தாமரை
தாமரை
வாவ் மிக மிக அழகான ரிவ்யூ டா @Josyyyகதை ரொம்ப அருமையா இருந்தது தாமு மா செல்லக்கிளி போல இன்றைய டீனேஜ் பொண்ணுங்களுக்கு படிப்பு வாழ்க்கை தெரிவில் தெளிவு இருந்தால் கண்டிப்பா வாழ்வில் ஜெயித்து தான் வருவாங்க... எந்த நேரத்தில் எது வேண்டும் என்ற தெளிவு இருக் கனும்.. அவளோட அந்த தெளிவு எனக்கு ரொம்ப பிடிச்சது... ஈஸ்வரி என்னவொரு நட்பு... கண்டிப்பா இப்படி நட்புகள் கிடைத்தால் அவர்களுக்காக என்னவேனாலும் செய்யலாம் போல... அண்ணனிடம் கேட்கும் கேள்விகள் எல்லா அருமை.. அவனின் காதலும் தவறு இல்லை... அவளிடம் அவளின் வயதை கருதாது சொன்னாலும் அவளுக்காக யோசிப்பது சூப்பர்... இல்லை என்றதும் அமைதியாக விலகி போனதுமே தான்..
நித்யா wow what a girl she is.. அவளோட attitude எல்லாம் சூப்பர்.. தைரியம் அடாவடி சரவெடி நடவடிக்கை இவளின் நட்புமே blessing தான்... ஆர்ப்பரிக்கும் அருவிக்கு ஏத்த அமைதியான நதிபோல அவன்... Nice combination..
Soundar தவறே செய்யாத மனுஷனுக்கு 25 வருட தண்டனை பாவம்... சொர்ணம் அவருமே பாவம் தான்.. அவருக்கும் தண்டனை தான்.. மௌனம் களைந்து இருந்தால் அந்த நாட்கள்/வருடங்கள் வெறுமையாய் இருந்து இருக்காது... வேதா இவரை போன்ற ஆட்கள் எல்லாம் இன்றும் இருக்காங்க தான்... இவரால் ஒரு நட்பு, ஒருவரின் வாழ்வு கனவு முடிஞ்சது கஷ்டமா இருந்தது... இவர் திருந்த பேரனின் மௌனம் தான் வர வேண்டி இருந்து இருக்கு...
வனராஜன் ராஜனே தான்... அலட்டல் இல்லாத, அதிக ஹீரோயிசம் இல்லாத அமைதியான அன்பான ஹீரோ.. எல்லாத்தையும் அமைதியா அவனுக்கு ஏத்த போல மாத்திக்கிரான்.. சூப்பர்ப்...
A beautiful family story...
சைட் பக்கம் வராததால நீங்க இதைப் போட்டதை கவனிக்கலை, தாமதமாபதில் போடறதுக்கு மன்னிக்கனும்டாமா
முதல் கதை, எங்கெங்கேயோ கொண்டு போனாலும் கடைசில முடிவுக்கு கொண்டு வந்ததும் நான் அடைந்த அந்த ஆசுவாசம் இன்னமும் நினைவில், அந்த பதட்டத்திற்கு மருந்தாக, இப்பவும் படிச்சுட்டு, புகழும் உங்க கருத்துப் பகிர்வு, நிஜமா ஏதோ பெரிச சாதிச்சுட்ட ஃபீல் டா.
எத்தனை ஹீரோ வந்தாலும் வனராஜன் ரொம்ப ஸ்பெஷல்,
உங்களுக்கு கதையின் மாந்தர்கள்... நான் சொல்ல வந்த கருத்து பிடித்தது , மிகுந்த மகிழ்ச்சி மா.
அழகான கருத்துப் பகிர்வு, நேர்மறை கருத்துக்களை கொடுத்து ஊக்கப்படுத்துவதாக,
உங்க எழுத்து நடை என் பேபிமா வ ஞாபகப் படுத்துது, சரிதானான்னு தெரியலை