Ramyasridhar
Bronze Winner
இந்த பதிவை படிக்கும் போது ராணியம்மாவின் மேல் உள்ள மரியாதை உட்சத்தை தொட்டது என்றே சொல்லவேண்டும் சிஸ்.
பின்னே 1980 களில் ஒரு பெண்மணி, பெண் குழந்தையோடு யாருடைய துணையுமின்றி தனித்து நின்று போராடி வாழ்க்கையில் ஜெயித்து காட்டியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்லவே
தன் உயிருக்கு உயிரான தோழியின் அண்ணன் என்ற ஒரே காரணத்திற்காக 18வயதிலேயே திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்து, பின் அக்குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு சொந்த தொழில் தொடங்கி வருமானத்தை பெருக்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கிறார். ஆனால் அதற்கு பரிசாக கிடைத்ததோ துரோகம் மட்டுமே தோழியை தவிர்த்து அனைவரும் பொய்த்து போயினர் அவர் வாழ்வில் ராணி அம்மா ராஜனை அறைந்தது தவறு செய்த மகனை தட்டி கேளாமல், மகனை அடித்த மருமகளை அல்லவா வசைபாடினர் மருமகள் வேண்டாம், ஆனால் அந்த மருமகள் தொடங்கிய உணவகம் மட்டும் வேண்டும் அவர்களுக்கு, நன்றி கெட்டவர்கள். 'கட்டியவனையே பிச்சையிட்டேன், இதையும் பிச்சையென எடுத்துக் கொள் ' அந்த இடத்தில் உங்களின் இந்த குறிப்பிடல் மிக அருமை பெற்றோரும் கைவிட, அந்த தொழில் இல்லையென்றால் என்ன இன்னொரு தொழிலில் காலூன்றி அதிலும் ஜெயித்து காட்டிவிட்டார் நம் ராணி அவருக்கு பொருத்தமான பெயர் தான்.
பெண்களை பறவைகளோடு மிக அழகாக ஒப்பிட்டு காட்டியிருந்தீங்க சிஸ். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, வெகு சில பெண்கள் தான் ராணி அம்மாவை போல் வாழ்வில் உயர்ந்து பறக்கிறார்கள். ஏராளமானோர் றெக்கைகள் ஒடுக்கப்பட்ட பறைவைகள் போலவே வாழ்வில் ஒடுங்கி போய்விடுகிறார்கள். பெண்களுக்கு மன உறுதி எவ்வளவு முக்கியமென அழகாக சொல்லிவிட்டீர்கள் நம் சமூகமும் மாற வேண்டும்.
விஷ்ணுவில் ராணியையும், ஹிரண்யா வில் கஜாவையும் கண்டு தோழிகள் தங்கள் வாழ்வை அவர்களுடன் கழிக்கிறார்கள்.
கஜாவின் மறைவு விஷ்ணு - ராணி இருவரையும் தான் பெரிதும் பாதித்திருக்கிறது. மன்னிப்பு கேட்கும் எண்ணம் இருந்தும் காலம் கடத்தி கொண்டே போகிறான் விஷ்ணு. காலம் கடந்து கேட்கும் மன்னிப்பு ஏற்கப்படுமா தெரியவில்லை கஜா மேல் ராணி கொண்ட அன்பு காலம் தாழ்த்தியேனும் அவனது செயலை மன்னிக்காவிடிலும் மறக்கவாவது செய்யும் என நம்புகிறேன். ஹிரண்யா ஒவ்வொரு செயலையும் ஈஸ்வரிடம் கேட்டு செய்வது விஷ்ணுவிற்கு கடுப்பை கிளப்புகிறது
அழகிய காலங்கள் ஒற்றை நொடியில்
கரைந்து போகுமா?
இல்லை கடந்து தான் போகுமா?
போனதே !!
சிக்கி, சிதைந்து, சிலிர்க்கும் பார்வைகள் ஒரு வரம் என்றால்,
தவிர்த்து, தள்ளி நிறுத்தி, தகிக்க செய்யும் பார்வைகள் பெரு வரம்.
வரத்தின் துவக்கம் தவம்,
பெரு வரத்தின் துவக்கம் உயிர்ப்பு நிறைந்த உறவு.
அருமையான வரிகள் சிஸ்
படப்பிடிப்பகம்
காரைக்குடியில் அரண்மனைகள் இருப்பது பற்றி அறிந்தது எனக்கு புதிய தகவல் அதை கண்ணை கவரும் படத்துடன் விளக்கியது இன்னும் அருமை