All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உனக்காக உலகத்தையும் எதிர்ப்பேன் "என்று மதுரா அவனுக்கு கொடுத்த வாக்கை நிறை வேற்ற ப்ராஹ்மபிரயத்தனம் செய்ய வேண்டி வரும் என்று அவளிடம் சொல்ல யாரும் இல்லை ....காலம் அவர்களை வெவ்வேறு திசையில் பிரித்த போது அவனுக்காக போராடுவதாக கூறிய அவள் போராடும் நிலையில் இல்லை .....அவளுக்காக போராடும் நிலையில் அவனும் இல்லை .....கை விட்டு போன சுவர்க்கம் ...வாழ்க்கை ......வெளியில் சிரிப்பு முகமூடி போட்டு கொண்டு உள்ளக்குள் அழும் நரகம் ....தனக்கு தானே உண்மையாய் இல்லாத அவல நிலை ...காதலில் ஜெயித்தும் தோற்று துடிக்கும் நரகம் .


எவ்வளவூ நேரம் அழுதாளோ நேரம் ஆக ஆக அடுத்து செய்ய வேண்டியவை எவை என்று தெளிவாக யோசிக்க ஆரம்பித்தாள்.கண்கள் கனலை கக்க அவளின் முகம் இறுகி போனது .

மறுநாள் காலை ஹர்ஷா உடன் பெரியவர்களிடம் விடை பெற்று கிளம்பினாள் .போவதற்கு முன் அனைவரிடமும் அடுத்து என்ன செய்ய வேண்டும் ,அவள் என்ன செய்ய போகிறாள் என்று தெளிவாக விலகினாள் .

"இது சரி வருமா மதுரா ?தலையை சுத்தி மூக்கை தொடுவது போல் இருக்கே மா ....ரொம்ப ரிஸ்க் இருப்பது போலெ இருக்கேம்மா ...."என்றார் நரசிம்மர் .

"வேறு வழி இல்லை தாத்தா ...அதிரடி தான் சரி வரும் .....காயத்தை கீறி விட்டால் தான் குணமாகும் .....இதை தவிர வேறு வழி இல்லை .....நான் பணயம் வைப்பது என் காதலை .....அது இன்னும் அழியவில்லை என்று 100% எனக்கு தெளிவாக தெரியும் .....அதை நம்பி தான் இந்த முடிவூ எடுத்தேன் ....வந்தால் மலை ...இல்லையென்றால் கயிறு தானே ...போனால் போகட்டும் ."என்றாள் மதுரா .

"மதுரா ....நீயும் என் மக மாதிரி தான் ...மாதிரி என்ன மகளே தான் ...உன்னை நம்பி தான் என் மகளையும் ,அவ பசங்களையும் விடறேன் ......இவங்க வாழ்வுக்கு ஒளி ஏத்துமா .....நீ இந்த வீட்டு குலதெய்வம் ......எங்களை காப்பாத்த வந்த தேவதை .....உன் முயற்சி பலிக்க அந்த கடவுள் துணையாய் இருக்கட்டும் ...."என்றார் மேக்னா அன்னை மதுராவை அணைத்து கதறிய படி .

"சாரி மது ...என்னால் உனக்கு சிரமம் இல்லை ...நீயே உன் வாழ்வை தேடி கொண்டு இருக்கிறே ...இதில் நானும் உனக்கு பாரமாய் ....."என்றவளின் கையை தட்டி கொடுத்த மதுரா ,"உன் காதலுக்கும் ,என் காதலுக்கும் சக்தி இருக்குதான்னு பார்த்து விடுவோம் ....."என்ற மதுரா ஹர்ஷா உடன் ,நரசிம்மர் முன் சொன்ன ராமராஜு என்பவரை சந்திக்க கிளம்பினாள் .

மதுரா கிளம்பியதும் ,மேக்னாவின் புன்னகை என்ற முகமூடி கழன்றது .மதுரா சென்ற திசையையே வெறித்து பார்த்தவாறு நின்றவளை நெருங்கினார் முகேஷ் ரெட்டி.

"அப்பா !அவ உயிரோடு இருக்க கூடாது ."என்றாள் மேக்னா ஆங்காரத்துடன் .

அவள் முகத்தில் கொலைவெறி தாண்டவம் ஆடியது .
Kajal-Aggarwal-Awe-Film.jpg
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மேக்னா !"என்று அதிர்ந்து போன ஸ்ரீலக்ஷ்மியும் ,கஜலட்சுமியும் ஒரே சமயத்தில் அலறி விட்டனர் .

"தடுக்காதீங்க மா ....எப்போ இருந்தாலும் என் எதிர்கால வாழ்க்கைக்கு அவ பிரச்சனை தான் .என் தலைக்கு மேல் தொங்கும் கத்தி ...அவளுக்கு பாவம் பார்த்தா எனக்கு புருசனும் என் பிள்ளகைளுக்கும் அப்பாவும் இருக்க மாட்டாங்க .....நீதி ,நேர்மை ,நியாயம் என்று பேசி ,மத்தவங்களுக்காக யோசித்து நான் இழந்தது எல்லாம் போதும் .....எனக்கு என் புருஷன் வேண்டும் ....அதற்ற்கு நடுவே இருக்கிறவ உயிரோடு இருக்க கூடாது ....அதற்கு தேவையானதை செய்துடுங்க டாடி ...."என்றவளை கண்டு மற்றவர்கள் ஸ்தம்பித்து நின்றனர் .

"அப்பா !...என்ன அப்பா எதையும் பேசாம இருக்கீங்க "என்றார் முகேஷ்

"மேக்னா சொல்வதை செய்துடு முகேஷ் ....நம்ம பொண்ணை விட வேறு யாரும் முக்கியம் இல்லை .....மேக்னா சொல்வது சரி .....ஒரு வீடு நல்லா இருக்க ஒருத்தரை இழக்கலாம் ....ஒரு கிராமம் நல்லா இருக்க ஒரு குடும்பத்தை இழக்கலாம் ....மேக்னா பட்ட கஷ்டம் போதும் .....இனி அவ கண்ணில் இருந்து கண்ணீர் வரவே கூடாது .....முடிச்சுடு ..."என்ற நரசிம்மன் தன் ஈசி chair சாய்ந்து ராமாஷ்டகம் சொல்ல ஆரம்பித்தார் .
maxresdefault (4).jpg


அங்கு மேக்னா வீட்டில் நடப்பதை அறியாத மதுரா ராமராஜூவின் பண்ணை வீட்டினை அடைந்தாள் . தன் வீட்டின் வாயிலில் வந்து நின்று வரவேற்றார் ராமராஜூ .

"கடவுளே நன்றி ....என் வேண்டுதல் வீண் போகலை ....திருப்திக்கு நடந்தே வரேன் ....வா மகளே "என்று கண் கலங்க மதுராவை அணைத்து கொண்டவர் சட் என்று பார்க்க பிரகாஷ் ராஜ் போலவே இருந்தார் .

உள்ளே வந்த உடன் ,"ஸ்ரீ .....ஸ்ரீ ...யார் வந்து இருக்காங்க பாரு ...."என்று உரக்கவே கத்தினார் ராமு .

அவர் குரலை கேட்டு உள் இருந்து wheel chair வந்து சேர்ந்தாள் ஸ்ரீநிதி .

"செல்லி (சகோதரி )"என்ற கூவலுடன் வெகு வேகமாக தன் ச்சரினை உருட்டி கொண்டு வந்தாள் அவள் .பார்ப்பதற்கு பெங்களூரு டேஸ் பட பார்வதி மேனன் --அதான் பா RJ சாரா மாதிரி இருந்தாள் .
vlcsnap-2018-11-28-14h00m07s306.png

அவளை அணைத்து கொண்டு கண்ணீர் வடித்தாள் மதுரா .

"எப்படிடா இருக்கே ........."என்றாள் மதுரா

PENANCE WILL CONTINUE...
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SORRY FOR THE BREAK

ஹாய் friends

என்ன தவம் செய்தேன் என்ற என் முதல் முயற்சிக்கு துணை இருக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் .உங்க ரெவியூ ,கமெண்ட் என் எழுத்துக்களுக்கு பூஸ்ட் .

என் மகளின் அரையாண்டு தேர்வூ தொடங்கி விட்டது .....டிசம்பர் 21 வரை நடைபெறுகிறது .மாலை முழுவதும் அவளுடன் இருக்க வேண்டி உள்ளது .

தவிர நானும் ssc எக்ஸாம் prepare செய்துட்டு இருக்கேன் .இந்த ரெண்டுக்கும் நடுவே குடும்பம் ,எழுத்து என்று டைம் மேனேஜ் செய்ய முடியாமல் போய் விட்டது .

சாரி இவற்றை மேனேஜ் செய்யவே சரியாக இருப்பதால் என்னால் எழுத முடியவில்லை .ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் ....இப்போ கொடுக்க படும் அப்டேட் எல்லாம் அந்த கணமே type செய்து அப்படியே கொடுத்து வருகிறேன் என்று.

சோ இப்போதைக்கு யோசிக்க முடியாமல் ud கொடுக்க முடியவில்லை .

தங்களின் பொறுமைக்கு நன்றி .மகளின் தேர்வூ முடிந்ததும் தவம் மீண்டும் மேற்கொள்ள படும் .தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட் .

மிஸ் யு ஆல்

VANTHU UTHAI VANGIKAREN......IPPO KONCHAM ELLAM THELINCHU IRUNGA
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 34(1)

vlcsnap-2018-11-28-13h59m11s902.png


"எப்படிடா இருக்கே ........."என்றாள் மதுரா .



"எனக்கு என்ன அக்கா ............பார்த்தா தெரியலை wheel சேர் ஓடு நல்லாவே இருக்கேன் .....நரசிம்ம தாத்தா நேத்து போன் செய்து சொன்னதும் என்னால் நம்பவே முடியலை ..........கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் ....சொல்லுங்க நீங்க எப்படி இருக்கீங்க ..........மாமா எப்படி இருக்கார் ......என்ன தான் லவ் செய்தாலும் அதற்குன்னு இப்படியா ....நாலு வருசமா இந்த பக்கம் வரவே இல்லை ......ஒரு போன் ,மெயில் ....sms ..............போங்க அக்கா உங்களுக்கு இவ்வளவூ கோபம் இருக்க கூடாது .............."என்றாள் அவள் பொய் கோபத்துடன் .

"ஸ்ரீ !...........விஷயம் தெரியாம பேசாதே ."என்றான் ஹர்ஷா கோபத்துடன் ,தோழியின் முகம் போன போக்கை பார்த்து .

"நீங்க ஏன் டாக்டர் சார் டென்ஷன் ஆகறீங்க ............ஐந்து வருஷம் ஆஸ்திரேலியாவே கதி என்று இருந்துட்டு ........இப்போ வந்து குதிக்காதே ............."என்றாள் அவள் கடுப்புடன் .

"ஸ்ரீ ........."என்று ஏறக்குறைய கத்திய ஹர்ஷா -மதுரா ,மேக்னா வாழ்வில் நடந்த திருப்பங்களை சொல்ல ஸ்ரீ .ராமராஜு திகைத்து போனார்கள் .

கண்ணீர் வழிய மதுராவை அணைத்து கொண்ட ஸ்ரீ ,"எல்லாம் என்னால் தானே ...என் பிடிவாதத்தால் தானே .....எப்படி வாழ்ந்து இருக்க வேண்டியவங்க நீங்க ரெண்டு பேரும் ............என் கண்ணே பட்டுடுச்சு போல் இருக்கு .....நான் பாவி ....மஹா பாவி ..........ராசி இல்லாதவ ....அதான் அம்மா ,பாட்டி ,தாத்தா ,நீங்க ,,மாமா எல்லோரும் என்னை விட்டு எல்லோரும் போயிட்டிங்க ......கடவுளே ..."என்று குலுங்கி குலுங்கி அழுதாள் ஸ்ரீ .

"ஹே ஹர்ஷா .....போலீஸ்க்கும் ,ஆர்மிக்கும் தகவல் கொடுத்துடு ....ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த கோரோமண்டல் 28461 எக்ஸ்பிரஸ் டட்ரெயின் குண்டு வெடிப்புக்கு காரணமாய் அவர்கள் தேடி கொண்டு இருக்கும் தீவிரவாத குழு தலைவன் ---இல்ல தலைவி ஸ்ரீ இங்கே இருக்கா என்று ."என்றாள் மதுரா .

மதுரா சொன்னதை கேட்டு திகைத்த ஸ்ரீ ,சிணுங்கலுடன் "அக்கா !"என்றாள் முகத்தில் அசடு வழிய .

"லூசா நீயி ...........எந்த நாயோ தன் மதம் ,ஜாதி ,இனம் தான் முக்கியம் என்று ,பணத்திற்காக நாட்டை விற்க துணிந்த ஒரு பொட்டை செய்த கொடூரத்திற்கு நீ எப்படி காரணம் ஆவாய் ஸ்ரீ ????அந்த பாம் ப்ளாஸ்டில் 200
பேர் செத்து போனாங்க ....அப்போ அவங்க சாவுக்கு காரணம் நீ தான் என்று சொல்ல போறியா ...இல்லை வெடித்த rdx குண்டை நீ தான் செய்து வைத்தவன் கையில் கொடுத்தாயா .....என்ன surviver guilt என்பார்களே அதுவா ஸ்ரீ ?????? "என்றாள் மதுரா கோபத்துடன் .
indiatraincrash467014844.jpg

"அது இல்லை மது ...........என்னை காப்பாத்தா போய் தானே நீ ஏறக்குறைய இறந்து போனே .........நீ ஹாஸ்பிடலில் இருந்த சமயத்தில் தானே மாமா வேறு திருமணம் செய்ய வேண்டி வந்தது .....அவர் குடும்பமும் ஸ்டேட்டஸ் ,பணம் என்று தானே உன்னை வேண்டாம் என்று மிரட்டி வேறு ஒருத்தியை மருமகளாய் கொண்டு வந்தார்கள் .....எல்லாம் என்னால் தான் ...என்னை காப்பாற்ற போய் தான் ............"என்றாள் ஸ்ரீ .

train-Accident_web-1-750x500.jpg

"நீ லூசு என்பது 100% confirm பண்ணிட்டே ஸ்ரீ ......என்ன இந்த ஐந்து வருடத்தில் நிறைய படம் ,கதைன்னு ஓவர் ரா பார்த்து ,படிச்சுட்டியா என்ன ?????என்னவோ 10-20 டாடா சுமோவில் புழுதி பறக்க ,கையில் அரிவாள் ,கத்தி உடன் வந்து என் கழுத்தில் கத்தி வைத்து ,"எங்க மகனை விட்டு போ ....உயிர் வேண்டும் என்றால் "என்று பயமுறுத்தினா மாதிரியும் ,என்னை காக்க அந்த லூசு இன்னொருத்தியின் கழுத்தில் தாலி கட்டியது போலவும் ,உயிருக்கு பயந்து நான் அவரை விட்டு ஓடியது போலவும் ,இல்லை இல்லை அவர் குடும்பத்தில் அவங்க அம்மா என் காலில் விழுந்து எங்க தொழிலில் நஷ்டம் ,இந்த திருமணம் தான் எங்க குடும்பத்தை காப்பாற்றும் ,விட்டு கொடு "என்று கெஞ்சிய மாதிரி ஓவர் ரா இருக்கு உன் built up .......ஒரு கதை எழுதும் எழுத்தாளருக்கு உண்டான எல்லா கற்பனை வளமும் உன்னிடம் இருக்கு செல்லம் ...கீப் இட் up ...."என்றாள் மதுரா ஸ்ரீ தலையில் ஓங்கி குட்டி .

"உன்னை மட்டும் இல்லை ..இதோ நிற்கிறானே பனை மரம் ,அவங்க குடும்பத்தையும் தான் காப்பாத்தினேன் ....அவங்க என்ன இப்படியா அழுமூஞ்சி கணக்கா இருக்காங்க ???உங்க அம்மா ,பாட்டி ,தாத்தா அந்த டட்ரெயினில் இறந்தது அவங்க விதி ..... நம்ம பிழைக்கணும் என்பதும் விதி தான் .....common நானே திடமா தான் இருக்கேன் ஸ்ரீ ......உங்க மாமாவிற்கு மீண்டும் மூக்கணாங்கயிறு கட்டிடலாம் ....அதற்குள் என்னிடம் இருந்து எஸ்கேப் ஆகிடுவாரா உங்க மாமா ?என் கிட்டே இன்னும் பட வேண்டியது நிறைய இருக்கேம்மா .....ரூட் இல்லைனாலும் புது ரூட் போடும் அளவூ எனக்கு அறிவூ இருக்கு ......"என்றாள் மதுரா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"இல்லை உன் கொள்கை ...அதான் உனக்கு வருபவர் ஸ்ரீராமனாய் இருக்க வேண்டும் என்று சொல்லிட்டு இருப்பாயே ...இப்போ தான் மாமாவிற்கு திருமணம் ஆகி விட்டதே ...."என்றாள் ஸ்ரீ .

"கொஞ்சம் பிரேக் போடு ....இப்போ நீ என்ன சொல்ல வர ...உங்க மாமாவோடு என்னைய சேரு என்கிறாயா ...இல்லை வேண்டாம் என்கிறாயா .....நீ சொல்வது அப்படி தான் உள்ளது .....உங்க நோமா தசரதன் mathiri 60,000
பொண்டாட்டி காட்டினாலும் அவரின் மனம் ,காதல் எனக்கு மட்டுமே சொந்தம் ஸ்ரீ ....அந்த மனசில் இடம் பிடிக்க இன்னொருத்தி இனி மேல் பிறந்தாலும் வேலைக்கு ஆகாது ......அந்த இதயம் எனக்காக மட்டுமே துடிக்கும் ....எனக்காக மட்டுமே வாழும் இதயம் .........மனதாலும் இன்னொரு மாதை தீண்டேன் என்ற அந்த ஸ்ரீராம வாக்கு படி நடப்பவர் தான் உன் மாமா ஸ்ரீ ...அவர் என் மேல் காதல் என்னும் eye பேட்ச் அணிந்த குதிரை .....வேறு பக்கம் பார்வை கூட திரும்பாது .....வெளிலே சொல்லிடாதே ...டபுள் ட்ராக் விடும் அளவூ எல்லாம் உங்க மாமாவிற்கு திறமை கிடையாது .....பார்த்துக்கலாம் ........என்னை விடு ....என் கதையை எப்படி கொண்டு போகணும் என்று ஏற்கனவே decide செய்துட்டேன் ....போன உடனே மேரேஜ் தான் .....உன் கதைக்கு வா ....இன்னும் எவ்வளவூ காலத்திற்கு தான் இப்படி வீல் சேர் கதி என்று இருக்க போகிறாய் ???"என்றாள் மதுரா .

அது வரை அவர்கள் உரையாடலை கவனித்து மட்டும் இருந்த ராமராஜு ,"என்ன மகளே செய்யறது .....ரூமிற்குள் அடை பட்டு இருக்கா .....ஏதோ நீ உயிரோடு இருக்கே என்ற ஒரு விசயம் தான் இவளை எந்த கிறுக்கு தனமும் செய்யாமல் வைத்து இருக்கு .....ஒழுங்கா டிரீட்மென்ட் போனா தானே ...."என்றார் மனம் நொந்துதவராய் .

"அங்கிள் டோன்ட் ஒர்ரி ...நேத்து நீங்க அனுப்பின ஸ்ரீ மெடிக்கல் பைலை பார்த்தேன் .....ஒரு சின்ன மினார் சார்ஜ்ரி செய்து ,6-8 month பிஸியோதெரபி செய்தால் ஸ்ரீ பழைய படி நடக்க சான்ஸ் 85-90% இருக்கு ....பிசிக்கல்லி ஷி இஸ் ஸ்ட்ரோங் ....சர்ஜெரிக்கு எல்லா ஏற்பாடும் செய்துட்டேன் .....இந்த வாரத்தில் ஆபரேஷன் செய்ய என் சீனியர் ஒத்துக்கிட்டார் .....கையை காலை கட்டி இவளை கொண்டு வாங்க ...."என்றவன் ,"ஒழுங்காய் உன் டாடி கூட எந்த குரங்கு தனமும் செய்யாமல் வந்து சேரு ....புரிந்ததா .....ஸ்டேட் லெவல் ஸ்கேட்டிங் சாம்பியன் ...வீல் சேரே கதி என்று இருந்தால் உன் தங்க மெடல் எல்லாம் இன்னொருத்தி வாங்கிட்டு போறதுக்கா ?????1 இயர் டைம் உனக்கு ....யு மஸ்ட் பீ பாக் ஆன் ஸ்கேட்டிங் ரிங் ஒகே ...."என்றான் ஹர்ஷா கடுமையாக .

"சரி ஹர்ஷா "என்றாள் ஸ்ரீ வெகு பாவமாய் .

"அங்கிள் !...இன்னுமா உங்களை யார் கொல்ல முயன்றது என்று கண்டு பிடிக்கலை ...ஐந்து வருஷம் ஆச்சு ...செத்தவங்க குடும்பத்திற்கு நீதி கிடைக்கணுமே ....."என்றாள் மதுரா .

"இல்லை ....என்னையோ ,முகேஷ்சையோ கொல்ல நடந்த குண்டுவெடிப்பு அது அல்ல என்று விசாரணையில் தெரிய வந்து இருக்கு .....அப்படி நாங்க தான் டார்கெட் என்றால் இத்தனை வருடத்தில் எங்க மேல் வேறு எந்த கொலை அட்டெம்ப்ட் நடக்கவே இல்லையே .....நாம அந்த ட்ரெயின் ஏற போவது கடைசி நிமிடம் வரை நமக்கே தெரியாதே .....நாம சென்னை கிளம்பிய கார் பிரேக் டவுன் .....ஸ்ரீ விரும்பினா என்று தானே எல்லோரும் ட்ரெயின் ஏறினோம் ....லாஸ்ட் மினிட் டெஸிஸின் தானேம்மா அது ....தவிர அந்த ட்ரெயினில் போலீஸ் யாரோ ஒரு விட்னஸ் கொண்டு வந்து இருக்காங்க ....டெல்லி அமைச்சர் மகளின் கொலைக்கு தேவையான விட்னஸ் ,ஆதாரம் எல்லாம் வந்து இருக்கு ....அந்த பெண் கொலையில் நிறைய பேருக்கு தொடர்பு உண்டு ...எல்லாம் vip என்று சொல்ல படுது ....highly சென்சிடிட்டிவ் கேஸ் .... அந்த வழக்கு இல்லாமல் போக வேண்டும் என்று தான் இந்த வெடிகுண்டு ..... இன்டர்நேஷனல் லெவல் ஹியூமன் ட்ராபிக்கிங் குழு இதில் இன்வோல்வ் ஆகி இருக்கு .....ஒருத்தரின் குற்றத்தை மறைக்க இவர்கள் 200 பேரை பலி கொடுக்கவும் தயங்கவில்லை மதுரா ....அந்த ட்ரைனில் நானும் முகேஷ் வந்ததும் எங்களை கொல்ல தான் பாம் வெடிச்சது என்று கேஸ் டிவேர்ட் ஆகிடுச்சு ....ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் விசாரணையை செய்துட்டு தான் இருக்காங்க ...."என்றார் மத்திய ரயில்வே அமைச்சர் ராமராஜு .இந்திய பிரதமரின் வலது கை .

சற்று நேரம் பேசி கொண்டு இருந்தவர்கள் மத்திய விருந்தை முடிக்க ,"இந்தா அம்மா ..."என்று மிக பெரிய சூட் கேஸ் ஒன்றை நீட்டினார் ராமு மதுராவிடம் .
Jewelry-box.jpg
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sukkhi-Classic-Laxmi-Design-Gold-SDL000364281-4-7bb35.jpg

திறந்து பார்த்த மதுராவின் விழிகள் திகைத்து பின் கலங்க ஆரம்பித்தது ."எப்படி ...எப்படி அங்கிள் ....இவை எல்லாம் ?"என்றாள் திக்கி திணறி .அந்த பெட்டிக்குள் வைர நகைகள் மின்னி கொண்டு இருந்தன .அது எல்லாவற்றையும் விட அவளை மிகவும் நிலைகுலைய வைத்தது சிகப்பு வெல்வெட் பாக்ஸில் இருந்த செயின் போன்ற ஒரு ஆரம் தான் .

"இது எங்க குடும்ப சொத்து என்று உனக்கே தெரியும் தானே மதுரா ....இந்த நகைக்கு உயிர் இருப்பதாக என் முன்னோர்கள் சொல்வார்கள் ...இது யாருக்கு போக வேண்டும் இன்று இருக்கிறதோ அவர்களுக்கு தான் போகுமாம் .....எங்க குல வழக்கம் படி ஒரு கன்னி பெண்ணின் திருமணத்திற்கு நாங்க பொறுப்பு ஏற்க வேண்டும் ....இந்த முறை உன் திருமணம் எங்கள் பொறுப்பு என்று தான் அந்த தெய்வமே முடிவூ செய்து விட்டதே .....அதனை தெரிந்து கொண்ட ஸ்ரீ அம்மா உன்னிடம் இதை கொடுத்தா ....நூறு வருஷம் தீர்க்க சுமங்கலியாய் நீ வாழ வேண்டும் என்ற மனநிறைவோடு ..........அந்த விபத்தில் காணாமல் போனது திரும்ப என் கையில் கிடைத்தது விதி தான் மதுரா ...இது திரும்பவும் உன்னிடம் வர வேண்டும் என்பதும் தான் ...."என்றார் அவர் .

கண் கலங்க நின்றாள் மதுரா ."அழாதே மா ....நடப்பது எல்லாம் அவன் விளையாட்டு ...இல்லை என்றால் எங்கேயோ tour வந்த நீ ஏன் மேக்னா வீட்டில் தங்கணும் ...கோயிலுக்கு வரணும் ....அங்கே நாங்க இருக்கனும் ????எல்லாம் அவன் செயல் தான் மதுரா ..........உன் திருமணம் என் பொறுப்பு ....அன்றே இறைவன் அவன் சன்னிதானத்தில் எங்களுக்கு இட்ட கட்டளை அது தான் ....இன்றும் அது தான் .....உன் திருமணத்தை நடத்தி வைக்க தானோ என்னவோ அந்த விபத்தில் நான் இறக்கவில்லை .....எந்த உதவி வேண்டும் என்றாலும் தயங்காம கேளு .....என் மூத்த மகள் நீ தான் மதுரா .....எதற்குமே தயங்காதே ....நான் இருக்கிறேன் ..."என்றார் அவளை அணைத்த படி .

முயன்று தன்னை சமாளித்து கொண்ட மதுரா ,"ஊருக்கு போன உடனே திருமண ஏற்பாடு தான் அப்பா .....இந்த வெல்வெட் box மட்டும் நான் எடுத்து போறேன் ....மீதம் எல்லாம் உங்களிடம் இருக்கட்டும் ....தேவை படும் போது வாங்கி கொள்கிறேன் ....ஒரு கன்னி பெண்ணின் திருமணத்திற்கு மட்டும் அல்ல இந்த நகைகள் பல நல்ல காரியத்திற்கு உபயோகம் ஆகும் ....."என்றாள் மதுரா .

வாய் விட்டு சிரித்தார் ராமு ..."இந்த நகைகளுக்கு உயிர் உண்டு என்று பெற்றோர் சொன்ன போது கூட நம்பலை ...இப்போ தான் நம்பறேன் ....சரியானவளை தான் இந்த நகைங்க தேர்ந்து எடுத்து இருக்கு ....உன் மூலமாக பலரின் வாழ்வூ மலர வேண்டும் என்பது இதன் விருப்பம் போல் இருக்கு ....உன் எண்ணம் போலவே எல்லாத்தையும் செய்துடலாம் மதுரா ...."என்றார் அவர் மன நிறைவாக .

"சரி அப்பா கிளம்பறேன் ....எப்படியும் ஸ்ரீ ஆபரேஷன்னுக்கு நீங்க சென்னை தானே வர போறீங்க ....அப்பவே என் திருமணத்தை fix செய்துடலாம் ..."என்றாள் மதுரா .

"மாப்பிளை ..."என்றார் ராமு .

"போய் ரெடி செய்வது தான் முதல் வேலை .............வரேன் அப்பா ...வரேன் ஸ்ரீ .."என்றவளின் பயணம் சென்னை நோக்கி ஆரம்பமானது .

"ரொம்ப கஷ்டமா இருக்கா மதுரா ..."என்றான் ஹர்ஷா தோழி மௌனமாக அழுவதை கண்டு .

"இருக்க தானேடா செய்யும் .....ஒன்றா இரண்டா ...200 உயிர் ஆச்சே ...பாவி பசங்க ....பணம் ,மதம்,பதவி , என்று வெறி பிடித்து அலையறானுக ..... கடவுள் ரொம்பவே தப்பு செய்துட்டார் ....ஆண் பெண் இருவருக்குமே குழந்தை பெரும் படி செய்து இருக்க வேண்டும் ...அப்போ தான் ஒரு உயிரை உலகிற்கு கொண்டு வர எத்தனை பாடு பட வேண்டி இருக்கிறது என்று எல்லா உயிரின் மீதும் மதிப்பு வரும் ...தன்னை போல மற்றவர்களையும் பார்க்கும் குணம் வந்தால் தவறு நடக்கவே நடக்காது ....அப்படி மட்டும் இருந்து இருந்தால் எதற்கு என்றே தெரியாமல் துப்பாக்கி எடுக்கறது ,கலவரம் செய்யறது ,பெண்களை போக பொருளாய் பார்ப்பது ,suicide போமெர் ஆகிறது என்று எதுவுமே நடக்காது ....70%குற்றங்கள் குறைந்து விடும் ...."என்றாள் மதுரா .

"நான் அதை கேட்கவில்லை ....உன்னவரை பற்றி கேட்டேன் ....நீ தொலைத்த உன் வாழ்வை பற்றி கேட்டேன் ....."என்றான் ஹர்ஷா .

"ஹாங் குளு குளுன்னு இருக்குது ...காதலில் ஜெயித்தும் வாழ்வில் தோற்றால் அப்படி தான் இருக்கும் என்று சாலமன் பாப்பையா சொன்னார் பா .....கேட்கிறான் பார் கேனையன் .....மனசை போட்டு யாரோ புழியற மாதிரி வலிக்குது .....மூச்சு முட்டுது .....என்னால் முடியுமா ஹர்ஷ் ...ரொம்ப பயமா இருக்குடா ...எவ்வளவூ காலத்திற்கு தான் வலிக்காதது மாதிரியே நடிப்பது சொல்லு ......நான் செய்யறது சரி தானே ஹர்ஷ் ...."என்றாள் அவன் கையை பிடித்து கொண்டு .

"சே கண்ணை தொடை ....உன்னை எவ்வளவூ தைரியசாலி என்று நினைத்தேன் ...எந்த பிரச்சனை வந்தாலும் ஜஸ்ட் லைக் தட் என்று ஊதி தாளிட்டு போகும் என் ஜான்சி ராணி ,ராணி மங்கம்மா எங்கேம்மா ....இது உனக்கு செட் ஆகலை மதுரா உன் கேரக்டர் இதுவே இல்லை ....உன்னால் முடியாது என்றால் வேறு யாராலும் இதை செய்து முடிக்க முடியாது என்பது தான் உண்மை .....உன்னவர் உனக்கு நிச்சயம் திரும்ப கிடைப்பார் ....உன் காதலின் சக்தி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு மதுரா ."என்றான் அவள் தலையை ஆட்டிய படி .

"சரி என் முடிந்தும் ,முடியாமல் இருக்கும் லவ் ஸ்டோரி இருக்கட்டும் ....நீ என்ன புது ட்ராக் போடுறே ?என்றாள் மதுரா .

"என்னடீ சொல்றே ?"என்றான் ஹர்ஷா .

"அதான் பார்த்தேனே டைனிங் டேபிள் ரொமான்ஸ்சை ...தட்டை பார்த்து சாப்பிடு என்றால் ஸ்ரீயை பார்வையால் விழுங்கிட்டு இருக்கே .....அவ தட்டில் இருந்து ரசகுல்லா உன் வாய்க்கு போகுது .....கவனிக்கலை என்று நினைச்சியா ...

ஜங்குஜங்குஜான்
ஜங்குஜங்குஜான்
ஜங்குசான் ஜான்
ஜங்குஜங்குஜான்
தங்குறாதாங்குதான்
தங்குறா தங்குதான்
ஹஹ ஹாஆஆஹஹ ஹ ஹ (இசை)


ஹோய்.கண்டுப்
புடிச்சேன் கண்டுப்
புடிச்சேன்
காதல் நோயை கண்டுப்
புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப்
புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது
சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே
என்று
நீ உறங்கும் போது உளறல்
கேட்டேன் அன்று


கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப்
புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப்
புடிச்சேன்.


என்று பாடியவளை முறைதான் ஹர்ஷா .
images.jpg

"இதுல நீ கண்டு பிடிக்க எல்லாம் எதுவும் இல்லை ....ரெண்டு குடும்பமும் பேமிலி friends ....சின்ன வயதில் இருந்தே எனக்கு ஸ்ரீ ,ஸ்ரீக்கு நான் என்று பெரியவங்க பேசி வைத்தது தான் ....அது அப்படியே லவ் ஆகிடுச்சு ...நடுவில் மேக்னா பிரச்சனை ,அந்த பாம் ப்ளாஸ்ட் ,இவ தண்டு வடத்தில் அடி ,நடக்க முடியாமல் போனது ,அது லூசு மாதிரி டிரீட்மென்ட் வேண்டாம் என்று சொல்லியது என்று எப்படி எப்படியோ பாதை மாறி போச்சு .....என்னாலும் மேக்னாவிற்கு ஒரு வாழ்க்கை அமைத்து தராமல் என் வாழ்க்கை பற்றி நினைக்க மனம் விரும்பலை ....தாத்தா இப்படி பிளான் போட்டு எங்களை வரவழைத்ததும் நல்லதிற்கு தான் ....சென்னையில் அவ தோழி திருமணம் என்று வந்தோம் ....காலேஜ் டேஸ்ல நீங்க எல்லாம் அந்த பீச் லட்சுமி கோயிலுக்கு வருவீங்கலாமே ....அங்கே போயி ஆகணும் என்று மேக்னா ஒரே அடம் ...வந்த இடத்தில் இளவரசியரையும் பார்த்தாச்சு ....இனி மேலாவது எல்லோர் வாழ்வூம் நல்லதாய் அமையட்டும் ."என்றவன் கோயில் வந்து விட கார் பார்க்கிங் விட்டு மதுரா உடன் சுவாமியை தரிசிக்க சென்றான் .

PENANCE WILL CONTINUE...

(MADHURA WILL BE RETRUNING BACK TO CHENNAI AND GOING TO FIX HER MARRIAGE.GET READY FOR MARRIAGE CELEBRATIONS)
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sorry for the break ---2

ஹாய் நட்பூஸ்

செம்ம ஜாலியா இருக்கேன் .....இன்றோடு என் மகளின் எக்ஸாம் ஓவர் ரோ ஓவர் ......ரெண்டு வாரம் முடியை பிச்சுக்காத குறை .

இப்போ மேட்டருக்கு வரேன் ........வின்டர் ஹாலிடேய்ஸ் விட்டு இருக்காங்களா ....அதான் குடும்பத்தோடு சென்னைக்கு ஒரு பை சொல்லிட்டு மூட்டை கட்டறேன் ......

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போலெ வருமா என்று ராமராஜன் வாய்ஸில் நானும் என்ற புருஷரும் தான் பாடிட்டு போக போறோம் ............எங்க இருவரின் பெற்றோர் வீட்டுக்கு ...........


இதுல நீங்க கட்டையை தூக்க வைக்கும் விஷயம் என்ன வென்றால் .....ரெண்டு இடங்களிலும் நோ இன்டர்நெட் ....சோ நோ அப்டேட் .........மொபைல் சிக்னல் கிடைக்காத கிராமத்தில் நான் எங்கே இன்டர்நெட்டுக்கு போக ?????
a8bc4ad09b272d6c01d91d2bce98c66f88632b04-tc-img-preview.jpg

திரும்பவும் சென்னை கலங்க வைக்க ஜனவரி 2 தான் ரிட்டர்ன் ......முடிந்தால் எப்படியாவது அப்டேட் ட்ரை செய்யறேன் .

முட்டை ,தக்காளி தூக்க வைக்கும் இன்னொரு விஷயம் .....ஹி ஹி ஹி .............மேரா எக்ஸாம்காக கிளாஸ் சேர்ந்துட்டேன் .........மகளுக்காக எட்டு வருடம் நம்ம வேலை,படிப்பு எல்லாம் மூட்டை கட்டி தூக்கி வைத்து இருந்தேன் ....இப்போ அது எல்லாம் தூசு தட்டி மீண்டும் வேலை தேடும் படலம் ....ஆடினா காலும் ,பாடின வாயும் சும்மா இருக்காது என்ற கான்செப்ட் தான் .....

இது தான் கடைசி சான்ஸ் எக்ஸாம் எழுத .....அதை விட்டா கடலோர கவிதைகள் ரேகா மாதிரி ஒரு கொண்டை ,குடை எடுத்துக்க வேண்டியது தான் .....என்ற மக பிறப்பதற்கு முன் நாங்க ஸ்கூல் டீச்சருங்க .....பிள்ளைங்க பாவம் தான் ......உங்க மைண்ட் வாய்ஸ் பேசுறதா நினைச்சு சத்தமா சொல்லிடீங்க .....

சோ அப்டேட் ...........இனி tuesday .thursday ----ஜனவரி 2019 ஸ்டார்ட் செய்ய படும் .....

கையில் கிடைச்சா காலியா .............மீ எஸ்கேப் .....................மிஸ் யு ஆல் ................அழ வைக்க ,மீண்டும் முடியை பிச்சுக்க வைக்க புது வருடத்தில் வருகிறேன் .....

எல்லோரும் ரொம்ப அட்வான்ஸ்ட் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ......எல்லா வளங்களும் ,நலன்களும் உங்களையும் ,உங்க குடும்பத்தையும் தேடி வர பிராத்திக்கிறேன் .....இந்த புது வருடம் உங்கள் கனவுகள் நினைவாகட்டும் ....இன்பம் ,நிம்மதி ,சந்தோசம் பொங்கி பெருகட்டும் .
happy-new-year-2018-images-download-hd-wallpapers-3d-hd-wallpaper (1).jpg

பை ரசகுல்லாஸ் .....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 34(2)

Samantha380.jpg

மூலவரையும் ,உற்சவரையும் தரிசித்து விட்டு வெளி பிரகாரத்தில் வந்து சேர்ந்தனர் அவர்கள் .அங்கு ஓங்கி வளர்ந்து படர்ந்து இருந்தது ஆலமரம் .அதன் கீழ் ராமராஜு முன்னோர்களால் பிரதிஷ்டை செய்ய பட்டு இருந்த அம்மன் மங்களகரமாய் சிவ சக்தி சமதேராய் மனதை அள்ளும் புன்னகையுடன் அமர்ந்து இருந்தார் .பக்தர்களே தங்கள் கைகளால் அபிஷேகம் ,பூஜை செய்யும் படி ராமராஜு குடும்பம் அந்த சிறு கோயிலினை நிர்மானித்து இருந்தார்கள் .பூஜை செய்து முடித்து அந்த அம்மனின் முன்னாலே மதுரா அமர்ந்து விட ,தோழியின் கண்ணீரை காண சகியாதவனாக விலகி சென்றான் ஹர்ஷா .

BELLS.jpg
கைகள் கூப்பிய படி இருக்க ,மூடி இருந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிய மனதிற்குள் ஆத்மார்தமாய் அந்த தாயிடம் பேசி கொண்டு இருந்தாள் மதுரா .

amman_3.jpg

"நடந்தது எல்லாம் உன் லீலை என்கிறார் ராஜு அப்பா ...........ஆனால் எதற்காக இந்த சோதனை தாயே ....காதலில் ஜெயித்து வாழ்வில் தோற்று நிற்கும் நான் .......ஒரு நாள் வாழ்வில் இரு பிள்ளைகளை பெற்று காதலில் தோற்று நிற்கும் மேக்னா ......திருமணம் என்பதையே கேலி கூத்தாக்கி நிற்கும் சோனா .............காதல் ,வாழ்வூ ரெண்டையும் தொலைத்து நிற்கும் ரூபிணி ......வாழ்க்கை யாரையும் வஞ்சிப்பது இல்லை என்கிறார்கள் .....ஆனால் எங்கள் வாழ்க்கை எல்லாம் ஆரம்பிக்கும் போதே கருகி அல்லவா போய் இருக்கிறது .....பலரின் வாழ்வூ இங்கு வந்து தான் தடம் மாறி போனது .............அதை சரி செய்ய இனியாவது எனக்கு சக்தி கொடு .......எங்கு என் வாழ்க்கை தொலைந்ததோ அதே இடத்திற்க்கு வாழ்வை மீட்டு எடுத்து வர துணை இரு .......என் காதல் என்னை விட்டு போகவில்லை ............அது என்றுமே அழிந்தது இல்லை என்று எனக்கு தெரியும் ......அந்த காதலை பணயம் வைத்து தான் வாழ்வை மீட்டு எடுக்க போகிறேன் .............திரும்ப உன் சன்னிதானத்திற்கு வரும் போது என் வாழ்வோடு தான் தாயே வருவேன் .........ஒருவேளை எங்கள் இருவரின் வாழ்வூ மீட்க பட முடியாமல் போனாலும் அந்த பிள்ளைகளுக்காகவாது மேக்னா வாழ்வை மலர செய் அம்மா .....'என்று வேண்டியவள் ----பலரின் வாழ்வை திசை மாற்ற சென்னை நோக்கி பயணப்பட்டாள் .மதுரா சென்னை வந்து அடையும் போது இரவூ மணி 2

ரெண்டு .அவள் பயணம் சென்னையை நோக்கி ஆரம்பமான சமயம் சென்னையில் "இந்தர் இண்டஸ்ட்ரி "குள் புயல் என நுழைந்தது கஜாவின் கார் .கஜா புயலால் சேதம் விஜய்கா இல்லை விஜய்யால் அந்த புயலுக்கேவா ??????

அதில் இருந்து கஜாவும் ,அவர் ஆசை பேத்தி சோனாவும் இறங்கினார்கள் .ஆள் பாதி ஆடை பாதி என்பதை தவறாக புரிந்து கொண்டு இருந்தது அந்த ஜந்து .....microscope வைத்து தேடினால் கூட சோனா அணிந்து இருக்கும் ஆடையை கண்டு பிடிப்பது கஷ்டம் .வந்து இருக்கும் இடம் அலுவலகம் ....பப்போ ,நைட் கிளப்போ இல்லை என்று யார் தான் சொல்லி புரிய வைப்பது . செய்யும் தொழிலே தெய்வம் என்பது எல்லாம் இந்த பேய் கூட்டத்திற்கு புரியவா போகிறது ??????
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hamsa-Nandini_18042.jpgரெண்டு பாதுகாவலர்கள் வேறு .உடன் வக்கீல் வேறு......சோனா போதை மருந்து வழக்கில் கைதான போது அந்த தியாகசெம்மலை வெளி கொண்டு வர உயிர் கொடுத்து போராடினாரே அதே குள்ளநரி .உடன் சோனாவின் ஜால்ரா பெண் ஒருத்தி

"கருணா !.....அவங்க ரெண்டு பேரும் வந்துட்டு இருக்காங்க என்று கீழே இருந்து receptionist தகவல் சொன்னாங்க ............"என்று பதறியவாறு ஓடி வந்தார் சேது .

தனது லேப்டாப் ஓடு இணைக்க பட்டு இருந்த cctv வீடியோவை பார்த்து கொண்டு இருந்த விஜய் முகம் உணர்ச்சி முற்றிலும் துடைக்க பட்டு இருக்க ,"கேம் ஸ்டார்ட்ஸ் "என்றான் கண்ணில் விபரீத ஒளியோடு .
rU1andIc_400x400.jpg

"அப்படி என்றால் ..............."என்றார் சேது .

"இன்று முதல் உங்களுக்கும் ,அம்மாவிற்கும், பாட்டிக்கும் விடுதலை ............"என்று தன் சுழற்நாற்காலியில் ஆடியவாறு சொன்னவன் டக்கென்று எழுந்து ஜன்னலை பார்த்தவாறு அறை வாயிலுக்கு முதுகு காட்டி நின்றான் .சேது ஏதோ சொல்வதற்குள் கதவை படார் என்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் கஜாவும் ,சோனாவும்

.உடன் தாத்தா இருக்கிறார் ,பெற்ற தகப்பன் அங்கு இருக்கிறார் என்று எதுவும் இல்லாமல் அப்பொழுதும் விஜயயை நோக்கி உடம்பை ,வளைத்து நெளித்து போஸ் என்ற பெயரில் ஒரு கேவலத்தை அரங்கேற்றி கொண்டு இருந்தாள் sona.
(விளக்கமாத்து இருந்தா எடு விஜய் .....)

"அப்பறம் அப்பா .....காலையில் இரும்பிட்டு இருந்தீங்களே ..........டாக்டர் கிட்டே போகலாமா ..........?"என்றான் விஜய் வந்தவர்களை அலட்சியம் செய்தவாறு .

"அது ஒன்றும் இல்லை கருணா ....சீசன் மாறுது இல்லை அதான் ......கனகா கஷாயம் வைத்து கொடுத்தா ...இப்போ பரவாயில்லை ......"என்றார் அவர் .

"என்ன அப்பா பண்றது குளோபல் வார்மிங் ....போன தடவை விட இந்த தடவை சென்னை குளிர் ரொம்பவே தான் அதிகம் .....காலை பத்து மணிக்கு கூட உஸ் என்று காத்து அடிக்குது இல்லையா அப்பா ?"என்றான் விஜய்

"கருணாகரா ............"என்று இரைந்தார் கஜா .

புருவத்தை மட்டும் "என்ன "என்பது போல் ஏற்றி இறக்கினான் விஜய் .

"நாங்க வந்து எவ்வளவூ நேரம் ஆகுது ...இப்போ தான் உலகத்தை பத்தி ஆராய்ச்சி தேவையா உனக்கு ?"என்றார் அவர் .

"உங்களை நானா வர சொன்னேன் .....சொல்லுங்க ...நானா வர சொன்னேன் ????இல்லை ...........நீங்களா வந்து இருக்கீங்க .............நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க என்று எனக்கு என்ன ஜோசியமா தெரியும் ????வந்த ஆள் நீங்க தான் ....எதுக்கு வந்து இருக்கீங்க என்று நீங்க தான் சொல்லணும் .....இது சுதந்திர நாடு மிஸ்டர் கஜா ...யார் வேண்டும் என்றாலும் எதை பத்தி வேண்டும் என்றாலும் பேசலாம் ...."என்றான் விஜய்

"இந்த திமிர் தானே சூர்யாவின் லாரி எரிச்சு இருக்கு .............அவன் என்னவோ பிரஸ் மீட் வைத்து வார்னிங் தறான் .......ஹாஸ்பிடலில் வேறு சண்டை போட்டு இருக்கே ......தெரு நாயை குளிப்பாட்டி நடு மாளிகையில் வைத்தாலும் அது சாக்கடை நோக்கி தான் ஓடுமாம் ......இது நான் கஷ்ட பட்டு வளர்த்த தொழில் .....உன் திமிர் ,ஆணவத்திற்கு எல்லாம்
எல்லாம் இதை பலி கொடுக்க மாட்டேன் ...ஒழுங்கு மரியாதையாய் சூர்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு .....நீ செய்த தப்புக்கு அவன் கொடுக்கும் தண்டனையை வாங்கு ....."என்றார் கஜா

"செய்யா விட்டால் ...............என்ன நீங்க செய்வீங்க ....இல்லை அந்த பூரியா ....சூரியா அவன் என்ன புடிங்கிடுவான் ?"என்றான் விஜய்

"நீ பேசும் விதம் ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் மேனேஜிங் டைரக்டர் போல் இல்லை ..........பக்கா ரவுடி ,லோக்கல் தாதா,பொறுக்கி மாதிரி இருக்கு ..........."என்றார் கஜா .

(இதை யார் சொல்வது என்று விவஸ்தை இல்லையா ?)

"ஆமா நான் ரவுடி தான் ...பொறுக்கி தான் ..........தாதா தான் ..............ஆமா நான் தான் சூர்யாவின் லாரியை கொளுத்தினேன் ....இப்போ என்ன அதற்கு கஜா ....?"என்றான் விஜய் அசால்ட்டாய் .

அவன் ஒப்பு கொள்வான் என்று அவர்கள் எதிர் பார்க்கவில்லை போல் இருக்கிறது .ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டனர் .பின்னே இவர்கள் கொளுத்தியதற்கு விஜய் பொறுப்பு ஏற்று கொள்ள அவனுக்கு என்ன பைத்தியமா என்று தான் நினைத்து இருந்தார்கள் .....ஆனால் அவன் ஒப்பு கொள்ளவே ,பைத்தியம் தான் போல் இருக்கு என்று முடிவூ செய்து கொண்டனர் .பின் அவர்கள் வந்த வேலை இவ்வளவூ சுலபமாக முடியும் என்றால் திகைப்பு வராதா என்ன ?
 
Status
Not open for further replies.
Top