All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் வானின் துருவ(வ்) நக்ஷத்தி(ரா)ரம் - கதைத் திரி

Status
Not open for further replies.

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உடனே


"சூர்யா!" என்று சூர்யாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல, சூர்யா ஒருநிமிடம் தயங்கினான், ஆனால் வேறு வழி இல்லாது செய்தான். அதன் விளைவு, அவன் நினைத்தது நடந்தது, சிறிது நாள் கழித்து.



************

அடுத்த நாள், அவளுக்குச் சீக்கிரம் படப்பிடிப்பு முடிந்தால் தேவலாம் என்று இருந்தாள். ஏனென்றால் அன்று மாலை அவளுக்கு, பார்வதியை அழைத்துக் கொண்டு, ஸ்கேன் செய்ய வேண்டி இருந்தது. இயக்குனரிடம் எவ்வளவு சீக்கிரம் இன்று படப்பிடிப்பு முடியும் என்று அரித்துப் பிடுங்கிக் கொண்டிருந்தாள்.


"ஏன் இன்னிக்கி இவ்வளவு அவசரம்?" என்று இயக்குனரும் எரிச்சல் அடைய, நக்ஷத்திரா



"இன்னிக்கி முக்கியமான வேலை இருக்கு சார்! மிஸ் பண்ண முடியாது" என்று சொன்னாள். துருவ் ஒருவேளை அங்கே பக்கத்தில் இருந்திராவிட்டால், என்ன வேலை என்று அவரிடம் சொல்லி இருந்து இருப்பாள், ஆனால் இவளுக்கு இருக்கும் அகம் அவ்வாறு செய்ய விடாது போனது, அவளது துரதிஷ்டமே.



"ஷாட் சீக்கிரம் முடிஞ்சா, 3 மணிக்கே போகலாம்" என்று சொல்லி, முடித்து விட்டார். அவளும் அதில் நிம்மதி அடைந்தாள்.


ஆனால் துருவ் அவளைஅப்படியே விட்டுவிட்டு தான் மறுவேலை! படப்பிடிப்பில் வேண்டுமென்று தவறுகள் செய்தான், வசனங்கள் தவறாகச் சொல்லி, செய்ய வேண்டியதைத் தவறாகச் செய்து என்று எல்லோரின் பொறுமையைச் சோதித்தான். ஒப்பனையாளர் சரியாக ஒப்பனை செய்யவில்லை, தானே செய்து கொள்கிறேன் என்று அதிலும் தாமதம்.


மொத்தத்தில் அன்று கடைசி ஷாட் இது என்று இயக்குனர் சொல்லும் அளவு அவன் அடித்த கூத்து இருக்க, மணி 5 ஆயிற்று.


அதே காட்சி, அவள் பின்னால் செல்ல வேண்டும், இவன் முன்னேற வேண்டும், அவள் அவனை அடிக்க கையுயர்த்தி அறைய முற்பட, இம்முறை அவன் அந்த காட்சியை மாற்றினான்.


அவள் கையை தடுத்து நிறுத்த, அவளோ புதிராகப் பார்த்தாள்.


'டேய்! உன்னை அறைய ஒரு நல்ல சான்ஸடா எனக்கு' என்று மனதில் புலம்ப, அவன் அவளது எண்ணங்களை ஊகித்தவன், அவள் எண்ணங்களைத் தவிடு பொடியாக்கினான்.


அவள் நெற்றியில் வழிந்து கொண்டிருந்த ரத்த கலவை, மெல்ல மெல்ல, வழிந்து அவள் கன்னம் தழுவியது. அவள் வெளீர் நிறம், இப்போது சிவந்து இருக்க, இது நடிப்பாக இருந்தாலும் துருவ் அதில் தத்ரூபத்தைக் காட்ட விழைய,


தன் ஆள்காட்டி விரலால், அவள் நெற்றியில் இருந்து கன்னம் வரை கோடிட, நக்ஷத்திராவுக்கு அந்தத் தொடுகை, 1 லிட்டர் அமிலத்தை அவள் மீது ஊற்றியது போல் ஒரு தோற்றம்.


அதுவும் ஆளைக் கபளீகரம் செய்யும் அந்தப் பார்வை! அத்துடன் அவன் நிறுத்தவில்லையே, தன் இடது கையால் அவளைத் தன் பால் இறுக்கிக் கொண்டான். அதில் இன்னும் இருவர் நெருங்கி கொள்ள, அவன் விரல், அவள் நாடியை நிமிர்த்தி அவள் அதரங்களை அவன் முகம் அருகே கொண்டுச் செல்ல, யாராவது


"ஷாட் கட்" என்று சொல்ல மாட்டார்களா என்று நக்ஷத்திரா உள்ளுக்குள் கூக்குரல் இட்டாள். ஏனென்றால் இது இந்த காட்சியில் இருக்கவே இல்லை.


கிட்ட தட்ட ஒரு 50 பேர் நடுவில் இவன் ஏதோ எக்குதப்பாக செய்யப் போகிறான் என்று மூளை கூற, அவ்வாறு செய்தால், அவனை என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.


அவனது வெம்மையான மூச்சு காற்று அவள் அதரங்களைத் தீண்ட, அவற்றை உள்ளிழுத்துக் கொண்டாள். அதில் அவன் முகம், கேலி பாவனைக்கு மாறி, ஒற்றை புருவத்தைத் தூக்கியவன்


"உலகத்துல நீ கடைசி பொண்ணா இருந்தாலும், எனக்கு உன் மேலே இன்டெர்ஸ்ட் வராது" என்று கூறிவிட்டு, தன் பிடியை டக்கென்று விட, அவள் தடுமாறி கீழே விழுந்தாள்.


இதை எதனால் கூறினான் என்று அவள் அறிவாள், அன்று நடந்தத்திற்கு ஒரு வித பழி வாங்கல். அவளை விட்டவன், கம்பீர நடை நடந்து செல்ல, 'ஷாட் கட்' உம் கூறப்பட்டது.


எல்லோரும் அவனைப் பாராட்ட, நக்ஷத்திரா மட்டும் கோபத்தில், இயலாமையில் கனன்று கொண்டிருந்தாள், இன்னும் எழுந்து நில்லாது. அவளைத் திரும்பி பார்த்தவன் முகத்தில்


'இன்னும் இருக்குடி' என்ற ஆணவம் தலைவிரித்து ஆட, அவள்


'ப்ள*** வில்லா' என்று திட்டி தீர்த்தாள், உதட்டை அசைத்து, அது அவன் கண்ணில் படவும் செய்தது. அதில் கோபமுற்றவன், நொடி பொழுதில் அடுத்து அவளை என்னச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.


"ஆனந்த்! இந்த ஷாட் இன்னும் ரிப்பீட் செய்யணுமா! ஒரு செகண்டில் தோணிச்சு. " என்று நல்லபையனாக அவனது எக்ஸ்ட்ரா பிட்டிற்கு(அவளை பொறுத்தவரை அதிகபிரசங்கித்தனம்) சிபாரிசு வேற வேண்டினான்.


"சே சே! நான் யோசிச்சு வச்சு இருந்ததை விட சூப்பர்!" என்று பாராட்ட வேறு செய்தான், படத்தின் இயக்குனர் ஆனந்த்.



எப்படி ஆனந்த் 'ஷாட் கட்' சொல்லவில்லை என்று யோசித்தவளுக்கு, இந்தக் காட்சி படமாக்கும் முன், இவர்கள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டு இருந்ததை நினைவு கூர்ந்தாள்.



'துரோகிங்க' என்று அவர்களை திட்டி தீர்த்தவள், இனி என்ன ஆனாலும் இங்கிருந்து புறப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுச் சென்று எத்தனிக்க, அவளைப் படப்பிடிப்பு தளத்தின் வெளிப்புறம் பார்த்தவன்,



"அச்சோ! பாய் பிரென்ட் கூட டேட்டிங்க்கு லேட் ஆகிடுச்சு போல..ஹவ் சேட்?" என்று ஏளனமாக போலியாக வருத்தப்படுவது போல் வினவினான்.



அவனுக்கு பதில் சொல்லத் துடித்த நாக்கை அடக்கியவள், அவனை எரிக்கும் ஒரு அணுமின் பார்வையை வீசி விட்டுச் சென்றாள். ஏனென்றால் ஸ்கேன் செய்யும் மருத்துவர், இன்னும் சில நேரம் கழித்து வீடு சென்று விடுவார். அதற்குள் இவள், பார்வதியை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.



இந்த சமயத்தை அவனிடம் தர்க்கம் செய்து வீணடிக்க விரும்பவில்லை. புத்திசாலித்தனமாக அவனைப் பொருட்படுத்தாது அவ்விடம் நீங்கினாள். ஒருவேளை துருவ்விற்கு இது தெரிந்து இருந்தால், அன்றைய படப்பிடிப்பில் இப்படி எல்லாம் நடந்து இருந்து இருப்பானா? அவன் மட்டுமே அறிந்தது. கொடுமையான கொலைக்காரனிடம் மனிதம் இருக்குமா என்று கேள்வி இட்டால், யாரின் பால் என்று பதில் கேள்வியைக் கேட்க முடியும். இது துருவ்விற்கும் பொருந்தும்.



****************

"டேய் வினு! ஸ்டாக் அனுப்பி வச்சியா?" என்று வினோத் என்பவனிடம் காய்ந்து கொண்டிருந்தான் துருவ்.


விஷயம் இது தான், துருவ்விற்குச் சொந்தமான பழத்தோட்டம் இருக்கிறது. அதில் இருந்து உற்பத்தி ஆகும் மாம்பழங்களை எடுத்து அதன் சாறு கொண்டு, இயற்கை முறையில் அதாவது ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படும் பழரசத்தைப் பற்றி தான் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.



அவனது நீண்ட நாள் கனவு இது, உணவுத் தொழில் துறையில் கால் வைத்து, தரமான பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்பது. இதில் லாபம், பார்ப்பதை விட, தரம் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தான்.



முதல் முதலில், இதை படப்பிடிப்பு தளத்தில் விநியோகம் செய்து, எவ்வாறு இருக்கிறது என்று கண்டு அறிய விரும்பினான். அதற்கு தான் அவன், வினோத்திடம் காய்ந்து கொண்டிருந்தான். இனி சற்று நேரத்தில் படப்பிடிப்பு ஆரம்பித்து விடும், அதற்குள் இதை விநியோகம் செய்ய வேண்டும் என்று துருவ் இருக்க, அவன் எதிர்பார்த்தது வந்தது, எதிர்பாராத ஒன்றும் வந்தது.


அவன் காரில் சாய்ந்தபடி, பழரச வேனிற்காக காத்து கொண்டிருக்க, 13 வயது மதிப்புள்ள ஒரு சிறுமி அவனிடம் ஓடி வந்து



"சார்! ஆட்டோகிராப்! ஒரு செல்பி எடுக்கத்துக்கலாமா?" என்று வினவ, துருவ் தனது குளிர் கண்ணாடியை அவிழ்த்து விட்டு,

புன்னகைத்து


"ஷ்யூர்! வை நாட்?" என்று அழகாக ஆட்டோக்ராப் போட்டு கொடுத்து, 2-3 தன்னேற்பிகளை எடுத்துக் கொடுக்க, அந்த சிறுமியும் மகிழ்வாக அவனிடம் இருந்து விடைபெற்று கொண்டாள். அந்த மகிழ்ச்சியின் ஆயுள் 5 நிமிடங்களே.



5 நிமிடங்கள் கழித்து, அவன் அருகே 'பளார்' என்ற சத்தமும், ஒரு விசும்பல் சத்தமும் கேட்க, அவன் என்னடா இது என்று பார்க்க விழைந்தான்.


5 அடி நடந்து இருப்பான். ஒரு கார் பின்னால் இருந்து, ஒரு சிறுமியின் குரலும், நக்ஷத்திராவின் குரலும் கேட்க, அங்கே நின்று கொண்டான்.



"அவன் எல்லாம் ஒரு ஆளு! அவன் கிட்ட ஆட்டோகிராப் ! செல்பி..சரியான ட்ராகுலா மூஞ்சி, குணமும் அப்படியே..ஹார்ட்லெஸ் மான்ஸ்டர், நீ எதுக்கு இங்க வந்தே! ஷூட்டிங் பார்க்க! அதோட நிறுதிக்கணும், யார் கிட்டயாவது பேசிக்கிட்டு, முக்கியமா அவன் கிட்ட பேசினே..கொன்றுவேன்" என்று கத்திக் கொண்டிருக்க, அந்த சிறுமியோ


"ட்ராகுலான்னா என்ன அக்கா?" என்று விசும்பல் இடையே விசாரித்து கொண்டிருக்க, நக்ஷத்திரா


"சைத்தான்! ரத்த காட்டெரிகளுக்கு ஹெட் மாறி, மத்தவங்க ரத்தத்தை உறிஞ்சி கொன்னுரும் அது, அவனும் அந்த மாறி தான், பொம்பள பொறுக்கி, ஏதாச்சும் ஒரு பொண்ணு கிடைச்சா….விடு விடு.. உன் வயசுக்கு இதுவே அதிகம். ஒரு இடத்தில் உட்கார்ந்து ஷூட்டிங் பாரு." என்று அதிகாரம் பறக்க, விளக்கம் சொல்ல, துருவ்வின் மனம் எவ்வாறு இருக்கும் என்று ஊகிக்கலாம்.


அந்த ட்ராகுலாவாக மாறி, அவளை ஒருவழி செய்து, அவளை கொன்று போடும் அளவு ஆத்திரம் பெருகத் தான் செய்தது. 'தனியாக என்னிடம் மாட்டாது போய் விடுவாயாடி நீ, அன்னிக்கி இருக்கு' என்று கறுவிக் கொண்டான்.


ட்ராகுலா என்று சொன்னதும் அவனுக்கு அந்த முத்தம் ஞாபகம் வர, அவளை எவ்வாறு பழி தீர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டான்.


அது போல் அவனும் செய்ய, நக்ஷத்திரா ஏன் வயிற்று பிழைப்பிற்காக நடிக்க வந்தோம் என்று வருந்தினாள், அத்துடன் அவன் நிற்கவில்லையே.


2 நாள் கழித்து அவர்கள் இருவரையும் இணைத்து அசிங்கமாக கிசுகிசு ஒன்று வர, அதில் அவள் இன்னும் துவண்டு போனாள். அதற்கு பதிலடியாக அவள் பேசிய பேச்சு...அவனை இன்னும் வெறியாக்கியது..அது….
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 8


"என்ன சீன், சேர்த்து இருக்கீங்க?" என்று கேட்டவள், குரல் சாதாரணமாக தான் முதலில் இருந்தது. ஆனால் அது என்னவென்று கேட்ட பிறகு, அவள் முகம் செத்து போய் விட்டது.



"வாட்! கிஸ்ஸிங் சீன் அண்ட்…" என்று அவள் க்ரீச்சிட, இயக்குனர் ஆனந்த்


"கிஸ்ஸிங் சீன் எல்லாம் நார்மல்! இதில் என்ன? நடிக்க வந்தா, இதெல்லாம் உண்டு. தெரிஞ்சு தானே வரீங்க!" என்று அவனும் சளைக்காது சத்தம் போட, கட்டப் பஞ்சாயத்து செய்ய துருவ்வும் வந்தான்.


"எனி பிரோப்ளேம்?" என்று அவன் கேட்ட விதத்திலேயே அவளுக்குத் தெரிந்து விட்டது, இவன் தான் பிரச்சினையின் சூத்திரதாரி. அவனை நக்ஷத்திரா முறைக்க, அவனோ கேலி கலந்த ஆணவப் புன்னகை ஒன்றை அவள் மீது வீசினான்.



"கிஸ் பண்ண மாட்டாங்களாம்" என்று ஆனந்த் கடுப்பில் கூற, துருவ் இன்னும் ஏளனமாக


"ஓ! ரியலி" என்று ஆனந்த் பக்கம் நின்று கொண்டு, அவள் இதழ்களைப் பார்த்து கொண்டே கூறினான். அவளுக்கு அது தீக்குளியல் போல் இருந்தது. இருந்தாலும் விடாது


"ஸ்க்ரிப்ட் இல் இல்லே?" என்று வாதாடினாள். துருவ் விடவில்லை, அவளை எவ்வளவு தூரம் சீண்டிப் பார்க்க முடியுமோ, அவ்வளவு தூரம் சீண்டினான்.


"அக்ரீமெண்ட்டில் ஒரு பார்டில், 'கதைக்கு தேவைப்பட்டால், இன்னும் காட்சிகள் சேர்க்கப்படும், அதற்கு ஒத்துக்கொண்டு, கை ஒப்பம் இடவும்' ன்னு வருமே, படிக்கலியா? உனக்கு இங்கிலீஷ் தான் நல்ல வருதே..ஏ பி சி டி எழுத்து கூட்டி வாசிக்க வருமே..டிட் யூ மிஸ் இட் ஆர் இங்கிலீஷில், ஒன்லி உத்தமமான வார்த்தைகள் மட்டும் தான் தெரியுமா?" என்று அவளை இளக்காரம் செய்தான்.


அப்படி ஒரு பகுதி உண்டு என்பது அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அதை உணராது, இவர்களிடம் விவாதம் செய்தது, தன் மடத்தனம் என்று நொந்து விட்டாள்.


வேறு வழி இல்லாது காட்சிக்கு தயாரானாள். இது படத்தில், நக்ஷத்திரா தன் காதலை அவனிடம் சொல்லும் போது வரும்படி இருக்க, காதலைச் சொல்லும் காட்சியில் அவள் வாங்கிய டேக்குகள் அளவில்லாது இருக்க, ஆனந்த்


"டேய்! குமார் மிடில டா, இந்த சீனை ஷூட் பண்ணிட்டு கூப்பிடுங்க" என்று தனது உதவியாளரிடம் கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.



நக்ஷத்திரா என்ன செய்வது என்று இயலாது இருக்க, துருவ்வின் ஆராய்ச்சி பார்வை அவளைத் துளைத்தது. அதில் கோபம் வேறு, எத்தனை பெண்கள் தனக்காக என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்கள். அவனுடன் நடிக்க ஆவலுடன் இருக்கிறார்கள், இவள் ஒரு பொருட்டாக மதிப்பதும் இல்லை. எல்லாவற்றையும் விட, ஒரு காட்சி, நிழல் வடிவில் காதலைச் சொல்ல வேண்டும், அதில் என்ன தயக்கம்.


ஐ லவ் யூ என்ன அவ்வளவு கடினமான வார்த்தைகளா, வாழ்க்கையில் பொய்யே சொன்னது இல்லையா இவள் என்று பொறுமித்தள்ளினான், கோபத்துடன்.


அவளும் கிட்டத்தட்ட அவன் நிலையில் தான் இருந்தாள். அவள் மீதே அவளுக்குக் கோபம். சீக்கிரம் முடித்துத் தொலைத்தால், இந்தக் காட்சி முடியும், அதன் பின் இதில் இருந்து, அவளுக்கு விடுதலை என்பது அவளது அறிவுக்கு எட்டினாலும், மனம் ஏனோ தயங்குகிறது.


அவனைக் கண்டால் பயமா? அவளுக்கா? இல்லை என்று தன்னை ஏமாற்றிக் கொண்டாள். பயம் உண்டு, எங்கேயாவது அவனிடம் மயங்கி, விளக்கில் விழும் விட்டில் பூச்சியென மாற அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் அறியா கதையா அவனைப் பற்றி.


அன்று புகைப்படப் படப்பிடிப்பில் அவனிடம் சற்று மயங்கித் தான் போனாளே, அதை வெளி உலகிற்கு தெரியாது இருக்கச் செய்ய அவள் பட்ட பாடு... அவளே அறிவாள். அவனிடம் ஏதோ இருக்கிறது, ஆளை மயக்கும் வசீகரம், வசியம் செய்யும் மாயக்காரன். அதை விட, அவனிடம் இருக்கும் ஓர் உணர்வு அவளைத் தீண்டி, யோசிக்க விடாது அவன் பால் ஈர்க்கிறது. அது தெரியும் அன்று அவள் என்ன மாதிரி உணர்வாள் என்று அப்பேதை அறியவில்லை அன்று.



கூடாது, இவனிடம் மயங்கி விழ கூடாது, தன்னால் முடியும், இது நிழல், நிஜமில்லை என்று தனக்கு தானே உருப்போட்டு கொண்டவள், துருவ்வைத் தவிர எது அல்லது யார் தன்னை இதில் அதிகம் பாதிக்கிறார்கள் என்று உணர்ந்து, பார்வதியிடம்



"அம்மா! இவளையும் கூட்டிகிட்டு வீட்டுக்கு போங்க! ஷாட் லேட் ஆகிடும்" என்று அவரையும், படப்பிடிப்பு பார்க்க வந்த சிறுமியையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.


பார்வதி ஆயிரம் முறை பத்திரமாக வா என்று கூறிவிட்டுச் சென்றார். அவருக்கு அன்றில் இருந்து ஒரே பயம், அவளுக்கு எதுவும் ஆக கூடாதென்று. ஆனால் அவரே, பின்னாளில் அவளது வாழ்வு கேள்விக் குறி ஆவதற்கு காரணம் ஆவார் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.


பார்வதி சென்ற பிறகு, உதவி இயக்குனரிடம்


"ரெடி சார்" என்று அறிவித்து விட்டு, அவள் தயாராக, அவள் உயரத்தை மறைத்தபடி துருவ் வந்தான்.


"ஷாட் ரெடி! காமெரா! ஆக்ஷன்" என்ற பொதுவான சொற்றொடர்கள் ஒலிக்க, துருவ் மற்றும் நக்ஷத்திரா நடிக்கத் தயாராயினர். துருவ்வை மெல்ல, நக்ஷத்திரா நெருங்கி


"என்னை..உங்க கூட எப்போதும் வச்சு பத்திரமா பார்த்துப்பீங்களா! ஐ லவ் யூ! நீங்க இல்லாம…" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், துருவ் அவள் இடையை இடக்கையால் பற்றி, வலக்கையால் முகத்தை ஏந்தியவன் கட்டை விரலால் கன்னம் வருடி, இதழின் ஓரம் வருடி அவளது வசனத்தை மறக்க செய்தவன், அவள் கண்கள் எங்கும் அலைபாய விடாது தன் மீது நிலை நிறுத்தி,


"ஹனி பன்ச்! " என்று ஹஸ்கி குரலில் கூறிவிட்டு, அவளது இதழ்களை தன் உடமையாக்கினான். நிழலில் கொடுக்கும் முத்தம் என்றாலும், அதில் இருக்கும் உணர்வு அவளை ஆட்கொள்ள, எவ்வித எதிர்ப்பும் இல்லாது அவனுள் அடங்கித் தான் போனாள். இதழ் யுத்தத்தில் ஒருவர் தோற்க, மற்றவர் விட்டுக்கொடுக்க என்று மாறி மாறி, ஒருவர் மற்றவர்க்காக விட்டுக்கொடுத்து இருவரும் வெற்றி பெற்றனர். நிஜமாக இருந்தால், முத்தம் தீட்டிய மோக விதை, விருக்கிஷமாக வளர்ந்து இருந்து இருக்கும். நிழலாக போனதில், ஓர் சொற்றோடரான


"ஷாட் கட்", இல் முதலில் ஸ்மரனைக்கு வந்தது என்னவோ துருவ் தான். அவளைத் தன்னிடம் இருந்து விடுதலை செய்தவன்,


"இந்த சீனுக்கு முன்னே நீ போட்ட சீனுக்கு..ம்ம்ம்..லுக்ஸ் லைக் யூ என்ஜாய்ட் இட்" என்று காதில் கிசுகிசுத்து விட்டு தான் சென்றான்.


அவன் கூறிய ஒவ்வோர் சொல்லும் அக்கினி அஸ்திரம் போல் அவளை தாக்க, வருநாஸ்திரம் இல்லாது அவள் அதில் உழன்று எரிந்து போகாது இருக்க, படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியே சென்று விட்டாள். அவளுக்காக அதிசயமாக வீசிய சென்னையின் குளிர் தென்றல், அவளைக் குளிர்விக்கவில்லை. அவனை ஏதேனும் செய்தால் தான் அவள் மனம் அடங்கும்.


அப்படி என்ன, அவளுக்கு அவனிடம் அப்படி ஒரு பற்றுதல். வெறுப்பை தவிர வேறெந்த உணர்வும் அவர்கள் இடையே இருக்க கூடாது என்று முடிவெடுத்தவள் இன்று அவனது நெருக்கத்தில், தொடுகையில், அந்தப் பார்வையில் குழைந்து, உருகி, தன்னிலை மறந்து இருந்தது, சீ என்று ஆயிற்று அவளுக்கு..


அவன் அந்த கண்ணனும் அல்ல

இவள் அந்த ராதையும் அல்ல..


இருவரும் இரு துருவங்கள்! அருகில் வரும் போது, இவர்கள் ஒத்துக்கொள்ளாவிடிலும் அந்தக் காந்த சக்தி இழுக்கிறதே..


துருவ்வும் அதே போன்ற மனநிலையில் தளத்தை விட்டு வெளியே வந்தான், எம்மாதிரி அவள் அருகே அவன் உணர்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை. அந்த காட்சி அவனது நடிப்பு தொழிலின் ஒரு பகுதி, அவ்வளவே! ஆனால் அவன் அவ்வாறா நடந்தான்.


அவனுக்காகவே அவள் படைக்கப்பட்டு இருக்கிறாள் என்பது போல் அல்லவா உணர்ந்தான். அவனுள் வாகாய் அடங்கும் அவள் இதழ் தரும் போதையில் அவன் மயங்கி தான் விட்டானே! ஒரு பெண்ணிடம் துருவ் மயங்குவதா! நடக்க கூடாத ஒன்று. துருவ் என்பவன் யாருக்கும் அடி பணிந்தோ, மயங்கியோ, எவ்வித உறவுக்கோ இடம் கொடுக்காதவன். உறவு என்பது அழிவு அவனை பொறுத்தவரை. அப்பேற்பட்டவனை அவள், பாதிக்கிறாள், சோதிக்கிறாள்.


இது தொடரக் கூடாது என்று அவன் முடிவெடுத்து கொண்டான், தலைமுடியை விரலால் கோதிகொண்டே திரும்புகையில் பார்த்தது அவளை தான்.


படப்பிடிப்பு தளத்தில் உதவிக்கு இருக்கும் பையன் ஒருவன், அவளுக்கு அவனது பண்ணை வீட்டு தயாரிப்பான மாம்பழ பழச்சாற்றை கொடுக்க, அவள்


"என்ன இது! காபி டீ தானே கொடுப்பே! இன்னிக்கி என்ன ஜூஸ்?" என்று வினவினாள். அவனும்


"அது வந்து, இது துருவ் சார் கொடுக்க சொன்னாரு" என்று விவரத்தை அரைகுறையாக அவளிடம் சொல்ல, அது எவ்வித குறையும் இல்லாது அவளை ஒரு வஞ்சம் தீர்க்கும் வஞ்சிக்கொடியாக மாற்ற, பழரச காகித அட்டையை அவனிடம் வாங்காது, அவன் கையில் இருந்த பழரச டப்பாவை எடுத்து, அருகில் அமர்ந்து கொண்டிருந்த அந்த தளத்தின் வாட்ச் மேனின் செல்ல பிராணியாகிய ஒரு நாயின் உணவு தட்டில் கொட்ட, அதுவும் அதை நக்கி சாப்பிட ஆரம்பித்தது.


அவளது ஆங்காரம் அப்போது தான் தீர்ந்தது. அவனைப் பழி வாங்கி விட்டோம் என்று திருப்தி கொண்டு நிமிர்ந்து பார்க்கையில், சாட்சாத் துருவ்வே நின்று கொண்டிருந்தான், அந்த துரியோத துவேஷத்துடன். அதற்கு அஞ்சும் எண்ணம் துளி கூட இல்லாது, அவனை நோக்கி நிமிர்ந்து நடந்தவள், அவனது வெகு அருகில் வந்தபின், கைகளைக் கட்டிக்கொண்டு அவனது தயாரிப்பான பழரசத்தை அருந்தும் பிராணியைக் கண்களால் காண்பித்து


"லுக்ஸ் லைக் யூ என்ஜாய் திஸ் அ லாட்" என்று அவன் கூறியதை அவனுக்கே திரும்ப உரைத்து விட்டு, கம்பீர நடையில் அவ்விடம் நீங்கினாள், அவன் முக உணர்வுகளை காணாது, முக்கியமாக அந்த பழரச டப்பாவில் இருக்கும் பெயரை காணாது! ஒரு நிமிஷம் அவன் சற்று பக்கவாட்டில் திரும்பி அவளை காண, அவளும் அதே நேரம் தனது பக்கவாட்டில் திரும்ப, இருவரின் பார்வையில் அக்கினி சாரல்கள் தெறித்தன.


செல்வச் செழிப்பில் பிறந்து, 'ம்ம்' என்றால் என்னவென்று கேட்பதற்கு வேலை ஆட்கள், கொடி கட்டிப் பறக்கும் திரை உலகில் அவனது உயரம் என்று எதிலும் வெற்றி என்று இருப்பவனை இவ்வளவு தூரம் யாரும் அவமானப்படுத்தியது இல்லை


திரை உலகில் சேர, யார் சிபாரிசும் அவனுக்குத் தேவைப்படவில்லை. ஒரு சிலர், ஆண்கள் உட்பட திரை உலகில் சேர்ந்து பெயர் வாங்க செய்யும் விஷயங்கள் எல்லாம் பார்த்தால், இவன் அம்மாதிரி எதுவும் செய்ய நேரவில்லை. அவன் வந்த நேரம், அவனுக்காகவே இருந்த ஒரு வெற்றிடம் நிரம்பி விட்டது. அதில் இருந்து அவனை அசைக்க முடியவில்லை, அசைக்கவும் விடவில்லை அவன்.


அப்பேற்பட்டவனுக்கு அவள் கொடுக்கும் மரியாதை என்னவோ பூஜ்யம் தான். அவளை பிடித்து உலுக்கி,


'என்னடி உன் பிரச்சினை' என்று கேட்கத் தோன்றியது. ஆனால் மறுநொடி


'நான் துருவ், இது என் சாம்ராஜ்யம், எனை எதிர்ப்போரை உரு தெரியாது அழிப்பேன்' என்ற அவன் முழு முதற் குணம் வெளிப்பட, அவன் மனதில் அடுத்த திட்டம் செயலாற்ற உத்வேகம் பிறக்க, அதில் நக்ஷத்திரா காயமடைந்தாள், அவனையும் காயப்படுத்தினாள் வேறு விதமாக.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ரிபோர்ட்ஸ் கலக்ட் பண்ணிட்டு டாக்டர் பார்த்திட்டு வந்திருவேன்" என்று கூறிவிட்டு நக்ஷத்திரா தன் வாழ்க்கையை தடம் மாறி போக வைக்கும் ஒன்றை தேடிச் சென்றாள்.


பரிசோதனை முடிவுகளை பார்த்தவள், அதிர்ந்தாள்.


"இது...இது என்னன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று அதிர்ந்தபடியே அங்கு இருந்த வரவேற்பு பெண்ணிடம் கேட்க, அவளோ சங்கடமாக,



"டாக்டரை பாருங்க மா!" என்று சொல்ல, நக்ஷத்திரா கண்ணில் நீர்.


"என் அம்மா..இவங்க என் அம்மா..இவங்களும் என்னை விட்டு போயிருவங்களா? சொல்லுங்க ப்ளீஸ்.." என்று அவள், வரவேற்பு பெண்ணிடம் குமுற, அவளோ, நக்ஷத்திராவை அமர்த்தி, சற்று நீரைப் பருக கொடுத்து,


"டெக்னாலஜி எவ்வளோ இம்ப்ரூவ் ஆகிருக்கு. நிறைய ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க. நம்பிக்கை விடாதீங்க" என்று சமாதானம் செய்து, அவளை மருத்துவரிடம் அனுப்பி வைத்தாள். வரவேற்பில் இருப்பவர்களுக்கு, இம்மாதிரி முடிவுகளைப் பார்த்து, பார்த்து மருத்துவம் படிக்காவிடினும், எது என்ன என்பது நன்றாக தெரிந்து விடும். நக்ஷத்திரா போல் எத்தனையோ பேரோ, அவர்களிடம் பொங்கி விடுவார்கள், அதைச் சமாளிக்க பொறுமை அவசியம்.



மருத்துவரிடம் செல்லும் முன், நக்ஷத்திரா சற்று சாந்தமானாள். இனி என்ன செய்வது என்று பார்க்க வேண்டுமே ஒழிய, இதைப் பற்றி தானே அழுது ஆர்ப்பாட்டம் செய்தால், பார்வதியின் நிலை? அவளை வளர்த்தவர், பார்வதி! அவர் பால் இருக்கும் கடமைகளைத் தான் சோடை போகாது செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.


பரிசோதனை முடிவுகளை அவரிடம் காட்ட,


"சாரி மா! உன்னோட அம்மாக்கு ஓவெரியன் கான்சர். நான் ஒரு கைநகாலஜிஸ்ட் சஜெஸ்ட் பண்ணறேன். அவங்கள கான்சல்ட் செய்யுங்க" என்று அவர் தன் கடமையை முடித்துக் கொண்டார்.


வீட்டிற்குச் செல்லவே அவளுக்குப் பிடிக்கவில்லை. மருத்துவரைக் காணும் போது இருந்த தைரியம் எங்கோ போய் தொலைந்துவிட்டது. எப்படி விஷயத்தை சொல்லி அவரைத் தேற்றுவது என்று புரியவில்லை. அந்த 18 வயது பாரமாகக் கனத்தது. துக்கத்தை யாரிடம் பகிர்ந்து கொள்வது, அவளுக்குப் பார்வதி, பார்வதிக்கு அவள் என்று இருந்து விட்டனர்.


யாரையும் நம்பாதே, உன்னை ஏமாற்றி விடுவார்கள் என்ற எண்ணம் எப்போதும் அவளுக்கு உண்டு. அவளுக்கு நண்பர்கள் அபூர்வம். அதிகம் தன்னைப் பற்றி பேச மாட்டாள், ஏனென்றால் அவள் சரித்திரம் அப்படி. தேவை இல்லாதக் கேள்விகள் வரும். அறியாத வயதில் அதைக் கேட்டு, அவமானப்பட்டு இருக்கிறாள். இனி படக்கூடாது என்று ஓர் உறுதி. அதில் விளைந்தது அவளது தைரியமும் அழுத்தமும். ஆனால் இன்று அதெல்லாம் புயலால் தூக்கி எறியப்பட்ட மரம் போல் ஆனது.


வீட்டுக்குள் நுழையும் போதே, பார்வதி


"என்னாச்சு? ரிபோர்ட்ஸ்?" என்று தான் ஆரம்பித்தார். என்ன சொல்வாள், அவரது சூளகத்தில் புற்று நோய் என்றா! அவரது படிபறிவிற்கு அதை எவ்வாறு எடுத்து கொள்வார் என்ற ஒரு அனுமானம் அவளுக்கு இருக்கிறது.



"டாக்டர் இன்னொரு டாக்டர் பேர் சொல்லி இருக்கறார். அவங்க தான் இனி நாம பார்க்கணும்" என்று பூசி மொழுகப் பார்த்தாள். ஆனால் பார்வதிக்கு அவளது அதிர்ந்த தோற்றம், தழுதழுக்கும் குரல் எல்லாம் ஏதோ சரியில்லை என்று உணர்த்தியது



"தாரா! சொல்லு" என்று அவள் அன்னை அழைப்பது போல் அவளிடம் கேட்க, நக்ஷத்திரா ஒருநிமிடம் அவரைப் பார்த்து, அழாது இருக்க மிகவும் கஷ்டப்பட்டாள். பார்வதியைப் பார்க்க முயன்று தோற்று போனாள், அவரது தைரியம் அவளுக்கு இன்று இல்லை. இப்போதே வீழ்வேன் என்று இருக்கும் கண்ணீரைத் தன் தைரியம் என்ற அணையிட்டு தடுத்து,


"இந்த காலத்தில் இது ஒன்னும் இல்ல, சரியாகிடும்" என்று சமாளிக்கப் பார்க்க, பார்வதி



"எனக்கு என்னன்னு உன்கிட்ட கேட்டேன்!" என்று அழுத்தம் திருத்தமாக கேட்க, நக்ஷத்திராவிற்கு அதற்கு மேல் வேறு வழி தெரியவில்லை.


"உங்க...உடம்புல ஒரு..சின்…ஒரு கட்டி இருக்கு! எடுக்கணும்" என்று சொல்லிவிட்டாள்.


"அவ்வளவு தானா! வேற ஏதாச்சும் இருக்கா!" என்று பார்வதி தோண்டி துருவ,


"நாளைக்கு ஒரு லேடி டாக்டர் பார்க்க போறோம், அவங்க தான் இனி என்ன பண்ணனும்னு சொல்லுவாங்க" என்று முடித்துவிட்டாள்.



அன்று இரவு ஒருவித மயான அமைதியில் உண்டனர், உறங்க முற்பட்டனர். தனக்கு கட்டி மட்டுமல்ல, வேறெதோ இருக்கிறது என்று பார்வதியின் மனம் உறுதியாக நம்ப, நக்ஷத்திரா எப்படியாவது பார்வதியைக் காப்பாற்ற வேண்டுமென்று ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள், தலை மீது கை வைத்தபடி.


அறுவைச் சிகிச்சை முதற்கட்டம், அதன் பின் அடுத்த கட்ட சிகிச்சைகள் நடை பெற, நிறைய பணம் வேண்டும் என்று புரிந்து கொண்டாள். பணம், பணம் அது படுத்தும் பாடு...கடவுள் ஏழைகளுக்கு, அவர்கள் வசதிக்கு ஏற்ப நோயை ஏன் கொடுப்பதில்லை என்று மானசீகமாக வாதாடினாள். மனிதன் பிறந்தால் என்றால், ஏதேனும் ஒருவழியில் இவ்வுலகை நீங்கி தான் ஆக வேண்டும். அதற்குண்டான வழிகளில் மிகவும் பணச்செலவு மிக்க ஒன்று தான் இந்த புற்றுநோய். இந்நோய் நோயாளிகளை மட்டுமா படுத்தும், அவர்களுடன் இருப்பவர்களை எல்லா விதத்திலும் படுத்தி எடுக்கும்.


பணத்திற்கு ஒரே வழி, அவளுக்கு பிடிக்காத நடிப்புத் தொழிலை அவள் தொடர்ந்து செய்ய வேண்டும். 2 நாள் முன், வேறோர் தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததை அவள், எடுக்காது போனது எல்லாம் ஞாபகம் வந்தது.


'சீ! அட்லீஸ்ட் கால் அட்டெண்ட் பண்ணி இருக்கணும்' என்று நிஜமாகவே தலையில் அடித்துக் கொள்ள, பார்வதி இதை கவனித்து


"என்ன ஆச்சு உனக்கு தாரா!" என்று மறுபடியும் வினவ, நக்ஷத்திரா இம்முறை


"உங்க செல்லம், தாரா விட பெட்டர் அம்மா! ஒன்னுமில்லே. கொஞ்சம் தலைவலி" என்று சமாளித்து உறங்க முற்பட்டாள்.


அடுத்த நாள் எழுந்தவுடன் அந்த தயாரிப்பாளரைத் தான் முதலில் கூப்பிட்டாள். என்ன படம், யார் இயக்குனர், நாயகன் யாரென்று விசாரித்து கொண்டவள் அதில் நடிக்க ஒத்துக்கொண்டாள். நாயகன் ரஞ்சன் என்பதில் ஒருவித நிம்மதி. எண்ணி இன்னும் 10 நாட்கள். துருவ் சகவாசம் ஒழிந்து விடும் என்ற ஒரு நிம்மதி வேறு.


பார்வதியை, மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து கொண்டு சென்றாள். பார்வதி அறைக்கு வரும் முன், தான் அவரிடம் என்ன கூறி இருக்கிறேன் என்று முதலில் மருத்துவரிடம் தெரிவித்துக் கொண்டாள். இவளது எண்ணம் புரிந்தவர், அதற்கு ஏற்ப, பார்வதியிடம் பேசி விட்டு, புற்றுநோயின் தாக்கம் சரியாக தெரிய மற்றோர் ஸ்கேன் ஆன, PET ஸ்கெனை செய்யும் மாறு அறிவுறுத்தினார், அவளிடம் தனிமையில்.



அதையும் செய்தவள் மனதில் கடுகளவு நிம்மதி இல்லை, ஏனென்றால் அது ஏகதேசம் பரவி தான் இருந்தது. ஏன் எதற்கு என்று நச்சரித்த பார்வதியைச் சமாளிப்பது ஒரு புறம், துக்கத்தை, சோகத்தை யாரிடமும் பகிர முடியாது மற்றோர் புறம் என்று ஒவ்வொரு நொடியும் கொடுமையாக இருந்தது. அதில் விளைந்த தூக்கமின்மையில், கண்கள் கீழே அதீதமான கருவளையங்கள்.


"என்னது இது! எவ்வளவு மேக் அப் போட்டாலும் நீ இப்படி இருக்கே! வூட்டுல ஏதாச்சும் பிரச்சனையா?" என்று கேட்ட ஒப்பனையாளரிடம்,


"பேசாம மேக்கப் போடுங்க சார்!" என்றாள் சற்று கண்டிப்பு கலந்த கறார் குரலில். காட்சியை ஒளிப்பதிவு செய்ய தயார் நிலையில் இந்த சம்பாஷணை. துருவ்வும் அருகில் தான் இருந்தான். ஆனால் கண்டுகொள்ளவில்லை.


'பிரச்சனைக்கு பிரச்சினை கொடுக்கறவளுக்கு என்ன பிரச்சனை வர போகுது' என்ற நல்லெண்ணம் தான்.


அப்போது ஒரு திரை உலக பிரமுகர், துருவ்வை காண, அவர்கள் தளத்திற்கு வருகை தர, எல்லோரும் பரபரப்பாயினர், நக்ஷத்திராவை தவிர. அவள் யாரும் பார்க்காத வண்ணம் அவ்விடம் நீங்க முற்பட, துருவ் அவளைப் பார்த்துவிட்டான், அதே நேரம் ரஞ்சனும் அவளைக் காண வர அது எதேச்சையாக அமைந்தது போல் இருந்தாலும் அது அப்படி இல்லை என்று துருவ்விற்கு புரியாது இல்லை.


அன்று துருவ்வின் கவனம் நக்ஷத்திரா மீது மட்டும் இருந்தது அவனது துரதிஷ்டம். இங்கே ரஞ்சனும், அவளும் படத்தளத்தில் இருந்து வெளியே சென்று விட்டனர்.


"என்ன ஆச்சு? மூச்சு முட்டுதா?" என்று ரஞ்சன் அக்கறையுடன் வினவினான்.


"கொஞ்சம். சொல்லுங்க லார்ட் ! என்ன விஷயம்? திடீர் விஜயம் ?" என்று கேட்டாள்.


"தேங்க்ஸ் சொல்லணும் . அந்த புது படத்தில் ஜோடியா நடிக்க ஒத்துக்கிட்டதுக்கு. நான் தான் ப்ரட்யூசர் கிட்ட சொன்னேன். நீ சரியா இருப்பே, அந்த ரோலுக்கு " என்று அவளை ரசித்து கொண்டே கூறினான். வகிட்டில் குங்குமம், க்ரீம் நிற புடவையில் காதில் ஒரு சின்ன குண்டலம் என்று அழகாக மிளிர்ந்தாள். கதைப்படி, அவள் துருவ்வுடன் நடிக்கும் படத்தில் இந்த இடத்தில் கல்யாணம் நிகழ்ந்துவிட்டது. இன்று அவள் தனிமையில் வீட்டில் இருக்கும் நேரத்தில், அவனது எதிரிகளால் தாக்கப்பட்டு கொல்லப்படுவாள்.


அந்தக் காட்சிக்குத் தான் தயாராகி கொண்டு இருந்தாள். அதன் பின் ஒரு பாடல் காட்சி, துருவ் ஒரு பின்னோட்டத்தில் நினைத்து பார்ப்பது போல் படத்தில் வரும், அது புதிதாக சேர்க்கப்பட்டது. அதற்கு வட இந்தியாவிற்கு அவர்கள் குழு செல்ல வேண்டும். அந்த பாடல் காட்சிக்கு பின், அவளது பகுதி இந்தப் படத்தில் முடிந்து விடும். அதன் பின் தான் பார்வதியின் அறுவை சிகிச்சையை வைத்து கொண்டு இருக்கிறாள்.


அதன் பின், புது படம் என்ற திட்டம் அவளுக்கு. இது வரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும் திருப்தியில்,



"நோ ப்ரோப்ளேம் ! நல்ல வாய்ப்பு ! அதான் அண்ட் நீ தான் ஹீரோன்னு சொன்ன உடனே எஸ் சொல்லிட்டேன்" என்று தனது நிலையைச் சொல்ல விரும்பாது மறைத்துவிட்டாள் , அவளுக்கு பச்சாதாபம் வேண்டாம்.


"ம்ம் … அண்ட் நம்ம கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு " என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க, அவள் அதில் சற்று துணுக்குற்றாள்.


"பார்டன் …" என்று அவளது கண்ணில் சற்று உஷ்ணம் ஏற, ரஞ்சன் சுதாரித்து கொண்டு


" நம்ம ஆன் ஸ்க்ரீன் ஜோடி நல்ல இருக்குனு சொன்னேன், ப்ரட்யூசரும் சொன்னார் ! ரெண்டு மூணு ஆட் ஆஃபர் வந்து இருக்கு ! உன்னை ஜோடியா போட சொல்லட்டுமா ?" என்று அவளை ஆராயும் பார்வை பார்க்க, அந்நேரம் நக்ஷத்திராவிற்கு அந்த பணமும் கிடைத்தால் உபயோகமாக இருக்கும் என்று பட்டது.



"ஷ்யூர் ! வை நாட்? " என்று சம்மதம் தெரிவித்தாள்.


இது தான் கடைசிப் படம் என்று சொன்னவள் இப்போது புது படம், விளம்பரங்கள் என்று நடிக்க சம்மதிக்க, ரஞ்சன் சற்று ஆச்சர்யம் அடைந்தான், சண்டி ராணி இடம் இதைப் பற்றி கேட்டால் என்ன சொல்வாளோ என்று ஒருநிமிடம் யோசித்தாலும், தயங்காது


"வீட்டில் எல்லாம் ஒகேவா? எங்க பார்வதி ஆன்டி ?" என்று சரியாகக் கேட்டான். அவள் திடுக்கிட்டாலும்,


"இன்னிக்கி அவங்களுக்கு கொஞ்ச வேலை ! சோ வரலே , ஷாட்டுக்கு லேட் ஆகிடும் ! நான் கிளம்பறேன் " என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டாள்.



உள்ளே காட்சிக்கு எல்லோரும் தயாராக, அவள் யாரையும் பொருட்படுத்தாது, நேரே தான் நிற்க வேண்டிய இடத்தில் நின்று கொண்டாள். காட்சி படி அவர்களுக்கு திருமணம் கழிந்து சில நாட்கள் ஆகி விட்ட நிலையில், ஒரு ஓய்வான பொழுதில் அவனை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருப்பாள். அந்த காட்சியில் அவள் தான் கர்ப்பமாக இருப்பதை அவனிடம் தெரிவிக்க வாயில் மணி அடித்தவுடன், கதவைத் திறக்க வேண்டும்.


ஆனால் அங்கு வில்லன் குழு வந்து இருப்பதை உணராது கதவை திறப்பாள், அதன் பின் அவளைச் சுத்தி வளைத்து கத்தியால் குத்திக் கொன்றுவிடுவர். ரத்த வெள்ளத்தில் அவள் இருக்க, அவன் ஓடோடி வந்து அவளை அள்ளி தன் மடியில் போட்டுக் கொண்டு அழ வேண்டும்.


"ரெடி ஸ்டெடி ! காமிரா ! ஆக்ஷன் " என்ற குரல் கேட்டவுடன், நக்ஷத்திரா தனது காட்சியை செவ்வனே செய்ய ஆரம்பித்தாள். வில்லன் குழு வரும் போது, அவளது முகத்தில் ஒரு பயம், அதிர்ச்சி, இயலாமை எல்லாம் சரியாக வந்தது. அவர்கள் கத்தியால் குத்தும் நேரம், அந்த ஸ்ப்ரிங் கத்தியின் தாக்கத்தை அழகாய் எதிர்கொண்டாள். செயற்கை ரத்த கலவை அவளது புடவை முழுவதும் நனைக்க, அவள் உயிர்விடும் காட்சி அவ்வளவு உயிர்ப்புடன் வர, அந்த நேரத்தில் துருவ்வும் நுழைந்தான்.


அவளை "ஜானு " என்று அழைத்தபடி, உள்ளே நுழைப்பவன், எங்கே இருக்கிறாள் என்று தேடுவான். ரத்த திட்டுக்களைப் பார்த்து திடுக்கிடுவான், ஒருகட்டத்தில் அவளது உடலை கண்டு



"ஜானு...…." என்று அவளிடம் பாய்ந்து, உயிர் இருக்கிறதா என்று பார்ப்பான். அதில் அவன் முகம் பரபரப்பைத் தத்து எடுத்து கொள்ளும், அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவன் போராடுவான், மார்பை அழுத்தி பார்த்து, அவளுக்கு இதயத் துடிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்து, அது இல்லாத பட்சத்தில் அவன் கொண்ட காதல் அவனை உருக்கி துடிக்கச் செய்யும். அவளை மாரோடு அணைத்து கொண்டு, அழுது துக்கப்படவேண்டும்.


இந்தக் காட்சியை இருவரும் ஒரே முறையில் செய்து முடிக்க, 'ஷாட் கட்' என்று சொன்ன உடன், படத்தளத்தில் இருந்தோர் எல்லோரும் எழுந்து கை தட்டி ஆர்பரித்தனர். ஆனால் அவனது கைகளில் தான் இன்னும் நக்ஷத்திரா வீற்று இருந்தாள்.


மார்புடன் அவன் அவளை அணைத்த நேரம், அவனது இதயத்துடிப்பு அவளுக்கு தெளிவாகக் கேட்டது. நடிப்பில் அது துடித்தது போல் அவள் உணரவில்லை, உண்மையில் அவன் தன் மனதிற்கு இனிமையாவள் ஒருவள் இருந்து, அவளுக்கு இப்படி நேர்ந்திருந்தால், எப்படி துடிக்குமோ, அவ்வாறு இருந்தது அவனது இதயத்துடிப்பு.


முகத்தில் நடிப்பை வர வழைக்கலாம், குரலில், உடல் மொழியில் வரவழைக்கலாம் ஆனால் இதயத்துடிப்பு..உயிரியல் ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால், ரத்த அழுத்தம் சில நேரங்களில் தாறு மாறாக ஆகும் போது, இதயத்துடிப்பும் இப்படி துடிக்கும், அவனுக்கு ஏன் இவ்வாறு துடிக்க வேண்டும், இது நடிப்பு... அவ்வளவே.


நிழல் வேறு, நிஜம் வேறு. இரண்டும் ஒன்றாகும் நேரம், இவள்?


அது அறியாப் பேதை அவனைக் கண் வாங்காது பார்க்க, அவனோ எப்போதோ நடப்புலகிற்கு வந்து ஆயிற்று. தன் கைகளை விட்டு நீங்காது இருக்கும் பாவையவளைக் கண்டவனுக்கு குரோதம் பொங்க,


"உனக்கு தேவைகள் இருந்தா..., இது அதுக்கு இடமில்லை. ஸ்டில், உனக்கு வேணும்ன்னா…அம் ரெடி" என்று அவளை ஒரு பார்வை பார்க்க, அவன் என்ன கூற வந்தான் என்று உணர்ந்தவளின் உடல் பற்றிக் கொண்டு எரிந்தது. எவ்வளவு தாழ்வாகத் தன்னை கூறிவிட்டான் என்று நினைக்கும் போதே, அவனது அணைப்பில் இருந்து துள்ளி எழுந்தாள்.


"யூ விஷ்" என்று கோபத்தில் சீற, அவன் விட்டால் தானே


"ஐ டூ! ஐ விஷ் ஈவன் மோர்" என்ற அவனது வாக்கியத்தில் பல்வேறு உட்பொருட்கள். அவள் பதில் கொடுக்கும் முன், ஆனந்த் அவர்கள் அருகே வந்து இருவரையும் பாராட்ட துவங்க, அதன் பின் அவளுக்கு அவனைப் பார்த்து, சண்டை போட முடியவில்லை.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷிம்லா மலைப்பகுதி


துருவ் மற்றும் நக்ஷத்திரா இருவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில் வரும் ஒரு பகுதியை ஷிம்லாவில் படம் பிடிக்க வந்து இருக்க, பாடல் காட்சியைப் படம் பிடிக்கும் முன், இருவருக்கும் கடைசி கட்ட ஒப்பனைகள் கொடுக்க பட்டு விட, நடன இயக்குனரின் உதவியாளர் நக்ஷத்திராவிடம் எம்மாதிரியான அசைவுகளை கொடுக்க வேண்டும் என்று அதனைச் செய்து காண்பித்து கொண்டு இருக்கும் போது தான் அது நிகழ்ந்தது.



நக்ஷத்திரா, பாடலுக்கு ஏற்ப கவுன் போன்ற உடையை அணிந்து கொண்டிருந்தாள். அது அவளது முட்டிக்கு சற்று கீழ் வரை இருந்தது. நக்ஷத்திரா அந்த நடன அசைவை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென காற்று சற்று பலமாக வீசயதால், அவளது கவுன் சற்று மேலே ஏற, துருவ் அதைக் கண்டான். அதற்குள் நக்ஷத்திரா சுதாரித்து, தன்னைச் சீர்படுத்தி கொண்டாள். ஒரு நொடியின், மூன்றாம் பாகத்திற்கும் குறைவான நேரத்தில் அவன், 'அதைக்' கண்டான்.


அதில் அவன் தன் கண்களை நம்பாது, மந்திரித்து விட்டார் போல், அவளை நோக்கி நடந்தான். தான் கண்டது உண்மையா என்று ஊர்ஜிதப் படுத்த அவனுக்கு ஓர் வேகம். அவன், அவனாக இல்லாத தருணம் அது. அதுவே அவர்கள் வாழ்வு தடம்புரள காரணம்.


கிட்டத்தட்ட 50 பேர் முன்,



"பளார்" என்ற ஒரு ஓசை!



ஆம்! நக்ஷத்திராவின் கைகள் அவன் கன்னத்தில் அழுந்தப் பதிந்தன.


அதை தொடர்ந்து


"சீ ! தூ!" என்று அவள் அவன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டாள்.


படப்பிடிப்பே ஸ்தம்பித்த நிலையில் இருக்க, துருவ், நக்ஷத்திரா இருவரும் இரு வேறு துருவங்கள் ஆகினர்.


முகத்தில் வழிந்த அவள் எச்சிலை துடைத்தவனுக்கு இந்த அவமானத்தைக் கண்டிப்பாக துடைத்து களைந்து விட்டு செல்ல இயலவில்லை. கோபம் என்பது ஒரு பேய், ஆட்கொண்டால் ஆட்கொண்டவனையும், அவனை சுற்றி இருப்போரையும் சும்மா விடாது.


அந்நிலையில் தான் அவன், கோபப் பேயால் முழுவதும் ஆட்கொள்ள பட, இனி நக்ஷத்திராவின் நிலை?


ஆவதும் பெண்ணாலே


அழிவதும் பெண்ணாலே என்பதில்


அவன் அவனாக ஆனது ஒரு பெண்ணால் தான்..


ஆனால் அவன் அழிவு?


அவனை ஆக்கியவள், அவனை அழிப்பாளா இல்லை அவனை மீண்டும் உயிர்ப்பிப்பாளா?


காலம் இயற்றும் இந்நாடகத்தில், காலமே பதில்!


நாம் பொறுத்திருப்போம்!
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 9


ஷிம்லா செல்லும் முன்


"நாளைக்கு ஷூட்டிங் இருக்கா?" என்று மீண்டும் ஆனந்திடம் விசாரித்து இருந்து இருப்பாள். இனி ஷிம்லா படப்பிடிப்பு மட்டும் தான், அதன் பின் துருவ் இருக்கும் திசைக்கே ஒரு பெரிய கும்பிடு என்று இருந்தவளிடம்,


இனியும் ஒரு நாள் படப்பிடிப்பு இருக்கிறது என்று சொல்லப்பட, அவள் துள்ளிக் குதித்தாள்.


"எஸ், நாளைக்கு முக்கியமான ஒரு சீன் ஷூட் செய்யணும், ஸோ ஷார்ப் 11 ஓ க்ளாக், மார்னிங்" என்று கூறிவிட்டு அலைபேசி அணைப்பை துண்டித்து விட்டான் ஆனந்த்.



"என்ன ஆச்சு, நாளைக்கு ஷூட்டிங் போகனுமா?" என்று விசாரித்த பார்வதியிடம் நக்ஷத்திரா



"ஆமா!" என்று சுருக்கமாக முடிக்க பார்க்க, அவரோ


"நீ ஏன் இன்னொரு படம் நடிக்க ஒத்துகிட்டே?" என்று வாகாய்ப் பிடித்து கொள்ள, நக்ஷத்திரா சற்று திணறி தான் போனாள்.


"அது..நான் லா காலேஜ் ஜாயின் பண்ண, அடுத்த வருஷம் ஆகிடும். அதுவரை கொஞ்சம் ஆக்டிங் ..அவ்வளவு தான்" என்று அந்த பேச்சை முடிக்க பார்த்தாள்.


அவளை ஊடுருவி பார்த்த பார்வதி,


"அந்த ஸ்கேன் கான்சர் இருக்கான்னு பார்க்க தானே" என்று கொடுக்குப் பிடி போட, நக்ஷத்திரா திணறி போனாள்.



"யார் சொன்னாங்க, அப்படி இல்ல" என்று சமாளிக்கப் பார்த்து தோற்று போனாள்.


"நான் அதிகம் படிச்சவ இல்ல, ஆனா முட்டாளும் இல்ல. " என்று அவளை உலுக்கி விட்டார்.


இதற்கு மேல் மறைக்க முடியாது என்று நக்ஷத்திரா உணர்ந்து கொண்டாள்.


"அது கான்சருக்குன்னு எப்படி தெரிஞ்சிது?" என்று வினவினாள்.


"ஸ்கேன்னுக்கு அன்னிக்கி நாம மட்டும் இருக்கலே, ஒரு சில கான்சர் பேஷண்ட்ஸும் இருந்தாங்க, பார்த்தே இல்லையா! அவங்கள பார்த்து தெரிஞ்சிகிட்டேன்" என்று கூறிவிட, நக்ஷத்திரா


"அம்மா! உங்களுக்கு பயம் வேணாம், நான் எப்படியாவது குணப்படுத்திவிடுவேன். நீங்க கவலை படாதீங்க" என்று அவரது கைகளைப் பற்றி கொண்டு உரைக்க


"என் கவலை உன்னை பத்தி மட்டுமே! நான் என்னோட கடைசி கால கட்டத்தில் இருக்கேன். உனக்கு கல்யாணம் செய்ஞ்சு பார்க்கணும். என் கடமை முடியல தாரா!" என்று அவர் உருக, நக்ஷத்திரா இன்று 'தாரா' என்ற சொல்லில் உருகி விட்டாள்.


"கல்யாணம் செஞ்சுக்கிட்டு..விடுங்க. இப்ப உங்க ஹெல்த் தான் முக்கியம் எனக்கு" என்று முடிவாக உரைக்க பார்வதியும் அவளிடம்


"வேணாம் நக்ஷத்திரா, நான் போகற கட்டை. போயிட்டு போறேன். நீ வாழனும். உனக்கு பிடிக்காத சினிமா தொழில் நீ செய்ய வேணாம்" என்று உறுதியாக அவரும் சொல்ல, நக்ஷத்திரா அவரிடம் வாதாடிச் சோர்வடைந்தாள்.



"ஏன் மா? ஆம்பளைங்க மேலே எனக்கு நம்பிக்கை இல்ல. உங்களுக்கு கான்சர் இல்லாம இருந்தாலும் இது தான் என் முடிவு. கல்யாணம் என்கிற அத்தியாயம் என் வாழ்க்கையில் கிடையாது. ஸோ ப்ளீஸ் விடுங்க" என்று அந்த வாக்குவாதத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு வெளியே சென்று விட்டாள்.


அடுத்த நாள், படப்பிடிப்பு தளம்.


எடுக்கப் பட வேண்டிய காட்சி, திருமணம் முடிந்து இருவருக்கும் முதலிரவு. நக்ஷத்திரா முகத்தில் எள்ளும் கொள்ளும். துருவ் முகத்தில் அவள் பால் அவன் கொண்ட குரோதம் நிறைவேறிய திருப்தி.


தயாரிப்பாளர் அன்று படப்பிடிப்பு தளத்திற்கு வந்து இருக்க, நேரே அவரிடம் சென்று


"இது என்னால முடியாது சார்! " என்று சொல்லி விட்டாள் நேரிடையாக.


"என்னமா இது நடிக்க வந்தா, இதெல்லாம் சகஜம். இழுத்து போர்த்திக்கிட்டு நடிக்க இது 1970 இல்ல. ஏன் நீ படமே பார்க்கிறது இல்லையா?" என்று அவர் படபடக்க, நக்ஷத்திரா


"இந்த சீன் என்னால் கண்டிப்பா முடியாது. அளவில்லாம போய் கிட்டு இருக்கு. ஹீரோ அராஜகம் அதிகமாகிக்கிட்டு இருக்கு. வேணும்னா டூப் போட்டு எடுத்துக்குங்க" என்று அவளும் தன் பிடியில் நிற்க, தயாரிப்பாளர் ராவ்,


"அதெல்லாம் முடியாது. நீ தான் நடிக்கணும். அதுக்கு தானே காசு வாங்கினே. காசு வாங்கும் போது ஈ ன்னு பல்லு இளிச்சுக்கிட்டு வாங்கறீங்க! இப்போ அது முடியாது..இது முடியாதுன்னா, வாங்கின பணத்தை திருப்பி கொடுத்திட்டு கிளம்பு" என்று வேறு ரீதியில் பேச்சுக்கள் செல்ல, ஆனந்த் மற்றும் துருவ் இதில் குறுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


"என்ன பிரச்சனை சார்!" என்று ஆனந்த் ஆரம்பிக்க, ராவ் அவனிடம் பொங்கி விட்டார்.


"யோவ்! செகண்ட் ஹீரோயினுக்கு உனக்கு வேற ஆளே கிடைக்கலையா? சரியான தொல்லைய பிடிச்சு வச்சு இருக்கே. துருவ் ஹீரோன்னா, அவர் கூட எத்தனை பொண்ணுங்க ஒரு சீனிலாவது நடிக்க இருக்காங்க. இவ என்னடான்னா, கண்ணகி பரம்பரை மாறி பேசறா! காசை விட்டு எறிஞ்சா, யார் வேணாலும் என்ன வேணாலும்…" என்ற ரீதியில் பேச்சு தொடர, நக்ஷத்திரா பொங்கிவிட்டாள்.



"என்ன சார் பேசறீங்க! உங்க வீட்டில் பெண்ணே இல்லையா..அவங்க கிட்டவும் இப்படி தான் பேசுவீங்களா? இந்த மாறி நடிக்க சொல்லுவீங்களா?" என்று சீற, ராவ் அவளை கிட்டத்தட்ட அடிக்கவே புறப்பட்டு விட்டார்.


துருவ் இடையே புகுந்து,


"நாம கேராவேன் போய் பேசலாமா? அண்ட் யூ! நீயும் வா" என்று அவளிடம் அதிகாரம் தூள் பறக்க, நக்ஷத்திரா வேறு வழி இன்றி அவர்கள் உடன் துருவ்வின் காரவான் சென்றாள்.


ராவ் அங்கேயும் அவள் மீது பாய்ந்தார். ஏற்கனவே, திரைக்கதையில் முதலில் கொடுக்கப்படாத காட்சிகள் வேறு, அதற்கு உண்டான செலவு, ஷிம்லா செல்லும் படப்பிடிப்பு செலவு, அதைத் தவிர அந்தப் பாடல், படம் பிடிக்க போகும் முறை வேறு என்று நிதிநிலைக் கூடிவிட்டது



அந்தப் பாடல் ரிவர்ஸ் கிரோனாலஜி(reverse chronology) முறையில் படமாக்கப் போகிறார்கள். அதாவது பாடலின் ஆரம்ப காட்சி சோகமான முடிவில் இருந்து, சந்தோஷமான ஆரம்பத்திற்கு செல்லும்.


துருவ் படத்தில், முதல் மனைவியை இழந்த சோகத்தில் இருந்து, பின்னோக்கி அவளை மணம் முடிக்கும் வரை செல்லும். எல்லாம் ஸ்லோ மோஷனில். படம் பிடிக்கும் போது, கல்யாணத்தில் இருந்து ஆரம்பிக்கும், அப்போது பாடல் ஒலிபரப்பு, பாடலின் கடைசி வரிகளில் ரீவைண்ட் முறையில் இருந்து ஆரம்பிக்கும். அந்த கால டேப் ரிகார்டாரில், கேசட்டை ரீவைண்ட் செய்வோமே, அது போல். பாடல் காட்சி முன்னேற அது, பாடல் வரிகளின் ஆரம்பத்தில் கொண்டு போய் முடியும்.



இதனை படத்தில் ஒளிபரப்பும் போது, பாடலின்

கடைசி காட்சியில் இருந்து ஆரம்பிப்பர். அதாவது ரீவைண்ட் முறையில். அப்போது பாடல் ஒலிபரப்பு, பாடல் முதல் வரியில் இருந்து ஆரம்பிக்கும். ஆங்கிலப் பாடல் காணொளி ஒன்றில் இதனை கையாண்டு இருக்கிறார்கள். அதில் இருந்து தான் இந்த யோசனை இவர்களுக்கு.


இந்த உதிரிக் காட்சிகளினால் படப்பிடிப்பு தினங்கள் வேறு சற்று அதிகமாகிறது. அதனால் ஏற்படும் டென்சன் வேறு ராவ்விற்கு. எல்லாம் சேர்ந்து நக்ஷத்திரா மீது காட்டினார்.


"முடிவா என்ன சொல்லறே? உனக்கு இஷ்டமில்லையா, பணத்தை எடுத்து வச்சிட்டு கிளம்பு. இத்தனை நாள் உன்னை வச்சு ஷூட்டிங் பண்ணின, ஷூட்டிங் சார்ஜஸும் கொடு" என்று மனம் ஒன்று இல்லாது போல் பேச, நக்ஷத்திரா அதிர்ச்சி அடைந்தாள். இருந்தாலும் கெத்தாக


"எதுக்கு நான் ஷூட்டிங் சார்ஜஸ் கொடுக்கணும். நீங்க ரொம்ப அநியாயமா பேசறீங்க" என்று அவளும் பொரிய, ராவ் ஒரே போடாக


"உனக்கு இங்கிலிபீசு படிக்க தெரியும்லே! போய் படி உன்னோட அக்ரீமெண்ட் பேப்பரை. இந்த மாறி விலகினால், நீ தான் ஷூட்டிங் சார்ஜஸ் கொடுக்கணும்னு இருக்கு. அதை மீறி முடியல்னு சொன்னா, கோர்ட் கேஸ் போடுவேன். அன்னகாவடி நீ! கோர்ட்டில் போய் காவடி எடு! யார்கிட்ட! நேத்து மொளைச்ச காளான்" என்று வார்த்தைகள் வரம்பு மீற, நக்ஷத்திரா காயமடைந்தாள். அவளிடம் பணம் இல்லை, ஆகையால் தானே இவர்கள் எல்லோரும் புகுந்து விளையாடுகின்றனர்.



எல்லாம் இந்த துருவ் செய்த சதி! சரியான சைக்கோ என்று அவனை வருத்தி எடுத்தவள், ஆனந்திடம்,


"5 மினிட்ஸ் இல் ரெடி ஆகறேன்" என்று சொல்ல, ராவ்


"இந்நேரம் ஷூட்டிங்கே முடிஞ்சு இருக்கும். இந்த பாரு ! சினிமாவில் நடிக்கணும்ன்னா, நடிப்பு எவ்வளவு முக்கியமோ அது மாறி அட்ஜஸ்ட்மெண்ட் முக்கியம். பொழைக்கற வழிய பாரு" என்று அவளை முறைத்து கொண்டே வெளியே சென்றார்.


நக்ஷத்திராவிற்கு ஒரே அவமானமாகிவிட்டது. அவளுக்குக் கடன் கொடுத்தோர், கடனைத் திருப்பி வசூலிக்கும் போது கூட இம்மாதிரி அவளிடம் பேசியதில்லை. ஈனப்பிறவி போல் அவளை, ராவ் நடத்திய விதம், இதற்கெல்லாம் மூல கர்த்தா, துருவ் என்பவன் தான்.


எல்லாம் செய்துவிட்டு நல்லவன் போல் ஒரு வேஷம், அவன் போட்டுக்கொண்டு இருக்கிறான். அவளை நோக்கிச் சொடக்கிட்டவன்,


"இதுக்கு என்ன ரகளை செஞ்சு பார்த்து..ஆர் யூ டன்?" என்று ஏளனமாக துருவ்வின் வார்த்தைகள் அவளைச் சீண்ட, அவளருகே இருக்கும் கண்ணாடி பாட்டிலை எடுத்து, அவன் மீது அடித்தால் என்ன என்று அவளுக்கு ஒரு நிமிடம் வெறியேறியது.


பார்வையால் சுட்டெரிக்க அவள் தபஸ்வி அல்ல, ஆனால் ஏதேனும் செய்தே தீர வேண்டும், இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உறுதி கொள்ள அவனை, அவன் கொண்ட திமிருடன் பார்த்தாள்.


அதில் அவன் திகைக்காது அசராது, இருக்கையில் இருந்து எழுந்தவன், அவள் அருகே


"கெட் ரெடி! ஹனி பன்ச்! அம் வெயிட்டிங்" என்றான் காதில் கிசுகிசுப்பாக, ஆனால் அவளுக்கு அது நாராசம். கண்களை மூடி அதை உள்வாங்கியவள், அவனை ஒரு தீப்பார்வைப் பார்க்க, அவனோ கிண்டலாக


"நான் இன்னும் எரியலே, ஸோ...." என்று கதவைக் காண்பித்தான்.


இரு இரு, உன்னை நான் வெல்வேன் என்று அவளும் கங்கணம் கட்டிக்கொண்டு, அவ்விடம் நீங்கினாள். கதவோரம் சென்றவளுக்கு ஒரு எண்ணம் பளிச்சிட அவனை பார்த்து ஒரு குரூரப் புன்னகைச் சிந்தினாள், அதில் அவன் புருவங்கள் நெரிந்து, அவன் சுதாரிப்பதற்குள் அது நடந்தது...



அவன் எதிர்பாராத நேரத்தில், கதவின் பக்கம் இருந்த, ஒரு மேஜை மீது ஆப்பிள் நறுக்க வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, இடது உள்ளங்கையில் ஒரே வெட்டு. ரத்தம் பீறிட நின்றவள் முகத்தில் ஒரு குரூரத் திருப்தி.


"ஹேய்…" என்ற அவனது கூக்குரலை அவள் சட்டை செய்யவில்லை. துருவ் சத்தியமாக இவள் இப்படி செய்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. தற்கொலைப் படை போல், இப்படி ஒரு முடிவு. ரத்தம் வழிய அவள் கை, வலிக்கவில்லையா அவளுக்கு?


சரியான சைக்கோ என்று அவளை திட்டியவன்,


"என்ன பண்ணி வச்சு இருக்கே! ஆர் யூ இன்சேன்! கிறுக்காடி உனக்கு?" என்று கத்தினான்.


அவசரமாக தன் கேராவேனில் இருக்கும் முதல் உதவி பெட்டியை எடுத்து அவளுக்கு மருந்து போட எத்தனிக்க, அவளோ அவன் கையில் இருந்து அதை பிடுங்கி தூர எறிந்தாள்.


"டோன்ட் யூ டேர்!" என்று தன் ஆள்காட்டி விரலை காட்டி எச்சரித்தவள், தான் நினைத்ததைச் சாதித்த வெறியில், அவ்விடம் நீங்கினாள், கம்பீரமாக ஒரு ராணி போல்.


அவனுக்குள் இருக்கும் மனிதத்தைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து விட்டுச் சென்றாள் என்று அவள் உணரவில்லை. வெறுப்பும் கோபமும் மிஞ்ச, அந்த முதல் உதவி பெட்டியை தூர எறிந்தான் துருவ், கேராவேன் தரையில் விழுந்திருந்த ரத்த சொட்டுக்களை வெறித்தபடி.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து வந்த நாட்கள், ஒளி வேகத்தில் பறந்தன. நக்ஷத்திராவிற்கு அன்று அவளே ஏற்படுத்தி கொண்ட காயத்தின் விளைவு, அன்றைய படப்பிடிப்பு ரத்தானது.


"எப்படி ஆச்சு?" என்று விசாரித்த ஆனந்திடம்


"ஆப்பிள் கட் பண்ணும் போது, கத்தி பட்டிடிச்சு" என்ற நல்ல பதில் அவள் கொடுக்க, ஆனந்த் விடாது



"அதான், கேராவான்ல இருக்கும் போது நல்ல தானே இருந்தே! அதுக்குள்ள எப்படி?" என்று கேட்க, நக்ஷத்திரா


"துருவ் கிட்ட கேளுங்க" என்று அவனைக் கை காட்டி விட்டு, மருத்துவமனைக்கு விரைந்தாள்.


ஆனந்த் துருவ்வைப் பார்க்க, அவனோ செல்லும் அவளை பார்வையால் எரித்தான். இவளை சும்மா விட கூடாது என்ற அவன் முடிவு மேலும் வலுப்பெற்றது.


காயம் சற்று ஆறிய பிறகு இன்று அந்த பாடலின் ஒரு பகுதி படம் பிடிக்க வந்து இருந்தாள். கையில் கட்டு இல்லாது, ஒரு பிளாஸ்திரி மட்டும் இருந்தது.


"பிளாஸ்திரி காமெரா ஆங்கிளில் விழாத மாறி எடுக்கணும்" என்று ஆனந்த் ஒளிப்பதிவாளரிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.


தமிழ் திரைப்பட விதிகள் படி, அதிகாலைப் பொழுதில் அவனை எழுப்பிவிடும் காதல் மனைவியாக,, புடவை கட்டி, தலையில் ஒரு துண்டுடன், நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு, கையில் காப்பி கோப்பையுடன் அவனை எழுப்பி விட, அவளை பிடித்து இழுக்க அவன் மீது விழ வேண்டும். இந்தக் காட்சி பிறகு, சமையல் அறையில் அவள் சமைத்து கொண்டிருக்கும் போது, பூனை அடி எடுத்து வைத்து, பின்புறமாக அவளை அணைத்து சில்மிஷங்கள் செய்ய வேண்டும்.


அவளுக்கு 2 காட்சிகளுமே அவஸ்தையாக தான் இருந்தது. அவனை கண் மண் தெரியாது வெறுக்கிறாள்,. அதில் அவன் அவளது காதல் கணவன், படத்தில். அவனது நெருக்கமும், நிழல் காதலும், ஸ்பரிசமும் அவளால் தாங்க முடியவில்லை.


கம்பளி பூச்சி இல் இருந்து, கரப்பான் பூச்சி வரை ஊறுவது போல் ஒரு உணர்வு. அதிலும் அந்த சமையல் அறை காட்சியில், அவன் அவள் இடை வளைத்து, கழுத்து வளைவில் அவன் மீசை உராய அவளைத் தீண்டும் காட்சியில் அவள் தன் முகபாவங்களை கிட்டத்தட்ட 10 முறைக்கு மேல் தவறாகக் காண்பித்தாள்.


நடிப்பு தான், அதில் தான் அவள் அவனது மனைவி. அவன் மீது அவளுக்கு இருந்த எரிச்சலில் ஒழுங்காக காதல் மனைவியாகத் தன்னைக் காண்பிக்க முடியவில்லை. 15 வது முறை இவள் டேக் வாங்க, அவனோ ஒரு குத்தலாக, இளாக்காரம் ததும்ப,


"என்ன என்கிட்ட மயங்கிடுவேன்னு பயமா இருக்கா?" என்று சீண்ட, அவள் ஆங்காரமாக


"மை ஃபுட்" என்று அவளும் பதிலடி கொடுக்க, அவனும் விடாது


"அப்படியா! நம்பிட்டேன். உன் கண்ணில் ஒரு பயம் தெரியுது, எனக்கு பெரிய மனசு" என்று தாழ்த்தி காண்பித்தான்.


"நான் குருடி இல்ல, புத்தி இல்லாதவளும் இல்ல. நீயெல்லாம் ஒரு ….சீ..ன்னை திட்ட இனி தான் கெட்ட வார்த்தை கண்டு பிடிக்கணும்" என்று அவனிடம் பொரிந்து விட்டு, ஆனந்திடம்



"ஷாட் ரெடி" என்று கூவ, அடுத்த முறை காட்சியைப் படமாக்க குழு தயாராயினர். ஆனந்த் அவளிடம்


"இது லாஸ்ட் ஷாட்ன்னு நம்பறேன்" என்று எரிச்சல் மொழிய கூறிவிட்டு தான் தயாரானான்.


காமெரா இயங்கும் முன், நக்ஷத்திரா கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள்.


'ஒரே ஒரு டைம், நக்ஷத்திரா. இது ஆக்டிங் தான். கமான், அந்த ஓநாய் மூஞ்சி பார்த்தா, ரோமான்ஸ்ஸா? வாந்தி தான் வரும். பட் வேற வழி இல்ல. அந்த ஹிந்தி ஹீரோ மூஞ்சிய இவன் மூஞ்சி மேலே ஓட்ட வை. இல்ல, " என்று அதற்கு மேல் நினைக்க விரும்பவில்லை அவள்.


அவன் அவளை பின்னால் இருந்து இடையை வளைத்து அணைக்க, காதலுடன் அவன் முகத்தைப் பற்றி, தன் நெற்றியை அவன் நெற்றி மீது முட்டி, மூக்கை அவன் மூக்குடன் உரசி ஒரு வழியாக அந்தக் காட்சியை நிறைவு செய்தாள். அவனா அவளை எளிதில் விடுவான்!


ஆனந்திடம் சென்று


"இது இன்னும் கொஞ்ச பெட்டரா வரணும் தோணுது" என்று எடுக்கபட்டக் காட்சியை அங்கே இருக்கும் திரையில் கண்டு சொல்ல, நாயக ராஜ்ஜியமான திரை உலகம் அவன் பேச்சை தவறாது கேட்க, இன்னும் 3 முறை அதை படம் பிடித்தனர்.


3 முறையும் நக்ஷத்திரா பொறுத்தவரை 'ஓநாய் மூஞ்சி மேலே அந்த ஹிந்தி ஹீரோ' முகத்தை ஒட்ட வைத்து நடித்தாளோ என்னவோ! அதனுடன் நிற்கவில்லையே, அவன். படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும் முன், அவளுக்கு ஓர் தகவல் அலைபேசியில் வர, அதைப் படித்து அதிர்ந்தாள்.


'துருவமான நடிக்கருக்கும் ஸ்டார் நாயகிக்கும்….' என்று ஆரம்பித்து இவர்களை இணைத்து ஒரு கிசுகிசு. கேவலமான முறையில் போடப்பட்டு இருந்தது, ஏனென்றால் அவளை ரஞ்சனுடனும் இணைத்து கிசுகிசு போட்டு, கிட்டத்தட்ட மலர் தாவும் வண்டு என்று குறிப்பிட்டு இருக்க, அவளுக்கு அலைபேசியை உடைத்துப் போட வேண்டும் என்ற கோபம் வந்தது.


தனியாக அதை மீண்டும் இவள் படிக்க, அவள் பின்னால் இருந்த துருவ்


"என்ன இப்போ கெட்ட வார்த்தை தேடி கண்டுபிடிச்சிட்டியா?" என்று கூற, அவள் வெகுண்டாள்



அவனை நேருக்கு நேர் பார்த்தவள்,


"உன்னோட அம்மா…." என்று நிறுத்திவிட்டு இன்னும் அவனை உற்று பார்த்து,



"அவங்களும் ஒரு பொண்ணு தானே! அவங்க தானே உன்னை 6 அடிக்கு மேலே வளர்த்து விட்டு இருக்காங்க!


போய் அவங்க கிட்ட இந்த மாறி பண்ணினேன்னு சொல்ல உனக்கு தில்லு இருக்கா? அப்போ உன்னை நினைச்சு பெருமை படுவாங்களா? அவங்க ஒரு பொண்ணா இருந்தா, நீ செஞ்ச வேலைக்கு செருப்பை கழட்டி அடிப்பாங்க" என்று காரம் குறையாத அழுத்தமான பதிலைக் கொடுக்க, துருவ் அடங்காது



"ஹேய்!" என்று சீறினான். அவளோ


"சும்மா வெட்டி சீனை போடாதே..போ போ..உனக்கு கம்பெனி கொடுக்க, உன்னை மாறியே கேடு கெட்டவ ஒருத்தி இருப்பா..அங்க போய் சீனை போடு" என்று அவன் எரிச்சலை அதிகப்படுத்தி விட்டு தான் வீடு சென்றாள்.


அங்கேயாவது நிம்மதி உண்டா! எடுத்தவுடன் ஒரு அழகான சிறிய பார்சலை கண்டாள். அவசர அவசரமாக அதை பிரித்து பார்த்தால், அதில் ஒரு மோதிரம். அதனுடன் ஒரு குறிப்பு


'லோட்ஸ் ஆப் லவ் அண்ட் கிஸ்ஸஸ்

  • யூர்ஸ் ரஞ்சன்' என்ற ஒரு செய்தி வேறு. அதனுடன் அவள் அழகை வர்ணித்து ஒரு கவிதை போல ஒன்று. மிகவும் அப்பட்டமாக அவள் அழகை பற்றி வர்ணித்து எழுதியது போல் இருந்தது.


அவ்வளவு தான் அவள், 'சந்திரமுகி' ஆக முழுவதும் மாறிவிட்டாள். ரஞ்சனை அழைத்து காட்டு கத்தல் கத்தும் முன், அவனே கூப்பிட்டான்.


"ஹேய் நக்ஷி!" என்ற வார்த்தைகளை மட்டும் தான் அவன் பேசினான். அதன் பின் பேசியது எல்லாம் நம் ராணி மங்கம்மா தான்.


"என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே. சீ! நீ கொஞ்சம் நல்லவன்னு நினைச்சேனே, யூ ஆர் அ ரோக், பொறுக்கி. உனக்கும் அவனுக்கும் என்னடா வித்தியாசம். ஒரு பொண்ணு சிரிச்சு பேசிட்டா, உடனே அவளை இப்படி தான் ஈஸியா மடக்கலாம்னு நினைப்பியா?


ஹவ் டேர் யூ! என் கூட பேசும் போது, என் மூஞ்சிய பார்த்து தானே பேசவே. இப்ப இப்படி! சீ! யூ ஆர் நோ லெஸ். ஜஸ்ட் கோ ***** யூர்செல்ப், ப்ள**** *********" என்று அவள் வார்தைகள் வரம்பு மீற, ரஞ்சனும் உஷ்ணமானான்.


"வாட் தி ****! என்னடி! நீ என்ன பெரிய இதுவா? போடி போ. ஓவரா பேசறே. நீ ஒன்னும் உலக அழகி இல்ல, ஓரளவு மனசில் இருக்கறத வெளிப்படையா பேசறவே. பட் உனக்கு ஒரு மேனியா, சைக்கிக் கண்டிஷன். உலகத்தில் இருக்கற ஆம்பளைங்க எல்லாம் உன் பின்னாடி தான் அலையாரங்கன்னு. யூ ஆர் ஒன் ******* மேட், கிரேசி வுமன். கெட் லாஸ்ட்" என்று அவனும் கத்த, ஒரே ரசாபாசம் ஆகிவிட்டது.


முடிவில் அவள் களைத்து போய் விட்டாள். மனதளவில், உடல் அளவில் எல்லாம் முடிந்து போய் விட்டால் நலம் என்ற எண்ணம் அவளுள் வியாபிக்க, சாப்பிட்டு விட்டு தனது அந்தக் கால பொக்கிஷங்களை தேடித் துழாவ ஆரம்பித்தாள். முடிவில் அதுவும் கிடைத்தது, ஒரு காவல் வீரன் பொம்மை அது, பழையது ஆனால் அவளுக்கு நெருக்கமான ஒன்று. ஒரு காலத்தில் அதை வைத்து கொண்டு தான் உறங்குவாள், மனதில் பயம் அதிகமாகும் போது, துக்கம் பீறிடும் போது. கடைசியாக அதனை வைத்துக் கொண்டு அவள் உறங்கியது, அவளது அன்னையின் மரணம் நிகழ்ந்த அன்று.


இன்று போல் ஞாபகம் இருக்கிறது, அவள் அன்னையின் பூத உடல் அவர்கள் இருந்த வீட்டில் வீற்றிருக்க, என்ன ஏது என்று புரியாது, அவள் தனது அன்னையை எழுப்ப முயன்றது.


"மா ! எழுந்திரு மா, பசிக்குது மா " என்று எழுப்பி விட முயன்றாள். ஆனால் அவர் எழவில்லை. எதுவும் புரியாது, பக்கத்து வீட்டில் இருப்போரை அழைக்க, யாரும் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை. ஏனென்றால் அவளது அன்னை, அவர்களைப் பொறுத்தவரை ஒழுக்கமற்றவர். முடிவில் ஒரு நல்லவர் அவர்கள் இருக்கும் வீட்டிற்கு வர, அவளது அன்னை மரித்து விட்டாள் என்று அவளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இறந்து விட்டார் என்றால் அவளுக்கு என்னவென்று புரியாத வயது அது.

"அப்படினா என்ன அங்கிள் ?" என்று வினவி இருப்பாள், 100 முறைக்கு மேல்.


"சாமி கிட்ட போனா, திரும்பி வர மாட்டாங்க பாப்பா !" என்று அவர் உரைத்துவிட்டு, பார்வதியை அழைத்து தேவையான வேலைகளைச் செய்ய சென்ற போது, அவளும் அவளது அன்னையின் மரித்த உடலும் மட்டுமே அந்த வீட்டில். ஒருசில மணிநேரம் என்றாலும், அவள் யாருமில்லாது பயந்து தான் போனாள் .


"சாம் ! சாம் , எனக்கு பயமா இருக்கு ! ப்ளீஸ் வா " என்று முட்டைக் கட்டிக் கொண்டு புலம்பி அழுது தள்ளிவிட்டாள். அப்போது அவளுக்கு துணை சாம் அளித்த அந்த காவல் வீரன் பொம்மை மட்டுமே.


"நான் இல்லேன்னா, இந்த காவல்காரன் உனக்கு துணையா இருப்பான்" என்று அவன் அதனைக் கொடுத்து இருந்தான். அன்றிரவு முதன்முறையாக தனியாகப் படுத்து உறங்கினாள், அந்த காவல் வீரன் பொம்மை உடன். அதன் பின் பார்வதி வந்தார், அவளை தன்னோடு அழைத்துச் சென்றார். சிலருக்குப் பிறவியிலேயே தைரியம் அதிகமாக இருக்கும், ஆனால் நக்ஷத்திராவிற்கு வாழ்வு, தைரியத்தை நிறைய அசந்தர்ப்பமான சூழ்நிலையில் கொடுத்தது.


தந்தை பெயர் அறியாதவள், தாய் ஒழுக்கமற்றவள், இவளுடன் பழகாதே என்ற அடைமொழிகள் அவளைத் துரத்த, ஒரு கட்டத்தில் அவளும் வெகுண்டு எழுந்தாள். இனி என்னை ஒரு வார்த்தை சொன்னால், நான் 10 வார்த்தை சொல்வேன் என்ற அவள் குணம் மாறியது. அது தவறு என்றால், அவளை அங்கனம் உருவாக்கிய சமூகம் பேரில் நிறைய தவறு இருக்கிறது. குற்றவாளியாக யாரும் பிறப்பதில்லை, உருவாக்கப் படுகிறார்கள் என்றால், திமிர் பிடித்தவளாக இவளை உருவாக்கியது இந்த சமூகம் தான். அவளது திமிர் தான் அவளை காக்கும் அரணாக நின்றது, நிற்கிறது, ஆனால் இனி …


அதே திமிர் அவளை அழிக்கும் என்றால் அவனையும் சேர்த்து அழிக்கும். ஏனென்றால் நெருப்பிற்கு ஒரு குணம் உண்டு, தன் அருகில் இருக்கும் எல்லாவற்றையும் சேர்த்து அழிக்கும் தன்மை, அவள் அக்கினி குமாரி!


எத்தனை நேரம் அந்த காவல் கார பொம்மையை அணைத்துக் கொண்டு, உட்கார்ந்தபடியே தூங்கினாள் என்று அறியவில்லை. நேரம் செல்ல அவளும் விழித்தாள். கடந்தவை, கடந்தவையே என்று மனதுள் உருப்போட்டு கொண்டவள், இனி நடப்பவை எல்லாம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்று எண்ணியபடி தனது வேலைகளைத் தொடர்ந்தாள்.



ஷிம்லாவும் சென்றாள், பார்வதியுடன். பார்வதியின் அறுவை சிகிச்சை அவளது இந்த படம் முடிந்த பின் தான், அவர்



'நான் மெட்ராசை விட்டு எங்கையும் போனதில்லை. இப்ப உன் புண்யத்தில் ஷிம்லா பார்க்க ஒரு சான்ஸ். என்னை கூட்டி கிட்டு போ' என்று சிறுப்பிள்ளை போல் ஒரு பிடிவாதம்.


நக்ஷத்திராவிற்கு வேறு வழி தெரியவில்லை. அவரது ஆயுட்காலம் அறியாள், ஆனால் இருக்கும் வரை அவரை மகிழ்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டாள். தன் தாயை விட, இவரிடம் தான் அதிகம் இருந்து இருக்கிறாள். நக்ஷத்திரா என்ற மனுஷி, இவரிடம் இருந்து தான் உருவானாள். ஆகையால் ஒன்றும் கூறாது, தன் பணத்தில் இருந்து அவருக்கு விமான டிக்கெட் எடுத்து அவருடன் சென்றாள்.


நல்லவேளை அவளுக்கும், துருவ்விற்கும் வெவ்வேறு விமானத்தில் பயணம். ஷிம்லா வந்த அடுத்த நாள் படப்பிடிப்பு. முதலில் அவளுக்கு கொடுக்கப்பட்ட உடையில் இருந்து பிரச்சனை ஆரம்பித்தது.


"என்ன இது! இவ்வளவு ட்ரான்ஸ்பரென்ட் ட்ரெஸ், அதுவும் வெள்ளை கலர். அண்ட் மழை சீன் வேற. வெள்ளைக்கும், மழைக்கும் தமிழ் பட ஹீரோயினுக்கும் என்ன சம்பந்தம் ?" என்று ஆனந்தைச் சாட ஆரம்பிக்க, ஆனந்த் ஏற்கனவே அவள் மீது இருந்த கடுப்பில்,


"பாரு நக்ஷத்திரா ! சும்மா கத்திக்கிட்டே இருக்காதே ! இதான் காஸ்ட்யூம் , போட்டுக்கிட்டு வா ! இல்ல, நடையை கட்டு, ப்ரட்யூசர் கிட்ட பேசிக்கே" என்று எகிற , துருவ்


"ரிலாக்ஸ் ஆனந்த் ! இந்த வெதருக்கு மழை சீன் வேண்டாம் , வி வில் பால் சிக்" என்று பெரிய நல்லவன் போல் அவ்விடம் காட்சி அளிக்க, நக்ஷத்திரா வெளிப்படையாக அவனிடம் தனிமையில்,


"சாத்தான் வேதம் ஒதுது" என்று சீற, அவனும் விடாது,



"பரவாயில்லை, இந்த குட்டி சாத்தானுக்கு இந்த பெரிய சாத்தானை நல்லாவே அடையாளம் தெரியுது , குட் ஜாப் " என்று மூக்கறுத்தான்.


இப்படி சுபமாக, சண்டை சச்சரவுடன் அவர்கள் படப்பிடிப்பு ஆரம்பிக்க, படப்பிடிப்பு தளத்தில் அவள் உடை அணிந்து அந்த பாடல் காட்சியில் வரும் வரிகளை 'ரிவேர்ஸ்' முறையில் மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள். அதாவது 'காதல்' என்ற வார்த்தையை அவள் 'ல்தகா' என்று படப்பிடிப்பில் சொல்ல வேண்டும். அதனை படத்தில் ரீவைண்ட் முறையில் ஒளிபரப்பும் போது காதல் என்ற வார்த்தை பிரகாரம் அவள் வாயசைப்பு இருக்கும். ஒரு வார்த்தை என்றால் பரவாயில்லை, ஆனால் அவளுக்கு 2 வாக்கியங்கள் இருக்க, அதை மனப்பாடம் அவள் செய்து கொண்டிருக்க, அவன் அதைப் பார்த்து
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மக் அடிக்கற மக்கு பூச்சி" என்று முணுமுணுத்தான். இவன் நினைப்பது போல் இது லேசுப்பட்ட விஷயம் இல்லை. அவளுக்கு வார்த்தைகளை மாற்றி உச்சரிக்க வேண்டும், அவனுடன் நடனமும் ஆட வேண்டும். இரண்டையும் சேர்த்து செய்ய வேண்டும். பொதுவாக பெண்களின் மூளை பல வேலைகளை ஒரே நேரத்தில் திறம்பட செய்யும் திறமை கொண்டது, ஆனால் ஆண்களால் அவ்வாறு முடியாது. ஒரு நேரத்தில் ஒரே வேலை மட்டுமே அவர்களால் செய்ய முடியும்.


நக்ஷத்திரா இயல்பில் புத்திசாலி என்பதால் அவளுக்கு சற்று சுலபம். அவன் அவள் அருகே வர, பார்வதி படத்தின் நாயகன் என்ற முறையில் எழுந்து நிற்க, நக்ஷத்திரா


"இது ஒன்னும் 1970 இல்ல, ஹீரோ வந்தா எழுந்து நிக்க " என்று அவனை இருக்கும் போதே அவரிடம் கத்த, துருவ் எவ்வித உணர்வும் கொடுக்காது,


"எப்படி இருக்கீங்க ஆன்டி ! உங்க பொண்ணுக்கு காஷ்மீரி சில்லி ரொம்ப பிடிக்குமா ! எப்பவும் சில்லியா பேசறா " என்று அவளை மறைமுகமாகத் போட்டுத்தாக்க, பார்வதி



"சும்மா இரு நக்ஷத்திரா ! தப்பா எடுத்துக்காதீங்க தம்பி ! அவ கொஞ்சம் இப்படி தான். நான் புத்தி சொல்லி வைக்கறேன்" என்று நக்ஷத்திராவிற்கு ஷொட்டுக்கள் விழ, அவனோ விஷமப் புன்னகை பூத்து நின்றான்.


அதன் பின் காட்சிக்கு அவர்கள் தயாராக, முதலில் பிங்க் நிற உடையில் அவள் இருந்தாள், அதன் பின் தான் வெள்ளை நிற உடை. அந்த பாழாய்ப் போன உடை, அப்போது வீசிய காற்று, அவன் வாங்கிய அறை, அவளுடைய கோபம், அவன் பெற்ற அவமானம் , இருவரின் வஞ்சம் கொண்ட நெஞ்சம், ஆனந்த் கத்திய கத்து, ராவ் அவளை பிடித்து சரமாரி திட்டியது, பார்வதியின் கெஞ்சல் என்று பல விஷயங்கள் அரங்கேற, மொத்தத்தில் அன்று படப்பிடிப்பு நடக்கவில்லை. அது மட்டுமா, அவள் அதன் பின் எந்த ஒரு படத்திலும் நடிக்கவே செல்லவில்லை.


*************************

சுமார் 6 மாதங்கள் கழித்து, நக்ஷத்திரா அலைபேசியில் பார்வதியிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.


"இன்னிக்கி ரத்னா அக்கா உங்களுக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு வருவாங்க மா ! நான் ...." என்று ஒரு பெருமூச்செறிந்தவள்,


"ஒரு சின்ன வேலை, காலையில் உங்களை பார்க்க வரேன்" என்று சொல்லிவிட்டு , கண்ணாடி முன் நின்றாள். தான் செய்யப்போகும் காரியம் அவளுக்கு தெரியும், வேறு வழியில்லை. பார்வதியைக் காப்பாற்ற வேண்டும், அதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வாள். அவரின் பால் அவளுக்கு பாசம், கடமை, நன்றி என்று பல்வேறு உனர்வுகள் இருக்கிறது, அவர் தான் முக்கியம் அவளுக்கு.


ஒரு சிகப்பு நிற ஜார்ஜெட் புடவை அணிந்து கொண்டு தனக்குப் பிடிக்காத ஒப்பனையைச் செய்து கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள். ஆட்டோ பிடித்து அவள் சேர வேண்டிய பெரிய பங்களா எதிரில் நின்றாள். இன்னும் 10 அடிகள், அவள் வாழ்வின் தடம் மாறி விடும், அதற்கு தயாரா என்று அவள் இன்னும் யோசிக்க, பார்வதியின் முகம் அவள் கண்ணுக்குள் வந்தது


"உங்களுக்காக மா " என்று முணுமுணுத்துவிட்டு முன்னேற, அவள் முன் ஒரு கருப்பு நிற ஃபெராரி சீறிப் பாய்ந்து நின்றது . அதன் பின்…......


நக்ஷத்திரா ஒரு அறையில் தன்னை மறந்து துயில் கொண்டு இருக்க, அறைக்கதவு பலமாக தட்டப்பட்டது. திடீரென வந்த முழிப்பில் அவர் அதிர, கதவு அவள் திறப்பதற்குக் காத்திராமல் தானாகவே திறக்க , அவள் முன் பிரம்ம ராட்சச உருவம் ஒன்று.


"இந்த நட்சத்திரத்துக்கு , இனி இந்த வானம் தான் வீடு" என்று கூறியபடி அவளை ஏந்திக் கொண்டது.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 10

சமையல் அறையில் பாலைக் காய்ச்சிக் கொண்டு இருந்தாள், நக்ஷத்திரா. பால் கொதித்து கொண்டு இருப்பது போல், அவள் மனமும்.

எவ்வளவு தைரியம், தெனாவெட்டு அவனுக்கு, அவள் அறைக்குள் நுழைந்து அவளை தூக்கிக்கொண்டு சென்று இருக்கிறான். அவன், அவளைத் தூக்கும் போது தான், அவள் தன் அதிர்வில் இருந்து மீண்டாள். துள்ளிக் குதிக்க, அவன் அவளை கீழே விட்டு,

"கால் உடைஞ்சாலும், நீ என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. நீ, இனி இங்க தான். இளஞ்சூட்டில் கொஞ்சம் பால் எடுத்திட்டு, ஒழுங்கா நீயே மேலே வா" என்று அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு அவன் மேலே இருக்கும் தன் அறைக்கு சென்று விட்டான்.

இளஞ்சூட்டில் பாலாம், ப்ள** ஹெல்! அதுல பேதி மாத்திரை கலக்கறேன். நீ நைட் முழுக்க டாய்லெட் தாண்டி" என்று எதற்கும் இருக்கட்டும் என்று இங்கே வரும்முன் வாங்கிக் கொண்டு வந்து இருந்த பேதி மாத்திரை டப்பாவை எடுத்து கொண்டு சமையல் அறைக்குச் சென்றாள்.


பாலில் 2 பேதி மாத்திரைகள் கலக்க வேண்டுமா இல்லை ஒன்றா என்று பட்டிமன்றம் நடத்திவள் முடிவாக 2 மாத்திரைகள் கலந்து எடுத்து கொண்டு அவனது அறைக்குச் சென்றாள். உடை மாற்றிக் கொண்டு இருந்தவன், அவள் கதவை தட்டியதும், ரிமோட் கொண்டு திறந்து விட, முக்கால் உடை மாற்றலில் இருந்தவனை கண்டவள்

"சீ ! " என்று திரும்பி கொண்டு, கண்ணை மூடிக் கொண்டாள். அவன் அசராது, அவள் முன் வந்து நின்றான். தன் முன் அவன் நிற்கிறான் என்று உணர்ந்தவள், அரைக்கண் திறந்து அவனை பார்த்தாள்.
சட்டை இல்லாது, வெறும் ஷாட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு அவன் இருக்க ,

"உன்கிட்ட சட்டை வாங்க பணம் இல்லியா?" என்று எப்போதும் போல் துடுக்குத்தனமாக கேட்க, அவன் அதை கண்டுகொள்ளாது, அவள் கையில் இருக்கும் பாலை எடுத்து அவளுக்குப் புகட்ட எத்தனிக்க, அவள் உடனே அவன் கையை பிடித்து தடுத்து,

"பால் ஸ்மெல் பண்ணினா எனக்கு வாந்தி வரும்" என்று கூறிவிட்டு தன் கையை அவன் கையில் இருந்து எடுக்க, அவன்

"ஓஹோ " என்று கூறிவிட்டு, அவள் எதிர்பாராத தருணத்தில் அவளது மூக்கை பிடித்து, பாலை கொஞ்சம் புகட்டி விட்டான்.

அவள் சற்று மூச்சு திணற, அவன் தன் பிடியை விட்டான். இருமியவள்
"அறிவு இருக்காடா உனக்கு ! என்ன தைரியம் இப்படி செய்ய? உன் கூட இருக்கேங்கறதுக்கு நான் ஒன்னும் உன் அடிமை இல்லை. நமக்குள்ள ஒப்பந்தம் இருக்கு! அவ்வளவு தான்" என்று சீற,

"எவ்வளவு பேதி மாத்திரை போட்டே ?" என்று அவளிடம் விபரம் கேட்க, அவள் முகம் வெளுத்தது.

"அன்னிக்கி ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில், நீ ஸ்பாட் பாய் கிட்ட கேட்டு வாங்கி, ரசிச்சு ரசிச்சு பால் குடிச்சே. நான் முட்டாள் இல்ல, நீ ஆளும் வளரலே அறிவும் வளரலே" என்று அவளைச் சிறுமைப்படுத்தினான்.

"ஹேய் …" என்று ஒற்றை விரலை அவள் நீட்டிப் பேச, அவன் அதைப் பிடித்து மடக்கினான்.

"இங்க உனக்கு என்ன நடந்தாலும் நான் அதுக்கு பொறுப்பு இல்ல, அது போல் எனக்கு ஏதாச்சும் நடந்தா நீ தான் பொறுப்பு ! டீலிங் மறந்து போச்சா?" என்று அவளை விடாது கொக்கிப் பிடி போட்டு, ஒன்றும் பேச முடியாது ஆக்கினான்.

"பேதி மாத்திரைக்கு பதிலா குங்கும பூ போடு நெஸ்ட் டைம் . வாங்கி வைக்க சொல்லறேன்" என்று எதற்கு சொன்னான் என்று அவள் உணர்ந்து

"தட்ஸ் இட் ! திஸ் இஸ் தி லிமிட் " என்று கத்த துவங்கும் போது, அவளுக்கு உடலில் என்னவோ செய்ய, அவனை கேட்காது அவனது கழிப்பறைக்கு ஓடினாள்.




ஒரு முறை வெளியே வந்து, மறுபடியும் கழிப்பறை உள்ளே சென்றாள். அடுத்த முறை வெளியே வந்தவளுக்கு அவன் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் ஒரு மாத்திரை, எடுத்து கொண்டு வந்து கொடுத்தான். அவ்ளோ சோர்வாகி அவனை பார்க்க,

"விஷம் இல்ல" என்று கத்தரித்தது ஒரு பதில்,

"ஒரு மண்ணும் வேண்டாம்" என்று அவள் கொந்தளிக்க, அவன் அவளை வெறுமையாக பார்த்து

"அட்மிட் ஆவே ! யார் கீமோக்கு போவாங்க ! உன்னை நம்பி இருக்கறவங்களை சொல்லணும்" என்று கூறிவிட்டு, அந்த மாத்திரையை டேபிளில் வைக்க, அவள் சற்று நிதானம் அடைந்து அதனை எடுத்து உண்டாள்.



"யு ஆர் வெல்கம்" என்று அவன் கூறியபோது தான் தான் அவனுக்கு நன்றி உரைக்கவில்லை என்று உணர்ந்து

"தேங்க்ஸ்" என்று மொழிந்தாள்.

அதன் பின் அவள் தனது அறைக்குச் செல்ல முயல, அவனது அறைக் கதவை அவளால் திறக்க முடியவில்லை.

"அதுக்கு ரிமோட் வேணும்" என்று சாவாகாசமாக கூறிவிட்டு, தனது படுக்கையில் சாய்ந்து கொண்டு அலைபேசியை நோண்ட, எரிச்சல் அடைந்தவள்

"அப்போ ரிமோட் யூஸ் பண்ணி திற" என்று கூற, துருவ்

"என் கூட இருக்கணும்னு தான் டீல் !" என்று சொல்லிவிட்டான்.

"வாட் !" என்று நக்ஷத்திரா படபடக்க ,

"உனக்கு காதில் விழுந்தாச்சு" என்று இது தான் இவ்வளவு தான் என்று படுத்துக்கொண்டான்.

"கிவ் தி டேம் ரிமோட்" என்று கத்த, அவன் அசட்டையாக ரிமோட்டை படுக்கையில் போட்டான்.

ஆனால் அந்தோ பரிதாபம் அது வேலை செய்யாது போக, நக்ஷத்திரா அத திறந்து பார்க்க, அதில் பேட்டரி இருக்கவில்லை.

"என்ன இது ? பேட்டரி எங்க?" என்று அவள் அவனிடம் எகிற, அவனோ
"பேட்டரி தீர்ந்து போச்சு ! ஊப்ஸ் சாரி" என்று போலியாக மன்னிப்பு வேண்ட, அவள் அவனைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.

"ஏன் இப்படி பண்ணறே? உனக்கு என்ன தீங்கு செஞ்சேன்" என்று கத்தி, கடைசியில் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அவன் கடுமையாக

"என்ன செஞ்சேன்னு உனக்கு தெரியும் ! இப்ப அதோட பலனை அனுபவிக்கறே ! வேண்டாம்னா போ ! ஆனா அப்படி போனா, என்ன ஆகும்னு உனக்கு தெரியும்" என்று மிரட்ட, நக்ஷத்திரா இயலாமையில் அழுதாள். பணம் தான் ஒவ்வொருவர் வாழ்வை நிச்சயிக்கிறது. அது இல்லாது இருந்தால், உயிர்வாழ தகுதியில்லை என்று அவள் வருந்தினாள். ஏன் இதற்கு ஒத்துக்கொன்டோம் என்று அழுதாள். தன்மானம் எங்கோ காற்றில் பறக்க, அவனது இந்த பழிவாங்கல் படலம் என்று முடியுமோ என்று அஞ்சினாள்.

அவளுக்கு உடல் ரீதியாக எந்த வித சேதாரமும் இல்லை, ஆனால் இவனது நடவடிக்கையில் அம்மாதிரி ஏதேனும் நடந்தால், அவள் ...எடுக்கும் முடிவுகள் விபரீதமாக இருக்கும். ஒரே அறையில் அவளது பிரிய எதிரியுடன், அதுவும் இரவு நேரம் வேறு.

இன்று அவனா, தானா பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டுவிட்டாள். உறங்காது அங்கே இருந்த ஒரு சோபாவில் நெடு நேரம் உட்கார்ந்து முழித்திருந்தாள். ஆனால் அவனோ நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தான். ஒரு கட்டத்தில் அவளும் உறங்கி விட்டாள், சோபாவிலேயே.

ஆனால் காலை நெற்றியில் மென் முத்தங்கள் பெற்றுக் கொண்டு அவள் விழித்தாள்.

"குட் மார்னிங் ஹனி பன்ச்" என்ற கிசுகிசுப்பான குரல் அவள் காதில், அவன் உதடு உரச ஒலிக்க, அவளுக்குத் திடுமென்று ஒரு முழிப்பு. ஆனால் அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அவனது பலமான கைகள், இரும்புச் சங்கிலியைப் போல் அவளைச் சுற்றிப் பிணைத்திருந்தன. பலம் என்றால் யானை பலம் என்பார்களே, அது தான். யானையின் தும்பிக்கை ஒரு ஆளை சுற்றி வளைத்தால் எப்படி இருக்குமோ, அவ்வாறு இருந்தது.




அவளால் துளியும் நகர முடியவில்லை. ஆனால் இப்போதே அவளுக்கு அவனை நீங்க வேண்டும். அதற்கான முயற்சிகள் எல்லாம் தவிடுபொடியாக,

"நல்ல தூங்கினியா?" என்ற கேள்வி வேறு அவனிடம் இருந்து.

"என்னை விடு ! என்ன இது !" என்று கத்திக் கூப்பாடு போட, அவன்

"என்ன எல்லாத்துக்கும் இப்படி ஹை டெசிபல் தான் ! என் காது கிழியுது" என்று அவன் அதட்ட, அவள் மேலும் கத்தினாள். அவள் வாயை அடக்க அவனுக்கு ஒரே வழி தான் இருந்தது. அதை அவன் செய்ய, அவளுக்கு வாந்தி வருவது போல் இருந்தது.

அவளது உடல் மொழியை புரிந்து கொண்டவன்,

"நெஸ்ட் டைம் கத்தும் போது ! ப்ரஷ் பண்ணிட்டு கத்து!" என்று அவளை நீங்கிவிட்டுச் சொல்ல, அவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு விட்டு

"வாட் தி ஹெல் யு திங்க் ! ஹவ் டேர் யு ?" என்று கையை உயர்த்த, அவன், அவளது கையை பிடித்து, திருகி மடக்கினான்.

"இது ஷிம்லா இல்ல ! மை ஹோம் ! என்னோட கோட்டை இது ! இங்க என்னால் உன்னை …." என்று மேலும் எதுவும் சொல்லாது,

"நான் இனி சொல்ல மாட்டேன் ! இது லாஸ்ட் வார்னிங் ! மீறினே !" என்று காட்டம் குறையாது அவனும் கத்த,
அவள் விடாது,


"என்னடா செய்வே !" என்று தன் கோபம் குறையாது சீற, அவன் அவளைப் பார்த்து ஒரு எகத்தாள சிரிப்பு சிரித்து,

"நீ முட்டாளா இல்ல அம்னீசியா பேஷண்டா ?" என்று மட்டும் கேட்டான். அதில் அவளை சர்வமும் ஒடுங்கியது. ஏனென்றால் ஒரு வாரம் முன் ஒருமுறை அவனை எதிர்த்து பேச, அவன் ஒன்றும் கூறாது ஒரு அலைபேசி அழைப்பை விடுத்தான். அதன் பின் அவளுக்கு ஒரு அழைப்பு வர, அவள் நேரே மருத்துவமனை சென்றாள், பார்வதிக்கு என்ன ஆயிற்றோ என்று.

அவரை அவரது அறையில் காணாது இவள் துடித்து போய் விட்டாள். அங்கே கேட்டால் யாரும் அவளுக்கு ஒழுங்காகப் பதில் சொல்லாது போக, வேறு வழி இன்றி அவனை அழைத்தாள்

"என்ன பண்ணினே நீ ! சொல்லுடா என் அம்மாவை என்ன பண்ணினே ?" என்று அழுகையும் கோபமாக அவள் கத்த,

"வீட்டுக்கு வா !" என்ற மறுமொழி தான் கிடைத்தது.

"நீ என் கேள்விக்கு பதில் சொல்லு" என்று அவள் விடாது கேட்க, அவன் அழைப்பைத் துண்டித்தான். அதன் பின் வேறுவழி இல்லாது அவள் அவன் வீட்டிற்கு வந்தாள்.

"சொன்ன பேச்சை கேக்க பழகு ! இல்லே" என்றும் அவன் மிரட்டல் தொடர

"யு ஆர் எ டெமோன் ! சாத்தான் ! உனக்கு நல்ல சாவே வராது " என்று சபித்தாள்.

"நான் செத்து போகும் முன், நீ சொல்லற மாறி ஆக முயற்சி பண்ணறேன்" என்று அவனது அகங்காரம் குறையாது உரைத்தான்.


அடுத்த நாள் அவளிடம் ஒரு பெரிய மருத்துவமனையின் முகவரியை கொடுத்து,

"இன்னியிலிருந்து உன்னோட அம்மாக்கு இங்க தான் ட்ரீட்மெண்ட்" என்று முடித்துக்கொண்டான். அங்கே அவள் சென்ற போது, அந்த மருத்துவமனையின் சிறப்புகளைப் பார்த்து அசந்து போய் விட்டாள். புற்று நோய்க்காகவே உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவமனை அது.

அதனைப் பற்றி கேள்வி பட்டு இருக்கிறாள், ஆனால் அங்கே செல்ல பண வசதி அதிகம் வேண்டும், அவளுக்கு அது இல்லாத காரணம், அது எட்டா கனியாகிவிட, எப்படி பார்வதியை காப்பாற்றுவது என்று சோர்வடைந்தாள். ஏனென்றால் அந்த மருத்துவமனையில் சில சமயம் வெளிநாட்டில் இருந்து சிறந்த புற்றுநோய் மருத்துவர்கள் பணிபுரிவார்கள். பார்வதிக்கு இன்று அப்படி பட்ட ஒரு அயல்நாட்டு மருத்துவரிடம் தான் சிகிச்சை.

மருத்துவர் மிகவும் நம்பிக்கையாக இருந்தார். இருந்தாலும்,

"அவங்க இதயம் வலுவா இருந்தா, அவங்க குணம் ஆகிடுவாங்க " என்று அவளிடம் தனியாக சொன்னார். அதில் அவளுக்கு பயமும் இருந்தது, அதே நேரம் அந்த மருத்துவர் மீது நம்பிக்கையும் இருந்தது. வீடு வந்தவள் அவனிடம் எப்படி நன்றி தெரிவிப்பது என்று தயங்கித் தயங்கி,

"தேங்க்ஸ் " என்ற 5 எழுத்துக்களை சொல்ல பெரும்பாடு பட்டாள். அவன் உணர்வற்று அவளைப் பார்க்க, அவள் இதையும் சொன்னாள்.

"பட், நீ என்னிக்குமே எனக்கு வில்லன் தான்" என்று சொன்ன பிறகு தான் அவளுக்கு நிம்மதி.

"ரொம்ப லேட்டா கண்டு பிடிச்சிட்டே " என்று எகத்தாளமாகக் கூறியவன் அவளை நெருங்கினான். அதில் அவள் பீதி அடைந்து கால்கள் பின்னால் எடுத்து வைக்க, ஒருவழியாக அவள் சுவற்றுக்கும், அவனுக்கும் நடுவே கைதானாள்.

ஒரு கைங்களை சுவற்றில் வைத்தவன், அவள் முகம் நோக்கி குனிந்து, துடிக்கும் இதழ்களை நெருங்கினான், தன் இதழ்களால். அதில் அவள் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். அவளைத் தன்னுடையவளாக ஆக்க அவனுக்கு ஒரு நொடி போதும். ஆனால் அவன் அதைத் தான் விரும்புகிறானா ! அவன் ஏன் இப்படி செய்தான், ஏன் இப்படி செய்கிறான் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அறிவான். அவள் தன்னை எல்லா விதத்திலும் பாதிக்கிறாள். இந்த பாதிப்பு நல்லதா கெட்டதா என்றும் அறியான். ஆனால் அவனுக்கு அது வேண்டும், அதை மட்டும் அறிவான்.

"நான் வில்லனா மட்டும் இருக்க ஆசைப்படறேன், என்னை வில்லாதி வில்லனா ஆக்காதே" என்று அவள் இதழ் மீது அவனது வெம்மையான மூச்சு காற்று படுமாறு உரைத்தவன், அவள் கண்கள் திறக்கும் வரை காத்திருந்து , அதில் ஒரு பயத்தைக் கண்டவன்

"உனக்கு எதிரி உன் வாய் தான் ! அன்ட் ஐ லவ் யூர் எனிமி" என்று அவள் இதழ் தீண்டி தான் அவளை விடுதலை செய்தான்.

அவனது முத்த அத்துமீறல்கள் நினைத்தால், அவளுக்கு பற்றி கொண்டு வருகிறது. அந்தக் கோபத்தில் அவள் பாலை பொங்க விட போக, பின்னால் இருந்து ஒரு கரம் அடுப்பை நிறுத்தியது.


அவன் தான், அவள் பின்னால் நின்று கொண்டு அவள் மீது பட்டும் படராதும் நின்று கொண்டிருக்கிறான். அவன் மூச்சு காற்று அவள் கழுத்து வளைவில் சன்னமாகப் பட்டுக் கொண்டிருக்க, அவளோ திரும்பாது நின்றாள். அவனது இந்த நெருக்கத்தை வெறுக்கிறாள். ஏதோ அவளை கட்டியவன் போல் அல்லவோ உரிமை எடுக்கிறான், கோபப்படுகிறான், அவனுடையவள் போல் அல்லவா அவளிடம் நடக்கிறான், என்ன தான் நினைக்கிறான் என்று அவளுக்கும் புரியவில்லை


அசையாது அவள் நிற்க, அவன்


"காபி பண்ண இந்த சிலைக்கு உயிர் வருமா?" என்றான் விளையாட்டாக.

"கொஞ்சம் தள்ளி நின்னா, காபி கிடைக்கும்" என்று அவனை தன்னிடம் இருந்து அப்புறப்படுத்த, அவனோ அவ்விடம் நீங்காது சட்டமாக சமையல் மேடையில் உட்கார்ந்து கொண்டான்.

வார இறுதியில் அவன் வீட்டில் வேலை செய்வபர்கள் வர மாட்டார்கள். கேட்டதற்கு,


"உனக்கு மட்டும் தான் வீகெண்டா?" என்று சொல்லிவிட்டான். அவனது இந்த பரிணாமம் அவளுக்குப் புதிது. மற்றவர்களைப் பற்றி, முக்கியமாக தன் கீழ், தன்னுடன் வேலை செய்பவர்கள் பற்றி அவன் இப்படியும் நினைக்கிறானா என்று அவள் சற்று அதிர்ச்சி அடைந்தாள்.

ஆக வார இறுதியில் அவள் தான் சமையல், அவளை அவன் அதற்கு வற்புறுத்தியது இல்லை. அவளுக்குச் சோம்பி இருக்க பிடிப்பதில்லை. பொழுது போகாத நேரங்களில் தோட்ட வேலை, சமையல் வேலை என்று இருக்கிறாள். வீ

ட்டுக்குள் தான் முடங்கி இருக்க வேண்டும் என்று அவன் சொன்னதும் இல்லை. எங்கே சென்றாலும் இரவுக்குள் இந்த வீட்டிற்குள் திரும்ப வேண்டும், மொத்தத்தில் பெயில் கைதி அவள்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு நீண்ட கயிற்றை கட்டி, செல்லப் பிராணிகளை எங்கு வேண்டும் என்றாலும் செல்ல அனுமதித்தாலும், கயிற்றின் பிடி அதன் சொந்தக்காரரிடம் இருப்பது போல் தான் இதுவும் என்று அவள் எண்ணிக்கொண்டாள். பார்வதிக்காக என்று தன்னைத் தானே பொறுத்து போக சொல்லி அறிவுறுத்திக் கொண்டாள்.



எல்லாவற்றையும் விட அவன் எந்த மாதிரியானவன் என்று அவளுக்கு புரியவில்லை. நினைக்க விரும்பவில்லை என்றாலும் நினைக்க வைக்கிறான். அதில் அவள் அவளையே வெறுக்கிறாள். அதே போன்ற மனநிலையில் தான் அவனும் இருந்தான். இருவருக்கும் அதில் ஒற்றுமை தான்.




ஊடல் காபி மனைவி கொடுப்பது ஒரு வித அழகு, பிடிக்கும் ஆனால் பிடிக்காது என்ற மனநிலையில் தயாரிக்கப்படும் நிறம், குணம், மணம் நிறைந்தும் நிறையாமலும் காப்பி. சில சமயம் வேண்டுமென்றே மனைவி கணவனைப் பழிவாங்க சொத்தையாக கலக்கும் காப்பி அது. இங்கே ஊடலா… அவளுக்குக் கொலைவெறி அவன் மீது.


காபி தயாரித்து, அதை வேண்டாம் வெறுப்பாக மேடையில் வைக்க,

"ஹாட் " என்று அவன் அதற்கு கருத்து கூற தவறவில்லை. அவள் முறைக்க


"காபியை விட நீ தான் ஹாட்" என்றும் அவன் சொல்ல, அவளது மூளைக்கும் வாயிற்கும் தடுப்பு சுவர் இல்லா காரணத்தால்,


"ஷட் யூர் காட் டேம் மவுத்" என்று சீற, அவன் நிதானமாக


"எங்க நின்னு, யார் கிட்ட என்ன பேசறோம்னு புரியுதா?" என்று அழுத்தமாகக் கேட்டான். அதில் அவளுக்கு விபரீதங்கள் புரிய, அவள் முகம் கலக்கம் அடைந்தது. ஒன்றும் சொல்லாது, தொண்டை கமற, மூக்கு சிவக்க அவனைப் பாவமாகப் பார்த்தாள், விட்டால் அழுது விடுவாள் போல், அதில் துருவிற்குத் திருப்தி


"குட்" என்று அவளை நக்கலாக மெச்சி கொண்டான். முள் மேல் நிற்பது போன்ற அவளது வலி மற்றும் தவிப்பைக் கண்டபடி காபி அருந்தியவன்,


"மார்னிங் வெறும் காபி தானா?" என்று வேறு கேட்டு வைத்தான்.


"எங்க வீட்டில் காபி மட்டும் தான் , ரொம்ப பசிச்சா, 2 பிஸ்கெட்" என்று வம்பு வளர்க்காது பதில் சொன்னவளை இழுத்து தன் கால் வளைவில் வைத்துக்கொண்டவன், அவனது இந்த திடீர் செய்கையில் அவள் அடைந்த அதிர்ச்சியை கண்டு கொள்ளாது, அவள் முகம் பற்றினான்.


அவள் உடல் சில்லிட்டு போனது, அவனது தொடுகையா அல்லது அதிர்ச்சியா என்று இருவரும் அறியார், ஆனால் அவன் கை, அவளை அரவணைத்து ஆறுதல் தரும் இதமான சூட்டில் இருந்தது. அங்கும் இங்கும் உருட்டி விடப்பட்ட கோலி குண்டு போல் அலைபாயும் கண்மணிகளைக் கண்டவன், அதை ஓரிடத்தில் தன் பார்வையால் நிறுத்தி வைத்தான்.


"நட்சத்திர கண்கள்!

ரைஸ் அண்ட் ஷைன்! ஹனி பன்ச் " என்று கூறிவிட்டு அவள் முகத்தை தன் பால் இழுத்து, அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான். கண் விழிகள் தெறிக்க அவள் நிற்க, அவன்


"பதிலுக்கு நீயும் கிஸ் பண்ணலாம் ! ஐ டோன்ட் மைண்ட்" என்று அவன் நெற்றியைக் காண்பித்தான். அதில் உணர்வு பெற்றவள்,


"சீ ! இன் ……." என்று ஆரம்பித்தவள், அவனது முந்தைய மிரட்டலில் வாயை மூடிக்கொண்டாள்.


"என்னை விடு, வேலை இருக்கு ! அண்ட் உன் கூட இருக்கேன் ! நான் உன்னோட அடிமையோ ****** டாய்யோ இல்ல" என்று அவளும் அவனது அழுத்தமானப் பேச்சை திருப்பி கொடுக்க, அதில் அவன் பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டது போல் சிரித்து,


"நீ யார்ன்னு உனக்கு தெரியாது!" என்று புதிரான ஒரு பதிலைக் கொடுத்தான். மதியம் அவனுக்கும் சேர்த்து உணவு தயாரித்தாள். அவன் வேண்டாம்மென்று மறுத்த போது


"எனக்கு வயத்தை வலிக்க கூடாது, அதுக்கு தான்" என்று சொன்னாள். இது சத்தியமாக அன்பில்லை என்று இருவரும் அறிவர். என்ன மாதிரி அவர்கள் பிணைப்பு என்று யோசிக்க விரும்பவில்லை, அவளுக்கு இதில் ரயில் சிநேகம் போன்று, ஆனால் சிநேகம் துளி கூட இல்லாதது. அவனுக்கு இது ? அவன் மட்டுமே அறிவான்.


சாதாரண சமையல் தான், ஆனால் பிகு பண்ணாது உண்டான்.


"ஒருவேளை இதுல நான் விஷத்தை கலந்து இருந்தா ?" என்று அவளால் குதர்க்கமாகக் கேட்காது இருக்க முடியவில்லை.


"நான் கஷ்ட பட்டு சாகணும்னு நீ சபிச்சு இருக்கே ! இவ்ளோ சிம்பிளா நான் சாவனுமா?" என்று அவன் பதிலுக்கு அவளை மடக்கினான்.


அதில் அவள் வாயை மூடிக் கொண்டாள். அவளது மௌனத்தில் அவன் கேலியாக அவளைப் பார்த்து


"குதர்க்கம் உனக்கு பக்கத்து வீடுன்னா, நான் குதர்க்கத்தோட செல்ல புள்ள ! ஜாக்கிரதை!" என்று அவனது எச்சரிக்கை தொடர்ந்தது.



சாப்பிட்டு முடிந்ததும், அவளை அணுகியவன் அவள் கையைப் பிடித்து கொண்டான். அவள் வலது கையை அவனது இரு கைகளுக்குள் அழகான ஒரு பிறந்த பறவை, மனிதனின் கைக்குள் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அவள் வெடுக்கென்று தான் கையை பிடுங்க முயல, அவன் விடவேயில்லை. மென்மையாக பிறந்த குழந்தையை வருடுவது போல் அவனது வருடல் . அவள் கையை மேல் உயர்த்தி, அன்னமிட்டக் கரத்துக்கு மரியாதை செய்தான்.



அந்த மீசை உராய்வு அவளுக்கு விஷமுள்ள சிலந்தி ஊறுவது போல் இருக்க, அவன் அவளது உடல் மொழியினை உணர்ந்தவன்,

"இது விஷம் போடாம சமைச்சதுக்கு" என்று மற்றோர்முறை அவளை கரத்தினை முத்தமிட்டான்.



முடிவாக அவன் அவளது கையை விடுக்க, அவள் உடனே தனது கரங்களை கழுவிக் கொண்டாள், அவனை முறைத்தபடி.



அவனோ கேலி ததும்ப,

"ரியலி ?" என்று கேட்டுவிட்டு அவளை நோக்கி முன்னேற, அவள் சற்று தடுமாறித் தான் போனாள். ஆனால் ஒரு க்ஷ்ண நேரம் தான் அது. அவன் ஏதேனும் எக்குத்தப்பாக செய்ய எத்தனித்தால் அவன் தலையில் ஒன்று போட வாகாய் ஒரு பொருளை தன் பின்கையில் எடுத்து வைத்து கொண்டாள். இதை எப்போதோ செய்து இருக்க வேண்டும் என்று தன்னைக் கடிந்தும் கொண்டாள். அவளை நெருங்கியவன் அவளது பின்கையை வளைத்து அதில் இருந்த சிறிய இரும்பு உலக்கையை தன் வசப்படுத்தினான்.


"முட்டாள் ! டீலிங் ஞாபகம் இல்லியா !" என்று அவளைக் காரமாக வைதவன்,


"நீ இந்த நிமிஷம் வரை நீயா இருக்கறது என்னால தான், ஒரே ஒரு செகண்ட் தான் எனக்கு வேணும், அதை இல்லாம செய்ய ! சோ நோ யூர் லிமிட்ஸ்" என்று அவளைக் கடிந்து விட்டு,


"வீகென்ட் சாப்பாட்டுக்கு இனி வெளியில் ஆர்டர் பண்ணறேன் ! " என்று தகவல் சொல்லிவிட்டுச் சென்றும் விட்டான். அவன் சென்றவுடன் உடம்பில் இருக்கும் அத்தனை சக்தியும் வடிந்தாற் போல் அவளுக்கு ஆனது. அவனது அத்துமீறல்களை அவள் கண்டிப்பாக எதிர்க்கிறாள். அதே நேரம் அவளுக்காக அவன் நிறைய பார்க்கிறான். முக்கியமாக பார்வதியின் சிகிச்சையை அவன் தானே செய்கிறான் எவ்வித குறையும் இல்லாது. அவளது பணமில்லா நிலைக்கு அவன் தான் காரணம். அவள் அன்று பார்வதிக்காக எடுக்க போன முடிவு அம்மம்மா..அதை நினைத்தாலே அவளுக்கு இன்று கூசுகிறது !


அப்படி அவளுக்கு ஒன்றும் நேராது செய்தது இவன் தான். ஆகையால் அவன் நல்லவனா? இல்லவே இல்லை. மனிதனுள் அரக்கனும் உண்டு, கடவுளும் உண்டு. இவளுக்கு இவன் அரக்கனா இல்லை கடவுளா இல்லை அவளைப் போல ஒரு சக மனிதனா !


என்ன என்று அவளால் கூற முடியவில்லை. இப்போதைக்கு அவளுக்கு அவன் அத்யாவசிய உதவி செய்யும் அவளுக்கு மிகவும் வேண்டாதவன். இவன் இப்படி ஒரு பெண்ணுடன் இருக்கிறானே என்று அவனது பெற்றோர்கள் துளியும் கவலை படமாட்டார்களா என்று அவள் முதன் முறையாக அவனை வேறு விதமாக தெரிந்து கொள்ள விரும்பினாள்.


அதை அவனிடம் கேட்கவும் செய்தாள்.


"அம்மா அப்பா இல்லன்னு சொன்னா என்ன செய்வே? என்னை காதலிச்சு, என் கூட வாழ போறியா? வில் யு லிவ் இன் வித் மி? " என்று ஒரு குதர்க்க மறுமொழி கிடைத்தது.


'இவனை போய் கேட்டேன் பாரு' என்று அவள் தன்னை நிந்தித்துக் கொண்டாள். அதன் பின் அவனிடம் அவள் இம்மாதிரி கேள்விகள் கேட்கவும் இல்லை.


அதே சமயம், இவன் என்ன மாதிரி என்று அவளால் நிர்ணயிக்க முடியவும் இல்லை.



ஒருநாள் என்ன தோன்றியதோ அவன் அவளுக்கு உடுப்புகள் வாங்கி கொண்டு வந்து


"போட்டு பாரு" என்று மட்டும் சொன்னான். சாதாரணமாக அவள் அணியும் உடைகள் தான், ஆனால் விலை அதிகம். இவன் யாருடா எனக்கு உடுப்பு வாங்கி கொடுக்க, என்று வேதாளம் முருங்கை மரம் ஏற, அம்மையார் சென்னை வெயிலை விட உஷ்னமாகி விட்டாள்.


"நீ யாரு, எனக்கு இதை வாங்க ?" என்று சீற, அவன்


"போட்டு பாருன்னு சொன்னேன் " என்று அவள் கேள்வி காதிலேயே விழாது போல் பேச, அவள் கோபம் என்ற ஆயுதத்தை எடுத்தாள். அவன் வாங்கி வைத்த உடுப்பை எடுத்து அவன் மீதே விட்டெறிந்தாள். அவனது அக்கினி பார்வையை அவள் லட்சியம் செய்யவே இல்லை.



அதற்கு அடுத்த நாள் அதன் பின்விளைவுகள் அவளுக்கு தெரிந்தன. குளிக்கச் செல்லும் முன் தன் உடைகளை தேட, அவள் உடைகள் வைக்கும் பீரோவில் ஒன்று கூட இருக்கவில்லை. எங்கே மாயமாக மறைந்தன என்று அவள் திகைத்து நிற்க, அவள் அறைக்கதவு தட்டப்பட்டது.


ஒரு வேலையாள் தான்.


"சார் கூப்பிடறாரு" என்று தெரிவிக்க, அவளுக்கு இவனது வேலையாக இருக்குமோ என்று சந்தேகத்துடன் அவன் இருக்கும் இடத்திற்கு சென்றாள். தோட்டத்தில் குப்பைகளை எரிக்கும் இடத்தில் அவன் . நேற்று அவள் பேசியதற்கு மறுமொழி கொடுத்து கொண்டிருந்தான்.


"ஸ்டாப் இட் ! உனக்கென்ன பைத்தியமா?" என்று அவள் கத்த, அவனோ வில்லச் சிரிப்பு ஒன்றை சிரித்தான்.


"எனக்கு இன்னிக்கி போகி" என்று சொல்லிவிட்டு அவ்விடம் நீங்கினான். அவள் மனம் அவள் முன் எரியும் தீ போல கொழுந்து விட்டு எரிந்தது.
 
Status
Not open for further replies.
Top