ரம்யா சிஸ்
//வர்ணாவுக்கு யோசனை சொல்ல ஆள் இருப்பதில் விஷ்ணுவுக்கு கொஞ்சம் பொறாமை தான் போலும்
//
பொறமைலா இல்லை.ஆனா, லைட்டா பொறாமை தான் .அப்படி ரம்யா sis
//வள்ளி அவனை பெயர் சொல்லி அழைப்பது இவளுக்கு பிடிக்கவில்லை
//
பாவம் அவன் என்ன கடுப்பில் இருந்தானோ ,பெயர் சொல்லி கூப்பிட்டதும் கடுப்பாகிட்டான்
//ராணி அம்மாவின் மீது கை நீட்டியது குறித்து இவள் வலியோடு கேட்கையில் அவன் மனதிலும் தான் எத்தனை வேதனை. //
எஸ் அவனும் கொஞ்சம் பாவம் தான் போல sis
//அவளிடம் "ஏன் டி என்னை சாகடிக்கிறீங்க. என்னோட பிறப்பு நான் முடிவு பண்ணது இல்லை. அது தப்பாக போனதுக்கு நிதம் நிதம் சொல்லி சாகடிப்பீங்களா ! இதுக்கு மொத்தமா... " என சொல்கையில் அவனின் வலி நம்மையும் வேதனையில் ஆழ்த்திவிட்டது. //
அவ்வரிகளில் உங்களால் அவனது வலியை உணர முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
//பெற்றவர்கள் செய்த பாவத்திற்கு இவனல்லவா தண்டனை அனுபவிக்கிறான் பாவம்
//
கொஞ்ச நாள் கழிச்சு சந்தோசமா இருப்பான் ரம்யா sis அவனும் கொஞ்சம் kd தான்
//இவளும் " நீங்க என் விஷ்ணு அய்த்தானே இல்ல. ரொம்ப மாறீட்டிங்க " என்று சொல்லிவிட்டு அவனை கடந்து சென்றாலும், அழுது கொண்டே தான் செல்கிறாள், பாவம்
அந்த வார்த்தைகள் அவனையும் தான் பாதித்தது ஆனால் அது வேறு வகையில்//
ஆமா, ரெண்டு பேரும் இப்படி தான்.அவன் ஒன்னு பேச, இவ ஒன்னு பேச, கடைசியில் நமக்கு தான் சோகம்
//" துடிப்புக்கும் சிலிர்ப்புக்கும் இடையே சுகமாக சிக்கித் தவித்தான்"
எவ்வளவு அழகாக அவன் உணர்வுகளை சொல்லியிருக்கீங்க
சிஸ்
//
கதையில் ,ஒரு அத்தியாயத்தில் ,ஒரு பத்தியில் எங்கோ பதிந்திருக்கும் வரியை எடுத்து ,அந்த வரியை நான் ரசித்து எழுதியது போல நீங்களும் குறிப்பிட்டு சொல்வது அத்தனை நிறைவு தருகிறது ரம்யா sis மிக்க நன்றி
//சிறு வயதிலேயே வர்ணா - விஷ்ணு உறவை பலமான அஸ்திவாரம் போட்டு அமைத்து விட்டார்கள் அப்பாவும் மகளும்.//
ஆமா, அவங்க ரெண்டு பேர் தான் முதல் காரணம் ரம்யா sis
//அந்த வயதிலேயே ஹீரோவாக அவள் மனதில் மிக ஆழமாக பதிந்து போயிருக்கிறான் அவளது அய்த்தான். அவனுக்கும் அவளின் மேல் பிடித்தம் தான். //
ஆமா ,நம்ம பாப்பானு யாரையாவது காட்டினால்,நாம் சற்று உரிமையும் பார்த்துக் கொள்வோம் அல்லவா ,அப்படியான பிடித்தம் மட்டும் தான்.
//'முதல் முதலாக, அவளது பிஞ்சு விரல்களால் தனது கரம் பற்றி நடந்த வர்ணா......' எனத் தொடங்கும் அந்த பத்தி முழுவதும் அவன் நினைவுகளில் அவள் நீக்கமற நிறைந்திருப்பதை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள்
//
அந்த நினைவுகள் உங்களது நெஞ்சோடு இடம் பெற்றதில் மகிழ்ச்சி சிஸ்
//ஈஸ்வர் ஆறு மாதம் சென்னை செல்ல போகிறேன் என்றவுடன் இவள் முகமோ அழுது வடிகிறது, அவன் முகமோ மலர்ந்து பிரகாசிக்கிறது
//
ஹா ஹா..அவன் எந்த தொந்திரவும் இல்லாம இருக்கலாம் ல,அதனால் வந்த மகிழ்ச்சியா இருக்குமோ
//கோவத்திலும் ஏதோ ஒரு வேகத்திலும் தன் நண்பன் மற்றும் நலன்விரும்பியாக இருக்கும் ஈஸ்வரிடம் இனி எதுவும் உன்னிடம் சொல்லாமல் தான் செய்வேன் என்று சொன்னாலும், விஷ்ணுவை குறித்து அவனிடம் இதுவரை இவள் பேசவில்லை இனிமேலும் அது தொடரும் என நினைக்கிறேன். //
அதே அதே சிஸ்.u r on point sis
//' விஷ்ணுவோ இமை விலகாது அவளது கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரிடம் தனக்கான நியாயம் கேட்டுக்கொண்டிருந்தான் '
' விஷ்ணுவின் புதிய பரிணாமத்தில் உள்ளுக்குள் திணறி வெளியே வெளிறிப் புரியாத புதிராய் தகித்து நின்றாள் ஹிரண்ய வர்ணா '
அருமையான வரிகள். //
Paaaaaah ..என்ன மாதிரியான ரசனை உங்களுக்கு.நிஜமா அந்த கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரிடம் அந்த வரி, ஒரு காரணம் கொண்டு ,பிடிச்சு ரசிச்சு எழுதினேன்.அதை நீங்க குறிப்பிட்டு சொல்லும் போது என்ன மாதிரி உணருறேனே தெரியல,அந்த அளவு இனிமையாக இருக்கு sis
//விழியசைத்து நீ கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்ல காத்திருக்கின்றேனடி,
இதழ் அசைத்து அல்ல, இதழ் அணைத்து
அற்புதம் சிஸ்
//
மிக்க நன்றி ரம்யா sis
//அரண்மனை ஒரு முறைக்கு மேல் பார்க்க தூண்டும் இடமென்றும் எத்தனை முறை பார்த்தாலும் வியக்க மற்றும் இரசிக்க கூடிய இடமென்றும் அவர்கள் அரண்மனையை சுற்றி பார்ப்பதை மிக சுருக்கமாக அழகாக சொல்லியிருக்கீங்க
இணைப்பு தகவல்
//
ஒரு அத்தியாயம் படித்தால் அதனை எத்தனை திருத்தமாக கருத்திடுகிறீர்கள்.நிஜமா நீங்க அவளோ perfect.
அதை விட கதை எழுதியவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டு சொல்லும் இடங்கள் அத்தனை உறுதியை தருகிறது.காட்சியோடு கடந்து போகாது ,நீங்கள் தரும் கருத்திற்கு மிக்க நன்றி ரம்யா சிஸ்