All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
6849382509_b4ac2812b0_b.jpg

Ram_Charan_Teja_allu_arjun_reception_stills_08.JPG

காரை விட்டு இறங்க போன மதுராவை இறங்க விடாமல், கையை பிடித்து இழுத்து வம்பிழுத்து கொண்டு இருந்தான் சூர்யா .

((ஹனி உனக்கு கத்தி ,உருட்டுக்கட்டை ரெடியோ ரெடி கண்ணு)

மதுராவின் கன்னத்தை வருடியவன் "அப்போ உனக்கும் எனக்கும் இன்னைக்கு நிச்சயம் போலெ இருக்கு டியர் ......இந்த மாமனை தான் கட்டியே தீர்வது என்று ஒத்தை காலில் தவம் இருக்கே ...அப்படி தானே .........அது தான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் எல்லாம் முடிவூ ஆக போகுதே ....சாம்பிள் ஏதாவது கிடைக்குமா என் ரசகுல்லா ?சஹாரா பாலைவனம் மாதிரி மாமன் லிப்ஸ் காஞ்சி கிடக்கு ....கொஞ்சம் கருணை காட்டினால் காதல் பயிரை கஞ்சா செடி மாதிரி வளர வைக்கலாம் .........என்ன பேபி கண்ணை மூடிகவா ....ரொம்ப வெட்க வெட்கமா வருது "என்றவன் அவள் கையில் சிக்காமல் ,காரில் இருந்து இறங்கி வீட்டின் பின் புறம் ஓட ஆரம்பித்தான் .

அவனை போட்டு தள்ளும் வெறியோடு துரத்தி கொண்டு இருந்தாள் மதுரா .

அங்கு இருந்த நாற்காலி சுத்தி அவன் ஓட ,இவள் துரத்த என்று மியூசிக்கல் சேர் விளையாட்டு நடந்தது .

"பிடிடீ பார்க்கலாம் ....ஏய் நான் எல்லாம் உசைன் போல்ட்டுகே குரு .....என் கிட்டேயேவா குள்ள கத்திரி ....பிடிடீ பார்க்கலாம் .....அய் முடியாதே முடியாதே ..."என்று அவளை வெறுப்பேற்றி கொண்டு இருந்தான் சூர்யா .

ஓடி கொண்டு இருந்தவள் இருந்தவளின் கால்கள் சட்டென்று எதிலோ தடுக்க ,கீழே போனவளை ,"ஏய் பார்த்து ..."என்று பாய்ந்து சென்று தாங்கி பிடித்தான் சூர்யா .

(தம்தன தந்தன ............background மியூசிக் போட்டால் நம்ம நட்பூஸ் டென்ஷன் ஆகிடுவாங்க ........)

அந்த போஸில் உறைந்து நின்ற அந்த இருவரை கண்டு ஹார்ட் அட்டாக் வந்தவன் மாதிரி நெஞ்சை பிடித்து கொண்டு நின்றான் விஜய் .

(பாவம் ஹனி ...........ரொம்பவே ஹீரோவை படுத்தி எடுக்கறே )

அவனும் மதுராவை விடுவதாக காணோம் ...இவளும் அவன் அணைப்பில் ,கை வளைவில் இருந்து விலகுவதாக காணோம் ....எவ்வளவூ நேரம் அப்படியே நின்றார்களோ ,சூர்யாவின் கை வளைவில் இருந்தவாறே பாட ஆரம்பித்தாள் மதுரா .((இது எதுக்கு ?)

காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன
தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன
ஆ..ஆ..ஆ…ஆ…ஆ…
நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன
தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன
இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ
உன்னை அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ

……….காண வந்த காட்சி என்ன………..

காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா
ஆ..ஆ…ஆ…ஆ…ஆ….
காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா
காதல் உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா
உன் வாசல் நிலையும் மறந்து விடு வெள்ளி நிலாவே
அந்த மேகத்திலே மறைந்துவிடு வெள்ளி நிலாவே

………..காண வந்த காட்சி என்ன…………
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்று மதுரா பாடி முடிக்க ,"இன்னாது.....!!! மதியம் ஒரு மணிக்கு உனக்கு எங்கு இருந்து கண்ணு வெள்ளிநிலவூ வந்துச்சு .....ஆமா இப்போ எதற்கு இந்த பாடல்?............"என்றவன் மதுராவின் பார்வை தன்னை தாண்டி செல்வதை கண்டு,திரும்பியவன் அங்கு யாரும் இல்லாததை கண்டு ,"யாரு ..........விஜய் வந்து இருக்கானா ?..............அவனுக்கு வேற வேலையே இல்லையா ...அதான் நீ நான் தான் வேண்டும் ..............என்னை தான் லவ் செய்யரே என்று முடிவூ செய்து விட்டாய் தானே ....இன்னும் எதற்கு அவன் உன்னை சுத்தி சுத்தி வருகிறான் .............நீ எனக்கு மட்டுமே சொந்தம் மதுரா ....உன்னை யாருக்காகவும் ,எதற்காகவும் விட்டு கொடுக்க முடியாது ............இப்படியே அவன் செய்துட்டு இருந்தால் அவனை கொல்ல போவது நான் தான் ...யூ ஆர் மைன் .............புரிஞ்சுதா ............இனி அவனோடு பேசுவதை பார்த்தேன் மனுஷனாய் இருக்க மாட்டேன் மது ....திஸ் ஐஸ் யுவர் லாஸ்ட் அண்ட் பைனல் வார்னிங் ...."என்றான் சூர்யா கோபத்தோடு தன் போனை பார்த்தவாறே .

(திட்றவன் அவ முகத்தை பார்த்து திட்ட வேண்டியது தானே ...எதுக்கு போனை நோண்டிட்டு திட்டறான் ?)

உள்ளே போய் விட்ட குரலில் ,"இப்போ எதுக்கு நீங்க கோவிச்சுக்கறீங்க ............உங்களை தான் விரும்பறேன் ...உங்களை தான் திருமணம் செய்ய போகிறேன் ...அதற்கு தானே ஏற்பாடு உள்ளே நடந்துட்டு இருக்கு .............விஜய் என்னை சுத்தி வந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பு ஆக முடியும் ?............வாங்க கோவிச்சுக்காதீங்க ..........பெரியவங்க காத்திட்டு இருப்பாங்க ............."என்றாள் சுருதி இறங்கி போன குரலில் .

(எப்படி எல்லாம் வழிவது குழைவது எல்லாம் மதுரா கேரக்டர் சேர்த்தி இல்லாதது ஆச்சே ....எதுக்கு இந்த புள்ள பொங்கி எழாமல் ,அடங்கி போகுது ?என்னங்கடா நடக்குது இங்கே ??)

அவர்கள் உள்ளே சென்று விட அங்கு செடி மறைவில் இருந்து வெளி வந்த விஜய் முகம் சொல்லவொண்ணா வேதனையில் சுருங்கியது .அவன் வருத்தத்தை கண்ட ஒரு ஜோடி கண்ணில் பரம திருப்தி நிலவியது .

நீண்ட நெடிய பெருமூச்சை விட்டு அவன் வீட்டினுள் சென்ற போது சேது மதுராவை எண்ணெய் சட்டி இல்லாமலே தாளிக்க ஆரம்பித்து இருந்தார் .

"மதுரா !.....என்ன நடக்குது இங்கே ?"என்று உறுமினார் என்று சொன்னால் சரியாக இருக்குமோ

"மனுசங்க தான் நடக்கறாங்க பெரியப்பா ............முறைக்காதீங்க ...பிராமிஸ் .............இங்கே நடப்பவங்க எல்லாரும் மனிதர்கள் தான் பெரியப்பா ."என்றாள் மதுரா .

வந்த சிரிப்பை கட்டுப்படுத்த சூர்யா ,சந்திரா ,உத்தம் அவன் அம்மா மிகவும் போராடினார்கள் .

"அறிவூ பூர்வமா பேசிட்டதா நினைப்போ ?............உன் பேச்சில் இருக்கும் தெளிவூ உன் செயலில் இல்லையே .........நம்ம வீட்டு பெண்களுக்கு தெரியாத ,சுட்டு போட்டாலும் வரவே வராதா வேலை எல்லாம் தூள் படுத்தும் உனக்கு பேச சொல்லியா தரணும் ????.......என்ன முழிக்கறே ..............என்ன சொல்றேன் என்று புரியலையா ....இதோ உன்னை பெத்தவங்க இருக்காங்க .....இந்த குடும்பத்திற்கு மூத்தவர்களா நான் ,பாட்டி இருக்கோம் ....நீயா எங்கேயோ போறே ,வர .....வீட்டுக்கு வராம கண்டவங்க வீட்டில் தங்கறே .....பெத்தவங்க கிட்டே கூட சொல்லாம மாப்பிள்ளையை தேடி பிடிச்சு நிச்சய தட்டோடு வீட்டுக்கு வரே ......ஏன் எங்கேயாவது திருமணத்தையே முடிச்சிட்டு வந்து information கொடுக்க வேண்டியது தானே மதுரா .....எல்லாம் உன் இஷ்டம் போல் செய்வதற்கு நாங்க எதுக்கு பெத்தவங்க என்று இருக்கோம் ?"என்று அவளை வறுத்து எடுத்தார் .

இதற்கு எல்லாம் அசந்தால் அது மதுராவே இல்லையே ."ஒஹ்ஹ அப்படியா பெரியப்பா ...இதை எல்லாம் நம்ம குடும்ப பெண்கள் செய்யவே மாட்டாங்களா ...........ஐயோ அப்போ சோனாவும் ,பூரணியும் இந்த வீட்டு பெண்களே இல்லையா பெரியப்பா ?...........பதில் சொல்லுங்க பெரியப்பா ...ஏன் முழிக்கறீங்க ??? ஏன் பெரியப்பா ...இத்தனை கேள்வி என்னை கேட்டிங்களே இதில் ஒரு கேள்வியையாவது சோனாவையும் ,பூரணியையும் பார்த்து கேட்டு இருக்கிறீர்களா ?இல்லை எனக்கு மட்டும் தான் கோனார் நோட்ஸ்சா .... ஏன் கேட்கிறேன் என்றால் சோனா தான் விஜய்யின் ஆதி முதல் அந்தம் வரை விசாரித்து ,"கட்டினால் இந்த மஹாதேவன் இல்லையேல் மரண தேவன்" ரேஞ்சுக்கு தில்லாங்கடி வேலை எல்லாம் செய்து ,கர்ப்பிணி பெண்ணை பணயம் வைத்து திருமணம் செய்து கொண்டா ....இந்த பக்கம் பூரணி ....யாராவது காப்பாத்தினா தேங்க்ஸ் சொல்லணும் என்று என் அம்மா கத்து கொடுத்தாங்க ...லவ் சொல்ல இல்லையே .....அதாவது விரும்பறவனை மணக்க,அது உண்மையோ பொய்யோ இவர்கள் எது செய்தாலும் சரி ............அதையே நான் செய்தால் குத்தமா பெரியப்பா ???இது எந்த ஊரு நியாயம் என்று நீங்களே தீர்ப்பு சொல்லுங்க நாட்டாமை .?"என்றாள் .

ஒரு கணம் அதிர்ந்து விழித்தனர் அங்கு இருந்தவர்கள் .

"இன்னொரு விஷயம் .....எங்கே போனாலும் வந்தாலும் நான் நானாக தான் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை என் பெற்றோருக்கு என் மேல் இருக்கு ..........தவிர சொல்லாமல் எங்கும் சென்றதும் இல்லை .........செய்ததும் இல்லை .........இந்த தடவை நான் சொல்லும் நிலையிலும் இல்லை என்பது உங்களுக்கே தெரியும் என்னும் போது இந்த பேச்சே வீண் தான் பெரியப்பா ....சூர்யாவை நான் விரும்பறேன் ....அவரை வேண்டாம் என்று சொல்வதற்கு எந்த காரணமும் என்னிடம் இல்லை ...எங்கள் இருவருக்கும் பிடித்து இருக்கு ...அவர் வீட்டிலும் சம்மதித்து அவர் அம்மாவே எங்களுக்கு நிச்சயம் செய்ய வந்துட்டாங்க ....என் பெற்றோருக்கும் இவரை மறுக்க காரணம் இருக்காது ....சூர்யா அப்பா உடல் நலம் இல்லாமல் இருக்கார் ....சீக்கரம் திருமணத்தையும் பார்க்கணும் .மருமகளை மகளாய் நடத்தணும் ...........பேரன் ,பேத்திகளை கொஞ்சனும் என்று அவருக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன ......சூர்யாவை வேண்டாம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் சொல்லுங்க பார்க்கலாம் ...."என்றாள் மதுரா .

"உண்மை தான் மதுரா சூர்யாவை நீ திருமணம் செய்ய கூடாது என்பதற்கு ஆயிரம் காரணம் இல்லை -உனக்கு ஒரு காரணம் கூட கிடைக்காது தான் ...ஏனென்றால் பணம் பத்தும் செய்யும் ........பணத்தை பார்த்தால் பிணமும் வாயை திறக்கும் என்னும் போது வேறு எந்த காரணமும் ,வேறு யாரும் உன் கண்ணுக்கு தெரிய மாட்டாங்க தான் ....பணத்திற்காக எதை வேண்டும் என்றாலும் செய்ய துணிந்து விட்ட உன்னிடம் இனி என்ன பேசி என்ன பயன் ?"----யோசிக்காமல் கோபத்தில் வார்த்தைகளை விட்டார் சேது .

"அப்பா !.....அண்ணா !......என்னங்க !...............அங்கிள் !..................."என்று பலரின் குரல் திகைப்பில் ஒலித்தது .கோபத்தில் கண்கள் சிவக்க எழுந்தே விட்டான் சூர்யா .அவன் கை பிடித்து இழுத்து அமர வைத்த மதுரா ,தலையை மறுப்பாய் ஆட்டி அவனை அடக்கி வைத்தாள் .

அவருக்குமே பேசி விட்ட பிறகு தான்,அவர் சொல்லிய வார்த்தைகள் எவ்வளவூ பெரிய தவறு என்பது புரிந்து கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்தார் .

மற்றவர்கள் அவர் பேச்சிற்கு பல்வேறு விதமாய் ரியாக்ட் ஆகி கொண்டு இருக்க ---ரியாக்ட் ஆக வேண்டிய மதுராவின் கூர் விழிகள் விஜய்யின் முகத்தில் நிலை கொண்டு இருந்தது .முகம் முழுவதும் இறுகி விட கண்களால் அவனை குற்றம் சாட்டி கொண்டு இருந்தாள் .குற்றம் செய்தவர் ஒருத்தர் என்றால் ,அவள் நீதி கேட்டு கொண்டு இருந்தது விஜய்யிடம் .

'அவரை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாயா ?...அவர் குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்ல போகிறாய் ?அவர் குறைத்து சொன்ன என் பெண்மைக்கு சமாதானம் எங்கே ?'என்ற மௌன கேள்விகளை விஜய் நோக்கி விடுத்து கொண்டு இருந்தாள் மதுரா .

விஜய்யும் அவர் இந்த அளவுக்கு பேசுவார் என்று எதிர் பார்க்கவில்லை தான் .தந்தையாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர் ,அவனுக்காக தான் இப்படி பேசுகிறார் என்னும் போது ,பேசிய வார்த்தைகள் பெரிய தவறு தான் என்றாலும் அத்தனை பேரின் முன்னிலையில் அவரை எதிர்த்து பேச முடியாதவனாய் நின்றான் அவன் .தனியாக இருக்கும் போது 'ஏன் அப்பா இப்படி ?"என்று கேட்பது வேறு ,முன் பின் தெரியாத பலரின் முன் அவரை குற்றவாளியாக்கி கேள்வி கேட்பது வேறு .அது அவரின் கௌரவத்திற்கு இழுக்கு .....மகனாய் நிற்பதா ?காதலனாய் நிற்பதா என்ற சூழ்நிலை வர .....காதலி தன்னை தானே வழக்கம் போல் பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் மகனாய் மட்டுமே நின்றான் அந்த காதலன் .(விளங்கிடும் விஜய் ...நல்லவனா இரு ...அதுக்குன்னு இப்படியா )

மதுரா எதிர் பார்த்த பதில் வரவில்லை .....வந்து இருந்தால் தான் உலக அதிசயம் ...... கசந்த முறுவல் மதுராவின் முகத்தில் தோன்ற ,'உன்னை எனக்கு தெரியாதா ........எதிர் பார்த்தேன் .'என்ற பாவனையில் அமர்ந்து இருந்தாள் .

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்

முதலில் டன் கணக்கில் நன்றி செல்லம்ஸ் .....கெட் வெல்ன்னு இவ்வளவூ பேர் விஷ் .........கண்ணு வேர்க்குது மக்கா உங்க பாசத்தை பார்த்து .

இன்னும் பெட் ரெஸ்டில் தான் இருக்கேன் ....ஹெவி மெடிகேஷன்.சோ முடிந்த அளவூ தூங்கிட்டு இருக்கேன் .

ஆனா பாருங்க சூர்யா ஒரு புறம் ,நம்ம காதல் மன்னன் விஜய் ஒரு புறம் வந்து மேரேஜ் செஞ்சு வைய்யுங்கன்னு ஒரே அழுகை ....டயலாக் நண்டு மண்டையில் ஓடி ,குடைஞ்சு ஒரே இம்சை .....தூங்கவே முடியல ....சோ எனக்கு மண்டையில் ஓடிய நண்டினை உங்கள் மேல் விட்டு விட்டேன் ....துப்பாக்கி ,பாம் எல்லாம் எடுத்துட்டு வர வேண்டாம் ...

முன் சொன்னது போல் செவ்வாய் /வெள்ளி ud கொடுக்க உடல் நலம் இருந்தால் கொடுக்கிறேன் ...இல்லையென்றால் இன்று போல் முடிந்த போது கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிக்கறேன் .

மீண்டும் ரொம்ப ரொம்ப நன்றிகள் பல கோடி நட்பூஸ் ...
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM--36(2)

மதுரா எதிர் பார்த்த பதில் வரவில்லை .....வந்து இருந்தால் தான் உலக அதிசயம் ...... கசந்த முறுவல் மதுராவின் முகத்தில் தோன்ற ,'உன்னை எனக்கு தெரியாதா ........எதிர் பார்த்தேன் .'என்ற பாவனையில் அமர்ந்து இருந்தாள் .

vlcsnap-2019-01-24-23h38m46s498.png

சூர்யா அவள் கையை பிடித்து அழுத்த ,சுயநிலைக்கு வந்தவள் ,தன் தலையை உலுக்கி கொண்டு ,"ஆமா பெரியப்பா சூர்யா கோடீஸ்வரர் தான் ...அதுக்கு என்ன ?அவர் சம்பாதிக்காரர் பணக்காரராய் இருக்கிறார் .....அதற்காக நான் என்ன அண்ணாமலை படத்தில் ரஜினி ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆகிறது மாதிரி ஆக வேண்டும் என்று சொல்வீர்கள் போல் இருக்கே .....சத்தியமா சொல்றேன் பெரியப்பா ரெண்டு லட்சம் பாட்டு கொடுத்தா கூட "மதுரா ஏர்போட் ,மதுரா பிணவறை ,மதுரா ட்ரெயின் எல்லாம் ஷிவா மாதிரி என்னால் விட முடியாது ......சூர்யா என்னை திருமணம் செய்யணும் என்றால் "ஜெயம் ரவி" மாதிரி அவரை விவசாயம் செய்ய சொல்லணுமா ,இல்லை "முப்பது நாளில் முன்னூறு கோடி" செலவூ செய்ய சொல்லணுமா ....?.கொஞ்சம் இருங்க சூர்யா வயலில் இறங்குவது மாதிரி கற்பனை செய்து பாருங்க ...சகிக்காது .....இந்த விஷ பரிட்சை எல்லாம் தேவையா பெரியப்பா ?பாருங்க சும்மா சொன்னதற்கே பயபுள்ள முகம் எப்படி வெளுத்து போச்சுன்னு !"என்றவளின் பேச்சையும் ,சூர்யாவின் முகம் போன போக்கையும் பார்த்து அங்கு இருந்தவர்கள் சட்டென்று சிரித்து விட்டார்கள் .

மதுரா எதிர் பார்த்ததும் அது தானே ...கடினமான சூழ்நிலையை தன் விளையாட்டு பேச்சால் திசை திருப்பி இருக்கிறாள் என்பதை அங்கு இருந்தவர்கள் உணர்ந்து கொண்டார்கள் .

"ஜோக்ஸ் அபார்ட் பெரியப்பா .........சீரியஸ்சா பேசலாம் .....உங்க மகன் கிட்டேயே கேளுங்க ..........பணத்துக்காக நான் அலைபவளா என்று .....நான் மனுஷங்களை தான் பெரிய சொத்தா நினைக்கிறன் பெரியப்பா .....ஒரு பூகம்பம் ,சுனாமி ,இல்லை அரசாங்கம் முடிவூ எடுத்தா கோடீஸ்வரனும் பிச்சைக்காரன் தான்....நான் நீங்களோ ,இல்லை உங்க மகனோ இல்லை பெரியப்பா .....பணத்திற்காக ,குடும்பத்திற்காக நிறம் மாறுவதற்கு .....கடைசி வரை ஒன்றிலே நிலைத்து நிற்பவள் நான் அது எவ்வளவூ பெரிய தடைகள் கொண்டதாய் இருந்தாலும் ..... சரி உங்க பேச்சு படியே ...நம்ம குடும்ப பெண்கள் படியே நீங்க சொல்லும் பையனை மணக்க தயார் ....உங்க சாய்ஸ் யாரு ...உங்க மகன் ,இதோ நிற்கிறாரே விஜய் இவர் தானே .....சரி செய்துக்கறேன் ....ஆனா ஒண்ணு ......முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது ,விவாகரத்து செய்யாத போது ,பல லட்சம் மக்கள் சாட்சியாய் இருக்கும் போது ரெண்டாம் திருமணம் செல்லுபடியாகுமா பெரியப்பா ?....."என்றவள் விஜய்யயை பார்த்து கொண்டே சேதுவிடம் கேள்வி கேட்டாள் .

Bxp1lGNCcAEy0oR.jpg

"முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் ரெண்டாம் திருமணம் செய்தால் ஜெயில் நிச்சயம் பெரியப்பா ....உங்களுக்கு வேண்டும் என்றால் "ஜனகராஜ்" "நான் பிடிச்ச மாப்பிளை " படத்தில் தன் மாப்பிளை "நிழல்கள் ரவிக்கு" அடுத்த மனைவி தேடுவது போல், தேடும் பெருந்தன்மை இருக்கலாம் ....ஆனா அந்த படத்தில் கூட மாமனார் தன் மகள் செத்து போன பிறகு தான் இன்னொரு திருமணம் ஏற்பாடு செய்வார் ...ரங்காராவும் ,ஜெமினி கணேசனுக்கு,""கற்பகம் "படத்தில் அப்படி தான் நடத்துவார் ....அது அந்த காலம் .....இது இந்த காலம் என்று புதுசா ட்ரெண்ட் செட் செய்ய ட்ரை செய்யறீங்களா பெரியப்பா ....ஆனா சட்டம் சும்மா இருக்காதே .....சட்டம் சும்மா இருந்தாலும் "மாதருள் மாணிக்கம்" சோனா தேவியார் கையை கட்டிட்டு இருப்பாங்களா ?....இவங்க புருஷனை யாரும் லவ் செய்ய கூடாதாம் ...அப்படி செய்தால் பின்னால் சுமனை அனுப்புவாங்களாம் ....இப்படி எல்லாம் ஒரு சைக்கோவை கூட வச்சிட்டு எந்த தைரியத்தில் உங்க மகனுக்கு ,சாரி மருமகனுக்கு என்னை பெண் கேட்கறீங்க ???இத்தனை நாள் நானும் என் குடும்பமும் கஷ்டம் அனுபவிப்பதே உங்க மகனால் தானே ....இவர் லவ் செய்வாராம் ..இவர் மனைவி வந்து தையதக்க என்று குதிப்பாளாம் .....சரி ...இதை எல்லாம் கூட விடுங்க ....இந்தாங்க ....இது விவாகரத்து பத்திரம் ...."என்று உத்தம் கொடுத்த விவாகரத்து பத்திரத்தை, சேதுவின் கையில் கொடுத்தாள் மதுரா .

"என்ன பார்க்கறீங்க பெரியப்பா ..........விவாகரத்து பத்திரம் தான் ....நாங்க வெயிட் செய்யறோம் ......நீங்க உங்க ஆசை மக சோனா கிட்டே கூட சைன் வாங்க தேவையில்லை.....இதோ நிற்கிறாரே உங்க மருமகன் ...சாரி மகன் அவரிடம் ....இங்கேயே ...........இப்போவே விவாகரத்து பத்திரத்தில் சைன் போட சொல்லுங்க ........உங்க மகன் சைன் போடட்டும் .......இங்கேயே நிச்சயம் செய்துடலாம் ..........ஐயர் ரெடி ...தாலி ரெடி ...மணப்பெண் .........நான் ரெடியோ ரெடி ............என்ன பார்க்கறீங்க ...........இவ்வளவூ நேரம் நீதி ,நேர்மை ,நியாயம் என்று உங்க மகனுக்காக போராடினீங்க இல்லையா ........அதற்கான சுலபமான வழியை நானே காட்டிட்டேன் .....சைன் போட சொல்லுங்க பெரியப்பா ....."என்ற மதுரா கையை கட்டி கொண்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்து ஒரு பார்வையாளராய் மாறி போனாள் .





 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"குண்டுஊசி விழுந்தால் கூட சப்தம் எழும் " என்று சொல்வார்களே ...அந்த அளவூ நிசப்தம் அங்கு நிலவியது .மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களாய் மாறி ,விஜய் ,மதுரா ,சேது முகத்தினையே மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தார்கள் .

1551193754690.png


மதுராவும் தன் கண்களால் விஜய் முகத்தில் வந்து வந்து போய் கொண்டு இருந்த பல்வேறு ரியாக்ஷன்களை அளவெடுத்து கொண்டு இருந்தாள் .

அதன் பிறகு அங்கு நடந்தது "சம்சாரம் அது மின்சாரம் "படத்தில் மனோரமாவும் ,கமலா காமேஷ்சும் விவாகரத்து பத்திரத்தில் அவர்கள் வீட்டு பெண்ணிடம் கையெழுத்து வாங்க முயன்றதை போன்ற சீன் தான் .என்ன அங்கே இருவர் தான் அந்த பெண்ணை படுத்தி எடுத்தார்கள் .ஆனால் அங்கே அந்த ஹாலில் சேது ,மரகதம் ,ஆல்வின் ,பாலாஜி என்று ஒரு பட்டாளமே அவனை சூழ்ந்து நின்று ஒருவழி ஆக்கி கொண்டு இருந்தார்கள் .

"ஹேய் ...ஹேய் உன்னை தாண்டி ............ஏதோ ஒரு படத்தில் இந்த சீன் வந்தா மாதிரி இல்லை ...ஆள் ஆளுக்கு விஜய் கன்னத்தை தங்கள் பக்கம் திருப்பி திருப்பியே அவன் கழுத்து உடைந்துடும் போல் இருக்கேடீ ...."என்று மதுராவின் பக்கம் சரிந்து அமர்ந்து கமெண்ட் அடித்து கொண்டு இருந்தான் சூர்யா .

"என்ன சார் நக்கலா ?"என்றாள் மதுரா

"என்ஜோய் பண்றேன் டியர் ......என்ன ஒரு சீன் ............பெட் கட்டலாமா டியர் ....இந்த தடவை சற்றும் மனம் தளராத விக்ரமாதித்த மஹாராஜா மாதிரி விஜய்,உன்னை கரம் பிடிக்க மற்றவர்கள் ஏற்றி விடும் ஏணியில் ஏறியாவது உனக்கு மாலை போடுவான் .....என்ன சொல்றே .....ஆனா ஒண்ணு ........அவன் ஜெயிச்சிட்டா நான் தோத்துடுவேன் .....அப்புறம் உன் மேல் எனக்கு இருக்கும் லவ்ஸ் என்ன ஆவது ?"என்றவனை முறைத்த மதுரா அவன் தொடையில் நன்றாக கிள்ளி வைத்தாள்

"ஆஅ எருமை ...வலிக்குதுடீ ...............ஏன்டீ இப்படி டைனோசர் நகம் மாதிரி இவ்வளவூ பெரிசா ,பேய் மாதிரி வளர்த்து வைத்து இருக்கே ......எருமை ...ரத்தமே வருது ....."என்றான் சூர்யா .

"அடங்குடா கொரில்லா ........மூடிட்டு அங்கே பாரு ...........காமெடி ஷோவை ...... ஏணி என்ன நீ போக்ரேளின் மெஷின் வைத்து தள்ளினாலும் அந்த வண்டி ,சோனா ,ரூபிணி என்ற platform விட்டு நகராது சின்ன தம்பி .......மலையில் மோதி மண்டை உடைந்து நிற்க போறாங்க ....."என்றாள் மதுரா .

"ஏய் அவன் உன்னை லவ் செய்யறவன்டீ .....கொஞ்சமாவது அவன் லவ்க்கு மரியாதையை கொடுடீ ...."என்றான் சூர்யா அதிர்ந்தவனாய் .

"சூர்யா !....லவ் இஸ் பார்ட் ஆப் லைப் ....அவ்வளவூ தான் .............அதுவே வாழ்க்கை இல்லை ....காதலையும் தாண்டி வாழ்க்கை ,குடும்பம்,நம்மளை நம்பி இருக்கும் ஜீவன்கள் என்று பலது இருக்குடா ......குடும்பத்திற்கு பிடிக்காது ,குடும்பத்திற்காக என்று எத்தனை காதல்கள் தோல்வியில் முடிந்து இருக்கிறது .....அப்படி தோற்றவர்கள் எல்லாம் உயிர் போவது ஒன்று தான் வழி என்றால் உலகத்தில் யாருமே மிஞ்ச மாட்டார்கள் ......காதலை உள்ளே போட்டு புதைத்து விட்டு குடும்பத்திற்காக வாழ்க்கை ஏற்பவர்களே இங்கு அதிகம் ...ஏன் நீயும் ,அவனுமே உங்கள் குடும்பத்திற்காக என்று என் மேல் காதலை இருந்த காதலை மறைத்து நிமிர்ந்தவர்கள் தானேடா ............நானும்..............விட்டு தள்ளு ...... ......விஜய் குணத்திற்கு "இந்தேர் இண்டஸ்ட்ரீஸ்" விட்டு வந்ததே பெரிசு .....அவன் சைன் போடும் முன் நாலையும் அவன் யோசித்து பார்த்து ,சாதக பாதகங்களை பார்த்துட்டு தான் போட முடியும் .....எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவூ செய்யும் விஷயம் இது இல்லை ...இவர்கள் பேசி விட்டு போய் விடுவார்கள் ....ஆனால் ரூபிணியின் வாழ்வில் ,அவள் எதிர்காலத்தில் இனி நடக்க போகும் எதற்கும் அடிப்படை இந்த சைன் என்பதை மறக்காதே .....சோனா எப்படி ரியாக்ட் செய்வாள் என்று தெரியாது ....ஒருவேளை வெறி பிடித்தவள் ரூபிணியை கொன்று விட்டால் ,விஜய் குற்ற உணர்ச்சியில் உருக்குலைந்து போய் விடுவான் .....இது வரை ரொம்ப அனுபவித்து விட்டான் .....இனிமேலாவது அவன் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் .........இந்த மேட்டர் பெரியப்பா நினைப்பது போல் எல்லாம் சுலபம் அல்ல ....."என்றவளை இடை மாறித்தான் சூர்யா .

"நிறுத்துடீ உன் கதாகாலக்ஷேபத்தை ....அங்கே பாரு ....சைன் போட பென் எடுத்துட்டான் விஜய் ..........."என்று சூர்யா அலற ,நிமிர்ந்து அமர்ந்தாள் மதுரா உட்சபட்ச திகைப்புடன் .

கண்விழிகள் வெளியே விழுந்து விடும் அளவுக்கு அவள் கண்கள் திகைப்பில் விரிந்தன .காண்பதை அவளால் நம்ப முடியவில்லை .விஜய் விவாகரத்து பாத்திரத்தில் சைன் போட போகிறானா ........நெஞ்சை கையில் பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள் மதுரா .

பென் கையில் எடுத்தவன் ,ஒருமுறை நிமிர்ந்து மதுராவை பார்த்து புன்னகைத்தான் .இரு விழிகளும் கூர் வாட்களாய் மாறி ஒன்றை ஒன்று தாக்கி கொண்டு இருந்தது .முகம் பிரகாசமாய் ஒளிர ,பல வருட தவத்திற்கு கிடைக்க போகும் பரிசனை ஏற்று கொள்பவன் போல் கீழே குனிந்து சைன் போட ஆரம்பித்தான்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அண்ணா !"என்ற குரல் வாயிலில் இருந்து கேட்க ,அவன் கைகள் பேனாவோடு ,பத்திரத்தையும் கீழே நழுவ விட்டது .
1551194041200.png 1551194105116.png

காதல் பின்னுக்கு போய் மதுரா சொன்ன குடும்பம் மீண்டும் முன்னுக்கு வந்து சீன பெருஞ்சுவராய் அவன் முன் நின்றது .அதிர்ந்து திரும்பியவன் கையில் பெட்டியோடு ,அழுகையோடு நின்ற ரூபிணியை அவன் மட்டும் இல்லை அங்கு இருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை .

"ரூபா !.............என்னமா .............ஏன்டா அழுவறே ..............மாப்பிளை எங்கே ....என்ன நீ மட்டும் பெட்டி படுக்கையோடு வந்து நிற்கறே ?"என்றான்ஓடி வந்து தன் மார்பில் புகுந்து அழும் தங்கையை அணைத்தவாறு .

".அவரோட அம்மா ,அப்பா ,தம்பி ..........என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிட்டாங்க அண்ணா ..........உங்களுக்கும் சோனாவிற்கும் ஏதோ பிரச்சனையாம் .....சோனாவோடு நீங்க வாழ்ந்தா ,மீண்டும் "இந்தர் இண்டஸ்ட்ரீஸ் "க்கு சென்றால் மட்டுமே நான் அந்த வீட்டினுள் நுழைய முடியுமாம் ...அதுவும் ரெண்டே நாளில் .....இல்லைன்னா என்னை விவாகரத்து செய்துட்டு அவங்க மகனுக்கு இன்னொரு பெண்ணை கட்டுவார்களாம் அண்ணா ...."என்றவள் அண்ணனை அணைத்து கொண்டு அழுதாள் .

(கத்தி போய் வாலு வந்தது டும் டும் டும் .)

"நீ வா கண்ணா ....யார் உன்னை வீட்டை விட்டு அனுப்புவது என்று பார்க்கிறேன் .............வா ..."என்று அவளை இழுத்து கொண்டு விஜய் கிளம்ப அவனை ,தடுத்தாள் ரூபிணி .

"அண்ணா !....இன்னைக்கு வேண்டாம் அண்ணா ...ரொம்ப பேசிட்டாங்க ....மீண்டும் அவங்க முகத்தில் விழிக்க எல்லாம் எனக்கு சக்தி இல்லை .........ரெண்டு நாள் பொறு அண்ணா .....இந்த வாழ்க்கை வேண்டுமா ...இல்லை மொத்தமாய் தலை முழுகிடலாமா என்று நான் யோசிக்கணும் ...என்னை நீ இருக்கும் வீட்டுக்கு கூட்டி போ அண்ணா .....அப்படியே மெடிக்கல் ஷாப்பில் இருந்து ரெண்டு தூக்க மாத்திரை வாங்கி கொடு ...இதை எல்லாம் மறந்துட்டு கொஞ்ச நேரமாவது தூங்கணும் போல் இருக்கு ...."என்றவளை அழைத்து கொண்டு அவன் கிளம்பி விட ,வீட்டு வாசலில் அனாதையாக கேட்பார் அற்று கிடந்தது விவாகரத்து பத்திரம் .
வாழ்வில் காதல் ஒரு பகுதி மட்டும் தான் ......அதுவே முழு வாழ்க்கை இல்லை என்ற நிதர்சனம் அங்கே மீண்டும் அரங்கேறியது .கதைகளில் ,படங்களில் வேண்டும் என்றால் தெய்வீக காதல் வெற்றியில் முடியலாம் ....ஆனால் உண்மை அவரவர் வாழ்க்கையில் தான் இருக்கும் .

பருவம் வந்த அனைவருமே காதலிப்பதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை


என்ற கண்ணதாசனின் வரிகள் வாழ்க்கையின் நிதர்சனத்தை நான்கே வரிகளில் சொல்லி விடுகிறது .

மற்றவர்களின் அதிர்ந்த முகத்தை கண்ட மதுராவிற்கு சிரிப்பதா அழுவதா என்றே விளங்கவில்லை .

"என்னடீ .....ஒரு ரியாக்ஷன்னும் காட்ட மாட்டேங்கிறே ?..."என்றான் சூர்யா .

"என்ன ரியாக்ஷன் காட்டணும் என்று நீ எதிர்பார்க்கிறே பிரபுக்குட்டி .....ரூபிணி வந்ததும்,அவனுக்காக,அவன் காதல் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக என்னுடன் போராடி கொண்டு இருப்பவர்களையும் மறந்து விட்டு விஜய் செல்வதை கண்டதும் அவன் சென்றதும் சேது பெரியப்பா மாதிரி நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சி ரியாக்ஷன் காட்டணுமா ....இல்லை என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டு இருக்கும் என் பெற்றோர் கொடுக்கும் ரியாக்ஷன் வேண்டுமா ?இல்லை இந்த சந்தில் என்னை ஆழம் பார்க்கும் ,இந்த பூனையும் பால் குடிக்குமா என்று முகத்தை வைத்து இருக்கும் உன் ரியாக்ஷன் வேண்டுமா ?"என்றாள் மதுரா சூர்யாவின் காதை திருகியவாறு .

"எம்மா தாயே ...ஆளை விடு .....நீயாச்சு .....அவங்களாச்சு ....."என்றவன் கை எடுத்து கும்பிட ,புன்னகைத்தவாறு அவனை விட்டு சேதுவின் அருகே சென்று அவரின் தோளில் கை வைத்தாள் மதுரா .

"மதுராம்மா ......சாரி டா கண்ணா ...நான் ஏதோ நல்லது செய்ய நினைத்தேன் .....ஆனா இது ...இவன் .....கடவுளே .....சூர்யா வீட்டினர் முன் வேறு ..........சாரிடா ....என்னை மன்னிச்சுடு ....."என்றார் சேது கண்கள் கலங்கியவராக .

"என்ன பெரியப்பா இது ...சின்ன பிள்ளை மாதிரி .....எனக்கு உங்களை பத்தி தெரியாதா என்ன ....பாலச்சந்தரின் "அவள் ஒரு தொடர்கதை " மாதிரி உங்க மகன் விஜய் "அவர் ஒரு தொடர்கதை " பார்ட் 2.அவர் குடும்ப சேவை இப்போதைக்கு நிற்காது .....இதை எல்லாம் நான் எதிர் பார்த்தது தான் பெரியப்பா ....."என்றாள் மதுரா .

"என்னை மன்னிச்சுடுங்க சூர்யா தம்பி ....நீங்களும் தான்மா .....என்னால் நிற்க இருந்த இந்த நிச்சயத்தை நானே நடத்தி வைத்துடறேன் ....."என்றார் சேது பெருமூச்சுடன் .

"என்ன அங்கிள் ...உங்க மகனின் தெய்வீக காதல் என்னாவது ?"என்றான் சூர்யா நக்கலாக .

"பிரபு ....கிண்டல் பண்ணாதே ....அவரே நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறார் .....கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக விடு ....ஒரே சமயத்தில் பல அதிர்ச்சிகளை தாங்க மாட்டார் .....அங்கிள் !.ஆண்ட்டி ....அம்மா !அப்பா !....எல்லோரும் உட்காருங்க .....உத்தம் அண்ணா வெளியே ஒரு ரவுண்ட்ஸ் பார்த்துடுங்க ....கதவூ ,ஜன்னல் எல்லாம் மூடிடுங்க ..."என்றவளை கண்டு அனைவரும் விழித்தனர் .

அவள் சொன்னதை தட்டாமல் உத்தம் செய்து முடிக்க ,"அங்கிள் !இது வரை உங்க மகன் காதல் பிரச்சனை பெரிசு என்று நினைத்து என்னிடம் வாதிட்டு கொண்டு இருந்தீர்கள் ....ஆனா இங்கு பிரச்சனையே வேறு அங்கிள் .....நீங்க நினைப்பது போல் உங்க மகன் காதலை விட என் பிரச்சனை பெரிசு அங்கிள் ........"என்றவள் கண் காட்ட சூர்யா தன் பையில் இருந்த போட்டோக்களை எடுத்து போட ஆரம்பித்தான் .

பார்த்தவர்கள் பதறி அடித்து எழுந்து நின்றனர் ."மது !"என்று எல்லா குரல்களும் ஒரு சேர அலறியது பார்ப்பதை நம்ப முடியாமல் .அடுத்த அதிர்ச்சியை தாங்கி நின்றது வீடியோ .

"என்னடீ இது ?விஜய்யா இப்படி ?...........ச்சே 'என்றார் பவானி

"நாங்க சொல்றோம் ...."என்ற குரல் வாயிலில் இருந்து கேட்க அங்கு நரசிம்ம ரெட்டி அவர் குடும்பத்துடன் நின்றார் .

மேக்னா உடன் உள்ளே வந்த குழந்தைகளை கண்டவர்கள் முக ஜாடையை பார்த்து பேய் விழி விழித்தனர் .

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 36(3)

போட்டோவை பார்த்தவர்கள் பதறி அடித்து எழுந்து நின்றனர் ."மது !"என்று எல்லா குரல்களும் ஒரு சேர அலறியது பார்ப்பதை நம்ப முடியாமல் .அடுத்த அதிர்ச்சியை தாங்கி நின்றது வீடியோ .

"என்னடீ இது ?விஜய்யா இப்படி ?...........ச்சே 'என்றார் பவானி

"நாங்க சொல்றோம் ...."என்ற குரல் வாயிலில் இருந்து கேட்க அங்கு நரசிம்ம ரெட்டி அவர் குடும்பத்துடன் நின்றார் .

மேக்னா உடன் உள்ளே வந்த குழந்தைகளை கண்டவர்கள் முக ஜாடையை பார்த்து பேய் விழி விழித்தனர் .

"எருமை ...நான் தான் உன்னை இங்கே வர வேண்டாம் என்று சொன்னேன் தானே .....உன்னையும் ,பிள்ளைகளையும் யாரவது பார்த்து தொலைத்தால் ...இருக்கும் பிரச்சனை போதாது என்று நீ வேற புதுசா இழுத்து விடாதே .....முதலில் கிளம்புடீ ...அந்த சோனா ,சுமன் கண்ணில் பட்டு தொலைக்க போறே ..."என்றாள் மதுரா .

"அடி போடி ....லூசு ....இந்த அம்மா மட்டும் எல்லா உதவியும் ,எல்லோருக்கும் செஞ்சு நல்ல பெயர் வாங்கிப்பாங்க .... நாங்க நன்றி கடனை அடைக்க முடியாமல் காலம் முழுதும் திணறிட்டு இருக்கணும் .....உன் வாழ்வை ,இந்த திருமணத்தை நடத்த வேண்டியது எங்க பொறுப்புடீ என் பருப்பு ..."என்றாள் மேக்னா .

"எல்லோரும் உட்காருங்க ..."என்ற நரசிம்ம ரெட்டி அந்த போட்டோக்கள் ,வீடியோ ஆதாரங்களை விம் சபீனா ஹார்பிக் போட்டு விளக்காத குறையாய் விளக்கினார் .(அவர் விளக்கி என்ன பயன் ---என்ன விளக்கினார் என்று தெரிந்தால் தானே ...தி எண்டு போடும் வரை ஹனி அதை சொல்ல போவதில்லை)

"எல்லாம் விதி பவானி .....இது கடவுளின் சித்தம் .....மதுராவின் வாழ்க்கை சிறக்க சூர்யா உடன் இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் .....இதை விட்டால் வேறு வழி ஏதாவது இருக்கிறதா .....இருந்தால் சொல்லுங்க .....இந்த பொண்ணுங்க ரெண்டுமே வாழனும் ....அதுக்கு தான் மதுரா போராடிட்டு இருக்கா .....இப்போ புரியுதா சேது .....எங்கே நீங்க தோற்கறீங்க என்று ......உங்க வழி இங்கே ஒத்து வராது .....சில பல அதிரடி முடிவுகள் எடுத்தால் தான் ரெண்டு பெண்களும் வாழ முடியும் ."என்றார் நரசிம்ம ரெட்டி .

"மகளை வந்து அணைத்து கொண்ட பவானி ,"நாங்க தான் தப்பு செய்துட்டோம் இல்லை .....இல்லை என்றால் இந்நேரம் நீ ..........."என்று கலங்கியவரை கண்டு புன்னகைத்த மதுரா ,"நீங்க என்னமா செய்வீங்க ...தோ இந்த டவுசர் பாண்டி என் கிட்டே மாட்டணும் என்பது இவன் விதி ...வச்சி செஞ்சுடலாம் ....கவலை படாதீங்க .....ஒரு விஷயம் இங்கே தாத்தா சொன்னது நம்மை தாண்டி வேறு யாருக்கும் தெரிய கூடாது ....கடைசி நிமிடம் வரை யாரும் ,எது நடந்தாலும் வாயை திறக்காதீங்க ...."என்றாள் மதுரா .

அவள் சொன்னதை ஏற்று கொண்ட அனைவரும் இரு பெண்களின் வாழ்வும் பணயத்தில் இருப்பதை கண்டு ,உலகில் உள்ள அனைத்து கடவுள்களையும் அவர்கள் இருவருக்கும் துணை நிற்க வேண்டி கொண்டார்கள் .

"ஒகே பா ...நாழி ஆவுறது ....ஐயருங்க பாவம் .....உத்தம் கிட்டே வெளியே மாடிட்டி முழிச்சிட்டு இருக்காங்க .....சோ மூன்று நிச்சயம் முடித்து விடலாமா ?"என்றாள் மதுரா .
Rinas-Venue.png

மணப்பெண்கள் மூவரும் மணமகன்கள் வீட்டில் கொடுத்த பட்டு புடவை மாற்றி வர மூன்று ஜோடிகளுக்கு அங்கு நிச்சயம் ஆனது . .சந்திரா -ரகு ,கார்த்திக் -அன்னபூரணி ,மதுரா ---சூர்யா என்று மூன்று ஜோடிகளுக்கும் அங்கு நிச்சயம் செய்யப்பட்டது .:eek::eek::eek::eek:(ஹனி வச்சுட்டியே விஜய்க்கு ஆப்பு ) ....
fc94a293fa90cb0112078bbaf88dff7d.jpg

"நிகழும் விளம்பி வருடம் ,தை மாதம் ....வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 15ஆம் நாள் பெரியோர்களால் நிச்யத்தியவண்ணம் ஜெய்ப்பூர் வாதான் ரத்தன் சிங் அவர்களின் பேரனும் ,ஸ்ரீலக்ஸ்மி ரத்தன் சிங் அவர்களின் குமாரனும் ஆன சிரஞ்சீவி சூர்யா பிரதாப் ரத்தன் சிங்க் அவர்களுக்கும் ,சென்னை சங்கரன் ,பவானி தம்பதியரின் திருநிறை செல்வி ஸௌபாக்யவதி மதுரக்ஷிக்கும் 9.00-10.30குள் கன்னிகா தானம் செய்ய முடிவூ செய்ய பட்டு உள்ளது .தட்டை மாத்திகோங்கோ ...."என்றார் ஐயர்
1551422411337.png

1551422473237.png

இரு குடும்பமும் தட்டை மாற்றி கொள்ள விருந்து முடிந்து கிளம்பிய சேதுவிடம் ,திருமண அழைப்பிதழை நீட்டினான் சூர்யா புன்னகையுடன் .((என்னது திருமண அழைப்பிதழா .....இப்போ தானே நிச்சயம் முடிஞ்சுது ....அதற்குள் பத்திரிக்கையே கொடுத்துட்டியே சூர்யா ...போச்சு போச்சு .மதுரா கழுத்தில் தாலி கட்டாம ஓய மாட்டான் போல் இருக்கே )


"ரொம்ப பாஸ்ட் தான் ..."என்றார் சேது நக்கலாக .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ரொம்ப லேட் அப்பா இதுவே ......நான் என்ன உங்க மகன் என்று நினைத்தீர்களா ...கையில் கிடைத்த வைரத்தை தவற விட ......ரொம்ப இழந்துட்டேன் ....இனிமேல் அதை சரி செய்யணும் இல்லை .....அதான் "என்றான் சூர்யா .

பெருமூச்சை வெளியிட்ட சேது ,"அவன் கொஞ்சம் தனக்காகவும் வாழ்ந்து இருந்தால் இத்தனை பேருக்கு ஏன் பிரச்சனை வர போகிறது .....எல்லாம் கடவுள் விட்ட வழி ."என்றார் .

"நாளைக்கு புடவை எடுக்க போறேம் ....."என்றான் சூர்யா .

"சரி ..."தலை அசைபோடு அவர்கள் கிளம்பி விட ,அவர்களை வழி அனுப்பி விட்டு உள்ளே வந்த சூர்யா ,"ஹாய் பொண்டாட்டி .....அடுத்து என்ன என் தேவியாரின் பிளான் ....தங்கள் அடிமை இட்ட பணி செய்ய காத்து இருக்கேன் .....செப்பு என் டார்லிங் ..."என்றான் அவளை அணைத்தவாறு .(இந்த அவள் ---எவள் ஹனி ?பெயரை சொல்லவே இல்லையே செல்லம் )

"உனக்கு பார்ம் ஹவுஸ் இருக்கு தானே சின்னத்தம்பி ?"என்றாள் மதுரா .

"அதுக்குள் என்ன அவசரம் ....பிரியாணி எல்லாம் மேரேஜ்க்கு அப்புறம் தான் செல்லம் ."என்றான் சூர்யா .

"எருமை ....விவஸ்தை இருக்கா பாரு ....அத்தனை பேரின் முன் மானத்தை வங்காதேடா தடிமாடு ....உன்னை பார்த்து எல்லாம் கெட்டு போக போகுதுங்க ...."என்றாள் மதுரா கடுப்போடு .

"சரி சரி ....அடுத்து எங்கே ....."என்றான் சூர்யா .

"ஒரு கிட்நாப் செய்யணும் ....."என்றாள் மேக்னா .

"உங்க ரெண்டு பேருக்கு(இந்த ரெண்டு எந்த ரெண்டு பா சூர்யா ?) திருமணம் ஆவதற்குள் இன்னும் எத்தனை குற்றத்தை எல்லாம் நான் செய்ய வேண்டுமோ ....கடவுளே ......"என்றான் சூர்யா .

"ரொம்ப அலுத்துக்காதே .....நட்பு என்றால் சும்மாவா .......பொத்திகிட்டு வா ..."என்ற மேக்னாவோடு ,மதுரா ,சூர்யா கிளம்ப பவானி மகளின் வாழ்வூ சிறக்க பூஜை அறையை தஞ்சம் அடைந்தார் .(நட்பா ?மேக்னா யார் யாரோடு நட்பாய் இருப்பது மா ?நீயும் சூரியாவும்மா ?இல்லை மதுராவும் சூரியாவும்மா ?)

வெளியே வந்தவர்கள் ,அங்கு இன்னும் கிளம்பாமல் நின்று கையை கையை பிசைந்து நிற்கும் ஆல்வின் ,பாலாஜி ,சுபா ,மிருதுளாவை கண்டு நின்றனர் .

"என்ன நட்பூஸ் ....நண்பனுக்காக இன்னும் என்ன எல்லாம் செய்யலாம் ...அதில் யார் எப்படி போனா என்ன என்று பிளான் போடுறீங்க போல் இருக்கு ?"என்றாள் மேக்னா நக்கலாக .

"இல்லை ...........ட்ரெயின் விபத்து ......அதான் .......ரூபிணி ,குழந்தை ...."என்று இழுத்தான் ஆல்வின் .குற்ற உணர்ச்சியில் அவன் தலை தொங்கி போனது .

"கருணாவை மன்னித்தால் கூட உங்க நாலு பேரையும் நான் மன்னிக்க போவதில்லை .....எவ்வளவூ பெரிய குற்றத்திற்கு துணை போய் இருக்கீங்க ......இத்தனை வருடத்தில் வாயை திறக்கணும் என்று தோணவே இல்லை அப்படி தானே ......இவ கிட்டே சொல்லி இருக்கவில்லை என்றாலும் இவ ப்ரெண்ட்ஸ் குத்துக்கல்லை போல் தானே இருக்காங்க ....அவங்க கிட்டேயாவது சொல்லி இருக்கணும் இல்லை ....இவளை ஒரு மனுஷியா கூட கருணா உட்பட யாருமே நினைக்கலை அதானே .........ஒரு பெண்ணின் மானத்தை ,அவள் கருவை காக்க முயன்ற உங்களுக்கு இதோ இவளும் பெண் தான் என்பது எப்படி மறந்து போனது ?நாலு வருஷம் ....நீண்ட நாலு வருஷம் ........ச்சே ....உங்களை எல்லாம் கொன்றால் கூட தப்பில்லை ....உங்களுக்கு கருணா செய்த குற்றம் தெரிந்திருக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை ....தெரிந்து இருக்கிறது ...தெரிந்தே அவன் தங்கையின் வாழ்வை காக்க இவளை பலி கொடுக்க நீங்க யாருமே தயங்கவில்லை அப்படி தானே ......டிஸ்கஸ்டிங் ..."என்றான் சூர்யா ரௌத்திரமாக .

"விடு சூர்யா ......நட்பை வளர்க்கரங்களாம் ......தெய்வங்களே .....இத்தனை நாள் எப்படி வாய் பொத்தி ஊமையை இருந்தீர்களாளோ அப்படியே இந்த திருமணம் முடியும் வரை இருந்துடுங்க ......அது தான் எல்லோருக்கும் நல்லது .....இங்கே நடந்ததை போய் அந்த லூசு கிட்டே உளறி வைக்காதீங்க .....இதுல இவ வாழ்க்கை மட்டும் இல்லை என் வாழ்க்கையும் அடங்கி இருக்கு ......உங்களை கை எடுத்து கெஞ்சி கேட்கிறேன் .....""என்றாள் மதுரா

"இல்லை சிஸ்டர் உங்களுக்கு ஹெல்ப் செய்யலாம் என்று தான் ."என்றான் ஆல்வின் .

"ஹெல்ப்பு ?.....யாரு அதுவும் நீங்க நாலு பேரு ?????ஆணியே புடுங்க வேண்டாம் .....இது வரை நீங்க கழட்டின ஆணிகளே தேவை இல்லாதது தான் ......எங்க நாலு பேரின் வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும் என்று எல்லா வேலையும் நானே செய்துட்டேன் ......நீங்க செய்யும் மிக பெரிய ஹெல்ப் என்ன தெரியுமா அமைதியா ,வாய் மூடி வெறும் பார்வையாளராய் இருப்பது மட்டும் தான் ......என் வாழ்க்கை என்றால் கூட போனால் போகட்டும் என்று இருந்து விடுவேன் ...இதில் மேக்னாவின் வாழ்க்கை ...இரு குழந்தைகளின் எதிர்காலம் எல்லாம் இருக்கு ......இது வரை தான் அந்த பிள்ளைகள் அப்பா இல்லாமல் இருந்துட்டாங்க ...இனிமேலும் அப்படியே இருக்கணுமா என்று முடிவூ செய்துக்கோங்கோ .....நட்புக்கும் ஒரு எல்லை இருக்கு ...அதையும் தாண்டி தான் மேக்னா எனக்கு உதவி செய்துட்டு இருக்கா ...... வேறு யாராவது ஒருத்தியா இருந்தா இதற்கு எல்லாம் சம்மதிக்க கூட மாட்டா ......தயவூ செய்து எங்க வாழ்க்கையில் விளையாடி விடாதீங்க ....."என்றவள் விடுவிடுவென மேக்னா பின் தொடர காரில் ஏறி விட்டாள் .

"மதுரா பிளான் தெரிஞ்சவங்க இங்கு இருந்தவங்க மட்டும் தான் .....கடைசி நொடி வரை மற்ற யாருக்கும் சோனா ,சுமன் ,விஜய் உட்பட யாருக்கும் இது தெரியவே கூடாது .....புரிஞ்சுதா ?????ஏதாவது சொதப்பி வச்சீங்க நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் .....எனக்கு மதுரா முக்கியம் ......கெட் இட் ????"என்று ஒற்றை விரலை தூக்கி எச்சரித்த சூர்யாவின் கர்ஜனைஎன்று சொல்ல வேண்டுமோ -அதை கேட்டு திகைத்து நின்றனர் அந்த நால்வரும்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆர் யு ஆல் ரைட் பேபி ?"என்றான் சூர்யா மதுராவுடன் பின்னால் அமர்ந்து கொண்டு

"எனக்கு என்ன குறை ...குத்து கல்லு மாதிரி இன்னும் நல்லா தான் இருக்கேன் ...மேக்னா முகத்தை பாரு ....குழந்தை என்னமா பீல் பண்ணுது ?"என்றாள் madhura
14012344b7dbe70ee1d6f228a2f4cf12--india-people-bollywood.jpg

"ஏன்டீ ...இது வரை நல்லா தானே போய்ட்டு இருந்தது ...ஏன் இப்போ ரூட் மாத்ரே தாயே .....உங்களை நம்பி காரில் ஏறினேன் பாரு என் புத்தியை சொல்லணும் ....."என்றாள் மேக்னா .

"கவலை படாதே மேக்னா குட்டி ...சீக்கிரம் அடுத்த பிரியாணிக்கு ரெடி செய்துடலாம் ....அதுக்காக தானே இவ்வளவூ பாஸ்ட்டா எல்லா வேலையும் செய்யறோம் ......"என்ற மதுராவின் தலையில் கொட்டினாள் மேக்னா .


"எருமை .... ... பக்கத்து இலைக்கு பாயசம் வேலை எல்லாம் இங்கே வேண்டாம் ... எப்போ திருமணம் என்று வெயிட் செய்துட்டு இருப்பது நீயி ......நாங்க இல்லை ...."என்றாள் மேக்னா .

"இங்கே ஒரு பச்சை பிள்ளையை வச்சுக்கிட்டு என்ன பேசறீங்க ரெண்டு பேரும் ...அபசாரம் அபசாரம் ....."என்ற சூர்யாவை நக்கலாய் ஒரு பார்வை பார்த்து வைத்தனர் இரு பெண்களும் .

"ஏஹ் ...சத்தியமா நான் நல்லவன் தான் மா .....நம்புங்க மா ....."என்றான் சூர்யா .

"யாரு சார் ....நீங்க ...தானே ...ரொம்பவே நல்லவங்க தான் ...பிபிசி /cnn ல பிளாஷ் நியூஸ் அதான் .நீ காலேஜ்ல செய்த டகால்டி வேலை .....இப்போ செய்து கொண்டு இருக்கும் வேலை எல்லாம் தெரியாது என்று நினைப்பு ???? அடங்குடா காட்ஜில்லா ....."என்றாள் மதுரா .

"ஹே நிறுத்துங்க ப்பா ....அவனை தானே கடத்தணும் ?"என்றாள் மேக்னா அந்த தெருவில் நடந்து வந்து கொண்டு இருக்கும் ஒருவனை காட்டி .

மேக்னா காட்டிய ஒருவனை பார்த்த ,சூர்யாவும் ,மதுராவும் ,"அவனே தான் "என்றனர் கோரஸாக .

ஆள் நடமாட்டம் அந்த மதிய வேளையில் அந்த தெருவில் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது .அவனும் போனில் யாருடனோ தீவிரமாக பேசி கொண்டு இருந்தான் .கார் கதவை திறந்தவாறு அவன் அருகே கார் சென்று ஒரு நொடி நிற்க ,அந்த நொடியில் அவனை உள் இழுத்து கதவை மூடினான் சூர்யா .அடுத்த நொடி மேக்னா காரினை வேகம் எடுக்க ,சூர்யாவின் பார்ம் ஹவுஸ் நோக்கி பறந்தது அந்த கார் .

அவன் போனினை அணைத்து தன் பாக்கெட்குள் போட்டு கொண்ட சூர்யா ,"ஹாய் ப்ரோ ...நைஸ் மீட்டிங் யு ...."என்றான் அவன் தோளில் கை வைத்து அவனை பாதி அணைத்தபடி .

"ஹேய் யாரு நீங்க எல்லாம் ............ஒழுங்கு மரியாதையா வண்டிய நிறுத்துங்க ......மரியாதை கெட்டுடும் ...."என்று உறுமினான் அவன் .

"ஹலோ ப்ரோ ...இப்போ மட்டும் உங்க மரியாதை கொடி கட்டி பார்ப்பதாக நினைப்போ ?.....அப்படி மரியாதை ,மானம் பத்தி எல்லாம் பேசும் ஆள் திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணை தொட்டு இருக்க கூடாது .....அப்படியே தொட்டு இருந்தாலும் அந்த பெண்ணின் உள்ளம் உடையும் படி அவ கழுத்தில் கத்தி வைக்காத குறையாய் அவ அண்ணனை கார்னெர் செய்து இருக்க கூடாது ....உலகத்தின் ஒரே உத்தமி என்று உங்க தங்கச்சியை மணந்தால் தான் கர்ப்பிணியாக இருக்கும் உன் தங்கையை கட்டுவேன் என்று சொல்லி இருக்க கூடாது .....சரி தவறு நடந்து போனாலும் அதை எப்படி சரி செய்வது என்று யோசிக்காமல் பார்-ரே கதி என்று இருக்க கூடாது .....பணத்தாசை பிடித்த குடும்பத்தை மீண்டும் உள்ளே விட்டு ,கட்டிய மனைவியை வீட்டை விட்டு அவர்கள் வெளியேற்றும் வரை பிடித்து வாய்த்த பிள்ளையார் மாதிரி இருந்து இருக்க கூடாது ...எஇவ்வளவூ செய்த போது போகாத உங்க மானம் ,மரியாதை எல்லாம் இனிமேல் தான் போக போகிறதா என்ன .....சும்மா காமெடி பண்ணாதீங்க ."என்றாள் மதுரா .

அவள் பேச பேச அவனின் திகைப்பு அதிகமாகி பேந்த பேந்த முழிக்க ஆரம்பித்தான் .

"யாருங்க ...நீங்க எல்லாம் ?"என்றான் திவாகர்

"எல்லாம் சொந்தம் தான் திவாகர் .....உங்க தங்கச்சி முறை தான் நாங்க ."என்றாள் மேக்னா .

"தங்கச்சியா .....வேண்டவே வேண்டாம் ...ஒருத்தி தங்கச்சி என்று வந்து என் வாழ்க்கையில் விளையாடி கொண்டு இருப்பது போதும் ....புது சொந்தம் எல்லாம் வேண்டாம் ..."என்று அலறியே விட்டான் .

"ப்ரோ இவங்க சோனா மாதிரி தங்கச்சிங்க இல்லை .....முதல் முறை நீங்க செய்த உத்தம வேலை முன்னேரே தெரிந்து இருந்தால் ,உங்களை இதே போல் கடத்தி ,கை காலை உடைத்தாவது ரூபிணி கழுத்தில் தாலி கட்ட வைத்து இருக்கும் வகை தங்கச்சி பா இவங்க .....ரொம்ப டெரோர் பார்ட்டி.....பார்த்து பக்குவமா நடந்துக்கோங்கோ .....உயிர்க்கு உத்திரவாதம் இல்லை ப்ரோ "என்றான் சூர்யா .

"இன்னும் நீங்க எப்படி எனக்கு தங்கச்சி முறை ஆகணும் என்று சொல்லவே இல்லையே . கருணா அனுப்பி வந்து இருக்கீங்களா ....ஒண்ணு சொல்லிடறேன் .....நான் ஆபீஸ் வந்த பிறகு எல்லோரும் சேர்ந்து எனக்கு தெரியாம ரூபிணியை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்காங்க ....இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை .....இப்போ தான் கருணா போன் செய்து பேசிட்டு இருந்தார் ......அவர் கிட்டே எல்லாம் சொல்லிட்டேன் ....சத்தியமா என் குடும்பம் இப்படி சோனா பேச்சை கேட்டு நடப்பாங்க என்று எனக்கு தெரியாது ."என்றான் திவாகர் .

"ரொம்ப சந்தோசம் ப்ரோ ...உங்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதால் ...இல்லை என்றால் உங்களை கொல்ல கூட தயங்கி இருக்க மாட்டேன் .....இத்தனை வருடம் நான் இப்படி இருக்க முக்கிய காரணங்களில் நீங்களும் ஒருவர் ....சோ கொலை வெறியில் இருந்தேன் .....எஸ்கேப் ஆகிட்டிங்க ப்ரோ ."என்றாள் திவாகர்ரின் புது தங்கச்சி .(ரெண்டு பேரில் எந்த தங்கச்சி மா நீயி ---மதுராவா ,மேக்னாவா ?)

"நான் என்னங்க உங்களை செய்தேன் ....நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாதுங்க ..."என்றான் திவாகர் .

"உங்க மனைவி ரூபிணியின் அண்ணன் உயர்திரு விஜய கருணாகரன் அவர்கள் வகையில் உங்களுக்கு நான் சொந்தம் ப்ரோ ."என்றாள் அவள் .

"எப்படீங்க ....அவங்க சொந்தத்தில் உங்களை பார்த்தா மாதிரி எனக்கு நினைப்பில்லையே ....."என்று யோசனையுடன் .

இவ்வளவூ பேரழகி விஜய் சொந்தமா ?எந்த வகையில் ?

"இந்த விதத்தில் தான் ..."என்றவள் போட்டோக்களை அவனிடம் கொடுத்தாள் .வீடியோ மீண்டும் ஓடியது .

"சிஸ்டர் ...என்ன இது ....கருணாவா இப்படி ?"என்றான் திவாகர் .

"நடந்தது ஒரு விபத்து ......நாங்க ஒன்றாய் வாழ்ந்து இருப்போம் .....நீங்க மட்டும் உள்ளே நுழைந்து சோனாவை நம்பி ,ரூபிணியை பணயம் வைக்கவில்லை என்றால் ....இன்றும் நாங்க சேர்ந்து வாழ ,எங்கள் வாழ்வூ மலர தான் எனக்காக இவங்க எல்லா வேலையும் செய்து கொண்டு இருந்தாங்க ......இன்று அவர் சோனாவை விவாகரத்து செய்ய சைன் போட்டு இருப்பார் .....பொட்டி,படுக்கை ,கண்ணீரோடு ரூபிணி வந்து வாயிலில் நிற்க வில்லை என்றால் ..........எல்லாம் சுபமாய் முடிந்து இருக்கும் ....நாங்களும் திருமணம் முடித்து எங்கள் வாழ்வை ஆரம்பித்து இருப்போம் .....எனக்காக இவளும் போராடிட்டு இருக்கா ....."என்றாள் அவள் கோபத்தோடு .

(ஹனி ...இந்த டயலாக் விட்டது யாரும்மா .....இந்த அவள் யாரோ ---மதுராவா இல்லை மேக்னாவா ???...அது எப்படி டயலாக்கில் கூட இப்படி bp ஏத்த உன்னால் முடியுது ?)

penance will continue
 
Last edited:
Status
Not open for further replies.
Top