் மோத, அடுத்து யார் என்ன செய்வார்களோ என்று எண்ணும் நேரத்தில் சத்யஜித்தின் குரல் கேட்டது.


"அப்பா ! அம்மா ரெடியான்னு கேட்டாங்க ?" என்று அவனது குரல் சமீபத்தில் ஒலிக்க ஆரம்பிக்க, தேவ் சற்று நிதானித்தான்.



அவனது கரங்கள் தானாக, துருவ்வின் சட்டையை விடுத்தன.


"நீ செஞ்சது தப்பு இல்லே, பாவம் ! கல்யாணம்ன்னா பிஸிக்கல் மட்டுமா? அன்பு, அக்கறை, கம்பேனியன்ஷிப் அதில் அதிகம் உண்டு ! ." என்று காட்டமாக உரைத்துவிட்டு செல்ல எத்தனிக்க, அங்கே சத்யஜித் வந்தும் விட்டான். அவன் எதைப் பார்த்தான் என்று தேவ் அறியான்.


ஆனால் எதுவும் நடக்காது போல், அவனை தன் கையில் எந்திக் கொண்டு செல்ல, துருவ் விரக்தியாக இருவரையும் பார்த்தான். அது கடந்ததை நினைத்து, எதிர்காலத்தை நினைத்து.



பணம் இருந்தும், புகழ் இருந்தும் அவனுக்கு தான் விரும்பியது அன்று கிடைக்கவில்லை. இன்று?



******************

ஒருவழியாக நக்ஷத்திரா தன் மருத்துவமனை வாசம் முடிந்து, வீடு திரும்பும் நாளில்


"நான் மங்களூர் போறேன்! எனக்கு இங்க வேலையில்லை." என்று தீர்க்கமாக அவனைப் பார்த்துக் கூற, துருவ் ஏற இறங்கி அவளைப் பார்த்தான்.


"நோ! வீட்டுக்கு போறோம், நம்ம வீட்டுக்கு" என்று இது தான் முடிவு என்று கூற, நக்ஷத்திரா



"இன் யூர் ட்ரீம்ஸ்" என்று எப்போதும் போல் எடுத்து எறிந்து பேச, துருவ் அதைக் கண்டு கொள்ளவில்லை.


"நீ வரணும் ! வருவே !" என்று அவள் அருகே வந்தான். நக்ஷத்திராவும் அசராது தன் இடத்தில் இருந்தாள். அவனை முறைத்தபடி, அந்த எரிக்கும் பார்வையில் துருவ் உல்லாசம் அடைந்தான்.


"காஷ்! ஐ மிஸ்ட் திஸ்" என்று அவளை நெருங்க, அப்போதும் அவள் பின்வாங்கவில்லை.


"பரவாயில்லை! கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் முன்ன விட" என்று தைரியத்தை மெச்சிக் கொண்டான். முன்பு என்னத்தான் வாயை கிழித்தாலும், அவன் அருகே வந்தால், சற்று பின்வாங்குவாள். ஆனால் இன்று அப்படி இல்லை. தீர்க்கமாக அவனைப் பார்த்து,


"நான் வர மாட்டேன்! முடிஞ்சதை பண்ணு" என்று அவளும் தன் பிடிவாதத்தில் நிற்க,




சற்றே கலைந்த முடியை போனி டெயில் போல் போட்டுக் கொண்டு, சாதாரண பருத்தி சல்வாரில் இருக்கும் பெண்ணவளை அவனால் ரசிக்காது இருக்க முடியவில்லை. முன்னர் புற அழகை அவன் ரசிப்பான், இப்போது அவளது தைரியத்தை, அக அழகை ரசிக்கிறான்.


இனி இவள் இப்படித்தான் இருக்க வேண்டும் அப்போது தான் வாழ்க்கையைக் கையாள அவளால் முடியும் என்று நினைத்துக் கொண்டான். நக்ஷத்திரா தைரியமானவள் என்று அறிவான், ஆயினும் சிலபல நேரங்களில் அவளது மன உறுதி அது போல் இருப்பது இல்லை என்ற எண்ணம் துருவ்விற்கு உண்டு. அதிகபட்ச உணர்ச்சிவசப்படலில் அவளது நோக்கங்களைச் சரியாக அவள் கையாளுவதில்லை என்று நினைக்கிறான். ஆனால் இன்று அந்த உணர்ச்சிவசப்படல் அவளிடம் இல்லை.


நிதானமும், உறுதியும் அவளிடத்தில் காண்கிறான். அதற்காக அவள் செய்வது எல்லாம் சரி என்று அவனால் ஒத்துக்கொள்ள முடியாது.


தோள்களைக் குலுக்கிக் கொண்டவன்,


"ஓகே அஸ் யு விஷ்" என்று அவள் முற்றிலும் எதிர்பார்க்காத பதிலைக் கூறிவிட்டு அவன் சென்றும் விட்டான். தனியாக அவள் நிற்க, மனதில் எதோ ஒரு கசக்கிப் பிழியும் உணர்வு அவளைத் தாக்க ஆரம்பித்தது. அதெல்லாம் ஒரு நொடி தான். அதன் பின், தனது உடமைகளை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நீங்கினாள்


மாலை ஆகும் முன்னே நக்ஷத்திரா வீட்டிற்கு வந்து விட்டாள், கோபமாக.


அவளை புன்னகை முகமாக வரவேற்றவன்


"வெல்கம் ஹோம் ! மை டியர்ஸ்ட் !" என்று வாழ்த்த, அவளோ கையில் கிடைத்தவற்றை அவன் மீது விட்டெறிய ஆரம்பித்தாள்.


"ஹேய்! என்னது இது! ஸ்டாப் இட்" என்று அவன் எதிர்ப்பை அவள் சட்டை செய்யவில்லை.


"என்ன ஆள் செட் அப் பண்ணி டார்ச்சர் பண்ணறியா ? அவன் யாருடா ? என்னை கேள்வி கேக்க ? என் கல்யாண வாழ்க்கை, குழந்தை குட்டின்னு ..கன்னா பின்னான்னு கேக்கறான் ! அசிங்கமா வேற ! சீ !எல்லாம் உன் வேலை ! உனக்கு உன் அம்மா ...இருக்காங்களா ? அந்த புண்யவதியை பார்த்து கேக்கணும் ! சீ சீ ! நான் எதுக்கு பார்க்கணும் ! அவங்களும் உன்னை மாறி தான் இருப்பாங்க ! ஷி ஷுட் பி எ பி….." என்று அவள் அந்த வாக்கியத்தை பூர்த்தி செய்யும் முன், துருவ்


"ஏ…" என்று கத்தி,



ஆங்காரமாக அவள் கழுத்தை இறுக்கப் பிடித்து விட்டான். அன்றும் அதே வார்த்தை தான் அவனை மூர்க்கனாக்கியது. பெற்ற அன்னையைப் பற்றி எந்த மகனும் கேட்க கூடாத வார்த்தை அது.


என்ன வார்த்தை சொல்லப் போய் விட்டாள் அவள் ! அவன் அன்னை யார் என்று தெரியும் நாள், அவளே வருத்தப்படுவாள் ! ஊமையாய்ப் பிறந்து தொலைந்து இருக்கலாமே என்று குமுறுவாள். அன்று அவன் செய்தது சரி இல்லை, ஆனால் அவள் பேசியதும் சரியில்லை. இருவர் பேரிலும் தவறு இருக்கிறது.




அவளது சுவாசம் முட்ட, கண்கள் நிலைக்குத்த ஆரம்பிக்க, துருவ்விற்கு தான் செய்து கொண்டிருந்த காரியத்தின் வீரியம் விளங்கியது. கைகளை உதறியவன் , அவள் சுவாசம் வேண்டி இருமி, தன்னை தானே நிலைப்படுத்தும் வரை காத்தவன்


"சரஸ்வதி அத்தையை பத்தி நான் தப்பா பேச மாட்டேன் ! நீ என்ன கேவலமா பேசினாலும் " என்று அவள் மனம் வலிக்குமாறு உரைத்து விட்டான். முதலில் அவளுக்குத் தன்னைப் பெற்றவளைப் பற்றி அவனுக்கு எப்படி தெரியும் என்ற கேள்வி அவளிடத்தில். அவனோ அங்கு இல்லை. அவன் பின்னால் அவள் கிட்டத்தட்ட ஓட, அவன் தனது காரை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்று விட்டான்.


கொஞ்சம் மன முதிர்ச்சி அவளுக்கு வந்து இருக்கிறது என்று தான் நினைத்தது தவறு என்று புரிந்து கொண்டான். முன்பை விட இன்னும் மோசமா என்று தோன்றாது இல்லை.



அம்பா அவனிடத்தில், சொன்னது நினைவிற்கு வந்தது,



"அவங்களுக்கு உடம்பு சரியாகும், ஆனா மனசளவில் இன்னும் காயங்கள் இருக்கு! ஷி நீட்ஸ் சைக்கலாஜிக்கல் கான்சல்ட் !' என்று மனநல மருத்துவரை அணுகும்படி சொல்லிருந்தாள். துருவ்விற்கு அவள் சொன்னதின் தாக்கம் இப்போது புரிந்தது.



18 வயதில் படக்கூடாதக் கஷ்டங்களை அனுபவித்து , அளவிற்கு அதிகமான பொறுப்புகளை அவள் சுமந்து இருக்கிறாள்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோள் சாய அவன் இருந்தும், அவளாக அவனிடம் வர மாட்டாள். இரும்பு நெஞ்சமும், அதே நேரம் அன்பு, பாசத்திற்கு ஏங்கும் குழந்தை உள்ளமும் அவளிடத்தில் இருக்கிறது. அவளுள் இருக்கும் குழந்தை அனுபவிக்க வேண்டியதை துருவ் கொடுப்பான் ! அதே நேரம் அவளது இரும்பு நெஞ்சம் இளகவும் கூடாது ! என்ன செய்வது என்று வெகு நேரம் யோசித்தவன்,ஒரு முடிவிற்கு வந்தான்.


இரவு உணவு நேரத்தில் வீடு வந்தவன், அவளை உணவு உண்ணும் மேஜையில் பார்த்தான்.


பெரிய உணவு உண்ணும் மேஜை, கிட்டத்தட்ட 10 பேர் மேல் அங்கே உட்காரலாம்.


'இருக்கறது இவன் ஒருத்தன்! இதுல ஓர் ஊரே உக்காந்து சாப்பிடற டேபிள். பணம் இருந்தா, இப்படி தான். ' என்று பொருமிக் கொண்டாள்.



அவனோ ஒன்றும் கூறவில்லை. பேசாது இருவரும் உணவு உண்டு முடிக்க, துருவ் ஒரு புகைப்படத்தைக் காட்டி,


"இவன் தானா உன் கிட்ட வம்பு பண்ணினான்?" என்று வினவினான்.


"ஆமாம்! அதுக்கு இப்ப என்ன பண்ணப்போறே?" என்று துடுக்கத்தனம் நிறைந்து அவள் பதில் ஒலிக்க, உதட்டைக் குவித்து அவளைப் பார்த்தவன்


"கம்" என்று அவளை கூட்டிக் கொண்டு அவனது அலுவல் அறைக்குக் கூட்டிச் சென்றான்.


அங்கே நக்ஷத்திராவிடம் அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்டவன் ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு இருந்தான். அவன் முகம் ரத்தச் சகதி. முதலில் அவளுக்கு அவனை அடையாளமே தெரியவில்லை.



அவளது குழப்பத்தைப் படித்தவன், ஒரு டிஷ்யூ எடுத்து, அவன் முகத்தில் வடிந்த ரத்தத்தைத் துடைத்தான்.


அப்போது தான் அவளுக்கு அவனைத் தெரிந்தது.


இப்படிப்பட்ட எதிரொலிப்பை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் வாயடைந்து, கையை வாயில் வைக்க, துருவ்


"சொல்லு, இவன் தானே?" என்று மறுபடியும் உணர்ச்சி இல்லாக் குரலில் வினவ, நக்ஷத்திரா


"ஏன் இப்படி?" என்று அவன் செயலுக்கு கண்டனம் தெரிவிக்க, துருவ் காண்டானான்



"அப்போ, ரெட் கார்பெட் வெல்கம் கொடுத்து, டின்னருக்கு இன்வைட் செய்யணுமா? " என்று குதர்க்க கொடுக்குப்பிடி போட, நக்ஷத்திரா ஆத்திரம் கொண்டு,


"அப்போ நீ செஞ்ச தப்புக்கு??" என்று சாட்டையடி கேள்வியை தொடுக்க, துருவ் இறுகிப் போனான். அந்நேரம் அவன் அதற்கு பதில் கொடுக்க விருப்பப்படவில்லை.


"வெளிய போ!" என்று அழுத்தமாக கூற, அவளோ



"அவன் வார்த்தையால் என்னை ஹர்ட் பண்ணினான், நீ?? உனக்கும் தண்டனை உண்டு!" என்று மீண்டும் சாட, துருவ்


"வெளிய போ!" என்று இம்முறை கத்தியே விட்டான். அந்த சப்தத்தில் அவள் உடல் தூக்கி வாரி போட்டது.



இருந்தாலும் அவனை முறைத்துக் கொண்டே அங்கே அவள் இருக்க, துருவ் அவளை இழுத்துக் கொண்டு, அவ்வறையின் வெளியே தள்ள, அவளோ


"விடுடா! ராட்சசா! எல்லோரையும் ஹர்ட் செய்யறது தவிர உனக்கு உருப்படியா ஏதாவது தெரியுமா! நீ எல்லாம் மனுஷ ஜென்மமா?" என்றெல்லாம் வசைபாட, துருவ் அவளை அவ்வறையின் வெளியே நிறுத்திவிட்டு



"நான் யாருன்னு உனக்கு இனி போக போக தெரியும்" என்று கர்ஜிக்க, அவளோ



"நீ ஈவு இரக்கம் இல்லாத ஒரு பிரம்ம ராட்சசன்! அது தான் எப்போதும்" என்று கத்தித் தீர்த்தாள். அவனோ அதில் கோபத்தை வெளிக்காட்டாது, அவளிடம் மிக நெருக்கமாக நின்று அவளது காலின் மேல் பகுதியை,அதாவது முட்டிக்கு மேல் சுட்டிக் காண்பித்து,


"என் அருமை அத்தே இருந்து இருந்தா, நீ பேசற பேச்சுக்கு, உனக்கு இன்னொரு முறை சூடு வச்சு இருப்பாங்க! அவங்க இல்லாமல் போனது துரதிஷ்டம்" என்று அவள் வாயை முற்றிலும் அடைத்துவிட்டான்.


இந்நாளின் மற்றொரு அதிர்ச்சியில், அவள் ஒன்றும் கூறாது கல்லாய்ச் சமைந்தாள். அதிர்ச்சி எல்லாம் க்ஷ்ண நேரம் தான். மறுபடியும் அவன் தன் அன்னையைப் பற்றி பேச, இம்முறை இவன் என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் ? யார் மூலமோ தன்னைப் பற்றி அறிந்து கொண்டு, சும்மா, எல்லாம் தெரிந்தது போல் எதற்குப் பேசுகிறான் என்று கேட்க வேண்டும் போல் இருக்க, அவளது அவசரத்தில் அந்த சூட்டு விஷயம், மூவருக்கு மட்டுமே தெரியும் என்பதை மறந்து போனாள். அதில் 2 பேர் தற்போது உயிரோடு இல்லை, மூன்றாவது ஆள் எங்கு இருக்கிறான் என்று அவள் அறியாள். இதை எல்லாம் அவள் சிந்திக்காது,


"என்னோட பெர்சனல் விஷயங்களை பேச நீ யாரு ?" என்று வீறு கொண்டு சிங்கப்பெண்ணாக எழ, அவனோ நக்கலாக அவளைப் பார்த்து,


"உன் புருஷன் ! " என்று அவளைப் பதில் பேசவிடாது, தன் அறைக்குள் சென்று விட்டு, தாளிட்டும் விட்டான். அதன் பின் அடிபட்டு, கட்டப்பட்டு இருந்தவன் என்ன ஆனான் என்று அவள் அறியாது போனாள், வேறு ஓர் நாள் வரும் வரை.



அடுத்த நாள் காலை, நக்ஷத்திராவிடம், துருவ்


"வெளியூர் போறோம்!" என்று மட்டும் மொட்டையாகச் சொன்னான்.



"இன்னொரு நரகமா? நரகத்தில் தான் இருக்கேன். " என்று கூர்மையான வார்த்தைகள் கொண்டு, அவனைப் புண்படுத்த முயற்சி செய்ய, அவனோ அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.


"இன்னும் 1 அவர் டைம், உனக்கு ரெடி ஆக! " என்று ஆளுமையாகக் கூற, நக்ஷத்திரா தான் படித்துக் கொண்டிருந்த நாளிதழைக் கீழே போட்டுவிட்டு அவன் முன் குட்டி கோபச் சிலையாக நின்றாள்.



"முடியாது!" என்று அழுத்தம் கூடிய காட்டத்துடன் பதில் அளிக்க, துருவ் ஒற்றை புருவம் தூக்கி சுவாரஸ்யமான பார்வை அவளைப் பார்த்து,


"வெல்! தாரா! நீ இவ்வளவு நோ சொல்லும் போது...வாட் டு டூ?" என்று அவளைப் பரிகசித்து விட்டு, தன் பாண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு கொண்டு, தோள்களைக் குலுக்கி விட்டு சென்றும் விட்டான்.



தாரா என்ற பெயர் கொண்டு பார்வதி அவளைப் பெரும்பாலும் அழைக்கவே மாட்டார். வெளியே படப்பிடிப்பில் பாப்பா அல்லது நக்ஷத்திரா என்ற அவளது முழு பெயர் மட்டுமே.


"என்ன நினைச்சு கிட்டு இருக்கே ? தாரானு என்னோட பெட் நேம் சொன்னா, என் அம்மாவை பத்தி சொன்னா, நான் அப்படியே மயங்கி உன் பின்னாடி வருவேன்னு நினைச்சியா ? ஹெல் வித் யு ! உனக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை கொடுக்காம விட மாட்டேன் " என்றெல்லாம் இவள் தையதக்கா என்று குதிக்க, துருவ் சற்று தூரம் சென்றவன் இவளது கூப்பாட்டில் நின்றவன், திரும்பி அவளைப் பார்த்து,


"உனக்கு இருந்த கோபத்தில் நீ இங்கே வந்து இருக்கவே கூடாது ! ஸ்டில் வந்தே ! இதோ இந்த நிமிஷம் வரை, என்னோட தான் இருக்கே, நம்ம வீட்டில் ! உன்னை பொறுத்தவரை இதுக்கு என்ன பேர்ன்னு எனக்கு தெரியாது ! பட் என்னை பொறுத்தவரை இதுக்கு பேர், காதல், மஞ்ச கயிறு செய்யாத மேஜிக் ! நானா உன்னை விடற வரை, நீ என் கூட தான் ! புரியுதா !!" என்று நிதானமாக தான் கூறினான். எதற்கும் விதண்டாவாதம் செய்வேன் என்று இருப்பவள், இதற்கா அசரப் போகிறாள் !


"அதென்ன நான் உன் வைப் ? எப்போ கல்யாணம் ஆச்சு நமக்கு ? சும்மா பொய் சொல்லாதே !" என்று மீண்டும் கோபப்பட, அவளது உயரத்திற்கு அவளது இந்த 'தையதக்கா குதி' நடவடிக்கை அவனுக்கு ஏனோ நெடுநாள் கழித்து சிரிப்பைத் தான் வரவழைத்தது. மெலிதாக தனது தாடி இடையே புன்முறுவல் பூத்தவன்,


"பைனலி இப்போவாச்சும் கேக்கணும்னு தோணிச்சே ! தாலி சம்பிரதாயம் மேலே எனக்கு நம்பிக்கை இல்ல, சோ லீகலா கல்யாணம் பண்ணிக்கிட்டேன் !" என்று சொல்ல, அவள் மறுபடியும் அவனிடம் ஆத்திரமாக


"அந்த எழவை தான் கேக்கறேன் ! எப்படி பண்ணி தொலைச்சே ?" என்று மரியாதைக் குறைவாக அவர்களது திருமணத்தைப் பற்றிப் பேச, அவன் அவளை கூர்மையாகப் பார்த்தான்.


"மரியாதையா பேச படி முதலில் ! " என்று அவளைக் கண்டித்துவிட்டு அங்கிருந்து செல்ல, சில அடிகள் வைக்க, அவள் ஓடி வந்து, அவன் முன் நின்றாள். அவளது உடல்நிலைக்கு அவள் இவ்வாறு ஓடக் கூடாது.


"பைத்தியமாடி ?' என்று இம்முறை அவன் குரல் உயர்ந்தது. சிரியதளவு மூச்சு முட்ட, அவள் நின்று தன்னைச் சீர் செய்து கொண்டு,


"நான் நம்ப மாட்டேன் ! என்ன ப்ரூஃப் ?" என்று மறுபடியும் அவனிடம் வினயமாக கேட்காது, கட்டளை போல் பேச, அவன் அவளைப் பொருட்படுத்தாது அந்த இடத்தை விட்டுச் செல்ல முயல, நக்ஷத்திராவிற்குப் புரிந்து போனது, இவனிடம் இந்த மனோபாவம் ஈடுபடாது என்று.


"துருவ் , ப்ளீஸ் ! என்னால அந்த விஷயத்தை இன்னும் நம்ப முடியல ! பொய் மாறி இல்ல, மேரேஜ் சர்டிபிகேட் வச்சு இருப்பீங்க ! அதை பார்க்கணும்" என்றாள். இதில் ஒரு சுயநல நோக்கமும் உண்டு அவளுக்கு. தனக்கு மட்டும் தான் சாமர்த்திய என்று அவளுக்கு நினைப்பு. துருவ் என்ற நடிகனுக்குள் ஒரு கைதேர்ந்த வியாபாரியும் இருக்கிறான் என்று அவள் 5 நிமிடம் கழித்து தான் உணர்ந்தாள்.


அவளிடம் திருமணச் சான்றிதழை கொடுக்க, அவள் ஆதி முதல் அந்தம் வரை அதை வாசித்துப் பார்த்தாள். அதில் தெளிவாக இருவரும் தம்பதியினர் என்று தான் இருந்தது, அவளுடைய கையெழுத்துடன். அந்த கையெழுத்து தான் அவளுடைய தலை எழுத்தை மாற்றி விட்டது, அதில் ஆத்திரம் பெருக அந்த திருமண சான்றிதழைச் சுக்கு நூறாக கிழித்துப் போட்டாள்.


"இப்ப நான் உன் வைப் னு உன்னால் சொல்ல முடியாது ! நோ ப்ரூப் " என்று ஏதோ சாதித்துவிட்டது போல் கொக்கரிக்க, அவன் மிகவும் நிதானமாக அவளை நெருங்கி கைகளைக் கட்டிக் கொண்டு


"நீ நிஜமாவே வக்கீலுக்கு படிக்க போறியா ? டம்போ " என்று நக்கலாக வினவ, அவளுக்கு புரிந்து போனது, அந்த சான்றிதழ் ஒரு பிரதி தான் என்று. தான் ஏமாற்றப்பட்டதில், அவள் கண்களில் தீப் பறக்க,


"ஏய் ....." என்று தன் ஆள்காட்டி விரலைக் காட்டி மிரட்ட, அவன் அதைப் பற்றி, கையைப் பின்பக்கம் முறுக்கி அவளது கத்தலைப் பொருட்படுத்தாது,



"க்ரோ அப் தாரா ! நீ 45 நிமிஷம் வேஸ்ட் பண்ணியாச்சு ! இன்னும் 15 மினிட்ஸ் தான் டைம் ! கெட் ரெடி" என்று கூறிவிட்டு அவளை விடுக்க,


அவன் மடக்கி பிடித்த வலியில் தன் கையை தூக்கிப் பிடித்து கொண்டவள்,


"நான் செத்தாலும் வர மாட்டேன்" என்று எதிர்க்க, அவன் அவளை நெருங்கி


"இஸ் இட் ?" என்று மட்டும் சொன்னான் . அதன் பின் .....







அதன் பின் அவள், அருமையான மண் வாசனை நுகர்ந்து, வண்டுகளின் ரீங்காரச் சத்தம், தண்ணீர் அருவி போல் கொட்டும் சத்தத்தில் தான் கண் விழித்தாள்.


கண்களை திறந்தால் ஒரே இருட்டு. எங்கு இருக்கிறோம் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் இது சிங்காரச் சென்னை இல்லை என்று அவளுக்கு தெரியும்.


தட்டுத் தடுமாறி கைகள் துழாவ, மென்மையான மஞ்சத்தில் இருக்கிறோம் என்று உணர்ந்தாள் உணர்ந்தாள். ஆனால் எங்கே அது தான் தெரியவில்லை. குளிர்ந்த காற்று ஒன்று வீச, அறையின் ஜன்னல் மூடப்படவில்லை என்று உணர்ந்தாள். ஜன்னல் துணி சற்று விலகியதில் , வானில் பாய்ந்த மின்னல் கீற்று அவளுக்கு அந்த அறையை சற்று வெளிச்சம் போட்டு காட்டியது. அதன் பிரம்மாண்டம் அவளை பயமுறுத்தியது. ஒரு மூலையில் மான் முகத்தில் கொம்பு பொருத்தப்பட்டு இருந்தது போல் அவளுக்குக் காட்சி அளித்தது.


அறைக்கதவு எங்கு இருக்கிறது என்றும் அவளுக்கு தெரிந்தது. மெல்ல எழுந்து மஞ்சத்தில் இருந்து தடுக்கி விழாது, அடுத்த மின்னல் கீற்று உபயத்தில் அறைக்கதவு வரை சென்றும் விட்டாள். தாளிடப்படவில்லை ! ஆகையால் எளிதாக அறையின் வெளியே செல்ல முடிந்தது.



பெரும்பாலும் மெல்லிய ஒளி மட்டுமே, பளிச் என்று எரியும் ட்யூப் லைட்டுக்கள் இல்லை. எங்கிருந்தோ ஒரு பியானோ சத்தம் ஒலிக்க ஆரம்பிக்க, அந்த ஓசையைப் பின்பற்றி அவள் நடந்தாள். ஒருமுறை அங்கிருந்த நாற்காலியில் நன்றாக இடித்தும் கொண்டாள்.



"அவுச்!" என்று முட்டியைத் தேய்த்துக் கொண்டவள், ஒருமாதிரி பியானோ இருக்கும் அறைக்கு வந்து விட்டாள். ஓர் நெடிய ஆடவன், பியானோ முன் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தான். அது துருவ் என்று அவள் அறிவாள். ஆனால் அவனா என்றும் அவளால் நம்ப முடியவில்லை.


''பிரம்ம ராட்சசனுக்குள் ஒரு இசைக் கலைஞனா?' என்று இவள் சிந்தனை வயப்பட்ட, அவன் கிட்டத்தட்ட அன்றில் இருந்து 19 வருடம் முன் வந்த ஒரு பாடலின் பியானோ இசையை வாசிக்க, அவளது மனம் உருக ஆரம்பித்தது.


அவளுக்கு சிறு வயதில் இருந்து அந்த பாடல் எங்கு ஒலித்தாலும் அப்படியே மெய் மறந்து போவாள் , அதுவும் அதில் வரும் பியானோ இசையின் அடிமை அவள், ஏனென்றால் அதை அவளுக்கு முதன் முதலில் வாசித்து காண்பித்தவன் அவள் சாம். சாம் இல்லாது போனான், அவன் முகமும் அவளுக்கு நாளடைவில் மறந்தும் போனது, ஆனால் அவன் வாசித்த அந்த இசை ...


அவள் உயிருடன் இருக்கும் வரை அவளுக்கு மறக்காது, அது அவள் மனதில் கல்வெட்டாகப் பதிந்து போன ஒன்று. அந்த இசை அவளது மனதை மெல்ல மெல்ல இளக்க, அவளது கண் பார்வை மெல்ல அந்த அறை மீது பரவ, இதயம் துடிப்பதை நிறுத்தியது போல் ஓர் உணர்வு. இது, இந்த அறை என்று அவளது சிந்தனைகள் பின்னால் நோக்கி போகும் முன், உடல் பலஹீனம் காரணம் அவளுக்கு மயக்கம் வருவது போல் இருக்க, அவளையும் அறியாது


'சாம் ' என்று உரைக்க, அந்நேரம் இசையும் முடிய, துருவ்வின் காதில் அவள் கூறியது விழுந்தது. அவன் திரும்ப, அவளது நிலை உணர்ந்து வேகமாக அவளை தாங்கிக் கொண்டான்.


இருவரின் பார்வைகள் கலந்தன. ஒரு ஜோடிக் கண்களில் ஏக்கம் மற்றும் பரிதவிப்பு, மற்றோர் ஜோடிக் கண்களில் வெறுமை மற்றும் விரக்தி. இவர்கள் இருவரையும் பியானோ மீது இருந்த ஒரு சிறிய புகைப்படத்தில் சாம்-சிக்கு, தத்தம் அன்னையருடன் நின்றுக் கொண்டு பார்த்தனர்.


அன்று அவர்கள் இட்ட முற்றுப்புள்ளி, அழிந்து தொடர் புள்ளி ஆகத் துவங்கியது, மற்றோர் முற்றுப்புள்ளி வரும் வரை.
 
Status
Not open for further replies.
Top