All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
அருமையான பதிவுகள் சிஸ். பெற்றோர்கள் இல்லாமல் இருப்பது கொடுமை என்றால், அவர்கள் இருந்தும் இல்லாமல் இருக்கும் நிலை அதை விட கொடியது. சூர்யாவின் நிலை மிகவும் வருத்தத்திற்குறியது. நல்லவேளை சந்தியா என்ற நல்ல தோழி அவள் வாழ்க்கையில் கிடைத்தாள். சந்தியாவின் அம்மாவும் தக்க சமயத்தில் அவளுக்கு அறிவுரையும் உத்வேகத்தையும் அளித்திருக்கிறார்கள். இவ்விருவரின் அன்பும் அரவணைப்பும் அவளை இன்று நல்ல உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமா ரம்யா sis.
மிக அருமையான புரிதல்,உங்களது புரிதலை கருத்தாக பதிந்தது என்னை இன்னும் முன்னோக்கி பயணிக்க வைக்கிறது.

மிக்க நன்றி ரம்யா sis 😍 🙏
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூர்யாவின் அப்பாவை பார்த்தால் பயங்கர கடுப்பாகுது.கடினமான பதிவு😓😓😓
சில நேரங்களில்,சில மனிதர்கள் இந்து sis 😍

விரைவில் கதையின் களம் மாறும்.

மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு🙏
 
Ramyasridhar

Bronze Winner
நினைவலைகளில் உழன்று உறங்கி பின் காலையில் விழித்து கதவு திறக்கையில் அங்கே தூங்கி வழியும் கணவனை கண்டு பேரின்பம் கொள்கிறாள். என்னே ஒரு காதல் கணவன் !!!. அவள் அழுதது குறித்து வினவுகையில் அவள் சொல்ல மறுக்கிறாள். அவள் நினைப்பதும் சரியே, அவள் வேதனை அவனையல்லவா வேதனை கடலில் ஆழ்த்தும். அவள் சொல்ல மறுத்ததும் இவன் கோவம் கொண்டு சென்றாலும் அவளுக்காக ஒவ்வொன்றையும் அக்கறையாக செய்கிறான். அவளை பற்றி தெரிந்து கொள்ள சந்தியாவை அழைத்தாலும், " நான் தான் அவளுக்கு எப்போதும் பெஸ்ட் ப்ரண்டு உன்னிடம் இதை கேட்பதால் நீ என்று அர்த்தமல்ல " என்று அவன் சொல்வது அவனின் அன்பின் ஆழத்தையே மீண்டும் உணர்த்துகிறது. அவளின் சிறு வயது ஆசைகளையெல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு குறித்து கொண்டு விரைவில் அதை நிறைவேற்ற போகிறான். இவள் அவனை சமாதான படுத்த டைரி எடுத்து கவிதை எழுதி அதை அவனுக்கு அனுப்புகிறாள். அந்த கவிதை வரிகள் மிக அருமை சிஸ். அவள் முதன் முதலாக எழுதிய கவிதையை பல முறை படித்து மனது இரசித்தாலும் அவள் வருத்தத்திற்கான காரணம் சொல்லாமல் இருப்பது அவனை கோவம் கொள்ளவே வைக்கிறது. அவனிடம் எல்லாம் பகிர வேண்டும் என அவன் நினைப்பதும் சரியே. இவன் டைரி சுவாரசியம் மிக்க பக்கங்களாகவே உள்ளது. அற்புதமான பதிவுகள் 😍
 
Wow....மனம் நிறைய செய்யும் கருத்து உங்களது.இரு அத்தியாயங்களை ஒரு கருத்தில் விவரிப்பது படிக்கவே சுவாரஸ்யமாக உள்ளது sis 😍

மிக்க நன்றி உங்களது நேரத்திற்கும் கருத்திற்கும் ரம்யா sis ☺
 
Top