All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் என் எலும்பை உடைக்க காத்து இருக்கும் விஜய் ரசிக பெரு மக்களே

சூர்யாவிற்கும் ,நம்ம மதுரா செல்லத்திற்கும் நிச்சயம் முடித்து ,ராணி மெய்யம்மை ஹால் புக் பண்ணியாச்சு ...விஜய்க்கும் பத்திரிகை அனுப்பியாச்சு .

திருமண செலவூ இருப்பதால் ஒவ்வொருத்தரும் 5 லட்சத்திற்கு குறையாமல் கேர் ஆப் அனிதா என்ற பெயரில் செக் எடுத்து srikala sis kite கொடுத்து விடும் படி கேட்டு கொள்கிறேன் .i collect later

திருமணத்திற்கு மறுக்காமல் வந்து மொழி 10,000 குறையாமல் எழுதும் படியும் முடிந்தால் ecr ரோட்டில் 3 பெட்ரூம் தனி பங்களா வாங்கி கொடுத்தால் திருமணத்தை நடுத்துபவர்கள் சந்தோசமாக நடத்தி வைப்பார்கள் ....என்னை தான் பா சொல்றேன் ....

பையன் பரம ஏழை அதனால் உங்கள் மனதை போலவே உங்கள் கிபிட் கூட பெரிசாய் இருக்கட்டும் .....கிபிட் இல்லாமல் வந்தால் உள்ளே விட மாட்டோம் ....

முடிந்தால் சாப்பாட்டினை டிபன் பாக்ஸில் போட்டு எடுத்து வந்து எங்களுக்கும் கொடுத்தால் உங்க பெயரை சொல்லி திருமண விருந்து சாப்பிட்டு விடுவோம் ....

சோ எல்லோரும் ஒரு atm box உடன் வரவும் .....தங்கள் வரவை எதிர்நோக்கும் இரு வீட்டு உறவு -----நான் தான்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 36(4)

சூர்யாவின் பார்ம் ஹவுஸ் வந்து விட ,நால்வரும் இறங்கி உள்ளே சென்றார்கள் .

112424705.jpg

"சாரி சிஸ்டர் .....சத்தியமா எனக்கு தெரியாது .என் அம்மா பேச்சை நம்பினேன் .....நம்பி தான் சோனா மாதிரி ஒரு சனியனை கருணா தலையில் கட்டி வைத்து ,அவர் வாழ்வும் கெட்டு என் வாழ்க்கை .காதல் ,குழந்தை என்று எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன் .....மன்னிப்பு கேட்க கூட எனக்கு அருகதை இல்லை தான் ....உங்க வாழ்க்கை கருணாவோடு அமைய நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க .....என் உயிரை கொடுத்தாவது செய்கிறேன் ...அந்த சோனாவை போட்டு தள்ளணுமா ......இப்பவே கொன்னுடறேன் ..."என்றான் திவாகர்.

"உயிர் எடுக்க வேண்டும் என்றால் அதை செய்ய என்னிடம் ஆட்கள் இல்லை என்றா தோணுது ......சிக்கல் இல்லாமல் இவங்க வாழ்க்கை ஆரம்பம் ஆகணும் .....அதான் முக்கியம் ."என்றான் சூர்யா .

"அண்ணா !.....எங்களுக்கு தெரிய வேண்டியது ஒன்று தான் ....ரூபிணியின் மேல் உங்களுக்கு இன்னும் காதல் இருக்கா .....அவளோடு வாழ விருப்பமா ?"என்றாள் மதுரா .

"காதல் இல்லாமலா அவளுக்காக இப்படி பைத்தியக்காரன் மாதிரி அல்லாடிட்டு இருக்கேன் .......அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க நான் தயாரா தான் இருக்கேன் .......அவ பேசியே நாலு வருடம் ஆச்சும்மா .....எனக்கும் இந்த தண்டனை தேவை தான் .......அந்த நல்ல மனுஷனை பிசாசோடு கோர்த்து விட்டேனே ....."என்ற திவாகர் முகத்தை மூடி கதறி தீர்த்து விட்டான் .
maxresdefault (3)1.jpg

நான்கு வருட வேதனை ,வலி .கொஞ்ச நேரம் மனபாரம் குறைய அவனை அழ விட்டனர் .

தானாக சமாளித்து நிமிர்ந்தவன் ,"சொல்லுமா ...என்ன செய்யணும் ?'என்றான்

பதிலுக்கு புன்னகைத்த மதுராவிடம் சூர்யா ,திவாகரின் மொபைல் கொடுக்க ,அதை வாங்கியவள் ரூபிணிக்கு அழைத்தாள் .

பதிலுக்கு புன்னகைத்த மதுராவிடம் சூர்யா ,திவாகரின் மொபைல் கொடுக்க ,அதை வாங்கியவள் ரூபிணிக்கு அழைத்தாள் .

"என்னங்க ............"விசும்பலுடன் வந்தது ரூபிணியின் குரல் .
niveda-thomas-in-money-ratnam-movie-28162996141.jpg

"என்ன என்னங்க நொனைங்க வேண்டி கிடக்கு ......என் திவு டியர்ரை நிம்மதியா இருக்க விட மாட்டியா நீ ?....நாலு வருசமா அந்த மனுஷன் உன்னிடம் அனுபவித்தது போதாதா .....இப்போ தான் அந்த மனுஷன் என்னோடு நிம்மதியா இருக்கார் ....அது பொறுக்கலையா உனக்கு ?......நீயும் வாழமா எங்களையும் வாழ விடாம ஏண்டீ இப்படி உயிர் எடுக்கறே ?இனி எங்களை தொல்லை செய்யாதே என்று சொல்ல தான் போன் செய்தேன் ......உங்க நொண்ணன் வீட்டுக்கு போனவ அங்கேயே ஏதாவது ஆறு குளம் இருக்கும் .....வெயிட் வெயிட் ...வெயில் காலத்தில் தண்ணீர் கூட இருக்காது ...அதனால் கடல் ட்ரை பண்ணு ..இல்லை மெட்ரோ ட்ரெயின் விட்டு இருக்காங்க .....அதை ட்ரை பண்ணு செல்லம் ......இதோ வந்துட்டேன் அத்தான் "என்றவாறு மதுரா கால் கட் செய்ய ,அவள் பேச்சை கேட்டு திவாகர் நெஞ்சை பிடித்து கொண்டான் .

"சிஸ்டர் !.............என்ன இது ...ஏற்கனவே அவ முருங்கை மரத்தில் ஏறி ஜங்கு ஜங்குன்னு ஆடிட்டு இருக்கா .....ஏதோ என் குடும்பம் வந்து கொஞ்சம் கொடுமைபடுத்தினா என் கிட்டே தானே வருவா என்று பிளான் போட்டு அவங்களை ஆட விட்டேன் .........அதுவே அவ வீட்டை விட்டு போக வைத்து விட்டது ....நீங்க வேற இப்படி எல்லாம் பேசி டைவோர்ஸ் வாங்கி கொடுத்துடுவீங்க போல் இருக்கே .............ஏதாவது ஏடாகூடமா செய்து வைக்க போறா சிஸ்டர் ...போன் கொடுங்க இப்படி .....அவ தான் சிஸ்டர் என் உயிர் .....என்னை வெறுத்து கொண்டாவது அவள் உயிரோடு இருக்கட்டும் .......ப்ளீஸ் அவ ஏற்கனவே நொந்து போய் இருக்கா ...ப்ளீஸ் சிஸ்டர் ."என்றான் திவாகர் பதட்டத்துடன்

"இருங்க ப்ரோ .....ரொம்ப எல்லாம் துடிக்காதீங்க .......நீங்க நினைப்பது போலெ ரூபிணி ஒன்றும் அனிச்சம் மலர் இல்லை அப்படியே துவண்டு போய் வாழ்வே முடிந்து போச்சுன்னு தவறான முடிவூ எடுக்க ......சோனா விஷயம் தெரிந்த பிறகு கூட உங்க கூட இருந்தே தான் தண்டனை கொடுத்தாலே ஒழிய தன்னை அழித்து கொள்ளவில்லை ......அவளை தனியே வீட்டில் விட்டு தானே ஆபீஸ் போனீங்க ......எனக்கு தெரிந்த வரை அவ விஜய் வளர்ப்பு ......விஜய் மாதிரி கொஞ்சம் கலங்கி நின்றாலும் அவரை மாதிரியே எதையும் எதிர்க்கும் கேரக்டர் அவ ......உணர்ச்சி வசத்தில் தவறான முடிவுக்கு எல்லாம் போறவ இல்லை ...."என்று மதுரா சொல்லி முடிக்கவும் அவள் கையில் இருந்த திவாகர் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது .

போனை திவாகர்ருக்கு காட்டி ,"சொன்னேன் தானே ..........."என்றவள் ,போன் உயிர்ப்பித்து ,"ஹலோ "என்றது தான் தாமதம் ,காதில் கேட்கவே முடியாத பச்சை பச்சையாய் வந்து விழுந்தது வார்த்தைகள் .ஸ்பீக்கர்ரில் வேறு போட்டு வைக்க கேட்டவர்களின் முகம் முன்றாம் பேஸ்து அடித்தது போலே மாறி போனது .

"இத்தனை கெட்ட வார்த்தைகள் இருக்குன்னு எனக்கு இப்போ தான் தெரியும் ...ஏழு தலைமுறை நாறி போச்சு ...."என்றான் சூர்யா மேக்னாவிடம் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு நிமிடம் கழித்தே அர்ச்சனையை நிறுத்தி மூச்சு வாங்கிய ரூபிணி ,"மவளே யாரு கிட்டே உன் லோலாயி தனத்தை காட்டாரே .....வகுந்துடுவேன் ............என் புருஷனை பத்தி எனக்கு தெரியும்டீ ......(க்ரீன் )........யாரு கிட்டே வந்து யாரை பத்தி என்ன சொல்றே ......யாரு நீ அந்த (க்ரீன் )சோனா (க்ரீன் ) அல்லக்கை கூட்டத்தில் ஒருத்தி தானே ......என் அண்ணனிடம் எவளோ ஒருத்தி (க்ரீன் )பூ என்ற ஒருத்தியை வைத்து ஆடி பார்த்தா ....இங்கே நீயா ?..............(பச்சையோ பச்சை ).......................என்ன கோல்மால் செய்துடீ அந்த மனுஷனை தூக்கி போய் வைத்து இருக்கீங்க ..............எங்கே இருக்கியோ அங்கேயே இரு ..............வெளக்கமாத்தோடு வரேன் ....அட்ரஸ் சொல்லுடீ ........."என்று ருத்திர தாண்டவம் ஆடினாள் ரூபிணி .

"என்னடீ என் சக்களத்தி ............என்ன செத்து கித்து போய்டியா ....ஹலோ அட்ரஸ் சொல்லு டார்லிங்.....வரேன்."என்றாள் ரூபிணி .

"எனக்கு என்ன பயம் ............இப்படி எல்லாம் பேசிட்டா உன்ற புருஷ் ...எனக்கு சொந்தம் இல்லை என்றாகி விடுமா என்ன ......அட்ரஸ் சொல்றேன் ...வா வந்து .....இந்த ஜலஜா கூட உன் ஆத்துக்காரர் ஜல்ஸா பண்றதை பார்த்துட்டு போ ......ஒகே பாதியில் நிற்குது என்ன என்று கேட்கிறாயா ...எங்க "நேத்து ராத்திரி எம்மா ...."தான் .....தோ வந்துட்டேன் குஜிலிப்பா ............"என்ற மதுரா போன் கட் செய்து விட்டு வயித்தை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள் .

"why பிளட் ?"என்றாள் மேக்னா .

"சேம் பிளட் "என்றாள் மதுரா

இருவரும் ஹை பைவ் கொடுத்து கொள்ள தலையில் அடித்து கொண்ட சூர்யா திவாகர்ரிடம்"டோடல் பேமிலி காலி .....அப்படி தானே ......ப்ரோ உங்க பாடு திண்டாட்டம் தான் .....இவங்களையா நீங்க ஏதாவது செய்துக்க போறாங்க என்று பயந்தீங்க ...இவங்க "கொலையும் செய்வாள் பத்தினி "டைப் ....பார்த்து நடத்துக்கோங்கோ ....ஏதோ எங்களால் முடிந்தது உங்களை சேர்த்து வைக்கிறோம் .....பிறகு காலில் விழுவது ,சோப்பு போடுவது எல்லாம் உங்க வேலை .....பூரி கட்டை ,தோசை கரண்டி பறந்துச்சு என்று எல்லாம் வந்து அழ கூடாது .....கெத்த விட கூடாது ப்ரோ ...எவ்வளவூ அடிச்சாலும் இவன் தாங்கறான் என்று கமெண்ட் வரணும் ..."என்றான் சூர்யா .

"என்ன அடி பலமோ ?'என்றான் திவாகர் .

"இப்போ தான் ஆரம்பிச்சி இருக்கு ......அதுவே ரொம்ப horror மூவியா இருக்கு ...இனிமேல் தான் மெயின் பிச்சர் இருக்கு எனக்கு ...."என்றவனை மமுறைத்தனர் பெண்கள் இருவரும் .

"இப்படியே பேசிட்டு சுத்து ...உனக்கு பிரியாணி இல்லை ...தண்ணி சாதம் கூட கிடைக்காது ......."என்றாள் மதுரா .

"ஐயோ ...ஏய் சும்மா செல்லம் ......இப்படி எல்லாம் அடி மடியில் கை வைக்க கூடாது ...........மீ பாவம் ....."என்றான் சூர்யா .

"ஐயோ ....வழியுது ...க்ளோஸ் யுவர் ஜொள் பேக்டரி ...."என்றாள் மேக்னா .

அடுத்த பத்து நிமிடம் இப்படியே கலகலப்பாக போக ,கேட் வாட்ச்மென் இண்டர்காம் வழியாக ரூபிணி வந்து இருப்பதாக சொல்ல ,திவாகர்ரும் ,சூர்யாவும் சட்டென்று உள் அறைக்குள் சென்று மறைந்தார்கள் .ஆட்டோவில் வந்து,பத்ரகாளியின் குளோனிங் மாதிரி,முதல் மரியாதை படம் வடிவூகரசி மாதிரி வந்து இறங்கிய ரூபிணியின் கையில் பிஞ்சு போன துடைப்ப கட்டை உண்மையில் இருந்தது .
vlcsnap-2019-03-05-05h58m09s35711.png

(எதை கழுவிய துடைப்பம் ரூபி அது ?)

உள்ளே எரிமலையின் சீற்றத்தோடு வந்தவள் ,ஹாலில் சோபாவில் கால் மேல் கால் போட்டு கெத்தாய் அமர்ந்து இருந்த இரு பெண்களையும் கண்டு ஒரு கணம் நின்றாள் .சோனாவோடு அவள் தோழியை எதிர் பார்த்து வந்தவளுக்கு அத்தனை மிடுக்குடன் ,கிரேஸ் என்று சொல்வார்களே -தேஜஸ் அத்தோடு இருவரை கண்டதும் குழம்பி போனாள் .

"யெஸ் யாரு வேண்டும் ?"என்றாள் மதுரா -ரூபிணி இருக்கும் கோலத்தை கண்டு உள்ளுக்குள் ஸ்ருதி ஹாசன் ஒரு படத்தில் நடுங்குவதை போலெ நடுங்கி கொண்டு-வெளியே கெத்தாக .

"இல்லை எனக்கு ஒரு போன் வந்துச்சு ......"என்றாள் ரூபிணி .

"சாரி மா ...எங்க வீட்டில் வேலை செய்ய ஆட்கள் இருக்காங்க .....நீ வேற பாவம் துடைப்பதோடு அதுவும் பிஞ்சி போன துடைப்பதுடன் வேறு வந்து இருக்கே .....ஆனால் வேலை காலி இல்லையே .........."என்றாள் மதுரா .

"எருமை ......ஏண்டீ அவளே உன்னை கொல்லும் வெறியில் வந்து இருக்கா ...இதுல நீ வேற எரியும் நெருப்பில் ஆயில் கிடங்கையே கவுத்து விடறே ....."என்றாள் மேக்னா மதுராவின் காதில் .

அதற்குள் தன்னை சமாளித்து கொண்ட ரூபிணி ,"இங்கே வீட்டு வேலைக்கு எல்லாம் நான் வரலை ...என் புருஷன் இங்கே இருக்கார்ன்னு போன் வந்தது ......"என்றாள் .

"ஒரு நிமிஷம் உன் புருஷனை உன் வீட்டில் தேடுவதை விட்டு என் வீட்டில் வந்து ஏன்மா தேடுறே .....புருஷனை தொலைக்க ,உன் புருஷன் என்ன பொம்மையா ...இல்லை நீ என்ன சின்ன குழந்தையா ?'என்றாள் மதுரா .

"அவர் தொலைந்து எல்லாம் போகலை ..... எவளோ ஒருத்தி போன் செய்து கண்டதையும் உளறி வைத்தா ....பயந்து போய் அவ அட்ரஸ் தப்பா கொடுத்துட்டா போல் இருக்கு ...சாரிங்க டிஸ்டர்ப் பண்ணதுக்கு ....வரேன் ..."என்று வாயிற்படி நோக்கி ரூபிணி செல்ல மதுராவின் குரல் அவளை தடை செய்தது .

"ஹலோ ரூபிணி மேடம்காரு .....அட்ரஸ் எல்லாம் நாங்க தப்பா கொடுக்கலை ....நீங்களும் தப்பான அட்ரெஸ்சுக்கு வரலை ......உங்களுக்கு போன் செய்து "என்னையும் என் திவூ டார்லிங் டிஸ்டர்ப் செய்யாதே என்று சொன்னது சாட்சாத் நாந்தேன் ....."என்ற மதுராவை கண்டு ஒருகணம் விழித்தாள் ரூபிணி .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"திவூ டியர் ...யார் வந்து இருக்கங்கா பாருங்க .......என்ற அக்காக்காரி வந்து இருக்காவ ....போய் கோழி ,ஆடுன்னு வாங்கி வந்தீங்கனா ஆக்கி போட்டு அனுப்பலாம் இல்லை ......என்னங்க அக்கா ...நான் சொல்றது சரி தானேங்கோ ......"என்ற மதுராவை வெட்டவா குத்தவா என்ற வெறியில் பார்த்த ரூபிணி ,உள்ளே இருந்து வந்த திவாகரை எதிர் பார்க்கவே இல்லை போலெ இருக்கிறது .

சோனாவும் அவள் தோழிகளும் விளையாடி பார்க்கிறார்கள் என்ற எண்ணத்தில்,பேய் ஓட்ட வந்து இருந்தவள் அங்கு சோனாவிற்கு பதில் வேறு ஒருத்தியை அதுவும் அழகியை எதிர்பார்க்கவில்லை .அவள் அழைத்ததும் நாய் குட்டி போலெ வந்த திவாகரையும் தான் .

"திவா !...என்ன இது ...யார் இவ ...இங்கே என்ன பண்றீங்க ?"என்றாள் ரூபிணி தன் நாலு வருட மௌன விரதத்தை களைந்து .

திவாகர் இந்த உலகத்தில் இருந்தால் தானே ...அவன் பிரீ விசா ,பாஸ் போர்ட் வாங்கி ரூபிணி பேசி விட வெளிநாட்டில் டூயட் ஆடி கொண்டு இருந்தான் .அவன் மௌனத்தை ரூபிணி தவறாக எடுத்து கொண்டாள் .

"அப்போ இவ சொன்னது எல்லாம் உண்மை அப்படி தானே ......எவ்வளவூ தைரியம் இருந்தால் எனக்கு துரோகம் செய்வீங்க ?'என்று அவன் சட்டையை பிடித்து இவள் உலுக்க அவன் காதலனாய் ஜொள்ளு விட்டு கொண்டு இருந்தான் .

"இது வேலைக்கு ஆகாது ....டயலாக் சொல்லாமல் லுக்கு விட்டுட்டு இருக்கார் பாரு அண்ணாத்தை ....."என்றாள் மேக்னா .

தன் உள்ளங்கையால் தன் நெற்றியில் அடித்து கொண்ட மதுரா ,"வந்து வாய்க்குதுங்க பாரு எனக்குன்னு ......."என்று அலுத்தாவாறு ,"ஏய் எடுடீ அவர் மேல் இருந்து கையை ...எவ்வளவூ தைரியம் இருந்தால் என் செல்லம் ,என் தங்க கட்டி சட்டை மேல் கை வைப்பே ...அத்தான் நீங்க இப்படி நகர்ந்து வாங்க அத்தான் ..."என்ற மதுரா பெரும் போராட்டத்திற்கு பிறகே திவாகரை ரூபிணியிடம் இருந்து பிரித்தாள் .அவளே விட்டாலும் அவன் நகர்ந்தால் தானே .....

"வாடி என் சக்களத்தி .....இப்போ மட்டும் எங்கே இருந்து வழியுது பாசம் ,காதல் எல்லாம் ?நாலு வருஷம் இந்த மனுஷனை படுத்தி எடுக்கும் போது எங்கேம்மா போச்சு இந்த தவிப்பு ,துடிப்பு ?....என் திவா வேண்டாம் என்றால் நாலு வருஷத்திற்கு முன்னரே டைவோர்ஸ் செய்துட்டு போய் தொலைந்து இருந்தே என்றால் நாங்க "புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்கோ "என்று பாடிட்டு இருப்போம் இல்லே .....இப்போ வந்து "என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் "என்று மூக்கால் அழுதால் மட்டும் என் திவா உன் திவா ஆகிடுவாரா என்ன ?'என்றாள் மதுரா .

"என்னங்க இவ பாட்டுக்கு பேசிட்டு போறா ...நீங்க அப்படியே நிற்கறீங்க ...ஏதாவது பேசுங்க ....."என்றாள் ரூபிணி கண்ணீருடன் .


"அந்த மனுசன் எப்படி பேசுவார் ....எப்படி பேசுவார் என்று கேட்கிறேன் ...அவர் பேசும் போது எல்லாம் கதவை அடைத்து கொண்டு மௌன விரதம் இருந்தவள் தாணேடீ நீயி .....அந்த மனுஷன் நாலு வருசமா மூடிய கதவோடு குடும்பம் நடத்திட்டு இருந்து இருக்கார் .....உனக்கு துப்பு இருக்கணும் ...உன்ர புருஷனை உன் முந்தானையில் முடிஞ்சு வைக்க ......பெரிய இவளாட்டம் தண்டனை கொடுக்கிறாளாம் .....நீ விரதம் இருந்துட்டு போ அதுக்குன்னு அவரும் "கல்யாணம் செய்தும் ப்ரஹ்மச்சாரியா "இருக்கணும் என்ற தலையெழுத்தா என்ன .....இங்கே பாருடீ இவ செய்யும் கூத்தை .......விசு ஒரு படத்தில் சொல்வார் தெரியுமா.அந்த டயலாக் உன் கிட்டே நான் கேட்கிறேன் "இவருக்கு இப்போ காபி சாப்பிடணும் போலே இருக்குன்னு வச்சுக்க...நீயும் கேட்க மாட்டேன்கிரே என்று வச்சுக்க ....இவரும் வெட்கத்தை விட்டு உன் கிட்டே பிரியாணி கூட வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு சிப் காபியாவது கிடைக்குமான்னு கேட்கிறார் என்று வச்சுக்கோ ....அப்பவும் நீகொடுக்க மாட்டேன் என்று அடம் பிடிச்சா பக்கத்து போர்சன்னில் காபி மட்டும் இல்லை சுட சுட பிரியாணியே கொடுக்கிறேன் என்று நான் இருக்கும் போது அதை இவர் எடுத்து கொண்டால் தப்பா ?உன்ர புருசனுக்கு முதலில் நீ மனைவியா செய்ய வேண்டியதை செய்து இருந்தால் அவர் ஏன்டீ என்னை தேடி வர போறார் ??? "என்றாள் மதுரா

அதிர்ந்து விழித்தாள் ரூபிணி ."இவள் சொல்வது போலே நாலு வருடம் இவருக்கு மனைவியாகவா நடந்தேன் .....நாலு வருடம் ஒரு நாள் கூட விடாமல் காலை ,மாலை திறக்காத கதவின் முன் அமர்ந்து என்னிடம் பேசி கொண்டு தானே இருப்பார் தூங்கும் வரை ....கதவின் வெளியே வெறும் தரையில் தானே படுப்பார் ....கடமையை செய்யாத நான் உரிமையை எப்படி இவரிடம் எதிர் பார்க்க முடியும் ?'தனக்குள் நான்கு வருடம் கழித்து விவாதித்து கொண்டு இருந்தவள் ,"இது எனக்கும் என் புருஷனுக்கும் நடுவே உள்ள பிரச்சனை ....அவர் தப்பு செய்தார் ...சண்டை போட்டோம் .......அது எதற்கு உனக்கு ....அவர் வாய் திறந்து என்னை திட்டட்டும் ,நான் செய்ததற்கு அவர் விளக்கம் கேட்கட்டும் .....அவருக்கு உரிமை இருக்கு ....ஒண்ட வந்தவளுக்கு எல்லாம் பதில் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை ....."என்றாள் ரூபிணி .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிர்ந்து விழித்தாள் ரூபிணி ."இவள் சொல்வது போலே நாலு வருடம் இவருக்கு மனைவியாகவா நடந்தேன் .....???நாலு வருடம் ஒரு நாள் கூட விடாமல் காலை ,மாலை திறக்காத கதவின் முன் அமர்ந்து என்னிடம் பேசி கொண்டு தானே இருப்பார் தூங்கும் வரை ....கதவின் வெளியே வெறும் தரையில் தானே படுப்பார் ....கடமையை செய்யாத நான் உரிமையை எப்படி இவரிடம் எதிர் பார்க்க முடியும் ?'தனக்குள் நான்கு வருடம் கழித்து விவாதித்து கொண்டு இருந்தவள் ,"இது எனக்கும் என் புருஷனுக்கும் நடுவே உள்ள பிரச்சனை ....அவர் தப்பு செய்தார் ...சண்டை போட்டோம் .......அது எதற்கு உனக்கு ....அவர் வாய் திறந்து என்னை திட்டட்டும் ,நான் செய்ததற்கு அவர் விளக்கம் கேட்கட்டும் .....அவருக்கு உரிமை இருக்கு ....ஒண்ட வந்தவளுக்கு எல்லாம் பதில் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை ....."என்றாள் ரூபிணி .

"எதுமா உனக்கும் உன் புருஷனுக்குமான பிரச்சனை ....எதுமா அவர் செய்த தப்பு ....ஒஹ்ஹ அவர் தங்கை சோனா வாழ்க்கைக்காக உன்னை பணயம் வைத்ததா ?......."என்றாள் மதுரா

"ஆமா ....இவரை நம்பி என்னை கொடுத்த பிறகும் ,எவளோ ஒரு கேடு கெட்டவளுக்காக என்னை பணயமாய் வைத்தது எந்த விதத்தில் நியாயம் ??"என்றாள் ரூபிணி .

அவள் பேச்சை கேட்ட திவாகர் அன்று போலவே இன்றும் மரண காயம் பட்டவனாய் ,கண்ணீர் வழிய நின்றான் .

"ஓஹோ .....சோ திவாகர் தன் தங்கை வாழ்க்கைக்காக உன்னை பணயம் வைத்தது தப்பு ,மன்னிக்கவே முடியாத குற்றம் ,நீதி ,நேர்மை ,நியாயம் அற்ற செயல் என்று குற்றவாளி கூண்டில் இவரை நிறுத்தி தண்டனை வழங்கி கொண்டு இருக்கிறாய் அப்படி தானே ?"என்றாள் மேக்னா .

"யெஸ் யெஸ் யெஸ் ....என் பெண்மையை ,இவர் மேல் நான் வைத்த நம்பிக்கையை ,என் காதலை எந்த உரிமையில் இவர் பணயம் வைத்தார் ....என் காதல் என்ன விளையாட்டு பொருளா ...எனக்கு என்று மனம் இருக்கும் என்று புரியாதா .....இவர் கண்ணுக்கு அந்த பிசாசு தான் பெண்ணாய் தெரிந்ததா ?இவர் குடும்பத்திற்கு சோனா கொட்டி கொடுத்த பணம் பெரிசாய் தோன்றி இருந்தாலும் இவர் என்ன செய்து இருக்கணும் "எனக்கு என் ரூபிணி தான் முக்கியம் "என்று சொல்லி இருக்கணுமா இல்லையா ....இவர் ஸ்டெடியா இருந்து இருந்தால் யார் இவரை என்ன செய்து இருக்க முடியும் ...பாசம் .....பொல்லாத பாசம் கண்ணை மறைத்து விட்டது அதானே .....இதோ இப்பவும் இவர் குடும்பத்தினர் வந்து என் அண்ணனை மீண்டும் அந்த ராட்சஷியோடு சேர்த்து வைக்க என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளினார்கள் ...அவர்கள் உள்ளே வந்த போதே உள்ளே வர விடாமல் இருந்து இருந்தார் என்றால் ,நாய் மாதிரி என்னை யார் விரட்டி இருப்பார்கள் ?ஒரு முறையாவது என் கணவனாய் ,என் காதலனாய் யோசித்து செயல் பட்டு இருப்பாரா இவர் ????இவரை பொறுத்த வரை இவர் வீட்டில் இருக்கும் குப்பையும் நானும் ஒன்று .....தேவை படும் போது உபயோகம் செய்து ஏதாவது சூழ்நிலை வரும் போது தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பார் .....என் வீட்டுக்கு நான் தான் இளவரசி ....என்னை உள்ளங்கையில் வைத்து என் குடும்பமே தாங்கியது ....பணம் காசு இல்லையென்றாலும் என் அண்ணனின் தங்கையாக சந்தோசமாக தான் இருந்தேன் ....இவர் காதல் ,திருமணம் என்று வரும் வரை ....காதல் ஜெயிப்பது எங்கே தெரியுமா "ஐ லவ் யு "சொன்னவுடன் இல்லை ...வாழ்ந்து காட்டும் போது ....என்னை ராணியாக பார்த்து கொள்ள சொல்லவில்லை....தங்கத்தால் ,வைரத்தால் இழைக்க சொல்லவில்லை ...மாட மாளிகை கூட கோபுரம் என்று எல்லாம் கேட்கவில்லை . ...சக மனுஷியாக நடத்த தான் கேட்கிறேன் ,"உன் மானம் ,கெளரவம் ரெண்டுக்கும் எந்த இழுக்கும் வராத படி காப்பது என் கடன் "என்று தானே அக்னி முன் ,பல கோடி தேவர்கள் முன் ,உற்றம் ,சுற்றம் முன் உறுதிமொழி கொடுத்தார் .அதை ஏன் உடைத்தார் ?இவர் அம்மாவிற்கு பிள்ளையாக இருக்கட்டும் ....யார் வேண்டாம் என்று சொன்னது ?அதே சமயம் எனக்காக என்று இவர் இருக்கணும் என்று எதிர் பார்ப்பது குற்றமா ????காதலிக்கும் போது எல்லாம் சுத்தி சுத்தி வந்து என் மனதை கலைத்து ,எனக்காக உயிரையும் கொடுப்பேன் என்று டயலாக் விட்டவர் செய்த மிக பெரிய மரியாதை.....அந்த சோனா போன்ற பெண் ஜெயிக்க வைத்தது.மானம் ,ரோஷம் ,பெண்மை இல்லாதவள் முன் ஒருவனையே நினைத்து வாழும் என் வாழ்வை நிர்ணயிக்க விட்டது யாரு ....இவர் தானே ? "என்று எரிமலையாய் பொங்கி தீர்த்தாள் ரூபிணி


நீண்ட நேரம் அங்கு மௌனம் நிலவியது .எந்த விதமான திருமணமாக இருந்தாலும் " நீயே கதி" என்று தங்கள் குடும்பத்தை விட்டு வரும் எல்லா திருமணமான பெண்களின் நியாயமான குமுறல் தான் இது .கணவனோடு வாழாதவள் ,கணவனே எல்லாம் என்று வாழ்பவளை ஜெயிப்பதா ?வயிற்றில் வளர்ந்த குழந்தையை பணயம் வைப்பதா ?அக்னி முன் "சரி பாதியாக ஏற்கிறேன் "என்று உறுதிமொழி கொடுக்கும் கணவன்மார்கள் ,திருமணத்திற்கு பிறகு சக மனுஷியாக மனைவியை நடத்துவது இல்லை தான் .இங்கு இறந்து போவது இதயம் என்னும் போது எப்படி உயிர்ப்பிக்க முடியும் ?


"சரிங்க மேடம் .....ஒரு அண்ணணாய் இவர் தன் தங்கை வாழ்க்கைக்காக உன்னை பணயம் வைத்தது குற்றம் என்றால் ,உனக்காக ,உன் வாழ்க்கைக்காக என்னை பணயம் வைத்த உன் அண்ணன் செய்ததற்க்கு பெயர் என்னமா ?அதாவது நீ எதை திவாகர் செய்த குற்றம் என்று சொல்கிறாயோ அதையே உயர் திரு விஜய கருணாகரன் செய்தால் அப்படியே உயர்ந்த செயல் ஆகி விடுகிறதே அது எப்படிம்மா ?"என்றாள் அவள் எரிமலையாக

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 36(5)

mqdefault.jpg


"வாட் டூ யு மீன் ?"என்றாள் ரூபிணி அதிர்ந்தவளாய் .இதில் எங்கிருந்து அவள் அண்ணன் வந்தான் .

"ஐ மீன் வாட் ஐ சே ......உங்களுக்கு வந்தா ரத்தம் ,மத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னினா கொஞ்சமாவது நியாயம் வேண்டாம் .....நீ இங்கே உன் வாழ்க்கைக்கு நியாயம் கேட்டு வந்தே ....இப்போ நான் கேட்கிறேன் ரூபிணி என் வாழ்க்கைக்கு பதில் என்ன .....உன்னால் உன் அண்ணன் எனக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கு பதில் சொல்."என்றாள் அவள் கைகளை மார்பின் குறுக்கே காட்டியவாறு இவளை குற்றவாளி கூண்டில் ஏற்றி .

"ஏய் நீ என்ன லூசா ....முதலில் என் புருஷனை டார்லிங் ,அது இதுன்னு கூப்பிட்டுட்டு இப்போ என் அண்ணன் உனக்கு துரோகம் செய்துட்டாரு என்று சொல்றே ....என்னடி விளையாடி பாக்கறியா ....என் புருஷனை உன் ஆள் என்று சொன்ன உன் நாக்கை விட்டு வைச்சதே தப்பு ...எவ்வளவூ தைரியம் இருந்தால் என் அண்ணனை ......"என்றவளை கை தூக்கி நிறுத்தினாள் அவள் .

"அம்மா தாயே உன்ற கோனார் நோட்ஸ் விளக்கத்தை நிறுத்து ....செம போர் .....இந்த உங்க அண்ணனின் துரோகத்திற்கு ஆதாரம் ."என்று அவள் போட்டோ,வீடியோவை நீட்ட ,அதை பார்த்தவள் கண்கள் சுருங்கி அவற்றை தூக்கி வாயில்கதவுக்கு வெளியே விட்டு எறிந்தாள் .

"ஏய் !"என்று கையை ஓங்கி விட்ட அவளின் கோபம் கண்டு ஒரு நொடி சூர்யாவே அதிர்ந்து தான் போனான் என்னும் போது ரூபிணியின் நிலை கேட்க வேண்டுமா .

எதையும் பேசாது வெளியே விழுந்த போட்டோக்களை எடுத்து வந்த அவள் அவற்றை தன் ஹாண்ட் பாகில் வைத்து கொண்டாள் .

"லுக் நீ எவ்வளவூ தான் ஆதாரம் என்று போட்டோவை காட்டினாலும் அதை நம்ப வேறு கேணையை பாரு ...என் அண்ணனை பத்தி எனக்கு தெரியும் .....இது CGF உலகம் ....போத்திட்டு போ ....திவா கிளம்புங்க ...இவளை பேச விட்டு வேடிக்கையா பார்த்துட்டு இருக்கீங்க ....கிளம்புங்க திவா ."என்றாள் ரூபிணி .

"ஆமா உங்க அண்ணன் அப்படியே பிரிட்டிஷ் இளவரசர் ஹார்ரி .....அப்படியே ஜேம்ஸ் காமெரூன் அவதார் ,சங்கர் 2.O ரேஞ்சுக்கு CGF செய்து இவங்க அண்ணன் மேல் பழி சசுமத்தி அவர் சொத்துக்களை அப்படியே வாரி சுருட்டிக்க போறேன் ...தோ நிற்கிறாங்களே இவங்க ரெண்டு பேரோடு நானும் தான் உங்க அண்ணனோடு படித்தேன் ......"என்றவள் மீண்டும் பிளாஷ் பாக் ஆரம்பித்து அந்த நொடியில் நடந்தது வரை சொல்லி முடித்து ,"இது தான் நடந்தது ...நீ முதல் முறை நந்தி மாதிரி குறுக்கே வரவில்லை என்றால் அவர் சோனாவை மணந்தே இருக்க மாட்டார் ....இது எவ்வளவூ சிக்கல் நிறைந்த விஷயம் என்பதை புரிந்து கொள் ....இன்னும் இதை நம்பவில்லை என்றால் சேது அப்பா ,கனகா அம்மா,ஆல்வின் ,பாலாஜி நம்பர் இருக்கு தானே பேசி பாரு .....இந்த திருமணம் மேடை ஏற வேண்டும் ...அதுவரை உங்க அண்ணனிற்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்கட்டும் .....இல்லை சொல்லியே ஆவேன் என்றால் உன் அண்ணனின் வாழ்வை இந்த முறையும் கெடுத்து குட்டி சுவர் ஆக்கிய பெருமை உன்னையே வந்து சேரும் ...நீ மட்டும் உன் புருஷன் ,கணவன் ,குழந்தை ,குட்டி என்று சந்தோசமா வாழு .அந்த மனுஷன் கடைசி வரை உன் பிள்ளை குட்டிகளை வளர்த்துட்டு தியாக செம்மலாய் இருக்கட்டும் ....இத்தனை வருடம் தான் அவர் உன் குடும்பத்தை தாங்கினார் ...இனியாவது நிம்மதியாக அவர் மனைவி ,பிள்ளைகள் என்று வாழ்க்கை கிடைக்கட்டுமே .....யோசித்து முடிவூ செய் ."என்றாள் அவள் .

திகைத்து நின்று இருந்த ரூபிணி ,"இன்னைக்கு காலையில் உங்களை எல்லாம் பாலாஜி அண்ணா வீட்டில் பார்த்த ஞாபகம் .....சேது அப்பா ,அம்மா ,பாட்டி எல்லோரும் அண்ணாவை சூழ்ந்து நின்று இருந்தாங்க இல்லை ....அண்ணா கூட குனிஞ்சு ஏதோ பேப்பரில் சைன் போட ஆரம்பித்து இருந்தார் ."என்றாள் உள்ளே போய் விட்ட குரலில் .

"சோனாவை டைவோர்ஸ் செய்யும் பேப்பரில் தான் சைன் போட ஆரம்பித்தான் .....கன் டைம் என்பார்களே அப்படி செம ஷார்ப்பா வந்து அவன் வாழ்க்கையில் கும்மி அடிச்ச பெருமை உன்னையே சேரும் ரூபி ."என்றான் சூர்யா நக்கலாக .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'தன் அண்ணன் வாழ்வுக்கு மீண்டும் வில்லியாக தானே வந்து இருக்கிறோமா ?என்னை வைத்தே மீண்டும் அவனை வெல்ல பார்க்கிறார்களா ?'சற்று நேரம் யோசித்த ரூபிணி தன் மொபைலிலில் இருந்து சேதுவிற்கு கால் அடித்தாள் .

"அப்பா !"என்றாள் ரூபிணி கலங்கிய குரலில் .

"எங்கே போனே மா ...இங்க உன் அண்ணன் உன் புகுந்த வீட்டில் பேச போய் இருக்கான் ....நீ தூங்கிட்டு இருக்கேன்னு மெசேஜ் அனுப்பி இருந்தான் .வந்து பார்த்தால் ஆளையே காணோம் என்றதும் ஒரு கணம் இதயம் நின்னு போச்சு ....அவனுக்கு கால் போட்டாலும் எடுக்கலை ...நல்லவேளை நீயே கால் செய்துட்டே ..."என்றார் அவர் .

"இல்லைப்பா இங்கே ."என்றவள் திவா கடத்தப்பட்டது ,அங்கு நடந்ததை சொன்னாள் ."இவங்க சொல்றது உண்மையா அப்பா ....கருணா அண்ணாவா இப்படி ?.....எனக்காக தான் இவங்க வாழ்வை வாழ்வு தொடங்குவதற்கு முன்பே நின்று போனதா நான் தான் கருணா அண்ணா வாழ்க்கைக்கு வில்லியா வந்துட்டேனா அப்பா ...?"என்றாள் அழுகையோடு .

பெருமூச்சு விட்ட அவர்,"நீயும் ஒரு காரணம் அவ்வளவூ தான் ரூபிமா ...அவ சொன்னதெல்லாம் உண்மை தான் ....உன் வாழ்க்கைக்கு பிரச்சனை என்று ஒன்று வரவில்லை என்றால் ,கருணாவை யாருமே சொந்தம் கொண்டாடி இருக்க முடியாது தான் மகளே ....அவனும் திடமாக சோனாவை எதிர்த்து நின்று இருப்பான் உயிரே போவதாக இருந்தாலும் .....ஆனால் விதி அவன் வாழ்வில் ரொம்பவே விளையாடி விட்டது ....அதை சரி செய்ய தான் அவள் முயன்று கொண்டு இருக்கிறாள் ....நீ ,குடும்பம் என்று வரும் போது உன் அண்ணன் அவன் வாழ்க்கை என்ற ஒன்றினை நினைத்தே பார்க்க மாட்டான் என்பது உனக்கு தெரியாதா?....அவனுக்காக ,அவனை அவனை எதிர்த்தே போராடி கொண்டு இருக்கிறாள் அவள் ....என்ன செய்ய போகிறாய் மகளே ...."என்றார் சேது .

"ஒருமுறை தான் அப்பா அண்ணனை ,உங்களை எல்லாம் தலைகுனிய வைத்து விட்டேன் ...இனி என் உயிரே போக வேண்டும் என்றாலும் ,இவங்களை அண்ணனோடு சேர்க்காமல் விட மாட்டேன் அப்பா ....என் அண்ணன் எனக்கு எல்லாமுமாக இதுவரை இருந்து விட்டார் ....இனி அவருக்காக நான் இருப்பேன் அப்பா ...என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்க."என்றாள் ரூபிணி .

"அவன் வீட்டுக்கு வருவதற்கு முன் வீட்டுக்கு வந்து சேரு ரூபி மாப்பிளையோடு ...."என்றார் சேது உள் அர்த்தத்தோடு .

"நிச்சயம் அப்பா ...இனி அவரோடு சேர்ந்து தான் வருவேன் ....."என்றாள் ரூபிணியும்

அழைப்பை துண்டித்தவள் ,"ரொம்ப சாரி அண்ணி ...என்னால் தானே உங்க வாழ்வூ இப்படி ஆகி போச்சு ....ரொம்ப சாரி அண்ணி ."என்றாள் அவளை அணைத்து கொண்டு .

"ஆமாம் CNN ல சொன்னாங்க மா நான் கூட கேட்டேன் .....சோனாவிற்கு இந்த ஐடியா கொடுத்தது பி நீ தானமே ...சொன்னாங்க ."என்றாள் அவள்

"அண்ணி .."என்று சிணுங்கினாள் ரூபிணி .

"ஐயோ ஆத்தி ....உன் சோனா அண்ணி காதில் விழுந்தது நான் காலி .....பொறு கண்ணு ...இன்னும் உன் அண்ணன் லைன்னுக்கே வரலை ...அதற்குள் நீ உறவூ முறை எல்லாம் வச்சி கூப்பிட ஆரம்பித்து விட்டே .... இந்த அண்ணி என்ற பட்டம் அவரின் மனைவியாக என்னை அவர் ஆக்கிய பின் ஊர் அறிய உலகம் அறிய தர வேண்டிய என் உரிமை .அதை முதலில் உன் அண்ணன் தர தயார் ஆகட்டும் ....அப்புறம் என்னை அண்ணின்னு கூப்பிடு யார் வேண்டாம் என்றது . சீதையை மீட்க ஸ்ரீராமன் தான் ரூபி வர வேண்டும் ......ஆஞ்சநேயர் வந்து யூஸ் இல்லை ......மனைவி என்ற அங்கீகாரம் உன் அண்ணன் கொடுத்தால் தான் அதற்கான மரியாதை உண்டு .....இது எனக்கும் அவருக்குமான உரிமை போராட்டம் ரூபி .....பார்ப்போம் என் உரிமை எனக்கு கிடைக்கிறதா ...இல்லை கடைசி வரை போராட வேண்டி வருமா என்று ....நீ கிளம்பு மா ....அவுங்க வெயிட் செய்துட்டு இருக்காங்க பாரு ....என் லைப் பத்தி நீ கவலை படாதே ரூபி ...நீ உன் வாழ்வை இனி வாழ்க்கையாய் வாழ்ந்தாலே என் வாழ்வூ சரி ஆகி விடும் .....விட்டு கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை ...சூழ்நிலை மனிதர்களை தவறு செய்ய வைத்து விடும் தான் ....தவறே செய்யாத மனிதன் என்று இங்கு யாருமே இல்லை ......ஆனால் அதையே பிடித்து தொங்கி கொண்டு இருந்தால் ,ஒரு நாள் திரும்பி பார்த்தால் எல்லாமே இழந்து நிற்போம் .....ட்ரையல் அண்ட் error தான் வாழ்க்கையே ஏற்கனவே நாலு வருடத்தில் நீயும் அண்ணனும் நிறைய இழந்துடீங்க .....வாழ்க்கையை வாழ்ந்து பாரு ....தோற்க மாட்டே .....""என்றாள் அவள் புன்னகையுடன் .அந்த புன்னகை கண்களை எட்டவில்லை என்பதை அங்கு இருந்தவர்கள் உணர்ந்தனர் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"திவா !உங்களுக்கு உங்க பேமிலி கண் முன்னே இருக்கணுமா ...இல்லை வேறு நல்ல வேலை கிடைத்தால் செல்ல தயாரா?"என்றான் சூர்யா .

"இல்லங்க சார் ...நான் பாசம் வைக்கும் அளவூ அவங்க ஏத்தவங்க இல்லை ....அதை உணர எனக்கு சில இழப்புகளை சந்திக்க வேண்டி இருந்தது .....அவங்க முகத்தில் விழிக்க கூட நான் விரும்பலை சார் ...."என்றான் திவாகர் .

அவனை தட்டி கொடுத்த சூர்யா ,"ரிலாக்ஸ் மேன் .....இதுவும் கடந்து போகும் ....இந்த திருமணம் முடியட்டும் .....அது வரை செகண்ட் அனிமூன் போக ஏற்பாடு செய்து இருக்கோம் ....இப்போதைக்கு ஊட்டியில் என் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு ...அங்கே போய் என்ஜோய் செய்யுங்க ....திருமணம் முடிந்த பின் உங்களுக்கு சுவிசில் என் பிரான்ச் உங்கள் பொறுப்பு ..."என்றான் .

"ஐயோ சார் ...அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தகுதி ..."என்றவனை இடை மறித்தான் சூர்யா ,"பிறக்கும் போதே எல்லாரும் எல்லாத்தையும் கத்துட்டு பிறப்பதில்லை ...அவ சொன்னது போல் ட்ரையல் and ERROR தான் வாழ்க்கையே ....போங்க ...அங்கே அவன் வந்து தங்கையை காணவில்லை என்று ஊரை ரெண்டு படுத்துவதற்ற்கு முன் ,சோனா பேச்சை கேட்டு லூசுத்தனமாய் எதையாவது செய்து வைப்பதற்கு முன் எங்க பிளான் காப்பாத்துங்கஜி அதுவே போதும் ...நன்றி விளிம்பில் எல்லாம் பிறகு பார்த்துக்கலாம் ."என்றான் சூர்யா .

அவர்கள் கிளம்பி விட ,"சப்பா ...முடியலை .....இன்னும் இந்த திருமணம் முடியும் முன் மொத்த முடியும் கொட்டிடும் போல் இருக்கு .....என்னவெல்லாம் செய்ய வேண்டி கிடக்கு ....."என்றாள் மதுரா பொத்தென்று சோபாவில் அமர்ந்து .

"ஜஸ்ட் மிஸ்ஸு பேபி ..."என்றான் சூர்யா அவள் தோளை அணைத்து கொண்டு .

"எதுடா ..."என்றாள் மதுரா குழப்பத்துடன் .

"உனக்கு ரூபிணி கையில் விளக்கமாத்து அடி தான் டார்லிங் ...ஏதோ இந்த மாமனால் முடியாதது அவளாவது செய்வா என்று ரொம்பவே எதிர் பார்த்தேன் .....ஜஸ்ட் மிஸ்ஸு ....."என்றவன் எழுந்து ஓட ,ரூபிணி விட்டு சென்ற விளக்குமாறு எடுத்து கொண்டு அவனை ஓட ஓட வீட்டை சுற்றி ஓடினாள் மதுரா .

அதே சமயம் சோனாவின் மொபைல் ஒலிக்க ஆரம்பித்தது .

"ஹெலோ சோனா ஹியர் ...வூ இஸ் திஸ் ?"என்றாள் -அவள் அருகே சுமன் அவளை கொஞ்சியபடி .

"மேடம் !நான் தான் மேக்னா .....ரூபிணி பெட்டி படுக்கையுடன் திரும்ப வந்து இருக்கா மேடம் ."என்றாள் இவள் .

"அது என் பிளான் தான் ...அவ மாமியாருக்கு முன் போலவே பெட்டி பெட்டியா கொடுத்து பாடம் எடுத்து அனுப்பினேன் ...வாங்கின பணத்திற்கு சொன்ன வேலையை செய்துட்டாபோன முறை மாதிரியே இந்த முறையும் செய்துட்டா அந்த கிழவி.....இனி அந்த தெரு நாய் விஜய் என் காலடியில் தான் கிடப்பான் .....ரொம்பவே துள்ளிட்டான் ...அதை அடக்கலை என்றால் நான் சோனாவே கிடையாதே .....அவன் தான் தங்கை ,குடும்பம் ,பாசம் என்று முட்டாள் மாதிரி இருப்பவன் ஆச்சே ......அனுபவிக்கட்டும் ...... ....குட் ...."என்றாள் சோனா
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அடப்போங்க மேடம் ....உங்க பிளான்னால நின்று போக இருந்த மதுரா மேரேஜ் இப்போ நிச்சயம்மே முடிந்து விட்டது .இந்த வெள்ளிக்கிழமை சூர்யாவோடு அவளுக்கு மேரேஜ் ராணி மெய்யம்மை ஹாலில் நடக்க போகுது மேடம் ....இன்விடேஷன் வாட்சப்பில் அனுப்பி இருக்கேன் பாருங்க ... நல்ல சான்ஸ் மேடம் ....அவ திருமணம் நின்று இருக்கும் ....விஜய் ,மதுராவை கையோடு பிடித்து கள்ள தொடர்பு ,இருவரும் சேர்ந்து உங்களை கொல்ல ட்ரை செய்யறாங்க என்று ஆதாரத்தை ரெடி செஞ்சு வச்சி ,ஆதாரத்தோடு ஜெயிலில் போட்டு இருக்கலாம் ...அவ பெயரை டேமேஜ் செய்து எவனுமே அவளை கட்டாமல் செய்து இருக்கலாம் ....மிஸ் செய்துடீங்களே மேடம் ...இப்போ அவளுக்கு சூர்யா கூட மேரேஜ் .அந்த பிச்சைக்காரியை நீங்களே கோடீஸ்வரி ஆக்கிடீங்க .....இனிமேல் ராஜ வம்ச மருமகள் அந்த மதுரா தான் ...கடைசியில் உங்க பிளான் எல்லாம் சொதப்பி நீங்களே அவளை ஜெயிக்க வச்சிட்டு இருக்கீங்க மேடம் ."என்றாள் மேக்னா .

"நோ நோ நீ பொய் சொல்றே ...நோ அவளுக்கு மேரேஜ் ஆகவே கூடாது ...ஆகாது ."என்று க்ரீச்சிட்டாள் சோனா .

"உங்க ஆளுங்க அந்த மதுரா வீட்டுக்கு அருகே யாரவது இருந்தால் கேட்டு பாருங்க ...உண்மையை சொல்வாங்க ...அதன் பிறகாவது என்னை நம்புங்க மேடம் ....வைக்கட்டுக்குமா பை மேடம் ."என்றவள் அழைப்பை துண்டித்து விட வெறி பிடித்தவள் போல் இன்னொரு நம்பருக்கு அழைத்தாள் சோனா .

இவள் பேசுவதற்கும் எதிர் முனையில் இருந்தவன் ,"மேடம் நானே உங்களை கூப்பிடனும் என்று இருந்தேன் ...இப்போ தான் மேடம் மதுரா வீட்டில் இருந்து நிறைய ஐயர்ருங்க போறாங்க ...அவங்க கிட்டே விசாரித்தேன் ....மதுராக்ஷிக்கும் சூர்யாவுக்கும் நிச்சயம் ஆகிடுச்சாம் ...இந்த வெள்ளிக்கிழமை ராணி மெய்யம்மை ஹாலில் கல்யாணமாம் மேடம் .போட்டோ அனுப்பி வைக்கிறேன் பாருங்க ....."என்றான் அங்கு இருந்தவன் .

அவன் வாட்ஸாப்ப் புகைப்படங்களை அனுப்ப இவளின் வெறி அதிகமாகி அங்கு இருந்த பொருட்களை தூக்கி போட்டு உடைக்க ஆரம்பித்தாள் .

"ஹேய் என்னடி ...."என்றான் சுமன் தன் மதுபானத்தை சுவைத்த படி .

"நீயே பாரு அந்த சனியனை தூக்க உன்னால் முடியலை ..இப்போ அவ அந்த சூர்யாவிற்கு மனைவி ஆக போறாளாம் ..இந்த ஃப்ரைடே மேரேஜ் யு இடியட் ..."என்று எகிறியவள் அவன் தலைமுடியை கொத்தாய் பிடித்து வலுக்கொண்ட மட்டும் பிடித்து இழுத்தாள் .

அவளை ஒரே கையில் அடித்து கீழே தள்ளியவன் ,"எல்லா பிளான் போட்டாச்சு .....நாளைக்கு இதே மாதிரி என் பெட்டில் மது இருப்பா ....நான் விரும்பிய எதுவும் எனக்கு கிடைக்காமல் போகாது .....இதோ இவளை மாதிரி நாளைக்கு அவளும் என்னிடம் கெஞ்சுவாள் ,கதறுவாள் .அதை வீடியோ எடுத்து அவளுக்கு காவல் இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும் அனுப்ப தான் போகிறேன் ....."என்றவன் வெறி பிடித்த மிருகமாய் ஒரு பெண்ணின் குரல்வளையை நெறிக்க,அவள் உயிருக்காக போராடுவதை சட்டை செய்யத்தவளாய் ஆங்கில பாடலை சத்தமாய் ஒலிக்க விட்டு ஆடை நழுவ ஆட ஆரம்பித்தாள் சோனா .அங்கு அந்த பெண்ணின் உயிர் மெல்ல மெல்ல அடங்கியது .

"ச்சே ..........disgusting ....செத்து தொலைச்சுட்டா ......டேய் யார் அங்கே எடுத்து போய் பாய்லர்ல போட்டு எறிங்க ...சோனு டியர் நீ வா .....ஐ வாண்ட் யு நௌ ......"என்றவன் கை நீட்டினான் .

வக்கிரத்தின் மொத்த உருவம் அவன் தான் .அவன் பிளான் ஜெயிக்க போகிறதா ...காலம் தான் விடை சொல்ல வேண்டும் .

PENANCE WILL CONTINUE...
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 37

அதற்குள் மதுரா திரும்பி இருக்க ,"வாங்க மாப்பிள்ளை ...வா மா ..."என்றவாறு எழுந்து நின்றார் பவானி .
"அம்மா !குழந்தைங்க ..."என்றபடி வந்தாள் மேக்னா .

"கார்த்திக் ,ரகு ,பூரணி கூட ஒரே ஆட்டம் .....சாப்பாடு ஊட்டி இப்போ தான் தூங்க வச்சி இருக்காங்க உங்க அம்மாவும் ,பாட்டியும் .....அதோ அந்த அறையில் இருக்காங்க பாரு டா ...நீங்க திரும்பி வர தான் காத்திட்டு இருக்காங்க ."என்றார் பவானி .

மேக்னா குழந்தைகளிடம் சென்று விட ,"சாப்பாடு எடுத்து வைக்கவா மாப்பிள்ளை ?"என்றார் பவானி .

"வரும் வழியில் முடிச்சுட்டு தான் அத்தை வந்தோம் .....நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க ....நானும் ரகு மாதிரி உங்க மகன் தான் ....."என்றவனை கண்டு நிறைவாய் புன்னகைத்தார் அந்த தாய் .

"போன விஷயம் என்ன ஆச்சு ?"என்றார் சங்கரன் .

"ரூபிணி என்ற வண்டியை கிளப்பியாச்சு .....ஊட்டிக்கு போய்ட்டு வாங்கன்னு அனுப்பி வைச்சிட்டு தான் வரோம் ..."என்றாள் மதுரா .

"அப்போ நாளைக்கு முகூர்த்த புடவை எடுக்க போகலாமா ?"என்றார் பவானி

"போய் தானே மா ஆகணும் ....டைம் ரொம்ப ஷார்ட் டா இருக்கு ......"என்றாள் மதுரா தாயின் மடியில் தலை வைத்து .

"புடவைகளை இங்கே கொண்டு வர சொல்லிடலாம் இல்லை ..."என்றார் சங்கரன் .

"ஒத்து வராது மாமா ......ஒரே வேலை என்றால் வீட்டுக்கே வரவழைத்து விடுவேன் .....நிறைய வேலைகளை வைத்துட்டு தானே போறோம் .....இங்கே எடுத்து வருவதாய் இருந்தால் சிலது மட்டுமே எடுத்து வருவாங்க ....அங்கேயே போய் எடுத்தால் தான் சரி வரும் ...சரி டைம் ஆச்சு .....கிளம்பறேன் ...மீட் யூ மார்னிங் ."என்றவன் கிளம்ப ,நரசிம்மன் குடும்பமும் கிளம்பினார்கள் .

"கண்ணா !......"பவானியின் குரல் கண்ணீரோடு ஒலித்தது .

"ச்சூ !என்ன அம்மா இது ....என் ஹிட்லர் எங்கே ?.....எனக்கு தைரியம் கொடுக்க வேண்டியவங்களே நீங்க தான் ....ப்ளீஸ் மா நீங்க அழுது என்னையும் கோழை ஆகிடாதீங்க ......"என்றவளின் மொபைல் அழைத்து .
 
Status
Not open for further replies.
Top