Srinisaran
Member
என் பெயர் சரண்யா. வசிப்பது சிங்காரசென்னை.என் 12 வயதிலிருந்து புத்தகங்கள் படித்து வருகிறேன். புத்தக கண்காட்சியில் அப்பா வாங்கி தந்த சிவகாமியின் சபதம் நாவல் தான் என்னை புத்தக பைத்தியமாக்கியது. சரித்திரம், க்ரைம் நாவல்களில் இருந்து குடும்ப நாவல்களின் பக்கம் என் கண்களை திருப்பிய பெருமை என் அத்தையையே(அப்பாவின் தங்கை) சாரும்.அவர்கள் ரமணிமாவின் மிகப்பெரிய விசிறி.ரமணிமா கலெக்ஷன் எல்லாமே அவர்களிடமிருந்து வாங்கி படித்திருக்கிறேன்.கவிதைகள் சிறுகதை என கல்லூரி காலங்களில் எழுத்தூலகில் மெதுவாக என் தடங்களை பதித்தேன்.புக்க கையில எடுத்தா உலகமே அழிஞ்சா கூட உனக்கு தெரியாதுன்னு அம்மா திட்டிகிட்டே இருப்பாங்க. கூப்படறது கவனிக்கலன்னு கையில இருக்கிற புக்க அம்மா கிழிச்சி தூக்கி போட்ட அனுபவம் கூட உண்டு. எல்லாம் கல்யாணத்திற்கு முன்னாடி வரைக்கும்தான். மச்சினர், நாத்தனார்,கொழுந்தன் என பெரிரிரிய குடும்பம்.நீண்ட நெடிய பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்ப இரண்டு மாதங்களாக புது போனின் உபயத்தால் இந்த தளத்தின் அறிமுகம். தொடர்பற்று போன இத்தனை ஆண்டுகளில் எத்தனை மாற்றம். ஏதோ கோமா ஸ்டேஜில் இருந்து மீண்ட மாதிரி எல்லாமே புதுசா தெரியுது. ஸ்ரீ மேமின் கதைகள் தனி ஸ்டைல்தான். Jb ன் கதை கூறும் பாங்கு ரொம்ப அழகாகா இருக்கு. விஐய மலரின் ஸ்டண்ட் சீன்கள் கண்முன் படமாய் ஓடுது. விஷ்ணு பிரியாவின் எழுத்துநடை ரொம்ப பிடிச்சிருக்கு. தீபாஷ்வினியின் சிவாகுட்டி ச்சோ ஸ்வீட் . வாழ்க்கைல மிஸ் பண்ணதெல்லாம் திருப்பி கெடச்சமாதிரி ஒரு ஃபிலிங். தேங்க்யூ ஸோமச் ஸ்ரீக்கா.