All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் வானின் துருவ(வ்) நக்ஷத்தி(ரா)ரம் - கதைத் திரி

Status
Not open for further replies.

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
துருவ் என்ற நடிகனுக்கும் நக்ஷத்திரா எனும் ஆரம்ப கால நடிகைக்கும் நடுவே ஏற்படும்

அதீத மோதலும்

அதனுள் பொங்கும் காதலும் தான் கதை.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 1



இடம் : ஹைதிராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டி



“டேய் அந்த கடையோட மேல் டாப்பை எடுத்து கிட்டு வாங்க டா, கூரை இல்லாம இருக்கு! டைரக்டர் ஷாட் ரெடியான்னு கேக்கறதுக்குள்ள ரெடி செய்ங்கடா, இந்த ஆர்ட் குரூப் வேற இன்னும் வராமா படுத்தறாங்க” என்று பாலாஜி, கத்திக் கொண்டு இருக்க, மற்றோருவன் தானே முன் வந்து எடுபிடி வேலை செய்ய ஆரம்பித்தான். கடையின் கூரையைப் போட்ட பின், ஒரு ஓரத்தில் இருந்து பாலாஜி அங்கு இருந்த செட்டை பார்க்க, நமது பக்கத்துக்கு நாட்டில் இருக்கும் ஒரு ஊரின் சந்தை போல் முழுமையாக இருந்து அவனுக்குத் திருப்தியை கொடுத்தது.



“ஹப்பா! இன்னிக்கி டைரக்டர் சார் கிட்ட இருந்து திட்டு கிடைக்காது.” என்று கூற, அவன் தோளில் கை போட்ட அந்த படத்தின் இயக்குனர், ரவி வர்மா



“அங்க பாரு! அந்த ஷெட் மேலே கொஞ்சம் ஓட்டை இருக்கற மாறி , நிறைய ஒட்டு துணி போட்டு தைச்சு இருக்கிற மாதிரி, டிசைன் செய்ய சொல்லி இருந்தேன்..அது ஒழுங்கா வரல. போய் பண்ணு” என்று கூற, அவன் நொந்து விட்டான். வேறு வழி இல்லை, அதனை எடுக்க மறுபடியும் கலைத் துறையில் இருந்து ஆட்களை வரவழைத்து மீண்டும் அந்த கூரைத் துணியை கடையின் மேல் பரத்தினான்.



அவனுக்கு சற்று நேரம் முன்,எடுபிடி வேலை பார்த்தவன்,



“சார்! டைரக்டர் சார் இவ்வளவு பார்ப்பாரா? இதெல்லாம் ஆர்ட் டைரக்டர் வேலை இல்லே?” என்று கேட்க, அவன்



“இந்த பாரு தம்பி! டைரக்டர் ரவி வர்மா கிட்ட அசிஸ்டெண்ட் வேலை செய்யணும்ன்னா, எல்லா வேலையும் செய்ய தெரியணும். சம்டைமஸ் மேக்கப் கூட போட வேண்டி இருக்கும். சாருக்கு எல்லாதிலும் ஃபர்பெக்ஷன் வேணும்..ஆமா நீ எதுக்கு, எப்படி இந்த செட்டுக்குள்ள..என்ன வேணும்? எந்த டிப்பார்ட்மெண்ட் நீயி?” என்று அவனைக் கேட்க, மற்றவன் தலையை சொரிந்து கொண்டே,



“சார்! பேரு கதிர்! ஊரு சிவகாசி. படம்ன்னா உயிரு. ஆனா எங்க வீட்டுல யாருக்கும் இஷ்டம் இல்ல. படிச்சிட்டு வேற வேலை செய்ய இஷ்டப்படல, அதான் வீட்டை விட்டு ஓடி வந்திட்டேன். இப்போ ரவி சார் கிட்ட அசிஸ்டெண்டா ஜாயின் பண்ணனும். என்னை ஒரு தடவை, சார் கிட்ட அறிமுகப் படுத்தினீங்க ன்னா..” என்று கேட்க,



“ம்ம். உன்னைய மாதிரி இன்னும் 10 பேர் இருக்காங்க தம்பி. அங்க பாரு” என்று காண்பிக்க, ஒரு சிலர் சற்று தள்ளி நின்று இந்த செட்டை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க, வேறு சிலர், வேறு எடுபிடி வேலை செய்து கொண்டு இருந்தனர்.



“நீயும் அந்த கூடத்துல ஐக்கியம் ஆகிக. டைம் வரும் போது , கூப்பிடறேன்...கொஞ்ச எடுபிடி வேலை செய்ய” என்று கூற, கதிர்



“சார். ..எடுபிடி வேலைக்கா?” என்று வாயை பிளந்தான்.



“பின்ன, நானும் உன்னைய மாறி தான்யா..ஊரை விட்டு ஓடிவந்தேன். 5 வருஷம் எடுபிடி வேலை செஞ்சு, இப்போ தான் செகண்ட் அசிஸ்டெண்ட் டைரக்டராக ஆகி இருக்கேன்..நீ வந்த உடனே ஸ்கிரிப்ட்-ஐ கைல தூக்கி கொடுப்பாங்க ன்னு நினைச்சியா..ஹீரோயின்க்கு ஜூஸ் கொடுக்கரலிருந்து அவங்க நாயை வெளிய பாத்ரூம் கூட்டிட்டு போகிற வரைக்கும் தயாரா இரு. பொறுமை முக்கியம் தம்பி” என்று கூறிவிட்டு அங்கிருந்து பாலாஜி சென்று விட, கதிர் என்பவன் தனக்கு எப்போது வாய்ப்பு வரும் என்று காத்திருக்க ஆரம்பித்தான், வாய்ப்பும் வந்தது.



**********



உளவுத்துறை அதிகாரியாக அந்தப் படத்தின் ஹீரோ துருவ் நடிக்க உள்ளான், தனது காரவேனில் அமர்ந்து கொண்டு, சற்று அடிப்பட்ட மாதிரி தென்படுவதற்கு உண்டான ஒப்பனையை ஒப்பனையாளர் செய்ய , அவன் படத்தின் இயக்குனர் ரவி வர்மாவின் பேச்சை ஆழ்ந்து கேட்டுக் கொண்டு இருந்தான் .

"துருவ் ! நீங்க என்ன பண்ணறீங்க , ஹீரோயினை இழுத்துகிட்டு ஓடணும் . கண்ணு மண்ணு தெரியாம ஓடணும் . கல்லு தடுக்கி அவ விழும்போது , அதை பார்த்து 'கமான் , கெட் அப் ' ன்னு எரிச்சலாக கத்தனும் . பின்னாடி வில்லனா குரூப் உங்களை துரத்தி துரத்தி ஃபாலோ செய்வாங்க ! அவங்க சுடும் போது குனிஞ்சு , ஒரு கடை மாதிரி செட் ஒன்னு வரும், அதுக்குள்ள ஹீரோயினை தள்ளிவிட்டு, நீங்க உங்க துப்பாக்கியை எடுத்து வில்லன் குரூப்பை சுட ஆரம்பிக்கணும் . அப்போ அவங்களும் உங்களை சுடு வாங்க, உங்க மார்புல அடிபடும் , நீங்க கீழ விழணும் . இதான் ஸீன் , இந்த சீன்ல முக்கியமா உங்க கண்ணு, ரௌத்திரமா இருக்கணும் , அந்த வில்லன் குரூப்பை சுடும் போது . அதிகம் வசனம் இல்லாத சீன்ஸ் . ஜஸ்ட் கண் மூலம் தான் உணர்வுகள் வெளியாகணும் , தவிப்பு, கோபம், வேகம், அவசரம் எல்லாம் அந்த கண்கள் தான் பேசணும் ,ரெடி ?" என்று கூறி முடிக்க, துருவ்

"டன் ! சுந்தேரசன் சார் ! லாஸ்ட் சீன்ல இந்த ரத்தம் வந்த இடத்துல வலது கன்னமும் இருந்தது நினைக்கிறன் . ரவி சார் ! கொஞ்சம் லாஸ்ட் ஷாட் காமிங்க ! கன்டின்யுட்டி விட கூடாது " எண்டது தனது ஒப்பனையாளரிடம் கூறிவிட்டு, ரவி இடமும் கேட்க , ரவி வர்மன்

"வாவ் ! செம டெடிகேஷன் துருவ் உங்களுக்கு ! சுந்தேரசன் ! கொஞ்சம் என் அசிஸ்டென்ட் கிட்ட லாஸ்ட் ஷாட் போட்டோ ஸ்டில்ஸ் பாருங்க " என்று கூறிவிட்டு அங்கிருந்து இவ்விருவரும் செல்ல, ரவி வர்மாவின் பாராட்டைப் பெற்ற துருவ் , தனது வாலட்டை எடுத்து ஒரு குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து ,

"ஐ ஹோப் டு மேக் யு ப்ரவுட் சிக்கு !" என்று கூறியவன் முகத்தில் சிக்குவை நேரில் கண்ட மகிழ்ச்சி. எத்தனை காலம் ஆகிவிட்டது, அவளை கண்டு! நேரில் பார்க்க தடை விதித்துக் கொண்டும் அவளை நேற்று கண்டான், ஆனால் அது அவனது சிக்கு அல்ல. ஆனாலும் அவளைத் தேடுவதை அவன் மனம் நிறுத்தவில்லை .
 
Last edited:

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்தக் காட்சியைப் படமாக எல்லோரும் தயாராக , துருவ் கதாநாயகியின் கையைப் பிடித்துக் கொண்டு ஓட தயாரானான் .

இரண்டாம் துணை ஒளிப்பதிவாளர் கிளாப் போர்ட் -ஐ எடுத்துக் கொண்டுத் தயாராக, அதில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாலாஜி சோதித்தான் .



இந்த கிளாப் போர்ட் என்பதில் படத்தின் பெயர், இயக்குனர், தயாரிப்பாளர் பெயர் மட்டும் அல்லாது இப்பொது எடுத்துக் கொண்டு இருக்கும் காட்சி எந்த ரீல், டேக், ஸீன் என்ற தகவல்களும் இருக்கும். இது படம் முடிந்த பின்னால் , மிகவும் உபயோகமாக இருக்கும் ஒரு சாதனம் .



ஏனெனில் படம் பிடிக்கும் தருவாயில் , வசனங்கள் பேசினாலும், பின்னணியில் மறுபடியும் வசனங்களைப் பேச வேண்டி இருக்கும், பின்னணி இசை வேறு இருக்கும் . பின்னணியில் பேசப்படும் வசனம், மற்றும் மீட்டப்படும் இசையைப் படத்துடன் இணைக்க, இந்த கிளாப் போர்ட் சத்தம் வரும் கணத்தைக் கேட்டு, பின்னணியில் சரியான இடத்தில தொகுப்பாக்கம் செய்வர் .

அது மட்டும் இல்லை , ஒரு காட்சியைப் பல்வேறு முறை எடுப்பார்கள். தொகுப்பாக்கம் செய்யும் போது , இந்த டேக் அதாவது எந்த முறை மிக நன்றாக வந்து உள்ளதோ, அதனை படத்தில் சேர்ப்பர். காட்சியைப் படம் பிடிக்கும் முன், எந்த டேக் , ஸீன் என்ற சொல்லி விட்டு தான் ஸ்டார்ட் காமெரா ஆக்ஷன் என்றே கூறுவர் .

இப்பொது எல்லாம் தயாரான நிலையில், இரண்டாம் துணை ஒளிப்பதிவாளர் கிளாப் போர்ட் எடுத்துக் கொண்டு அந்த காட்சியை ஆரம்பிக்க எத்தனிக்க , முதல் துணை இயக்குனர்

"கொயட் ஆன் செட் ! ரோல் சவுண்ட் " என்று கூவ ,

ஒலி சேமிப்பாளர் , "சவுண்ட் ஸ்பீடிங் " என்று தனது பங்கிற்கு கூற ,

இயக்குனர் , "ரோல் காமிரா " என்று கேட்க ,

ஒளிப்பதிவாளர் "ரோலிங் " என்று உரைத்து தங்கள் பங்கு சரியாக இருக்கிறது என்று ஊர்ஜிதம் செய்யவும், இரண்டாம் துணை ஒளிப்பதிவாளர்

"ஸீன் 25! டேக் 1" என்று கூறிவிட்டு, கிளாப் போர்டை அடிக்கவும் , இயக்குனர்

"ஆக்ஷன் " என்று கத்தியதும் , துருவ் , நிழல் கதாநாயகியை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான் .



இயக்குனர் கூறியதை மனதில் ரீங்காரமிடவிட்டவன், அவர் கூறிய ஒவ்வொரு உணர்வையும் கண்களில் பிரதிபலித்தான். அவனை சுற்றி, பின்னால் என்று காமிராக்கள் செல்ல, ஒரு கடையின் உள் நாயகியை திணித்து, தன்னிடம் இருந்த துப்பாக்கியை வெளியே எடுத்துகொண்டு தன்னைத் துரத்திய வில்லன்களைச் சுட ஆரம்பித்தான்.



எதிரில் இருந்த வில்லன்களும் சுட ஆரம்பித்தனர். இந்த காட்சியானது, ரவியின் திருப்திக்காகப் பல முறை படமாக்கப்பட, ஒரு முறையில் துருவ் மீது துப்பாக்கி சுடும் இடத்தில், சரியாக அவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. எல்லோரும் காட்சியைப் படமாக்கும் அந்தச் சிரத்தையில், அவன் வல புற மார்பில் குண்டு பட வேண்டியதை மறந்து, குண்டானது இடப் புற மார்பில் இதயத்திற்குப் பக்கத்தில் பட்டு, போலி ரத்தம் மற்றும் உண்மையான ரத்தம் அவன் உடலில் இருந்து பாய்ந்ததைக் கவனிக்கவில்லை.



ஆம், இம்மாதிரி ரத்தம் உடலில் இருந்து வெளியேற வேண்டிய காட்சியில், போலி ரத்தம் மற்றும் squib எனும் சின்ன அளவு வெடிபொருள்சாதனத்துடன் நடிகர் உடைக்குள் வைப்பர். துப்பாக்கி சுடும் நேரத்தில் squib - ஐ வெடிக்க செய்து, ரத்தம் உடலில் இருந்து பீய்ச்சி அடிக்குமாறு செய்வது வழக்கம். உயிர் வலி, துருவ்வின் கண்களில் தெரிய, காட்சியில் ஆழ்ந்து போய் விட்ட இயக்குனர், ‘கட் கட்’ என்று கூறக் கூட மறந்து அவன் நடிப்பில் மூழ்கி விட்டார் .



ஆனால் முதல் துணை இயக்குநர், அந்த நேரத்தில் ‘கட் கட்’ என்று கூற, எல்லோரும் அவர்கள் இருந்த நிலையில் இருந்து இயல்புக்கு வந்தனர், துருவ்வை தவிர.



“துருவ்! ஷாட் ஓவர்! செமையா இருந்திச்சு இந்த சீன்” என்று ரவி வர்மா அவனை எழுப்பி முயன்றார். கண்கள் ஒரே இடத்தில் நிலைக் குத்தி இருக்க, அவர் கூறுவது காதில் சென்று மூளையை அடைந்ததா இல்லையா என்ற நிலையில் அவன்.



'துருவ் துருவ்' என்று அழைத்து பார்த்தவர் அவனிடம் இருந்து எவ்வித ஓசையும் வராமல் போக, அப்போது தான் அவனைக் கவனித்தவர், அவனது இடப்புற மார்பில் குண்டு, அதாவது உண்மையான குண்டுப் பாய்ந்து இருப்பதைக் கவனித்தார்.



“துருவ்…..” என்று அவர் கத்த, அதனை தொடர்ந்து பல்வேறு குரல்கள் துருவ் துருவ் என்று கூவின. அதில் ஒரு குரல், அவன் கேட்க நினைத்த குரல்,



“துரு… வ்” என்று ஓலமிட்டது , அந்த ஓலமானது அவன் இதயத்தில் நுழைந்தது. அவள் வந்துவிட்டாள் என்று உணர்ந்தவன் முகத்தில் ஒரு வித நிம்மதி. இறக்கும் தருவாயில் தான் ஏங்கிய வரம் கிடைத்த திருப்தி.



குரல் வந்தத் திசையை அவனால் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் எங்கோ அருகில், அவன் மிக அருகில். ஆனால் அவன் செல்லப் போகிறான் தூரமாக..வெகு தூரமாக..கை தொட முடியாத தூரம்.



அந்த காலத்தின் மாலுமிகளுக்கு ஒரே இடத்தில் வடக்கு திசையில் அமர்ந்து, திசை தப்பிவிடாமல் இருக்க வழிகாட்டும் துருவ நட்சித்திரம் போன்று அவள் அவனுக்கு. அவள், அவனது வாழ்வின் துருவ நட்சத்திரம். அதை உணர தான் இந்த போராட்டமா.



உடல் மயக்கத்தை தழுவ ஆரம்பிக்க, மனமோ சில ஆண்டுகள் பின்னால் செல்ல ஆரம்பித்தது , அவள் மனதுடன்.
 
Last edited:

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சில வருடங்கள் முன் ,

துருவ், கடற்கரையோரம் உள்ள தனது பங்களாவின் பிரும்மாண்டமான விருந்தினர் அறையில் துயிலில் இருக்க, அலைபேசியானது அலறியது.

"ம்ப்ச் ..ஹனி அந்த போனை ஆப் பண்ணு " என்று ஒரு பெண் அவனை அணைத்த படி தூக்கக் கலக்கத்தில் உளற, அவனோ

"ஷட் யூர் டேம் மவுத் சுவாதி " என்று கூறியவன் , அலைபேசி அழைப்பை ஏற்றான் .

மறுமுனையில் உதவியாளன் சூர்யா ,

" சார்! வீட்டு பால்கனி வழியா வந்து பாருங்க ! ஒரே ஃபேன்ஸ் கூட்டம் " என்று கூற , அவன் ஒன்றும் பேசாமல் தனது இரவு உடையான பைஜாமா மீது மேல் சட்டை எதுவும் போடாது, நைட் கோட் ஒன்றை அணிந்து வலிமையான தனது மார்பின் முன்பகுதி தெரியும் படி அணிந்துக் கொண்டு, கீழே இருக்கும் விருந்தினர் அறையில் இருந்து , வெளியே வந்தவன் , 2 படிகளாகத் தாவி தாவி தனது பிரதான படுக்கை அறைக்குள் நுழைந்து , அங்கிருக்கும் பரந்த பால்கனிக்குச் சென்றான். அங்கே இருந்து கீழே பார்க்க , தனது பங்களாவின் கேட்டின் முன் குழுமி இருந்த ரசிக பெருமக்கள்,


"ஹேப்பி பர்த் டே துருவ் " என்றும் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா " என்ற போஸ்டர்களும் , குரல்களும் தென்பட்டு ஒலிக்க, துருவ் தனது கை அசைக்க, அங்கிருந்தக் குரலோசைகள் பன்மடங்கு காதைக் கிழிக்கும் அளவு அதிகரித்தது . அதில் மேலும் புன்னகைப் பூத்தவன் , சில பல முத்தங்களைப் பறக்க விட்டவன் ,

"லவ் யு கைஸ் " என்று கூக்குரல் இட்டான். அதில் அவன் ரசிக பெருமக்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்து கரகோஷம் எழுப்பினர் .

"தலைவா ! உன் ஆட்டோகிராப் ! " "தலைவா உன்னோட ஒரு செல்பி " "துருவ் என்னை கல்யாணம் பண்ணிக்க" என்ற குரல்கள் வேறு ஆரம்பிக்க, அவன் தனது பால்கனியில் இருந்து கீழே செல்ல எத்தனித்தான். அப்போது அவன் படுக்கை அறைக்குள் வந்த சுவாதி

"ஹனி நானும் ரெடி ! அப்படியே உன் பர்த் டே இல் நம்ம கல்யாண விஷயத்தையும் சொல்லிறலாம் " என்று முகம் நிறைய ஒப்பனையும், பளபளவென்று ஒரு உடையையும் போட்டுக் கொண்டு வர , அவளை ஒற்றை புருவம் தூக்கிப் பார்த்தவன் ,

"யார் கல்யாணம் சுவாதி” என்று கேலியாக கேட்க, சுவாதி துணுக்குற்று



“நம்ம கல்யாணம்ன்னு சொன்னேன் துருவ்” என்றாள், சற்று அழுத்தமாக.



“நம்ம கல்யாணமா..இன் யூர் ட்ரீம்ஸ் சுவீட்டி” என்று இளக்காரமாகக் கூறியவன், முகத்தைக் கழுவியப்பின், துடைத்துக் கொள்ளப் பயன்படுத்திய துவாலையை அவள் மீது எறிந்தான்.



“அப்போ! நேத்து ஐ லவ் யூ சொன்னியே அது! குடிச்சிட்டு உளறினியா?” என்று அவளும் சீறினாள்.



“இப்போ கூட ஐ லவ் யூ கைஸ்ன்னு வெளியே இருக்கிற ஃபேன்ஸ் கிட்ட சொன்னேன். அங்க அட்லீஸ்ட் 50 பொண்ணுங்க...நான் ஐ லவ் யூ சொல்லற பொண்ணுங்க எல்லாரையும் கல்யாணம் பண்ண முடியுமா..பாலி கேமி ஒரு க்ரைம், சுவீட்டி! ஜெயில் களி திங்க ஆசை இல்ல.



லுக்! வி போத் ஹேட் நீட்ஸ். அண்ட் நம்ம தேவைகள் எங்க முடியுமோ, அங்க முடிஞ்சிது. அதுக்காக நீ பீல் பண்ணலன்னு தெரியும்..உனக்கு வாய்ப்புகள் வேணும்..என்னோட அடுத்த படத்துல நீ தான் மெயின் ஹீரோயின். இப்போ ஈகுவேஷன் சால்வட்” என்று கூறினானே பார்ப்போம், அவள் முகத்தில் ஈயாடவில்லை.



அவனை பற்றி தெரியும், இருந்தாலும் முகத்தில் அடித்தார் போல் அவன் கூறியது, அவளைத் துன்புறுத்தியது, மனதளவில் அது பாதித்தது. ஆனால் அவளால் ஒன்றும் சொல்ல முடியாத நிலை. அவன் கூறுவது சரி தான், அவளுக்கு வேண்டியது பட வாய்ப்புகள், அதற்கு இம்மாதிரி எத்தனையோ ஆட்களைச் சமாளிக்க வேண்டும். அவனை மனதில்,



“சகவுண்ட்ரல்! ரோக்! “ என்று திட்டத் தான் முடிந்தது. திரைப்படத்துறையில் தனக்கென்று ஒரு இடம் தக்கவைக்கும் வரை, இம்மாதிரி நிகழ்வுகள் தொடரத் தான் செய்யும், என்ன செய்வது கடல் ஆழமானது என்று தெரிந்து குதித்து விட்டாள், இனி மூழ்காமல் மீள வேண்டும்.



அவள் யோசனையைக் கலைத்தவாறு துருவ்,



“சுவீட்டி! பின் டோர் வழியா போ” என்று கூற, அவள் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாமல்,



“ஏன் முன் வாசல் போனா என்ன ஆகும்?” என்று சற்று தெனாவெட்டாக கேட்டே விட்டாள்.



அதில் ஏதோ பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டது போல் சிரித்தவன்,



“என்ன ஆகும்? இப்போ நடிச்சு கிட்டு இருக்கியே ஒரு படம், அதிலிருந்து உன்னை தூக்கிடுவாங்க! ஏன்னா அந்த பட ஹீரோக்கும் எனக்கும் ஆகாதுன்னு ஊர் அறிஞ்ச சேதி!



நாளைக்கு என் அடுத்த படம் நின்னு போச்சுன்னா? என்ன செய்வ? “ என்று அகந்தையுடன் துருவ் கூற, மறுபடியும் அவள் ஸ்தம்பித்தாள். துருவ் போன்ற பெரிய கதாநாயகர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரமானக் கதாநாயகியை முடிவு செய்வர். அவர்கள் குறுக்கீடு இல்லாது, படம் வெளியே வராது. இதில் அதிகபட்ச பாதிப்பு சுவாதி போன்ற ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நாயகிகளுக்கு தான்.



ஆகையால் கிடைத்த வாய்ப்பை விட்டு விடாதே என்ற யாரோ கூறிய அறிவுரை அவள் காதில் ரீங்காரம் இட, அங்கிருந்து செல்ல எத்தனித்தாள்.



“ஸீ யூ சுவீட்டி! மிஸ் யூ! சீக்கிரம் பார்ப்போம்!” என்று அவளைக் கண்டு கண்ணடித்தவன், ஒரு பறக்கும் முத்தத்தைக் கொடுத்து விட்டு, ஒரு சாம்பல் நிற டி ஷார்ட், நீல நிற ஜீன்ஸ் பேண்ட் சகிதம் கீழே சென்றான். செல்லும் அவன் முதுகைப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு, அவன் கூறிய கடைசி வாக்கியத்தில் கோபம் வந்தது.



“உன்னை நான் பார்க்க மாட்டேன், டேம் இட்” என்று முணுமுணுத்தாள், ஆத்திரத்தில்.



“சுவாதி மேம்! உங்களுக்கு கார் அரேஞ் பண்ணி இருக்கு. கொஞ்சம் முகத்தை மூடி கிட்டு போறீங்களா?” என்று சூர்யா அவளது யோசனையைக் கலைக்க, சுவாதி அங்கிருந்து சென்றாள்.



இங்கே தனது வீட்டின் முன்பகுதிக்கு வந்த துருவ், தனது ரசிக பெரு மக்களை கண்டு கை அசைத்து, அனைவரையும் உள்ளே அனுப்பும் படி சைகை செய்தான்.



எல்லோரும் உள்ளே ஓடி வர, அவர்கள் வாழ்த்துக்களைப் பெற்று கொண்ட துருவ், சூர்யா ஏற்பாடு செய்து இருந்த, ஒரு பெரிய கேக்கை தனது ரசிக பெருமக்கள் முன் வெட்டி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினான்.



கேக் துண்டுகளை, அவன் வீட்டில் வேலை செய்பவர்கள் விநியோகிக்க, அங்கு இருந்த ஒரு பெண், அவனிடம் வந்து, அவனுக்குக் கேக்கை ஊட்டிவிட்டு, அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட, அதில் அதிர்ச்சியும், ஆச்சரியுமாக அவன் முக உணர்வுகளுடன் ஒரு புகைப்படமும் எடுக்கப்பட்டது.



அந்தப் புகைப்படம், சமூக வலைதளத்தில் உலா வர, எண்ணற்றப் பிடித்தங்கள், கருத்துகள் வேறு அதற்கு!



“நடிகர் துருவ், ரசிக பெருமக்களுடன் இவ்வாறு தன் பிறந்தநாள் கொண்டாடினார் “ என்ற தலைப்பும். அதை பார்த்துக் கொண்டிருந்த அவள்,



“பொறுக்கி! மூஞ்சிய பாரு! ஈ ன்னு இளிச்சு கிட்டு! இவனை எல்லாம் “ என்று மனதில் அர்ச்சித்துக் கொண்டு இருந்தாள்.



“என்ன பாப்பா! பார்த்து கிட்டு இருக்கே? இந்த ஸ்மார்ட் போன் வந்தாலும் வந்திது.. எல்லாரும் அதையே தடவிக்கிட்டு, அதுல வரத ஏதோ ஒண்ணை பார்த்து சிரிச்சு கிட்டு, புலம்பி கிட்டு, பக்கத்துல என்ன நடக்குதுன்னு தெரியாம..” என்று ஆரம்பித்தார் அவளது அன்னை பார்வதி. பார்வதி அந்த காலத்தில் ஒரு துணை நடிகை, அதன் பின், தொலை காட்சி தொடர்களில் அம்மா வேடம், வேலைக்காரி வேடம் என்று தனது வயிற்றுப் பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருப்பவர்.



பார்வதியின் கேள்விக்கு ஒன்றும் கூறாது, அவள் தனது உதட்டுச் சாயத்தை சற்று மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள்.



“அது ஏன் அழிக்கர பாப்பா? நல்ல தான் இருக்கு அந்த லிப்பு ஸ்டிக்கு. “ என்று அவர் கூறியதை காதில் வாங்கி கொள்ளவில்லை.



“டைரக்டர் தம்பி திருப்பி மேக் அப் போட்டு கிட்டு வான்னு சொல்ல போறாரு! அப்போ தான் உனக்கு புரிய போகுது. நான் அந்த கால நடிகை ன்னு ஒரு மட்டு மரியாதை இல்ல உனக்கு” என்று புலம்ப ஆரம்பிக்க, அங்கே வந்த அந்தப் படத்தின் இயக்குனர் மூர்த்தி,



“வாவ்! நக்ஷத்திரா! மினிமல் மேக் அப்! குட். சீன் ஞாபகம் இருக்குது இல்ல? அந்த குட்டி பொண்ணை கட்டிப்பிடிச்சு அவ கண்ணீரை துடைச்சு விட்டு, நீங்க சொல்லணும்,



‘உன் வாழ்க்கையில் இனி இருட்டு வராது, வரவும் விட மாட்டேன்’ . டையலாக் டெலிவரி போது, உங்க கண்ணுல தண்ணி நிக்கணும், ஆனா வெளிய வர கூடாது. க்ளிசிரின் அதுக்கு தேவையான அளவு யூஸ் பண்ணுங்க” என்று கூறி முடிக்க, நக்ஷத்திரா



“கிளிசரின் தேவை இல்ல சார்! இந்த நாட்டுல இருக்கற பல பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படற கேவலம் இது. உண்மை நிலவரத்தை நினைச்சு பார்த்தாலே எனக்கு கண்ணீர் தானா வந்திரும். அட்லீஸ்ட் இங்க படத்தில் நீதி சட்டுன்னு கிடைக்குது. ரியல் லைஃப்ல லாயாராக ஆகி, நான் செய்யணும்ன்னு நினைச்ச ஒன்னு, அட்லீஸ்ட் படத்துல செய்யறேன். “ என்று கடைசியில் அவள் குரல் வேதனையில்.



அதனை உணர்ந்த மூர்த்தி, அவள் தோளை பிடித்து,



“நக்ஷத்திரா! டோன்ட் லூஸ் ஹோப்! இப்போ ஷாட்டுக்கு போகலாமா?” என்று வினவ, கடமை உணர்ந்த நக்ஷத்திரா, மூர்த்தியைத் தொடர்ந்து சென்றாள்.



காட்சிக்கு எல்லோரும் தயாராக, மூர்த்தி “ஆக்ஷன்” என்று கூறவும், நக்ஷத்திரா அந்த கதாபாத்திரமாக வாழ முனைந்து, வெற்றியும் கண்டாள்.



அவ்வளவு தத்ரூபமாக, அவள் நடிப்பு அமைய, இயக்குனர் ‘கட் கட்’ என்று சொன்னவுடன், எல்லோரும், அவள் நடிப்பை வியந்து பாராட்டினார்கள்.



அன்றைய படப்பிடிப்பு முடியும் தருவாயில், மூர்த்தி அவளிடம் ஒரு பரிசைக் கொடுத்து வாழ்த்தி,



“உனக்கு இந்த சினி பீல்டுல் நிறைய நல்ல எதிர்காலம் இருக்கு மா” என்று கூற, நக்ஷத்திரா



“இந்த சினி பீல்ட்க்கும் எனக்கும் இருக்கும் சம்பந்தம் இந்த படத்தோட முடியனும் ன்னு ஆசைப்படறேன் சார்” என்று பதில் உரைக்க, மூர்த்தி அவளது வெளிப்படையானப் பேச்சில் திகைத்து போனார்.





அதன் பின், நக்ஷத்திரா வீடு திரும்புகையில், பார்வதி எப்போதும் போல் புலம்பல்,



“அந்த டைரெக்டரு, அவ்வளவு சொல்லியும் உனக்கு என்ன பிடிவாதம் பாப்பா? ஆட்டோல தான் வீடு திரும்பணுமா? அவங்க தான் கம்பெனி கார் ஏற்பாடு செய்யறேன்னு சொன்னாருலே?” என்று ஆரம்பிக்க, நக்ஷத்திரா,



“அண்ணே! இங்க வண்டியை நிறுத்துங்க! “ என்று ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, பணத்தைக் கொடுத்து விட்டு, பார்வதியுடன் வீடு வந்தாள். வழி நெடுங்கிலும், பார்வதியின் புலம்பல் பேச்சு தான் , தனக்குக் காது என்ற உறுப்பு ஒன்றே இராதது போல் அவள் பாவித்தாள்.



வீட்டை திறந்துக் கொண்டு வந்த நக்ஷத்திரா,



“அம்மா! பாருங்க, இன்னிக்கி காரு கொடுக்கறேன்னு சொல்லுவாங்க, நமக்கும் அந்த வசதி பழகி போகும். ஆனா படம் முடிஞ்சத்தும் என்ன செய்வீங்க?” என்று கேட்க, பார்வதி கூலாக,



“அடுத்த கம்பெனி கார் கிடைக்கும்” என்றாரே பார்ப்போம், நக்ஷத்திரா அசராது



“இது தான் நான் முதலும், கடைசியுமா நடிக்க போற படம். “ என்று தீர்மானமாக உரைத்து விட்டாள்.



“யாரை கேட்டு நீ இதை முடிவு பண்ணின? “ என்று பார்வதி சீற ஆரம்பிக்க, நக்ஷத்திரா



“படிக்க போறேன். எனக்கு படிக்கணும், லாயர் ஆகணும். படத்துல லாயர் வேஷம் போடறதுல எனக்கு இஷ்டம் இல்ல. நிஜத்துல நான் கருப்பு கோட் போடணும்” என்று வாதாட , பார்வதி, கோபமாக



“நீ படிச்சு கிளிச்சது போதும். ஒழுங்கா அடுத்த படம் ஒன்னு வந்து இருக்கு. பெரிய பேனர், பெரிய ஹீரோ, நீ செகண்ட் ஹீரோயின். அட்வான்ஸ் வாங்கிட்டேன், அதுல தான் இந்த மாசம் கடன் கொஞ்சம் அடைச்சு இருக்கேன், ஒழுங்கா போய் நடி! இல்ல தெருவுல தான் நிக்கணும் நாம ரெண்டு பேரும்” என்று இது தான் தன் முடிவு என்று அறிவிக்க, நக்ஷத்திரா



“யாரை கேட்டு அட்வான்ஸ் வாங்கினீங்க? என்னால நடிக்க முடியாது! ஹீரோ சென்ரிக் மூவில ஹீரோயின், ஒரு வேஸ்ட் பீஸ், ஜஸ்ட் சாங் மட்டும் டான்ஸ், அப்பறம் தேவை படர இடத்துல, அவன் பின்னாடி நிக்கணும். அதுக்கு நான் வரல. வேணும்ன்னா நீங்க போய் நடிங்க, கதை சம்பந்தமே இல்லாத இடத்துல வர பாட்டுக்கு டான்ஸ் ஆடுங்க!” என்று அவளும் கத்த, பார்வதி அவளுக்கு ஒரு அறை கொடுத்து,



“நீ இந்த படம் நடிக்க தான் வேணும். ஹீரோ துருவ்” என்று கூற, நக்ஷத்திரா



“நான் செத்து, என் பொணத்த நடிக்க வைங்க, முடிஞ்சா” என்று தன் பிடியில் நின்றாள்.



அதே நேரம், துருவ் தனது காரில் அமர்ந்து இருந்தான். முன் இருக்கையில் அமர்ந்த சூர்யா, அவனிடம்



“ஏன் சார்! இதை போட்டோ எடுக்கவிடலே?” என்று தாளாது கேட்க, துருவ்



“உங்க அம்மா இப்போ எப்படி இருக்காங்க சூர்யா? ஆபேரேஷன் முடிஞ்சு பரவாயில்லையா?” என்று பேச்சை மாற்றினான்.அவன் கூற்றில் இருந்தே, அவனுக்குத் தான் பேச விரும்பியது பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்ட சூர்யா,



“நல்லா இருக்காங்க! எனக்கு பொண்ணு பார்க்கிற அளவுக்கு தேறிட்டாங்க” என்று கூற, புன்னகை முகமாய் துருவ்



“ம்ம்! தட்ஸ் குட். கேக்கவே சந்தோஷமா இருக்கு! நல்ல பார்த்துக்கோங்க அம்மாவை” என்று பதில் உரைக்க, சூர்யா தயங்கிய படி,



“அவங்க உங்களை நேரில் பார்க்க விரும்பினாங்க! நான் தான் நீங்க பிசின்னு சொல்லிட்டேன்.” என்று கூறியது தான் தாமதம், துருவ் தனது வாகன ஓட்டுனரிடம்,



“டேவிட்! காரை சூர்யா வீட்டுக்கு திருப்புங்க” என்று கூறிவிட்டான். அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்தில் சூர்யா,



“சார்..” என்று ஆரம்பிக்க, துருவ்



“உனக்கு பனிஷ்மெண்ட்! ரெண்டு நாள் நீ வீட்டுக்கு வர கூடாது! நான் பிசி யா இல்லையா நான் தான் முடிவு செய்யணும். நீ இல்ல! புரியுதா?” என்று கண்டிப்பாகக் கூறினாலும் அதில் குறும்பு தவிழ, சூர்யா ஒன்றும் கூறாமல் தனது முதலாளியை எண்ணி வியந்தான். துருவ் என்றுமே புரியாத புதிர் தான் அவனுக்கு.



சுவாதி போன்ற பெண்களிடம் ஒரு முகம், ரசிகர்களிடம் ஓரு முகம், சற்று நேரம் முன் அவர்கள் ஒரு இடம் சென்று இருந்தார்கள், அங்கே அவனா துருவ் என்ற விதத்தில் நடந்து கொண்டான்.



காலை முதல் இரவு வரை, சூர்யா அவனுடன் தான் இருக்கிறான், அப்படியும் துருவ்வை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவர்களது சிறிய வீட்டிற்கு வேறு வருகை தர போகிறான், சூர்யாவால் நம்ப முடியவில்லை. துருவ் ஒரு முன்னணி நடிகன், 5 நிமிடம் ஏதேனும் ஒரு விழாவிற்குத் தலையைக் காட்ட வேண்டுமென்றால், அதற்கு அவன் வாங்கும் பணம், சூர்யாவுக்கா தெரியாது?



இன்று அவனோ எவ்வித பந்தா எதுவும் இன்றி, அவன் வீட்டில் அவன் அன்னையுடன் அரை மணி நேரம் இருந்தான். அவர் அளித்த உணவை உண்டான் எவ்வித தயக்கம் இன்றி.

அப்போது அவனுக்கு ஒரு முன்னணி நடிகை இடம் இருந்து அழைப்பு வர, அவனோ அதை ஏற்க வில்லை. சூர்யாவின் மூலம் தான் தற்போது பிஸியாக இருப்பதாக கூறும் படி கூறிவிட்டான்.



வீடு செல்லும் வழியில் சூர்யா,

“சார்! உங்களை என்னால் புரிஞ்சிக்க முடியல” என்று வெளிப்படையாகக் கூற, துருவ் ஒற்றை வார்த்தை பதிலாக,



“நானும்” என்று கூறிவிட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். கண்கள் மட்டும் தான் சுற்றுப்புறத்தைப் பார்த்தது, ஆனால் மனமோ பழைய ஞாபகங்களில் உழன்று போக, தனது வாலெட்-ஐ எடுத்து அதில் இருந்த ஒரு புகைப்படத்தை வருடினான்.



சில வாரங்கள் கழிந்த நிலையில், துருவ் தனது அடுத்தப் படத்திற்கு தயாரானான். அந்த படத்தில் தான் சுவாதி, கதாநாயகி ஆக நடிப்பதாக இருந்தது, ஆனால் இப்போது இல்லை. ஏனெனில் ஒரு குருட்டு அதிர்ஷ்டமாக, அவளுக்கு ஒரு ஹிந்தி படத்தில், பிரபல ஹிந்தி நடிகரின் தங்கை வேடம் கிடைத்து இருக்க, துருவ்வின் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று சற்று அலட்சியமாகக் கூறிவிட்டாள் என்று சூர்யா துருவ்விடம் கூறிக் கொண்டு இருக்க, துருவ் பளு தூக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தான், தனது தனிப்பட்ட உடற்பயிற்சி அறையில்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பளுவைத் தூக்கிக் கொண்டே, துருவ்,



“அந்த படத்தோட ப்ரொட்யூசர் யாரு?” என்று தனது புஜங்களைப் பலப்படுத்திக் கொண்டே கேட்க,



“அது யஷ் சிங் சார்” என்று தயங்கிய படி கூறினான். கையில் இருந்தப் பளுவை கீழே அலட்சியமாக போட்டவன், வேர்வையினால் குளித்து இருந்த தனது கையில்லாதப் பனியனை அவிழ்த்து தூர எறிந்தான். அதிலேயே சூர்யாவுக்கு அவன் என்ன செய்ய விரும்புகிறான் என புரிய, அந்த ஹிந்தி பட தயாரிப்பாளருக்கு அழைப்பு விடுத்தான்.



அதன் பின், சுவாதி வெற்றிகரமாக அந்த ஹிந்தி படத்தில் இருந்து தூக்கப் பட, துருவ்வுக்கு அழைப்பு மேல் அழைப்பு விடுத்தாள். அவள் தான் காரணம் என்று உணர்ந்தவளுக்கு, அவனிடம் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க வேண்டும் என்ற வெறி. ஆனால் துருவ் அவள் அழைப்பை ஏற்றால் தானே. சுவாதிக்கு இங்கே தமிழிலும் எந்த வித வாய்ப்பும் கிடைக்காமல் செய்தான் துருவ். இவ்வளவு ஏன் தொலைக்காட்சி தொடர்களில் கூட அவளால் நடிக்க முடியவில்லை.



தன்னைச் சீண்டிப் பார்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக துருவ் விளங்க, அவனை சீண்டியது மட்டும் இல்லாது அவனை அவமானமும் படுத்தினாள் நக்ஷத்திரா. அவனது ஒரு படத்தில் இரண்டாம் கதாநாயகி ஆனாள், அவளது இஷ்டமில்லாது. அதன் பலன் ஒரு நாள், அவனது வீட்டில் கண்ணீர் மல்க அவனிடம்



“ப்ளீஸ் என்னை விடு! என்னை விடு” என்று பின்னால் நகர்ந்த வாறே அவள் கெஞ்சி கொண்டு இருக்க, துருவ்வோ அதனை கண்டு கொள்ளாது அவளை நோக்கி அலட்சியமாகத் தனது வலுவான அடிகளை எடுத்து வைத்தான் ஓரு வில்லச் சிரிப்புடன்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 2



முதலில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் நடக்கும் நடக்கும் ஒன்று, புகைப்படப் பிடிப்பு. படத்திற்குப் பூஜை போடும் முன் கூட இது நடக்கும்.



'இன்று முதல் படப்பிடிப்பு துவக்கம்' அல்லது படத்தின் நாயகன் பெயர் போட்டு, அவர் இதில் நடிக்கப் போகிறார் என்ற விளம்பரம் கண்டிப்பாக வரும். விளம்பரம் இல்லாது ஒன்றும் நடவாது என்று நம்பும் உலகம் இது. உலகத்திற்கு ஏற்ப மக்களா, அல்லது மக்களுக்கு ஏற்ற உலகமா என்று விவாதம் செய்யலாம்.



இன்று நக்ஷத்திராவிற்கு, அவள் துருவ் உடன் நடிக்கப்போகும் படத்தின் புகைப்படப் படப்பிடிப்பு. ஆங்கிலத்தில் போட்டோ செஷன். இஷ்டமில்லாத நடிப்புத் தொழில், அதுவும் அவளுக்குப் பிடிக்காத நாயகன் உடன்! அவள் எரிச்சலுக்கு இன்னும் என்ன வேண்டும்?



போக்குவரத்து நெரிசலில் முதலில் குஷி ஆனாள், கால தாமதத்திற்காகப்படத்தை விட்டு தூக்கி விடுவார்களோ என்று பார்வதி கவலைப்பட, இவளோ ஆட்டோ ஓட்டுனரிடம்



"ஷார்ட் கட் வேணா! ரோட் சரியில்லை. அம்மாக்கு அல்ரெடி உடம்பு முடியல" என்ற கரிசனமான எதிர்ப்பைத் தெரிவித்தாள்.



"ஒழுங்கா கம்பெனி காரில் போகிருக்கலாம். இப்போ லேட் உன்னால. ஹீரோ சாரே வந்து இருப்பார்" என்று அவளைப் பார்வதி சத்தம் போட, ஆட்டோ ஓட்டுநர்



"யார் ஹீரோ?" என்று சுவாரஸ்யமான விசாரணை செய்ய, பார்வதி



"துருவ் சார்" என்று பதில் அளித்தாள்.



'அவன் எல்லாம் ஒரு ஆளு! இதுல அவனுக்கு சார் பட்டம் வேற' என்று பார்வதியைத் தாளிக்க, ஆட்டோ ஓட்டுநர்



"பர்ஷர்ட்டே நம்ம கையில் சொல்லுருத்துக்கென்ன! இன்னா மா! துருவ் அண்ணே இன்னா ஆக்டிங். லாஷ்ட் மூவி படா மாஸு. ஆஸ்கர் அவார்ட் அவருக்கு தான்னு பேச்சு" என்று தனக்கு தெரிந்த உலக அறிவை பறைசாற்ற, நக்ஷத்திரா களுக்கென்று சிரித்து விட்டு,



"ஆமா, ஆஸ்கர் விட பெரிய அவார்ட் ஒன்னு வருதாம், அதான் உங்க துருவ் அண்ணாக்குன்னு இன்னிக்கி நியூஸ்" என்று எகத்தாளம் தெறிக்கக் கூற, அதை அந்த ஓட்டுநர் வெள்ளெந்தியாக எடுத்து கொண்டு,



"மெய்யாலுமா" என்று பேசிக் கொண்டே, குறுக்கு வழியில் ஸ்டுடியோவிற்குக் கொண்டு அவளை சேர்பித்தான்.



அவள் இறங்கிய நேரம் தான், துருவ்வும் அவன் காரில் வந்து இறங்கினான், தன் உதவியாளன் உடன். கருப்பு நிற ஜாகுவார் வண்டி - அவனுக்கு விலை அதிகமான கார்கள் வாங்கி வைப்பது ஒரு பொழுது போக்கு. அதற்காகவே ஒரு தனி இடம் வைத்து இருக்கிறான் என்று ஒரு துணுக்குச் செய்தி ஒன்று உண்டு.



கண்களில் குளிர் கண்ணாடியை அவிழ்க்காது, உதவியாளன் காரைத் திறந்து விட்ட பின் இறங்கிய அவன், நக்ஷத்திரா வந்து இறங்கிய ஆட்டோவைப் பார்த்தான்.



எளிமையான ஜீன்ஸ்-டீஷர்ட்டில் அவள், அவளுக்கும் இந்தப் படத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு தோற்றம். துருவ்வைப் பார்த்த அந்த ஆட்டோ ஓட்டுநர் புளங்காகிதம் அடைந்து, அவன் புறம் ஓட, நக்ஷத்திரா இது தான் சமயம் என்று ஸ்டுடியோக்குள் புகுந்தாள்.



நாயகன் வர தாமதம் ஆயிற்று என்றால் பிரச்சினை இல்லையே, 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் பெண் ஒருவள் தாமதம் செய்தால் பிரச்சினை தான். ஆண் இன்னும் விதி விலக்கு தான்!



நக்ஷத்திரா கூறியதை ஆட்டோ ஓட்டுநர் அப்படியே துருவ் இடம் கேட்க, அவன் புதிராக



"எந்த நியூஸ் இல் பார்த்தீங்க?" என்று வினவினான். அவனோ



"அதான் இப்போ ஒரு பொண்ணு ஒன்னு, என்னோட சவாரி, உள்ளாண்ட போச்சே. அந்த பொண்ணு. பாண்ட் ஷர்ட் எல்லாம் போட்டுகினு, அந்த பொண்ணு கூட கொஞ்சம் வெயிட்டா ஒரு பொம்பள கூட இருந்திச்சு" என்று கூறி முடிக்க, துருவ் புருவங்கள் நெரிய,



"இன்டெரெஸ்டிங்" என்று கூறி விட்டு விடை பெற்றுக் கொண்டான். இது தீர்மானமான நக்கல் என்று அறிவான் அவன். யார் அந்தப் பெண் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் என்பதை விட, ஆங்காரம் கொண்டான்.



முதலில் துருவ் மட்டும் புகைப்பட படபிடிப்பிற்கு விதவிதமான முக பாவனைகளைக் கொடுத்தான். கோபம், குறும்பு, காதல், வெறுப்பு, சோகம், மகிழ்ச்சி என்று உடனுக்குடன் அவன் முக பாவங்கள் மாற்றிக் கொடுக்க, அங்கிருந்தோர் அவனது தனிப் புகைப்படப் பிடிப்பு முடிந்த உடன் கைதட்டி ஆர்பரித்தனர் .



'இந்த முக பாவனைக்கு ஹாலிவுட் ஹால் ஆப் ஃபேமில், இவன் பேரை பொறிக்க ஒரு போராட்டம் பண்ணிட வேண்டியது' என்று நக்கல் குறையாது நினைத்து கொண்டாள்.



லாஸ் ஏஞ்சலிஸில் ஒரு பெரிய இடம் உண்டு, அதன் பெயர் ஹால் ஆப் ஃபேம், பெரிய ஹாலிவுட் நடிக-நடிகைகளின் பெயர் அதில் பொறிக்கப் பட்டு இருக்கின்றன. அது ஒரு பெரிய மரியாதையாகக் கருதப்படுகிறது.



நக்ஷத்திராவிற்கு இந்தப் புகைப்படப் படப்பிடிப்பு புதிது. கடந்த முறை சின்ன பட்ஜெட் படத்தில், இவ்வளவு ஆர்ப்பாட்டம் எல்லாம் இருக்கவில்லை. இது துருவ் நடிக்கும் படம். எந்த வகுப்பில் எப்படி இது வெற்றி பெற வேண்டும் என்ற கணிப்பு எல்லாம் இருக்கும். அதற்கேற்ப படம், புகைப்படப் படப்பிடிப்பு , படம் முடிந்த பின் வரும் விளம்பரம் எல்லாம் இருக்கும்.



அவனை நம்பி பணம் போடுவோர், பெற கூடிய லாபம், கணக்கில் கொண்டு இதில் பணத்தை அதிகம் செலவழிக்க தயங்க மாட்டார்கள். அது போல், பத்திரிகையாளர்களுக்குத் தகுந்த நேரத்தில் செய்திகள் கொடுத்து, இணைய தளங்களில் சமூக வலைத்தளங்களில் செய்தி இட்டு என்று பெரிய அளவில் படத்தை பேசச் செய்வர்.



டீசர் இன்று போட போகிறோம் என்ற விளம்பரத்திற்குக் கட் அவுட் இல் இருந்து போஸ்டர்கள் வரை என்று மட்டும் இல்லாது எல்லா முறைகளிலும் விளம்பரம் இருக்கும். இதற்கு என்று தனி அணி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் மட்டுமல்லாது நடிகர்-நடிகைககளுக்கும் உண்டு. நக்ஷத்திராவிற்கு சமூக வலைதளங்களில் கணக்குக் கூட கிடையாது.



அடுத்தக் கட்டதிற்குப் படத்தின் முதலாம் நாயகி மற்றும் துருவ். படப்பிடிப்பு தளத்தில் இதற்கு என்று செட் வேறு போட்டு இருந்தனர். இருவரும் அணைத்து கொண்டும், கன்னத்தில் முத்தமிட்டு கொண்டும், காதல் மொழி பேசுவது போலும் புகைப்படங்கள் சரமாரியாக எடுக்கப்பட்டன. நாயகியின் முக பாவங்களில் அப்படி ஒரு செயற்கைத்தனம் இருப்பது போல் நக்ஷத்திராவிற்குத் தோன்றியது. அதன் பின் நாயகிக்கு தனி ஷாட்டுகள் எடுக்க ஆரம்பிக்க, பார்வதி



"ஆன்னு வாயை தொறந்து கிட்டு பார்த்தது போதும் . அடுத்து உன் ஷாட் தான். ரெடியாகு. ஏன்பா மேக்கப்பு, நம்ம பாப்பாவை கவனி" என்று சற்று கூக்குரல் இட, எல்லோரும் ஒரு முறை திரும்பி பார்வதியைப் பார்க்க, அவருக்கு இதில் லஜ்ஜை எதுவும் இருக்கவில்லை. நக்ஷத்திரா தான் பல்லை கடித்தாள்.



"சாரி" என்று அவள் உரைத்துவிட்டு சென்றாள்.



"உங்களுக்கு விவஸ்தை இல்ல. ஏன் அப்படி கத்தினீங்க?" என்று பார்வதியைக் கடிய, அவரோ அதற்கு மேல்



"என்ன விவஸ்தை இதுக்கு. நீ நாளைக்கு ஃபர்ஸ்ட் ஹீரோயினாக வேண்டாமா? நாமளும் காரில் போக வேண்டாமா? பங்களா வாங்க வேண்டாமா? நாலு படம் இன்னும் புக் ஆகணும் இந்த போட்டோ பார்த்து?



யோவ்! மேக் அப்பு! நல்ல பூசி விடு , அப்படியே என் பொண்ணு வெள்ளி கட்டி மாறி மின்னனும்" என்று ஒப்பனையாளரை அதட்ட, நக்ஷத்திரா ஒப்பனை செய்ய வந்தவரைத் தடுத்து



"இது என்னோட லாஸ்ட்! தீர்மானமா இருக்கேன் . இப்போ நம்ம கஷ்டத்துக்காக நடிக்கறேன். அவ்வளவு தான். கனவு காணாதீங்க.



மேக் அப் சார்! கொஞ்சம் அளவா போடுங்க. எந்த ஒரு காலேஜ் பெண்ணும் இப்படி வைட் வாஷ் அடிக்கற மாறி மேக்கப் போடறது இல்ல" என்று அவருக்குத் தெளிவாக எடுத்து உரைத்தாள். நக்ஷத்திராவின் பிடிவாதம் இன்னும் அடங்காது இருக்கக் கண்டு, பார்வதி கவலை கொண்டாலும், வெளியில் காட்டாது



"கோடி கணக்கில் பணம் வரும் போது நீ என்ன சொல்ல போறேன்னு பாக்கறேன்" என்று சூளுரைக்க, நக்ஷத்திரா கண்ணாடியில் அவரைப் பார்த்து கொண்டே



"இந்த நக்ஷத்திரா மின்ன, கோலிவுட் தேவையில்ல" என்று அதே பிடிவாதம் கொண்டு அழுத்தமாகக் கூற, அது துருவ்வின் காதில் விழுந்தது. அடுத்த ஷாட்டிற்கு உடை மாற்றி விட்டு, அவன் பக்கத்து பகுதியில் இருந்தான். இரு பகுதிகளுக்கும் தடுப்பு ஒன்றே. அவர்களது முந்தையப் பேச்சுகளை அவன் கேட்டு இருக்கவில்லை, ஏனென்றால் இப்போது தான் அவன் அங்கே வந்திருந்தான்.



'திமிர்' என்று தீர்மானித்து விட்டான் இவன். அவனுக்கு இப்போது ஒரு ரவுடி கெட்டப். அவன் சீக்கிரம் தயாராகி விட்டான். நக்ஷத்திராவிற்குக் கொஞ்சம் பூ கொடுக்க பட்டது. அவளது உடை பாவாடை-சட்டை-தாவணி.



'யாருயா சிட்டி சைட் இதை கட்டிக்கிட்டு காலேஜ் போறாங்க?" என்று திட்டிக்கொண்டே தயாராகிக் கொண்டு இருந்தாள். இவள் தான் ஆட்டோ ஓட்டுனரிடம் அவ்வாறு கூறினாள் என்று கண்டு கொண்டான் அவன். அவளைச் சும்மா விட கூடாது என்று அவனுக்குள் அப்போது எண்ணம் இருக்கவில்லை.



ஆனால் அந்த எண்ணத்தை விதை இட்டு வளர விட போவது இவள் தான், அதை அவளும் அறிந்து இருக்கவில்லை. விளைவு அவள் வாழ்வு தடம் புரள, இவனையும் புரட்டி போட்டாள். பெண் என்பவள் ஒரு அணு சக்தி, எத்தனை வருடங்கள் ஆனாலும் அணு சக்தியின் கதிரியக்கம் இருந்து கொண்டே இருக்கும், அது போல் தான் பெண்ணின் சாபமும்.



பூவை ஹெர்பின் வைத்து, தலையில் வைத்துச் சொருக அவள் முயல, அவள் இருக்கும் பகுதியைக் கடந்து துருவ் செல்ல, அவன் பார்வை அவளை தீண்டியது என்று கூறுவதா அல்லது எல் நினோ புயல் போல் மையம் கொண்டதா என்று கூற இயலாது.



அடர் நீலத்திற்கும், மெல்லிய நீலத்திற்கும் நடுவே ஒரு நீல நிறம், அதில் பாவாடை சட்டை தாவணி. சற்றே பெரிய குண்டலம் காதில் ஆட, சிகப்பு பொட்டு இட்டு, நேர் வகிட்டில் சிறிய பின்னல் என்ற ஒரு குட்டை அழகி இவள். துருவிற்கு முதலில் அவள் உயரம் தான் கண்ணில் பட்டது



'கிரேப் டொமெட்டோ' என்று முனங்கினான். இத்தனைச் சிறிய பெண்ணிற்குள் இவ்வளவு லொள்ளா என்று நினைக்காது இருக்க முடியவில்லை. அதில் அவன் முகம் தானே புன்முறுவல் பூத்து நிற்க, அவள் கையை உயர்த்தி ஹேர் பின்னை போட்டு கொண்டிருந்தக் காரணத்தால் அவள் தாவணி விலகி, அவளது வெண்ணெய் நிற வயிறு தெரிய, அதுவரை அவன் பார்வை அதில் செல்லவில்லை என்று அவள் கண்ணாடி மூலம் தான் பார்த்து கொண்டிருந்தப் பிம்பம் மூலம் உணராது,



'பொறுக்கி' என்று நன்கு வாயசைத்து டக்கென்று தாவணியை இழுத்து மூடினாள். அவள் வாயசைப்பு மற்றும் கைவரிசையில் துருவ் கோபம் கொண்டாலும்



'நீ எல்லாம் ஒரு மேட்டரா எனக்கு' என்ற ஏளனப்பார்வைப் பார்த்துவிட்டு அவளை வைத்து செய்ய தீர்மானித்தான், அப்போதே.



அடுத்து இவர்கள் இருவரின் புகைப்படங்கள் படமாக்க, குழு தயாராக, கோவில் போன்ற ஒரு செட் உம் தயாரானது. அவள் பூக்கூடை ஒன்றை கையில் வைத்து கொண்டு மலர்ந்த முகமாக நடக்க, அவன் அவள் அழகில் மயங்கிய ரவுடியாக ஒரு பார்வை பார்க்க வேண்டும்.



'பொறுக்கிக்கு பொறுக்கி லுக்க்கு விடறது எல்லாம் ஹாய் ஹலோ சொல்லற மாறி' என்று முனங்கிக் கொண்டாள். ஏனென்றால் அவன் ரோட் சைட் ரோமியாவாகவே மாறிவிட்டான். அவளும் தனது பகுதியைச் செவ்வனே செய்தாள். அடுத்த ஷாட், அவள் அவன் கையில் தவறி விழுந்தது போல் இருக்க வேண்டும். வேண்டாத ஒருவனின் தீண்டலுக்கு அவள் முகம் கோபமாக ஜொலிக்க, அவனோ அவளை உற்சாகமாக பார்க்க வேண்டும்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
துருவ் தயாராக, நக்ஷத்திராவிடம் இயக்குனர்



"மேம், என்ன பண்ணறீங்கன்னா, சார் கையில் கொஞ்சம் படுக்கற மாறி போஸ். எக்ஸ்ப்ரேஷன் எல்லாம் நேச்சுரலா, கோபமாக வரணும். " என்று சொல்லி கொண்டு இருக்க, அவளோ மனதில் இதை எப்படிச் செய்ய போகிறோம் என்று எண்ணித் தயங்கினாள்.



திரைப்படத் துறை வந்துவிட்டால், தீண்ட கூடாது, முத்தமிட கூடாது என்றெல்லாம் அவளால் நிபந்தனை விதிக்க முடியாது. கடந்தத் திரைப்படம் நாயகியை மட்டுமே மையப்படுத்தி வந்த ஒன்று. நாயகன் இருந்தாலும் அவர்கள் இடையே இருந்த காட்சிகள் தேவையான அளவு தீண்டலுடன் இருந்தது. அவளுக்கு அதில் பெரிதாக விகல்பமாக ஒன்றும் தெரியவில்லை.



ஆனால் இதிலோ கரம் மசாலா, பிரியாணி மசாலா, கோட்டா மசாலா என்று சகலமும் கலந்து, நாயகனே எல்லாமும் என்ற மாதிரியான படம். இதில் நாயகி தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ள போடப்படும் ஒரு ஊறுகாய். முதலாம் நாயகியே இப்படி என்றால், இரண்டாம் நாயகியான இவளின் பாடு?



எண்ணி 6-7 காட்சிகள் மற்றும் ஒரு பாட்டு, அவ்வளவு தான். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஏற்கனவே கூறி விட்டாள், ஆனால் அது செல்லுபடியாகுமா என்று அறியாள்.



துருவ் தயாராகி வர, கஷ்டமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறப்போகும் மலையேறும் மங்கையாகத் தன்னை உணர்ந்தாள். படபடவென்று மூச்சு முட்டுவது போல் அவள் இருக்க, அவனோ



"கமான்" என்று அவளை தாங்க தயாரானான். அவள் அவன் அருகில் வராது போக, உரிமையாக அவள் கைகளைப் பிடித்தான். பிடித்தான் என்று சொல்வதை விட, பிடித்து இழுத்தான் என்பது தான் சரி. அதில் அவள் நிலை தடுமாறி அவன் மீது விழப் போனவள், எப்படியோ தன்னை நிலைப்படுத்தி கொண்டு அவனைத் திட்ட வரும் முன், துருவ் அவள் இடையில் கைகொடுத்து, வளைத்து அவள் முகம் நோக்கிக் குனிய, பதட்டம், கோபம், அதிர்ச்சி என்ற உணர்வுகள் உடனே அவளது முகத்தில் பிரதிபலிக்க, அதுவே புகைப்படமாக்கப் பட்டது.



"பிரமாதமான ஷாட் துருவ் சார்" என்று பாராட்டு வேறு. அந்தப் பாராட்டானது, ஒரு ஒப்பாரி போல் அவள் காதுகளில் ரீங்காரம் இட்டது. நக்ஷத்திராவிற்குக் கோபம் வந்தாலும், அங்கே காட்ட முடியவில்லை. இன்னும் அவள் இடையில் இருந்து கை எடுக்காது, அழுந்தப் பற்றி கொண்டிருந்தான், அவளை தன் கையில் சாய்த்த படி.



அதில் அவளுக்கு உடலின் தட்பவெப்பநிலை அதிகம் ஆவது போல் தோன்றியது, குளிர்ந்த அவன் கைகள், தொட்ட பாகம் எரிந்து போனால் தான் அவளது கோபம் அடங்கும் என்று அவள் இருக்க, அவனோ நிதானமாக அவளை நிமிர்த்தினான், 'உன்னை எந்தன் கைப்பாவை ஆக்கி காட்டுவேன்' என்ற பார்வை பார்த்துக்கொண்டே!



அதில் அவள் உதடு துடிக்க அவனை கோபத்துடன் பார்க்க,



"மேம், நெஸ்ட் ஷாட்டுக்கு ரெடியா?" என்று புகைப்பட இயக்குனர் அவசரப்படுத்த, அவனைத் திட்டமுடியாததால், முறைத்த படியே



"ரெடி சார்" என்று கூறிவிட்டு தயாரானாள். அடுத்து ஒரு ரோஜாவை இருவரும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு காதலாகப் பார்க்க வேண்டிய புகைப்படம்.



காதலா பார்ப்பதா? நக்ஷத்திராவா? நடக்குமா? நடந்தால்? அன்று துருவ்வின் நிலை? வானம் நக்ஷ்த்திரத்தின் வீடு, ஆனால் வானால் அதனை உரிமை கொண்டாட முடியாது. அது போல தான் இவர்களும். உரிமை இருந்தாலும், உரிமை எடுக்க முடியாது, அவர்களுக்குள் நடக்க போகும் விஷயங்கள் அவ்வாறானவை.



பின்னால் நடக்க போகும் விஷயங்களை மனிதன் அறியும் சக்தியைப் பெறவில்லை, அதுவே நன்று. ஒருவேளை நக்ஷத்திராவிற்கு அந்த சக்தி இருந்தால், துருவ் விஷயத்தில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்து இருப்பாள்.



ஆனால், அவளது பிறவி குணம் அவளை யாருக்கும், முக்கியமாக துருவ் முன் அடங்காது நிற்பாட்டியது.




ஒருநிமிடம் கூட அவனை காதலாக என்ன, கனிவாக கூட பார்க்க முடியவில்லை அவளால் ! எத்தனை முறை புகைப்பட இயக்குனர் சொல்லி இருப்பார் அவளிடம்!



"மேம் ! கண்ணில் அந்த லவ் தெரியணும்! உங்க கண்ணுல ஒரே எரிச்சல் தான் தெரியுது " என்று தனியாக அவளிடம் வேறு கூறினார்.



தனது தவறு இருந்தாலும், உண்மையை ஒத்துக்கொள்ள மனமில்லாது,



"இந்த ஷாட் கண்டிப்பா வேணுமா ?" என்று வேறு கேட்டு வைத்தாள் !



அதற்கு அவர்

"துருவ் கூட நடிக்க, எல்லோரும் நீ நான்னு போட்டி போட்டு கிட்டு இருக்காங்க ! நீங்க என்னடான்னா, ஈஸியா வந்த கோல்டன் ஆப்பர்ச்சுனிடியை இப்படி நாசம் பண்ணறீங்களே ! வாட்ஸ் ராங் வித் யு " என்று மிகவும் மரியாதையுடன் கடிந்தார்.



"சாரி சார் ! ஐ வில் ட்ரை " என்று மட்டும் அவள் கூறிவிட்டு, எப்படி அந்த காதலைத் தன் கண்ணில் வருத்த என்று யோசிக்க ஆரம்பித்தாள் . பார்வதி வேறு சும்மா இராது,



"சின்ன வயசுல, உனக்கு ஒரு ஆக்டரை ரொம்ப பிடிக்குமே ! அவன் போட்டோ கூட வச்சு இருந்தியே ரூம் முழுக்க, அவனை வேணா நினைச்சு பாரேன் ! கண்ணுல லவ்வு, ஜவ்வு மாறி வரும் !" என்று இலவச ஆலோசனை வழங்க, அவள் கடுப்பானாள் . ஏனென்றால் அவர்கள் அருகே இருந்த லைட்மேன் அதனை கேட்டு சிரித்து விட்டார் .



"உங்க கிட்ட, ஏதாச்சும் கேட்டேனா ? அட்வைஸ் கொடுக்கணும்ன்னா, இனி கவர்ன்மெண்டுக்கு டாக்ஸ் கட்டணும்னு ரூல் கொண்டு வரணும் , அப்போ தான் சரி ஆவீங்க " என்று எரிந்து விழுந்தாள் .



எல்லோரும் ஷாட்டிற்குத் தயாராக, நக்ஷத்திரா தனது தாவணி நுனியை திருகிய படியே வந்தாள் . அவளது தாவணி திருகலில் துருவ் சற்று சுவாரஸ்யமானான்.



சில சமயம் வளர்ந்த பெண், பல சமயம் குழந்தை என்று தோணாது இல்லை அவனுக்கு. தயக்கத்துடன் மேடை ஏற, அவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான். அருகில் வந்தாயிற்று, இனி இம்முறை இந்த காட்சியை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற மன உறுதி பிறந்தாலும் , போயும் போய் இவன் மீதா காதல் பார்வை என்ற எண்ணம் அவள் மனதில் முன்னேற ஆரம்பித்தது .



"என்னை பாரு, என்னை மட்டும் பாரு நக்ஷத்திரா " என்று அவனது குரல் மெல்ல, அவளது செவிகளைத் தீண்ட, முரண்டு பிடித்து கொண்டிருந்த அவள் மனம் சற்று அமைதியாகி, துருவ் என்ற மகுடிக்கு மயங்கிய பாம்பானது .



அவனை மட்டுமே பார்த்தாள் , முக்கியமாக அவனது கண்கள், அவன் முகத்தில் சராசரியை விட சற்று உள்ளே அமைந்து இருந்தது அவன் கண்கள். ஒருவித இளம் பழுப்பு நிற விழிகள், அவனது விழிகள். அவை அவளிடம் ஏதோ சொல்ல வருவது போல் தோன்ற, அவனது முகத்தில் இருந்து அவள் தன் பார்வையை அப்புறப்படுத்தவில்லை.



மென்மையான அவனது புன்னகை, இந்த கல்லுக்குள் இவ்வளவு மென்மையா என்று எண்ணும் படி அவனது மனம் திறந்த புன்னகை , தனக்கு உரியவளைக் காணும் போது வரும் அந்த உரிமையான புன்னகையில், காதல் நிரம்பி தான் வழிந்தது.



மெல்ல அவன் கண்களில் ஓர் ஏக்கம் , தன்னை விட்டு போனது போனதுதானா, மறுபடியும் தன்னை நாடாதா என்று எண்ணும்படியான ஒரு உணர்வைப் பறைசாற்ற, இந்த வானத்தை அகமாக கொண்ட நக்ஷத்திரா, அவனது பார்வையை, காதல் தரும் தனது முக உணர்வினால் சாந்தப்படுத்தினாள்.



காந்த துருவங்கள் போல், இருவரும் அந்த காட்சியில் நிலைத்து நிற்க, பல்வேறு கோணத்தில் இருந்து புகைப்படம் எடுக்க பட்டது, முகத்தில் பீய்ச்சி அடிக்க பட்ட காமெராவின் ஒளி அவளது கண்களைக் கூசவில்லை . அவனது பார்வையிலேயே அது நிலைத்து நின்றது.



"சூப்பர்ப் சார் ! நீங்க ரெண்டு பேரும் செம்ம மாஸ் ஹிட் ஜோடி ஆவீங்கன்னு நினைக்கிறன் . செம கெமிஸ்ட்ரி " என்று புகைப்பட இயக்குனர் சிலாகிக்க, இன்னும் அவன் மீது பார்வை அகற்றாது இவள் இருக்க, துருவ்

அவளிடம் மென்மையான குரலில், அதே நேரம் அழுத்தமாக,



"பொறுக்கியை தான் அதிகம் சைட் அடிப்பியா ! எக்சலண்ட் டேஸ்ட் " என்று வேகமாக முணுமுணுத்துவிட்டு, புகைப்பட இயக்குனரிடம்,



"தேங்க யு சார் ! இன்னிக்கி போட்டோ ஷூட் முடிஞ்சாச்சா !" என்று மேடையை விட்டு கீழே இறங்கினான் .
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனை பிடித்து நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கும் முன், அவன் சென்று விட்டான். அவன் கூறியதை அவள் தன் மனதில் பதிய வைத்துக் கொள்ளும் முன், அவன் சென்றே விட்டான். பிறகு எங்கே பிடித்து கேட்பது. தான் சொன்னதைப் புரிந்துக் கொண்டு இருக்கிறான், அதில் துளியும் சந்தேகம் இல்லை. அவள் சொன்னது தான் சரி, அவளுக்கு!



நட்பாக இல்லாவிடிலும், ரயில் ஸ்நேகமாக கூட இவர்கள் உறவு ஆரம்பிக்கவில்லை, இருவரும் அதற்கு காரணம்.



தனது ஒப்பனையைக் கலைத்து விட்டு, தான் இங்கே வரும்முன் உடுத்தி கொண்டிருந்த உடைக்கு மாறிவிட்டு, அவள் வெளியே வர, ரஞ்சன் அவளை பார்த்து விட்டான்.



"ஹேய்! நக்ஷத்திரா! எப்படி இருக்கே?" என்று அவளைப் பார்த்து கைகுலுக்க, நக்ஷத்திராவின் கவனம் அவன் மீது சென்றது. தன் முன், துருவ் காரில் ஏறுவதைக் காணத் தவறிவிட்டாள், ஆனால் அவனோ அவளை நன்கு கவனித்தான். அவர்களைப் பார்த்துக்கொண்டே, அவர்களைக் கடந்தான்.



ரஞ்சன், அவளது முந்தைய படத்தின் நாயகன். பணக்கார லண்டன் குடும்பத்தில் பிறந்தவன், பாடகன், அதன் மூலம் கிடைத்த ஒரு நடிக்கும் வாய்ப்பை இழக்காது, நக்ஷத்திராவுடன் நடித்தான். அந்த படத்தில் இருவருமே புதுமுகங்கள்.



அந்த படம், சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் இருவருமே அவர்கள் நடிப்பு திறமை, மற்றும் ஆழ்ந்த கதையினால் பேசப்பட்டனர். கடைசி நாள் படப்பிடிப்பு முடித்துவிட்டு அவன் லண்டன் சென்று விட்டான். அதன்பின் இப்போது தான் இருவரும் பார்க்கின்றனர். நன்றாக பழகும் இயல்பு உடையவன், ரஞ்சன். அவனுடன் இருந்த படப்பிடிப்பு நாட்கள், ரம்மியமான ஒன்று, நக்ஷத்திராவிற்கு.



திரைப்படம் படம் பிடிக்கும் போது, நாயக-நாயகி இடையே நல்லுறவு இருக்க வேண்டும், அப்போது படப்பிடிப்பு வேகமாக மட்டுமல்ல, எளிதாக நடக்கும். நல்ல நண்பனை பார்த்த சந்தோஷத்தில் நக்ஷத்திரா



"அம் குட்! என்ன லண்டன் லார்ட்! திருப்பி எப்போ வந்தீங்க?" என்று வம்பு வளர்க்க,



ரஞ்சன்



"நெஸ்ட் ஷூட்டிங். இனி தமிழ் மண் வாசம் தான் போல, சீக்கிரம் வீடு பார்த்து, நல்ல தமிழ் பொண்ணை கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வேண்டியது தான்! ஸோ நீ மூவிக்கு முழுக்க போட போறேன்னு சொன்னியே? என்ன ஆச்சு?" என்று விசாரிக்க, அவள் முகம் சற்று துவண்டு போனது.



"என்ன ஆச்சு? ஹெல்ப் வேணுமா?" என்று இரக்கமாகக் கேட்க, நக்ஷத்திரா



"என்னை சினிமா விடாது போல, விடு! நான் மேனேஜ் பண்ணிக்கறேன். எத்தனையோ பார்த்து இருக்கேன், இதை பார்க்க மாட்டேனா? நீ சொல்லு! யார் ஹீரோயின்? " என்று பேச்சை மாற்ற, அவனும் அவளுடன் பேசிக் கொண்டே



"ஹேய்! நாளைக்கு நீ வரே தானே, பார்க் ஷெரடன்!" என்று கேட்க, அவளோ புதிராக அவனைப் பார்த்தாள்.



"என்ன உனக்கு மெசேஜ் அனுப்பலியா! நம்ம மூவிக்கு சின்ன சக்ஸஸ் மீட் நாளைக்கு! பார்க் ஷெரடன் டின்னர்! டைரக்டர் மெசேஜ் பண்ணி இருப்பார், பாரு! கொஞ்சம் பேர் தான்! நீ, நான் அண்ட் சம் டெக்னீஷியன்ஸ், ப்ரொட்யூசர் அண்ட் டைரக்டர்" என்று தகவல் கூற, நக்ஷத்திரா அவசரமாகத் தனது அலைபேசியைப் பார்க்க, அதில் ஒருசில அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் இருந்தன. புகைப்படப் படப்பிடிப்பு காரணம், அவள் அலைபேசியை மௌன வழியில் வைத்து இருந்தாள்.



"ஓ! இப்ப தான் பார்க்கறேன். வில் ட்ரை" என்று அவள் கூற, ரஞ்சன்



"வரே! அவ்வளவு தான்" என்று கூறியதுடன் நில்லாது, அங்கே வந்த பார்வதியிடமும் பேசி, அவர் சம்மதம் வாங்கினான்.



"நானே வரேன்! நாளைக்கு பிக் அப்புக்கு" என்று சொல்லிவிட்டு அவர்களை வீட்டில் கொண்டு விடவும் செய்தான்.



அடுத்த நாள், கிளம்பவே இஷ்டப்படாது, தன்னிடம் இருக்கும் நல்ல சல்வாரை உடுத்திக் கொண்டு, ஒப்பனை இல்லா சுந்தரியாகக் கிளம்ப, பார்வதி



"என்னடி! அங்க கூட்டி கழுவ போறியா? 5 ஸ்டார் ஹோட்டலில் க்ளீன் பண்ணறவ கூட, இதை விட ஷோக்கா ட்ரெஸ் செய்வா" என்று அவளைத் தாளித்து விட்டு, வெளியே சென்றார்.



திரும்பும் போது, ரத்தினா என்ற பெண்ணுடன் வந்தார், ரத்தினாவின் கையில் ஒரு அழகான ஃப்ராக்.



மிருதுவான துணியில், இள நீல நிறத்தில், முன்பக்கத்தில் வெள்ளை நிற பூத்தையல் வேலைப்பாடுகள் நிரம்பி ஆங்கிலத்தில் கூறுவார்களே, 'க்யூட்' அது போல் இருந்தது உடை.



"நான் ஸ்லீவ்லெஸ் போட மாட்டேன்" என்று அவள் அடம்பிடிக்க, பார்வதி



"அவ அவ ட்ரெஸ் போட்டும், போடாம மினுக்கி தள்ளரா, இந்த ட்ரஸுக்கு என்ன குறை!" என்று கத்த, நக்ஷத்திரா



"ட்ரெஸ்ஸே குறை தான்" என்று அதன் உயரத்தைக் காண்பித்து, அவளும் கத்த, ரத்தினா இருவர் இடையே புகுந்து



"பாப்பா! உன் ஹைட்டுக்கு இது சரியா இருக்கும்! ஒருமுறை போட்டு பாரு" என்று வெள்ளைக் கொடியை பறக்க விட முயல, பார்வதியும்



"போட்டு பாரு! அம்மா எங்கையாச்சும் அசிங்கமா உன்னை ட்ரெஸ் பண்ண விடுவேனா" என்று சமாதானம் பேச, அவரை முறைத்துக் கொண்டே அதை அணிந்து கொண்டு பார்த்தாள்.



அவள் உயரத்திற்கு அது முட்டியை ஒட்டி இருந்தது, அவள் முகத்திற்கு அந்த உடை அசிங்கமாக இருக்கவில்லை, அவளை ஏதோ பள்ளிச் சிறுமியெனக் காட்ட, முணுமுணுக்காது வெளியே வந்தாள். ரத்தினா அவளை அந்த உடையில் பார்த்து,



"உனக்கே தச்ச மாறி இருக்கு! செமையா இருக்கே பாப்பா" என்று நெட்டி முறித்தார். ரத்தினா, திரைப்படத் தேவைகளுக்கு உடை தைப்பவர். புதிய படம் ஒன்றிற்காக அவர் செய்த உடை இது. பார்வதி என்பதால் இரவல் கொடுத்து இருக்கிறார். பார்வதி முன்பு அவளுக்கு அதிக உதவி செய்து இருக்கிறார். நன்றி கடன் இது, இருந்தாலும்,



"ட்ரெஸ் கலீஜ் ஆகாம பார்த்துக்கே பாப்பா" என்று நக்ஷத்திராவிடம் குசுகுசுக்க, அவளோ



"எனக்கு இந்த ஃப்ரீ ஐட்டம் வேணாம், அக்கா! அம்மாக்கு இருக்கறத வச்சு பொழப்பை ஓட்ட தெரிய மாட்டேங்குது. " என்று வருந்த, ரத்தினா அவள் தலைமுடியை வாரிக் கொண்டே,



"அப்படி இல்ல பாப்பா, இந்த ஃபீல்டுல், கொஞ்சம் இல்ல, நிறையவே நாம நடிக்க தான் செய்யணும், அப்போ தான் முன்னேற முடியும். " என்று நடைமுறையை எடுத்துக் கூற, நக்ஷத்திரா கூர்மையாக,



"எது! இல்லாததை, இருக்குனு சொல்லறதா! அதுக்கு பேரு பொய்" என்று கூற, ரத்தினா பதில் செல்வதற்குள் பார்வதி,



"அந்த தம்பி வந்தாச்சு, சீக்கிரம் தயாராகு" என்று அவளை துரித்தப்படுத்தினார். தலைமுடியை வாரி, நடுவில் ஒரு சின்ன க்ளிப் வைத்து, ஆங்கிலத்தில் வரும் குழந்தைகள் சித்திரத்தில் வரும் தேவதை போல் இருந்தாள்.



"இரு கண்ணம்மா!" என்று சிறிது மை எடுத்து, அவள் முடியில் தீற்றினார், திருஷ்டிக்காக.



"பாப்பா வந்த பிறகு, சுத்தி போடுங்க" என்று ரத்தினாவும் கூற, நக்ஷத்திரா



'இவர்கள் அலப்பறைக்கு அளவே இல்லையா' என்ற பார்வை பார்த்துவிட்டு



"வரேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். மாடிபடியில் இருந்து இறங்கி வரும் பெண்ணிவளைப் பார்த்து ரஞ்சன்



"காட்ஜ்ஜியஸ்! அழகி! ப்ரெட்டி! தேவதை!" என்று வெளிப்படையாகச் சிலோகிக்க, நக்ஷத்திரா நாணம் கொண்டு,



"போதும் லண்டன் லபக் தாஸ்! இந்த தெரு வெள்ளம் தாங்காது" என்று அவன் முன் கை மீது தனது பர்சால் அடித்துவிட்டு,



"போலாம் வா!" என்று எறிக்கொண்டாள்.



"உன்னை இப்போவே கடத்தி கல்யாணம் செய்யணும் தோணுது" என்று கூறிக்கொண்டே வண்டியை இயக்க, நக்ஷத்திரா திகைத்தாள்.



"வாட்! எக்ஸ்க்யூஸ் மி" என்று அவள் அதிர, ரஞ்சன் சிரித்து கொண்டே



"என்ன செய்யட்டுமா!" என்று விடாது இருக்க, நக்ஷத்திரா உண்மையில் கோபம் கொண்டாள்.



"ரஞ்சன்! தப்பு, வண்டியை நிறுத்து" என்று க்ரீச்சிட, ரஞ்சன்



"ஹேய் ரிலாக்ஸ்! நான் நல்ல பையன் தாயி! விளையாட்டா உன் கூட பேச முடியாது போல!" என்று சலித்து கொள்ள, நக்ஷத்திரா



"சாரி! ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்! வெரி சாரி! என் வாழ்க்கையில் கல்யாணத்துக்கு இடம் இல்ல, நான் படிக்கணும் எப்படியாச்சும். லாயர் ஆகணும், அதான் என் நோக்கம்" என்று சொல்ல, ரஞ்சன்



"ம்ம்..இன்டெரெஸ்டிங்! வெல் ஆல் தி பெஸ்ட்" என்று கூறியவன் குரலில் இருந்த வேறுபாட்டைக் கவனிக்க அவள் தவறினாள். பின்னர் இருவரும் ஏதேதோ சலசலத்து கொண்டே, பார்க் ஷெரடன் வந்தனர்.



அவர்கள் குழுவிற்காக வி ஐ பி அறை ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. அங்கே ஒருசில டேபிள்கள் மட்டுமே இருந்தது, அதில் யாரும் இல்லை. அவர்கள் அணி மட்டும் உணவு உண்ண துவங்க, அசத்தலான கருப்பு நிற கோட், சாம்பல் நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸில் துருவ் வந்தான்.



அவனுடன் ஒரு மாடல் அழகி, ஓடிசலான தேகம் கொண்டவள், நக்ஷத்திராவைப் பொறுத்தவரை காற்றை உண்பவள் வந்தாள். உணவகத்திற்கு அந்த மாடல் அதிகப்படி. துருவ்வைப் பார்த்த தயாரிப்பாளர் எழுந்து,



"ஹை துருவ்! எப்படி இருக்கீங்க?" என்று குசல விசாரிப்புகளை ஆரம்பிக்க, அவனோ அவருக்கு பதில் அளித்து கொண்டே, அங்கிருந்தோரை நோட்டம் விட்டான். அவன் பார்வை வட்டத்தில் நக்ஷத்திரா விழ, அவன் வானத்தின் மைய புள்ளி ஆனாள் அவள். அவளை விட்டு அவன் கண்பார்வை அகலவில்லை.



"வாங்களேன்! சேர்ந்து டின்னர் சாப்பிடலாம்" என்று அழைக்க, துருவ் உடனே ஒத்துக்கொண்டான்.



"வொய் நாட்!" என்று கூறியபடி அவர்கள் அணியின் புறம் செல்ல, அவர்கள் எல்லோரும் எழுந்து நின்றனர் மரியாதை நிமித்தமாக. நக்ஷத்திரா மட்டும் வேண்டாம், வெறுப்பாக எழுந்து நிற்க, அதுவும் அவன் கண்ணில் தவறாது பட்டது.



எல்லோரிடமும் கைகுலுக்கி, கட்டிபுடி வைத்தியம் செய்து விட்டு, அவள் புறம் வந்தான்.



"மீட் நக்ஷத்திரா! எங்க பட ஹீரோயின்" என்று ரஞ்சன் அறிமுகப்படுத்த, துருவ்



"நவ் ஷி இஸ் மைன்" என்று இருபொருள் பட கூறியவன்,



அவனுக்குக் கைகுலுக்க வேண்டுமா, இல்லை வணக்கம் என்று இருகரம் கூப்ப வேண்டுமா என்று அவள் யோசித்து முடிவெடுப்பதற்குள், அவளுக்கு எவ்வித சமயமும் கொடுக்காது துருவ் அவளை இறுக்க அணைத்து கொண்டான்.














 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 3



"வாட்!" என்று ரஞ்சன் அதிர, துருவ் அந்த மலைப்பாம்பு அணைப்பை விடுத்து,



"எப்! என்னோட புது பட செகண்ட் ஹீரோயின். செகண்ட், ஸ்டில் மை ஹீரோயின்" என்று சொன்னதில், குசும்பு இருக்கிறதா இல்லை இயல்பாக சொன்னானா என்று ரஞ்சனால் பகுத்து அறிய முடியவில்லை.நேற்று ரஞ்சனிடம் அவள் அதை சொல்லாது விட்டிருந்தாள், அதனால் அவனுக்கு அது அதிர்ச்சியை தந்தது. நக்ஷத்திரா இன்னும் அவனது அணைப்பு தந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை.



மலைப்பாம்பானது தன் இரையை முதலில் சுத்தி வளைத்து, எலும்புகளை நொறுக்கிவிடும், அதில் அந்த இரை குற்றுயிராய் ஆகிவிடும், பின்னர் சாவகாசமாக தலையைச் சாப்பிட ஆரம்பிக்கும். அவன் அவளது தலையை மட்டும் கொய்யவில்லை, அது மட்டும் தான் பாக்கி.



ஏனென்றால் எலும்புகள் நொறுங்கும் அளவு அவன், அவளை தழுவி இருந்தான். அவன் மார்பு ஒரு கற்பாறை, கரங்கள் இரண்டும் கரும்பு சக்கை இயந்திரம் என்பது போல தான் அவள் உணர்ந்தாள்.



'சே! என்னத்த கொட்டிப்பானோ தினம்! மலைப்பாம்பு இனம் ' என்று கோபமாக நினைத்தவளுக்குச் சுவாசம் முட்டியது. அதுவும் அவனது வாசனை திரவியத்தின் வாசனை, அவளை பொறுத்த வரை அவளுக்கு தலைவலி வருத்தும் நாற்றம். அவள் மீதெல்லாம் அப்பியது போன்ற உணர்வில், அழையா விருந்தாளியாக தலைவலியும் வந்தது.



அதில் அவள் முகம் சற்று சுணங்க, அது அவன் கண்ணில் விடாது தப்பியது.



"ஆர் யூ ஒகே ஹனி பன்ச்?" என்று அவனது வசீகர குரலில், அக்கறை ஒலிக்க, நக்ஷத்திரா அந்த 'ஹனி பஞ்சில்' காண்டானாள்.



"தலைவலி! நீ வந்தே! உடனே அதுவும் வந்திச்சு! அண்ட் யூ பெட்டர் மைண்ட் யூர் வேர்ட்ஸ் மிஸ்டர்" என்று அடிக்குரலில் அவனுக்கு மட்டும் கேட்குமாறு சீற,



துருவ் இடது பக்கமாக உதட்டை ஏளனமாக வளைத்து



"எஸ் மை லேடி! " என்று கூறினான், வெறும் வாயளவில், கண்ணளவில்

'இன்னும் இருக்கிறதே பெண்ணே' என்ற மௌனச் செய்தியை அவளுள் பதிய வைத்து, அவ்விடம் நீங்க முயல,



நக்ஷத்திரா வின் முதல் பட இயக்குநர் மூர்த்தி,



"துருவ் ! வாங்க! எங்க கூட டின்னர் சாப்பிடலாம் " என்று மரியாதை நிமித்தம் அழைப்பு விடுக்க, துருவ் அதை கெட்டியாகப் பிடித்து கொண்டான்.



"ஷுயர் ! வை நாட் " என்று அவனும் இசையை, அவனுடன் வந்த மாடல் அழகி,



"டார்லிங் ! நமக்கு நம்ம டைம் வேணாமா ?" என்று கிண்கிணி குரலில் குழைய, துருவ்,



"நம்ம டைம் இங்கியா பேப்ஸ் !" என்று விஷமமாக கூற, அது நக்ஷத்திராவின் காதில் நாராசமாக ஒலித்தது.



'என்ன மாறி இவன் ! கேடு கெட்ட பொறுக்கி ' என்று ஜாக்கிரதையாக அவனை மனதில் போட்டு தாளித்தாலும், அவள் தன்னைத் திட்டிக்கொண்டு இருக்கிறாள், என்று அவளது துடிக்கும் இதழ் இடையே அவன் புரிந்து கொண்டான்.



அதில் அவனுக்கு கோபம் கபகப என்று ஏற, அதைக் காட்ட வேண்டிய சமயம் இது இல்லை, ஆனால் சமயம் வரும் போது சரியான முறையில், அளவில்லாது காட்ட வேண்டும் என்று உறுதி கொண்டான்.



துருவ்வைப் பொறுத்தவரை அவனது தனிப்பட்ட வாழ்வு என்பது அவனை பொறுத்த ஒன்று. திரை உலகில் இருப்பதால், தன்னுடைய தனிப்பட்ட வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்ட அவனுக்கு இஷ்டமில்லை,. யாருடன் இருக்கிறான், வாழ்கிறான் என்பது அவனது இஷ்டம். அது பிறருக்கு அவசியம் இல்லாத ஒன்று. தன்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவன் நம்புகிறான், அதைத் தான் கடைப்பிடிக்கிறான்.



அவனுக்கு நக்ஷத்திரா தனது சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டு விமர்சிப்பது பிடிக்கவில்லை. அவன் அவளுடைய விஷயத்தில் தலை இட்டானா ? இவ்வளவு ஏன் ! நக்ஷத்திரா என்பவள் ஒரு நடிகை என்று அவன் சமீபத்தில் தானே அறிந்து கொண்டான் .



இவள் யார் என்னை விமர்சிக்க என்று அவன் நினைக்க, அவளோ, திரையில் உபதேசம் செய்பவர்களுக்குத் தனி மனித ஒழுக்கம் அவசியம் என்ற ரீதியில் இன்னும் அவன் பொருட்டு வரும் கோபத்தை அடக்க முடியாது திணறினாள்.



துருவ் மற்றும் அந்த மாடல் அழகி ஈஷா உட்கார, மேலும் 2 நாற்காலிகள் போடப்பட்டு இடம் வகுக்கப்பட, நக்ஷத்திரா ஒரு மூலையிலும், இவன் அவளுக்கு நேர் எதிர் மூலையிலும் உட்கார்ந்து கொண்டனர், ரஞ்சன் அவள் அருகில்.



பெரிய அளவில் சிக்கன் உணவை தனக்குத் தருவித்து கொண்டான் துருவ், அதை பார்த்தவள்



'ஓசி சோறுன்னா கொஞ்சம் அளவா தின்ன வேணாம் ! சாப்பாட்டை பார்க்காத ஏதோ மாறி ! அல்பம்' என்று அந்த சிக்கனை வைத்த கண் வாங்காது அவள் பார்க்க, துருவ்



"மிஸ் ஆர் மிஸஸ் நக்ஷத்திரா !" என்று கேள்வியாக ஆரம்பித்தான். நக்ஷத்திரா



"ஆல்வேய்ஸ் மிஸ்.நக்ஷத்திரா ! மிஸ்டர். துருவ் !" என்று அவன் வேறெதுவும் பேச இடம் கொடுக்காது உரைத்தாள்.



பட்டென்ற அவளது பதிலில் , துருவ்



"அப்போ செல்வி.நக்ஷத்திரா ! ரைட் ! சோ உனக்கு சிக்கன் வேணுமா! நீ பார்க்கிற பார்வையில் இது இன்னும் ரோஸ்ட் ஆகிடும் ! இப்ப சரியா இருக்கு ! அதிகம் தீஞ்சா எனக்கு பிடிக்காது !" என்று அவளது மானத்தை மானாவாரியாக எல்லோர் முன் வாங்கினான். நக்ஷத்திராவிற்கு என்ன பதிலடி கொடுக்க என்று புரியவில்லை.



இதை எதிர்பார்க்கவில்லை ! கண்வாங்காது பார்த்தது தவறு என்று புரிந்தது, ஆனால் அதை அவன் முன்னால் ஒத்துக்கொண்டால், அது நக்ஷத்திரா இல்லவே !



"பெரிய கோழி இல்லியா ! ஆக்சுவல்லி நான் இதை எப்படி சமைச்சு இருந்து இருப்பாங்கன்னு யோசிச்சு கிட்டு இருந்தேன் ! தட்ஸ் ஆல் ! நான் சிக்கன் சாப்பிடறது இல்லை" என்று பூசணிக்காய்க்குள் மறையும் முயற்சியில் ஈடுபட்டாள்.



"ரியலி !" என்று கூறியவன் குரலில் தான் எவ்வளவு ஏளனம்.



"திஸ் ஐஸ் டெலிஷியஸ் ! கண்டிப்பா நீ மிஸ் பண்ணறே ! டூ பேட் !" என்று போலியாக வருத்தப்பட, ரஞ்சன்



"பட் எக்கச்சக்க காலோரிஸ் ! நாளை முழுக்க ஜிம் இல் தான் இருக்கணும், இதை நான் சாப்பிட்டா " என்று அவன் கவலைக் கொள்ள,



"நாட் ரியலி ! ரைட் எக்ஸர்சைஸ் செஞ்சா போதும் ரஞ்சன் !நாமளும் மனுஷங்க தான் ! சராசரியா சாப்பிட, வெளியில் போக , ப்ரெண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ண, லைக் மைண்டட் பீப்பிள் கூட டேட்டிங் பண்ண நமக்கு உரிமை இருக்கு. எப்போதும் நடிக்க முடியாது " என்று கடைசியாக அந்த டேட்டிங் பற்றி கூறும் பொது அவளைப் பார்த்தபடி கூறினான்.



"வெல் செட் டார்லிங் !எஸ், நாம எப்பவும் எல்லாருக்காக வாழ முடியாது. எனக்கு உன்கிட்ட பிடிச்சதே வெளிப்படையா பேசறது தான் " என்று ஈஷா சிலாகிக்க, துருவ் அவளைப் பார்த்து புன்னகைத்து



"தட்ஸ் வை ஐ லவ் டேட்டிங் யு !நாம ரெண்டு பேரும் ஒரே மாறி திங்க் பண்ணறவங்க ! ஒரே மாறி டேஸ்ட் நமக்கு " என்று அவனும் அவளைப் பாராட்ட, நக்ஷத்திரா பொறுக்காது



"அப்போ உங்க மாறி டேஸ்ட், திங்கிங் இல்லாதவங்களை சந்திச்சா இல்ல டேட் பண்ணினா என்ன செய்வீங்க மிஸ்டர்.துருவ் " என்று கேட்டே விட்டாள்.



"அவங்க எப்படி என் கிட்ட நடக்கறாங்களோ, அது போல நானும் " என்று வெளிப்படையாகக் கூறிவிட்டான். அதாவது அவள் வம்பு செய்தால், அவன் அவளைச் சும்மா விட மாட்டான். இதன் தீவிரத்தை அவள் அன்று உணராது போனது துரதிஷ்டம் .



சாப்பாடு கடை ஆரம்பிக்க, நக்ஷத்திராவிற்கு என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லை. சென்னையில் ச**** பவன் மட்டுமே அவளுக்கு பெரிய உணவகம். இது தான் முதல் முறை மாதிரி 5 நட்சத்திர உணவகத்தில் உண்ணுவது. அவள் திணறுவதைப் பார்த்து ரஞ்சன், அவளுக்கு ஏதுவான உணவை தருவித்தான். அதனுடன் தான் தருவித்ததை அவளுக்கு கொடுத்து ருசி பார்க்கச் சொன்னான்.



ரஞ்சன் தருவித்தது எல்லாம் மேல் நாட்டு உணவு வகைகள், அதனை அவன் முள் கரண்டி, கத்தி கொண்டு சாப்பிட்டான். நம் அம்மையாருக்கு எந்த கையில் முள் கரண்டி பிடிப்பது, எந்த கையில் கத்தி பிடிப்பது கூட தெரியாது. அவனை பார்த்து அவள் சாப்பிட முயல, அது ததிங்கிணத்தோம் ஆகிக் கொண்டு இருந்தது.



"ரஞ்சன் ! என்னால முடியல ! சாரி " என்று அவனிடம் கிசுகிசுக்க, அவனோ, அவள் கையில் முள் கரண்டி மற்றும் கத்தியை பிடிக்க வைத்து, கிட்டத்தட்ட குழந்தைகளுக்கு முதலில் தானாக உண்ண பழக்கப்படுத்தும் நிலையில் அவன் இருக்க, இவர்களது பாசப்பிணைப்பு துருவ் கண்ணில் தவறாது பட்டது.



"எல்லா சாப்பாடும் வயத்துக்கு உள்ளே தான் போக போகுது ! அதுவும் தொண்டைக்கு கீழே போனா, டேஸ்டே தெரியாது ! அதுக்கு எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும் " என்று புலம்பிக் கொண்டே தான் சாப்பிட்டாள்.



நடுவில் அவன் எதோ கூற, அவள் கன்னக்குழி விரிய சிரிக்க, துருவ் ஒரு நிமிடம் அந்த கன்னக்குழியில் வீழ்ந்தான் . அந்த கன்னகுழியை தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க, அந்த நிமிடத்தில், அவன் அவனாக இல்லை.



கடந்த கால ஞாபகங்கள் அவன் கண் முன் விரிய, ஏன் அவளை கண் வாங்காது அந்த ஒரு நிமிடம் பார்த்தோம் என்று மீதே அவன் கோபம் கொண்டான் .



'இது சரியில்லை ! டோன்ட் ஃபால் ஃபார் ஹர் ! உன்னோட தேவைகள் உனக்கு தெரியும் ! அதுல லவ் கண்டிப்பா இல்ல , பக்கிள் அப் ' என்று தனக்குத் தானே அறிவுறுத்தி கொண்டான்.



இருந்தாலும் அவர்கள் இருவரும் பேசும் போது தானாக அவர்கள் புறம் அவனது பார்வை திரும்பத்தான் செய்தது. அதில் அவனுக்கு பொறாமையா அல்லது கோபமா அல்லது வெறுமையா...என்று பகுத்து அறிய முடியாது உணர்வுகள் அவனுள் போட்டி போட ஒருவழியாக டின்னர் முடிந்தது.



எல்லோரும் விடைபெறும் தருணம் வர, ரஞ்சன்,



"டிஸ்கொத்தே ?" என்று ஆரம்பிக்க, நக்ஷத்திரா



"நான் வீட்டுக்கு போகணும் ! வரலே " என்று முதலில் மறுத்தாள். ஈஷாவும்



"கமான் துருவ் ! ஷோ அஸ் சம் மூவ்ஸ் " என்று அவனை இழுக்க, அவன் அரைமனதாக ஒத்துக்கொண்டான். நக்ஷத்திரா அவ்விடம் நீங்கினால் நல்லது என்று அவன் விரும்பினான். ஏனென்றால் அவள் அருகில் அவனது மனம் செல்லும் போக்கு அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.



"கமான் நக்ஷி ! ஒரே ஒரு நாள் ! அப்பறம் ஷூட்டிங்ன்னு பிசி ஆகிடுவோம் " என்று அவளை சம்மதிக்க வைக்க,



"பட் அரை மணி நேரம் தான்! அதுக்கு மேலே இல்ல" என்று அவள் தீர்மானமாக இருக்க,



"நீ முதல வா பேபி" என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.



அவனது இந்த நக்ஷி, பேபி என்ற அழைப்புகள் துருவ்வை எரிச்சல் அடைய செய்தது என்றால், நக்ஷத்திரா வைச் சற்று அதிர செய்தது.



இருந்தாலும் இது தொடர்ந்தால் அவனிடம் என்ன இது என்று கேட்க வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டாள். இவர்கள் 4 பேரும் அந்த நட்சித்தர ஹோட்டலின் டிஸ்கொத்தேவின் உள்ளே சென்றார்கள்.



ஓர் இரைச்சல், சங்கீதம் இல்லை அது, நக்ஷத்திரா பொறுத்தவரை. பிடிக்கவில்லை அவளுக்கு. தலையில் யாரோ இரும்பு சுத்தியலை வைத்து அடிப்பது போல் தோன்றியது. எப்போதடா இவ்விடம் நீங்குவோம் என்று சலிப்படைந்துக் கொண்டாள்.



இருட்டில் அவ்வப்போது அடிக்கும் கலர் கலர் லைட்டுகள், சரியாக ஆடுவோர் முகம் பார்த்து அடிக்கப்பட்டுக்கொண்டு இருக்க, இவர்கள் நால்வர் ஆடும் மேடையை அடையவும், ஆடல் ஆரம்பம் ஆயிற்று.



நக்ஷத்திரா ஒன்றும் பிரமாதமான நடனக் கலைஞர் இல்லை. முறைப்படி நடனமும் படிக்கவில்லை. ரஞ்சன் அழகாக நடனம் ஆடினான், அவளது கைகளைப் பற்றி கொண்டே. அவளையும் ஆட்டுவித்தான். ஆனால் எவ்வித எல்லையும் மீறாது அவனது அசைவுகள் இருந்தன
 
Status
Not open for further replies.
Top