All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அவன் ethukum asarala maari இல்ல avan அம்மா அப்பா எவ்வளவு solliyum ஏன் avanoda நடந்த கல்யாணம் vendaam nu thaali ah கழட்டி கொடுத்துட்டு போனா.... என்னமோ இருக்கு avaluke enna நடந்தது nu puriyala..... Avaluku தாலி கட்டினா அவன் உயிர் poidum nu solraan...... Ava முடிவு pannitaa எல்லாத்தயும் ஏத்துக்க.......kannan அவளுக்காக eppome இருக்கான் nu sollitu manase இல்லாமல் poraan.... அவளும் avanuku யாரும் இல்ல avana vittaa nu solli annupitaa.... Ethuku ava kita வெத்து பேப்பர் ல sign வாங்குன.... Appadi ஒரு மின்னல் அந்த கண்ணுல avvallavu santhosham enna plan panni இருக்கான் nu theriyalaye.... Super Super mam.... Semma semma episode
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தோழி,

ஊருக்கு முன்னால்
உதறிவிட்டுப் போனவள்...
உண்மைக்கு முன்னால்
கதறிவிட்டு நின்றாளோ!

ஊரும் பேரும் பேசினாலும்
உருகாத மன்னனவன்
ராமனாய் பிறந்த
ராவணன் தானோ!

ஊர் கூடி வாதாட...
அடங்காத உத்தமனின் உக்கிரம்!
தாய் நாடிப் போராட
முடங்காத பித்தனவன் வக்கிரம்!
உக்கிரமும் வக்கிரமும்
ஆவேசமாய் கண் மறைக்க...
உத்தமனாம் அர்ஜுனனும்
காமுகனாய் கொன்றானே!

காலடியில் வீழ்ந்துவிட்டாள்
கழுவேற்றிய காதல் மகள்!
கண்மூடிக் கொண்டாலும்
கண்ணீரின் வேகம்
இமை தாண்டிப் போகாதோ!

நட்பின் இலக்கணத்தில்
கண்ணனவன் கோமகனே!
பெண்ணவளைக் காத்திடவே
படைத்தானோ ஆண்டவனே!

கற்பில் கண்ணகி
மாதவியாய் மாறி நிற்க...
பழிபாவம் தீர்த்துவிட்டால்
பரதேசம் போவாளோ?

வெறுப்பில் ராமனவன்
ராவணனாய் மாறி நிற்க...
சீதையைத் தொலைத்துவிட்டால்
பரதேசி ஆவானோ?

பாவியாய் போன
உள்ளம் இரண்டும்,
பாரமாய் போன
கள்ளம் கண்டு,
ஆவியாய் போனதோ
உள்ளம் இன்று!

நெஞ்சம் துடிக்க
வஞ்சம் வெடிக்க
கண்களும் வடிக்க
கண்ணீரும் தீட்டியதோ
காவிய ஓவியம்!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி













 

ilakkiyamani

Bronze Winner
யாரோ செய்த சூழ்ச்சியில் சிக்கி இரண்டுபேருமே,கஷ்டபட்றாங்க,
அப்படி என்ன தான் நடந்தது என்று அறிந்துக்கொள்ள மிகவும் ஆவலுடன், அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
இன்றைய பதிவு நன்றாக இருந்தது மேம்.:love:😍👌
 

Subasini

Well-known member
அகம் என்பது அகத்திலறியவனாய்
அவன் வார்த்தையாட!!!

அங்கே அவள் காதலே
உயிரயற்று உசலாட!!!

அங்ககீனமாய் அவளென்றால்
மன்னவன் மனமே
இங்கு ஊனமாகிட!!!

பாடம் அவளுக்கென்றவனே
காலத்திடம் கற்றிட!!!

அன்று ராமனின் முன்னே
நிராயுதபாணியாக நின்றான் காவியத்தில் ராவணன்....

இதோ இந்த அர்ஜூனனோ தன் தவறிற்காக கையேந்தி நிற்பானோ
இந்த கண்ணனின் முன்னே...

பார்த்தனின் மனையாள் மானத்தை
காத்தான் மாயக்கண்ணன்
இந்த கண்ணனும் அவனுக்கு ஈடாய்
தான் போர்டுகிறான் அவள் மன்னனிடத்து...

ஸ்ரீ மா அருமையான எபி.....

ரொம்ப கோபம் வரும் வார்த்தைகள்...

கடந்து காலம் என்பது கடந்தே போன காலம் அதை கொண்டு நிகழ்காலத்தை நிர்மாணித்தால் எதிர்காலத்தில் தன் தவறுகளின் முன்னே சிக்கி சின்ன பின்னமாகி போகும் வாழ்க்கை என்பது அறியாத இவனை என்ன சொல்ல...

அவள் திருமணம் நடந்த கால கட்டத்தில் அவளோட வயது மனது எதுவும் அவளுக்கு போதிய maturity இருந்து இருக்காது நினைக்கிறேன் தன்னைவிட சிறிய பெண்ணை திருமணம் செய்து இவன் என்ன செய்தானோ...

அவள் மேல் தவறே ஆனாலும் அவன் இன்றைய அகங்காரம் எதற்கும் ஈடாகுது...

என்ன தான் இவனை ஊரோ ஹீரோவாக கொண்டாடினாலும் கண்ணன் தி பெஸ்ட்...

HERO armies attendence plez 😁😁😁😁

அவளருகில் தான் இவருக்கு எதுவுமே வேலை செய்யாது முத்தத்தை தவற அவருக்கு முன்னேறி செல்ல முடியாது அப்பறம் எதுக்கு...
இல்ல எதுக்கு இத்தனை ஆர்பாட்டம் கேட்கிறேன்... அப்பறம் வந்த சொல்ல கூடாது அவள் கணவனே இருந்த போதும் அவள் விருப்பத்தை எதிர் பார்த்து காத்திருந்தான் என்று... இப்பவும் அவளா வரல அவன் தான் கண்ணன் உதவியோட தூக்கி இருக்கான் 😁😁 அதனால் அவ நடப்பது எதுவா இருந்தாலும் காலத்தின் கைகளில் தன்னை விட்டு விட்டாள்...
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மனதை உருக்கி வருந்த வைத்த பதிவு...

அனுவோட விஷயம் கண்ணனுக்கு கூட தெரியவில்லை..

ஆனால் அனு சொன்ன அந்த செல்லாது மற்றும் செல்லாதவன் என்ற வார்த்தை உபயோகமற்றவன் என்ற சொல் எந்த ஆண் மகனையும் வெறிக்கொள்ள செய்யும்.. அதுவும் ஜமீன் பரம்பரையில் இருப்பவனை... என்ன சொல்வது... அந்த வார்த்தையை கேட்டப்பிறகு கொலை செய்ய முயற்சித்த கிருஷ் அதன் பிறகு நடந்த ஊரார் கேலி மற்றும் கேவலப்படுத்தும் நடவடிக்கையாலேயே பழி வாங்கும் வெறி கொண்டுள்ளான்...

கண்ணன் அற்புதமான நண்பன் என்பதை விட அவன் அனுவிற்கு தாயுமானவனே ஏனென்றால் தாய் தந்தை மட்டுமே பிள்ளைகளின் உடலுக்கோ மனத்திற்கோ ஒரு கலங்கம் என்றால் அதை தீர்க்கவல்லர்களிடம் காலில் விழ கூட தயங்க மாட்டார்கள்... அதையும் மிஞ்சி விட்டான்... அற்புதம் ஸ்ரீ மேம்...

ஒவ்வொரு வரிகளையும் செதுக்கியுள்ளீர்கள்... அதுவும் அந்த செல்லாதவன் என்ற வார்த்தை எவ்வளவு நாசூக்கான தேர்வு... அதை புரிந்து கொள்ளவே எனக்கு சில வினாடிகள் எடுத்து கொண்டது...

கிருஷ் கண்ணனையும் அனுவையும் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டுவது... வெற்று காகிதத்தில் அனுவிடம் கையெழுத்து வாங்குவது... ஏதோ பெரிதாக திட்டம் போட்டுவிட்டான் கிருஷ்... ஆனால் முடிவில் பொண்ணும் எனக்குத்தான் பன்னும் எனக்குத்தான் என்பது... ஹா! ஹா! இந்த இடத்தில் பெரும் மர்மத்தை வைத்துள்ளீர்கள்... ஒரு வேளை இவ்வளவு நாள் தத்தளித்த கிருஷின் மனது அனு அருகில் இருக்கும் பட்சத்தில் அமைதி அடைந்துள்ளதோ?

அருமையான பதிவு..

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 
Top